Followers

Wednesday, January 31, 2018

இந்துவுக்கு நீதி வழங்கிய இஸ்லாமிய நீதிபதிகள்!


மலேசியாவில் கோலாலம்பூரை சேர்ந்தவர் இந்திராகாந்தி. இவருக்கு மூன்று பிள்ளைகள்.. ஒன்பது ஆண்டுக்கு முன் இவர் கணவர் இஸ்லாத்துக்கு மதம் மாறிவிட்டார்.

அதோடு தன் மூன்று பிள்ளைகளையும் இஸ்லாத்துக்கு மாற்றிவிட்டு.. பெயரையும் அரசு கெசட்டில் பதிவு பன்னி இருக்கிறார்.. இதை எதிர்த்து தாயார் இந்திரா வழக்கு தொடுத்தார்... நேற்று உச்ச நீதி மன்றத்தில் இந்த வழக்கு மூன்று நீதிபதிகள் கொண்ட பென்ச்சில் விசாரணை முடிந்து தீர்ப்பு வந்தது.

அதன்படி.."பிள்ளைகளை தந்தை மட்டும் தன்னிச்சையாக இஸ்லாத்தில் மாற்றியது செல்லாது என்றும்.. மதம் மாறவேன்றுமென்றால் தாயாரின் சம்மததோடு பெற்றோர் இருவரும் கருத்தொற்றுமை ஏற்பட்டு முடிவு செய்ய வேண்டும்.. ஒருவர் மட்டும் எடுக்கும் முடிவை ஏற்று கொள்ள முடியாது"  என்று தீர்ப்பு சொல்லி பிள்ளைகள் தாயோரோடு சேர்க்க உத்தரவு போட்டு விட்டனர்.

இதில் கவனிக்கவேண்டியது.. மலேசியா இஸ்லாமிய நாடு..வழக்கை விசாரித்த நீதிபதிகள் இஸ்லாமியர்கள்... ஆனாலும் நீதியை நிலை நாட்டியுள்ளனர்.

வலுக்கட்டாயமாக யாரையும் இஸ்லாத்தில் இணைக்க இயலாது
என்பதை..எடுத்து சொல்லி இருக்கின்றனர்.

-
இஸ்மாயில்

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்-குர்ஆன் ஸூரா அல்-மாயிதா= 5:8)


Tuesday, January 30, 2018

உபியில் மீண்டும் கலவரம்!

உபியில் மீண்டும் கலவரம்!

உபியில் குடியரசு தின அணி வகுப்பில் பங்கு கொண்ட முஸ்லிம்களை காவிக் கும்பல் தாக்கியுள்ளது. இந்துத்வாவின் பிரிவான ஏபிவிபி 'இந்தியாவில் இருக்க வேண்டுமானால் வந்தே மாதரம் சொல்' 'இல்லை என்றால் பாகிஸ்தான் செல்' என்ற ஸ்லோகத்தை சொல்லிச் சென்றுள்ளனர்.  இதனால் எழுந்த கலவரத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. யோகி ஆதித்யநாத்தின் காவல்துறை வழக்கமாக இஸ்லாமிய இளைஞர்களை கைது செய்யும்.

இந்த செய்தியை அதிகமான ஊடகங்கள் இருட்டடிப்பு செய்து விட்டன.
Monday, January 29, 2018

உள்ளங்களை வென்ற உன்னத பணி..


உள்ளங்களை வென்ற உன்னத பணி..


ஏக இறைவனின் திருப்பெயரால்...

உள்ளங்களை வென்ற உன்னத பணி..

இறைவனின் அருளால் நம்முடைய ஜமாஅத்தின் சார்பாக மார்க்கம் மற்றும் சமுதாய பணிகளை வீரியத்தோடு செய்து வருகிறோம். இந்த பயணத்தில் பல்வேறு விதமான நெகிழ்ச்சியான சம்பவங்களை நாம் சந்தித்தது உண்டு. அந்த வரிசையில் நடந்த நெகிழ்ச்சியான நிகழ்வு.

