Followers

Wednesday, March 29, 2017

ஒன்பது நாட்கள் இறைச்சி கடைகளை மூட வேண்டுமாம்!

ஒன்பது நாட்கள் இறைச்சி கடைகளை மூட வேண்டுமாம்!

வட மாநிலங்களில் நவராத்திரி கொண்டாடப்படுகிறது. 'இந்த நாட்களில் இந்துக்கள் மாமிசம் சாப்பிட மாட்டார்கள்: எனவே மீன், ஆடு, மாடு, கோழி போன்றவைகளை விற்கும் மாமிசக் கடைகளை கண்டிப்பாக மூட வேண்டும். இல்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று சிவசேனா மும்பையில் மிரட்டல் விடுத்துள்ளது. 300க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் தற்போது பயத்தில் மூடப்பட்டுள்ளன.

பல வெளிநாட்டவர் தொழில் நிமித்தம் வந்து போகும் ஒரு நகரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு. ரமலான் மாதத்தில் பகலில் முஸ்லிம்கள் சாப்பிட மாட்டார்கள். எனவே அனைத்து ஹோட்டல்களையும் மூடுங்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ அது போன்றதே இதுவும்.

அனைத்து பள்ளிகளிலும் யோகா முக்கிய பாடமாக வைக்க வேண்டும் என்று இன்று யோகி ஆதித்யநாத் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வன்முறையைக் கொண்டு எந்த சித்தாந்தத்தையும் மக்களிடம் புகுத்தி விட முடியாது. இதனை இந்துத்வாவாதிகள் என்றுதான் உணரப் போகிறார்களோ.

மோடி ஆட்சியில் இருக்கும் காலத்திலேயே நமது நாட்டை சோமாலியா ரேஞ்சுக்கு கொண்டு வந்து விடுவார்கள் இந்த 'டேஷ் பக்தர்கள்'. :-)

Tuesday, March 28, 2017

'வீடு வாடகைக்குதானே கேட்டேன்? - மனுஷ்ய புத்திரன்'வீடு வாடகைக்குதானே கேட்டேன்? - மனுஷ்ய புத்திரன்

என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். கிடைக்கவில்லை. என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்?

நான் பதினைந்து வருடங்களாகக் குடியிருந்த வீட்டை அதன் உரிமையாளர் விற்பதால் காலி செய்ய வேண்டிய கட்டாயம். உண்மையில், என் வாழ்வில் அழியாத நினைவுகளைக் கொண்ட வீடு இது. இந்த வீட்டில்தான் ஒருகாலத்தில் நடிகை வடிவுக்கரசி இருந்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் பற்றிக்கூட ‘வடிவுக்கரசி இருந்த வீடு’ என்று ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ஆனால், ‘மனுஷ்ய புத்திரன் இருந்த வீடு’ என்று யாரோ ஒரு வாசகன் சொல்ல இந்த வீடு இருக்கப்போவதில்லை. இரண்டு வருடங்களுக்குள் இங்கே ஒரு மூன்றடுக்கு ஃப்ளாட் வந்துவிடும்.

கடந்த இரண்டு மாதங்களாக வீடு தேடி அலைகிறேன். நான் வீடு பார்க்கப்போகிற எல்லா இடத்திலும் என்னை வீட்டு உரிமையாளர்களுக்கு நன்கு தெரிந்திருக்கிறது. ‘டி.வி.யில் உங்க நிகழ்ச்சின்னா விரும்பிப் பார்ப்போம்’ என்று அன்பாகச் சொல்லி காபி கொடுக்கிறார்கள். ஆனால், எல்லா இடங்களிலும் நான் புரிந்துகொள்ள முடியாத ஏதோ ஒரு காரணத்தால், எனக்கு வீடு மறுக்கப்படுகிறது.

சார், நீங்க முஸ்லிமா?

ஒரு வீட்டு உரிமையாளர் விளம்பரத்தில் கொடுத்திருந்ததைவிட இன்னொரு மடங்கு வாடகை சொன்னார். கேட்டால், “அது பிரின்டிங் மிஸ்டேக்” என்றார். என்னை நிராகரிக்க வேண்டும் என்பதே அவரது விருப்பம். பிறகு, அதே வாடகை குறிப்பிடப்பட்டு, அதே விளம்பரம் அடுத்த வாரமும் வந்திருந்தது.

நான்கு நாளைக்கு முன்னர் வீடு பார்த்தேன். வீடு எனக்கு ஓரளவு பிடித்திருந்தது. வீட்டுத் தரகர் உரிமையாளரிடம் அந்த வீட்டை நான்தான் பார்த்திருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். வீட்டு உரிமையாளருக்கு ஒரே மகிழ்ச்சியாம். ‘‘அவர் எழுத்தையெல்லாம் படித்திருக்கிறோம்.. அவர் எங்க வீட்டுக்குக் குடிவருவது எங்களுக்குத்தான் பெருமை..’’ என்று அவர் சொன்னதாகச் சொல்லிய வீட்டுத் தரகர் ‘‘நாளைக்கே போய் அட்வான்ஸ் கொடுத்துவிடுவோம்’’ என்றார். அவர் சொன்ன நாளில் வீட்டு உரிமையாளரைச் சந்திக்க நான் ஆயத்தமாகிக்கொண்டிருந்தபோது தொங்கிய முகத்துடன் தரகர் வந்தார், ‘‘சார், நீங்க முஸ்லிமா? உங்க நிஜப் பெயர் என்ன?’’ என்றார்.

நான் அவரை உற்றுப் பார்த்தேன் ‘‘இல்ல சார், வீட்டு ஓனர்கிட்ட நீங்க முஸ்லிம் என்று யாரோ சொல்லியிருக்காங்க..” என்று இழுத்தார்.‘‘ஏன், நான் அசைவம் என்பதால் கொடுக்க மாட்டார்களா?’’ என்று கேட்டேன். ‘‘அசைவம் எல்லாம் பிரச்சினை இல்லை.. நீங்க முஸ்லிம் என்பதுதான் பிரச்சினை’’ என்றார்.

நான் உடைந்துபோனேன். ஒருவகையில், அந்த வீட்டு உரிமையாளரைப் பாராட்ட வேண்டும். அவர் மற்றவர்களைப் போல மழுப்பாமல், நேரடியாக உண்மையான காரணத்தை நேர்மையாகக் கூறிவிட்டார். நான் எழுதிய இரண்டாயிரம் கவிதைகளை நினைத்துப்பார்த்தேன். மதச்சார்பின்மைக் காகவும் சமூக நீதிக்காகவும் நான் எழுதிய ஆயிரக்கணக்கான பக்கங்கள், பேசிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்கள் அனைத்தையும் நினைத்துப் பார்த்தேன். ஆயிரம் இருந்தென்ன? நான் இப்போது எதுவுமே இல்லை; வெறும் ஒரு முஸ்லிம்… அவ்வளவுதானே!

ஒரு கணம், என் வாழ்க்கையில் நான் எதையெல்லாம் போராடிப் பெற்றேனோ அது அனைத்தும் என்னிடமிருந்து பறிக்கப்பட்ட உணர்வு. நான் இப்போது வெறுக்கப்படும் ஒரு பெயர், ஒரு அடையாளம் மட்டுமே. இரண்டு நாளைக்கு முன்புகூட, மதவாதத்தைப் பரப்புகிற கட்சிகளுக்குத் தமிழக மக்களிடம் எந்த இடமும் இல்லை என்று ஒரு தொலைக்காட்சியில் சவால் விட்டுவிட்டு வந்தேன். ஆனால், என் நம்பிக்கைகள் தோற்றுவிடுமோ என்று இன்று நான் அஞ்சுகிறேன்.

கடக்க முடியாத தண்டனை

நான் என் சொந்தப் பெயரை ஒருபோதும் மறைத்ததில்லை. ‘ஹமீது’ என்றுதான் என்னைப் பல இடங்களில் சுஜாதா குறிப்பிட்டிருக்கிறார். முகநூலில் அந்தப் பெயரில்தான் எழுதுகிறேன். ஆனால், என்னை ‘மனுஷ்ய புத்திரன்’ என்கிற பொது அடையாளத்தில் மட்டும் அறிபவர்கள், என் சொந்தப் பெயரைக் கேட்டதும் அடையும் சங்கடம் என்னை மிகவும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இத்தனைக்கும் இஸ்லாமியப் பண்பாடு சார்ந்து ஒரு வாக்கியம்கூட என் கவிதைகளில் இல்லை. முகநூலில் என் அளவுக்கு மதவெறியர்களால் தாக்கப்பட்ட இன்னொரு எழுத்தாளரோ சமூகச் செயல் பாட்டாளரோ யாரும் இல்லை. இந்துத்துவா அடிப்படைவாதிகள் மட்டுமல்ல, இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் இந்தத் தாக்குதலைச் செய்திருக்கிறார்கள்.

மூன்று வயதில் எனக்கு நடக்க முடியாமல்போனது. என் உடல் சார்ந்த குறைபாட்டை நான் கடந்துவிட்டேன். ஆனால், என் பிறப்பு சார்ந்த பெயருக்காக எனக்குக் கொடுக்கப்படும் தண்டனைகளை என்னால் கடக்க முடியவில்லை. ஒரு எழுத்தாளனாக, ஒரு ஊடகவியலாளனாக, ஒரு பதிப்பாளனாக, ஒரு மிகப்பெரிய அரசியல் இயக்கத்தைச் சேர்ந்தவனாக மைய நீரோட்டத்தில் நான் எவ்வளவு கரைந்து நின்றபோதிலும் திடீரென ஒரு குரல் கேட்கிறது.. ‘‘வெளியே போ!’’

என்ன ஆனது பாரம்பரியம்?

சென்னையில் பெரும் வெள்ளம் சூழ்ந்த போது, வீடுகளிலும் கோயில்களிலும் புகுந்த சாக்கடையைச் சுத்தப்படுத்திய இஸ்லாமியர்கள் பாராட்டப்பட்டார்கள். அந்த நல்லுணர்வுகள் சாக்கடைத் தண்ணீரைப் போல இவ்வளவு சீக்கிரம் வடிந்துவிட்டனவா என்று தோன்றியது. வட இந்தியாவில் இருப்பதுபோல தமிழகத் தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் தனித் தனியான குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டிருப்பதில்லை. தமிழகத்துக்கு என்று தனிப் பாரம்பரியமும் நல்லுறவு நல்லுணர்வும் இருக்கிறது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு வீடு தரக் கூடாது என்ற மனோபாவம் இவ்வளவு ஆழமாக இங்கே எப்போது ஊடுருவியது? இல்லாமியர்கள் அசுத்தமானவர்கள், வன்முறை யாளர்கள், தேச விரோதிகள் என்ற பிரச்சாரம் சமூகத்தின் அடியாழம் வரை எப்போது ஆழமாகப் பரவியது? தெரியவில்லை!

எனக்கு ஒரு பெயர் இருப்பதுதான் பிரச்சினையா அல்லது நான் இருப்பதே பிரச்சினையா என்று குழப்பமாக இருக்கிறது. இந்த மொழிக்காகவும் பண்பாட்டுக்காகவும் நான் செய்திருக்கும் வேலைகளுக்காக நான் எந்த பிரதியுபகாரமும் கேட்கவில்லை. வாடகைக்கு ஒரு வீடுதான் கேட்கிறேன். என் போன்ற சமூகப் பொதுவெளியில் வசிக்கும் ஒருவனுக்கே இதுதான் நிலை என்றால், எந்தப் பின்புலமும் அற்ற வெறும் பெயராக மட்டுமே அறியப்படும் சாமானிய முஸ்லிம்களின் நிலை என்னவாக இருக்கும்? தமிழ்ப் பொதுச்சமூகம் யோசிக்க வேண்டும்.

எனக்கு இங்கு இடமில்லையா என்று இதுவரை கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது முதல் முறையாகக் கேட்கிறேன், ‘‘எங்களுக்கு இங்கு இடமில்லையா?’’

- மனுஷ்ய புத்திரன்,

கவிஞர், பதிப்பாளர்,

நன்றி
தமிழ் இந்து நாளிதழ்
29-03-2017

119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்.....119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்

‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத செயல்களை வெளிப்படையாக அவர் ஒப்புக் கொண்டதோடு இதற்கு ஆர்.எஸ்.எஸ்.சின் முழு ஆசீர்வாதமும் உண்டு என்று அவர் கூறினார். டெல்லி மாநகர் நீதிமன்றத்திலும் இதேபோல் ஒப்புதல் வாக்குமூலம் தந்த பிறகும் இப்போது டெல்லி சிறப்பு நீதிமன்றம் அவரை நிரபராதி என்றும் அவருக்கு எதிராக போதுமான சாட்சியங்கள் இல்லை என்றும் விடுதலை செய்துவிட்டது.

