பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்.
'ஒவ்வொரு பெண்ணும் தனது கருவறையில் சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.' குர்ஆன் 13:8
திருக் குர்ஆனின் 13;8 வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.
பொதுவாக மனித உடலுக்கு என சில தனிப் பட்ட தன்மைகள் உண்டு. தனக்குள் அது அன்னியப் பொருள் எதனையும் ஏற்றுக் கொள்ளாது.நாம் சாப்பிடும் உணவுகளையும் ஜீரணித்துக் கொண்டு பிறகு கழிவாக வெளியேற்ற முயற்ச்சிக்கிறது. நம் கண்களை எடுத்துக் கொள்வோம். கண்களில் ஏதேனும் தூசிகள் விழுந்து விட்டால்அதை எப்படியாவது வெளியேற்றவே கண் முயற்ச்சிக்கும்.
இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உடலின் விந்துத் துளியை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது. பல மாதங்கள் தனக்குள் விந்துத் துளியை கருவாக வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்ச்சிக்கிறது. இவ்வாறு முயற்ச்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகிறது.இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ் வசனம் கூறுகிறது.
'ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது' என்ற சொற்றொடர் மிகவும் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். இயற்கைக்கு மாற்றமாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் குழந்தையை வெளியேற்றுவதற்கு முயற்ச்சிக்கிறது. அந்த குறிப்பிட்ட நேரத்தை நானே தீர்மானித்தேன் என்று இறைவன் கூறுகிறான்.
அன்னிய பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.
இயற்கைக்கு மாறாக இறைவன் தன் வல்லமையை புகுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயித்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.
எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபி தன் கற்பனையால் இத்தகைய அறிவியல் உண்மைகளை சொல்ல முடியாது. இது நம் அனைவரையும் படைத்த இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
56 comments:
//இயற்கைக்கு மாறாக இறைவன் தன் வல்லமையை//
மிகவும் முரணாயிருக்கிறதே!
உங்களுடைய முந்தய பதிவொன்றில் பின்னூட்டம் இட்டேன் அது ஏனோ இன்னும் மட்டுறுத்தபடாமலே இருக்கிறது :)
திரு ஸ்ரீநிதி!
//God responsible for this also//
உண்மைதான்! ஒருவனுககு குழந்தை பாக்கியம் இல்லை என்று இறைவன் தீர்மானித்து விட்டால் அவன் மனைவி கருத்தரித்தாலும் அதை குறைப் பிரசவம் ஆக்கி, அவனுக்கு குழந்தை இல்லாமல் செய்து விட முடியும். எனவே அதுவும் படைத்த இறைவன் செயலே! அதே இறைவன் 'பாதிக்கப் பட்டவர்கள் மனமுருகி பிரார்த்தித்தால் அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அவர்களின் கஷ்டத்தையும் போக்கி விடுகிறேன்' என்று அதே குர்ஆனிலேயே வாக்களிக்கிறானே! எனவே அதற்கும் குர்ஆனிலேயே வழி உண்டு.
திரு நந்தன்!
//இயற்கைக்கு மாறாக இறைவன் தன் வல்லமையை//
இதில் முரண் எங்கிருக்கிறது? நம் உடலின்அமைப்பு வெளிப் பொருட்களை தன்னுள் தங்க வைக்காது வெளியேற்றி விடும். அதற்கு மாற்றமாக அநத இறைவனே தன் வல்லமையினால் விந்துத் துளியை கருவறைக்குள் தங்க வைத்து முழு குழந்தையாக வெளியாக்கும் விந்தையைத் தான் மேலே சுட்டிக் காட்டப் பட்டுள்ளது.
உங்களின் வேறெரு பின்னூட்டத்திற்கு பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் உரிமைகளை பட்டியல் இட்டுள்ளேனே! படிக்கவில்லையா?
அறிவியல் பேசுபவர்களை சரியத் சட்டபடி ஒருபக்கம் தண்டனை கொடுத்துக் கொண்டே, மறுபக்கம் அறிவியலை மெய்பிக்க நீங்கள் செய்யும் அடாவடிகள் நல்ல நகைச்சுவை தான். கருவரை சுறுங்கி விரிவது ஒரு பக்கத்தில் இருந்தாலும், கருவறையை சுமக்கும் பெண் திரைமறைவில் சுருங்குவது எதற்காக என்று விளக்கம் கொடுத்தால் படிப்பதற்கு சுவார்சியமாக இருக்கும்.
ஸ்ரீநிதியின் முதல் கேள்வியை விடவும் இரண்டாவது கேள்வி மேலெழுந்தவாறு பார்க்கப்படாமல் தீவிர்த்தோடு பார்க்கப்பட்டால் பல 'நல்ல' விடைகள் கிடைக்கும்.
ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்: கண் திறந்து பார்க்கணும்...
ஸ்ரீநிதிக்கு என் பாராட்டு.
திரு சம்மட்டி!
//அறிவியல் பேசுபவர்களை ஷரீயத் சட்டப்படி தண்டனை கொடுத்துக் கொண்டு//
எந்த நாட்டில் தண்டனை கொடுத்துள்ளார்கள் என்ற ஆதாரத்தை தர முடியுமா? கண்டிப்பாக உங்களால் தர முடியாது. 'நம்பிக்கை கொண்டோரே! சிந்திக்க மாட்டீர்களா?' என்று குர்ஆன் முழுக்க வரும் வசனங்கள் மனிதனை சிந்திக்க சொல்கிறது.
//கருவறையை சுமக்கும் பெண் திரை மறைவில் சுருங்குவது//
சம்மட்டி முதலில் பெண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களின் தாயும் தங்கையும் மனைவியும் மகளும் கூட கருவறையை சுமந்திருக்கும் பெண்கள் தான். அப்படி திரை மறைவில் காசுக்காக சுருங்கும் ஒரு சில பெண்களும் உங்களைப் போன்ற ஆண் வர்க்கத்தினரால் வஞ்சிக்கப் பட்டவர்களே! இது போன்ற வக்கிரமான எண்ணங்கள் என்று அகலுகிறதோஅன்று தான் பெண்களுக்கு உண்மையான விடுதலை.
திரு ஸ்ரீநிதி!
இந்த கணக்கெடுப்பை எங்கிருந்து எடுத்தீர்கள். எனக்கு ஆதாரம் தர முடியுமா?
சேலம் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கள்ளிப் பால் கொடுத்து குழந்தைகளைக் கொல்வது முழுவதும் இந்து மத்தைச் சார்ந்தவர்கள் என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா? இளம் பெண்கள் வரதட்சனை கொடுமையால் ஸ்டவ் வெடித்து இறப்பது அதிகம் ஹிந்து மதத்தில்தான் என்பதும் உங்களுக்கு தெரியுமா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் இருக்கிறீர்களா!
அரபு நாடுகளில் பெண் குழந்தை பிறந்தால் சந்தோஷத்தில் இனிப்பு கொடுத்து மகிழ்வது உங்களுக்கு தெரியுமா?பெண்கள் அரபு நாடுகளில் மதிக்கப் படுகிறார்கள். கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்கள் பங்கெடுப்பதை இஸ்லாம் ஒரு நாளும் தடை செய்ய வில்லை. சமீப காலங்களில் தான் முஸ்லிம் பெண்கள் கல்வியில் ஆர்வம் செலுத்துகிறார்கள். சிறந்த குடும்ப பெண்ணாகவும் இருந்து கல்வி வெலை வாய்ப்புகளிலும் பங்கெடுத்து சிறந்த முஸ்லிம் பெண்களாக இஸ்லாமிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். ஒரு சில ஆப்ரிக்க நாடுகள் வறுமையில் சிக்கி இருந்தால் அதற்கான முழுகாரணமும் அமெரிக்கா போன்ற நாடுகளின் சூழ்ச்சிகள்தான்.
இதற்கு மாற்றமாக மேலை நாடுகளில் பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில் அவர்களின் ஆடைகளைக் களைந்து, ஆண்கள் அவர்களை போகப் பொருட்களாக பயன் படுத்துகிறார்கள். பெண்களின் ஆபாச படங்களை இறக்குமதி செய்வது அனைத்தும் மேலை நாடுகள் தான் என்பதும் உங்களுக்குத் தெரியுமே!இப்படிப் பட்ட வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை என்று நீங்கள் சொன்னால் அப்படிப் பட்ட வாழ்க்கை இஸ்லாத்துக்கு தேவையில்லை என்பதுதான் என் பதில்.
மேலும் இவ்வுலகில் சிரமத்தை அனுபவிக்கும் நல்லவர்கள் இறப்புக்குப் பின் மறு உலகில் சொர்க்கத்தில் இருப்பார்கள் என்ற உத்தரவாதத்தையும் குர்ஆன் வழங்குகிறது.
"கருவரை சுறுங்கி விரிவது ஒரு பக்கத்தில் இருந்தாலும், கருவறையை சுமக்கும் பெண் திரைமறைவில் சுருங்குவது எதற்காக ..." - இது சம்மட்டையின் கேள்வி. திரை மறைவில் சுருங்குவது என்பதை அடக்கிவைக்கப்பட்டுள்ள/மறைத்து வைக்கப்பட்டுள்ள பெண்டிர் என்ற பொருளில் கேட்டிருக்கிறார்.
ஆனால் நீங்களோ -"...திரை மறைவில் காசுக்காக சுருங்கும்" என்று பொருள் கொடுத்து .."இது போன்ற வக்கிரமான எண்ணங்கள் என்று அகலுகிறதோ..." என்று பதிலளித்துள்ளீர்கள்.
வக்கிரம் கேள்வியில் அல்ல; பதிலில்தான் இருக்கிறது.
என் விளக்கம் சரிதானே, சம்மட்டி?
திரு ஸ்ரீநிதி!
மற்ற பெண்களை விட இஸ்லாமிய பெண்கள் கல்வியிலும. வேலை வாய்ப்பிலும் இந்தியாவில் பின் தங்கி இருப்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆண்களின் நிலையும் இதுதான். சுதந்திர போராட்டக் காலத்தில் வெள்ளையர்களை விரட்ட இஸ்லாமிய முல்லாக்கள் 'ஆங்கிலம் படிப்பது ஹராம் (தடுக்கப் பட்டது)' என்று மார்க்கத் தீர்ப்பு வழங்கினார்கள். ஆனால் இப்படி தீர்ப்பு வழங்குவதை இஸ்லாம் கண்டிக்கிறது.அன்று படிப்பை விட்டவர்கள் இன்றுவரை இதை தொடர்கிறார்கள். ஆனால் தற.போது அந்த நிலை மிக வேகமாக மாறி வருகிறது. பெண்களும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அடைந்து வருகிறார்கள்.
