Followers

Saturday, January 31, 2015

மோடி ஒபாமா சந்திப்பும் நம்மவர்களின் கலாய்பும்! :-)
நெதன்யாஹூவின் மனைவி ஊழல் புகாரில் சிக்கியுள்ளார்!இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ வின் மனைவி சாரா தற்போது ஊழல் புகாரில் சிக்கியுள்ளார். பிளாஸ்டிக் பொருட்களை மறு சுழற்சி செய்வதற்காக இஸ்ரேலிய மக்களிடமிருந்து பொது நிதி திரட்டியுள்ளனர். அதிலிருந்து கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை சாரா தனது சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இஸ்ரேலின் தினப்பத்திரிக்கைக்கு நெதன்யாஹூவின் விடு;டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மெனி நேஃபாளி இந்த குற்றச் சாட்டை வைத்துள்ளார்.

சாரா நெதன்யாஹூ 4000 டாலர் பொது மக்கள் பணத்தை சுருட்டியிருப்பதாக இவரது குற்றச்சாட்டு உள்ளது. (இந்திய அரசியல்வாதிகளைப்போல் 100 கோடி 200 கோடி என்று சுருட்டாமல் மிக குறைந்த தொகையாக உள்ளதே. :-) ) நஃப்தாலி 20 மாதங்கள் நெதன்யாஹூவின் வீட்டில் வேலை செய்துள்ளார். நெதன்யாஹூவின் மனைவி தன்னை துன்புறுத்தியதாகவும் இன்னொரு குற்றச்சாட்டையும் வைத்துள்ளார். மார்க்கரெட் தாட்சர் இரங்கல் விழாவில் செலவழிக்கப்பட்ட தொகையிலும் கணிசமான தொகையை அம்மணி சுருட்டியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அம்மணி ப்யூட்டி பார்லருக்கு அதிகம் செலவழிப்பதாக நினைக்கிறேன். :-) இது அனைத்தும் இஸ்ரேலிய தினப் பத்திரிக்கை யூதியோத் ஆரோனாத் Yedioth Ahronoth தில் வந்துள்ளது. ஐஸ்கிரீம் சப்ளை செய்வது சம்பந்தமாக பட்ஜெட் தாக்கல் செய்ததில் நெதன்யாஹூ ஊழல் செய்துள்ளதாக முன்பு செய்தி வந்து இவருக்கு அரசியல் அரங்கில் பின்னடைவையும் ஏற்படுத்தியது. வரும் மார்ச்சில் இஸ்ரேலில் தேர்தல் நடக்கவுள்ளது. இந்த குற்றச்சாட்டுகளெல்லாம் நெதன்யாஹூவின் அரசியல் வாழ்வை ஒரு முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. பொறுத்திருந்து நல்ல செய்தியை எதிர்பார்போம்.

தகவல் உதவி

By Inna Lazareva, Tel Aviv

telegraph.co.uk

30 Jan 2015

http://www.telegraph.co.uk/news/worldnews/middleeast/israel/11379902/Israeli-PMs-wife-obsessively-recycled-bottles-for-cash.html

மொழி வெறியை தவிருங்கள் தோழர்களே!

மொழி வெறியை தவிருங்கள் தோழர்களே!

//கீழே உள்ள படத்தில் இருப்பது , வேலூர் மாவட்டம் பேர்னாம்பேட்டை என்ற ஊரில் , பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து பணியாற்றும் உருது முஸ்லீம்கள்.
நிச்சயமாக இவர்கள் , தமிழ் முஸ்லீம்கள் இல்லை .
தமிழன் என்றைக்குமே, ஆரிய கைக்கூலியாக மாற மாட்டான் .
அவன் இந்து தமிழனாக இருந்தாலும் சரி, இஸ்லாமியத்தமிழனாக இருந்தாலும் சரி . கிறித்தவ தமிழனாக இருந்தாலும் சரி .
இன்றுதான், அந்த வரிகளின் பொருள் உணர்ந்து படித்தேன். அந்த வரிகள் இதோ!
"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!"//

- @இமாம் உசேன் சம்சுதீன்


ஒருவன் தவறான பாதையில் செல்ல மொழி ஒரு காரணமே அல்ல. தனக்குள் ஏற்படும் சுயநலம்தான். தமிழ் முஸ்லிம்களிலும் எத்தனையோ வழிகெட்ட கூட்டங்கள் உண்டு. எனவே மொழி என்பது ஒரு மனிதன் மற்றவர்களோடு உரையாட உபயோகிக்கும் ஒருசாதனமே. தாய் மொழிக்கு சற்று அதிக முக்கியத்துவம் கொடுப்பது மனித இயல்பு. ஆனால் அது வெறியாக மாறி விடக் கூடாது. எனது தாய் மொழியான தமிழில் நான் எழுதும் போது கிடைக்கும் இன்பம் மற்ற மொழிகளை படிக்கும் போதோ எழுதும் போதோ எனக்கு கிடைப்பதில்லை. அவரவர் தாய் மொழி அவரவர்க்கு சற்று உயர்வே. எவரையும் நாம் கட்டாயப்படுத்தக் கூடாது. மொழி வெறியை நபிகள் நாயகம் கண்டித்துள்ளார்கள்.

'மொழி வெறியையும், குலப் பெருமையையும் எனது காலடியில் போட்டு மிதிக்கிறேன்' என்று சொன்ன நபிகள் நாயகத்தை பின் பற்றும் எவரும் உருது முஸ்லிம், தமிழ் முஸ்லிம் என்று பிரித்து பார்க்க மாட்டார். அனைவரும் ஆதமுடைய மக்கள் என்ற பரந்த மனப்பான்மைக்கு வாருங்கள்.

'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்பதுதான் நமது தமிழ் முன்னோர்களின் வாக்கு. அதையும் மறந்து விட வேண்டாம்.

ரியாத்தில் அழகிய சொற்பொழிவு!

ரியாத்தில் அழகிய சொற்பொழிவு!

நேற்று ரியாத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ரியாத் கிளையில் கோவை அப்துர் ரஹீம் அவர்கள் மரணம் என்ற தலைப்பில் மிக அழகிய உரையை நிகழ்த்தினார்கள். மதினாவிலிருந்து அவர் பேச வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக அந்த அழகிய பேச்சை நாங்கள் கேட்டோம். அறிவியல் முன்னேற்றத்தை இது போன்ற ஆக்க பூர்வ காரியங்களுக்கு பயன் படுத்துவோம்.

பொழுது போக்கு சாதனங்கள் நிறைந்து விட்ட இந்த உலகில் இறைவனின் மார்க்கத்தைப் பற்றி கேட்க தங்களின் நேரத்தை செலவழித்து வந்தமர்ந்து இறைவனின் பொருத்தத்தை பெற்றுக் கொள்ளும் சகோதரர்களைப் போன்று நாமும் நமது நேரத்தை பயனுள்ள வகையில் செலவழிக்க உறுதிபூணுவோமாக!

500 சீனர்களின் மன மாற்றமும் மன்னர் அப்துல்லாவின் அடக்கமும்!Nearly 500 Chinese workers in Saudi Arabia converted to Islam at the same time after they were touched by the “simplicity” of the funeral of late King Abdullah bin Abdul Aziz, a newspaper in the Gulf Kingdom reported on Friday.

A YouTube film published by Ajel Arabic language daily showed the 500 men gathering near their company offices in the eastern town of Jubail and receiving instructions from Saudi religious authorities on how to embrace the new religion.

“They all became Muslims after chanted through loudspeakers ‘there is no God but Allah, Mohammed (PBUH) is the messenger of Allah,” it said

போன வாரம் உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான மன்னர் அப்துல்லா இறந்தவுடன் அவரை மிக எளிமையான மண் தரையில் எந்த கோபுரமும் கட்டாமல் அடக்கம் பண்ணியதை உலகெங்கும் பார்த்து பரவசப்பட்டோம். சவுதியின் ஜூபைல் ஏரியாவில் ஒரு பெரும் கம்பெனியில் வேலை செய்து வரும் 500க்கும் மேற்பட்ட சீன நாட்டவர் இந்த நிகழ்வை கண்டு 'இப்படி எளிமையான அடக்கம் இஸ்லாத்திலா? அதனை இந்த காலத்திலும் நடைமுறைபடுத்த முடியுமா?' என்று வியந்தனர். கம்யூனிஸ சீன அரசு பல செய்திகளை அந்த நாட்டு மக்களுக்கு ஒளிபரப்புவதில்லை. ஆனால் சவுதியில் உழைப்பு தேடி வந்த சீனர்கள் இந்த செய்திகளை பார்த்து தாங்கள் அனைவரும் இஸ்லாத்தில் இணைவதாக அறிவிப்பு செய்தனர். அதன்படி அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு ஒட்டு மொத்தமாக ஐநூறு பேரும் தங்களின் வாழ்வியலாக இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.

ஆஜல் அரபிக் தினசரி (ajel arabic daily) இந்த செய்தியை யுட்யூபிலும் வெளியிட்டுள்ளது. இஸ்லாத்தை ஏற்ற இந்த ஐநூறு பேரும் ஒலி வாங்கி முன்பாக ஒட்டு மொத்த குரலில் 'இறைவன் ஒருவனே! முகமது அந்த இறைவனின் தூதராக உள்ளார்' என்று உரத்த குரலில் கூறினர்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
gulf kingdom
ajel arabic daily
31-01-2015

http://www.emirates247.com/videos/news/video-500-chinese-convert-to-islam-after-saudi-king-s-funeral-2015-01-30-1.578735

மெக்ஸிகோவில் காணாமல் போன 43 மாணவர்கள் இறந்திருக்கலாம்?சுற்றுலா பயணம் சென்ற 43 மாணவர்களை சில நாட்களாக காணவில்லை. அவர்களை மெக்ஸிகோவின் போதை மருந்து கடத்தும் கும்பல் கடத்தியுள்ளதாக முன்பு செய்தி வந்தது. இது பற்றி உயர் அதிகாரி ஜீஸஸ் முரில்லோ சொல்லும் போது 'கடத்தப்பட்ட 43 மாணவர்களும் கொல்லப்பட்டு விட்டனர். அவர்களை கொன்று உடலை எரித்து ஆற்றில் வீசியுள்ளனர். ஆற்றோரங்களில் டீசல், துணிகள், எரிந்த உடலின் அடையாளங்கள் போன்றவற்றை நாங்கள் சேகரித்துள்ளோம். இதனை செய்தது போதை மருந்து கடத்தும் கும்பல் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது' என்கிறார்.

இந்த செய்தி உலக மீடியாக்களிலும், நமது நாட்டு மீடியாக்களிலும் எந்த முக்கியத்தையும் பெறவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இஸ்லாமிய பெயர் தாங்கி எவனாவது ஒரு காரியத்தை செய்தால் அதனை ஊதி பெரிதாக்கி ஒட்டு மொத்த மீடியாக்களும் ஒத்த குரலில் இஸ்லாத்தை நோக்கி கையை நீட்டுவதை பார்க்கிறோம். இதுதான் இன்றைய ஒட்டு மொத்த உலக மீடியாக்களின் நிலை.

தகவல் உதவி
presstv
28-01-2015

Friday, January 30, 2015

'எங்கும் இருட்டு! எனக்குள் பயம் தொற்றிக் கொண்டது!"இரவு எட்டு மணி இருக்கும். பனிக் காலம் ஆனதால் அதிக நடமாட்டமும் ஊரில் இல்லை. நான் வெளியூர் செல்வதற்காக பஸ்ஸூக்காக காத்திருந்தேன்.. வேப்ப மர இலைகளின் சுகந்தமான காற்று தென்றலாக என் மேல் தவழ்ந்து சென்றது. எங்கோ ஓர் மூலையில் நாய் 'ஊ.............' என்ற ஊளையிடும் சப்தமும் கேட்டது. என்னைத் தவிர வேறு யாரும் அங்கு இல்லை.

அப்போது நான் நிற்கும் இடத்துக்கு சற்று தூரத்தில் இரண்டு உருவங்கள் மெல்ல வந்து வேப்ப மரத்தினடியில் ஒதுங்கியது. அவர்கள் தங்கள் முகத்தை துணியால் மூடியிருந்தார்கள். கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தது. பனியினால் முகத்தை மூடியுள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டேன். நான் ஏற வேண்டிய பேரூந்தும் வந்தது. நான் ஏறிக் கொண்டேன். ஆச்சரியமாக என்னைத் தொடர்ந்து அந்த இருவரும் அதே பேரூந்தில் ஏறிக் கொண்டனர். பேரூந்தில் கூட்டமும் அதிகம் இல்லை. குளிர் காலம் ஆனதால் குளிருக்கு பயந்து பலரும் வெளிக் கிளம்பவில்லை போலும். :-) மெலிதாக இளையராஜாவின் 'பூங்காற்று திரும்புமா' பேரூந்தில் ஓடிக் கொண்டிருந்தது. அரை மணி நேர பயணத்துக்குப் பின் நான் இறங்க வேண்டிய நிறுத்தமும் வந்தது. நான் இறங்கிக் கொண்டேன்.

என்னைத் தொடர்ந்து அந்த இரண்டு இளைஞர்களும் அதே நிறுத்தத்தில் இறங்கிக் கொண்டனர். அதிக முன்னனேற்றமடையாத ஒரு கிராமம். நான் செல்லும் இடத்தை நோக்கி மெல்ல நடக்கத் தொடங்கினேன். என்னைத் தொடர்ந்து அந்த இருவரும் எனது பின்னே வந்தனர். நான் திரும்பி பார்த்தால் உடன் ஒதுங்கி மறைந்து கொள்கின்றனர். முகத்தில் இருந்த துணியையும் இதுவரை விலக்கவில்லை. எங்கோ தூரத்தில் ஒலி பெருக்கியில் சிலர் பேசும் சத்தம் மட்டும் மெலிதாகக் கேட்டது. இந்த இருவரும் என்னை பின் தொடர்ந்து வருவதை பார்த்து எனக்கு பயம் கொஞ்சம் தொற்றிக் கொண்டது. சவுதியிலிருந்து தமிழகம் சென்ற பத்தாவது நாள் இது. விலையுயர்ந்த கைக்கடிகாரம். சில ஆயிரம் பணங்கள் என்னிடம் இருந்தது. விலையுயர்ந்த செல்போனும் என்னிடம் இருந்தது. இதனை நோட்டமிட்டு பணத்தை அபகரிக்கும் கும்பலோ என்று பயந்தேன். நடையை சற்று வேகப்படுத்தினேன். அதே வேகத்தில் அவர்களும் என்னை பின் தொடர்ந்தனர். எனக்கு சந்தேகம் இன்னும் அதிகமானது. காய்ந்த சருகுகளின் சப்தம் வேறு சர....சர... என்று கேட்டது. கூடவே கோட்டான்களின் சப்தமும் சேர்ந்து கொள்ளவே 'அவ்வ்வ்வ்....................' என்று வடிவேல் பாணியில் பயமும் எனக்குள் தொற்றிக் கொண்டது. அதற்குள் வேறொரு ரோட்டில் இருந்து இரண்டு பேர் எனது வழியில் வந்து சேர்ந்து கொண்டனர்.. இப்போதுதான் எனக்கு கொஞ்சம் தைரியம் வந்தது. இனி பயமில்லை என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு என்னை பின் தொடர்ந்து வந்த அந்த இருவரை நோக்கி நகர்ந்தேன். என்னைப் பார்த்தவுடன் ரோட்டின் மறுபுறம் போக எத்தனித்தனர் அந்த இருவரும்.

'ஏய்... நில்லு! உங்களுக்கு என்ன வேணும்?'

உடன் பயந்தவர்களாக அந்த இருவரும் 'பாய்... நாங்கதான்' என்று முகத்தின் துணியை எடுத்தனர். அட... இது நம்ம ஊர் அரபி மதரஸா பிள்ளைகளாச்சே.... என்று வியந்தவனாக...

'எங்கேப்பா ரெண்டு பேரும் போறீங்க?'

'நீங்க எங்கே போறீங்களோ அங்கதான் நாங்களும் போறோம் பாய்'

'ஓ.... மீட்டிங் கேட்க வர்றீங்களா? அதுக்கு ஏன்பா முகத்தை மூடிக்கிட்டு என்னையும் பயமுறுத்திக்கிட்டு'

'நாங்க இந்த மீட்டிங் கேட்க வந்தது தெரிஞ்சா எங்களை மதரஸாவுலேருந்து நீக்கிடுவாங்க பாய்! அதனால தான் உங்க கண்ணுல படாம போகலாம் என்று நினைத்தோம். ஆனால் மாட்டிக் கொண்டோம்'

'ஹா... ஹா....' பலமாக சிரித்தேன்.

'தயவு செய்து இந்த விஷயத்தை வெளியில சொல்லிடாதீங்க பாய்'

'கவலைபடாதீங்க... நான் சொல்ல மாட்டேன்'

இப்படி பேசிக் கொண்டு வரும் போதே மீட்டிங் நடக்கும் இடத்துக்கு வந்து விட்டோம். நல்ல கூட்டம். தவ்ஹீத் ஜமாத்தின் 'வரதட்சணை ஒழிப்பு மாநாடு' நடந்து கொண்டிருந்தது. பிஜே அப்போதுதான் பேச ஆரம்பித்தார். அந்த இரு இளைஞர்களையும் பக்கத்திலேயே உட்காரச் சொன்னேன். சிறிது நேரம் கழித்து ஹோட்டலுக்கு சென்று இரவு உணவும் சாப்பிட்டோம். 11 மணிக்கு பிஜே தனது அருமையான உரையை முடித்தார். கூட்டம் களைய ஆரம்பித்தது. அந்த இரு இளைஞர்களையும் அழைத்துக் கொண்டு ஊருக்கு பஸ் ஏறினோம். வழியில் அவர்களிடம் பேசிக் கொண்டே வந்தேன்.

'மதரஸாவில் ஓதக் கூடிய மாணவர்களான உங்களுக்கு பிஜே மீட்டிங் கேட்கும் ஆர்வம் எப்படிப்பா?'

