Followers

Thursday, April 13, 2017

ஜாகிர் நாயக்கிற்கு பிடி வாரண்டாம்!

ஜாகிர் நாயக்கிற்கு பிடி வாரண்டாம்!
ஜாகிர் நாயக்கிடம் பண மோசடி குறித்து விசாரணை நடத்த வேண்டும் அவருக்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்க வேண்டும் என மும்பையில் உள்ள சிறப்பு கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர். இதனை ஏற்றுக்கொண்டு ஜாகிர் நாயக்கிற்கு எதிராக ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரன்ட் பிறப்பித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தினமலர்
13-04-2017
3000 பேர் குஜராத்தில் இஸ்லாமியர் கொல்லப்பட காரணமாயிருந்தவர் பிரதமராகவும், முஸ்லிம் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்று சொன்னவர் முதல்வராகவும் வீற்றிருக்கும் ஒரு நாட்டில் வேறு என்னமாதிரியான தீர்ப்பை எதிர்பார்க்க முடியும்?

Wednesday, April 12, 2017

மாட்டிறைச்சி சில தகவல்கள்.....

மாட்டிறைச்சி சில தகவல்கள்.....

அமெரிக்காவில் கர்ப்பிணிப் பெண்கள் நான்காம் மாதத்திலிருந்து மாட்டுக்கறி உணவை உண்ண மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்படுகிறார்கள். காசநோய் குணமாக மாட்டு ஈரலை வாரத்திற்கு இரண்டுமுறை உணவாகத் தரச்சொல்லி மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கோரோசனை என்ற பொருளை மாட்டிலிருந்து எடுத்து மருந்தாகப் பயன்படுத்துவது தலித்துகள் தங்கள் உணவுப் பழக்கத்திலிருந்து கண்டுபிடித்த நுட்பமாகும்’. (கோ. ரகுபதி, புதுவிசை, ஏப்-ஜூன், 2008: 12). குழந்தைகள், கர்ப்பிணிகள், நோயாளிகள், வயோதிகர்கள் என அனைத்துத் தரப்பினரும் தினத்தோறும் எடுத்துக்கொள்ளும் கால்சிய மாத்திரைகள் மாட்டு எலும்பிலிருந்து செய்யப்படுகின்றன என்பது இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. அதிகமான இரும்பு மற்றும் துத்தநாக (Iron&Zinc) சக்தியும், ரத்தத்தின் சிவப்பணுக்களை விருத்தி செய்து நரம்பு மண்டலங்களைப் பாதுகாக்கும் வைட்டமின் 12’ சக்தியும் மாட்டிறைச்சியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ‘‘இறைச்சி உணவுதான் குரங்கின் மூளை மனித மூளையாக வளர்ச்சி பெறுவதற்குத் தேவையான வேதியியல் அடித்தளத்தை உடலுக்கு அளித்தது’’ என்கிறார் எங்கெல்ஸ். (வினவு, 25. 06. 2015).

ஜமைக்காவைச் சேர்ந்த ஒட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் மிகவும் ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்தவர். அவரது பயிற்சியாளர் தினமும் இரண்டு வேளை மாட்டிறைச்சி உண்ணுமாறு அறிவுறுத்தியதால்தான் ஒலிம்பிக்கில் ஒன்பது தங்கப்பதக்கங்களை வெல்ல முடிந்தது. (தினகரன், தில்லி பதிப்பு, 30.08.2016).

நோபல் பரிசு பெற்றவர்களில் பெரும்பான்மையோரும், தகவல் தொழில் நுட்பத்தில் உலகை உலுக்கிய 'மைக்ரோசாஃப்ட்’,'ஆப்பிள்நிறுவன முதலாளிகளும் மாட்டிறைச்சி உண்ணும் அசைவப் பிரியர்கள்தான். சாக்ரடீஸ், அரிஸ்டாட்டில், பிளேட்டோ, நியூட்டன், மார்க்ஸ், அம்பேத்கர், ஸ்டாலின், லெனின், சேகுவேரா, மைக்கேல் ஜாக்சன் முதலான மகத்தான மனிதர்கள் மாட்டிறைச்சி உண்ணும் பழக்கமுடையவர்கள்தான். மாட்டிறைச்சி மனித ஆற்றலின் அறிவின் ரகசியமாகக் கருதப்படுகிறது”. (ஹோராட்டா, அக்டோபர், 2014).

 மாட்டிறைச்சி மேலைநாட்டு மக்களின் ஆரோக்கியமும், மருந்தும் ஆகும். மாட்டின் தோல்பொருட்கள் பன்முகப் பயன்பாடு கொண்டதாகவும், பொருளாதார ரீதியில் பெரும் வருவாய் ஈட்டும் பொருளாகவும் இருக்கிறது.

இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் எப்போதுமே அசைவப் பிரியர்கள் தான். ஆனால் இப்போது சுமார் 90 சதவீத இந்துக்களும் அசைவத்திற்குக் குறிப்பாகக் கோழிக்கறிக்கு அடிமையாகியுள்ளனர். ஹைதராபாத் நகரில் தினமும் 2500 மாடுகள் இறைச்சிக்காகக் கொல்லப்படுவதாக அந்நகர நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்”. (ஆர்.எஸ். நாராயணன், தினமணி, தில்லிப் பதிப்பு. 17.09.2015). ஆண்டுதோறும் இரண்டு கோடியே பதினேழு லட்சம் பசுக்கள் இறைச்சிக்காகக் கொல்லப்படுகின்றன என்று அரசின் புள்ளி விபரம் குறிப்பிடுகின்றது. மாட்டுக்கறி வியாபாரிகளில் 95 சதவீதம் பேர் இந்துக்களாக இருக்கின்றனர் என்று தில்லி உயர்நீதி மன்ற முன்னாள் தலமை நீதிபதி திரு, ராஜேந்தர் சச்சர் குறிப்பிட்டுள்ளார். (TimesofIndia,DelhiEdition: 21.11.2015). 


மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா உலகிலேயே முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு 13,14,158 மெட்ரிக் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.


Tuesday, April 11, 2017

ஓட்டிங் மெஷினில் தாராளமாக தில்லு முல்லுகள் செய்யலாம்!

ஓட்டிங் மெஷினில் தாராளமாக தில்லு முல்லுகள் செய்யலாம்!

நேற்று செந்தில் அவர்களின் நேர்காணலை புதிய தலைமுறையில் பார்க்க நேர்ந்தது. அதில் கிடைத்த சில தகவல்களை வரிசையாக பார்க்கலாம்.