‘காரவன்’ ஏட்டில் அவரது பேட்டி வெளி வந்தவுடன், வழக்கம்போல் ஆர்.எஸ்.எஸ்.சும், பா.ஜ.க.வும் இவை உண்மைக்கு மாறானவை என மறுத்தன. அதைத் தொடர்ந்து அவரது பேட்டியின் ஒலி நாடா இணையத்தில் ஒலிப்பதிவாக வெளியிடப்பட்டது. இப்போதும் http/www.caravanmagazin.in/swamiassemanda-interviews என்ற தளத்தில் அதை கேட்கலாம்.

நரேந்திர மோடியின் முழுமையான ஆதரவு பெற்றவர் அசீமானந்தா. அவர் இப்போது வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் ஒப்புதல் வாக்குமூலத்தை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முழுமையாக வெளியிடுகிறது. அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

நாங்கள் பேசப் பேச, அசீமானந்தா மேலும் மேலும் சகஜமாகவும் வெளிப்படையாகவும் பேச ஆரம்பித்தார். அவர் வாழ்க்கை பற்றி அவர் சொன்ன விஷயங்கள் குறிப்பிடத்தக்கவை மட்டுமல்ல மனதை தொல்லை செய்பவையும்கூட. தான் வாழ்க்கையில் பின்பற்றிய கொள்கைகள் பற்றியும், தான் செய்த வன்முறை சம்பவங்கள் பற்றியும் அவருக்கு திமிரான ஒரு பெருமிதம் இருந்தது. நாற்பது வருடங்களாக அவர் ஹிந்து தேசியவாதத்தை ஊக்குவித்தவர். அதில் பெரும் காலத்தை அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பழங்குடியினர் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் பணியாற்றுவதில் செலவிட்டு சங்கத்தின் ஹிந்துத்துவ கொள்கையையும் ஹிந்து ராஷ்டிரத் துக்கான பார்வையையும் பரப்பினார். இப்போது அறுபது வயதைக் கடந்துவிட்ட அவர் தன் கொள்கைகளை ஒருபோதும் நீர்க்கவிட்டதில்லை.

காந்தியைக் கொன்ற பிறகு கைதான நாதுராம் கோட்சேவும் அவரது கூட்டாளி நாராயண் ஆப்தேவும் 1949இல் தூக்கிலிடப்பட்டு தகனம் செய்யப்பட்டது அம்பாலா சிறையில்தான். இன்னொரு கூட்டாளியான கோட்சேவின் சகோதரர் கோபாலுக்கு 18 வருட சிறை தண்டனை தரப்பட்டது. ‘என்னை கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அசீமானந்தா. இன்று இந்துத்துவ பயங்கரவாதத்தின் மிகப் பிரபலமான முகம் அசீமானந்தாதான். வெடிகுண்டு நிகழ்ச்சிகள் நடப்பதற்கு பல வருடங்கள் முன்னர் அவரை சந்தித்திருந்த பத்திரிகையாளர்கள் எல்லாரும் என்னிடம் அவரை சகிப்புத் தன்மையே இல்லாத மிகவும் திமிரான ஒரு மனிதர் என்று வர்ணித் திருந்தார்கள். நான் இப்போது அந்த சிறையின் இருண்ட அலுவலக அறையில் சந்தித்தது சிறை வாசத்தால் சாதுவாக்கப்பட்ட, அதே சமயம் தன் செயல்கள் பற்றி எந்த வருத்தமும் இல்லாத ஒருவரை. “எனக்கு என்ன நடந்தாலும், அது ஹிந்துக்களுக்கு நல்லதுதான்” என்று சொன்ன அசீமானந்தா அவருக்கு இந்த வழக்கில் கிடைக்கும் எந்த தண்டனையானாலும், அது ‘ஹிந்துக்களை பொங்கி எழச் செய்யும்’ என்று நம்புகிறார்.

விசாரித்த அத்தனை அமைப்புகளும் இந்த தாக்குதல்களை திட்டமிடுவதில் அசீமானந்தா தான் முக்கிய பங்காற்றியவர் என்று சொல்லியுள்ளன. திட்டமிடும் கூட்டங்கள் நடத்தியது, எங்கே யாரை தாக்க வேண்டும் என்று தேர்வு செய்தது, குண்டு தயாரிப்புக்கு நிதி அளித்தது, குண்டு வைக்கவும் வெடிக்கவும் வேலை செய்தோருக்கு உதவியும் அடைக்கலமும் கொடுத்தது என்று பல வேலைகளைத் தான் செய்ததாக அசீமானந்தாவே ஒப்புக் கொண்டிருக்கிறார்.

டிசம்பர் 2010லும் ஜனவரி 2011லும் அசீமானந்தா டெல்லியிலும் ஹரியானாவிலுமாக இரு முறை கொடுத்த சட்டப்பூர்வமான ஒப்புதல் வாக்குமூலங் களில் தான் தாக்குதல்களை திட்டமிட்டதை ஒப்புக் கொண்டிருக்கிறார். இவ்வாறு ஒப்புதல் வாக்குமூலம் தந்தபோது, அசீமானந்தா தனக்கு வழக்கறிஞர் தேவையில்லை என்று மறுத்து விட்டார். ஒவ்வொரு முறை வாக்குமூலம் கொடுப்பதற்கு முன்னரும் அவர் விசாரணை அதிகாரிகள் நெருங்க முடியாத பாதுகாப்பில் 48 மணி நேரம் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சுயமாக சிந்தித்து மனதை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு அப்போது அவருக்கு இருக்கவே செய்தது. இருமுறையும் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட அவர் முடிவு செய்தார். நீதிமன்றத்தில் அதைப் பதிவு செய்தார்.

அவருடைய வாக்குமூலங்களிலும், அவரது இரு கூட்டாளிகளின் வாக்குமூலங்களிலும் இந்த தாக்குதல்கள், ஆர்.எஸ்.எஸ்.சின் மூத்த உறுப்பினர் ஒருவருக்குத் தெரிந்தே இவை திட்டமிடப்பட்டன என்று சொல்லப்பட்டிருக்கிறது.

நன்றி: ‘நரேந்திர மோடி ஆதரவு பெற்ற ஒரு காவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்கு மூலம்’ நூலிலிருந்து

(தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர்கள் ஞாநி, நரேன் ராஜகோபாலன்)

Sunday, March 26, 2017

விளையும் பயிர் முளையிலே தெரியும்.....

'மில்லி கெஜட்' ஆங்கில பத்திரிக்கைக்கு உதவ தயாரா?'மில்லி கெஜட்' ஆங்கில பத்திரிக்கைக்கு உதவ தயாரா?

பல வருடங்கள் சிறந்த சேவை புரிந்து வந்த இஸ்லாமிய ஊடகமான மில்லி கெஜட் தனது ஆங்கில பதிப்பை போதிய வருவாய் இல்லாததால் நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது. ஜபருல் இஸ்லாம் கான் அவர்களால் வெற்றிகரமாக இத்தனை ஆண்டு காலம் நடத்தி வந்தது பாராட்டப்பட வேண்டியது. இதனை நிறுத்த நாம் அனுமதிக்கக் கூடாது. எத்தனையோ செல்வந்தர்கள் நம்மிடையே உள்ளனர். 10 பேர் சேர்ந்தால் அவரது செலவினங்களை ஈடுகட்டி விட முடியும். நமது செல்வந்தர்கள் உதவ முன் வருவார்களா?

English newspaper Milli Gazette Says Goodbye to Readers

We realise that The Milli Gazette was not fully discharging the service needed by the 200 million Muslims of India. Muslims need to have a number of Hindi and English newspapers, FM radio stations and TV channels of their own.

By Ashraf Ali Bastawi (Asia Times) Translated by UrduMediaMonitor.com
Published Online: Feb 05, 2017

New Delhi: At the end of December 2016 came the news that the 17-year-old publication The Milli Gazette has said goodbye to its readers. The 16-31 December issue was the last. This is indeed a painful news.

Founder Editor Zafarul-Islam Khan brought it out in January 2000 with high hopes expecting that through this publication he would be able to make the voice of 200 million Indian Muslim community heard. Otherwise, it was not being given coverage in the national media. He thought through an English publication he will be able to convey the Indian Muslim voice to millions outside India as well. But for how long could this journey continue in the wilderness of media world without the badly needed resources? After issuing several mayday calls during these past 17 years and when no meaningful rescue could be found, at last he announced that this journey could not be continued any further.
Asia Times thought it necessary to talk in detail to the editor of The Milli Gazette and learn about the difficulties he had to face and what efforts he made to overcome these difficulties.

Following is a rather detailed interview of Dr Zafarul-Islam Khan by Ashraf Ali Bastawi:

Q.: Towards the end of December we got the sad news that The Milli Gazette will not be published anymore. What was the reason behind this decision?

A.: There isn’t any one reason for its closure. As time passed by, financial deficit and other issues continued accumulating creating more and more hardships. In 2000, when we brought out the newspaper, it was easy to employ someone for Rs 3000 but now you can’t do it by paying even Rs 15,000. Added with this is the fact that the community doesn't support this publication by either buying it or advertising in it. So, in a situation like this, for how long could we continue? However, we regularly used to receive postcards requesting for complimentary copies. For our newspaper, we never publicly asked for donations. Some individuals at times did support us on their own. But we did not make open appeals. The monthly deficit that used to be Rs. 30,000 in the beginning went up to Rs. 1.50 lakh a month and certainly this was much beyond our ability to bear. It were these circumstances that forced us to stop publishing it.

The fact is that we had in the very initial three years realised the difficulties ahead, but somehow we managed to continue our journey. Three years ago our perseverance started to wane but owing to appeals by readers and promises for help from individuals we thought it appropriate to keep marching forward.

At present, my health is not helping me either and because of this some of the other tasks that I should be doing are suffering. For the last one year we had been advertising for an editor to suit our needs but we failed to find one.

Meanwhile, there also came a time when, in order to control our expenses, we had to reduce the pages from 32 to 24 but that didn’t help either. I have throughout tried my best to make sure that The Milli Gazette remains independent of any influence whatsoever. When we were in our third year of publishing, The Milli Gazette we received an offer on behalf of the Indian army in Kashmir to publish “news items” which they would provide us and for this they would pay us Rs. 40,000 a month. We rejected that offer outright making it clear to them that we would publish all the facts, good and bad, including the army’s excesses in Kashmir. The latest offer of this kind came recently when a political party offered to invest money in The Milli Gazette. We rejected their offer then and there, without giving it a second thought.


Q.: What were the circumstances when you started to publish The Milli Gazette? What were the objectives before you?

A.: I started The Milli Gazette in January 2000 when I had a good job and I was working as the India correspondent of the Saudi daily, Al-Riyadh. This was a well-paid job that continued for some six years. But when I, among other issues, candidly raised the issue of the excesses meted out to Muslims in Gujarat and Kashmir etc, this caused problems. One day the Saudi ambassador in Delhi called me at the embassy and told me bluntly, “We are trying to build good relations with India and you are trying to spoil these relations.” He asked me not to write anything that was against the Indian Government. Such gag order was not acceptable to me. He must have also spoken to the Al-Riyadh newspaper. Soon small complaints started to come from the newspaper and eventually I quit the job.

My main reason for bringing out The Milli Gazette was that I was pained to see that most of the news regarding the Muslim community was ignored by the mainstream media and only Urdu newspapers published them. You don’t find in the English-language newspapers. I have always said that whenever you pick up an English-language Indian newspaper it seems as if the 200-million-strong community of Muslims did not exist at all. Had they been sleeping the whole previous day and did nothing at all? This can’t be possible. Many must have done things worth mentioning. Someone might have written a book or done something which should be acknowledged. Someone might have won an award in recognition of his meritorious services. Someone might have founded an educational institution like a school, college or university. But the national, I mean non-Urdu, media seems to have no interest in Muslims. But, of course, if someone has given triple talaq to his wife or some such mischief then this will be big news for the national media. Having this scenario in our mind we decided to bring out a newspaper wherein we could publish and celebrate the achievements and contributions of the IndianMuslim community. We regularly published such news until the last issue.

Many a time we sent our reporters for ground reporting at far-away places to cover issues like terror or riots. For example, I led a delegation to Kushinagar to dig out facts of Hindutva terror there, sent a reporter to Indore when SIMI people were arrested and to from Imphal when the English language daily Pioneer published a false report claiming that efforts were being made to turn the region into an ‘Islamic State’. We did some ground reporting which included a quote from the Director General of Police of Imphal saying that there was no truth in the allegation. We kept an eye on the misreporting in the national media and tried to present the truth. We also translated into English news and views from the Urdu press. This is what the aim of The Milli Gazette was.

Q.:What was the nature of difficulties faced by The Milli Gazette and how you maintained your standards?