பெண்களுக்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் சில உரிமைகளை பட்டியலிடுகிறேன். பார்த்துக் கொள்ளுங்கள்.
'பெண்களுக்கு ஆத்மா உண்டா?' என்றும் 'பெண்கள் தரிசு நிலத்துக்கு ஒப்பானவர்கள்' என்றெல்லாம் பெண்களை இழிவுபடுத்திய காலத்தில், இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்துள்ள உரிமைகள் சிலவற்றைப் பட்டியலிடுகிறேன்.:
1) 'கணவர்களுக்கு மனைவியர் மீதுள்ள உரிமை போன்று மனைவியருக்கும் கணவர்கள் மீது உரிமை உண்டு.' குர்ஆன் 2:228
இதன்முலம் ஆணுக்குப் பெண் அடிமையில்லை என்று குர்ஆன் பிரகடனப் படுத்துகிறது. மனைவிக்கு உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் இவை அனைத்தையும் கணவன் கொடுக்க கடமை பட்டுள்ளான் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
2) 'உங்கள் பெண்கள் வெட்கக் கேடான செயல்களைச் செய்தால் உங்களில் நான்கு சாட்சிகள் மூலம் நிரூபிக்கச் செல்லுங்கள்' - குர்ஆன் 4:15
பெண்கள் மீது வேண்டும் என்றே அவதூறு கூறுபவர்கள் நான்கு சாடசிகள் இல்லாமல் அவதுறு பரப்பினால், அப்படி அவதூறு பரப்பியவர்களுக்கு எண்பது சவுக்கடிகள் கொடுக்கப் பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
3) பெண்களுக்கு சொத்தில் உரிமைகளை நாம் சமீபத்தில்தான் வழங்கியிருக்கிறோம். இஸ்லாம் 1400 ஆண்டுகளுக்கு முன்பே பூர்வீக சொத்தில் உரிமை கொடுத்துள்ளது.அதை நடைமுறையும் படுத்தியுள்ளது.
4)பெண்கள் விவாகரத்து செய்யப் பட்டால் அவர்கள் ஆதரவின்றி நிற்க்க நேரிடும் என்பதால் அடவான்ஸ் ஜீவனாம்சமாக மஹர் என்ற தொகையை அய்ம்பதாயிரம், ஒரு லடசம் என்று (மணமகள் விருப்பம்) திருமணத்துக்கு முன்பே கட்டாயமாக வாங்கி விட வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.
5) எந்த சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும்படி அடிப்பதையும் முகமது நபி மிக வன்மையாக கண்டித்து இருக்கிறார்.
6) ஆண்கள் விவாகரத்து செய்வது போல் கணவன் பிடிக்கவில்லை என்றால் பெண்களும் விவாகரத்து செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறது.
7) 'விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்' - குர்ஆன் 24;2
நம் நாட்டில் விபச்சாரிகள் மட்டுமே தண்டிக்கப் படுகிறார்கள். விபச்சாரம் பண்ணும் ஆண் சட்டத்தின் ஓட்டையை பயன் படுத்தி தப்பி விடுகிறான். குர்ஆன் இருவருக்கும் சமமான தண்டனை வழங்குகிறது.
10) 'நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக் கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்.' - குர்ஆன் 4:19
'ஒரு மனைவியை விவாகரத்து செய்து, இன்னெருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள்.' - குர்ஆன் 4;20
இந்த தலைப்பு மிக விரிவாக எழுதப் பட வேண்டிய ஒன்று. நேரம் கிடைக்கும் போது மற்ற உரிமைகளையும் பட்டியலிடுகிறேன்.
‘Human development’ என்று எதைக் கூறுகிறீர்கள். 'ஆணும் பெண்ணும் சமம்' என்று கூறிக் கொண்டு, திருமணம் என்ற உறவே தேவையில்லை யாரும் யாருடனும் வாழ்ந்து கொள்ளலாம் என்ற கோட்பாட்டையா? இதுதான் முன்னேற்றம் என்றால் அதனை இஸ்லாம் கண்டிக்கிறது. மேலும் முஸ்லிம் நாடுகளை விட ஸ்ரீலங்கா எந்த விதத்தில் மேன்மை அடைந்திருக்கிறது என்று விளக்க முடியுமா? மீசை கூட முளைக்காத என் தமிழ் இன மக்கள் அதிலும் யுவதிகள் கூட மனித வெடி குண்டாக மாறி பொது மக்களை அழிப்பது தான்Human development என்று கூறுகிறீர்களா?
“The believer, in their mutual friendship, mercy and affection, are like one body. If any part of it complains, the rest of the body will also stay awake in pain”
Prophet Mohamed said in Bhuhary and Muslim
“The Muslims are like one person. If his eye hurts him then his whole body will suffer, and if his head hurts him then his whole body will suffer” Prophet said in Muslim. That is Islam.
I n the light this guidance, the Muslim cannot but filled with love for his brothers and friends. Thus becomes a good, constructive element of love in this world, and a victor who has gained the pleasure and love of his lord in the Hearafter
இஸ்லாமிய சட்டங்களைப் பின்பற்றும் அரபு நாடுகளில் யாராவது பெண் தலைவர்கள் இருக்கிறார்களா? இருந்திருக்கிறார்களா?
பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளில் முழுமையான இஸ்லாம் சட்டங்கள் இல்லை. எனவே கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
//வக்கிரம் கேள்வியில் அல்ல; பதிலில்தான் இருக்கிறது.
என் விளக்கம் சரிதானே, சம்மட்டி? //
இறைபுகழ் பாடும் சுவனப்பிரியன் ,இவ்வளவு கீழ்த்தரமாக சிந்திப்பார் என்றும் சற்றும் எதிர்ப்பார்ர்கவில்லை. இவர்கள் பதிவில் கேள்வி கேட்பவர்களுக்கு இடமில்லை என்று தெரிகிறது
இன்னொமொருவர் சந்தேகம் எழுப்பியிருந்தார் என்னுடைய பதிவில் ஆக்கங்கள் இல்லையாம், இவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. பதிவெழுதுபவர்களே புத்திசாலிகள், மற்றவர்களெல்லாம் முட்டாள் என்று இவர்கள் கருதுவதற்க்காக நான் (எதையாவது?) எழுதி குவிக்க வேண்டுமாம்.
மேலும் என் கேள்வியையும் சுவனப்பிரியனின் பதிலையும் விளக்கியதற்கு தருமியவர்களுக்கு நன்றி.
பதிவின் கருத்தும் ஸ்ரீநிதியின் கேள்வியும் சம்மட்டியின் இந்தக் கடைசிப் பின்னூட்டத்தால் திசை மாறி விட வேண்டாம் என்ற என் எண்ணத்தையும்,வேண்டுகோளையும் உங்கள் முன் வைக்கிறேன்.
அதோடு, அதன்பின் தங்கள் மதம் சொல்லும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய சுவர்க்கம் / சுவனம் எப்படி இருக்கும் என்பதையும் விளக்க முடியுமா? அல்லது அந்தப் பகுதிகளின் எண்களையோ, பக்கங்களையோ கொடுத்தால்கூட போதும். தேடிக் கண்டுபிடித்துக்கொள்கிறேன். என்னிடம் இருப்பது: குரான் தர்ஜமா - த்ரீயெம் பிர்ண்டர்ஸ் - 12ம் பதிப்பு
நன்றி
//சேலம் ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களில் கள்ளிப் பால் கொடுத்து குழந்தைகளைக் கொல்வது முழுவதும் இந்து மத்தைச் சார்ந்தவர்கள் என்ற விபரம் உங்களுக்கு தெரியுமா?//
ராமநாதபுரம் மாவட்டதைப் பொறுத்தவரை பெண்சிசுக்கள் கொல்லப்படுவதில்லை.
மக்கள் தொகையிலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகம்.
இதற்கு உங்களின் பதில் எதுவாக இருக்கும் என என்னால் ஊகிக்கமுடிந்துள்ளது.
http://educationforallinindia.com/rudpop2001.html
//கருவறையை சுமக்கும் பெண் திரைமறைவில் சுருங்குவது எதற்காக என்று விளக்கம் கொடுத்தால் படிப்பதற்கு சுவார்சியமாக இருக்கும்//
மேலே எழுதப் பட்ட வாசங்களை நன்றாக படியுங்கள். திரை மறைவில் ஒதுங்குவதை அதுவும் சுவாரஸ்யமாக படிக்க வேண்டுமாம். ஆனால் தான் சொன்னதை 'அந்த அர்த்தத்தில் இல்லை' என்று தற்போது மறுக்கிறார்.எப்படியோ நான் எழுதியதில் எவருக்கும் மனம் சங்கடப் பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருக்கால் நான் தவறாக விளங்கியிருக்கலாம். தாராளமாக என்றும் போல் உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.
அன்புடன்
சுவனப் பிரியன்.
திரு மகேஷ்!
இஸ்லாமிய நாடுகளை விடுங்கள். அமெரிக்கா, அய்ரோப்பா,ஆஸ்திரேலியா போன்ற கண்டங்களில் எத்தனை பெண் ஆட்சியாளர்கள் உள்ளார்கள். தெரிவிக்க முடியுமா? இவை அனைத்தும் முன்னேறிய நாடுகள் தானே!
பெண் ஆட்சியாளர்களை இஸ்லாம் தடுப்பதன் காரணம் விரிவாக விளக்க வேண்டிய ஒன்று. அதை தனி பதிவாகவே போடுகிறேன் பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களின் அறியாமையை நினைத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை.
இந்தியாவில்,இலங்கையில் பல பெண்தலைவர்கள்.
பாகிஸ்தானில் பெனசிர்,
பங்களாதேஷில் கலிதா ஜியா.
அமெரிக்காவில் காண்டலினாரைஸ், ஹிலாரி கிளிண்டன் போன்று சொல்லிக் கொண்டே போகலாம்.
ஆனால் அரபு நாடுகளில் புகழ் பெற்ற பெண் தலைவர்கள், பெண் எழுத்தாளர்கள், விளையாட்டு வீராங்கனைகள் உள்ளனரா?
குரானைப் பற்றித் தாழ்வாகக் கூறவில்லை. அதே நேரம் நீங்களும் அதிகப்படுத்திக் கூறுவதையும் என்னால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை.
//அன்னிய பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.//
நம்முடைய உடல் அன்னிய உயிரற்ற பொருளை மற்றுமே ஏற்றுக் கொள்ளாது. அதுவும் எந்தக் கிருமிகள் அந்தப் பொருளில் இருந்தால் மட்டுமே. விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு துருப்பிடிக்காத இரும்பை வைத்து இனைப்புக் கொடுப்பதில்லையா? அதுவும் அன்னியப் பொருள்தானே. அது எப்படி? நம்முடைய வயிற்றில் நாக்குப் பூச்சிகள் வளர்கின்றனவே அது எப்படி?
