Followers

Friday, March 31, 2006

சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?

சிந்தனையை தோற்றுவிப்பது இதயமா? மூளையா?

மனிதர்களின் சிந்தனை எங்கே நிகழ்கிறது என்பதில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு விதமான நம்பிக்கை நிலவி வருகிறது.

ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்து 'இதயத்தில் இடம் தா!' என்கிறான். அது என்ன இதயத்தில் சென்று காதலன் உட்கார்ந்து கொள்வதா? 'உன் மூளையில் இடம் தா' என்றாலாவது ஓரளவு உண்மை இருக்கிறது. நம் உடம்பில் உள்ள இதயத்தின் பணி என்பது உடல் அனைத்துக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்கி கொடுக்கும் வேலையைத் தவிர வேறு விஷேசமாக தீர்மானங்கள் எதையும் எடுப்பதில்லை என்பது தற்கால அறிவியல் கண்டு பிடிப்பு. அறிவு சம்பந்தப் பட்டது மூளையில் நடப்பதாகவும், ஆசை சம்பத்தப் பட்டது இதயத்தில் நிகழ்வதாகவும் பலரும் நம்பி வருகிறோம். நானும் இதே கருத்தைத் தான் சமீப காலம் வரை கொண்டிருந்தேன்.

அண்ணா எம்.ஜி.ஆரை 'இதயக் கனி' என்று வர்ணித்தார். 'இதயம் ஒரு கோவில். அதில் வாழும் தெய்வம் நீ' என்றெல்லாம் (வைரமுத்து என்று நினைக்கிறேன்) எழுதுவது இந்த அர்த்தத்தை வைத்துத்தான். 'மனதில் உறுதி வேண்டும்' என்று பாரதி எடுத்து எழுதியதும் மேலே சொன்ன அர்த்தத்தில் தான். ஒருவன் ஒரு செயலில் உறுதியுடன் இருக்க வேண்டுமானால் அவன் சிந்தனை, செயல் பாடுகளில் உள்ள உறுதியை தீர்மானிப்பது மூளை தானே ஒழிய இதயம் அல்ல.அன்றைய மக்களின் நினைவு செயல் பாடுகள் அனைத்தும் இதயம் சம்பந்தப் பட்டது என்பதாக இருந்ததால், பாரதியும் அதே அர்த்தத்தில் கவிதை புனைந்துள்ளார் என்று தான் நான் நினைக்கிறேன்.

தினமலர் தரும் விளக்கம்

'விஞ்ஞானிகள் பவுதீக ஆராய்ச்சி செய'கின்றனர். பூத பவுதீக நுட்பங்களுக்கே முக்கியத்துவம் தருகின்றனர். இவற்றிற்கு மேலாக மனித உடலில் மனம் எனற ஒன்று இருக்கிறது. அந்த மனம் எங்கிருக்கின்றது? என்பதில் இன்னும் அறிவியல் தடுமாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மெய்ஞஞானமோ மனத்துக்கே முக்கியத்துவம் கொடுக்கிறது.
-ஜனவரி 2004, பக்தி மலர், பக்கம் 7

தற்போதய அறிவியல் மனத்தைப் பற்றி என்ன கூறுகிறது?

சிந்திப்பது மனம். இதுதான் உணர்ச்சி, அறிவு இவற்றிற்கு அடிப்படை. இது மனிதனின் பெரு மூளைப் பகுதியில் தோன்றும் இயக்க மாகும். நரம்பு மண்டலத்தின் முதன் மையப் பகுதியாகிய மூளைதான் மனம் என்னும் மூளைத் திறன் தோன்றுவதற்கு முக்கியக் களம் ஆகும்.

உடலுக்குள் உயிர் என்பதாகத் தனியாக எதுவும் இல்லை. உடலின் பல்வேறு மண்டலங்களின் செயல் திறன்களுக்கும் அவற்றின் இயக்கங்களுக்கும் இடையிலான ஒருமைப்பாடு அல்லது ஒருங்கினைப்பே உயிர் எனப் படுவது. (The functions of the various systems in the body and the functional integration or co-ordination, we call life) இது போலவே ' பெரு மூளையின் கண் உள்ள ஏறத்தாழ 1400 கோடி நரம்பணுக்கள் அல்லது நியூரோ செல்கள் எனப்படும் நியூரான்களில் நிகழும் உடல்-வேதியல் எதிர் வினையே மனம் என்பதாகும்' என அறிவியலார் வரையறை செய்துள்ளனர்.

