Followers

Thursday, March 31, 2016

பேராசைக் காரனடா பார்ப்பான் - சுப்ரமணிய பாரதியார்
பல்வகைப் பாடல்கள்

2. சமூகம்

9. மறவன் பாட்டு


மண்வெட்டிக் கூலிதின லாச்சே!-எங்கள்
வாள்வலியும் வேல்வலியும் போச்சே!
விண்முட்டிச் சென்றபுகர் போச்சே!இந்த
மேதினியில் கெட்டபெய ராச்சே!

நாணிலகு வில்லினொடு தூணி-நல்ல
நாதமிகு சங்கொலியும் பேணி,
பூணிலகு திண்கதையும் கொண்டு,-நாங்கள்
போர்செய்த காலமெல்லாம் பண்டு.

கன்னங் கரியவிருள் நேரம்-தில்
காற்றும் பெருமழையும் சேரும்;
சின்னக் கரியதுணி யாலே எங்கள்
தேகமெல்லாம் மூடிநரி போலே,

ஏழை யெளியவர்கள் வீட்டில்-இந்த
ஈன வயிறுபடும் பாட்டில்,
கோழை யெலிக ளென்னவே-பொருள்
கொண்டு வந்து... ... ...

முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்
மூன்றுமழை பெய்யுமடா மாதம்;
இந்நாளி லேபொய்மைப் பார்ப்பார்-இவர்
ஏதுசெய்தும் காசுபெறப் பார்ப்பார்!

பேராசைக் காரனடா பார்ப்பான்-ஆனால்
பெரியதுரை என்னிலுடல் வேர்ப்பான்;
யாரானா லும்கொடுமை இழைப்பான்
துரை இம்மென்றால் நாய் போல் உழைப்பான்

பிள்ளைக்குப் பூணூலாம் என்பான்-நம்மைப்
பிச்சுப் பணங்கொடெனத் தின்பான்;
கொள்கைக் கேகென்றொரு பொய் மூட்டி
நம்மைக் கொண்டதிலே செய்வான் மாட்டி

சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்-வெறுஞ்
சோற்றுக்கோ வந்ததிந்தப் பஞ்சம்?

நாயும் பிழைக்கும் இந்தப்-பிழைப்பு
நாளெல்லாம் மற்றி திலே உழைப்பு;
பாயும் கடிநாய்ப் போலீசுக்-காரப்
பார்ப்பானுக் குண்டிதிலே பீசு.

சோரந் தொழிலாக் கொள்வோமோ?-முந்தைச்
சூரர் பெயரை அழிப்போமோ?
வீர மறவர் நாம் அன்றோ இந்த
வீண் வாழ்க்கை வாழ்வதினி நன்றோ!


வீர மறவர் நாமன்றோ?-இந்த
வீண்வாழ்க்கை வாழ்வதினி நன்றோ?

மது குடிக்க மாட்டோம், மற்றவர்களை குடிக்க வைக்கவும் மாட்டோம்’மது குடிக்க மாட்டோம், மற்றவர்களை குடிக்க வைக்கவும் மாட்டோம்’

பிஹாரில் நாளை ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் முதற்கட்டமாக பகுதியளவு மதுவிலக்கு அமலுக்கு வருகிறது. இதற்காக அதன் மீது கடுமையான சட்டங்கள் இம் மாநில சட்டப்பேரவையில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளன. இச் சட்டத்தின்படி பொது இடங்களில் மது அருந்துவோருக்கு 10 வருடம் வரையும், வீடுகளில் அருந்தி விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு 5 வருடங்கள் வரையும் சிறைதண்டனை விதிக்கப்படும்.

இதன் மீது சட்டப்பேரவையில் நீண்ட உரையாற்றிய முதல் அமைச்சர் நிதிஷ்குமார், மதுவால் அதிகமாக பாதிக்கப்படும் ஏழை குடும்பங்களை காப்பது தம் அரசின் தலயாய கடமை எனக் குறிப்பிட்டார். கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு மரணதண்டனை அளிக்கும் சட்டத்தில் அதை அருந்தி பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு அரசு நிவாரண நிதி அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில், நிரந்தர உடல் பாதிப்பு அடைவோருக்கும் உதவித்தொகை அளிப்பதுடன் போதை தடுப்பு மறுவாழ்வு மையங்களும் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்காக, அரசு மருத்துவர்களுக்கு பெங்களூரில் உள்ள ‘நிம்ஹான்ஸ்’ மருத்துவமனையில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு 47-ன்படி மதுவிலக்கை அமல்படுத்துவது ஒரு மாநில அரசின் கடமையாகும் எனவும் நிதிஷ் தெரிவித்தார். இறுதியில் அவர், ‘மது குடிக்க மாட்டோம், மற்றவர்களை குடிக்க வைக்கவும் மாட்டோம்’ என அறிவித்தார்.

பிஹாரின் மதுவிலக்கு சட்டத்தின்படி, கள்ளச்சாரயம் காய்ச்சுபவர்களுக்கு அதிகபட்சமாக மரணதண்டனை அளிக்கப்படும். பொது இடங்களில் மது அருந்தி சிக்குவோருக்கு 5 முதல் 10 வருடம் வரையும், தமது வீடுகளில் குடித்து விட்டு பொதுமக்களுக்கு தொந்தரவு அளிப்போருக்கு ஐந்து வருடம் வரையும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மது கடத்தலில் ஈடுபடும் பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கும் 7 வருடம் சிறையில் தள்ளப்படுவர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
31-03-2016

Wednesday, March 30, 2016

தேர்வுகளில் அகில இந்திய அளவில் சாதனை!தேர்வுகளில் அகில இந்திய அளவில் சாதனை!

---------------------------------------

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் உள்ள பிமான்புகுர் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ஹசீம், ஹமிதா பீவி தம்பதியர் மகன் முகமது முர்ஸலின்.

தற்போது கொல்கத்தா St. சேவியர் கல்லூரியில் இளங்கலை இயற்பியல் இறுதியாண்டு மாணவர். மேற்படிப்புக்காக எழுதிய மூன்று நுழைவுத் தேர்வுகளில் தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்..

IISC, IIT சார்பில் நடைபெற்ற நுழைவுத்தேரவுகளிலும், ஒருங்கிணைந்த 5 ஆண்டு P.hd. in Physics நுழைவுத்தேர்விலும் முதலிடம் பெற்று பெற்றோர்க்கு பெருமை சேர்த்துள்ளார்.

இவரது தாயார் அங்கன்வாடி பணியாளர் என்பது குறிப்பிடத்தக்கது..

thanks to
Colachel Azheem

சதாம் ஹூசைனை அமெரிக்கா தூக்கில் ஏற்றியது ஏன்?

சதாம் ஹூசைனை அமெரிக்கா தூக்கில் ஏற்றியது ஏன்? உலகின் அதி பயங்கர தீவிரவாதி யார்?
----------------------------------------
பழைய செய்தியாக இருந்தாலும் செய்தியின் முக்கியத்துவம் கருதி தருகிறேன்.

சதாம் ஹூசைனை அமெரிக்கா தூக்கில் ஏற்றியது ஏன்? உலகின் அதி பயங்கர தீவிரவாதி யார்? ----------------------------------------பழைய செய்தியாக இருந்தாலும் செய்தியின் முக்கியத்துவம் கருதி தருகிறேன்.

Posted by Nazeer Ahamed on Wednesday, March 30, 2016

பாரத் மாதா என்று இந்த பெண்ணைச் சொல்லலாம்!

பாரத் மாதா என்று இந்த பெண்ணைச் சொல்லலாம்!-------------------------------------------------------------------கடைவீதிய...

Posted by Nazeer Ahamed on Wednesday, March 30, 2016

பாரத் மாதா என்று இந்த பெண்ணைச் சொல்லலாம்!
-------------------------------------------------------------------
கடைவீதியில் தினமும் மாமூல் வாங்கும் ஒரு கான்ஸ்டபிளை ஒரு இஸ்லாமிய பெண்மணி துவைத்து எடுப்பதை பாருங்கள். அநீதிக்கு எதிராக கொதித்தெழும் இவர்தான் உண்மையான பாரத மாதா!

'காவல் துறையில் உள்ள நீங்களே இப்படி ஏழைகளிடம் திருடினால் உங்களிடம் எப்படி நாங்கள் புகார் செய்ய முடியும்? ஏழை மக்களான இவர்களிடமிருந்து தண்ணீர் வாங்குகிறாய், மளிகை சாமான்கள் வாங்குகிறாய். எதற்கும் பணம் கொடுப்பதில்லை. கேட்டால் மிரட்டுகிறாய்.'
'நான் கேட்கவில்லை.... அவர்களாகத்தான் கொடுத்தார்கள்'

'சுப்.... வாயை மூடு. வேலையில் சேரும் போது லஞ்சம் வாங்க மாட்டேன் என்று உறுதி மொழி கொடுத்தாயே... அந்த உறுதி மொழி எங்கே? இந்த கொடுமையை பொதுமக்களாகிய நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.'

இந்த இஸ்லாமிய பெண்மணியின் கோபத்தைக் கண்டு அந்த கடைவீதியே அதிர்ச்சியில் உறைந்து போனது. இது போன்று இந்திய தாய்மார்கள் களமிறங்கினால் லஞ்சமும் திருட்டும் நம் நாட்டில் என்றோ மறைந்திருக்கும்.

கற்பனை உருவத்தை வரைந்து வைத்துக் கொண்டு 'பாரத் மாதா கீ ஜே' என்று கூவி வரும் அரை டவுசர்களே! உண்மையான பாரத மாதா இவர்தான். இவருக்கு ஜே போடு. குற்றங்களாவது நாட்டில் குறையும்.

'ஆண்ட பரம்பரை' - என்று சாதித் திமிர் பிடித்தவர்களுக்காக!

இணையத்தில் பலமுறை சாதி பெருமை பேசக் கூடியவர்கள் 'நாங்கள் ஆண்ட பரம்பரை' 'நீங்கள் பேண்ட பரம்பரை' என்று பெருமை பேசி வருவதை பார்த்துள்ளோம். மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் இந்த நாட்டுக்கு வருவதற்கு முன் தமிழகத்தின் பல பகுதிகளில் வறுமை தாண்டவமாடியது. தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடியது. சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஒருவரையொருவர் போரிட்டுக் கொண்டு காடு கழனிகளையெல்லாம் போரில் அழித்து வந்தனர். மதத்தின் பெயரால் தீண்டாமை சகல மட்டத்திலும் கடைபிடிக்கப்பட்டது.

மார்புக்கு வரி, மேலாடைக்கு வரி, தொட்டால் தீட்டு, இரட்டைக் குவளை முறை, என்று தலித்கள் ஒரு பக்கம் துன்புறுத்தப்பட்டனர். மற்றொரு பக்கம் சைவ மதத்தவர் சமணர்களையும் பவுத்தர்களையும் வன்முறையால் மதம் மாற்றிக் கொண்டிருந்தனர். இந்த கால கட்டத்தில்தான் மொகலாயர்கள் ஆட்சியை பிடிக்கின்றனர். கிட்டத்தட்ட 1000 ஆண்டுகள் அகண்ட பாரதத்தை ஆள்வது அதுவும் அந்த காலத்தில் என்பது அவ்வளவு லேசான காரியம் அல்ல. இதற்கு முன்னால் நடந்த இந்துக்களின் ஆட்சியை விட இஸ்லாமியரின் ஆட்சி பெரும்பான்மை மக்களுக்கு அரணாக இருந்ததின் காரணத்தினால்தான் இத்தனை ஆண்டு காலம் ஆட்சி செய்ய முடிந்தது. அதன் பிறகு வந்த வெள்ளையர்கள் நமது செல்வங்களை இங்கிலாந்துக்கு கொண்டு சென்றாலும் நமது நாட்டுக்கும் பல நல்லதுகள் செய்து வந்துள்ளனர்.

எனவே ஆண்ட பெருமை பேசிக் கொண்டு சில சாதி வெறியர்கள் தங்களின் ஆளுமையை பறை சாற்ற வேண்டாம். மக்களை இவ்வளவு வறுமையில் வைத்து ஆண்டு விட்டு அதனை பெருமையாக வேறு பேசித் திரிய வேண்டாம். இது நாம் தமிழர் கட்சிக்கும் பொருந்தும்.

'பாரத் மாதாகீ ஜே' சொல்லாததால் கை உடைப்பு!29-03-2016 அன்று டெல்லியில் மூன்று இஸ்லாமிய மதரஸா மாணவர்களிடம் ஆர்எஸ்எஸ் குண்டர்கள் மூன்று பேர் 'பாரத் மாதா கீ ஜே' சொல் என்று மிரட்டினர். அந்த மாணவர்கள் சொல்லவில்லை. உடன் அந்த மூன்று ரவுடிகளும் மாணவர்களை சராமாரியாக தாக்க ஆரம்பித்துள்ளனர். இதில் முஹம்மது தில்காஷ் என்ற மாணவனின் கை எலும்பு முறிந்தது. மற்ற மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது. போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இந்தியாவில் ரத்த களரியை ஏற்படுத்த வேண்டும் என்ற முடிவோடு ஆர்எஸ்எஸ் பயணிக்கிறது. ஆளும் பாஜக அரசோ வேடிக்கை பார்க்கிறது.

சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதை இந்த மிருக புத்திரர்களுக்கு சொல்லிக் கொள்கிறோம்.

தகவல் உதவி
என்டிடிவி
30-03-2016

Monday, March 28, 2016

பாகிஸ்தானிய குழந்தைகள் ரியாத்தில் பிரித்தெடுப்பு!நிஷார் அமீர் கனி, ஃபாத்திமா தம்பதிகளுக்கு பாகிஸ்தானில் இரண்டு குழந்தைகள் ஒட்டிப் பிறந்தன. சவுதி மன்னர் சல்மானுக்கு சவுதியில் சிகிச்சை அளிக்க வேண்டி பெற்றோர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் கோரிக்கையை ஏற்ற மன்னர் சல்மான் அவர்களை சவுதி அழைத்திருந்தார்.

மார்ச் 3 ந்தேதி குழந்தைகளும் பெற்றோரும் ரியாத் வந்து சேர்ந்தனர். மன்னர் சல்மான் உத்தரவுக்கிணங்க நேற்று மன்னர் அப்துல்லா மருத்துவமனையில் பிரித்தெடுக்கும் பணி தொடங்கியது. 20 க்கும் மேற்பட்ட மருத்துவ குழு போராடி குழந்தைகளை நல்ல முறையில் பிரித்தெடுத்தனர். குழந்தைகள் இருவரும் நலமாக உள்ளனர். தாய் ஃபாத்திமா மன்னர் சல்மானுக்கு தனது இதயங் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

தகவல் உதவி
சவுதி கெஜட்
29-03-2016

http://saudigazette.com.sa/saudi-arabia/mother-separated-pakistani-twins-thanks-king-salman/

அனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!

அனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!----------------------------------------------------------------------------'பூ...

Posted by Nazeer Ahamed on Monday, March 28, 2016

அனைத்தும் உங்களைப் போன்ற சமுதாயங்களே!