//இயற்கைக்கு மாற்றமாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை //
விந்தனுவானது, சினை முட்டையுடன் சேர்தவுடன் அது எப்படி அன்னியப் பொருளாகும்? அது அந்தப் பெண்ணிற்குச் சொந்தமான உயிர் அல்லவா. கருவறையின் பணியே கருவைச் சுமப்பது தானே. அது சுமக்கும் கரு எப்படி அன்னியப் பொருளாகும்? அது எப்படி இயற்கைக்கு மாறானது ஆகும்?
//ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது.//
ஒவ்வொரு குழந்தையும் பிறக்கும் நேரம் கடவுளுக்கு மட்டுமே தெரியும். எனவே கடவுளை நம்புங்கள்.
என்பதுதான் நபிகள் கூறவரும் கருத்து.
அதற்கு நீங்கள் எழுதிவருவரும் உரை மிகைப்படுத்தப்பட்டது.
திரு தருமி!
மூன் பப்ளிகேஷன் வெளியிட்ட பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்கள் தமிழாக்கம் செய்து வெளியிட்ட குர்ஆன் பிரதியை வாங்கிப் படியுங்கள். அனைத்து தலைப்புகளிலும் தனித் தனி அட்டவணை கொடுத்து மிகவும் விரிவாக விளக்கப் பட்டுள்ளது. தமிழும் எளிமைப் படுத்தப் பட்டுள்ளது. உங்கள் பகுதியில் கிடைக்கவில்லை என்றால் விலாசம் தாருங்கள். நான் அனுப்பி வைக்க முயற்ச்சிக்கிறேன்.
'ஆண்களிலோ பெண்களிலோ நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள்.சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப் பட மாட்டார்கள்.' - குர்ஆன் 4;124
வேறு வசன எண்கள் :3;195- 4;124 - 16;97 - 40;40 - 33;35
எனக்கும் சம்மட்டிக்கும் சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள். சந்தோஷம்தானே!
//மேலே எழுதப் பட்ட வாசங்களை நன்றாக படியுங்கள். திரை மறைவில் ஒதுங்குவதை அதுவும் சுவாரஸ்யமாக படிக்க வேண்டுமாம்.//
உங்கள் பதிவை நீங்களே மஞ்சள் பத்திரிக்கையாக நினைத்து, என்னுடைய 'படிப்பதற்கு சுவார்ஸ்சியம்' என்ற மறுமொழிக்கு நீங்களே விளக்கம் கொடுத்துக் கொள்ளுவீர்களேயானால் எனக்கு மாற்றுகருத்து இல்லை. நான் வக்கரமாக எதையும் எழுதவில்லை. ஒரு பதிவைப் படிப்பதற்கு நேரம் செலவிடுபவர்கள் வேலையற்றோர் அல்ல என்பதை புரிந்து கொண்டால் போதும்.
அது உங்களது புரிதலாக இருப்பின் நான் சொல்ல ஒன்றுமில்லை. நீங்கள் எழுதியதில் உள்ள தவறை அவருக்கு முன்பே நான் சுட்டிக்காட்டினேன். அவ்வளவே. இதில் நான் குளிர் காய ஒன்றுமில்லை. ஏன் அதற்கு முன்பேயும் ஸ்ரீநிதியின் கேள்வியை ஆதரித்திருக்கிறேனே!
திரு ஸ்ரீநிதி!
//They are backward by few centuries.Arab women are competent but they are denied in
the name of allah and quran//
பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு நீங்கள் சொல்வது போல் மற்ற நாட்டுப் பெண்களை விட கல்வியில் பின் தங்கி இருந்திருக்கலாம். இன்று பெண்கள் ஆண்களை பின்னுக்குத் தள்ளி அசுர வேகத்தில் முன்னேறி வருகிறார்கள். இதை நேரிலேயே நான் பார்க்கிறேன்.அதே சமயம் குடும்பம்,தாய்மை,குழந்தை வளர்ப்பு,கணவனுக்கு ஏற்ற மனைவியாக பணிவிடை செய்தல், படபடப்பு அற்ற வாழ்க்கை போன்ற அனைத்தையம் முஸ்லிம் பெண்கள் அனுபவித்து வருகிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் குர்ஆனை மதிப்பதனால். அது இறைவனின் வாக்கு என்று நம்புவதினால்.
அமெரிக்காவில் பள்ளி மாணவன் சக மாணவர்களை சரமாரியாக சுட்டுத் தள்ளுகிறான். இது போன்றவை ஒன்று இரண்டல்ல. பல வழக்குகள்.காரணம் என்ன? தாய் வேறு இடம். தந்தை வேறு இடம். டைவர்ஸ். அனைவருக்கும் அவரவர் தொழில்,பணம்,பேங்க் பேலன்ஸ் மட்டுமே குறிக்கோள். இதனால் விரக்தியடைந்த அந்த மாணவர்கள் சமூகத்தையே வெறுத்து மன நோயாளியாக மாறுகின்றனர்.
வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் உண்மையிலேயே பரிதாபத்துக்கு உரியவர்கள்.காலையில் எழுந்ததிலுருந்து குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது, கணவனுக்கு டிபன் ரெடி பண்ணுவது, அலுவலகத்தில் 'ஙே' என்று அசடு வழியும் மேலதிகாரிகளை சாமர்த்தியமாக சமாளிப்பது, பஸ்ஸில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்தவுடன், மாமியார் நாத்தனார் தொல்லைகளையும் சமாளித்து இரவு சாப்பாடு ரெடி பண்ணுவது,பள்ளியிலிருந்து வந்த குழந்தையை சரிபண்ணுவது, அதிலும் கைக் குழந்தையாக இருந்தால் சொல்லவே வேண்டாம் என்று ஓடி ஓடி உழைத்து வரும் பெண்களிடம் கேளுங்கள். 'இப்படிப் பட்ட வாழ்க்கையை விரும்புகிறீர்களா?' என்று. பெண் விடுதலை என்று நாம் பெண்களுக்கு சுமையைத்தான் அதிகப் படுத்தி இருக்கிறோம்.
ஜெயலலிதாவும், காண்டலிஸாரைசும் சிறந்த நிர்வாகிகளாக இருந்தாலும் ஒரு குடும்ப பெண்ணாக பரிமளிக்க முடியவில்லையே! இதை ஒரு பேட்டியில் ஜெயலலிதாவே வருத்தப் பட்டு கூறியுள்ளார்.
தமிழகத்தில் பஞ்சாயத்து போர்டுகளில் பெண்களுக்கு தனித் தொகுதி ஒதுக்கினார்கள்.என்ன பயன். வெறும் கையெழுத்துப் போடும் ரப்பர் ஸ்டாம்பாகத்தான் பெண் தலைவிகள் அனைத்து ஊர்களிலும் இருந்து வருகிறார்கள்.நிர்வாகம் அனைத்தையும் அவர்களின் கணவர்களே பார்த்துக் கொள்கிறார்கள்.
இதையெல்லாம் அனுசரித்துத்தான் உண்ணஉணவு, உடுக்கஉடை, இருக்கஇருப்பிடம் போன்ற அனைத்து செலவுகளுக்கும் கணவனையே பொறுப்பேற்க இஸ்லாம் சொல்கிறது. அப்படியே வேலைக்கு போனாலும் பெண்கள் கல்லூரி, பெண்கள் மருத்துவமனை, ஆண்கள் கலப்பு இல்லாத எந்த வேலைகளையும் இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பார்க்க இஸ்லாத்தில் தடை ஏதும் இல்லை.
திரு மகேஷ்!
//விந்தனுவானது, சினை முட்டையுடன் சேர்தவுடன் அது எப்படி அன்னியப் பொருளாகும்? அது அந்தப் பெண்ணிற்குச் சொந்தமான உயிர் அல்லவா//
இதில் உங்களின் அறியாமை வெளிப்படுகிறது.ஆணின் விந்துு ஒரு பெண்ணிற்கு அன்னியப் பொருள் அல்லவா! அதன் பிறகுதானே சினை முட்டையுடன் சேர்ந்து கருவாகிறது!
//விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு துருப்பிடிக்காத இரும்பை வைத்து இனைப்புக் கொடுப்பதில்லையா? அதுவும் அன்னியப் பொருள்தானே. அது எப்படி? நம்முடைய வயிற்றில் நாக்குப் பூச்சிகள் வளர்கின்றனவே அது எப்படி?//
மகேஷ்! அந்த இரும்புகளை பாதிக்கப் பட்ட எலும்புகளும் சதைகளும் வளர்ந்தவுடன் மருத்துவர்கள் உடம்பிலிருந்து எடுத்து விடுவதை நீங்கள் பார்க்கவில்லையா?நாக்குப் பூச்சி போன்றவை நாம் சாப்பிடும் உணவுகளால் ஏற்படுகிறது. அதனையும் வெளியேற்றவே உடல் முயற்ச்சிப்பதை நீங்கள் உணர்ந்ததில்லையா?
//
'நம்பிக்கை கொண்டோரே! சிந்திக்க மாட்டீர்களா?' என்று குர்ஆன் முழுக்க வரும் வசனங்கள் மனிதனை சிந்திக்க சொல்கிறது.
//
ஆனால் நம் முஸ்லீம் சகோதரர்கள் அதைதவிர மற்ற எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
திரு. சுவனப்பிரியன்,
இந்த பதிவினால், அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவர் என்பதை கூறுகிறீர்களா அல்லது குழந்தை அல்லாஹ் வால் கொடுக்கப் பட்டது, அதை நிராகரிக்கக் கூடாது போன்றதொரு கருத்தை மறைமுகமாக கூறுகிறீர்களா?
ஷங்கர்.
அறிவியலை உங்கள் சமயத்துக்குள் திணிக்க முற்படுவதாலேயே பல முரண்கள் உங்கள் பதிவுகளில் காண முடிகிறது.
1)இரும்புகளை பாதிக்கப் பட்ட எலும்புகளும் சதைகளும் வளர்ந்தவுடன் மருத்துவர்கள் உடம்பிலிருந்து எடுத்து விடுவதை நீங்கள் பார்க்கவில்லையா?''
எடுக்காமல் விடும் நிலை பல நேரங்களில் உண்டு. இதய பைபாஸ் அறுவையில் மார்புக்கூட்டை இணைக்கும் கம்பிகள் மீண்டும் உருவப்படுவதில்லை.
