Followers

Saturday, August 31, 2013

திறந்த வெளி விசாரணை தேவையா?ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தற்போது மூன்று தமிழர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பதைப் பற்றிய விவாதம் இந்த காணொளியில் காணக் கிடைக்கிறது. இந்த மூவரும் உண்மையிலேயே ராஜீவ் கொலையில் பங்கெடுத்திருந்தால் தூக்கில் இடப்பட வேண்டியவர்களே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ராஜீவோடு சேர்ந்து 15 பேருக்கு மேல் இந்த குண்டு வெடிப்பில் இறந்துள்ளார்கள்.

இந்த விவாதத்தில் திரு சுப வீர பாண்டியன் ஒரு அழகிய கருத்தை வைக்கிறார். அதாவது ராஜீவ் கொலை வழக்கில் அனைத்து விசாரணையில் உள் அரங்கிலேயே வைத்து ஏன் செய்கிறீர்கள்? திறந்த வெளியில் வைத்து விசாரித்து அந்த விசாரணையும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் காவல் துறை தவறு செய்தால் அதை மக்கள் கண்டு கொள்வார்கள். அடித்து துன்புறுத்தி வலுக்கட்டாயமாக குற்றத்தை ஒப்புக் கொள்ள வைக்கும் நிலைமை மாறுமே என்கிறார்.

மிகச் சரியான கருத்து. இந்த முறையை பின் பற்றி அனைத்து குற்றவாளிகளையும் விசாரணை கைதிகளையும் விசாரித்தால் ஆளும் வர்க்கத்தில் உள்ள பல கருப்பு ஆடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாம். ஆனால் ஆளும் வர்க்கம் இதற்கு சம்மதிக்காது. விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் என்ற ஒற்றை பதிலே இவர்களிடமிருந்து வரும்.

பொது அரங்கில் வைத்து விசாரித்து அதை ஒளிப்பதிவும் செய்து அரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பினால் சம்பந்தப்பட்ட கேஸ் விஷயமாக மேலும் பல தகவல்கள், பல உண்மைகள் பொது மக்களிடமிருந்து வர வாய்ப்புள்ளது. இது நடைபெறும் வழக்கு சரியான திசையில் செல்ல உகந்ததாக இருக்கும். அந்த குற்றவாளியை இயக்கியவர்கள் யார் என்பதும் பொது மக்கள் மூலமாகவே காவல் துறைக்கு தெரிய வரும்.

தற்போது என்ன நடக்கிறது?

சமீபத்தில் 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பின் நிறுவனர் என்ற பெயரில் யாசின் பட்கல் என்ற இளைஞனை அதுவும் நேபாளில் வைத்து கைது செய்துள்ளது காவல் துறை. இந்த கைது பற்றி யாசினின் தந்தை சொல்வதைப் பார்ப்போம்.

யாசின் 1983-ம் ஆண்டு பத்கல் கிராமத்தில் பிறந்து அங்கேயே 10-ம் வகுப்பு வரை படித்தான். ஆனால் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் சென்ற யாசின் திரும்பி வரும்போது, 2007-ம் ஆண்டு திடீரென்று காணாமல் போய்விட்டான். இதுக்குறித்து துபாய் போலீஸிடம் முறையிட்டோம். நாங்களும் யாஸினை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் பயன் இல்லை.

அதன் பிறகு யாசின் தான் புனே குண்டுவெடிப்பை நிகழ்த்தினான் என்றும் அவன் இந்திய முஜாஹிதீனின் நிறுவனர்களில் ஒருவன் எனவும் உளவுத்துறை கதைகளை பரப்பி வந்தது.’
என அவர் தெரிவித்துள்ளார்.

இனி அடுத்து ஒரு செய்தி வந்துள்ளது. அதையும் பார்ப்போம்...

இந்திய உளவுத்துறையால் கைது செய்ததாக கூறப்படும் யாஸீன் பட்கல் என்ற நபர் உண்மையில் யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுக்குறித்து வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறியதாவது; ‘யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்திபாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர் தாம் யாஸீன் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.’ என குறிப்பிட்டார்.

அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

10-வது வகுப்பு கூட வெற்றிப் பெறாத முஹம்மது அஹ்மத் சித்திபாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று உளவுத்துறையும், ஊடகங்களும் கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

-http://newindia.tv/tn/india/141-crime/1800-2013-08-31-03-09-02


இதில் உளவுத் துறை எந்த அளவு தனது கைவரிசையைக் காட்டியுள்ளது என்பது தெரியும். ஓய்வு பெற்ற முன்னால் சுப்ரீம் கோர்ட் நீதிபதி திரு மார்க்கண்டேய காட்ஜூ 'இந்தியன் முஜாஹிதீன்' என்ற அமைப்பே உளவுத் துறை உருவாக்கிய ஒன்று என்று சில மாதங்களுக்கு முன்பு உண்மையை போட்டு உடைத்தார். தற்போது உளவுத் துறையால் உருவாக்கிய இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்கு ஒரு நிறுவனரையும் நமது உளவுத் துறையே ஏற்படுததியுள்ளது. இந்த விசாரணை மட்டும் பொது மக்கள் முன்னிலையில் திறந்த வெளியில் நடைபெறுமானால் கண்டிப்பாக உளவுத் துறையின் கருப்பு ஆடுகளின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும். ஆனால் ஆளும் வர்க்கத்தோடு கை கோர்த்து செயல்படும் உளவுத் துறையை மாட்டி விட ஆளும் வர்க்கமும் மசியாது. ஏனெனில் நாட்டில் நிர்வாகத்தில் அதிருப்தி ஏற்படும் போதெல்லாம் மக்களின் கவனத்தை திசை திருப்ப இவர்களுக்கு உளவுத் துறை பல வகைகளில் உதவி வருகிறது.

நாட்டின் நாணய மதிப்பு அதள பாதாளத்துக்கு செல்கிறது. அரசால் கட்டுப்படுத்தவும் முடியவில்லை. மக்களின் கொந்தளிப்பு ஒரு பக்கம். திடீரென்று ஒருநாள் 'இந்தியன் முஜாஹிதீன்' நிறுவனர் கைது' என்ற செய்தி தலைப்புகளில் வரவே அனைவரும் நாட்டின் பண வீக்கத்தை மறந்து விட்டோம். எல்லோரும் யாசின் பட்கலைப் பற்றியே தற்போது பேசிக் கொண்டிருக்கிறோம். இது தான் நமது அரசாங்கங்கள் செய்து வரும் ராஜதந்திரங்கள். முன்பு பிஜேபி ஆட்சியில் இதே போன்று அரசை நோக்கி மக்களின் கோபம் திரும்பிய போது என்றோ சரண்டரான அப்சல் குருவை வைத்து நாடாளு மன்ற தாக்குதல் நாடகம் நடத்தப்பட்டது. அன்றும் இதே போல் அனைத்தையும் மறந்து அப்சல் குருவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். இது தொடர்கதை....

இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டுமானால் ராணுவ ரகசியங்களை தவிர்த்து மற்ற அனைத்து வழக்குகளையும் பொது அரங்கில் வைத்து விசாரிக்க வேண்டும். அன்றுதான் அப்சல் குரு, அஜ்மல் கசாப், யாசின் பட்கல் போன்ற உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுவது நிற்கும். இவர்கள் போய் சேர்ந்து விட்டார்கள். ஆனால் இந்த அநியாயங்களை அரங்கேற்றியவர்கள் அரசு சம்பளத்தை வாங்கிக் கொண்டு ராஜ நடை நடந்து நம் கண் முன்னேயே வருகிறார்கள்.

இதுதான் இந்திய ஜனநாயகம்.....

Friday, August 30, 2013

அஃப்சல் குரு, அஜ்மல் கசாப், அடுத்த இலக்கு யாசின் பட்கல்!பொய்யே உன் மறு பெயர்தான் உளவுத் துறையா?

ஆச்சரியமாக கைதாகப்படும் அனைத்து தீவிரவாதிகளும் இந்து நாடான நேபாளத்திலேயே என்ற செய்தி எந்த அளவு உளவுத் துறை கச்சிதமாக தங்களின் காரியத்தை இதுவரை சாதித்து வருகிறது என்பதை தெளிவாக்குகிறது.

இனி நியூ இந்தியாவில் வந்த செய்தியை கீழே பார்ப்போம்.

இந்திய-நேபாள எல்லையில் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் யாசின் பட்கல், போலி என்கவுண்டரில் பலியாகாமல் உயிரோடிருப்பது மிகுந்த நிம்மதியை தருவதாக அவரின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதுக்குறித்து யாசின் பட்கலின் தந்தை ஜரார் சித்திபாபா கூறும்போது; ‘காணமல் போன எனது மகன் யாசினை, போலி என்கவுண்டர் மூலம் போலீசார் சுட்டுக்கொன்று விடுவார்களோ என்று பயந்து கொண்டே இருந்தோம். ஆனால் தற்போது யாசின் கைதாகி இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் மிகுந்த நிம்மதியை அளித்துள்ளது.

இந்திய நீதித்துறையின் மீது எங்கள் குடும்பம் முழு நம்பிக்கை வைத்து இருக்கிறது. நீதி விசாரணையில் உண்மை வெளிவரும்.

யாசின் குற்றவாளி என்றால் தண்டிக்கப்படட்டும் அதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் யாசின் அப்பாவி; ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர் அப்பாவிதான்.

யாசின் 1983-ம் ஆண்டு பத்கல் கிராமத்தில் பிறந்து அங்கேயே 10-ம் வகுப்பு வரை படித்தான். ஆனால் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை. இதையடுத்து கடந்த 2005-ம் ஆண்டு நவம்பர் மாதம் துபாய் சென்ற யாசின் திரும்பி வரும்போது, 2007-ம் ஆண்டு திடீரென்று காணாமல் போய்விட்டான். இதுக்குறித்து துபாய் போலீஸிடம் முறையிட்டோம். நாங்களும் யாஸினை கண்டுபிடிக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டோம் ஆனால் பயன் இல்லை.

அதன் பிறகு யாசின் தான் புனே குண்டுவெடிப்பை நிகழ்த்தினான் என்றும் அவன் இந்திய முஜாஹிதீனின் நிறுவனர்களில் ஒருவன் எனவும் உளவுத்துறை கதைகளை பரப்பி வந்தது.’ என அவர் தெரிவித்துள்ளார்.

-----------------------------------------------------

இந்திய உளவுத்துறையால் கைது செய்ததாக கூறப்படும் யாஸீன் பட்கல் என்ற நபர் உண்மையில் யாஸீன் பட்கல் அல்ல என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

இதுக்குறித்து வழக்கறிஞர் எம்.எஸ்.கான் கூறியதாவது; ‘யாஸீன் பட்கல் என்று கைது செய்யப்பட்ட நபர் முஹம்மது அஹ்மத் சித்திபாபா ஆவார். இந்தியாவால் தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள 12 நபர்களில் ஒருவராக இண்டலிஜன்ஸ் அதிகாரிகள் இவரை குறிப்பிடுவது தவறாகும். இவர் தாம் யாஸீன் என்பதை நிரூபிக்கவேண்டிய பொறுப்பு புலனாய்வு ஏஜன்சிகளுக்கு உண்டு. கைது செய்யப்பட்டவர் யாஸீன் என்பதை நிரூபிக்க அவர்களின் வசம் ஆதாரம் எதுவுமில்லை.’ என குறிப்பிட்டார்.

அஹ்மத் சித்தி பாபாவை யாஸீன் பட்கல் என்று பெயர் மாற்றியது இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகள் என்று அவரது உறவினரும், பெங்களூரைச் சார்ந்த வழக்கறிஞருமான அக்மல் ரஸ்வி நேற்று முன் தினம் குற்றம் சாட்டியிருந்தார்.

10-வது வகுப்பு கூட வெற்றிப் பெறாத முஹம்மது அஹ்மத் சித்திபாபாவை, பொறியியல் பட்டதாரியாக மாற்றியது மற்றும் 1983-ஆம் ஆண்டு பிறந்த அஹ்மதை 1973-ஆம் ஆண்டு பிறந்தார் என்று உளவுத்துறையும், ஊடகங்களும் கூறுவது குறித்து அக்மல் ரஸ்வி விமர்சித்திருந்தார்.

-http://newindia.tv/tn/india/141-crime/1800-2013-08-31-03-09-02

அஹ்மத் சித்திக் என்கிற பெயரை யாசீன் பட்கல் என்று மற்றியது இண்டெலிஜென்ஸ் ஏஜென்ஸிகள் என்று அஹ்மத்தின் உறவினரும் பெங்களூருவில் வழக்கறிஞராக பணி புரியும் அக்மல் ரஸ்வி தெரிவிக்கிறார்.
1983 ஆம் ஆண்டு பிறந்த அஹ்மத்தை 1973 ஆம் ஆண்டு பிறந்தார் என காவல் துறை கூறி வருகிறது.1990 ஆம் ஆண்டு புனேவிற்கு சென்றார் என்று இண்டெலிஜென்ஸ் பீரோ குற்றம் சாட்டும்போது அஹ்மத்திற்கு வயது வெறும் 7. பத்தாம் வகுப்பு கூட வெற்றி பெறாத அஹ்மத்தை இஞ்னியரிங் பட்டதாரியாக சித்தரித்தும் பல குண்டுவெடிப்புகளின் சூத்திரதாரி என்றும் சித்தரிக்கிறது உளவுத்துறை.
2004 ஆம் ஆண்டு அஹ்மத்தை அவருடைய தந்தை துபாய்க்கு அழைத்து சென்ற போதும் 6 மாதத்தில் திரும்பி வந்துவிட்டார்.
மீண்டும் 2005 ஆம் துபைக்கு சென்ற அஹ்மத் 2007 ஆம் ஆண்டு முதல் காணாமல் போய்விட்டார்.
குண்டு வெடிப்புகள் நடைபெற்ற இடங்களில் அஹ்மத் குண்டுகளை பொறுத்தும் சி.சி.டி..வியில் பதிவாகி இருக்கிறது என்று காவல் துறை கூறுகிறது.
ஆனால் அதனை இதுவரை வெளியிடாமல் மறைத்து வைப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனிடையில் தீவிரவாதிகள் அனைவரும் இந்திய நேபாள எல்லையில் தொடர்ந்து கைதாகும் மர்மம் என்ன?
இவர்கள் எப்படி நேபாள் எல்லை வருகை தருகிறார்கள்?இதனில் ஒளிந்திருக்கும் மர்மத்தை அரசு பொதுமக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என்று இசுலாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து இருக்கின்றன.அரசுக்கு ஏதேனும் சிக்கலான தருணம் ஏற்படும் போது சொல்லி வைத்தாற் போல் தீவிரவாதிகள் கைது செய்யப்படுகிறார்கள். என்றும் அரசு இதனை தெளிவு படுத்த வேண்டும் என்று இசுலாமிய அமைப்புகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாசீன் பட்கலுக்கு தொடர்பு உண்டு என்று உளவுத்துறையும் காவல் துறையும் கூறிவரும் குண்டுவெடிப்புகள் பலவற்றிலும் முன்னர் கைது செய்யப்பட்ட அப்பாவி இசுலாமியர்களுக்கு எதிராக காவல் துறை குற்றத்தை நிறுப்பிக்க போதுமான ஆதாரங்களை தர இயலாமல் நீதிமன்றங்களில் தொடந்து கண்டனங்களை பெற்று வரும் வேளையில் புலனாய்வு பத்திரிக்கையான ‘குலைல் டாட் காம்’ என்ற இணைய தள ஆசியர் ஆஷிக் கேதான் குற்றத்த்திற்க்கு தேவையான ஆதாரங்களை காவல் துறை போலியாக உருவாக்கி அப்பாவி இசுலாமியர்களை வழக்குகளில் சிக்க வைக்கிறது என்று குற்றம் சாட்டினார்.இதனை அடிப்படையாக கொண்டு காவல் துறைக்கும் உளவு துறை அமைப்புகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளை தொடுத்திருக்கிறார் என்பதும் தவறு செய்த காவல் துறை மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் வழக்கை நடத்தி வருக்கிறார் என்பதும் குறிப்பிடபட வேண்டிய முக்கிய செய்தியாகும்.