'எங்க வீட்டுல வறுமையினால மதரஸாவில் சேர்த்து விட்டார்கள் பாய். எனக்கு பிரியம் இல்ல. முன்பெல்லாம் பிஜே மீட்டிங் எங்க நடந்தாலும் போயிடுவேன்' ஒரு மாணவன்.

'இதற்கு முன்னால் ஒரு மாணவன் இவ்வாறு போனது தெரிந்து அவனை மதரஸாவிலிருந்தே நீக்கி விட்டார் எங்கள் முதல்வர்' மற்றொரு மாணவன்.

'தவ்ஹீத் ஜமாத் நடத்தும் மதரஸாவில் சேர வேண்டியதுதானே' என்று நான் கேட்டேன்.

'அதற்கு தான் முயற்சி செய்துகிட்டு இருக்கோம் பாய். துவாச் செய்யுங்க'

'கவலைப் படாதீங்க... உங்களை இறைவன் கைவிட மாட்டான்'

அதற்குள் ஊர் வரவே இறங்கிக் கொண்டோம்.

இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். அந்த இளைஞர்களை அதன் பின் அடிக்கடி தொடர்பு கொண்டு அவர்களை முழு ஏகத்துவவாதிகளாக மாற்றி விட்டோம். தற்போது அவர்கள் நல்ல வேலையில் வளை குடாவில் இருப்பதாக நண்பர்கள் சொன்னார்கள்.

சினிமா பார்த்தால் கண்டிக்கலாம்: சூது விளையாடினால் கண்டிக்கலாம்: விபசாரம் பண்ணினால் தண்டிக்கலாம்: திருடினால் தண்டிக்கலாம். குர்ஆனையும் ஹதீஸையும் கேட்க போனால் அந்த மாணவர்களை தண்டிக்கலாமா நியாயமாரே!

சொல்லுங்க நியாயமாரே!

டிஸ்கி: மதரஸா மாணவர்கள் முதல்வரிடம் சொல்லாமல் பிஜே கூட்டத்துக்கு வந்து என்னிடம் மாட்டிக் கொண்டது எங்கள் கிராமத்தில் முன்பு நடந்த ஒன்று. அதோடு சேர்த்து 'மானே... தேனே...' என்று போட்டு அதனை ஒரு சிறுகதையாகவே சொல்லி விட்டேன். இது போன்ற சம்பவங்கள் பல மதரஸாக்களில் நடந்து மாணவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

Wednesday, January 28, 2015

அமெரிக்காவில் மூன்று குழந்தைகளை கொன்ற தாய்!நான்கு வயது, ஒன்பது வயது, பத்து வயது பெண் குழந்தைகளை பெற்ற தாயே கொன்று அந்த உடல்களை துணி காய வைக்கும் இடத்தில் போட்டு விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது அங்கு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அடுக்கு மாடி குடியிருப்பு பகுதி ஒன்றில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது.

ஒரு வாரம் முன்பு நியூ ஜெர்ஸியில் பிறந்த குழந்தையை பெற்ற தாயே தீ வைத்து கொளுத்தியுள்ளாள். ஜனவரி 17ல் இந்த சம்பவம் நடந்துள்ளது.

வாழ்வில் ஏற்படும் சிறு பிரச்னைகள் கூட இவர்களை கொலை அல்லது தற்கொலையை நோக்கி இழுத்துச் செல்கிறது. தெய்வ நம்பிக்கை இல்லாது போனதும், மேற்கத்திய ஆடம்பர கலாசார மோகமும் இந்த அக்களின் நிம்மதியை தொலைத்து விட்டது. தினந்தோறும் குற்ற செயல்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்க அரசும் கவலை கொண்டுள்ளது.

NBC NEWS, PRESSTV
28-01-2015

http://www.nbcnews.com/news/us-news/georgia-mom-three-young-kids-dead-apparent-murder-suicide-n295081

'திருப்பித் தரும் வானம்' - சில அரிய செய்திகள் நாம் அறிய!

'திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல'
-குர்ஆன் 86:11,12,13,14


இந்த வசனத்தில் "இது இறைவனிடம் இருந்து வந்ததுதான் இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம்" என்று உலக மக்களுக்கு இறைவன் அறிவுறுத்துகிறான். எவ்வாறு வானம் மனிதனுக்கு உதவியாக பல பொருட்களை திருப்பித் தருவது உண்மையோ, எவ்வாறு பூமி பூகம்பத்தால் பிளந்து விடுவது உண்மையோ அதுபோல் இந்த குர்ஆனும் இறைவனிடம் இருந்து வந்துள்ளது என்பதும் உண்மையாகும். எனவே இதன் மீது நம்பிக்கை வைத்து வாழ்வை சீராக்கிக் கொள்ளுங்கள் என்கிறான் இறைவன்.

இனி இந்த வசனத்தையொட்டிய அறிவியல் கருத்துக்களில் நுழைவோம்.

படம் 1: ட்ராபோஸ்பியர்(troposphere) என்ற வளிமண்டல இடமானது பூமியிலிருந்து 6 முதல் 10 கிலோ மீட்டர் வரை பரந்துள்ளதாக அறிவியலார் கணிக்கின்றனர். இந்த பகுதிதான் பூமியின் நீரை உறிஞ்சி எடுத்துக் கொண்டு பின்னர் அதனை மழையாக நமக்குத் தருகிறது.படம் 2:அயனோஸ்பியர் (ionosphere) என்ற வளிமண்டலமானது பூமியிலிருந்து 80 முதல் 1000 கிலோ மீட்டர் வரை பரந்து விரிந்துள்ளது. இந்த வளி மண்டலத்திலுள்ள காந்த கதிர்கள் பூமியிலிருந்து ரேடியோ, டிவி, செல்பேசி போன்றவை வெளியிடும் அலைகளை உள்வாங்கிக் கொண்டு திரும்ப பூமிக்கு கொடுத்துக் கொண்டுள்ளது.

இன்று நாம் சாடலைட் யுகத்தில் வாழ்வதால் இந்த நிகழ்வுகளை புரிந்து கொள்வது நமக்கு சிரமமாக இருக்காது. அந்த காலத்திய மக்கள் 'திருப்பித் தரும் வானம் வானம்' என்றால் மழையை மட்டுமே குர்ஆன் சொல்வதாக புரிந்து கொண்டிருப்பர். மழை நீர் கூட வானத்திலிருந்து நேரிடையாக பொழிவதாகத்தான் பல காலம் மக்கள் நம்பியிருந்தனர். மழை நீர் மட்டும் அல்ல பின்னால் வரக் கூடிய பல அறிவியல் கண்டு பிடிப்புகளையும் வானத்தை நோக்கி செலுத்தி அதிலிருந்து நாம் நன்மைகளை பெற்றுக் கொள்வோம் என்ற உண்மையை 'திருப்பித் தரும் வானம்' என்ற வசனத்தின் மூலம் மனிதர்களுக்கு இறைவன் அறிவுறுத்துகிறான்.படம் 3: ஓஜோனோஸ்பியர் (ozonosphere - ஓசோன் அடுக்குகள்) நமது வளி மண்டலத்தில் உள்ள ஒவ்வொரு அடுக்குகளும் மற்றவற்றிற்கு இடைஞ்சல் இல்லாமல் தங்களின் பணியை மனித குலத்திற்கு செய்து கொண்டிருக்கின்றன. மழை வருவதற்காக ஏற்படுத்தப்பட்ட அடுக்கு அதற்குரிய வேலையை செய்கிறது. இணையம், ரேடியோ, தொலைக்காட்சி, செல்போன் போன்றவை தடையின்றி செயல்பட அதற்கென ஏற்படுத்தப்பட்ட வளி மண்டல அடுக்குகள் தங்கள் பணியை எந்த இடையூறும் இல்லாமல் செய்கிறது.. இவ்வாறு காரியங்கள் தடையின்றி நடைபெற ஓசோன் அடுக்குகளும் தங்களின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன.இவை எல்லாம் நம்மை படைத்த இறைவன் என்ற ஒருவன் இருந்து அவற்றிற்கான கட்டளைகளை பிறப்பிப்பதால்தான் தடையின்றி செயல்பட முடியும் என்ற முடிவுக்கு ஒரு அறிவுள்ள மனிதன் வந்தே தீருவான். இனி வசனத்தை மீண்டும் பார்போம்.

'திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல'
-குர்ஆன் 86:11,12,13,14


தகவல் உதவி:
ஹாருன் யஹ்யா இணைய தளம்
HARUN YAHYA

YOU ARE A GENIUS MR R K LAKSHMAN!

Tuesday, January 27, 2015

10 முஸ்லிம்களின் உயிரைக் காத்த ஷாயில் தேவி!சென்ற ஞாயிற்றுக் கிழமை பீஹாரின் அஜீஸ் பூர் நகரைச் சுற்றி இந்து முஸ்லிம் கலவரம் நடைபெற்றது. அஜீஸ்பூர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு கிராமம். இந்துத்வ தொண்டர்கள் வெறியோடு இந்த கிராமத்தில் புகுந்து முஸ்லிம்கள் நான்கு பேரை வெட்டிக் கொன்றனர். 25 முஸ்லிம் வீடுகளுக்கு மேல் தீ வைத்து நாசப்படுத்தினர். இதைப் பற்றி அக்கிராமத்தில் வாழும் ஷாயில் தேவி கூறுகிறார்.

'அந்த வெறி பிடித்த கூட்டம் ஆக்ரோஷமாக எங்கள் கிராமத்துக்குள் புகுந்தது. கொல்வதற்கு முஸ்லிம்களாக தேடினர். உடன் எனது பக்கத்து வீட்டு முஸ்லிம்கள் 10 பேரையும் எனது வீட்டுக்குள் மறைத்து வைத்தேன். எனது வீட்டுக்குள் புகுந்த அந்த கூட்டம் 'முஸ்லிம்கள் இங்கு இருக்கிறார்களா?' என்று அதட்டிக் கேட்டனர்.

'இங்கு யாரும் முஸ்லிம்கள் இல்லை' என்று பொய் சொன்னேன். வீட்டுக்குள் நுழைய முயற்சித்தனர். நான் சத்தம் போட்டு அவர்களை வெளியில் அனுப்பினேன். 10 உயிர்களை காப்பாற்றிய நிம்மதி கிடைத்தது' என்கிறார் ஷாயில் தேவி.

கலவரத்தில் தப்பி பிழைத்த 60 வயது ஆஷ் முஹம்மது கூறுகிறார் 'எங்கள் உயிரைக் காப்பாற்ற இறைவன் எங்களுக்கு ஷாயில் தேவியை அனுப்பியதாகவே உணருகிறோம். இவர் இல்லை என்றால் இன்று நாங்கள் உயிருடன் இல்லை' என்று நன்றி பெருக்கோடு கூறுகிறார்.

ஷாயில் தேவி மேலும் கூறும் போது 'முஸ்லிம்களை காப்பாற்றியது சிலருக்கு என் மேல் கோபத்தை உண்டு பண்ணியுள்ளது. சிலர் எனக்கு மிரட்டலும் விடுத்தனர். எனவே பயந்து போய் அருகில் உள்ள முஹம்மதின் வீட்டில் எனது இரண்டு பெண் குழந்தைகளோடு தஞ்சம் புகுந்து சில நாட்கள் வாழ்ந்தேன். மாவட்ட அரசு அதிகாரிகள் எனது உயிருக்கு உத்தரவாதம் கொடுத்ததால் இன்று எனது வீட்டுக்கு திரும்பியுள்ளேன்' என்கிறார்.

பீஹார் முதல்வர் ராம் மன்ஸ்ஹி 51000 ரூபாய் அன்பளிப்பாக ஷாயில் தேவிக்கு வழங்கியுள்ளார். போலீஸ் இந்துத்வாவினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இவரைப் பாராட்டி காங்கிரஸ் கட்சி தனது கட்சி அலுவலகத்தில் குடியரசு தினத்தன்று கொடியேற்ற வைத்து கௌரவித்தது.
பிஹார் காங்கிரஸ் தலைவர் அசோக் சவுத்ரி, முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் ஷாயில் தேவி அழைக்கப்பட்டு தேசியக் கொடியை ஏற்றுமாறு கவுரவிக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறுகையில், "மிகவும் சாதாரணமானவளான என்னை, காங்கிரஸ் கட்சி அழைத்துக் கொடியேற்ற வைத்ததை மிகவும் பெருமையாக உணர்கிறேன்" என்றார். ஷாயில் தேவிக்கு புதிய வெள்ளை காட்டன் புடவையையும், சால்வையையும் பரிசாகத் தந்துள்ளனர் காங்கிரஸார். காங்கிரஸ் இதிலும் அரசியல் பார்கிறது. இவர்கள் முன்பு ஒழுங்காக ஆட்சி செய்திருந்தால் இந்த நாடு இவ்வளவு கீழ்த்தரமான ஆட்சியாளர்களை பெற்றிருக்கிறாது. இன்று புண்ணுக்கு மருந்திடுகின்றனர்.

தகவல் உதவி
என்டிடிவி

பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகள் இது போன்ற நாட்டுப் பற்றுடைய சக மனிதர்களை மதம் கடந்து நேசிக்கும் பண்புடைய ஷாயில் தேவி போன்றவர்களுக்கு கொடுக்க வேண்டும். கொலைகாரர்களெல்லாம் ஆட்சிக் கட்டிலும் இது போன்ற நல்ல உள்ளங்கள் கிராமங்களில் ஏழ்மையில் வாழ்ந்து வருவது இந்தியாவுக்கே உள்ள முரண்பாடுகள். நாட்கள் இப்படியே சென்று விடாது. தெய்வம் நின்று கொல்லும். அந்த நாட்களில் ஷாயில் தேவி போன்ற நல்ல உள்ளங்களை இந்த நாடு தலைவர்களாக பெறும். அதற்காக பிரார்த்தனை புரிவோம்.

தகவல் உதவி
என்டிடிவி

http://www.ndtv.com/article/india/how-a-hindu-widow-saved-10-muslims-in-bihar-riots-651837

இந்திய அறுவடை முடிந்தது: அடுத்து சவுதியில்....


ஜெர்மனியின் 'டேன்னி ப்ளம்' - இஸ்லாத்தை நோக்கி....

ஜெர்மனியின் பிரபல கால் பந்தாட்ட வீரர் டேன்னி ப்ளம் (dannyblum) தூய இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார். ஜெர்மனியில் பெகிடா என்ற அமைப்பு இஸ்லாத்துக்கு எதிரான வியூகங்களை அமைத்து அங்கிருந்து இஸ்லாத்தை முற்றாக துடைக்க அரும்பாடு பட்டு வருகிறது. ஆனால் எதிர்பாராத திருப்பமாக அந்த மண்ணின் மைந்தர்களே இன்று இஸ்லாத்தை நோக்கி அலை அலையாய் வந்த வண்ணம் உள்ளனர். பள்ளி வாசல்களும் புதிது புதிதாக உருவாகி வருகின்றன.

தனது மன மாற்றத்தைப் பற்றி டேன்னி ப்ளம் கூறும் போது ' இந்த உலகில் அனைத்து செல்வங்களும் நம்மை விட்டு சென்று விடும். பணம், பெண், வாகனம், வீடு இவை எல்லாம் ஒரு நாள் நம்மை விட்டு சென்று விடும். இந்த செல்வங்கள் அனைத்தும் இருந்தும் மன அமைதி மட்டும் எனக்கு கிடைக்கவில்லை. மன உளைச்சலில் இருந்த எனக்கு இஸ்லாமில் தீர்வு கிடைத்தது. நமது வாழ்வின் அனைத்திலும் ஒரு விதமான மகிழ்ச்சி கிடைக்கும் வழி ஒன்று உண்டென்றால் அது நம்மை படைத்த இறைவனிடம் முழுமையாக விழுந்து விடுவதுதான். இது எனக்கு ஒரு வித்தியாசமான அனுபவம்' என்கிறார்.

எங்கோ ஒரு மூலையில் இருக்கும் யுவன் சங்கர் ராஜாவின் மன ஓட்டமும் ஜெர்மனியில் உள்ள டேன்னி ப்ளம்மின் மன ஓட்டமும் எங்கு சென்று முடிகிறது என்பதை நாம் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். ஆம்... இந்த இருவரின் உள்ளங்களையும் புரட்டியது நம்மை படைத்த இறைவன்தான்.

'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : திர்மிதீ 3511

'மனிதனின் உள்ளங்கள் இறைவனின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 4798

"All the wealth of this world possess, money, women, cars, villas, but I could never find inner peace and happiness, with Islam I solve this problem that haunted me. I was looking for happiness in all sorts of things, but nothing could make you happy as it is falling prostrate to God Almighty, it is something indescribably" said Blum.

தகவல் உதவி
brotherhoodislam

https://www.facebook.com/BrotherhoodInIslam/posts/10153131740419124

Monday, January 26, 2015

அமீர்கானின் ஹஜ் பயணம் விமரிசிக்கப்படுகிறது.தற்போது வட இந்தியாவில் இந்த போஸ்டரை வெளியிட்டு அமீர்கானுக்கு சிக்கலை உண்டு பண்ண இந்துத்வா அமைப்பினர் முயற்சிக்கின்றனர். அமீர் தனது தாயோரோடு ஹஜ் பயணம் மேற்கொண்ட போது இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது.

இங்கு அமீர்கான் 21 கற்களை பொறுக்குகிறார். இந்த கற்களை மூன்று இடங்களில் ஏழு ஏழாக எறிய வேண்டும் என்பது கட்டளை. இவ்வாறு ஏன் எறிய வேண்டும்?

நபி ஆப்ரஹாம் இறைவனின் கட்டளையை நிறைவேற்ற புறப்படும் போது சாத்தான் இந்த மூன்று இடங்களில் நின்று அந்த இறைக் கட்டளையை நிறைவேற்ற விடாது மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தினான். இதனால் கோபமுற்ற நபி ஆப்ரஹாம் சிறிய கற்களை கொண்டு 'தூரப் போ' சாத்தானே' என்று விரட்டுகிறார். இவரின் மன உறுதியை கண்டு சாத்தான் அவரிடமிருந்து விரண்டோடி விட்டதாக இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

இதனை நினைவு கூறி அவரைப் போலவே எங்கள் மனதில் இது போன்ற சாத்தானின் ஊசலாட்டங்கள் ஏற்பட்டால் தூர விரட்டுவேன் என்பதை சிம்பாலிக்காக உணர்த்துவதற்காக இந்த செயல் ஏற்பட்டது. விபசாரம், வட்டி, பொய், திருட்டு, கொலை போன்ற பெரும் பாவங்களை சாத்தான் எனக்கு நல்லதாக்கி காட்டினால் அவனை இதனைப் போல் விரட்டுவேன் என்று உலக மக்கள் உறுதி எடுத்துக் கொள்வதற்காக இந்த நிகழ்வு ஏற்படுத்தப்பட்டது.

