Followers

Wednesday, July 26, 2017

'வந்தே மாதரம்' என்ற அடுத்த இலக்கில் இந்துத்வா!

'வந்தே மாதரம்' என்ற அடுத்த இலக்கில் இந்துத்வா!

பிறந்த நாட்டின் மீது பற்று வைப்பது என்பது ஒருவன் சொல்லி வருவதில்லை. அவனது இரத்தத்தில் ஊறிய ஒன்று. ஆனால் இந்துத்வாவாதிகளோ 'வந்தே மாதரம்' பாடுவதை தேச பக்திக்கு இலக்கணமாக வைத்துள்ளார்கள். ஒரு நாட்டின் தேச பக்தி என்பது அங்கு வாழும் மக்களை நேசிப்பதன் மூலமே வரும். ஆனால் ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்வா இயக்கங்கள் சொந்த நாட்டு மக்களை முஸ்லிம்கள் என்பதற்காகவே கொல்கிறது. அவர்களின் சொத்துக்களை சூறையாடுகிறது. தலித் மக்களை தீண்டாமை கொடுமையில் தவிக்க விடுகிறது. சாதி மாறி திருமணம் முடித்தால் கவுரவ கொலைகள் செய்து விடுகிறது. 

முஸ்லிம்கள் மற்றும் தலித்களை கொல்வதற்கும் சூறையாடுவதற்கும் இந்து பிற்படுத்தப்பட்ட மக்களை ஆர்எஸ்எஸ் பயன்படுத்திக் கொள்கிறது. பார்பன குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அமெரிக்கா ஐரோப்பாவில் நல்ல வேலையில் அமர்த்தி விடுகின்றனர். கொலை கொள்ளையில் ஈடுபட்டு குற்ற பரம்பரையாக இன்று இந்து பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சகமாக வீழ்த்தி வருகிறது பார்பனியம். இதனை உணராத இந்து மக்கள் வஞ்சக வலையில் இந்தியா முழுக்க வீழ்ந்து வருகின்றனர்.

'வந்தே மாதரம்' பாடலே இந்து முஸ்லிம் கலவரத்தை உண்டு பண்ண புனையப்பட்ட பாடல். துர்கா தேவியை வணங்கி அந்த பாடல் பாடப்படுகிறது. இந்த பாடலை பாடுவதால்தான் ஒருவனுக்கு தேசப்பற்று வரும் என்பவன் கண்டிப்பாக மனநிலை பாதிக்கப்பட்டவனாகவே இருப்பான். பள்ளிகளில் கட்டாயமாக்கினால் இஸ்லாமியர்கள் பாட மாட்டார்கள். அதனை வைத்து அமைதி பூமியை குஜராத் காஷ்மீர் போல மாற்ற பார்பனியம் முயற்சி செய்கிறது. கலவரம் வந்தால்தான் தமிழகத்தில் பிஜேபி வளர முடியும். அதை நோக்கித்தான் ஆர்எஸ்எஸ் தனது காய்களை நகர்த்தி வருகிறது.

இந்துக்களும் முஸ்லிம்களும் கிருத்தவர்களும் சீக்கியர்களும் பார்பனியர்களின் இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும். 'வந்தே மாதர்ம்' பாடல் தேச பக்திக்கு அளவு கோல் அல்ல என்பதை அனைத்து மக்களுக்கு புரிய வைக்க வேண்டும். காஷ்மீர் குஜராத் போல தமிழகம் மாற நாம் அனுமதிக்க முடியாது. பெரும்பான்மை இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரர்களாகவே பழகி வருவதால் இந்துத்வாவின் திட்டம் பலிக்காது என்றே நம்புவோம்.

சட்;டம் இயற்றிய நீதிபதிக்கு ஒரு வார்த்தை...

நாட்டில் மாட்டுக்கறி வைத்திருந்தான் என்ற பொய் காரணம் கூறி அக்லாக்கும் ஜூனைதும் கொல்லப்பட்டுள்ளார்கள். நாடு முழுக்க 'பசு பாதுகாவலர்கள்' என்ற அயோக்கியர்களால் 20 க்கும் மேல் உயிர்கள் பலி வாங்கப்பட்டுள்ளனர். அப்போதெல்லாம் வாய் திறக்காத இந்த நீதிபதி 'வந்தே மாதரத்துக்கு' வாய் திறந்துள்ளார் என்றால் இந்துத்வா வெறி எந்த அளவு இவருக்கும் ஊட்டப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.


'வந்தே மாதரம்' பாடுவதெல்லாம் இருக்கட்டும். எங்களுக்கு முதலில் கழிவறை கட்டிக் கொடுங்கள் என்று கோடிக்கணக்கான தாய்மார்கள் தவமிருக்கின்றனர். அதற்கு ஒரு வழியை சொல்லட்டும் இந்த நீதிபதி!


நபிகளார் காட்டிய வழியில் இனி செல்வோம்!

1.அரபு நாடுகளில் இரண்டாவது ஜமாத் தொழுகைக்காக பலகை செய்து வைத்து இருப்பார்கள்...

ஆதாரம் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “(இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) இவருக்கு லாபம் அளிக்கக் கூடியவர் யார்?” என்று கேட்டார்கள். ஒரு மனிதர் முன் வந்தார். வந்த மனிதர் அவருடன் சேர்ந்து தொழுதார்.

அறிவிப்பவர் : அபூஸயீத் (ரலி),

நூல் : திர்மிதி 204, அஹ்மத் 10596]

2.
அல்லாஹ்வின் தூதர் தன்னுடைய பேர குழந்தையை தோலில் சுமந்தவர்களாக தொழுவார்கள் ருகூவு செய்யும் போது இறக்கி விடுவார்கள். திரும்ப நேரானா நிலைக்கு வந்ததும் தோளில் சுமந்தவர்களாக தொழுகை நடத்துவார்கள் .....

20
ரக்அத் தொழுகைக்கு ஆதாரமாக சவுதியை காட்டும் சிலர்!

நபிகளார் இரண்டாவது ஜமாஅத்திற்கு அனுமதி கொடுத்துள்ளார்கள்.

நபிகளார் குழந்தைகளை வைத்துக்கொண்டு தொழுதுள்ளார்கள்.

