Followers

Sunday, May 31, 2015

ஹரியானாவில் மசூதி கட்ட எதிர்ப்பு - இந்துத்வா தாக்குதல்
திங்களன்று நடத்தப்பட்ட தாக்குதல்களினால் ஹரியாணா மாநில பல்லப்கார் பகுதியில் உள்ள அடாலி கிராம முஸ்லிம்கள் பதற்றமடைந்துள்ளனர்.

4 நாட்களுக்கு முன்பாக அடாலி கிராமத்தில் இந்துக்கள் நடத்திய தாக்குதலில் அக்கிராம முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த 400 பேர் பல்லப்கர் காவல் நிலைய வளாகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடும் வெயிலிலும், போதிய உணவு மற்றும் குடிநீரில்லாத நிலையிலும் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்கள் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்ப தயங்கி வருகின்றனர்.

தாக்குதல் நடத்திய இந்துக்களை கைது செய்யக் கோரியும், எரிந்து சாம்பலான வீடுகளுக்கு இழப்பீடு கோரியும் இவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மே 25-ம் தேதி கும்பல் ஒன்று இப்பகுதியில் முஸ்லிம்கள் மீது செங்கற்கள், வாள், பெட்ரோல் குண்டுகள் கொண்டு தாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 20 வீடுகள் தீக்கிரையாயின.

ஏன் இந்தத் திடீர் தாக்குதல் என்று உள்ளூர்வாசிகளிடம் கேட்ட போது, 30 ஆண்டுகால பழைமை மசூதி சர்ச்சை என்று கூறுகின்றனர். 2009-ம் ஆண்டு இந்துக்கள் இந்தப் பகுதியை கிராம பஞ்சாயத்துக்கு உரியது என்று கோரினர், ஆனால் முஸ்லிம்களோ இந்த நிலப்பகுதி வக்ஃப் வாரியத்தைச் சேர்ந்தது என்கின்றனர்.

இந்நிலையில் நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பரிதாபாத் கோர்ட் தீர்ப்பளித்தது. ஆனால், இந்துகக்ள் தொடர்ந்து இதனை எதிர்த்து வந்துள்ளனர். கோயிலுக்கு அருகில் இந்த மசூதி இருக்கிறது என்பதே இந்துக்களின் வாதம்.

இந்நிலையில் மசூதி மறுசீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் பதட்டம் அதிகரித்ததாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.

இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அந்த காவலதிகாரி தெரிவித்த போது, “பஞ்சாயத்து தேர்தல் வரவிருக்கின்றன. இந்துக்களின் வாக்குகள் பல்வேறு கட்சிகளில் சிதறியதால் தற்போதைய தலைவர் கடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். இதனால் முஸ்லிம்களின் வாக்குகள் ஒரு தீர்மானிக்கும் காரணியாக அமைந்தது. இந்தத் தலைவர் முஸ்லிம்களின் வாக்குகளைச் சேகரிக்க்கும் போது மசூதியை மறுசீரமைப்பு செய்ய அனுமதி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்” என்றார்.

இதனால் ராஜேஷ் சவுத்ரி முஸ்லிம்கள் ஆதரவுடன் பஞ்சாயத்து தலைவரானார். கோர்ட் தீர்ப்பையும் அடுத்து கிராமத்தினர் மசூதியை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று பஞ்சாயத்து தலைவர் ராஜேஷ் சவுத்ரி வலியுறுத்தினார்.

இதனையடுத்து பதற்றம் அதிகரித்ததோடு, இந்துக்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் தொடுப்பதாகவும் கோயில் அருகே இந்துப் பெண்களை முஸ்லிம்கள் கேலி செய்ததாகவும் கடும் வதந்திகள் பரப்பப்பட்டுள்ளது.

ஆனால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டனர். இந்தத் தாக்குதல் ஆச்சரியமளிப்பதாகவே முஸ்லிம்கள் பலர் தெரிவித்தனர்.

இது குறித்து இந்துக்களின் தாக்குதலில் முகத்தில் காயமேற்பட்ட 40 வயது ஷாகிர் அலி என்பவர் கூறும் போது, இந்தத் தாக்குதலை பல வாரங்கள் திட்டமிட்டிருப்பார்கள் போன்றே தெரிகிறது. அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள், பெட்ரோல் குண்டுகள், ஒரு டிராக்டர் முழுக்க கற்கள், வாளிவாளியாக மண்ணெண்ணெய் ஆகியவற்றை கொண்டு வந்தனர், மேலும் கார்களில் பிற கிராமத்திலிருந்து இந்துக்களை திரட்டி வந்தனர்” என்றார்.

இப்போதைக்கு நிலைமை சுமுகமாக இருந்தாலும் முஸ்லிம்கள் மசூதியை மறுசீரமைப்பு செய்வதில் இந்துக்களுக்கு விருப்பமில்லாத நிலையே உள்ளது.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
30-05-2015

பள்ளிவாசலை அசர் தொழுகையின்போது தீ வைத்து எரிக்க ஜாட் இன இந்துத்துவா தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலின் போது வானத்தை நோக்கி நாட்டு துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளனர், பள்ளியில் நுழைந்த தீவிரவாதிகள் தீ வைக்க ஆரமித்தனர் முஸ்லிம்களுடன் சேர்த்து.

இதில் பள்ளிவாசல் முஅத்தின் மற்றும் பல முஸ்லிம்களை கைகளை கட்டி உயிருடன் தீ வைத்துள்ளனர், முஅத்தின் நைமுதின் கடுமையான தீ காயங்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

200 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

காவல்துறை அதிகாரி கூறும்போது ஒரு மணி நேரம் நடந்த இந்த தாக்குதலில் பள்ளிவாசல், 20 வீடுகள், இரண்டு கடைகள் மற்றும் 21 வாகனங்கள் தீ யிட்டு கொளுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் 2000 பேர்கள் நாட்டு துப்பாக்கி, பெட்ரோல் வெடிகுண்டுகள், வாள் மற்றும் கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் வந்துள்ளனர் என தெரிவித்தார்.

பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளது ஆனால் இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை, முஸ்லிம்கள் வீடுகளுக்கு செல்ல அஞ்சி காவல்நிலையம் முன்பு திறந்தவெளியில் அமர்ந்து உள்ளனர்.

நேற்று இரு சமூகத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜாட் இன மக்கள் இனி தாக்குதல் நடத்த மாட்டோம் என உறுதி அளித்தனர், ஆனால் முஸ்லிம்கள் இதை மறுத்துவிட்டனர் நீங்கள் ஒவ்வொரு முறையும் தாக்குதல் நடத்திவிட்டு மன்னிப்பு கேட்டு சமாதானம் செய்து பிறகு மீண்டும் கொலைவெறி தாக்குதலில் இடுபட்டு பெரும் உயிர்சேதம் மற்றும் பொருள்சேதம் ஏற்படுகிறது என கூறி வீடுகளுக்கு செல்லாமல் ஒரு வாரமாக வீதியில் உறங்கி வருகின்றனர்.

பாபர் மசூதியை இதே கயவர்கள் தான் இடித்தனர். அனால் இடித்த இந்துத்வாவினர் பலர் தவறை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். அதன் பிறகு பல ஆயிரம் இறை இல்லங்கள் இந்தியாவில் கட்டப்பட்டன. பாபர் மசூதியின் இடிப்பில் அதன் கும்மமத்தில் நின்று வெற்றிக் களிப்பிட்ட இந்துத்வாவாதி இன்று 1000 இறை இல்லங்களை கட்ட உதவியுள்ளார். இதே பொல் அந்த ஜாட் இன மக்களும் தவறை உணரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

சவுதி - ரியாத் மாநகரில் தேர்வில் கலக்கிய மாணவ மாணவிகள்!


Saturday, May 30, 2015

இந்த வயதிலும் பிடித்தாட்டும் வர்ணாசிரம வெறி!

இந்த காணொளியில் இந்தியாவில் உள்ள தீண்டாமைக் கொடுமை வரிசையாக பட்டியலிடப்படுகிறது. 2:22 லிருந்து ஆரம்பமாகும் காணொளியை பாருங்கள். இதில் பார்பன முதியவர் கூறுகிறார் 'நமது உடலில் காலானது நமது உடலையும் தலையையும் சுமந்து வருகிறது. இது காலா காலமாக நடந்து வருகிறது. திடீரென்று ஒரு நாள் காலானது தலையில் அமர்ந்து கொள்வேன் என்று கூறினால் எப்படி நாம் நடந்து செல்வது? எனவே எந்த பொருள் எந்த இடத்தில் இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் இருந்தால் தான் அதற்கு மதிப்பு' என்கிறார். அதாவது மனு தர்மப்படி காலில் பிறந்த தலித் இறக்கும் வரை தலித்தாகவே இருக்க வேண்டும். நெற்றியில் பிறந்த இவர் உயர் குலத்தவராகவே இருக்க வேண்டுமாம். தனது காலை காட்டி அவர் சொல்வதைத்தான் நான் தனி புகைப்படமாகவும் எடுத்துள்ளேன்.

எந்த அளவு வர்ணாசிரம வெறி இந்த பார்பன கிழவரின் மனதில் உள்ளது என்று பாருங்கள். 70 வயதுக்கு மேல் இறப்பின் ஞாபகம் வந்து நல்லது செய்ய மனம் தோணும். அனால் இந்த கிழவரோ தனது காலைக் காட்டி இதுதான் தலித்தின் நிலை என்கிறார். இதனை காஞ்சி ஜெயேந்திரரும் சிரித்துக் கொண்டே ஆமோதிக்கிறார். இந்த வயதிலும் வர்ணாசிரம வெறி இவ்வளவு தூரம் இருக்கிறது என்றால் அதற்கு காரணம் இந்த வர்ண அடுக்கு முறையை இவர்களின் வேதங்கள் ஸ்மிருதிகள் புராணங்கள் அனுமதிப்பதாலேயே! மற்ற மதங்களில் சாதி பிரிவு இருந்தாலும் அது இந்த அளவு வெறியாக மாறி பார்த்ததில்லை. அந்த பெருமை ஆரியர்கள் உருவாக்கிய இந்து மதத்துக்கே சேரும் என்றால் அது மிகையாகாது.


https://www.youtube.com/watch?v=It7sVWNXx1E

தற்கொலை விகிதாச்சாரம் இஸ்லாமிய நாடுகளில் குறைவதேன்?உலகில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார கழகம் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் வரை படத்தைத்தான் நாம் பார்க்கிறோம். ஆச்சரியமாக இந்த வரை படத்தில் இஸ்லாமிய நாடுகள் தற்கொலை விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இந்த பட்டியலில் முற்றிலுமாக வரவில்லை.

கிறித்தவர்கள், நாத்திகர்கள், இந்துக்கள், யூதர்கள், சீனர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எவரையுமே இந்த தற்கொலையானது விட்டு வைக்கவில்லை. அந்த அளவு மக்களின் வாழ்வு முறை நிம்மதியற்று போய்க் கொண்டுள்ளது. மன அமைதி இழந்த மனிதன் உடன் தற்கொலையை நாடுகிறான்.

மனச்சிதைவு ஏற்பட்டு தற்கொலைகளை நாடுவோரின் புள்ளி விபரங்களை இனி பார்ப்போம்.

அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் ஒன்றை தேசிய குற்றப்பிரிவு அமைப்பு (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்.

குடும்பப் பிரச்னை காரணமாக 24.3, தீராத நோயால் 19.6, வறுமையால் 1.7, காதல் விவகாரத்தால் 3.4, போதை பழக்கவழக்கங்களால் 2.7, வரதட்சணையால் 2.4, கடன் தொல்லையால் 2.2… என்ற சதவிகிதத்தில் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

மாநிலங்கள் அளவில் ஒப்பிடும்போது மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 492 பேரும், தமிழகத்தில் 15 ஆயிரத்து 963 பேரும், மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்து 947 பேரும், ஆந்திராவில் 15 ஆயிரத்து 77 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 622 பேரும் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இந்த ஐந்து மாநிலங்களின் சதவிகிதம் மட்டும் 56.2. இதர 43.8 சதவிகித தற்கொலைகள் மற்ற 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

மனிதனின் இந்த மன அழுத்தத்தைப் போக்க யோகா போன்ற எண்ணற்ற வழி முறைகளை மக்கள் கடை பிடித்தாலும் அது முழு பலனைத் தரவில்லை. இறை பக்தியோடு கூடிய தியான முறைதான் மனிதனின் மன அழுத்தத்தை முற்றாக குறைக்கிறது. எது நடந்தாலும் அது இறைவனின் சித்தப்படியே நடக்கிறது என்று இஸ்லாமியர்கள் நம்பி விடுவதாலும், ஒரு நாளைக்கு ஐந்து வேளை இறைவனை நினைத்து தொழுவதாலும் மன அழுத்தம் முஸ்லிம்களை அண்டுவதில்லை. இதன் காரணமாகவே இஸ்லாமிய நாடுகளில் தற்கொலை விகிதம் மிகக் குறைவாக இருக்கிறது.

நமது இந்தியாவிலும் தற்கொலை செய்து கொள்பவர்களை மத ரீதியாக கணக்கெடுத்துப் பாருங்கள். அதில் இந்துக்களும், கிருத்தவர்களும், நாத்திகர்களும் அதிகம் இருப்பர். முஸ்லிம்கள் மிக மிக சொற்பமாகவே தென் படுவர். இதற்கு காரணம் தொழுகை என்றால் மிகையாகாது.


'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'

குர்ஆன் 13:28


-----------------------------------------------------


அல்லாஹ் கூறுகின்றான்:

“மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயமாக வந்துவிடும்” (அல்-குர்ஆன் 10:57)


நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)


theguardian
04-09-2014

Thursday, May 28, 2015

தர்ஹா கட்டி பாத்திஹா ஓதிடாதீங்க மக்களே!இந்த கிறுக்கனின் கிறுக்குத் தனமாக செய்கையை பார்த்து விட்டு ஆச்சரியத்தில் இவன் மண்டையை போட்டவுடன் இவனுக்கும் தர்ஹா கட்டி பாத்திஹா ஓதிடாதீங்க மக்களே! ஏன் சொல்றேன்னா....துண்டு பீடி குடிச்சு அனாதையாக இறந்து போனவனை எல்லாம் 'பீடி மஸ்தான் வலியுல்லா' என்ற பெயரில் தர்ஹா கட்டி அங்கும் காசு பார்க்கிறது ஒரு கூட்டம். எனவே நாம் முதலிலேயே எச்சரித்து விடுவது நல்லது. :-)

Wednesday, May 27, 2015

சில தேடல்கள்.... சில விளக்கங்கள்.....

சில தேடல்கள்.... சில விளக்கங்கள்.....

1000 ஆண்டுகள் முன்பு இருந்த சமண மதத்தை விட்டு சைவராக மாறியவர்கள்தான் இன்று நாம் பார்க்கும் இந்து மத பிரிவுகள். இவர்களில் பெரும்பாலோர் உயிருக்கு பயந்து மாறியவர்கள், சைவ சமண வைணவ வரலாறையும் பெரிய புராணத்தையும் புரட்டி பாருங்கள் உண்மை புரியும் ..

800 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் பெரும்பாலானோர் நினைப்பது போல் கட்டாய மத மாற்றம் செய்து இருந்தால் இந்தியா இன்று ஹிந்து நாடாக இருந்து இருக்காது என்பதை சிந்திப்பவர்கள் விளங்கி கொள்வார்கள்.

வேறு நாட்டு அல்லது மொழியில் வந்த மதத்தை பின்பற்ற கூடாது என்றால் வட நாட்டில் இருந்து வந்த சமஸ்கிருதத்தில் உள்ள வேத இதிகாசங்களை பின்பற்றுபவர்கள்தான் முதலில் அதை நிறுத்த வேண்டும்.

தமிழர்களை குரங்காகவும் அரக்கனாகவும் தீண்ட தகாதவர்களாகவும் சித்தரிக்கும் புத்தகங்களுக்காக ஏன் இப்படி வக்காலத்து வாங்குகின்றீர் என்று எனக்கு புரிய வில்லை..? இன்று தேவர், உடயார் முதலியார் கவுண்டர் என்று மீசையை முறுக்கி கொள்ளலாம் ஆனால் நீங்கள் உங்கள் மதத்தில் சூத்திரன்தான் பிராமினுக்கு தீட்டு பொருள் தான் நீங்கள். சிந்திக்க விடாமல் சாதி வெறி என்னும் திசை நோக்கி மாற்றி வைத்து இருக்கிறார்கள் ஆளும் வர்கத்தினர் ..

வாருங்கள் இஸ்லாமிற்கு நாட்டின் அரசானையும் மார்க பண்டிதார்களையும் சகோதரனாய் கட்டி தழுவலாம்.. எவ்வளவு பெரிய பணக்காரனாய் இருந்தாலும் அவன் உன்னை விட தகுதியில் உயர்ந்தவனும் இல்லை, ஏழை உன்னை விட தாழ்ந்தவனும் இல்லை.இஸ்லாமிய வேதத்தை படிக்க முஸ்லிம் அல்லாத, அவர் மதத்தில் வேதங்களை கற்றுக்கொள்ள அருகதை அற்ற தாழ்ந்தவராக கருத படுபவருக்கும் உரிமையும் தகுதியும் உண்டு...

ஹிந்து என்ற சொல் ஏதேனும் வேத புராண இதுகாசங்களில் இருக்கிறதா என்று தேடி பார்க்கவும்.. நமக்கு வெள்ளையன் வைத்த பெயர் ஹிந்து.. குறிப்பிட்ட இடத்தில் வாழும் மக்களுக்கு குறிப்பிடும் சொல் அது, இந்தியாவில் வாழும் மக்கள் இந்துக்கள்.. அது மதம் இல்லை. மதமா இருந்தால் வேத புத்தகங்களில் காட்டுங்கள் பார்கலாம். சைவம் வைணவம் வைதீக மதங்கள் இன்னும் பற்பல வட்டார மதங்கள் மற்றும் கடவுள்களின் கலவைதான் ஹிந்து மதம்.. இதை நான் சொல்லவில்லை இந்து மதத்தின் வேத இதிகாசங்கள் மற்றும் தொல்பொருள் ஆராய்சி மூலமாக கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் இவைகளை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்ட வரலாற்று ஆராய்ச்சியாளர் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சியாளருமான ரஷ்யாவை சேர்ந்த ஆன்டோநோவா எழுதிய இந்திய வரலாறு என்ற புத்தகம் பதிவு செய்த கருத்து இவைகள். இது வெறும் உதாரணம்தான், இன்னும் பற்பல ஆதாரபூர்வமான புத்தகங்களையும் ஆராய்ச்சிகளையும் தர முடியும்

இப்படி கலவையாக இருந்தால் எந்த ஒரு கருத்தை சொன்னாலும் அதற்கு முரணான கருத்தும் அதிலேயே இருக்கும்.

உதாரணத்திற்கு கடவுள் ஒன்றே, அவருக்கு உருவம் இல்லை என்று ரிக் வேத ஆரம்ப சுலோகங்கள் சொல்கிறது, 9 மண்டலம் வரை இதையே தான் சொல்கிறது, 10 வது மண்டலத்தில் தான் மற்ற கருத்துக்களையும் புகுத்தி இருக்கிறார்கள், உருவம் கொடுத்து இருக்கிறார்கள்.. இதில் என்ன இருக்கிறது என்று கேட்பீர்கள். 10 மண்டலங்களும் வெவ்வேறு ரிஷிகள் மூலம் வெவ்வேறு கால கட்டத்தில் எழுதப்பட்டது.. அதிலும் இந்த 10வது மண்டலம் எழுதியவர் யார் என்பது விடை இல்லா கேள்வி... மண்டலம் 10 தான் உருவ வழிபாடு கொள்கையின் முதல் அடியிட்ட வரிகள்.. அதனை அடிப்படையாககொண்டுதான் உருவ வழிபாடு சித்தாந்தங்கள் வளர்ந்து இருக்க வேண்டும். யார் எழுதினார், அவர் சுபாவம் என்ன, நல்லவரா? கெட்டவரா? என்றே தெரியாத கொள்கையைத்தான் நம் முன்னோர்கள் தொன்றுதொட்டு நம்பி வந்துஉள்ளனர்.

இதை நான் சொல்லவில்லை ஹிந்து பண்டிதர் ஒருவர் எழுதிய கட்டுரையில் படித்தது. இது உண்மை என்றால் என்றால் முதல் 9 மண்டலம் சொல்வது சரியா இல்லை 10 வது மண்டலம் சொல்வது சரியா?

“நான் ஆதியும் அந்தமும் அற்றவன்” என்று இறைவன் கீதையில் சொல்கிறான், ஆனால் க்ரிஷ்ணர் கடவுள் என்கிறீர்கள்? க்ரிஷ்ணர் பிறந்தார் மேலும் இறக்கவும் செய்தார்.. ராமரும் அதே வகைதான்.. இவர்கள் வாழ்ந்து இருக்கலாம், நல்ல மனிதர்களாக, புனிதர்களாக, ரிஷிகளாக, இறைத்தூதர்களாக ஆனால் கடவுள்களாக இல்லை.. இது என் கருத்து இல்லை. மேலே சொல்லிஇருக்கும் கீதையின் கருத்து இதுதான், மேலும்

படைப்பினங்களை வணங்குவோர் அந்தகார இருளின் ஆழத்தில் அழுத்தப்படுவர்! - என்று யஜூர் வேதம் 40:9 இல் சொல்லப்பட்டு உள்ளது

யார் அசம்பூதியை (இயற்கை) வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்! - என்று அதர்வவேதம் 40 : 09 இல் சொல்லப்பட்டு உள்ளது

வெவ்வேறு விருப்பங்களால் கவரப்பட்ட அறிவினையுடையோர், தத்தம் இயற்கையால் கட்டுண்டு, வெவ்வேறு நியமங்களில் நிற்பாராய் வேறு தெய்வங்களை வழிபடுகின்றனர். என்று பகவத்கீதை 7.20 இல் சொல்லப்பட்டு உள்ளது

இவைகளெல்லாம் சொல்வது என்ன? இயற்கையயும் படைப்பிணங்களாகிய மனிதனையும் விலங்குகளையும் வணங்காதீர்கள் என்றுதானே.. மனிதனை படைத்தது ஆதிபகவான் என்னும் தொடக்கமும் முடிவும் பிறப்பும் இறப்பும் இல்லாத அந்த ஒரு இறைவன் தானே? இவ்வாறு வேதங்கள் சொல்ல மற்ற முரணான கருத்துக்கள் எங்கிருந்து வந்தன?

