Followers

Tuesday, May 28, 2019

சவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை!

சவுதியில் சிறப்பாக பணியாற்றும் ரயில்வே துறை!
மெக்கா, ஜித்தா, மதினா வழித் தடங்களில் செல்லும் மெட்ரோ ரயில் வாரத்துக்கு 56 முறை தனது சேவையை தொடர்கிறது. சமீப காலங்களில் அதிக மழை மெக்காவில் பெய்தாலும் ரெயில்வேயின் சேவை எந்த விதத்திலும் பாதிப்படையவில்லை. மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் இந்த ரயில்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புனித நகரங்களில் வருடந்தோறும் அதிகரித்து வரும் சுற்றுலா, மற்றும் ஹஜ், உம்ரா பயணிகளுக்கு இந்த சேவை மிகவும் உதவிகரமாக உள்ளது.
தகவல் உதவி
சவுதி கெஜட்
28-05-2019


ஆயிஷா என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கத்தை

'ரஷ்யாவின் சைபீரிய நாட்டைச் சேர்ந்த ஆச்சாரமான கிருத்துவ குடும்பத்திலிருந்து வந்தவள். எனது நாட்டில் இஸ்லாமியர்கள் அதிகம் இல்லை. எனவே எனக்கு இஸ்லாத்தைப் பற்றிய சரியான புரிதல் இல்லை. ஒரு முறை துபாய் வந்திருந்த போதுதான் எனக்கு இஸ்லாம் அறிமுகமானது. அந்த மக்களின் பழக்க வழக்கங்கள், குடும்ப உறுப்பினர்களை அவர்கள் அணுகும் விதம் அனைத்தும் என்னை கவர்ந்தது. தற்போது ஆயிஷா என்ற பெயரில் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளளேன்.'


Wednesday, May 22, 2019

சகோதரியை வாழ்த்தி வரவேற்போம்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரதான பூசாரியின் மகள் காயத்ரி ஆர்யா. இவர் நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துள்ளார். நபிகள் நாயகத்தின் அற்புத வாழ்க்கையால் கவரப்பட்டு இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். தனது பெயரை ஆயிசா சித்திக்கா என்றும் மாற்றிக் கொண்டுள்ளார். உருது, ஆங்கிலம், தெலுங்கு, சமஸ்கிரதத்திலும் நல்ல புலமை பெற்றுள்ளார். தற்போது தினமும் குர்ஆனின் ஒரு பாராவை அதன் அர்த்தத்தோடு படிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சகோதரியை வாழ்த்தி வரவேற்போம்.


ஒரு தாய் மக்கள் என்பதனை விளக்கும் அழகிய செயல்

புனித மக்கா நகரில் தவாஃப் எனும் வணக்கத்தில் ஈடுபட்டுள்ள போது நோன்பு திறக்கும் நேரம் வந்து விடுகிறது. இங்கு மொழி, இனம், நாடு, நிறம் என்ற எந்த பாகுபாடும் இன்றி அனைவரும் சகோதரர்கள் என்ற வாஞ்சையோடு அறிமுகமில்லாத ஒருவரையொருவர் பேரித்தம் பழங்களைக் கொண்டு நோன்பு திறக்கும் காட்சி. உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதனை விளக்கும் அழகிய செயல்.


Tuesday, May 21, 2019

பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் :- நபிகள் நாயகம்



பிராமண பண்டிதரான ஒரு தொப்பிள் கொடி இந்து சகோதரரின் வாக்குமூலம்.
தன்னுடைய சகோதரிக்கும், தாயாருக்கும் எந்த ஆர்.எஸ்.எஸ் ஹிந்துதுவா அமைப்போ உதவி செய்யவில்லை.
முஸ்லிம் சகோதரர்களும், ஜமாஅத்தினருமே உதவி செய்தார்கள்
இரத்தம் கொடுத்த முஸ்லிம் சகோதரர்களை கண்ணிய படுத்துங்கள் என்று சொல்லும் ஹிந்து சகோதரர். இதுவே மனிதநேயம்.
பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் :- நபிகள் நாயகம்

எங்கே செல்கிறது இந்த தமிழ்நாடு..?


#கையில்_கத்தியோடு அலையும் பாஜக பயங்கரவாதிகள், அற்ப காரணங்களுக்கு எல்லாம் சக இந்துக்களையே கொலை செய்கிறார்கள்..!
எங்கே செல்கிறது இந்த தமிழ்நாடு..?