வழக்கு தற்போது தேசிய புலனாய்வு அமைப்பின் வசம் சென்றுள்ளது.யாசீன் பட்கலிடம் என்.ஐ.ஏ விசாரனை மேற்கொண்டு வருகிறது,முன்பு இதுபோல் தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்ட பல அப்பாவி இசுலாமியர்களின் விடுதலைக்கு என்.ஐ.ஏ ஆற்றிய பங்கு சிறிது ஒன்றும் அல்ல.வழக்கை என்.ஐ.ஏ விசாரனை செய்யட்டும் உண்மைகள் வெளிவரட்டும்..----------------------------------------------------

பிரபலம் அடைய தன்னுடைய வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசிய பாஜக நிர்வாகியும், அவரது நண்பரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் 3 ஆவது தெருவில் வசித்து வருபவர் பாஜக நிர்வாகி பி. பிரவீண்குமார். இவரது வீட்டில் புதன்கிழமை நள்ளிரவு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

அப்போது, வீட்டிலிருந்த பிரவீண்குமாரின் மனைவி சத்தியலட்சுமி, பெட்ரோல் குண்டை வீசிச் சென்ற 2 மர்ம நபர்கள் குறித்து தனது கணவருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க நிர்வாகிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து வியாழக்கிழமை காலை, பெட்ரோல் குண்டு வீசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தில் பிரவீண்குமாரும் சத்தியலட்சுமியும் புகார் அளித்தனர். அதன்பேரில், வழக்குப் பதிந்த போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுயவிளம்பரம் தேடும் வகையிலும், போலீஸ் பாதுகாப்பு பெறுவதற்காகவும், தனது வீட்டின் மீது தானே வெடிகுண்டு வீசிய தகவலை பிரவீண்குமார் விசாரணையின்போது தெரிவித்துள்ளார். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் கமலக்கண்ணன் (28) என்பவர் இதற்கு உடந்தையாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, பிரவீண்குமார் மற்றும் கமலக்கண்ணன் ஆகியோரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் விசாரித்து வருகின்றனர்.

http://dinamani.com/tamilnadu/2013/08/31/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80/article1760548.ece

-Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/31/tamilnadu-dindigul-bjp-functionary-arrest-bomb-hurled-his-own-house-182455.html

இதே வேளையை சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்திருந்தால் அனைத்து ஊடகங்களும் ஒரே குரலில் இஸ்லாத்தின் மீது சேற்றை வாறி இறைக்க ஆரம்பித்திருக்கும். ஊடகம் முஸ்லிம்களிடம் குறிப்பிடும்படியாக இல்லையாதலால் இந்த நிலை. இனியாவது இஸ்லாமிய உலகம் விழித்துக் கொள்ளுமா!

Thursday, August 29, 2013

மோடி ஆட்சி வளர்ச்சியா - தளர்ச்சியா? - கவிஞர் கலி. பூங்குன்றன்

இந்த கட்டுரையை படிப்பதற்கு முன்னால் தான் ஆட்சியில் அமர எந்த விதமான மோசடியையும் செய்ய துளியும் தயங்காத மோடியின் என் கவுண்டர் விபரத்தையும் பார்த்து விடுங்கள். இத்தனை அப்பாவி உயிர்களை குடித்த நரேந்திர மோடியை இந்த நாடு கேட்கா விட்டால் கூட எல்லோரையும் படைத்த அந்த இறைவன் ஒரு நாள் கண்டிப்பாக கேட்பான்....அது வரை பொறுப்போம்.குஜராத் ஒளிர்கிறது ஒளிர்கிறது என்கிறார்களே, அதன் பொருள் என்ன? ஒழிகிறதா ஒளிர்கிறதா?

வளர்ச்சித் திட்டம் என்று சொல்லப்படுவதைக்கூட இந்துக்கள் வாழும் பகுதிகளில்தானே? முசுலிம்கள் வாழும் பகுதிகள் நகராட்சிக் குப்பைத் தொட்டிகள்தான்!

தொடக்கப் பள்ளியில் சேரும் இந்துக்கள் 79 விழுக்காடு என்றால் முசுலிம்கள் 75 விழுக்காடுதான். முசுலிம் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும்போது வெறும் 26 சதவிகிதம் என்கிற பெரும் சரிவே!

டீக்கடை, தையல்கடை, பீடிசுற்றுதல், ரிக்ஷா இழுத்தல், ஆட்டோ ஓட்டுதல் _ இவையெல்லாம் முசுலிம்களுக்கு ஒதுக்கப்பட்ட தீண்டாமைத் தொழில்கள் ஆகிவிட்டன.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இஸ்லாமியர் வெறும் 12 சதவிகிதமே; மற்றவர்கள் இதில் 89 சதவிகிதம்!

ஃபிரண்ட் லைன் ஏடு (20.05.2011) குஜராத்தில் வளர்ச்சி நிலை, பொருளாதாரச் சூழல், ஊழல்கள் பற்றி விரிவான கட்டுரை ஒன்றை வெளியிட்டது.

என்.வி.ஏ.பி.ஆர். என்ற பொருளாதார தொடர்பான ஆய்வு மய்யம் குஜராத் மாநிலத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அந்த ஆய்வு வெளியிட்ட அறிக்கையைத்தான் ஃபிரண்ட் லைன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. அவற்றுள் சில இதோ:

2002ஆம் ஆண்டில் முசுலிம்கள் படுகொலை - பாதிப்புகள் நடந்திருந்தாலும் இன்னும் முசுலிம்களில் அகதிகளாக முடங்கிக் கிடப்பவர்கள் 23 ஆயிரம் பேர்.

சாலைகள், மின் இணைப்புகள், குடிநீர் வசதிகள் ஒரு பக்கம் செய்யப்பட்டுள்ளன எனினும் பொதுவான சமூக மேம்பாடு வளர்ச்சி மிகவும் குறைவே - இதற்கும் காரணம் ஊழல்கள் அதிகரித்ததுதான்.

மோடி ஆட்சியில் முப்பெரும் ஊழல்கள் நடந்துள்ளன. ரூ. 17 ஆயிரம் கோடி செலவில் சுறாலம் சஃபாலம் என்னும் திட்டம் தீட்டப்பட்டது. குளங்களை வெட்டும் - சீரமைக்கும் திட்டம் இது. தொழிலாளர் களுக்கு உள்நாட்டில் கோதுமை விலையைக் கணக்கில் கொண்டு கூலி வழங்கப்பட வேண்டும்.

ஒப்பந்தக்காரர்களுக்கு முன்கூட்டியே தொகை வழங்கப்பட்டுவிட்டது.

ஆனால், தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்கப்படவில்லை.

குளங்கள் வெட்டப்பட்டதாக ஏட்டில் காட்டப்பட் டதே தவிர நடைமுறையில் வெட்டப்பட வில்லை. (குளத்தைக் காணோம் - யாரோ திருடிவிட்டார்கள் என்ற வடிவேலுவின் காமெடி நினைவுக்கு வருமே!).

தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதற்கான அரிசி மகராஷ்டிர மாநிலத்திற்குக் கடத்தப்பட்டது.

மத்திய அரசின் திட்டமான தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 260 கோடியும் சுளையாக விழுங்கப்பட்டது. வேலைகளும் நடைபெறவில்லை _ மக்களும் வேலைவாய்ப்புகளைப் பெற்றிடவில்லை.

மீன் வளர்ப்புத் திட்டத்தில்கூட 600 கோடி ரூபாய் நட்டமாகும் அளவிற்குப் பெரும் ஊழல்.

பன்னாட்டு நிறுவனங்கள் குவிந்தது உண்மைதான். விவசாய நிலங்கள் பழங்குடியினருக்கான நிலப்பகுதிகள் தாராளமாக பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டன.

கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு காரணமாக நீதிமன்ற உத்தரவின்பேரில் பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன.

பெரும் தொழிற்சாலைகள் வந்தன; ஆனால், மக்களின் அடிப்படை வளர்ச்சித் திட்டங்கள் குன்றின.

வேலைவாய்ப்பு பெருகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துவிட்டது.

குஜராத் மகுவா பகுதி நிலக்காரர்களின் போராட்டம் மிக முக்கியமானது.

அணை ஒன்றைக் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை பூமிக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்களைத் தோண்டி வெளியில் எடுத்து சோப்புத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க உத்திரவிட்டார் நரேந்திர மோடி.

மோடியின் இந்த அடாத செயலை எதிர்த்து உள்ளூர் பி.ஜே.பி.காரர்களும்கூட விவசாயிகளுடன் சேர்ந்துகொண்டு போராட்டத்தில் குதித்தனர். 30 ஆயிரம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பகுதிகளை விட்டு கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

சவுராட்டிரா வாங்கனர் மாவட்டத்தில் 40 ஹெக்டேர் நிலம் ஒரு சதுர மீட்டர் 40 ரூபாய் என்று அடிமாட்டு விலைக்குத் தனியார் தொழிற்சாலைக்கு விற்கப்பட்டது. உள்ளூர் மக்கள் நீதிமன்றம் வரை சென்று தடை ஆணை பெற்றனர்.

மோடி ஆட்சியில் தாழ்த்தப்பட்டோர் நிலை படுபாதாளத்தில்! தாழ்த்தப்பட்ட மாணவர்களையும் பிற ஜாதிகளைச் சேர்ந்தவர்களையும் சரிசமமாக அமர வைத்ததற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியை வேறு ஊருக்குத் தூக்கி அடிக்கப்பட்டார்.

இதுபோன்ற ஏராள தகவல்களை ஃப்ரண்ட் லைன் பட்டியல் போட்டுள்ளதே. இதற்கு என்ன பதில்?

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்கிறபோது கல்வியைக் கணக்கில் கொள்ள வேண்டும். மாநிலங்களுக்கான கல்வி வளர்ச்சியில் இந்தியாவில் 15ஆவது இடத்தில் இருக்கும் மாநிலம்தான் குஜராத்.

கட்டட வசதி, குடிதண்ணீர், கழிப்பறை, ஆசிரியர் மாணவர் எண்ணிக்கை சதவிகிதம், மாணவர் சேர்க்கை, இடைநிறுத்தம் (DROP OUTS) தேர்ச்சி விகிதம் ஆகியவற்றில் அடிமட்டத்தில் கிடக்கும் குஜராத் மாநிலம் இந்தியாவில் முதல் மாநிலம் என்றும், அமெரிக்கா பாராட்டுகிறது என்றும் பிரச்சாரம் திட்டமிட்ட வகையில் நடத்தப்படுகிறது.

மத்திய அரசின் நிதி உதவிகளைக் கொண்டு தொழிற்கல்வி அளிக்கும் பயிற்சி மய்யங்கள் குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளத் திட்டம்.

ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் மூன்று லட்ச ரூபாய் மத்திய அரசிடமிருந்து இந்தப் பயிற்சி மய்யங்களுக்கு வழங்கப்பட்டன. பத்தாண்டுகளுக்கு முன் 500 பயிற்சி மய்யங்கள் தொடங்கப்பட்டன.

இவை குறித்து கல்வித்துறைச் செயலாளர் வரேஷ்சின்கா ஆய்வு செய்தார். அதிர்ச்சிதான் காத்திருந்தது. மய்யங்களில் விளம்பரப் பலகை இருந்தனவே தவிர மாணவர்களும் கிடையாது.

ஒப்புக்குச் சில ஆசிரியர்கள் இருந்தனராம். இந்த ஆசிரியர்களிடத்தில் மாதச் சம்பளம் 7 ஆயிரம் என்று கையொப்பம் வாங்கிக்கொண்டு மூவாயிரத்திற்குக் குறைவாகக் கொடுக்கப்பட்டது.

இந்த ஆசிரியர்கள் முறையான பயிற்சி பெற்றவர்களும் அல்லர். இந்தத் திட்டத்தில் மட்டும் 100 கோடி ரூபாய் ஏப்பம்.

சொல்லியிருப்பவர் யார்? கல்வித்துறைச் செயலாளர் - அதுதான் முக்கியம்.

இதுபற்றியெல்லாம் மூச்சுவிடுமா சோ கூட்டம்? மோடி ஆட்சியில் சுயநிதி ஆசிரியர் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. 40 கல்லூரிகளில் எவ்வித வசதியும் கிடையாது. பொதுமக்களின் வளர்ப்பு முட்டி எழுந்தது. இந்த நிலையில் ஏ.பி.படேல் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அடிப்படை வசதியின்றி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதை குழு அறிக்கை அம்பலப்படுத்தியது.

40 கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறக் கூடாது என்று தேசியக் கவுன்சில் ஆணை பிறப்பித்துவிட்டது. தேசியக் கவுன்சில் சார்பாக அய்ந்து குழுக்கள் குஜராத்திற்குச் சென்றன. அவசரமாக வெவ்வேறு கல்லூரிகளிலிருந்து மாற்றி மாற்றி ஆசிரியர்களை வரவழைத்து கண்ணில் மண்தூவும் ஏமாற்று வேலைகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டன. ஆகா மோடியின் நிர்வாகமே நிர்வாகம்!

குடிநீருக்காக பல மைல்கள் நடந்து செல்லும் அவலம்தான் இன்னும் குஜராத்தில்.

வளர்ச்சியோ வளர்ச்சி என்று குஜராத் கொண்டைக்குப் பூ சூட்டுகிறார்கள்; அம்மாநில அரசின் கடன் கொஞ்சம்தான். 1.3. லட்சம் கோடி (கொஞ்சம் தானே!)

ஊழலற்ற ஆட்சி என்று சங்கெடுத்து ஊதி முழங்குகின்றனவே உயர்ஜாதி ஊடகங்கள் -அதாவது உண்மைதானா?

ஊழல் என்றால் உடனே வெளிப்படுத்தும் அமைப்புதானே லோக் அயுக்தா?

குஜராத்தில் இதன் நிலை என்ன? லோக் அயுக்தா உண்டு; ஆனால் எட்டாண்டு காலமாக அதற்கு நீதிபதியை நியமிக்காதது ஏன்? மடியில் கனமில்லை என்றால் நீதிபதியை நியமிக்க வேண்டியதுதானே?

மோடிதான் நியமிக்கவில்லை; நீதிபதியை ஆளுநர் நியமனம் செய்தார். மாநில முதல்வர் உரிமையைப் பறிக்க இவர் யார் என்ற உரிமைக் குரல் கொடுப்பது போல ஊத்தை வாயைத் திறக்கின்றனர்.

லோக் அயுக்தா விஷயத்தில் மோடி ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என்று எந்தப் பார்ப்பனன் கேட்டான்? எந்த ஏடு எழுதியது?

இன்னும் பஜாஜ் ஸ்கூட்டர்கள்தான் தலைநகரமான அகமதாபாத்தில்; ஒரு வகையில் இன்னும் கற்காலத்தில்தான் குஜராத் இருக்கிறதே தவிர தற்காலத்தின் பக்கம் அடியை எடுத்து வைக்க முன்வரவில்லை.

ஒரு கட்டத்தில் குஜராத்தை வானளாவப் புகழ்ந்த அன்னா ஹசாரே குஜராத்தை நேரில் சென்று பார்த்த பிறகு அப்படியே தலைகீழாக மாற்றிப் பேசினாரே_

இவ்வுளவு மோசமான மோடி ஆட்சியையா நான் புகழ்ந்து உரைத்தேன் என்று வெட்கப்பட்டார் மனுஷன்.

குஜராத்தின் உண்மை நிலை என்ன? - இதோ அன்னா ஹசாரே பேசுகிறார்.

ஊழலுக்கு எதிரான சொற்பொழிவாற்ற அன்னா ஹசாரேவின் பொதுக்கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடாகி இருந்தது. அதில் பல அதிரடி அறிக்கைகளை, குஜராத்தில் உண்மை நிலைகளை நேரில் கண்டு மனம் வெதும்பி மக்களுக்குச் சமர்ப்பிப்பதாக அறிவித்தார்.

மகாத்மா காந்தி எதை ஒழிக்கப் பாடுபட்டோரா அந்த மது விற்பனை காட்டாற்று வெள்ளம்போல் குஜராத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதுவா காந்தி பிறந்த மண்?

ஓரு நாளைக்கு குஜராத்தில் நாலரைக் கோடி ரூபாய்க்குப் பால் விற்பனை. ஆனால் 6 கோடி ரூபாய்க்கு மது விற்பனை! குஜராத்தில் பால் விற்பனையைவிட மது விற்பனைதான் அதிகமாக உள்ளது.

அகமதாபாத் நகரில் மட்டுமே ஒவ்வொரு நாளும் 3 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு மதுவகை கொண்டுவரப்படுகிறது.

குஜராத் மாநிலம் என்றாலே பாலுக்கும் பால் பொருளுக்கும் பிரபலம். ஆனால், பூரண மதுவிலக்கு (!) அமலில் (?) உள்ள மோடி ஆட்சியிலோ அது அயல்நாட்டு மதுவுக்கும் கள்ளச் சாராயத்திற்கும் பிரபலம் ஆகிவிட்டது!