'பூமியில் வாழும் உயிரினங்கள், தமது சிறகுகளால் பறந்து செல்லும் பறவைகள் யாவும் உங்களைப் போன்ற சமுதாயங்களே'
-குர்ஆன் 6:38

ஊர்வன, நீந்துவன, பறப்பன, என்று உலகில் உள்ள எந்த உயிரினங்களும் மனிதர்களைப் போன்று சமுதாயமாகவே கூடி வாழ்வதாக இறைவன் கூறுகிறான். அன்பு, பண்பு, பாசம், கோபம் என்ற உணர்வுகள் அனைத்து உயிரினங்களுக்கும் அவற்றின் தேவைக்கேற்ப வழங்கப்பட்டுள்ளது. உயிரியல் நிபுணர்கள் இதுவரை 1.75 மில்லியன் உயிரினங்களை கண்டுபிடித்துள்ளனர். இவை அனைத்தும் தனித் தனி குடும்பங்களாக வாழ்ந்து வருவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். மனிதன் இன்னும் கண்டு பிடிக்காத உயிரின வகைகள் 4.5 மில்லியனாகக் கூட இருக்கலாம் என்பது அறிவியலாரின் கணிப்பு. 3.8 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த உயிரினங்களின் படிமங்கள் இன்று நமக்கு கிடைத்துள்ளன. இன்று எவ்வாறு நாம் அந்த உயிரினங்களைப் பார்க்கிறோமோ அதே அமைப்பிலேயே 3.8 மில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த படிமங்களும் தோன்றுகின்றன. எந்த மாற்றமும் தென்படவில்லை. டார்வினின் பரிணாமக் கொள்கை இங்கும் அடிபட்டுப் போகிறது. பரிணாமம் அடைந்த இடைப்பட்ட படிமங்களை இன்று வரை பரிணாவியலார் எங்கும் சமர்ப்பிக்கவும் இல்லை. அவ்வாறு சமர்ப்பித்த ஒன்றிரண்டு படிமங்களும் பொய்யாக புனையப்பட்டது என்று அறிஞர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

சார்லஸ் லினோஸ் என்ற ஸ்வீடன் நாட்டின் தாவரவியல் வல்லுனர் தனது புத்தகமான 'சிஸ்டமா நேச்சுரா' ‘Systema Naturae’ என்ற புத்தகத்தை வெளியிட்டார். (1735) அதில் அவர் கூறுவதாவது 'ஒவ்வொரு உயிரினமும் அதன் உடலமைப்புக்கு தக்கவாறு மிக நேர்த்தியாக இயற்கையால் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு உயிர் மற்றொரு உயிராக பரிணமிக்க வாய்ப்பே இல்லை. அவ்வாறு பரிணமித்தால் அதன் டிஎன்ஏ யிலிருந்து அவ்வுயிரின் உட்புறங்களில் மிக அதிகமான மாற்றங்கள் நிகழ வேண்டும். அதற்கான வாய்ப்புகள் இல்லை' என்று கூறி அதற்கான ஆதாரங்களை வரிசையாக பட்டியலிடுகிறார். தாவரங்கள் மண்ணிலிருந்து தங்களுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொள்ளும் விதத்தில் அதன் உடலமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று மிருகங்களும் மனிதர்களும் பறவைகளும் தங்களின் உணவை தேடிக் கொள்ளும் வகையிலேயே உடலமைப்பை இயற்கை கொடுத்துள்ளது என்கிறார். இவர் இயற்கை என்கிறார். அதனை நாம் கடவுள், இறைவன், அல்லாஹ் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கிறோம்.

எங்கள் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ள ஒரு அறையில் பூனை ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றது. மிக அழகாக இருக்கும். வெளி ஆட்கள் யாரும் வந்தால் குட்டிகள் ஓடி ஒளிந்து கொள்ளும். அவ்வப்போது மீன், கறி துண்டுகள் என்று நான் கொடுப்பது உண்டு. தாய் பூனை அதனை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அந்த குழந்தைகளுக்கு ஊட்டும் அழகே தனி. நான் அருகில் சென்றால் தாய் பூனை 'வந்திருப்பது நமது கூட்டாளிதான். பயமில்லை வெளியே வாருங்கள்' என்று சங்கேத மொழியில் தனது குட்டிகளுக்குக் கூறும். அதனை விளங்கிக் கொண்டு அந்த சிறிய குட்டிகள் ஒவ்வொன்றாக தலையை வெளியில் நீட்டும் அழகே அழகு..... அந்த குட்டிகள் பெரிதானவுடன் அதே தாய் பூனை தன்னோடு அண்ட விடாது விரட்டுவதையும் பார்த்திருக்கிறேன். குட்டிகள் பெரிதாகி விட்டன. இனி நமது உதவி அவைகளுக்கு தேவையில்லை என்பதாலேயே தனது குட்டிகளை தாய் பூனை விரட்டுகிறது. இவை எல்லாம் அனைத்து உயிரினங்களும் மனிதர்களைப் போல ஒரு சமுதாயமாகவே வாழ்ந்து வருகின்றன என்பதை நமக்கு அறிவுறுத்துகின்றன. இவற்றை எல்லாம் சிந்திக்கும் போது இறைவனின் படைப்பாற்றலை நினைத்து அதிசயிக்காமல் ஒருவனால் இருக்க முடியாது.
Posted by சுவனப் பிரியன் at 2:59 AM

லாகூரில் மனித வெடி குண்டு வெடிக்க செய்து 70 பேர் பலி!லாகூரில் மனித வெடி குண்டு வெடிக்க செய்து 70 பேர் பலி!

நேற்று ஈஸ்டர் பண்டிகை ஆதலால் மனித வெடி குண்டாக வந்த ஒரு மிருகம் வெடி குண்டை வெடிக்கச் செய்து குழந்தைகள் பெண்கள் என 70 பேர் வரை கொல்ல காரணமாயிருந்துள்ளான். பாகிஸ்தான் தாலிபான் அமைப்பு செய்ததாக செய்தி வெளியாகி உள்ளது.

இந்த படுகொலையை செய்தவர்கள் மனித குல விரோதிகள். இஸ்லாத்தின் எதிரிகள். இஸ்லாத்துக்கு களங்கம் உண்டாக்க எடுக்கப்பட்ட முயற்சி. ஏனெனில் தாலிபான் மறைந்து வாழும் ஒரு இயக்கம். அதன் பெயரில் ஒரு குண்டு வெடிப்பை யார் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். இதனை செய்தது தாலிபான்கள் என்ற செய்தி உண்மையானால் அந்த நாய்களை பொது மக்கள் முன்னிலையில் சுட்டுத் தள்ளவும் தயங்கக் கூடாது.

-------------------------------------------

நமது நாட்டின் ஒரு உயர் மட்ட ராணுவ அதிகாரி பாகிஸ்தானில் நாச வேலைகளை எப்படி எல்லாம் நிறைவேற்றினார் என்று தேச பக்தி போர்வையில் சொல்வதைப் பாருங்கள்.

சார்.... நீங்கள் 5 வருடம் பாகிஸ்தானில் முஸ்லிமாக நடித்து உளவு பார்த்துள்ளீர்கள். அது பற்றிய அனுபவங்களை பகிரலாமே?

அஜீத் தோவல் ஐபிஎஸ்:

ஐந்து வருடம் அல்ல ஏழு வருடம் உளவு பார்த்துள்ளேன். பாகிஸ்தானின் லாகூரில் ஒரு மிகப் பெரிய தர்ஹா உள்ளது. நிறைய ஆட்கள் அந்த தர்ஹாவுக்கு வருவதும் போவதுமாக இருந்தனர். நானும் ஒரு முஸ்லிமாக அந்த கூட்டத்தோடு கூட்டமாக வலம் வந்து கொண்டிருந்தேன். அந்த தர்ஹாவின் ஒரு மூலையில் நீண்ட வெள்ளை தாடியோடு ஒரு மகானைப் போல ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் என்னை சைகையால் அழைத்தார். அழைத்து அவர் என்னிடம் கேட்டார்..

'நீ இந்துவா?'

'இல்லை... நான் இந்து அல்ல' என்று மறுத்தேன்.

'என்னோடு வா...' என்று என்னை அழைத்துக் கொண்டு ஒடுக்கமான சந்துகளின் வழியாக என்னை அழைத்துச் சென்றார். மறு பேச்சு பேசாமல் அவரோடு சென்றேன். அவருடைய வீடு வந்தவுடன் என்னை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாளிட்டார். கதவை தாளிட்டவுடன் என்னிடம் அவர் திரும்பவும்

'நீ இந்துதானே' என்று கேட்டார். நான் குழம்பிப் போய்

'ஏன் என்னைப் பார்த்து இப்படி ஒரு கேள்வியைக் கேட்கிறீர்கள்?' என்று கேட்டேன்.

'ஏனென்றால் உனக்கு காது குத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் காது குத்த மாட்டார்கள்' என்றார்.

'ஆம்... நான் முன்பு இந்து. இப்போது முஸ்லிமாக மதம் மாறியுள்ளேன்' என்று சொன்னேன்.

'இல்லை... பொய் சொல்கிறாய்... இப்போதும் நீ இந்துவாகத்தான் இருக்கிறாய். பயப்படாமல் சொல் நீ இந்துதானே'

'ஆம் நான் இந்துதான்'

'உடனே காதுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து ஓட்டையை அடைத்து விடு. பாகிஸ்தானில் உளவாளியாக இவ்வாறு திரிவது பெரிய ஆபத்தில் போய் முடியும்.'

'சரி நான் மறைத்துக் கொள்கிறேன்.'

'நீ இந்து மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படி கண்டு பிடித்தேன் என்பது உனக்கு தெரியுமா?'

'தெரியாது நீங்களே சொல்லுங்கள்'

'ஏனென்றால் நானும் ஒரு இந்துதான்' (சபையில் கைத் தட்டல்) இந்த மக்கள் எனது முன்னோர்களை நிறைய கொன்றுள்ளார்கள். அதற்கு நான் இப்பொழுது பழிக்குப் பழி வாங்கிக் கொண்டுள்ளேன். உங்களைப் போன்ற உளவாளிகளைக் காணும் போது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது.' என்று சொல்லிக் கொண்டே அந்த அறையின் அலமாரியை திறந்து எனக்கு காண்பித்தார்.

'இதோ பார் சிவனின் சிலை... அருகில் துர்காவின் சிலை.... நான் இதைத்தான் தினமும் வணங்கி வருகிறேன். வெளியே சென்றால் நான் ஒரு இஸ்லாமிய சூஃபி மகானாக மதிக்கப்படுகிறேன். தர்ஹாவில் எனக்கு மிகுந்த மரியாதையும் கிடைக்கிறது.' என்றார்.

அந்த பெரியவரை அதற்கு பிறகு நான் சந்திக்க முடியவில்லை. அவருக்கு அரசு தரப்பிலிருந்து உதவி ஏதாவது செய்யலாம் என்று நினைத்தேன். அது என்னால் முடியாமல் போய் விட்டது'

-------------------------------------------
அஜீத் தோவல் தனது பேட்டியை காணொளியாகவே கொடுத்துள்ளார். இந்த லிங்கில் சென்று பார்த்துக் கொள்ளுங்கள்.
http://suvanappiriyan.blogspot.com/2015/12/blog-post_527.html

Sunday, March 27, 2016

மணவை முஸ்தஃபா பற்றி அறிந்து கொள்வோம்!தூண்டில் பதிப்பகத்தின் இரண்டாவது வெளியீடாக அண்ணலாரும் அறிவியலும் என்ற நூல் வெளிவந்துள்ளது அனைவரும் அறிந்ததே... அந்நூலின் ஆசிரியர் மணவை முஸ்தபா அவர்கள் நாடறிந்த தமிழிறஞர் என்பது முந்தைய தலைமுறையினரில் சிலருக்கு தெரிந்திருக்கும். அம்மாபெரும் ஆளுமையை இன்றைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்பதற்காக வேண்டியே சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அண்ணலாரும் அறிவியலும் என்ற நூலை மறுபதிப்பு செய்து வெளியிட்டுள்ளோம்.

தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், இலக்கிய வளத்திற்கும் இஸ்லாமியர்கள் செய்துள்ள பங்களிப்பு மகத்தானது. அதற்கு சாட்சியானவர்களில் மிக முக்கியமானவர் மணவை முஸ்தபா. தமிழ் மொழிக்கும், சொல் வளத்திற்கும் இவர் ஆற்றிய பணிகளை சமுதாயம் அங்கீகரிக்காமல், அவரையும் அவரது தமிழ் தொண்டையும் நாம் மறந்துபோனது மிகவும் வேதனைக்குரியதாகும்.

இவரைப்போன்ற எத்தனையோ ஆளுமைகளின் வரலாற்றை அறியாமல் இருக்கும் நமது அறியாமையின் காரணமாகவே நம் இம்மண்ணின் மைந்தர்கள் என்பதை மெய்ப்பிக்க திராணியற்று, இஸ்லாமியர்கள் எங்கிருந்தோ வந்த அந்நியர்கள். இம்மண்ணுக்கும், மொழிக்கும் எந்தப் பங்களிப்பையும் செய்யாதவர்கள் என்ற அவப்பெயரை சுமந்து நிற்கிறோம்.

நண்பர்களே.. தயவுகூர்ந்து இதனைப் போன்ற வரலாற்றைப படியுங்கள்.. பரப்புங்கள்... இதோ நம் சமகாலத்து ஆளுமை மணவை முஸ்தபா அவர்கள் வகித்த பதவிகளையும், பெற்றுள்ள விருதுகளையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். படித்த பின்பு இவரைப்போன்ற தமிழறிஞர் யார்? என்று பெருமிதம் கொள்ளுங்கள்.. கணினி மற்றும் மருத்துவம் தொடர்பான ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச் சொற்களை இலட்சங்களில் தந்த வளர் தமிழ்ச் செல்வரின் வரலாறு இதோ...

சென்னை, அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பட்டதாரி யான வளர்தமிழ்ச் செல்வர், கலைமாமணி ஹாஜி மணவை முஸ்தபா
15-06-1935இல் பிறந்தவர். சர்வதேச இதழான 'யுனெஸ்கோ கூரியர்'தமிழ் மாத இதழின் ஆசிரியராக 35 ஆண்டுகளும், தென்மொழிகள் புத்தக டிரஸ்ட் நிர்வாகத்தின் நிர்வாக இயக்குநராக 40 ஆண்டுகளும், புக் பிரண்ட் இதழின் ஆசிரியராக 4 ஆண்டுகளும் பணியாற்றியுள்ளார்.

மேலும்,
• என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தமிழ் பதிப்பின் பொறுப்பாசிரியராகவும்,
• சுதந்திர பொன்விழா குழுவின் முன்னாள் உறுப்பினராகவும்,
• தமிழ்நாடு அரசு உயர்கல்வி - தமிழ் ஆக்கப்பணிக்குழு முன்னாள் உறுப்பினராகவும்,
• அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர் சங்க முன்னாள் இணைச் செயலாளராகவும்,
• தமிழ்நாடு, பாண்டிச்சேரி வானொலி நிலைய அறிவியல் நிகழ்ச்சி ஆலோசகராகவும்,
• அண்ணா பல்கலைக்கழக தமிழ் வளர்ச்சித் துறை ஆலோசகராகவும்,
• சர்வதேசத் தமிழ் ஆராய்ச்சி பேரவையின் இந்தியக் குழுவின் முன்னாள் இணைச் செயலாளராகவும்,
• பாரதிய ஞானபீடப் பரிசு தேர்வுக்குழு உறுப்பினராகவும்,
• கௌரவ மாகாண மாஜிஸ்திரேட்டராகவும்,
• எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் தமிழ் வளர்ச்சித்துறை ஆலோசகராகவும்,
• தமிழ்நாடு அரசின் அறிவியல் தமிழ் மன்றத்தின் தலைவராகவும்,
• தமிழ் மொழி மேம்பாட்டு வாரிய உறுப்பினராகவும்,
• செம்மொழி ஐம்பெரும்குழு தமிழாய்வு மத்திய நிறுவன சென்னை உறுப்பினராகவும் பணியாற்றி யுள்ளார்.

எட்டு ஆண்டுகள் திரைப்படத் தணிக்கைக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். இக்குழுவின் நீண்ட நாள் உறுப்பினர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'காலம் தேடும் தமிழ்',' இளைஞர் இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்', 'பெருமானாரின் பிற சமயக் கண்ணோட் டம்', 'இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா? அறிவியல் மார்க்கமா?', 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்', 'அன்றாட வாழ்வில் அழகுத் தமிழ்', 'தமிழில் அறிவியல் படைப்பிலக்கியம்', உட்பட முப்பத்தைந்து தமிழ் நூல்களை எழுதியுள்ளார். ஆங்கிலத்திலிருந்து எட்டு நூல்களையும், மலையாளத்திலிருந்து ஏழு நூல்களையும் பெயர்த்துள்ளார். எட்டு தொகுப்பு நூல்களும் வெளிவந்துள்ளன. ஐந்து சிறுவர் இலக்கியங்களையும் படைத்துள்ளார். முப்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களையும், ஐந்து தொலைக்காட்சி நாடகங்களையும் எழுதியுள்ளார்.

