Followers

Saturday, September 30, 2017

ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக தவ்ஹீத் ஜமாத் களத்தில்!


ரோஹிங்யா மக்களுக்காக தூரத்தில் நின்று கையேந்தி கண்ணீர் வடித்த நமக்கு நேரில் சென்று அவர்களோடு கரம் கோர்க்க சென்று விட்டது குவைத் மண்டலம்...


இன்ஷா அல்லாஹ் நாளை முதல் அந்த மக்களுக்கு தேவையான அடிப்படை உணவு உடை வினியோகம்.
புர்காவை வீசி இந்திய ஓட்டுனரை காப்பாற்றிய அரபு பெண்!

புர்காவை வீசி இந்திய ஓட்டுனரை காப்பாற்றிய அரபு பெண்!

ராஸல்கைமா: வாகன விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ஹிர்திக் சிங் என்ற இந்தியரை காப்பாற்றிய அமீரக பெண் சைஃப் அல் குமைதி.

'நான் மருத்துவ மனை சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தேன். அப்போது வாகன விபத்தில் சிக்கி ஓட்டுனர் ஒருவர் தீக்காயங்களோடு துடித்துக் கொண்டிருந்தார். என்னிடம் வேறு துணிகள் இல்லை. உடன் எனது தோழியின் புர்காவை எடுத்து அந்த ஓட்டுனரின் மேல் போட்டேன். பற்றிய தீ குறைய ஆரம்பித்தது. வலியால் அந்த ஓட்டுநர் துடித்தார். காவல் துறையினருக்கு தகவல் சொல்லி அவர்கள் வந்த பிறகு அந்த இடத்தை விட்டு சென்றேன்.' என்று கல்ஃப் நியூஸூக்கு பேட்டி கொடுத்துள்ளார் சைஃப் அல் குமைதி. தற்போது அந்த ஓட்டுனர் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்.

தகவல் உதவி
கல்ஃப் நியூஸ்
29-09-2017


இஸ்லாமிய வீடுகளையும் கடைகளையும் அடையாளமிட்டு கூட்டமாக வந்து அழிக்கும் சங் பரிவார கும்பல் இந்நிகழ்வை கண்டு வெட்கி தலை குனியட்டும்.குஜராத்தில் 300 தலித்துகள் புத்த மதத்தை தழுவினர்!

குஜராத்தில் 300 தலித்துகள் புத்த மதத்தை தழுவினர்!

குஜராத் மாநிலம் அஹமதாபாத் மற்றும் வதேதராவில் 300க்கு மேற்பட்ட தலித்கள் புத்த மதத்தை தழுவியுள்ளனர். இந்து மதம் என்ற பெயரில் தலித்களை வலுக்கட்டாயமாக சேர்த்து இன்று வரை கொடுமைபடுத்தப்பட்டுக் கொண்டுள்ளனர். விடுதலைக்கு ஏங்கிய இவர்கள் தற்போது புத்த மதத்தை தேர்ந்தெடுத்துள்ளனர். அசோக விஜயதசமியான நேற்று சனிக்கிழமை இந்நிகழ்வு நடந்துள்ளது. 

சங் பரிவாரங்கள் எங்கெல்லாம் வலுவாக உள்ளதோ அங்கு இந்து பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித்கள் சமமாக நடத்தப்படுவதில்லை என்பதற்கு இந்நிகழ்வு ஒரு சிறந்த எடுத்துக் காட்டு.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
01-10-2017

இந்தியாவின் தற்போதய நிலை....காணாமல் போன பெண்ணை மீட்டு கொடுத்த மதுரை மாவட்ட TNTJ

காணாமல் போன பெண்ணை மீட்டு கொடுத்த மதுரை மாவட்ட TNTJ

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்....