நீங்கள் கடவுள்களாக குறிப்பிடுபவர்கள் அனைவரும் இந்தியாவில் பிறந்தவர்களாகவே சொல்லுகிறது புராணங்கள்.. ஆனால் கடவுள் உலகம் அனைத்தையும் படைத்தவர் தானே, இங்கே பிறந்ததாய் சொல்ல படும் கடவுள்கள் ஏன் மற்ற நாடுகளில் மற்ற மொழி பேசும் இடங்களில் பிறக்கவில்லை...? என்றால் அவர் இந்தியாவை மட்டும் தான் படைத்தாரா? ஆம் என்றால் அவர் கடவுளாய் இருக்க வாய்ப்பு இல்லை.. இல்லை என்றால் உங்களின் புரிதலும் செயலும் தவறு.. இறை நியதியையே தகர்க்கக் கூடிய செயல் அல்லவா இது..?

மற்ற வேதங்கள் இறைவன் ஒருவனே என்கிறது, அனேகர் அதயே பின் தொடர்கிறார்கள்.. அதை போதித்தவர்களை ரிஷிகள், சித்தர் , தூதுவர் என்று குறிக்கப்படுகிறது, கடவுள் என்று அவர்கள் சொல்லவில்லை.. ஹிந்து மதத்திலும் அதே கருத்துக்கள் தான் சொல்லப்பட்டு இருக்கிறது. , துரதிஷ்டம் என்னவென்றால் இறைவன் ஒருவனே அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன், என இஸ்லாம் சொல்லும் அனைத்தையும் ஹிந்துமதமும் சொன்னாலும் இந்த கருத்துக்கு முரணான கருத்தையும் சேர்த்து சொல்கிறது.. இதனை ஆராய வாய்ப்போ ஆர்வமோ எவருக்கும் இல்லை.

ஏனென்றால் சம்ஸ்கிருதம் தெரிந்தவரும் பழந் தமிழ் தெரிந்தவரும் வெகு குறைவு. மேலும் பணம் சம்பாதிக்கவும் வசதி வாய்ப்புகளை பெருகி கொள்ள ஆர்வம் கொண்ட நாம் எது உண்மை என்பதை அறிய ஆர்வம் கொண்டவர்களாக இல்லை.

பாவிஷ்ய புராணம் பகுதி 3 ,3,5 இல் முகமது நபி அவர்களின் பெயருடன் அவரது வருகை பதிவு செய்யப்பட்டு உள்ளது (ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கர் அவர்கள் ஒப்புக்கொண்ட உண்மை இது, முடிந்தால் வீடியோவை தேடி பாருங்கள் இல்லயேல் நான் தருகிறேன்). மேலும் 10 அவதாரங்களில் 10வது அவதாரமாக கருத்தப்படும், கல்கி புராணத்தில் குறிக்கப்பட்ட கல்கி அவதாரம் தான் முகம்மது நபி என்று நிரூபிக்கப்பட்ட உண்மை.. நிரூபித்தது இஸ்லாமியர்கள் அல்ல, மாறாக உப்பாத்தேயா என்ற சம்ஸ்கிருத அறிஞர்.

9 அவதாரங்களை ஏற்றுக்கொண்ட நாம் ஏன் 10-வது அவதாரத்தை ஏற்க்க மறுக்கிறோம்? அவர் வேறு நாட்டை சேர்ந்தவர் என்பதாலா? வேறு மொழியை சேர்ந்தவர் என்பதாலா? வேறு கொள்கை உடயவர் என்பதாலா?

நாட்டை பற்றி கவலை படுவீர்களானால் நேற்றய திருப்பதி தமிழ்நாட்டுக்கு உரியது. இன்று ஆந்திராவிற்கு.. நாளை? நேற்றய நாடு இன்று பற்பல நாடுகளாக பிளவுகளுடன், நேற்றய பற்பல நாடுகள் இன்று ஒருங்கிணைந்த நாடாக.. இது வரலாறும் புவியியலும் அரசியலும் கட்டித்தந்த பதிவுகள்.. மறுப்பதற்கு இல்லை..

மொழி ஒரு தடையா? என்றால் முந்தய 9 அவதாரங்களின் மொழி என்னவென்று தெரியும்? சமஸ்கிருததமாக இருந்தாலும் அது நமக்கு அந்நிய மொழியே.. அனைத்து அவதாரங்களின் மொழி சம்ஸ்கிருதம் என்பது அறிவுக்கு பொருத்தமாக இல்லை.. ஏனென்றால் சமஸ்கிருதத்தில் வரலாறு வெறும் ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் தான். ஆனால் இந்த அவதாரங்களின் காலகட்டமோ இன்னும் ஆராய்ச்சிக்கு உட்பட்டதாகவே இருக்கிறது.. மேலும் பல ஆயிரம் ஆண்டுகள் என்று சொல்லுவோரும் உண்டு.. எனவே எந்த மொழி அவர்களின் மொழி? அவர்கள் என்ன மொழி பேசினார்கள் என்பதே சர்ச்சைக்கு உரிய விஷயம், இதில் எங்கிருந்து அவர்களின் போதனையை பொய் கலக்காமல் அல்லது மறுவாமல் நாம் உண்மையை அப்படியே அறிவது? மொழி தடை எனில் முதலில் ஒதுக்க வேண்டியது தமிழ் சமணர்களை கழுவேற்றி கொலைசெய்து சைவ வைணவ மதங்களை தமிழ்நாட்டில் பரப்பிய ஆரியர்களின் அந்தணார்களின் சமஸ்கிருத போதனைகளைத்தான் நாம் விட்டு தள்ளவேண்டும்.

வேறு கொள்கையை கொண்டவரா? தமிழன் நாம் வர்ணங்களை கொண்டவர்கள் இல்லை... இங்கு அந்தணனும் இருந்ததில்லை சூத்திரனும் இருந்ததில்லை.. அனைவரும் இறைவன் பார்வையில் சமமானவர்களே, ஒருவனின் உயர்வு தாழ்வு அவன் செய்த கருமங்களே தீர்மானிக்கும்.. தமிழன் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற கொள்கை கொண்டவன், என்றால் முகம்மது நம் குலமல்லவா? அவர் போதிப்பதும் ஒன்றே குலம் ஒரே தேவனை அல்லவா? அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்பதை போதித்த அவதாரம் கல்கி / முகம்மது நபி அவர்கள்.. வார்த்தை பிரயோகங்கள் மாறுபட்டு இருக்கலாம் ஆனால் கருத்து ஒன்றே.. சைவம் தமிழ்நாட்டு வரலாற்றிலும் இலக்கியத்திலும் புகுவதற்கு முன்னால் தமிழனின் கொள்கை வணங்க தகுதி படைத்தவன் உருவமற்ற ஒரே கடவுள், படைத்தவன் அவனே, அதை தான் கல்கி அவதாரமாகிய முகம்மது நபி அவர்கள் போதித்து சென்று உள்ளார்கள்..

மேலும் இவர்தான் 10 வது அவதாரம் என்று உறுதிசெய்த பின்னர் ஏற்க மறுத்தோமானால், நாம் உண்மையில் வேதங்கள் (இறைவனின் வார்த்தை) சொல்வதை மீறியவர்கள் ஆகின்றோம்.. பின் நாம் கஷ்ட கலங்களில் "நான் என்ன பாவம் செய்தேன் எனக்கு ஏன் இந்த தண்டனை என்று சொல்ல தகுதி அற்றவர் ஆகி விடுகின்றோம்"

யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் போதுமான ஆதாரம், ஸாங்க் ஆஃப் சாலமோன் 5:16 இல் முகம்மது அவர்களின் வருகை பெயருடன் குறிக்கப்பட்டு உள்ளது.

சரி இருக்கிறது அதற்கென்ன என்று கேட்கிறீர்களா? ஆம் நீங்கள் உங்கள் வேதத்தையும் இறைவனையும் நம்பியவர்களாகவும் வணங்கியவர்களாகவும் இருந்தால், உங்கள் வேதம் சொல்லியிருக்கும் முன்னறிவிப்புகள் ஏன் என்று சிந்தியுங்கள்.. முகம்மது அவர்கள் வரும் காலகட்டத்தில் அவரையும் அவரது போதனையையும் ஏற்கவேண்டும் என்பதற்காகவே அன்றி வேறு காரணங்கள் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. முற்சென்ற ரிஷிகளின் போதனைகள் பாழ் படும்போழுது அதனை சரிசெய்ய அடுத்து ஒரு ரிஷி அல்லது தூதரை அனுப்புவது இயற்கை.

ஆதாரம்?, நான்கு வேதங்களும் வெவ்வேறு ரிஷிகளால் எழுத்த பட்டது, மட்டுமல்ல ஒவ்வொரு வேதத்திலும் ஒவ்வொரு மண்டலமும் வெவ்வேறு ரிஷிகளால் எழுதப்பட்டது . இதுபற்றி கிருஸ்தவர்களுக்கு விளக்கவேண்டிய அவசியம் இருக்காது என்று நினைக்கிறேன், ஏனெனில் ஹிந்துக்களை போல் அன்றி அவர்களுக்கு அவர்களது பழய புதிய ஏற்பாட்டின் கதை தெரிந்து இருக்க அனேக வாய்ப்பு உள்ளது.. ..

அனைத்து மதங்களின் வேதங்களின் சாரம் படைத்த ஓரிறைவனை மட்டும் வணங்குவது, இஸ்லாம் மட்டுமே அதில் உறுதியாக இருப்பதால் என் மார்கமாக இதனை தேர்ந்தெடுத்துக்கொண்டேன் அல்ஹம்துலில்லாஹ்.

என் கருத்துடன் உங்கள் கருத்து வேறுபடுகிறதா? ஆம் இறைவன் அவனது வேதத்தில் சொல்லுகிறான்

மக்கள் முரண் பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அவர்களுடன் உண் மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப்பட்டோர் தாம், அதற்கு முரண் பட்டனர். தமக்கிடையே உள்ள பொறாமையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழி காட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான். (அல்குர்ஆன் 2 : 213)

கடவுள் நம்பிக்கை என ஒன்று இருந்தால் சிந்தியுங்கள்.. இது விளையாட்டோ, தேவை அற்றதோ இல்லை, நமது இரு உலக வாழ்வுக்கும் மிக மிக அவசியமானது...

நன்றி
Rafeequl Islam T

அம்பேத்கரின் கொலை - ஆர்.எஸ்.எஸ் திட்டம்

அம்பேத்கரின் கொலை - ஆர்.எஸ்.எஸ் திட்டம்

இப்போது அம்பேத்கர் மீது ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு புதிய ‘பக்தி’ வந்திருக்கிறது! நான் இந்து’வாக பிறந்தாலும் ஒரு இந்துவாக சாக மாட்டேன் என்று பிரகடனப்படுத்திவிட்டு தனது தொண்டர்களுடன் இந்து மதத்திற்கு முழுக்கு போட்டுவிட்டு புத்தநெறியில் இணைந்தவர் டாக்டர் அம்பேத்கர்.


புத்தநெறியை கடுமையாக எதிர்த்தவர்கள் ஆர்.எஸ்எஸ் காரர்கள்

‘ இந்து மதத்தின் சாதி அமைப்பை புத்தமதம் தகர்த்துவிட்டது; சாதி அமைப்பு தகர்ந்து போனதால்தான் வடகிழக்கு மாநிலங்களில் முஸ்லீம் மதம் செல்வாக்குப் பெற்றுவிட்டது.’என்று கோல்வால்கள் தனது ‘Bunch of Thoughts’ நூலில் குறிப்பிடுகிறார்.


“இப்போது நான் இந்தியாவில் மிகவும் வெறுக்கப்படுகிற மனிதனாக இருக்கிறேன். என்னை இந்துக்களின் எதிரி என்கிறார்கள். இந்த நாட்டின் மிகப்பெரிய எதிரி என்கிறார்கள்” என்று டாக்டர் அம்பேத்கர் அவ்ர்களே மனம் குமுறிச் சொன்னார். (ஆதாரம்: தனஞ்செய்கீர் எழுதிய Ambedkar, Life and Mission நூலில் Page 195) அப்படிப்பட்ட டாக்டர் அம்பேத்கர் அவர்களையே தீர்த்துக்கட்டும் ஒரு சதிமுயற்சி நடந்திருக்கிறது.


அம்பேத்கரின் நெருங்கிய நண்பரும் – இந்திய குடியரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பெல்காமைச்சார்ந்த டி.ஏ. காட்டி (D.A,Katti ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டிருக்கிறார். 2-2-1980 ல் பெங்களூரில் அம்பேத்கர் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் அவர் பேசினார். அவர் தெரிவித்த விவரம் இதுதான்:


“வீர சவர்க்கரின் தம்பி பாபா சவர்க்கார் நாசிக் பீட ஜகத் குருவிடம் , தமக்கு 500 ரூபாய் பணம் தர வேண்டும் என்று கேட்டார். அந்த பணம் அம்பேத்கரின் சமையல்காரருக்கு லஞ்சமாகத்தர கேட்க்கப்பட்ட பணம்! அதாவது அம்பேத்கர் உணவில் விஷம் கலந்து கொடுத்து, சாகடிக்க – அவரது சமையல்கார்ரிடம் ரூ.500 லஞ்சம் கொடுக்க பாபா சவர்க்கார் ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆனால், சங்கராச்சாரி இதற்கு பணம் தர மறுத்துவிட்டார். இத்தகவலை பிரபல மராத்திய எழுத்தாளர் – நாடக ஆசிரியரான பி.கே. அட்ரே (P.K.Atre) அவர் நடத்திய “மராத்தா” என்ற மராத்திய நாளிதழில் வெளியிட்டார்.


காந்தியார் கொலையில் குற்றம் சாட்டப்பட்டிருந்த வீர சவார்க்காரின் தம்பி, பாபா சவார்க்கார் ஆர்.எஸ்.எஸ் ஐ துவக்கிய ஐவர் குழுவில் ஒருவரான சித்பவன் பார்ப்பனர் ஆவார்.

(“தலித் வாய்ஸ்” 16-04-1982 இதழில் இருந்து இத்தகவல் எடுக்கப்பட்டுள்ளது)


அதுமட்டுமல்ல – கோயில் நுழைவுப் போராட்டம், நடத்தியபோது அம்பேத்காரை கொல்ல ஒரு சதித்திட்டம் தீட்டப்பட்டது என்ற தகவலையும் டி.ஏ. காட்டி தனது உரையில் வெளியிட்டிருக்கிறார். இந்த சதிகாரர்கள் கூட்டம்தான் இன்றைக்கு அம்பேத்காருக்கு விழா எடுத்துக் கொண்டிருக்கிறது.

அன்றைக்கு காங்கிரஸ் கட்சியிலே முன்னணியிலே இருந்த பல தேசியத் தலைவர்களின் படங்களை எல்லாம் தங்கள் பூட்ஸ்களுக்குள்ளே மறைத்து வைத்துக் கொண்டு அந்தப் படங்களை அவ்வப்போது துப்பாக்கியால் சுட்டு – இவர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள் என்ற தகவலை காந்தியாரின் உதவியாளராக இருந்து காந்தியார் வாழ்க்கை சரித்திரத்தை எழுதிய பியாரிலால் தனது நூலில் குறிப்பிடுகிறார்!


அந்தக் காலங்களில் மட்டுமல்ல; இந்தக் காலத்திலும் கூட இவர்களின் தீர்த்துக் கட்டும் சதிவேலை முயற்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

நூல்: ஆர்.எஸ்.எஸ் ஒரு அபாயம்- விடுதலை ராஜேந்திரன்

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி – 13அப்போது அவர் கூறினார், முதலில் இறந்த மய்யித்தின் தந்தை ஒரு பெயர் தாங்கிய முஸ்லிமாக மட்டும் இருக்கிறார். அவருக்கு இஸ்லாத்தின் கோட்பாடே தெரியாது. அதனால் தான் தனது மகளின் மய்யித் முன் நின்று சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தார்.

இரண்டாவது பார்த்த அந்த நபரோ இஸ்லாத்தின் கோட்பாட்டை நன்றாக தெரிந்தவர். இஸ்லாம் மய்யித்திற்கு முன் நின்று கதறி அழுவதை போதிக்கவில்லை. தனது கவலைகளையெல்லாம் மனதில் மூடி மறைத்துக்கொண்டு தனது மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த வண்ணம் மிக கண்ணியமாக மகனை அடக்கம் செய்கிறார்.

மகனை எனக்குத் தந்தவனும் இறைவன் தான்; அவனை எடுப்பதும் இறைவன் தான் என்ற நம்பிக்கையும், நாளை நானும் இறந்து விட்டால் மகனை நிச்சயம் அல்லாஹ் நாடினால் மறுமையில் சந்திப்போம் என்ற நம்பிக்கையும் தான் அந்த நபரின் உள்ளத்தில் இருந்த இஸ்லாமியக் கோட்பாடாகும்.

இஸ்லாத்தின் இந்த கோட்பாடும் என்னை நன்றாக அதன் பக்கம் ஈர்த்தது.

நான் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் எனது அப்பாவும் தண்ணி அடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் எனது அப்பாவிற்காக என்னுடைய இறைவனிடம் நான் பிரார்த்திக்கவும், இஸ்லாம் தற்கொலையை போதிக்கவில்லை என்றும் அப்பாவிற்கு எடுத்துச் சொல்லியிருப்பேன். இப்போது நான் அதைப்பற்றி மிகவும் வருந்துகிறேன்.

அதே போல் முஸ்லிம்களின் வியாபார விஷயத்திலும் நல்ல ஒரு கோட்பாட்டை கண்டேன்.

ஒரு முஸ்லிம் வியாபாரம் செய்தால் அவனுக்கு இலாபம் வந்து விட்டால் அல்லாஹ்வை துதிக்கின்றான். அவனுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலோ கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு திருப்திபடுகிறான். ஏனென்றால் அவனுக்குத் தெரியும், இந்த வியாபாரத்தை தந்ததும் இறைவன் தான் என்று. எல்லாம் இறைவனின் நாட்டப்படிதான் நடக்கிறது என்று நினைத்து திருப்திப்படவும் செய்கிறான்.

இன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்னை போன்று தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த புலயன், குறவன், பறயன், வேலன் இவர்களையெல்லாம் தனது காரியத்தை சாதிப்பதற்காகவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

நான் கேட்கிறேன் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் பார்த்து: எங்களது முன்னோர்களெல்லாம் எந்த ஒரு ஜாதி வேறுபாடுமில்லாமல், இந்து மதத்தை ஒன்றாக பகிர்ந்து தானே வாழ்ந்து வந்தார்கள்.

அப்படியிருக்க அவர்களது மத்தியிலே ஒரு பிளவை ஏற்படுத்தி பள்ளன் என்றும், பறையனென்றும் ஏற்படுத்தி தீண்டத்தகாதவர்கள் என்ற பட்டத்தையும் பெற்று தந்ததெல்லாம் நீங்கள் தானே?

அதோ எதிரி என்று நீங்கள் சொல்கின்ற முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுமா இந்த பாகுபாட்டிற்குச் சொந்தக்காரர்கள்?

இந்து ஒற்றுமை; இந்து ஒற்றுமை; என்று சொல்லிக்கொண்டு எங்களது காதில் பூவை சுற்றுகிறீர்கள்.

இந்த கேடுகெட்ட இயக்கத்தில்தான் நான் பன்னிரண்டு வருடமாக பணியாற்றினேன்.

படிப்பறிவு இல்லாத ஒரே காரணம் தான் இந்த பாவப்பட்ட தலித் இனத்தை மிக மோசமான ஒரு கட்டத்திற்கு அன்றிலிருந்தே கொண்டு சென்றிருக்கிறது.

இவர்கள் வரலாற்றை ஆராய்ந்திருந்தால் இந்த ஆர்.எஸ்.எஸ்ஸின், பார்ப்பன சுயநலத்தின் தெளிவான தோற்றம் இவர்களுக்கு அன்றே தெரிந்திருக்கும். அது தெரியாததால் இன்றும் இந்த பார்ப்பன வெறியர்களின் அடியாட்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்து மதம் காப்போம்; இந்து மதம் காப்போம்; என்று சொல்லிக்கொண்டு உரிமை கொண்டாடி வருகிறார்களே?

இவர்கள் எப்போது இந்து நடை முறைப்படி வாழ்ந்தார்கள்?

டாக்டர் அம்பேத்கார், ஸ்ரீநாராயணன் குரு, அய்யங்காளி, ஐயப்பன், எம்.எல்.சி., வள்ளுவர் இவர்களது வாழ்க்கை முறையெல்லாம் (இவர்களுக்கு)தேவையில்லை.

இவர்களெல்லாம் இந்து மதத்தில் இருந்து கொண்டு இப்படியா வாழ்ந்தார்கள்?.

முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் எதிர்க்க வேண்டும் என்று இவர்கள் சொல்லிக்கொடுத்தார்களா?

இவர்களுக்கெல்லாம் வராத இந்து பற்றுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது?

சாகாவில் இந்த தியாகிகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றி போதிக்காமல் இவர்கள் போதிப்பதெல்லாம் இந்து வெறிபிடித்த சுயநலம் கொண்ட பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஹெட்கேவர், வீர சாவர்கர், ராணாபிரதாப், அரவிந்தன் இவர்களது வாழ்க்கை முறையைத்தான் போதிப்பார்கள்.

தியாகி அம்பேத்கர் தலித் இனத்தை ஒருங்கிணைப்பதற்காக இந்து மதத்தில் தலித் இனத்தவர்களுக்கும் தனி உரிமை உண்டு என்று போதிப்பதற்காக 1956 ல் இந்து கோர்ட் பில் என்ற ஓர் நியமத்தை(சட்டத்தை) சட்டசபையில் சமர்ப்பித்தார்.

இதை அன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

நாம் இந்துவல்ல. ஒரு தலித் இனத்தவர்கள் ஒரு போதும் இந்துவாக முடியாது. இந்து மதத்திற்கே சொந்தக்காரர் அந்த பார்ப்பன வெறியர்கள்தான் என்று தான் அம்பேத்கர் மொழிந்தார்கள்.

இதையெல்லாம் சாகாவில் சொல்லிக் கொடுப்பதில்லை.

அம்பேத்கர் ஒரு மகான் என்று கூறிகிறார்களே இவர்கள். ஏன் அம்பேத்கரின் கூற்றை இவர்கள் மறைக்கின்றார்கள்?

எனது தலித் இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்:

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் சூழ்ச்சி தெரியாமல் நீங்கள் செயல்படுகிறீர்கள். உங்களை படிப்பற்றவர்களாக்கி, பிற மக்களை கொன்று குவிப்பதற்கு உங்களை ஓர் ஆயுதமாகத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பயன் படுத்துகிறார்கள்.

இந்த பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடை பெற வேண்டுமென்றால் நீங்கள் என்னைப்போன்று இஸ்லாம் என்ற கண்ணியத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றில்தான் உங்களுக்கு மோட்சம்(விடுதலை) இருக்கிறது. குர்ஆனின் நிழலில்தான் உங்களுக்கு விடுதலை உள்ளது.

அன்று இந்து மதத்தை எதிர்த்த டாக்டர் அம்பேத்கருக்கு என்னைப்போன்று இஸ்லாமிய சிந்தனை ஏற்பட்டிருந்தால் முதல் கணமே அந்த தலித் மக்களை, அடிமை இன மக்களை இந்த சத்திய மார்க்கத்திற்கு செல்ல வழி வகுத்து தந்திருப்பார். அவர் அதற்கு வலியுறுத்தியும் இருப்பார்.

இந்த சத்திய மார்க்கத்தின் நிழல் தெரியாததால்தான் அன்று அந்த மக்களை புத்த மதத்திற்கு அனுப்பினார். புத்தனை கடவுளாக ஏற்றுக்கொண்டதைத் தவிர விடுதலை என்ற கோட்பாட்டிற்கு அவர்கள் தள்ளப்படவில்லை.

நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஆரம்பத் தொண்டனாக இருந்த போது, கேரளாவைச் சார்ந்த இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இந்த மாநாட்டின் தலைப்பு: "இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்." இந்தத் தலைப்பைக் கண்ட நான் பீறிட்டு எழுந்தேன்.

அடக்கவியலாத ஆத்திரம் என்னுள். நாங்கள் எதிர்ப்பை காட்டினோம்.

"அரசே! இபுறாஹீம் சுலைமான் சேட்டையும், இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் உடனேயே கைது செய்" என்று சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டினோம்.

நான் வேகந்தாழாமல் இந்தச் சுவரொட்டிகளை காவல் நிலையங்களிலேயே ஒட்டினேன்.

அப்போதும் என் வேகம் அடங்கவில்லை. காவல் நிலையங்களுக்கு உள்ளே சென்று இன்ஸ்பெக்டர் அறையில் அவருடைய தலைக்கு மேலையே ஒட்டினேன்.

ஆனால் இப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர்தான் எனக்கு நன்றாகப் புரிகின்றது அது. இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தவர்கள் முன் வைத்த முழக்கம் எத்துனை அர்த்தம் நிறைந்துள்ளது என்பது.

உண்மையில் இஸ்லாம் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றிடும் வழி காட்டுதலை வழங்கிடும் மார்க்கம். அதைப் புறக்கணித்தால் அழிவும் அட்டூழியங்களுமே விஞ்சும்.

முற்றும்.......

ஒரு தலித் இளைஞனின் உள் மனதில் இருந்து வெளிப்பட்டவைகளே இந்த தொடரில் நாம் பார்த்த அனைத்தும். ஆர்எஸ்எஸ் ஒரு தேச பக்தி இயக்கம் என்பது பொய். வர்ணாசிரம தர்மத்தையும் பார்ப்னர்களின் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு தீவிரவாத அமைப்பு என்பதை ஒரு இந்து சகோதரன் வாயிலாகவே கேட்டு தெரிந்து கொண்டோம்.

இஸ்லாமியரையும், கிருத்துவர்களையும் இந்தியாவிலிருந்து முற்றாக அழிக்க பல இடங்களில் இந்துத்வா தலித்களை அடியாட்களாக பயன்படுத்தவதைப் பார்க்கிறோம். இந்துத்வாவாதிகளின் உண்மை முகம் தெரியாமல் தலித்கள் வஞ்சகமாக கலவரத்தில் ஈடுபடுத்தப்படுவது தொன்று தொட்டு நடந்து வருகிறது. இதனால் சிறைவாசம் அனுபவிப்பதும் தலித்களே! கொலைகளை செய்யத் தூண்டி விடும் மேல் சாதி ஆர்எஸ்எஸ் அமைப்பாளர்கள் சுதந்திரமாக வெளியில் உலா வருவர். கோயம்பத்தூர் கலவரத்திலிருந்து இன்று வரை இதைத்தான் நாம் பார்த்து வருகிறோம். இனியாவது தலித்கள் விழித்துக் கொண்டு இஸ்லாமியருக்கு எதிராக இந்துத்வாவாதிகளோடு சேர்ந்து காய் நகர்த்துவதை விட்டொழிக்க வேண்டும்.

Tuesday, May 26, 2015

ஏகன் அனேகன் இறைவனடி போற்றி - திருவாசம்‬

திரு சென்னி மலை!

//ஏகன் அனேகன் இறைவனடி போற்றி,
---‪#‎திருவாசம்‬
திருவாசக சித்தர் அண்ணன் Nazeer Ahamed இங்கு வந்து இந்த பாடல்களுக்கு நபிவழி விளக்கம் அளிப்பார் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது,//

“திருவாசகத்தில் “ஏகன் அனேகன் இறைவனடி வாழ்க” என்று ஒரு வாக்கியம் இருக்கு. அதில் ஏகன் என்றால் ஓர் ஆள், அனேகன் என்றால் பல ரூபங்களில் இருக்கும் ஒரே ஆள் என்று அர்த்தம்.

ஒரு மனிதனுக்குள்ளே குடும்ப சூழலில் பல எண்ணங்கள் வருவதைப் பார்க்கிறோம். அன்பு, பணிவு, அடக்கம், கோபம், தாபம், நெகிழ்வு, காமம் ஊடல் என்று பல தன்மைகளை இந்த மனிதன் எடுக்கிறான். ஆனால் அந்த மனிதன் ஒருவன்தான்.

அதே போல் இறைவனானவன் தனது அடியார்களைப் பார்த்து சந்தோஷமடைகிறான், சிலரைப் பார்த்து சிரிக்கிறான், இன்னும் பலரைப் பார்த்து கோபப்படுகிறான். குணங்கள் மனிதர்களின் செயல்களைப் பார்த்து மாறுகிறதே யொழிய அந்த இறைவன் ஒருவன்தான். ஒரு இறைவன்தான் மனிதர்களுக்கேற்ப பல தன்மைகளை பெறுகிறான்.

இந்த இறைவனின் தன்மைகள் 99 ஐத்தான் நான் போன பதிவில் குர்ஆனிலிருந்து எடுத்து பதிவிட்டேன். நபிகள் நாயகமும் குர்ஆனும் எதைச் சொல்கிறதோ அதனைத்தான் தேவாரமும் கூறுகிறது. இந்து மதமும் இதே போல் இறைவனின் தன்மைகளை பட்டியலிடுகிறது. அனால் சென்னி மலை போன்றோர் இதனை தவறாக விளங்கிக் கொண்டு அந்த இறைவன் ஒருவனல்ல... பலவாக பிரிந்து விட்டான் என்ற கற்பனையில் உள்ளனர். ஆக்குவதற்கு ஒரு கடவுளும், அழிப்பதற்கு ஒரு கடவுளும், காப்பதற்கு ஒரு கடவுளுமாக எண்ணற்ற கடவுள்களை கற்பனையில் உருவாக்கி விட்;டனர். அவர்களுக்கு உண்மையை விளக்கி நேர் வழியில் கொண்டு வருவது நம்மவர்களின் கடமை. அதனைத்தான் இந்த பதிவும் சொல்கிறது.

'கடவுள்களைப் பூமியிலிருந்து இவர்கள் தயாரிக்கிறார்களா? இவர்கள் கூறும் அந்த கடவுள்கள் உயிர் கொடுத்து எழுப்புவார்களா?'

'வானங்களிலும் பூமியிலும் அல்லாஹ்வைத் தவிர வேறு கடவுள்கள் இருந்திருந்தால் அனைத்தும் சீரழிந்திருக்கும். அவர்கள் கூறுவதை விட்டும் அர்ஷூக்கு அதிபதியான அல்லாஹ் தூயவன்'

-குர்ஆன் 21: 21,22

இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.இது கட்டுக் கதையல்ல. கண்ணீரால் நிறைந்த நிஜம்.

கர்ம வீரர் காமராசர் முதல்வராக இருந்த சமயம் நடந்தது. இவரல்லவோ முதல்வர்.

“அப்போது காமராஜர் முதல்வர். பழைய சட்டமன்ற விடுதியில் மண்ணாங்கட்டி என்பவர் கீழ்மட்ட ஊழியராக இருந்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் கேட்பதை வாங்கிவந்து தருவார். முதல் தளத்தில் முன்பாகவே இருக்கும் மூக்கையா தேவர் அறையிலேயே இருப்பார். ’
ஒருமுறை ‘ஏம்பா மண்ணாங்கட்டி அவசரமாக வெளியில போறன். குளிச்சு முடிச்சு ரெடியாகுறதுக்குள்ள இட்லிய வாங்கி வந்துடு’ என்று 100 -ருபாயை கொடுத்தார் மூக்கையா தேவர். சொன்னபடியே அவர் ரெடியாகி காத்திருந்தார்.

ரொம்ப நேரம் ஓடியது. தலையில் சுமையுடன் தட்டுதடுமாறி வந்தார் மண்ணாங்கட்டி. பார்த்ததும் ’ஏன்யா. நான் அவசரமா வெளியில போகனும்னு காத்துகிட்டு இருக்கேன். இட்லி வாங்க இவ்வளவு நேரமா என்று எகிறினார் மூக்கையா தேவர். மண்ணாங்கட்டிக்கு கோபம். என்னங்கய்யா நீங்க. இங்க உணவகத்தில் அவ்வளவு இட்லி இல்லைன்னு சொல்லிட்டாங்க. மவுண்ட் ரோடெல்லாம் போய் அலைஞ்சு 100 ரூபாக்கும் இட்லி வாங்குறது லேசுபட்ட காரியமா’என்று பதிலுக்கு சத்தம் போட்டார். அதுதான் மண்ணாங்கட்டி என்ற வெகுளி. அப்பாவி. அவ்வளவு வெள்ளந்தி....

அப்படியான மண்ணாங்கட்டியின் தலையில் ஒருநாள் இடி விழுந்தது. அந்த உத்தரவை படித்துகாட்டச்சொல்லி வீட்டில் அழுது புரண்டு கதறினார். ’அரசாங்க உத்தியோகத்தில் எழதப்படிக்கத் தெரியாதவர்கள் எல்லாம் இனி வேலையில் இருக்க கூடாது. பணியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்’ என்று காமராஜர் போட்ட உத்தரவுதான் அந்த கடிதம். இரண்டு நாள் கழித்து பழைய சட்டமன்ற உறுப்பினர் விடுதிக்கு ஓடிவந்தார். முக்கையா தேவரிடம் தரையில் விழுந்து கதறி அழுகிறார்.

என்னவென்று கேட்கிறார். ’இப்படி ஒரு உத்தரவு வந்திருக்கிறதே. என் குடும்பம் எல்லாம் நடுத்தெருவுக்கு வந்துடுச்சே. எப்படியாவது காப்பாத்துங்க ஐயா’ என்று பித்துப் பிடித்தவராக அழுகிறார். ஏதாவது சமாதானம் சொல்லனுமே என்று ’முதல்வர் ஆபிசுக்கு போன் போடுடா. கேட்டுடலாம்’ என்றார். அப்போது எல்லாம் நேரடியாக தொலைபேசும் வசதி இல்லை. ஆப்ரேட்டரிடம் கூறிவிட்டு காத்திருக்க வேண்டும். முதுல்வர் அலுவலகத்தில் யாராவது உதவியாளர் எடுப்பார்கள்.

மண்ணாங்கட்டி புக்செய்த நேரம் உடனே தொடர்பு கிடைத்தது. மறுமுனையில் முதல்வர் காமராஜ். யார் நீங்கள் உங்களுக்கு என்ன வேண்டும் என்கிறார். அய்யா நான்தான் அசம்பிளி ஆஸ்டல் பியூன் மண்ணாங்கட்டி பேசுறங்க ஐயா என்றபடியே அருகில் இருந்த முக்கையா தேவரை பார்க்கிறார். அவருக்கு முதர்வர் அலுவலகத்தில் இருந்து யாராவது உதவியாளர்கள்தான் டெலிபோனை எடுத்திருப்பார்கள் என்ற நினைப்பு. ‘எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கறப்போ நான் பியூனா இருக்கக்கூடாதான்னு கேளுடா” என்கிறார்.

மறுமுனையில் இருந்த காமராஜரிடம் அதை அச்சுபிசகாமல் ‘ஐயா, எழுதப்படிக்க தெரியாதவங்க எல்லாம் முதல்வரா இருக்கிறப்போ நான் பியூனா இருக்ககூடாதான்னு’ தேவர் ஐயா கேட்க சொல்றாருங்க என்கிறார் மண்ணாங்கட்டி. பிறகு பேச்சில்லை.... அடுத்த 30 நிமிடத்தில் உயர் அதிகாரிகள் 3-பேர் அங்கே வந்துவிட்டார்கள். முதல்வருக்கு போன் செய்தது யார்? என்றார்கள். நான்தான் ஐயா என்று முன்னே வருகிறார் மண்ணாங்கட்டி. உங்களை கையோடு அழைத்துவரச் சொல்லியிருக்கிறார். உடனே புறப்படுங்கள் என்று நிற்கிறார்கள். அப்போதுதான் நாம் பேசியிருப்பது முதல்வர் காமராசர் என புரிகிறது. முக்கையா தேவருக்கும் பதட்டம். மண்ணாங்கட்டி ’ஐயா நீங்களும் வாங்க’ என்று அழுகிறார். பின்னாடியே வருகிறேன். நீ போப்பா என்று அனுப்பி வைக்கிறார். கோட்டையில் உள்ள முதல்வர் காமராஜை நோக்கி வாகனம் பறக்கிறது.

முதர்வரின் அறையில் உள்ள ஷோபாவில், கண்ணத்தில் கைவைத்தபடி கவலைதோய்ந்த முகத்தோடு உட்கார்ந்திருக்கிறார் காமராஜர். கதவு திறக்கப்படுகிறது. மண்ணாங்கட்டி முதலில் நுழைய அதிகாரிகள் சற்று ஒதுங்கி கதவோரம் நின்று கொண்டார்கள்.

நீங்கதான் மண்ணாங்கட்டியா...என்கிறார். ஆமாங்க ஐயா. நான் தெரியாம பேசிட்டேன். என்னை மன்னிச்சுடுங்க ஐயா என்றபடியே கீழே விழுந்தார். அந்த கலாச்சாரம் காமராஜருக்கு பிடிக்காது. அதிகாரிகளை பார்க்க உடனே எழுப்பி நிற்க வைக்கிறார்கள். அவரை வா...வாண்ணே. வந்து பக்கதில உட்காருங்க என்றழைக்கிறார். மண்ணாங்கட்டி தயங்கி நிற்கிறார். காமராஜர் முறைக்க தயங்கி தயங்கி பக்கத்தில் சென்று உட்காருகிறார்.

மண்ணாங்கட்டியை முதுகில் தட்டிக்கொடுத்து முகத்தையே உற்றுப்பார்த்த முதல்வர் காமராஜ், பட்டென்று கையெடுத்து கும்பிட்டு ‘நான் தப்புபன்னிட்டன். தெரியாம செய்திட்டன். மன்னிச்சுடு. அந்த தவறை நீதான் புரியவைச்சே... ரெண்டு நாளா உங்கவீட்ல சோறுதண்ணியில்லியாமே.

சமைக்கலயாமே... .உங்களுக்கு ரெண்டு பொம்பள புள்ளைங்க...எல்லாத்தையும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்..எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கேன்.. நான் அப்படி ஒரு உத்தரவு போட்டிருக்ககூடாது. ‘இனிமே புதிதாக வேலைக்கு வருபவர்களுக்கு எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்’னு போட்டிருக்க வேண்டும். நான் செய்தது தவறுதான் என்று தட்டிக்கொடுத்து ஆதறவு சொல்ல மண்ணாங்கட்டி கதறி அழுகிறார். காமராஜருக்கும் பேச்சு இல்லை...

அடுத்து அங்கேயே ஒரு உத்தரவு தயாராகிறது. காமராஜர் கையொப்பமிடுகிறார். மண்ணாங்கட்டிக்கு மீண்டும் அரசு வேலை. அதிகாரிகளை பார்த்து ‘இவரை அழைத்துக் கொண்டு போங்க. வேலை கொடுத்தாச்சு. இனி கவலைப்பாதீங்கன்னு அவரோட மனைவி, குழைந்தைங்ககிட்ட சொல்லுங்க’ன்னு அதிகார குரலில் உத்தரவிடுகிறார். பிறகென்ன நினைத்தாரோ சற்று தயங்கி ’போகிறபோது வெறும் கையோட போகாதீங்க. ஓட்டல்ல எல்லாருக்கும் சாப்பாடு வாங்கிட்டு போய் கொடுங்க. ரெண்டு நாளா அவர்கள் சாப்பிட்டிருக்க மாட்டர்கள்’ என கண்டிப்போடு கூறுகிறார் அந்த அதிகாரிகளிடம்.

மண்ணாங்கட்டிக்கு பேச வார்த்தைகளின்றி கையெடுத்து கும்பிட்டபடியே வெளியேற, முதல்வர் காமராஜரும் எழுந்து கையெடுத்து கும்பிட்டபடியே அனுப்பிவைத்தார்.

மரியாதை மனிதனுக்கு இருந்த காலம் அது. மனித்நேயமிக்க மகான்கள் உலாவந்த இந்த தமிழகம் இப்பொழுது பதவி வெறி, பண் மோகம் கொண்டோரின் கையில் அகப்பட்டு சின்னா பின்னமாகி வருகின்றத்தே என நினைக்க நினைக்க நெஞ்சம் குமுறுகின்றது.
நல்லாட்சி மலர்ந்திட நாம் தான் சமூக பொறுப்போடு ஏழை எளிய மக்களான பாமரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தனும்.
அறியாமை நீங்கி சமுதாயம் எழுச்சி அடைய நல்ல அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்போம். இலவசங்கள் வேண்டாம். நம் உரிமையை மீட்போம்.

-Pmjf Lion Zahir Hussain

Monday, May 25, 2015

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர.....

தேவாரம் - கல்லைக் கட்டிக்கொண்டு கரை சேர

நமச்சிவாய பதிகத்தில் முதல் பாடல்...

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக்
கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற்
பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.

பொருள்:

சொற்றுணை = சொல் + துணை = சொல்லுக்கு துணையான

வேதியன் = வேதங்களுக்கு தலைவனான

சோதி = சோதி வடிவாய் உள்ளவன்

வானவன் = வானத்தில் உள்ளவன்

பொற்றுணைத் = பொன் போன்ற துணை உள்ள

திருந்தடி = திருவடி

பொருந்தக் கைதொழக் = மனமும், கையும் அவன் திருவடியில் பொருந்துமாறு கை தொழ

கற்றுணைப் பூட்டியோர் = கல்லைக் கட்டி

கடலிற் பாய்ச்சினும் = கடலில் தூக்கி போட்டாலும்

நற்றுணை யாவது = நல்ல துணையாவது

நமச்சி வாயவே. = நமச்சிவாய என்ற அந்த நாமமே

----------------------------------------------------

கடல் என்றால் இந்தப் பிறவி பெருங்கடல். இந்த பிறவி கடலை சும்மா நீந்தி கடப்பதே கடினம், இதில் கல்லை வேறு கட்டிக்கொண்டு எப்படி நீந்துவது?

கல்லுனா எது ? உறவுகள், பந்த பாசங்கள், ஆசைகள், கோபம், தாபம் போன்ற மன மாசுகள் ... இத்தனை கல்லை கட்டி கொண்டு இந்த பிறவிப் பெருங்கடலை எப்படி நீந்தி கரை சேருவது?