A.: We never tried to fill pages with fillers. We used to change even the lead story in the last night before going to press. We did our best to present the problems faced by the Muslims of India and the world. But we have realised during the past 17 years that the Muslim communityperhaps did not need what we were trying to do. Every week or so you find one or two letters in Urdu newspapers lamenting on the need for Muslims to have their own newspaper in English or Hindi or to start a Muslim TV channel. But if Muslims do not buy a Muslim newspaper in English or Hindi, how will it survive? If we were printing 30-40,000 copies of The Milli Gazette and people bought them, where was the need to close it down? The community needs to give it a thought why Muslim India and Meantime from Calicut ceased publication? Or why Syed Hamid’s Nation and The World is in its present state; perhaps it too has ceased publication.. Oh, yes, others did buy our newspapers to know what we were writing or what Muslims were doing or thinking. RSS outfits subscribed to our newspaper regularly.

Q.: Have there been any painful moments in your 17 year-long journey?

A.:Yes, there were. On two occasions we were deeply pained when because of misunderstanding our reports hurt others. We did commit mistakes but for this we apologised in the newspaper. On one occasion a gentleman approached us with an article and we published it in good faith. Later, we found out that that was a personal issue and the gentleman wanted to throw mud at others. Although we did not mean to harm anyone, still we offered written apology and published it in the newspaper. On three occasions over these past 17 years we thought of closing the newspaper due to our financial difficulties. When we started it, our plan was to make it self-sufficient in two-three years and hand it over to a group or institution to run it for the community.

Q.: Did you ever try to contact milli organisations and brief them about the difficulties you were facing?

A.: About one year ago I wrote to the heads of prominent milli organisations and briefed them about the difficulties the newspaper was facing and requested them to ponder over how to continue it and how they can help in saving it from closure. But most of the organisations did not reply. Two or three persons responded. One of them said that his organisation would increase the amount paid for their regular advertisement. He promised that this cooperation would continue insisting that ‘MG is an asset of the community and should not be stopped at any cost.’ But within months, this organisation started reducing the promised amount and at last reduced it to even less that the cost of its advertisement. This is our situation. One doesn’t know what to say about it.

The fact is that our religious leadership has not taught the community, in the manner it needed to be done, to spend on milli needs. Our religious leadership does not have broad-minded thinking. Their thinking works around the promotion of their own organisations and on how to keep these alive. To them anything else has no importance. What they have taught to the millat is to help and support their respective organisations and that is all that is needed.

The problem is that our religious leadership does not think it necessary to talk to and consult with people in the community who are actively working in various fields outside their own organisations. Their consultations and activities remain confined within their own organisations. Obviously, there are a lot of talented individuals in our community in the field of science, finance and media, etc.. These talented people have to be identified and should therefore not only be consulted but their help sought to redress the community’s problems. They should be consulted and listened to in the fields of their expertise. All milli organisations are devoid of such a thinking. We need to seriously sit down and think over why is a community of 200 million people so weak and ineffective?

Q.: Recently in a programme held in Saudi Arabia you came heavy on the milli leadership and asked for a change…
A.:Yes. What I said was that without changing the aged leadership no solution for Indian Muslims can be found. How can an elderly person in his seventies and eighties lead the community? It is a big question. We should take a lesson from the young leadership of the West. America's new President Donald Trump is the oldest of all the presidents they have had so far. They have had 43 year-old presidents as well. Some time ago the British Foreign Secretary resigned from his post. When asked about the reasons behind his decision, he said he had reached 53 and his party members thought that he was too old for the job. In the West they have a culture of having young leadership whereas in India, old people occupy the leading positions. This is not only our milli character but the culture of the whole country. The harm is that at that at an advanced age one starts hesitating in taking decisions and putting in the physical effort needed for the job. Indecisiveness or hesitation in making decisions can be dangerous. At that age a different psychology develops and one does not want to take risks.

Q.: What would be the centre of your activities after having closed down The Milli Gazette?

A.:As a matter of fact, because of my preoccupation with The Milli Gazette, several of my other projects were getting affected. I wanted to do certain things on priority. For example, to bringing out a white paper on terrorism that we had announced to bring out years ago. But meanwhile due to the preparations for the golden jubilee celebrations of the All India Muslim Majlis-e-Mushawrat, of which I was the national president, many of these things got bogged down and delayed. Now, I am fully involved with the white paper and, insha Allah, I hope within the next four or five months it should be out.

This white paper would be of great benefit and would help the Millat to reply to the false terror allegations against it. It would cover police excesses, fake encounters, custodial killings and analysis of black laws like Pota, TADA, Misa, NSA etc. which were introduced by different governments. Through this white paper an effort would be made to arouse the country’s conscience. This idea came to my mind in 2005.
So, my first preference as of now is the white paper. Then the second project is the revision of the English translation of the Holy Quran by Abdullah Yusuf Ali. This is replete with mistakes and does’t go well with the demands of the present time. This has been bothering me for more than the last three decades.

I realise that The Milli Gazette was not fully discharging the service needed by the 200 million Muslims of India. Muslims need to have a number of Hindi and English newspapers, FM radio stations and TV channels of their own. This is not a difficult task. The community can do it. Our people need to make media a priority. The community is doing well in Kerala in this respect.

Milli Gazette’s internet edition will continue. Print media has its own importance while online media has its own place. It is easier and manageable to save the archives of print media. However, electronic media is fast and enjoys much more reach. Prominent electronic media sites started by Indian Muslims have not progressed.

Big commercial companies allocate some funds in the name of social responsibility. I did not try this. I could not convince myself to spread my hands before anyone. However, I did send out general letters or emails seeking support. Those who used to write for the print edition will continue to write for the website.

(Translated by Urdu Media Monitor from Asia Times). Read the original Urdu interview here.

Saturday, March 25, 2017

" பணக்கார முஸ்லிம்கள் விட்டு கொடுக்க வேண்டும்,''


, பணக்கார முஸ்லிம்கள் விட்டு கொடுக்க வேண்டும்,''

லக்னோ : ''ஹஜ் யாத்திரைக்கு, அரசு வழங்கும் மானியத்தை, பணக்கார முஸ்லிம்கள் விட்டு கொடுக்க வேண்டும்,'' என, உத்தர பிரதேச அமைச்சர், மோஷின் ராசா கூறினார்.

உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர், மோஷின் ராசா கூறியதாவது:மத்திய அரசின் வழியில், உ.பி., அரசும், ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற கொள்கையின் கீழ் செயல்படுகிறது; இதற்கு உதவும் வகையில், ஹஜ் யாத்திரைக்கு, அரசு வழங்கும் மானியத்தை, பணக்கார முஸ்லிம்கள் விட்டுத்தர வேண்டும். அதன் மூலம் மாநிலத்தின் வளர்ச்சியில் பங்கேற்பதுடன், ஏழை முஸ்லிம்களும், ஹஜ் யாத்திரை மேற்கொள்ள உதவ முடியும்.

மாநிலத்தில், சட்டம் - ஒழுங்கை நிலை நிறுத்துவதுதான், முதல் பணி என, முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அதனால், சட்டம் - ஒழுங்கை, போலீசார் எளிதாக எடுத்து கொள்ளக் கூடாது. அதற்கு முக்கியத்துவம் கொடுத்து, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர்
26-03-2017

---------------------------------------------------------------------------------

'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை!

பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு? வசதியுடைய முஸ்லிம்களுக்குத்தானே கடமை' என்ற வாதத்தை வைக்கின்றனர். நியாயமான கோரிக்கையும் கூட. இது பற்றி இந்த பதிவில் அலசுவோம்.

கேரள ஹஜ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.அப்துல் ரஹீம் அவர்கள் தேஜஸ், மாத்யமம் மலையாள நாளிதழ்களில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

ஹஜ் மான்யம் என்று கேட்டவுடன் புனித பயணிகளை அரசு இலவசமாக அழைத்துச் செல்வதாகவோ அல்லது புனித யாத்திரைக்கு பெருந் தொகையை ஒதுக்குவதாகவோ பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் இதில் துளி கூட உண்மையில்லை.

மத்திய அரசின் கீழ் ஹஜ் கமிட்டி வழியாக செல்லும் ஒவ்வொரு புனித பயணியும் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக சராசரியாக ஒன்றே கால் லட்ச ரூபாய் கட்டுகிறார். இதில் விமானக் கட்டணம் தற்பொழுது 16 ஆயிரம் ஆகும். இது நிரந்தர கட்டணமாகும். விமான பயணத்திற்கு இதனை விட அதிக கட்டணம் தேவைப்பட்டால் அதனை அரசு வழங்கும். இதுதான் ஹஜ் மான்யம். இந்த மான்யமும் அரசின் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனியார் விமானங்களுக்கு கிடையாது.

உதாரணமாக...கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் கோழ்க்கோட்டில் இருந்து ஹஜ்ஜூக்கு புறப்படுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கோழிக் கோட்டிலிருந்து ஜெத்தா செல்வதற்கு ஏர் இந்தியா வசூலிக்கும் தொகை 17300 ரூபாய் ஆகும். (தற்போது சில ஆயிரங்கள் வித்தியாசப்படலாம்). இந்த தொகைப்படி ஒரு ஹஜ் பயணிக்காக அரசு செலுத்த வேண்டிய மானியத் தொகை வெறும் 1300 ரூபாய் மட்டுமே! (ஜெட் ஏர்வேஸின் விமானக் கட்டணத்தோடு ஒப்பிட்டால் ஒவ்வோர் ஹஜ் பயணிக்கும் ரூ 2000 அரசு திரும்ப தர வேண்டியிருக்கும்.

ஒன்றேகால் லட்ச ரூபாயை புனித ஹஜ் பயணத்திற்காக கட்டும் பயணி மேலதிகமான 1300 ரூபாயை கட்டத் தயங்குவாரா? அதனையும் நாங்களே வழங்குகிறோம் என்று ஹஜ் பயணிகள் கூறினாலும் அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. நாங்களே வழங்குகிறோம் என பிடிவாதம் பிடித்து வருகிறது. இங்கேதான் ஹஜ் மானியத்தின் பெயரால் அரசு நடத்தும் ஏமாற்று வித்தை அம்பலப்படுகிறது. அதாவது ஆரிய மூளை இங்குதான் வேலை செய்கிறது.

அது எப்படி என்று பார்ப்போமா!

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு கண்டு பிடித்த வழிதான் இந்த ஹஜ் மானியம் என்பது. ஹஜ் மானியத்தின் பெயரால் ஒரு பெருந்தொகையை அரசு ஏர் இந்தியாவுக்கு தானமாக வழங்குகிறது. முந்தய ஆண்டுகளை கவனித்தால் இது புரிய வரும். 2008 ஆம் ஆண்டு ஹஜ் மானியமாக 770 கோடி ரூபாய் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முந்தய வருடம் 2007 ஆம் ஆண்டு 595 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளின் புள்ளி விபரங்களை பெற முயற்சி மேற்கொண்டபோது அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தகவலை தர மறுக்கின்றனர். ஹஜ் ஒதுக்கீடு, நல்லெண்ண பிரதிநிதித்துவக் குழு ஆகியன தொடர்பான வழக்கில் தகவல்கள் ஒருக்கால் வெளியாகலாம்.

2008 ஆம் ஆண்டு 1.10 லட்சம் புனித பயணிகள் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக அரசு ஏர் இந்தியாவுக்கு மானியம் என்ற பெயரால் அளித்த தொகை 770 கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு புனித பயணிக்கும் 70 ஆயிரம் ரூபாய் வீதம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

எவ்வளவு கடுமையான சீசனாக இருந்தாலும் ஒரு புனித பயணிக்கு கோழிக்கோட்டில் இருந்து ஜெத்தவிற்கோ மதினாவிற்கோ சென்று விட்டு திரும்பி வர விமானக் கட்டணமாக ரூ 70 ஆயிரம் செலுத்தத் தேவையில்லை. விமானக் கட்டணத்திற்காக புனிதப் பயணிகள் அளிக்கும் 16 ஆயிரம் ரூபாயோடு சேர்த்து ரூ 770 கோடியை ஏர் இந்தியாவுக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு. பல பயணிகள் சவுதி விமானத்திலும் அனுப்பப்படுகின்றனர். அதற்கு மானியம் கிடையாது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் எழுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மானியமாக முஸ்லிம்களின் பெயரால் ஏர் இந்தியாவுக்கு அளிக்கிறது நமது கையாலாக அரசு.

ஏர் இந்தியாவில் பணி புரியும் நபர்களுக்கு நமது ஹஜ் மானியத் தொகை எப்படி அனுப்பப்படுகிறது என்பதை பார்த்தோம். நம் ரத்தத்தை உறிஞ்சி ஏர் இந்தியா குடும்பங்கள் சகல வசதிகளையும் பெற்று வாழ்கின்றன.

இனி வரும் காலங்களில் ஹஜ் புனித பயணம் செல்வோர் 'எங்களுக்கு மானியத் தொகை வேண்டாம்! அப்படி கொடுக்கும் பணத்தில் நாங்கள் ஹஜ் செய்ய விரும்பவில்லை' என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்கள் இதற்கான போராட்டங்களை அறிவிக்க வேண்டும். வழக்கும் தொடர வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த ஹஜ் மானியத்தில் உண்டு கொழித்த அனைத்து கருப்பு ஆடுகளும் யார் என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.