1.அமெரிக்கவில் உள்ள மிக்ஷிகன் பல்கலைக் கழகம் இந்தியாவில் பயன்படுத்தப் படும் ஓட்டிங் மெஷின் நம்பகத் தன்மை அற்றது என்று ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளது.

2.பாஜக தலைவர் அத்வானி 10 ஆண்டுகளுக்கு முன்பு 'ஓட்டிங் மெஷினில் பல தில்லு முல்லுகள் செய்யலாம்' என்று ஆதாரங்களோடு புத்தகமே வெளியிட்டுள்ளார்.

3. எம்1, எம்2, எம்3 என்று தயாரிக்கப்படும் இந்த ஓட்டிங் மெஷினை தயாரிப்பவர்கள் மைக்ரோ சிப்ஸை காப்பி பண்ணி குறிப்பிட்ட கட்சி வெற்றி பெற ஓத்துழைக்க முடியும்.

4. ஆந்திராவில் ஒரு தொகுதியில் ஒரு வாக்குச் சாவடியில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு 300க்கு மேல் ஓட்டு விழுந்தது. தெலுகு தேசம் கட்சிக்கு 3 ஓட்டு பதிவானது. சந்தேகமடைந்து அந்த கிராமத்து மக்களை நேரிடையாக சென்று விசாரித்ததில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எவருமே ஓட்டளிக்கவில்லை என்று கூறினர். அனைவருமே தெலுங்கு தேசத்துக்கே வாக்களித்துள்ளனர். இதுவும் நிரூபிக்கப்பட்டது.

5. சமீபத்தில் உபியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒரு சுயேட்சை வேட்பாளர் போட்டியிட்டுள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் 100க்கு மேல் ஓட்டளித்துள்ளனர். ஆனால் இவருக்கு ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை. எனது ஓட்டும் மாயமாகியுள்ளது என்று புலம்புகிறார்.

6. கணிணி வளர்ச்சியடைந்த அமெரிக்கா போன்ற நாடுகள் ஓட்டிங் மெஷினின் விபரீதத்தை உணர்ந்து அதனை ஓரங்கட்டி விட்டன.

7. 2019ல் நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக 2000 கோடி செலவில் புதிதாக ஓட்டிங் மெஷின் தயாரிக்கப்படுகிறதாம். மோடிக்கு ஆதரவாக இதுவும் மாற்றப்படலாம் என்பதால் 16 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் வாக்கு சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளன.


நீதித் துறையையே மோடியும் அமீத்ஷாவும் வளைத்து போட்டு தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறும் போது தேர்தல் கமிஷனில் உள்ள இந்துத்வா சிந்தனை உள்ளவர்களால் மோடிக்கு சாதகமாக பணியாற்ற வாய்ப்புள்ளது. எனவே இனி வரும் காலங்களில் ஓட்டிங் மெஷின் முறையை முற்றாக ஒழித்து விட்டு பழைய முறையான வாக்குச் சீட்டு முறைக்கே மாறுவோம். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் அழுத்தம் கொடுக்க வேண்டும். போராட்டமும் தொடங்க வேண்டும்.


போயிட்டியே.... போயிட்டியே.....


தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டார்கள்'.

'டெல்லியில் தமிழக விவசாயிகள் உடைகளை அவிழ்த்து நிர்வாணமாக நின்று தமிழகத்திற்கு தலை குனிவை ஏற்படுத்தி விட்டார்கள்'.

-ஹெச். ராஜா சர்மா. (பாஜக தலைவர்)

இது என்ன ராஜா பிரமாதம்... இதற்கு முன்னாலேயே சில மாதங்கள் முன்பு மத்திய பிரதேச சட்டமன்றத்தில் ஒரு அம்மண சாமியாரை பேச விட்டு உலகத்துக்கே தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள்தானே உனது கட்சியை சேர்ந்தவர்கள்.

அத்வானியின் ஆசை நிறைவேறட்டும்.

"எனக்கு நீண்ட காலமாகவே மிகப் பெரிய வருத்தம் உள்ளது. நான் பிறந்த, சுதந்திரத்துக்கு முன் ஒன்றுபட்ட இந்தியாவில் இருந்த சிந்து மாகாணம், சுதந்திரத்துக்கு பின், இந்தியாவுடன் இணைக்கப்படவில்லை. இதை எப்போது நினைத்தாலும், மிகப் பெரிய வேதனையாகவே உள்ளது. "
எல்.கே.அத்வானி!
அத்வானியின் ஆசை நிறைவேறட்டும். சிந்து மட்டுமல்ல..... முழு பாகிஸ்தானும் இந்தியாவோடு இணையட்டும். பங்களாதேஷூம் இணையட்டும். அதைத்தான் நாமும் விரும்புகிறோம்.

எங்கே செல்கிறது நமது நாடு?

எங்கே செல்கிறது நமது நாடு?

உபியில் மத பிரசங்கம் செய்தார் என்று கூறி ஒரு பாதிரியாரை பாதி மொட்டை அடித்து கழுதையில் ஏற்றி வீதி வீதியாக அழைத்துச் சென்றுள்ளது வானரக் கூட்டம். இதற்கு மாநில அரசோ மத்திய அரசோ எந்த வொரு கண்டனங்களையும் தெரிவிக்காது. காவிகளின் ஆட்சி முடிவதற்குள் இந்திய தேசத்தை சோமாலியா ரேஞ்சுக்கு கொண்டு வந்து விடுவார்கள் போல....


Monday, April 10, 2017

தொடக்கப்பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு -USA

சான் பெர்னான்டினோ: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பெர்னான்டினோ நகரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 8 வயது குழந்தை உட்பட 3 பேர் பலியாயினர். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
11-04-2017


திருதராஷ்டிர மன்னர் - தேர்தல் ஆணையம்

‛‛ பார்வை தெரியாத திருதராஷ்டிர மன்னர், தன் மகன் துரியோதனனுக்கு உதவுவது போல், தேர்தல் ஆணையம் செயல்படுகிறது,''
அரவிந்த் கெஜ்ரிவால்

மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர முறைகேடுகளை ஏற்க மறுக்கும் தேர்தல் ஆணையம், மகாபாரதத்தில் வரும் பார்வையற்ற திருதராஷ்டிரன் மன்னர் போல் செயல்படுகிறது என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். விரைவில் டில்லி மாநகராட்சி தேர்தல் நடக்க உள்ளது. இதில், ஓட்டுச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என கெஜ்ரிவால் கூறி வருகிறார்.