Sunday, May 19, 2019

என்று தணியும் இந்த சாதி வெறி!

என்று தணியும் இந்த சாதி வெறி!
தாழ்த்தப்பட்டவர் என கூறி வெளியேற்றியதால் திருவாரூர் கோயில் கோபுரத்தில் ஏறி சிவனடியார் தற்கொலை முயற்சி
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் தேவாரம் பாடிய சிவனடியார் தாழ்த்தப்பட்டவர் என்பதால் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் கோயில் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயில் சைவசமயத்தின் தலைமை பீடமாகவும், முக்தியளிக்கும் தலமாகவும் இருந்து வருகிறது. திருவாரூர் அருகே கிடாரங்கொண்டானை சேர்ந்த முத்தரசன் (34) என்பவர் இந்த கோயிலில் சிவத்தொண்டு செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் அங்குள்ள மூலவரான வன்மீகநாதர் சன்னதியில் அமர்ந்து தேவாரம் பாடியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட கோயிலின் அர்ச்சகர் ஒருவர் இந்த இடத்தில் நீ வந்து தேவாரம் பாட கூடாது என அவரை வெளியேறும்படி கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே கோயில் ஊழியர் ஒருவர் மூலம் சிவனடியார் கோயிலை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தான் ஒரு தாழ்த்தப்பட்டவர் என்பதால், தேவாரம் பாட அனுமதி மறுக்கப்படுகிறது என்றும், தனக்கு ஏற்பட்ட அவமானம் வேறு யாருக்கும் ஏற்படக்கூடாது என்றும் கூறி சிவனடியார் முத்தரசன் நேற்று கோயிலின் மேற்கு கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்றார். தகவலறிந்த திருவாரூர் டவுன் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிவனடியாரை சமாதானம் செய்து கீழே இறக்கினர்.
இதனையடுத்து சிவனடியாரை தரக்குறைவாக பேசியும், கோயிலை விட்டும் வெளியேற்றிய அர்ச்சகர் மற்றும் ஊழியரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்து வரும் கோயிலில் தாழ்த்தப்பட்டவர் என்ற காரணத்திற்காக சிவனடியார் வெளியேற்றப்பட்டதையடுத்து அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தகவல் உதவி
தினகரன்
20-05-2019

ஹெச்.ராஜாவும், இல கணேசனும் இந்த அர்ச்சகருக்காக குரல் கொடுப்பார்களா?


Wednesday, May 15, 2019

கேரள காவல் துறை.... வாழ்த்துக்கள்.....

நோன்பு திறக்கும் நேரம் நெருங்கும் சமயம் முஸ்லிம் வாகன ஓட்டிகள் மிக வேகமாக செல்கின்றனர். இதனால் விபத்துகள் ஏற்படுகின்றன.
இதனை தடுக்க நினைத்த கேரள காவல் துறை சவுதியை பின் பற்றி முஸ்லிம் வாகன ஓட்டிகளுக்கு தண்ணீர் பாட்டிலும், பேரித்தம் பழங்களையும் கொடுத்து அவர்களின் அவசரத் தன்மைக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர். அவர்களுக்கு ஆலோசனையும் வழங்குகின்றனர்.
வாழ்த்துக்கள்.....


தொட்டால் தீட்டு என்று தூரமாக்கவில்லை!

தொட்டால் தீட்டு என்று தூரமாக்கவில்லை!
கட்டித் தழுவி வரவேற்கின்றனர்!
உச்சி முகர்ந்து வரவேற்கின்றனர்!
புனித மெக்கா மதினா நகரங்களில்
நோன்பாளிகளுக்கு கிடைக்கும் வரவேற்பு!
இந்தியன், பாகிஸ்தானி, பங்களாதேஷி என்று
பேதம் பார்க்கப்படுவதில்லை இங்கு!
எல்லோரும் ஆதமுடைய மக்களே இங்கு!
'ஒரு தாய் மக்கள் நாமென்போம்!
ஒன்றே எங்கள் குலமென்போம்
தலைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்!'
எல்லா புகழும் இறைவனுக்கே!




Tuesday, May 14, 2019

நான் தான் மரம்!!