என்ற நபிமொழியை பின்பற்றும் சவுதியை இந்த விசயத்தில் ஆதாரமாக எடுத்து கொள்ளாதது ஏன்?

நமக்குள் ஏன் இந்த இரண்டு கருத்துகள்?

அல்லாஹ்வும்,அவனது தூதரும் காட்டிக்கொடுத்த வழிமுறையை மட்டும் பின்பற்றியிருந்தால் இந்த கருத்து வேறுபாடு வந்திருக்காது!

குர்ஆனும், ஆதாரப்பூர்வ ஹதீஸும் மட்டுமே இஸ்லாம் என்ற சத்திய கொள்கையில் ஒன்றுபடுவோம்.

-        உதய குமார்


Tuesday, July 25, 2017

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 19

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் -  1941 என்ற எண்ணை நாம் உச்சரிக்கும் போது 'நாற்பத்து ஒன்று' என்று உச்சரிப்போம். ஆனால் அரபியில் 'ஒன்று நாற்பது' என்று உல்டாவாக உச்சரிக்க வேண்டும். எழுதுவதும் உல்டா.... உச்சரிப்பதும் உல்டா.... :-)

இனி பாடத்தை தொடர்வோம்....

واحد وأربعين ---- வாஹித் வஅர்பஈன் --- நாற்பத்து ஒன்று --- 41

اثنان وأبعين ---- தினின் வஅர்பஈன் --- நாற்பத்து இரண்டு --- 42

خمسين --- ஹம்ஸீன் - ஐம்பது - 50

ستين ---- ஸித்தீன் --- அறுபது -- 60

سبعين --- ஸப்ஈன் ---- எழுபது -- 70

ثمانين --- தமானீன் ---- என்பது --- 80

تسعين ---- திஸ்ஈன் ---- தொன்னூறு -- 90

مئة --- மியா --- நூறு ---- 100

مئة وواحد ---- மியா வாஹித் ---- நூற்று ஒன்று -- 101

مئة واثنان --- மியா வதினீன் --- நூற்று இரண்டு --- 102.....

ميتان --- மீத்தேன் --- இரு நூறு -- 200

ثلاث مئة --- தலாத் மியா --- முன்நூறு

أربع مئة --- அர்பஅ மியா --- நானூறு

خمس مئة ---- ஹம்ஸ மியா ---- ஐநூறு

ست مئة ----- ஸித் மியா --- அறு நூறு

سبع مئة --- ஸப்அ மியா --- எழுநூறு

ثمان مئة --- தமான் மியா --- எட்நூறு

تسع مئة ---- திஸ்அ மியா --- தொள்ளாயிரம் --- 900

أتف --- அல்ஃப் ----- ஆயிரம் ---- 1000

ألفين ---- அல்ஃபேன் --- இரண்டாயிரம் --- 2000

ثلاثة ألاف ----- தலாத அல்ஃப் ---- மூவாயிரம்

أربعة ألاف --- அர்பஅ அல்ஃப் ---- நான்காயிரம்

خمسة آلاف ---- ஹம்ஸ அல்ஃப் --- ஐந்தாயிரம் --- 5000

ستة آلاف ---- ஸித்த அல்ஃப் --- ஆறாயிரம் -- 6000

سبعة آلاف ---- ஸப்அ அல்ஃப் --- ஏழாயிரம் -- 7000

ثمانية آلاف --- தமானிய அல்ஃப் --- எட்டாயிரம் -- 8000

تسعة آلاف --- திஸ்அ அல்ஃப் --- தொள்ளாயிரம் -- 9000

عشرة آلاف --- அஸர அல்ஃப் --- பத்தாயிரம் --- 10000

مئة ألف --- மீத் அல்ஃப் --- ஒரு லட்சம் --- 100000

مئتان آلاف --- மீதேன் அல்ஃப் --- இரண்டு லட்சம் -- 200000

ثلاثة مئة آلاف --- தலாத் மியா அல்ஃப் --- மூன்று லட்சம் -- 300000

أربعة مئة ألف --- அர்பஅ மியா அல்ஃப் --- நான்கு லட்சம் --- 400000

خمسة مئة ألف --- ஹம்ஸமியா அல்ஃப் --- ஐந்து லட்சம் --- 500000

ستمائة ألف -- ஸித்மியத் அல்ஃப் - ஆறு லட்சம் --- 600000

سبعة مئة ألف -- ஸப்அமியத் அல்ஃப் --- ஏழு லட்சம் --- 700000

ثمانية مئة ألف --- தமானிய மியத் அல்ஃப் --- எட்டு லட்சம் --- 800000

تسع مئة ألف ----- திஸ்அ மியத் அல்ஃப் --- ஒன்பது லட்சம் --- 900000

مليون ---- மில்லியோன் ----- பத்து லட்சம் --- 1000000

مليونين --- மில்யோனைன் --- இருபது லட்சம் --- 2000000

இவ்வாறு எண்கள் கூட கூட அதனை எவ்வாறு உபயோகிப்பது என்பது தெரிந்திருக்கும். இனி அடுத்த பாடத்தில் மேலும் புதிய வார்த்தைகளை பார்போம்.......

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 20

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் -  20எண்கள் சம்பந்தமாக மேலும் சில புதிய வார்த்தைகளை இந்த பாடத்தில் பார்போம்.....