லோக்பால் மசோதா தயாராக்குவதற்காக குஜராத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையெழுத்துகள் சேகரித்தபோதுதான் நரேந்திர மோடியைக் குறித்தும் குஜராத் மாநிலத்தைக் குறித்தும் அறிய முடிந்தது.

இவரைப் பற்றியா நான் சென்ற மாதம் பாராட்டினேன்?

முதலில் இந்த முதல்வர் மோடி தன் மாநிலத்தில் லோகாயுக்தாவை அமல்படுத்த வேண்டும்.

பின்னர் இவர் நேர்மையானவராய் கிராம சபைக்கு அதிகாரம் தரவேண்டும்.

நாட்டில் குஜராத்தில்தான் ஊழல் அதிகம் என்று நான் இங்கே வந்தபிறகுதான் - நேரில் பார்த்தபிறகுதான் தெரிகிறது.

மகாத்மா மண்ணில் ஊழல்...!

என்னுடைய ஊழலுக்கு எதிரான இந்தப் போராட்டம் வெற்றி கண்டவுடன் எனது போராட்டம் குஜராத்தை நோக்கியேதான் அமைந்து இருக்கும் என்று பொரிந்து தள்ளிவிட்டாரே, ஹசாரே!

இனியாவது இந்துத்துவா பிடியில் உள்ள பத்திரிகைகளின் பொய்ச் செய்திகளை நம்பி குஜராத்தில் முன்னேற்றம்... மோடியின் அருமையான ஆட்சி... என்றெல்லாம் பரப்பப்படும் பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்னா ஹசாரே குஜராத்தைப் பற்றிப் பாராட்டி நான்கு சொல் சொன்னதும் வரவேற்று எழுதிய திருவாளர் சோ ராமசாமி, உண்மை நிலையை உணர்ந்து மோடியைப் புரட்டி எடுத்தபின், ஹசாரேயைக் கீழே போட்டு மிதிக்க ஆரம்பித்துவிட்டார். பார்ப்பனத்தனம் என்பது இதுதான்!

ராமராஜ்ஜியத்தைப் பற்றிப் பேசிய காந்தியாரை மகாத்மாவாக்கிப் பார்த்தார்கள். மதச்சார்பின்மை பற்றி காந்தியார் பேச ஆரம்பித்ததும் அவரை துர் ஆத்மாவாகக் கருதி மார்பில் குண்டைப் பாய்ச்சவில்லையா? பார்ப்பனர்களைத் தெரிந்துகொள்ள இன்னும் எவ்வளவு காலம் தேவை?

நரேந்திர மோடி நேர்மையின் சின்னம் - உத்தம புத்திரன் - சுத்தமான நெய்யில் பொரித்த சுத்தமான அக்மார்க் சரக்கு என்று ஒரு கூட்டம் தம் கையில் இருக்கும் ஊடகங்கள் மூலம் நூல்கட்டி வானத்தில பட்டமாகப் பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது. உண்மை நிலை என்பதை நாம் சொல்லவில்லை; மோடியின் பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினரே பட்டவர்த்தனமாகப் போட்டு உடைத்திருக்கிறார். அவர் பெயர் ரமிலாபென் தேசாய்.

ஹிட்லர் தன் சொந்த நாட்டு மக்களை ஒருபோதும் படுகொலை செய்யவில்லை. ஆனால் மோடியோ தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ள சொந்த நாட்டு மக்களைக் கொன்று குவித்தவர்.

பொய்களைப் பிரகடனங்களாக வெளியிட்டவர்; முதல்வர் மோடியோ அவர்தம் அமைச்சரவையினரோ சொத்துக் கணக்குகளைக் காட்டவில்லை. அரசு நிலங்களை மிகக் குறைந்த விலையில் ரிலையன்ஸ், எஸ்ஸார் போன்ற தொழில் நிறுவனங்களுக்கு மோடி தாரை வார்த்துவிட்டார்.

கட்ஜ் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை பி.ஜே.பி.யின் தலைவராக இருந்த வெங்கையா நாயுடு பங்குதாரராக இருந்த நிறுவனத்துக்குக் குறைந்த விலையில் விற்றார் என்று பி.ஜே.பி. சட்டமன்றப் பெண் உறுப்பினர் ஆன்லுக்கர் இதழுக்கு விரிவான பேட்டியாகவே அளித்துள்ளார்.

உண்மை நிலைகள் இவ்வாறு இருக்க பார்ப்பன - பனியா சக்திகள் மோடியை இந்தியாவின் பிரதமராக்கி தங்கள் சுயநலத் திட்டங்களுக்கு அரண் அமைக்க ஆயாசப்படுகின்றனர்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் சோ குருமூர்த்தி அண்ட் கம்பெனி ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

கேள்வி: நரேந்திர மோடி பா.ஜ.க.வின் அகில இந்திய தலைவராகவோ பிரதமராகவோ வாய்ப்புண்டா?

பதில்: எதிர்காலத்தில் அந்தப் பொறுப்பை ஏற்பதற்கான தகுதி படைத்தவராகத்தான் நான் அவரைக் கருதுகிறேன். (துக்ளக் 2.01.2008 - பக்கம் 12) அதோடு விட்டாரா? இன்னும் இருக்கிறது.... எதனால் குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி சாத்தியமாயிற்று? பா.ஜ.க.வினர் காட்டிய முனைப்பு, அத்வானி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் பிரச்சாரம்; அருண்ஜெட்லி போன்றவர்களின் உழைப்பு; இவை எல்லாவற்றிற்கு மேலாக நரேந்திர மோடி மக்களிடையே பெற்றிருக்கிற நம்பகத்தன்மை, அவருடைய நிர்வாகத்தில் குஜராத் கண்டிருக்கும் முன்னேற்றம் இவைதான் பா.ஜ.க.வின் இந்த வெற்றிக்குக் காரணம்.

வேறு எந்த மாநில முதல்வருக்கும் இப்படிப்பட்ட பெருமை கிட்டியதில்லை. மோடி ஆறு வருடங்கள் ஆட்சி புரிந்து, அவரை வெறுத்து, தூஷித்து, கரித்துக் கொட்டி பிரச்சாரம் செய்கிற அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும், டெலிவிஷன்களும் மிகக் கடுமையாக முனைந்தும் ஒரு ஊழல் குற்றச்சாட்டைக்கூட அவர் மீது சுமத்த அவர்களால் முடியவில்லை. இன்றைய சீர்கெட்ட அரசியலில் ஒரு மாநில முதல்வர் இப்படிபட்ட நேர்மையாளராக திகழ முடியும் என்று நரேந்திரமோடி நிரூபித்திருக்கிறாரே, அதுதான் அவரது மிகப்பெரிய வெற்றி. (துக்ளக் 2.1.2008 தலையங்கம்)

ஆறு ஆண்டுகாலம் ஓகோ என்று ஆட்சி புரிந்துவிட்டாராம் மோடி. ஹிட்லர்கூட ஜெர்மனியில் வெற்றி பெற்றவன்தான் -_ ஆட்சி புரிந்தவன்தான். நாஜிகளைத் தவிர வேறு யாரையும் கொல்லுவதில்லை என்றான். மோடியும் அப்படித்தான் முஸ்லிம்தளைதவிர வேறு யாரையும் கொன்று குவிக்கவில்லை.

இடி அமீன்கூட கால் நூற்றாண்டு ஆட்சிக் கட்டிலில் அட்டகாசமாக அமர்ந்திருந்தான். எட்டு லட்சம் கம்யூனிஸ்டுகளை நரவேட்டையாடிய சுகார்தா கூட 30 ஆண்டுகாலம் ஆட்சி சிம்மாசனத்தை அலங்கரித்தான். பார்ப்பனர்களே மெச்சும் பாரத கதைப்படி துரியோதனன்கூட தாயாதிகளைக் காட்டுக்கு அனுப்பி 14 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறான்.

கோத்ரா சமபவத்திற்குப் பிறகு குஜராத்தில் நடந்தவை கண்டனத்துக்குரியவைதான் என்றாலும், அந்தச் சம்பவங்களுக்கு பா.ஜ.க. -வைக் குற்றம் கூற முடியாது.

(துக்ளக் - 6.5.2009) என்கிறார் சோ. ராமசாமி, அப்படியென்றால் யாரைக் குற்றம் கூறவேண்டும்?

2000 பேர் படுகொலை செய்யப்பட்டபோது அங்கு ஆட்சியில் இருந்த பா.ஜ.க.வைச் சேர்ந்த முதல் அமைச்சர் மோடி இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டியவர் அல்லவா?

முதல் அமைச்சர் மோடி இதற்கெல்லாம் பொறுப்பு இல்லை என்றால், உச்சநீதிமன்றம் முதல் அமைச்சர் மோடியை நீரோ மன்னன் என்று ஏன் கேவலப்படுத்தியது? பதில் உண்டா?

பா.ஜ.க. அரசு அதற்குப் பொறுப்பில்லை என்றால் வேறு யார் பொறுப்பு என்றாவது திருவாளர் சோ கூறவேண்டாமா? பார்ப்பனர்களின் நியாய தர்மம் எந்த யோக்கியதையில் இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? இந்துமத வெறி கொண்டு இஸ்லாமிய மக்களை மிருகம் போல் வேட்டையாடி, கர்ப்பிணிப் பெண்களின் குடலைக் கிழித்து மாலையாக போட்டுக் கொண்டு, விறகு கட்டைகளை எரிப்பதுபோல முஸ்லிம்களை கட்டாகக் கட்டி பேக்கிரி அடுப்பில் திணித்து துடிக்கத்துடிக்கக் கொலை செய்து வெறியாட்டம் போட்ட ஒரு கொடூரனுக்குப் பெயர்தான் நரேந்திர மோடி.

இந்தப் படுமோசமான பக்கத்தை கருப்புத் திரைபோட்டு அறவே மறைத்து, நரேந்திர மோடியின் ஆட்சியில் குஜராத் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஒளிர்கிறது - வளர்கிறது என்ற ஒரு படத்தைக் காட்டி - அவரை இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் உட்கார வைக்க சதித்திட்டத்தைத் தீட்டும் வேலையில் இறங்கியுள்ளது ஒரு கூட்டம்.

அதாவது உண்மையா? குஜராத் மாநில வளர்ச்சி பெற்றிருக்கிறதா? மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளவையா என்றால் அதுதான் இல்லை.

பல்லாயிரக்கணக்கான சிறுபான்மை மக்களை படுகொலை செய்ததை மறைக்கும் பித்தலாட்டக்காரர்கள் பொய்க்கு ஒப்பனை செய்து பொய்க்கால் குதிரையில் ஏற்றி நடனம் செய்விக்க மாட்டார்களா?

குஜராத் வளர்ச்சி என்பதும் கோயபல்சு பிரச்சாரம்தான் - எச்சரிக்கை!

http://www.unmaionline.com/new/archives/30-unmaionline/unmai2011/october-16-31/513-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D.html

கோவையில் இந்து முண்ணனியும், பிஜேயி யும் தற்போது அரசியல் செல்வாக்கு பெற என்னவெல்லாம் சூழ்ச்சிகளை செய்து வருகிறார்கள் என்பதை வினவின் இந்த பதிவு அம்பலப்படுத்துகிறது.

மேலப்பாளையம் நெல்பேட்டை முஸ்லிம்கள் - அ.மார்க்ஸ்

மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர். மேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ் ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர் யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்‌ஷா இழுப்பது, இரும்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது. அஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றாரை இலட்சம் முலிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.

இரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது. உண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள். ஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது.. எங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தேரியவில்லை. அத்தனை அப்பாவிகள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார். சாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது. மே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதாமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.சித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.மேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.முஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.நெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி. ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.சென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச்ச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந்தது.யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களியும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார் அப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?

தனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்ப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை. மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர். சகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.கணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.பிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.பேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா? திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.முதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.எப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரனைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையாம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

கட்டுரை ஆக்கம்:

சமூக ஆர்வலர் அ.மார்க்ஸ்

---------------------------------------------------------------------

‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ புத்தகம் திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை 'யாதுமாகி' பதிப்பகத்தில் கிடைக்கும்.

யாதுமாகி பதிப்பகம், 2, முதல் தெரு, வேலவர் காலனி, மகாராஜா நகர், திருநெல்வேலி -627 011

வெளியீடு : யாதுமாகி பதிப்பகம்,
37/17, ராமசாமி கோயில்
சன்னதி தெரு,
திருநெல்வேலி - 627 002

பேசி : 0462 - 4000285
பேசி : 94434 86285

Tuesday, August 27, 2013

நரேந்திர மோடியும் நித்தியானந்த சுவாமிகளும்!

ஜாடிக்கு ஏத்த மூடி!

http://articles.timesofindia.indiatimes.com/2010-03-05/vadodara/28146699_1_narendra-modi-sardar-sarovar-narmada-nigam-invitation

இந்துத்வாவாதிகளால் வருங்கால பிரதமராக வர்ணிக்கப்படும் மோடியின் பல அவதாரங்களில் இதுவும் ஒன்று. நித்யானந்தாவிடமிருந்து கன்யா கேலவாணி என்ற குஜராத் மாநிலத்தின் திட்டங்களில் ஒன்றுக்கு மிகப் பெரும் தொகையை நன்கொடையாக பெற்றுள்ளார். நித்தியானந்த சுவாமிகளின் உண்மை முகம் சன் டிவி மூலமாக அகில உலகுக்கும் தெரியும். இப்படி மதத்தின் பெயரை பயன்படுத்தி பல இள மங்கைகளை நாசப்படுத்திய இன்றும் படுத்திக் கொண்டிருக்கிற ஒரு காமுகனிடமிருந்து பணத்தை பெற்றுக் கொள்ளும் நரேந்திர மோடியின் தராதரமும் தற்போது நமக்கு தெரிய வருகிறது.

அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளில் தன்னைப் பற்றி சாதகமான செய்திகளை வெளியிட பல நிறுவனங்களின் உதவியை மோடி நாடியுள்ளதும் தெரிய வருகிறது. இதற்காக குஜராத் அரசின் பணமும் செலவழிக்கப்பட்டுள்ளது பத்திரிக்கைகள் வாயிலாக தெரிய வந்துள்ளது. எந்த வழியிலாவது பணத்தை சுருட்ட வேண்டும். எந்த வழியை பயன் படுத்தியாவது நாட்டின் பிரதமர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று ஆலாய் பறக்கிறார் மோடி. ஆனால் இந்துத்வா வாதிகளைத் தவிர வேறு யாரும் மோடியைப் பெரிதாக பொருட்படுத்துவதே இல்லை...

-------------------------------------------------------------

Narendra Modi Inaugrating the 'Sewa International' Design and Development Center.

Last piece of the puzzle. After Manoj Ladwa, Vikas Pota who are deeply associated with Sewa International, a RSS funding machine, we see Narendra Modi inaugrating a SEWA International center probably made from the charity money collected by Manoj, Vikas and their likes. Even Barry Gardiner has been seen at a Sewa International Lunch.

Modi's UK invite is of RSS, by RSS, for RSS.

http://www.truthofgujarat.com/uk-based-hindutva-lobbyists-manoj-ladwa-vikas-pota-driving-force-behind-modis-uk-invitation/

Monday, August 26, 2013

செங்கிஸ்கான் - பாகம் 2

உலக வரலாறு பெரும்பாலான நாடு பிடிக்கும் பேராசையுள்ள சர்வாதிகாரிகளை மிக மோசமான மற்றும் துயரமான முறையில் மரணத்திற்கு ஆளாக்கியிருக்கிறது. உலகைப் பிடிக்கப் புறப்பட்ட அலெக்ஸாண்டர் பாபிலோனில் மர்மமான முறையில் இறந்து போனார். அவரது விசுவான படைவீரர்களே அலெக்ஸாண்டரின் குடும்பத்தினர் அனைவரையும் கொன்றுவிட்டு, அவர் கைப்பற்றிய நாடுகளை பங்கு போட்டுக் கொண்டனர். ஜூலியஸ் சீசரின் நண்பர்களான அவரது செனட்டைச் சேர்ந்த பிரமுகர்கள் அவரை ரோமானிய செனட்டில் வைத்தே குத்திக் கொலை செய்தார்கள். தனது போரின் மோசமான தோல்விகள் மற்றும் அழிவுகள் காரணமாக கசந்த மனதுடன் நெப்போலியன் யாராலும் எளிதில் அனுகவியலாத ஒரு தீவில் தனிமையில் வாடி, மனம் புழுங்கிச் செத்துப் போனார்.