கடந்த 27.09.17 அன்று மதுரை மாவட்ட செயலாளருக்கு புதுக்கோட்டையை சேர்ந்த ஒரு பெண்ணிடம்  இருந்து கைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் அவர்  மதுரை ரயில்வே ஜங்ஷனில் பர்தா அணிந்த நிலையில் எங்கு செல்வது என தெரியாமல் ஒரு 25 வயது மதிக்கதக்க  முஸ்லிம் பெண் நிற்பதாகவும் அவருக்கு உதவி தேவைப்படுவதாகவும் தனக்கு வந்த தகவலை அவர் தெரிவித்தார். உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரயில்வே ஜங்ஷனுக்கு அருகாமையில் இருக்கும் கட்ராபாளையம் கிளை தலைவருக்கு தகவல் கொடுத்து அதை உண்மை நிலையை விசாரிக்க சொல்லப்பட்டது. அவரும் உடனடியாக ரயில்வே ஜங்ஷனுக்கு சென்று அது உண்மை தான் என்பதை ஊர்ஜிதம் செய்து தகவல் கொடுத்தார். உடனடியாக மாவட்ட துணை செயலாளர்கள் யூனூஸ்கான், M.J. ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணிடம் பேசி அவரை அருகாமையில் இருந்த கட்ராபாளையம் கிளை தலைவர் ஷாகுல் அவர்களின் அம்மா வீட்டிற்கு அழைத்து சென்று ஷாகுல் அவர்களின் அம்மா மூலமாக விசாரிக்கப்பட்டது.

அதில் அவர் தான்  காரைக்குடிக்கு பக்கத்தில் உள்ள  பள்ளத்தூரை சேர்ந்தவர் எனவும் குடும்ப பிரச்சனையின் காரணமாக தான் வீட்டை விட்டு வந்துவிட்டதாகவும் தகவல் சொன்னார். உடனடியாக அந்த பெண்விட்டாரின் அலைபேசி நம்பர் வாங்கி அவர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு சுப்ரமணியபுரம் மர்கஸுக்கு வர செய்தனர். சுப்ரமணியபுரம் மர்கஸில் மாவட்ட நிர்வாகிகள், சுப்ரமணியபுரம் கிளை நிர்வாகிகள், கட்ராபாளையம் நிர்வாகிகள், ஆகியோர் அந்த பெண்ணின் வீட்டாரிடம் விசாரித்தனர். அதில் அந்த பெண்ணுக்கு சிறிய அளவில் மனநோய் இருப்பதாகவும், கணவர் வீட்டாரிடம் இருந்து விலகி பெற்றோரின் வீட்டில் இருந்து வந்ததாகவும், 27.09.17 மதியம் வீட்டில் இருந்து வெளியேறிவிட்டதாகவம் தகவல் சொன்னார்கள்.

“வேற சில நபர்களிடம் சிக்கியிருந்தால் பாரதூரமான விளைவை சந்தித்திருபார் அல்லாஹ்வின் மகத்தான கிருபையின் மூலமாக தான் உங்களிடம் அல்லாஹ் இவரை சேர்த்துள்ளான்” என கண்கலங்க அழுது தங்கள் பெண்ணை தங்களிடம் ஒப்படைக்குமாறும் இனிமேல் நாங்கள் கவனமாக பார்த்து கொள்வோம் என  நம் நிர்வாகிகளிடம் முறையிட்டனர். உடனடியாக அந்த பெண்ணும் அவரிடம் இருந்த 22,000 ரூபாய்க்கு மேல் இருந்த பணமும் அவர் கையில் கொண்டு வந்த நகையும் அவர் போட்டு இருந்த நகையுடனும் அந்த பெண் அவர்களின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அந்த குடும்பத்தினர் கண்ணீர் மல்க நம் நிர்வாகிகளிடம் நன்றியினை தெரிவித்து விட்டு அந்த பெண்ணை அழைத்து சென்றனர்.


அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் !

Friday, September 29, 2017

இன்று ஆயுதபூஜை எனும் ஒரு பண்டிகை

கண்ணியமிக்க இஸ்லாமியர்களே!