கடந்த 24-1-2018 அன்று காலை 7:00 மணியளவில் அப்துல் ரஹீம் (மாநில செயலாளர்) தென்சென்னை மாவட்ட நிர்வாகிகளை தொடர்பு கொண்டு குவைத்தில் இருக்கும் நம்முடைய சகோதரரின் உறவினர் சென்னை அரசு பொது மருத்துமனையில்( G.H) சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். பாதிக்கப்பட்ட அந்த நபரின் குடும்பத்தாருக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு தெரிவித்தார்கள். இந்த தகவலை உடனடியாக தென் சென்னை மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதல்படி சேப்பாக்கம் கிளை நிர்வாகிகள் தகவல் வந்த மாத்திரத்தில் இப்படியொரு மனிதநேய பணியை செய்வதற்காக காத்திருந்தது போல நம்முடைய கிளை நிர்வாகிகள் களமிறங்கினார்கள்.

மருத்துவமனையில் சென்று சந்தித்த போது இறந்த நபரின் சகோதரர் மட்டுமே உடன் இருந்தார். அவர்கள் இருவரும் வங்காள தேசத்தை (பங்களா தேஷ்) சார்ந்தவர்கள் என்பதும் செவ்வாய் கிழமை காலை இதய நோயின் காரணமாக இங்கே வந்துள்ளார்கள். வந்த இடத்தில் அவருடைய சகோதரர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்) அவர் நம்மை கண்டவுடன் அவருடைய கண்கள் குளமானது. காரணம் செவ்வாய் கிழமை இரவு அவருடைய சகோதரர் இறந்துவிட்டார். இந்த சூழலில் தான் என்ன செய்ய வேண்டும் ? எப்படி இந்த உடலை எடுத்து செல்வது ? என்று தெரியாமல் இரவு முழுவதும் அவதிப்பட்டுள்ளார். கிளை நிர்வாகிகள் அவரை சந்தித்து தங்களுக்கு உதவி செய்ய தான் நாங்கள் வந்துள்ளோம் என்று சொன்னவுடன் கண்ணீர் மல்க நம்முடைய சகோதரர்களின் கையை பற்றிக்கொண்டார். இங்கு பலரும் பல வேளைகளில் இருக்கும் சூழலில் என்னை யாரென்று கூட தெரியாமல் எங்களுக்கு உதவி செய்ய தாங்கள் வந்திருக்கிறீர்கள் என்ற அவருடைய வார்த்தை இது போன்ற சமுதாய பணிகளை இன்னும் வீரியதோடு நாம் செய்ய வேண்டும் என்பதற்கு ஓர் உத்வேகமாக அமைந்தது.

இதன் பிறகு நம்முடைய சகோதரர்கள் முழுமையாக அங்கே இருந்து மருத்துவ மனையில் இருந்து உடலை வெளியே கொண்டு வருவதற்கான எல்லா வேளைகளிலும் முழுமையாக ஈடுபட்டு மதியம் 2 மணியளவில் மருத்துவமனையில் இருந்து உடலை பெற்று அவருடைய சகோதரரிடம் ஒப்படைத்தனர். நம்முடைய சகோதரர்கள் செய்த இந்த உதவிக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அந்த சகோதரர் கிளை நிர்வாகிகளுடன் நின்று ஒரு புகைப்படம் எடுத்து கொண்டு கண்ணீர் மல்க நம்மை விட்டு கடந்து சென்றார்.

பொறுமையை கடைப்பிடிப்பீராக. நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணடிக்கமாட்டான்.
குர்ஆன் (11:115)    
       .   
 .தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்        சேப்பாக்கம் கிளை

அர்ஜூன் சம்பத்தை அவாள் நடத்தும் விதம்!காந்தியடிகளை இன்றுதான் பார்பனன் கோட்சே கொன்றான்!

காந்தியடிகளை இன்றுதான் பார்பனன் கோட்சே கொன்றான்!