இனி பிகே படத்துக்கு வருவோம்.அமீர்கான் ஒரு கல்லை வழியிலிருந்து எடுக்கிறார். அந்த கல்லின் மேல் ஒரு பொட்டை வைக்கிறார். சிகப்பு சாயத்தை அதன் மேல் பூசி ஒரு ஆலமரத்தின் கீழ் வைக்கிறார். சிறிது நேரத்தில் நமது வியாபாரம் ஆரம்பமாகும் என்கிறார். அது போலவே அந்த வழியே வரும் கல்லூரி மாணவர் முதல் வயதான கிழவர்கள் வரை விழுந்து கும்பிட்டு விட்டு அங்கு தங்கள் பணத்தையும் போடுகிறார்கள். முதல் இல்லாத வியாபாரம் என்று மக்களின் அறியாமையை படம் பிடித்து காட்டுகிறார். இதற்கும் ஹஜ்ஜில் கற்களை எறிவதற்கும் என்ன சம்பந்தம்?

சைத்தானிய எண்ணங்களை விரட்ட கற்களை அமீர்கான் பயன்படுத்துகிறார். அதே கல்லை மற்றவர் வணங்குவதற்கு பயன்படுத்துகின்றனர். இரண்டும் எதிரெதிர் பாதையில் பயணிப்பதை ஏன் இந்துத்வாவாதிகள் உணரவில்லை?The Best scene of Amir Khan Movie PK by JahazVId

http://www.dailymotion.com/video/x2dq0kb_the-best-scene-of-amir-khan-movie-pk_news


Best Scene Of PK Bhagwan kahan hai ? by Alertstvcom

http://www.dailymotion.com/video/x2drlo0_best-scene-of-pk-bhagwan-kahan-hai_news

http://www.downvids.net/-pk-this-is-my-best-scene-of-movie-love-it--583516.html#AddBlog

சிரி(றி)ய சிறுவனை அறைந்த பர்கர் கிங் நிர்வாகம்!

A hungry young Syrian refugee boy has been beaten by a restaurant manager in Turkey's northwestern city of Istanbul for eating a customer's leftovers.

The incident, which occurred at a branch of fast food chain, Burger King, in Istanbul's Sirinevler district on January 21, received a massive angry reaction after shocked witnesses shared details and photos online showing the 11-year-old boy sitting next to blood-stained tissues beside him, AFP reported on Saturday.

-presstv
24-01-2015

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள ஸ்ரீநெவ்லர் மாவட்டத்தில் சிரிய அகதிகள் கடந்த இரண்டு வருடங்களாக தங்கியுள்ளனர். அங்கு பர்கர் கிங் உணவகமும் உள்ளது. அந்த உணவகத்தில் வாடிக்கையாளர் சாப்பிட்டது போக மீதமுள்ளதை குப்பையில் கொட்ட வைத்துள்ளனர். அந்த வழியே வந்த ஒரு சிரிய நாட்டு அகதி சிறுவன் 11 வயதான ஹலில் பசியினால் அந்த உணவை எடுத்து சாப்பிட்டுள்ளான். இதனை தூரத்திலிருந்து பார்த்த உணவகத்தின் மேனேஜர் அந்த சிறுவனை அடித்து காலாலும் உதைத்துள்ளார். இதனால் அவனுக்கு ரத்தமும் வந்துள்ளது. இதனை புகைப்படம் எடுத்து இணையத்திலும் சிலர் விடவே அது பெரும் பிரச்னையாகி மாணவர்களை போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்துள்ளது. அந்த உணவகத்தை மாணவர்கள் தாக்கினர். எதிர்ப்பு அதிகமாவதைக் கண்ட நிர்வாகம் அந்த மேனேஜரை பணி நீக்கம் செய்துள்ளது.

சுமார் இரண்டு மில்லியன் சிரிய அகதிகளை துருக்கி காப்பாற்றி வருகிறது. மீதமான உணவை சாப்பிட்ட ஒரு ஏழையை தாக்கிய அதிகார வர்க்கத்தின் செயலாகவே போராட்டத்தினர் பார்க்கின்றனர். 'தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என்று சூளுரைத்து முதலாளி வர்க்கத்தை வழிக்கு கொண்டு வந்த மாணர்களை பாராட்டுவோம்.

இந்த குளிரில் சரியான இருப்பிடமின்றி, சரியான உணவின்றி அல்லல்படும் சிரிய அகதிகளுக்கு கூடிய விரைவில் அமைதி திரும்பி தங்கள் நாட்டை சென்றடைய நாமும் பிரார்த்திப்போம்.

பிரபல கார்ட்டூனிஸ்ட் ஆர் கே லஷ்மண் மறைவு!இந்திய கார்ட்டூன் உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்த ஆர் கே லஷ்மண் நோய் வாய்பட்டதனால் திங்கட்கிழமை இறந்துள்ளார். அவருக்கு வயது 93. நமது தமிழ் பத்திரிக்கை துறையில் கார்ட்டூனிஷ்ட் மதனுக்கு எப்படி ஒரு தனி இடமோ அது போல் ஆங்கில பத்திரிக்கை உலகில் இவரது கார்ட்டூனுக்கு மிக மதிப்பிருந்தது. 'காமன் மேன்' என்ற ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதன் மூலம் இந்திய அரசியலையும் உலக அரசியலையும் கலக்கியவர். டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் இவர் வரைந்த பல கார்ட்டூன்கள் மிக யதார்த்தமாக இருக்கும்.

1921 ஆம் ஆண்டு மைசூரில் பிறந்தார். இவரை பிரிந்து வாடும் இவரது குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.

பாலிவுட் நடிகர்கள் மீது லவ் ஜிகாத் குற்றச்சாட்டுஇந்து மகா சபையின் வார இதழான ‘இந்து சபா வார்தா’ தலையங்கத்தில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது:

பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர்கான், சயீப் அலிகான், ஃபர்தீன் கான், இம்ரான் ஹாஷ்மி ஆகியோர் இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்கள் தங்கள் மனைவிகளை நேசிப்பது உண்மை யானால், அவர்களை திரும்பவும் இந்துக்களாக மாற்றவேண்டும்.

முஸ்லிம் நடிகர்களுக்கு ஜோடியாக இந்து நடிகைகளை நடிக்கச் செய்யுமாறு திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நிர்பந்தம் அளிக்கப்படுகிறது. முஸ்லிம் நடிகர்கள், இந்து கதாபாத்திரங்களில் இந்து நடிகைகளுடன் நடிப்பதை பார்க்கும் இந்துப் பெண்கள், முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்துகொள்வதை ஒழுக்கக் கேடாக கருதுவதில்லை. இவர்கள் தங்கள் பகுதியில் வசிக்கும் முஸ்லிம் இளைஞனை தங்கள் ஆதர்ச நாயகனாக பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். இந்த திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் காரணமாகவே இந்துப் பெண்கள் முஸ்லிம் இளைஞர்களை திருமணம் செய்வதை இயல்பானதாக கருதுகின்றனர். லவ் ஜிகாத்துக்கு இந்த முஸ்லிம் நடிகர்கள் தூண்டுகோலாக இருக்கின்றனர். இவ்வாறு அந்த தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த வார இதழின் ஆசிரியர் முன்னா குமார் சிங்கை தொடர்புகொண்டு கேட்டபோது, “இந்த முஸ்லிம் நடிகர்கள் தங்கள் மனைவிகளை நேசிக்கிறார்கள் என்றால், பிறகு ஏன் தங்கள் மனைவிகளை முஸ்லிம்களாக மாறச் செய்து இஸ்லாமிய கலாச்சாரத்தை பின்பற்றச் செய்தனர்?இந்தப் பெண்கள் தங்கள் பெயருக்கு பின்னால் முஸ்லிம் குடும்பப் பெயர்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இப்பெண்கள் தங்கள் (இந்து) குடும்பப் பெயர் களையே வைத்துக்கொள்ள ஏன் அனுமதிக்க கூடாது?” என்றார்.

தமிழ் இந்து நாளிதழ்
25-01-2015

இந்து பெண்களை இதை விட அசிங்கமாக வேறு எவரும் கேவலப்படுத்த முடியாது. ஆத்திரக் காரனுக்கு புத்தி மட்டு என்பது இவர்களைப் பொறுத்த வரை சரியாக பொருந்தி போகிறது. அமீர் கானோ, ஷாருக் கானோ அல்லது சய்யீஃப் அலி கானோ இஸ்லாத்துக்கு அத்தாரிட்டி கிடையாது. இவர்கள் அனைவரும் கூத்தாடிகள். பணம் கொடுத்தால் எந்த வேஷமும் கட்ட தயங்க மாட்டார்கள். இஸ்லாத்தை பின் பற்றும் ஒருவன் நாளொரு பெண்ணோடு அரை குறை ஆடையுடன் ஆடி சமூகத்தை சீரழிப்பானா? எனவே பெயரைத் தவிர்த்து இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

ஒரு கூத்தாடியை திரையில் பார்த்து, அவனது பெயரை பார்த்து மயங்கி இந்து பெண்கள் முஸ்லிம் இளைஞர்களிடம் மயங்கி விடுகின்றனர் என்ற வாதமானது இந்திய பெண்களை எவ்வளவு கேவலமாக இந்த இந்துத்வாவினர் நினைக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இந்து மக்கள் இந்த வாதத்தை ஒட்டு மொத்தமாக நிராகரிக்க முன் வர வேண்டும். இஸ்லாமிய இளைஞர்கள் திட்டமிட்டு இந்து பெண்களை கவர்கிறார்கள் என்று முன்பு சொன்ன குற்றசாட்டு பொய் என்பதை இதன் மூலம் அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள்.

தமிழ் திரைப்படத் துறையில் அனைவரும் ஹிந்து மத ஹீரோக்களே! இவர்கள் யாரையாவது பார்த்து முஸ்லிம் பெண்கள் இந்து மதத்துக்கு மாறுகின்றார்கள் என்று சொன்னால் பலரும் சிரிக்க மாட்டார்களா?

கூத்தாடிகளான சல்மான் கானையும், ஷாருக்கானையும், அமீர்கானையும் காட்டி எந்த முஸ்லிமும் பெருமைபட்டுக் கொள்ள மாட்டான். இவர்கள் குர்ஆனின் படி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதில்தான் முஸ்லிம்களுக்கு பெருமை இருக்கிறது. இஸ்லாம் பிறப்பினால் ஒருவனுக்கு வருவதில்லை. அவன் வாழ்வதின் மூலமாகத்தான் இஸ்லாமியனாக பார்க்கப்படுகிறான்.

இந்து மதத்தை பூரணமாக பின் பற்றும் ஒருவன் எவ்வாறு தந்தை பெரியாரை காட்டி பெருமைபட்டுக் கொள்ள முடியாதோ அது போல்தான் இந்த சினிமா கூத்தாடிகளான கான்களை காட்டி எந்த முஸ்லிமும் பெருமைபட்டுக் கொள்ள முடியாது.

இந்து மதத்திலுள்ள வர்ணாசிர கொள்கைகளையும், மூடப் பழக்கங்களையும் முதலில் ஒழிக்க முற்படுங்கள். மத மாற்றங்கள் தானாக குறைய ஆரம்பிக்கும்.

அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.


Sunday, January 25, 2015

செண்பகமே.... செண்பகமே..... தென் பொதிகை... சந்தனமே!கார்ட்டூன் வரைந்தது சுந்தர்.

பிரியாணியின் மகிமையை உணர்ந்தவர்கள்! :-)பிரியாணியின் சுவையை தேடிச் சென்று

விருந்தில் ஓசியில் கிடைக்கிறதே என்று

ஏகத்துக்கும் உள்ளே தள்ளி விட்டு மேலே

செரிக்க இரண்டு மாத்திரைகளையும் தள்ளி

மருத்துவருக்கு கணக்கின்றி வாரி வழங்கும்

வள்ளலாகித்தான் போனோம் நாமெல்லாம்!

வயிற்றை மூன்றாக்கி ஒன்றை உணவாகவும்

மற்றதை தண்ணீராகவும் மூன்றாவதை காற்றுமாக

வைக்கச் சொல்லி நமது நபிகள் நாயகம்

நமக்கு அறிவுறுத்தியதை மறந்ததும் ஏனோ?

உலகத்து வியாதிகளையும் தெரிந்தே சுமக்கும்

சில மனிதர்களைப் பார்தால் குணங்குடி மஸ்தான்

சாகிபின் பாடல் ஒன்றுதான் ஞாபகம் வருகிறது.

'வேட்டை பெரிதென்றே

வெறி நாயைக் கைப்பிடித்தே...

காட்டில் புகலாமோ....

கண்னே... ரகுமானே....."

------------------------------------------

ஹஜ்ரத் மிக்தாம் இப்னு மஃதீ கரிப் அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன். ஆதமுடைய மக்களின் நிரம்பக் கூடிய பைகளில் மிகவும் கெட்டது அவர்களின் வயிறாகும். ஆதமுடைய மகனுக்கு தனது முதுகெலும்பை நேராக்கிக் கொள்ளும் அளவு உணவே போதுமானது. அதுவும் அவனுக்கு போதாது என்றால் தன் வயிற்றில் மூன்றில் ஒரு பகுதியை உணவுக்கும் மற்றொரு பகுதியை தண்ணீருக்கும் மற்றொரு பகுதியை அவன் சீராக மூச்சு விடுவதற்கும் ஆக்கிக் கொள்ளட்டும்.
(நூல் : திர்மிதி)

ஹஜ்ரத் உமர் அவர்கள் ஒருமுறை தங்களது குத்பாவில் “நீங்கள் வயிறு நிரம்ப உண்ணுவதை விட்டும் உங்களை நான் எச்சரிக்கிறேன். அப்படி வயிறு நிரம்ப உண்ணுவதால் தொழுகையில் சோம்பலும் உடலுக்கு நோவினையும் உண்டாகிறது. எனவே உணவில் நடுநிலையைக் கையாளுங்கள். அது உங்களின் பெருமையை தூரமாக்கும். உடலுக்கு ஆரோக்கியம் தரும். வணக்கம் புரிய சக்தி தரும். அறிந்து கொள்ளுங்கள்! மனிதன் தனது மார்க்கத்தை விட மனோ இச்சையை தேர்ந்தெடுக்காதவரை அவன் அழியமாட்டான்” என்று கூறியுள்ளார்.

விஞ்ஞானம் : பிரபல மருத்துவ நிபுணர் ரிச்சர்ட் பார்ட் என்பவர் மிக நீண்ட ஆய்விற்கு பிறகு எப்போதும் தேவையை விட அதிகம் சாப்பிடும் மனிதர்களுக்கு கீழ்க்கண்ட நோய்கள் துளிர்விடுவதாக கூறியுள்ளார்.
1. Brain Diseases (மூளை சம்பந்தப்பட்ட நோய்கள்)
2. Eyes Diseases (கண் சம்பந்தப்பட்ட நோய்கள்)
3. E.N.T. Diseases (காது. மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட நோய்கள்)
4. Chest & Loung Diseases (தோள் புஷம், ஈரல் சம்பந்தப்பட்ட நோய்கள்)
5. Heart & Volves Diseases (இதயம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள்)
6. Gall Bladder Diseases (பித்தப்பை சம்பந்தப்பட்ட நோய்கள்)
7. Diabetese (நீரழிவு நோய்)
8. High Blood Pressure (அதிக இரத்த அழுத்தம்)
9. Depression (மன அழுத்தம்)

வானமும் பூமியும் எவ்வாறு நிலைபெற்றுள்ளது?நாம் வசிக்கும் இந்த பூமியும் வானமும் எவ்வாறு கீழே விழாமல் நிறுத்தப்பட்டுள்ளது என்பதை என்றாவது சிந்தித்து இருக்கிறோமா? நம் முன்னோர்களில் சிலர் இந்த பூமியையும் வானத்தையும் நிலவையும் பற்றி என்ன சொல்லி வைத்துள்ளார்கள் என்று பார்ப்போம்.

ஒரு புராணம் நமது பூமியை மூன்று திமிங்கிலங்கள் ஒன்றினைந்து சுமந்து கொண்டிருக்கிறது என்கிறது. மற்றொரு புராணம் ஒரு மீனின் வாலில் பூமி நிலைபடுத்தப்பட்டுள்ளது என்கிறது. வேறு சில புராணங்கள் பன்றியின் மூக்கின் மீது இந்த பூமி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்கிறது. மேலும் சில கதைகளில் ஒரு காளையின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் பூமி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறுகிறது.

பல அரிய கருத்துக்களை கூறிய வள்ளுவரோ 'திங்களை பாம்பு கொண்டற்று' என்று நமது பாட்டிகளின் கதையை ஒட்டி கூறுவதைப் பார்க்கிறோம். அவர் பார்வையில் சந்திர கிரகணம் ஏற்படுவது பாம்பு விழுங்குவதால் ஏற்படுகிறது என்றும் பாம்பு அந்த சந்திரனை கக்குவதால் சந்திர கிரகணம் விலகுகிறது என்ற ரீதியில் சொல்வதைப் பார்க்கிறோம். இது நம் முன்னோர்கள் வானம், பூமி, சந்திரன் பற்றி எந்த அளவு விளங்கியிருந்தார்கள் என்பதை பார்க்க முடிகிறது.

சரி. குர்ஆன் இந்த நிகழ்வுகள் பற்றி என்ன சொல்கிறது என்பதையும் பார்ப்போம்.