الأول --- அல் அவ்வல் --- முதலாவது -- THE FIRST

الثاني --- அத்தானி --- இரண்டாவது --- THE SECOND

الثالث --- அத்தாலத் --- மூன்றாவது --- THE THIRD

الرابع --- அர்ராபஅ --- நான்காவது --- THE FOURTH

الخامس --- அல் ஹாமிஸ் -- ஐந்தாவது -- THE FIFTH

السادس -- அஸ்ஸாதஸ் ---- ஆறாவது -- THE SIXTH

السابع --- அஸ்ஸாபஅ ---- ஏழாவது -- THE SEVENTH

الثامن --- அத்தாமன் ---- எட்டாவது -- THE EIGHTH

التاسع --- அத்தாஸ்ய --- ஒன்பதாவது --- THE NINETH

العاشر --- அல் ஆஸர் -- பத்தாவது -- THE TENTH

الحادي عشر --- அல் ஹாதி அஸ்ர் -- பதினொன்றாவது -- THE ELEVENTH

الثاني عشر ---- அத்தானி அஸ்ர் --- பன்னிரண்டாவது -- THE TWELTH

الثالث عشر --- அத்தாலத் அஸ்ர் --- பதின் மூன்றாவது -- THE THIRTEENTH

الرابع عشر -- அர்ராபிஅ அஸ்ர் --- பதினான்காவது -- THE FOURTEENTH

الخامس عشر -- அல் ஹாமிஸ் அஸ்ர் --- பதினைந்தாவது --- THE FIFTEENTH

السادس عشر --- அஸ்ஸாதஸ் அஸ்ர் --- பதினாறாவது --- THE SIXTEENTH

السابع عشر ---- அஸ் ஸாபிஅ அஸ்ர் -- பதினேழாவது --- THE SEVENTEENTH

الثامن عشر ---- அத் தாமன் அஸ்ர் --- பதினெட்டாவது --- THE EIGHTEENTH

التاسع عشر --- அத் தாஸிய அஸ்ர் --- பத்தொன்பதாவது -- THE NINETEENTH

العشرون ---- அல் இஸ்ரூன் --- இருபதாவது..... THE TWNTEETH

இனி மேலும் சில புதிய வார்த்தைகளை அடுத்த பாடங்களில் பார்கலாம் இறைவன் நாடினால்....

Monday, July 24, 2017

அனாதைகளை அரவணைப்போம்: இறைவனின் அன்பை பெறுவோம்.

அனாதைகளை அரவணைப்போம்: இறைவனின் அன்பை பெறுவோம்.

பெங்களூரூவில் ஆட்டோ டிரைவரும், அவரது மனைவியும் 22 அனாதை குழந்தைகளை தமது குழந்தைகளாக வளர்க்கிறார்கள்.

தாங்கள் இருவரும் சம்பாதிக்கும் பணத்தை இக்குழந்தைகளை வளர்ப்பதற்காக செலவிடுவது மிகவும் போற்றுதலுக்குரியது.

கருணை உள்ளம் படைத்தவர்கள் இவர்களுக்கு உதவ வேண்டும்!

நம்மால் தான் நல்லது செய்ய முடியவில்லை. பிறர் செய்வதை ஆதரிப்போம். #பகிருங்கள் அனைவருக்கும் சென்று சேரட்டும்!

நம்மிடையே எத்தனையோ கோடீஸ்வரர்கள் உள்ளனர். அவர்களில் 10 சதவீதம் இவ்வாறு மனம் மாறி அனாதைகளுக்கு உதவ முன் வந்தால் நமது நாட்டில் அனாதைகளே இல்லாத நிலையை ஏற்படுத்தி விடலாம். நம்மால் முடிந்த உதவிகளை இது போன்ற இல்லங்களுக்கு அனுப்பி நன்மையில் பங்கு பெறலாம்.

----------------------------------------------------------------

ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்

என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடுவிரலையும் இணைத்து அந்த இரண்டுக்குமிடையே சற்று இடைவெளிவிட்டு சைகை செய்தார்கள்.

ஷஹீஹ் புகாரி 5304


video

Sunday, July 23, 2017

ஃபைஸலாக இஸ்லாத்தை ஏற்றவரை கொன்ற ஆர்எஸ்எஸ்

MALAPPURAM: Eight months after Faisal Pullani was brutally murdered by suspected RSS cadre in Kodinhi for converting to Islam, eight members of his family have adopted Islam, a source close to the family has confirmed. Faisal’s two sisters, brother-in-law and their five children were converted two weeks ago and are now learning the basics. Their conversion has been registered by the Maunathul Islam Sabha in Ponnani. Faisal’s mother Meenakshi had also embraced Islam a month after the tragic incident.
Faisal was found dead with severe wounds on his head and neck by the roadside at Kodinhi on November 19, 2016. The police had arrested 16 accused in the case including prime accused and RSS Tirur Saha Karyavah Madathil Narayanan, Faisal’s brother-in-law Vinod and Kottasseri Jaya-kumar, VHP’s Tirurangadi Taluk secretary. All the accused are out on bail.
தகவல் உதவி
deccanchronicle
24-07-2017

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அனில்குமார்(32) என்பவர் ஃபைஸலாக பெயர் மாற்றம் செய்து இஸ்லாம் மதத்திற்கு மாறி யுள்ளார். சவுதி அரேபியா ரியாத்தில் வைத்து இவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டுள்ளார். கடந்த வருடம் நவம்பர் 19 அன்று அதிகாலை தனது மனைவியின் பெற்றோரை ரயில் நிலையத்திலிருந்து அழைத்து வருவதற்காக ஆட்டோவில் சென்ற ஃபைஸலை மர்ம நபர்கள் வெட்டி படுகொலைச் செய்தனர். இந்த கொலையின் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் இருப்பது தெரிய வந்ததை அடுத்து இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஃபைசல் குடும்பத்தை சேர்த 8 பேர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர். ஃபைசலின் இரண்டு சகோதரிகள் மற்றும் அவரது மச்சான் மற்றும் ஐந்து குழந்தைகள் உட்பட 8 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளனர்.

ஃபைசலின் மனைவி மற்றும் அவரது குழந்தை ஃபைசல் கொல்லப்படும் முன்பே இஸ்லாம் மதத்திற்கு மாறிய நிலையில் ஃபைசலின் தாய் ஃபைசல் கொல்லப்பட்ட ஒரு மாதத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறிப்பிடத்தக்கது. இவரது குழந்தைகள் தற்போது இஸ்லாமிய கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இதற்கிடையே ஃபைசல் குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கேரள அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

அனில் குமாரை கொன்ற ஆர்எஸ்எஸ் கோழைகள் தற்போது எட்டு பேர் கொண்ட அவரது குடும்பத்தையும் கொல்வார்களோ? இவர்கள்தான் தேசப்பற்றை பற்றி மற்றவர்களுக்கு பாடம் எடுக்கின்றனர். கத்தியை எடுத்தவன் அந்த கத்தியாலேயே அழிவு என்பது போல் இந்துத்வா கோழைகளின் அழிவு அவர்கள் எடுத்த கத்தியாலேயே என்பதை வருங்கால வரலாறு உணர்த்தும்.http://www.deccanchronicle.com/nation/current-affairs/230717/kerala-kin-of-slain-youth-embrace-islam.htmlபார்வையிழந்தும் ஜாகிர் ஹூசைன் உழைக்கிறார்.