காந்தியடிகளை ஆர்எஸ்எஸ் ஐ சேர்ந்த பார்பனன் நாதுராம் கோட்சே இன்றுதான் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான். இந்துத்வாவின் வர்ணாசிரமக் கொள்கையும் மனித குல விரோத நடவடிக்கைளும் மண்ணோடு மண்ணாகட்டும் என்று இந்நாளில் சபதமேற்போம்.


Sunday, January 28, 2018

‘கீழடியைப் பாதுகாப்போம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’


மதுரையில் நேற்று (சனிக்கிழமை) இரவு நடந்த மிக முக்கியமான நிகழ்வு தமிழர் வாழ்வுரிமை மாநாடு. ‘கீழடியைப் பாதுகாப்போம், இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்’ ‘சாதியற்ற தமிழர், காவியற்ற தமிழகம்’ என்ற முழக்கத்தோடு நடந்த அந்த மாநாட்டில் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவும் பங்கேற்றார்.

மாநாடு ‘தமிழ்த்தாய் வாழ்த்’தோடு தொடங்கி, ‘தேசிய கீதத்’துடன் நிறைவுபெற்றது. 97 வயதைக்கடந்த தோழர் சங்கரய்யா உள்பட அனைவருமே எழுந்து நின்று தமிழ்த்தாய்க்கும், தேசிய கீதத்துக்கும் மரியாதை செலுத்தினார்கள். கூட்டத்தில் என்.சங்கரய்யா பேச ஆரம்பிக்க, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மதுரையில் ஒலித்த, அந்தக் கம்பீரமான குரலைக்கேட்டு கூட்டம் ஆர்ப்பரித்தது. மொத்தம் 37 நிமிடங்கள் அவர் உரையாற்றினார். அவரது உரையின் முக்கியமான பகுதிகள் இங்கே.

கவிஞர் வைரமுத்துவின் எழுத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக அறிக்கை வெளியிட்ட சு.வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. நான் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்பேற்ற ஒரு ஊழியன் என்ற முறையில் இந்த மேடையின் மூலம் ஒன்றைக் கேட்டுக்கொள்கிறேன். தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பாக இருக்கக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இவ்வாறு மிரட்டல் விடுத்தவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியரும், காவல்துறையினரும் வெங்கடேசனின் வீட்டிற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இத்தகைய பாசிச மிரட்டல்களை நாமும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

இந்து மதத்தில் வைணவம் என்பது காப்புக்கடவுளான விஷ்ணுவை மையமாகக் கொண்டது. அந்த காப்புக்கடவுளைப் பின்பற்றக் கூடியவர்கள் தான் இந்த கொலை மிரட்டலை விடுத்திருக்கிறார்கள். உங்கள் மதம் சொல்கிறது, காப்பாற்றுவோம் என்று. நீங்களோ, ‘அழிப்பேன், கொல்வேன், சோடா பாட்டில் வீசுவேன்’ என்று சொல்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய முரண்பாடு பார்த்தீர்களா? தயவு செய்து கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். எந்தவிதமான விவாதத்துக்கும் நாங்கள் தயார். நாங்கள் பொருள்முதல்வாதிகள். எந்த விவாதத்துக்கும் தயார். விவாதம் விவாதமாக நடக்கட்டும். கொலை மிரட்டல்களைத் தவிருங்கள்.

மத்திய ஆட்சியாளர்களே, கீழடி அகழ்வாய்வைக் கண்டு ஏன் பயப்படுறீங்க. உண்மையைக் கண்டு பயப்படாதீங்கப்பா. ‘சத்யமே ஜெயதே’ என்று சொல்றீங்கள்ல. அந்த அகழ்வாய்வு மூலம் தமிழர்களின் நாகரிகம்தான் பழமையானது என்று தக்கச் சான்றுகளுடன் முடிவு வருமானால் அனைவரும் ஏற்றுக்கொள்வோம். இந்தக் கீழடி ஆய்வு நீடிக்கப்பட வேண்டும். தமிழக சர்க்கார் ஒன்றும் ஏழையல்ல. எத்தனை லட்சமானாலும், கோடி ஆனாலும் அந்த அகழ்வாய்வுக்காக செலவளிக்க முடியும். செலவழிக்க வேண்டும். தொடருங்கள். முழு உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள். அதேபோல ஆதிச்சநல்லூர் ஆய்வையும் தொடர வேண்டும். அதன் பெருமை குறித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நூல் வெளியிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.