'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி வானங்களை இறைவனே உயர்த்தினான்.....நீங்கள் உறுதியாக நம்புவதற்க்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.'
-குர்ஆன் 13:2

'நீங்கள் பார்க்கின்ற தூண்கள் இன்றி இறைவனே வானங்களைப் படைத்தான். உங்களை சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான்.'
-குர்ஆன்: 31:10

ஆகாயத்தின் கட்டுமானத்தில் எந்த திசையில் எவ்வளவு தூரம் நீங்கள் சென்று பார்த்தாலும் கண்களுக்கு தெரியக் கூடிய எந்த ஒரு தூணையும் நீங்கள் காண இயலாது. ஈர்ப்பு விசையைக் கொண்டே ஒவ்வொரு கோள்களும் பிணையப்பட்டு அந்தரத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் காண இயலாது. ஒவ்வொரு முறையும் நாம் பூமியில் கண்ணுக்குப் புலப்படாத அந்த காந்த தூண்களை கடந்து அதனை உடைத்துக் கொண்டு நடக்கிறோம் ஆனால் அந்த உணர்வு நமக்கு என்றுமே ஏற்பட்டதில்லை. அந்த உணர்வு நமக்கு ஏற்படுமானால் நம்மால் பூமியில் எந்த இடத்தையும் கடக்கவும் முடியாது. படைத்த இறைவன் நமக்கு செய்துள்ள பல உதவிகளில் இதுவும் ஒன்று.

நம் கையில் உள்ள ஆப்பிள் தவறினால் நேராக பூமியை நோக்கி செல்கிறது. ஆப்பிள் பூமியை நோக்கி செல்கிறது என்பதை விட பூமியின் ஈர்ப்பு விசையானது ஆப்பிளை இழுக்கிறது என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அந்த ஈர்ப்பு விசையை நம் கண்களால் பார்க்க முடிவதில்லை. இதைத்தான் 'பார்க்கின்ற தூண்களின்றி' என்ற அழகிய வார்த்தையைக் கொண்டு குர்ஆன் நமக்கு விளக்குகிறது.

அறிஞர் அரிஸ்டாட்டில் பூமியை மையமாக வைத்தே அனைத்து கோள்களும் சுழல்கின்றன என்று கூறி வந்தார். அன்றைய கிருத்தவ சபைகளும் அரிஸ்டாட்டிலின் கருத்தையே உண்மை என்று வாதிட்டது. இதன் பிறகு போலந்து நாட்டின் அறிவியல் அறிஞர் கோபர் நிக்கஸ் வானியலைப் பற்றிய ஆய்வை மேற்கொண்டார். இந்த அறிஞர் கிறித்தவ சபையிலும் பணியாற்றி வந்தார். முடிவில் சூரியனைச் சுற்றியே மற்ற கோள்கள் சுழலுகின்றன என்ற 'சூரிய மைய கோட்பாட்டை' உருவாக்கினார். கிறித்தவ சபைக்கு மாற்றாக இந்த கருத்து இருந்ததால் தான் கண்ட உண்மையை தனது நெருங்கிய நண்பர்களிடமே கோபர் நிக்கஸ் சொல்லி வந்தார். பிறகு தனது அறுபதாவது வயதில் ரோமில் 'சூரிய மையக் கோட்பாட்டை வலியுறுத்தி' உரை நிகழ்த்தினார். சும்மா இருக்குமா கிறித்தவ சபை! 'மத நிந்தனை' என்று குற்றம் சாட்டி அவர் கருத்து தவறு என்று அவர் வாயாலேயே சொல்ல வைத்து அவரை மன்னிப்பும் கேட்க வைத்தது கிறித்தவ சபை. இருந்தும் தனது எழுபதாவது வயதில் இறப்பதற்கு முன் சூரியனை மையமாக வைத்தே மற்ற கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை புத்தமாக வெளியிட்டு மறைந்தார் அந்த மேதை.

அறிஞர் நியூட்டனும் கிரக சஞ்சாரங்களை விளக்கி 'பேரண்டம் தாமாகவே காரணமின்றி நிலை பெற்றிருக்கவில்லை. அதனை நிலை நிறுத்தும் கண்ணுக்குப் புலப்படாத ஒரு பிணைப்பு உண்டு. அந்த பிணைப்பே பேரண்டம் மொத்தமும் பரவி நிற்க்கும் ஈர்ப்பாற்றலாகும்.' என்று கூறுகிறார்.

இதனையே குர்ஆன் கூறும் போது பின் வருமாறு விளக்குகிறது.

'வானங்களும் பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மை உடையவனாகவும் மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.'
-குர்ஆன்: 35:41

இன்று இந்த உண்மைகளை எல்லாம் எல்.கே.ஜி படிக்கும் நம் குழந்தைகளுக்குக் கூட தெரிந்திருக்கும். ஆனால் இந்த குர்ஆன் இறங்கிய காலம் 1400 வருடங்களுக்கு முன்பு என்பதையும் அந்த மக்கள் வானியலைப் பற்றிய போதிய அறிவு இல்லாதவர்களாகவும் இருந்ததையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ட்விட்டரில் மோடு முட்டி :-)

"நீர்யானைக்கு ஆங்கிலத்தில் வாட்டர் எலிபண்ட்(WATER ELEPHANT) ன்னு குழந்தைக்குசொல்லி கொடுத்தது ஒரு குற்றமாயா?
பேரன்ட் மீட்டிங்ல டீச்சரமா என்மானத்தா வாங்கிருச்சு" - ட்விட்டரில் மோடு முட்டிSaturday, January 24, 2015

குரங்குகளை கட்டுப்படுத்துங்கள்: அமெரிக்கா கட்டளை!டெல்லியில் அதிகமாக இருக்கும் குரங்குகளால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இடையூறு நேரக் கூடாது என்பதற்காக, சில பகுதிகளிலிருந்து குரங்குகளை விரட்டும்படி, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் இந்திய உள்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் இந்து நாளிதழ்
24-01-2015

இதற்கு தமிழ் இந்து நாளிதழில் வந்த பின்னூட்டங்கள்.

RAJA
குரங்குஎன்று தாழ்வாக நினைக்காதீர்கள். அது இந்தியர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக , ஏன் தெய்வமாக போற்றப்படுவது. அதனை அவ்வளவு சுலபமாக ஊரை விட்டு விரட்ட எந்த ஒரு உண்மையான ஹிந்துவும் ஒப்புக்கொள்ள மாட்டான் .ஒபாமாவின் இந்த வேண்டுகோள் ஹிந்துக்களையும் , எங்கள் கடவுளையும் அவமானப்படுத்துவதாக எடுத்துகொண்டு, நம்முடைய எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும், ஹிந்துக்களின் அரசான பி ஜே பி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்

DANDY
குரங்குக்கு மாத்திரம் அல்ல எலிகளுக்கு கூட இந்தியாவில் கோயில்கள் …இவைகளுக்கு செலவளிகப்படும் பணத்தை ….வீதியில் பசியால் துடிக்கும் பிச்சைகாரர்களுக்கு கொடுக்கலாம் ...

Ramesh Sargam
இந்து அமைப்பினர் கண்டனம். குரங்கு என்று கூறாதீர்கள். பகவான் அனுமனின் வாரிசு என்று கூறுங்கள்!!

கபீர்
இராமருக்கு பாலம் கட்ட உதவியாயிருந்து என்று எழுதியுள்ளீர்களே, எப்படி விரட்ட போகின்றீர்கள்.

Srinivasan Srinivasan
யாரோ ஒரு அண்டை நாட்டுக்காரர் வருகைக்காக ஏன் நம் மூதாதையர்களை விரட்ட வேண்டும்? :)பெல்ஜியம் நாட்டு புகழ் பெற்ற மாடல் இஸ்லாத்தை நோக்கி.....2012 பெல்ஜியம் அழகிப் போட்டியில் தேர்வான லிண்டஸே வான் கிளே தற்போது இஸ்லாத்தை தழுவியுள்ளார். மொராக்கோ செய்தி ஸ்தாபனம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தனது பெயரை ஆயிஷா என்றும் மாற்றி வைத்துக் கொண்டுள்ளார். முன்பு அரை குறை ஆடையோடு பல ஃபேஷன் ஷோக்களிலும் கலந்து கொண்டார். இஸ்லாத்தை ஏற்றதற்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் முழு உடம்பையும் மறைக்கும் வண்ணம் உடைகளை தேர்வு செய்து கலந்து கொள்வது பலரையும் ஆச்சரியத்தற்குள்ளாக்குகிறது. முன்பு மது அருந்தியவர் இன்று வெறும் சோடாக்களை மட்டுமே குடிக்கிறாராம். பன்றி மாமிசம் சாப்பிடுவதையும் விட்டு விட்டாராம்.

பெல்ஜிய கால்பந்தாட்ட வீரர் மொமுத்து டயா வை திருமணம் செய்து கொண்டுள்ளார். திருமணத்துக்கு முன்பு தனது கணவர் இஸ்லாமிய பெயர் மட்டும் போதாது அதன்படி வாழவும் வேண்டும் என்று கட்டளையிட்டார். அதையே நானும் பின்பற்றுகிறேன் என்கிறார் ஆயிஷா.

கல்லூரியில் கம்யூனிகேஷன் மேனேஜ்மெண்ட் படிப்பை மேலும் தொடர்கிறார். 2016ல் இவரது படிப்பு முடிவுறும். இவரது மன மாற்றத்துக்கு வழக்கம் போல் பெல்ஜிய நிற வெறியர்கள் இவரை தூற்ற ஆரம்பித்துள்ளனர். 'உனக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு கண்களின் மஞ்சள் நிறம் மாறிவிடும், முடியின் நிறமும் தோலின் நிறமும் மாறும். இனி ஐரோப்பியன் என்று பெருமையாக சொல்லிக் கொள்ள உன்னால் முடியாது. நீ ஒரு பிசாசு' என்றெல்லாம் அர்ச்சனைகள் தொடங்கி விட்டன. ஆனால் இதைப் பற்றி எல்லாம் கவலைப் படாமல் தனக்கு கிடைத்த அழகிய வாழ்வு முறைக்கு இறைவனுக்கு நன்றி சொல்கிறார் ஆயிஷா. இவரது அழகுக்கு வெள்ளை நிறத்து ஐரோப்பியர்கள் எத்தனையோ பேர் கிடைப்பர். கருப்பராக இருந்தாலும் அவலட்சணமாக இருந்தாலும் இஸ்லாத்தை வாழ்வியலாகக் கொண்ட ஒருவரே தனக்கு சரிப்பட்டு வருவார் என்று முடிவெடுத்து இன்று இந்த ஆப்ரிக்கரை கைப்பிடித்துள்ளார் இந்த அழகி.

கருப்பும் வெள்ளையும் இன்று இஸ்லாத்தால் ஒன்றாகியுள்ளது. நிற வெறி, மொழி வெறி, கலாசார வெறி அனைத்தும் மண்ணோடு மண்ணாக்கப்பட்டுள்ளது. இனி இந்த இருவரின் கலாசாரம் முகமது நபி காட்டித் தந்த வழிமுறையாக இருக்கும். இந்த தம்பதிகளை நாமும் வாழ்த்துவோம்.Friday, January 23, 2015

மன்னர் அப்துல்லாவின் நிரந்தர பயணக் காட்சிகள்!(இறந்தவரின் பிரார்த்தனை தொழுகைக்காக உடல் பள்ளி வாசலுக்கு எடுத்து வரப்படுகிறது).(தொழுகை முடிந்தவுடன் அடக்கம் செய்ய உடல் எடுத்துச் செல்லப்படுகிறது.)உலகின் கோடீஸ்வரர்களில் ஒருவரான மன்னர் அப்துல்லாவின் உடல் ரியாத் மன்ஃபுஹா என்ற இடத்தில் உள்ள பொது மையவாடியில் வெறும் கூழாங் கற்களைக் கொண்டும் மண்ணைக் கொண்டும் உடல் மூடப்படுகிறது. இன்னும் இரண்டு மாதத்தில் மழை காற்றால் இவையும் சென்று விடும். இதுதான் இஸ்லாம் காட்டிய வழிமுறை. இதே நேரத்தில் நமது மெரீனா பீச்சையும், டெல்லி ராஜ்காட்டையும் தலைவர்களின் சமாதிகளால் நிரம்பி வழிவதை நினைத்துப் பார்த்தேன்.

மன்னர் இறந்ததற்கான எந்த துக்க ஊர்வலங்களும் இல்லை. கொடிக் கம்பம் துக்கத்தால் அரைக் கம்பத்தில் பறக்கவில்லை. தொழிற் கூடங்கள் துக்கத்தால் மூடச் சொல்லி அரசால் நிர்பந்திக்கப்படவில்லை. வழக்கம் போல் எல்லா வேலைகளும் நடந்து வருகிறது.

மன்னர் அப்துல்லா தனது வாழ்நாளில் தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளை மன்னித்து இறைவன் அவரை சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வானாக!

நாகூர் தர்ஹாவும் ஏர்வாடி தர்ஹாவும் கதி என்று அதுதான் இஸ்லாம் என்று பாவங்களை சுமந்து வரும் நமது சகோதரர்கள் இது போன்ற சவ அடக்கங்களை பார்த்து தங்களை திருத்திக் கொள்வார்களாக!

படங்கள் உதவி:
அல்ஜஜீரா
23-01-2015

நிற வெறி ஆஸ்திரேலியா - 1960 வரை....ஆஸ்திரேலியாவின் பழங்குடி மக்களான அபோரிஜின்களை (aborigines) வஞ்சகமாக வீழ்த்தி வந்தேறிகளான ஐரோப்பியர்கள் அந்த மக்களை அடிமைகளாக்கினர். நாயை விடக் கேவலமாக நடத்தப்பட்டதாக வரலாறு கூறுகிறது. அந்த மக்கள் எப்படி நடத்தப்பட்டிருப்பார்கள் என்பதற்கு இந்த ஒரு படமே சாட்சி. ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரயை விரட்டிய கதைதான் இங்கு நடந்தது. நம் நாட்டிலும் கூட இதே கதைதான் :-)

ஆனால் இஸ்லாம் அரபுலகை எட்டிப் பார்த்த 50 வருடங்களுக்குள்ளேயே அனைத்து அடிமைகளும் விடுவிக்கப்பட்டு சுதந்திரமானவர்களான மாறிப் போயினர். நாங்கள் தான் நாகரிகத்துக்கு சொந்தக்காரர்கள் என்று கூறிடும் ஐரோப்பியர்கள் 1960 வரை இந்த பழங்குடி மக்களை அடிமைகளாகவே நடத்தினர்.

Thursday, January 22, 2015

சவுதி மன்னர் அப்துல்லா மறைவு!சவுதி மக்களின் மற்றும் உலக முஸ்லிம்களின் அன்பிற்கு பாத்திரமான மன்னர் அப்துல்லா இறைவனடி சேர்ந்து விட்டார். சில காலமாகவே நோய் வாய்பட்டிருந்த அவர் முதுமை காரணமாக நிரந்தர உலகத்துக்கு பயணித்து விட்டார். அன்னாரின் பாவங்களை பொறுத்து அவருக்கு இறைவன் சொர்க்கத்தைக் கொடுக்க நாமும் பிரார்த்திப்போமாக.

சவுதியின் மன்னராக மட்டும் அல்லாது மக்கா மதினா என்ற இரண்டு புண்ணிய ஸ்தலங்களின் நிர்வாகியாகவும் செயல்படுவதால் உலக முஸ்லிம்களின் கவனத்தையும் இவர் பெறுவார். தனது வாழ்நாளில் பல முன்னேற்ற பணிகளை முடுக்கி விட்டு சவுதி மிகச் சிறந்த இடத்தை உலக அளவில் பெறுவதற்கு இவரின் அயராத உழைப்பும் காரணம் என்றால் மிகையாகாது.

தற்போது இவரது இடத்தைப் பெற்றிருக்கும் இளவரசர் சல்மானும் சிறந்த நிர்வாகி. எந்த தொய்வும் இல்லாமல் வழமையோல் அமைதியாக சவுதியின் ஆட்சி நடைபெற நாமும் பிரார்த்திப்போம்.

இவ்வளவு புகழ் வாய்ந்த ஒரு தலைவர் இறந்துள்ளார். ஆனால் சவுதியில் அன்றாட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. நம் ஊரைப் போல் கடைகள் அடைக்க நிர்பந்திக்கப்படவில்லை. சாலைகளில் வாகனங்கள் எந்த பயமும் இன்றி வழமைபோல் செல்கின்றன. மொத்தத்தில் இவரது இழப்பு சவுதியின் அன்றாட வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

எல்லோருக்கும் எங்கு இறப்புக்கான தொழுகை நடைபெறுமோ அந்த இடத்தில் இவருக்கும் தொழுகை நடத்தப்படும். எல்லோரையும் புதைக்கக் கூடிய பொது மைய வாடியில் இவரது உடலும் அடக்கம் செய்யப்படும். அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மெரினா பீச்சில் நாம் பார்ப்பது போல் எந்த கட்டிடங்களும் கட்டப்படாது. வெறும் மண்ணைக் கொண்டு இவரது உடல் மூடப்படும். இறப்புக்கு முன்னால் தான் அவர் சவுதியின் மன்னர். இறப்புக்கு பின்னால் அவர் நம்மைப் போல ஒரு சாதாரண மனிதன்தான். அதனை செயலில் காட்டி வருகின்றனர் சவுதி ஆட்சியாளர்கள்.

சிந்திக்க மாட்டீர்களா நாத்திகர்களே......?

நாத்திகர்களே..... சிந்திக்க மாட்டீர்களா?நாம் ஒரு பாலைவனத்தில் நடந்து செல்கிறோம். அப்போது அங்கு ஒரு கடிகாரம் கிடப்பதாக வைத்துக் கொள்வோம். அந்த கடிகாரம் எப்படி வந்திருக்கும்? யாரோ ஒருவர் கடிகாரத்தை தவற விட்டு போயிருக்க வேண்டும். தானாக வந்து அந்த பாலைவனத்தில் அந்த கடிகாரம் உட்கார்ந்து கொள்ள சாத்தியமில்லை என்று நமது பகுத்தறிவு சொல்கிறது. அந்த கடிகாரம் கூட செயல்படுவது தானாகவா இல்லையே! அதற்கும் அதன் நுணுக்கங்கள் தெரிந்த ஒரு மனிதனாலேயே உண்டாக்கப்பட்டிருக்கிறது என்று நம் சிற்றறிவு கூறுகிறது.