இன்று ஆயுதபூஜை எனும் ஒரு பண்டிகை இந்து மக்களால் அனுசரிக்கப்படுகிறது. "செய்யும் தொழிலே தெய்வம்" என்ற நம்பிக்கையில் அவர்கள் தங்களின் தொழில் சார்ந்த ஆயுதம்,வாகனம்,கருவிகள் போன்றவைகளை சுத்தம் செய்து பூஜிப்பார்கள்.அது அவர்களின் நம்பிக்கை அதில் நமக்கேதும் குழப்பமில்லை, அவர்கள் நம்பிக்கை அவர்களுக்கு!

ஆனால் இஸ்லாமியர் சிலரும் தங்களின் கார்,வேன்,பைக் போன்ற வாகனங்களுக்கு இதுபோன்று பூஜை செய்வது அறியாமையின் உச்சம்? காரணம், இறைவனின் நாட்டப்படிதான் எதுவும் நடக்கும் என்பது இறை நம்பிக்கையில் பிரதானமானது. அதை சிதைக்கும் விதமாகவே இச்செயல் அமைந்திருப்பதை கவணிக்க வேண்டும்.

"உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்"
قُلْ لَّنْ يُّصِيْبَـنَاۤ اِلَّا مَا كَتَبَ
اللّٰهُ لَـنَا هُوَ مَوْلٰٮنَا ‌ وَعَلَى اللّٰهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُوْنَ‏ 
“ஒருபோதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு ஒன்றும்) எங்களை அணுகாது; அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்” என்று (நபியே!) நீர் கூறும்; முஃமின்கள் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைப்பார்களாக!
(அல்குர்ஆன் : 9:51)

நபி மொழி
"யார் பிற மத கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கிறாரோ! அவரும் அவரைச்சார்ந்தவரே"! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

ஆதலால் இதுபோன்ற காரியங்களில் இஸ்லாமியர்கள் ஈடுபட வேண்டாம் என வேண்டுகிறேன்!

இந்து மக்களுடன் கலந்து தான் நாம் வாழ்ந்து வருகிறோம், வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பலம்!

இறை நம்பிக்கையில் இறுக்மாய் இருப்போம்!
இந்தியர்கள் என்பதால் நெருக்கமாய் இருப்போம்!!

அன்புடன்...
அப்பாஸ்(எ) ஷாஜஹான்
இராஜகிரி
தஞ்சை மாவட்டம்.


Thursday, September 28, 2017

பீஜே என்பவர் யார் ?பீஜே என்பவர் யார்?

தவ்ஹீத் ஜமாத்தினை அறிமுகம் செய்த

பீஜே என்பவர் யார் என்று கீழே காண்போம்

By - Rasmin MISc - ரஸ்மின்

***********

பி.ஜெ என்று சுருக்கமாக அழைக்கப்படும் பி.ஜெய்னுல் ஆபிதீன் தமிழகத்தின் தொண்டி நகரில் பிறந்தவர்.

தமிழகத்தின் பழமை வாய்ந்த அரபுக் கல்லூரிகளில் ஒன்றான கூத்தாநல்லூர் அரபிக் கல்லூரியில் 07 ஆண்டுகள் கல்வி கற்ற இவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் நிறுவனராவார்.

அரபுக் கல்லூரியில் 07 ஆண்டுகள் மத்ஹபு, தரீக்காக்கள் என்று இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ள வழிகெட்ட கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கல்வியை கற்ற இவர். அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளை கற்பதில் ஆர்வம் கொண்டார்.

அல்குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான நபிமொழிகளுக்கும் எதிராக உருவாக்கப்பட்ட மத்ஹபுகள் மற்றும் தரீக்காக்களின் வழிகேடுகளை குர்ஆன் சுன்னா ஒளியில் புரிந்து கொண்ட இவர் தனது சகோதரர் மவ்லவி பி.எஸ். அலாவுத்தீனுடன் இணைந்து தர்கா வழிபாடு, பேய் நம்பிக்கை, தட்டு தாயத்து, இணைவைப்பு, பித்அத்துக்கள், மத்ஹபுகள், தரீக்காக்கள் போன்றவற்றுக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தார்.