முஸ்லிம்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் சற்றும் சளைத்ததல்ல. ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இத்தனை ஆண்டுகள் ஹஜ் மானியம் யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது? இந்த மானிய பணத்தை இது நாள் வரை அனுபவித்தவர்கள் யார்? யார்? என்ற விபரங்களைக் கேட்க வேண்டும். முக்கியமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்.

ஆக....இஸ்லாமியரின் ஹஜ் மானிய பணத்தில் தனது ஜீவனை நடத்திக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம் என்பது இதன் மூலம் விளங்குகிறது.. இஸ்லாமியருக்கு உதவினோம் என்ற பெயரும் வந்து விடும்: ஏர் இந்தியாவின் ஊழியர்கள் சுகமான வாழ்வுக்கும் அடித்தளம் இட்டது போல் ஆகி விடும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ! :-(

தர்ஹாவுக்கு மோடி போர்வை காணிக்கை!தர்ஹாவுக்கு மோடி போர்வை காணிக்கை!

புதுடில்லி: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் உள்ள காஜா மொய்னுத்தீன் சிஸ்தியின் தர்காவுக்கு பிரதமர் மோடி மலர்ப் போர்வையை காணிக்கையாக வழங்கினார்.

நீல நிறத்தில் வண்ண பூக்கள் நெய்த விலை உயர்ந்த அந்த மலர்ப்போர்வையை மத்திய அமைச்சர்கள் அப்பாஸ் நக்வி, தர்மேந்திர பிரதான் ஆகியோரிடம் வழங்கினார்.

அஜ்மீர் நகருக்கு செல்லும் அமைச்சர்கள் , நிர்வாகிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் தனது வாழ்த்து செய்தியையும் அனுப்பியுள்ளார்.

தினமலர்
25-03-2017

-----------------------------------------

தர்ஹாக்களும் அதற்கு போர்வை போர்த்துவதும் இஸ்லாத்தில் இல்லாத பழக்கங்கள். இது ஒரு புறம் இருக்க...

இவர் இவ்வாறு போர்வை போர்த்தி குஜராத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட முஸ்லிமகளின் உயிர்களை மறக்கடிக்கப் பார்க்கிறார். இவரது மரணத்திற்கு பிறகு இவரைப் படைத்த இறைவனிடத்தில் பதிலளித்துக் கொள்வார்.

Thursday, March 23, 2017

அபுதாஹிரின் மனைவி கண்ணீர் மல்கப்பேட்டி...
கோவையில் அபுதாகிர் என்ற இளைஞரை சட்டத்திற்கு முரணாக துப்பாக்கி முனையில் கடத்தி சென்று, கடுமையாக சித்திரவதை செய்து பொய்யாக கொலை வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட சி.பி.சி.ஐ.டி காவல்துறை.....


கோவையில் கைது செய்யப்பட்ட அபுதாஹிரின் மனைவி கண்ணீர் மல்கப்பேட்டி...

எங்கள் பொறுமையின் அர்த்தம் கோழைத்தனம் என்பதல்ல...

நாங்கள் பொறுமையிழக்க வேண்டும் என்ற உங்கள் சதித்திட்டங்களை உணர்ந்தே இருப்பதால்..

நாங்கள் பொறுமையிழந்து விடமாட்டோம்..

அதே நேரம் போராட்டங்கள் மூலம் அநீதிக்கு எதிராய் போராடுவோம்..

அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்போம்..

லண்டன் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்?லண்டன் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது யார்?

லண்டன்: பிரிட்டன் பார்லி. வளாகத்தில் துபாக்கிச்சூடு சம்பவம் நடந்தது. இதில் 4 பேர் பலியாயினர். 20 பேர் காயமடைந்தனர்.

பிரிட்டன் பார்லி., கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் பார்லி. வாளகம் , வெஸ்ட்மின்ஸ்டர் பாலம் அருகே இன்று(மார்ச்.,22) மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் பலியானதாகவும் 20 பேர் காயமடைந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவ இடத்திற்கு ஸ்காட்லாந்து யார்டு போலீசார் விரைந்துள்ளனர். சம்பவத்தையடுத்து பார்லி. வளாகத்தினை நோக்கி செல்லும் சாலைகள் மூடப்பட்டன. வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மணை மூடப்பட்டது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தையடுத்து அப்பகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டதையடுத்து பார்லி. கூட்டத்தொடர் நிறுத்தப்பட்டது.
தினமலர்
23-03-2017
இந்த கொடும்பாதக செயலை செய்தது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. பிரச்னை விசாரணையில் உள்ளது. ஆனால் அதற்குள்ளாக சில அம்பிகள் முந்திரி கொட்டைதனமாக தினமலரில் பதிவிடுவதைப் பாருங்கள்.

யார் காரணம் ????
Nallavan Nallavan - kolkata,இந்தியா

------------------------------------------------------------------------------------------------------------

வழக்கம் போல் மூர்க்கர்கள் தான் அவர்களை விட்டால் யாரு கொடும் செயல்கள் இந்த உலகத்தில் செய்வார்கள்....
குரங்கு குப்பன் - chennai,இந்தியா


வேறு யார், அமைதி மார்க்கம் தான்...

Bhaskaran Ramasamy - abu dhabi,ஐக்கிய அரபு நாடுகள்அமைதி மார்க்கம் தான் காரணம்...
P. SIV GOWRI - chennai,இந்தியா

பொய்களை இந்துத்வாவாதிகள் எப்படி திட்டமிட்டு பரப்புகிறார்கள் பாருங்கள். உலகம் முழுக்க இப்படித்தான் பொய்களை பரப்புகிறார்கள்.

தோழர் ஃபாரூக்கின் கொலையை பற்றி.....

தோழர் ஃபாரூக்கின் கொலையை வைத்து ஒரு கருத்து பரவலாக பரப்பப்படுகிறது. அதாவது முஸ்லிம்கள் இந்துக்களோடு இரண்டற கலக்க வேண்டும். இல்லையென்றால் அவர்களை ஆர்எஸ்எஸ் வென்றெடுத்து விடும் என்று பதிவிடுகின்றனர்.

ஃபாரூக்கை கொன்ற கோழைகளை கண்டுபிடித்து அவர்களுக்கு தூக்கு தண்டனையும் வாங்கிக் கொடுப்போம். அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது. ஃபாரூக் நாத்திகத்தை நோக்கி ஓடியதற்கு இஸ்லாமியர்களான நாம் தான் முழு முதற் காரணம். தர்ஹா வணக்கம் ஹனபி, ஷாபி, ஹம்பலி, மாலிக்கி, ஷியா என்று பல சாதிகளையும் பிரிவுகளையும் உண்டாக்கினால் சிந்திப்பவன் கண்டிப்பாக வெறுத்து ஓடுவான். 25 வருடங்களுக்கு முன்பு எனது எண்ணமும் நாத்திகத்தை நோக்கியே சென்றன. இறைவனின் கிருபையால் ஏகத்துவ சிந்தனையை சகோ பிஜே மூலம் இறைவன் எனக்குள் ஏற்படுத்தினான். எல்லா புகழும் இறைவனுக்கே!

ஃபாரூக் போன்ற வழி தவறி சென்ற தோழர்களை இஸ்லாத்துக்குள் கருத்துக்களின் மூலம் கொண்டு வருவோம். இஸ்லாம் சொல்வதும் அதைத்தான்.

ஃபாரூக்கை கொன்றது யார் என்பது தெரியாத நிலையில் பலரின் சந்தேகம் முஸ்லிம்களை நோக்கியே வருகிறது. தமிழகத்தில் காலூன்ற நாத்திகர்களை வென்றெடுக்க கூலிப் படை மூலம் ஆர்எஸ்எஸூம் செய்திருக்கலாம். உண்மை குற்றவாளிகள் பிடுபடும் வரை நாம் பொறுத்திருப்போம்.

நாம் மொழியால் தமிழர்கள்: இனத்தால் திராவிடர்கள்: வாழும் தேசத்தால் இந்தியர்கள்: இறை மார்க்கத்தை பின்பற்றுவதில் முஸ்லிம்கள். இதில் எது ஒன்றையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்ந்து தொப்புள் கொடி உறவான சகோதர மதத்தவர்களோடு சகோதரத்துவத்தைப் பேணி இன்முகத்தோடு வாழ்வோம்.

இன்று தமிழகத்தில் ரத்த தானம் செய்வதில் கடந்த 10 வருடங்களாக சிறுபான்மையினரான முஸ்லிகளே முதலிடத்தில் இருக்கின்றனர். முஸ்லிம்கள் நடத்தும் இலவச ஆம்புலன்ஸ் வசதி மூலம் சகோதர இந்து மதத்தவர்களே அதிகம் பலன் பெறுகின்றனர். மழை வெள்ளம் புயல் என்ற இயற்கை பேரிடர்களில் தங்கள் உயிரைக் கொடுத்து இந்துக்களை காப்பதில் முஸ்லிமகளே முன்னணியில் இருக்கின்றனர். இதனை சமீபத்தில் சென்னையில் நம் கண்ணெதிரேயே கண்டோம். பெரும்பாலான முஸ்லிமகளின் நிலை இதுதான்.

தமிழரின் பண்பாட்டை பேணுவதற்கோ தமிழில் பெயர் வைப்பதற்கோ இஸ்லாம் எந்த வகையில் தடை சொல்லவில்லை. ஆனால் அதில் ஆரிய கலாசாரம் கலவாமல் இருக்க வேண்டும். அன்னிய மதத்தவனாக இருந்தாலும் பக்கத்து வீட்டிலுள்ளவனுக்கு சமைத்ததை கொடுத்து பகிர்ந்துண்டு வாழ வேண்டும் என்று சொல்கிறது இஸ்லாம்.

வன்முறையை கையில் எடுத்தவன் அந்த வன்முறையாலேயே அழிவான். எல்லா மதங்களும் மார்க்கங்களும் அன்பையே போதிக்கின்றன. அன்பு வழி நடந்து நாமும் மகிழ்ச்சியோடு இருந்து மற்றவர்களையும் மகிழ்ச்சிக்குள்ளாக்குவோம்.


பி.ஜெய்னுல்லாபுதீனுடன் ஒரு நேர்முகம்! - நியூஸ் 18


Wednesday, March 22, 2017

'ஜெய் ஸ்ரீராம் சொல்'

'வந்தே மாதரம் சொல்'என்று இஸ்லாமிய சிறுவர்களை அடித்து கட்டாயப்படுத்தும் சங் பரிவார் கும்பல். சங் பரிவார கும்பலின் அழிவு காலம் மிக சமீபமாக நெருங்கி விட்டதாகவே உணருகிறேன். கட்டாயப்படுத்தி எந்த சித்தாந்தத்தையும் மக்கள் மனதில் புகுத்தி விட முடியாது. குஜராத் கலவரத்துக்குப் பின்னும் எந்த ஒரு முஸ்லிமும் இந்து மதத்தை நோக்கி ஓடி வரவில்லை. இது தான் உபியிலும் நிகழும்.

இந்துத்வாவாதிகளின் அடாவடிகளைக் கண்டு வெறுத்து இந்து மக்களே இந்து மதத்தை உதறித் தள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

Tuesday, March 21, 2017

20 ஏக்கர் நிலம் ஒதுக்கி யோகி ஆதித்யநாத் உத்தரவு....

“ராமாயண அருங்காட்சியகம் அமைக்க 20 ஏக்கர் நிலம் ஒதுக்கி யோகி ஆதித்யநாத் உத்தரவு”

அருங்காட்சியகம் அமைத்து விட்டால் இனி உபியில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்து விடுமா? மிகவும் பின்தங்கிய மாநிலத்துக்கு முதல்வரின் முதல் கையொப்பம் எந்த பலனும் இல்லாத அருங்காட்சியகத்தை நோக்கி செல்கிறது.

பண்டாரங்களையும் சாமியார்களையும் முதல்வராக நியமித்தால் முன்னேற்றத் திட்டங்களா நமக்கு கிடைக்கும்?

தோழர் இரா. முருகவேள் -இன் பதிவு


தோழர் இரா. முருகவேள் -இன் பதிவு

தோழர் பாரூக்கின் கொலைக்குப் பிறகு நடந்த சில நிகழ்வுகள் மனநிலைகள் சரியாகப் பதிவு செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன்.

கொலைக்குக் கண்டனம் தெரிவித்து கு.ராமகிருஷ்ணன் தலைமையிலான பெரியார் தி.க தோழர்கள் கடந்த ஞாயிறு அன்று நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்பினர் அழைக்கப்படவில்லை. கொலைக்குப் பின்னால் அமைப்பு ஏதாவது இருக்கிறதா யார் காரணம் எனப்து தெளிவாகாத நிலையில் உணர்ச்சியமயான சூழலில் கொதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது பின்பு அனைவரையும் இணைத்து அடுத்த நிகழ்சி நடத்திக் கொள்ளலாம் என்று கருதியதாக தோழர் கு.ரா பின்பு தெரிவித்தார்.