இதனை எல்லாம் ஒத்துக் கொள்ளும் நீங்கள் இந்த உலகை படைக்க ஒருவன் தேவையில்லை என்று எவ்வாறு எண்ண முடிகிறது? பல கோள்களைப் படைத்து அதில் மனிதன் வாழ பூமியை தேர்ந்தெடுத்து அவன் உணவு உண்ண இங்கு மட்டும் விசேஷமாக புல் பூண்டுகளை முளைக்க வைத்துள்ள இந்த செயல்களெல்லாம் தானாக உருவாகி விட்டது என்று எப்படி உங்களால் யூகிக்க முடிகிறது?

சூரியனை எடுத்துக் கொள்ளுங்கள். பூமியிலிருந்து 93 மில்லியன் மைல்கள் தூரத்தில் இருந்து கொண்டு நமக்கு பல நன்மைகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. அந்த சூரியன் சில மைல்கள் நம்மை நோக்கி நெருங்கி வந்தால் நாமெல்லாம் அனலால் கருகி விடுவோம். அதே சூரியன் நம்மிடம் கோபப்பட்டுக் கொண்டு சற்றே விலகி தூரமாக சென்று விடுமானால் உறைபனியால் நாம் விறைத்து அந்த கணமே இறந்து விடுவோம்.

சூரியனின் வெப்பக் கதிர்கள் நம்மை அதிகம் தாக்கி விடாமல் இருக்க 'ஓசோன் படலங்களை' கவசமாக நமது பூமிக்கு அமைத்திருப்பதும் இயற்கையாகவே நடந்து விட்டது என்கிறீர்களா? சூரிய ஒளி 24 மணி நேரமும் பூமியில் விழுந்தால் புல் பூண்டுகள் கருகி விடும். மனிதர்கள் சாப்பிட ஒன்றுமே பூமியில் இருக்காது. எனவே பூமியை சுழல விட்டு 12 மணி நேரம் இரவாகவும் 12 மணி நேரம் பகலாகவும் நமக்கு மாற்றித் தந்ததும் இயற்கையாகவே நடந்து விட்டது என்கிறீர்களா?

சிறிது நேரமாவது இது விஷயமாக சிந்திக்க மாட்டீர்களா நாத்திகர்களே!

'இறைவனை மறுப்போரின் செயல்கள் பாலைவனத்தில் தெரியும் கானல் நீர் போன்றது. தாகம் ஏற்பட்டவன் அதைத் தண்ணீர் என நினைப்பான். முடிவில் அவன் அங்கே வரும் போது எதையும் காண மாட்டான். அங்கே அவனைப் படைத்த இறைவனைத்தான் காண்பான். அப்போது அவனது கணக்கை இறைவன் நேர் செய்வான். படைத்த இறைவன் விரைந்து விசாரிப்பவன்'
-குர்ஆன்: 24-39

'சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன.'
-குர்ஆன் 13:2

'சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.'
-குர்ஆன் 36:38

'தக்க காரணத்துடனேயே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவை சுருட்டுகிறான். இரவின் மீது பகலை சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலம் வரை ஓடும்.'
-குர்ஆன் 39:5

இதற்கு பெயர்தான் அதீத பக்தியோ!மேலும், ‘இறைவன் இறக்கி வைத்த இவ்வேதத்தைப் பின்பற்றுங்கள்’ என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ‘அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’ என்று கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?

-குர்ஆன் 2:170

'நான் நேசிப்பதால் ஜெத்தாவை தூய்மையாக வைப்பேன்'பொது மக்களுக்கு தூய்மையின் அவசியத்தை உணர்த்தி நகரத்தை சுத்தமாக வைத்திருக்க 50 பேர் அடங்கிய தன்னார்வ குழு தனது பங்களிப்பை அளித்தது. 'சுத்தத்திற்கு முக்கியத்துவம் கொடுப்போம்: ஏனெனில் நாம் இந்த மண்ணை நேசிக்கிறோம்' என்ற எழுதிய பலகைகளை சுமந்த வண்ணம் சிறுவர்கள் மக்களுக்கு மத்தியில் தூய்மையின் அவசியத்தை பிரசாரம் செய்தனர். குப்பைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.

ஜெத்தாவானது எப்போதும் பிஸியாக உள்ள இடம். மக்கா மதினா வரும் வெளிநாட்டவர் அனைவரும் முதலில் ஜெத்தாவிலேயே இறக்கப்படுவர். அங்கிருந்துதான் உம்ரா, ஹஜ் போன்ற காரியங்களுக்காக பிரித்து விடப்படுவர். எப்போதும் வெளி நாட்டவரின் ஆதிக்கம் உள்ள ஊராக இருப்பதால் குப்பைகளும் மலை போல் குவிந்து விடுகிறது.

இந்த செய்தி பிஜேபியின் சவுண்ட் சரோஜாவுக்கு தெரிந்தால் "மோடி அவர்களின் ஆலோசனையின் பேரிலேயே ஜெத்தாவிலும் தூய்மைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று சொன்னாலும் சொல்வார். :-) எனவே நாம் கொஞ்சம் அடக்கியே வாசிப்போம்.

தகவல் உதவி
சவுதிகெஜட்
22-01-2014

எங்க ஊரு சாயுபு வாணக்காரய்யா!

எங்க ஊரு சாயுபு வாணக்காரய்யாஎங்க ஊர்ல வாணக்காரய்யா, வாணக்காரய்யான்னு ஒரு இஸ்லாமியர் இருந்தாரு. புதுக்கோட்டையில் இருந்து பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்தாரு. அவரைப் பத்தி எழுதணும்னு ஊருல விசாரிச்சேன், ஒருத்தருக்கும் அவரோட பேரு தெரியல. எல்லோரும் சொன்னது அவரு பேரு வாணக்காரருன்னுதான். இல்லேன்னா சாயப்பு (சாய்பு) வாணக்காரர். அதுவும் எங்க ஊருல அவரு மட்டும்தான் வெடி செஞ்சதாலயோ என்னமோ அவரோட பெயரை தெரிஞ்சிக்கணும்மனு யாருக்கும் தோணலையோ?

இந்து மத சம்பிரதாய சடங்குகளும், சாதிய பாகுபாடும் வலுவா இருக்கும் எங்க ஊருல, இந்து மதத்தை தவிர வேத்து மததுக்காரவங்கன்னு யாரும் கெடையாது. இவர்தான் பொழப்புத் தேடி எங்க ஊருக்கு வந்த முதல் முஸ்லீம் குடும்பம். சுத்துப்பட்டுல உள்ள எல்லா ஊருக்கும் தீபாவளி, கோயில் திருவிழா, கல்யாணம், சாவுன்னு எல்லாத்துக்கும் வாணவெடி செய்றதுதான் இவரு தொழிலு. பாதுகாப்பா வெடி செய்றதால கிராமம் மட்டும் இல்லாம டவுனுலேர்ந்து கூட வந்து வாங்கிட்டு போவாங்க.

வாணக்கார அய்யா, குடும்பத்தோட எங்க ஊருக்கு வந்த போது “புள்ளக்குட்டியோட வந்துருக்காரு இவருக்கு ஏதாவது உதவி செய்யணு”ன்னு நெனச்சு ஊர் காரங்க ஒரு முடிவு செஞ்சு இருந்துட்டு போகட்டும் என்ற முடிவுக்கு வந்தாங்க.
“ஐயனார் கோயில் எடந்தான் இருக்கு. உங்களுக்கு இஷ்டன்னா அதுல கொட்டகை போட்டுகிட்டு இருங்க”ன்னு சொன்னாங்க.
“சாமில என்னங்க இருக்கு, எல்லாத்துக்கும் மனசுதான் ஒத்துப் போகணும். புள்ளகுட்டியோட வந்த என்னை, முடியாதுன்னு சொல்லாம தங்க வச்சுக்கிறிங்கன்னு" சொன்னாரு வாணக்காரரு. ஐயனாரு எடத்த அல்லா காட்டுன வழியா நெனச்சு தொழில ஆரம்பிச்சு அமோகமா இருந்தாரு வாணக்கார அய்யா.

ஊருகுள்ள வாணக்காரய்யா வாணவெடிக்கு தனி மவுசு இருதுச்சு. ஒத்த வெடி, ஓல வெடி, அணுகுண்டு, பொதபொத வாணம் (புஸ் வாணம்), சங்கு சக்கரம், பென்சில் மத்தாப்பு, திருவிழா வெடி இவ்வளவுதான் அவர் செய்த வெடிகளோட வெரைட்டி. ஆனால் ஒவ்வொண்ணும் அவ்வளவு பாதுகாப்பா பாத்துப் பாத்து செய்வாரு. பிள்ளைகளோட பாதுகாப்பு கருதி வெடிகளோட மேல் அமைப்பு எல்லாம் களி மண்ணால செய்திருப்பாரு. சீக்கிரத்துல வெடி நமத்தும் போகாது. எந்த ஒரு வெடியும் வெடிக்கறதுக்கு ரெண்டு நிமிஷம் வரைக்கும் வெறும் மத்தாப்பு போல தான் வரும், பிறகு லேட்டாதான் வெடிக்கும். வெடிக்காத பென்சில் மத்தாப்புலக் கூட பாதி வரைக்கும் தவுடுதான் இருக்கும். அல்லா புண்ணியத்துலயோ அய்யனாரு புண்ணியத்துலயோ வாணக்காரையா சாவுற வரைக்கும் அவர் செய்த வெடியால எந்த விபத்தும் நடக்கல.

எங்க ஊரைச் சுத்தி இருக்குற இருபது கிராமத்துக்கு மேலேருந்து இவர்கிட்ட வெடி வாங்க வருவாங்க. ஊருக்கூரு திருவிழா வெடிங்கறது சீசனுக்கு தான் நடக்கும், ஆனா சாவுக்கு வெடி கட்றது தினமும் நடக்கும். அதனால வேலை இருந்துகிட்டேதான் இருக்கும். 40 வருசத்துக்கு மேல எங்க ஊருல தொழில் பாத்தாரு. ஆனா சொத்துன்னு எதுவும் சேத்து வைக்கல. ஒரு வீடு கூட சொந்தமா இல்ல. வேலையாளுக்கு நல்ல சம்பளம் கொடுப்பாரு. பசின்னு வர்றவங்களுக்கு சாப்பாடு போடுவாரு. ஊரு விசேசத்துக்கு நல்லா செய்வாரு. ரொம்ப நல்ல மனிதர்.

எங்க ஊருல சேவை சாதி, தாழ்த்தப்பட்ட சாதி குடும்பத்திலிருந்து தொழில் செய்றவங்களுக்கு வேலைக்கி கூலி கொடுக்க மாட்டாங்க. வருசம் பூரா செய்ற வேலைக்கி அறுவடை முடிஞ்சதும் நெல்லு தான் கூலியா வாங்கிக்கணும். அதே போலதான் வாணக்கார அய்யாவும் தீபாவளிக்கு வாணவெடிய கொடுத்துட்டு அறுவடை முடிஞ்சதும் நெல்லு வாங்கிக்கணும்னு முறை வச்சாங்க.

தீபாவளிக்கு வெடி குடுத்துட்டு யாருக்கு எத்தனை மரக்கா நெல்லுக்கு வெடி குடுத்தோங்கற கணக்க நோட்டுல எழுதி வச்சுக்குவாரு. அறுவடை முடிஞ்சதும் ஒவ்வொரு வீடா போய் நெல்லு வாங்கிக்குவாரு. சாதாரண மக்கள் மரக்கால் கணக்குக்கும், பணக்கார விவசாயிகள் மூட்டை கணக்குக்கும் வெடி வாங்குவாங்க. வெளியூரு சனங்களுக்கு வெடி விக்கும் போது காசு வாங்கிக்குவாரு. கருவேப்பிலை, கொத்தமல்லி மாதிரி கொசுறா ஓல வெடியும், பென்சில் மத்தாப்பும் கொடுப்பாரு. தீபாவளி சமயத்துல வெடி விக்கிற எடத்துல பிள்ளைங்க போய் நின்னா, மிட்டாய் மாதிரி வெடிக்காத மத்தாப்பு வெடிய கையில கொடுத்தனுப்புவாரு. வியாபாரி போல இல்லாம ஊர் மக்களோட தாயா பிள்ளையா பழகுனாரு.

வெடி செய்யறதுக்கும், வெடி மருந்துகள பாதுகாக்கறதுக்கும் ஊருக்கு ஒதுக்கு பக்கமா இருக்குற தென்னந்தோப்புல ஒருத்தர் இடம் கொடுத்தாரு. செஞ்ச வெடிய தீபாவளி சமயத்துல விக்கிறதுக்கு ஊருக்குள்ள சும்மாக் கெடந்து வீட்ட ஒருத்தங்க தந்தாங்க. நாலு தாழ்த்தப்பட்ட சாதி ஆட்கள் இவர்கிட்ட வேல செஞ்சாங்க. தென்னந்தோப்புல அழகான ஒரு குடிசை போட்டு, உக்காந்து வெடி கட்ட திண்ணை போட்டு, பேட்ரி ரேடியோவ்ல பழைய எம்.ஜி.ஆர். பாட்டுப் போட்டு வேலை செய்ற அழகே தனி. இத பாக்குறதுக்குன்னே தினமும் மாடு மேய்க்க அங்கதான் போவோம்.

வாணக்கார அய்யா சாதி மதம் பாக்காம எல்லா சாதியினரிடமும் சகோதர குணத்தோட பழகுவாரு. எங்க ஊரையும், இந்து ஆதிக்க சாதி பண்டிகையையும் மதிச்சு நடந்துக்குவாரு. இந்த ஊருல வியாபாரம் பாத்து பொழக்கிறதாலயும், ஐயனாரு சாமி எடத்துல குடி இருக்குறதாலயும் தானும் ஏதாவது செய்யணும்னு வருசா வருசம் ஐயனாரு திருவிழா, முருகனுக்கு மாசி மகம், பங்குனி உத்திரமுன்னு எல்லா திருவிழாவுக்கும் காசு வாங்காம வாணவெடி கட்டித் தருவாரு. சித்திரை திருநாளுக்கு முதல் நாள் இரவுலேர்ந்து மறுநாள் காலை வரைக்கும் விடிய விடிய கண்ணு முழிச்சு எந்த மனத்தடையும் இல்லாம சந்தோசமா சாமி புறப்பாட்டுல கூடவே வருவாரு. நன்றிக் கடனா ஐயனாருக்கு மட்டும் ஒரு படி கூடுதலா வெடி தருவாரு, காட்டுக்குள்ள புறப்புற்ற ஐயனாரு ஊருக்குள்ள வந்து சேர்ற வரைக்கும் விடிய விடிய வெடி சத்தத்துல ஊரே கிடுகிடுத்து போகும். பாக்க கண்கொள்ளா காட்சியா இருக்கும்.

வாணக்கார அய்யாவுக்கு மூனு பொண்ணுங்க. ஆம்பள பிள்ளை கிடையாது. அந்த பொண்ணுங்க வீட்ட விட்டு வெளிய வரவே மாட்டாங்க. முஸ்லீம் மத கட்டுப்பாட்டோட போட்ட முக்காடு எடுக்காம இருப்பாங்க. இந்த வெடித் தொழில் செஞ்சுதான் மூணு பொண்ணுவளையும் கட்டிக் குடுத்தாரு. வீட்லயே பந்தல் போட்டு ஊரு மணக்க பிரியாணி போட்டு பொண்ணுக்கு கல்யாணம் செஞ்சாரு. கண்ணாமூச்சி விளையாட்டு மாதிரி அந்த கல்யாணமே எங்களுக்கு வேடிக்கையா இருந்துச்சு. எங்க ஊருல ஒரு சில படித்த, நகரத்தோட பழக்க வழக்கம் வச்சுருந்த சில பெரிய மனிதர்களை தவிர, பெரும்பாலான சாதாரண மக்கள் இந்து மதத்து திருமணத்த தவிர வேறு மத திருமணத்த பாத்திருக்க வாய்ப்பில்லைதான். மொகத்துல பூப்போட்டு மூடி மறைச்சு முகமே தெரியாம நடந்த கல்யாணத்த பாக்குறதுக்கு எங்க ஊருக்கே வியப்பா இருந்துச்சு.

வாணக்காரையா தனிப்பட்ட நல்ல குணம்னா பசின்னு வர்ரவங்களுக்கு சாப்பாடு போட்றது தான். எந்த நேரமும் அடுப்பு எரிஞ்சுகிட்டேதான் இருக்கும். ஊர்க்காரவங்க யாரு அவரு வீட்டுக்கு போனாலும் சாப்புடாம விடமாட்டாங்க. பூக்காரம்மா, கூடை, மொறம் விக்கிறவங்க, வளையல் மணி விக்கிறவருன்னு பல சுமைதூக்கும் வியாபாரிங்கக் கூட சாப்பாட்டு நேரத்துக்கு சாயப்பூட்டுக்குப் போனா ரெண்டு சோறு திங்கலாம்னு போவாங்க. பாவப்பட்ட மக்க, மனுசங்க மனசறிஞ்சு சோறு போடும் பண்பு அந்த குடும்பத்துல எல்லாருக்குமே இருந்துச்சு.

இப்படி எங்கிருந்தோ வந்து ஊர் மனசுல இடம் பிடிச்சு ஊர் நல்லது கொட்டதுல கலந்துகிட்டு, இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லாம பழகி வாழ்ந்த வாணக்காரைய்யா 75 வயசுக்கு மேல இறந்துட்டாரு. வாழ இடம் குடுத்த ஊர் சனங்க புதைக்க எடம் கொடுக்கறதுல தயக்கம் காட்டுனாங்க. சாதிக்கு ஒரு சுடுகாடு இருக்குற எங்க ஊருல இவர் மதத்துக்குன்னு ஒரு சுடுகாடு இல்ல. அதால இவர எங்க பொதைக்கறது என்ற புது பிரச்சனை உருவாச்சு.