இறைவனின் திரு நாமம் இருந்தால், அந்த கற்கள் கூட தெப்பமாய் மாறி சுகமாக கரை சேர முடியும்.

திருநாவுக்கரசர் இறைவனின் உதவியைப் பற்றி இவ்வாறு பாடியிருக்க நமது தமிழகத்தில் இந்த பாடல் சம்பந்தமாக ஒரு வரலாற்று நிகழ்வையும் சொல்வர். அதனையும் பார்ப்போம்.

திரு நாவுக்கரசர் சைவ சமயத்திற்கு மாறியதால், சமணர்கள் மிகுந்த சினம் கொண்டனர். அவர்கள், அரசனிடம் சொல்லி நாவுக்கரசருக்கு தாங்கொண்ணா துன்பங்களை தந்தனர்.

அதில் ஒன்று நாவுக்கரசரை கல்லில் கட்டி கடலில் தூக்கி எரியச் செய்தது.

அப்படி கடலில் போட்டவுடன், அவர் இறைவனை நினைத்து உள்ளம் உருகி நமச்சிவாயப் பதிகம் பாடினார்.

அவரை கட்டியிருந்த கல் தெப்பமாய் மிதந்தது. அதில் ஏறி கரை சேர்ந்தார்.

இது நடந்தது கடலூருக்கு அருகில் தேவனாம் பட்டினம் என்ற கடற்கரையில்.

இன்றும் அங்கு "கரையேற விட்ட குப்பம்" என்று ஒரு இடம் உண்டு. அப்பர் கரையேறிய இடம்.

இது உண்மையான வரலாறா? அல்லது சமணர்களை மட்டம் தட்ட சைவ சமயத்தவர் செய்த கட்டுக் கதையா என்பது இன்றும் விவாதத்தில் உள்ளது. இதே கதையை மையமாக வைத்து தான் கமலஹாசனும் தசாவதாரம் படத்தின் மூலமாக இந்த கதையை எடுத்தாண்டிருப்பார்.


இந்த தேவாரப் பாடல் இறைவனுக்கு இலக்கணமாக எதனைச் சொல்கிறதோ அதனையேதான் இஸ்லாமும் இறைவனுக்கு இலக்கணமாக வைக்கிறது. ஆதிகால தமிழர்கள் இறைவனைப் பற்றிய புரிதலில் மிகத் தெளிவுடனேயே இருந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

--------------------------------------------------------------


'உங்களுக்காக எனக்கு கொடுத்து அனுப்பப்பட்டதை இறை வேதத்தை உங்களுக்கு எடுத்துச் சொல்லி விட்டேன். நீங்கள் புறக்கணித்தால் உங்களையன்றி வேறு சமுதாயத்தை அவன் உங்களுக்குப் பகரமாக ஏற்படுத்துவான். அவனுக்கு நீங்கள் எந்தத் தீங்கும் தர முடியாது. என் இறைவன் ஒவ்வொரு பொருளையும் கண்காணிப்பவன்'

-குர்ஆன் 11:57

மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற அபிசீனிய அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் அவரது சொல்லைக் கேட்டு நடங்கள். அவருக்குக் கீழ்ப்படியுங்கள்!

(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)

இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் - மும்பையில்சமாதி வணங்கிகளிடமிருந்து தினந்தோறும்

எத்தனை வசவுகள்....

மத்ஹப் என்ற சாதி வெறியர்களிடமிருந்து

எத்தனை அவதூறுகள்...

காதிரிய்யா ஷாதுலியா நக்ஷபந்திகளிடமிருந்து

எத்தனை திட்டுக்கள்....

மவ்லூது, கத்தம், ஃபாத்திஹா என்று மார்க்கத்தை

விலைபேசிய மார்க்க அறிஞர்களிடமிருந்துதான்

எத்தனை பொய் செய்திகள்.. அவதூறுகள்...

அத்தனையையும் குர்ஆன், மற்றும் நபி வழிகளின் துணை கொண்டு அனைவரையும் மண்டியிட வைத்து விட்டு இன்று மும்பையிலுள்ள மாற்றுமத சகோதரர்களுக்கு இஸ்லாத்தை சொல்ல புறப்பட்டு விட்டார் பிஜெ.

இறைவன் இவருக்கு மேலும் உடல் நலத்தையும அறிவில் விசாலத்தையும் கொடுத்து தமிழக மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக இஸ்லாமியர்களுக்கும் சிறந்த வழிகாட்டியாக திகழ அந்த ஏக இறைவனை இறைஞ்சுகிறேன்.

'நீங்கள் நம்பிக்கை கொண்ட பிறகு உங்களை இறை மறுப்போராக மாற்றிட வேதம் கொடுக்கப்பட்டோரில் பெருமபாலோர் ஆசைப்படுகின்றனர். உண்மை அவர்களுக்குத் தெளிவான பின்பு அவர்களிடம் ஏற்பட்ட பொறாமையே இதற்குக் காரணம். அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை அவர்களைப் பொருட்படுத்தாது அலட்சியப் படுத்தி விடுங்கள். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன்'

-குர்ஆன்: 2;109

Sunday, May 24, 2015

சவுதியில் கூலி வேலை செய்தவர் இன்று மோடி அமைச்சரவையில்!'நான் பத்தாம் வகுப்பு வரையே படித்துள்ளேன். குடும்ப வறுமை காரணமாக சவுதிக்கு சென்றேன். அங்கு உதவியாளராக, பிளம்பராக பல்வேறு வேலைகளை செய்தேன். எனது உழைப்புக்கும் மீறி அதிகமான ஊதியம் சவுதியில் தம்மாம் நகரில் கிடைத்தது. அதன் மூலம் எனது குடும்ப சூழலும் தன்னிறைவு பெற்றதாக மாறியது. மேலும் நான் சவுதியில் பணியாற்றியபோது பல பாடங்களைப் பெற்றுக் கொண்டேன். நான் பிளம்பராக வந்தவன்: என்னை ஒரு நாள் எனது முதலாளி கழிவறையை சுத்தம் செய்யச் சொன்னார். நான் மறுத்து விட்டேன். உடன் எதுவும் சொல்லாமல் நான் வேலை செய்த பில்டிங்கின் உரிமையாளர் கையில் உறைகளை மாட்டிக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்தார். முழு பில்டிங்கையும் கூட்டி பெருக்குவார். கோடீஸ்வரரான அவருக்கு இந்த வேலைகளெல்லாம் ஒரு இழிவாகவே தெரியவில்லை. இதுவெல்லாம் எனது மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. எந்த வேலையும் இழிவான வேலை அல்ல என்று அன்று நான் முடிவு செய்தேன். இவ்வாறு பல ஆண்டுகள் சவுதியில் உழைத்து எனது குடும்பத்தின் பொருளாதாரம் ஓரளவு நிமிர்ந்தவுடன் இந்தியா திரும்பி அரசியலில் ஈடுபட்டேன்.' என்று டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் மந்திரி விஜய் சாம்ளா கூறியுள்ளர்.

'நான் ஒரு தொழிலாளி: ஒரு விவசாயி: ஒரு பிளம்பர்: இதுதான் எனது நிலை. ஒரு நாள் திடீரென்று நரேந்திர மோடி அவர்களிடமிருந்து போன் வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. தனது அமைச்சரவையில் சேர முடியுமா என்று கேட்டார். உடன் ஒத்துக் கொண்டேன். டீ விற்றவரின் மகன் நாட்டின் பிரதமராகும் போது ஒரு பிளம்பர் மந்திரியாக மாறியதில் என்ன ஆச்சரியம்' என்று கேட்கிறார். 53 வயதாகும் இவர் பஞ்சாபிலிருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தலித் சமூகத்தை சேர்ந்த இவரை வரும் 2017ல் பஞ்சாபில் நடக்கவிருக்கும் சட்ட மன்ற தேர்தலில் தலித் ஓட்டுக்களை பெறுவதற்காக மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளதாக விமரிசகர்கள் கூறுகின்றனர்.

சவுதியில் பல ஆண்டு காலம் பாடம் பயின்ற இந்த மந்திரி உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து தனது துறையில் சிறந்து விளங்க வாழ்த்துவோம்.

தகவல் உதவி:
சவுதி கெஜட்
29-11-2014
என்டிடிவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
10-11-2014

விஜய் சாம்ளா மட்டுமல்ல.... இவரைப் போன்ற கோடிக்கணக்கான நடுத்தர வர்க்கத்து உழைக்கும் மக்களின் வாழ்வை உயர்த்தியது வளைகுடா வாழ்க்கை என்றால் மிகையாகாது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் படித்தவர்களுக்கு மட்டுமே சிறந்த வருவாயைக் கொடுக்கும். ஆனால் வளைகுடாக்களில் படிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் அவனது கை வேலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து கணிசமான சம்பளத்தையும் கொடுக்கிறது. இதனால் பல தமிழக கிராமங்கள் பல வசதிகளைப் பெற்றுள்ளன. மேலும் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் படித்தவர்கள் குடும்பத்தோடு தங்குவதால் பொருளாதாரத்தை அங்கேயே செலவழித்து விடுவார்கள். வளைகுடாவில் வேலை செய்யும் உழைக்கும் வர்க்கம் பெரும்பாலும் குடும்பம் இந்தியாவில் இருப்பதால் தனது செலவு போக ஒட்டு மொத்த சம்பளத்தையும் ஊருக்கு அனுப்பி விடும் காட்சியை தினமும் வளைகுடா வங்கிகளில் பார்க்கலாம். இதன் மூலம் நமது நாட்டு பொருளாதாரம் ஓரளவு ஸ்திரமாக இருக்க மறைமுகமாக வளைகுடா வாழ் இந்தியர்கள் காரணமாக இருக்கிறார்கள். முன்பு வளைகுடா யுத்தம் ஈராக்கில் நடந்து பல மாதங்கள் பண பட்டுவாடா இல்லாததால் நமது நாட்டின் பொருளாதாரமே சரிந்ததை இங்கு நினைவு கூறலாம்.

இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் இந்துத்வாவாதிகள் வெறுத்தாலும் மறைமுகமாக அவர்களின் உயர்வுக்கு முஸ்லிம்களும் இஸ்லாமிய நாடுகளும் காரணமாகின்றனர் என்பதை இன்றில்லா விட்டாலும் என்றாவது உணர்வர்.

தீண்டாமை மற்றும் அடிமை முறை - அம்பேத்கார் பேசுகிறார்இந்துக்கள், தீண்டாமையைப் பற்றி வெட்கப்படுவதற்குப் பதிலாக அதை ஆதரித்துப் பேசுகிறார்கள். இந்துக்கள் அடிமை முறையை ஒருபோதும் ஆதரிக்கவில்லை என்றும், ஆனால் மற்ற நாடுகளைவிட தீண்டாமை மோசமானதல்ல என்றும் அவர்கள் வாதம் செய்கிறார்கள். காலஞ்சென்ற லாலா லாஜ்பத்ராய் ‘மகிழ்ச்சியற்ற இந்தியா’ என்ற தமது புத்தகத்தில் இந்த வாதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார். இந்த எதிர்க் குற்றச்சாட்டை மறுத்துக் கூறுவதில் காலத்தை வீணாக்க அவசியம் இருந்திராது. ஆனால், இந்த வாதம் பொருத்தமானதாகத் தோன்றுவதனால் அடிமை முறையைவிட மோசமான எதையும் கண்டிராத வெளி உலகம், தீண்டாமை அடிமை முறையைவிட மோசமாக இருக்கமுடியாது என்பதை நம்பிவிடும் என்பதால் இதை மறுத்துக் கூறவேண்டியுள்ளது.

இந்துக்கள் கூறும் எதிர்க் குற்றச்சாட்டுக்கு முதல் பதில், அடிமை முறையை இந்துக்கள் ஆதரிக்கவில்லை என்பது முற்றிலும் உண்மையற்றது என்பதே. அடிமை முறை இந்துக்களின் மிகப் பழமையான அமைப்பாகும். இந்துக்களின் சட்டத்தை உருவாக்கிய மனு இதை அங்கீகரித்திருக்கிறார். அவருக்குப் பின் வந்த ஸ்மிருதி ஆசிரியர்கள் இதைப் பற்றி விரிவாகக் கூறி முறைப்படுத்தியிருக்கிறார்கள். அடிமை முறை, இந்துக்களிடையே ஏதோ ஒரு பண்டைக் காலத்தில் இருந்த அமைப்பு அல்ல. இந்திய வரலாறு நெடுகிலும் 1843 வரை அடிமை முறை செயலில் இருந்து வந்தது. அந்த ஆண்டில் பிரிட்டிஷ் அரசு, சட்டத்தின் மூலம் அடிமை முறையை ஒழித்திராவிட்டால் இன்று வரையும் கூட அது நீடித்திருக்கும்.

அடுத்து, அடிமை முறை, தீண்டாமை ஆகியவற்றின் தன்மை பற்றிய எதிர்க்குற்றச் சாட்டுக்குப் பதில் கூருவதற்குத் தீண்டாமையையும், பண்டைக் கால ரோமிலும், நவீன கால அமெரிக்காவிலும் வழக்கத்திலிருந்த அடிமை முறையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ரோமப் பேரரசில் அடிமைகளின் நிலை நடைமுறையில் எப்படி இருந்தது? இதைப்பற்றி நான் அறிந்த மிகச் சிறப்பான வர்ணனை திரு.பாரோ எழுதிய ‘ரோமப் பேரரசில் அடிமைமுறை’ என்ற புத்தகத்தில் காணப்படுகிறது. திரு.பாரோ கூறுகிறார். 1

“இதுவரை, வீடுகளில் அடிமைகளை வைத்திருக்கும் முறையின் கொடூரமான அம்சங்கள் விவரிக்கப்பட்டன. மற்றுமொரு அம்சமும் உள்ளது. பெரும் எண்ணிக்கையில் ஆட்களைக் கொண்ட வீடுகள் சாதாரணமாகக் காணப்படுபவை என்று இலக்கியம் காட்டுகிறது. ஆனால், இது விதிவிலக்கானது தான். பெரும் எண்ணிக்கையில் அடிமைப் பணியாளர்கள் இருந்தார்கள் என்பதில் சந்தேகமில்லை; இவர்கள் பொதுவாக ரோம் நகரில் காணப்பட்டார்கள். இத்தாலியிலும் மாகாணங்களிலும் பெருமைக்காகக் காட்சி காட்டுவதற்கு அதிகத் தேவை இருக்கவில்லை. மாளிகையின் பணியாளர்களில் பலர், நிலமும் விளைபொருள்களும் தொடர்பான உற்பத்தி வேலைகளில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

மேற்பார்வையாளருக்கும் அடிமைக்கும் இடையிலான பழமையான உறவுமுறை அங்கும் இருந்தது. ஆனால் பல சமயங்களில் அடிமை ஒரு சகதொழிலாளியாக இருந்தார். பிளினி, தமது பணியாளர்களிடம் காட்டிய அன்பு பற்றி நாம் நன்றாக அறிவோம். தமது சொந்த நேர்மை உண்ர்ச்சியைக் காட்டுவதற்காகவோ, வருங்காலத் தலை முறையினர் தமது கடிதங்களைப் படிப்பார்கள் என்று நம்பி அவர்களிடம் நல்ல பெயர் பெறவேண்டும் என்ற எண்ணத்துடனோ அவர் தமது அடிமைகளின் உடல் நலக்குறைவு பற்றியும் அவர்களின் மரணம் பற்றியும் தமது மனவேதனையை வெளிப்படுத்தவில்லை.

(பிளினியின்) குடும்ப வீடு அடிமைகளின் குடியரசு. பிளினி தமது அடிமைகளை நடத்திய விதம் பற்றிக் கூறியிருப்பது சில சமயங்களில்
பொதுவான நடைமுறையிலிருந்து மிகவும் முன்னேறியதாக உள்ளதால் அதைச் சான்றாக மதிக்க முடியாது என்று கருதப்படுகிறது. இவ்வாறு கருதுவது சரியல்ல.

பெருமையாகக் காட்டிக் கொள்வதற்காகவும் உண்மையான இலக்கிய ஆர்வத்தினாலும் செல்வம் மிக்க குடும்பங்கள் தங்கள் வீடுகளில் இலக்கியத்திலும் கலைகளிலும் பயிற்சி பெற்ற அடிமைகளை வைத்திருந்தார்கள். கிளாவிஸிஸெஸ் சேபினஸ், தம்மிடம் ஹோமர், ஹெஸியாயிட், மற்றும் ஒன்பது கவிஞர்களின் கவிதைகளை மனப்பாடமாக ஒப்பிக்கப் பயிற்சி பெற்ற பதினொரு அடிமைகளை வைத்திருந்ததாக ஸெனெடா கூறுகிறார். ‘புத்தக அலமாரி வைத்துக் கொள்வது செலவு குறைவாயிருக்கும்’ என்று முரட்டுத்தனமாகப் பேசும் நண்பர் ஒருவர் கூறினார். “அப்படியில்லை” என்று அவருக்குப் பதில் கூறப்பட்டது. இவ்வாறு தவறான முறையில் பயன்படுத்தப்பட்டது ஒரு புறம் இருந்தாலும், அச்சுக்கலை தோன்றாத அந்தக் காலத்தில் கல்வி கற்ற அடிமைகள் வீட்டுக்கு அவசியமாயிருந்திருக்க வேண்டும்….வழக்கறிஞர்கள், பொழுது போக்காகக் கவிதை எழுதுவோர், தத்துவ அறிஞர்கள், கல்விகற்ற கனவான்கள் முதலானவர்களுக்குப் படி எழுதுபவர்கள், வாசிப்பவர்கள், செயலாளர்கள் ஆகியோர் தேவைப்பட்டிருப்பார்கள். இத்தகைய ஆட்கள் இயல்பாகப் பன்மொழித் திறமையும் பெற்றிருந்தார்கள். இருபது வயதில் இறந்து போகும் ஒரு ‘புத்தக மனிதன்’ தாம் கிரேக்கமும் லத்தீனும் அறிந்தவர் ’என்று பெருமையுடன் கூறிக்கொள்கிறார், சொல்வதைக் கேட்டு எழுதுபவர்கள் சாதாரணமாயிருந்தனர். தனியார் மற்றும் பொது நூலகங்களில் நூலகர்கள் இருந்தனர்….பேரரசில் சுருக்கெழுத்து பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. இந்தப் பணிக்கென அடிமைகள் அமர்த்தப்பட்டார்கள். வாக்கு வன்மை பெற்ற பேச்சாளர்கள், இலக்கண அறிஞர்கள் ஆகியோரின் உரைகள் பலவற்றை ஸ்னெட்டோனியஸ் ஒரு புத்தகமாகத் தொகுத்துள்ளார். வெரியஸ் ஃப்ளாக்கஸ் என்பவர் ஆஸ்டஸின் பேரர்களுக்கு ஆசிரியராயிருந்தார். அவர் இறந்தபின் அவருக்குச் சிலை வைத்துக் கௌரவித்தார்கள். ஸெரிபோனியஸ் அபியொடிசியஸ் என்பவர் ஆர்பிலியஸின் அடிமையாகவும் மாணவராகவும் இருந்தார்; பின்பு அவர் ஸெரிபேனியாவால் விடுதலை செய்யப்பட்டார், ஹைகின்ஸ் என்பவர் அவருக்குப்பின், அவரிடம் அடிமையாயிருந்து விடுதலைபெற்ற ஜுலியஸ் மாடெஸ்டஸ் அந்தப் பதவிக்கு வந்தார். அடிமையான தத்துவ அறிஞர் ஒருவரின் வரலாற்றை எழுதிய சுதந்திர மனிதர்கள் பற்றியும் நாம் கேள்விப்படுகிறோம். இந்த அடிமை அறிஞர், தமது எஜமானருடனும் அடிமைகளின் நண்பர்களுடனும் வாதங்கள் நடத்த ஊக்குவிக்கப்பட்டார். சுதந்திரம் பெற்ற அடிமைகள் மருத்துவர்களாகப் பணிபுரிந்தது பற்றியும் கல்வெட்டுக்கள் உள்ளன. இவர்களில் சிலர் குறிப்பிட்ட மருத்துவத் துறைகளில் தனித் தேர்ச்சி பெற்றவர்கள்.

இத்தகையவர்கள் பெரிய வீடுகளில் அடிமைகளாக இருந்தபோது பயிற்சி பெற்றவர்கள் என்று சில உதாரணங்களிலிருந்து தெரிகிறது. இவர்கள் விடுதலை பெற்றபின் தங்கள் துறைகளில் மிக உயர்ந்த நிலையை அடைந்து, மிக அதிகமாகக் கட்டணம் வாங்குபவர்கள் என்ற பெயரைப் பெற்றனர்.”