Sunday, April 09, 2017

இதையே நாங்கள் சொன்னால் 'நஜாத்காரன்' என்று சொல்வார்கள். :-)

இதையே நாங்கள் சொன்னால் 'நஜாத்காரன்' என்று சொல்வார்கள். :-)


அலிகார்: ''மூன்று முறை ஒருவர், தலாக் சொல்லி விட்டால், விவாகரத்து ஆகிவிட்டதாக கருத முடியாது,'' என, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் மனைவி சல்மா அன்சாரி கூறினார்.

உத்தர பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. அலிகாரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற, துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியின் மனைவி, சல்மா அன்சாரி, நிருபர்களிடம் கூறியதாவது: ஒருவர், மூன்று மூறை தலாக் என சொல்வதால் மட்டும், விவாகரத்து செய்துவிட முடியாது. பெண்கள், மற்றவர்கள் சொல்வதை அப்படியே கேட்க கூடாது. குரானை முழுமையாக படிக்க வேண்டும். தலாக் தொடர்பான கேள்விகளுக்கு அதில் பதில் உள்ளது.

அரபு மொழியில் எழுதப்பட்டுள்ள குரானைதான் படிக்க வேண்டும். மொழி மாற்றம் செய்யப்பட்டதை படிக்க வேண்டாம். மவுலானா அல்லது முல்லா சொல்வதை பெண்கள் அப்படியே கேட்க தேவையில்லை. குரானை பெண்கள் படித்து, அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர்
10-04-2017

இதையே நாங்கள் சொன்னால் 'நஜாத்காரன்' என்று சொல்வார்கள். :-) குர்ஆனை அரபு மொழியில் படித்தால் நன்மை. அதனை மொழி பெயர்த்து நமது தாய் மொழியில் படித்து அதன்படி நடந்தால் அதற்கு மேலும் நன்மை கிடைக்கும். இதை அனைவரும் உணர்ந்து குர்ஆனை தாய் மொழியில் படிக்க முயற்சிப்போம்.தமிழர்கள் கறுப்பர்கள் - தருண் விஜய் (பாஜக)

தமிழர்கள் கறுப்பர்கள் - தருண் விஜய் (பாஜக)நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்....
எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி) 

693. இறைத்தூதர் அவர்கள் கூறினார்கள். 
'உங்களுக்குத் தலைவராக நியமிக்கப் படுபவர் கருப்பு நிறமுடைய (நீக்ரோவான) உலர்ந்த திராட்சைப் பழம் போன்ற தலையை உடையவராக இருந்தாலும் அவருக்குக் கட்டுப்படுங்கள். அவர்சொல்வதைக் கேட்டு நடங்கள்.' 

என அனஸ்(ரலி) அறிவித்தார்.

49:11. நம்பிக்கை கொண்டோரே! ! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் பரிகசிக்கப்படுவோர், அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; அவ்வாறே எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம் - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் உங்களில் ஒருவரையொருவர் தீய பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; நம்பிக்கை கொண்டபின் அவ்வாறு தீய பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் இவற்றிலிருந்து மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.

49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; ஆகவே உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், யாவற்றையும் சூழந்து தெரிந்தவன்.


Saturday, April 08, 2017

கணவன் விபத்தில் இறந்த செய்தியை வாசித்தவர்!சத்தீஸ்கரில் உள்ள மகாசமுந்த் மாவட்டத்தில் பயங்கர கார் விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் வாகனத்தில் வந்த 5 பேரில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர் எனவும், அது யார் யார் என்பது குறித்த விவரங்களை ஐபிசி - 24 செய்தி நிருபர் தனது தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக கூறியுள்ளார். 


அப்போது செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் சுப்ரீட் சவுருக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் விபத்தில் இறந்தவர் தனது கணவர் என்பது அப்போதுதான் தெரிய வந்தது. தனது கணவனின் இறப்பு செய்தியை தானே வாசிக்கும்படி ஆகி விட்டதே என்று அதிர்ச்சியில் உறைந்துள்ளார் சுப்ரீட் கவுர்

ஆர்எஸ்எஸூக்கு சரியான பதிலடி!


இல்லை என்றால் நீங்கள் தேச துரோகி :-)

இல்லை என்றால் நீங்கள் தேச துரோகி :-)
--------------------------------------------------------

அதிக நாள் ஓடாத மொக்கை படங்களாக எடுக்கும்  பாகிஸ்தான் எதிர்ப்பையே விதைக்கும் மணிரத்னம் - டாப் டைரக்டர்

அதிகம் விற்பனையாகாத இந்துத்வா சிந்தனைகளை எழுத்தில் வடிக்கும் ஜெயமோகன் - டாப் எழுத்தாளர்.

அதிகம் விற்பனையாகாத அவாள்களின் முன்னேற்றத்துக்காகவே அவாள்களால் நடத்தப்படும் துக்ளக் - டாப் பத்திரிக்கை

தமிழ் இசையை திறமையாக திருடி அதற்கு கர்நாடக சங்கீதம் என்று பெயரிட்டு புரியாத மொழியில் தலையாட்டினால் அது - டாப் சங்கீதம்

குஜராத்தில் 3000 முஸ்லிம்களை கொன்று அதன் மூலம் ஆட்சியை பிடித்து இன்று இந்தியாவை அழிவுக்கு இட்டு செல்லும் மோடி - டாப் இந்தியர்.

இதை எல்லாம் நீங்கள் ஒத்துக்க வேண்டும். இல்லை என்றால் நீங்கள் தேச துரோகி :-) 

Friday, April 07, 2017

அமெரிக்காவில் மற்றொரு இந்தியர் சுட்டுக் கொலை!

அமெரிக்காவில் மற்றொரு இந்தியர் சுட்டுக் கொலை!