இவரது கலை, இலக்கியப் பணியினைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றம் 1986இல் கலைமாமணி விருதளித்துப் பாராட்டியுள்ளது. இவரது அறிவியல் தமிழ்ப் பணியைப் போற்றி தமிழ்நாடு அரசு திரு.வி.க... விருதை 1989இல் அளித்துப் பாராட்டியது. 1995இல் ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு ரூபாய் ஐம்பதினாயிரம் பெற்றார். இவரது அயரா தமிழ்ப் பணியைப் பாராட்டி இளையான்குடி டாக்டர் ஜாகீர் ஹீசைன் கல்லூரி அறிவியல் மன்றம் 'வளர் தமிழ்ச் செல்வர்' விருதளித்துப் பாராட்டியுள்ளது. சென்னை சிந்தனையாளர் பேரவை 'அறிவியல் தமிழ்ச் சிற்பி' பட்டம் வழங்கிச் சிறப்பித்துள்ளது.

மேலும் ,
• எம்.ஜி.ஆர். விருது,
• தமிழ் தூதுவர் விருது,
• சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது,
• புகழ் பதிந்த தமிழர் விருது,
• அறிவியல் தமிழ் வித்தகர் விருது,
• அறிவியல் தமிழேறு விருது,
• முத்தமிழ் வித்தகர் விருது,
• தந்தை பெரியார் விருது,
• மூப்பனார் விருது,
• சாதனையாளர் விருது,
• அறிவியல் தமிழருவி விருது,
• சேவா ரத்னா விருது,
• சான்றோர் விருது,
• கணினி கலைச் சொல் வேந்தர் விருது,
• மாமனிதர் விருது,
• அறிவியல் கலைச் சொல் தந்தை விருது,
• அறிவியல் தமிழ் தந்தை விருது,
• தமிழேந்தி விருது,
• சீறாச் செல்வர் விருது,
• தமிழ் வாகைச் செம்மல் விருது,
• கலைஞர் விருது,
• அமெரிக்க மாட்சிமை விருது,
• அறிவியல் செல்வம் விருது,
• தங்க நட்சத்திர விருது,
• அறிவியல் தமிழ் கலைச்சொல் வேந்தர் விருது.
• ஆதித்தனார் விருது,
• உமா மகேசுவரனார் விருது,
• செம்மொழிக் காவலர் விருது,
• இயல் செல்வம் விருது,
• அறிவியல் களஞ்சியம் விருது,
• பண்பாட்டு காப்பாளர் விருது,
• வாழ்நாள் சாதனையாளர் விருது,
• பாரதி விருது,
• உலகப் பெருந்தமிழர் விருது
உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட விருதுகைளையும், பட்டங்களையும், பாராட்டுகளையும் புகழ்பெற்ற பல்வேறு அமைப்புகளிடமிருந்துப் பெற்றுள்ளார்.

தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் ஐந்து விருதுகளைப் பெற்ற ஒரே தமிழறிஞர் இவரே ஆவார். இவரது வாழ்க்கையும், சாதனைகளும் மத்திய அரசால் 7மணி நேரம் 20 நமிடம் பதிவு செய்யப்பட்டு புதுதில்லி ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இவர் எழுதிய 'இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்'எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 1996ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் தத்துவம், சமயம், அறிவியல் எனும் வகைப்பாட்டில் இரண்டாம் பரிசும், இவர் எழுதிய 'மருத்துவக் கலைச்சொல் களஞ்சியம்' எனும் நூல் 1996ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் முதல் பரிசும் பெற்றுள்ளது.

தற்போது சென்னையில் வசித்து வரும் இவர் அறிவியல் தமிழ் அறக்கட்டளை என்னும் அமைப்பை ஏற்படுத்தி தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளார். தற்போது அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் பொறுப்பினை இவரது மகன் டாக்டர் மு.செம்மல் கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஆக்கம் :

தூண்டில் பப்ளிகேஷன்

300 இஸ்லாமிய குழந்தைகளை காப்பாற்றிய ராகுல் ஷர்மா!

குஜராத் கலவரம்:

300 இஸ்லாமிய மாணவ மாணவிகள் படிக்கும் மதரஸா. அந்த மதரஸாவில் பயிலும் அத்தனை குழந்தைகளையும் கொல்ல ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், பிஜேபி காவி வெறியர்கள் நெருங்குகின்றனர். இது பற்றி மேலிடத்துக்கு புகார் அளிக்கிறார் காவல் துறை அதிகாரி ராகுல் ஷர்மா. ஆனால் மோடியின் அதிகாரிகளிடமிருந்து 'நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்' என்ற உத்தரவு வருகிறது. அதிர்ச்சியில் உறைந்து போகிறார் ராகுல் ஷர்மா.மோடி அரசின் உத்தரவை காலில் போட்டு மிதித்து விட்டு கலவரக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கிறார். துப்பாக்கி சப்தம் கேட்டவுடன் கலவர நாய்கள் ஓட்டமெடுக்கின்றது. 300 க்கு மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர்.'ஒரு நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு அந்த மக்களை கொல்ல துணை போவதா? இப்படிப்பட்ட ஒரு பாசிச அரசுக்குக் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை' என்று வேலையை ராஜினாமா செய்தார் ராகுல் ஷர்மா!ராகுல் ஷர்மா போன்ற நேர்மைமிக்க அதிகாரிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரப்படுத்த வேண்டும்!

Posted by Nazeer Ahamed on Sunday, March 27, 2016

குஜராத் கலவரம்: 300 இஸ்லாமிய மாணவ மாணவிகள் படிக்கும் மதரஸா. அந்த மதரஸாவில் பயிலும் அத்தனை குழந்தைகளையும் கொல்ல ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், பிஜேபி காவி வெறியர்கள் நெருங்குகின்றனர். இது பற்றி மேலிடத்துக்கு புகார் அளிக்கிறார் காவல் துறை அதிகாரி ராகுல் ஷர்மா. ஆனால் மோடியின் அதிகாரிகளிடமிருந்து 'நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள்' என்ற உத்தரவு வருகிறது. அதிர்ச்சியில் உறைந்து போகிறார் ராகுல் ஷர்மா.

மோடி அரசின் உத்தரவை காலில் போட்டு மிதித்து விட்டு கலவரக்காரர்களை நோக்கி கண்ணீர் புகை குண்டுகளை வெடிக்கிறார். துப்பாக்கி சப்தம் கேட்டவுடன் கலவர நாய்கள் ஓட்டமெடுக்கின்றது. 300 க்கு மேற்பட்ட குழந்தைகள் காப்பாற்றப்படுகின்றனர்.

'ஒரு நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டிய அரசு அந்த மக்களை கொல்ல துணை போவதா? இப்படிப்பட்ட ஒரு பாசிச அரசுக்குக் கீழ் நான் பணியாற்ற விரும்பவில்லை' என்று வேலையை ராஜினாமா செய்தார் ராகுல் ஷர்மா!

ராகுல் ஷர்மா போன்ற நேர்மைமிக்க அதிகாரிகளுக்கு பாரத ரத்னா கொடுத்து கவுரப்படுத்த வேண்டும்!
தவறுக்கு அபராதம் கட்டிய குவைத் அமைச்சர்!

25-03-2016 அன்று குவைத் நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் யூசுஃப் அல் அலி மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட வ...

Posted by Nazeer Ahamed on Saturday, March 26, 2016

25-03-2016 அன்று குவைத் நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் யூசுஃப் அல் அலி மாற்றுத் திறனாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்தத்தில் தவறுதலாக தனது காரை நிறுத்தி விட்டார். அங்கு பணியிலிருந்து போக்குவரத்து காவலர் அமைச்சரின் கார்தானே என்று கண்டு கொள்ளாமல் இருக்கவில்லை. உடன் அபராத தொகைக்கான ரஷீதை அந்த வாகனத்தில் வைக்கிறார் காவலர். அமைச்சரும் கோபப்பட்டு 'எனக்கே அபராதம் விதிக்கிறாயா?' என்று குதிக்கவில்லை. புன் முறுவலோடு அந்த பில்லை எடுத்துக் கொள்கிறார்.

நம் நாட்டு அமைச்சர்களின் காருக்கு இவ்வாறு அபராத தொகை போட்டு விட்டு அந்த காவலர் வீடு திரும்பி விட முடியுமா?

Saturday, March 26, 2016

முக்காடு போட வைத்த சென்னை வெய்யில்! :-)அரை குறை ஆடைகளோடு வலம் வந்த தமிழச்சிகளை

சென்னையின் வெப்பத்தின் காரணமாக வேறு வழியின்றி

உடலை முழுவதுமாக மூடி வலம் வரச் செய்த சூரியனே!

கண்ணியமாக அவர்களை உலா வரச் செய்த சூரியனே!

கெடுதியிலும் ஒரு நன்மையை உண்டு பண்ணிய சூரியனே!

உன்னை தினமும் உதிக்க வைக்கும் ஏகனுக்கே புகழனைத்தும்!

பி ஜெய்னுல்லாபுதீன் அவர்கள் மூன்று லட்ச ரூபாய் நன்கொடைதமிழகத்தின் வெள்ள நிவாரண நிதியாக சகோதரர் பி ஜெய்னுல்லாபுதீன் அவர்கள் மூன்று லட்ச ரூபாய் வழங்கியுள்ளார்.

மேலும் அவரது நிறுவனமான 'மூன் மார்ட்' மூலமாக 50 ஆயிரம் ரூபாயும் அங்கு பணிபுரியும் பணியாட்களின் நன்கொடையாக 25 ஆயிரம் ரூபாயும் தவ்ஹீத் ஜமாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

தலைவன் இயக்கத்திலிருந்து பணத்தை சுருட்டிக் கொண்டதைத்தான் இதுவரை நம் தமிழகத்தில் பார்த்துள்ளோம். இறைவன் தற்போது இவருக்கு அபிவிருத்தியை அதிகப்படுத்தியுள்ளான்.

தர்ஹா, கத்தம், ஃபாத்திஹா, மவ்லூது என்று மார்க்க முரணான காரியங்களை செய்து வரும் மார்க்க அறிஞர்களே பிஜேயிடமிருந்து பாடம் படித்துக் கொள்ளுங்கள். இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வையுங்கள். உங்களுக்கும் இறைவன் அபிவிருத்தியை வழங்குவான். ஏகத்துவத்தை ஏற்று சுய மரியாதையோடு வாழ இனியாவது பழகுங்கள்.

சிவ சேனாவுக்காக நிதி திரட்டினேன் - டேவிட் ஹெட்லிநேற்று அமெரிக்காவில்i கைதாகி சிறையில் இருக்கும் டேவிட் ஹெட்லியோடு வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக மும்பையில் விசாரணை நடைபெற்றது. அப்துல் வஹாப் கான் என்ற வழக்கறிஞர் இவனை குறுக்கு விசாரணை செய்தார். அதில் பல உண்மைகளை போட்டு உடைத்துள்ளான் டேவிட் ஹெட்லி.

'அமெரிக்காவில் சிவ சேனைக்காக நிதி திரட்டினேன். அந்நிகழ்வுக்கு பால தாக்கரேயை கவுரவ விருந்தினராக அழைக்கத் திட்டமிட்டிருந்தேன். இதற்காக சிவசேனாவின் ராஜாராம் ரெகேயை தொடர்பு கொண்டேன். தாக்கரே உடல் சுகவீனமாக இருப்பதாகவும். அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாது என்றும் அவருக்கு பதிலாக அவரது மகன் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த நிகழ்வு குறிப்பிட்ட நாளில் நடைபெறவில்லை.

எஃப்பிஐ நான் சொல்லாததை எல்லாம் நான் சொன்னதாக செய்தி வெளியிடுகிறது. இஸ்ரத் ஜஹான் லஸ்கர் தொய்பாவோடு தொடர்பு எடையவர் என்று நான் சொல்லவில்லை. அவருக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது.

மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட பத்து பேரில் எவரையும் நான் நேரில் சந்தித்ததில்லை. அஜ்மல் கசாபை போட்டோவில் பார்த்திருக்கிறேன்'

என்று பல திடுக்கிடும் உண்மைகளை தொடர்ந்து கூறி வருகிறான். டேவிட் ஹெட்லிக்கும் சிவ சேனாவுக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்காக இவன் ஏன் பொருளாதாரம் திரட்ட வேண்டும்?

இன்னும் தொடர்ந்து விசாரணை நடந்தால் ஹேமந்த் கர்கரேயை கொல்வதற்காக சிவ சேனா, பிஜேபி, நம் உளவுத் துறையில் உள்ள இந்துத்வாக்கள், பாகிஸ்தானில் உள்ள இந்துத்வாக்கள் எல்லாம் சேர்ந்து நடத்திய சதி வேலை என்ற உண்மை வெளி வரும்.

பாரத மாதாவின் புத்திரர்கள் செய்த செயலைப் பாருங்கள். எவனெல்லாம் 'வந்தே மாதரம்' என்றும் 'பாரத் மாதாகீ ஜே' என்றும் அடிக்கடி கூறி வருகிறானோ அவனெல்லாம் தேச விரோத செயல்களில் ஈடுபடுபவனாக இருக்கிறான்.

தகவல் உதவி
என்டிடிவி
25-03-2016

MUMBAI: Pakistani-American terrorist David Coleman Headley today claimed in a Mumbai court that he had "arranged" a fund-raising programme for the Shiv Sena in the US and had planned to invite the then party supremo Bal Thackeray to the event.

The 55-year-old, who has turned approver in the 26/11 attacks case, said this during cross-examination on the third day by Abdul Wahab Khan, the lawyer of Abu Jundal -- an alleged key plotter of the 2008 Mumbai siege, via a video-link from the US.

பழனி தனது பெயரை முஹம்மத் ஆக மாற்றிக் கொண்டார்.தஞ்சை மாவட்டம் ஆவூரில் 25-03-2016 அன்று ஏகத்துவ பொதுக் கூட்டம் நடைபெற்றது. பெருந்திரளாக மக்கள் வந்தனர். ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி சிறப்பு பேச்சாளராக பேசினார்.

இந்நிகழ்வில் பழனி என்ற சகோதரர் இஸ்லாமிய மார்க்கத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். தனது பெயரை முஹம்மத் என்றும் மாற்றிக் கொண்டார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

Friday, March 25, 2016

இஷ்ரத் ஜஹானுக்கு லஸ்கர் தொய்பாவோடு தொடர்பு கிடையாது - ஹெட்லிஎன்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஷ்ரத் ஜஹானை தனக்கு நேரடியாக தெரியாது. அவர் லஷ்கர் தற்கொலைப் படை தீவிரவாதி கிடையாது என லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி டேவிட் ஹெட்லி பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மாதம் அவர் அளித்த வாக்குமூலத்தில், குஜராத் போலீஸாரால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரத் ஜஹான் என்ற இளம்பெண் லஷ்கர் இ தொய்பாவின் தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதி என தெரிவித்திருந்தார்.

மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளியான பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த அமெரிக்கர் டேவிட் ஹெட்லியை (55) அமெரிக்க புலனாய்வு துறையினர் கைது செய்த னர். அங்கு அவர் மீதான வழக்கில் 35 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் ஹெட்லி அப்ரூவராக மாறி அமெரிக்க சிறையில் இருந்தபடி, மும்பை நீதிமன்றத் தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் சாட்சியம் அளித்து வருகிறார். மும்பை தாக்குதலுக்கு சதி தீட்டம் தீட்டியது, உளவு பார்த்தது உள்பட பல்வேறு திடுக்கிடும் தகவல்களை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று (சனிக்கிழமை) அவர் கூறும்போது, "இஷ்ரத் ஜஹானை தனக்கு நேரடியாக தெரியாது. அவர் லஷ்கர் தற்கொலைப் படை தீவிரவாதி கிடையாது" என்றார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
26-03-2016

வாழ வேண்டிய வயதில் அந்த இள மங்கையை கொன்ற பாவிகள் கண்டிப்பாக தண்டனையை பெற்றுக் nhகள்வார்கள்.