“நம்மோட தாயா பிள்ளையா பழகினாலும் எரிக்கிற எடத்துல பொதைக்க எப்புடி எடம் கொடுக்க முடியும். நாம பிரேதத்த கொண்டு போகும் போது கொம்பு ஊதி, தார தம்பட்ட அடிச்சு, சங்கு ஊதி கடைசி காரியம் பண்ணுவோம். அவங்க வேற மாதிரி செய்வாங்க இதெல்லாம் சரிபட்டு வராது. என்ன செய்யலாம்?” எடுத்துட்டு போங்கன்னு சொல்லவும் முடியல, ஊர்ல புது பழக்கத்த ஏற்படுத்தவும் முடியல ரெண்டுங் கெட்டான் மனசோட பேச்சுவார்த்தை ஒரு முடிவுக்கு வராம பாதி பொழுதுக்கு மேல இழுத்துகிட்டே போச்சு.

துக்கத்துக்கு வந்த வாணக்காரையா சொந்தக்காரங்க இந்த குழப்பத்த எதிர்பார்க்கல இங்கேயே அடக்கம் செய்யணுன்னு சொல்லவும் முடியல. நடந்த கொழப்பத்த பாத்துட்டு ஊருக்கு எடுத்துட்டு போய் அடக்கம் பண்றதா சொன்னாங்க. ஆனா ஊர்க் காரங்களுக்கு தூக்கிட்டு போவச் சொல்றதுல விருப்பமில்ல. வாணக்காரையா பழகின விதமும் ஊரு நல்லது கெட்டதுல பங்கெடுத்துகிட்ட முறையும் அவரை விட்டுக் கொடுக்க மனசில்லாம செஞ்சுருச்சு. இந்த ஊரை நம்பி வந்துட்டாரு இவ்வளவு காலமா நம்மோட ஒண்ணுக்குள்ள ஒண்ணா பழகினாரு அதுவும் இல்லாம பாதில தூக்கிட்டு போனாங்கன்னா ஊருக்கு ஒரு இழுக்கா போயிரும்னு ஊர்க்காரங்க முடிவு வந்தாங்க.

“வாணக்காரையா சாதி மதம் பாக்காம எல்லார் கிட்டையும் நல்லா பழகினவரு. அவரும் இந்த ஊர்க்காரனாட்டம் கோயிலுக்கு வரி குடுத்து நல்லது கெட்டதுல கலந்துகிட்டாரு. அது மட்டும் இல்லாம அவரோட நல்ல நடத்தைக்கும், நல்ல மனசுக்கும் மதிப்பு குடுத்து நடந்துக்கணும். அவங்க ஒரு குடும்பம் இருக்குங்கறத மனசுல வச்சுகிட்டு இது வரைக்கும் நம்ம கிராமத்துல இந்து மதம் மட்டும் தான் இருந்துச்சு. இப்ப இஸ்லாம் மதமும் இருக்குன்னு ஒத்துக்கணும். அவங்க நம்ம ஊர்க் காரங்கதான்” என்று முடிவெடுத்தாங்க. எந்த சாதிக்காரங்க சுடுகாட்டுலயும் இல்லாம ஆத்துக் கரையோரமா அவங்களுக்குன்னு ஒரு தனி எடம் கொடுத்து அதுல பொதச்சுக்க சொன்னாங்க.

வாணக்காரையா இறந்ததும் அவர் மனைவி மட்டும் தனியா இருந்தாங்க. பொண்ணுங்க தன்னோட வந்து இருக்கும் படி கூப்பிட்டும் போக மறுத்துட்டாங்க. இது தன்னோட ஊரு இங்க இருக்குறவங்கதான் தனக்கு சொந்தக்காரங்க என்ற நெனப்போடு இருந்தாங்க. வெடி செய்றது கிடையாதுன்னாலும் பொண்ணுங்க குடுக்குற பணத்த வச்சுகிட்டு ஊர்க் காரங்க சில பேரு குடுக்குற நெல்ல வச்சுகிட்டு வாழ்ந்தாங்க. சும்மா இருக்க முடியாம ஊதுவத்தி செய்வாங்க. பத்து வருசத்துக்கு பிறகு நடக்க முடியாம படுத்த படுக்கையா போய்ட்டாங்க. பொண்ணுங்களுக்கு வந்து வந்து பாக்க முடியல. அதனால ஊர்க்காரங்க கிட்ட சொல்லிட்டு அந்தம்மாவ பொண்ணுங்களே கொண்டு போய்டாங்க.

அதுக்குப் பிறகு வாணக்காரையா குடும்பத்தை பத்தி எந்த சேதியும் தெரியல. இன்னைக்கும் எங்கூர்ல தீபாவளி பண்டிகையெல்லாம் பெரிய விசயமா கொண்டாடறது கிடையாது. வாணக்காரையா இல்லைங்கிறதுனாலயோ என்னமோ இப்பல்லாம் ஊருல பட்டாசு சத்தம் அதிகமாக கேக்கிறது இல்ல.

பட்டணுத்துல நான் பாத்த சிவகாசி பட்டாசெல்லாம் வாணக்கார அய்யா வெடி வகைங்களோடு ஒப்பிட்டால் ஒண்ணுமே இல்லை. ஏன்னா அந்த ஐயாவோட வெடியில சத்தம் மட்டுமில்ல, தன்னலம் கருதாக ஒரு அன்பு இருந்துச்சுன்னு இப்ப புரியுது.

-சரசம்மா
(இது கற்பனைக் கதையல்ல, உண்மைச் சம்பவம்)

நன்றி: வினவு தளம்


Wednesday, January 21, 2015

அமெரிக்காவின் ஃபாக்ஸ் நியூஸ் மன்னிப்பு கேட்டது!
பெயரிலேயே குள்ள நரித் தனத்தைக் கொண்டுள்ள அமெரிக்க செய்தி ஸ்தாபனம் ஃபாக்ஸ் நியூஸ் சில நாட்களுக்கு முன்பு பாரிஸிலும் இங்கிலாந்திலும் சில ஏரியாக்கள் 'முஸ்லிம்களுக்கான ஏரியாக்களாக சொந்தமாக்கப்பட்டு விட்டது' என்று கூறியது. பாரிஸிலும் இங்கிலாந்திலும் குறிப்பிட்ட சில ஏரியாக்களில் முஸ்லிம் அல்லாதவர்களோ, காவல் துறையினரோ நுழைய முடியாத படி அறிவிக்கப்படாத ஒரு தடை உள்ளது என்று தனது செய்தியில் குறிப்பிட்டது. சில பகுதிகள் ஆப்கானிஸானிலும் ஈராக்கிலும் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றன என்றும் ஆதங்கப்பட்டிருந்தது.

செக்யூரிடி அனலைஸ் ஸ்டீவன் எமர்ஸன் சில நாட்களுக்கு முன்பு சொன்னதாவது 'இங்கிலாந்தின் பெர்மிங்ஹாம் நகரில் முஸ்லிம் அல்லாதவர்கள் அவ்வளவு சுலபமாக நுழைந்து விட முடியாது. அறிவிக்கப்படாத தடை ஒன்று அந்த ஏரியாக்களில் உள்ளது' என்ற விஷக் கருத்தை விதைத்தார். இதற்கு பதிலளித்த பிரிட்டிஷ் பிரதமர் 'எமர்ஸன் கருத்து முற்றிலுமாக முட்டாள்தனமானது' என்று காட்டமாக விமரிசித்தார். இங்கிலாந்து பிரதமரின் இந்த பேச்சானது பலரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. உண்மையை உரத்துச் சொன்ன பிரதமரை பாராட்டுவோம்.

உலகின் பல இடங்களிலும் இந்த செய்திக்கு எதிர்ப்பு கிளம்புவதைக் கண்ட ஃபாக்ஸ் நியூஸ் 'செய்தி சேகரிப்பில் சில இடங்களில் தவறு நடந்து விட்டது. அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்கிறோம்' என்று பல முறை இந்த மன்னிப்பை வெளியிட்டது.

தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015

இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள எங்கள் ஊரிலும் மாற்று மதத்தவர்கள் அதிகம் வருவதில்லை. காவல் துறையினரும் எங்கள் ஊருக்கு வந்ததில்லை. காய்கறி விற்பவர்களும், கூலி வேலை செய்பவர்களும்தான் மாற்று மதத்தவர்களாக எங்கள் கிராமங்களில் பார்க்க முடியும். இதற்கு காரணம் பெரும்பாலும் எங்கள் கிராமத்தில் முஸ்லிம்கள் வசிப்பதே. அடுத்து இந்து மத கிறித்தவ மத கலாசாரங்களுக்கும் இஸ்லாமிய காலசாரங்களுக்கும் மிகுந்த வேறுபாடு உள்ளதும் காரணம். மற்றபடி திருமணம் இறப்பு போன்ற சுக துக்கங்களில் அனைத்து மதத்தவரும் கலந்து கொண்டு தங்கள் அன்பை வெளிப்படுத்தியே வருகிறார்கள். சில நேரங்களில் இந்துத்வாவாதிகள் இதனை தவறாக புரிந்து கொண்டு பல கிராமங்கள் இஸ்லாமிய மயமாகி வருகின்றன என்ற அச்சத்தை வெளியிடுகின்றனர். அதே போன்ற தவறான ஒரு செய்தியை வெளியிட்டு ஃபாக்ஸ் நியூஸூம் தனது மன்னிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

குற்றம் நடக்கும் இடத்தில் தானே காவலருக்கு வேலை இருக்கும்? பொதுவாக இஸ்லாமிய கிராமங்களில் எழும் சிறு பூசல்களை எல்லாம் ஜமாத்துகளே கண்டித்து சரி செய்து விடுவார்கள். எனவே வெகு அரிதாகத்தான் இஸ்லாமிய கிராமங்களுக்கு காவல் துறையினர் வருவதை தமிழகத்திலும் நாம் பார்க்க முடியும். இதே போன்றுதான் ஃப்ரான்ஸ், இங்கிலாந்து போன்ற முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் நகரங்களில் காவலர்களுக்கு வேலையில்லாமல் இருக்கிறது. குற்ற செயல்களும் அதிகம் நடைபெறுவதில்லை. மேற்கத்திய கலாசாரத்தில் ஊறிப் போன அந்த நகரங்கள் இன்று இஸ்லாமியர்களால் புனிதமடைந்திருக்கிறது என்றால் மிகையில்லை.

இந்துத்வாவாதிகளின் எண்ணமும் யூதர்களின் எண்ணமும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பதை இங்கும் நாம் பார்க்கிறோம். :-)


ஐஎஸ்ஐஎஸ்ஸை நம்பி ஏமாந்த தரீனா ஷகீல்!தரீனா ஷகீல் - 25 வயது பிரிட்டிஷ் பிரஜை. கணவனோடு சில பிரச்னைகளால் சில காலம் தாய் வீட்டில் வாழ்ந்துள்ளார். கணவனை பிரிந்து வாழ்ந்ததால் மன அமைதியிழந்துள்ளார். அந்த நேரத்தில் சில கிறுக்கர்கள் ஜிஹாத்துக்கு தவறான விளக்கம் கொடுத்து மூளை சலவை செய்து இவரை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர தூண்டியுள்ளனர். உலகம் அறியாத இந்த பெண் கள்ள முல்லாக்களின் சூழ்ச்சியில் வீழ்ந்து சுற்றுலா செல்கிறேன் என்று வீட்டில் பொய் சொல்லி விட்டு சிரியா சென்றுள்ளார்.

அங்கு சென்றவுடன்தான் போர்களம் எப்படி இருக்கும் என்று தரினாவுக்கு தெரிய வருகிறது. தண்ணீருக்கு ரேஷன், உணவுக்கு ரேஷன், மின்சாரம் கிடையாது: குளிருக்கு சரியான போர்வையும் கிடையாது: திடீர் திடீரென்று துப்பாக்கி தோட்டாக்களின் சப்தம்: வெளியில் எங்கும் பிணக் குவியல்: ரத்த வாடை: கை கால்கள் போன மனிதர்கள் என்று இவரது வாழ்க்கையே மாறிப் போனது. சில காலம் சென்றவுடன் இந்த வாழ்க்கை இவருக்கு கசக்க ஆரம்பித்தது.

இனி இங்கிருந்தால் சரிப்பட்டு வராது என்று எண்ணி பல தடைகளையும் தாண்டி எப்படியோ இந்த கும்பலிடமிருந்து தப்பி துருக்கி வந்து சேர்ந்து விட்டார். அங்கிருந்து அவரது தந்தையை தொடர்பு கொண்டு அழுது கொண்டே 'என்னை எப்படியாவது திரும்பவும் பிரிட்டன் கொண்டு சென்று விடுங்கள்' என்று சொல்லியுள்ளார். தற்போது தந்தையின் வரவுக்காக துருக்கி அகதி முகாமல் தங்கியுள்ளார். தந்தையோடும் கணவனோடும் ஒன்றாகி குழந்தையை சிறந்த முறையில் வளர்த்து சிறந்த இஸ்லாமிய பெண்ணாக இந்த சகோதரி வாழ நாமும் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015

இஸ்லாம் இந்த பெண்ணுக்கு ஜிஹாதை கடமையாக்கவில்லை. முதலில் இந்த பெண் தனது கணவனோ அல்லது தந்தையோ, சகோதரனோ இல்லாமல் கைக்குழந்தையோடு வீட்டை விட்டு வெளியேறியதே முதலில் இஸ்லாமிய நடைமுறை கிடையாது. அடுத்து போரில் சென்று போரிட ஆண்களுக்குத்தான் கடமையுள்ளது. மேலும் ஐஎஸ்ஐஎஸ் நடத்தும் அனைத்து செயல்களும் இஸ்லாத்துக்கு மாற்றமான செயல்களே. இவர்கள் அமெரிக்காவாலோ அல்லது இஸ்ரேலின் யூதர்களின் கைப்பாவையாகவோ செயல்படுவதாகத்தான் உலக முஸ்லிம்கள் நம்புகின்றனர். அப்பாவி மக்களை கழுத்தை அறுத்து அதனை வீடியோவாக்குவதும், தோல்வியடைந்த பகுதிகளில் உள்ள பெண்களை கொடுமைபடுத்துவதும் இஸ்லாம் காட்டித் தந்த வழியா? எங்கிருந்து இதனை படித்தார்கள்? அநியாயத்துக்காக போரிட ஒரு அரசுக்குத்தான் உரிமையுள்ளதே தவிர தனி மனிதன் ஆயுதம் தூக்குவதை எங்கிருந்து கற்றார்கள்? தமிழகத்திலும் யாராவது உங்களிடம் வந்து ஜிஹாதுக்கு ஆள் சேர்ப்பதாக சொன்னால் உடன் காவல் துறை வசம் ஒப்படையுங்கள். ஏனெனில் இது போன்ற நபர்கள்தான் இஸ்லாத்தின் முதல் எதிரிகள். இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க மேற்குலகமும், யூதர்களும் இணைந்து ஏற்படுத்திய அமைப்புகளே ஐஎஸ்ஐஎஸ் மற்றும் போகோ ஹராம். எனவே இந்த தீவிரவாத கும்பல்களிடமிருந்து இஸ்லாமிய இளைஞர்களை மீட்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். இதனை தீவிர பிரசாரத்தின் மூலமே நம்மால் சாதிக்க முடியும்.

கடல் மட்டம் உயர்ந்து வருவதை மெய்ப்பிக்கும் ஆய்வறிக்கைகள்!"பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா?"

குர்ஆன் 13:41

”பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம்” என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா?"

குர்ஆன் 21:44(தென் கிழக்கு அமெரிக்காவில் கடல் மட்டம் உயர்ந்துள்ளதைக் காட்டும் கூகுள் மேப்.)

கடல் மட்டம் கூடுவதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. 1. முதல் காரணம்

பல ஐஸ் மலைகள் உருகி கடலில் கலப்பதால் கடல் மட்டம் உயர்ந்து கொண்டு செல்கிறது. கிளிமஞ்சாரோ (அதாங்க.... எந்திரன் படத்தில் வரும் அதே மலைதான் :-)) மலை கடந்த 20 வருடங்களில் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. அந்த மலையின் பல இடங்களை தற்போது காணவில்லையாம். உருகி கடலில் கலந்து விட்டது. இது போன்று ஆர்டிக் அண்டார்டிக் பிரதேசங்களில் பனி மலைகள் உருகுவதால் கடல் மட்டம் தற்காலங்களில் வேகமாக உயர்ந்து வருகிறது. இன்னும் 10 வருடங்களில் பங்களாதேஷின் பல பகுதிகள் கடலில் மூழ்கி விடுமாம்.

2. கடல் மட்டம் உயர இரண்டாவது காரணம்

கடல் மட்டம் மேலும் உயர மற்றொரு காரணம் கடல் தண்ணீரில் ஏற்படும் வெப்ப விரிவாக்கம் ஆகும். கடல் தண்ணீரில் வெப்ப நிலை உயரும் போது அதன் அடர்த்தி குறைந்து விடுகின்றது. இதனால் கடல் தண்ணீர் பெருக்கெடுத்து நிலங்களை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது.

கடந்த 18000 வருடங்களில் தோராயமாகக் கணக்கெடுக்கும் போது 120 மீட்டர் கடல் மட்டமானது உயர்ந்துள்ளதாக நாசாவின் ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. ஓசோன் குறைபாடுகளால் நமது பூமி மிகப் பெரும் ஆபத்தை எதிர் நோக்கியுள்ளது. நமது பூமியை சூரியனின் கதிர்கள் அளவுக்கதிகமாக தாக்கி விடாமல் தடுப்பவை இந்த ஓசோன் படலங்களே! இந்த பிரதேசத்தில் இயற்கையாக உள்ள வாயுக்களைத் தவிர்த்து பூமியிலிருந்து மனிதர்களால் கரியமில வாயுவும் அளவுக்கதிகமாக இந்த பகுதியை அடைவதால் வாயுக்களின் அடர்த்தியானது மிகைக்கிறது.. இதனால் சூரியனின் தாக்கம் அதிகரித்து பனிப்பாறைகள் உருகத் தொடங்குகின்றன. ஆகவே கடலின் மட்டம் உயர்ந்து கடல் நீர் நிலப்பகுதிக்குள் வருகிறது. இந்த உப்பு நீரானது பல ஆயிரம் ஹெக்டேர் விளை நிலங்களையும் கபளீகரம் செய்து விடுகின்றன. நமது பக்கத்து நாடான பங்களாதேசின் பல பகுதிகள் இன்னும் 50 ஆண்டுகளில் கடலுக்குள் அமிழ்ந்து விடும் என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். இந்த ஓசோன் பிரச்னையை தீர்க்க பல நாடுகள் முயற்சித்து வருகிறது. வழக்கம்போல் அமெரிக்கா எந்த பிடியும் கொடுக்காமல் இந்த விஷயத்தில் நழுவிச் செல்கிறது. :-(

--------------------------------------------------

1. பூமியின் வெப்பம் 1900 ஆம் ஆண்டிலிருந்து 1 டிகிரி F (0.5 C) மிகையாகி யிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் பூமியின் வெப்பம் 1.2 to 1.4 வரை கூடியுள்ளது. 2000 முதல் 2009 வரை கடந்த பத்தாண்டுகள் மிக வெக்கைக் காலமாகக் கருதப் படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அலாஸ்கா, கிழக்கு ரஷ்யா, மேற்குக் கனடா மூன்றிலும் 7 டிகிரி F [4 C] சராசரி வெப்பம் ஏறியுள்ளது.