பார்வையிழந்தும் ஜாகிர் ஹூசைன் உழைக்கிறார்.

ராமநாதபுரத்தில் காமன் கோட்டை கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட ஜாஹிர் ஹூசைன் சிறு வயதிலேயே பார்வையிழந்தவர். இளைஞனாக இருந்த போது இவரது நண்பர்கள் இவரை ஏமாற்றி பணம் பறித்துள்ளனர். இதனை எல்லாம் படிப்பினையாகக் கொண்டு தற்போது சொந்தமாக ஒரு கறி கோழிக் கடை வைத்துள்ளார். சிவகங்கை மாவட்டம் சிங்கபுனரி தாலுகாவில் உள்ள புழுதிபட்டியில் வசித்து வருகிறார். இவரது கடை மதுரை திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. காலை ஏழு மணிக்கெல்லாம் சரியாக வந்து கடை திறக்கும் இவர் இரவு ஏழு மணி வரை உழைக்கிறார். எவரது உதவியும் இல்லாமல் கோழியை நிறுப்பது கோழியை அறுப்பது பிறகு அதனை சுத்தம் செய்து நிறுத்து கொடுப்பது என்று அனைத்தையும் மிக லாவகமாக கையாள்கிறார்.

ஞாயிற்றுக் கிழமைகளில் 10 ஆம் வகுப்பு படிக்கும் இவரது மகன் தந்தைக்கு உதவியாக வருகிறார். மற்ற நாட்களில் தனி ஆளாக நின்று கடந்த 20 வருடமாக சிறப்பாக தொழில் செய்து வருகிறார் ஜாஹிர் ஹூசைன்.

கை கால்கள் கண்கள் நலமாக உள்ள பலர் உழைக்காமல் சோம்பேறிகளாக காலத்தை கடத்துகின்றனர். அந்த சோம்பேறிகளுக்கு ஒரு பாடமாக ஜாஹிர் ஹூசைன் திகழ்கிறார் என்றால் மிகையில்லை.

உங்களில் ஒருவன் ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு தன்னுடைய முதுகில் விறகுக்கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவனுக்கு இழிவு ஏற்படாமல் தடுத்து விடுவான். மக்கள் அவனுக்குக் கொடுக்கவும் செய்யலாம் அல்லது மறுக்கவும் செய்யலாம். என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
புகாரி: 1470, 1471.

 தம் தேவைக்கு அதிகமாக மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான்… ‘யார் சுயமரியாதையைப் பேணிக் கொள்கிறானோ அவனை அல்லாஹ் சுயமரியாதையோடு வாழச் செய்வான் யார் பிறரிடம் தேவையற்றவனாக இருக்கிறானோ அல்லாஹ் அவனைத் தேவையற்றவனாக ஆக்குகிறான். யார் பொறுமையை மேற்கொள்ள முயற்சி செய்கிறானோ அவனை அல்லாஹ் பொறுமையாளனாக ஆக்குவான் மேலும், பொறுமையை விடச் சிறந்த, விசாலமானஅருட்கொடை எவருக்கும் கொடுக்கப்படுவதில்லை என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474, 1475.

videoபிரகாஷ் முஸ்தாக்காக மாறிய விநோதம்.....

பிரகாஷ் முஸ்தாக்காக மாறிய விநோதம்.....

'உன் பேர் என்ன?'

'பிரகாஷ்'

'உனது ஊர்'

'ஜெய்ப்பூர்'

'தந்தை பெயர்?'

'ராம்'

'இங்கு எங்களிடம் என்ன பெயரைச் சொன்னாய்?'

'முஸ்தாக்'

இவன் முஸ்லிமாக மாறவில்லை. இவனது ஆதார் கார்டிலும் பிரகாஷ் என்ற பெயரே உள்ளது. முஸ்லிம் பெயரில் வந்து நாச வேலைகள் செய்ய இந்துத்வாவால் தயார்படுத்தப்பட்டவன் இந்த பிரகாஷ். இது போல் பல பிரகாஷ்களை ஆர்எஸ்எஸ் நாடு முழுக்க அனுப்பியுள்ளது. முஸ்லிம்கள் பெயரில் தீவிரவாத செயல்களை செய்து அதன் பிறகு இந்துக்களை தூண்டி விட்டு மதக் கலவரங்களை உண்டு பண்ணி பிஜேபிக்கு வாக்கு சேகரிப்பதே இதன் முக்கிய குறிக்கோள்.

 தேசபக்தி, நாட்டுப் பற்று என்று ஆர்எஸ்எஸ் புலம்புவதெல்லாம் வெறும் நடிப்பே. அவர்களுக்கு எப்பாடு பட்டாவது சனாதன தர்மத்தை மீண்டும் இந்தியாவில் புகுத்த வேண்டும். மனுவின் சட்டங்கள் ஆட்சி செய்ய வேண்டும். இதற்காக எந்த விலையையும் ஆர்எஸ்எஸ் கொடுக்கத் தயங்காது. முடிந்தால் தனது உறுப்பினர்களையே பலியிட்டு தனது கொள்ளையை நிலை நிறுத்த பாடுபடும்.

இதனை முஸ்லிம்கள் எப்படி எதிர் கொள்வது? குர்ஆனின் சட்டதிட்டத்தையும் நபிகளாரின் வாழ்வு முறையையும் முடிந்த வரை நமது வாழ்வில் கொண்டு வருவதன் மூலமே இந்த சதித் திட்டங்களை களைய முடியும். இறைவன் விரும்பும் உண்மை முஸ்லிம்களாக நாம் மாறி விட்டால் ஆர்எஸ்எஸின் திட்டங்களை இறைவனே தவிடு பொடியாக்கி விடுவான்.