வாஷிங்டன் நகரில் உள்ள பெட்ரோல் ஸ்டேஷனில், விக்ரம் ஜர்யால், 26, என்ற பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இந்தியர், கிளார்க்காக பணிபுரிந்தார். முகமூடி அணிந்து வந்த 2 பேர், விக்ரமிடமிருந்த பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது ஒரு கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டதில், படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக சுஷ்மா டுவிட்டரில் கூறுகையில், வாஷிங்டன்னில் இந்தியாவை சேர்ந்த விக்ரம் ஜரியால் சுட்டு கொல்லப்பட்டது குறித்த தகவல் வந்துள்ளது . 26வயதாகும் விக்ரம், 25 நாட்களுக்கு முன்னர் தான் அமெரிக்கா சென்றார். தனது குடும்ப நண்பரின் பெட்ரோல் ஸ்டேசனில் பணிபுரிந்த அவரை, கடந்த 6ம் தேதி அதிகாலை 1.30 மணியளவில் அங்கு வந்த இரண்டு மர்மநபர்கள், துப்பாக்கியால் சுட்டு அவரிடமிருந்த பணத்தை பறித்து சென்றனர். மார்பில் குண்டுபாய்ந்ததால் விக்ரம் உயிரிழந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமைப்பினருடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம் . சிசிடிவி காட்சிகள் கிடைத்துள்ளது. விரைவில் குற்றவாளி பிடிபடுவார். இவ்வாறு சுஷ்மா தெரிவித்துள்ளார்.

தினமலர்
08-04-2017

நாகரிக முதிர்ச்சி அடைந்ததாக பீற்றிக் கொண்டு உலகை குற்றம் சொல்லும் அமெரிக்க அரசு முதலில் தனது மக்களுக்கு பாடம் எடுக்கட்டும்.

Thursday, April 06, 2017

ஆர்எஸ்எஸ் இளைஞனை கொன்ற ஆர்எஸ்எஸ் கூட்டம்!ஆர்எஸ்எஸ் இளைஞனை கொன்ற ஆர்எஸ்எஸ் கூட்டம்!

வயலார் வர்மா பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் அனந்து ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர். கேரளா பட்டனக் காட்டில் இருக்கும் நீலி மங்கலம் கோவிலில் வழிபாடு சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. 10 பேர் கொண்ட சக ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் அனந்துவை சராமாரியாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த அந்த இளைஞன் மருத்துவமனையில் இறந்துள்ளான். தங்கள் வார்த்தையை கேட்காத சக உறுப்பினரையும் போட்டுத் தள்ளக் கூடியதே இந்துத்வா!

https://www.altnews.in/ten-rss-men-arrested-murder-17-year-old-former-rss-worker/?utm_content=buffer34af0&utm_medium=social&utm_source=plus.google.com&utm_campaign=buffer

ராம நவமி எப்படி நடக்கிறது பாருங்கள்!

ராம நவமி எப்படி நடக்கிறது பாருங்கள்!

இந்துக்களின் பண்டிகை. அதை அவர்கள் எப்படி வேண்டுமானாலும் கொண்டாடிக் கொள்ளட்டும். அதில் மற்ற மதத்தவர்கள் பாதிக்கப்படும் போதுதான் அதனை விமரிசிக்க வேண்டியதாக உள்ளது. இந்த ஊர்வலத்தில் ஆயதங்களோடு வலம் வருபவர்களில் 10 சதம் கூட பார்பனர்கள் இருக்க மாட்டார்கள். ராமனை காட்டி, பசுவைக் காட்டி போலி மத வெறி ஊட்டி தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை அழிவின் விளிம்பில் கொண்டு சென்றுள்ளது இன்று இந்துத்வா.

கோயம்பத்தூர் கலவரத்தில் முஸ்லிம்களை வெட்டியது, அவர்களின் சொத்தை கொள்ளையடித்தது பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட அருந்ததியின மக்களே! பிரியாணி அண்டாவை திருடிச் சென்றதாகட்டும், உபியில் குஜராத்தில் இஸ்லாமியர்களை கொலை செய்வதிலாகட்டும் அனைத்து மட்டத்திலும் ஈடுபடுவது பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களே. பார்பனர்கள் கலவரத்தை தூண்டும் காரணிகளை கண்டு அதனை செயல்படுத்துவது மட்டுமே. வேலை முடிந்தவுடன் 'நீ சூத்திரன் வெளியே போ' என்று விரட்டியும் விடுவார்கள்.

தமிழகத்தில் அனைத்து இஸ்லாமிய கிராமங்களை ஒட்டியும் ஒரு சேரியும் இருக்கும். அங்கெல்லாம் அரிஜன மக்கள் சகல சவுகரியங்களோடு வாழ்கின்றனர். அந்த சவுகரியம் ஓரு அக்ரஹாரத்திலோ அல்லது ஒரு வன்னிய, தேவர் கிராமத்திலோ அவர்களால் பெற முடியாது. இருந்தும் பார்பன சூழ்ச்சியானது அந்த மக்களின் கண்களை கட்டி இஸ்லாமியருக்கு எதிராக அணி திரள வைக்கிறது.

பார்பனியம் என்னதான் முயற்சித்தாலும் இஸ்லாத்தின் ஈடுபாட்டை கொஞ்சமும் முஸ்லிம்களிடமிருந்து குறைத்து விட முடியாது. ஆனால் விட்டில் பூச்சிகளாக பார்பனிய வலையில் வீழ்ந்து கருகும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் அறியாமையை எண்ணி நம்மால் வருந்தத்தான் முடியும்.

பார்பனிய குழந்தைகளை நன்றாக வளர்த்து படிக்க வைத்து டாக்டராகவும் இன்ஜினியராகவும் ஆக்கி அமெரிக்கா ஐரோப்பா என்று அனுப்பி விடுகிறார்கள். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களின் கைகளில் ராமனின் பெயராலும் பசுவின் பெயராலும் ஆயுதங்களை கைகளில் கொடுத்து குற்றப் பரம்பரையாக மாற்றுகின்றனர். பார்பனியத்தின் சூழ்ச்சியை இந்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் என்று உணருகிறார்களோ அன்று தான் அவர்களுக்கு விடிவு காலம்.

Wednesday, April 05, 2017

இஸ்லாமிய முதியவரை கொன்ற காவிகள்!ராஜஸ்தான் மாநிலத்தில், பசு காவலர்களால் தாக்கப்பட்ட பெஹ்லு கான் என்பவர் பலியாகியுள்ளார். பெஹ்லு கான் தாக்கப்பட்ட வீடியோ பதிவு, ஆங்கில ஊடகங்களில் வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு, ஜெய்ப்பூரில் இருந்து பசுமாடுகளை ஏற்றிவந்த பெஹ்லு கான் உள்ளிட்ட சிலரை, பசு காவலர்கள் வழிமறித்துத் தாக்கினர். இதில் படுகாயமடைந்த பெஹ்லு கான், உயிரிழந்தார். இதையடுத்து, தாக்குதல் நடத்தியவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிந்துள்ளது.