அடுத்து ஜல்லிக்கட்டு. மோடி அரசாங்கமே மாநில மொழிவழி மக்களுடைய எண்ணங்களை, தேவைகளைப் புறக்கணிக்காதீர்கள், எதிர்க்காதீர்கள். எதிர்த்தால் நீங்கள்தான் தவிடுபொடியாவீர்களே தவிர, நாங்கள் அல்ல.

இந்தி என்பது மத்திய அரசின் அலுவல் மொழிதானே ஒழிய, தேசிய மொழியல்ல. 8வது அட்டவணையில் உள்ள மொழிகள் அனைத்துமே தேசிய மொழிகள்தான், சமத்துவ உரிமை பெற்றவைதான். எனவே, இந்தியைத் திணிக்க முயலாதீர்கள். 1967 தேர்தலில் அன்றைக்கு ஏற்பட்ட ஆட்சி மாற்றம் இன்று வரையில் நீடிக்கிறது. எங்களுக்கு நீங்களே குழிவெட்டிக்கொள்ளாதீர்கள் என்று பாஜகவை எச்சரிக்கிறேன்.

இங்கே கூடியுள்ள அத்தனை பேரையும் கேட்கிறேன். உங்கள் பிள்ளைகளை தமிழ் வழியில் படிக்க வைக்கிறீர்களா? மனச்சாட்சியோடு சொல்லுங்கள். (அப்போது, சிலர் மட்டுமே கையை உயர்த்தினார்கள். உடனே, அவர் சொன்னார்) ‘என்னுடைய பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைப்பேன். ஆனால், தமிழைப் பாதுகாப்பேன்’ என்கிறீர்களா? அது முடியாது. கேட்டா என்ன சொல்வீங்க, ‘நான் படிக்க வைக்கத்தான் நினைச்சேன். வீட்டில் உள்ள பொம்பளைங்க கேட்க மாட்டேங்கிறாங்க’ என்று சொல்வீங்க. அது ஒரு சால்ஜாப்பு. அந்தப் பெண்களிடத்தில் பேசுங்கள். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியவனும், கல்லணையைக் கட்டியவனும் எந்த மொழியில் படிச்சான்? தமிழில்தானே? சீனாவில் சீனமொழியில்தான் விஞ்ஞானம் பயிற்றுவிக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் தொடர்பு மொழிக்காக மட்டும் படிக்கிறார்கள். அதைப்போலவே நாமும் வைத்துக்கொள்வோம். தமிழகத்துப் பெண்கள், தங்கள் பிள்ளைகளைத் தமிழைப் பயிற்று மொழியாகக் கொண்ட பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும். அதுதான் உண்மையாக, இந்தியைத் தடுக்கும்.

அனைத்து பாடநூல்களையும் தமிழில் கொண்டுவர வேண்டும். என்னய்யா பெரிய கஷ்டம் என்கிறீர்கள். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மருத்துவம், பொறியியல் எல்லாத்துக்கும் தமிழில் பாடப்புத்தகங்களைக் கொண்டுவந்துவிடடார்கள். நமக்கென்ன கஷ்டம்? தமிழகத்தில் உள்ள தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் என்ன செய்கிறது? சந்திரபாபு நாயுடு ஆள்கிற ஆந்திர மாநிலத்தில் குப்பம் என்ற இடத்தில், திராவிட மொழிகளின் பல்கலைக்கழகம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு கன்னடம், மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகள் குறித்து ஏராளமான ஆராய்ச்சிகள் நடக்கிறது. நமது முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அந்த பன்முக பல்கலைக்கழகத்துக்குச் சென்று அதைப் பலப்படுத்தப் பாருங்கள். தமிழ் ஆட்சி மொழியாவது நம்முடைய கையில்தான் இருக்கிறது.