நான் தான் மரம்!!
சஹர் நேர சிறப்பு நிகழ்ச்சி
கீழக்கரை - இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் - (2-5-2019)


Sunday, May 12, 2019

`ரத்தம் கொடுக்க ரமலான் நோன்பை முறித்த இளைஞர்!’ - குவியும் பாராட்டுகள்

`ரத்தம் கொடுக்க ரமலான் நோன்பை முறித்த இளைஞர்!’ - குவியும் பாராட்டுகள்
ரமலான் தொடங்குவதற்கு ஒருமாதம் முன்பு, இஸ்லாமியர்கள் நோன்பு (விரதம்) வைப்பது வழக்கம். தண்ணீர்கூட அருந்தாமல், அவர்கள் நோன்பைக் கடைப்பிடிப்பர். இதேபோலத்தான், நோன்பிலிருந்துள்ளார் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த பனுல்லா அஹமத். இவர், அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உதவியாளராகப் பணியாற்றிவருகிறார். இவரது நண்பர் தபாஷ் பகதி. இருவரும் ஒரே அறையில் உள்ளார்கள். தபாஷும் அதே மருத்துவமனையில் டெக்னீஷியனாகப் பணியாற்றிவருகிறார். இவர், அப்பகுதியில் உள்ள தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து, ரத்ததானம் உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறார்.
இந்நிலையில், கௌஹாத்தியில் உள்ள தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ரஞ்சன் கோகாய் என்பவருக்கு ரத்தம் தேவைப்பட்டது. இந்தத் தகவல், தபாஷ் பகதிக்கு போன்கால் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் இருவரும் `டீம் ஹியூமானிடி’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் உறுப்பினராக உள்ளனர். 2 யூனிட் ரத்தம் வேண்டும் என்ற தகவல் கிடைக்க, தபாஷ் பல்வேறு இடங்களில், பல்வேறு நபர்களிடம் கேட்டுள்ளார். ஆனால், ரத்தம் கிடைக்கவில்லை. இதைத் தன் அறைத்தோழன் பனுல்லாவிடம் கூற அவர், ரத்தம் தர முன்வந்துள்ளார். `நீ நோன்பு இருக்கிறாய்; எதுவுமே சாப்பிடாத நிலையில் ரத்தம் கொடுக்க வேண்டாம்’ என தபாஷ் கூறியுள்ளார். ஆனால், பனுல்லா இதை ஏற்கவில்லை. சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்குச் சென்று, நோயாளிக்கு தன் ரத்தத்தைக் கொடுத்துள்ளார்.
``எனக்கு ரத்த தானம் தொடர்பாக போன்கால் ஒன்று வந்தது. அதில், நோயாளி ஒருவருக்கு கட்டி அறுவைசிகிச்சை நடத்த அவருக்கு, பி பாஸிட்டிவ் ரத்தம் தேவைப்படுகிறது. நாங்கள் பலரிடம் கேட்டோம். ஆனால், எங்கேயும் கிடைக்கவில்லை என்றனர். நல்லவேளை, என் நண்பன் ரத்தத்தை தானமாக வழங்கினான். நோன்பிருக்கும் நிலையிலும் அவன் ரத்தம் வழங்கியது பெருமையாக உள்ளது” என்றார்.
``என் நண்பன், பி பாஸிட்டிவ் ரத்தம் உள்ளவர்கள் யாராவது இருக்கிறார்களா... என்று கேட்டுக்கொண்டிருந்தான். நான் என் மதத்தைச் சேர்ந்தவர்களிடம் ஆலோசித்தேன். நான் ரத்த தானம் செய்ய முடியும். ஆனால் உடல்நலம் சரியில்லாமல் போகலாம். அதனால் விரதம் வீணாகிவிடும் என்றனர். அப்போது நான், என் விரதத்தைக் கலைத்துவிட்டு ரத்தம் கொடுக்க முடிவுசெய்தேன். மனித வாழ்க்கையும், மனிதநேயமும்தான் அனைத்துக்கும் மேல். நான் ரத்த தானம் செய்ய முடிவெடுத்தபோது, எனக்கு இரண்டாவது எண்ணமே இல்லை. ரத்தம் கொடுக்க வேண்டும் அவ்வளவுதான். உடல் ரீதியாகப் பொருந்தும் அனைவருக்கும் ரத்தத்தை தானம் செய்ய வேண்டும். ரத்தத்தை தானம்செய்வது கடவுளுக்கு சிறந்த சேவையாகும். இந்த உணர்வு சிறப்பாக உள்ளது” என்று பனுல்லா கூறியுள்ளார்.
ரத்தம் பெற்றுக்கொண்ட நோயாளிகள் தரப்பில், ``இஸ்லாமியர்கள் இருக்கும் நோன்பை முறித்துவிட்டு, பனுல்லா ரத்ததானம் செய்துள்ளது நெகிழ்ச்சியாக உள்ளது’ என்றனர்.
Thanks to
Vikatan
12-05-2019



Saturday, May 11, 2019

சத்தியம் தொலைக்காட்சியின் வித்தியாசமான பேட்டி....