2. 20 ஆம் நூற்றாண்டின் ஏழு ஆண்டுகள் வெப்பம் மிகையான காலங்களாக பதிவாகி யுள்ளன. அந்த ஆண்டுகளில் 1998 மிக்க உஷ்ணம் மிகுந்த வருடமாகக் கருதப் படுகிறது.

3. கடந்த 3000 ஆண்டுகளில் அறிந்ததை விடக் கடல் மட்டத்தின் உயரம் சென்ற 20 ஆம் நூற்றாண்டில் மூன்று மடங்கு மிகையாகி யிருக்கிறது! கடந்த 20 ஆம் நூற்றாண்டில் மட்டும் கடல் மட்டம் 4 முதல் 8 அங்குலம் வரை ஏறியுள்ளது. அடுத்த 100 ஆண்டுகளில் கடல் மட்டம் 2 அடி உயரம் ஏறுமென்று விஞ்ஞானிகள் கணக்கிடுகின்றனர்..

4. பூகோளச் சூடேற்றத்தால் குறைந்தது, நிலத்திலும், கடலிலும் 279 உயிர்ப் பயிரினங்கள் பாதிக்கப் பட்டுள்ளன! வசந்த கால மாறுபாட்டு மாதங்கள் பத்தாண்டுகளுக்கு 2 நாட்கள் வீதம் முந்தி வரத் தொடங்கி விட்டன!

5. (1986-1995) ஆண்டுகட்கு இடைப்பட்ட காலம் தென் ஆஃபிரிக்க நாடுகளுக்கு மிக உச்சமான வெப்ப காலமாகக் கருதப்படுகிறது.

6. WHO [World Health Organization] பூகோளச் சூடேற்றத்தால் [மித மிஞ்சிய சூடு / குளிர், வறட்சி, பஞ்சம், கடும் வெப்ப அலைகள், உணவுப் பற்றாக் குறை, மலேரியா போன்ற நோய்கள்] ஆண்டுக்கு 150,000 பேர் இறந்து விடுவர் என்று எச்சரிக்கிறது.

டாக்டர் ஸிசிலியா பிட்ஸ், [Dr. Cecilia Bitz, Physicist, University of Washington, Polar Science Center] and [11 Facts About Global Warming]

இனி குர்ஆன் வசனத்துக்கு வருவோம். கடலையே தனது வாழ்நாளில் பார்த்திராத நபிகள் நாயகம் இப்படி ஒரு ஆய்வறிக்கையை குர்ஆனில் தனது கற்பனையால் சமர்ப்பிக்க முடியுமா? பிற் காலங்களில் இவ்வாறான மாற்றங்களெல்லாம் உலகில் ஏற்படும் என்பதை உணர்ந்தவராலேயே இந்த வார்த்தைகளை சொல்ல முடியும். முக்காலத்தையும் உணர்ந்த இறைவனிடம் இருந்து இந்த குர்ஆன் வந்திருந்தால் மாத்திரமே இத்தகைய அதிசயங்களை நிகழ்த்த முடியும். இந்த குர்ஆன் உங்களையும் என்னையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் இனியும் நமக்கு சந்தேகம் வருமா?

Tuesday, January 20, 2015

என்னம்மா நீங்க.... இப்டி பண்றீங்களேம்மா! :-)எதிரும் புதிருமாய் எல்லாவற்றிலும்

இருக்கும் மாமியாரும் மருமகளும்

சீரியல் பார்த்து விட்டு சோகத்தில்

ஒன்றாக மூக்கை சிந்துவதில் மட்டும்

ஒன்றிணைந்து விடுகின்றீர்களே! எப்படி?

என்னம்மா நீங்க..... இப்டி பண்றீங்களேம்மா!

ஐஎஸ்ஐஎஸின் அடுத்த நாடகம் அரங்கேறுகிறது!The New York Times: A video posted on Tuesday, purportedly by the Islamic State extremist group, shows a militant threatening to kill two Japanese hostages unless the government paid a ransom of $200 million.

KENJI GOTO, HARUNA YUKAWA என்ற இரண்டு ஜப்பானியர்களை பிடித்து வைத்துள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஜப்பானிய அரசிடம் 200 மில்லியன் டாலர் பணயத் தொகையாக கேட்டுள்ளார்களாம். தரவில்லை என்றால் இவர்களை கொன்று விடுவார்களாம். ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் மொசாத்தின் கட்டளைகளை செயல்படுத்தி வரும் இவர்களுக்கும் இஸ்லாத்துக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா?

இவ்வாறு பணயத் தொகை கேட்பதற்கோ, அல்லது அப்பாவிகளான இந்த இருவரையும் கொல்வதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் காட்ட முடியுமா இந்த காட்டு மிராண்டிகளால். ஜப்பான் எப்போதுமே நடுநிலை பேணக் கூடிய நாடு. அவர்களையும் இஸ்லாத்துக்கு எதிரான களத்தில் இறக்கி விட மொசாத் தேர்ந்தெடுத்த வழியே இந்த இரண்டு ஜப்பானியர்கள் கைதும். பணத்தை தரவில்லை என்றால் கழுத்தை அறுத்து அதனை வீடியோவாக்கி ஜப்பானிய மக்களை இஸ்லாத்துக்கு எதிராக திருப்ப முயற்சிப்பார்கள். முன்பு பிரிட்டிஷ், அமெரிக்க கைதிகளையும் இது போலவே கொன்றனர்.

வழக்கம் போல் யூதர்கள் இதிலும் தோல்வியையே அடைவர். பொறுத்திருந்து பார்போம்.

தகவல் உதவி

NEWYORK TIMES
20-01-2015

செசன்யாவில் கார்ட்டூனுக்கு எதிராக நடந்த பேரணி!Chechnya holds huge rally over Charlie Hebdo cartoons

இத்தனை பிரச்னைகளுக்குப் பிறகும் திரும்பவும் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனை வெளியிட்ட சார்லி ஹெப்டோ பத்திரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து செசன்யாவில் ஆயிரக்கணக்கான மக்கள் அமைதி பேரணியில் கலந்து கொண்டனர். செசன்யாவின் மத்திய பகுதியான க்ரோஷ்னியில் உள்ள மிகப் பெரும் பள்ளி வாசலில் இருந்து இந்த பேரணி புறப்பட்டது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு நாள் முன்னதாக பத்திரிக்கைகளுக்கு அளித்த பேட்டியில் 'ஆயிரக்கணக்கில் மக்கள் இந்த பேரணியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பேரணியின் காட்சிகளை தொலைக்காட்சிகள் நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார். அமெரிக்க எதிர்ப்பு நிலையை தற்காலங்களில் ரஷ்யா மேற்கொள்வதால் இஸ்லாமியர்களை அரவணைத்து செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு புடின் தள்ளப்பட்டுள்ளதாக இதனை நாம் எண்ணலாம்.

தகவல் உதவி
அல்அரபியா
19-01-2015


Post by RT.

இறைவனை அற்ப பொருளாக்கியவர்கள் - இளையராஜாநிருபர்: உங்களை கடவுளாக சிலர் சித்தரிக்கும் போது என்ன நினைப்பீர்கள்?

இளையராஜா: இதை நான் பெரிதாக பொருட்படுத்துவதில்லை. மக்களில் சிலர் சச்சின் டெண்டுல்கரையும் கடவுளாக நினைக்கின்றனர். அதைப் போல அவர்கள் பார்வையில் நானும் ஒரு கடவுள். இதில் எந்த வித்தியாசத்தையும் நான் பார்க்கவில்லை. இது போன்ற விஷயங்களுக்கு நான் அதிக முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. கடவுளை வானிலிருந்து கீழே இறக்கி அவரை அற்ப பொருளாக மாற்றி விட்டோம்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
19-01-2015

உங்களை யாரும் கடவுளாக சித்தரிப்பதை நீங்கள் விரும்பவில்லை என்று சொன்னது மகிழ்ச்சியாக உள்ளது. கடவுளை வானிலிருந்து கீழிறக்கி அற்ப பொருளாக்கி விட்டனர் என்று சொன்னதும் அருமையான வாசகம். ஆனால் உங்களை வார்த்தைகளால் கடவுளாக்குபவர்களை கண்டிக்க வேண்டும். பொது மேடைகளில் உங்களை வைத்துக் கொண்டு 'என் கடவுள் இளையராஜா: நான் வணங்கும் தெய்வம்' என்றெல்லாம் சொல்லும் போது அந்த மேடையிலேயே அவர்களின் அறியாமையை சுட்டிக் காட்டி தடுக்க வேண்டும். உங்களின் மவுனமானது அதனை அங்கீகரிப்பது போல் உள்ளது. நீங்கள் அதுவும் ஒரு ஆங்கில தினசரிக்கு கொடுக்கும் இந்த பேட்டியை எத்தனை தமிழர்கள் பார்பார்கள்? மிக சொற்பமான நபர்களுக்கே உங்கள் செய்தி சென்றடைந்திருக்கும். எனவே வருங்காலங்களில் பொது மேடையிலேயே உங்களை கடவுளாக்குபவர்களை கண்டியுங்கள். ஏ ஆர் ரஹ்மானும் ஒரு முறை நிகழ்ச்சி தொகுப்பாளினியை தன்னை கடவுள் என்று சொன்னதற்காக கண்டித்தார்.

---------------------------------------------------

இனி நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை சற்று பார்போம்....

'நான் ஹீரா என்ற ஊருக்குச் சென்றேன். அங்குள்ள தலைவருக்கு அந்த மக்கள் காலில் விழுந்து சிரம் பணிவதைப் பார்த்தேன். காலில் விழுந்து மரியாதை செய்வதற்கு நம்முடைய நபி மிகப் பொருத்தமானவர்களாயிற்றே என்று எனக்குள் கூறிக் கொண்டேன். முகமது நபி அவர்களிடம் வந்து 'ஹீரா ஊர் மக்கள் தங்கள் தலைவருக்கு காலில் விழுந்து மரியாதை செய்வதைக் கண்டேன். இறைவனின் தூதரே! இதற்கு நீங்கள் தகுதியானவர்கள்' என்றேன். அதற்கு முகமது நபி அவர்கள் 'நான் இறந்த பிறகு எனது சமாதியில் இதே போன்ற வணக்கத்தைச் செலுத்துவாயோ?' என்று கேட்டனர். மாட்டேன் என்று நான் கூறினேன். பின்னர் முகமது நபி அவர்கள் 'மனிதனுக்கு மனிதன் காலில் விழுந்து மரியாதை செய்யும் பழக்கத்தை செய்யாதீர்கள். ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு சிரம் தாழ்த்த அனுமதி இருந்தால் ஒரு மனைவி தனது கணவனுக்கு சிரம் தாழ்த்த சொல்லியிருப்பேன். ஏனெனில் அவர்கள் கணவர்களுக்கு அதிகம் கடன்பட்டிருக்கிறார்கள்.'

-அறிவிப்பவர் கைஸ் பின் சாத், நூல் அபுதாவுத்: 1828.

'படைக்கப்பட்டவற்றிற்கு சிரம் தாழ்த்தி வணங்காதீர்கள். படைத்தவனை மாத்திரமே சிரம தாழ்த்தி வணங்க நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்.'-முகமது நபி, அரபி 45.

ஒருமுறை முகமது நபி அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல்படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்தபோது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். 'விடுங்கள்' என்று கூறி அந்தத் துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். 'நானும் உங்களைப் போன்ற மனிதன் தான்' என்றும் கூறினார்கள்.

ஆதாரம்: தப்ரானி.


தனக்கு யாரும் விசேஷமாக மரியாதை செய்து விடக் கூடாது என்பதிலும், தனது இறப்புக்குப் பின் யாரும் தன்னை கடவுளாக்கி விடக் கூடாது என்பதிலும் முகமது நபி எந்த அளவு கவனமாக இருந்திருக்கிறார்கள் என்பதை நினைத்து ஆச்சரியப்படுகிறோம்.

இறைவனையே சிரம் தாழ்த்தி வணங்குங்கள்.

-குர்ஆன்: 53: 62

Monday, January 19, 2015

ஆங்கிலேயனை வியக்க வைத்த துபாய்!கேண்டிட் கேமரா என்ற நிகழ்ச்சியை நாம் அனைவரும் அறிந்திருப்போம். மறைவான கேமராவை வைத்து பலரையும் சிரிக்க வைக்க நடத்தப்படும் நிகழ்ச்சி. இது போன்ற நிகழ்ச்சியை துபாயில் இங்கிலாந்தைச் சேர்ந்த படக் குழுவினர் சமீபத்தில் நடத்தி ஆய்வு செய்தனர். பணத்தோடு கூடிய தனது மணி பர்ஸை வேண்டுமென்றே தவற விட்டு அதற்கு மக்களின் ரியாக்ஷன் எவ்வாறு இருக்கிறது என்று நோட்டமிட்டனர்.

ஆச்சரியமாக.... பர்ஸை பார்த்த அனைவரும் அந்த நபரை கூப்பிட்டு ஒப்படைத்தததை இந்த யுட்யூபில் பார்த்து மகிழுங்கள். இஸ்லாமிய சட்டங்களினால் என்ன நன்மை என்று கேட்பவர்களுக்கு மிக அழகாக இந்த ஆவணப் படம் பதிலளிக்கிறது.

பணக்கார துபாய் ஷேக்குகள் பர்ஸை திருப்பி கொடுப்பது ஆச்சரியமில்லைதான். ஆனால் குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வரும் பாகிஸ்தானிய கூலிகளும் வழியில் கிடந்த மணி பர்ஸை உரியவரை அழைத்து திருப்பி கொடுத்ததை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆச்சரியத்தோடு பார்க்கிறார். பர்ஸை எடுத்துக் கொடுத்ததற்காக அன்பளிப்பாக பணம் கொடுக்கிறார். அதனையும் 'நன்றி' என்று சொல்லி விட்டு வாங்காமல் சென்று விடுகின்றனர் ஏழை முஸ்லிம்கள்.

துபாயில் டிரேட் சென்டர் பகுதி, பர் துபாய், டவுன் டவுன் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 45 முறை பர்சை தவற விட்டு சோதனை செய்யப்பட்டு அத்தனை முறையும் அதனை எடுத்தவர்கள் திருப்பி அளித்தனர்.

இது குறித்து பர்சை தவற விடுவதாக நடித்த டேனியல் ஜர்விஸ் கூறியதாவது, எடுத்த பொருளை நேர்மையாக திருப்பி தருவது என்பது அருமையான தருணமாகும். பர்சை எடுத்த அனைவரும் நேர்மையாக நடந்து கொண்டனர். அரபு நாடுகளில் உள்ள மக்களின் நேர்மையை எடுத்துகாட்டுவதாக இந்நிகழ்ச்சி அமைந்துள்ளது என்றார்.

பணத்துக்கு ஆசைப் படாதவன் எவனுமே இல்லை. எந்த வழியில் வந்தாலும் ஓகே என்று சொல்பவர்கள் தான் உலகில் அதிகம். நமது இறப்புக்குப் பிறகு இந்த பொருளாதாரத்தை எவ்வாறு திரட்டினோம் என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டும் என்ற பயம் ஒருவனுக்கு இருந்தால் எத்தனை லட்சம் தவறான வழியில் கிடைத்தாலும் அதனை ஒரு உண்மை முஸ்லிம் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான். இதனையே இந்த நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வளவு கடுமையான சட்டங்கள் போட்டும் திருடியே வாழ்க்கையை ஓட்டுபவர்கள் இந்நாடுகளில் ஒரு சிலர் இருக்கவும் செய்கிறார்கள். ஆனால் இவ்வாறு உள்ளவர்கள் மிக சொற்பமே.

இதற்கு வந்த சில பின்னூட்டங்களைப் பார்போம். அனைவரும் முஸ்லிம் அல்லாதவர்களே....

Nick Ronaldo
1 week ago

In Muslim Religion, if they caught you stealing they cut your hands. Allah Akbar!

-----------------------------

dzY_Scorpio
1 week ago

I'm a white english male and I have been exposed to the medias misconceptions of Muslims and I would like to say Islam and Muslims are the most kind hearted people in the world.

-----------------------------

Alex
1 week ago (edited)

Dubai has one of the lowest crime rates anywhere in the world.
You can leave your keys in the ignition and go away for like an hour, and no-one would steal your car.
Then you get all these retarded racist English scumbags who claim 'Islam is bad'. Yet, I guarantee you if he had have dropped his wallet in front of one of those racist cunts they would have stolen it.

----------------------------
·
sasoattia
1 week ago

And people say arabs/muslims are terrorists.....

------------------------------
·
Jo C
1 week ago

The same people that claim all muslims are "terrorist" are the same people that label all blacks as crooks and thieves. They let the media paint an image for them and follow it blindly. Judging their fellow man simply by how they look. How pathetic.

இளையராஜா இன்னும் ஆன்மீகத்தில் முழுமையடையவில்லை!

இளையராஜா இன்னும் ஆன்மீகத்தில் முழுமையடையவில்லை!நிருபர்: உங்களைப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்?