2) நாக்குப் பூச்சி ...வெளியேற்றவே உடல் முயற்ச்சிப்பதை...''
symbiosis என்ற அறிவியல் விஷயத்தைப் படித்துப் பாருங்கள். சில உயிரினங்கள் அடுத்த உயிரினங்களில் இருந்தால்தான் host வாழமுடியும் என்பதைப் பார்ப்பீர்கள்.
3) ஸ்ரீநிதியின் கேள்வி நல்ல கேள்வி என்று என் பாராட்டைத்தெரிவித்திருந்தேன். அதனாலேயே அதற்குரிய பதிலை எதிர்பார்க்கிறேன்.
4) அடுத்து சுவனம் பற்றிய என் கேள்வி. ஏற்கெனவே வெளிச்சான்றுகளையும் விளக்கங்களையும் படித்து அதனால் நான் இஸ்லாமிற்கு வைத்த 21 கேள்விகளில் முதல் கேள்வியே தவறாகப் போய்விட்டது. (இனிதான் அதைத் திருத்தணும்)ஆகவேதான் உங்களிடம் கேட்டிருக்கிறேன். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சுவனமா? பெண்களுக்குரிய சுவனம் எப்படிப்பட்டது? ஏனெனில் ஆண்களுக்குரிய சுவனம் பற்றி முகம்மது பஷீர் எழுதிய "சுவனத்துக் கண்ணழகிகள்' என்ற நூலில் இந்தக் குறிப்பை வாசித்திருக்கிறேன். அதில் பெண்களுக்கு சுவனம் உண்டா, இருப்பின் எப்படிப்பட்டது என்பது ஏது சொல்லப்படவில்லையே.
திரு தருமி!
//இதய பைபாஸ் அறுவையில் மார்புக்கூட்டை இணைக்கும் கம்பிகள் மீண்டும் உருவப்படுவதில்லை//
கம்பியை நீக்காவிட்டாலும் மனிதன் இறக்கும் வரை உடலோடு ஒட்டுவதில்லையே!
ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி சுவனமா? பெண்களுக்குரிய சுவனம் எப்படிப்பட்டது?
'ஆண்களிலோ,பெண்களிலோ நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்' குர்ஆன் 4;124 என்ற வசனத்தை நான் முன்பே உங்களுக்கு விளக்கியுள்ளேன். பார்க்கவில்லையப?
//ஸ்ரீநிதியின் கேள்வி நல்ல கேள்வி என்று என் பாராட்டைத்தெரிவித்திருந்தேன். அதனாலேயே அதற்குரிய பதிலை எதிர்பார்க்கிறேன்//
ஸ்ரீநிதி கேடகும் கேள்விகளுக்கு பதில்களும் கொடுத்திருக்கிறேன். சில கேள்விகள் முஸ்லிம்கள் குர்ஆனை முழுமையாக பின் பற்றாததனால் வந்த கேடுகள். எனவே இதற்கு இஸ்லாத்தை குறை சொல்ல முடியாது.
திரு சங்கர்!
//ஆனால் நம் முஸ்லீம் சகோதரர்கள் அதைதவிர மற்ற எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறார்கள்//
சிந்திக்காதவர்கள் எல்லா மதத்திலும் கலந்து இருக்கிறார்கள். குர்ஆன் சொல்கிறபடி தங்கள் வாழ்க்கையை முஸ்லிம்கள் மாற்றிக் கொண்டால் உலகிலேயே மிகவும் மதிக்கத்தக்க சமுதாயமாக இஸ்லாமியர்கள் காணப்படுவார்கள். அதற்கான முயற்சிகளை செய்ய முஸ்லிம்கள் முன் வர வேண்டும்.
//இந்த பதிவினால், அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவர் என்பதை கூறுகிறீர்களா அல்லது குழந்தை அல்லாஹ் வால் கொடுக்கப் பட்டது, அதை நிராகரிக்கக் கூடாது போன்றதொரு கருத்தை மறைமுகமாக கூறுகிறீர்களா?//
அவனன்றி அணுவும் அசையாதல்லவா! இதில் சந்தேகம் கொள்ள என்ன இருக்கிறது?
சில கேள்விகளுக்கு வசதியாகப் பதில் சொல்வதைத் தவிர்த்து விடுகிறீர்கள். ம்..ம்ம் அதுவும் சரிதான்.
நன்றி
திரு கனக வேலன்!
//பாபர் மசூதியை இடித்ததும் அவன் செயல்தானாமா?//
'அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.' - குர்ஆன் 2;114
அத்வானி, உமாபாரதி போன்று அநீதி இழைத்தவர்களுக்காகவே இறக்கப் பட்ட வசனம் போல் இருக்கிறதல்லவா மேலே குறிப்பிட்ட வசனங்கள். இந்த உலகத்திலேயே பாராளுமன்றத்தில் வைத்து ஒவ்வொரு டிசம்பர் 6 அன்றும் எந்த அளவு அவமானப்படுத்தப் படுகிறார்கள். இன்று வரை பள்ளியை இடித்ததற்காக கோர்ட படிகளை ஏறி வருகிறாரே. உமாபாரதி அவர்கள் கட்சியினராலேயே எந்த அளவு அவமானப் படுத்தப் படுகிறார். அதோடு அல்லாமல் அவர்களின் இறப்புக்குப் பின்பு கொடும் நரக வேதனையும் காத்துக் கொண்டிருக்கிறது.
இறைவன் நரகம் என்ற ஒன்றை படைத்திருப்பதால் அதில் வேதனை செய்யப் படுவதற்கென்று அத்வானி,உமாபாரதி இன்னும் அவர்களின் கொள்கைகளை பின் பற்றக் கூடியவர்களை ஏற்படுத்தி இருக்கிறான் என்றுதான் இதிலிருந்து விளங்க முடிகிறது.
//அத்வானி, உமாபாரதி போன்று அநீதி இழைத்தவர்களுக்காகவே இறக்கப் பட்ட வசனம் போல் இருக்கிறதல்லவா மேலே குறிப்பிட்ட வசனங்கள்//
அப்ப அத்வானி முஸ்லிமாக மாறி அப்துல்லான்னும், உமாபாரதி முஸ்லிமாக மாறி மும்தாஜ்னு பேர மாத்தி வச்சிக்கிட்டா அவுங்கள நீங்க ஏத்துக்க மாட்டிங்களா, அல்லா ஏத்துக்க மாட்டாரா ?
திரு சம்மட்டி!
//அப்ப அத்வானி முஸ்லிமாக மாறி அப்துல்லான்னும், உமாபாரதி முஸ்லிமாக மாறி மும்தாஜ்னு பேர மாத்தி வச்சிக்கிட்டா அவுங்கள நீங்க ஏத்துக்க மாட்டிங்களா, அல்லா ஏத்துக்க மாட்டாரா ?//
கண்டிப்பாக இறைவன் ஏற்றுக் கொள்வார். அத்வானி முஸ்லிமாக மாறி விட்டால் முஸ்லிம்களுக்கு எதிராக காய்களை நகர்த்தவும் மாட்டார். பாபரி மசூதியையும் இடித்திருக்க மாட்டார். பல ஆயிரக்கணக்கான அப்பாவி உயிர்களும் பலியாகி இருக்காது. முஸ்லிமாகவும் மாறி குர்ஆனின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், பிறகென்ன! நேராக சொர்க்கம் தான்!
திரு கனக வேலன்!
//உமா பாரதிக்குள் இருக்கும் அணுக்களை அவனது அனுமதி இன்றியே உமா பாரதி அசைக்கிறாராமா?//
'நேர் வழி பெற்றவர் தனக்காகவே நேர் வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார்.ஒருவன் இன்னெருவன் சுமையைச் சுமக்க மாட்டான்.ஒரு தூதரை அனுப்பாத வரை நாம் எவரையும் தண்டிப்பதில்லை'
குர்ஆன் - 17 :15
'உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், விதியை ஏற்படுத்தியுள்ளான்.கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் இறைவன் நேசிக்க மாட்டான்.
மேற் கண்ட இரண்டு வசனங்களிலும் உங்கள் சந்தேகத்துக்கு பதில் இருக்கிறது.உலகில் எது நடந்தாலும் அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது. அதில் ஏதேனும் செய்திகளை உலக மக்களுக்கு சொல்ல இறைவன் நினைத்திருக்கலாம். நமக்கு அதை அறியக் கூடிய அளவுக்கு அறிவு கொடுக்கப் படவில்லை. 'உமாபாரதி இடிக்கப் போவதைப் பற்றி இறைவனுக்கு தெரியாதா? ஏன் தடுக்கவில்லை? நல்லவர்கள் உலகில் ஏன் கஷ்டப் படுகிறார்கள்?நான் கெட்டவனாகவே வாழ வேண்டும் என்பது இறைவனின் விருப்பம்' போன்ற கேள்விகளெல்லாம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழும்.இந்த கேள்வி விதி சம்பந்தப் பட்டது. 'விதியைப் பற்றி தர்க்கம் செய்யாதீர்கள்' என்று முகமது நபி தடுத்துள்ளதால் மேற் சொன்ன இரண்டு வசனங்களுமே போதுமான விளக்கங்களைத் தரும்.
திரு கனக வேலன்!
உங்கள் கேள்வி விதியை சுற்றியே திரும்பவும் வருகிறது. அதற்கும் குர்ஆனில் பதில் இருக்கிறது.
'கூறப்பட்ட அறிவுரையை அவர்கள் மறந்த போது தீமையைத் தடுத்தோரை மட்டும் காப்பாற்றினோம். அநீதி இழைத்தோரை அவர்கள் குற்றம் புரிந்து வந்ததால் கடமையாகத் தண்டித்தோம்.' - குர்ஆன் - 7 : 165
தீமையைச் செய்தவர்கள், தீமையைத் தடுத்தவர்கள்,தீமையைத் தடுக்காதிருந்தோர் ஆகிய மூன்று வகையினரில் தீமையைத் தடுத்தவர்களை மட்டுமே காப்பாற்றியதாக இவ் வசனம் கூறுகிறது. தீமையைச் செய்யாமலும், மற்றவர்களின் தீமையைத் தடுக்காமலும் இருந்தவர்கள் தீமை செய்தோருடன் சேர்ந்து அழிக்கப் பட்டனர் என்றும் இவ் வசனம் கூறுகிறது. எனவே தான் முஸ்லிம்கள் தீமையைக் கணடால் போராடி மக்களை நேர் வழியின் பால் கொண்டு வர முயற்ச்சிக்கிறார்கள். நன்மை தீமை என்ற இரணடை உண்டாக்கிய இறைவன் மனிதனுக்கு சிந்திக்ககும் ஆற்றலையும் கொடுத்துள்ளான். அதைக் கொண்டு சிந்தித்து நேர் வழி பெற வேண்டும் என்பதால் தான் போராடுகிறார்கள் என்பதுதான் கேள்விக்கான பதில்.