ஆனால் ஆச்சரியப்படத்தக்க வகையில் செங்கிஸ்கான் தனது 81-ஆம் வயதில், குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும், விசுவாசப் படைவீரர்களும் சூழ அவரது கூடாரத்தில் அமைதியான முறையில் மரணமடைந்தார். 1227-ஆம் வருடத்திய கோடைகாலத்தில், தன்னை மிகவும் அலைக்கழித்த, மஞ்சளாற்றின் மேற்புறம் அமைந்த டான்குட் (Tangut) நாட்டின் மீதான படையெடுப்பின் போதே அவரது மரணம் நிகழ்ந்தது. மங்கோலியர்களின் கூற்றுப்படி ‘செங்கிஸ்கான் சொர்க்கத்திற்கு ஏகினார்’.

செங்கிஸ்கான் இறந்து பல காலம் வரையில் அவரது மரணம் குறித்த காரணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த காரணத்தால் பல வதந்திகள் உருவாகி நாட்டில் உலவின. அவற்றுள் எவையும் வரலாற்று பூர்வமான அல்லது ஆதாரபூர்வமான தகவல் எதனையும் தரவில்லை.

மங்கோலியாவின் முதல் ஐரோப்பிய தூதரன Plano-Di-Carpini செங்கிஸ்கான் இடி தாக்கி மரணமடைந்ததாக எழுதி வைத்திருக்கிறார். செங்கிஸ்கானின் பேரனான குப்ளாய்கானின் காலத்தில் மங்கோலியாவில் தொடர் பயணம் செய்த வெனிஸ் நகரத்து வணிகரான மார்கோ-போலோ எழுதியதின்படி, செங்கிஸ்கானின் முழங்காலில் தைத்த ஒரு அம்பின் காரணமாக மரணமடைந்தார்.

முகம் தெரியாத எதிரிகள் அவருக்கு விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக இன்னும் சிலர் எழுதினர். அவர் இறப்பதற்கு முன் போரிட்டுக் கொண்டிருந்த டான்குட் நாட்டு அரசன் அவருக்கு செய்வினை செய்த்தாக இன்னொரு வதந்தி உலவியது. இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடும்படி உலவிய ஒரு வதந்தியின்படி, செங்கிஸ்கானால் கைப்பற்றப்பட்ட டான்குட் நாட்டு அரசி தனது பிறப்புறுப்பில் ஒரு கத்தியை ஒளித்து வைத்திருந்ததாகவும், கான் அவளுடன் உடலுறவு கொள்ள முயல்கையில் அவரது ஆணுறுப்பு சேதமடைந்து அதனால் அவர் இறந்ததாகவும் சொல்லப்பட்டது. எது எப்படியோ, உலகை தனது வலிமையால் அதிரச் செய்த செங்கிஸ்கான் இறந்து போனார். அவ்வளவுதான்.

செங்கிஸ்கானின் பூத உடல் அவரது படைவீரர்களால் மங்கோலியாவிற்கு ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டது. அவர் பிறந்து வளர்ந்த நாட்டில் எவரும் அறியாத ஓரிடத்தில் மிக ரகசியமாக, எவ்வித ஆடம்பரங்களோ, கட்டடங்களோ, கோவிலோ, பிரமிடோ, ஏன் ஒரு சிறிய அடையாளக் கல்லோ இல்லாமல் புதைக்கப்பட்டது.

மங்கோலிய நம்பிக்கையின்படி இறந்து போன ஒருவரின் உடல் மிக அமைதியான நிலையில் இருக்க வைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவ்வுடலில் வாழ்ந்த ஆன்மா அங்கு வாழப்போவதில்லை. இனிமேல் அந்த ஆன்மா, இறந்து போன மனிதரின் ஆத்ம பதாகையில் மட்டுமே வாழும்.

இப்படியாக பேரரசர் செங்கிஸ்கான் அவரது மரணத்திற்குப் பிறகு பரந்து, விரிந்த மங்கோலிய ஸ்டெப்பிப் புல்வெளிப் பரப்பில் புதையுண்டு காணாமல் போனார்.

இன்றுவரை அவர் புதைக்கப்பட்ட இடம் எவருக்கும் தெரியாது. எப்போதும் போல அது குறித்தான வதந்திகளே பஞ்சமில்லாமல் உலவிக் கொண்டிருக்கின்றன.

மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிற ஒரு கதையின்படி, செங்கிஸ்கானின் படைவீரர்கள் அவரது உடலை மங்கோலியாவிற்கு எடுத்து வந்த 40 நாட்களில், அந்த உடலுடன் பயணம் செய்து வந்த அத்தனை மனிதர்கள் மற்றும் மிருகங்களைக் கொன்று விட்டனர். அத்துடன் அவரது உடலைப் புதைத்த இடத்திற்கு மேலாக 800 குதிரைவீரர்கள் முன்னும், பின்னும் நடந்து அந்த இடத்தை சமன் செய்தனர். அதன்பிறகு மேற்கண்ட 800 வீரர்களும் வேறு சில படைவீரர்களால் கொல்லப்பட்டனர். அவ்வாறு கொன்றவர்களும் வேறொரு படையணியால் கொலை செய்யப்பட்டனர். இவ்வாறாக புதைத்த இடம் குறித்த ரகசியம் காக்கப்பட்டது என்கிறது அக்கதை.

அவ்வுடல் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து பல் நூறு சதுரமைல் பரப்பளவுள்ள இடம் மங்கோலிய ராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டது. செங்கிஸ்கானின் குடும்பத்தினர் தவிர வேறெவரும் அங்கு நுழையத்தடை விதித்ததுடன் அவ்வாறு நுழைபவர்களைக் கொல்வதற்காக விஷேஷ பயிற்சி பெற்ற வில் வீரர்களும் நிறுத்தி வைக்கப்பட்டனர்.

ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகள் வரை அந்தப்பகுதி ஒரு தடை செய்யப்பட்ட இடமாக (Ikh Khorig – The Great Taboo), வெளியார் யாரும் நுழைய முடியாத இடமாக வைக்கப்பட்டிருந்தது. அவரைக் குறித்தான எல்லா ரகசியங்களும் அவரது நாட்டினரால் மறைத்து வைக்கப்பட்டிருந்தது.

மங்கோலியப் பேரரசு சிதைவடைந்து, மங்கோலியாவின் சில பகுதியள் வெளி நாட்டினரால் ஆக்கிரமிக்கப்பட்ட நேரத்திலும் மங்கோலியப்படை தங்களது முன்னோர்களால் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்த பகுதிகளுக்குள் அவர்களை அனுமதிக்காமல் போராடி விரட்டியது. செங்கிஸ்கான் புதையுண்டிருக்கலாம் என்ற பகுதியின் அருகில் ஒரு பவுத்த கோவிலோ அல்லது நினைவிடமோ அல்லது வேறெதுவும் கட்டிடங்களோ கட்ட பின்னாட்களிலும் அனுமதி மறுக்கப்பட்டே வந்தது.

*

செங்கிஸ்கானின் ஆன்மா அவரது மக்களுக்கு உத்வேகத்தையும், விடுதலையையும் அளிக்குக் என்று நம்பபட்டது. ஆனால் 20-ஆம் நூற்றாண்டு மங்கோலியர்கள் அதனை மதிக்காமல் இருக்கப் பழகிப் போனார்கள். மங்கோலியா சோவியத் ரஷ்யாவிடம் வீழ்ந்தது.

மங்கோலியாவை ஆண்ட ரஷ்யர்களும் செங்கிஸ்கான் புதைக்கப்பட்டதாக அறியப்படும் இடத்தை ரகசியமாக பாதுகாத்து வந்தனர். எனினும் அதனை மங்கோலியர்களைப் போல The Great Taboo என்று அழைக்காமல் ‘தடைசெய்யப்பட்ட இடமாக’ அறிவித்தனர். அந்த இடம் சோவியத் தலைமையின் நேரடி ஆளுமையின் கீழ் வைக்கப்பட்டது. அந்தப் பகுதியின் நுழைவாயிலில் ராணுவ டாங்கிகள் நிறுத்தி வைக்கப்ட்டன. மேலும் ஒரு பெரும் MiG விமான தளமும் கட்டப்பட்டு அங்கு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. ரகசிய அணு ஆயுதங்களும் அந்தப் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தெரிகிறது.

மங்கோலியர்களின் மீது எரிச்சலில் இருந்த ஸ்டாலின், செங்கிஸ்கானின் கல்லறை இருக்கும் பகுதிகளை பீரங்கிப் பயிற்சிக் களமாக அறிவித்து அதன்படியே நடத்தப்பட்டது.

*

மங்கோலியர்கள் உலகை ஆக்கிரமித்த நேரத்தில் அவர்கள் புதிய தொழில் நுட்பங்களையோ அல்லது புதிய மதங்களையோ அல்லது புதிய விவசாய முறைகளையோ அல்லது இலக்கியங்களையோ உலகிற்குக் கண்டுபிடித்து அறிவிக்கவில்லை. மாறாக தாங்கள் ஆக்கிரமத்த நாடுகளில் இருந்த புதிய விஷயங்களை உலகமெங்கும் பரப்புவதற்கு காரணமாக அமைந்தார்கள். மிக மிகச் சில புத்தங்களும் மற்றும் நாடகங்களும் மட்டுமே மங்கோலிய மொழியில் எழுதப்பட்டிருக்கின்றன.

மங்கோலிய பழங்குடித் தொழிலாளர்கள் நெசவு செய்யவோ, புதிய ஆயுதங்கள் தயாரிக்கவோ, சட்டி பானைகள் புனையவோ அல்லது குறைந்த பட்சம் நல்ல ரொட்டி தயாரிக்கவோ அறியாதவர்களாக இருந்தார்கள். சீனர்களைப் போல வெள்ளைக் களிமண்ணை உபயோகித்து கலைப் பொருட்கள் தயாரிக்கவும், ஓவியங்கள் வரையவும் மங்கோலியர்கள் அறிந்திருக்கவில்லை. குறைந்த பட்சம் ஒரு நிரந்தரமான கட்டிடங்கள் எதனையும் அவர்கள் கட்டியதில்லை. இருப்பினும் மங்கோலிய ராணுவம் பல முன்னேறிய கலாச்சாரங்கள் கொண்ட நாடுகளை மிக எளிதாக வெற்றி கொண்டார்கள். பின் அங்கிருந்த தொழில் நுட்பங்களை உலகில் பரப்பினார்கள்.

செங்கிஸ்கானால் கட்டப்பட்ட ஒரே நிரந்தர கட்டமைப்பு பாலங்கள் மட்டுமே. படையெடுத்துச் செல்கையில் வழியில் இருந்த் கோட்டைகள், கொத்தளங்கள், பெரும் சுவர்கள் செங்கிஸ்கானால் தகர்த்து எறியப்பட்டாலும், அவன் தாண்டிச் சென்ற ஒவ்வொரு நீர் நிலைகள், ஆறுகள் மீது ஏராளமான பாலங்களைக் கட்டிய ஒரே ஆக்கிரமிப்பாளர் செங்கிஸ்கானாகத்தான் இருக்க முடியும். வழியில் குறுக்கிட்ட ஆறுகள், கால்வாய்களை மிக விரைவாகத் தாண்டி தன் படைகள் செல்வதற்கும், ஆயுத தளபாடங்களைக் கொண்டு செல்வதற்குமான ஒரே காரணத்தால் நூற்றுக் கணக்கான பாலங்கள் செங்கிஸ்கானால் கட்டப்பட்டன.

தங்கள் காலடி பட்ட இடங்களிலிருந்த, மூடிக் கிடந்த சந்தைகளைத் திறந்துவிட்டு புதிய, சுதந்திரமான சந்தைகளை உருவாக்கினார்கள். அதன்மூலம் புதிய சிந்தனைகள் உலகில் பரவவும் அவர்கள் வகை செய்தார்கள் என்றால் மிகையில்லை.

மங்கோலியர்கள் ஜெர்மனிய சுரங்கத் தொழிலாளர்களை சீனத்திற்கும், சீன மருத்துவர்களை பாரசீகத்திற்கும் கொண்டு சென்றார்கள். இதுவே உலகின் பல பாகத்திற்கும் இதுவரை இல்லாத தொழில் நுட்ப அறிவு பரவ காரணமாகியது. முதன் முதலில் தரைவிரிப்பு – Carpet – உபயோகிப்பதனை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மங்கோலியர்களே. எலுமிச்சை, காரட் போன்றவற்றை சீனத்திற்கும், அங்கிருந்து நூடில்ஸ், சீட்டாட்டம், டீ போன்றவற்றை மேற்குலகிற்கும் அறிமுகப்படுத்தினார்கள்.

தாமிர வேலை செய்பவர்களை பாரசீகத்திலிருந்து மங்கோலியாவின் வறண்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அவர்கள் மூலம் செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கிக் கொண்டார்கள். ஆங்கிலேய பிரபுக்களை ராணுவத்தில் வேலைக்கமர்த்தி அவர்களை மொழிபெயர்ப்பாளர்களாக்கினார்கள். சீனக் கைரேகை முறைகளை பாரசீகத்திற்கு அறிமுகம் செய்தனர்.

கிறிஸ்தவ தேவாலயங்கள் சீனத்தில் அமைக்க பண உதவி செய்ததுடன், பாரசீகத்தில் பவுத்த மத மடாலயங்களும், இஸ்லாமிய குரானிக் பள்ளிகள் அமைக்கவும் அவர்கள் உதவினர். கலாச்சாரங்களை அழிக்காமல் அதனைப் பேணும் முயற்சி மங்கோலியர்களால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது அவர்கள் நீண்ட காலம் தாங்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் வெற்றிகரமாக இருக்க உதவியது. செங்க்கிஸ்கானுக்குப் பின் வந்த அவரது வாரிசுகளும் அதனையே தங்களின் கொள்கையாகக் கொண்டனர்.

மறைமுகமான வகையில் பல புதிய தொழில் நுட்பங்கள் உருவாகவும் அவர்களின் பங்கு இருந்தது. உதாரணமாக சீனப் பொறியாளர்களுடனும், பாரசீக மற்றும் ஐரோப்பிய தொழிலாளர்களை ஒன்றிணைத்து துப்பாக்கிகள் தயாரிப்பதற்கு முன்னோடிகளாக இருந்தார்கள். அவர்கள் இல்லாவிடில் உலகில் துப்பாக்கி தயாரிப்பதற்கு மிக நீண்ட காலமாகியிருக்கலாம்.

செங்கிஸ்கானின் பேரனான குப்ளாய்கானின் ஆட்சிக்காலத்தில்தான் முதன் முதலாக காகிதத்தில் தயாரிக்கப்பட்ட பணம் அறிமுகப்படுத்தப்பட்டது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட பணத்தின் துணை கொண்டு பேரரசின் அத்தனை பகுதிகளிலும் தொடக்கப்பள்ளிகள் கட்டப்பட்டு அனைவருக்கும் கல்வி என்ற முறை செயல்பாட்டிற்கு வந்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கான துல்லியமான நாட்காட்டிகள் தயாரிக்கப்பட்டன. துல்லியமான உலக வரைபடங்கள் வரையப்பட்டது மங்கோலியர்களின் காலத்தில்தான்.

*

ஐரோப்பாவை ஆண்டுகொண்டிருந்த பிரபுக்களை விரட்டியடித்த மங்கோலியர்கள் அங்கு நிலவும் வறுமையைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். தங்களின் கீழிருக்கும் சீன, இஸ்லாமிய நாடுகளை விடவும் நிலவிய வறுமையைக் கண்டு, தாங்கள் பிடித்த ஐரோப்பி நாடுகளின்பால் ஆர்வமிழந்து அங்கிருந்து கிளம்பிசி சென்றார்கள். அந்த நாடுகளை தங்களின் பேரரசின் கீழ் இணைக்க முயலவில்லை என்பது ஆச்சரியமான செய்தி. இருப்பினும் அவர்கள் காலத்தில் வந்த ஐரோப்பிய வெனிஸ் நகர வணிகர்களின் உதவியுடன் போப்புடனும், பிற ஐரோப்பிய நாடுகளுடனும் தங்கள் பிரதிநிதிகளை அனுப்பி வைத்து நல்லுறவு பேண முயன்றார்கள்.

இவ்வாறு பெறப்பட்ட புதிய தொழில் நுட்பங்களாலும், வியாபாரத்தில் பெற்ற செல்வத்தாலும் ஐரோப்பிய மறுமலர்ச்சி வேகம் பிடித்தது. அச்சிடும் கலையையும், வெடி மருந்து தயாரிப்பதையும், திசைகாட்டி மற்றும் அபாகஸ் போன்ற கணித நுட்பங்களையும் மங்கோலியர்களின் உறவால் பெற்ற ஐரோப்பா மிக வேகமாக முன்னேறியது. மங்கோலியத் தாக்கத்தின் விளைவாக புதிய விவசாய முறைகளும், உடைகள், போரிடும் கலை, வணிகம், கலை, இலக்கியம் என பல திசைகளிலும் ஐரோப்பா முன்னேறியது.