இளையராஜா: நான் என்னையே சில நேரம் வெறுக்கிறேன். எனக்கு கிடைத்த இந்த பிறப்பை நான் விரும்பவில்லை. இதற்கு முன்னால் உள்ள பிறவியில் நான் செய்த தவறுகளுக்கு தண்டனையாகத்தான் இந்த பிறவியில் இவ்வாறான வாழ்க்கை எனக்கு கிடைத்துள்ளது. இதனை எவ்வாறு சரி செய்வது என்பதுதான் தற்போதய சிந்தனை. முற் பிறவியில் செய்த தவறுகளுக்கு பிராயச்சித்தமாகத்தான் இந்த பிறவியில் எனது தவறுகளை சரி செய்து வருகிறேன்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா
19-01-2015

டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு இளையராஜா நேற்று கொடுத்த பேட்டியில் ஒரு பகுதியைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள். மனிதர் ரொம்பவும் குழம்பிப் போயுள்ளார். ஏழு பிறவி என்ற நம்பிக்கையானது நிரூபிக்க முடியாத ஒன்று. இந்த உலகில் உள்ள மனிதர்கள் தொடர்ந்து பல பிறவிகள் எடுத்தால் உலகின் மக்கள் தொகையானது கூடக் கூடாது. இந்தியா சுதந்திரம் அடைவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் பாரதி 'முப்பது கோடி முகமுடையாள்' என்று இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற மூன்று நாடுகளையும் இணைத்து பாடினார். ஆனால் இன்று இந்தியாவின் மக்கள் தொகை மட்டுமே 100 கோடிக்கு மேல் ஆகி விட்டது. அன்றைய 30 கோடி இன்று 100 கோடியாகியுள்ளது. மறு பிறவி சாத்தியம் என்றால் தற்போது புதிதாக உருவாகியுள்ள 70 கோடி மக்களின் முந்தய பிறவி எது?

ஆடு, மாடு, நாய்களாகவும் பிறவி எடுக்கலாமே என்று நீங்கள் கெட்டால் அந்த உயிரினங்களின் வளர்ச்சியும் தாறுமாறாகவல்லவா பெருகியிருக்கிறது? முதலில் உலகம் முழுக்க அனைத்து உயிரினங்களும் 500 கோடியாக இருந்ததாக கணக்கிட்டால் இன்றைய கணக்குப் படி அதே ஐநூறு கோடிதான் இருக்க வேண்டும். அவற்றுக்குள்தான் மறுபிறவி நடந்திருக்க வேண்டும். எல்லா உயிரினங்களிலும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மறு பிறவி என்பது இல்லாத ஒன்று என்ற முடிவுக்கு வருகிறோம். இந்து மதத்தில் மறு உலக வாழ்வு சொல்லப்பட்டுள்ளது. அதனைத்தான் திரித்து மறு பிறவி என்று மக்களுக்கு போதித்து விட்டார்கள். இந்து மத வேதங்கள் எதிலும் மறு பிறவிப் பற்றியும் சொல்லப்படவில்லை.

அடுத்து ஒரு பிறவியில் தவறிழைத்தால் அதற்கு பரிகாரமாக மறு பிறவியில் இழிவானவனாக பிறக்க வைக்கப்படுவான் என்று மறு பிறவிக்கு விளக்கம் சொல்கின்றனர். முதலில் முற்பிறவியில் நான் எந்த பாவம் செய்தேன் என்று எனக்கு தெரிந்திருக்க வேண்டும். அடுத்து இந்த பிறவியில் எதனால் இழி பிறவியானேன் என்ற விளக்கமும் எனக்கு கிடைத்திருக்க வெண்டும். அப்போதுதான் என்னை திருத்திக் கொண்டு இனி வரும் பிறவியில் நல்லவனாக பிறக்க முயற்சி செய்வேன். எல்லாம் மூடு மந்திரமாக எதுவும் விளங்காமல் நான் இந்த பிறவியில் பிறந்திருந்தால் அதனால் எனக்கு என்ன நன்மை? எவ்வாறு என்னை நான் திருத்திக் கொள்வது? இப்படி குழப்பமான ஒரு தத்துவத்தை இறைவன் நமக்கு கொடுத்திருப்பானா?

மறுமை வாழ்க்கையை இந்து மத கிரந்தங்கள் 'புனர் ஜென்மம்', 'பர்லோக்' என்கிற பெயரில் வலியுறுத்துகிறது. புனர் (மற்றொரு (அ) அடுத்த) + ஜன்மம் அதாவது மறுமை வாழ்க்கை என்ற பொருளில் வரும்.

'இந்துவேதங்கள் குறிப்பிடும் புனர் ஜென்மம் என்பது இந்த உலக வாழ்க்கைக்குப் பின் உள்ள மறு உலக வாழ்க்கை ஆகும். திரும்ப திரும்ப ஜன்மம் எடுத்து வரும் வாழ்க்கையல்ல' என்று Dr Farida Ghauhan தன்னுடைய நூலான Punarjanam aur ved (page 93) -ல் கூறுகிறார்.

ஆன்மாவானது மறுபடியும் மறுபடியும் பல ஜென்மம் எடுத்து வரும் என்று எந்த இந்து வேதமும் குறிப்பிடவில்லை என்றுSri Satya Prakash Vidya Lankar தன்னுடைய நூலான Awagawan (Page 104) -ல் குறிப்பிடுகிறார்.

'மறு பிறவித் தத்துவம் என்பது ஒரு கொள்கை அளவில் மட்டுமே இந்து மதத்தில் குறிப்பிடப் படுகிறது. அது உண்மை என்றோ அடிப்படையான தத்துவம் என்றோ கொள்ளப் பட வேண்டியது இல்லை. வேதங்களோ, உபநிஷத்துகளோ இதைக் குறிப்பிடவில்லை.'
-சுவாமி பூமாந்த தீர்த்தர், ஞான பூமி
10 பக்கம்
97 ஏப்ரல்

மரணத்திற்குப் பின் உள்ள மறுமை வாழ்வு பற்றி குர்ஆன் என்ன கருத்து வைக்கிறதோ அதையே தான் இந்து மத வேதங்களும் வைக்கின்றன. அவற்றை வரிசையாக கிழே பார்ப்போம்.

'ஏ அக்னி! இறந்த இந்த மனிதர் மறு உலகிற்கு செல்வார்'
10 : 16 : 5 - ரிக் வேதம்

ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்கக் கூடியவர்களே நன்மை மற்றும் தீமையின் மூலம் பரீட்ஷித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்ப கொண்டு வரப் படுவீர்கள்.
21 : 35 - குர்ஆன்

ஏ கணவன் மனைவியரே! நீங்கள் ஒற்றுமையாய் நல்லறங்கள் செய்யத் துவங்குங்கள். சொர்க்க வாழ்க்கையை உண்மையில் அனுபவிப்பீர்கள்.
6 : 122 : 3 - அதர்வண வேதம்

பய பக்தி உடையவர்களுக்காக சொர்க்கம் சித்தப் படுத்தப் பட்டுள்ளது.
3 : 133 -குர்ஆன்

மறுமையில் இவர்களை நொக்கி நீங்கள் உங்கள் மனைவி மார்களுடன் மகிழ்ச்சியுடன் சுவனத்துக்குள் நுழைந்து விடுங்கள் என்று கூறப்படும்.
43 : 70 -குர்ஆன்

சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

நரகத்தில் நுழைந்தவுடன் தாங்க முடியாத வேதனை துவங்கும். கை கால்கள் எரிக்கப் படும். விறகுக் கட்டுகள் அவனைச் சுற்றி குவித்து வைக்கப் பட்டு எரிக்கப் படும். அவனுடைய சதை அவனுக்கு உண்ண கொடுக்கப்படும். தன்னைத் தானே செதுக்கிக் கொள்வான் அல்லது பிறரால் வெட்டப் படுவான். குடல்கள் பிதுங்கி வெளியே தள்ளப் பட்டவனாக இருப்பான். எனினும் அவன் உயிருடனே இருப்பான். அவன் சாகாது தொடர்ந்து வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

- ஸ்ரீமத் பாகவத் மஹா புராணம்

மேலே நான் கொடுத்துள்ள இந்து மத வேத ஆதாரங்களும் இஸ்லாமிய வேத ஆதாரங்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே இந்து மதமும் மறு உலக வாழ்க்கையை வலியுறுத்துகிறது. மறு பிறவி என்பது இந்து மத கோட்பாடு அல்ல. அது தவறாக விளங்கிக் கொள்ளப்பட்ட ஒன்று என்று விளங்கிக் கொள்ளலாம்.

எனவே இளையராஜா அவர்களே! நீங்கள் இசை அமைப்பதில் பெரும் ஜாம்பவானாக இருக்கலாம். ஆனால் கடவுளை தேடும் விஷயத்தில் உங்களை விட உங்கள் இளைய மகன் யுவன் சங்கர் ராஜா மிக உயரத்தில் இருக்கிறார். அவரிடம் உள்ள தமிழ் குர்ஆனை வாங்கி தினம் ஒரு பக்கமாக பொறுமையாக படித்து வாருங்கள். உங்கள் மகனைப் பொலவே உங்களுக்கும் ஆன்மீகத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்.

அவ்வாறு தெளிவு கிடைத்து விட்டால் 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்', 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' 'நட்ட கல்லும் பேசுமோ' போன்ற நமது முன்னோர்களின் வழியை குர்ஆன் உங்களுக்கு காண்பிக்கும். பிறவிப் பயனை உங்கள் மகனைப் போன்று நீங்களும் அடைந்து கொள்வீர்கள். உங்களை சகோதரனாக அரவணைக்க 200 கோடிக்கு மேல் உலகமெங்கும் காத்துக் கொண்டிருக்கிறோம்.

டிஸ்கி: நான் படிக்கும் காலங்களில் சலங்கை ஒலி, சங்கரா பரணம், அழகே உன்னை ஆராதரிக்கிறேன் போன்ற படங்களின் பாடல்களில் லயித்து பள்ளியை கட்டடித்து விட்டு எங்கள் ஊர் தியேட்டரில் பல முறை சினிமா பார்த்துள்ளேன். இதனால் எனது தாயாரிடம் நிறைய அடி வாங்கியதுண்டு. அந்த அளவு உங்கள் இசையின் மேல் ஒரு காலத்தில் ஈர்ப்பு இருந்தது. :-)


.ப்ரான்ஸ் தாக்குதல் அமெரிக்கா மற்றும் மொசாத்தின் வேலையே!ஜேக் லிண்ட்ப்ளாட் (jack lindblad) கலிபோர்னியா செனட் சபையின் போட்டியாளர். க்ரீன் பார்ட்டியைச் சேர்ந்தவர். இவர் ப்ரஸ் டிவிக்கு சார்லி ஹெப்டோ பத்திரிக்கை அலுவலக தாக்குதல் சம்பந்தமாக கொடுத்த பேட்டியைப் பார்போம்.

'இது மதம் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்வே அல்ல. அமெரிக்காவும் மொசாத்தும் சேர்ந்து செய்த திட்டமிட்ட படுகொலை. பெஞ்சமின் நெதன்யாஹூ தனது பலத்தை ஐரோப்பாவில் நிலை நிறுத்திக் கொள்ள எடுத்த முயற்சிகளில் ஒன்றே இந்த திட்டமிட்ட படுகொலைகள். நெதன்யாஹூவின் கைப்பிடிக்குள் முழு ஐரோப்பாவும் வர வேண்டும் என்பதற்காக நடத்தப்பட்ட நாடகங்களே இந்த படுகொலைகள்.

துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் உடன் மொசாத் ஏஜண்ட் நிறுத்தி வைத்திருந்த காரில் ஏறி அந்த அலுவலகத்தின் இரண்டாவது கேட் வழியாக கச்சிதமாக திட்டமிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஒரு தடயத்தையும் விடாது எடுத்துச் சென்ற மொசாத் குறிப்பிட்ட நபரின் பாஸ் போர்டை மட்டும் தவற விடுமா? அது வேண்டுமென்றே முஸ்லிம்களின் மேல் பழி போட தவற விடப்பட்டது.' என்று பொரிந்து தள்ளியுள்ளார். இவர் உயிருக்கும் ஆபத்து வரலாம்.

மொசாத் யூதர்களை இவ்வாறு கொல்லுமா? என்று கேட்கலாம். தங்களின் காரியத்தை சாதித்துக் கொள்ள இவர்கள் யூதர்களையும் பலியிட தயங்க மாட்டார்கள். முனிச் ஒலிம்பிக்கிலும் இதே போல் மொசாத் நடந்து கொண்டதை நாம் மறந்து விட முடியாது. சார்லி ஹெப்டோ கொலையாளிகளை கண்டு பிடித்து உண்மையை வெளிக் கொண்டு வந்த விசாரணை அதிகாரியையும் கொன்று விட்டு அது தற்கொலை என்று உலகுக்கு அறிவித்ததை சில நாள் முன்பு பார்த்தோம்.

இந்த நாசகார கும்பல் இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறதோ?

தகவல் உதவி
ப்ரஸ்டிவி (presstv.ir)
இண்டிபென்டன்ட் (independent.co)

-------------------------------------------------------

Lindbald, of Green Party of LA County Council, told Press TV on Tuesday that the militants, carrying out the deadly attack against the Charlie Hebdo Satirical weekly and a supermarket, are “not from the religion… (but) from US and the Mossad” and the deadly attacks were meant to keep Israeli Prime Minister Benjamin Netanyahu “in power” .

“It’s meant to keep Europe under Netanyahu’s thumb.”

Lindblad referred to a getaway car “left there by a Mossad agent ready for the shooters at the cartoonist office to get a second getaway car” with one of the terrorist’s passport left “intentionally… just like 9/11.”

------------------------------------------------------

Jack Lindblad is the 2014 Green Party Candidate for California Senate, 18th District. An award-winning Architect, Urban Planner, Community Organizer, Political Economist, North Hollywood Northeast Neighborhood Councilmember, Green Party of Los Angeles County Councilmember, Lindblad campaigns on a Green-values platform for a carbon-neutral, relocalized, 100% renewable energy, steady state economy, basing development on bio-regional determinism, by forming public policy on accepted science, not developers.

http://www.independent.co.uk/news/world/europe/paris-attacks-us-politician-jack-lindblad-claims-charlie-hebdo-killings-were-by-us-and-mossad-to-keep-israels-netanyahu-in-power-9979696.html

http://www.presstv.ir/Detail/2015/01/13/392974/All-markings-of-false-flag-op-in-Paris

ரஷ்ய போராட்டத்தில் 20000 க்கும் அதிகமான மக்கள்!ரஷ்யாவில் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் நபிகள் நாயகத்தின் கார்ட்டூனுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20000 க்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். ரஷ்யாவின் காகஸஸ் மாநிலத்தில் மாகாஸ் என்ற நகரத்தில் இந்த போராட்டம் நடைபெற்றது.

அங்கு கலந்து கொண்ட மக்கள் அனைவரும் சார்லி ஹெப்டோ பத்திரிக்கையின் அடாத செயலை கண்டித்தனர். கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதனை சார்லி ஹெப்டோ தாண்டி விட்டதாக பலரும் அந்த பத்திரிக்கைக்கு எதிராக கோஷமிட்டனர்.

எங்கோ ஒரு மூலையில் அரேபிய கிராமத்தில் பிறந்த காய்ந்த பேரித்தம் பழங்களைத் தின்று வாழ்வு நடத்திய ஒரு மனிதரை கேலிச் சித்திரமாக்குவற்கு ரஷ்ய மக்களும் உடன்பட வில்லை. அந்த அளவு நபிகள் நாயகத்தின் வாழ்வானது கம்யூனிஸ கோட்டைகளையும் அசைத்துப் பார்க்கிறது. என்னதான் கம்யூனிஸத்தை அந்த மக்களின் மீது ஆட்சியாளர்கள் திணித்தாலும் அதனையும் மீறி இஸ்லாம் இந்த மக்களின் வாழ்வோடு பிண்ணிப் பிணைந்துள்ளதையே இந்த போராட்டம் காட்டுகிறது.

தகவல் உதவி
washingtonpost (வாஷிங்டன் போஸ்ட்)
18-01-2015

பெகிடாவின் போராட்டத்துக்கு ஜெர்மன் அனுமதி மறுத்தது!பெகிடா PEGIDA (Patriotic Europeans Against the Islamisation of the Occident) என்ற அமைப்பு திங்கட் கிழமை இஸ்லாமியர்களுக்கு எதிரான ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் ஜெர்மனியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக போலீஸார் பெகிடாவுக்கு அனுமதி மறுத்துள்ளனர். இதற்கு முன்பு ஜெர்மன் பிரசிடென்ட் ஆஞ்சலா மார்கல் இஸ்லாம் ஜெர்மனியின் மதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் கூறியது யூதர்களை ரொம்பவுமே கொதிப்படைய வைத்துள்ளது. அரிப்பெடுத்த யூதர்கள் ஆஞ்சலா மார்கல்லுக்கு ஹிஜாபை மாட்டி இஸ்லாமிய பெண்ணாக காட்டி ஊர்வலம் செல்கின்றனர். எந்த அளவும் கீழ்த்தரமாக இறங்க யூதர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். தங்களை எதிர்ப்பவர்களை அல்லது இஸ்லாத்தை ஆதரிப்பவர்களை எந்த வகையிலாவது மட்டம் தட்ட முனைவார்கள். அதுதான் தற்போது நடந்துள்ளது.

ஐரோப்பிய மக்கள் மிகத் தெளிவாகவே உள்ளனர். தங்கள் நாடுகளில் நடக்கும் எந்த தீவிரவாத செயல்களுக்கும் இஸ்லாமியர் காரணமில்லை என்பதை நன்கு விளங்கி வைத்துள்ளார்கள். இதன் பின்னணியில் யூதர்கள் இருப்பதும் அவர்களுக்கு தெரியும். ஐரோப்பிய மக்கள் படித்த சிந்திக்க தெரிந்த மக்களல்லவா? எனவே தான் யூதர்களின் நரித் தந்திரம் ஒவ்வொரு முறையும் ஐரோப்பாவில் எடுபடாமல் போகிறது. :-)

தகவல் உதவி
NBC NEWS (என்பிஸி செய்திகள்)
18-01-2015