திரு கனகவேலன்!
'அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும் எங்கள் முன்னோர்களும் இணை கற்பித்திருக்க மாட்டோம். எதையும் விலக்கப் பட்டதாக ஆக்கியிருக்கவும் மாட்டோம்' என்று இணை கற்பிப்போர் கூறுகின்றனர் . இவ்வாறே அவர்களுக்கு முன்சென்றோரும் பொய யெனக் கருதினர். முடிவில் நமது வேதனையை அனுபவித்தார்கள். 'உங்களிடம் இது பற்றிய விபரம் உண்டா?(இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்! ஊகத்தையே பின் பற்றுகிறீர்கள்.நீங்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறில்லை' என்று (முகம்மதே) கேட்பீராக!
குர்ஆன் - 6 : 148
நீங்கள் கேட்பது போன்ற கேள்வியைத்தான் அன்று முகமது நபியைப் பார்த்து சிலை வணக்கம் புரிந்த அரபிகள் கேட்டனர். 'இறைவன் நாடி இருந்தால் நாங்கள் நேர் வழியில் இருந்திருப்போம்' என்று அவர்கள் கூறியதற்காகத்தான் மேற்கண்ட வசனம் இறங்கியது. 'உங்களிடம் இதுபற்றிய விபரம் உண்டா?இருந்தால் அதை எங்களுக்கு காட்டுங்கள்.' என்று இறைவன் அந்த நபர்களைப் பார்த்து கேட்கிறான். இதிலிருந்து நாம் விளங்குவது விதியை விளங்கக் கூடிய அளவுக்கு நமக்கு அறிவு தரப் பட வில்லை என்பதே! வேறு எந்த கேள்விகள் கேட்டாலும் ஆதாரப் பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் குர்ஆனிலிருந்து பதில் சொல்ல முடியும்.விதி ஒன்றுக்கு மட்டும் உள்ள விடை இறைவன் மறுமையில் விளக்குவான். அதுவரை மனிதர்கள் பொறுமை காக்க வேண்டும்.
திரு கனக வேலன்!
என்னை நீங்கள் விடுவதாக இல்லை! உங்களை நானும் விடப் போவதும் இல்லை!
//அவர்கள் சிலை வணக்கம் செய்தது எதனால்? இறைவனின் ஆணையை மீறி அவர்களால் சிலை வணக்கம் செய்ய முடிந்தது எதனால்?//
சைத்தானைப் பார்த்து இறைவன் கூறுகிறான்:
'இங்கிருந்து நீ வெளியேறு! நீ விரட்டப் பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உள்ளது' என்று இறைவன் கூறினான்.
'இறைவா அவர்கள் உயிர்ப்பிக்கப் படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக' என்று கேட்டான்.
'குறிப்பிட்ட நேரம் வரும் நாள் வரை நீ அவகாசம் அளிக்கப் பட்டவன்' என்று இறைவன் கூறினான்.
'என் இறைவா! என்னை நீ வழி கெடுத்ததால் பூமியில் தீமைகளை அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப் பட்ட உனது அடியார்களைத் தவிர மற்றவர்கள் அனைவரையும் வழி கெடுப்பேன்' என்று கூறினான்.
'இதோ என்னிடம் நேரான வழி உள்ளது' என்று இறைவன் கூறினான்.
குர்ஆன் - 15 : 35,36,37,38,39,40
மேலே இறைவனுக்கும் சாத்தானுக்கும் இடையில் நடந்த உரையாடல் விளக்கப் பட்டுள்ளது.
இதிலிருந்து நாம் என்ன விளங்குகிறோம்? 'சாத்தான் மனிதர்களை வழி கெடுக்க இறைவனிடம் அனுமதி கேட்கிறான். யுக முடிவு நாள் வரை இறைவனும் சாத்தானுக்கு அனுமதி கொடுக்கிறான்.எனவே இறைவனின் கட்டளையை பின் பற்றுபவர் நேர் வழி பெறுவார். சைத்தானின் கட்டளையை பின் பற்றுபவர் வழி தவறி நஷ்டவாளியாவார் என்று விளங்குகிறது. எனவே மனிதன் செய்யும் தீமைகளுக்கு அவனின் பலகீனங்கள் தான் காரணமே ஒழிய அதை இறைவனின் நாட்டம் என்று கூறி தப்பித்துக் கொள்ள முடியாது.
//விதியை இறைவன் மறுமையில் விளக்குவான் என்று குரானில் என்ன எழுதியிருக்கிறது?//
'உங்களிடம் இது பற்றிய விபரம் உண்டா?(இருந்தால்) அதை எங்களுக்குக் காட்டுங்கள்!-குர்ஆனின் மேற்கண்ட வசனத்தின் படி அந்த விபரம் புரியும் அளவுக்கு நமக்கு அறிவு கொடுக்கப் பட வில்லை. மறுமையில் யாரும் அநீதி இழைக்கப் பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை இறைவன் வழங்குவதால் மறுமையில் விதி பற்றிய விளக்கத்தை இறைவன் நிச்சயம் விளக்குவான் என்று நம்மால் விளங்க முடிகிறது.
வருகைக்கு நன்றி திரு பிரியன்!
//கண்டிப்பாக உங்கள் தன்னம்பிக்கையை பாராட்டியே ஆக வேண்டும்...//
என் தன்னம்பிக்கைக்கு காரணம் குர்ஆன் இறைவனின் வார்த்தைகள்தான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையே! எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபியால் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில், அறிவியல் கருத்துகளோடு மோதாமல் இப்படி ஒரு வேதத்தை தரவே முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இது தான் என் உறுதிக்கு காரணம்.
சுவனப்பிரியன்,
மீண்டுமொரு அறிவியல் உண்மையை குர்ஆனின் ஒளியில் விளக்கியதற்கு வாழ்த்துக்கள். முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் சொன்னது போல் “குர்ஆன் இறைவனால் இறக்கப்பட்ட வேதம் என்பதற்கான உங்களது வாதத்தை அறிவியல் காரணம் கொண்டு மறுக்க முன்வராமல்” பதிவுக்குச் சம்பந்தமில்லாதவற்றைச் சொல்லி திசை திருப்புவதாகவே பெரும்பாலான பின்னூட்டங்கள் உள.
ஆணின் விந்தனுவும் பெண்ணியின் சினை முட்டையும் இணைந்தே “கரு” உருவாகின்றன. இவை இரண்டுமே மனித உடலிலிருந்து வெளிப்படுவதால் அவை அந்நியப் பொருட்களல்ல. எனினும் சில குசும்பர்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது விளக்கமல்ல என்பதை புரிந்தும் மல்லுக்கட்டி பதிலிட்டிருக்கிறீகள்! வாழ்த்துக்கள்!
//அறிவியலை உங்கள் சமயத்துக்குள் திணிக்க முற்படுவதாலேயே பல முரண்கள் உங்கள் பதிவுகளில் காண முடிகிறது.//
தருமி,
உங்கள் வாதத்தில் ஓரளவு உண்மை இருந்தாலும் முழுதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அனைத்து அறிவியல் கண்டு பிடிப்புகளுக்கும் குர்ஆன் தான் முன்னோடி என்று யாரும் வாதிடவில்லை. அறிவியல் வளர்ச்சியடையாத காலத்தில் சொல்லப்பட்டவற்றில் பல, தற்கால அறிவியல் உண்மைகளுடன் பொருந்துகின்றன என்ற நோக்கில்தான் நானும் கூட சில அறிவியல்-குர்ஆன் ஒப்பீடுகளைப் சம்பந்தப்பட்ட அறிவியலாளர்களின் வாக்குமூலங்களுடன் பதிந்தேன். உங்கள் போன்ற படித்த மேதாவிகள்தான் அறிவியல் விதியை இறைவனின் விதியுடன் குழப்பிக் கொள்கிறீர்கள் என்பதற்கு உங்களின் விதி பற்றிய முந்தைய கேள்விகளே சான்று.
//இரும்புகளை பாதிக்கப் பட்ட எலும்புகளும் சதைகளும் வளர்ந்தவுடன் மருத்துவர்கள் உடம்பிலிருந்து எடுத்து விடுவதை நீங்கள் பார்க்கவில்லையா?''எடுக்காமல் விடும் நிலை பல நேரங்களில் உண்டு..//
Absorbable Implants என்பவை அறுவைச் சிகிச்சையில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை மனித உடலையொத்த தனிமங்களிலிருந்தே உருவாக்கப்படுகின்றன. "இரும்புகள்" அவற்றின் தேவை முடிந்ததும் நிரந்தரமாக நீக்கப்படுகின்றன. எலும்பு முறிவு அறுவைச் சிகிச்சையில் இவற்றைக் காணலாம். மேலும் அவற்றினால் ஒவ்வாமை ஏற்படாமல் இருக்க தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டு பிறகு நீக்கப்படுவதால் அவை அந்நியப் பொருட்களே!
ஸ்ரீநிதி,
கருச்சிதைவுக்கும், ஊனமாகப் பிறப்பதற்கும், குறைப் பிரசவத்திற்கும் கூட இறைவன் காரணமா? என்று கேட்டுள்ளீர்கள். கோடானு கோடி விந்தனுக்களில் ஒரே ஒரு அணு மட்டும் சினைமுட்டையை அடைந்து கருவாவதற்கு யார் காரணமோ அவனே நீங்கள் கேள்வியில் கேட்டவற்றிற்கும் காரணம் என்ற கோணத்தில் சிந்தித்தால் உங்களின் எதிர்மறைக் கண்ணோட்டத்திலிருக்கும் அபத்தங்கள் புலப்படும்.
அறிவியல் படைப்புகளைப் பற்றிச் சொல்கிறது. குர்ஆன் படைத்தவனைப் பற்றிச் சொல்லி சிந்திக்கச் சொல்கிறது. இந்த வேறுபாட்டை உணர்ந்து கொண்டால் மற்ற வேதங்களை விட குர்ஆன் அறிவியலுக்கு முரனானதல்ல என்பது விளங்கும்.
//பொதுவாக மனித உடலுக்கு என சில தனிப் பட்ட தன்மைகள் உண்டு. தனக்குள் அது அன்னியப் பொருள் எதனையும் ஏற்றுக் கொள்ளாது.//
அது சரி
//இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உடலின் விந்துத் துளியை தன்னுள் ஏற்றுக் கொள்கிறது.//
இது ஏன் பலமாதங்கள் வைத்திருக்க வேண்டும். ஏற்றுக்கொண்ட உடனே வெளியே துப்பியிருக்க வேண்டுமே. அது ஏன் பலமாதங்கள் வைத்திருக்க வேண்டும்.