இஸ்லாத்தின் பெயரால் உருவாக்கப்பட்ட மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக பேச்சிலும், எழுத்திலும் போராடி வரும் ஜெய்னுல் ஆபீதீன் அவர்கள் நூற்றுக் கணக்கான நூல்களை எழுதியுள்ளதுடன், ஆயிரக்கணக்கான கட்டுரைகளுக்கும் சொந்தக்காரர் ஆவார்.

கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சீர்திருத்தப் பணியில் தன்னை அர்பணித்த ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள், தமிழகம் தாண்டி இந்தியாவின் பல மாநிலங்களிலும், மத்திய கிழக்கு நாடுகள் இலங்கை, மலேஷியா உள்ளிட்ட பல நாடுகளிலும் இஸ்லாமிய பிரச்சாரங்கள் செய்துள்ளார்.

கடந்த 2005ம் வருடம் இலங்கை அழைத்து வரப்பட்ட போது, இலங்கையில் சுமார் 07 இடங்களில் இவர் உரையாற்றினார். மத்ஹபுகள், தர்காக்கள், இணைவைப்புக் காரியங்கள் அனைத்துக்கும் எதிராக இவர் ஆற்றிய உரைகளினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இவரின் உரையைக் கேட்பதற்காக திரண்டார்கள்.

கொழும்பு, புதுக்கடை, புத்தளம், காலி, மாவனல்லை, காத்தான்குடி போன்ற ஊர்களில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டங்கள் ஒவ்வொன்றிற்கும் சுமார் 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் திரண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

பி.ஜெ ஏன் எதிர்க்கப் படுகின்றார்?
---------------------------------------------------

பி.ஜெய்னுல்ஆபிதீன் அவர்கள் இஸ்லாத்தின் பெயரால் தோற்றம் பெற்றுள்ள அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்யும் அதே நேரம் அல்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபி மொழிகளை மாத்திரமே அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றார்.

அல்-குர்ஆன், மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளுக்கு மாற்றமாக செயல்பட்டு வரும் உலமாக்கள், இவருடைய இந்த பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள். பொது மக்களின் பணத்தில் பொய் சொல்லி வயிறு வளர்க்கும் உலமாக்கள் இவருடைய பிரச்சாரத்தினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றார். தாம் செய்யும் காரியங்களுக்கு பொது மக்கள் ஆதாரம் கேட்கும் நிலை பி.ஜெயின் பிரச்சாரத்தினால் உண்டாக்கப்பட்டது. இந்நிலையினால் மக்களை இவ்வளவு காலமும் ஏமாற்றித் திரிந்த உலமாக்கள் பாதிக்கப்பட்டார்கள். பொருளாதார இழிநிலைக்குத் தள்ளப்பட்டார்கள். ஆகவே தான் பி.ஜெ அவர்களை முழு மூச்சாக இவர்கள் எதிர்த்து வருகின்றார்கள்.

அப்படி இவர் என்ன தான் செய்தார்?

அனைத்துத் தரப்பாரும் இவரை எதிர்க்கும் அளவுக்கு இவர் அப்படி என்னதான் செய்தார்?

ஆம், இவர் செய்த பணி அளப்பரியது. மகத்துவமிக்கது, போற்றத் தக்கது.

கடந்த 30 வருடங்களில் அனைத்து வழிகேடுகளுக்கும் எதிராக இவர் பிரச்சாரம் செய்துள்ளார்.

அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி, நபி முஹம்மது (ஸல்) அவர்களை மாத்திரம் பின்பற்ற வேண்டிய இஸ்லாமிய சமுதாயம் கப்ருகளை வணங்கி வழிபட்டு வருகின்றது. இவருடைய வாழ்நாளில் பெரும் பகுதியை இதற்கெதிரான பிரச்சாரத்திற்காகவே அர்பணித்தார்.

கப்ரு வணக்கத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் பல இடங்களில் இவர் தாக்கப்பட்டார். அதனைத் தாண்டியும் அல்லாஹ் தனது மார்க்கத்திற்கு வெற்றியைக் கொடுத்தான்.