இன்னும் நல்லா அடிச்சு இந்த நாயை கேளுங்க சார். மும்பை தாக்குதலுக்கு அமீத்ஷா போட்டுக் கொடுத்த திட்டங்களையும் சொல்லி விடுவான்.

'நாமெல்லாம் சகோதரர்கள்': முஸ்லிம் அகதிகளின் கால்களைக் கழுவிய போப்‘நாம் வேறுபட்ட பண்பாடுகள், மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆனால் நாம் சகோதரர்கள், நாம் அமைதியாக வாழ விரும்புகிறோம்’ என்று கூறியுள்ளார் போப் பிரான்சிஸ்.

முஸ்லிம், கிறித்துவ, இந்து அகதிகள் கால்களைக் கழுவி முத்தமிட்ட போப், நாம் அனைவரும் ஒரே கடவுளின் குழந்தைகள் என்றார். பிரஸல்ஸ் தாக்குதல்களுக்குப் பிறகு முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வு அதிகரித்து வருவதையடுத்து போப்பின் இந்தச் சகோதரத்துவ செய்கை பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ரோமுக்கு வெளியே கேசில்நுவோ டி போர்ட்டோவில் புகலிடம் நாடி வந்தவர்களிடத்தில் பேசிய போப், பிரஸல்ஸ் தாக்குதலை ‘போர்ச் செய்கை’ அல்ல என்று மறுத்தார்.

புனித வெள்ளியை முன்னிட்டு அகதிகள் கால்களை போப் கழுவியது, ஏசுநாதர் சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக அபோஸ்தலர்கள் கால்களை சேவையின் செய்கையாக கழுவியதன் மறுசெயலாக்கமாக கருதப்படுகிறது. அதாவது பிரஸல்ஸ் தாக்குதல் ‘அழிவின் செய்கை’ என்பதற்கு மாற்றாக புலம்பெயர்ந்தோர் கால்களைக் கழுவியதன் மூலம் சகோதரத்துவத்தை உணர்த்தும் மாற்றுச் செயலாக கருதப்படுகிறது.

அவர்களின் கால்களைக் கழுவ போப் மண்டியிட்டபோது அகதிகளில் பலர் கண்ணீர் விட்டு அழுதனர். புனித நீரால் அவர்களது கால்களைக் கழுவி சுத்தம் செய்த போப் கால்களை முத்தமிட்டார். இந்த நிகழ்ச்சியில் 4 பெண்களும் 8 ஆண்களும் கலந்து கொண்டனர். ஆண்களில் நைஜீரியாவிலிருந்து 4 கத்தோலிக்கர்களும், மாலி, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 3 முஸ்லிம்களும் இந்தியாவிலிருந்து சென்ற ஒரு இந்துவும் அடங்குவர்.

சிறப்பு வழிபாடு நடைபெற்றவுடன் ஒவ்வொரு அகதியையும் போப் வாழ்த்தினார், செல்பிக்களும் எடுத்துக் கொள்ளப்பட்டன.

பொதுவாக கால்கள் கழுவும் புனிதச் சடங்கில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். பாதிரியார்கள் பலர் மரபு ரீதியாக 12 கத்தோலிக்க ஆண்களுக்கே இந்த சடங்கை நிகழ்த்துவர்.

ஆனால் போப், தான் பதவியேற்ற 2013-ம் ஆண்டில், சில வாரங்களிலேயே கத்தோலிக்கர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக சிறார் முகாமுக்குச் சென்று அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு இதே புனிதச் சடங்கை செய்தார்.

தற்போது முஸ்லிம் அகதிகள், பெண்கள், இந்து என்று அவரது சடங்கு புதிய பரிமாணம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ
25-03-2016

Thursday, March 24, 2016

தலித்துகளை அரசியல் ஆனாதை ஆக்கணும் - செங்குட்டுவன்

Posted by Nazeer Ahamed on Thursday, March 24, 2016

20 ஆம் நூற்றாண்டிலும் என்ன ஒரு சாதி வெறி! அந்த தலித்கள் உன்னை என்னய்யா செய்தார்கள்? ஏன் இந்த வன்மம்? இறைவா! இது போன்ற சாதி வெறியர்களுக்கு மனிதாபிமானத்தைக் கொடு! அன்பைக் கொடு! யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பரந்த மனப்பான்மையைக் கொடு! மனு நீதியை எனது நாட்டிலிருந்து ஒழித்து விடு!

--------------------------------------------------

அன்பின் உறவுகளே! என் புலிப்படைத் தளபதிகளே!

நான் செங்குட்டுவன் வாண்டையார் பேசறேன்.
.
விமர்சனங்களையும் பிரச்சினைகளையும் நாம தாங்கதான் வேண்டும். ஒரு பெரிய அறிஞர் சொல்றாரு, அடுத்தவன் விமர்சனத்தில நீ வந்துட்டாலே நீ வளர்ந்துகொண்டிருக்கிறாய் என்று அர்த்தம்.
.
இந்தியாவுலயே தலித்துகள நேரடியா எதிர்த்து அரசியல் பண்ணிக்கிட்டு, இவங்களயும் பிரச்சினை பண்ணிக்கிட்டு நாம வாழ்ந்துகிட்டு இருக்கோம். அதற்கு நமக்கு எதிர்ப்புகளும் பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்யும்.
.
நம் மக்கள் திருமாவளவன திட்டலயா? திட்டிக்கிட்டுதான் இருப்பான், பண்ணிப் பாக்ககட்டும். இது வந்து, இவங்கள திருத்தறது நம்ம வேலயில்லை. இவங்க இப்படி திட்டிக்கிட்டே இருக்கணும். அதான் நமக்கு நல்லது.
.
தலித் மக்கள் இந்த மாதிரி தாறுமாறா பேசறதெல்லாம் எடுத்துப் போட்டுகிட்டே இருங்க. ஏன்னு கேட்டிங்கன்னா, தமிழகத்துல தலித்- தலித் அல்லாதவர்கள்- இவங்கள எப்படி அரசியல்ல அனாதைகளாக ஆக்கணும்னு எனக்குத் தெரியும்.
.
எப்படி இந்த திருமாவளவன திராவிடக் கட்சிகளெல்லாம் சேர்ந்து விரட்டி விட்டாங்களோ-வைக்கோ மட்டும் தேவையில்லாம சேர்ந்து வீணா போனாருன்னு வைச்சுக்குங்களேன்- வைகோ என்னக்கி போய் அங்க சேர்ந்தாரோ அப்பவே அவங்க மாவட்டச் செயலாளர்கள் எல்லாம், நெறைய பேரு அவர விட்டு போயிட்டாங்க. அவருடைய கட்சியிலிருந்து நிறைய பேரு போயிட்டு இருக்காங்க.
.
அதனால தலித் இயக்கங்கள் அனாதையாக்கப்பட வேண்டும். தலித் மக்களும் அனாதை ஆக்கப்படணும். தலித் இயக்கத்துடய தலைவர்களும் அனாதை ஆக்கப்படணும். அதுதான் தொழில் ரகசியம்.
..
இப்போ இவங்க திட்டத் திட்டத்தான் அவங்களுக்கு சனியன். இவங்களுக்கு பிரச்சனையை உருவாக்கிறது- நம்ப ஒன்னும் உருவாக்க வேண்டியதில்ல, அவங்களே உருவாக்கிடுவாங்க.
இப்ப அவங்க எல்லாரையும் திட்டத் திட்ட என்ன ஆகும்ணு பாத்திங்கன்னா, ஒரு கால கட்டத்தில அவங்க தனியா-மறுபடியும் அதே – எப்படி முன்ன தனியா- எப்படி பிரிச்சி – ஊரவிட்டு தனியா தள்ளிக் கொண்டு போய் – இரண்டு தெருவ கட்டி தள்ளி வச்சாங்களோ அதே மாதிரி அரசியல்லயும் பொது வாழ்க்கையிலயும் – இந்தியாவுல தலித்துகள, அரசியல்ல தலித்துகளுக்கு தனி தெரு மறுபடியும் ஒதுக்கச் சொல்லி சொல்லிடுவாங்க.
.
அதனால, இவங்க அவங்க தலயிலயே மண்ணை அள்ளிப் போட்டுக்கிறாங்க, அது நல்லதுதான். இப்ப அவங்க செய்யறது எல்லாமே, அவுங்கவுங்களுக்கு வென வச்சிக்கிற வேலய கரக்டா பண்ணிக்கிட்டு இருக்காங்க. இப்ப நாம செய்ய வேண்டியது என்னன்னா?
.
தேசிய கட்சிகளும் திராவிட கட்சிகளும் தலித்துகள ஒதுக்க வேண்டும், அல்லது நாம சொன்ன மாதிரி எஸ்.சி கிட்ட ஓட்டு கேட்டா இங்க வராத, எஸ்.சி தெருவுல ஓட்டுக் கேட்டுட்டு எங்க தெருவுல வந்து ஓட்டுக் கேட்காத என்று சொல்லி நம்ம மக்கள் பிரச்சினைய திசைய திருப்பணும்.
.
தலித்- தலித் அல்லாதவர்கள் என்ற ஒரு மிகப் பெரிய பிரச்சின நடக்கப் போவுது. அதுக்குத் தகுந்த மாதிரி இவங்கள முதல் கட்டமா, அரசியல் அனாதை ஆக்கணும்.
.
இவர்களுக்கு மற்றவர்களுக்கிட்ட இருந்து கிடைக்கக் கூடிய உதவிகள தடுத்து நிறுத்தணும்.
.
அடுத்தவங்க, அடுத்த சாதிக்காரங்க யாருமே தலித்துகளுக்கு வேல கொடுக்கக்கூடாது.
.
தலித்துகளை வேலக்கு வச்சிக்கக்கூடாது.
.
அவங்களுக்கு நம்ப பக்கத்திலிருந்து 10 காசுகூட, நம்ம 82 பர்சன்டேஜ் வசிக்கற, வாழக்கூடிய மாற்று சாதிக்காரங்கக்கிட்ட இருந்து அவங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காம பண்ணிடம்னாலே பிரச்சின தீந்திடும்.
.
ஆல்ரெடி அவங்க பொருளாதாரத்தத் தேடி – சோத்துக்கு அலைய விட்டுடம்னாலே – மற்றபடி வாய பொத்திக்கிட்டு பேசாம இருப்பாங்க. அதுக்கு என்ன வழிங்கிறத யோசிங்க.
.
நம்ம மக்கள் வந்து இவங்களுக்கு எப்படி வேலையை கெடுக்கலாம், எப்படி இவங்களுக்கு பொருளாதாரத்தக் கெடுக்கலாம், எப்படி இவங்களுக்கு காசுவர்ற- ஒவ்வொரு காசையும் கெடுக்கலாம். இவங்களுக்கு சாப்பாடு வந்து கவர்மெண்டு போடட்டும் நமக்கென்ன?
.
அதனால தலித்து வாக்குகள கேக்கறவங்க, நம்மகிட்ட வந்து ஓட்டு கேக்கக்கூடாது. தலித்துகளுக்கு வேல கொடுக்கிறவனுக்கு நம்ம வேல கொடுக்கக்கூடாது. இந்த மாதிரி, மிகப்பெரிய தர்க்க ரீதியான ஒரு போராட்டத்த நம்ம மனரீதியா ஆரம்பிக்கணும். இதுதான் இதுக்கு தெளிவான வழி.
.
எதிரிய பிரியா இருக்க விடறதனால தான் பிரச்சின.
.
நம்ம ஆளுவ டிரைவர் வேல கொடுக்காதீங்க, அவங்க வண்டிய கூப்படாதீங்க. அவங்களுக்கு…. அவங்க, கடயில பொருள் வாங்காதீங்க.

அவங்க ஆபிசரா இருந்தாங்கன்னா, அந்த இடத்துக்குப் போயி இவன்…. ஆபிசரா இருந்தா எங்க ஊருக்கு விஏஓ ஆக எஸ்.சி வேணாம்னு எல்லாரும் எழுதி கொடுங்க.

அதே மாதிரி பஸ்சுல கண்டக்ரா இருந்தான்னா அவங்கிட்ட டிக்கெட் எடுக்காதீங்க, உங்களால என்னென்ன வகையில அவங்களுக்கு பொருளாதர ரீதியா- வேலை வாய்ப்புகல்ல, என்ன என்ன வகையால அரசியல் ரீதியா -எப்படி யெப்படி பண்ணணுமோ அதப் பண்ணின்னா ஆட்டோமேட்டிக்கா ஒடுங்க போறாங்க.
.
இப்ப எல்லாரும் பச்சையா சொல்லுங்க தலித்து கட்சி, தலித்த வச்சிறுக்கிற கட்சிகளுக்கு நாங்க வாக்களிக்க மாட்டோம், அப்படின்னு திருத்தா சொல்லுங்க.
.
இவங்க ஓட்டு வேணாம்னு அரசியல் பண்ணறது இந்தியாவுல நாம மட்டும் தான் பண்றோம். தமிழகத்திலயே தலித் வாக்குகள் வேண்டாம் என்று சொல்லுகிற ஒரே இயக்கம் நமது இயக்கம்தான்.
.
இதுல தெளிவா தெரிஞ்சிக்குங்க. இவங்களுக்கு தீர்வு என்னன்னு நெறைய பேர் கேட்டிருக்கிறாங்க. தலித் அல்லாத – தலித் மக்கள் அல்லாத, தலித் வாக்குகளை வாங்காத, ஒரு கட்சியால மட்டும்தான் நமக்கு தீர்வு ஏற்படும். நாம மட்டும்தான் அதை சொல்லி இருக்கோம்.
.
செங்குட்டுவன் வாண்டையார் மட்டும்தான் – 1999 இல இருந்து எங்களுக்கு தலித் வாக்குகள் வேண்டாம், எங்களுக்கு தலித்தோட எந்த உதவியும் வேண்டாம். அவங்க ஓட்டே எங்களுக்கு வேண்டாம், பாக்கி இருக்கிறது 82 சதவீதம் சாதிக்காரங்கள வச்சி நாங்க ஆட்சி அமைக்கின்ற போது தான் இதற்கு நிச்சயமாக ஒரு தீர்வு கிடைக்கும்.
.
அதை நோக்கிய பயணத்தில தலித் அல்லாத மக்களை ஒருக்கிணைத்து, ஆட்சி அமைச்சம்னா ஆட்டோமேட்டிக்கா வாயப் பொத்திக்கிட்டு இருக்கப் போறான். அதுவரை இவர்களுக்குக் கிடைக்கிற பொருளாதார வசதி, எல்லா உதவிகளையும் எப்படி எப்படி தடுத்து நிறுத்தலாம். அப்படின்னு நீங்க யோசிங்க. வாழ்த்துக்கள்.
.
இது அனைத்துக் தளங்களுக்கும் பார்வேட் பண்ணிடுங்க.

நரேந்திர மோடிஜி க்கு என்னை விட அதிக வழக்குகள்...'என் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதால் கல்லூரியில் தலைவராக நீடிக்க முடியாது என்று ஒரு தலைவர் பேசியிருக்கிறார். நரேந்திர மோடிஜி க்கு என்னை விட அதிக வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல கிரிமினல் வழக்குகளும் இதில் அடக்கம். அவர் குஜராத் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் தொடரும் போது நான் ஒரு கல்லூரியின் மாணவர்களின் தலைவனாக இருக்கக் கூடாதா? '

-கன்ஹயா குமார்

சங்கர ராமனின் சாபம் உங்களை சும்மா விடாது அக்கிரமகாரர்களே!காஞ்சி ஜயேந்திரரின் 80-வது பிறந்த நாள் நிறைவு விழா சஹஸ்ர சந்திர தரிசனம் என்ற பெயரில் சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தலைவர் அமித் ஷா பேசியதாவது:

ஆதிசங்கரர் தோற்றுவித்த 5 சங்கர மடங்களில் காஞ்சி மடம் மிகப் பழமையானது. இந்தியாவில் இந்து மத மறுமலர்ச்சிக்கு காஞ்சி சங்கர மடமும் மிகமுக்கியமான பங்களிப்பைச் செய்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது அரசியல் காரணங்களுக்காக வழக்கு தொடரப்பட்டது. இந்த அநீதியை எதிர்த்து அப்போது நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது நான் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தபோதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டேன். உண்மை எப்போதும் தோற்காது என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையாகியுள்ளார்.