//'ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது' என்ற சொற்றொடர் மிகவும் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். இயற்கைக்கு மாற்றமாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் குழந்தையை வெளியேற்றுவதற்கு முயற்ச்சிக்கிறது. //
இது ஒரு சப்பைக்கட்டு ஸ்டேட்மெண்ட்.
ஒரு முக்கியமான தகவல் கருப்பை விந்துவை மட்டும் ஏற்றுக் கொள்வதால் கரு உருவாவதில்லை. கருமுட்டையும் வேண்டும். அப்போது தான் கரு உருவாகும். எல்லா நேரமும் நுழையும் விந்துக்களால் நீண்ட நாட்கள் கருப்பையில் தங்கியிருக்க முடியாது. அது செத்து விடும். ovalation எனப்படும் குறிப்பிட்ட நேரத்தில் அதாவது குறிப்பிட்ட மாதந்திர சைக்கிளில் மட்டுமே ஓவரியில் இருந்து கருமுட்டை பிரிந்து ப்லோப்பியன் குழாய் வழியாக பயணிக்கும் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே விந்து செல்லுடன் சேர்ந்து கரு உருவாகும். இப்படி உருவான கரு சில சமயம் கருப்பையை அடையும் முன்பே ப்லோப்பியன் குழாயிலேயே தங்கி வளர ஆரம்பித்து விடும். அப்போது மருத்துவர் கண்டுப்பிடித்து உடனே அதை அகற்றி விட்டால் உயிருக்கு ஆபத்து இல்லை. இல்லாவிட்டல் ப்லோப்பின் குழாய் வெடித்து அந்த அன்னைக்கு ஆபத்தை விளைவிக்கலாம். இது கருவுறுதல் அறிவியலின் ஒரு துளி மட்டுமே.
அது போக கருவறை சுருங்கி விரிவது என்பது கருவுற்ற சில மாதங்களில் இருந்து தொடங்கி விடும். இது சாதரண நிகழ்வு. எந்த கருவுற்ற அன்னையரையும் கேட்டுப்பாருங்கள். அதை அவர்களால் உணர முடியும். சொல்ல முடியும். இதை MBBS படித்தவர் மட்டுமே சொல்லக்கூடிய ரகசியம் என்று இல்லை. நிலைமை இப்படியிருக்க படிப்பறிவில்லாத அறவே இல்லாத நபி சொன்னதாக வியப்படைவதும், அதற்கு சப்பை கட்டாக foreign body மேட்டரை எடுத்து விடுவதும் அறைகுறையாகத் தான் இருக்கிறது.
திரு ஸ்ரீநிதி!
எழுதப் படிக்கத் தெரியாத முகமது நபியால் எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தக் கூடிய வகையில், அறிவியல் கருத்துகளோடு மோதாமல் இப்படி ஒரு வேதத்தை தரவே முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
Read that again.What are you upto.
குர்ஆன் என்பது உங்களையும் என்னையும் படைத்த இறைவனால் வழங்கப் பட்டது. இன்று வரை பலரும் குர்ஆனை முகமது நபியின் வார்த்தைகள் என்று தவறாக விளங்கி இருக்கிறார்கள். முகமது நபி குர்ஆனுக்கு விளக்கமளித்தது அனைத்தும் ஹதீதுகள் ஆகும். இரண்டையும் போட்டு நாம் குழப்பிக் கொள்ளக் கூடாது. இன்னும் சிலர் தன் சொந்த கற்பனைகளைத்தான் இறைவனின் வேதம் என்று இட்டுக் கட்டி சொல்கிறார் முகமது நபி என்கின்றனர்.மொழி நடை,ஒரு விஷயத்தை விளக்கும் அழகு,அறிவியல் உண்மைகளை போகிற போக்கில் அலட்சியமாக சொல்லிவிட்டு போவது போன்ற பல விஷயங்களில் குர்ஆனும் ஹதீதும் ஒரே நபரின் கருத்தல்ல என்பதை நமக்கு தெளிவாக விளக்கும். அரபி மொழி தெரிந்தவர்கள் இதனை நன்கு உணர்வார்கள். மொழி பெயர்ப்பிலும் இந்த வித்தியாசத்தை நாம் உணரலாம்.
இதைத்தான் நான் சுட்டிக் காட்டி குர்ஆன் முகமது நபியின் வார்த்தை அல்ல. அது இறைவனின் வார்த்தை என்று விளக்கியுள்ளேன்.
திரு கனகவேலன்!
//"உலகில் எது நடந்தாலும் அது இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது." என்று எழுதினீர்கள். இப்போது அவை சாத்தானின் தூண்டுதலால் நடக்கின்றன என்று சொல்கிறீர்கள்.//
'இறைவா அவர்கள் உயிர்ப்பிக்கப் படும் நாள் வரை எனக்கு அவகாசம் தருவாயாக' என்று கேட்டான்.
'குறிப்பிட்ட நேரம் வரும் நாள் வரை நீ அவகாசம் அளிக்கப் பட்டவன்' என்று இறைவன் கூறினான்.
மேற்கண்ட குர்ஆனின் வசனங்களை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். இறைவனிடம் அனுமதி வாங்கிக் கொண்டுதான் 'பலகீனமான எண்ணம் உடையவர்களை வழி கெடுப்பேன்'என்று இன்று வரை தவறான பாதைக்கு மனிதர்களில் பெரும் பாலோரை அழைத்துச் செல்கிறான்.
வருகைக்கு நன்றி திரு நல்லடியார்!
//உங்களிடம் எதிர்பார்ப்பது விளக்கமல்ல என்பதை புரிந்தும் மல்லுக்கட்டி பதிலிட்டிருக்கிறீகள்! வாழ்த்துக்கள்!//
ஸ்ரீநிதி, தருமி,கனகவேலன்,சம்மட்டி போன்ற நண்பர்களின் பினனூட்டங்களிலிருந்து அவர்கள் 'இறைவன் இல்லை' என்ற கொள்கை உடையவர்கள் என்று விளங்குகிறது. இதற்கு காரணம் அவர்கள் மதம் இறைவனைப் பற்றி கொடுத்த பலகீனமான விளக்கங்களே! எனவேதான் குர்ஆன் ஒளியில் இறைவனின் வல்லமையை நான் படித்தவற்றிலிருந்து எடுத்து தருகிறேன். ஏதோ என்னால் ஆன சிறிய முயற்சி.
வருகைக்கு நன்றி மதுரை மல்லி!
//ஒரு முக்கியமான தகவல் கருப்பை விந்துவை மட்டும் ஏற்றுக் கொள்வதால் கரு உருவாவதில்லை. கருமுட்டையும் வேண்டும். அப்போது தான் கரு உருவாகும்.//
'மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.'
குர்ஆன் - 76 :2
'கலப்பு விந்துத் துளி' என்ற வார்த்தையை ஆழமாக சிந்தியுங்கள். ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினை முட்டையுடன் இரண்டறக் கலந்து அதாவது கலப்பு விந்தாக மாறி பிறகுதான் பெண்ணின் கருவறைக்குச் சென்று குழந்தையாக உருவாகிறது. குர்ஆன் சொல்லக் கூடிய கருத்தைத்தான் நீங்களும் சொல்கிறீர்கள். இதில் முரண்பாடு எங்கிருந்து வருகிறது?
//அது போக கருவறை சுருங்கி விரிவது என்பது கருவுற்ற சில மாதங்களில் இருந்து தொடங்கி விடும். இது சாதரண நிகழ்வு. எந்த கருவுற்ற அன்னையரையும் கேட்டுப்பாருங்கள். அதை அவர்களால் உணர முடியும். சொல்ல முடியும். இதை MBBS படித்தவர் மட்டுமே சொல்லக்கூடிய ரகசியம் என்று இல்லை//
சாதாரண நிகழ்வு யாருக்கு? கருவுற்ற அன்னையருக்கு. ஒரு ஆணுக்கு இந்த உணர்வுகளை எவ்வாறு அறிய முடியும்? இன்றைய அறிவியல் முன்னேற்றம் அடைந்த நாட்களில் நாம் வேண்டுமானால் கூகிளில் தேடியோ அல்லது பத்திரிக்கைகளில் படித்தோ தெரிந்து கொள்ளலாம். குர்ஆன் இறங்கிய காலத்தை நினைத்துப் பாருங்கள். இன்றிலிருந்து சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்னால் படிப்பறிவு சிறிதும் இல்லாத சமூகத்தில் தோன்றிய முகமது நபியால் எப்படி சொல்ல முடிந்தது? என்ற கேள்வி உங்களுக்கு வரவில்லையா?
திரு கனகவேலன்!
'அல்லாஹ் நாடியதை அழிப்பான்.நாடியதை அழிக்காது வைப்பான். அவனிடமே தாய் ஏடு உள்ளது.'
-குர்ஆன் 13 :39
நடந்தவை நடக்கவிருப்பவை அனைத்தையும் ஒன்று விடாமல் இறைவன் தன்னிடம் உள்ள பதிவேட்டில் பதிவு செய்திருக்கிறான். அதில் உள்ளபடியே அனைத்துக் காரியங்களும் நடக்கின்றன.திருக்குர்ஆன் கூட இறைவனது பதிவேட்டிலிருந்து தான் எடுத்து முகமது நபிக்கு அருளப் பட்டதாகத் திருக் குர்ஆன் கூறுகிறது - குர்ஆன் 85 :21
சாத்தான் மனிதர்களை வழி கெடுக்க அனுமதி வேண்டியது யாரிடம்? இறைவனிடம். அந்த இறைவனும் அனுமதி அளிக்கிறான். அந்த இறைவனால் அனுமதி அளிக்கப்பட வில்லை என்றால் சைத்தானால் செயல் பட முடியுமா?என்ற ரீதியில் சிந்தியுங்கள் விடை கிடைக்கும்.
//* Kanagavelan said...