--நரேந்திரன்.

Sunday, August 25, 2013

செங்கிஸ்கான் - பாகம் 1

குறிப்பு :மிகக் கொடுங்கோலர்களாக அறியப்படுகிற செங்கிஸ்கானும், மங்கோலியப்படைகளும் உலகில் மாபெரும் மாற்றங்கள் வரக் காரண கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். மங்கோலியர்கள் உண்டாக்கிக் கொடுத்த சூழ் நிலைகளே ஐரோப்பிய மறுமலர்ச்சிக்கு பெரும் உந்துதலாக இருந்தது என்பதை பெரும்பாலோர் அறிந்திருப்பதில்லை. இது மங்கோலியர்களின் பல்வேறு ஆளுமைகளைக் குறித்து ஒரு சிறிய அறிமுகம் செய்யும் எண்ணத்துடன் எழுதப்பட்டது. கூடவே சில பல மங்கோலியர்கள் குறித்தான தகவல்களும்.*1930-ஆம் வருடம் ஸ்டாலினின் ரஷ்யப்படைகள் மங்கோலியாவைக் கைப்பற்றின. தங்களை வெற்றி கொண்டு ஏறக்குறைய நான்கு நூற்றாண்டுகளுக்கும் மேலாக ரஷ்யர்களை அடக்கி ஆண்ட மங்கோலியர்களின் மீது ஆழ்ந்த கோபம் கொண்டிருந்த ஜோசப் ஸ்டாலின் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டர். ஏறக்குறைய முப்பதாயிரம் மங்கோலியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் மதம் மற்றும் கலாச்சாரத்தை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் ரஷ்யப் படைகள் பவுத்த விஹாரங்களை ஒன்றன் பின் ஒன்றாக உடைத்தும், தீ வைத்தும் அழித்தனர். பல புத்த பிக்குகள் கொலை செய்யப்பட்டு, பெண் பிக்குணிகள் பலர் கற்பழிக்கப்பட்டனர். புனித பவுத்தச் சின்னங்கள் பலவும் தகர்த்தெறியப்பட்டு, ஏறக்குறைய ஏழு நூற்றாண்டுகள் வரை காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த பல புத்தமத புனித நூல்களும், வரலாற்று ஆவணங்களும் கொளுத்தப்பட்டன.இத்தனை களோபரங்களுக்கு மத்தியின் 1937-ஆம் வருடம், மத்திய மங்கோலியாவின் நிலா ஆற்றை ஒட்டியிருக்கும் ஷாங்கி மலைத்தொடர்களில் அமைந்ததொரு பவுத்த மடாலத்தில் லாமாக்களால் காப்பாற்றி வைக்கப்பட்டிருந்த மங்கோலிய பேரரசன் செங்கிஸ்கானின் ஆத்ம பதாகையை (Sulde – Banner) முகமறியா விசுவாசி ஒருவர் அங்கிருந்து ரகசியமாக, மங்கோலிய தலை நகரமான உலான்படாருக்கு (Ulaanbataar) எடுத்துச் சென்றார், ஆனால் அங்கிருந்து அது மீண்டும் காணாமல் போனதுடன் இன்றுவரை கண்டுபிடிக்கப் படாமல் இருக்கிறது.இந்த பதாகை மங்கோலியர்களுக்கு மிக முக்கியமான ஒரு விஷயமாதலால் அது குறித்து இங்கு சிறிது பார்க்கலாம்.பல நூற்றாண்டு காலம் உள் ஆசியாவில் அமைந்திருக்கும் மங்கோலிய ஸ்டெப்பிப் புல்வெளியில் ஆட்டு மந்தைகளை மேய்த்துக் கொண்டும், ஒருவருடன் ஒருவர் போரிட்டும் வாழ்ந்த பழங்குடி, நாடோடி இனத்தவரான மங்கோலியர்களின் முக முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று இந்த ஆத்மபதாகை.ஒவ்வொரு மங்கோலியப் படைவீரனுக்கும் அவனது ஆத்ம பதாகை மிக முக்கியமானது, தனக்குப் பிரியமான குதிரையின் பிடறி மயிறை கொத்தாக அறுத்துக் கட்டி, அதனை அவனது ஈட்டியின் கூர் முனைக்குக் கீழே கட்டித் தொங்க விடப்படும் அந்தப் பதாகைய அவனது அது முக்கியமான ஒன்றாகக் கருதுவான். எந்தவொரு மங்கோலியப் படைவீரனும் தனது கூடாரத்தை அமைக்கும் ஒவ்வொரு முறையும், அக்கூடாரத்திற்கு வெளியே அவனது ஆத்ம பதாகை தாங்கிய ஈட்டியை பெருமையோடு நிறுத்தி வைத்திருப்பான். அது அவனது அடையாளத்திற்கு மட்டுமன்றி, அவனுக்குப் பாதுகாவலாக இருக்கும் என்ற அசைக்க முடியாத பழங்குடி நம்பிக்கை அவனுடையது. அத்துடன் மங்கோலிய ஸ்டெப்பிப் புல்வெளியின் திறந்து கிடக்கும் நீல வானின் அடியில், காற்றில் பறக்கும் அந்தப் பதாகை மற்ற, சாதாரண மங்கோலியர்களால் பணிவுடன் வணங்கப்படும்.மேலும், அப்பதாகை ஸ்டெப்பியின் காற்றில் அளைந்து, நீர், நிலம், காற்று, ஆகாயம் மற்றும் சூரியனின் வலிமை ஆகியவற்றை உள்ளிளிழுத்து, பின்னர் போர்புரிகையில் அச்சக்தியை அவனுக்குக் கடத்துவதுடன், நல்ல மேய்ச்சல் நிலங்களையும், அவனது எதிர்காலக் கனவுகளை நனவாக்கவும் ஆத்ம பதாகையே காரணமாக இருக்கும் என்பது நம்பிக்கை. அதனைத் தாங்கிச் செல்லும் போர்வீரன் இறந்த பிறகு, அவனுடைய ஆவி அந்தப் பதாகையில் சென்று காலம் காலமாக தங்கியிருக்கும் என்பதுடன், அவனது வருங்கால சந்ததினருக்கு ஒரு ஊக்கமளிக்கும் சக்தியாக இருக்கும் என்பதுவும் மிக, மிக முக்கியமான காரணம்.மேற்படி காரணங்களில் மிக நம்பிக்கை கொண்டவனான செங்கிஸ்கானும் தன்னுடன் இரு பதாககைகளை வைத்திருந்தான். அவனுடைய வெள்ளைக் குதிரையின் பிடறி மயிரிலிருந்து தயாரிக்கப்பட்ட பதாகை சமாதான காலத்திலும், கறுப்புக் குதிரையிலிருந்து தயாரான பதாகையை போர்க்காலத்திலும் உபயோகித்துக் கொண்டிருந்தான் செங்கிஸ்கான். ஆனால் அவனுடைய வெள்ளைப் பதாகை செங்கிஸ்கான் மறைந்த சில காலத்திலேயே வரலாற்றிலிருந்தும் மறைந்துவிட்டது. ஆனால் கறுப்புப் பதாகை அவனது ஆத்மாவின் அடையாளமாக நீண்ட காலம் தப்பிப் பிழைத்திருந்தது.பதினாறாம் நூற்றாண்டில், செங்கிஸ்கானின் வழித் தோன்றலாகிய, ஜானாபஜாரை (Zaanabazaar) சேர்ந்த புத்த பிக்கு ஒருவரால் ஒரு புதிய ஆலயம் கட்டுவிக்கப்பட்டு அதில் செங்கிஸ்கானின் ஆத்மபதாகை வைத்துக் காப்பாற்றப்பட்டு வந்தது. அத்தனை மங்கோலியர்களும் அந்த பதாகையை மிக மரியாதையுடனும், பணிவுடனும் வணங்கி வந்தனர். அதனைக் காண நூற்றுக் கணக்கான மைல்கள் புனிதப் பயணம் செய்து வருவதும் நடந்து வந்தது.புயலிலும், பனி மழையிலும், படையெடுப்புகளையும், உள் நாட்டுக் கலவரங்களையும் பொருட்படுத்தாமல், திபெத்திய மஞ்சள் தொப்பிப் பிரிவைச் சேர்ந்த ஆயிரம் புத்த பிக்குகளால் செங்கிஸ்கானின் ஆத்மா அடங்கிய அப்பதாகை தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வந்தது. ஆனான் அவர்களால் ஸ்டாலினின் சர்வாதிகார, கம்யூனிசப் படைகளுக்கு முன்னால் ஒன்றும் செய்ய இயலவில்லை. அந்த பிக்குகள் கொல்லப்பட்டார்கள். செங்கிஸ்கானின் ஆத்மா அவனது ஸ்டெப்பிப் புல்வெளியை விட்டு, வரலாற்றை விட்டு நிரந்தரமாகவே மறைந்து போனது.*உலகம் அஞ்சிய செங்கிஸ்கான் அதிர்ஷ்டவசத்தாலோ அல்லது விதியினாலோ உருவாக்கப்பட்டவனல்ல. உண்மையில் செங்கிஸ்கான் தன்னை செங்கிஸ்கான உருவாக்கிக் கொண்டான் என்பதே வரலாறு கூறும் உண்மை. ஆரம்ப கால செங்கிஸ்கானிடம் தனக்கு ஒரு ஆத்ம பதாகையைத் தயாரிக்கும் அளவிற்குக் கூட அவனிடம் குதிரைகள் இருந்ததில்லை. சிறுவன் செங்கிஸ்கான் வன்முறை நிறைந்த தனது பழங்குடிகள் நடுவே வளர்ந்தவன். கொலையும், கொள்ளையும், ஆட்கடத்தலும், அடிமைப்படுத்துதலும் நிரம்பிய உலகமாக செங்கிஸ்கானின் இளமைப்பருவ உலகம் இருந்தது.பழங்குடி சமுதாயத்தால் விலக்கம் செய்யப்பட்ட தந்தைக்குப் பிறந்த செங்கிஸ்கான் தனது பால்ய வயதில் சில் நூறு மங்கோலியர்களைத் தவிர வேறு யாரையும் கண்டு வளர்ந்திருக்கவியலாது. மேலும் முறையான கல்வியும் அவனுக்கு அளிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட சூழ் நிலையில் செங்கிஸ்கான் மனித வாழ்வின் குரூரங்களையும், பேராசைகளையும், கனவுகளையும் நேரடியாக கண்டு வளர்கிறான். அந்தச் சின்னஞ்சிறு வயதிலேயே அவனது ஒன்றுவிட்ட சகோதரன் ஒருவனைக் கொல்லும் நிலையும் அவனுக்கு ஏற்படுகிறது. அவனைக் கொல்கிறான். எதிரி பழங்குடிகளால் கவர்ந்து செல்லப்பட்டு அடிமைப்படுத்தப்படுகிறான். பின்னர் அங்கிருந்து தப்பிச் செல்கிறான்.இவ்வாறான சூழ் நிலையில் வளர்ந்த செங்கிஸ்கானுக்கு பின்னாட்களில் தன்னை எதிர் நோக்கிய வெவ்வேறு ஆபத்துகளை எதிர்கொள்ளவும், அதனை முறியடிக்கவும் தேவையான மனவுறுதியையும், திறனையும் அளித்திருக்க வேண்டும். ஆனால், இளமையில் அச்சமும், தயக்கமும் உடையவனான செங்கிஸ்கான், நாய்களின் மீது அச்சமுடையவனாக, எளிதில் அழும் குணமுடையவனாக இருக்கையில், அவனுடைய இளைய சகோதரன் அவனையும் விட வலிமையானவனாகவும், வில் வித்தியயில் அசகாய சூரனாகவும் இருந்தான்.பட்டினியிலும், அவமானத்திலும், அடிமை வாழ்க்கையிலும் அல்லல் பட்ட செங்கிஸ்கான் இளமையில் எடுத்த இரண்டு முடிவுகள் அவனுக்கு ஒரு திருப்புமுனையை அளித்தன எனலாம். அவனை விடவும் வயது கூடிய ஒருவனுடன் இணைபிரியா நட்பு பாராட்டுவதாக சபதம்பூண்டு, அந்த நண்பனின் வாயிலாக கற்ற, பெற்ற பாடங்கள் முக்கியமானவை. ஆனால் வயது வந்தபிறகு அதே நண்பன் செங்கிஸ்கானுக்கு பரம எதிரியாக மாறினான். இன்னொன்று, தனக்கு மிகவும் பிரித்த ஒரு பெண்ணை மணந்து அவளை எதிர்கால மங்கோலிய மன்னர்களின் அன்னையாக்கியது போன்றவை செங்கிஸ்கானின் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்துகின்றன.வருடங்கள் செல்லச் செல்ல, செங்கிஸ்கான் ஸ்டெப்பியிலுள்ள அவனது அத்தனை எதிரிகளையும் ஒருவர் பின் ஒருவராக தீர்த்துக் கட்டுகிறான். ஐம்பது வயது நிறைவதற்குள், காலங்காலமாக உலகின் பழங்குடி மக்களை துன்புறுத்திய, நாகிரிகம் பொருந்திய நாடுகளை நிர்மூலமாக்கி அவர்களிடையே அச்சத்தை தோற்றுவிக்கும் ஒருவனாக மாறுவது எவரும் எதிர்பாராத ஒன்று. சீனத்தின் மஞ்சளாற்றுப் பகுதியிலிருந்து மத்திய ஆசியாவின் அனைத்துப் பகுதிகளுடன், துருக்கி, பாரசீகம் மற்றும் ஆப்கானிஸ்தானின் மலைகளிலிருந்து சிந்து சமவெளியின் இண்டஸ் நதிவரை செங்கிஸ்கானின் கீழ் வந்தது.மங்கோலியப்படை வெற்றிகளின் மேல் வெற்றிகள் குவித்து, நாடுகளுக்கிடையேயான போர் என்ற எல்லையைத் தாண்டி, கண்டங்களுக்கிடையேயான போராக மாறியது. மேலும் மங்கோலியப்படை தங்கள் நாட்டை விட்டு ஆயிரக்கணக்கான மைல்கள் தொலைவில், பல முனைகளில் போர் புரிந்து கொண்டிருந்தது. கனமான இரும்புக் கவசங்களை உடலெங்கும் தரித்துப் போர் புரிந்த ஐரோப்பிய பிரபுக்கள், செங்கிள்கானின் ஒழுங்கும், கட்டுப்பாடும் கொண்ட குதிரைப்படையணிகள் முன் சிதறியோடினர்.புதிய போர்முறைத் தந்திரங்களுடன், ஒத்திசைந்து இயங்கும் குதிரைப் படையுடன் செங்கிஸ்கான் எதிரிகளின் பாதுகாப்பு அரண்களை உடைத்து, மிகுந்த வேகத்துடன் அவர்கள் அறியாமல் உட்புகுந்து தாக்கி நிர்மூலமாக்கும் தந்திரத்தை உலகம் அதுவரை கண்டதில்லை. செங்கிஸ் அவரது மக்களுக்கு புதிய போர்முறைகளைக் கற்றுத் தந்தது மட்டுமன்றி, அப்போர் நீண்டகாலம் நிகழ்ந்தால் அதனை எவ்வாறு தாக்குப் பிடித்து பின் போரிட்டு வெற்றி கொள்வது போன்றவற்றையும் கற்றுக் கொடுத்தான். அதுவே மங்கோலியர்கள் உலகின் பல பகுதிகளிலும் நீண்டகாலம் வெற்றியுடன் தாக்குப்பிடித்திருக்க ஒரு காரணியாயிற்று.*ரோமானியர்கள் இரு நூறு வருடங்களுக்கும் மேலாக போரிட்டுப் பெற்ற பகுதிகளை விடவும் அதிகமான பகுதிகளை வெறும் இருபத்தைந்து வருடங்களில் மங்கோலியர்கள் கைப்பற்றினர். செங்கிஸ்கானும், அவரது மகனும் பேரன்களும் 13-ஆம் நூற்றாண்டில் வென்ற நிலங்களின் அளவும், அவ்வாறு வென்றெடுத்த நாடுகளில் வசித்த மொத்த மக்கள்தொகை அளவும் வேறெந்த மனிதனாலும் உலக வரலாற்றில் அதுவரை எந்த மனிதனாலும் வெற்றி கொள்ளப்படவில்லை. மங்கோலியப் படைவீர்னின் குதிரைக் குளம்படிகள் பசிபிக் மஹா சமுத்திரத்திலிருந்து மத்தியதரைக் கடல்வரை இருக்கும் ஒவ்வொரு ஆற்றிலும், குளங்களிலும், ஏரிகளிலும் ஏறி இறங்கின.மங்கோலிய அரசு அதன் உச்சத்தில் ஏறக்குறைய 11 மில்லியனிலிருந்து 12 மில்லியன் சதுர மைல்கள் கொண்ட தொடர்ச்சியான நிலப்பரப்பை தன்னகத்தே கொண்டிருந்தது. ஏறக்குறைய ஆப்பிரிக்கக் கண்டத்திற்கு இணையானதாகவும், வட அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றுக் கரீபியன் தீவுகளை உள்ளடக்கிய மொத்த நிலப்பரப்பை விடவும் அதிகமான நிலப்பரப்பு உடையதாக இருந்தது ஒருங்கிணைந்த மங்கோலியப் பேரரசு.குளிர் பிரதேசமாக சைபீரிய மலைத்தொடர்களிலிருந்து, கடும் வெப்பம் நிலவும் இந்தியச் சமவெளி வரையும், வியட்நாமிய அரிசி வயல்களிலிருந்து, ஹங்கேரியின் கோதுமை வயல்கள்வரையும், கொரியாவிலிருந்து பால்கன் வரையும் பரந்து விரிந்திருந்தது. இன்று உலகின் மிகப் பெரும்பான்மையான மக்கள் மங்கோலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலேயே வசிக்கிறார்கள் என்பது மிகவும் ஆச்ச்சரியமான ஒரு விஷயம். இன்றைய நவீன உலக வரைபடத்தில் காணும் ஏறக்குறைய 30 நாடுகளும், அதில் வசிக்கும் 3 பில்லியன் மக்களும் மங்கோலியர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களே.செங்கிஸ்கான் உலகை வெல்லப் புறப்பட்டுச் சென்ற நேரத்தில் மொத்த மங்கோலிய மக்கள் தொகை வெறும் 1 மில்லியன் மட்டுமே. அதாவது இந்திய ரயில்வேயில் பணி புரியும் மொத்த தொழிலாளர்களை விடவும் குறைந்த அளவு மக்கள்தொகையே மங்கோலியாவில் இருந்தது. அந்த 1 மில்லியன் மக்கள் தொகையிலிருந்து செங்கிஸ்கான் தனக்கு வேண்டிய 1 இலட்சம் படைவீரர்களைத் தேர்ந்த்தெடுத்தான். மொத்த மங்கோலியப்ப்டையயும் ஒரு கிரிக்கெட் ஸ்டேடியத்தில் அடக்கிவிட முடியும்.செங்கிஸ்கானின் குதிரைப்படை சென்ற வழியில் இருந்த நாடுகளின் எல்லைகள் திருத்தி அமைக்கப்பட்டன. அவனின் கட்டமைப்பு கற்களால் ஆகாமல் நாடுகளால் ஆனது. சிறு சிறு நாடுகளாக சிதறிக்கிடந்த நாடுகளை ஒன்றுபடுத்தி பெரிய நாடுகளாக மாற்றியமைத்த பெருமை செங்கிஸ்கானையே சாரும். கிழக்கு ஐரோப்பாவில் ஒரு டஜனுக்கும் மேலாக சிதறிக்கிடந்த ஸ்லாவாக் நாடுகளை ஒன்றிணைத்து மாபெரும் ரஷ்யாவாக உருவாக்கிய பெருமையும் செங்கிஸ்கானுடையதே.கிழக்கு ஆசியவில் சாங்க் அரச பரம்பரையினரால் நிர்வாகிக்க இயலாமல் பலவீனமாகசி சிதறிக்கிடந்த பல பகுதிகளை தனது போர்த் தந்திரங்கள் மூலம் வென்றெடுத்து சீனா என்ற மாபெரும் நாட்டை உருவாக்கித் தந்தவர்கள் செங்கிஸ்கானும் அவனுக்குப் பின் வந்த அவனது வாரிசுகளும்தான். மஞ்சூரியாவின் தெற்கிலிருந்த ஜூர்சட்டையும், மேற்கே திபெத்தையும், கோபி பாலைவனத்தைத் தொட்டடுத்து இருந்த டாங்குட் ராஜ்ஜியத்தையும், கிழக்கு துர்க்கிஸ்தானிலிருந்த உய்குர் நிலங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டதே இன்றைய சீனம்.எல்லைகளை விரிவுபடுத்திய மங்கோலியர்களினால் உருப்பெற்ற கொரிய, இந்திய நாடுகளின் எல்லைகள் (பிரிவினைகளுக்கு முந்தைய) இன்றுவரை மங்கோலியர்கள் வகுத்த அளவிலேயே இருப்பது இன்னுமொரு ஆச்சரியமே.*செங்கிஸ்கானின் பேரரசு உலக நாடுகளை இணைத்தது மட்டுமல்லாமல் பல்வேறு கலாச்சாரங்கள் ஒன்றிணையவும், அனைத்து நாடுகளுக்கும் ஏற்புடைய ஒரு புதிய பொது உலக சட்டத்தை இயற்றவும் வழிவகை செய்தது. செங்கிஸ்கான் பிறந்த 1162-ஆம் வருடம் பல சிறு தீவுகளாக சிதறிக்கிடந்த உலகம், தனக்கு அண்டையிலுள்ள நாட்டினைத் தவிர உலகின் பிற பகுதிகளில் இருந்த நாடுகளைக் குறித்தோ அல்லது அதன் கலாச்சார, மொழி, பழக்க வழக்கங்கள் குறித்தோ எந்தவிதமான அறிதலும் இல்லாமலிருந்தது.சீனாவிலிருந்த எவரும் ஐரோப்பாவைக் கேள்விப்பட்டதில்லை; ஐரோப்பியர் எவரும் சீனம் குறித்து அறிந்திருக்கவில்லை. அன்றைய வரலாற்று ஆதாரங்களின்படி எவரும் மேற்கண்ட நாடுகளுக்கோ அல்லது அங்கிருந்து இங்கோ பயணம் எதுவும் மேற்கொள்பவர்களாக இல்லை. ஆனால் செங்கிஸ்கான மரணமடைந்த 1227-ஆம் வருடம் அவனது ஆட்சியின் கீழிருந்த ஒவ்வொரும் நாடும் பிற நாடுகளுக்கு தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி வைத்ததுடன், வியாபாரத் தொடர்பும் கொண்டவைகளாக மாறின.நிர்வாகத்தில் புதிய மாற்றங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் மங்கோலியர்களே.பிறப்பினால் தகுதியற்ற ஒருவன் உயர்பதவியை அடையும் பழைய முறையை மாற்றி, உழைப்பும், திறமையும், விசுவாசமும் உடயவர்களுக்கு உயர்பதவிகள் அளிக்கும் முறை மங்கோலியர்களால் அவர்கள் ஆக்கிரமித்த பகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்றிர்க்கொன்று தொடர்பற்று, தொலைவில் இருந்த பட்டுச் சாலையின் (சில்க் ரோடு) வழியில் இருந்த நகரங்கள் இணைக்கப்பட்டு, அங்கு தங்கு தடையற்ற வணிகம் நிகழ வழி செய்யப்பட்டது. தங்கள் ஆட்சியின் கீழுள்ள மக்கள் அனைவருக்கும் வரிகள் குறைக்கப்பட்டு ஆசிரியர்கள், பூசாரிகள், மருத்துவர்கள் மற்றும் கல்விச் சாலைகளுக்கான வரிகள் அறவே அகற்றப்பட்டது. உலக நாடுகள் அனைத்திற்கும் பொதுவான அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, நீல வானின் கீழுள்ள அத்தனை மக்களுக்கும் இது பொதுவானது என்று அறிவிக்கப்பட்டது.ஆட்சியாளர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் எனும் அக்கால நடைமுறை நீக்கப்பட்டு, மக்களை ஆளுகிற அனைவரும் அச்சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் என செங்கிஸ்கானால் வலியுறுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. மதச் சுதந்திரம் அளிக்கப்பட்ட அதே நேரத்தில், குடிமக்கள் அனைவரும் மதத்திற்கு அப்பாற்பட்டு அரசிற்கு விசுவாசமானவர்களாக இருக்கச் செய்யப்பட்டார்கள். மக்களைத் துன்புறுத்தும் சட்டங்கள் நீக்கப்பட்டு, திருடர்களும், கொள்ளையர்களும், சமூக விரோதிகளும் மிகக் கடுமையான முறையில் ஒடுக்கப்பட்டனர். செங்கிஸ்கானே இது போன்ற கொள்ளையர்களை அடக்கு செயல்களை தனிப்பட்ட முறையில் பல முறை செய்ததாக அறியப்படுகிறது.உலக வரலாற்றில் பிணைக் கைதிகளைப் பிடித்து வைக்க மறுத்த ஒரே பேரரசன் செங்கிஸ்கானாகத்தான் இருக்க வேண்டும். தன்னுடன் போர் புரியும் நாடுகளிலிருந்து வரும் பிரதிநிதிகளுக்கு பொதுச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கும் Diplomatic Immunity செங்கிஸ்கானாலேயே உலகிற்கு முதல் முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.அடித்தளம் மிக உறுதியாக அமைக்கப்பட்ட நிலையில் செங்கிஸ்கானின் மங்கோலியப் பேரரசு அடுத்த 150 ஆண்டுகள் வரை தொடர்ந்து விரிவடைந்து கொண்டே சென்றது. அதனைத் தொடர்ந்து வந்த நூற்றாண்டுகளில் சிதறிப்போனாலும் செங்கிஸ்கானின் வாரிசுகளே அந்த சிறிய, பெரிய நாடுகளையும் ஆண்டுவந்தார்கள்.ரஷ்யா, துருக்கி, இந்தியா, சீனா மற்றும் பாரசீக நாடுகள் செங்கிஸ்கானின் வாரிசுகளால் தொடர்ந்து ஆளப்பட்டன. ஆண்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு வெவ்வவேறு விதமான பட்டங்களைச் சூட்டிக் கொண்டார்கள். கான், பேரரசர், ராஜா, ஷா, எமிர், தலாய் லாமா போன்ற பட்டங்களை உதாரணங்களாகச் சொல்லலாம். இந்த வாரிசுகளின் தலைமையில் மேலும் ஒரு நூற்றாண்டு வரை மங்கோலிய அரசாங்கங்கள் ஆளப்பட்டன.அந்த வாரிசுகளின் ஒரு பிரிவினரான மொகலாயர்கள் இந்தியாவை 1857-ஆம் வருடம் வரை ஆண்டு வந்தார்கள். சிப்பாய்க் கலகத்திற்குப் பிறகு பிரிட்டிஷ்காரர்கள் கடைசி மொகலாய மன்னரான இரண்டாம் பகதூர் ஷாவை நாடுகடத்தியதுடன், அவரது மகன் மற்றும் பேரன்களின் தலைகளைத் துண்டித்து கொல்லும் வரை எனலாம். அத்துடன் செங்கிஸ்கானின் நேரடி வாரிசுகளின் ஆட்சி இந்தியாவில் முடிவடைந்தது.உஸ்பெகிஸ்தானின் அமைந்த புகாராவின் எமிரான ஆலம்கான், சோவியத் படைகள் உஸ்பெகிஸ்தானைக் கைப்பற்றும் வரை ஆட்சி செய்து வந்தார். அவரே செங்கிஸ்கானின் நேரடி, கடைசி வாரிசு. அவருக்குப் பின் செங்கிஸ்கானின் வாரிசுகள் எவரும் எங்கும் ஆட்சி புரியவில்லை.*(பாகம் இரண்டில் தொடர்கிறது)