பெரு மூளையானது அறிவுத் திறன், உணர்ச்சி, நினைவாற்றல், கற்பனைத் திறன் முதலான மனத்தின் செயல் பாடுகளுக்கு இருப்பிடமாக இருக்கிறது. சிறு நீரகத்தின் செயலால் சிறுநீர் வெளிப் படுவது போல மூளை நரம்பு மண்டலம் இவற்றின் செயலால் உருவாவதே மனம். இன்னும் சுருங்கக் கூறின் மூளை அணுக்களில் ஏற்படும் வேதியல் மாற்றத்தால் உருவாவதே மனம்.
-நன்றி: விடுதலைஇது போன்ற ஒரு சர்ச்சை குர்ஆனிலும் வந்துள்ளது. ஒரு ஹிந்து நண்பர் இது பற்றி கேட்டதற்கு அறிஞர் பி.ஜெய்னுல்லாபுதீன் கொடுத்த விளக்கத்தை கீழே தருகிறேன்.

இறைவனை மறுப்பவர்களுக்கு உள்ளங்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்களுக்கு கண்கள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் பார்ப்பதில்லை. அவர்களுக்கு காதுகள் உள்ளன. அவற்றின் மூலம் அவர்கள் கேட்பதில்லை. (குர்ஆன் 7:179)

(அநியாயத்துக்கு எதிராக போரிட கூப்பிட்டால், போருக்கு வராமல்) வீட்டோடு இருக்கும் பெண்களைப் போல் இருப்பதையே அவர்கள் பொருந்தி கொண்டனர். அவர்களின் உள்ளங்களின் மீது முத்திரை இடப்பட்டு விட்டது. எனவே அவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள். (குர்ஆன் 9;87)

(போரில் உங்களின் எதிரிகள்) உங்கள் மேற் புறத்திலிருந்தும், உங்கள் கீழ்ப் புறத்திலிருந்தும் வந்த போது, பார்வைகள் நிலை குத்தி இதயங்கள் தொண்டைக் குழிகளை அடைத்து, அல்லாஹ்வைப் பற்றி நீங்கள் பல விதமான எண்ணங்களைக் கொண்டபோது, அங்கு தான் நம்பிக்கை கொண்டோர் சோதிக்கப் பட்டனர். அவர்கள் கடுமையாக ஆட்டுவிக்கப் பட்டார்கள். (குர்ஆன் 33:10)

சிந்தனையைக் குறிப்பிடும் போது இதயம் எனக் கூறாமல் மூளை என்று குர்ஆன் கூறுவதாக வைத்துக் கொள்வோம். இன்றைய உலகத்தின் முடிவுடன் அது அற்புதமாகப் பொருந்தி போகும்.ஆனால் இதயத்தில் தான் சிந்தனை மற்றும் உணர்வுகள் உள்ளன என்ற கருத்து நிலை பெற்றிருந்த காலத்தில்இவ்வாறு கூறியிருந்தால் அன்றைய மக்கள் இதையே காரணமாகக் காட்டி குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். இதயத்தில் நடக்கிற காரியங்களை மூளையில் நடப்பதாக இறைவன் தவறாகக் கூறுவானா எனக் கேட்டு அன்றைய மக்கள் குர்ஆனை நிராகரித்திருப்பார்கள். அவர்கள் நிராகரித்திருந்தால் குர்ஆன் பாதுகாக்கப் பட்டுநம் காலம் வரை வந்து சேர்ந்து இருக்காது.

ஆனால் மூளைதான் சிந்தனைக்கு காரணம் என்று நிரூபிக்கப் பட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்றைய அறிவியல் உலகம் பழைய நம்பிக்கைப் படி இதயம் என்று பொருள் படுத்தினால் குர்ஆன் இறை வேதமாக இருக்க முடியாது என்று மறுக்க வாய்ப்பாகி விடும். எனவே இது போன்ற இடங்களில் மூளை என்றும் குறிப்பிட முடியாது இதயம் என்றும் குறிப்பிட முடியாது ஒன்றுமே குறிப்பிடாமலும் இருக்க முடியாது.