அப்படியென்றால், ஏற்கெனவே எல்லா தீமைகளும் நடப்பதை நிச்சயம் செய்துவிட்டபிறகு யாரால் அதனை எதிர்த்து நல்ல காரியம் செய்ய முடியும்? பிறகு தீமை செய்ததற்காக மனிதர்களை தண்டிப்பது எப்படி நியாயம்? *//
கனகவேலன் ஐயா,
நீங்க கேட்கின்ற கேள்வி மிருகங்களுக்குத்தான் பொருந்தும். ஏனென்றால் இறைவன் அவைகளுக்கு பகுத்தறிவு கொடுக்கவில்லை. ஆனால், நம்மைப்போன்ற மனிதர்களுக்கு சோதனையாக்கப்பட்ட இவ்வுலகத்தில் நன்மையானவைகளும், தீமையானவைகளும் படைத்துள்ளான். அதோடு மட்டும் அல்லாமல் நமக்கு இவை இரண்டையும் அறியும் வகையில் பகுத்தறிவையும் கொடுத்து பலகீனமானவர்களாக இந்த மனித இனத்தைப்படைத்துள்ளான். இதில் நாம் எந்த அளவுக்கு நம்முடைய பகுத்தறிவை வளர்த்துக் கொள்கின்றோமோ அதனைக்கொண்டு நன்மையான விடயத்தை தேர்ந்தெடுக்க முடியும். இதன் பொருட்டு நமக்கு இவ்வுலகிலும், மறுஉலகிலும் வெற்றியாளராக மாறமுடியும். அதை விட்டு பலகீனமான முறையில் நம் இச்சைக்கெல்லாம் நடக்க முற்பட்டால் தோல்விதான் கிட்டும். இவ்வாறு எல்லாம் நம்மை நேர்வழிப்படுத்தத்தான் இறைவன் தன் புறத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் அவனுடைய வேதத்தை நமக்கு வழங்கியுள்ளான். எவன் ஒருவன் அந்த வேதத்தை சரியாக விளங்கி (பகுத்தறிவைக் கொண்டு) தன் வாழ்கையில் நடைமுறைப்படுத்துகின்றானோ? அவனுக்கு நிச்சயம் வெற்றியே.
(அப்பா... கை வலிக்குதுங்க. ஏங்க நாம சொல்ல சொல்ல எழுதுகின்றாப் போல ஏதாவது மென்பொருள் இருந்தாக் கூறுங்களேன். கை வலியிலிருந்து தப்பிக்கலாம்ன்னுதான்.)
அப்பாட நானும் ரொம்ப நாளா இந்த விவாதத்தைப் பார்க்கிட்டு வாரேன் இப்பத்தான் அப்துல் குத்தூஸ் நச்சுன்னு ஒரு வார்த்தை சொல்லி இருக்கார்.
//இதில் நாம் எந்த அளவுக்கு நம்முடைய பகுத்தறிவை வளர்த்துக் கொள்கின்றோமோ அதனைக்கொண்டு நன்மையான விடயத்தை தேர்ந்தெடுக்க முடியும். //
//எவன் ஒருவன் அந்த வேதத்தை சரியாக விளங்கி (பகுத்தறிவை) தன் வாழ்கையில் நடைமுறைப்படுத்துகின்றானோ? அவனுக்கு நிச்சயம் வெற்றியே. //
அப்துல் குத்தூஸ்,
நீங்க இதைத்தான சொல்றீங்க ?
"வேதம் வேதமாக இருந்தாலும் ஒவ்வொருவரும் அவரின் பகுத்தறிவைக் கொண்டு சரியாக புரிந்து கொள்ளவேண்டும். சும்மா வேதம் சொன்னது என்று எல்லாத்தையும் செய்யக்கூடாது/நம்பக்கூடாது .உனது பகுத்தறிவைப் பயன் படுத்து."
என்ன ஒரே அடியா இப்படி சேம்சைட் கோல் போட்டுட்டீங்க :-)))
<<< கல்வெட்டு said...
வேதம் வேதமாக இருந்தாலும் ஒவ்வொருவரும் அவரின் பகுத்தறிவைக் கொண்டு சரியாக புரிந்து கொள்ளவேண்டும். சும்மா வேதம் சொன்னது என்று எல்லாத்தையும் செய்யக்கூடாது/நம்பக்கூடாது .உனது பகுத்தறிவைப் பயன் படுத்து." >>>
ஐயா கல்வெட்டு அவர்களே... நீங்கள் தவறாக புரிந்துக் கொண்டுள்ளீர்கள் என நினைக்கின்றேன். எங்களின் வேதத்தை எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என உங்களுக்கு சரியான அறிவு இல்லாததால் இப்படிக் கூறுகின்றீர்கள் என நினைக்கின்றேன். உங்கள் வேதத்தை எப்படி விளங்க வேண்டும் என்ற அறிவு நிச்சயமாக எனக்கு இல்லை. ஆனால், எனது வேதமான திருமறைக் குர்ஆனை எப்படி விளங்க வேண்டும் என்று எங்களின் தலைவர் நபி(சல்) அவர்கள் தெளிவாக விளக்கிவிட்டு சென்றுள்ளார்கள். அதன்படி நாங்கள் சிந்திப்பதால், அந்த வேதம் எங்களுக்கு எக்காலத்திலும் விளக்கம் கொடுக்கக்கூடியதாகவே உள்ளது. ஏதோ பகுத்தறிவிற்கும், வேதத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாதைப்போல் உங்களின் திசைத்திருப்பல்களை உண்மையாக்க முயலாதீர்கள். எங்களின் பகுத்தறிவு என்றுமே எங்களின் வேதத்திற்கு மாற்றமாக இருந்ததேக் கிடையாது.
வேண்டுமென்றால் உங்களுக்கு நான் இங்கு சவால் விடுகின்றேன். நீங்கள் எப்படிப்பட்ட கேள்வி வேண்டுமென்றாலும் என்னிடமோ அல்லது எங்களின் இஸ்லாமிய சகோதர்களிடமோ கேளுங்கள், நாங்கள் இன்ஷா அல்லாஹ் அதற்காண பதிலை எங்களின் வேதத்திற்கு மாற்றமில்லாமல் பதில் அளிக்கின்றோம். அதை நீங்கள் எதனுடன் வேண்டுமென்றாலும் உரசிப்பார்த்துக் கொள்ளுங்கள். எங்களின் பதிலில் நிச்சயமாக உண்மையிருக்கும் அல்லாஹ்வின் உதவிக்கொண்டு என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றோம்.
<<< கல்வெட்டு said...
என்ன ஒரே அடியா இப்படி சேம்சைட் கோல் போட்டுட்டீங்க :-))) >>>
உம் இறைவனால் உம் மீது நிச்சயமாக இறக்கப்பட்ட (வேதத்)தை உண்மையென அறிகிறவர் குருடராக இருப்பவரைப் போலாவாரா? நிச்சயமாக (இவ்வேதத்தின் மூலம்) அறிவுடையவர்கள் தாம் நல்லுபதேசம் பெறுவார்கள். (அல்குர்ஆன் 13:19)
(நபியே!) பாக்கியம் பெற்ற இவ்வேதத்தை உம்மீது அருளியுள்ளோம் - அவர்கள் இதன் வசனங்களைக் கவனித்து ஆய்வதற்காகவும், அறிவுடையோர் நல்லுணர்வு பெறுவதற்காகவும். (அல்குர்ஆன் 38:29)
கல்வெட்டு அவர்களே... மேற்கூறியவைகள் தான் எங்களது வேதமான திருமறைக்குர்ஆனில் உள்ளவை. எங்களின் இறைவன் எங்களை கண்ணை மூடிக்கொண்டு வேதத்தை பின்பற்றச் சொல்லவில்லை என்பதை இப்பொழுதாவது உணர்ந்துக் கொண்டீர்களா? ஆய்வு, அறிவு இவ்விரண்டும் ஒருங்கேக் கொண்ட பகுத்தறிவிற்கும் ஏதாவது வேறுபாடு உண்டா? இதில் எங்கு வந்தது சேம்சைட் கோல்?
<<< Kanagavelan said...
இறைவன் தன் பதிவேட்டில் பதிவு செய்து வைத்திருப்பது மிருகங்கள் செய்யும் காரியங்கள் மட்டும்தானா? >>>
மிருகங்கள் மட்டும் அல்ல. அல்லாஹ் படைத்த அனைத்தையும் பதிவு செய்து வைக்கின்றான். இதைத்தான் அல்லாஹ் தனது திருமறையில் கீழ்கண்டவாறு கூறுகின்றான் :
பூமியில் ஊர்ந்து திரியும் பிராணிகளும், தம் இரு இறக்கைகளால் பறக்கும் பறவைகளும் உங்களைப் போன்ற இனமேயன்றி வேறில்லை; (இவற்றில்) எதையும் (நம் பதிவுப்) புத்தகத்தில் நாம் குறிப்பிடாமல் விட்டு விடவில்லை; இன்னும் அவை யாவும் அவற்றின் இறைவனிடம் ஒன்றுசேர்க்கப்படும். (அல்குர்ஆன் 6:38)
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும், 'குர்ஆனிலிருந்து நீங்கள் எதை ஓதினாலும், நீங்கள் எந்தக் காரியத்தை செய்தாலும், நீங்கள் அவற்றில் ஈடுபட்டிருக்கும்போது நாம் கவனிக்காமல் இருப்பதில்லை. பூமியிலோ, வானத்திலோ உள்ளவற்றில் ஓர் அணுவளவும் (நபியே!) உம் இறைவனுக்குத் (தெரியாமல்) மறைத்து விடுவதில்லை. இதை விடச் சிறியதாயினும் அல்லது பெரிதாயினும் விளக்கமான அவன் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. (அல்குர்ஆன் 10:61)
வானத்திலும், பூமியிலும் மறைந்துள்ளவற்றில் நின்றும் எதுவும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான குறிப்பேட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை. (அல்குர்ஆன் 27:75)
எனினும் நிராகரிப்பவர்கள்: '(நியாயத் தீர்ப்புக்குரிய) அவ்வேளை நமக்கு வராது' என்று கூறுகிறார்கள்; அப்படியல்ல! என் இறைவன் மீது சத்தியமாக, நிச்சயமாக (அது) உங்களிடம் வந்தே தீரும்; அவன் மறைவான(யா)வற்றையும் அறிந்தவன்; வானங்களிலோ, பூமியிலோ ஓர் அணுவளவும் அவனை விட்டு மறையாது; இன்னும், அதைவிடச் சிறியதோ, இன்னும் பெரியதோ ஆயினும் தெளிவான (லவ்ஹுல் மஹ்ஃபூல்) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை என்று கூறுவீராக. (அல்குர்ஆன் 34:3)
அன்றியும், அர் ரஹ்மானின் அடியார்களாகிய மலக்குகளை அவர்கள் பெண்களாக ஆக்குகிறார்கள்; அவர்கள், படைக்கப்பட்ட போது இவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுடைய சாட்சியம் பதிவு செய்து வைக்கப்பட்டு, அவர்கள் கேள்வி கேட்கப்படுவார்கள்.(அல்குர்ஆன் 43:19)
(அன்று) ஒவ்வொரு சமுதாயத்தையும் முழந்தாளிட்டிருக்க (நபியே!) நீர் காண்பீர்; ஒவ்வொரு சமுதாயமும் அதனதன் (பதிவு) புத்தகத்தின் பக்கம் அழைக்கப்படும்; அன்று, நீங்கள் (உலகில்) செய்திருந்ததற்குரிய கூலி கொடுக்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 45:28)
நிச்சயமாக ஒவ்வொரு அணுவின் அசைவுகளும் பதிவு செய்யப்படுகின்றது என்பதை தாங்கள் இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.