கப்ரு வணங்கிகளுடன் பல விவாதக் களங்களை சந்தித்த பி.ஜெய்னுலாப்தீன் அவர்கள். அல்லாஹ்வை மாத்திரமே வணங்க வேண்டும், அவ்லியாக்களை வணங்கக் கூடாது. அவர்களிடம் பிரார்த்திக்கக் கூடாது என்பதை ஆணித்தரமாக நிரூபித்தார். இவருடைய இந்தப் பிரச்சாரத்தின் விளைவாக தமிழகத்தின் பல ஊர்களில் தர்காக்களை கட்டி, போசித்து வந்தவர்களே அதனை உடைத்துத் தரைமட்டமாக்கும் நிலை உருவாகியது.

இஸ்லாத்தின் மூல ஆதாரங்கள் இரண்டா நான்கா?
இறைவனுக்கு உருவம் உண்டா?
இணை கற்பிப்பவர் யார்?
களியக்காவிளை விவாதம்.
இலங்கை விவாதம்.
சுன்னத் ஜமாஅத் நூல்களில் ஆபாசங்கள்.
இமாம்கள் உதவி இல்லாமல் குர்ஆனை விளங்க முடியுமா?
குர்ஆனில் எழுத்து பிழைகளா தூத்துக்குடி

போன்ற தலைப்புகளில் கப்ரு வணங்கும் தரீக்கா, பரேலவிகளுடன் இவர் செய்த விவாதங்கள் புகழ் பெற்றவை. கப்ரு வணங்கிகளாக இருந்த பலர் ஏகத்துவவாதிகளாக மாறும் நிலையை உண்டாக்கின அந்த விவாதங்கள்.

குர்ஆன், ஹதீஸ் தான் மார்க்கம் என்று சொல்லிக் கொண்டு அதற்கு மாற்றமான சலபிக் கொள்கையை கொண்ட ஸலபி வழிகேடர்களுடன் இவர் செய்த விவாதங்கள் குர்ஆனும், ஆதாரபூர்வமான நபிமொழிகளும் மாத்திரம் தான் நேர்வழி என்பதை தெளிவாக நிரூபித்தன.

சூனியம் வாதமும் எதிர்வாதமும்
அஜ்வா பழமும் சூனியமும்
முஜீபுடன் விவாதம்

ஜகாத் விவாதம்
இலங்கை மன்சூருக்கு மறுப்பு
முகத்தை மறைக்க வேண்டுமா ? சலஃபிகளுடன் நேரடி விவாதம்
முஜாஹித் பேட்டி
உமர் ஷரீபின் உளறல்
உமர் ஷரீபின் உளுத்துப் போன வாதங்கள்
ஹாமித் பக்ரி விமர்சனத்துக்கு பதில்
சைபுத்தீன் சிதம்பரத்தில் ஓட்டம்
சைபுத்தீன் ரஷாதி ஓட்டம்
ஷைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு

போன்ற வீடியோக்கள் இதற்கு சாட்சியாக இருக்கின்றன.

இஸ்லாத்தின் பெயரால் தோன்றிய பல வழிகெட்ட அமைப்பினரோடும் நேருக்கு நேர் விவாதத்தில் கலந்து சத்தியத்தின் மூலம் அசத்தியத்தை அடித்து நொறுக்கிய பி.ஜெ அவர்கள் காதியானிகள், ஷீயாக்கள், அஹ்லுல் குர்ஆன் போன்றவர்களுடனும் நேருக்கு நேர் விவாதத்தை எதிர் கொண்டுள்ளார்.

அரபியின் தான் பெற்ற புலமை, தேர்ந்த மார்க்க அறிவு, பேச்சுத் திறமை, நினைவாற்றல், சமயோசித சிந்தனை போன்றவை இவருடைய பிரச்சாரத்திற்கு உத்வேகமளித்தன.

முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார். அவர் தான் இறுதி நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை தகர்க்க முயன்ற மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் தானும் நபியென்று வாதிட்டான். இவனுடைய கொள்கையினால் கவரப்பட்டவர்கள் அஹ்மதியாக்கள் என்ற பெயரில் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள்.

1994ம் ஆண்டு கோவையில் காதியானிகளுடன் இவர் நடத்திய பகிரங்க விவாதம் காதியானிகளின் கோட்டையையே தவிடு பொடியாக்கியது.