சத்தியம் தொலைக்காட்சியின் வித்தியாசமான பேட்டி....
தஞ்சை மாவட்டம் நீடூரைச் சேர்ந்த சாதிக் பாட்சா என்பவர் பட்டதாரி. வர்மக் கலையும் அறிந்தவர். கிராண்ட் மாஸ்டராக இருந்து பலருக்கு கற்றும் கொடுக்கிறார். ஆனால் தோற்றத்தில் ஐஎஸ்ஐஎஸ் ஆட்களின் உடையில் இருப்பதால் அரசு இவரை கைது செய்து விசாரித்தது. ஆனால் இவருக்கும் ஐஎஸ் அமைப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விடுவித்துள்ளது. ஆனால் பல முறை விசாரணை என்று அலைக்கழித்துள்ளது. பாஸ்போர்டையும் முடக்கி வைத்துள்ளது.
என்ஐஏ, மற்றும் ஐபி அதிகாரிகள் இவரை தொடர்பு கொண்டு....
'சாதிக் பாய்... நீங்கள் நிரபராதிதான். விடுவித்து விடுகிறோம். பாஸ்போர்டையும் தந்து விடுகிறோம். எங்களுக்காக ஒரு வேலை செய்ய வேண்டும்'
'என்ன வேலை?'
'மாடரேட் ஆஃப் இந்தியா' என்று இது போல் ஒரு கட்சி ஆரம்பித்து அரசுக்கு எதிராக போரிட வேண்டும். கட்சி நடத்த 200 கோடி ரூபாய் தருகிறோம். முன் பணமாக 20 கோடி தருகிறோம். அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டங்களை முன் எடுக்க வேண்டும். செய்வீர்களா?'
என்று கேட்டுள்ளனர். இவை அனைத்தையும் சாதிக் பாட்சா இந்த வீடியோவில் சொல்கிறார். சவுக்கத் என்ற ரா ஏஜண்ட் தொடர்பு கொண்டதாகவும் அஜய், ராமன் போன்ற அதிகாரிகளின் பெயர்களையும் சொல்கிறார். சிசிடிவி கேமராவில் இவை அனைத்தும் பதிவாகியுள்ளதாகவும் சொல்கிறார். மத்திய அரசுக்கு ஏன் இந்த ஈன புத்தி?
அமெரிக்காவும் இஸ்ரேலும் சேர்ந்து ஐஎஸ்ஐஎஸ் என்ற அமைப்பை உருவாக்கி இஸ்லாத்தை எப்படி களங்கப்படுத்துகிறதோ அது போல் சாதிக்கை வைத்து காரியமாற்ற முனைப்பு காட்டுகிறது மோடியின் பாசிச அரசு. இலங்கையிலும் ஒரு சில இஸ்லாமியர்கள் இவ்வாறுதான் வழி கெடுக்கப்பட்டு தற்கொலை குண்டுதாரிகளாக மாற்றப்பட்டனர். அதே ஃபார்முலாவை தமிழகத்திலும் செயல்படுத்த மோடி அரசு முயற்சிக்கிறது. உண்மையான தேசபக்தி கொண்ட எவனாவது இக்காரியத்தை செய்வானா? சாதிக் மறுத்து விட்டார். அதனால் அவரை இன்றும் தொந்தரவு செய்து வருகின்றனர். மொசாத்தும் ராவும் ஆர்எஸ்எஸூம் இணைந்து இந்தியாவில் இஸ்லாமியருக்கு பல பின்னடைவுகளை ஏற்படுத்த திரை மறைவு வேலைகளை செய்து வருவது இதன் மூலம் உறுதியாகிறது. இஸ்லாமிய இளைஞர்கள் மிக கவனமாக இருக்க வேண்டிய கால கட்டம் இது.
இந்த வீடியோவில் சாதிக்கோடு ஒரு விஷயத்தில் முரண்படுகிறேன்.
'இஸ்லாமிய ஆட்சியை நிறுவதற்காக பாடுபடுவதாக இந்த வீடியோவில் சொல்கிறார். சில நபி மொழிகளை தவறாக விளங்கிக் கொள்வதால் வரும் நிலைப்பாடு இது. இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவது நமது வேலையே அல்ல. மஹதி அலைஹிஸ்ஸலாமும், நபி ஈஸா அலைஹிஸ்ஸலாமும் வரும் போது நடக்கப் போகும் மாற்றங்களை நம் வாழ்வோடு ஒப்பீடு செய்து குழப்பிக் கொள்ளக் கூடாது. இஸ்லாம் கூறும் நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்வோம். விரும்பினவர் எடுத்துக் கொள்ளட்டும். விரும்பாதவரை இறைவன் நேர் வழிப்படுத்த பிரார்த்திப்போம். இதுதான் நமது நிலைப்பாடாக இருக்க வேண்டும்.
பல மதங்கள், பல இனத்தவர் வாழும் நாட்டில் 'நான் இஸ்லாமிய ஆட்சியை நிறுவ உழைக்கிறேன்' என்று கூறுவது பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தும். 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' நிகழ்ச்சியின் மூலம் பல இந்து மக்கள் மீடியாக்களின் இஸ்லாமிய விரோத போக்கை கண்டு கொண்டனர். இது போன்ற முயற்சியே போதுமானது. சாதிக்குக்கு நெருக்கமான நண்பர்கள் இதனை எல்லாம் அவருக்கு எடுத்துச் சொல்வார்களாக!
நபிகள் நாயகம் மிக இலகுவான மார்க்கத்தையே கொண்டு வந்தனர். சாதிக் போன்றவர்கள் அதனை கடினமாக்கி பலரையும் முகம் சுழிக்க வைத்து விட வேண்டாம். அவர் மேல் உள்ள அக்கறையினால்தான் இதனை சொல்கிறோம்.