சமூகத்தில் சில பிரிவினரின் ரசனைகளுக்கு நடனக் கலைஞர்கள், பாடகர்கள், இசைக் கலைஞர்கள், பல கலைகள் நிகழ்த்துவோர், உடற்பயிற்சிப் பயிற்சியாளர்கள், உடல் பிடிப்பவர்கள் போன்ற பலருடைய சேவைகள் வேண்டியிருந்தன. இத்தகைய பணிகள் எல்லாவற்றையும் செய்த அடிமைகள் இருந்தனர். இவர்கள் இந்தத் துறைகளில் புகழ்பெற்ற ஆசிரியர்களிடம் பயிற்சி பெற்றிருந்தனர். [2.ரோமானிய பேரரசின் அடிமைத்தனம் ப,63]

ஆகஸ்டஸின் காலம் வர்த்தகமும் தொழில்களும் விரிவடையத் தொடங்கிய காலம்….அடிமைகள் (கலைகளிலும் கைத் தொழில்களிலும்) முன்பும் ஈடுபடுத்தப்பட்டனர்; ஆனால் திடீரென்று வர்த்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினால், முன்பைவிட அதிக எண்ணிக்கையில் அவர்களை ஈடுபடுத்த வேண்டியிருந்தது, ரோமானியர்கள் பல்வேறு வர்த்தக, தொழில் முயற்சிகளில் மிகத் தாராளமாகவும் திறந்த முறையிலும் ஈடுபட்டார்கள். ஆயினும் வர்த்தக நடவடிக்கைகள் மிகவும் விரிவடைந்ததால் அவர்களுக்கு முகவர்கள் தேவைப்பட்டார்கள். இத்தகைய முகவர்களாகப் பெரும்பாலும் அடிமைகளே செயல்பட்டனர்….(இவ்வாறு இருந்ததற்கு) காரணம் என்னவென்றால், அடிமைத் தளைகள் (தளர்த்தக் கூடியனவாக உள்ளன). (இவற்றை) அடிமையாயிருப்பவர் செல்வத்தையும் சுதந்திரத்தையும் பெறமுடியும் என்ற நம்பிக்கையுடன் வேலை செய்ய ஊக்குவிக்கும் வகையில் தளர்த்தவும், அடிமையின் தவறான செயலால் எஜமானருக்கு இழப்பு ஏற்படாமல் உத்தரவாதம் செய்யும் வகையில் இறுக்கமாக்கவும் முடியும்.

வர்த்தகத்தில், ஓர் அடிமை தனது எஜமானருடன் அல்லது மற்றொருவருடன் ஒப்பந்தம் செய்து கொள்வது சாதாரணமாகக் காணப்பட்டது. இவ்வாறாகச் செய்யப்பட்ட வேலையும், ஈட்டப்பட்ட லாபமும் கணிசமாக இருந்தன……அடிமைக்கு நிலத்தைக் குத்தகைக்கு விடுவது பற்றி முன்பே கூறப்பட்டுள்ளது…. தொழில்களிலும் இதே முறை பல்வேறு வடிவங்களில் வழக்கத்தில் இருந்தது. எஜமானர் ஒரு வங்கியை அல்லது கப்பலைப் பயன்படுத்தும் தொழிலை அடிமையிடம் குத்தகைக்குக் கொடுக்கலாம். இதற்கு ஈடாக அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்கப்படலாம் அல்லது அடிமைக்கு விகித அடிப்படையிலான தொகை கொடுக்கப்படலாம் 2

அடிமை சம்பாதிக்கும் பொருள் சட்டப்படி அவனுடைய சொந்தப் பணம் ஆகும். அதைச் சேமித்துப் பல வழிகளில் பயன்படுத்தலாம். பலர் இதை உணவுப் பொருள்களுக்கும் உல்லாசத்திற்கும் செலவிட்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்தத் தனிப்பணம் ஏதோ கொஞ்சம் கையில் சேர்ந்தது, கரைந்து போயிற்று என்று சொல்லும் படியாக இருக்கவில்லை. எஜமானருடைய வர்த்தகத்தில் அவருக்கு லாபம் ஈட்டிக் கொடுக்கத் தெரிந்த அடிமை தன்னுடைய பொருளையும் எப்படி லாபமான முறையில் பயம்படுத்தலாம் என்பதை அறிவான். பல சமயங்களில் அவன் தன் எஜமானரின் வர்த்தகத்தில் அல்லது முற்றிலும் வேறான தொழில் முயற்சியில் முதலீடு செய்தான். அவன் தன் எஜமானருடனேயே வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அப்போது அவன் எஜமானரிடமிருந்து முற்றிலும் தனிப்பட்ட மனிதனாகக் கருதப்பட்டான். மூன்றாம் மனிதர் ஒருவருடனும் அடிமை, ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். அவன் தன்னுடைய சொத்துக்களையும் நலன்களையும் மேலாண்மை செய்வதற்கு முகவர்களை வைத்துக் கொள்ளலாம். இவ்வாறாக அடிமையின் தனிப்பணத்துடன் சம்பந்தப்பட்டவையாக நிலம், வீடுகள், கடைகள் ஆகியவை மட்டுமின்றி உரிமைகளும் பாத்தியதைகளும் காணப்பட்டன.

வர்த்தகத்தில் அடிமைகள் எண்ணற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்: பலர் கடைகள் வைத்திருந்தார்கள்; இவற்றில் உணவு, ரொட்டி, இறைச்சி, உப்பு, மீன், மது, காய்கறிகள், தேன், தயிர், பன்றியிறைச்சி, வாத்துகள், மீன் முதலானவை விற்கப்பட்டன. வேறு சில கடைகளில் துணி, காலணிகள், அங்கிகள் முதலானவை விற்கப்பட்டன.

ரோம் நகரில் இவர்கள் தங்கள் தொழில்களை மேமிமஸ் வட்டம், ட்ரைஜெமிமஸ் வாசல், எஸ்க்விலைன் மார்க்கெட், (காவோலியன் குன்றின்மேல் உள்ள) பெரிய அங்காடி, முதலான இடங்களில் நடத்தினார்கள்3

அடிமைகளான செயலாளர்களும் முகவர்களும் தங்களுடைய எஜமானர்கள் சார்பில் எந்த அளவுக்குச் செயல்பட்டார்கள் என்பதை பாம்பேயில் ஸீஸிலியஸ் ஜகண்டஸ் என்பவருடைய வீட்டில் கண்டெடுக்கப்பட்ட ரசீதுகளிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. 4

அரசு தனக்குச் சொந்தமாக அடிமைகளை வைத்திருந்தது என்பது ஆச்சரியமல்ல; ஏனென்றால், போர், அரசு சம்பந்தப்பட்ட விஷயம் ஆதலால், போரில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் அரசின் உடைமையாகவே இருக்கலாம். ஆனால் அரசின் அடிமைகள் எத்தகைய குறிப்பிடத்தக்க முறையில் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதும், அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தனிப்பட்ட சமூக அந்தஸ்தும் மிகுந்த ஆச்சரியம் அளிக்கின்றன….
”பொது அடிமை’ என்றால் பேரரசின் கருத்தில் அரசு தன்னுடைய பல பணிகளில் ஈடுபடுத்துகின்ற அடிமைகள் என்று பொருள்பட்டது. அவ்வாறு அழைக்கப்படுபவருக்கு ஒரு குறிப்பிட்ட அரசுப்பணி இருப்பதையும் அது குறிப்பிட்டது. அரசின் அடிமைகள், நகரங்களின் அடிமைகள். பல சமயங்களில் ஒரு சமூக அந்தஸ்து இருப்பதையும் அது குறிப்பிட்டது. அரசின் அடிமைகள், நகரங்களின் அடிமைகள், ஸீஸரின் அடிமைகள் ஆகியோர் செய்த பணிகளில், இப்போது அரசு நிர்வாகப் பணித்துறையின் மேற் பிரிவின் ஒரு பகுதியினரும் கீழ்ப்பிரிவினர் அனைவரும், நகரசபைகளின் பணியாளர்களும் செய்கின்ற மூளை உழைப்பு, உடல் உழைப்பு ஆகிய எல்லாப் பணிகளும் அடங்கியிருந்தன…(கருவூலத்தின்) சார்நிலைப் பணிகளில் எழுத்தர்களாகவும் நிதி அதிகாரிகளாகவும் பணிபுரிந்த பலர் அடிமைகளும், விடுதலை பெற்ற அடிமைகளும் ஆவார்கள். இவர்கள் செய்த பணிகள் மிகப் பலவகையாக இருந்திருக்க வேண்டும்… நாணய சாலை….இதன் தலைவராக ‘நைட்’ எனப்பட்ட உயர்நிலைப் போர்வீரர் இருந்தார்; நாணயம் அச்சிடும் செயல் முறையின் பொறுப்பாளராக…. விடுதலைபெற்ற அடிமை ஒருவர் இருந்தார்; அவருக்குக் கீழே விடுதலை பெற்ற அடிமைகளும், அடிமைகளும் பணி செய்தார்கள்…. ஆயினும் அரசுப் பணியின் ஒரு பிரிவிலிருந்து, மிக நெருக்கடியான ஓரிரண்டு சந்தர்ப்பங்களில் தவிர, அடிமைகள் கண்டிப்பாக விலக்கப்பட்டிருந்தார்கள். ராணுவத்தில் சேர்ந்து போர் புரிய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை; அவர்கள் கௌரவத்துக்குத் தகுந்தவரகளாகக் கருதப்படாததே இதற்குக் காரணம். வேறு காரணங்களும் இருந்தன என்பதில் சந்தேகமில்லை. பெரும் எண்ணிக்கையில் அடிமைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பது ஆபத்தான பரிசோதனை ஆகிவிடும். அடிமைகள் போர்முனையில் அரிதாயிருந்த போதிலும், போர்முனையின் பின்னணியில் வேலைக்காரர்களாகவும், உணவு வழங்குதல் போக்குவரத்து ஆகியபிரிவுகளில் பணியாளர்களாகவும் பெரும் எண்ணிக்கையில் எப்போதும் காணப்பட்டனர். கடற்படைக் கப்பல்களில் அடிமைகள் பணி செய்வது சாதாரணமாயிருந்தது.”


இப்போது அமெரிக்காவில் நீக்ரோக்கள் சட்டத்தின் பார்வையில் அடிமைகளாயிருந்த காலத்தில் அவர்களின் நடைமுறை நிலைமை எவ்வாறு இருந்தது என்று பார்க்கலாம். நீக்ரோக்களின் நிலைமை பற்றி நன்றாக விளக்கும் சில விவரங்கள் கீழே தரப்படுகின்றன: [6.சார்லஸ் சி.ஜான்சன் அமெரிக்க நாகரிகத்தில் நீக்ரோக்கள்]

“புரட்சியின் போது வெள்ளையரும் கருப்பரும் ஆகிய கடற்படை வீரர்கள் ஒன்றாகப் போரிட்டு, ஒன்றாக உணவு உண்டனர் என்று லஃபாயத் கூறியிருக்கிறார். வட கரோலனாவின் கிரான்வில் கவுண்ட்டியில், அசல் நீக்ரோவான ஜான் சேவிஸ் என்பவர் வெள்ளை மாணவர்களுக்குத் தனியான பள்ளிக்கூடம் ஒன்றை நடத்தி வந்தார். பிரின்ஸ்டன் பக்கலைக் கழகத்தில் கல்விகற்ற அவர் உள்ளூர் மதகுருக்கள் சபையின் உரிமப்பட்டயம் பெற்று, அம்மாநிலத்தில் வெள்ளையர்களைக் கொண்ட திருச்சபையில் உபதேச உரைகள் நிகழ்த்தி வந்தார். அவருடைய மாணவர்களில் ஒருவர், வட கரோலினாவின் ஆளுநர் ஆனார்; மற்றொருவர், மாநிலத்தின் மிகப் பிரபலமான விக் கட்சி செனட் உறுப்பினர் ஆனார். அவருடைய மாணவர்களில் இருவர், வட கரோலினாவின் தலைமை நீதிபதியின் மகன்கள். மாநிலத்தின் மிகப்பெரிய ராணுவப் பயிற்சிக் கழகத்தை நிறுவியவரின் தந்தை அவரது பள்ளியில் படித்து அவரது வீட்டில் உணவு உண்டு வந்தார்…. அடிமைகளின் உழைப்பு எல்லாவிதமான வேலைகளிலும் பயன்படுத்தப்பட்டது. நீக்ரோக்களில் அதிக அறிவுத் திறன் உள்ளவர்கள் கைத்தொழில்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, அந்தத் தொழில்களில் பயன்படுத்தப்பட்டார்கள், அல்லது அவர்களது பணி மற்றவர்களுக்குக் குத்தகைக்கு விடப்பட்டது.

தொழிலாளர்களை வேலைக்கமர்த்துவோர் சாதாரணத் தொழிலாளர்களைவிட அடிமைத் தொழிலாளர்களை அமர்த்திக் கொள்வதற்கு இரண்டு மடங்கு பணம் கொடுத்தார்கள். தலைமைக் கைத்தொழிலாளர்கள் தங்கள் கீழ் வேலைசெய்யும் தொழிலாளர்களின் உரிமையாளர்களாயிருந்தனர். இந்த முறை மேலும் வளர்ச்சி பெற்ற போது, சில தலைமைக் கைத்தொழிலாளர்கள் தங்களுடைய அடிமைத் தொழிலாளர்களின் கீழ் வேலை செய்வதற்கு வேறு அடிமைகளை அமர்த்தினார்கள். பல அடிமைத் தொழிலாளர்கள் தங்களிடம் எதிர்பார்க்கப்பட்டதற்கு அதிகமாகச் செய்த வேலைக்காகக் கூடுதலாக அனுமதிக்கப்பட்ட பணத்தைச் சேமித்து அதை விலையாகக் கொடுத்துத் தங்கள் சுதந்திரத்தை வாங்கினார்கள்.”
“ஓடிப்போன அடிமைகள் பற்றியும் அடிமை விற்பனை பற்றியும் கொடுக்கப்பட்ட விளம்பரங்கள் அவர்களின் திறமைக்குச் சான்று கூறுகின்றன. அவர்கள், ஏழை வெள்ளைத் தொழிலாளருக்குச் சமமாக அல்லது கூடுதலாக ஊதியம் பெற்றார்கள். தங்களுடைய உடைமையாளரின் செல்வாக்கினால் மிக நல்ல வேலைகளைப் பெற்றார்கள். ஜார்ஜியா மாநிலம் ஆதென்ஸில் கொத்து வேலைக்கும் தச்சு வேலைக்கும் ஒப்பந்தம் எடுப்பவர்கள் நீக்ரோ தொழிலாளர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை நிறுத்தவேண்டும் என்று 1838 – இல் அவர்களிடம் மனுக் கொடுக்கப்பட்டது. ”வெள்ளையர்கள் தான் இந்த நாட்டின், இந்த மாநிலத்தின், உண்மையான, சட்டபூர்வமான, அறநெறிப்படியான சொந்தக்காரார்கள். இந்த உரிமை அவர்களுக்கு உலகம் உருண்டையானது என்ற உண்மையைக் கண்டறிந்து கூறிய கோபர்னிகஸ், கலீலியோ ஆகிய வெள்ளையர்களிடமிருந்து கிடைத்திருக்கிறது; இந்த உண்மையின் அடிப்படையில் மற்றொரு வெள்ளையர் கொலம்பஸ், உலகில் புதிய நிலப்பகுதிகளைக் கண்டுபிடிப்பதற்கு மேற்கு நோக்கிக் கடற்பயணம் செய்யலாம் என்று உணர்ந்தார். எனவே இந்தக் கண்டம் வெள்ளையர்களாலேயே கண்டுபிடிக்கப்பட்டது; இந்த வெள்ளையர்களுக்குத்தான் நீங்கள் வேலை கொடுக்க மறுத்து அவர்களுடைய பசியினால் வாடும் குடும்பங்களுக்கு உணவும் உடையும் கிடைக்காமல் செய்கிறீர்கள். அதுமட்டுமின்றி நீக்ரோக்களுக்கே நீங்கள் ஆதரவளிக்கிறீர்கள்.”

அட்லாண்டாவில் 1858-இல் இரண்டு வெள்ளையந்திரப் பணியாளர்கள் கொடுத்த ஒரு மனுவில் தங்கள் பகுதிகளில் வசிக்கும் தலைமைத் தொழிலாளர்களின் கருப்பு அடிமைத் தொழிலாளர்களிடமிருந்து தங்களுக்குப் பாதுகாப்பளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். அடுத்த ஆண்டிலேயே சில வெள்ளையர்கள் தங்கள் மத்தியில் ஒரு நீக்ரோ பல்வைத்தியர் இருப்பதையும் தொழில் செய்வதையும் நகர சபை சகித்துக் கொள்கிறது என்று புகார் கூறினார்கள். ‘எங்களுக்கும் சமுதாயத்திற்கும் நியாயம் செய்வதற்கு இதை நிறுத்தியாகவேண்டும். அட்லாண்டா நகரவாசிகளான நாங்கள் உங்களிடம் நீதி கேட்கிறோம்.’ ஜார்ஜியா மாநிலம் ரிச்மண்ட் கவுண்ட்டியில் 1819-இல் சுதந்திரமான நீக்ரோக்கள் பற்றி நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் அவர்கள் தச்சுவேலை, முடிதிருத்தல், படகு பழுது பார்த்தல், குதிரைச் சேணய் செய்தல், நூல் நூற்றல், இயந்திரங்களில் மாவரைத்தல், துப்பாக்கி உறைகள் தைத்தல், நெசவு, மரம் அறுத்தல், நீராவிப் படகுக்கு வழிகாட்டிச் செலுத்துதல் போன்ற வேலைகளைச் செய்வதாகத் தெரியவந்தது. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் மன்ரோ பதவி ஏற்றபோது அணிந்திருந்த காலணிகளை நீக்ரோ காலணித் தொழிலாளர் ஒருவர் கையினால் செய்து கொடுத்திருந்தார். மாண்டிஸெலோவில், தாமஸ் ஜெபர்ஸனின் வீட்டில் ஓடு பாவிய தரையை நேர்த்தியாக உருவாக்கிய அடிமையின் தொழில் திறமையை ஹாரியட் மார்ட்டினோ வியந்துரைத்தார். பழைய பருத்தித் தோட்டத்தின் அந்தப் பெரிய வீட்டில் நீக்ரோ கைவினைஞர்களின் கைத்திறனின் அடையாளங்கள் இன்னமும் காணப்படுகின்றன. தோட்டம் அமைப்பதற்கு முன் அங்கு நின்ற ஓக் மரங்களை வெட்டியெடுத்து அவற்றின் கட்டைகளை இணைத்து அமைக்கப்பட்ட வலுவான மாளிகைகள் இன்றும் நிற்கின்றன. நூல் நூற்பதிலும் நெசவிலும் தேர்ச்சி பெற்ற நீக்ரோ பெண்கள் ஆலைகளில் வேலை செய்தார்கள். ஜார்ஜியா மாநிலம் ஆதன்ஸில் அவர்கள் வெள்ளை இனப் பெண்களுடன் வேலை செய்வதையும், அதைப்பற்றி ஆட்சேபமோ வெறுப்போ காட்டப்படவில்லை என்பதையும் பக்கிங்ஹாம் 1839-இல் பார்த்தார். தென்பகுதியில் உள்ள நீக்ரோ கைத்தொழிலாளர்கள் – அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகிய இருசாராருமே – வட பகுதியில் உள்ள தங்கள் சகோதரர்களைவிட நல்ல நிலையில் இருந்தார்கள். 1856-இல் பிலடெல்பியாவில் இருந்த 1637 நீக்ரோ கைத்தொழிலாளர்களுக்கு எதிரான பாரபட்சம் காரணமாக அவர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் குறைவானவர்களே தங்கள் தொழில்களைச் செய்ய முடிந்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே அமெரிக்காவுக்குப் பெரும் எண்ணிக்கையில் வந்து கொண்டிருந்த ஐரிஷ் மக்கள், நீக்ரோ அடிமைத்தனத்திற்கு அடிப்படையாகக் கொடுத்துப் பயன்படுத்தப்பட்டனர். அவர்களுக்குச் சாதகமாக இவ்வாறு கூறப்பட்டது: ‘ஐரிஷ் கத்தோலிக்கர் ஒருவர் தாம் எந்த நிலையில் வைக்கப்படுகிறாரோ அதைவிட மேலே உயர்வதற்கு முயலமாட்டார்; ஆனால், நீக்ரோ, பல சமயங்களில் முயற்சி செய்து வெற்றி பெற்றுவிடுகிறார்.’ பியூரிட்டனான ஆலிவர் க்ராம்வெல், கருப்பு அடிமைகள் வர்த்தகம் நடந்து கொண்டிருந்த காலத்தில், ட்ரோகேடா படுகொலையில் கொல்லப்படாத ஐரிஷ் மக்கள் அனைவரையும் பார்படாஸில் உள்ளவர்களுக்கு விற்றுவிடவில்லையா? நியூயார்க்கிலும் பென்சில்வேனியாவிலும் உள்ள சுதந்திரமானவர்களும் ஓடிவந்த அடிமைகளுமான நீக்ரோக்கள் இந்த மக்களுடன் எப்போதும் போராடிக் கொண்டிருந்தார்கள். நியூயார்க்கில் நடந்த கட்டாய ராணுவ சேவைக் கழகங்களில் இந்தப் பகைமை, மிகுந்த வன்முறையாக வெளிப்பட்டது. இந்த ஐரிஷ் மக்கள் சிற்றாள் வேலை முதலான சாதாரண வேலைகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்த வேலைகளில் நீக்ரோக்கள் இடம் பெறும் முயற்சி ஒவ்வொன்றையும் அவர்கள் எதிர்த்தார்கள். இந்த முயற்சிகள் அமெரிக்காமீது தங்களுக்கிருந்த லேசான பிடிப்புக்கும், வாழ்க்கை ஆதாரமான தொழிலுக்கும் அபாயமானவை என்று அவர்கள் கருதினார்கள்.
ரோமானிய அடிமை, அமெரிக்க நீக்ரோ அடிமை ஆகியோரின் நடைமுறை நிலைமை இவ்வாறு இருந்தது.