இப்போது என்ன செய்வது? எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் இதை எவ்வாறு கூறுவது?நாமாக இருந்தால் இப்படிக் குழம்புவோம்.அனைத்தையும் அறிந்த இறைவனுக்கு இவ்வாறு குழப்பம் ஏதும் இல்லை. அவன் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய வகையில் கூற வல்லவன்.

அரபு மொழியில் 'கல்ப்' என்ற சொல்லுக்கு மூளை என்ற பொருளும் உள்ளது. இதயம் என்ற பொருளும் உள்ளது. அரபு இலக்கியங்களில் மூளையைக் குறிக்கவும் இதயத்தை குறிக்கவும் இச் சொல் பயன் படுத்தப் பட்டுள்ளது.மூளை தான் எல்லாக் காரியங்களையும் நிகழ்த்துகிறது என்பதைக் கண்டு பிடிக்கும் முன் பல நூறு ஆண்டுகளுக்கு முன் எழுதப் பட்ட அரபு அகராதி நூல்களில் (லிஸானுல் அரப், முக்தாருஸ் ஸஹாஹ்) சிந்திக்கும் திறனுக்கு மூளை இதயம் ஆகிய அர்த்தங்கள் இச் சொல்லுக்கு உள்ளன எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

மூளை, இதயம் ஆகிய இரண்டையும் குறிக்கக் கூடிய இந்தச் சொல்லை அல்லாஹ் தேர்ந்தெடுத்து பயன் படுத்தி இருக்கிறான். இதயத்தில் தான் இந்தக் காரியங்கள் நிகழ்கின்றன என்ற நம்பிக்கை நிலவிய காலத்தில் குர்ஆனுக்கு மொழி பெயர்ப்பு செய்தவர்கள் இச் சொல்லுக்கு இதயம் என்று மொழி பெயர்த்தார்கள். அவர்களும் திருக் குர்ஆன் உண்மையே கூறியது என்று கருதினார்கள். மூளைதான் எல்லாக் காரியத்தையும் செய்கிறது என்ற நம்பிக்கை நிலவுகின்ற இக் காலத்தில் அந்தச் சொல்லுக்கு மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அப் பொருளும் அச் சொல்லுக்கு அகராதியில் உள்ள பொருள் தான். 5:25- 7;179- 9;87- 9;93- 17;46- 18;57- 63;3 ஆகிய வசனங்களில் சிந்தனையுடன் தொடர்பு படுத்தியே கல்ப் என்ற வார்த்தை பயன் படுத்தப் பட்டுள்ளது. இதயங்கள் என்று இங்கே தமிழாக்கம் செய்வது தவறாகும்.

33;10- 40;18 ஆகிய இரண்டு இடங்களில் மட்டுமே இச் சொல் இதயம் என்ற பொருளில் பயன் படுத்தப் பட்டுள்ளது.ஏனைய எல்லா இடங்களிலும் மூளை என்ற பொருளில் தான் பயன் படுத்தப் பட்டுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இடங்களிலும் மூளை என்றே பொருள் கொள்ள வேண்டும். அரபு மூலச் சொல் அதற்கு இடம் தரக் கூடிய வகையில் தான் அமைந்துள்ளது.எதை நீங்கள் பலவீனமாகக் கருதி கேள்வி கேட்கிறீர்களோ அதுவே இவ்வேதம் இறைவனுடையது என்பதை நிரூபிக்கும் பலமாக அமைந்துள்ளது.

மூளை தான் மனிதனை முழுமையாக இயக்குகிறது என்ற உண்மை இறுதிக் காலத்தில் கண்டு பிடிக்கப் படும் என்ற உண்மையை அறிந்தவனால்தான் இவ்வாறு கூற முடியும். அது அருளப்பட்ட காலத்திலும் மறுக்கப் பட முடியாமல் காப்பாற்றி- உண்மை கண்டறியப் படும் காலத்திலும் அதை மேலும் உண்மைப் படுத்தக் கூடிய வகையில் வார்த்தைகளைப் பயன் படுத்தி இருப்பது இறை வேதம் என்பதற்கான நிரூபணங்களில் ஒன்றாக உள்ளது.

Wednesday, March 22, 2006

தறகொலைகளைத் தடுக்க முடியாதா?

தறகொலைகளைத் தடுக்க முடியாதா?