யூசுப் அலி அவர்களை வாழ்த்துவோம்...

#கேரள_மாநிலம்_மலப்புரம்_காக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் #முகமது_ஆஷிக். திருமணம் முடிந்து ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்துவிட்டார். அதேபோல் இவரது சகோதரி ஒருவரும் உடல்நிலை சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்துள்ளார்.
இதற்கிடையே அவரது தந்தையின் புற்றுநோய் சிகிச்சைக்காக வீடு மற்றும் நிலத்தை வங்கியில் பிணையாக வைத்து சில லட்சங்கள் கடனாக பெற்றுள்ளார் ஆஷிக். தந்தை இறந்த பின்னர் தனக்கு இருக்கும் கடன்களை அடைப்பதற்காகக் கடந்த வருடம் அரபு நாட்டுக்கு வேலைக்குச் சென்றுள்ளார். அங்குச் சம்பாதித்த பணத்தை வைத்து அவரது குடும்பம் வங்கிக் கடன்களை கொஞ்சம் கொஞ்சமாக அடைத்து வந்ததுடன், நிம்மதியான வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். ஆனால் இந்த நிம்மதி நீண்ட நாள்களுக்கு நிலைக்கவில்லை. கடந்த செப்டம்பர் மாதம் பணிக்குச் சென்ற இடத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார் ஆஷிக்.
#இதனால் அவரது குடும்பம் மீண்டும் வறுமையில் வாடியது. ஒருபுறம் ஆஷிக் இல்லாமல் அவரது குடும்பம் தவித்து வர, மறுபுறம் அவர் வங்கியில் வாங்கியிருந்த கடன் தொகை வட்டியுடன் சேர்த்து அதிகமானது. 2009ல் அவர் வாங்கிய கடன் தொகை வட்டியுடன் சேர்த்து ரூ.17 லட்சத்தைத் தொடவே, வங்கி நிர்வாகம் அவரது வீட்டை ஜப்தி செய்வதற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆஷிக்கின் மனைவி பல்வேறு இடங்களிலும் முயற்சி செய்து பார்த்தும் இவ்வளவு பணத்தை தருவதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலைக்கு அவர்கள் வந்துவிட்டனர்.
வங்கி நிர்வாகம் இன்னும் இரண்டு நாள்களில் வீட்டைக் காலி செய்ய வேண்டும் கடைசிக் கெடு விதித்தது. இதைச் சொன்ன மறுநாளே வங்கியில் இருந்து ஆஷிக்கின் வீட்டுக்கு அதிகாரிகள் வந்திருந்தனர். பயத்துடன் இப்போதே வீட்டைக் காலி செய்யப்போகிறார்களோ என எண்ணிய ஆஷிக்கின் மனைவி மற்றும் தாய்க்கு அங்கு நடந்தவை அனைத்தும் நெகிழ்ச்சி சம்பவமாக அமைந்தது.
#வீட்டை உடனே காலி செய்ய சொல்லப்போகிறார்களோ என எண்ணிச் சென்ற அவர்களிடத்தில், வீடு மற்றும் நிலத்துக்கான ஆவணங்களை அதிகாரிகள் ஒப்படைத்தனர். #உங்கள்_கடன்#திரும்பிச்_செலுத்தப்பட்டுவிட்டது' என்ற இன்பச் செய்தியையும் சொல்லினர்.