இந்திய சுதந்திரத்துக்காக நாங்கள் போராடியபோது, அனைத்து மொழி பேசும் மக்களையும் ஒன்று திரட்டினோம். அப்போதே மாநில சுயாட்சி என்ற கோரிக்கை எழுந்துவிட்டது. அனைத்து மொழிகளையும், மொழி பேசுகிற மக்களையும் சமமாக நடத்துகிற, சம அதிகாரம் கொண்ட. ஒரு கூட்டாட்சி வேண்டும் என்றுதான் என்று சொன்னோம். இப்போது ஒற்றை மொழி, ஒற்றைக்கொள்கை என்ற பாதையில் போவது சரியல்ல. மொழி வழி மாநிலத்தை பலப்படுத்துவதே தேச நலனுக்கு நல்லது.

பாரதியார் சொன்னார், காதல் திருமணம் பண்ணுங்க என்று. தமிழ்நாட்டில் கௌரவக்கொலைகள் நடக்கலாமா? அப்புறம் என்னாய்ய நீ தமிழன்? வயது வந்த ஒரு ஆணோ, பெண்ணோ எந்த மதத்தைச் சார்ந்தவராக இருந்தாலும், எந்த சாதியைச் சார்ந்தவராக இருந்தாலும் எந்த மொழியைப் பேசுவபவர்களாக இருந்தாலும் மனம் விரும்பிய ஒருவரைத் திருமணம் செய்ய உரிமையிருக்கிறது. அதைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை. நம்முடைய கடமை.

குறுக்கிடுங்கள் தோழர்களே. ஒரு பெண்ணை ஒருவன் அடிக்கிறான், கொல்கிறான் என்றால், நீங்கள்பாட்டுக்குப் போவீர்களா? முரட்டுத்தனமாகக் குறுக்கிடக்கூடாது. சாதுர்யமாக குறுக்கிடுங்கள். 10 பெண்களைத் திரட்டிக்கொண்டு அந்த வீட்டுக்குப் போங்க. ஏன்யா அடிக்கிற என்று கேளுங்கள். அப்போதுதான் பெண் உரிமைகளைப் பாதுகாக்க முடியும்.

கலப்புத் திருமணங்களை ஆதரியுங்கள். தீண்டாமை ஒழிய வேண்டும் என்றால், ரத்தக்கலப்பு ஏற்பட வேண்டும் என்று அம்பேத்கர் சொன்னார். மேலெழுந்த வாரியாகப் பேசிவிட்டுப்போனால் பிரயோஜனமில்லை. நம் குடும்பத்தில் அதைச் செயல்படுத்த வேண்டும். என்னுடைய குடும்பத்திலே, நான் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த இருவரை மருமகனாகவும், மருமகளாகவும் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்கு ஒரு தைரியம் வேண்டும். என் வீட்டில் உள்ள அந்த அரிஜனப் பெண் என்னைப் பார்த்து மாமா என்று கூப்பிடுறாள். மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். மாற்றம் நம்மிடம்தான் இருக்கிறது தோழர்களே. நம்முடைய அடித்தட்டு மக்களிடம் இதைச் சொல்லுங்கள். யாராவது எதிர்த்தால், ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ என்ற எம்ஜிஆர் பாடலைச் சுட்டிக்காட்டுங்கள். அதைவெச்சுக்கிட்டு ஊர்வலம் போங்க. உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே. அப்புறம் என்னடா வித்தியாசம் என்று கேளுங்கள். தமிழகத்தில் சாதி ஆணவக்கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்.