-நரேந்திரன்.

Saturday, August 24, 2013

கடந்து வந்த பாதை (இஸ்லாத்தை ஏற்ற பூசாரியின் வரலாறு)

உலகில் எந்த ஒரு மதத்தையும், இசத்தையும் புதிதாக நீங்கள் பின் பற்ற ஆரம்பித்தால் எந்த எதிர்ப்பும் கிளம்பாது. ஏனெனில் அந்த இசங்களோ மதங்களோ அவனது வாழ்வில் தலையிடப் போவதில்லை. இந்துவாக இருந்து கொண்டும், கிறித்தவனாகவும் இருந்து கொண்டும் அதே நபர் நாத்திகனாகவும் வாழ்ந்து விடலாம். இதை உலகமும் அங்கீகரிக்கிறது. கி.வீரமணி, கருணாநிதி, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா என்று நம் தமிழக தலைவர்கள் அனைவருமே நாத்திகராகவும் இருப்பார்கள். அதே நேரம் இந்து மதத்தின் உள்ளேயேதான் இருந்து வருவார்கள். நமது சட்டமும் அதைத்தான் சொல்கிறது. ஆனால் ஒருவன் இஸ்லாத்தை ஏற்கும் போது அவனோடு அந்த பிரச்னை முடிவதில்லை. உண்ணுவது, பருகுவது, திருமணம் முடிப்பது, சமூகத்தில் பழகுவது முதற்கொண்டு அனைத்து விஷயத்திலும் இஸ்லாம் தலையிடுவதால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றால் பல முனைகளிலிருந்தும் எதிர்ப்பை சந்திப்பதைப் பார்க்கிறோம்.

அந்த வகையில் இலங்கையில் இந்து மத பூசாரியாக இருந்த ஒருவர் தான் எவ்வாறு இஸ்லாத்தால் ஈர்க்கப் பட்டேன் என்று சொல்வதை இந்த காணொளியில் பார்த்து பயன் பெறுங்கள். இஸ்லாத்தை ஏற்றவுடன் அவரது எண்ணங்கள், செயல்பாடுகள, தோற்றங்கள் எல்லாம் எந்த அளவு மாறுபட்டு விடுகிறது என்பதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம்.


கடந்து வந்த பாதை 01 (இஸ்லாத்தை ஏற்ற... by sltjvideos


கடந்து வந்த பாதை 02 (இஸ்லாத்தை ஏற்ற... by sltjvideos

-------------------------------------------------------------

முற்றிலும் வித்தியாசமான முறையில் ஆப்ரிக்காவில் இஸ்லாமிய அழைப்புப் பணி!

Thursday, August 22, 2013

மயிலாடுதுறையில் பாகிஸ்தான் தீவிரவாதிகளாம்!

மும்பை:பாகிஸ்தான் பயங்கரவாதிகள், இலங்கை மற்றும் கடலோர மாநிலங்கள் வழியாக, தென் மாநிலங்களில் நுழைந்து, தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, மகாரஷ்டிர மாநில உளவுத் துறை எச்சரித்துள்ளது.

இது குறித்து, தென் மாநிலப் பகுதிகளுக்கான எச்சரிக்கையாக, மகாராஷ்டிர மாநில உளவுத் துறை கூறியிருப்பதாவது:பாகிஸ்தானின், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாத அமைப்பு, பஞ்சாபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் என, பலருக்கும் பயங்கரவாத தாக்குதல் பயிற்சி அளித்து வருகிறது. தென் மாநிலங்களில் தாக்குதல் நடத்துவதற்காக தயார் செய்யப்பட்டுள்ள இவர்கள், இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் இருந்து, தமிழகத்தில் நுழைந்து, மதுரை, மயிலாடுதுறையில் பயங்கர தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளனர்.இன்னும் சில மாதங்களில், தாக்குதல் நடத்தப்படலாம். கடந்த பிப்ரவரி மாதம், 2ம் தேதி, மூன்று பாகிஸ்தான் இளைஞர்களை, இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்து விசாரித்தபோது, இந்த தகவல் தெரிய வந்துள்ளது.சிங்கள மீனவர்கள் போல், கேரளா மற்றும் தமிழகத்திற்குள், பயங்கரவாதிகள் நுழையக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முயற்சியில், லஷ்கர் - இ - தொய்பா, பப்பர் கால்சா இன்டர்நேனல், ஜெய்ஷ் -இ - முகமது, ஜமாத் - உத் - தாவா, லஷ்கர் - இ - ஜாங்வி, அல் - உமர் முஜாகிதீன், ஹிஜ் - உல் - முஜாகிதீன் போன்ற பயங்கரவாத அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.தென் மாநிலங்களை தாக்க திட்டமிட்டுள்ள அந்த அமைப்புகள், இதற்காக இலங்கையில் இருந்து புறப்பட திட்டமிட்டுள்ளன.இவ்வாறு, அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் 21-08-2013இதைப் படித்து விட்டு என்னையறியாமல் சிரித்து விட்டேன். இஸ்லாத்தை இந்த மண்ணிலிருந்து துடைத்து எறிந்து விட வேண்டும் என்று இந்துத்வா வாதிகள் பலவாறாக சிந்திக்கின்றனர். அதில் இந்த செய்தியும் ஒன்று. பாகிஸ்தான் காரனுக்கு மயிலாடுதுறைதான் தெரியுமா? இங்கு பேசும் தமிழ் மொழியாவது அவனுக்கு விளங்குமா? இங்கு குண்டு வைப்பதால் அவனுக்கு என்ன நன்மை? ஏதோ எல்லையோரத்தில் தனது நாட்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப அவ்வப்போது ஊடுருவல் என்ற நாடகம் அரங்கேற்றப்படும். இந்தியாவும் பாகிஸ்தானுமே இதை அவ்வப்போது செய்து வரும். மக்களுக்கும் இது பழகி விட்டது. அந்த செய்தியை மகாராஷ்ட்ர இந்துத்வாவாதி ஒருவர் திரித்து வெளியிட அதை நம்மூர் தினமலரும் பிரபலப் படுத்தியுள்ளது. இந்த செய்திக்கு என்ன ஆதாரம்? யார் சொன்னது? எனறெல்லாம் தினமலர் கவலைப்பட போவதில்லை. உளவுத் துறையிலிருந்து அரசின் அடி மட்டம் வரை மோடியின் ஆட்கள் வேலை பார்ப்பதால் இது போன்ற செய்திகளை இவர்களால் தைரியமாக உலவ விட முடிகிறது. இஸ்லாத்தை களங்கப்படுத்த ஏதாவது ஒரு செய்தி வேண்டும். அவ்வளவே!