#அங்கு_நடப்பது என்னவென்று தெரியாமல் விழித்த ஆஷிக்கின் மனைவி, யார் திருப்பிச் செலுத்தியது என்ற விசாரணையில் இறங்கினார். அப்போதுதான் அவருக்கு உண்மை நிலவரம் தெரியவந்தது.
ஆஷிக் இறந்தது, அதனால் அவரது குடும்பம் வறுமையில் வாடிய தகவல் அனைத்தும் உள்ளூர் அமைப்பு ஒன்றின் மூலம் கேரள பில்லியனர், எம்.ஏ. யூசுப் அலிக்கு இரண்டு நாள்களுக்கு முன்பு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
#உடனடியாக_இதுகுறித்து விசாரித்த அவர், தனது நிறுவனத்தின் தலைமை அலுவலக அதிகாரிகள் மூலமாக அந்த வங்கியைத் தொடர்புகொண்டு ஆஷிக் குடும்பத்தின் மொத்த கடனையும் 24 மணி நேரத்தில் திருப்பிச் செலுத்தியுள்ளார்.
#இதனைக்_கேட்டு_ஆச்சரியமடைந்த ஆஷிக் குடும்பத்தினர், ``ரமலான் மாதத்தில் இறைவன் அருளால், யூசுப் அலி அவர்கள், எங்களைக் காப்பாற்றினார். அவருக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை. அவருக்காக எங்கள் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும்" என நெகிழ்ச்சியில் திகைத்து போயிருந்தனர்.
#எம்ஏ_யூசுப்_அலி துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் #லூலூ_குரூப்பின்_சேர்மன். இவர் இப்படி உதவுவது முதல் முறையல்ல.
கேரளாவில் வெள்ளம் ஏற்பட்ட போதும் தன்னுடைய ஹெலிகாப்டரில் சென்று வெள்ளச் சேதங்களை பார்வையிட்டதுடன், வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.18 கோடி அளித்து உதவியுள்ளார். மேலும், அவரது சொந்த ஊரான திருச்சூர் அருகே நாட்டிகாவுக்கு ரூ.10 கோடிக்கும் அதிகமான நலத்திட்டங்களைச் செய்துள்ளார். அனைத்து மத வழிபாட்டுதளங்கள் மற்றும் அனைத்து மத மக்களுக்கும் பெரும் உதவிகளையும் திரு யூசுப் அலி அவர்கள் செய்து வருகிறார்...



சவூதி அபஹாவில் நோன்பு திறக்கும் நிகழ்வு.

சவூதி அபஹாவில் நோன்பு திறக்கும் நிகழ்வு.

இங்கு துப்புறவு தொழில் புரியும் பங்களாதேசத்தவர் மஞ்சள் உடையில் அமர்ந்து ஒரே தட்டில் உணவருந்தும் நிகழ்வைப் பார்க்கிறோம்.

நம் நாட்டில் துப்புறவு தொழிலாளர்களை 'தோட்டி' என்று தனி சாதியாக பாவித்து அவர்களை கோவிலுக்குள்ளும் விட மாட்டோம். அவர்களோடு ஒன்றாக உணவு அருந்தி என்றாவது நம் நாட்டில் பார்த்திருக்கிறோமா?

சவுதியில் சாத்தியமாகிறது என்றால் இஸ்லாம் கற்றுக் கொடுத்த சகோதரத்துவம். வேலையில் உயர்வு தாழ்வு இல்லை என்ற போதனை.


Thursday, May 09, 2019

இஸ்லாத்துக்கு எதிராக எத்தனை கட்டுக் கதைகள்....