ஆர்எஸ்எஸ் செயல்கள் முஸ்லிம்களை நோக்கித்தானே நமக்கு என்ன என்று இந்து பிற்படுத்தப்பட்ட மக்கள் கண்டு கொள்ளாமல் இருந்தால் பின்னாளில் பாதிப்பு அவர்களுக்குத்தான். அகோரிகள், பெண் அடிமை, உடன் கட்டை ஏறுதல், பெண்களை பொட்டு கட்டி விடுதல், தலித்களை மேலும் அடிமைபடுத்துதல், சாதி கலவரம் என்று இந்துத்வாவின் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

இஸ்லாமியர்களைப் பொருத்த வரை உயிரை விட்டாலும் விடுவார்களே யொழிய இஸ்லாத்தை விட்டுத்தர மாட்டார்கள். உடமைகளையும், உயிரையும்தான் ஆர்எஸ்ஸால் எடுக்க முடியும். நம்பிக்கையை எக்காலத்திலும் எடுக்க முடியாது. இங்கும் முடிவில் தோல்வி இந்துத்வாவுக்குத்தானேயொழிய இஸ்லாமியர்களுக்கல்ல...  
video

Saturday, July 22, 2017

கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!

கோமாளிகளின் ஆட்சியில் 46 பசுக்கள் பலி!

காக்கிநாடா: ஆந்திராவில், விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பராமரிக்கப்பட்ட, 46 பசுக்கள், நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்டு, பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திராவில், தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா நகரில், ஆதரவற்ற விலங்குகளை பராமரிக்கும் அமைப்பு இயங்கி வருகிறது. இங்கு, 480 பசுக்கள் பராமரிக்கப்படுகின்றன.


மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால், இங்குள்ள பசுக்களில் சில, மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளன. உணவுப் பற்றாக்குறையால், பல பசுக்கள், பசியால் வாடி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலை யில், கடந்த சில நாட்களாக, நிமோனியா காய்ச்சல் மற்றும் பட்டினியால் பாதிக்கப்பட்ட, 46 பசுக்கள் பரிதாபமாக இறந்தன.


இது குறித்து, தகவல் அறிந்த, மாநில கால்நடைத் துறை அதிகாரிகள், மாடுகள் பராமரிக்கப்படும் இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பசுக்களின் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.


இது குறித்து, கால்நடைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:மிகச் சிறிய இடத்தில், அதிகப்படியான பசுக்கள் பராமரிக்கப்படுவதே, அவற்றின் நோய் தாக்கத்திற்கு காரணம். 150 பசுக்கள் மட்டுமே பராமரிக்க கூடிய இடத்தில், இந்த அமைப்பினர், 480 பசுக்களை பராமரித்து வருகின்றனர். மழைக் காலம் என்பதால், பசுக்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது.


அனைத்து பசுக்களுக்கும் போதிய உணவளிக்க முடியாததால், அவற்றில் சில, பட்டினியால் பலியாகியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். நிமோனியா நோய் பாதிப்பாலும், சில பசுக்கள் பலியாகியுள்ளன. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

தகவல் உதவி
தின மலர்
23-07-2017


இந்த பசுக்கள் விவசாயிகளிடம் இருந்திருந்தால் நல்ல விலைக்கு விற்று அதனை காசாக்கியிருப்பார்கள். உழைக்கும் மக்களுக்கு உணவாகவும் சென்றிருக்கும். அதை விடுத்து 'கோமாதா எங்கள் தெய்வம்: அதனை இறைச்சிக்காக அறுக்கக் கூடாது: அதனை நாங்களே பராமரிக்கிறோம்' என்று கோமாளித்தனமான முடிவை எடுத்ததனால் இன்று 64 பசுக்கள் இறந்துள்ளன. சுற்றுப்புற சூழலுக்கும் கேடு விளைவிக்கின்றன. இந்த கோமாளிகளான இந்துத்வா ஆட்சியாளர்கள் இதனை என்றுதான் உணருவார்களோ!


அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - 18

அரபி கற்றுக் கொள்வோம் வாருங்கள் - பகுதி 18ஒரு மொழிக்கு எண்கள் மிக மிக அவசியம். அந்த எண்களைப் பற்றியும் அரபியில் அதனை எவ்வாறு உச்சரிப்பது என்பது பற்றியும் இந்த பாடத்தில் பார்போம்....

صفر --- ஸிஃபர் --- சைபர் ---- 0

واحد --- வாஹித் --- ஒன்று --- 1

اثنان ---- அத்னான்(தினீன்) --- இரண்டு ---- 2

ثلاثة ---- தலாத --- மூன்று --- 3

أربعة --- அர்பஅ --- நான்கு --- 4

خمسة ---- ஹம்ஸ -- ஐந்து ---- 5

ستة ----- ஸித்த --- ஆறு --- 6

سبعة ---- ஸ(B)ப்அ ---- ஏழு --- 7

ثمانية ----- தமானிய --- எட்டு ---- 8

تسعة ----- திஸ்அ ---- ஒன்பது ---- 9

عشرة ---- அஸரஅ ----- பத்து --- 10

اٍحدى عشر ---- இஹ்தா அஸர் --- பதினொன்று --- 11

إثنا عشر ----- இத்னா அஸர் ---- பன்னிரண்டு -- 12

ثلاثة عشر ---- தலாதஸ்ர் ----- பதிமூன்று --- 13

أربعة عشر ---- அர்பஅதஸ்ர் --- பதினான்கு --- 14

خمسة عشر ----- ஹம்ஸதஅஸ்ர் --- பதினைந்து – 15

ستة عشر ----- ஸித்தஸ்ர் ---- பதினாறு --- 16

سبعة عشر ---- ஸபஅதஸ்ர் --- பதினேழு --- 17

ثمانية عشر --- தமானியதஅஸர் -- பதினெட்டு --- 18

تسعة عشر ---- திஸ்அதஸ்ர் --- பத்தொன்பது ---- 19

عشرون ---- இஸ்ரூன் ---- இருபது ---- 20

واحد وعشرون --- வாஹித் வஇஸ்ரூன் --- இருபத்தொன்று --- 21

اثنان وعشرون --- தினீன் வஇஸ்ரூன் ---- இருபத்தி இரண்டு -- 22

ثلاثة وعشرون --- தலாதா வஇஸ்ரூன் --- இருபத்து மூன்று -- 23

இவ்வாறு இருபது, முப்பது, நாற்பது பக்கத்தில் ஒன்று இரண்டு மூன்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

ثلاثين --- தலாதீன் ----- முப்பது --- 30

واحد وثلاثين --- வாஹிது வதலாதீன் --- முப்பத்து ஒன்று --- 31

اثنان وثلاثين ---- தினீன் வதலாதீன் --- முப்பத்து இரண்டு --- 32

أربعين --- அர்பஈன் --- நாற்பது --- 40

இதன் தொடர்ச்சியை அடுத்த பதிவில் பார்க்கலாம் இறைவன் நாடினால்........