இஸ்லாம் தமிழகத்தில் நாள்தோறும் பரவலாக பரவி வருகிறது. இது காலாகாலமாக இந்து மதத்தை ஆண்டு கொண்டிருக்கும் மேல் சாதியைச் சேர்ந்த இந்துத்வ வாதிகளுக்கு உறுத்திக் கொண்டே இருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால் இந்து மதம் அழிந்து விடுமே என்ற பயம் வேறு. வாதத்தால் இஸ்லாத்தை இந்த இந்துத்வ வாதிகளால் வெல்ல முடியாது. எனவே தான் இது போன்ற குறுக்கு வழிகளை அவ்வப்போது கையில் எடுக்கின்றனர். தானும் தனது குடும்பமும் சுற்றத்தார்களும் மாற்று மதத்தவர்களும் அமைதியாக சுதந்திரமாக வாழ்ந்து வரும் போது அதைக் கெடுக்க எந்த முஸ்லிமாவது அல்லது எந்த ஹிந்துவாவது முயல்வானா? இதை நடுநிலைவாதிகள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எங்கெல்லாம் முஸ்லிம்கள் சற்று வசதி வாய்ப்புகளோடு உள்ளார்களோ அங்கு சென்று அவர்களின் சொத்துக்களை கொள்ளையடிப்பது இவர்களின் வாடிக்கை. குஜராத்தில் அதைத்தான் செய்து காட்டினர். கோயம்புத்தூரிலும் அதே பாணியைத்தான் கையாண்டனர். மேலப் பாளையத்திலும் பல கொலைகளை முஸ்லிம்களின் மேல் போட்டு கலவரத்தை உண்டாக்க நினைத்தனர். தற்போது விநாயக சதுர்த்தி வேறு வருகிறது. பல முஸ்லிம் ஊர்களில் ராமகோபாலன் ஆசியோடு பிரச்னைக்கு தயாராகி வருகின்றனர். இவ்வளவு முயற்சி செய்தும் இதுவரை இந்த இந்துத்வ வாதிகளால் தமிழகத்தில் கலவரத்தை உண்டு பண்ண முடியவில்லை. ஏன்? ஏனெனில் இங்கு காலா காலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இந்து மதத்தின் பெரும்பான்மை மக்கள் இந்துத்துவ வாதிகளை தொடர்ந்து புறக்கணித்தே வருகின்றனர். இந்துத்வாவாதிகள் செய்து வரும் புரட்டுக்களையும் நன்கு அறிந்தே உள்ளனர். இருந்தாலும் முஸ்லிம்களாகிய நாம் மிக கவனமுடன் இந்துத்வாவாதிகளை அணுக வேண்டும். இவர்கள் செய்யும் சதி வேலைகளை ஆதாரத்தோடு இந்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். தமிழக மண் என்றுமே மத மோதல்களுக்கு இடமளிக்காது என்பதை இந்த இந்துத்வா வாதிகளுக்கு இந்துக்களும் முஸ்லிம்களும் புரிய வைக்க வேண்டும்.Wednesday, August 21, 2013

பதினோரு வயதிலேயே ஐந்து மொழிகளைக் கற்ற அஹமது கான்!தாய்மொழியை பிழையின்றி பேச எழுத நம்மில் பலருக்கு சிரமமாக இருப்பதை பார்க்கிறோம். ஆனால் பதினோரு வயதே நிரம்பிய ஃபேர்மேன் அஹமது கான் என்ற இந்த சிறுவன் ஐந்து மொழிகளை சரளமாக பேசுகிறான். ஆறாம் வகுப்பு படித்து வரும் இந்த சிறுவனின் தந்தை உர்து, ஹிந்தி, பார்சி, ஆங்கிலம் என்ற நான்கு மொழிகளில் கவிதைகளும், கட்டுரைகளும் எழுதி வருபவர். பெயர் கான் ஹஸ்னைன் ஆகிப் (புதிதாக இருக்கிறதோ...ஃபார்சி மொழியில் பெயர் வைத்துள்ளார் போல் இருக்கிறது) தந்தைக்கு மகன் தப்பாமல் பிறந்துள்ளான். தந்தையையே விஞ்சும் அளவுக்கு சிறு வயதிலேயே ஐந்து மொழிகளில் பாண்டித்தியம் பெருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. உர்து மீடியம் பள்ளியில் புஷாத்(மகாராஷ்டிரா) என்ற ஊரில் உள்ள பள்ளியில் இந்த சிறுவன் படித்து வருகிறான்.

பார்சி மொழி என்பது கிட்டத்தட்ட இந்தியாவில் செத்த மொழியாகவே ஆகி விட்டது. ஆனால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவின் ஆட்சி மொழியாகவே இருந்துள்ளது. உருதுவை ஓரங்கட்டியது போல் பார்சியையும் திட்டமிட்டு நமது ஆட்சியாளர்கள் ஓரங்கட்டி விட்டனர். ஃபார்மனின் தந்தை கரீமா, ஹாஃபீஸ், குஷ்ரூ போன்ற பெர்ஷிய கவிஞர்களை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்தினார். கூட படிக்கும் மற்ற குழந்தைகள் வேடிக்கையிலும் விளையாட்டிலும் ஓய்வு நேரத்தைக் கழித்தபோது ஃபேர்மேன் அஹமது கான் மொழிகளை கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினான்.

தற்போது ஃபேர்மேனால் பெர்ஷிய கவிதைகளை அழகாக படித்து அதற்கு விளக்கங்களும் சொல்ல முடியும். அடுத்து மகாராஷ்ட்ராவின் தாய் மொழியான மராட்டியின் பக்கமும் இவனின் கவனம் திரும்பியது. ஹிந்தி மொழியில் ஓரளவு உர்துவின் தாக்கம் இருப்பதால் அதனையும் கற்பதில் எந்த சிரமமும் இல்லை. மராட்டி, ஹிந்தி, உர்து, ஆங்கிலம், பார்சி இந்த ஐந்து மொழிகளிலும் படிக்க, எழுத தற்போது மிகவும் தேர்ச்சி பெற்றுள்ளான் ஃபேர்மன் அஹமது கான்.

இது போல் மென் மேலும் வெற்றிகள் பெற்று இந்தியனின் பெருமையை உலகறியச் செய்ய நாமும் வாழ்த்துவோம்.

The Milli Gazette
Published Online: Jun 15, 2013
Print Issue: 16-31 May 2013

Tuesday, August 20, 2013

சகோதரர் அப்துல்லாஹ் (Alias பெரியார்தாசன்) மறைவு!

சிறந்த ஒரு சிந்தனை வாதியை இழந்து நிற்கிறோம். என்னுடைய அலுவலகத்துக்கு பின்னால் உள்ள ரப்வா அழைப்பு வழிகாட்டல் மையத்தில்தான் பெரியார் தாசன் அப்துல்லாவாக மாறினார். அன்றிலிருந்து தனது பயணத்தில் எந்த தொய்வையும் கொடுக்காமல் அழைப்பு பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். இஸ்லாமியர்கள் தமுமுக, டிஎன்டிஜே, முஸ்லிம் லீக், என்று பல வாறாக பிரிந்து கிடப்பதை எண்ணி மிகுந்த வருத்தத்துடன் ஒரு நிகழ்ச்சியில் குறிப்பிட்டிருந்தார். 'முஸ்லிம்களாகிய நம்மைச் சுற்றி எவ்வளவு பெரிய ஆபத்தான சதி வலை பிண்ணப்படுகிறது என்று விளங்காமல் நமக்குள் கருத்து முரண்பாடுகளால் பிளவுண்டு இருக்கிறோம். இதில் மார்க்க அறிஞர்கள் மிகுந்த கவனம் எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் தனது உடலை தானமாக தருவதாக எழுதி கொடுத்துள்ளார். இஸ்லாத்துக்கு மாறியவுடன் எழுதி கொடுத்ததை திரும்பப் பெற்றிருக்க வேண்டும். நாமும் அவருக்கு இது பற்றிய செய்தியை அவருக்கு தெரிவிக்க வில்லை. தற்போது அவருக்காக மக்கா மஸ்ஜிதில் தொழுகை மாத்திரமே நடத்த முடிந்தது. உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முடியவில்லை. இனிமேலாவது புதிதாக இஸ்லாத்தை ஏற்பவர்களுக்கு பெயர் மாற்றம், போன்ற வற்றை செய்து தரும் இயக்கங்கள் அவரது இறப்புக்கு பிறகு அவரது உடலை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்யும் உரிமையையும் வாங்கித் தர முயற்சிக்க வேண்டும். ஏனெனில் குடும்பத்தார் இதில் தலையிடும் சாத்தியக் கூறுகள் அதிகம் இருப்பதால் நாம் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். இது நமக்கு ஒரு படிப்பினை.

பெரியார் தாசன் அப்துல்லாவாக மாறியதை தமிழ் உலகம் அனைத்துமே அறியும். ஆனால் நமது ஊடகங்கள் தின மலர், தினமணி,விடுதலை, தினகரன் போன்ற அனைத்து பத்திரிக்கைகளும் பெரியார்தாசன் என்றே குறிப்பிட்டு தங்கள் அரிப்பை இதிலும் தீர்த்துக் கொள்கின்றனர். தனது பெயர் அப்துல்லா என்று மாற்றி இஸ்லாத்தையும் ஏற்றுக் கொண்டதை இந்த தமிழ் உலகமே அறியும். ஆனால் நமது தமிழ் ஊடகங்களுக்கு மாத்திரம் இந்த விபரம் தெரியவில்லையாம். :-) தின மலரும், தினமணியும் அப்படித்தான் இருப்பார்கள் இது தெரிந்த விடயம். ஆனால் பகுத்தறிவாளர் என்று கூறிக் கொள்ளும் வீரமணியும் இந்த காரியத்தை செய்யலாமோ என்று நாட்டு மக்கள் கேட்க மாட்டார்களா?சகோதரர் அப்துல்லாவுக்கு இஸ்லாமியர்களால் மெக்கா மஸ்ஜிதில் தொழுகை நடத்தப் படுகிறது.
சவுதி அழைப்பு வழிகாட்டல் மையத்தில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்கள் உம்ரா செய்வது எப்படி என்பதை கற்றுக் கொள்கிறார்கள்.

Monday, August 19, 2013

முஸ்லிம்கள் நிலவை கடவுளாக வணங்குகிறார்களா?

யூசா இவான்ஸ் : அறிமுகம்:

குர்ஆன் இறை வேதம்! உலக மக்களுக்காக இறைவனிடமிருந்து இறங்கிய இறுதி வேதம்! எவருக்கு அல்லாஹ் நாடுகிறானோ, எவர் சத்தியத்தைத் தேடுகிறாரோ அவருக்கு அது வழிகாட்டி. குர்ஆனைப் பற்றிய தப்புப் பிரச்சாரங்களையெல்லாம் தவிடுபொடியாக்கி அது சிரத்தில் ஒளிரும் விளக்காய், இருளில் உழலும் மனிதர்களுக்கு வழிகாட்டும் வெளிச்சமாய்த் திகழும் அருளுக்குரிய இறை வேதம். சாத்தானின் அசரீரிகளைப் பற்றி கதையளந்து சாட்சிகளை முன் வைக்கும் கிறிஸ்தவமே வியந்து பார்க்கும் அளவுக்கு இஸ்லாமை நோக்கி கிறிஸ்தவர்க அணிவகுக்குச் செய்வதும் குர்ஆன் என்றால் மிகையாகாது. அந்த வரிசையில் கிறிஸ்தவ போதனைகளில் வளர்க்கப்பட்ட யூசா இவான்ஸ் என்ற கிறிஸ்தவர் தன் சத்திய தேட்டத்தின் இறுதியில் குர்ஆனை முழுமையாகப் படித்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார். உலக அரங்கில் அறியப்படும் ஓர் சத்தியப் பிரச்சாரகராக விளங்குகிறார். அவர் தன் சத்தியப் பயணத்தை விவரிக்கின்னறார்.

ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,

“முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியில் வாழ்கிற அல்லாஹ் என்ற “Moon God” டை வணங்குகிறார்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள்தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிமல்லாத யாரைக் கண்டாலும் கொன்றுவிட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்குப் பெயர் ஜிஹாத். அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்” என்று என்னன்னவோ இருந்தது.

அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். நல்ல வேளை தெற்கு ககரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை.
பிறகு ஒரு முஸ்லிமை நான் சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. அதற்குக் காரணங்களில் ஒன்று அவர்தான் ஆப்பிரிக்க அமெரிக்கர் ஆயிற்றே. முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்றுதானே அந்த புத்தகத்தில் போடப்பட்டிருந்தது.

ஒரு வெள்ளிக் கிழமை நண்பர்களுடன் மதங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்த நண்பர் என் அருகில் வந்து இஸ்லாமைப் பற்றித் தெரியுமா? என்று கேட்டார். இஸ்லாமைப் பற்றியெல்லாம் எனக்குத் தெரியும் என்று நான் படித்தவற்றைக் கூறினேன். நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான் என்றேன்.

உனக்குத் தெரியுமா? நான் ஒரு முஸ்லிம்

நீ ஆப்பிரிக்க அமெரிக்கன் அல்லவா? முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள்தானே?

என்ன? ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.

இங்கே பார் நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப் படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாகக் கூறுவார்கள். நான் இப்போது ஜும்மா தொழுகைக்காகப் போகிறேன். என்னுடன் நீயும் வா.

என் தெருவிலேயே அந்த மசூதி இருந்தது. அங்கு இமாமை அறிமுகப் படுத்தினார் நண்பர். அருமையான மனிதர். பண்பாகப் பேசினார். என்னை உள்ளே அழைத்துச் சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஒரு நாற்காலி கொடுத்து உட்காரச் சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்குப் பின்னாலோ ஒரு திரை. திரைக்கு அந்தப் பக்கம் பெண்களின் குரல் கேட்டது.

சொற்பொழிவு தொடங்கியது. அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல. அறிவாளியும் கூட. உரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கூறிக்கொண்டிருந்தார். எனக்குப் புரிய வேண்டும் என்பதற்காகவா? இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா? தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்குத் தோன்றியது.

இன்று வரை நன்கு நினைவிரக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு: இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணை வைப்பவரைத் தவிர”. அது மட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) மூஸா (அலைஹிஸ்ஸலாம்) என்று பைபிளில் உள்ள நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சரியம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?

சொற்பொழிவு முடிந்தவுடன் எல்லோரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.

“என்ன செய்யப் போகிறீர்கள்” என்று பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டேன்.

“தொழப்போகிறோம்”

“யாரை”

“இறைவனை”

“எந்த இறைவன்”?

“உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை”

என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா? எனக்குப் புரிய ஆரம்பித்தது.

தொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது. மனதை ஊடுருவியது.

நெற்றியை தரையில் வைத்து சாஷ்டாங்கம் செய்தார்கள். “ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது” முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது (Worship) வழிபாடு. இதுதான் நான் இத்தனை நாளாய் எதிர்பார்த்தது.