மிர்ஸாகுலாம் பொய்யனே
ரஷாது கலீபா பொய்யனா தூதரா
• 19 அபத்தமா அற்புதமா
குர்ஆன் மட்டும் போதுமா
வஹீ குர்ஆன் மட்டுமா?

போன்ற தலைப்புகளில் காதியானிகள் மற்றும் ரஷாத் கலீபாவை நபியென்று ஏற்றுக் கொண்ட வழிகெட்ட 19 கூட்டத்தினருடன் இவர் பகிரங்க விவாதம் செய்து இஸ்லாத்தின் அடிப்படை இறுதி நபித்துவம் நபி முஹம்மது (ஸல்) அவர்களுடன் நிறைவு பெற்று விட்டதை அல்-குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபி மொழிகளினூடாக நிரூபித்தார்.

இஸ்லாத்திற்கு எதிராக பல விதங்களிலும் பிரச்சாரங்களை முடுக்கி விட்டு, முஸ்லிம்களை மதம் மாற்றம் செய்வதற்காக அயராது உழைக்கும் கிருத்தவ மிஷனரிகளுடன் நேருக்கு நேர் இவர் செய்த விவாதங்கள் கிருத்தவர்களை ஆட்டம் காண வைத்தது.

பைபிள் இறைவேதமா?
குர்ஆன் இறைவேதமே!
கிருத்தவர்கள் ஓட்டமெடுத்த விவாதம்.
கிறித்தவபாதிரியுடன் விவாதம்.
கிறித்தவர்களுடன் தவ்ஹீத் ஜமாஅத் நேருக்கு நேர்.
மூச்சுத் திணற வைத்த விவாதம் கிறித்தவர்களுடன்.
பாதிரியார்களுடன் நடந்த அதிரடி விவாதம்.

போன்ற தலைப்புகளில் இவர் நடத்திய விவாதங்களை இன்றும் இணையதளத்தில் பார்க்க முடியும்.

கடவுள் இல்லை. கடவுள் நம்பிக்கை என்பது தவறானது. எல்லாம் இயற்கை என்றே நம்ப வேண்டும் என்றும் கடவுள் நம்பிக்கைக்கு எதிராக செயல்படும் நாத்தீகர்களுடன் யாராவது விவாதிக்க முடியுமா? என்று நினைத்து அனைவரும் பின்வாங்கிய ஓடிய நேரத்தில் நாத்தீகர்களுடன் நேருக்கு நேர் விவாதக் களத்தில் சந்தித்தவர் தான் இந்த பி.ஜெ.

இறைவன்இருக்கின்றானா?
நாத்திகர்களின்மூட நம்பிக்கைகள்.
குர்ஆன்இறை வேதமா?

போன்ற தலைப்புகளில் நடைபெற்ற விவாதக்களத்தில் இறைவன் இருக்கின்றான் என்பதை நிரூபித்ததுடன், அவன் அல்லாஹ் மாத்திரம் தான் என்பதையும் அறிவுப்பூர்வமான நிரூவினார் அறிஞர் பி.ஜெ அவர்கள்.

இப்படி பல தரப்பட்ட வழிகெட்ட கொள்கைகளையும் அல்-குர்ஆன், ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் அடிப்படையில் விவாதக் களங்கள் மூலம் அடித்து நொருக்கியவர் தான் இந்த பி.ஜெ.

அசத்தியத்திற்கு எதிரான இவருடைய பயணத்தினால், பாதிப்பு அடைந்தவர்களே இவரின் பிரச்சாரத்திற்கு பல இடங்களிலும் தடை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

இவருடைய அனைத்து விவாதங்களையும் ஆன்லைன் பி.ஜெ டாட் காம் என்ற தளத்தில் அனைவரும் பார்க்க முடியும்.