ஆனால் மனித நேய மக்கள் கட்சி, , எஸ்டிபிஐ, வெல்பெர் பார்ட்டி, தமுமுக, பிஎஃப் ஐ போன்ற அமைப்பினர் தோழர் கு.ராமகிருஷ்ணனை தொலைபேசியில் அழைத்து தங்களையும் அழைக்க வேண்டும். தாங்களும் இந்தக் கொலையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். கொலையாளீகளைத் தண்டிக்கக் கோருகிறோம் என்று கூறினர்.

தங்களுக்கு அழைப்[பு இல்லாவிட்டாலும் பெயர் போடப்படாவிட்டாலும் தாங்களும் கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதாகவும் அது தங்கள் உரிமை என்றும் கூறினர்.

அத்ன் படியே அலி பாய், நாசர், ரஹீம், பாட்சித், போன்ற முக்கிய தலைவர்கள் உட்பட பல இஸ்லாமிய அமைப்பினர் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். தோழர் ராமகிருஷ்ணன் இதைக் குறிப்பிட்டு தனது உரையில் பேசினார்.

கடந்த இரண்டு நாட்களில் நான் சந்திக்க நேர்ந்த ஒவ்வொரு இஸ்லாமியரும் கவலையும் வருத்தமும் கொண்டிருப்பதைக் காண முடிந்தது. வெள்ளம், ஜல்லிக் கட்டு போன்ற நிகழ்வுகளின் போதெல்லாம் இஸ்லாமியர் ஆற்றிய சேவைகளால் பெற்ற நன்மதிப்பை இந்த வெறிச்செயல் கெடுக்கும் ஆபத்து உள்ளது என்ற வருத்தத்தைத் தெரிவித்தனர்.


பல்லாண்டுகள் சிறைகளில் கழித்து இறுகி்ப் போன தோழர்கள் கூட இது குறித்து வருத்தம் கொண்டிருந்தனர்.

நீதிமன்றத்தில் சரணடைந்தவர்கள் செல்போன் தொலைந்ததாகவும், இஸ்லாத்திற்காக கொலை செய்ததாகவும் கூறியதாக வெவ்வேறுவிதமான பதிவுகள் வந்த வண்ணமிருந்தன. ஆனால் ச்ரண்டர் பெட்டிஷன் எனபப்டும் சரண்டையும் மனுவில் நான் போலீஸால் கைது செய்யப்படலாம் என்ற சந்தேகம் இருப்பதால் சரண்டைகிறேன் என்ற மிக சாதாரணமான வாசகங்கள்தான் இருந்தன. பின்பு வழக்கு நடத்த வசதியாக இருக்கும் என்ற நோக்கில் வழக்குரைஞரால் வழக்கமாக எழுதப்பட்டவை. சரணடைந்தவர்கள் இதுவரை நீதிமன்றத்தில் எந்த வாக்குமூலமும் கொடுக்கவில்லை.

இருந்த போதும் சில இஸ்ஸாமிய இளஞர்களிடையே இணையத்தின் மூலம் புதிய புதிய பொருட்கொள்ளும் போக்குகள், இஸ்ஸாமிலிருந்து வெளியேறுபவர்களை முர்ஷத் என்ற முறையில் தண்டிக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் இருபதை உண்ர முடிந்தது என்று சிலர் கூறினர். உனது மதம் உனக்கு எனது மதம் எனக்கு என்பது வழக்கமானது. ஆனால் வெளியேறுபவர்களை அப்படிப் பார்க்க முடியாது என்பது முர்ஷத். (எனக்குப் புரிந்தவரை).

வெளிநாடுகள், மத்தியக் கிழக்குப் போர்க்களங்களில் இருந்து பரவும் இக்கருத்துக்களை மிக குறைந்த அளவுள்ள அறிவுஜீவி இளைஞர்கள் பரிசீலிக்கின்றனர் என்றனர். இஸ்லாமிய இயக்கங்கள் பதிலடி தருவதற்காகவும் உரிமைகளுக்குப் போராடவுமான அமைப்புகள். ஆனால் இந்தக் கருத்துக்கள் அறிவுத் தளத்தில் மத்தியதரவர்க்க அல்லது மேல்தட்டு வர்க்க இளஞர்களை எட்டுகிறது என்பதை இந்தக் கொலை காட்டுகிறது.

இந்தக் குழுக்கள் (அப்படி ஏதாவது இருந்தால்) ஒரு போதும் இஸ்லாமிய மக்கள் ஆதரவு பெற்றவையாக இருக்க முடியாது. இவர்கள் என்ன சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமிய சமூகம் இதை தனது நன்மைக்கான செயலாக ஏற்றுக் கொள்ளாது என்பது நண்பர்களின் கருத்து.

எண்ணிக்கையில் குறைவாக இருக்கும் இடதுசாரிகள் திகவினருக்கு நன்கறிந்த ஒரு தோழரின் இழப்பு பேரிழப்பு. கடும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியது.

கொலைகாரர்கள் மீதான தோழர்களின் வெறுப்பு ஒருபோதும் நம்மோடு இணைந்து நிற்கும் இஸ்லாமிய அமைப்புகள், நம்மோடு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் மீதான வெறுப்பாகவோ இடைவெளி ஏற்படுத்தக் கூடியதாகவோ மாறாது.

கொலைகாரகள் கடும் தண்டனை அடையவேண்டும் என்பது நமது கோரிக்கை. நம்மைப் போலவே கொலைகாரகளை வெறுக்கும் இஸ்ஸாமிய தோழர்களுடனான தோழமை தொடரச் செய்வதும் நமது கடமை. ஒருவிதத்தில் அவர்கள் நம்மை விட அதிக கவலை கொண்டுள்ளனர். கொலைகார்களையும் அந்த கருத்துக்களையும் தனிமைப்ப்டுத்த வேண்டும் என்பதிலும் அதீத ஆர்வம் கொண்டுள்ளனர்.

அடக்குமுறைகளை ஒன்றாக எதிர்கொள்ளும் தோழர்களுக்கிடையேயான ஒற்றுமையை ஒரு சில கொலைகாரர்கள் சிதைக்க அனுமதிக்கக் கூடாது.

பஞ்சாப்: அமைச்சராகவும் ஆகியுள்ளார் ரஜியா சுல்தானா!நடந்து முடிந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று அமைச்சராகவும் ஆகியுள்ளார் ரஜியா சுல்தானா!

வாழ்த்துக்கள் சகோதரி!

கோவை பாரூக் படுகொலை - சிறப்பு நேர் காணல்News 18 தொலைகாட்சியில்....

கோவை பாரூக் படுகொலை இது குறித்த சிறப்பு நேர் காணல்....!!

இறைவன் நாடினால் நாளை (22/3/2017) பகல் 2 மணி முதல் 3.30 வரை.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் பி.ஜெயினுலாப்தீன் அவர்களிடமும்,பெரியார் திராவிடர் கழகத்தின் விடுதலை ராஜேந்திரன் அவர்களிடமும் எடுக்கப்பட்ட நேர் காணல் ஒளிபரப்பாகும்.

காணத்தவறாதீர்கள்..

Monday, March 20, 2017

ஜாகிர் நாயக்கின் 18 கோடிரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன//மதபோதகர் ஜாகிர் நாயக்கின் 18 கோடிரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. //
-தினமலர்
20-03-2017

---------------------------------------------------------------

மதங்களுக்கிடையே ஒற்றுமையை உண்டாக்கி 'நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள்' என்று முழங்கியவரின் சொத்துக்கள் முடக்கம்.

முஸ்லிம் பெண்களை கற்பழியுங்கள் என்று பகிரங்கமாக சொன்ன யோகி ஆதித்யநாத் உபி முதல்வர்.

இந்திய நாடு தனது அழிவை இந்துத்வாவால் பெற்றுக் கொண்டுள்ளது. இது இந்து மதத்தை மேலும் அழிவுக்குள்ளாக்கும்.

குர்ஆனை ஓதி அதன்படி செயலாற்றும் இறைநம்பிக்கையாளர்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை ஓதி அதன்படி செயலாற்றும் இறைநம்பிக்கையாளர் எலுமிச்சை போன்றவர்; அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று. குர்ஆனை ஓதாமல் அதன்படி செயலாற்றி மட்டும் வருபவர், பேரீச்சம் (பழம்) போன்றவர். அதன் சுவை நன்று; (ஆனால்,) அதற்கு மணமில்லை. குர்ஆனை ஓதுகின்ற நயவஞ்சகனின் நிலை, துளசிச் செடியின் நிலைக்கு ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; அதன் சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் நிலை, குமட்டிக்காய் போன்றதாகும். அதன் சுவையும் கசப்பானது' அல்லது அருவருப்பானது.' அதன் வாடையும் வெறுப்பானது.

அறிவிப்பவா : அபூமூசா (ரலி),

நூல் : புகாரி (5059)

என்ன அழகிய உணவூட்டல்....என்ன அழகிய உணவூட்டல்....

என்ன அழகிய தாய்ப் பற்று......


“பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; இவற்றில் எதையும் நம் பதிவுப் புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டுவிடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்று சேர்க்கப்படும்” (அல்குர்ஆன்: 6:38)

நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்: ‘அல்லாஹ்வின் மீது எப்படி நம்பிக்கை வைக்க வேண்டுமோ அப்படி நீங்கள் நம்பிக்கை வைத்தால், அவன் பறவைகளுக்கு எப்படி உணவு வழங்குகிறானோ அப்படி உங்களுக்கும் வழங்குவான். அவை பசியோடு காலையில் வீட்டை விட்டு செல்கின்றன, மாலையில் வீடு திரும்பும்போது வயிறு நிறைந்து இருகின்றன.‘
[திர்மிதி]

Sunday, March 19, 2017

ஐரோப்பாவில் வரும் 2050 ஆம் வருட வாக்கில்....

ஐரோப்பாவில் வரும் 2050 ஆம் வருட வாக்கில் 10 சதவீதம் ஐரோப்பியர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என சிஎன்என் கணக்கெடுப்பு கூறுகிறது.

நைஜீரியாவில் நம்ம ஊர் ஜாகிர் நாயக்!

அமெரிக்காவின் நியூயார்க் ப்ரூக்ளினில் இஸ்லாமியர்

அமெரிக்காவின் நியூயார்க் ப்ரூக்ளினில் இடப் பற்றாக் குறையால் இறை வணக்கத்தை ரோட்டோரங்களில் நிறைவேற்றும் இஸ்லாமியர்.

எத்தனை ட்ரம்ப்கள் வந்தாலும் எத்தனை மோடிக்கள் வந்தாலும் இறைவனின் ஒளியை இந்த உலகமெங்கும் அந்த ஏக இறைவன் பூர்த்தியாக்கியே வைப்பான்.

இளையராஜா VS எஸ்பிபிஒரு படத்துக்கு இசை அமைத்து கொடுப்பதற்கு தயாரிப்பாளரிடம் பணம் வாங்குகிறார் இளையராஜா. அதோடு அவரது பணி முடிந்து விடுகிறது.

அதை விடுத்து 'எனது பாடல்களை எனது அனுமதியில்லாமல் நீ எப்படி மேடைகளில் பாடலாம்?' என்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு நோட்டீஸ் அனுப்புவது கொஞ்சமும் முதிர்ச்சியாகப்படவில்லை.

'இனி இளையராஜா பாடல்களை மேடைகளில் பாடப் போவதில்லை' என்று எஸ்பிபி கூறுவது இவரது முதிர்ச்சியைக் காட்டுகிறது.

Saturday, March 18, 2017

பசு வதைக்கு இனி ஆயுள் தண்டனையாம்!

பசு வதைக்கு இனி ஆயுள் தண்டனையாம்!

ஆமதாபாத் : குஜராத் மாநிலத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இங்கு, பசு வதை தடுப்புச் சட்டம் ஏற்கனவே அமலில் உள்ளது.

நரேந்திர மோடி, 2011ல் குஜராத் முதல்வராக இருந்தபோது, விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, பசுவை கொல்பவர்களுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்க வகை செய்யப்பட்டது.

தற்போதைய இந்த சட்டத்தில் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. பசு வதை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படும்.

-தினமலர்
19-03-2017

முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்று சொன்ன யோகி ஆதித்யநாத் உபி முதல்வர்.: 3000 அப்பாவி முஸ்லிம்கள் கொல்வதற்கு காரணமாயிருந்த மோடியும் அமீத்ஷாவும் முறையே பிரதமர் மற்றும் அமைச்சர். இறந்த மனிதர்களின் உடலை சுட்டு தின்று கொழிக்கும் அகோரி சாமியார்கள் புனிதர்கள். இனி இந்த நாடு என்னவெல்லாம் கொடுமைகளை சந்திக்கப் போகிறதோ பொறுத்திருந்து பார்ப்போம்.