இஸ்லாத்துக்கு எதிராக எத்தனை கட்டுக் கதைகள்....
இந்தியன் முஜாஹிதீன் என்றும், ஐஎஸ்ஐஎஸ் என்றும், போகோ ஹராம் என்றும் எத்தனை அமைப்புகளை அமெரிக்காவும், சங்கிகளும் உண்டாக்கி இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்கப் பார்த்தனர்.
ஆனால் அமெரிக்க காரனே இஸ்லாம் 700 சதவீத வளர்ச்சியை உலகமெங்கும் கண்டு வருவதாக செய்தி கொடுத்துளளான். என்னதான் இஸ்லாத்தின் மீது அபாண்டங்களை சுமத்தினாலும் மக்கள் தெளிவாகவே உள்ளனர். இஸ்லாத்தையும், தவறாக வழி நடத்தப்படும் ஒரு சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளையும் பிரித்துப் பார்க்க நன்றாகவே தெரிந்து வைத்துள்ளனர்.
எல்லா புகழும் இறைவனுக்கே!



Wednesday, May 08, 2019

நீட் தேர்வுக்கு இடமளித்த பள்ளிவாசல் நிர்வாகம்!

நீட் தேர்வுக்கு இடமளித்த பள்ளிவாசல் நிர்வாகம்!
கேரளாவில் உள்ள அலுவா மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீமூலநகரம். அடுத்துள்ள எர்ணாகுளத்துக்கும் நீட் தேர்வு எழுத அல் அமீன் பப்ளிக் ஸ்கூலில் சென்டர் ஒதுக்கப்பட்டிருந்தது. பரீட்சை எழுத ஆயிரக்கணக்கான மாணவரகள் வந்தனர். அவர்களுக்கு துணையாக அவர்களின் பெற்றோரும் வந்தனர். மாணவர்கள் தேர்வு எழுத போனவுடன் பெற்றோர்கள் அமர்ந்து இளைப்பாற எந்த வசதியும் நீட் நிர்வாகம் செய்து தரவில்லை.
ஆனால் அருகில் இருந்த ஹீரா ஜூம்ஆ பள்ளி நிர்வாகம் பெற்றோரின் சிரமத்தை உணர்ந்து இந்து பெற்றோர்களை பள்ளி வாசலினுள் அனுமதித்தனர். உணவும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. வாழ்வில் முதன் முதலாக தாங்கள் பள்ளி வாசலினுள் நுழைந்துள்ளதாக பல இந்து பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தகவல் உதவி
NDTV
05-05-2019
இந்துக்களையும் முஸ்லிம்களையும் பிரிக்க இந்துத்வா பல சதி திட்டங்களை தீட்டினாலும் மக்கள் அன்போடும் பாசத்தோடும் பழகி வருகின்றனர். இது இந்தியா முழுக்க எதிரொளிக்க வேண்டும். மோடி மற்றும் அமீத்ஷாக்களின் பாசிச எண்ணம் நிறைவேறாமல் பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு இந்தியனின் கடமையாகும்.



அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!

"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி " சீ " எனக்கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:23
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! " சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக!" என்று கேட்பீராக!
திருக்குர்ஆன் 17:24
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்னையரைப் புண்படுத்துவது, அடுத்தவருக்குத் தர வேண்டியதை தர மறுப்பது, அடுத்தவருக்கு உரியதைத் தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ் தடை செய்துள்ளான்.
அறிவிப்பவர்: முஃகிரா பின் ஷூஅபா(ரலி) நுால்:புகாரி (5975)


நல்வர்கள் யார்?????தீயவர்கள் யார்????

நல்வர்கள் யார்?????தீயவர்கள் யார்????
தரம் பிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்..
சிந்தனைக்காக சில நிமிடம்(பகுதி-9)


Wednesday, May 01, 2019

மும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ....

மும்பையில் 29 மதரஸா மாணவர்கள் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்று அதற்கான சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டனர்.
மதரஸா கல்வி வெறும் மார்க்கத்தை மட்டும் போதிக்காமல் இவ்வாறு வாழ்வியலுக்கும் அந்த மாணவர்களுக்கு வழி காட்ட வேண்டும். மதரஸா பாடத் திட்டத்தில் தொழிற் கல்வியையும் புகுத்த வேண்டும். இதன் மூலம் மிகச் சிறந்த கல்வி புரட்சியை உருவாக்கலாம்


அர்-ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லத்தில்....

அர்-ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு ரமலான் ஆடை எடுக்கப்பட்டது..!