'நம்பிக்கைக் கொண்டோரே!உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்! இறைவன் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.' (குர்ஆன் 4;29)

இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் மறைவு நமக்கு மிகப் பெரும் இழப்பு. அவருக்கு வாழ்க்கையில் என்ன குறை?புகழ் பணம் அனைத்தும் இருந்தும் மனதில் அமைதி இல்லை. மன அழுத்தம் ஏற்பட்டு அதை தீர்க்க வழி தெரியாமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சினிமாத் துறையில் ஜீ.வி யைத் தெரியாதவர்கள் இல்லை எனலாம். பணம் புகழ் அழகிய குடும்ப பந்தங்கள் இருந்தும் கடன் தொல்லை என்ற பிரச்னையால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலையை நாடுகிறார். பணம் படைத்த அவரின் உறவினர்கள் நினைத்து இருந்தால் அவரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் அவரை இழந்திருக்கவும் மாட்டோம்.

அதே போல் எங்கள் ஊரை ஒட்டி இருக்கும் அரிசன காலனியை எடுத்துக் கொள்வோம். எங்கள் ஊரை அடுத்து ரயில்வே நிலையமும் உள்ளது. மாதத்துக்கு ஒரு தற்கொலை எப்படியும் இந்த ரயில் நிலையத்தில் காண முடியும்.சமீபத்தில் கூட 40 வயதே ஆன எனக்கு மிகவும் பரிச்சயமான அருள் என்பவரின் உயிர் தற்கொலையில் பிரிந்தது என்று கேள்விப் பட்டு மிகவும் வருத்தம் உற்றேன். என் சிறு வயதிலிருந்தே இது போன்ற தற் கொலைகளை எங்கள் ஊர் ரயில்வே நிலையத்தில் அதிகம் நேரில் பார்த்துள்ளேன..

எங்களோடு ஒன்றாக படித்த எங்கள் உடற் பயிற்சி ஆசிரியரின் மகன் தற்கொலை செய்து கொண்டான். பத்தாம் வகுப்பு தேறிய சமயம் தான் விரும்பிய பாடம் எடுக்க முடியவிலலையே என்ற ஏக்கம் தான் அவனின் தற்கொலைக்கு காரணம். எப்பொழுதும் கல கலப்பாக இருந்த அவனின் உருவம் இனனும் என் மனதை விட்டு அகல மறுக்கிறது.

படித்தவர்கள் அதிகம் வாழும் கேரளாவில் தற்கொலைகள் அதிகம் ஏன் நடக்கிறது? என்ற ஆய்வு மேற் கொண்டனர். அதே போல் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏன் தற்கொலைகள் நடப்பதில்லை என்ற ஆய்வும் மேற் கொள்ளப் பட்டது. ஆய்வின் முடிவில் 'முஸ்லிம்கள் தங்களுக்கு எத்தகைய இழப்பு ஏற்பட்டாலும் 'அனைத்தும் இறைவன் செயல்' என்று சொல்லி விட்டு வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். இந்த இறை நம்பிக்கை யினால்தான் இஸ்லாமிய சமூகத்தில் தற்கொலைகள் நடப்பது மிகவும் அரிதாக இருக்கிறது' என்ற உண்மை வெளிப் பட்டது.

'ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப் படுவதை அவர்கள் உணர மாட்டார்களா? பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதும் இல்லை.' (குர்ஆன் 9;126)

'ஒவ்வொரு துன்பத்திலுருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான்' (குர்ஆன் 6;64)

உர்வா இப்னு ஜூபைர் என்ற நபித் தோழர் போரில் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அன்றைய தினமே அவருடைய மகன்களில் ஒருவரும் இறந்து விட்டார் என்ற செய்தி சொல்லப் படுகிறது. அப்பொழுது அவர் சொன்னார், 'இறைவா!எல்லாப் புகழும் உனக்கே!எதையும் என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டால், அதை விட சிறந்ததை எனக்குத் தந்து விடுவாய்.கடுமையான இழப்புகளைக் கொடுத்து என்னை சோதித்து உன்னுடைய பாதுகாவலில் என்னை வைத்திருக்கிறாய்.என் உடம்பில் இரண்டு கால்களும் இரண்டு கைகளும் இருக்க அதில் ஒன்றை மட்டும் எடுத்து என் மேல்கருணை புரிந்தாய். அதே போல் என்னுடைய மகன்களில் ஒருவனை மட்டும் அழைத்துக் கொண்டு மற்ற மூவரையும் என்னுடன் வாழச் செய்திருக்கும் உன் கருணையே கருணை' என்று பிரார்த்தித்தார்.