வட மாநிலங்களில் பசுவதை புரிவோருக்கு எதிரான பசு காவலர்கள் அமைப்பு, பல ஊர்களில் அமைக்கப்பட்டுள்ளன. பசு காவலர்களால் தொடர்ந்து அப்பாவி மக்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறிவருகின்றன. இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பசுக்களுடன் சென்றவர்களை விசாரித்த ஹிந்து அமைப்புகள், அவர்களைத் தாக்கினர்.

முறையான அனுமதியுடன் பசுக்களை வாங்கிச் செல்கிறோம் என அவர்கள் கூறிய போதிலும், பசு காவலர்களால் தாக்கப்பட்டனர். இதில், ஹரியானாவைச் சேர்ந்த பெஹ்லு கான் என்பவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து அங்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெஹ்லு கான் உயிரிழந்தார். உ.பி, சட்டீஸ்கர், ஜார்கண்ட் மாநிலங்களில் பசு வதை புரிவோருக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, சட்டீஸ்கரில் 'பசு வதையில் ஈடுபடுவோரை தூக்கிலிடுவோம்' என, மாநில முதல்வர் கூறியிருந்தார். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் மேலும் ஒருவர் பசு காவலர்களால் கொல்லப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த பெஹ்லு கானின் உறவினர்கள், காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, நடுநிலையான விசாரணை மேற்கொள்ளப்படும் என உறவினர்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Vikatan
05-04-2017

Tuesday, April 04, 2017

எமிரேட்ஸ் விமானத்தில் தமிழில் உணவருந்த மெனு!

எமிரேட்ஸ் விமானத்தில் தமிழில் உணவருந்த மெனு!
-------------------------------------------

எமிரேட்ஸ் விமான சேவையில் சாப்பாட்டு மெனுவை தமிழில் தருகின்றனர். ஆனால் சென்னைக்கு வரும் நமது ஏர் இந்தியாவில் இந்த வசதி உண்டா?

கல்லூரி மாணவர் ஒருவர் தற்கொலை

மும்பை: கல்லூரி மாணவர் ஒருவர், பேஸ்புக் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்தவாறு, ஓட்டல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை சேர்ந்தவர் அர்ஜுன் பரத்வாஜ். இவர் மும்பையில் உள்ள நர்சீ மோஞ்சி கல்லூரியில் 3ம் ஆண்டு பிகாம் படித்து வருகிறார். இவர் நேற்று மாலை 6.30 மணியளவில் பந்த்ராவில் உள்ள தாஜ் ஓட்டலின் 19வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு முன் தற்கொலை செய்வது எப்படி என படிக்கலாம் எனக்கூறி நேரடி ஒளிபரப்பு செய்தார். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக பரத்வாஜ் கடிதம் எழுதி வைத்துள்ளார். ஓட்டலில் அவர் எந்தவித பிரச்னையும் செய்யவில்லை. அமைதியாக உணவு வாங்கி சாப்பிட்டதால், யாரும் சந்தேகம் ஏற்படவில்லை. அறையில் இருந்த ஜன்னல்கதவை உடைத்து தற்கொலை செய்து கொண்டார். இவர் போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையாகி இருந்தார். பரத்வாஜ் மரணம் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Dinamalar
4-4-2017--------------------------------------------

“யார் தமது கழுத்தை நெறித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ, அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெறித்துக்கொண்டிருப்பார். யார் தம்மைத்தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக்கொண்டிருப்பார்.”
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: ஸஹீஹுல் புஹாரி-1365
--------------------------------------------------------

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!
(அல் குர்ஆன் 2:155)

Monday, April 03, 2017

பிரசாந்த் பூஷனுக்கு எதிராக இந்துத்வா வழக்குப் பதிவு

காதலர்களை கண்காணிக்க 'ரோமியோ படை' அமைக்கப்படும். - உபி மாநில அரசு

பல பெண்களை காதல் வலையில் வீழ்த்தியவன் கண்ணன். 'கண்ணன் படை' எப்போது அமைக்கப் போகிறீர்கள் - பிரசாந்த் பூஷன்

பிரசாந்த் பூஷனுக்கு எதிராக இந்துத்வா வழக்குப் பதிவு

இலவசக் கல்வி அனைவருக்கும் (எல்லா மதத்தவர்களுக்கும்)

இலவசக் கல்வி அனைவருக்கும் (எல்லா மதத்தவர்களுக்கும் - ஆண் மாணவர்கள்)

சென்னை அண்ணாசாலை (மவுண்ட் ரோடு) யில் அமைந்துள்ள மதரசா ஏ ஆசம் பள்ளியில்

தரமான ஆங்கில வழிக் கல்வி 6வது முதல் 12வது வரை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணம் ஏதுமில்லை

இலவச சீருடைகள் (யூனிபார்ம்)

இலவச புத்தகங்கள

இலவச பஸ் பாஸ்

இலவச விளையாட்டு முகாம்கள் - தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்களுடன்

பெரிய விளையாட்டுத் திடல்

முஸ்லிம் மாணவர்களுக்கு மட்டும் தனியாக இஸ்லாமியக் கல்வி

ஆங்கிலத்தில் பேச பயிற்சி

தொடர்பு கொள்ளவும 89 39 41 77 86 மற்றும் 9840063922
Kamal Thendral

தண்ணீருக்கென்று ஒரு பைசா செலவழிக்காமல் வாழும் குடும்பம்!நாடே தண்ணீர் பஞ்சத்தில் தவிக்கும் போது தண்ணீருக்கென்று ஒரு பைசா செலவழிக்காமல் வாழும் குடும்பம்!

பெங்களூரு விஞ்ஞானியின் பாடம் .