அடுத்தது தீண்டாமை. ஏன்யா, ரயில்ல எல்லாரும் சேர்ந்து போறோம். பஸ்ல சேர்ந்து போறோம், பள்ளிக்கூடத்துல சேர்ந்து படிக்கிறோம். செத்தப்பிறகு சுடுகாடு மட்டும் ஏன்யா தனித்தனியாக? அரிஜனங்களுக்குத் தனியாக சுடுகாடு ஏன்? வருகிற உள்ளாட்சித் தேர்தலிலாவது அனைத்து சாதியினருக்கும் சேர்த்துப் பொது மயானம் அமைப்போம் என்று அறிவிக்கிறதோ அந்த கட்சியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.

மோட்டார் தொழிலாளர் சங்கத்தில்தான், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தோன்றியது. இன்று நான் தோழர் சு.வெங்கடேசனையும், தமிழ்செல்வனையும் கேட்டுக்கொள்வது, அந்த சங்கத்தைத் தொடங்கிய 32 தோழர்களின் பெயர்களின் பெயர்களையும் வைர எழுத்துக்களால் எழுதி, நீங்கள் ஒவ்வொரு மாநாட்டிலும் அவர்களைப் பெருமைப்படுத்த வேண்டும். சங்கம் தொடங்கியபோது அதன் பதாகையில் பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டையின் படங்கள் இருந்தன. அவை வெறும் படங்கள் அல்ல. பாரதி என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாரதிதாசன் என்பது சமூகநீதி, பட்டுக்கோட்டை குறிப்பது பொதுவுடமையை. இந்த மூன்றையும் நாம் மறந்துவிடக்கூடாது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில், ஏன் முற்போக்கு என்ற சொல்வருகிறது? நாம் ஏன் வெறுமனே எழுத்தாளர் சங்கம் என்று பெயர் வைக்கவில்லையே. முற்போக்கு என்றால் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கணும், பாசிஸத்தை எதிர்க்கணும், மதவெறியை எதிர்க்கணும், தீண்டாமையை எதிர்க்கணும். அதுதான் முற்போக்கு.

கடைசியாக ஒன்று சொல்ல விரும்புகிறேன். இந்தியாவில் இன்று வெறும் 1 சதவிகித ஆட்களிடம் நாட்டின் மொத்த சொத்துக்களில் 73 சதவிகிதம் குவிந்து கிடக்கிறது. இந்த அடிப்படையை மாற்றாமல், எப்படி மக்களை முன்னேற்றுவீர்கள்? இந்த லட்சியத்தை நோக்கி நாம் நடைபோட வேண்டும். எல்லோரும் சேர்ந்து தமிழ்நாட்டை ஒரு முற்போக்கான, ஜனநாயக ரீதியான, மதச்சார்பற்ற, ஒரு மாபெரும் இயக்கம் உருவாவதற்கு நீங்கள் பாடுபட வேண்டும். நாட்டில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால், எண்ணிக்கை அவசியம். எனவே, சக எண்ணம் கொண்ட மக்களை எல்லாம் ஒன்று திரட்டுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மூத்த தலைவர் என்.சங்கரய்யா பேசி முடித்ததும், அத்தனை பேரும் எழுந்து நின்று “செவ்வணக்கம் செவ்வணக்கம், எங்கள் தோழர் சங்கரய்யாவுக்கு செவ்வணக்கம்” என்று முழக்கமிட்டனர். மேடையில் இருந்து இறங்கியபோதும், அவரைப் பெருங்கூட்டம் சூழ்ந்துகொண்டது.