மஹாராஷ்ட்ராவில் பாதுகாப்புப் படை வீரர்கள் 16 பேர்...

இன்று மஹாராஷ்ட்ராவில் பாதுகாப்புப் படை வீரர்கள் 16 பேர், தீவிரவாதிகளின் கன்னி வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதனை வன்மையாக கண்டிக்கிறேன். நமது பாதுகாப்பு படை வீரர்களின் உயிர் நாள் தோறும் தீவிரவாதிகளால் எடுக்கப்படுகிறது. சொந்தங்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
எந்த ஒரு இயக்கத்திற்கும் சில கொள்கைகள் கோட்பாடுகள் உள்ளன. அதனை வன்முறையால் அடையப் பார்த்தால் தோல்வியையே தழுவுவார்கள். இங்கு மாவோயிஸ்டுகளில் பெரும்பாலானோர் இந்துக்கள் என்பதால் அவர்களின் மதம் முன்னிலைப்படுத்தப் படுவதில்லை. அவன் ஒரு தீவிரவாதி. அந்த அளவில்தான் பார்க்கப்படுகிறான். ஆனால் ஒரு முஸ்லிம் இஸ்லாமிய எதிரிகளின் துணையோடு காட்டுமிராண்டித் தனமாக எங்காவது குண்டு வைத்தால் ஒட்டு மொத்த முஸ்லிம்களையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முயற்சிக்கிறது இந்த உலகம். அவனது செயலுக்கு குர்ஆனும் நபிகளின் போதனைகளும்தான் காரணம் என்று பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. இலங்கை குண்டு வெடிப்புகளிலும் அதனைத்தான் பார்த்தோம்.


இது தான் எங்கள் உண்மையான இந்து சொந்தங்கள்


பெண்கள் சபரி மலைக்கு வந்தால் தீட்டாகி விடும்

கேரளாவில் நாளை (மே 2) திறக்க இருக்கும் பள்ளிவாசலை பொதுமக்கள் பார்வைக்கு வைத்தபோது அங்கே ஆர்வத்துடனும் ஆரவாரத்துடன் பார்வையிட வந்த மாற்று மத அன்புச் சொந்தங்கள்…
பெண்கள் சபரி மலைக்கு வந்தால் தீட்டாகி விடும் என்று சொந்த மதத்தவர் ஒதுக்கி வைத்தபோது அந்த பெண்களை பள்ளி வாசலின் எந்த பகுதிக்கும் அனுமதித்து அவர்கள் தீட்டல்ல ஆண்களைப் போல அவர்களுக்கு சகல உரிமைகளும் உண்டு என்பதை பறை சாற்றும் விதமாக இருந்தது இந்நிகழ்வு.
சங்கிகள் என்னதான் பிளவுகளை ஏற்படுத்த முயன்றாலும் இந்திய மக்கள் அனைவரும் சகோதரத்துடனேயே வாழ்கின்றனர் என்பதற்கு இந்நிகழ்வும் ஒரு எடுத்துக் காட்டு.






வார்த்தையில் என்ன ஒரு திமிர்த்தனம்....

வார்த்தையில் என்ன ஒரு திமிர்த்தனம்.... பார்பனன் என்றுமே பார்பனன்தான். சூத்திரன் என்றுமே சூத்திரன்தான் என்ற உண்மையை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்வதைப் பாருங்கள். சாதியையும் எக்காலத்திலும் ஒழிக்க முடியாதாம்.
ஆனால் இஸ்லாத்தை ஏற்ற அடுத்த நிமிடமே 1000 காலமாக ஒட்டிக் கொண்டிருந்த சாதி பறந்து போய் விடுகிறது. தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான இஸ்லாமியர் எவருமே அரபு நாட்டு இறக்குமதி அல்ல. அனைவரும் ஒரு காலத்தில் நாடாரகவோ, மூப்பனாராகவோ, செட்டியாராகவோ, பார்பனராகவோ, தலித்தாகவோ இருந்தவர்கள் தான். ஒரு தலைமுறைக்குப் பிறகு எந்த சாதியிலிருந்து வந்தோம் என்பதே மறக்கடிக்கப்பட்டு விடும்.
நமது பிரபலங்களான ஏ.ஆர்.ரஹ்மானையும், யுவன் சங்கர்ராஜாவையும், அப்துல்லா என்ற பெரியார் தாசனையும் பார்த்து புரிந்து கொள்ளலாம்.