இப்னு அப்பாஸ் என்ற நபித் தோழர் தன் கண் பார்வையை இழந்த போது சொன்னார் 'இறைவன் என் இரு கண்களின் பார்வையை எடுத்து விட்டாலும் என் இதயமும் மூளையும் அதை விட பிரகாசமடையும். இறைவனை துதித்துக் கொண்டிருக்கும்.என் நாக்கு உறையில் இடப் படாத கத்தியைப் போன்றும் இருக்கும்' என்று சொன்னார். முகமது நபி தன் தோழர்களை எந்த அளவு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடக் கூடியவர்களாக மாற்றியிருக்கிறார் என்று வியந்து போகிறோம்.

உலக சுகாதாரக் கழகம் வெளியிடும் அறிக்கையில் 1973-ல் உலகின் மொத்த ஜனத் தொகையில் 3 சதவீதம் பேர் மன அழுத்த்தால் பாதிக்கப் பட்டிருந்தனர் என்று கூறுகிறது. இது 1978-ல் 5மூ மாறியது. அமெரிக்கர்களில் 4-ல் ஒருவர் இது போன்ற மன அழுத்தத்திற்கு ஆளாவதாக புள்ளி விபரம் சோல்கிறது. சிகாகோ நகரில் 1981 -ல் கூடிய மன நல கருத்தரங்கில் நூறு மில்லியன் மக்கள் உலகம் முழுவதும்மன அழுத்தம் அல்லது மன நோய்க்கு ஆளாகிறார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.அமெரிக்கா ஜப்பான் அய்ரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் தான் இக்குறை அதிகம் காணப்படுகிறது.கடவுள் மறுப்பு கொள்கை இந் நாடுகளில் வளர்ந்ததால் தான் இது போன்ற பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது.

முஸ்லிம்களிலும் ஒரு சிலர் இது போன்ற மன நோயாளிகளை ஏர்வாடி. நாகூர் போன்ற தர்காக்களில் கட்டி வைத்து அவர்களின் நோயை அதிகம் ஆக்குகிறார்கள். ஏர்வாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் மன நோயாளிகள் கரிக் கட்டை ஆனதை நாம் பார்த்தோம். நோயாளிகளின் உயிரையே காப்பாற்றாத அந்த நல்லடியார் நோயை எப்படி குணப் படுத்துவார் என்று ஏனோ இவர்கள் சிந்திப்பது இல்லை. ஏர்வாடியைப் போன்று நாகூரிலும் மற்ற தர்காக்களிலும் கட்டிப் போடப் பட்டிருக்கும் மன நோயாளிகளை அரசாங்கமே தன் பொறுப்பில் எடுத்து மன நல காப்பகத்தில் சேர்த்தால் பலரின் வாழ்வு பிரகாசமடையும்.

பைபிளிலும் இந்து மத வேதங்களிலும் தற்கொலை செய்து கொள்வது பாவம் என்றே வருவதாக நினைக்கிறேன்.எது நடந்தாலும் படைத்த இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு எதிர் நீச்சல் போடக் கற்றுக் கொண்டு விட்டால் நோடிப் பொழுதில் நம் மனச் சுமை இறங்கி விடும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி மன நல மருத்துவரின் ஆலோசனையையும் கேட்டு வருவது நல்லது.

'கடவுளே உனக்கு கண் இல்லையா? என் மகன் தானா உனக்கு கிடைத்தான்' என்று இறைவனை திட்டுவதிலிருந்தும்

'கடவுள் என் வாழ்வில் கடன் காரன்:
கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும்'
என்று த்ததுவங்கள்பேசித் ்் திரியாமலும்

'கடவுளை மற: மனிதனை நினை' என்று சொல்லாமல், 'கடவுளையும் நினை, மனிதனையும் நினை' என்று சொல்வோமாக என்று கூறி இப் பதிவை முடிக்கிறேன்.

மனிதன் குரங்கிலிருந்தா பிறந்தான்?