80 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஜயேந்திரர் இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து இந்து தர்மத்துக்கும், நாட்டுக்கும் சேவையாற்ற வேண்டும்.

இவ்வாறு அமித் ஷா கூறினார்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
24-03-2016

Wednesday, March 23, 2016

என்ன ஒரு ஆக்ரோஷமான கோஷம்! - கன்ஹயா குமார்!டெல்லி ஜேன்யூ வளாகத்தில் மாணவ மாணவிகள் நடத்திய போராட்டம்! மோடிக்கும் அமீத்ஷாவுக்கும் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கும். அந்த மாணவர்களிடம் இந்துத்வாவுக்கு எதிராக தீ கொளுந்து விட்டு எரிகிறது. சில நாட்களாக இந்துத்வா வெறியர்களின் வெறிப் பேச்சுக்களைக் காணோம். இந்த மாணவர்களின் எதிர்ப்பே அவர்களை ஓடி ஒளியச் செய்திருக்கிறது. இந்த போராட்டம் நாடு முழுக்க விரிவடைய வேண்டும். மோடியும் அமீத்ஷாவும் அவர்களது குண்டர் படைகளும் ஆட்சியை விட்டு இறங்கும் நேரம் வெகு தொலைவில் இல்லை என்றே தெரிகிறது. இந்த மாணவர்கள் மறந்தும் கூட 'வந்தே மாதரம்' என்றோ 'பாரத் மாதா கீ ஜே' என்றோ கூறூததை கவனியுங்கள்.

இவர்கள்தான் உண்மையான தேசபக்தர்கள். போலி தேசபக்தர்களான இந்துத்வாவாதிகளுக்கு சரியான மாற்று இந்த மாண செல்வங்களே!

வாழ்த்துக்கள் கன்ஹயா! அந்த மாணவர்கள் போட்ட கோஷங்களை தமிழ்படுத்தி கீழே தருகிறேன். இதனை அனைவருக்கும் கொண்டு செல்லுங்கள்.

-------------------------------------------------------------------------

சங் பரிவாரங்களிடமிருந்து விடுதலை!

ஆர்எஸ்எஸிடமிருந்து விடுதலை!

சாதி வெறியர்களிடமிருந்து விடுதலை!

ஜெய் ஹிந்த்! இந்தியா வாழ்க!

உரக்கச் சொல்வோம் விடுதலை!

திரும்பவும் சொல்வோம் விடுதலை!

நீங்களும் சொல்லுங்கள் விடுதலை!

வறுமையிலிருந்து விடுதலை!

பட்டினி சாவிலிருந்து விடுதலை!

தற்கொலையிலிருந்து விடுதலை!

நாட்டை சுரண்டுபவர்களிடமிருந்து விடுதலை!

நாட்டை விற்பவர்களிடமிருந்து விடுதலை!

இன் குலாப் ஜிந்தாபாத்!

ஜெய் ஹிந்த்! இந்தியா வாழ்க!

அரசியல் கொள்ளையிரடமிருந்து விடுதலை!

ஆதி வாசிகளுக்கு விடுதலை!

உரக்கச் சொல்வோம் விடுதலை!

நீங்களும் சொல்லுங்கள் விடுதலை!

ஆர்எஸஎஸிடமிருந்து விடுதலை!

சங்பரிவாரத்திடமிருந்து விடுதலை!

சாதி வெறியர்களிடமிருந்து விடுதலை!

அஸ்ஃபாக்குல்லா கான் - எத்தனை பேருக்கு தெரியும?

பகத்சிங்கின் நினைவு நாளை நேற்று நாடு கொண்டாடியது. நாமும் வரவேற்போம். அதே கால கட்டத்தில் இந்த நாட்டு விடுதலைக்காக தனது உயிரை தியாகம் செய்த மற்றொரு தியாகியான அஸ்ஃபாக்கைப் பற்றி நமது வரலாறு சொன்னதா? அவர் இஸ்லாமியர் என்பதால் அவரின் தியாகம் திட்டமிட்டு மறைக்கப்பட்டது. இந்த பதிவில் அவரின் தியாகத்தை நினைவு கூர்வோம்.

உத்தரபிரதேசம் சஹாஜான்பூரில் ஹிஸ்புல்லா கானுக்கு மகனாக 1900 அக்டோபர் 2 ந்தேதி பிறந்தவர் அஸ்ஃபாக். எல்லேரையும் போல துடிப்புள்ள இளைஞனாக வளர்ந்தார். நாட்டில் சுதந்திர வேட்கை பற்றி எரிந்து கொண்டிருந்த நேரம். மஹாத்மா காந்தி விடுத்த சுதந்திர அழைப்பை ஏற்று அஸ்ஃபாக்கும் சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரது ஊரில் இருந்த ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ராம் பிரசாத்தோடு சேர்ந்து சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டார்.

வாரணாசியில் 'ஹிந்துஸ்தான் ரிபப்ளிக் அசோஷியேசன்' என்ற அமைப்பு தொடங்கப்பட்டது. சசீந்தரநாத் சன்யால் இதனை தோற்று வித்தார். 1925 ஆம் ஆண்டு பல இளைஞர்கள் இந்த அமைப்பில் சேர்ந்தனர். விடுதலையை தூண்டும் பல துண்டு பிரசுரங்கள் இங்கிருந்து வெளியிடப்பட்டன. சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இவர்களுக்கு பெருமளவில் ஆயுதங்கள் தேவைப்பட்டது. பொருளாதாரம் இவர்களிடத்தில் இல்லை. எனவெ ஆங்கிலேயரின் அரசு கஜானாக்களை கொள்ளையிட தீர்மானித்தனர்.

ஆங்கிலேயரின் பெரும் பணக் கட்டுக்கள் ரயிலில் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு செல்வது வழக்கம். இந்த ரயிலில் வரும் பணத்தை கொள்ளையிட சசீந்திர நாத் திட்டமிட்டார். இந்த வேலையை திட்டமிட்டு செய்து முடிக்க அஸ்ஃபாக்கை நியமித்தார். அந்த ஆபரேஷனுக்கு அஸ்ஃபாக் தலைமையேற்றார்.

1925 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ந்தேதி சஹாஜஹான்பூரிலிருந்து லக்னோவுக்கு பெரும் பணக்கட்டுக்களை சுமந்து கொண்டு ரயில் புறப்பட்டது. இந்த ரயிலில் அஸ்ஃபாக், சுசீந்தர் பக்ஷி, ராஜேந்திர லஹ்ரி என்ற இந்த மூவரும் இரண்டாம் வகுப்பில் பயணித்தனர். ககோரி என்ற இடத்தில் ரயிலின் சங்கிலி அஸ்ஃபாக்கால் இழுக்கப்பட்டது. பணப்பெட்டி உள்ள இடத்துக்கு அஸ்ஃபாக் முன்னேறி சென்றார். அங்குள்ள காவலர்களிடம் போரிட்டு பணக் கட்டுகளை ரயிலிருந்து கீழே தள்ளினார். பத்துக்கு மேற்பட்ட போராளிகள் அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து பணக்கட்டுகளோடு அனைவரும் வெற்றிகரமாக திரும்பிச் சென்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் ஆங்கிலேயரை மிகவும் கோபப்படுத்தியது. அந்த இடத்தை சுற்றி தேடுதல் வேட்டையில் இறங்கியது பிரிட்டிஷ் ராணுவம். 1925 ஆம் ஆண்டு 26 ந்தேதி பிரிட்டிஷ் ராணுவம் ராம்பிரசாத் பிஸ்மிலை கைது செய்தது. அஸ்ஃபாக் வீட்டிலிருந்து ராணுவத்தில் கையில் சிக்காமல் தந்திரமாக தப்பித்து சென்று விட்டார். அங்கிருந்த கரும்புக் காட்டுக்குள் சில காலம் பதுங்கியிருந்தார். சில காலம் சென்று காசிக்கு போய் பனாரஸ் பல்கலைக் கழகத்தில் பதுங்கிக் கொள்கிறார். அவரது நண்பர்கள் உதவியால் பீஹார் சென்று ஒரு அலுவலக வேலையில் அமர்ந்து கொள்கிறார். சில காலம் செல்கிறது. மீண்டும் நாட்டு விடுதலைக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கில் டெல்லியை நோக்கி பயணிக்கிறார். அங்கும் பிரிட்டிஷ் ராணுவத்துக்கு பல தொல்லைகளை கொடுக்கிறார். இதனால் கடுப்படைந்த ஆங்கிலேயர்கள் அஸ்ஃபாக்கின் தலைக்கு மிக அதிக விலையை நிர்ணயித்தனர். பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் அஸ்ஃபாக்கை காட்டிக் கொடுக்கின்றனர். அஸ்ஃபாக் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்.

போலீஸ் காவலில் உள்ள அஸ்ஃபாக்கை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள வெள்ளையர்கள் ஒரு முஸ்லிம் காவல் துறை அதிகாரியை அனுப்புகின்றனர். அவர் அஸ்ஃபாக்கிடம் பேசினார்.

'இதோ பார் அஸ்ஃபாக்! நானும் ஒரு முஸ்லிம்தான். உன்னுடைய கைது கண்டு வருந்துகிறேன். எனது அறிவுரையை ஏற்றுக் கொண்டால் உனது விடுதலைக்கு நான் உத்தரவாதம் தருகிறேன். ராம் பிரசாத் பிஸ்மில் ஒரு இந்து. பிரிட்டிஷார் ஆட்சியில் நாம் சுகமாக இருக்கலாம். இவர்களை விரட்டி விட்டு இந்துக்கள் ஆட்சியில் அமர்ந்தால் இஸ்லாமியர் வாழ்வதே சிரமமாகி விடும். இஸ்லாமிய நடவடிக்கைகள் பலதுக்கும் தடை விதிப்பார்கள். நாம் நிம்மதியாக வாழ முடியாது. எனவே அவர்களிடமிருந்து பிரிந்து எங்களோடு சேர்ந்து கொள். உனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.' என்றார்.

'நான் உன்னை எச்சரிக்கிறேன். பிறந்த நாட்டுக்கு துரோகமிழைக்கும் இது போன்ற பேச்சுக்களை பேசிக் கொண்டு இனியும் என்னிடம் வர வேண்டாம். ராம் பிரசாத் இந்துவாக இருந்தாலும் எனது சகோதரன். இந்த நாட்டு குடிமகன். அந்நியனான பிரிட்டிஷாரின் தயவில் வாழ்வதை விட மண்ணின் மைந்தனான ஒரு இந்துவின் ஆட்சியில் மரணிப்பதையே பெருமையாக கருதுகிறேன்.' என்று காட்டமாக பதிலளித்தார் அஸ்ஃபாக்.

ககோரி ரயில் கொள்ளை சம்பந்தமாக ஜவஹர்லால் நேரு, ஆச்சார்ய நரேந்திர தேவ், கோவிந்த் பல்லக் போன்றவர்கள் குற்றவாளிகளை விடுவிக்க எவ்வளவோ முயன்று பார்த்தனர். ஆயுள் தண்டனையாகவாவது மாற்றி விடலாம் என்று நம்பியிருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசு இவர்களின் கோரிக்கையை ஏற்கவில்லை. ராம் பிரசாத் பிஸ்மில், அஸ்ஃபாக், ராஜேந்திர லஹ்ரி என்ற இந்த மூவருக்கும் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இந்த மூவரின் தூக்கு தண்டனை தீர்ப்புக்கு நாடு முழுக்க பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் பிரிட்டிஷ் அரசு எதற்கும் செவி சாய்க்கவில்லை. 1927 ஆம் ஆண்டு 19 ந்தேதி அஸ்ஃபாக் ஃபைஸாபாத்தில் தூக்கிலிட அழைத்து வரப்பட்டார். 'நான் எனது தாய் நாட்டு விடுதலைக்காக வாழ்ந்தேன். எதிரியைக் கூட நான் கொன்றதில்லை. நான் நிரபராதி. எனது உண்மை நிலையை இறைவன் அறிவான்' என்று சொல்லி விட்டு தொழுது கொள்ள அனுமதி கேட்டார். அனுமதி அளிக்கப்பட்டது. தொழுது முடித்தவுடன் அஸ்ஃபாக்கை தூக்கில் ஏற்றி கொன்றனர் வெள்ளையர்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் - இறைவனிடமிருந்தே வந்தோம்: அவனிடமே திரும்பிச் செல்லக் கூடியவர்கள் நாம்.

http://www.mapsofindia.com/who-is-who/history/ashfaqulla-khan.html

http://www.gloriousindia.com/biographies/ashfaqulla_khan.html

Tuesday, March 22, 2016

இந்து பெண்ணையும், அவரது குழந்தையையும் பராமரிக்கும் முஸ்லிம்கள்!

இந்து பெண்ணையும், அவரது குழந்தையையும் பராமரிக்கும் முஸ்லிம்கள்...

Posted by Nazeer Ahamed on Tuesday, March 22, 2016

இந்து பெண்ணையும், அவரது குழந்தையையும் பராமரிக்கும் முஸ்லிம்கள்!
------------------------------------------------------
உத்தர பிரதேசம் லக்னோவில் ஒரு அழகிய மனித நேய பணி நடந்து வருகிறது. ஒரு இந்து பெண் தனது குழந்தையை பெற்றெடுக்கிறாள். பிறந்த குழந்தைக்கு இதயத்தில் ஓட்டை இருப்பது தெரிய வருகிறது. வறுமையான குடும்ப சூழல் கொண்ட இந்த பெண்ணை பிறந்த வீடும் ஏற்றுக் கொள்ள வில்லை. இவளது கணவனோ டேராடூன் சென்று வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறான். நிர்கதியாக நின்ற இந்த பெண்ணை இஸ்லாமியர்கள் அரவணைத்தனர். அந்த பெண்ணை பள்ளி வாசலிலேயே தங்க வைத்துக் கொண்டனர். குழந்தையின் வைத்திய செலவுக்காக தினமும் சந்தா வசூலிக்கின்றனர். ஒவ்வொரு நேர தொழுகையிலும் அந்த குழந்தையின் நோய் குணமாக இறைவனிடம் பிரார்த்திக்கின்றனர்.

குஜராத்தில் கவுசர் பீவி என்ற கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை நெருப்பில் இட்டனர் இந்துத்வா அரக்கர்கள். ஆனால் இங்கோ கணவன் கை விட்ட அபலைப் பெண்ணையும் இதயத்தில் ஓட்டை உள்ள குழந்தையையும் இஸ்லாமியர்கள் பராமரிக்கின்றனர். இந்துவாக அந்த பெண்ணும் குழந்தையும் இருந்தாலும் அவர்களும் மனிதப் பிறவிகள்தானே என்று இஸ்லாமியர் உதவுகின்றனர். இஸ்லாமும் முஸ்லிம்களிடம் இதைத்தான் எதிர்பார்க்கிறது.

இன்னா செய்தாரே ஒருத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.

கோவில் பணத்தில் ஆட்டையைப் போட்ட பிஜேபி ராமனாதன்!

கோவில் பணத்தில் ஆட்டையைப் போட்ட பிஜேபி ராமனாதன்! இந்து மதத்தைக் காக்கப் போகிறோம் என்று வழிந்து கொண்டிருக்கும் பிஜேபியி...

Posted by Nazeer Ahamed on Tuesday, March 22, 2016

கோவில் பணத்தில் ஆட்டையைப் போட்ட பிஜேபி ராமனாதன்!

இந்து மதத்தைக் காக்கப் போகிறோம் என்று வழிந்து கொண்டிருக்கும் பிஜேபியினரின் செயலை பார்போம்.