இறந்தவர் உடல் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டது!

குவைத் சால்வா பகுதியில் பணிபுரிந்து வந்த திருவாரூர் மாவட்டம் கொல்லாபுரத்தை சேர்ந்த அப்துல் மஜீத்(61) த/பெ- அபுதாஹிர் கடந்த 18-7-2017 அன்று மரணமடைந்து விட்டார்.

அவரது ஜனாஸா நேற்று சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கான தூதரக மற்றும் இதர பணிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல மருத்துவ அணி பொறுப்பாளர் சகோ சித்திக் அவர்கள் மேற்பார்வையில் செய்து முடிக்கப்பட்டது.

தகவல்: அஹமது மைதீன் மன்னார்குடி.


Friday, July 21, 2017

ஹிஜாப் அணிவதால் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை

ஹிஜாப் அணிவதால் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை

'ஹிஜாப் அணிவது எங்களுக்கு எந்த சிரமத்தையும் தரவில்லை' என்கிறார் 24 வயது பெண்மணி இந்தோனேஷிய டிசைனர்.

கோலாலம்பூர் பெடாலிங் ஜெயாவில் ஹிஜாப் அணிந்து போஸ் கொடுத்த இஸ்லாமிய பெண்கள்.

தகவல் உதவி
சவுதி கெஜட்
22-07-2017


சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!

பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்'

- குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

- குர்ஆன் 7;10


இந்த இரண்டு குர்ஆன் வசனங்களையும் மெய்ப்பிக்கும் விதமாக இன்று தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை வந்துள்ளது. குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இந்த கட்டுரையும் ஒரு அத்தாட்சியாக உள்ளது. கட்டுரையை அவசியம் படித்துப் பாருங்கள்.

-----------------------------------------

சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!

குளிர் காலத்தில் காட்டுப் பகுதியில் இரவில் குளிர் காய்வதற்காக சுள்ளிகளைப் போட்டு தீ மூட்டுவர். அதைச் சுற்றிலும் கும்பலாகப் பலர் உட்கார்ந்திருப்பர். மிக அருகில் உட்கார்ந்தால் சூடு அதிகம் தாக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். மிகவும் தள்ளி உட்கார்ந்தால் இதமான வெப்பம் கிடைக்காது. எனவே, இதமான வெப்பம் கிடைக்கின்ற அளவுக்கு உகந்த தூரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். பூமியும் சரி, ‘குளிர் காய்வதற்கு’ ஏற்ப சூரியனிலிருந்து உகந்த தூரத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், புதனும் வெள்ளியும் சூரியனுக்கு அருகில் உள்ளன. செவ்வாய் கிரகம் சற்றே தள்ளி அமைந்துள்ளது.

முதலில் நாம் சூரிய மண்டல அமைப்பு பற்றிக் கவனிப்பது நல்லது. ஒரு காகிதத்தில் ஒரு புள்ளி வையுங்கள். அதுதான் சூரியன். அந்த புள்ளியைச் சுற்றி நெருக்கமாக ஒரு சிறிய வட்டம் போடுங்கள். புதன் கிரகம் அந்த வட்டத்தில் அமைந்தபடியாக சூரியனைச் சுற்றுகிறது. முதல் வட்டத்தைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அதுதான் வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை. அதைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அந்த வட்டத்தில்தான் பூமி அமைந்துள்ளது. நான்காவது வட்டத்தில் செவ்வாய் கிரகம்.

பனிக்கட்டி, பாறை: கோள்கள்

மேலும் வட்டங்களைப் போடலாம். ஐந்து முதல் ஒன்பது வரையிலான வட்டங்களில்தான் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை அமைந்துள்ளன. இந்த ஐந்துமே பனிக்கட்டி உருண்டைகள். இவை எல்லாமே சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பவை. பூமியிலிருந்து பார்த்தால் சூரியன் 25 பைசா அளவில் தெரிவதாக வைத்துக்கொண்டால், வியாழன் கிரகத்திலிருந்து பார்க்கும்போது சூரியன் மிளகு அளவில்தான் தெரியும். வியாழனில் வெயில் சிறிதும் உறைக்காது. எனவேதான் வியாழனும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களும் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.

மாறாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவற்றைப் பாறைக் கோள்கள் என்று சொல்வர். அதாவது, இந்த நான்கிலும் தரை உண்டு. மண் உண்டு. மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியனவும் உண்டு.

பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு உகந்த மற்ற சூழ்நிலைகளையும் கவனிப்போம். முதலாவதாக பூமியில் போதுமான அடர்த்தி கொண்ட காற்று மண்டலம் உள்ளது. இரண்டாவதாக இந்தக் காற்று மண்டலம்தான் சூரியனிலிருந்து வருகின்ற ஆபத்தான எக்ஸ் கதிர்களைத் தடுத்து உயிரினங்களைக் காப்பாற்றுகிறது. உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சில வகை புற ஊதாக் கதிர்களையும் காற்று மண்டலம் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வருகின்ற கதிர்வீச்சிலிருந்தும் நம்மை இந்தக் காற்று மண்டலம் காக்கிறது.

நீர்சூழ் உலகு!

மூன்றாவதாக பூமியில் உயிரினத்துக்குத் தேவையான தண்ணீர் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகிதம் கடல்களால் ஆனது. தண்ணீரானது துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் உள்ளது. காற்றில் ஆவி வடிவில் உள்ளது. பூமியின் நிலப் பகுதிகளில் ஆறுகளாக ஓடுகிறது. பூமி ஒன்றில்தான் நீர் வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் ஆவி வடிவிலும் தண்ணீர் இருக்கிறது.