தமிழ் இந்து நாளிதழ்
29-01-2018
பத்மஸ்ரீ விருது வேண்டாம் ஆன்மிக குரு சித்தேஸ்வர் சுவாமி


பத்மஸ்ரீ விருது வேண்டாம் ஆன்மிக குரு சித்தேஸ்வர் சுவாமி

பெங்களூரு: தனக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருது வேண்டாம் எனக்கூறி, கர்நாடகாவை சேர்ந்த ஆன்மிக குரு சித்தேஸ்வர் சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் சித்தேஸ்வர் சுவாமி கூறியுள்ளதாவது: பெருமை வாய்ந்த பத்மஸ்ரீ விருதுக்கு என்னைதேர்வு செய்ததற்கு இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். உங்கள் மீதும், அரசு மீதும் மரியாதை உள்ளது. ஆனால், இந்த விருதை ஏற்று கொள்ள விருப்பமில்லை என்பதை உங்களுக்கு தெரியபடுத்த விரும்புகிறேன். சந்நியாசியாக இருக்கும் எனக்கு, விருது பெறுவதில் ஆர்வம் இல்லை. பெருமைக்குரிய இந்த விருதை ஏற்க மறுக்கும் முடிவை , நீங்கள் ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

தகவல் உதவி
தின மலர்
28-01-2018

தூய வெள்ளை உடையுடன் உண்மையாகவே சந்தியாசியாக வாழ்ந்து வரும் இவரைப் போன்றவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். காவி  உடையில் வலம் வரும் சோடா பாட்டில் சாமியார்கள், நித்தியானந்தா, யோகி ஆதித்யநாத் போன்றவர்கள் இவரிடமிருந்து பாடம் படிக்கட்டும்.

இவருக்கும் காவி உடை உடுத்தி இவரையும் தீவிரவாதியாக்க மோடி முயற்சிக்காது இருக்கட்டும். இவர் பார்பன சாதியை சேர்ந்தவர் அல்ல என்பது கூடுதல் தகவல்.Saturday, January 27, 2018

“சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள்”


“சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள்”

(வெள்ளிக்கிழமை) நாமக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சடகோப ராமானுஜ ஜீயர்……

 "ஆண்டாளை அவதூறாக பேசிய வைரமுத்து ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். வைரமுத்து மன்னிப்பு கேட்கும்வரை நாம் அறவழியில் போராடுவோம்.

ஆண்டாளின் பிள்ளைகளான உங்கள் அனைவருக்கும் நான் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறேன். எந்த ஒரு கடவுளையும் இனி யாரும் மேடை போட்டு அவதூறாக பேசக் கூடாது. அவ்வாறு பேசினால் நாம் அங்கு சென்று போராடுவோம்.

நான் உங்களுக்கு அழைப்பு விடுக்கும்போது நான் சொல்வதுபோல் செய்யுங்கள். இந்தக்கால சாமியார் எல்லாம் சும்மா உட்கார்ந்திருக்க மாட்டார்கள். இப்போதெல்லாம் தேவைப்பட்டால் நாங்களும் கண்ணாடி விடுவோம்.. எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்... எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம். ஆனால், நாம் அப்படி செய்யக்கூடாது. நாம் அறவழியில் போராட வேண்டும்" என்று பேசினார்.

ஜீயரின் இந்த பேச்சு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

உடல் உழைப்பு குடும்பம் குழந்தை என்று அனைத்து மக்களைப் போல உழைத்து சாப்பிட்டால் இப்படி எல்லாம் பேசத் தோன்றாது. மக்களின் காணிக்கைகளை வாங்கிக் கொண்டு அதன் மூலம் வாழ்வை ஓட்டும் இவரைப் பொன்றவர்களிடம் இருந்து வேறு எதனை எதிர் பாரக்க முடியும்?
இஸ்லாத்தை நோக்கி ஓடி வரும் தொப்புள் கொடி உறவுகள்!

இஸ்லாத்தை நோக்கி ஓடி வரும் தொப்புள் கொடி உறவுகள்!