அமீத்ஷா தனது வேலையை ஆரம்பித்து வைத்துள்ளார்!The Times of India .... dtd 16/03/2017 ........... Page No - 12

--------------------------------------

UP பேர்லி என்ற மாவட்டத்தில் உள்ள ஜியானக்லா என்ற ஊரில், முஸ்லிம்கள் ஊரை விட்டு வெளியேற வேண்டும், இல்லையென்றால் கடும் விளைவுகளை சந்திக்கவேண்டிய நிலை ஏற்படும் என்று எச்சரிக்கும் போஸ்டர்கள் காணப்பட்டதால் இஸ்லாமியர்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் அந்த போஸ்டர்களில் , அமெரிக்காவில் டிரம்ப் என்ன செய்ய விரும்புகிறாரோ அதையே நாங்கள் செய்ய விரும்புகிறோம் என்றும் முஸ்லிம்கள் இந்தாண்டு இறுதிக்குள் ஊரை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பயமுறுத்தும் விதமாக எழுதப்பட்டிருந்தது. இதுவரை இந்தக்கிராமத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது இல்லை என்றும், ஹோலிப்பண்டிகையை கூட அனைவரும் சேர்ந்துதான் கொண்டாடினோம் என்றும் கிராம மக்கள் கூறினர்.

இந்த நாட்டையும் இந்த நாட்டு மக்களையும் காவிகளின் சூழ்ச்சிகளிலிருந்து இறைவன்தான் காப்பாற்ற வேண்டும்.Thursday, March 16, 2017

தமிழக கிராம இளைஞர்கள் இவர்களைப் பின்பற்றுவார்களா?கடந்த 2016 ஆகஸ்ட் மாதத்தில் சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி

-------------------------------------------------புனரமைக்கப்பட்ட பிறகு நீர் சூழ்ந்து காணப்படும் புதுக்குறிச்சி ஏரி.

------------------------------------------------


பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் புதுக்குறிச்சியைச் சேர்ந்த நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் சேர்ந்து அங்கு உள்ள 110 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை சீரமைத்து வருவது குறித்து ‘தி இந்து’வில் ‘நீர்நிலைகளை மீட்டெடுக்க வழிகாட்டும் இளைஞர்கள்’ எனும் தலைப்பில் கடந்த செப்டம்பர் 25-ம் தேதி அன்று செய்தி வெளியாகியிருந்தது.

சீமைக் கருவேல மரக்காடாக காணப்பட்ட புதுக்குறிச்சி ஏரி இன்று நீர்சூழ காட்சியளிப்பதைப் பார்க்க கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. நீர்நிலைகளை மீட்க வேண்டும் என்கிற புதுக்குறிச்சி இளைஞர்களின் முயற்சிக்கு ஊக்க மளிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் க.நந்தகுமார் ஏரியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றி விற்பனை செய்து, அதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு ஏரியை சீரமைத்துக்கொள்ள கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டார்.

இதையடுத்து, இளைஞர்களும், ஊர் மக்களும் சேர்ந்து உத்வேகத் துடன் ஏரியைச் சீரமைத்தனர். ஏரி முழுவதும் இருந்த சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டன. ஏரியின் ஒரு பகுதியில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து ஊர் மக்கள் சிலர் விவசாயத்துக்குப் பயன்படுத்தினர். ஏரிக்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்கால்களைத் தூர்வாரி சீரமைத்தனர்.

வடகிழக்கு பருவமழை பெய்யும் காலத்தில் ஏரி நிறைந்துவிடும் என நினைத்து காத்திருந்தனர். ஆனால், எதிர்பார்த்தபடி பருவ மழை பெய்யவில்லை. எனினும், ஏரியைச் சீரமைத்த இளைஞர்கள் கடமையை செய்துவிட்டு நம்பிக் கையுடன் இருந்தனர்.

இந்நிலையில், நீண்ட நாட் களுக்குப் பிறகு மார்ச் 10-ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், புதுக் குறிச்சி ஏரியில் கணிசமான அளவு தண்ணீர் தேங்கியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரியில் தண்ணீரைப் பார்த்த அப்பகுதி முதியவர்கள், ஏரியைச் சீரமைத்த இளைஞர்களை வெகுவாகப் பாராட்டினர். புதுக்குறிச்சி ஏரியில் தண்ணீர் தேங்கியுள்ள தகவல் அறிந்து பல்வேறு பகுதி மக்கள் அங்கு வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

“ஏரிக்கரையைப் பலப்படுத்தும் விதமாக கரை பகுதிகளில் ஆயிரத் துக்கும் மேற்பட்ட பனை மரங்களை நடவு செய்துள்ளோம். வண்டல் மண் எடுக்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்தினால், மேலும் பல நீர்நிலைகளைச் சீரமைக்க மக்கள் தயாராக உள்ளனர்” என்கின்றனர் நம்மாழ்வார் இளைஞர் நற்பணி மன்ற நிர்வாகிகள்.

புதுக்குறிச்சி ஏரியைச் சீரமைக் கும் பணியின் பின்னணியில் இருந்து வழிகாட்டிய சூழலியல் செயல்பாட்டாளர் ரமேஷ்

கருப்பையா கூறும்போது, “அனைவருக்கும் பொதுவான தண்ணீரைச் சேமிக்கவும், பயன்படுத்தவும் நமது முன்னோர்கள் நீர்நிலைகளை உருவாக்கிக் கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றின் மகத்துவம் புரியாமல் நாம் நீர்நிலைகளைக் காப்பாற்றத் தவறியதால், தற் போது, தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கித் தவிக்கிறோம்.

நாம் நமது கடமையை செய் தால் இயற்கை அதன் கடமையை சற்று காலம் தாழ்த்தியாவது செய்யும் என்பதை புதுக்குறிச்சி ஏரி புனரமைப்பு நிகழ்வு நிரூபித் துள்ளது. இளைஞர்களின் முயற் சிக்கு இயற்கை தனது கொடையை சற்று தாமதமாக மழையாகப் பொழிந்து அளித்துள்ளது. அரசு

நிர்வாகம் நீர்நிலைகளைத் தூர் வாரும், புனரமைக்கும் என எதிர் பார்த்துக் காத்திராமல், அவரவர் பகுதியில் உள்ள நீர்நிலைகளைப் புனரமைக்க அந்தந்த பகுதி மக்கள் முன்வர வேண்டும். மக்களுக்கு தண்ணீரின் தேவையை கருத்தில் கொண்டு நீர்நிலைகளைத் தூர் வார, புனரமைக்க கூடுதல் நிதியை அரசு ஒதுக்கி, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

நன்றி:
தமிழ் இந்து நாளிதழ்
16-03-2017

இறந்த முத்துக் கிருஷ்ணனின் முகநூல் பதிவுகள்!

தலைநகர் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸ் கூறுகிறது.

அசைக்க முடியாத அளவுக்கு ஆழமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதியத்தையும் அதனால் ஒரு தலித் அடைய வேண்டிய அவமானங்கள் எத்தகையது என்பதையும் விவரிக்கின்றன முத்துக்கிருஷ்ணனின் பதிவுகள்.

முத்துக்கிருஷ்ணனின் தந்தை பெயர் ஜீவானந்தம். இந்த பதிவில் 'ஜீவாவின் மகன்' என்று தன்னைப் பற்றி பேசியிருக்கிறார் அவர்.

ஃபேஸ்புக் பதிவு:

"அந்த ஆடிட்டோரியத்தின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் திரை ஸ்கிரீன் ஜீவாவின் மகனைச் சற்றுப் பின்னோக்கி நினைவலைகளை அசைபோடச் செய்தது. 70எம்.எம். பெருந்திரையில் பிதாமகன் தமிழ் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் முடிந்தவுடன் மீண்டும் திரையில் வெண்ணிறம். அது அப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி. படத்தைப் பார்த்து முடித்த ஜீவாவின் மகன் கிட்சிப்பாளையத்துக்குச் சென்றார்.. மானா (மாட்டிறைச்சி வாங்க). மானா சந்தையில் வாங்கிய மாட்டிறைச்சியைக் கறுப்பு கேரி பேகில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அதை எடுத்துக்கொண்டு பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்றார் ஜீவாவின் மகன். அங்கிருந்து வலப்புறம் திரும்பினால் ஓரியன்டல் சக்தி திரையரங்கு. அதற்கு பக்கத்திலேயே லட்சுமி ஐஸ்க்ரீம் கடை. அங்கிருந்த எல்லோரது கண்களும் அந்த கறுப்பு கேரிபேக் மீதுதான். அந்த காலகட்டத்தில் கறுப்பு கேரி பேகில் மானா மட்டுமே பொட்டலம் கட்டப்படுவது வழக்கம். கறுப்பு கேரி பேகை பார்த்தவுடன் அனைவரது கண்களும் சட்டென திரும்பிக்கொள்ளும்.

அசராத ஜீவாவின் மகன், 5 கிலோ மானா அடங்கிய பையுடன் சேலம் பழைய பேருந்து கிளாக் ஹவுஸூக்கு வந்து சேர, சத்திரம், லீ பஜார் வழியில் செல்லும் பஸ்ஸுக்கான காத்திருப்பு ஆரம்பித்தது. அப்போது ஜீவாவின் மகன் பள்ளி நண்பன் ரமணா அவ்வழியாக வர. ஜீவாவின் மகன் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். ரமணாவுடன் பேசிக்கொண்டு 4 ரோடு நிறுத்தம் செல்லும் பொழுதை போக்கலாம் என்று. ஆனால், ரமணாவோ ஜீவாவின் மகன் கையிலிருந்த மானா பையைப் பார்த்தவுடன் பக்கத்திலேயே வரவில்லை.

6-ஏ பஸ் வர ஜீவாவின் மகன் அதில் ஏறிக்கொள்கிறார். பேருந்தின் நடுப்பகுதியில் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. சேலம் ஆட்சியர் அலுவலக நிறுத்தம் வந்தது. அங்கு வேலைபார்க்கும் அதிகாரி ஒருவர் பேருந்தில் ஏறினார். ஜீவா கையிலிருந்த மானா பை அவரது கண்ணில் தென்பட்டது. அதை பார்த்தபின் அவர் ஜீவா அருகே உட்காரவில்லை. இத்தனைக்கும் பஸ்ஸில் வேறு எங்கும் இடமில்லை. அடுத்ததாக கல்பனா தியேட்டர் நிறுத்தம். அங்கு ஒரு தம்பதி 3 வயது குழந்தையுடன் ஏறினர். உட்கார அவர்கள் இடம் தேடினர். ஜீவாவின் மகன் இருக்கையிலிருந்து எழுந்த நிற்க முடிவு செய்திருந்தார். காரணம், பஸ்ஸில் பயணித்த யாரும் ஜீவாவிடம் பேசத் தயாராக இல்லை என்பதே. அதனாலேயே அந்த தம்பதி உட்கார இடம் தேடியபோது இருக்கையிலிருந்து எழுந்து சென்று ஜீவா இடம் கொடுத்தார். ஆனால், மானா பையை பார்த்த அவர்கள் யாரும் உட்காரத் தயாராக இல்லை. அதற்குள் மானா வாசனை பஸ் முழுதும் பரவியிருந்தது. 4 ரோடு வரும்வரை அந்த இருக்கையில் யாருமே அமரவில்லை.

4 ரோடு நிறுத்ததுக்குப் பின் ஜீவாவின் மகன் படிக்கட்டில் நின்றுகொண்டார். தம்மன்னன் செட்டி ரோடுவரை படிக்கட்டில் பயணம் நீடித்தது. ஆனால், உடன் நின்றிருந்த பயணிகளுக்கு அவ்வளவு கோபம். மானா பையிலிருந்து வந்த வாசனையால் வந்த கோபம் அது. சிலர் ஜீவாவின் காலை (வேண்டுமென்றே) மிதித்தனர். சத்திரம் நிறுத்தத்தில் இறங்கிய ஜீவா லீ பஜாரை நோக்கி நடையைக் கட்டினார். சிலர் மானா பையைப் பார்த்து முகம் சுளித்தனர். சிலர் விலகி நடந்தனர். சிலர் சாலையைக் கடந்து எதிர்ப்புறத்துக்குச் சென்றுவிட்டனர்.

அந்தக் காலத்தில் மானாவுக்கு சமத்துவம் இல்லை. இப்போது மானாவே இல்லை. சமத்துவம் என்பதே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இப்போதும், எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது"

இப்படி அந்த ஃபேஸ்புக் பதிவு ஒரு கறுப்பு கேரி பேக் சாதிய அடையாளமாக இருப்பதை விவரித்திருக்கிறது.