தேசிய வங்கியான பள்ளத்தூர் இந்தியன் வங்கிக்கு வந்த பிஜேபி பிரமுகர் ராமனாதன் 40 லட்சம் ரூபாய்க்கான காசோலையை தந்து பணம் கேட்டுள்ளார். அந்த காசோலை மும்பை தாராவி பகுதியில் அமைந்துள்ள சித்தி வினாயகர் கோவிலுக்கு சொந்தமானது. சந்தேகமடைந்த பேங்க் ஊழியர்கள் அவரை மதியம் வரச் சொல்லியிருக்கிறார்கள். மும்பை கொவில் நிர்வாகத்திடம் இது பற்றி கேட்ட போது அது போலி காசோலை என்று தெரிய வந்தது. இதே போல் மோசடி செய்து புதுக் கோட்டை, மன்னார்குடி, கும்பகோணம் கிளைகளிலும் பல லட்சம் பெறப்பட்டுள்ளது தெரிய வந்தது.
மதியம் பணம் வாங்க வந்த பிஜேபி பிரமுகர் ராமனாதனை காவல் துறை கைது செய்தது. இவனோடு சேர்த்து காரைக்குடி நகர பிஜேபி தலைவர் நாகராஜன், பிஜேபி உறுப்பினர்கள் நெல்லியான், ராஜா போன்றோரையும் காவல் துறை கைது செய்தது.

இந்து மத காவலன் வேடம் போடுவது இதற்காகத்தான். ஏமாந்த மக்களிடம் பணத்தை சுருட்டுவதே இவர்களின் வேலை. உண்மையான இந்து மத பக்தர்கள் பிஜேபியில் இருக்க மாட்டார்கள். முடிச்சவிக்கி, மொள்ளமாரிகள் அனைவரும் கடைசியில் சேரும் புகலிடம் பிஜேபி.

போலோ பாரத் மாதா கீ ஜே.....

குழந்தையின் ஞாபக சக்தி நம்மை வியக்க வைக்கிறது!

குழந்தையின் ஞாபக சக்தி நம்மை வியக்க வைக்கிறது...

Posted by Nazeer Ahamed on Tuesday, March 22, 2016

குழந்தையின் ஞாபக சக்தி நம்மை வியக்க வைக்கிறது!
--------------------------------------------------------

குர்ஆனின் வசனங்களை தாய் ஓத அதன் அடுத்த வசனத்தை குழந்தை எந்த தடுமாற்றமும் இன்றி ஓதுகிறது. 'ஆலுமா டோலுமா' என்று நம் குழந்தைகள் சினிமா பாடல்களை எடுத்து விட்டால் ஏகத்துக்கும் சந்தோஷத்தில் குதிக்கிறோம். பின்னாளில் கல்லூரியில் படிக்கும் போது எவனோடாவது ஓடி விட்டால் கவலைபடுகிறோம். இதற்கெல்லாம் காரணம் பெற்றோர் இஸ்லாத்தை சரி வர தங்கள் குழந்தைகளுக்கு போதிக்காததே.

ஒரு மனிதனுடைய வாழ்வு இந்த உலகோடு முடிந்து விடுவதில்லை. மறு உலக வாழ்வும் உண்டு. உலக கல்வியும் மிக அவசியம்தான். ஆனால் அந்த உலக கல்வியானது மார்க்க கல்வியின் அடித்தளத்தில் அமைய வேண்டும். சிறு வயதிலேயே குழந்தையை மார்க்க பற்றோடு வளர்த்தால் எந்த காலத்திலும் வழி தவற மாட்டார்கள். இந்த தாயைப் போன்று நாமும் நம் குழந்தைகளை குர்ஆனைக் கொண்டும் அதன் அரத்தங்களை விளக்கியும் வளர்ப்போமாக!

'பாரத் மாதா கீ ஜே' - சீக்கியர்களும் எதிர்ப்பு!'சீக்கியர்கள் பெண்ணை தெய்வமாக வணங்குதல் கிடையாது. எனவே 'பாரத் மாதா கீ ஜே' என்றோ 'வந்தே மாதரம்' என்றோ சீக்கியர்களான நாங்கள் சொல்ல மாட்டோம். இந்த வார்த்தைகளை சொல்லுவதால் மட்டுமே ஒருவனின் தேசப் பற்றை நிரூபிக்க முடியும் என்று கூறி வரும் பிஜேபியினரை கண்டிக்கிறேன்'

என்று இரண்டு நாள் முன்பு அகாலிதள் தலைவர் சிம்ரஜித் சிங் காட்டமாக அறிக்கை விட்டுள்ளார். சீக்கியர்களிடம் இந்துத்வாவாதிகளின் போலி தேசப் பற்று கதைக்குதவாது. அதிகம் பேசினால் இடுப்பில் உள்ள கத்தியை உருவினால் தலை தெறிக்க ஓடி விடுவர் பாரத் மாதாவின் புத்திரர்கள். :-)

தகவல் உதவி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
22-03-2016

http://www.hindustantimes.com/punjab/sikhs-don-t-worship-women-in-any-form-so-no-chanting-bharat-mata-ki-jai-mann/story-XF6sDw5GSJCepI7AxM86aK.html

Monday, March 21, 2016

காதலை தடை செய்யுங்கள் அல்லது கவுரவ கொலைகளை தடை செய்யுங்கள்!உடுமலைப் பேட்டை சாதி வெறித் தாக்குதல் சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, தலித்தை காதலித்தார் என்பதற்காக பிரியங்கா என்ற பெண், கடுமையாக தாக்கப்பட்டுள்ள செய்தி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா தன்னுடைய முகநூல் பதிவில் இவ்வாறு பகிர்ந்துள்ளார்.


ஆணவ படுகொலை செய்யப்படவிருக்கும் பெண்ணின் உயிரை காக்க உதவுங்கள் …….. புதுக்கோட்டை ஆலங்குடி பகுதி பிரியங்கா – வினோத் இருவரும் 5 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வினோத் தலித் , இதையறிந்த பிரியங்காவின் பெற்றோர் நேற்று முழுதும் பிரியங்காவை கட்டிவைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் பிரியங்காவிற்கு தலை மற்றும் கை கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை பிரியங்கா ரகசியமாக இந்த செய்தியை வினோத்திற்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.. அவரின் கிராமம் ஜாதி ஆதிக்கம் நிறைந்த பகுதி எங்களால் அங்கு நுழைய கூட முடியவில்லை. பிரியங்கா அவரின் உறவினர்களால் கொலை செய்யப்படலாம். அவரை காப்பாற்ற முடியாத கையறு நிலையில் வெட்கித் தலை குனிகிறோம்….ஆகையால் புதுக்கோட்டை பகுதி தோழர்களே ,நண்பர்களே , மனிதநேயமிக்கோரே வாருங்கள். உதவுங்கள். ………..

மா.பா.மணிகண்டன் 9600 408641 , கார்த்திகேயன் 97888 40257…..

குஜராத்தில் அதிக இந்துக்கள் மதம் மாற விருப்பம்!கடந்த ஐந்து வருடங்களில் குஜராத் அரசுக்கு 1838 விண்ணப்பங்கள் மதம் மாற விருப்பம் தெரிவித்து வந்துள்ளன. இவற்றில் இந்துக்களிடமிருந்து 1735ம், இஸ்லாமியரிடமிருந்து 57ம், கிருத்தவர்களிடமிருந்து 42ம், பார்ஸிகளிடமிருந்து 4ம் விண்ணப்பங்கள் வந்துள்ளது. குஜராத்தில் மத மாற்ற தடை சட்டம் அமுலில் உள்ளதால் எவரும் மதம் மாறும் முன்பு அரசின் அனுமதியை பெற வேண்டும். விண்ணப்பங்களில் 94 சதம் இந்துக்களுடையது என்பதால் அரசு அனுமதி தராமல் இழுத்தடிக்கிறது. ஆனால் அரசுக்கு தெரிவிக்காமல் மறைமுகமாக மத மாற்றங்கள் நடந்தே வருகின்றன.

அமீத்ஷாவின் மிரட்டல், இந்துத்வாவாதிகளின் மிரட்டல், மோடியின் மிரட்டல், இந்து மதத்தை தழுவினால் ஐந்து லட்சம் சன்மானம் என்ற அறிவிப்புகள் இருந்தாலும் எவரும் இந்து மதத்தை தழுவ விரும்பவில்லை. சூரத், ராஜ்கோட், போர் பந்தர், அஹமதாபாத், ஜாம் நகர் போன்ற பகுதியிலிருந்தே அதிக விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இந்த பகுதிகளில்தான் முன்பு இந்து முஸ்லிம் கலவரம் மோடியால் தூண்டி விடப்பட்டது ஞாபகம் இருக்கலாம். கர்ப்பிணியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை நெருப்பில் வீசிய கொடூரம்: கூட்டம் கூட்டமாக முஸ்லிம்களை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய கொடூரம் எல்லாம் அந்த இந்து மக்கள் மனதில் நிழலாடியிருக்கும். இந்த கொடுமையை எல்லாம் தடுக்காமல் நின்றோமே என்றும் அதற்கு பிராயச்சித்தமாக இந்து மதத்தை துறக்க முடிவு செய்திருக்கிறார்களோ என்னவோ?

குஜராத் தலித் அமைப்பின் தலைவர்களுள் ஒருவரான ஜெயந்த் மங்காடியா கூறுகிறார் ' 'அரசு 1735 என்று பொய்யான தகவலை கொடுக்கிறது. விண்ணப்பங்கள் அனைத்தையும் இவர்கள் அரசு கெஜட்டில் பதிவு செய்வதில்லை. ஹிந்து மதத்தை துறக்க விருப்பம் தெரிவித்தவர்கள் எண்ணணிக்கை 50000 க்கு மேல் இருக்கும்.' என்கிறார்.

இந்து மதத்துக்கு திரும்பினால் ஐந்து லட்சம் தருகிறோம் என்ற அறிவிப்பு, முஸ்லிம்களை அடக்கி ஒடுக்குதல் ஒரு பக்கம் என்று இந்து மதத்தைக் காக்க மோடி அரசு நிறைய மெனக்கெடுகிறது. ஆனால் இவர்களிடம் உண்மையும் நேர்மையும் இல்லாததால் தொடர்ந்து இந்துத்வாக்கள் தோல்வி முகத்தையே தழுவுகின்றனர். எதற்கெடுத்தாலும் குஜராத்தை மாடலாக காட்டுவர் இந்துத்வாவாதிகள். அந்த ரோல் மாடல் முழு இந்தியாவுக்கும் பரவ நாமும் பிரார்த்திப்போம். :-)தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
16-03-2016

http://timesofindia.indiatimes.com/city/ahmedabad/In-Gujarat-94-4-of-those-seeking-to-convert-are-Hindu/articleshow/51419977.cms

அடுத்த ஒரு அருமையான பேச்சு கனஹயாவினது.'மோடிஜி! நான் உங்களின் பெயரை கெடுப்பதாக பலர் சொல்கின்றனர். ஏற்கெனவே உங்கள் பெயரை நீங்களே கெடுத்து வைத்துள்ளீர்கள். இதில் நான் வேறு எதை புதிதாகக் கெடுத்து விடப் போகிறேன். நாட்டு மக்களுக்கு நல்லது செய்து பெயரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதை விடுத்து மாட்டுக் கறி, வந்தே மாதரம், பாரத் மாதா, ராமர் கோவில், இந்து முஸ்லிம் கலவரம் என்று சுற்றி சுற்றி வந்து எத்தனை காலம் மக்களை ஏமாற்றப் பொகிறீர்கள்?'

அடுத்த ஒரு அருமையான பேச்சு கனஹயாவினது. கேட்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

https://www.youtube.com/watch?v=OlBFv34qYlI

மணிகண்டன் தனது சொந்த ஊரை சென்றடைந்தார்!

கடந்த ஓரிரு வாரங்களுக்கு முன் தமிழகத்தை சேர்ந்த விபத்திற்குள்ளான மணிகண்டன் என்ற சகோதரரை குவைத்திலிருந்து தாயகம் அனுப்பி வைத்தது தவ்ஹீத் ஜமாஅத்.

அனுப்பி வைத்ததோடு விட்டு விடாமல் சென்னையில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டனை நேற்று தவ்ஹீத் ஜமாஅத் ஆம்புலன்சில் அழைத்து சென்று அவரது சொந்த ஊரில் கொண்டுபோய் சேர்த்தது.

இஸ்லாம் என்பதே "நலம் நாடுவது' தான்'' என்று நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம் 95)

எல்லா புகழும் இறைவனுக்கே...

கூத்தாநல்லூர் ஜின்னா

அம்மாவை வணங்காதவன் இருந்தால் என்ன? செத்தால் என்ன?

//Amma kuda thalai vanagatha ne iruntha Enna illaina Enna..//

Dinesh Srinivasan

அம்மாவை தெய்வத்துக்கு இணையாக பாவிக்கும் இந்து மத நண்பர்கள் பலர் வயதான பெற்றோரை நிர்கதியாக விட்டு விட்டு ஓடி விடுவதைப் பார்கிறோம். தமிழகத்தை எடுத்துக் கொண்டால் அனாதை ஆசிரமங்களில் அடைபட்டுக் கிடக்கும் அனேக பெற்றோர்கள் இந்துக்களின் பெற்றோரே. இஸ்லாமியரிலும் சிலர் உள்ளனர். அது வெகு சொற்பமே. ஏனெனில் வயதான தாய் தந்தையரை பாவிக்காதவனுக்கு நரகம் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.

தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்று நபிகள் நாயகம் சொல்லியிருக்கிறார். ஒருவன் ஐந்து வேளை தொழுது விட்டு பெற்றோரை அனாதை ஆசிரமத்தில் சேர்த்து விடுவானாகில் அவனுடைய தொழுகையை அவனது முகத்திலேயே வீசி எறிவான் இறைவன்.

'பாரத் மாதாகீ ஜே' என்றும் 'வந்தே மாதரம்' என்றும் உதட்டளிவில் சொல்லிக் கொண்டு பல அம்பிகள் அமெரிக்காவில் குடியுரிமை வாங்கிக் கொண்டு சொகுசாக உள்ளனர். தங்களின் வயதான பெற்றோர்களை அனாதை விடுதிகளில் சேர்த்து விடுகின்றனர். அவர்கள் தங்களையும் ஏமாற்றிக் கொண்டு, தனது பெற்றோரையும் ஏமாற்றிக் கொண்டு, பிறந்த நாட்டுக்கும் துரோகம் செய்து கொண்டு, ப டைத்த இறைவனுக்கும் மாறு செய்கின்றனர்.

இனி பிபிசி தரும் ஒரு செய்தியை பார்போம்.

மதுரையை ஒட்டிய உசிலம்பட்டி பகுதியில் செயற்படும் தொண்டு நிறுவனமான யுரைஸ் என்கிற நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் நூறு கிராமங்களில் மட்டும் 150 முதல் 200 முதியோர் கொலைகள் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இந்த நிலைமை வெறும் மதுரைப்பிராந்தியத்தில் மட்டும் நடக்கவில்லை. தமிழ்நாட்டின் வேறு இடங்களிலும் இத்தகைய பெற்றோர் கொலைகள் நடந்திருக்கின்றன. இன்றும் நடப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தகைய சம்பவங்களில் பெரும்பாலும் பெற்றோர்கள் அவர்களின் சொந்த பிள்ளைகளாலேயே கொல்லப்படுகிறார்கள்.

இத்தகைய முதியோர் கொலைகள் நடப்பது சம்பந்தப்பட்ட ஊரில் அல்லது பகுதியில் எல்லோருக்கும் தெரிந்தே இருக்கிறது. ஆனால் யாரும் அதுகுறித்து பேசுவதில்லை. அப்படியே பேசினாலும் அது சட்டப்படி தண்டிக்கப்படுவதும் இல்லை. போதுமான சட்டரீதியிலான சாட்சியங்கள் இல்லை என்று கூறி எல்லோரும் இந்த பிரச்சனையை ஒன்று புறந்தள்லப்பார்க்கிறார்கள்; அல்லது வேகவேகமாக கடந்து செல்ல முயல்கிறார்கள்.