கோடை இப்போதே மிரட்டத் தொடங்கியுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தண்ணீர்பற்றாக்குறைக்கான அறிகுறி தெரியத் தொடங்கியுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளின் நீர் மட்டமும் குறைந்து கொண்டே போகிறது. மாநகராட்சி அதிகாரிகள் ' என்ன செய்யப் போகிறோம் ' எனத் தெரியவில்லை என புலம்ப ஆரம்பித்துள்ளனர். நகருக்குள் குடிநீர் லாரிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோடையில் கூடுதலாக ஒரு வாளி தண்ணீரில் குளிக்க வேண்டுமென்று உடல் விரும்பினாலும் தண்ணீர் பஞ்சத்தை நினைத்து மனம் தடுக்கிறது. விஷயம் இப்படியிருக்க, பெங்களூரில் 22 வருடங்களாக ஒரு வீட்டில் குடிநீர் இணைப்பே இல்லை. மாநகராட்சிக்கு குடிநீருக்கான பில்லும் செலுத்தியது இல்லை என்ற செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இப்படி ஒரு வீட்டைப் பற்றி யோசித்துக் கூட பார்க்க முடியாது. ஆனால், தண்ணீருக்காக யாரையும் நம்பியிருக்காமல் மழைத்தண்ணீரை மட்டுமே நம்பியிருக்கிறார் இந்த மனிதர். கர்நாடக மாநில அறிவியல் தொழில்நுட்பக் கழகத்தில் விஞ்ஞானியாக பணிபுரிபவர் சிவகுமார். கடந்த 22 வருடங்களுக்கு முன்பு இவர் பெங்களூருவில் சொந்தமாக வீடு கட்டினார். வீடு கட்டும் போதே 'கிரீன் ஹவுஸ்'முறையில் கட்டப்பட்டது. மழை நீர் சேகரிக்கும் திட்டத்துடன்தான் வீடே கட்டப்பட்டது. வீட்டுக்குள்ளேயே 40/60 என்ற வகையில் பிரமாண்டமான தொட்டி கட்டப்பட்டது. வீட்டு மாடியிலும் மழை நீர் சேகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டன. அதாவது இந்த வீடே சிறியத் தடுப்பணை போலத்தான் அல்லது மழை தரும் சோலைக்காடுகளாக உள்ளது.

பெங்களூரு நகருக்கு ஆண்டுக்கு 900 முதல் 1000 மி.மீட்டர் வரை மழை பொழிவு கிடைக்கிறது. கிடைக்கும் மழை நீர் அப்படியே சுத்திகரிக்கப்பட்டு தொட்டியில் சேமிக்கப்படுகிறது. இதற்காக வீட்டின் கூரையில் சிறிய எளிமையான சுத்திகரிப்பு மையம் செயல்படுகிறது. எந்த சமயத்தில் மழை பெய்தாலும் தொட்டியில் தண்ணீர் சேர்கிறது. இந்த தொட்டியில் அதிகபட்சமாக 45 ஆயிரம் லிட்டர் தண்ணீர் சேகரிக்க முடியும். அது மட்டுமல்ல, பயன்படுத்தப்பட்டத் தண்ணீரையும் கூட சிவகுமார் குடும்பத்தினர் வீணடிப்பதில்லை. வாஷிங் மெஷினில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் தண்ணீரைக் கூட வாளிகளில் பிடித்து கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்துகின்றனர்.

சமையலறையில் பயன்படுத்தப்பட்டு வெளியேறும் தண்ணீர் தனிக்குழாய் வழியாக வீட்டுக்கு வெளியே வருகிறது. அது அப்படியே சேகரிக்கப்பட்டு செடிகளுக்கு ஊற்றப்படுகிறது. மழை நீர் சேகரிப்பதிலும் தண்ணீரை சிக்கனமாக செலவழிப்பதில் நாட்டுக்கு முன்மாதிரியாக இருக்கிறார் சிவகுமார். இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், '' வீட்டைக் கட்டும்போதே திட்டமிட்டுக் கட்ட வேண்டும். மழை நீர் சேகரிப்பு எவ்வளவு முக்கியமோ அதுபோல் சுத்திகரிப்பும் மறு சுழற்சியில் பயன்படுத்துவதும் முக்கியமான விஷயம். இது எங்கள் குடும்பத்தின் கூட்டு முயற்சி. எனது மனைவி சுமா, அவரது தங்கை வாமிகா, மகன் அனுப் ஆகியோர் எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு அளித்தனர். அதனால்தான் என்னால் இந்த காரியத்தை செய்ய முடிந்தது.

இந்த வீட்டுக்கு வெளியே இருந்து எந்த குடிநீர் இணைப்பும் கிடையாது. வீடு கட்டியதில் இருந்து இதுவரை தண்ணீருக்கென்று பில் கட்டியதும் கிடையாது. வெளியே இருந்தும் தண்ணீர் வாங்கியதே இல்லை. பெங்களூருவைப் பொறுத்தவரை ஆயிரம் மில்லி மீட்டர் மழை பெய்தால், அதில் இருந்து ஆண்டுக்கு 2.3 லட்சம் லிட்டர் தண்ணீரை நம்மால் சேகரிக்க முடியும். நான்கு பேர் கொண்ட குடும்பத்துக்கு ஆண்டுக்கு இது மிகவும் அதிகம். இங்கு 100 நாட்கள்தான் தண்ணீருக்கு ரொம்ப கஷ்டப்பட வேண்டியது இருக்கும். அதனைக் கருத்தில் கொண்டுதான் 45 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தொட்டியை அமைத்தேன். ஒரு வீட்டுக்கு ஒரு நாளைக்கு 400 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். தேவையை விட 5 ஆயிரம் லிட்டர் தண்ணீர் அதிகமாகவே சேகரிக்க முடிகிறது. நாங்கள் குடிப்பது கூட மழை நீர்தான். குடிநீர் கூட காசு கொடுத்து வாங்கியதே இல்லை'' என்கிறார்.

அரசாங்கத்தை நம்பாமல் இயற்கை அன்னை தரும் மழை நீரை வீணாக்காமல் சேமித்து இவரை நலமாய் வாழ்வோம்.

For the benefit of all, the contact mail I'd of this great man is rainmanskumar@gmail.com

Sunday, April 02, 2017

இஸ்லாம் குறித்த 2 நாள் ஆங்கில கருத்தரங்கம்...சேலம் மாவட்ட TNTJ வின் சார்பாக கிருஸ்துவ பாதிரியார்களுக்கான இஸ்லாம் குறித்த 2 நாள் ஆங்கில கருத்தரங்கம்
=========================

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கிருஸ்துவ பாதிரியார்களை உருவாக்கும் ஞானோதயா சலேசியன் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் இஸ்லாம் தொடர்பான 2 நாள் கருத்துரங்கம் ஏற்பாடு செய்ய சேலம் மாவட்ட TNTJ வை கல்லூரி நிர்வாகம் அணுகியது. அதன் அடிப்படையில் கடந்த மார்ச் 2017 17, 18ம் தேதிகளில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக சகோ: முஹம்மத் கனி கலந்துக்கொண்டு 2 நாள் நிகழ்ச்சியை நடத்தினார். முதல் நாள் காலை 9 மணிக்கு ஆரம்பான நிகழ்ச்சி இரவு 7 மணிவரையிலும், இரண்டாவது நாள் காலை 9 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சி மதியம் 1:00 மணிவரையும் நடைபெற்றது.