நான்காவது சாதக அம்சம் பூமியின் பருமன். பூமி தகுந்த பருமன் கொண்டதாக உள்ளதால், அதற்குச் சரியான ஈர்ப்பு சக்தி உள்ளது. அவ்விதம் ஈர்ப்பு சக்தி உள்ளதால்தான் பூமி தனது காற்று மண்டலத்தை இழக்காமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டுள்ளது.

ஐந்தாவது அம்சம், பூமியின் சுழற்சி வேகம். பூமி தனது அச்சில் உகந்த வேகத்தில் சுற்றுவதால்தான் பூமியில் பொதுவில் கடும் குளிரோ கடும் வெப்பமோ இல்லை. இல்லத்தரசிகள் நெருப்பில் அல்லது தணலில் அப்பளம் சுடும்போது அப்பளம் தீய்ந்து விடாமல் இருக்க அதைத் தக்கபடி திருப்பிப் போடுவார்கள். பூமியின் சுழற்சி வேகம் அந்த அளவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சந்திரனில் 14 நாள் பகல். 14 நாள் இரவு.

ஆறாவது அம்சம், பூமியின் காந்தப் புலம். சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் பூமியைத் தாக்காதபடி இந்தக் காந்தப் புலம் தடுக்கிறது. மேலே கூறிய அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து பூமியில் உயிரினம் தோன்றித் தழைக்க உதவியுள்ளன.

வியாழன் உள்ளிட்ட ஐந்து பனிக்கட்டி உருண்டைகளும் உயிரினத்துக்கு உகந்த சூழல்களைக் கொண்டவை அல்ல. மீதியுள்ள புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களில் உள்ள நிலைமைகளைக் கவனிப்போம்.

சாத்தியமற்ற கிரகங்கள்

புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. எனவே, பகல் வேளையில் அதிகபட்ச வெப்பம் 430 டிகிரி செல்சியஸ். இரவாக உள்ள பகுதியில் குளிர் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தில் உயிரினம் கிடையாது என்பதில் வியப்பில்லை. தவிர, புதன் கிரகத்தில் அனேகமாகக் காற்று மண்டலம் கிடையாது.

வெள்ளி கிரகத்துக்கு ஜோசிய சாஸ்திரத்தில் சுக்கிரன் என்று பெயர். சுக்கிரன் என்றாலே சுக்கிர தசைதான் நினைவுக்கு வரும். ஆனால், வெள்ளி கிரகத்துக்கு சுக்கிர தசை அடிக்கவில்லை. மாறாக, நிரந்தர ‘சனி தசை’தான். வெள்ளி கிரகத்துக்குக் கடந்த காலத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் அனுப்பிய ஆளில்லா விண்கலங்கள் ‘அமுக்குப் பிசாசு’ அழுத்தியதுபோல நொறுங்கின. வெள்ளி கிரகத்தில் நிலவும் பயங்கரக் காற்றழுத்தமே அதற்குக் காரணம். அது போதாதென வெள்ளியில் எந்த இடமானாலும் வெப்பம் 460 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. வெள்ளி கிரகம் ஒரு அக்கினிக் குண்டம். இது போதாதென வானிலிருந்து அமில மழை பெய்கிறது.

செவ்வாய் தேறுமா?

சூரியனிலிருந்து தள்ளி நான்காவதாக அமைந்த செவ்வாயில் வெயில் தாக்கம் குறைவு. மெல்லிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீர் கிடையாது. வடிவில் பூமியை விடச் சிறியது என்பதால், காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ள இயலவில்லை. இன்னமும் அது தனது காற்று மண்டலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. செவ்வாயின் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உண்டு என்றாலும் காற்று மண்டல அடர்த்தி இன்மை காரணமாக செவ்வாயில் பனிக்கட்டிகள் உருகி நீராக மாறாமல் நேரடியாக ஆவியாக மாறுகின்றன. சூரிய மண்டலத்தில் பூமிக்கு வெளியே குறைந்தது நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்பு கொண்ட ஒரே கிரகம் செவ்வாய்தான். ஆனால், இதுவரை தேடியதில் செவ்வாயில் நுண்ணுயிர்கள்கூட இல்லை.

ஆக, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியைத் தவிர, வேறு எந்தக் கிரகத்திலும் உயிரினம் கிடையாது.

பூமி பெற்றுள்ள விசேஷ சாதகங்களால் பூமியில் உயிரினம் தோன்றியதாகக் கூறலாம். அப்படியானால் சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற ஒரு கிரகம் பூமி போன்று அதே சாதக நிலைமைகளைப் பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியான கிரகத்தில் உயிரினம் இருக்குமா? அப்படியும் சொல்லிவிட முடியாது.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,.....

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
19-11-2015...

Thursday, July 20, 2017

*Manickam Palaniyapan* அவர்களின் மிக அருமையான பதிவு

*Manickam Palaniyapan* அவர்களின் மிக அருமையான பதிவு////////////////

*எந்த விஷயத்திலும் முஸ்லிம்கள் உங்களோடு ஒட்டாமல் தனித்து நிற்பதேன்?*

என்பது முஸ்லிம் அல்லாத பலரின் கேள்வி.

இதோ என் பதில்!!