தகவல் உதவி
பிபிசி
12-12-2014

ஒரு இஸ்லாமியன் தாயையும் தாய் நாட்டையும் வணங்க மாட்டான். தாய்க்கும் தாய் நாட்டுக்கும் ஒரு சிரமம் என்றால் தனது உயிரையும் கொடுக்க தயங்க மாட்டான். சில மாதங்கள் முன்பு சென்னை வெள்ளத்தில் ராணுவமே நுழைய அச்சப்பட்ட இடத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது சாதி மத பேதமின்றி உல உயிர்களை அழிவிலிருந்து காப்பாற்றினர் இஸ்லாமியர். ஒரு இந்து பெண் தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு யூனுஸ் என்ற இஸ்லாமிய பெயரை வைத்துள்ளார். யூனுஸ் சரியான நேரத்தில் அந்த பெண்ணை காப்பாற்றியிருக்கா விட்டால் இருவருமே இறந்திருப்பர். யூனுஸ் தனது சொந்த வீட்டை இந்துக்களுக்கு தற்காலிக காப்பிடமாக மாற்றிக் காட்டினார்.

சென்னையில் உள்ள அனைத்து பள்ளி வாசல்களும் தற்காலிக பாதுகாப்பு கூடங்களாக மாற்றப்பட்டன. உணவு தயாரித்தும் வழங்கப்பட்டது. பெண்கள் பள்ளியின் உள்ளே இருப்பதால் தொழுகை நேரத்தில் முஸ்லிம்கள் தெருவில் தொழுது கொண்டனர்.

ஆனால் தேச பக்தி பற்றி வாய் கிழிய பேசும் அம்பிகள் கோவில்களை அடைத்து மக்கள் உள்ளே செல்லாமல் பார்த்துக் கொண்டனர். சூத்திரர்கள் கோவிலின் உள்ளே வந்தால் தீட்டு பட்டு விடுமாம். ஆனால் இஸ்லாமியர்களை கொல்வதற்கு மட்டும் இந்த சூத்திரர்களை பயன்படுத்திக் கொள்வார்கள். :-)

அமெரிக்காவில் சொகுசாக வாழும்ஒரு அம்பியின் தாயார் 'அம்பி! நான் பள்ளி வாசலில் பத்திரமாக இருக்கிறேன்டா.... முஸ்லிம் பாய்கள் என்னை தன் தாயைப் போல பார்த்துக்கிறாங்கடா! நீ கவலைப் படாதே' என்று செல் போனில் பேசியதை நீங்களும் கேட்டிருக்கலாம்.

இதுதான் தாய் நாட்டு பற்று: இதற்கு பெயர்தான் பெற்ற தாய்க்கு செலுத்தும் மரியாதை: இதற்கு பெயர்தான் தேசப் பற்று: இதற்கு பெயர்தான் மனித நேயம்:

சொல்லுதல் யார்க்கும் எளிய: அறியவாம்
சொல்லிய வண்ணம் செயல்.

-------------------------------

அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று சடைந்தும் சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் உம்மிடத்திலிருந்து விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னைப்பரிவோடு அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக!

(அல்-குர்ஆன் 17:23-24)

வந்தே மாதரம் இந்துக்களும் பாடக் கூடாது?

வந்தே மாதரம் இந்துக்களும் பாடக் கூடாது?------------------------------------------------'வந்தே மாதரம்' பாடல் இஸ்லாமிய...

Posted by Nazeer Ahamed on Monday, March 21, 2016

வந்தே மாதரம் இந்துக்களும் பாடக் கூடாது?
------------------------------------------------
'வந்தே மாதரம்' பாடல் இஸ்லாமிய கொள்கைக்கு எதிரானது மட்டுமல்ல: இந்து மத கொள்கைக்கும் எதிரானது. இதனை மிக அழகாக ஜாகிர் நாயக் விளக்குகிறார். பலருக்கும் இதனை கொண்டு செல்லுங்கள்.

ஏகத்துவவாதிகளாக மாறி வரும் இளைய சமுதாயம்!

ஏகத்துவவாதிகளாக மாறி வரும் இளைய சமுதாயம்!----------------------------------------------------20-03-2016 ஞாயிறு அன்று...

Posted by Nazeer Ahamed on Sunday, March 20, 2016

ஏகத்துவவாதிகளாக மாறி வரும் இளைய சமுதாயம்!
----------------------------------------------------
20-03-2016 ஞாயிறு அன்று இராமநாதபுரம் வெளிப்பட்டினம் கிளை சார்பாக நடைபெற்ற ஏகத்துவ பொதுக் கூட்டத்தில் ஒரு சிறுமி ஆற்றிய உரையே இது.
என்ன ஒரு அழுத்தம் திருத்தமான ஆணித்தரமான பேச்சு. 60 வயது 70 வயது முதியவர்களெல்லாம் சத்தியத்தை உணராது தர்ஹாவில் மண்டியிட்டு வருகின்றனர். இந்த சிறுமியின் உரையைக் கேட்டாவது அசத்தியத்தில் இருக்கும் அவர்கள் சத்தியத்தை நோக்கி வருவார்களாக!
-----------------------------------------------------
'இறைவன் ஒருவன்' என்று கூறுவீராக!
'இறைவன் தேவைகளற்றவன்'
யாரையும் அவன் பெறவில்லை. யாருக்கும் பிறக்கவுமில்லை
அவனுக்கு நிகராக யாருமில்லை.
குர்ஆன் 30:112

Sunday, March 20, 2016

அரபு நாட்டவரை இந்திய முஸ்லிம்கள் மணக்க முடியுமா?

அரபு நாட்டவரை இந்திய முஸ்லிம்கள் மணக்க முடியுமா...

Posted by Nazeer Ahamed on Sunday, March 20, 2016

அரபு நாட்டவரை இந்திய முஸ்லிம்கள் மணக்க முடியுமா?
----------------------------------------------------------------------------
அரபுகளை இந்திய முஸ்லிம்களான நீங்கள் திருமணம் முடிக்க முடியுமா? என்று பல இந்துத்வாவாதிகள் கேட்கின்றனர். அவர்களுக்கு அழகிய பதிலை இந்த காணொளி தந்து கொண்டிருக்கிறது.

கேரள ஆண் மகனுக்கு ஒரு அரபி பெண் மனைவியாக மணமுடித்து கொடுக்கப்பட்டு குழந்தையும் பெற்றுள்ளார். இது போன்று நிறைய திருமணங்கள் இன்றும் நடந்து வருகிறது. இந்திய மணமகன்களுக்கு அராபிய பெண்களிடம் கிராக்கி அதிகம். ஆனால் மஹராக அதிக பணம் கொடுக்க நம்மவர்களால் முடிவதில்லை. இவ்வாறு அயல் நாட்டவரை மணமுடிக்க பல அலுவலகங்களும் இயங்குகின்றன.

மொழி வெறி உச்சத்திலிருந்த இந்த மண்ணில் உலக மொழிகள் பலதையும் நேசிக்க வைத்துள்ளது இஸ்லாம். எப்படி ஒரு இந்தியன் அராபிய பெண்ணை மணக்க முடியும் என்று யாரும் அரிவாளை தூக்கிக் கொண்டு வரவில்லை. கவுரவக் கொலை என்று அதற்கு தங்க முலாம் பூசவும் இல்லை. ஏனெனில் இஸ்லாம் இதனை வன்மையாக கண்டிக்கிறது.

கடந்த ஆண்டு 34 சவூதி பெண்களில் 17 பேர் ஆஃப்கானியரையும், 17 பேர் வங்கதேசத்தவரையும் திருமணம் செய்துகொண்டுள்ளனர் என்று சவூதி அரேபிய நீதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.அதே காலக் கட்டத்தில் 55 சவூதி ஆண்கள் ஆஃப்கானியப் பெண்களையும் 27 பேர் வங்கதேசப் பெண்களையும் மணந்துள்ளனர் என்றும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Saturday, March 19, 2016

போலோ பாரத் பாயம்மாவுக்கு ஜே!பாரத மாதாவாக அய்யர் வூட்டு மாமிதான் இருக்கணுமா? ஏன் பாய் வூட்டு காரம்மா இருந்தா பாரதம் ஒத்துக்காதா?

போலோ பாரத் பாயம்மாவுக்கு ஜே!

மாடு வியாபாரிகளான இரு முஸ்லிம்கள் தூக்கிலிட்டு கொலை!ஜார்கண்டில் லடேஹர் மாவட்டத்தில் உள்ள பளுமத் காட்டுப்பகுதியில் மாடு வியாபாரம் செய்து வந்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தாக்கி தூக்கிலிட்டு கொலை செய்துள்ளனர்.

அவர்கள் மேய்த்து வந்த எருமை மாடுகளையும் விரட்டியுள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இது இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்களின் செயல் தான் என்று கூறியுள்ளனர்.
காவல்துறை தகவலின்படி கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்கள் முஹம்மத் மஜ்லூம் (35) மற்றும் அசாத் கான்(15) ஆவார்கள். இந்த இருவரின் கைகளும் பின்புறம் கட்டப்பட்டு அவர்கள் வாயில் துணி வைத்து அடைத்து தூக்கில் இட்டுள்ளனர். அவர்கள் தூக்கிலடப்பட்ட நிலையை பார்க்கும் பொழுது கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டதாக தெரிகிறது என்று கூறியுள்ளனர். கொலை செய்தவர்கள் கடுமையான வெறுப்பினால் உந்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மாடுகளை இந்த நாட்டு சட்டதிட்டத்தின்படி வியாபாரம் செய்வது கூட குற்றமா? கொலை செய்த அந்த வெறி நாய்களை போல கொலை கொள்ளையில் ஈடுபட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா? வெளிநாடுகளுக்கு மாட்டை அறுத்து வியாபாரம் செய்து வரும் இந்துத்வாவாதிகளை என்றாவது இந்த நாய்கள் தட்டிக் கேட்டதுண்டா? செய்து வரும் அத்தனை அக்கிரமங்களுக்கும் ஒரு நாள் இந்த நாய்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

தகவல் உதவி
இந்தியன் எக்ஸ்பிரஸ்
டைம்ஸ் ஆஃப் இந்தியா
புதிய விடியல்
18-03-2016

http://indianexpress.com/article/india/india-news-india/jharkhand-police-probe-cattle-traders-death/

http://timesofindia.indiatimes.com/city/ranchi/2-Muslims-herding-buffaloes-thrashed-hanged-in-Jharkhand/articleshow/51465433.cms

http://www.puthiyavidial.com/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5/

பயிற்சியின் போதும் தொழுகையை தவறவிடாத ஷாஹித் அஃப்ரிதி!பாகிஸ்தான் வீரர் ஷாஹித் அஃப்ரிதி பயிற்சியின் போது மதிய நேர தொழுகை நேரம் வரவே உடன் இறைவனை வணங்க தொழ ஆரம்பித்து விட்டார். ஒரு முஸ்லிம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் எந்த வேலையிலும் தொழுகையை தள்ளிப் போடக் கூடாது. நெடுந்தூரப் பயணத்தில் உள்ளவர்கள் தொழுகையை சேர்த்து தொழுவதற்கும் சுருக்கி தொழுவதற்கும் அனுமதியுண்டு.

தொழுகையை நமது வாழ்நாளில் என்றென்றும் நேரத்தில் தொழக் கூடியவர்களாக நம்மை மாற்றிக் கொள்வோமாக!

"தொழுகையை நிலை நிறுத்துங்கள்" (அல்குர்ஆன் 30:31)

"நிச்சயமாக தொழுகை மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டுத் தடுக்கிறது" (அல்குர்ஆன் 107:45)

"மறுமையில் முதல் விசாரணை தொழுகையைக் குறித்துத்தான் இருக்கும்" என நபிகள் நாயகம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்ஜெர்மன் மருத்துவர் பீட்டர் ஸ்பென்ஸ்பர்க் இஸ்லாத்தை ஏற்றார்.சென்ற வியாழக் கிழமை அன்று ரியாத் அழைப்பு வழிகாட்டு மையத்தில் ஜெர்மனியைச் சேர்ந்த டாக்டர் பீட்டர் ஸ்பென்ஸ்பர்க். ஏசு நாதரையும், நபிகள் நாயகத்தையும் இறைத் தூதராக ஏற்றுக் கொண்டு, ஏக இறைவனை மட்டுமே இனி வணங்குவேன் என்ற உறுதி மொழியோடு இஸ்லாமிய மார்க்கத்தை தம் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார்.

'இறைவனையும் கல்வியில் தேர்ந்தவர்களையும் தவிர குர்ஆனின் விளக்கத்தை மற்றவர்கள் அறிய மாட்டார்கள். அறிவுடையவர்கள் 'இதை நம்பினோம். அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவையே' எனக் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் சிந்திப்பதில்லை.'

குர்ஆன் 3:7

"PREPARED BY BRAHMINS" - நன்னா சொன்னேள் போங்கோ...பட்டு மாமி:

'ஏண்ணா.... கடையிலே அப்பளம் வாங்கறச்சே நன்னா பார்த்து வாங்குங்கோ... நம்மவா போட்ட அப்பளமா இருக்கணும்'

கிட்டு மாமா:

'எல்லாம் எனக்கு தெரியுண்டி.... சூத்ராள் போட்ட எதையும் நீ தொடுறதில்லேங்கறது நேக்கு தெரியாதா?'

திருச்சி சிறுகனூரில் பெரியார் புகழ் பரப்பும் மாநாடு!

5 ஏக்கர் பந்தல் - அதாவது 2 லட்சம் சதுர அடி - வாகன நிறுத்தம் - 10 ஏக்கர் - மேடை 80 ஜ் 40 = 2400 சதுர அடி - மேடையின் பின்புறம் ஓய்வறை 2 - 40 ஜ் 20 = 800 சதுர அடி

கண்காட்சி அரங்கம்: 10 ஜ் 10 - பத்து அரங்குகள் ஒவ்வொன்றிலும் பல்வேறு சிறப்புக் கண்காட்சி அம்சங்கள்.

கழிவறை பெண்களுக்கு - 50 - ஆண்களுக்கு 100 - குளியல் அறை ஆண்களுக்கு 30, பெண்களுக்கு 20 தனித்தனியே.

28 ஸ்டால்கள்: உணவு, தேநீர், குளிர்பானம், இளநீர், புத்தகக் கடைகள் மற்றும் பல இடம் பெறும். அலுவலகம் 60 ஜ் 40 = 2400 சதுர அடிகள். (பெரியார் உலகப் பணியின் நீட்சியாக இது நிரந்தரத் தன்மையுடன் உருவாக்கப்பட்டுள்ளது).

தண்ணீர் வசதி நாள் ஒன்றுக்கு 10 லட்சம் லிட்டர் (3 மின் மோட்டார்கள் இணைப்பு) மின் விளக்குகள் 2000 தீயணைப்பு வாகனம் - 3; எல்.சி.டி. - திரை - 12.

இவ்வளவும் என்ன என்று கேட்கிறீர்களா? சிறுகனூரில் இன்றும் நாளையும் (சனி, ஞாயிறு) திருச்சி - பெரியார் உலகம் சிறுகனூரில் நடத்தவிருக்கும் திராவிடர் கழக மாநில மாநாடு, சமூகநீதி மாநாடுகளுக்கான ஏற்பாடாகும்.

தந்தை பெரியாரிடம் கடவுள் சம்பந்தமாக நமக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் தமிழகத்தில் பார்பனியத்தை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்ததில் பெரியாரின் பணி மகத்தானது. மாட்டுக் கறி, பாரத் மாதா, வந்தே மாதரம் ராமர் கோவில் என்ற போலி தேசப் பற்று வட நாட்டில் போணியானது போல் தமிழகத்தில் இந்துத்வாவுக்கு கை கொடுக்காமல் போனதில் பெரியாரின் பங்கும் உண்டு.

இது போன்ற மாநாடுகளுக்கு இஸ்லாமியர்களும் சென்று சமூக நீதிக்கு பெரியார் ஆற்றிய பணியை கண்டு வர வேண்டும். பார்பனிய ஆதிக்கம் இருந்த அந்த நாளிலேயே 'இன இழிவு நீங்க இஸ்லாமே மருந்து' என்று சொன்னவர் பெரியார். 80 சதவீதம் இஸ்லாமியராகவே வாழ்ந்து மரித்தவர். வாய்ப்பு வசதியுடைவர்கள் இம் மாநாட்டுக்கு சென்று வரவும்.