மனிதன் குரங்கிலிருந்தா பிறந்தான்?

இறைவனின் படைப்பிலேயே மிகவும் உயர் தரமான படைப்பாக உள்ளது நம் இனமான மனித இனம். ஆனால் டார்வின் இந்த உயரிய படைப்பு குரங்கிலிருந்து வந்தது என்று கூறுகிறார். இதை பல படித்தவர்களும் நம்புவதுதான் வேடிக்கை! இதற்கு மாற்றமான கருத்து உடைய ஒரு சில சிந்தனையாளர்களின் கருத்துக்களைத் தருகிறேன். இந்த கருத்துக்களை மறுப்பவர்கள் பின்னூட்டம் இட்டால் தக்க பதில் தர முயற்ச்சிக்கிறேன்.

பி.ஜெய்னுல்லாபுதீன் தனது விளக்கத்தில் கூறும்போது:
function framePrint(whichFrame){
parent[whichFrame].focus();
parent[whichFrame].print();
}


பரிணாம வளர்ச்சியின் மூலம் உருவானவன்தான் மனிதன் என்பது டார்வினின் தத்துவம். கடவுளை மறுப்பதற்கு இந்தத் தத்துவம் உதவுவதால் டார்வினின் ் கொள்கையைச் சிலர் ஏற்றி போற்றுகிறார்களே தவிர, அது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் பட்ட உண்மை அல்ல. வெறும் அனுமானமே ஆகும்.சில உயிரினங்கள் காலப் போக்கில் வேறு உயிரினமாக வளர்ச்சி பெற்று வந்தன. பல கோடி ஆண்டுகளில் குரங்கு என்ற இனமாக ஆனது. அதன் பின்னர் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் குரங்கு பரிணாம வளர்ச்சி பெற்று மனிதன் என்ற படைப்பு உருவானது என்பது தான் டார்வினின் கொள்கை.

எந்த குரங்காவது மனிதனாக மாறியதைப் பார்த்து விட்டு டார்வின் இப்படி முடிவு செய்தானா என்றால் இல்லை. குரங்குக்கும் மனிதனுக்கும் இடையே உருவ அமைப்பில் மிகுந்த ஒற்றுமை இருப்பது தான் டார்வினின் இந்த அனுமானத்துக்குக் காரணமாக அமைந்தது எனலாம். அறிவியல் அறிவு குறைவாக இருந்த காலத்தில் வாழ்ந்தவர்கள் இதை நம்பினால் அதில் ஆச்சர்யம் இல்லை. இன்றைய அறிவியல் உலகில் அதை நம்புவது பைத்தியக்காரத் தனமாகவே இருக்கும்.

உருவ அமைப்பில் வேண்டுமானால் குரங்கு மனிதனுக்கு நெருக்கமான வடிவம் பெற்றிருக்கலாம்.ஒரு மனிதனின் இரத்தத்தை இன்னொரு மனிதனுக்குச் செலுத்துகின்ற காலத்தில் நாம் வாழ்கிறோம். மனித இரத்தங்கள் கிடைக்காத சூழ்நிலையில் வேறு உயிரினங்களின் இரத்தத்தை மனிதனுக்குச் செலுத்த முடியுமா என்று ஆய்வு செய்தனர். குரங்கு உட்பட எந்தப் பிராணியின் இரத்தமும் மனிதனின் இரத்தத்துக்கு நெருக்கமானதாக இல்லை. பன்றியின் இரத்தம் தான் மனிதனின் இரத்தத்துக்கு அதிக அளவு பொருந்தி போகிறது. அநேகமாக எதிர் காலத்தில் மனிதனுக்கு பன்றியின் இரத்தம் செலுத்தப்பட முடியும், அல்லது முடியாது என்று முடிவு செய்தாலும் எந்த உயிரினங்களின் இரத்தத்தை விடவும் பன்றியின் இரத்தம் மனிதனின் இரத்த்த்துக்கு நெருக்கமாக உள்ளது என்பது நிரூபிக்கப் பட்ட உண்மை. மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் பெற்றவனாக இருந்தால் குரங்கின் இரத்தம் தான் மனிதனுடைய இரத்தத்துக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்க வேண்டும். ஆடு மாடு போன்ற பிராணிகளின் இரத்தம் மனித இரத்த்த்தில் இருந்து எந்தளவு வேறுபடுகிறதோ அதே அளவுக்கு குரங்கின் இரத்தமும் மனித இரத்தத்தில் இருந்து வேறு பட்டுள்ளது. குரங்கிலிருந்து மனிதன் தோன்றியிருக்கவே முடியாது என்பதற்கு மறுக்க இயலாத சான்றாக இந்த கண்டு பிடிப்பு அமைந்துள்ளது. இன்றைய காலத்தில் தகப்பன் வடிவத்தில் மகன் இல்லாத போது டி.என்.ஏ சோதனை மூலம் 'இவன்தான் தந்தை ' என்று முடிவு செய்கிறோம். வடிவத்தை கணக்கில் கொள்வதில்லை.