2 நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் கீழ்காணும் பல்வேறு விஷயங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

முதலாவது நாள்

1. இஸ்லாம் தோன்றிய வரலாறு - ஆதம்(அலை)
2. ஈமான் இஸ்லாம் வேறுபாடு
3. ஆறு நம்பிக்கை
4. ஐந்து தூண்கள்
5. இஸ்லாம் குறித்த விளக்கம்
a. நேர்வழி
b. எளிய மார்க்கம்
c. பிறர் நலம் நாடுதல்
d. சமூக பொறுப்பு
6. நபிமார்கள்
7. நபிமார்களின் பிரதான பனி
8. நபிமார்கள் செய்த அற்புதங்கள்
9. நபிமார்களின் பண்புகள், தன்மைகள்
10. வஹி
11. வேதங்கள்
12. அல்லாஹ்வின் பண்புகள்
13. இறுதி வேதம்
14. குர்ஆன் இறைவதமே
a. முரண்பாடின்மை
b. குறைபாடுகள் இல்லை
c. முன்னறிவிப்புகள்
d. உயரிய இலக்கணம்
e. அறிவியல் அற்புதங்கள்

இரண்டாவது நாள்

1. குர்ஆன் கூறும் மரியம் (அலை) வரலாறு
2. குர் ஆன் கூறும் ஈஸா(அலை) வரலாறு
3. ஈஸா(அலை) சிலுவையில் அறையப்படவில்லை
3. திருத்துவம் (vs) ஏகத்துவம்
4. மாமனிதர் நபிகள் நாயகம்
a. பைபிளில் நபிகள் நாயகம்
b. எளிய வாழ்க்கை முறை
c. தூது செய்தியை சொன்ன பின் சந்தித்த இழப்புகள்
d. எந்த உலக ஆதாயமும் பெறவில்லை
e. வெளிப்படை தன்மை
f. அகிலத்திற்க்கோர் அருட்கொடை

இந்நிகழ்ச்சியில் சுமார் 40 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். ஒவ்வொரு தலைப்பின் கீழ் சொல்லப்பட்ட செய்திகளை மிக ஆர்வத்துடன் கேட்டது மட்டும் இல்லாமல் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி தெளிவு பெற்றனர். மேலும், தலைப்பிற்கு அப்பாற்பட்ட பொதுவான சந்தேகங்களையும் எழுப்பினார்கள். உதாரணமாக பலதார மனம், பெண்ணுரிம்மை, இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா, விதி சம்பந்தமான கேள்விகள், கடவுள் தன்மை, இறைவனுக்கு மகன் ஏன் இருக்கக்கூடாது போன்ற கேள்விகளை கேட்டு தெளிவுப்பெற்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துக்கொண்ட மாணவர்களுக்கும், கல்லூரியின் பிற ஆசிரியர்களுக்கும் திரு குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர் நபிகள் நாயகம், பைபிளில் நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.

மேலும் நிகழ்ச்சி குறித்த கருத்துகளை பதிவு செய்த மாணவர்கள் பலரும் இஸ்லாம் குறித்த தவறான எண்ணம் இருந்ததாகவும் இந்நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாம் போதிக்கும் சர்வதேச சகோதரத்துவத்தை உணர்ந்ததாக மனமார்ந்த பாராட்டினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்!

இவர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்ட எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.

-TNTJ MEDIA

விலங்கான பசு மனிதர்களுக்கு எப்படி தாயாக முடியும்?

'விலங்கான பசு மனிதர்களுக்கு எப்படி தாயாக முடியும்? பால் தருவதால் பசு தாயானால் ஓட்டகம், ஆடு போன்ற விலங்குகளை எதில் சேர்ப்பீர்கள்'

-முன்னால் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ

02-04-2017

பாடம் கற்றுத்தருகிறது ஒரு பள்ளிவாசல்!பாடம் கற்றுத்தருகிறது ஒரு பள்ளிவாசல்!

கோவை : இஸ்லாமியர்கள், 'ஒழு' செய்வதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, பூமிக்குள் செலுத்தி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

தொழுகை செய்வதற்கு முன்பாக, கை, கால் மற்றும் முகம் ஆகியவற்றை சுத்தமாகக் கழுவுவது (ஒழு), இஸ்லாமியர்கள் கடை பிடிக்கும் முக்கிய மரபாகவுள்ளது.

ஒவ்வொரு பள்ளி வாசலிலும், தொழுகைக்காக ஒழு செய்ய மட்டும், தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

கோவையில், 100க்கும் அதிகமான பள்ளி வாசல்கள் உள்ளன; இவற்றில், ஒரு நாளைக்கு, 10 லட்சம் லிட்டர் தண்ணீர், 'ஒழு' செய்வதற்காக செலவிடப்பட்டு, சாக்கடையில் கலப்பதாக தோராயமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

தற்போதுள்ள கடுமையான வறட்சியால், நகரிலுள்ள சில பள்ளிவாசல்களில் ஒழு செய்யவும் தண்ணீர் இல்லாமல், விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இதனால், பள்ளி நிர்வாகத்தினரும், பொது மக்களும் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையைத் தவிர்ப்பதற்காக, கரும்புக்கடை சல்மத் நகரிலுள்ள மஸ்ஜிதுல் இஹ்சான் பள்ளி வாசலில், தண்ணீர் சேகரிப்புக்கான முன் மாதிரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக, இந்த பள்ளி வாசலில், ஒழு செய்யும் தண்ணீரை பூமிக்குள் சுத்திகரித்து அனுப்புவதற்குதேவையான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

5 அடி விட்டம், 12 அடி ஆழத்தில் இரண்டு பெரிய குழிகள் தோண்டப்பட்டு, அதில் தண்ணீரை சுத்திகரிப்பதற்கான கூழாங்கற்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் நிரப்பப்பட்டுள்ளன.

இதனால், தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, மீண்டும் நிலத்துக்குள் அனுப்பப்படுகிறது.
இதன் காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.