இந்தியாவில் உள்ள தீண்டாதோரின் நிலைமையில், ரோமானிய அடிமையின் நிலைமையுடனும் அமெரிக்க நீக்ரோ அடிமையின் நிலைமையுடனும் ஒப்பிடக் கூடியதாக ஏதேனும் இருக்கிறதா? தீண்டாதோரின் நிலைமையையும் ரோமப் பேரரசில் அடிமையின் நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு அதே காலகட்டத்தை எடுத்துக்கொள்வது தவறாகாது. ஆயினும் ரோமப் பேரரசில் இருந்த அடிமைகளின் நிலைமையுடன் இப்போது உள்ள தீண்டாதோரின் நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்க நான் இணங்குகிறேன். இது ஒரு புறம் மிக மோசமானதையும் மறுபுறம் மிகச் சிறந்ததையும் எடுத்து ஒப்பிடுவதாகும். ஏனென்றால் இப்போதைய காலம் தீண்டாதோரின் பொற்காலம் என்று கருதப்படுகிறது. தீண்டாதோரின் நடைமுறை நிலைமை அடிமைகளின் நிலைமையுடன் ஒப்பிடும் போது எவ்வாறு உள்ளது? ரோமானிய அடிமைகளைப் போல எத்தனைத் தீண்டாதோர் நூலகர்களாகவும், சொல்லுவதை எழுதுவோராகவும், சுருக்கெழுத்தாளர்களாகவும் வேலையில் உள்ளனர்? ரோம் நகரில் அடிமைகள், பேச்சாளர்கள், இலக்கண ஆசிரியர்கள், தத்துவ அறிஞர்கள் போன்ற அறிவுத் துறைப் பணிகளில் அமர்த்தப்பட்டது போல எத்தனைத் தீண்டாதவர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்? ரோமில் அடிமைகள் ஈடுபடுத்தப்பட்டது போன்ற பணிகளில் தீண்டாதவர்கள் எத்தனைப் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்? எந்த இந்துவும் இவற்றில் எந்தக் கேள்விக்காவது உடன்பாடான பதில் கூற முடியுமா? அடிமைகள் மிகப் பெருமளவில் இடம்பெற்றிருந்த இந்தப் பணிகள் எல்லாவற்றிலுமிருந்து தீண்டாதோர் முற்றிலுமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளனர். தீண்டாமையை நியாயப்படுத்துவதற்கு இந்துக்கள் சொல்லும் வாதங்கள் எவ்வளவு பலனற்றவை என்பதை இது நிரூபிக்கிறது. இதில் இரங்கத்தக்கது என்னவென்றால், பெரும்பாலானவர்கள், ஒரு மனிதன் அல்லது ஒரு வகுப்பினர் மற்றொரு மனிதனின் வாழ்வு அல்லது மரணத்திற்கான அதிகாரத்தைச் சட்டப்படி பெற்றிருப்பது தவறு என்று கூறி, அடிமை முறையைக் கண்டனம் செய்வதாகும். ஆனால் அடிமைத்தனம் இல்லாத போதும் கூட மிகக் கொடுமையான ஒடுக்குமுறையும் கொடுங்கோன்மையும் துன்புறுத்தலும் இவற்றின் விளைவான துன்பங்களும் ஏமாற்றமும் மனத்தளர்ச்சியும் இருக்கமுடியும் என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். அடிமைகளின் நடைமுறை நிலைமை பற்றி மேலே கூறப்பட்ட விவரங்களைக் கவனிப்பவர்கள், அடிமையின் சட்டப்படியான நிலைமையை மட்டும் கருத்தில் கொண்டு அடிமை முறையை அவசரப்பட்டுக் கண்டனம் செய்வது சரியல்ல என்று ஒப்புக் கொள்வார்கள். சட்டம் அனுமதிக்கிறது என்பது, அந்த நடைமுறைகள் சமூகத்தில் உள்ளன என்பதற்குச் சான்றாகிவிடாது. தாங்கள் பெற்றுள்ள் எல்லாம் அடிமை முறையினால் கிடைத்தவையே என்று பல அடிமைகள் ஒப்புக் கொண்டிருப்பார்கள். அவ்வாறு ஒப்புக் கொண்டாளும் இல்லாவிட்டாலும் பல அடிமைகள் தாங்கள் பெற்றவற்றையெல்லாம் அடிமைமுறை காரணமாகவே அடைந்திருந்தனர்.

அடிமை முறை, சுதந்திரமான சமூக அமைப்பு அல்ல என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், தீண்டாமை சுதந்திரமான சமூக அமைப்பு என்று கூற முடியுமா? தீண்டாமையை ஆதரிக்கும் இந்துக்கள், இது சுதந்திரமான சமூக அமைப்புதான் என்று கூறலாம். ஆனால் தீண்டாமைக்கும் அடிமை முறைக்கும் இடையில் உள்ள சில வேறுபாடுகள் தீண்டாமையை அடிமை முறையைவிட மோசமான சுதந்திரமற்ற சமூக அமைப்பு ஆக்கிவிடுவதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். அடிமைமுறை ஒருபோதும் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் தீண்டாமை கட்டாயமானது. ஒரு மனிதன், மற்றொரு மனிதனை அடிமையாக வைத்திருப்பது அனுமதிக்கப்பட்டது. அவ்வாறு அடிமையாக வைத்திருக்க விரும்பவில்லையென்றால் அவர்மீது கட்டாயம் எதுவும் இல்லை. ஆனால் தீண்டாதவருக்கு வேறு எந்த வழியும் இல்லை. தீண்டாதவராகப் பிறந்துவிட்டால் தீண்டாதவருக்கு உள்ள எல்லாத் துன்பங்களையும் அவர் அனுபவித்தேயாக வேண்டும். அடிமை முறைச் சட்டம் அடிமையை விடுதலை செய்வதை அனுமதித்தது. ஒரு முறை அடிமையாகிவிட்டால் எப்போதுமே அடிமைதான் என்ற நிலை கிடையாது.

தீண்டாமையிலிருந்து தப்பிக்க வழியே கிடையாது. தீண்டாதவர் என்றால் எப்போதுமே தீண்டாதவர்தான். மற்றொரு வேறுபாடு என்னவென்றால், தீண்டாமை மறைமுகமான அடிமை முறையாகும்; எனவே அது மிக மோசமான அடிமை முறையாகும். ஒரு மனிதனின் சுதந்திரத்தைத் திறந்த முறையில் நேரடியாகப் பறித்துக்கொள்வது அதைவிட மேலானது. அடிமையான மனிதன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணர்ந்து கொள்கிறான். அவ்வாறு உணர்வதே சுதந்திரத்தைப் பெறுவதற்கான போராட்டத்தின் முதல் படியாகும். ஆனால், ஒரு மனிதனின் சுதந்திரம் மறைமுகமாகப் பறிக்கப்பட்டால் அவன் தன்னுடைய அடிமைத்தனத்தை உணராமலிருக்கிறான். தீண்டாமை மறைமுக வடிவிலான அடிமைத்தனமாகும். தீண்டாதவரிடம் ‘நீ சுதந்திரமானவன், நீ ஒரு குடிமகன், குடிமகனின் எல்லா உரிமைகளும் உனக்கு உண்டு’ என்று கூறிக்கொண்டு, அவர் இந்த இலட்சியம் எதையும் அடைய வாய்ப்புப் பெறமுடியாத வகையில் கயிற்றை இறுக்குவது கொடுமையான ஏமாற்று வேலையாகும். இது தீண்டாதோர் தங்களுடைய அடிமைத்தனத்தை உணராமலே அவர்களை அடிமையாக்குவதாகும். இது, தீண்டாமை என்றாலும் இது அடிமைத்தனமே. இது, மறைமுகமானது என்றாலும் உண்மையானது. இது, உணரப்படாமலே இருப்பதால், இது, நீடித்து நிற்கிறது. தீண்டாமை, அடிமை முறை ஆகிய இரண்டில் சந்தேகமில்லாமல் தீண்டாமைதான் மோசமானது.

அடிமை முறை, தீண்டாமை ஆகிய இரண்டுமே சுதந்திரமான சமூக அமைப்புகள் அல்ல. ஆனால், இந்த இரண்டுக்குமிடையே வேறுபாடு கூறவேண்டுமானால் – வேறுபாடு உள்ளது என்பதில் சந்தேகம் இல்லை – கல்வி, ஒழுக்கம், மகிழ்ச்சி, பண்பாடு, செல்வம் ஆகியவற்றைப் பெறுவது அடிமை முறையில் சாத்தியமா, தீண்டாமையில் சாத்தியமா என்று பார்க்கவேண்டும். அடிமை முறையில் கல்வி, ஒழுக்கம், மகிழ்ச்சி, பண்பாடு, செல்வம் ஆகியவற்றை அடைவதற்கு இடம் இருக்கிறது. தீண்டாமையில் இதற்கெல்லாம் இடமே இல்லை. அடிமை முறையும் சுதந்திரமில்லாத சமூக அமைப்புதான் என்றாலும், அதில் உள்ள அனுகூலங்களில் எதுவுமே தீண்டாமையில் இல்லை. அதே சமயம் சுதந்திரமான சமூக அமைப்பில் உள்ள பிரதிகூலங்கள் அனைத்தும் தீண்டாமையில் உள்ளன. அடிமை முறை போன்ற சுதந்திரமற்ற சமூக அமைப்பில், வர்த்தகம், கைத்தொழில், கலை ஆகியவற்றில் பயிற்சி பெறுவதற்கு அல்லது பேராசிரியர் ம்யூர்ஸ் கூறுவதுபோல ‘மேலான ஒரு பண்பாட்டில் அடி எடுத்து வைப்பதற்கு’ வாய்ப்பு இருக்கிறது. தீண்டாமையின் அழுத்தும் பாரமோ, தனிமனித வளர்ச்சிக்கு உள்ள தடையோ அடிமை முறையின் அம்சங்களாக இல்லை. எனவே, அடிமை முறையைவிடத் தீண்டாமை நல்லது என்று கூறுவது அவசரப்பட்ட கூற்றாகும்.
இந்தப் பயிற்சியும் பண்பாட்டின் அறிமுகம் பெறுதலும் அடிமை முறையின் பெரிய நன்மை என்பதில் சந்தேகமில்லை. அடிமைக்குப் பயிற்சி அளிப்பதற்கும் பண்பாட்டின் அறிமுகம் செய்துவைப்பதற்கும் எஜமானுக்குக் கணிசமான செலவு பிடித்தது. அடிமையாவதற்கு முன்பே கல்வியோ பயிற்சியோ பெற்ற அடிமைகள், இளம் அடிமைகளாயிருக்கும்போது வீட்டு வேலையில் அல்லது கைத்தொழிலில் பயிற்சி அளிப்பதேயாகும். பேரரசு உருவாவதற்கு முன் ஓரளவுக்கு இவ்வாறுதான் செய்யப்பட்டது. உதாரணமாக, மூத்த கேட்டோ இவ்வாறுதான் செய்தார். அடிமையின் உடைமையாளரும், ஏற்கெனவே உள்ள பணியாளர்களும் இந்தப் பயிற்சியை அளித்தார்கள்… உண்மையில், செல்வர்களின் வீடுகளில் இதற்கெனத் தனி ஆசிரியர்களே இருந்தார்கள். இந்தப் பயிற்சி, தொழில், வர்த்தகம், கலைகள், இலக்கியம் ஆகியவற்றில் அளிக்கப்பட்டது.

அடிமைக்கு இவ்வாறு உயர்வான உழைப்புகளிலும் பண்பாட்டிலும் பயிற்சி அளிப்பதற்கு உடைமையாளர் முயற்சி எடுத்தற்குக் காரணம் சந்தேகமில்லாமல் லாபநோக்கம் தான். பயிற்சி பெறாத அடிமையை விட, பயிற்சி பெற்ற அடிமைக்கு ஒரு வர்த்தகப் பொருள் என்ற முறையில், மதிப்பு அதிகம். அவனை விற்றால் அதிக விலை கிடைக்கும்; மற்றவர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டால், அவன் அதிக ஊதியம் ஈட்டி வருவான். எனவே உடைமையாளர் தனது அடிமைக்குப் பயிற்சி அளிப்பது அவருக்கு முதலீடாகும்.

அடிமை முறை போன்ற சுதந்திரமில்லாத சமூக அமைப்பில் அடிமையின் உயிரையும் உடம்பையும் பராமரிக்கும் பொருப்பு உடைமையாளரைச் சார்ந்தது. அடிமை தன்னுடைய உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றைத் தேடும் பொறுப்புகள் எல்லாவற்றிலுமிருந்து விடுதலை பெற்றான். இவையெல்லாவற்றையும் அளிக்கவேண்டியது உடைமையாளரின் பொறுப்பாயிற்று. அடிமை, தனக்கு ஆகும் செலவை விட அதிகமாகவே ஈட்டியதால் உடைமையாளருக்கு, இது சுமையாக இருக்கவில்லை. ஆனால், சுதந்திர மனிதர் ஒவ்வொருவரும் தமது உணவுக்கும் உறைவிடத்துக்கும் உத்தரவாதம் பெறுவது எப்போதும் சாத்தியமில்லை என்பதை ஊதியத்துக்கு உழைப்பவர்கள் தங்கள் அனுபவத்தில் அறிந்துள்ளனர், உழைக்கத் தயாராயிருப்பவர்கள் எல்லோருக்கும் வேலை எப்போதும் கிடைத்துவிடுவதில்லை. வேலை இல்லை என்றால் உணவு இல்லை என்ற விதியிலிருந்து உழைப்பாளர் தப்பிக்க முடியாது. வேலை இல்லை என்றால் உணர்வு இல்லை என்னும் விதி – அடிமைக்குப் பொருந்தாது. அவனுக்கு உணவு தேடித்தருவதும், வேலை தேடித்தருவதும் உடைமையாளரின் கடமை. உடைமையாளர் வேலை தேடித்தரத் தவறினால், அடிமை, தனக்கு உணவு பெறும் உரிமையை இழந்துவிடுவதில்லை. வர்த்தகத்தின் ஏற்ற இறக்கங்கள், வளர்ச்சிகள், தளர்ச்சிகள் ஆகியவற்றின் விளைவுகளை சுதந்திரமான ஊதியத் தொழிலாளர்கள் அனுபவித்தே தீரவேண்டும். இவையெல்லாம் அடிமையை பாதிப்பதில்லை. இவை அடிமையின் எஜமானரை பாதிக்கலாம்; ஆனால், அடிமை இவற்றிலிருந்து விடுதலை பெற்றிருக்கிறான். அவனுக்கு உணவு, அநேகமாக அதே உணவு, கிடைத்துவிடும். வர்த்தகம் வளர்ந்தாலும் தளர்ந்தாலும் அடிமைக்கு உணவு கிடைத்துவிடும்.

அடிமை முறை போன்ற சுதந்திரமற்ற சமூக அமைப்பில் எஜமான் தன்னுடைய அடிமையின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் மிகுந்த கவனம் செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறான். அடிமை, தன்னுடைய எஜமானின் உடைமையாவான். இந்தப் பிரதிகூலமான நிலையே அவனுக்குச் சுதந்திர மனிதனைவிட அனுகூலமாக அமைந்துவிடுகிறது. அடிமை தம்முடைய உடைமை என்பதாலும், எனவே மதிப்புள்ள பொருள் போன்றவன் என்பதாலும், உடைமையாளர் தமது சுயநலத்துக்காகவேனும் அடிமையின் ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் மிகுந்த கவனம் செலுத்தினார். ரோம் நகரில் அடிமைகள் ஒருபோதும் சதுப்பு நிலங்களிலோ மலேரியா வரக்கூடிய நிலத்திலோ வேலையில் அமர்த்தப்படவில்லை. இப்படிப்பட்ட நிலங்களில் சுதந்திர மனிதர்கள் தான் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். அடிமைகளை ஒருபோதும் சதுப்பு நிலத்தில் அல்லது மலேரியா வரக்கூடிய நிலத்தில் பயன்படுத்த வேண்டாம் என்ற ரோமானிய விவசாயிகளுக்குக் கேட்டோ என்பவர் அறிவுரை கூறுகிறார். இது விசித்திரமாகத் தோன்றுகிறது. ஆயினும், சற்று யோசித்துப் பார்த்தால் இது மிகவும் இயல்பானது என்று தெரியும். அடிமை, மதிப்பு மிக்க உடைமையாவான்; எனவே தன்னுடைய நலனை உணர்ந்திருக்கும் விவேகமுள்ள மனிதன், தனது மதிப்புமிக்க உடைமையை மலேரியாவின் சீர்கேடுகளுக்கு உட்படுத்த மாட்டான். சுதந்திர மனிதன் விஷயத்தில் இதேபோன்ற கவனம் செலுத்த வேண்டியதில்லை; ஏனென்றால், அவன் மதிப்புள்ள உடைமை அல்ல. உடைமையாளரின் இந்தக் கருத்து அடிமைக்குப் பெரிய அனுகூலத்தைத் தந்தது. யாருக்கும் அளிக்கப்படாத கவனிப்பு அடிமைக்கு அளிக்கப்பட்டது.

சுதந்திரமற்ற சமூக அமைப்பில் காணப்பட்ட இந்த மூன்று அனுகூலங்களில் ஒன்றுகூடத் தீண்டாமையில் இல்லை.
தீண்டாதவருக்கு நாகரிகத்தின் உயர்கலைகளில் பிரவேசிக்க அனுமதி இல்லை. பண்பாடான வாழ்க்கைக்கு எந்த வழியும் அவருக்குத் திறந்திருக்கவில்லை. அவர் குப்பை கூட்ட வேண்டும்; அதைத்தவிர வேறு எதுவும் செய்யக்கூடாது. தீண்டாதவரின் வாழ்க்கைக்கு எந்தப் பாதுகாப்பையும் தீண்டாமை உறுதி செய்யவில்லை. தீண்டாதவரின் உணவுக்கும் உடைக்கும் உறைவிடத்துக்கும் இந்துக்களில் எவரும் பொறுப்பானவர் அல்லர். தீண்டாதவரின் ஆரோக்கியம் யாருக்கும் அக்கறையுள்ள விஷயம் அல்ல. உண்மையில், ஒரு தீண்டாதவர் இறந்தால், வேண்டாதது ஒழிந்ததாகவே கருதப்பட்டது. ஓர் இந்துப் பழமொழி ‘தீண்டாதவன் செத்தான், தீட்டுப் பயம் ஒழிந்தது’ என்று கூறுகிறது.
மறு புறத்தில், சுதந்திரமான சமூக அமைப்பின் எல்லாப் பிரதிகூலங்களும் தீண்டாமையில் உள்ளன. சுதந்திரமான சமூக அமைப்பில் வாழ்க்கைப் போராட்டத்தில் வென்று உயிர் வாழ்வது அந்தந்த மனிதரின் பொறுப்பாகும். இந்தப் பொறுப்பு சுதந்திரமான சமூக அமைப்பின் மிகப் பெரிய பிரதிகூலங்களில் ஒன்றாகும். ஒரு தனி மனிதன் இந்தப் பொறுப்பை நிறைவேற்ற முடிகிறதா என்பது வாழ்க்கையில் நியாயமான ஆரம்பம், சம வாய்ப்பு, நியாயமாக நடத்தப்படுவது ஆகியவற்றைப் பொறுத்தது. தீண்டாதவர் சுதந்திரமான மனிதராக இருந்தாலும் அவருக்கு வாழ்க்கையில் நியாயமான ஆரம்பமோ சம வாய்ப்போ, நியாயமாக நடத்தப்படுவதோ கிடைப்பதில்லை. இந்தக் கோணத்தில் பார்க்கும்போது தீண்டாமை, அடிமை முறையை விட மோசமானது மட்டுமின்றி, அடிமை முறையுடன் ஒப்பிடும்போது உண்மையிலேயே கொடுமையானதுமாகும். அடிமை முறையில், அடிமைக்கு வேலை கிடைக்கச் செய்யும் பொறுப்பு எஜமானுக்கு இருக்கிறது. சுதந்திரமான தொழிலாளர்களைக் கொண்ட முறைமையில் வேலை பெறுவதற்குத் தொழிலாளர்கள், தொழிலாளர்களுடன் போட்டியிட வேண்டியுள்ளது. இந்தப் போட்டிப் போராட்டத்தில் தீண்டாதவர் நியாயமாக நடத்தப்படுவதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? சுருக்கமாகச் சொன்னால், சமூக இழிவு முத்திரை காரணமாக வாழ்க்கையின் துலைக்கோல் தமக்கெதிராகவே சாய்ந்திருக்கும் நிலையில் தீண்டாதவர் வேலை அளிக்கப்படுவதில் கடைசி இடத்தையும், வேலையிலிருந்து நீக்கப்படுவதில் முதல் இடத்தையும் பெறுகிறார். அடிமை முறையுடன் ஒப்பிடும்போது தீண்டாமை கொடுமையானது; ஏனென்றால், உயிர்வாழ்வதற்கு வேண்டிய பொருள் ஈட்டுவதற்கு எல்லா வழிகளையும் தீண்டாதவருக்கு முழுமையாகத், திறந்துவிடாமல் தம்மைப் பராமரித்துக் கொள்ளும் பொறுப்பைத் தீண்டாமை அவர் மீது சுமத்துகிறது.