'நான் இளவரசனாக விரும்பவில்லை'

இது முத்துக்கிருஷ்ணனின் முகநூலில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பகிரப்பட்ட நிலைத்தகவல். "தாஜ்மகால் முன்னால் காதலி இல்லாமல். கல்லூரியில் நான் கொண்ட ஒருதலை காதல் நினைவுக்கு வருகிறது. அந்தப் பெண்ணுக்கு இப்போது திருமணமாகிவிட்டது. நானும் எல்லாவற்றையும் கடந்துவந்துவிட்டேன். ஏனெனில், நான் இளவரசன், கோகுல்ராஜ், சங்கருக்கு நேர்ந்த அவலத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. நான் காதல் கொண்ட பெண்ணைவிட சிறந்த பெண் இந்த உலகத்தில் எனக்குக் கிடைப்பாள்.

இப்போது என் எண்ணமெல்லாம் எனது ஆயா செல்லம்மாள் பற்றியே இருக்கிறது. செல்லம்மாள்தான் என் ஆயா" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'கணிதமே வரலாறு'

எம்.ஃபில்., பி.எச்.டி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு நேர்முகத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என யுஜிசி திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தன. அப்போது முத்துக்கிருஷ்ணன் ஒரு நிலைத்தகவலை தனது ஃபேஸ்புக்கில் பதிந்தார்.

"எனது கணக்கு ஆசிரியருக்கு என் மேல் அவ்வளவு வெறுப்பு. எப்போதுமே நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார். நான் முடிதிருத்திக்கொண்டிருந்த விதத்தைக் கிண்டல் செய்வார். அதனாலேயே எனக்கு கணிதம் மீது வெறுப்பு வந்தது. எனது நாட்டம் மாறியது. கணிதம் வரலாறானது. அந்த ஆசிரியரின் கேலியும் கிண்டலும்தான் என்னை முதல் தலைமுறை பட்டதாரியாக்கியது. ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தயைகூர்ந்து வாய்ப்பு கொடுங்கள். இல்லையென்றால் அவர்கள் கணிதம் என்றால் விரோதி என்ற புரிதலுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வி என்றால் அழுத்தம் என எண்ணுவார்கள். பல்கலைக்கழகம் என்றால் பாகுபாடு என அறிவார்கள்"

இவ்வாறாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

முத்துக்கிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவுகளிலிருந்து.. தமிழில்: பாரதி ஆனந்த்.

-----------------------------------------------------

மாட்டுக் கறி தின்பது ஏதோ மிகப் பெரிய குற்றம் என்பதை வர்ணாசிரம தர்மம் மிக ஆழமாக மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது. அதனை மாற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமை என்றால் அது மிகையில்லை.

கடனாளியாக இறக்க வேண்டாம் - பொருளாதாரம் 7


கடன் விஷயத்தில் கண்டிப்பு

கடன் வாங்குவது, வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றில் இஸ்லாம் கடுமையான நிலைபாட்டைக் கொண்டுள்ளது.

ஜனாஸாத் தொழுகை நடத்துவதற்காக ஒருவரது உடல் கொண்டு வரப்பட்டது. இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டபோது, நபித்தோழர்கள் இல்லை என்றனர். அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்டபோது, இவர் கடனாளியா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றனர். அப்படியென்றால் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள்! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவரது கடனுக்கு நான் பொறுப்பு என்று கூறியதும், அவருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

நூல் : புகாரி 2295

கடன்பட்டு இறந்தவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (ஜனாஸாத் தொழுகைக்காகக்) கொண்டு வரப்படுவார். அப்போது இவர் கடனை அடைக்க ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று கேட்பார்கள். கடனை அடைப்பதற்குப் போதுமானதை விட்டுச் சென்றிருக்கிறார்'' என்று கூறப்பட்டால் (அவருக்காகத்) தொழுகை நடத்துவார்கள். இல்லையென்றால், நீங்கள் உங்கள் தோழருக்காகத் தொழுகை நடத்துங்கள்!'' என்று முஸ்லிம்களிடம் கூறிவிடுவார்கள். அல்லாஹ் அவர்களுக்கு மிகுதியான வெற்றிகளைக் கொடுத்தபோது (அதன் மூலம் செல்வம் குவிந்ததால்) மூமின்களைப் பொறுத்தவரை அவர்கள் விஷயத்தில் நானே அதிக உரிமையுடையவன்! மூமின்களில் யாரேனும் கடன்பட்ட நிலையில் இறந்துவிட்டால் அதை நிறைவேற்றுவது என் பொறுப்பாகும். யாரேனும் செல்வத்தை விட்டுச் சென்றால் அது அவர்களின் வாரிசுகளுக்குரியதாகும் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2298

கடன்பட்ட நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் மறுமை நாளில் அவரது நன்மைகள் கடன் கொடுத்தவர் கணக்கில் சேர்க்கப்பட்டு விடும். இந்த நிலையை யாரும் அடையக் கூடாது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸா தொழுகை நடத்தாமல் புறக்கணித்துள்ளார்கள். நாம் கடனாளியாக மரணித்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனை நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்ற அச்சம் காரணமாக கடனில்லாமல் மரணிக்க நபித்தோழர்கள் முயற்சிப்பார்கள் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் கடுமை காட்டியுள்ளனர்.

நபித்தோழர்களின் நிலையே இதுவென்றால் நாம் கடன் வாங்கினால் என்னவாகும் என்ற அச்சம் அனைத்து முஸ்லிம்களுக்கும் ஏற்படவேண்டும்.

எனவே இயன்றவரை யாருக்கும் கடனாளியாக இல்லாமல் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி:
பி.ஜெய்னுல்லாபுதீன்

Tuesday, March 14, 2017

வர்ணாசிரமத்துக்கு பலியான மற்றொரு பரிதாப இளைஞர்!'சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்தும் மறுக்கப்படுகிறது' ஜேஎன்யு.,வில் பயின்ற தமிழக் மாணவர் முத்துக்கிருஷ்ணன் கடைசியாக தனது முகநூலில் பதிவு செய்த நிலைத்தகவல் இதுதான்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடப்பிரிவில் ஆராய்ச்சி மேற்கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன், திங்கள்கிழமை மாலை அவரது நண்பரின் வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார். தற்கொலை குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் கடைசியாக மார்ச் 10-ம் தேதியன்று முத்துக்கிருஷ்ணன் அவரது முகநூல் பக்கத்தில் பதிவு செய்திருந்த நிலைத்தகவல் அவர் மன உளைச்சலில் இருந்ததை உறுதி செய்வது போல் இருக்கிறது.

அவரது முகநூல் பதிவு:

"எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது" இவ்வாறு கடந்த 10-ம் தேதியன்று அவர் தனது முகநூலில் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி: தமிழ் இந்து நாளிதழ்
14-03-2017

பட்டம் பதவிகள் எல்லாம் இருந்தும் மனிதனை மனிதனாக மதிக்கவில்லை என்றால் அந்த பட்டங்களும் பதவிகளும் எதற்கு?

இந்து மதம், சாதி, தீண்டாமை ஆகியவை பற்றி எந்தப் புரிதலும் இல்லாத பலர் 'நல்லா படிச்சி முன்னேறினால் தீண்டாமை மறைந்து விடும், சம மதிப்பு தானாகக் கிடைக்கும்’ என்று கூறுவதை வழக்கமாகக் கேட்டு இருப்பீர்கள். ஆனால் உண்மையில் இந்தக் கருத்து, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோடும் தந்திரமாகும்.

மோடியும் அமீத்ஷாவும் கொண்டு வரத் துடிக்கும் வர்ணாசிரம சட்டங்களின் நீட்சி இது போன்ற மரணங்களாகத்தான் இருக்கும். இந்துத்வா வளர்ச்சியுறுவதால் பாதிப்பு இஸ்லாத்துக்கு அல்ல: மாறாக இந்து பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே அதிகம் பாதிப்புறுவர். இதனை வருங்கால இந்தியா நமக்கு உணர்த்தும்.

அசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா? நீதிமன்றமா?காவி பயங்கரவாதம் மிக மூர்க்கத்தனமாக செயல்பட ஆரம்பித்து இருக்கின்றது. மோடியின் ஆட்சி முடிவதற்குள் தங்களுடைய அனைத்து சதி வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ள திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. இந்தியா முழுவதும் மாட்டுக்கறி தின்பவர்களுக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமிய, தலித், கிருஸ்தவ மக்களுக்கு எதிராக அது மேற்கொண்ட வன்முறைத் தாக்குதல்கள், காவி பயங்கரவாதிகளை விமர்சனம் செய்த எழுத்தாளர்களைக் கொலை செய்தது, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணித்தது, செத்த மொழியான சமஸ்கிருதத்தை திணித்தது எனத் தொடங்கிய அதன் பயங்கரவாதம் இப்போது பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய கேடி சாமியார் அசீமானந்தா விடுதலையில் வந்து நிற்கின்றது. யார் இந்த அசீமானந்தா? ஒரு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி, ஐந்து குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவன், 119 பேர் உடல் சிதறி உயிரிழக்கக் காரணமான இந்து பயங்கரவாதி. அப்படி குண்டுவைத்துப் பல பேரை கொன்றதைப் பெருமையாக ஒப்புக்கொண்டவன். அப்படிப்பட்டவனைத்தான் நீதிமன்றம் இப்போது விடுதலை செய்திருக்கின்றது.


2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக அசீமானந்தா உட்பட 13 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்போது இந்த வழக்கில் இருந்து அசீமானந்தா உட்பட 7 பேரை ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. 3 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இன்னும் மூன்று பேரை பத்துவருடங்களாக தேடிக்கொண்டே இருக்கின்றது. குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களில் சுனில் ஜோசியும் ஒருவர் ஆவர். இவர் 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். செத்துப்போனவனை குற்றவாளி என்றும், உயிரோடு இருப்பவனை குற்றமற்றவன் என்றும் நீதி மன்றம் விடுவித்துள்ளது. இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அசீமானந்தா விடுதலை தொடர்பாக நாம் பார்ப்பதற்கு முன்னால் ஏன் மோடி அரசால் திட்டமிட்டு அசீமானந்தா விடுதலை செய்யப்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காரவான் இதழில் வெளிவந்த அசீமானந்தாவின் பேட்டியைப் பார்த்தோம் என்றால், இதை ஒரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

2012 ஜனவரி 10, 2013 ஜூன் 22, 2014 ஜனவரி 9, 2014 ஜனவரி 17 ஆகிய நாட்களில் சிறையில் பத்திரிக்கையாளர் லீனா அவர்களால் எடுக்கப்பட்ட அந்தப் பேட்டியில் அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், குண்டுவெடிப்புக்கும் உள்ள பல்வேறு திடுக்கிடும் பின்னணியை விளக்கியிருந்தார். மேற்குவங்கத்தில் இருக்கும் ஹூக்ளி மாவட்டத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்த அசீமானந்தாவின் இயற்பெயர் நவகுமார் சர்க்கார் என்பதாகும். முதுகலை இயற்பியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது ஈடுபாடுகொண்ட அசீமானந்தவை இப்படி கொலைவெறியனாக மாற்றியது விவேகானந்தரின் சிந்தனைகள் தான். “ஹிந்துமதத்தை விட்டு வெளியே ஒருவன் செல்லும் போது ஒரு ஆள் குறைவது மட்டும் நடக்கவில்லை. எதிரிகள் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதும் நடக்கிறது” என்ற விவேகானந்தரின் இந்துத்துவா சிந்தனையைப் படித்த அசீமானந்தா தன்னை முழுவதுமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக ஒப்படைத்துக் கொண்டார். தன்னுடைய 31 ஆம் வயதில் சன்யாசியானர். அன்று முதல் தன்னுடைய நவகுமார் சர்க்கார் என்ற பெயரை அசீமானந்தா என்று மாற்றிக்கொண்டார்.

‘அசீமானந்தம்’ என்றால் எல்லையற்ற மகிழ்ச்சி என்று பொருளாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடியினப் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பில் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர். இதன் மூலம் பழங்குடியின மக்கள் மதம் மாறாமல் தடுத்ததாகவும், கிறித்தவ மிஷனரிகளின் செல்வாக்கை தான் குறைத்தாகவும் அவரே பெருமை பட்டுக் கொள்கின்றார். இவரின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது கிடையாது, அவர்கள் வேறு மதம் நோக்கி செல்லக்கூடாது என்பதுதான்.