'நாங்கள் இஸ்லாத்தை ஏற்கப் போகிறோம். எங்களின் சொந்தங்கள் அனைவரிடமும் பேசி விட்டோம். ஆதிக்க சாதியினரால் நாங்கள் பெரும் துன்பத்தை அனுபவிக்கிறோம். இதற்கெல்லாம் ஒரே விடிவு மனிதனை மனிதனாக மதிக்கும் இஸ்லாம்தான். மொத்தமாக நாங்கள் அனைவரும் 8000 பேர் இருக்கிறோம். மவுலானாவிடம் பேசி விட்டோம். கூடிய விரைவில் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை ஏற்க இருக்கிறோம்.'

மோடிக்களும், அமீத்ஷாக்களும், தெகோடியாக்களும், யோகிக்களும் இஸ்லாத்தை அழிக்க தினமும் திட்டம் தீட்டி வருகின்றனர். ஆனால் சொந்த மக்களே தாங்களாக இஸ்லாத்தை நோக்கி கூட்டம் கூட்டமாக வருகின்றனர். இதுதான் இஸ்லாம்.Friday, January 26, 2018

குடியரசு தினத்தன்று இந்து தீவிரவாதிகள் இருவர் கைது!

குடியரசு தினத்தன்று இந்து தீவிரவாதிகள் இருவர் கைது!

அமைதி பூங்காவான தமிழகத்தை வட மாநிலங்களை போன்று வன்முறையை விதைத்து ஓட்டு அறுவடை செய்ய முற்படும் இந்துத்வா! தமிழக அரசு இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.Wednesday, January 24, 2018

விஜயேந்திரருக்கு எதிராக தலைவர்கள் கருத்து!

விஜயேந்திரருக்கு எதிராக தலைவர்கள் கருத்து!

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி: ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் தேசியகீதம் பாடப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றுள்ளார். தள்ளாத வயதிலும் கடவுள் மறுப்பாளரான பெரியார் பொது நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்று அவை நாகரிகத்தை காப்பாற்றினார். நடந்த தவறுக்கு சங்கர மடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது அனைவரும் எழுந்து நிற்பதுதான் மரபும் மரியாதையும் ஆகும். இதிலிருந்து யாருக்கும் விலக்களிக்க முடியாது. நடந்த நிகழ்வுக்கு விஜயேந்திரர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது விஜயேந்திரர் எழுந்து நிற்காதது தமிழையும் தமிழர்களையும் அவமானப்படுத்தும் செயலாகும். கடவுள் மறுப்பாளரான பெரியார் கூட தான் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடப்பட்டபோது எழுந்து நின்றிருக்கிறார். நடந்த தவறுக்கு விஜயேந்திரர் வருத்தம் தெரிவிப்பார் என நம்புகிறேன்.

கவிஞர் வைரமுத்து: தேசிய கீதம் என்பது தாய்நாட்டை மதிப்பது. தமிழ்த்தாய் வாழ்த்து என்பது தாய்மொழியை மதிப்பது. இரண்டும் சம அளவில் மதிக்கப்படவேண்டியவை.

பழ கருப்பையா: உண்மையான ஆன்மீக வாதி என்றால் அது வள்ளலார்தான். கொலை குற்றம் சாட்டப்பட்டு பிணையில் வெளி வந்த சங்கர மடத்து சாமியார்கள் எவ்வாறு சாமியார்களாக முடியும்? தமிழை நீச பாஷையாக கருதும் விஜயேந்திரர் இந்த நாட்டை விட்டே வெளியேற வேண்டும்.

பாரதிராஜா: தமிழ் நாட்டில் வந்து குடியமர்ந்து கொண்டு, தமிழக மக்களின் பணத்தில் சாப்பிட்டுக் கொண்டு தமிழை நீச பாஷை என்று ஒதுக்குவதற்கு என்ன நெஞ்சழுத்தம் வேண்டும். இதே கேரளா கர்நாடகாவில் நடந்திருந்தால் நிலைமையே வேறு. தமிழப! இனியும் நீ உறங்கினால் உனது இனமும், உனது மொழியும் உனது நாடும் மாற்றாரால் அழிக்கப்படுவது உறுதி. விழித்துக் கொள். பொங்கி எழு