மொத்தத்தில், அடிமைகளைப் போலன்றி, தீண்டாதோர் இந்துக்களின் நலன்களுக்குத் தேவையான விஷயங்களில் அவர்களின் உடைமையாகவும், தீண்டாதோர் இந்துக்களின் உடைமையாக இருந்தால் இந்துக்களுக்குப் பொறுப்பு ஏற்படும் விஷயங்களில் அவர்களால் சொந்தமில்லை என்று கைவிடப்பட்டவர்களாகவும் உள்ளனர். தீண்டாதோர் சுதந்திரமற்ற சமூக அமைப்பின் நன்மைகள் எதையும் பெறமுடியாமலும் சுதந்திரமான சமூக அமைப்பின் தீமைகள் எல்லாவற்றையும் சுமக்கவேண்டியும் உள்ள நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

ரோமானிய பேரரசில் அடிமைத்தனம், பக் 47-49 ↩
உரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், பக்கம் 101-102 ↩
மேலது, ப. 105. ↩
உரோமானியப் பேரரசில் அடிமைத்தனம், பக். 101-102 ↩

http://www.ambedkarcollections.com/2015/04/slaves_untouchables/

Saturday, May 23, 2015

விருத்த சேதனம் பண்ணும் விழாவிலும் கூத்தாடிகள்!ஆண்கள் தங்களின் பிறப்பு உறுப்பில் உள்ள நுனித் தோலை வெட்டி விடுவதற்கு விருத்த சேதனம் என்று சொல்கிறோம். இதனை இஸ்லாமியர்கள் அனைவரும் கண்டிப்பாக செய்வர். நபிகள் நாயகம் இதனை அனைவரும் செய்து கொள்ளுங்கள் என்று கட்டளையிட்டுள்ளனர். எப்படி ஆண்கள் தாடி வைப்பது ஒரு நபி வழியோ அது போல் சுன்னத் என்று அறியப்படும் இந்த விருத்த சேதனம் ஒரு நபி வழி. இதனை செய்து கொள்வதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் தாம்பத்ய வாழ்வும் சிறப்பாக இருக்கும் என்பது மருத்துவ அறிஞர்களின் ஒரு மித்த கருத்தாகும்.

இந்த ஒரு நிகழ்வை இன்றும் சில மார்க்கம் அறியாத இஸ்லாமியர் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இதே போன்ற நபி வழியான தாடி வைத்துக் கொள்வதற்கு டிஜிடல் போர்டு யாரும் வைப்பதில்லை. எல்லோரையும் அழைத்து விருந்து பரிமாறுவதில்லை. மாலைகள் அணிவித்து அழகு பார்பதில்லை. வசதியற்ற பெற்றோர் கடன்களை வாங்கியாவது விருத்த சேதன நிகழ்வை விமரிசையாக கொண்டாடும் கொடுமையை பார்க்கிறோம். மேலும் சிலர் கூத்தாடிகளை முக்கியத்துவப்படுத்திபோ ஸ்டர்களும் அடிக்கின்றனர். ஒரு சில வீடுகளில் சினிமா பாட்டுக் கச்சேரியும் நடக்கும்.

இதற்கு செலவிடும் தொகையை ஒரு ஏழை மாணவனின் படிப்பு செலவுக்கு தரக் கூடாதா? வீடில்லாமல் எத்தனையோ குடும்பங்கள் பிளாட்பாரங்களில் காலம் தள்ளுகின்றனரே! அவர்களுக்கு ஒரு குடிசை அமைத்துக் கொடுக்கக் கூடாதா?

வசதியுள்ளவர்கள் பணத்தை இது போன்று ஆடம்பர களியாட்டங்களில் செலவழித்தால் இறைவனின் சாபம் உண்டாகும் என்பதை ஏனோ இவர்கள் உணர்வதில்லை. மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் இதற்கும் சென்று ஃபாத்திஹா ஓதி விட்டு விருந்தும் சாப்பிட்டு வருபவர்களை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்றும் தெரியவில்லை.

ஒரு முறை சவுதியின் ரியாத் நகரில் 57 வயது மதிக்கத்தக்க ஒரு இந்து நண்பர் எங்களிடம்......

'இஸ்லாமிய கொள்கை எனக்கு பிடித்துள்ளது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளேன். ஆனால் இந்த விருத்த சேதனம் என்ற சுன்னத் செய்வதில் எனக்கு பயமாக உள்ளது. அதுதான் எனக்கு தடை' என்றார்.

'விருத்த சேதனம் என்பது தாடி வைப்பது போன்று நபி அவர்கள் வலியுறுத்திய ஒரு நடைமுறை. தாடி வைக்காமல் எத்தனையோ முஸ்லிம்கள் இல்லையா? எனவே நீங்கள் விரும்பா விட்டால் விருத்த சேதனம் பண்ணித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இஸ்லாத்தில் இல்லை. 60 வயதை நெருங்கி விட்ட உங்களுக்கு இனி விருத்த சேதனம் செய்தும் பயன் இல்லை. எனவே இஸ்லாத்தை ஏற்பதற்கு இது ஒரு தடை இல்லை' என்பதை விளக்கினோம்.

நாங்கள் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டு பிறகு பலரிடம் விசாரித்துத் தெரிந்து கொண்டு இஸ்லாத்தை அந்த சகோதரர் ஏற்றார். தற்போது தனது குடும்பத்தவரையும் இஸ்லாத்தை ஏற்க வைத்துள்ளார்.

எல்லா புகழும் இறைவனுக்கே!

குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? – திருமந்திரம்குருவானவர் எப்படி இருக்க வேண்டும்? –திருமந்திரம்

//சுவனப்பிரியன்!

இந்துக்களாகிய நாங்கள் எ்ங்கள் மதத்தை நவீனப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அகோரிகளைப்பற்றி எழுதும் நேரத்தில் தாயுமானவர் திருமந்திரம் பற்றி எழுதுங்களேன்! குப்பைகளைப் பற்றி எழுதுவானேன்.// - டாக்டர் அன்பு ராஜ்

டாக்டர் அன்பு ராஜின் விருப்பத்திற்கினங்க இன்று திருமந்த்ரம் என்ன சொல்கிறது என்று பார்போம்.

நித்தியானந்தா, பிரேமானந்தா, சாய்பாபா என்று வரிசையாக பல இந்து ஆன்மீக தலைவர்களை குருக்களை நமது காலங்களிலேயே பார்த்து வருகிறோம்.


குரு என்பவர் மட்டுமே இறை உபதேசம் பண்ண இயலும். குரு இறை நிலையை உணர்ந்தால் மட்டுமே தன்னுடைய சிஷ்யனுக்கு உண்மையை உபதேசிக்க இயலும். அதனால் தான் திருமூலர்:


குருட்டினை நீக்குங் குருவினைக் கொள்ளார்

குருட்டினை நீக்காக் குருவினைக் கொள்வார்

குருடுங் குருடுங் குருட்டாட்டம் ஆடிக்

குருடுங் குருடுங் குழிவிழுமாறே – 1680 , திருமந்திரம்


வேடதாரிகளை விட்டுவிடுங்கள் அவர்கள் குருட்டு வழியினர். குருடனுக்கு குருடன் வழி காட்டினால் இருவரும் வீழ்ந்து அழிவர்." என்கிறார் திருமூலர்..

சிஷ்யனும் ஏதும் அறியா குருடன். அவன் பின்பற்றும் குருவும் ஏதும் அறியா குருடன். இருவருமே கருத்துக் குருடர்கள். இந்த இரண்டு குருடுகளும் ஒன்றாகி ஒருவருக்கொருவர் வழி காட்டினால் முடிவில் தவறான பாதைக்கு சென்று வீழ்ந்து அழிவர் என்று இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.

கொள்ளினும் நல்ல குருவினைக் கொள்ளுக

உள்ள பொருளுடல் ஆவியுடன் ஈக

எள்ளத் தனையும் இடைவிடாதே நின்று

தெள்ளி யறியச் சிவபதந்தானே.1693 : -திருமந்திரம் 6ம் தந்திரம்

விளக்கம்:

குருவாக ஒருவனை அவசரப்பட்டுத் தேர்ந்தெடுக்கலாகாது. மிக நன்றாக யோசித்துத் தெளிந்த பின்னரே ஒருவனைக் குருவாகக் அடைதல் வேண்டும். அப்படிப் பெறப்படும் குருவானவன் நல்லவனாய், நாம் அறியாதவற்றை அறிந்தவனாய், நமக்கு அவற்றை எடுத்துச் சொல்பவனாய், நம்மை நன்னெறிப்படுத்துவனாய், குற்றமில்லாதவனாய், நமக்குப் பிறவிப் பயன் கொடுப்பவனாய் அமைதல் வேண்டும்.

திருமந்திரத்தின் இந்த இரண்டு பாடல்களும் நமக்கு குருவாக எப்படிப்பட்டவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று உணர்த்துகிறது. மேலே சொன்ன திரு மூலரின் பாடல் முகமது நபிக்குப் பொருந்தி வருவதை எண்ணி வியக்கிறோம். ஒரு இறைத்தூதர் எப்படி இருக்க வேண்டும். எப்படி வாழ வேண்டும். என்ன விஷேச சக்திகளை பெற்றிருக்க வேண்டும் என்று திரு மூலர் அழகாக இந்த பாடலில் வர்ணிக்கிறார். நமது தமிழ் மொழிக்கு வந்த இறைத் தூதரின் இலக்கணங்கள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்று தமிழில் இறங்கிய இறை வேதம் பட்டியலிட்டிருக்கலாம். அதையே திரு மூலர் தனது பாடலில் எடுத்தாண்டிருக்கிறார் என்று நான் எண்ணுகிறேன்.

-----------------------------------------------------------

முகமது நபி அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்பொழுது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம் 'இந்த ஆட்டை சமையுங்கள்' என்று கூறினார்கள். பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். முகமது நபி அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் முகமது நபி அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி 'என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு நபி அவர்கள் 'இறைவன் என்னை அடக்கு முறை செய்பவனாகவும் மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்.' என்று விடையளித்தார்.

-ஆதாரம் -அபுதாவுத் 3773, பைஹகீ 14430

பலரும் அமர்ந்து சாப்பிடும் ஒரு தட்டில் மேல் நிலையில் உள்ளவர்கள் ஒன்றாக சாப்பிடுவதை கவுரவக் குறைவாகவே கருதுவார்கள். மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கான பழக்கமாக இருந்தது. இதனால்தான் அந்த கிராமவாசி கூட அமர்ந்ததை குறை காண்கிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ முகமது நபி அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்க்க் கூடிய ஒரு மனிதனாக மட்டும் தான் தம்மை முன்னிறுத்துகிறார்கள். இப்படி ஒரு பண்பான ஆட்சியாளரை நாம் பார்த்திருக்கிறோமா?

ஒரு மனிதர் முதன் முதலாக முகமது நபி அவர்களைச் சந்திக்க வருகிறார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் உடலை வளைத்து பவ்யமாக குடி மக்கள் நிற்பதுதான் அன்றைய வழக்கம. முகமது நபியையும் அதுபோல் நினைத்துக் கொண்டு உடல் நடுங்கி பய பக்தியுடன் வந்தார். 'சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குறைஷிக் குலத்துப் பெண்ணுடைய மகன்தான் நான்.' என்று கூறி அவரை சகஜ நிலைககு கொண்டு வந்தார்கள்.

-நூல் இப்னுமாஜா 3303.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நமது தமிழ்நாட்டு முதல்வர் மேடையில் பேசும் போது மற்ற அமைச்சர்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்கிறோம். முதல்வரின் கால்களில் விழுவதையும் பார்க்கிறோம். அதுவும் இந்த இருபதாம் நூற்றாண்டில். ஆனால் முகமது நபியோ ஒரு மன்னர். அதிலும் மதத் தலைவர் தனது குடிமக்களிடம் எவ்வளவு அன்யோன்யமாக பழகியிருக்கிறார்கள் என்பதை இந்த சம்பவம் விளக்குகிறது.

தரையில் எதுவும் விரிக்காமல் அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.

-தப்ரானி 12494

அகழ் யுத்தத்தின் போது முகமது நபி அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். முகமது நபி அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.

-புகாரி 2837, 3034,4101


முகமது நபி அவர்கள் மதினா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.

-புகாரி 3906

இப்படி எந்த வேலையிலும் பின் வாங்காமல் மக்களோடு மக்களாக ஒன்றரக் கலந்திருந்ததுதான் முகமது நபி அவர்களின் வாழ்க்கையாக இருந்தது. எனவே இன்று வரை அவரது புகழ் மேலும் மேலும் எட்டுத் திக்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒரு இறைத்தூதர், ஒரு குரு எவ்வாறு தனது மக்களுக்கு இருக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாக முகமது நபி அவர்கள் திகழ்ந்து வருகிறார.

‪‎நரி‬ ‪‎குறவர்‬ ‪‎சமுதாயத்திற்க்கும்‬ சென்றடைகிறது சத்திய மார்க்கம்

‪‎

நரி‬ ‪‎குறவர்‬ ‪‎சமுதாயத்திற்க்கும்‬ சென்றடைகிறது சத்திய மார்க்கம்

‎TNTJ‬ ‪‎நாகை‬ #‎வடக்கு‬ மாவட்டம் சார்பாக ‪‎செம்பனார்‬கோவில் என்ற ஊரில் 22/05/2015 அன்று நரி குறவர்கள் வசித்து வரும் பகுதிக்கு சென்று அந்த மக்களை அழைத்து " ‎கடவுள் ‎என்றால்‬ யார்? ", " கடவுளுக்கான இலக்கணம் ‎என்ன‬? ", " அவனை ‎வணங்குவதனால்‬ என்ன பயன்? " & "மனிதன்‪ ‎தோன்றிய‬ வரலாறு" என்ற செய்திகளை அம்மக்களுக்கு விளக்கமாக கூறப்பட்டது.மேலும் இஸ்லாம் நமக்கு வழிகாட்டும் குடும்பவியல் பற்றி பேசும் பொழுது ஆங்காங்கே இருந்த பெண்கள் தங்கள் குழந்தைகளோடு ஆர்வமாக அருகில் வந்து நமது உரையை கேட்டனர்.
இறுதியாக இஸ்லாத்தை பற்றிய சந்தேகங்கள் எதுவாக இருந்தாலும் தாராளமாக நீங்கள் கேட்கலாம் என்று சொல்லப்பட்டது.அதற்கு அம்மக்கள் நீங்கள் கூறிய கடவுள் கொள்கை தெளிவாக புரிந்தது என்று கூறினார்கள்.

மேலும் எங்கள் மக்கள் அதிகம் வாழும் அரசூர் ஜே.ஜே.நகர் என்ற பகுதிக்கு வந்து இது போன்ற விளக்கத்தை தரும்படி நமது ஜமாஅத்தினர்க்கு அன்பான அழைப்பையும் விடுத்தனர்.இன்ஷா அல்லாஹ் கண்டிப்பாக வருகிறோம் என்று கூறி அவர்களிடமிருந்து விடைபெற்றனர்

இஸ்லாமிய மார்க்கத்தை யார் வேண்டுமானாலும் ஏற்றுக்கொள்ளலாம் என்பதற்கு இது ஒரு சான்று , ‪#‎தீண்டாமை‬என்ற மனோஇச்சையை தூக்கி எறிந்த ஒரே ‪#‎மார்க்கம்‬இஸ்லாம் மட்டுமே !!! , அல்லாஹூ அக்பர் , விரைவில் அல்லாஹ் இவர்களுக்கு நேர்வழி தருவானாக!!!

49:13. மனிதர்களே! உங்கள் அனைவரையும் நிச்சயமாக நாம் ஒரே ஆண், ஒரே பெண்ணிலிருந்துதான் படைத்தோம். பின்னர், ஒருவர் மற்றவரை அறிந்துகொள்ளும் பொருட்டு, உங்களைக் கிளை களாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆதலால், உங்களில் ஒருவர் மற்றவரைவிட மேலென்று பெருமை பாராட்டிக் கொள்வதற் கில்லை.) எனினும், உங்களில் எவர் இறையச்சம் உடையவராக இருக்கின்றாரோ, அவர்தான் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக மிக கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந் தவனும் நன்கு தெரிந்தவனாகவும் இருக்கின்றான்.

குறிப்பு:- இவ்வாறான தாவா பணியை அனைத்து கிளைகளும்.,அனைத்து இயக்கங்களும் செய்தால்.,நன்றாக அமையும்.

-Muhammad Siddiq Ibn Kalifullah

Friday, May 22, 2015

இஸ்லாம், கிருத்தவம், இந்து மூன்றுமே இந்த மண்ணுக்கு அந்நியம்தானே!திரு ஹானஸ்ட் மேன்!

//இந்துமதம் இன்று படுபாதாலத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பது என்பது உண்மையே. உங்கள் வருத்தம் கலப்பு ஏதுமற்ற உண்மையானது. அது உங்கள் உள்ளத்தின் அடி ஆழத்திலிருந்து வருகிறது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. இப்படி இந்து மதத்தின்மீது அளவுகடந்த பக்திகொண்ட நீர் அதை தடுத்து நிறுத்த உங்களின் செயல் எதுவும் வேண்டாம் atleast உங்களின் ஆக்கப்பூர்வ கருத்துக்களை இங்கே சொல்லலாமே! அதற்கு மாறாக ”””’அந்நிய””” மதத்தவர்களின் கொள்கைகளுக்கு ஜால்ரா போடுவதுதான் எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. அவர்கள் உங்களை பாராட்டுவதும் நீங்கள் அவர்களை ஆஹா ஓஹோ போற்றுவதும் கொஞ்சமும் சகிக்கவில்லை//

ஆர்எஸ்எஸின் போதனைகள் உங்களின் மனதில் எந்த அளவு அழுக்கை விதைத்திருக்கிறது என்பதை உங்கள் எழுத்தே காட்டிக் கொடுக்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' என்ற கணியன் பூங்குன்றனாரின் பரந்த எண்ணத்துக்கு எப்போது வரப் போகிறீர்கள். இந்துத்வாவின் குறுகிற மன ஓட்டத்தை எப்போது கைவிடப் போகிறீர்கள்?

அந்நிய மதம் என்று இஸ்லாம் கிருத்தவத்தை மட்டும் ஏன் சொல்ல வேண்டும். இந்து மதம் தமிழனுக்கு அந்நிய மதம்தானே! ஆரிய படையெடுப்புக்கு முன்பு இந்து மதமோ, சமஸ்கிருதமோ தமிழன் அறியாதவைகள்தானே! ராமன், சீதை வாழ்ந்த பெரும்பாலான பகுதிகள் இன்று தாலிபான்கள் கையில் அல்லவா உள்ளது? மொகலாயர் ஆட்சிக்கு முன்பு சேர, சோழ, பாண்டிய, பல்லவ நாடுகள் என்று தமிழகமே நான்கு நாடுகளாகவல்லவா பிரிந்து கிடந்தது? இஸ்லாமியருமு;(மொகலாயரும்), கிருத்தவரும் (ஆங்கிலேயர்) இல்லை என்றால் அகண்ட பாரத் ஏது? எனவே இந்து, கிருத்தவம், இஸ்லாம் என்ற இந்த மூன்று மதங்களும் இந்த நாட்டுக்கு அந்நியமே! மூன்றையும் ஒரே தரத்தில் வைத்தே பார்க்க வேண்டும்.

//அவர் இந்தியனாக இருப்பதில் நமக்கு ஒருவித ஆட்சபனையும் இல்லை. ஆனால் அவர் ”அந்நிய” மதமான இஸ்லாமியராக இருப்பதும் இந்துக்களை கிண்டலடிப்பதும் எனக்கு பிடிக்கவில்லை.//

இன்று இஸ்லாமியராக இருந்தாலும் ஒரு காலத்தில் எனது முன்னோர்களும் இந்துக்கள்தானே. தனது பூர்வீக மதம் முகவரி இழந்து பொய்க் கொண்டிருக்கிறதே என்ற ஆதங்கத்தில் வரும் வார்த்தைகளே அவை. எடுத்துச் சொல்லும் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சியுங்களேன்.

//தன்னை பெற்ற தாய் நோய்வாய் பட்டால் .அவளை குணபடுத்த முயற்சிக்கவேண்டுமே அன்றி அவளை ஒதுக்கிவிட்டு எதிர் வீட்டு (இன்னொருத்தனின்) அம்மாதான் எனக்கு அம்மா என்று கூறுவது சரியா (((அதாவது இந்து மதத்தில் தவறுகள் இருந்தால் அதை திருத்த முயல்வதற்கு பதிலாக ”அந்நிய” மதம்தான் சிறந்த மதம் அதுதான் இனி என் மதம் என்று கூறுவது போல) நான் கூறுவது தவறா என்று உங்களுக்கு free time கிடைக்கும்போது ஆற அமர சிந்தித்து பாருங்கள். நல்ல ஒரு விடை கிடைக்கும்.//

அதையே தான் நானும் சொல்கிறேன். தமிழனுக்கு ஆரிய மதமான இந்து மதம் பூர்வீக மதம் அல்ல. சந்தர்ப்ப வசத்தால் சில குழந்தைகள் மாற்றாந்தாய் அல்லது செவிலித்தாய் பராமரிப்பில் வளருவதில்லையா? அது போல்தான் ஆரிய படையெடுப்பால் இன்று தமிழனின் தொன்மையான வழிபாட்டு முறைகள் மறைக்கப்பட்டு ஆரிய வழிபாடுகள் முன் நிறுத்தப்பட்டன. கோவிலில் இருந்த தமிழ் வழிபாட்டு முறை நீக்கப்பட்டு சமஸ்கிரதம் வலிந்து உள்ளே புகுத்தப்பட்டது. ஆட்சியாளர்கள் ஆரிய மயமாக்கலுக்கு உறுதுணையாக இருந்ததால் இது இலகுவாக சாத்தியப்பட்டது. அது இன்று வரை தொடர்கிறது. சிதம்பரம் நடராஜர் கோவிலினுள் தமிழை கொண்டு போக ஆறுமுக சாமி இன்று வரை என்ன பாடுபடுகிறார் என்பதை நமது காலத்திலேயே பார்த்தோம்.

தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள் என்ன கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாலும் ஆள்வோர்களால் கண்டு கொள்ளப்படுவதில்லை. கர்நாடகாவில் 20 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது எந்த அதிர்வலைகளையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் காஷ்மீரில் ஒரு பண்டிட் கொடுமைபடுத்தப்பட்டால் இந்திய அரசியல்வாதிகளும், இந்திய பத்திரிக்கைகளும், ஆளும் வர்க்கமும் கொதித்தெழுகின்றன. அந்த குடும்பத்தையே டெல்லிக்கு அழைத்து வந்து சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது. அவர்களின் குழந்தைக்கு படிப்பு முதலான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது. காஷ்மீரில் இருந்ததைக் காட்டிலும் பல மடங்கு வசதிகளோடு தங்க வைக்கப்படுகின்றனர். ஆட்சியில் இருப்பது காங்கிரஸ் ஆனாலும், பிஜேபி ஆனாலும், கம்யூனிஸ்டுகள் ஆனாலும் இதுதான் நிலை. ஏனெனில் எல்லா கட்சிகளிலுமே அந்த கட்சிகளை ஆட்டுவிக்கும் அதிகார மையத்தில் பார்பனர்களே இருப்பர்.

தனக்கு பிறக்காத ஒரு குழந்தையை ஒரு மாற்றாந்தாய் எப்படி நடத்துகிறாளோ அது போல்தான் இந்து மதத்தில் தமிழர்களும், தமிழ் மொழியும் நடத்தப்படுகிறது. தமிழையும், தமிழர்களையும் அவனது சொந்த தாயிடத்தில் ஒப்படைத்து விடுங்கள். பிரச்னை தீர்ந்து விடும். திருக்குறள், திரு மந்த்ரம், திருவாசம், போன்ற தமிழ் நூல்கள் இழந்த பெருமையை மீண்டும் பெறட்டும். வர்ணாசிரமத்தை போதிக்கும் ராமாயணமும், மஹா பாரதமும், அதற்கு விளக்கவுரையாக அமைந்த மனு தர்மமும் அவர்களின் சொந்த நாட்டுக்கே செல்லட்டும்.

சாதியை ஒழிக்கா விட்டால் நாடு சீரழிந்து விடும்! - நரேந்திர மோடிசாதியை ஒழிக்கா விட்டால் நாடு சீரழிந்து விடும்! - நரேந்திர மோடி

பிஹாரைச் சேர்ந்த ‘தேசிய கவி’ என்று அழைக்கப்படும் மறைந்த ராம்தாரி சிங் தின்கர் என்ற கவிஞரின் படைப்புகளைக் கொண்டாடும் 50-ம் ஆண்டு விழாவைத் தொடங்கி வைத்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி சாதிப்பிரிவினையைக் கடக்க வேண்டும் என்று பிஹார் மக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “பிஹார் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உத்தரவாத அளிக்கிறேன். சாதி அரசியல் எனும் பிரிவினைகளைத் தாண்டி மக்கள் எழுச்சியுற வேண்டும் இல்லையெனில் பொதுவாழ்க்கை சீரழிந்து விடும்.

இந்தியாவின் மேற்குப் பகுதி செல்வச் செழிப்புடன் இருக்கலாம் ஆனால் கிழக்குப் பகுதியின் ஞானமும் ஒன்றிணையாவிட்டால் இந்தியா அதன் முழு சக்தியுடன் திரண்டு செயல்பட முடியாது. தெய்வங்களில் லஷ்மியும், சரஸ்வதியும் இணைந்து விட்டால், அதாவது செல்வமும், கல்வியும் ஞானமும் இணையும் போது இந்தியா எவ்வளவு வேகமாக முன்னேறுகிறது என்பதை உலகம் பார்க்கத்தான் போகிறது” என்றார்.

கவிஞர் ராம்தாரி சிங் 1961-ம் ஆண்டு எழுதிய கடிதம் ஒன்றை மேற்கோள் காட்டி பேசிய மோடி, “ஓரிரு சாதிகளின் உதவியுடன் ஒருவரும் ஆட்சி புரியமுடியாது. அனைவரின் ஆதரவும் தேவை, சாதித் தளைகளிலிருந்து விடுபடாவிட்டால் பிஹாரின் பொதுவாழ்க்கை சீரழிந்து விடும்.

ராம்தாரி சிங் தின்கரின் படைப்புகள் நாட்டின் இளைஞர்களுக்கும் ஜெயபிரகாஷ் நாராயணனின் லட்சியங்களுக்கும் பாலமாக உள்ளது.

அவருள்ளாக தீக்கொழுந்து இருந்தது, ஆனால் அது எதையும் எரிப்பதற்காக அல்ல, மாறாக வரும் தலைமுறைகள் வெளிச்சம் பெறுவதற்காக” என்றார் நரேந்திர மோடி.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
22-05-2015

நாட்டில் மதக் கலவரத்தை தூண்டி அதன் மூலம் இந்து ஓட்டு வங்கியை ஒருமுகப்படுத்தி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி இதனை சொல்லக் கூடாது.

-லல்லு பிரசாத் யாதவ், ஷரத் யாதவ்

சரியான வார்த்தையை இரு தலைவர்களும் சொல்லியுள்ளனர். எதிர்பாராத விதமாக நடந்த ரயில் விபத்தை சதி என்று பொய்யுரைத்து அதன் மூலம் அந்த பிணங்களை ஊர் முழுக்க இழுத்துச் சென்று கலவரத்தை ஊக்குவித்ததே நரேந்திர மோடியும், அமீத்ஷாவுமோ. இன்று ஆட்சியில் அமர்ந்து விட்டோம் என்பதால் ஏதோ நாட்டு நலனில் அக்கறை வந்து விட்டதாக பிஜேபியினர் நம்பலாம். ஆனால் பொது மக்களின் கருத்தோ வேறு விதமாக உள்ளது


யூதா்கள் என்ன பாவம் செய்தாா்கள் - செ. சுகுமார்!

திரு செ. சுகுமார்!

//யுதா்கள் என்ன பாவம் செய்தாா்கள் அவர்களுக்கு முகம்மது மதத்தாா் 1700 ஆண்டுகளாக மாறு அநியாயம் செய்கின்றாா்களே!அதுவும் இறைதூதா் என்று சொல்லத்தக்கவா் சமூக நீதியை போதித்தவா் அன்புமதத்தை போதித்தவா் என்ற பெருமையை யஉடையவராக சொல்லப்படும் முகம்மது இப்படி போதனை செய்தால் அவரது தகுதி என்ன ?//

நபிகள் நாயகம் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள். வணக்கம் என்ற பெயரில் யூதர்கள் செய்வதற்கு மாறு செய்ய இஸ்லாமியருக்கு கட்டளையிட்டது உண்மைதான். அதற்கு காரணம் இருக்கிறது.

1. யூதர்கள் இறைத் தூதர்களை கொன்றனர்.

2. உலகிலேயே தாங்கள் தான் அறிவிற் சிறந்தவர்கள் என்று மமதை கொண்டிருந்தனர்.

3. வேத வசனங்களை தெரிந்து கொண்டே யூத குருமார்கள் வேதங்களிலிருந்து அழித்தனர்.

4. வேதங்களில் தங்களுக்கு சாதகமான செய்திகளை எடுத்துக் கொண்டு மற்றதை மறைத்தனர்.

6. தீண்டாமையை மிக அதிகமாக கடைபிடித்தனர்

7. நபிகள் நாயகத்திடம் வந்து 'முஹம்மதே! நீர் சொல்வதெல்லாம் சரிதான். ஒத்துக் கொள்கிறோம். ஆனால் கீழ் சாதிக்காரர்களை உயர் சாதியில் பிறந்த நீ ஒன்றாக அழைத்து உபதேசம் எல்லாம் செய்கிறாய். அதை நாங்கள் ஒத்தக் கொள்ள முடியாது. எங்களுக்கு ஒரு நாள் அவர்களுக்கு ஒரு நாள் என்று போதனை செய். அவர்களோடு எங்களை ஒன்றாக உட்கார வைக்காதே' என்று பேரம் பேசினர். நபிகள் நாயகம் அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவும் நினைத்தனர். இஸ்லாத்தை ஏற்றவுடன் அவர்களின் திண்டாமையை ஒழித்து விடலாம் என்பது நபிகளின் எண்ணம். ஆனால் இதனை கண்டித்து ஒரு வசனத்தையே இறைவன் குர்ஆனில் இறக்குகிறான். முகமது நபியையே கண்டித்து 'அபசா' என்ற அத்தியாயாமே இறங்குகிறது.

ஆரம்ப காலங்களிலிருந்து ஏகத்துவத்துக்கு தடையாக இருந்ததும் யூதர்கள். எனவே அவர்களின் சாயல் கூட இஸ்லாமியர் மேல் படக் கூடாது. அப்படி பட்டால் அதன் மூலம் இஸ்லாமிய சட்டங்களிலும் குளறுபடிகள் வந்து விடும். வேத வசனங்கள் திரித்து கூறப்படலாம் என்ற எண்ணத்தினாலேயே யூதர்களை நபிகள் நாயகம் தூரமாக வைத்தனர். அப்படி தூரமாக்கியதால்தான் குர்ஆன் இடைச் செறுகல் இல்லாமல் தப்பித்தது.

அதே சமயம் ஒட்டு மொத்த யூதர்களையும் நபிகள் நாயகம் வெறுக்க வில்லை. ஒரு யூதரிடம் தனது கவச ஆடையை அடமானமாக வைத்து கடன் பெற்றிருந்தனர். பணிவிடை செய்ய ஒரு யூத சிறுவன் நபிகள் நாயகத்திடம் இருந்து வந்தான். யூதர்களிடம் அன்றைய முஸ்லிம்கள் கொடுக்கல் வாங்கலும் வைத்திருந்தனர். ஒரு யூத பெண்ணையே நபிகள் நாயகம் இஸ்லாத்தில் இணைத்து திருமணம் முடித்திருந்தனர்.

எனவே யூதர்களை வெறுக்கச் சொல்லவில்லை: இறைவனுக்கு மாறு செய்வதையே தொழிலாகக் கொண்ட அவர்களின் வணக்க வழிமுறைகளுக்கு மாறு செய்யவே கட்டளையிட்டனர்.

Thursday, May 21, 2015

தன்பாலினத் திருமணத்தை அறிவித்த தாய்! எங்கே போகிறது இந்தியா?எந்த ஒரு தாயும் தனது மகனுக்கு திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்று விரும்புவது வழக்கமானதுதான். ஆனால், மும்பையைச் சேர்ந்த ஒரு தாய், தனது மகனுக்கு பொருத்தமான மணமகன் வேண்டும் என்று விளம் பரம் செய்துள்ளார். ஆம் அவரது மகன் தன்பாலின உறவாளர் என்பதுதான் அதற்குக் காரணம்.

மும்பையைச் சேர்ந்த பத்மா அய்யரின் (58) மகன் ஹரீஷ் அய்யர் (36). தன்பாலின உறவாளரான இவர், மும்பையின் தன்பாலின உறவாளர், திருநங்கைகள் (எல்ஜிபிடி) வட்டாரத்தில் மிகவும் பரிச்சயமானவர். ‘யுனைடெட் வே ஆப் மும்பை’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் இயக்குநராக உள்ளார். தன்பாலின உறவாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் இவர் அடிக்கடி செய்திகளில் வருவார்.

இந்நிலையில், பத்மா அய்யர் நேற்று முன்தினம் ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். அதில், “தன்னார் வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் எனது மகன் ஹரீஷ் அய்யருக்கு 25 முதல் 40 வயதுள்ள, நல்ல வருமானம் ஈட்டக்கூடிய, விலங்கு மீது அன்பு செலுத்தும், சைவ உணவுப் பழக்கம் கொண்ட மணமகன் தேவை. ஜாதி தடையில்லை (அய்யருக்கு முன்னுரிமை)” என கூறப்பட்டுள்ளது.

இதில் உள்ள பெரும்பாலான அம்சங்கள் தினமும் வெளியாகும் பல்லாயிரக்கணக்கான திருமண விளம்பரங்களைப் போலவே உள்ளன. ஆனால், தன்பாலின உறவாளர் மணமகனுக்கு அதே இன மணமகன் தேவை என்று அவரது தாயே விளம்பரம் செய்திருப்பதுதான் சிறப்பு.

இந்தியாவில் இதுபோன்ற விளம்பரம் வெளியாகி இருப்பது இதுவே முதன்முறை என்று கூறப்படுகிறது. இந்த விளம்பரத்தைப் பாராட்டியும் குற்றம்சாட்டியும் சமூக இணையதளங்களில் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
21-05-2015

தன் மகன் பிறவிக் குறைபாட்டுடன் பிறந்து விட்டானே என்று வருந்தி .... அவனுக்குரிய சிகிச்சை செய்து குணப்படுத்தாமல் அவனுக்கு ஒரு ஆண் மகனை பெற்ற தாயே தேர்ந்தெடுக்கும் கொடுமையை என்னவென்பது?. அதிலும் கூட இந்த அம்மா சாதியை விடாமல் 'அய்யர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்' என்று அறிவிக்கிறது. இதிலுமா அந்த பாழாய்ப் போன சாதியை பிடித்து தொங்க வேண்டும். நமது தமிழகத்தில் கூத்தாண்டவர் கோவில் என்று கூறி உலகத்திலிருந்து அனைத்து அரவாணிகளையும் விழுப்புரத்துக்கு அழைத்து வந்து கலாசார சீர்கேட்டையும் ஊக்குவிக்கின்றனர்.

இதற்கு மேலும் இது பற்றி எழுதினால் என் மதத்தில் மூக்கை நுழைக்காதே என்று சென்னி மலையும் ராம் நிவாஸூம் சண்டைக்கு வருவார்கள். எனவே இதுபற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது என்று இனி பார்போம்.
-----------------------------------------------

"மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான் எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்" (குர்ஆன் - 4:1)

இதிலிருந்து ஆண் பெண் என்ற இரண்டு பாலினம் தான் இறைவன் படைப்பில் உள்ளது. மூன்றாம் பாலினம் அதாவது 'அரவாணிகள்' என்ற படைப்பே கிடையாது என்று விளங்குகிறோம். நெருங்கிய உறவினர்களிடையே திருமணம் அதிகம் நடைபெறும் போது இது போன்ற குரோமசோம்களின் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்கின்றன. நெருங்கிய உறவினர்களை திருமணம் செய்து கொள்ளாதீர்கள் என்று குர்ஆனும் தடை செய்கிறது. சிறு வயதிலேயே இதனை கண்காணித்து அவர்களை மருத்துவ மனைகளில் சேர்ப்பித்து விட வேண்டும். வயது முதிர்ச்சி அடைந்து விட்டால் பிறகு குணப்படுத்துதல் சிரமமாகி விடும்.

நபி(ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும் ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள். மேலும், அவர்க(அரவாணிகளை)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள் என்றும் சொன்னார்கள். அவ்வாறே நபியவர்கள் 'இன்னாரை' வெறியேற்றினார்கள்; உமர்(ரலி) அவர்களும் 'இன்னாரை' வெளியேற்றினார்கள். (புஹாரி - 6834)

இதிலிருந்து நமக்கு தெரிய வருவது பெண்களை போல் நளினமாக நடந்து குழைந்து பேசினாலும் அவர்கள் ஆண்களே என்று விளங்குகிறோம். சிறு வயதில் பெண் குழந்தைகளுக்கு ஆண் உடைகளையும் ஆண் குழந்தைகளுக்கு பெண் உடைகளையும் அடிக்கடி போட்டு மனதளவில் பாலின மாற்றம் நடக்க பெற்றோரே காரணமாகி விடுகிறோம். ஆண்களை ஆண்களாகவும் பெண்களை பெண்களாகவும் வளர்த்தால் குறைபாடுடைய பிள்ளைகளை ஓரளவு சரி செய்து விடலாம்.

மனித உடம்பில் உள்ள ஒவ்வொரு கோடானகோடி செல்லிலும் 46 குரோமோசோம்கள் உள்ளன. இந்த 46 குரோமோசோம்களும் இரண்டிரண்டாக மொத்தம் 23 ஜோடிகளாக காணப்படும். இவற்றில் 22 ஜோடிகள், பால் சம்பந்தப்பாடாத உடலின் மற்ற அனைத்துப் பண்புகளையும் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துபவை. கடைசி 23-வது ஜோடி குரோமோசோம்கள் மட்டும் பாலினம் (Sex) சம்பந்தப்பட்டவை. இதில் ஏற்படும் குளறுபடிகளே ஒருவனின் செயல்களில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இவர்கள் 'பெண்பண்புகள் அதிகம் கொண்ட பெண்கள்' (47XXX), அல்லது 'ஆண்பண்புகள் அதிகம் கொண்ட ஆண்கள்' (47XYY) அல்லது 'பெண்பண்புகள் கொண்ட ஆண்கள்' (47XXY) என வித்தியாசமானவர்களாக இருப்பர்.

சவுதி அரேபியாவில் இது போன்று பாலின மாறுபாட்டுடையவர்களை கண்டு பிடித்து அரசு செலவில் அவர்களை சரி செய்கின்றனர். மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவ பல்கலைக்கழக மருத்துவர் யாஸிர் ஜமால் கூறுகிறார் 'நெருங்கிய உறவினர்களிடையே திருமண பந்தம் அமைத்துக் கொள்பவர்களின் குடும்பத்தில் இது போன்ற குரோமசோம் குறைபாடுடைய குழந்தைகள் பிறக்கின்றன. சிறு வயதிலேயே அவர்களின் நடத்தையில் மாற்றங்கள் இருந்தால் உடன் எங்களிடம் கொண்டு வந்து விடுங்கள். கவுன்சிலிங் மூலமாக பலரை சரிபடுத்தி விடுகின்றோம். ஹார்மோன்கள் செலுத்தியும் சிலரை குணப்படுத்தியுள்ளோம். ஆண்களை பெண்களாகவோ பெண்களை ஆண்களாக மாற்றுவதையோ நாங்கள் செய்வதில்லை. அதனை இஸ்லாமும் அனுமதிப்பதில்லை. சவுதி அரசாங்கமும் அனுமதிப்பதில்லை. இது வரை எங்கள் மருத்துவ குழு 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்து குறைபாடுடையவர்களை முழு ஆண்களாகவும், முழு பெண்களாகவும் மாற்றி அமைத்துள்ளோம்' என்கிறார். கடந்த 25 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளதாக சவுதி கெஜட் தெரிவிக்கிறது. தனியாருக்கு இதற்கான செலவு 10000 ரியாலில் இருந்து 50000 ஆயிரம் ரியால் வரை ஆகும. வசதியுள்ள பெற்றோர் குழந்தைகளை ஜெத்தா அழைத்து சென்று அவர்களை முழு ஆண்களாகவோ பெண்களாகவோ மாற்ற முயற்சி எடுப்பார்களாக!

இவ்வாறு மக்களின் நலனில் அக்கறை எடுக்காத நமது அரசு மக்கள் வரிப் பணத்தில் அரவாணிகள் நல வாரியம் அமைத்து ஓரினச் சேர்க்கையாளர்களை அரசே ஊக்குவிப்பதை நிறுத்த வேண்டும். அந்த அரவாணிகளை சவுதி அரேபியாவுக்கு அரசு செலவில் அனுப்பி குறைபாடுடையவர்களை முழு ஆண்களாகவும், முழு பெண்களாகவும் மாற்ற நமது அரசு முயற்சிக்க வேண்டும்.

கடந்த 25 வருடங்களாக சவுதி அரேபியாவில் இருந்து வருகிறேன். மிக அரிதாகத்தான் அரவாணிகளை நான் பார்த்துள்ளேன். அதற்கு காரணம் சவுதி அரசு எடுத்து வரும் கடுமையான நடவடிக்கையே. ஓரினச் சேர்க்கையை தடை செய்தும் அதில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கவும் செய்கிறது சவுதி அரசு. ஆனால் நமது அரசோ அவர்களுக்கு சகல வசதிகளையும் செய்து கொடுத்து பலரையும் வழி கெடுக்கிறது.

சென்ற ஆண்டு குடும்பத்தோடு டெல்லி, ஆக்ரா சுற்றுலா சென்றிருந்தேன். அப்போது ஆந்திராவை ரயில் நெருங்கியவுடன் 10க்கு மேற்பட்ட அரவாணிகள் ரயிலில் ஏறினர். எல்லோரிடமும் பணம் வசூலித்தனர். பணம் தராதவர்களை அறுவறுக்கத்தக்க கெட்ட வார்த்தைகளில் திட்ட ஆரம்பித்தனர். அவமானத்தால் சிலர் வேண்டா வெறுப்பாக பணத்தை கொடுத்தனர். இது ஒரு வகையில் பகல் கொள்ளை. அங்குள்ள ஆண்கள் சிலர் ரயிலின் மறைவில் அந்த அரவாணிகளிடம் கூச்சமில்லாமல் அத்து மீறி நடந்து கொண்டனர். சமூகம் இதனையும் அனுமதிக்கிறது. ஓரினச் சேர்க்கையை வெட்கமில்லாமல் செய்தும் சமூகத்தில் உயிர்க் கொல்லி நோய்களை பரப்புபவர்களுமான இந்த அரவாணிகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும். அரசும் சமூகமும் இவர்களை கண்டித்தால் பலர் திருந்த வாய்ப்புண்டு. அரசும் சமூகமும் இவர்களை அனுமதித்தால் இந்த எண்ணிக்கை மேலும் பெருகவே வாய்ப்புண்டு. பலரது குடும்பத்தை சீரழிக்கும் இந்த அரவாணிகளை மன நல காப்பகத்தில் சேர்ப்பித்து அரசு செலவில் சிகிச்சைக்காக சவுதி அரேபியா அனுப்ப அரசு முயற்சிக்குமா?

தகவல் உதவி
சவுதி கெஜட்
அரப் நியூஸ்
பிபிசி