தொழுகை முடிந்தது. எனக்கு என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது. மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாக இருந்தது.

தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,

“இல்லை இல்லை. உங்களிடம் உங்களுக்கென்று ஏதாவது புத்தகம் இருக்கிறதா?”

“ஆம் இருக்கிறது, அதற்குப் பெயர் குர்ஆன். ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக் கொள்ளுங்கள்”

எடுத்துக் கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் அத்தியாயம், அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளைத் துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன். அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டு வந்த இறைச் செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.

ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். ஆலு இம்ரான் போன்ற அத்தியாயங்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களது வரலாறாளது நான் இதுவரை New Testament ல் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலைஹிஸ்ஸலாம்) இவர்தான்.

குரானை மூன்று நாட்களில் படித்து முடித்து விட்டேன். ஆனால் முதல் இரவில் ஆலுஇம்ரான் அத்தியாயம் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்து விட்டேன்.


முஸ்லிம்கள் என்றால் யார்? எப்படி முஸ்லிமாவது? என்று கூட அப்போது சரியாக எனக்குப் புரியவில்லை.

ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்கள் போலத்தான் நானும் வாழ வேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு வழிகாட்டி.

இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள். இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றைக் கொண்டு வாருங்கள். என்று சவால் விடும் இதுபோன்ற ஒன்றை நான் இதுவரை பார்த்ததில்லை. கடவுளைப் பற்றிய அனைத்து விளக்கங்களும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை. நேர்மையானவை.

அந்த இரவு என் மனதை முழுமையாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுது கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்துகொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.

ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது!

நன்றி: திருக்குர்ஆன் நற்செய்தி மலர் APRIL 2013
http://yushaevans.com

Sunday, August 18, 2013

மோடியின் வேறு சில சாகசங்களையும் பார்ப்போம்!
மோடியின் குஜராத்தில் பாலாறும் தேனாறும் ஓடுவதாக ஊடகங்கள் பெரிதாக ஊதித் தள்ளுகின்றன. ஆனால் நிலைமையோ வேறு. அகமதாபாத்தில் ஒரு பாலத்தின் கதியைத்தான் நாம் பார்க்கிறோம். ஒழுங்கான வடிகால் வசதி இன்றி அவசர கதியில் கட்டப் பட்டு சிறு மழைக்கே பேரூந்துகளை கயிறு கட்டி இழுக்கும் நிலைதான் அங்கே. ஆனால் இந்த செய்திகளெல்லாம் தினமலரிலோ, தின மணியிலோ நாம் காண முடியாது. :-)அடுத்து சுதந்திர தின உரையில் தன்னோடு பிரதமர் விவாதத்துக்கு தயாரா? என்று கேட்டதை பல அறிவு ஜீவிகளும் கேட்டு மனதுக்குள் சிரித்துக் கொண்டனர். பதிலுக்கு திக் விஜய் சிங் 'முதலில் என்னோடு விவாதித்து பதில் சொல்லிவிட்டு பிறகு செல்லவும்' என்றவுடன் தற்போது அதற்கு எந்த பதிலையும் மோடி வைத்திருக்கவில்லை. இதே சுதந்திரத் தினத்தன்று 'மாருதி' 'சுசுகி' மோட்டார் கம்பெனிகள் இங்கு வரக் கூடாது என்று போராடிய 5000 சாமான்ய மக்களை ஊடகங்கள் சாமர்த்தியமாக மறைத்து விட்டன. இங்கு இம் மாபெரும் கூட்டத்தை கூட்டிய லால்ஜி தேசாய் என்ற விவசாய தலைவரை சிறையில் அடைத்தது மோடி நிர்வாகம். சாமான்ய மக்களின் வாழ்வாதாரமாண நிலங்களை பிடுங்கி வெளி நாட்டு பண முதலைகளுக்கு தாரை வார்த்து கொடுப்பதுதான் இன்று வரை மோடி செய்து வரும் நாட்டு நலப் பணி. ஊடகங்களும கொடுத்த காசுக்கு வஞ்சகமில்லாமல் மோடி புகழை பாடியவண்ணமே உள்ளன.

http://www.truthofgujarat.com/farmers-movement-leader-lalji-desai-arrested-illegal-detention/

Friday, August 16, 2013

கஃபா துப்புறவு தொழிலாளர்களுடன் நோன்பு திறந்த இமாம் சுதைஸ்!


தனது குடும்பம் நலமாக வாழ வேண்டும் என்பதற்காக கடல் கடந்து மத்தியகிழக்கின் பாலைவனங்களில் அலையும் ஒட்டடகங்களை போல தாங்கள் பார்க்கும் தொழில் உள்ள சிரமங்களையும் பிரச்சனைகளையும் மனதில் அலையவிட்டபடி கஸ்டப்படும் இலட்சக்கணக்கான ஆசிய முஸ்லிம் தொழிலாளர்கள் இருக்கின்றனர்.

மக்காவின் கஃபாவில் சுத்திகரிப்பாளர்களாக பல்லாயிரம் பேர் வேலை செய்கின்றனர். சவுதி அரசாங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இயக்கப்படும் ஸ்தலம் அது. எந்த குறையும் நிகழாமல் எல்லாவற்றையும் வழமை போல வைத்திருக்க விரும்பும் அதன் நிர்வாகம் மிகவும் கண்டிப்பானது.

ரமழான் மாதத்தில் களைப்பிற்கு மத்தியில் தங்கள் நோன்பை முடித்தது கொள்ளும் மஹ்ரிப்புடைய நோன்பு திறக்கும் நேரத்திற்கு சற்று முன் அசுவாசமாக உட்காந்திருந்த ஆசிய தேச முஸ்லிம் ஊழியர்களிற்கு அன்றைய தினம் ஒரு இன்பபேரதிர்ச்சி காத்திருந்தது. கடந்த மாதம் 27ம் திகதி நடந்த சம்பவம் இது.

கஃபாவின் பிரதம பேஷ் இமாம் மட்டுமல்லாது மக்காவின் பிரபல வர்த்தகருமான Shaykh Abdurrahman As Sudais அவர்கள் இந்த ஊழியர்கள் அமர்ந்திருந்த இடம் வந்தார்கள். படாரென நிலத்தில் உட்கார்ந்து விட்டார்கள். நோன்பை இனிடன அந்த ஊழியர்களோடு திறந்து மகிழ்ந்தார்கள். நிர்வாக ஊழியர்களை பார்த்து இந்த தொழிலாளர்கள் மேல் கருணை காட்டும் படி வேண்டினார்கள்.

இறுதியாக அவர் தன் காரில் ஏறிச்செல்லும் முன் சொன்ன வார்த்தைகள் இவை. “இங்கே வேலை செயகிறார்களே இவர்களது வேலை போல் உன்னதமான மகத்தான வேலை உலகத்தில் வேறெங்கும் இல்லை. இவர்கள் இறைவனின் இல்லத்தின் ஊழியர்கள். இவர்களுக்கு ஊழியம் செய்வதற்கு நாம் பழகி கொள்ள வேண்டும் எனவும் கூறிச் சென்றுள்ளார்.

உலகின் புகழ்பெற்ற இமாம் சுதைஷ். இவரது குரல் ஒலிக்காத வீடுகளே இல்லை. அந்த மனிதனின் உள்ளத்தின் வாயிலின் திறக்கப்பட்ட ஒரு கதவின் ஒலியில் வரைந்த வரிகளே இவை. ...

நன்றி: கைபர் தளம்

உழைக்கும் மக்களை கோவிலுக்குள்ளேயே நமது நாட்டில் அனுமதிப்பதில்லை. ஆனால் இங்கோ துப்புறவு தொழிலாளர்களோடு கஃபாவின் இமாம்(தலைவர்), மிகப் பெரும் செல்வந்தர் சுதைஸ் அவர்கள் சமமாக தரையில் அமர்ந்து அந்த நண்பர்களோடு அன்பாக பேசி விட்டு நோன்பு திறந்தும் சென்றது நம் நாட்டு வர்ணாசிரம வெறி பிடித்தவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. அரபுகளிடம் பல குறைகள் இருந்தாலும் தீண்டாமை என்பதை அறவே ஒதுக்கியுள்ள இந்த பண்பை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும்.Wednesday, August 14, 2013

மோடிக்குப் பொறுப்பில்லையா?2002 - கோத்ரா ரயில் பெட்டி எரிப்பு என்பதைக் காரணம் காட்டி நரேந்திர மோடி அரசால் கட்ட விழ்த்து விடப்பட்ட திட்டமிடப்பட்ட வன்முறையால் சிறுபான்மை மக்களான முஸ்லிம்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

சுதந்திரத்திற்குப் பிறகு மதக் கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை என்று பார்க்கும்போது மோடி அரசில் நடத்தப்பட்ட மனித வேட்டைதான் முதல் இடத்தில் இருக்கும்.

மோடி குற்றமற்றவர் என்ற ஒரு பெருமழைப் பிரச்சாரத்தை பார்ப்பன மேல் ஜாதி ஊடகங்கள் செய்துகொண்டு இருக்கின்றன. பண முதலைகளும் மோடியின் பக்கம் வலுவாக நின்று கொண்டுள்ளன.

2002 முதல் குஜராத்தில் நடைபெற்ற வன் முறைக்குக் காரணமான குற்றவாளிகளுக்குத் தண்டனைகள் ஒவ்வொன்றாக நீதிமன்றத்திலிருந்து வந்துகொண்டுள்ளன.

மோடி அமைச்சரவையில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த மாயாபென் கோட்நானி என்னும் பெண் அமைச்சர் (அவர் ஒரு டாக்டரும்கூட!) பாட்டியா மாவட்டம், நரோடா என்னும் கிராமத்தில் 95 முசுலிம்கள் (குழந்தைகள் 35 பேர்) கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாவார். குற்றம் நிரூ பிக்கப்பட்டு 28 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட் டுள்ளார். அவரோடு மேலும் 31 பேர்களுக்கு ஆயுள் தண்டனை!
இப்படி தண்டனைகள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கின்றன. இன்று ஒரு தகவல்:

குஜராத் மாநில கூடுதல் காவல்துறைத் தலைமை இயக்குநர் (டிஜிபி) பாண்டே இப்பொழுது சிறையில் இருக்கிறார்.

2004 ஆம் ஆண்டில் இஸ்ரத் ஜகான் என்ற பெண் உள்பட நான்கு பேர் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் இந்தப் பாண்டே குற்றவாளி என்கிற அடிப்படையில்தான் இந்தத் தண்டனை; அவரின் பிணை மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

கோத்ரா சம்பவத்திற்குப் பிறகு அவசர அவசரமாக முதலமைச்சரால் கூட்டப்பட்ட அவசரக் கூட்டத்தில் பங்கேற்ற காவல்துறை உயர் அதிகாரிகள் சிறீகுமார், ஷர்மா, சஞ்சீவி பட் ஆகியோர் மோடி கட்டளை யிட்டதை அம்பலப்படுத்தினரே!

நாளை நடக்கும், கொலை, கொள்ளை, தீ வைப்பு, சூறையாடல் சம்பவங்களின்போது காவல்துறை கண்டுகொள்ளக் கூடாது; தலையிடக் கூடாது என்று முதலமைச்சர் மோடி ஆணையிட்டார் என்று கூறி யுள்ளனரே!

முதலமைச்சர் நரேந்திர மோடி கூட்டிய கூட்டத்தில் கலந்துகொண்டவர் அமைச்சர் ஹிரேன் பாண்டியா. விசாரணை ஆணையத்திடம் கூட்டத்தில் நடந்தவை களைக் கூறியவர் இவர்.

விளைவு என்ன? ஹரேன் பாண்டியா நடைப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தபோது படுகொலை செய்யப்பட்டுவிட்டாரே! தன் மகன் படுகொலைக்குக் காரணம் முதலமைச்சர் நரேந்திர மோடிதான் என்று அவரின் தந்தையார், நீதிபதி நானாவதி ஆணை யத்திடமும் கூறியுள்ளாரே!

குஜராத் வன்முறையில் பதிவு செய்யப்பட்ட வழக் குகளின் எண்ணிக்கை 4252; 2000 வழக்குகளை மோடி அரசு விலக்கிக் கொண்டுவிட்டது. அந்த வழக்குகள் மீதும் மீண்டும் புலனாய்வு மேற்கொள்ளப் படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் அழுத்தமாகக் குட்டு வைத்ததால், அந்த வழக்குகள் பெயர் அளவுக்கு விசாரணைக்கு உட்பட்டுத்தப்பட்டன.

இவ்வளவும் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் மோடியின் காலத்தில்தான் நடைபெற்றது. இதற்கு யார் பொறுப்பு? எனக்குச் சம்பந்தம் இல்லை என்று ஒரு முதலமைச்சர் கூறுவாரேயானால், அவரைவிடப் பொறுப்பற்றவர், கடமை என்ற சொல்லை அசிங்கப் படுத்துபவர் யாராகத்தான் இருக்க முடியும்?

அரியலூரில் ரயில் கவிழ்ந்ததால் மத்திய அமைச்சர்கள் லால்பகதூர் சாஸ்திரியும், தமிழகத் தைச் சேர்ந்த ஓ.வி.அளகேசனும் பதவி விலக வில்லையா?

அந்தப் பண்பாடு பா.ஜ.க.வில் அறவேயில்லை என்பதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிதான்.

இந்தத் தன்மையில் உள்ளவர்தான் இந்தியா வுக்குப் பிரதமராக வரக் கங்கணம் கட்டிக் கொண்டு குதிக்கிறார்.

வாக்காளர்கள் ஏமாந்துவிட வேண்டாம்! எச்சரிக்கை!!

விடுதலை

15-08-2013

---------------------------------------------------------------------

அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள். எவ்வளவுதான் அநியாயங்களை இந்திய அரசு சிறுபான்மையினர் மீது அரங்கற்றினாலும் கண்டிப்பாக ஒரு நாள் இதற்கான விடிவுகள் கிடைக்கும் என்று ஒவ்வொரு முஸ்லிமும் ஒவ்வொரு இந்திய குடிமகனும் எதிர்பார்ப்பில் இருக்கிறான். நம்பிக்கையில்தானே வாழ்க்கை ஓடுகிறது.

இவ்வருடம் மட்டும் 708 நபர்களின் வாழ்வு முறை மாறியுள்ளது!சவுதி அரேபியாவில் அழைப்பு வழிகாட்டு மையங்களின்(தாவா சென்டர்) பங்கு அளப்பரியது. இந்த வருடம் மட்டும் 708 நபர்கள் தங்கள் வாழ்வை இஸ்லாத்தோடு பிணைத்துக் கொண்டுள்ளனர். இதில் 146 பேர் இலங்கையை சேர்ந்த சகோதரர்கள். 136 பேர் பிலிப்பைன் நாட்டைச் சேர்ந்தவர்கள். சிறந்த வாழ்வு முறையை பெற்றுக் கொண்ட இந்த உள்ளங்களை வாழ்த்தி வரவேற்போம்.

தகவலுக்கு நன்றி: அரப் நியூஸ் (13-08-2013)

A total of 708 expatriate workers, including 146 Sri Lankans and 136 Filipinos, have embraced Islam this year as a result of the efforts of the Cooperative Dawa Centers at Maader and Um Al-Hammam in Riyadh.

The new converts included 392 Ethiopians and Eritreans, 29 Europeans and Americans, and five Indians, the Saudi Press Agency reported on Monday quoting annual reports of the two centers in the capital city.

Highlighting the centers’ achievements, the report said they organized a total of 1,118 lectures and study classes in different languages at hospitals and government departments. They distributed more than 68,000 copies of the Qur’an and 545,000 copies of Islamic books and booklets in various languages.
Fuad Kawther, a Saudi engineer associated with dawa activities in Jeddah, voiced his happiness over the increasing number of people who embrace Islam as their way of life despite the strident media campaign against the religion. “This once again proves that Islam is a divine and truthful religion. It is the fastest growing religion in the world,” Kawther told Arab News. He narrated an amazing incident that took place in Germany after Yusuf Estes gave a lecture on Islam. About 1,000 people who were in the hall expressed their readiness to embrace Islam after the lecture.

“It’s a great blessing that hundreds of expats who came to Saudi Arabia for work used the opportunity to learn and embrace Islam, despite the fact that some Saudis do not represent Islam in its full spirit,” Kawther said.

Filipino workers topped the list of new converts to Islam, he said and attributed it to their country’s long Islamic history before Western colonialists occupied it. “Now the Chinese workers are competing with the Filipinos in embracing Islam,” he pointed out.

-------------------------------------------------------------------------

இந்திய சுதந்திரத்தில் முஸ்லிம்களின் பங்கு!

123456