எழுத்துப் பணியில் ஜெய்னுலாப்தீன்
--------------------------------------------------

தனது கவர்ச்சிகரமான பேச்சின் மூலம் ஏகத்துவக் கருத்துக்களை பட்டி தொட்டியெங்கும் கொண்டு செல்வதில் செல்வாக்குச் செலுத்திய அறிஞர் பி.ஜெ அவர்கள் எழுத்துப் பணியிலும் மிகப் பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களை மக்கள் மயப்படுத்தும் ஆயிரக்கணக்கான கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார்.

புரட்சி மின்னல்,

அல்-ஜன்னத்,

அல்-முபீன்,

அந்-நஜாத்,

ஏகத்துவம்,

தீன்குலப் பெண்மணி

ஆகிய மாத இதழ்களில் இவர் தனது ஏகத்துவப் பிரச்சார ஆக்கங்களை எழுதியுள்ளார்.

நர்கீஸ்என்ற மாத இதழில் இவர் எழுதிய விற்பனைக்காக கற்பனைக் கதைகள்என்ற தொடர் பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதழ் நிர்வாகத்திற்கு வந்த அழுத்தம் காரணமாக அந்தத் தொடர் இடை நடுவே நிறுத்தப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஜெய்னுலாப்தீன் அவர்கள். இஸ்லாத்திற்கு எதிரான மாற்றாரின் விமர்சனங்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கும் விதமான பல நூல்களை எழுதியுள்ளார்.

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?

இஸ்லாத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களும் பதில்களும்.

• accusations-and-answers

அர்த்தமுள்ள இஸ்லாம்

மாமனிதர் நபிகள் நாயகம்

• PROPHET MUHAMMAD THE MAN SUPREME

அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்

வருமுன் உரைத்த இஸ்லாம்

இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா

• Does Islam snatch the Rights of Women?

மனிதனுக்கு ஏற்ற மார்க்கம்

வேதம் ஓதும் சாத்தான்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி இவர் எழுதிய நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?” என்ற தலைப்பிலான நூல் மாற்று மத நண்பர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்த ஒரு நூலாகும்.

நபி (ஸல்) அவர்களைப் பற்றிய மாற்று மத நண்பர்களின் தவறான எண்ணங்களுக்கு பதில் சொல்லும் விதமாக மிக அருமையாக இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளது.

அதே போல் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பரிக்கின்றதா? என்ற தலைப்பில் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய உரிமைகளைப் பற்றி விரிவாக இவர் எழுதி வெளியிட்ட நூல் தமிழுலகில் புகழ் பூத்ததாகும்.

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?, அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப் பூர்வமான பதில்கள், குற்றச் சாட்டுக்களும் பதில்களும் போன்ற தலைப்புகளில் மாற்று மத நண்பர்களின் அர்த்தமுள்ள கேள்விகளுக்கு அறிவுப் பூர்வமான பதில்களை இவர் வழங்கி தனியான நூல்களை வெளியிட்டுள்ளார்.

இஸ்லாத்தையும், நபியவர்களையும் கொச்சைப்படுத்தி சல்மான் ரூஷ்தி, தஸ்லிமா நஸ்ரின் போன்றவர்கள் வெளியிட்ட நூல்களுக்கு மறுப்பாக வேதம் ஓதும் சாத்தான்கள்என்ற பெயரில் இவர் எழுதிய நூல் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இஸ்லாத்திற்கு எதிராக பெரும் விமர்சனங்களை முன் வைத்து வரும் கிருத்தவர்களின் அனைத்து விமர்சனங்களுக்கும் காலத்திற்கு ஏற்றாட் போல் இவர் வழங்கிய பதில்கள் அடங்கிய நூல்கள் பொக்கிஷங்களாக பாதுகாக்கப்பட வேண்டியவை.

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை.

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை ஆங்கிலம்.

இது தான் பைபிள்.

இதுதான் பைபிள் ஆங்கிலம்.

இயேசு இறை மகனா?

• Is jesus the son of god

பைபிளில் நபிகள் நாயகம்.

பைபிளில் நபிகள் நாயகம் (ஆங்கிலம்)

கப்ஸா நிலைக்குமா?

போன்ற தலைப்புகளில் கிருத்தவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளித்துள்ளார்.