இப்படி வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் சேர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அசீமானந்தா ‘கார்வாப்சி’ செய்வதில் புகழ்பெற்றவர். ஆயிரக்கணக்கான மக்களை இவர் தாய்மதம் திரும்புதல் என்ற பெயரில் இந்து மதத்திற்கு மாற்றியிருக்கின்றார். இதனால் இவர் பெயர் ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் மிகப்பிரபலம். வெறும் மதத்தைப் பரப்புதல் என்ற எல்லையில் இருந்து முஸ்லிம் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்கியா சிங் தாகூர், இந்தூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் செய்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இதன்படி 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்ட சம்ஜெளதா விரைவு வண்டியில் குண்டுவைத்தனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். அடுத்து 2007 ஆம் ஆண்டு மெக்கா மசூதி அருகே இவர்கள் வைத்த குண்டுவெடித்து 11 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்க்காவில் வெடித்த குண்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008 இல் மலேகானில் நடந்த இரு தாக்குதல்களில் மொத்தம் 37 பேர் உயிழந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதைத் தன்னுடைய பேட்டியில் அசீமானந்தா கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னை சந்தித்து “இது நடப்பது மிக முக்கியம். ஆனால் இதில் சங்கம் சம்பந்தப்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக அசீமானந்தா தெரிவித்தார். இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் 29 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது அம்மா வீட்டருகே மர்ம நபர்களால் துப்பாக்கியில் சுடப்பட்டு உரியிழந்து கிடந்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை நடத்திவந்த மும்பை பயங்கரவாத தடுப்புப்பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் நவம்பர் 26 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆரம்பம் முதல் மர்மமான பல சம்பவங்கள் நடந்துள்ளன. எப்படி மோடி, குஜராத் கலவர வழக்கில் இருந்து பல அசைக்க முடியாத வாக்குமூலங்கள் இருந்தும் மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டாரோ அதே போல இந்த அசீமானந்தாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இப்படி நூற்றுக்கணக்கான பேரை படுகொலை செய்த இந்த ஆர்.எஸ்.எஸ் பொறுக்கி ஒரு கோழையைப் போல ஹரித்வார் அருகே ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த போது சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டான். மறைந்திருந்து தனக்குப் பிடிக்காதவர்களைக் குண்டுவைத்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்யும் இந்தப் பயங்கரவாதக் கும்பல் கோழைகளைப் போல ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள். தயிர் சோத்தையும், வெண்பொங்கலையும் தின்றுவிட்டு வீரம் பேசும் பொறுக்கிகளின் உண்மையான வீரம் இதுதான். மோகன் பகவத்துக்கு மட்டுமின்றி மோடி போன்றவர்களுக்கும் அசீமானந்தாவின் குண்டுவைப்புச் சதிகள் தெரிந்தே இருந்தன. 2005 டிசம்பரில் அசீமானந்தாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் விருது, கோல்வாக்கார் நூற்றாண்டையொட்டி கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் முரளி மனோகர் ஜோஷியும் கலந்துகொண்டார். ஆனால் வழக்கம் போல இப்போது ஆர்.எஸ்.எஸ் காலிகள் அசீமானந்தாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்.

இந்திய நீதிமன்றங்களைப் பொருத்தவரை ஆர்.எஸ்.எஸ் காலிகளைத் தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும், இஸ்லாமியர்களை தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும் எப்போதும் பயன்படுத்திவருகின்றன. அப்சல் குருவுக்கும், யாக்கூப் மேமனுக்கு ஒரு சட்டப் புத்தகத்தையும், மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களுக்கு மனுவின் சட்டப் புத்தகத்தையும் வைத்துத் தீர்ப்பு வழங்குகின்றன. இந்திய சமூகத்தின் பொது மனசாட்சி எப்போதும் முஸ்லிம்களின் உயிரையும், தலித்துகளின் உயிரையும் மட்டும் தான் காவு கேட்கின்றது. அது மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களை கடவுளுக்கு நிகராக பார்க்க பழக்கப்படுத்தப்பட்டு விட்டது. அசீமாந்தா மீது குற்றம் இல்லை என என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இப்போது விடுவித்துவிட்டது. என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்றவற்றிற்கு ஆதாரமே இல்லாமல் ஒருவனை சிக்கவைத்து அவன் கதையை முடிக்கவும் தெரியும், அனைத்து ஆதாரங்களும் இருந்தாலும் ஒருவனை அப்பாவி என தப்புவிக்கவும் தெரியும். அதன் வேலையே ஆளும் அரசுக்கு வாலாட்டி வேலை பார்ப்பதுதான். இனிமேல் என்ன நடக்கும், மோடி தன்னுடைய ராஜகுருவுக்கு எதாவது பதவிகள் தந்து அவரை கெளரவப்படுத்தலாம். இல்லை சுனில்ஜோஷி போன்றவர்களுக்கு நிகழ்ந்தது போன்ற நிலைமையை தன்னுடைய கூலிப்படையை பயன்படுத்தி அசீமானந்தாவிற்கும் செய்து முடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்கும்.

இது எல்லாம் இந்தியா இனி ஜனநாயக நாடு என்ற கிழிந்து போன முகமூடியையும் கிழித்து எறிந்துவிட்டு அம்மணமாக பார்ப்பன சனாதன தர்மத்தைச் சட்டமாக ஏற்றுக்கொண்ட நாடு என்ற நிலையை எட்டுவதற்கான முன்னோட்டங்கள் ஆகும். இனிமேல் நீதிமன்றங்கள் மூலம் வழக்காடி தங்களுடைய காவிப்படையினரை வெளியே எடுப்பதைவிட நேரடியாக சிறையைத் தகர்த்து, சினிமா படத்தில் வருவது போன்று வெளியே எடுக்கும் நிலை தொலைவில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. இனி யாரை எல்லாம் நாங்கள் கொல்லப் போகின்றோம் என்பதை மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் முன்கூட்டியே சொல்லிவிட்டுப் போட்டுத்தள்ளும் காலம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. வலதுசாரிப் பாசிசம் எல்லாம் ஒரே அணியில் திரண்டு வருகின்றது. ஆனால் இடதுசாரி சித்தாந்தம் தங்களுக்குள் நூற்றுக்கணக்கில் பிளவுபட்டுச் சண்டையிட்டுக்கொண்டு, மறைமுகமாக பாசிச சித்தாந்தத்தின் வெற்றிக்கு துணை செய்துகொண்டு இருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் அசீமானந்தாக்கள் சட்டத்தின் துணையுடன் அடுத்த குண்டுவெடிப்பை நிகழ்த்தத் தயங்க மாட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Monday, March 13, 2017

ஒளரங்கஜேப் கோவில்களுக்கு மான்யம் கொடுத்துள்ளார்!

உஜ்ஜயினுள்ள சிவ ஆலயத்தில் அணையாமல் எரிந்து கொண்டிருந்த நந்தா விளக்கிற்காக தினமும் நான்கு சேர் நெய்யை முகலாய அரசாங்கமே வழங்கி வந்திருக்கிறது. உஜ்ஜயினி மகா கலேஷ்வரர் கோவிலின் அர்ச்சகராயிருந்த தேவ நாராயணனின் கோரிக்கையின் பேரில் இதற்கான உத்தரவு அப்பொது வழங்கப் பட்டிருந்தது.

ஹக்கீம் முகமது மெஹ்தி என்ற அதிகாரி கோவிலின் நந்தா விளக்கிற்குத் தினமும் நான்கு சேர் நெய்வழங்க சபுதரா கொத்வாலின் தாசிலதாருக்கு உத்தரவிட்டுள்ளார். முகலாயப் பேரரசில் ஒளரங்கசீப்பின் ஆடசியின் போது இந்த ஆணை அமுலில் இருந்தது.

P.N.pande, Islam And Indian culture, Page 67.
----------------------------------------


'உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற பாகுபாடு இன்றி எல்லா மட்டத்திலுமுள்ள மக்களின் நலன்களை மேம்படுத்த நாம் சலிக்காமல் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மிகுந்த அன்போடும் பரிவோடும் செயல்படுத்தப் பட வேண்டும். நமது புனிதமான சட்டத்தின் படி புராதனக் கொவில்கள் எதையும் அழிக்கக் கூடாது. ' - ஒளரங்கஜேப்

P.N.Pande, Islam And Indian Culture, Page 45

----------------------------------------


குமர குருபருக்கு காசியில் கேதார மந்திரமும், கேதாரத் துறையும், அறச்சாலை (குமாரசாமி மடம்) முதலியன அமைத்திட உதவிய முகலாய மன்னர் ஒளரங்க ஜேப்.

-ஸ்ரீ ஆதி குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த 'நீதி நெறி விளக்கம்', திருப்பனந்தாள் காசி மடம் வெளியீடு,
1960, page 7

---------------------------------------

ஒளரங்கசீப்பின் ஆடசி காலத்தில் குமர குருபருக்கு தன்ஆன்மீகப் பணிகளை செய்ய அரசே பல உதவிகளை செய்து கொடுத்தது.

-அ.மார்கஸ், இசுலாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள், பாண்டிச்சேரி,
1994, Page 7.

-------------------------------------

காசியில் குமரகுருபரர் சிவபெருமானுக்குக் கோயில் கட்டி நித்திய நைமித்தியங்களை நடத்தினார். இன்றும் கூட அங்கே தமிழ்நாட்டு முறையில் திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.

-உ.வே.சாமிநாதய்யர், நல்லுரைக்கோவை, இரண்டாம் பாகம்,சென்னை.
1946, page 146.

------------------------------------

'ஹிந்து, ஜெயின் ஆலயங்களுக்கும் பூஜீதர்களுக்கும் ஒளரங்கசிப்பால் மான்யங்கள் வழங்கப் பட்டன. ஹிந்து சாதுக்களுக்கும் அறக் கட்டளைகள் அளிக்கப்பட்டன.' - பம்பாயைச் சேர்ந்த ஞானசந்தர் என்பவரின் கூற்று இது.

Pakistan Historical Society, October 1951, Page 247-254

-----------------------------------

கே.கே.தத்தா என்பவர் ஒளரங்கஜேப் இந்துக்களுக்கும் குறிப்பாக அந்தணர்களுக்கு மானியம் வழங்கியதையும் அது குறித்து பிறப்பித்த அரச ஆணைகளையும் வரிசைப்படுத்தி புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளார்.

K.K.Datta, Some Firmans, Sanads and Parwanas, (1578-1802), Patna, Part 2

----------------------------------

முஸ்லிமாக மதம் மாறுகிறேன் என்ற அரசர்!

விஜய நகர அரச சாம்ராஜ்ஜியத்தின் கடைசி அரசர் ஸ்ரீரங்க ராயலு பிஜப்பூர் காரர்கள் கர்நாடகத்தை வென்று தெற்கிலிருந்து முன்னேறி வருவதையும் கோல்கொண்டா தளபதிகள் வடக்கிலிருந்து முன்னேறி வருவதையும் கண்டு தன்னுடைய ராஜ்ஜியம் தனது கரங்களிலிருந்து நழவிக் கொண்டிருப்பதை அவர் உணர்ந்தார். எனவே தக்காண சுல்தான்களிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு அளிக்கும் படி வேண்டி ராமராவ் என்ற பிரதிநிதியை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். ஆனால் இதில் தலையிட ஒளரங்கஜேப் விரும்பவில்லை.

ரங்கராயலுக்கு போர் நெருக்கடிகள் இன்னும் அதிகமானபோது ஸ்ரீனிவாஸ் என்ற பிராமணத் தூதுவரை ஒளரங்கஜேப்பிடம் அனுப்பி வைத்தார். 'இரண்டரை கோடி ரூபாயும், இருநூறு யானைகளும், தன்னிடமுள்ள ஆபரணங்களையும் தருவதுடன் வருடாந்திர வரியைத் தொடர்ந்து கட்டிடவும் தனது ராஜ்ஜியத்தை முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இணைத்து விட்டு பின் தனது பகுதியை ஒரு ஜாகீராகத் தனக்குத் திரும்பக் கொடுப்பதற்கும் சம்மதம்' என்று ஸ்ரீரங்க ராயலு தெரிவித்தார்.

மேலும் 'தானும் தனது உற்றார் உறவினர்களும் குடிமக்களும் முஸ்லிமாக மதம் மாறுவதற்கு சம்மதிப்பதாகவும்' சொல்லி அனுப்பியவர் ஸ்ரீரங்கராயலு.

“….the Raja promised tp turn Muslim with all his relatives and dependents!……”

உளள்த்தில் மாற்றம் ஏற்படாமல் ஆட்சி போகிறதே என்ற பயத்தினால் இஸ்லாமாவதை தாம் விரும்பவில்லை என்று கூறிய ஒளரங்கஜேப் அந்த அரசரின் கோரிக்கையை நிராகரித்தார்.

Sir Jadunath Sarkar, History Of Aurangzib, Calcutta, 1912 vol. 1, Page 248, 249

இந்த சம்பவத்தைப் பற்றி சொல்லும் போது 'இந்தக் கோரிக்கையின் பெயரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இந்தியாவில் முகலாயர்கால ஆட்சியின் பண்பைப்பற்றி நல்ல விளக்கத்தைத் தருகிறது.'என்கிறார் ஜாதுநாத் சர்க்கார்.

History Of Aurangzeb, Page 249.


Sunday, March 12, 2017

திருக்குறளில் உள்ள முரண்கள்

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.

உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.


தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.

சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.

பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.


கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.

அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.


வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று

'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.

தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.


இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.

புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.


இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.

விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.

இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை, சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.