அடுத்த கட்டமாக, கரும்புக்கடை மஸ்ஜிதுல் ஹூதா, ஒப்பணக்கார வீதி அத்தர் ஜமாஅத் பள்ளி வாசல், ஆர்.எஸ்.புரம் குர்ரதுல் அயன் ஆகிய பள்ளிவாசல்களில், இதே போன்ற தண்ணீர் சேமிப்பு கட்டமைப்பை உருவாக்க முயற்சி நடப்பதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

ஜமாஅத் இஸ்லாமி ஹிந்த் மக்கள் தொடர்பு செயலாளர் அப்துல் ஹக்கீம் கூறுகையில், ''கோவையில், பள்ளி வாசல்களில் ஒழு செய்ய பயன்படுத்தும் தண்ணீரை, சுத்திகரிப்பு செய்து, பூமிக்குள் செலுத்துவதால், நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது.
''எனவே, மற்ற பள்ளி வாசல்களுக்கு முன் மாதிரியாக, இந்த கட்டமைப்பு, எங்களது பள்ளி வாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறைவனின் அருட்கொடையான தண்ணீரை, சாக்கடையில் கலந்து விரயமாக்காமல், அதை சுத்திகரிப்பு செய்து, மறு பயன்பாட்டுக்குக் கொண்டு வர இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி, மற்ற பள்ளி வாசல்களிலும் தொடரும்,'' என்றார்.

தகவல் உதவி
சிங்கை மைந்தன்

Saturday, April 01, 2017

வோட்டிங் மிஷினில் பாஜக செய்த தில்லு முல்லுகள்!

வோட்டிங் மிஷினில் பாஜக செய்த தில்லு முல்லுகள்!

போபால்,
பாஜகவுக்கு வாக்குகள் விழும்படி எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்கள் வடிவமைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு தற்போது நிரூபணம் ஆகி உள்ளது.மத்திய பிரதேசத்திலிருக்கும் அடர் நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் 9 ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு அந்தத் தொகுதிக்கு அனுப்பப்படவிருக்கும் எலெக்ட்ரானிக் வோட்டிங் இயந்திரங்களின் செயல்பாடுகளை, அம்மாநில தேர்தல் அதிகாரி சலினா சிங் ஆய்வு நடத்தினார்.

அப்போது அதிகாரிகள் சுற்றி நிற்க எல்க்ட்ரானிக் இயந்திரத்தில் உள்ள 4 ம் எண்ணுள்ள பொத்தானை தேர்தல் அதிகாரி சலினா சிங் அழுத்தினார்.

பின்னர் மெஷினுக்குள் இருக்கும் ரசீதை எடுத்துப் பார்த்தபோது அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.

பாஜகவின் தாமரைச் சின்னத்தில் வாக்குப் பதிவாயிருந்தது. அது டெக்னிக்கல் தவறாக இருக்கலாம் என நினைத்துவிட்டு ஒன்றாம் எண்ணுள்ள பொத்தானை அவர் அழுத்தியதும் மீண்டும் தாமரைச்சின்னத்தில்தான் வாக்கு விழுந்திருந்தது.இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்களிடம், இந்த விசயத்தை வெளியில் சொல்லிவிடாதீர்கள். அப்படிச் சொன்னால் சிறைக் கம்பியை எண்ணவேண்டும் என பத்திரிகையாளர்களை மிரட்டும் தொனியில் சொல்லியிருக்கிறார்.


தேர்தல் அதிகாரி சலினா சிங் வாக்களிப்பது முதற்கொண்டு அனைத்தும் வீடியோவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இச்சம்பவம் குறித்து டிவிட் செய்திருக்கும் அர்விந்த் கெஜ்ரவல், எலெக்ட்ரானிக் இயந்திரக் கோளாறு என்று சொல்கிறார்கள். அப்படியென்றால் பாஜகவுக்குச் சாதகமாக மட்டும் எப்படி இயந்திர கோளாறு உள்ளது என்று பதிவிட்டுள்ளார். எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்களில் கோளாறு செய்துதான் உத்தரபிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது என மாயாவதி, கெஜ்ரவல் உட்பட முக்கியமான கட்சி தலைவர்கள் சுட்டிக்காட்டியது உண்மை என நம்பும்படி உள்ளது இச்சம்பவம்.

காலை மலர்
01-04-2017

ஜெயலலிதாவின் வீடு பொலிவிழந்து காணப்படுகிறது!ஜெயலலிதாவின் வீடு பொலிவிழந்து காணப்படுகிறது!

ஜெயும் அவரது தாயார் சந்தியாவும் அங்குலம் அங்குலமாக பார்த்து கட்டிய 'வேதா இல்லம்' இன்று இருள் சூழ்ந்து காணப்படுகிறது. சமையல் அறையும் பூட்டப்பட்டுள்ளது. வேலையாட்களும் குறைக்கப்பட்டுள்ளனர். தினகரனும் அவரது உறவினர்களும் கூட தற்போது அங்கு தங்குவதில்லை. தமிழகத்தின் அதிகார மையமாக இருந்த ஒரு இடம் கால மாற்றத்தால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

இதுதான் உலகம்....

------------------------------------------------------


ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருமுறை நபிகள் நாயகம் அவர்கள், புறநகர் மதீனாவை ஒட்டியுள்ள "ஆலியா"வின் ஒரு பகுதி வழியாக ஒரு கடைத்தெருவைக் கடந்து சென்றார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் மக்களும் இருந்தார்கள். அப்போது அவர்கள், செத்துக் கிடந்த, காதுகள் சிறுத்த ஓர் ஆட்டைக் கடந்து சென்றார்கள்.

நபிகள் நாயகம் அவர்கள், அந்த ஆட்டை எடுத்து, அதன் சிறிய காதைப் பிடித்துக்கொண்டு, "உங்களில் யார் இதை ஒரு வெள்ளிக்காசுக்குப் பகரமாக வாங்கிக்கொள்ள விரும்புவார்?" என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், "எதற்குப் பகரமாகவும் அதை வாங்க நாங்கள் விரும்பமாட்டோம்; அதை வைத்துக்கொண்டு நாங்கள் என்ன செய்வோம்?" என்று கேட்டார்கள். நபிகள் நாயகம் அவர்கள், "இது உங்களுக்குரியதாக இருக்க வேண்டுமென நீங்கள் விரும்புவீர்களா?" என்று கேட்டார்கள்.

மக்கள், "இறைவன் மீதாணையாக! இது உயிரோடு இருந்தாலும் இது குறையுள்ளதாகும். ஏனெனில், இதன் காது சிறுத்துக் காணப்படுகிறது. அவ்வாறிருக்க, இது செத்துப் போயிருக்கும் போது எப்படி இதற்கு மதிப்பிருக்கும்?" என்று கேட்டனர்.


நபிகள் நாயகம் அவர்கள், "அவ்வாறாயின், இறைவன் மீதாணையாக! இந்தச் செத்த ஆட்டைவிட இவ்வுலகம் அல்லாஹ்வின் கணிப்பில் உங்களுக்கு அற்பமானதாகும்" என்று சொன்னார்கள்.

புஹாரி; 5664