ஜபமணி என்ற பாதிரியார் இஸ்லாத்தை கொச்சைப் படுத்தி கஃபா நிலைக்குமா?” என்ற தலைப்பில் ஓர் பிரசுரம் வெளியிட்ட நேரத்தில் கப்ஸா நிலைக்குமா?” என்ற தலைப்பில் இவர் எழுதி வெளியிட்ட நூல் மிகவும் பிரபலம் வாய்ந்தது.

இந்தப் புத்தகம் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவு கிருத்தவ பாதிரி ஜபமனியுடன் பி.ஜெ அவர்கள் கிருத்தவம் மற்றும் இஸ்லாம் தொடர்பில் நேரடி விவாதம் செய்து இஸ்லாம் சத்திய மார்க்கம் என்பதை நிரூபணம் செய்தார்.

இஸ்லாத்திற்குள் இருந்து இஸ்லாத்தின் பெயரால் மூட நம்பிக்கைகளையும், போலிக் கருத்துக்களையும் மார்க்கம் என்று பரப்பும் உலமாக்களின் கருத்துக்கள் மூட நம்பிக்கைகள் அனைத்துக்கும் எதிராக இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.

பேய் பிசாசு உண்டா?

இஸ்லாமியக் கொள்கை.

இறைவனிடம் கையேந்துங்கள்.

யாகுத்பா ஓர் ஆய்வு

ஜின்களும் ஷைத்தான்களும்

சுப்ஹான மவ்லித்

முஹ்யித்தீன் மவ்லித் ஓர் ஆய்வு

இஸ்லாத்தின் பார்வையில் பில்லி சூன்யம்

• Was Allah’s Apostle Affected by Black Magic ?

இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்

தர்கா வழிபாடு

திருமறையின் தோற்றுவாய்

குர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை

கொள்கை விளக்கம்

இறைவனைக் காண முடியுமா

கியாமத் நாளின் அடையாளங்கள்

தராவீஹ் ஓர் ஆய்வு

ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுமா

குர்ஆன் மட்டும் போதுமா

பிறை ஓர் விளக்கம்

நபித்தோழர்களும் நமது நிலையும்

அமீருக்குக் கட்டுப்படுதல் ஓர் ஆய்வு

தொப்பி ஓர் ஆய்வு

தப்லீக் தஃலீம் தொகுப்பு ஓர் ஆய்வு

இஸ்லாத்தின் பெயரால் கற்பனைக் கதைகள்

சரியான ஹதீஸ்களும் தவறான ஹதீஸ்களும்

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் (உருது)

போன்ற தலைப்புக்களில் இவர் வெளியிட்ட புத்தகங்கள்
எதிரிகளை வாயடைக்கச் செய்த நூல்களாகும்.
அதே போல்

தொழுகை சட்டங்கள்.

நோன்பு

ஜகாத் ஓர் ஆய்வு

ஜகாத் ஒர் ஆய்வு (உருது)

ஜகாத் ஓர் ஆய்வு (ஆங்கிலம்)

நபிவழியில் நம் ஹஜ்

குர்பானியின் சட்டங்கள்

நவீன பிரச்சனைகளும் தீர்வுகளும்

ஜனாஸாவின் சட்டங்கள்

நேர்ச்சையும் சத்தியமும்

ஜனாஸா தொழுகை

விலக்கப்பட்ட உணவுகள்

சந்திக்கும் வேளையில்

• when-we-meet

துஆக்களின் தொகுப்பு

• dua-book

இஸ்லாமியத் திருமணம்

• islamic-marriage

மேற்கண்ட தலைப்புகளில் இஸ்லாத்தின் சட்ட திட்டங்களை பற்றிய நூல்களையெல்லாம் இவர் எழுதியுள்ளமை இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

சிறந்த பேச்சாற்றல், மொழியாற்றல், எழுத்தாற்றல் போன்றவற்றை தன்னகத்தே கொண்ட ஒரு அறிஞர் தான் சகோ. பி.ஜெ அவர்கள் என்றால் அது மிகையாகாது


• #PJ_The_Legend • #PJ_The_Leader •