அதே போல் மனிதனுக்கு மாற்று இருதயத்தை வேறு உயிரினங்களிலிருந்து பெற முடியுமா? என்று ஆராய்ச்சி செய்த போது ஆச்சரியமாக பன்றியின் இதயம் பொருந்தி போவதை தற்போது கண்டு பிடித்திருக்கிறார்கள். இதிலும் மனிதனின் இதயம் குரங்கோடு ஒத்துப் போகவில்லை.

இன்றைய மனிதன் மரபணுச் சோதனையில் முன்னேறி விட்டான். ஜீனோம் இரகசியத்தைக் கண்டு பிடித்து விட்டான். குரங்கின் மரபனுக்களையும் மனிதனின் மரபணுக்களையும் சோதனை செய்து பார்த்து இரண்டும் ஏறத்தாழ ஒத்திருக்கின்றது என்று நிரூபணம் செய்யப் பட்டிருந்தாலோ வேறு எந்தப் பிராணியின் மரபணுவும்மனிதனின் மரபணுவுக்கு ஒத்ததாக இல்லை என்று உறுதி செய்யப் பட்டிருந்தாலோ டார்வினின் தத்துவத்தை ஓரளவுக்காவது நம்பலாம். அப்படி எந்த நிரூபணமும் இல்லை. இன்னும் சொல்வதானால் ஜீனோம் கண்டு பிடிப்புக்குப் பின் முழு மனித குலமும் ஒரு ஆப்ரிக்கத் தாயிலிருந்து தோன்றியவர்கள்தான் என்பதைக் கண்டு பிடித்து விட்டனர்.

இதே போல் யானையின் தும்பிக்கை ஏன் நீண்டது?

கங்காருவின் வயிற்றில் ஏன் பை வந்தது?

ஒட்டக சிவிங்கியின் கழுத்து ஏன் நீண்டது?

போன்றவற்றிர்க்கு எல்லாம் டார்வின் என்ன பதில் வைத்துள்ளார்?

கடவுளை மறுப்பதற்காக எத்தகைய உளறலையும் தூக்கிப் பிடிப்பது தான் அறிவுடமையா?பரிணாம வளர்ச்சியினால் பல கோடி ஆண்டுகளில் குரங்கு மனிதனாக மாறியது என்றால் அந்த வளர்ச்சி தொடராமல் நின்று போனதற்கு என்ன காரணம்? தினம் சில குரங்குகள் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மனிதனாக மாறிக் கொண்டே இருக்க வேண்டும்: அல்லது தினந்தோறும் சில தாய்க் குரங்குகள் மனிதக் குழந்தைகளைப் பெற்றெடுக்க வேண்டும். ஏன் அது தொடரவில்லை? இதற்கு டார்வினிஸ்டுகளிடம் பதில் இல்லை. மனிதன் பரிணாமம் பெற்று ஏன் இன்னொரு மேல் நிலையை அடையக் காணோம் என்பதற்கும் உளறல் தான் பதிலாகக் கிடைக்கிறது.

மனிதனின் இரத்தம் இதயம்' சிறுநீரகம் போன்ற உள் அமைப்புகள ும் மரபணுக்களும் மனிதன் தனி இனம் என்பதையும் எந்த இனத்தில் இருந்தும் அவன் பரிணாமம் பெற்றிருக்க முடியாது என்பதையும் சந்தேகமற நிரூபித்த பின்பும் டார்வினின் உளறலை தூக்கிப் பிடிப்பவர்கள் சிந்தனையாளர்களாக இருக்க மாட்டார்கள்.