*அவர்களின் முன்னோர்கள் நம் இந்தியதேச விடுதலைக்கு அவர்களின் சதவீதத்திற்கும் அதிகமாக உழைத்தவர்கள். அதற்காக பட்டம், பதவி, கல்வி, செல்வம் போன்றவற்றைத் துறந்த முஸ்லிம்கள்,அவர்களுக்காக உருவாக்கப்பட்ட இஸ்லாமிய தேசம் பாகிஸ்தானுக்கு வாருங்கள் என அழைத்த போதும்கூட அவர்கள் இந்த மண்ணைவிட்டு வரமாட்டோம்! எங்கள் இந்துச் சகோதரர்களோடு வாழ்வோம்! என்று உறுதியாக நின்றவர்கள் அவர்கள்! ஆனால் இன்றைய மதவெறி அரசியல் அவர்களை பிரிக்க நினைக்கும் இக்காலகட்டத்தில் சில விஷயங்களை நீங்கள் சிந்திக்க வேண்டும்!*

*அவர்கள் முஸ்லிம்கள்; அவர்கள் மார்க்கம் "உண்ணுங்கள் பருகுங்கள் வீண் விரயம் செய்யாதீர்; கரத்தாலும் நாவாலும் பிறருக்கு தீவினை செய்யாதீர்"* என்பதால்

*காசைக் கரியாக்கி காற்றை மாசாக்கி, காதை செவிடாக்கி வீதியை குப்பையாக்கி,  நோயாளிகள் பதற,குழந்தைகள் துடிக்க ,குடிசைகள் எரிய காரணமாவதால் தீபாவளியை,அவர்கள்கொண்டாடுவதில்லை. 
இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா ?இதனால் யாருக்கு என்ன நட்டம் ? 

மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !*

*வீதிகளை அடைத்து,நீர் நிலைகளை மாசுபடுத்தும்,பக்திக்காக அல்லாமல் மதவாத சக்தியைக் காட்டும் அரசியலாக மட்டுமே இருப்பதால் இந்துதுவா விநாயகர் சதுர்த்தியில் அவர்கள் பங்கெடுப்பதில்லை !*

*இதனால் இந்த தேசத்திற்கு நன்மையா தீமையா ?*

*சுற்றுச் சூழலை மாசுபடுத்தக் கூடாது என்பதால் பழையனவற்றை எரிக்கும் போகியில் கலந்து கொள்வதில்லை ! போகியின் பெயரால் தமிழர்களின் பல அரிய பொக்கிஷங்களை, ஒலைச்சுவடிகளை எரிக்கச் சொல்லி அவர்களை வரலாற்று அனாதையாக்கிய இந்துதுவா நஞ்சையும் அவர்கள் வெறுக்குகிறார்கள்.*

*படைத்தவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்பதால்,ஆயுதங்களை வணங்கும் ஆயுத பூஜையிலும் காகிதங்களை வணங்கும் சரஸ்வதி பூஜையிலும் அவர்களால் கலந்து கொள்ள முடியவில்லை !இது உங்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதால் அல்ல !*

*தீமைகளின் தாய்* *மது* *என அவர்களின் மார்க்கம் தடுப்பதால் அவர்கள் மது அருந்துவதில்லை! ஆகையால் அவர்களால் மதுவால் ஏற்படும் விபத்துகள் இல்லை, குடும்ப சமூக பிரச்னைகள் இல்லை கலவரம் இல்லை, வழக்குகள் இல்லை ! இதனால் யாருக்கு என்ன நட்டம் ? மாறாக இந்த நாட்டுக்கு நன்மையே !*

*வட்டி என்பது ஒருவரின் உழைப்பை உறிஞ்சும் கொடுஞ்செயல் என்பதால் அவர்களின் இஸ்லாம் அதைத் தடுக்கிறது ! அவர்களால் வட்டியினால் ஏற்படும் அடிதடி, கற்பிழப்பு, தற்கொலை, கொலை போன்ற உயிரிழப்புகள் இல்லை ! அவர்களால் யாருக்கு என்ன நட்டம் ? மாறாக அவர்கள் வங்கிகளில் இதுவரை வாங்காமல் விட்டு வைத்துள்ள வட்டித்தொகை 67,500 கோடிகளால் இந்த நாட்டுக்கு நன்மையே !*

*மேலும் பெண்ணின் அழகு என்பது அவர்களை மணம் முடிக்கும் கணவனுக்காக மட்டுமே என்பதால் அவர்களின் பெண்கள் பர்தா அணிகிறார்கள் ! இதனால் பாலியல் குற்றங்களில் இருந்தும் காமப்பார்வைகளில் இருந்தும் அவர்களையும் பாதுகாத்து சமூகத்தையும் தீமையில் இருந்து காக்கிறார்கள்! இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*

*குடிப்பதும் வெடிப்பதும் பண்டிகை அல்ல !
இல்லாதவர்க்கு வழங்குதலும் இறைவனை வணங்குதலும் தான் இஸ்லாமியப் பண்டிகை என்பதால் அவர்கள் ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து அவர்களும் உண்டு, நண்பர்களுக்கும் வழங்கி ஏழைகளுக்கும் கொடுக்கிறார்கள் !*

*அவர்களது மார்க்க சட்டப்படி அரசியல் சட்டம் தந்த அனுமதியின்படி 
அவர்களது சொத்துக்களை பிரிக்கிறார்கள் !
அவர்களது திருமணத்தை செய்கிறார்கள் !
அவர்களது விவாகரத்தை செய்கிறார்கள் !
இந்திய நீதிமன்றங்களில் ஏற்கனவே கோடிகணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கையில் அவர்களின் வழக்குகளை அவர்களே தீர்த்து கொள்கிறார்கள் !
இதனால் யாருக்கு என்ன நட்டம் ?*

*ஒன்றே குலம்! ஒருவனே இறைவன்!! என சாந்தி சமாதானத்தை போதிக்கும் மார்க்கம் இஸ்லாம்! இதில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை !ஆனால் எல்லா சமூகங்களிலும் உணர்ச்சியால் உந்தப்பட்டு வன்முறையை கையில் எடுக்கும் சிலர் இருப்பது போல் இங்கும் இருக்கின்றனர் ! எப்படி குஜராத்தில் நடந்த கொலைகளுக்கு இங்குள்ள இந்துச் சகோதரர்கள் காரணமில்லையோ அது போன்று பயங்கரவாதத்திற்கும் பெரும்பாலான முஸ்லிம்களுக்கும் சம்மந்தமில்லை!மற்றவர்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்தாத மீடியாக்கள் முஸ்லிம்கள் குற்றம் இழைக்கும் போது மதத்தை அடையாளப்படுத்துகின்றனர்* .

*ஆகையால் அவர்களின் போக்குகளில் தலையிட்டு அவர்களை வம்புக்கு இழுப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்ற அடிப்படையையாவது உணர்ந்து செயல்படுங்கள். இல்லையேல் சமூக அமைதி சீரழிந்து நாடு நாசமாகும்.*....