Friday, March 18, 2016

பர்கா தத்துக்கு பிஜேபியினரின் கொலை மிரட்டல்!பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான ஏ பி வி பியினைச் சேர்ந்தவர்கள் தம்மை வன்புணர்ந்து கொன்று விடுவதாக மிரட்டுவதாக பெண் பத்திரிகையாளர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பிரச்சினை குறித்து, தான் செய்தி வெளியிட்டதால், பாரதீய ஜனதா கட்சியின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் தன்னை டெலிபோனில் தொடர்பு கொண்டு, வன்புணந்து கொன்று விடுவதாக பிரபல பத்திரிகையாளர் பர்கா தத் பரபரப்பு வாக்கு மூலம் அளித்துள்ளார்.

நேற்று டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். நாட்டை ஆளும் கட்சியின் மாணவர் அமைப்பிடமிருந்து பத்திரிகையாளருக்கு விடப்பட்டுள்ள இந்த மிரட்டல் மக்களிடையே பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

இது வரை பொது மக்களை மிரட்டிக் கொண்டிருந்த பிஜேபியினர் இன்று தைரியமாக பத்திரிக்கையாளர்களை கொலை மிரட்டல் விடும் அளவுக்கு துணிந்து விட்டனர். மோடியும் அமீத்ஷாவும் இந்த குண்டர்களுக்கு எந்த கண்டனத்தையும் தெரிவிக்க மாட்டார்கள்.

எல்லா குற்ற செயல்களையும் செய்து விட்டு 'பாரத் மாதாகீ ஜே' என்று கோஷமிட்டு மனிதப் புனிதர்களாகி விடுவார்கள் இந்த நாசகாரர்கள்.

எனது தாய் நாட்டின் எதிர்காலத்தை நினைத்து உண்மையில் கவலையுறுகிறேன்.

பாரத் மாதா கீ ஜெய் - சொல்வதினால் முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை?பாரத் மாதா கீ ஜெய் - சொல்வதினால் முஸ்லிம்களுக்கு என்ன பிரச்சினை என விவரம் அறியாதவர் பலர் இங்கு உண்டு.- அறிந்து கொள்ளுங்கள்

பாரத மாதா' ஆலயம் - வாரணாசி , ஹரித்துவார் , மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள "லெஹ்" என இந்தியாவில் மூன்று இடங்களில் உள்ளது ..

அபநிந்திரனாத் எனும் ஓவியர் தான் பாரத மாதாவிற்க்கு முதன் முதலில் உருவம் குடுத்தவர் - இவர் நம் நாட்டின் தேசிய கீதம் இயற்றிய ரவீந்திரநாத் தாகூரின் உறவினர், சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியாவின் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் - இவரின் பாரத மாதா ஓவியத்திற்கு விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதா அதிக முக்கியத்துவம் தர விரும்பினார் - எனவே இந்திய மக்களுக்கு அவர் ஒரு கோரிக்கை விடுத்தார், சுதந்திர வேட்கையை மக்கள் எண்ணங்களில் முடுக்க அனைவரும் இந்த ஓவியத்தை தங்கள் இல்லங்களில் வைத்து மற்ற தெய்வங்களோடு தெய்வங்களாக போற்றி வழிபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். சுதந்திர வேட்க்கையில் இருந்த ஒவ்வொருவரும் தனக்கு தோன்றிய கருத்தை முன்வைத்தது போல இதுவும் ஒரு சாதாரண யோசனை தான், ஏற்ப்பவர்கள் ஏற்பார்கள், விடுபவர்கள் விட்டு விடுவார்கள் - ஆனால் இந்த யோசனைக்கு நாட்டுபற்று வர்ணம் பூசிநால் தானே ஆர் எஸ் எஸ் க்கு லாபம் ..பாரத மாதா என்ற ஒரு சாதாரண ஓவியம் - நாட்டை குறிப்பதாக அர்த்தம் திரிக்கப்பட்டது இங்கே தான்.-

இந்திய திருநாட்டைத்தானே பாரத மாதா என சொல்கிறோம் என கேட்பவர்களுக்கு . பாரத மாதா என்னும் சொல் - வெறுமனே இந்தியாவை மட்டுமே குறிக்கும் சொல்லாக இருந்த போது இங்கு ஒரு பிரச்சினையும் இல்லை - மாறாக ஒருவர் கற்பனையில் வரைந்த ஓவியத்தை, புதிய தெய்வமாக்கி அதை ஒருவர் செய்த பரிந்துரையின்படி - வழிப்பாடாக செய்ய தொடங்குவதை தான் மறுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர் முஸ்லிம்கள்-

வந்தே மாதரம் என்றால் - இந்த மண்ணை வணங்குகிறேன் என அர்த்தம் - முஸ்லிம்களின் அடிப்படையில் தங்கள் வணக்கத்தில் ஓரிறைவனுக்கு எதையும் யாரையும் இணையாக்க கூடாது என்றிருப்பவர்கள்-, தங்களுக்கு மார்க்கம் கற்று தந்த இறைத்தூதரைக்கூட வழிப்படமாட்டார்கள் - ஆனால் அந்த அடிப்படையையே தகர்க்கும் இந்த வேண்டுகோளுக்கு எப்படி உடன்பட முடியும் - இது போதாதா ஆர் எஸ் எஸ் அறிஞர்களுக்கு'க்கு குட்டையை குழப்ப ?? இந்த இரண்டு விஷயத்தை கையில் எடுத்து கொண்டு - தேச துரோகி என சொல்வதும், தீவிரவாதி என கலவரம் செய்வதும் - உயிர்பலிகளும் இன்றளவும் தொடர்ந்து நீடிக்கிறது.

மோகன் பகவத் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? ஏன் குறிப்பாக பாரத் மாதா கி ஜெய்" கோஷத்தை ஏன் திடீரென முன் வைக்கிறார்? ஏன் ஜெய் - ஹிந்த் கோஷத்தை முன் வைக்கவில்லை - அப்படி வைத்தால் பிழைப்பு நடக்காதே ?

அவருக்கு தெளிவாக தெரியும்,- நாம் இப்படி சொன்னால் முஸ்லிம்கள் என்ன பதிலடி குடுப்பார்கள், பிறகு என்ன நடக்கும், அதை எங்கு கொண்டு செல்லலாம் என்று !! பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தி நாசம் ஏற்படுத்திய அதே தந்திரத்தை இந்த அரைவேக்காட்டு தலைமுறையை கொண்டு நிகழ்த்த திட்டமிடுகிறார்.

by
Satheesh Kumar
Satheesh Kumar

நாட்டை ஊனமாக்கியவர்கள் இன்று குதிரையையும் ஊனமாக்கியுள்ளனர்!உத்திரக்காண்டில் முதல்வருக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் அங்கிருந்த காவல்துறை அதிகாரிகளின் குதிரைகளின் கால்களை உடைத்து கோரத் தாண்டம் ஆடியுள்ளனர்.

பிஜேபி எம்எல்ஏ கணேஷ் ஜோஷி காவல் துறைக்கு சொந்தமான குதிரையின் கால்களை லத்தியால் அடிக்கிறார். அந்த குதிரை சுருண்டு கீழே விழுகிறது. பசு மட்டும் தான் மிருகமா? குதிரை மிருகம் இல்லையா? இன்று அந்த குதிரைக்கு செயற்கை கால் பொருத்தப்பட்டு நம் முன் பரிதாபமாக நிற்கிறது.

எனது தாய் நாட்டை மத வெறியால் ஊனமாக்கிக் கொண்டிருப்பவர்கள் இன்று இந்த குதிரையையும் ஊனமாக்கியுள்ளனர். கண்டிப்பாக இந்த பாவங்களுக்கெல்லாம் வட்டியும் முதலுமாக இந்துத்வாவினர் பலனை அனுபவிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.

இறைவா! கொடுமைக்கார இந்த இந்துத்வா ஆடசியாளர்களுக்கு இழிவைத் தருவாயாக! எனது தாய் நாட்டை இந்த கயவர்களிடமிருந்து காப்பாற்றுவாயாக!Thursday, March 17, 2016

முகிலனை கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னை திருவல்லிக்கேணியில் வாலிபரை கொலை செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்

சென்னை திருவல்லிக்கேணி பகுதிக்குட்பட்ட பல்லவன் சாலை காந்திநகரை சேர்ந்த முகிலன்(வயது 25) நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டார். அவருடைய அண்ணன் சிலம்பரசன்(27), நண்பர் செல்வகுமார் ஆகியோர் கத்திக்குத்து காயமடைந்தனர்.

இந்த சம்பவம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் முகிலனை கொலை செய்தது அதே பகுதியை சேர்ந்த ராகேஷ்(19), தயா என்கிற தயாநிதி(20), வேலு(22) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் நேற்றுமுன்தினம் இரவோடு இரவாக போலீசார் கைது செய்தனர்.

கோஷ்டி தகராறு
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:–

கொலை செய்யப்பட்ட முகிலன்(25) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொண்டர் ஆவார். திருவல்லிக்கேணி ஆதம் மார்க்கெட்டில் உள்ள மருந்துக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அவருடைய அண்ணன் சிலம்பரசன் குடிபோதைக்கு அடிமையானவர். அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ராகேசுக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

ராகேஷ் சென்டிரல் ரெயில் நிலையத்தில் சுமை தூக்கும் வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று சிலம்பரசனிடம் ராகேஷ் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கி உள்ளார். இதுகுறித்து தனது தம்பி முகிலனிடம் சிலம்பரசன் தெரிவித்துள்ளார். இதையடுத்து முகிலன், சிலம்பரசன், அவருடைய நண்பர் நரசிம்மன் ஆகியோர் ராகேசை தேடி சென்றனர்.

சிறையில் அடைப்பு
அங்கு உள்ள ஒரு டீ கடையில் ராகேஷ், தன்னுடைய நண்பர்கள் தயாநிதி, வேலு ஆகியோருடன் அமர்ந்து இருந்தார். அப்போது இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது. பின்னர் கைகலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்தநிலையில் தான் வைத்திருந்த ‘ஸ்கூரு டிரைவரை’ எடுத்து முகிலன் கழுத்தில் ராகேஷ் குத்தினார். அதன்பின்னர் அவரது உடல் முழுவதும் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் முகிலன் இறந்தார். சிலம்பரசன், நரசிம்மன் படுகாயமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட கொலையாளிகள் 3 பேரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தனவல் உதவி
தினத் தந்தி
17-03-2016

ஜாவித் அக்தருக்கு பீரிட்டெழுந்த தேச பக்தி!ஜாவித் அக்தருக்கு பீரிட்டெழுந்த தேச பக்தி!

நேற்று பாராளுமன்றத்தில் ஜாவித் அக்தர் பேச ஆரம்பித்தார். நமது நாட்டின் பெருமைகளை பேசிக் கொண்டு வந்தவர் திடீரென்று...

'சில நாட்களுக்கு முன் ஹைதரபாத்தின் உவைசி 'பாரத் மாதாகீ ஜே' என்று சொல்ல மாட்டேன். அரசியலமைப்பு சட்டத்தில் எனக்கு கட்டளையிடப்படவில்லை. என்ன செய்ய முடியும் உங்களால்' என்று கேட்கிறார். அவர் உடுத்தியிருக்கும் ஷேர்வானியும் தொப்பியும் அரசியலமைப்பு சட்டத்தில் சொல்லப்படவில்லை. ஆனால் அவர் அதனை உடுத்தவில்லையா? நான் சொல்கிறேன். 'பாரத் மாதா கீ ஜே' பாரத் மாதா கீஜே''

அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்.

இனி விவாதத்துக்கு வருவோம்....

'பாரத் மாதாகீ ஜே' என்று சொல்வது எவருக்கும் பிரியம் என்றால் அதனை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் முஸ்லிம்களும் சொல்ல வேண்டும். அப்படி சொல்லாதவர் பாகிஸ்தானுக்கு சென்று விட வேண்டும்' என்று சொல்வதுதான் பிரச்னையை உண்டு பண்ணுகிறது.

'பாரத் மாதா கீ ஜே' என்று உதட்டளவில் சொல்வதல்ல தேசபக்தி. இந்த நாட்டு மக்களை நேசிக்க வேண்டும். ஏழைகளை, தலித்களை, சிறுபான்மையினரை அரவணைத்து செல்ல வேண்டும். தேச விரோத செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். இதுதான் தேச பக்தி.
அசாதுதீன் உவைஸி பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. கோடிக்கணக்கான தங்களின் சொந்த பணத்தை ஏழை மக்களுக்காக செலவிட்டு வருகின்றனர். குறைந்த செலவில் மருத்துவமும், கல்வியும் கொடுத்து வருகிறார் உவைஸி. இதன் பலனை பெரும்பாலான தலித்களும் பெற்று வருகிறார்கள். இந்த நாட்டை நேசிப்பதால்தான் இத்தனையும் அவரால் செய்ய முடிகிறது.

ஜாவித் அக்தரும் அவரது குடும்பமும் செய்து வரும் தேசத் தொண்டு என்ன?

சினிமாவில் ஆபாச பாடல்களை எழுதி பணம் சம்பாதிக்கிறார் ஜாவித். இவரது மனைவி ஷபனா ஆஸ்மி லெஸ்பியன் படத்தில் நடித்து தேசத் தொண்டாற்றி வருகிறார். இவரது மகன் ஃபர்ஹான் அக்தர் ஆபாசமாக நடிகைகளோடு நடித்து இளைஞர்களை கெடுத்து வருகிறார். முடிவில் பாரத் மாதா கீ ஜே என்று சொல்லி விட்டால் இவர்கள் மனிதப் புனிதர்களாக மாறி விடுகின்றனர்.

உவைஸி ஷேர்வானியும் தொப்பியும் போட்டுக் கொள்கிறார். அதனை அவர் மோகன் பகவத்தும் போட்டுக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப் படுத்தவில்லை.

இஸ்லாத்தை பொருத்த வரை கற்பனைகளுக்கு இடமில்லை. 'பாரத் மாதா' என்ற ஒருவர் எங்கும் வாழவில்லை. இவர்களாக ஒரு பெண்ணை கற்பனை செய்து கொண்டு அதனை புனிதப்படுத்தி 'வந்தே மாதரம்' என்று பாடிக் கொண்டு அதன் மூலம் தேச பக்தியை வெளிப்படுத்துகிறார்கள். அது அவர்களின் உரிமை.

முஸ்லிம்கள் இந்தியாவை நேசிக்கின்றனர். இந்திய சட்டத்தை மதிக்கின்றனர். தலித்களிலிருந்து அனைத்து மக்களையும் தனது சகோதரனாக பாவிக்கின்றனர். தேசிய கீதத்தை பாடுகின்றனர். இனி வருங்காலங்களிலும் இந்திய தேசத்துக்கு தங்களின் உயிரையும் கொடுப்பர் முஸ்லிம்கள். எந்த இந்துத்வாவாதியும் இஸ்லாமியருக்கு தேசபக்தி பாடம் எடுக்க வேண்டாம் என்று சொல்லிக் கொள்கிறோம்.

இந்துத்வாவாதிகள் முதலில் இந்திய மக்கள் அனைவரையும் சமமாக நடத்தட்டும். இந்திய சட்டத்தை மதிக்கட்டும். சாதி வெறியை விட்டு வெளியே வரட்டும். பிறகு மற்றவர்களுக்கு தேச பக்தி பாடம் எடுக்கட்டும்.

இந்து மதத்தைப் பொருத்த வரை காணும் எல்லாமே கடவுள். ஆனால் இஸ்லாம் கடவுளின் பக்தி, தேசத்தின் பக்தி, தாய் தந்தையரின் பக்தி என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு அளவு வைத்துள்ளது. அந்த அளவு என்ன என்பது முஸ்லிம்களுக்கு தெரியும். கார்கில் போரில் அதிகம் உயிரிழந்தது இஸ்லாமியர் என்பதையும் மறக்க வேண்டாம். பிறந்த நாட்டின் மீத பற்று என்பது இயற்கையாகவே ஒரு மனிதனுக்குள் இருப்பது. அதனை கோஷம் போட்டு நிரூபி இல்லை என்றால் நீ தேச விரோதி என்பது சிறு பிள்ளைத்தனம். இனியும் போலி தேச பக்தியால் இந்துத்வாவாதிகள் மக்களை ஏமாற்ற முடியாது என்றும் சொல்லி வைக்கிறோம்.