'இது உங்களைப்பற்றிய உண்மையைக் கூறும் நம்முடைய புத்தகம்; நிச்சயமாக நாம் நீங்கள் செய்து வந்ததைப் பதிவு செய்து கொண்டிருந்தோம்' (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் 45:29)
நல்லடியார்,
NON-absorbable materials பயன்படுத்தப் படுவது உண்டு.
அப்படியே மற்ற கேள்விகளுக்கும் பதில் கூறியிருக்கலாமே (நான்கு கேள்விகள் குறிப்பிட்டிருந்தேன்)- சுவனத்தைப் பற்றிக் கேட்டிருப்பதை எல்லோரும் ஒரேயடியாகப் புறந்தள்ளி விட்டு விட்டீர்களே - எனது பழைய கேள்விகள் போலவே!
சுவனப்பிரியன்,
//நடந்தவை நடக்கவிருப்பவை அனைத்தையும் ஒன்று விடாமல் இறைவன் தன்னிடம் உள்ள பதிவேட்டில் பதிவு செய்திருக்கிறான். அதில் உள்ளபடியே அனைத்துக் காரியங்களும் நடக்கின்றன.// இதுதான் predeterminism
இவை ஆபிரஹாமிய மதக் கோட்பாடுகள். இதைப்பற்றி (freewill VS predeterminism)எனது பதிவுகளில் ஏற்கெனவே விவாதித்துள்ளேன். இவைகள் மதங்கள் சொல்லும், மதங்களில் இருக்கும் paradox. அவைகளுக்கு நம்பிக்கையற்றோரைத் திருப்தி படுத்தும் convincing பதில் கொடுக்க முடிந்ததில்லை இதுவரை என்பது நடைமுறை வரலாறு.
நன்றி.
bye!
<<< Kanagavelan said...
//நிச்சயமாக ஒவ்வொரு அணுவின் அசைவுகளும் பதிவு செய்யப்படுகின்றது என்பதை தாங்கள் இதன் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.//
அப்படியென்றால், ஏற்கெனவே எல்லா தீமைகளும் நடப்பதை நிச்சயம் செய்துவிட்டபிறகு யாரால் அதனை எதிர்த்து நல்ல காரியம் செய்ய முடியும்? பிறகு தீமை செய்ததற்காக மனிதர்களை தண்டிப்பது எப்படி நியாயம்? >>>
ஐயா கனகவேல், நீங்க புரிந்துக் கொண்டு வேண்டுமென்றே கேட்கின்றீர்களா? அல்லது நிச்சயமாக புரியாமல்தான் கேட்கின்றீர்களா என விளங்கவே இல்லை.
ஒரு அணுவிற்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. அந்தப்பக்கங்கள் நன்மையும், தீமையையும் கொண்டுள்ளது. அதில் எதை தாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இறைவன் உங்களின் விருப்பத்திற்கே (சரியான விளக்கங்களுடன்) விட்டுவிடுகின்றான். இதில் உங்களின் இச்சை எதை நாடுகின்றதோ அதை செய்துக் கொள்ளுங்கள் அதற்காண பலன் மறுஉலகத்தில் இறைவன் புறத்திலிருந்து உங்களுக்காக காத்திருக்கும்.
ஒன்றை நீங்கள் மறந்துவிடக் கூடாது இந்த உலக வாழ்கை நிரந்தரமானது இல்லை மற்றும் இவ்வாழ்கை நமக்கு ஒரு சோதனையே! இதில் நாம் நன்மையை நாடி வெற்றிப் பெருவதே இவ்வுலக, மறுஉலக வாழ்கையின் வெற்றியாகும்.
முதலில் நல்லதையே எண்ணுங்கள்; நிச்சயமாக எண்ணம் போல் வாழ்கை அமையும். அல்லாஹ் போதுமானவன்.
<<< At 3:53 PM, Kanagavelan said...
ஒரு அணுவுக்கு நன்மை தீமை ஆகிய இரண்டு பக்கங்கள் இருக்கின்றன என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரம் உண்டா? >>>
Atomic Power: மின்சாரத்தை தயாரிப்பதற்காகவும்,
Atomic Bomb : ஹிரோசிமா, நாகசாகி போன்ற நகரங்களை அழிக்கவும் பயன்தருகின்றது.
<<< Kanagavelan said...
//அதில் எதை தாங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை இறைவன் உங்களின் விருப்பத்திற்கே (சரியான விளக்கங்களுடன்) விட்டுவிடுகின்றான்.//
ஒருவர் எந்த வழியை எடுப்பார் என்பது ஏற்கெனவே நிச்சயம் செய்து வைக்கப்படவில்லை என்று கூறுகிறீர்களா? >>>
இறைவன் கூறுகின்றான்: நீ நன்மையை செய்தால் நான் உனக்கு சொர்க்கத்தைத் தருவேன் எனவும், நீ தீமையை செய்தால் உனக்கு நரகம் தான் எனக் கூறிய இறைவனிடம் தாங்கள் எதைத்தான் நிச்சயம் செய்திருக்க வேண்டும் என விரும்புகின்றீர்கள்? நீங்கள் எதை நிச்சயப்படுத்த வேண்டும் எனக் கூறுகின்றீர்களோ? அதைப்பற்றிய அறிவு மனிதர்களாகிய நமக்கு கிடையாது என இறைவன் கூறுகின்றான். அது மறைவானவை எனவும் கூறுகின்றான். பிறகு ஏன் நாம் அதையே ஆராய வேண்டும். அதனால் ஏற்படும் பலன் என்ன?
<<< Kanagavelan said...
ஆக, ஒருவர் நன்மை வழியை எடுக்கப்போகிறாரா தீய வழியை எடுக்கப்போகிறாரா என்பது இறைவனுக்கு தெரியாது என்று கூறலாமா? >>>
நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான். (அல் குர்ஆன் 15:86 )
அப்புறம் எப்படிங்க இறைவனுக்கு தெரியாது எனக் கூற முடியும். நமக்கு அதைப்பற்றி அறிவு கொடுக்கப்படவில்லை என்றுதான் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அன்புள்ள அப்துல் குத்தூஸ்,
//எங்களின் வேதத்தை எப்படி புரிந்துக் கொள்ள வேண்டும் என உங்களுக்கு சரியான அறிவு இல்லாததால் இப்படிக் கூறுகின்றீர்கள் என நினைக்கின்றேன். //
உங்களின் மதம் சார்ந்த பகுத்தறிவை நான் சரியாக புரிந்து கொள்ளவில்லை.எனக்கு அத்தகைய அறிவு இல்லை.சரியே.
நிற்க,பகுத்தறிவு என்பது மதம் மற்றும் அனைத்து அறிவியல் உண்மைகளையும் தனது அறிவால் பகுத்து அறிந்து , பலவற்றையும் கேள்விகளுக்கு உட்படுத்துவது ஆகும். அதுவே பகுத்தறிவு பற்றிய என் புரிதல்.பகுத்தறிவில் முதலில் கேள்விக்கு உள்ளாக்கப்படுவது நம்பிக்கை.
//உங்கள் வேதத்தை எப்படி விளங்க வேண்டும் என்ற அறிவு நிச்சயமாக எனக்கு இல்லை. //
எனக்கு வேதம் என்று எதுவும் கிடையாது.நான் எந்த வேதங்களையும் கடைபிடிப்பதாக எங்கும் சொன்னதாக ஞாபகம் இல்லை.எல்லா மதங்களையும் தாண்டி ஒரு நிலை இருக்கிறது அது மனிதம்.அது மட்டுமே எனது நம்பிக்கை.எனது நம்பிக்கையின்படி எந்த நம்பிக்கையாளருடனும் விவாதம் செய்யக் கூடாது.அது விவாதத்தை வளர்த்து மனிதத்தை காயப்படுத்தும்.
எந்த வகையிலும் உங்களின் மத நம்பிக்கைகளையோ அல்லது அது காட்டும் பகுத்தறிவையோ எனது பின்னூட்டம் சீண்டி இருக்குமேயானால் மன்னிக்க.
ப்ரியன்,
//'ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப் பட்ட அளவு உள்ளது' என்ற சொற்றொடர் மிகவும் முக்கியமாக கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். //
என்னோட பதிவு படிச்சீங்களா... இங்கே "ஆபூர்வக் காதல்:சிம்பயொசிஸ்"
http://kurangumudi.blogspot.com/2006/05/blog-post_09.html
உங்கள் அன்னியப் பொருள் ஹூம் ரிஜெக்ஸன் போன்றவகைளுக்கு அங்கே சில உண்மைகளை கடவுள் வேறொரு விந்தையின் மூலம் நமக்கு உணர்த்தி உள்ளான்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதனை.
நேசி.
<<< Kanagavelan said...
ஆக ஒரு மனிதன் அடுத்து தீய வழியை எடுக்கப்போகிறானா நல்ல வழியை எடுக்கப்போகிறானா என்று ஆண்டவனே தீர்மானம் செய்துவிட்டு, பிறகு கெட்ட வழியை எடுத்ததற்காக அவனை தண்டிப்பது என்ன நியாயம்?
>>>
மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர். (அல்குர்ஆன் 3:104)
ஏங்க தீர்மானத்திலேயே நிற்கின்றீர்கள்? அப்படி இறைவன் தீர்மானித்திருந்தால், அவன் ஏன் மேற்கண்டவாறு தனது திருமறையில் கூறியவாறு மக்களை நன்மையின் பக்கம் அழைக்க ஒரு கூட்டத்தை ஏற்படுத்த வேண்டும்?
இதிலிருந்து என்ன விளங்குகின்றது? நீங்கள் என்ன நாடுகின்றீர்களோ? அதை இறைவன் நாடவில்லை என்பது புரிகின்றதா?
மீண்டும் கூறுகின்றேன் இந்த உலகம் நமக்கு ஒரு சோதனையே... இதில் இறை நம்பிகையை இழக்காமல் இருப்பதே வெற்றியாகும்.
<<< Kanagavelan said...
உலகில் எது நடந்தாலும் இறைவனின் ஆணைப்படியே நடக்கிறது என்று சொன்னால், மனிதன் செய்யும் செயல்களுக்கு, இறைவன் ஆட்டுவிப்பதால், எப்படி மனிதனை குறை சொல்வது என்பதுதான் கேள்வி >>>
உங்களுடைய கேள்வியின் சாரத்தைக் காணும்பொழுது விதியைப் பற்றியதாகவே உள்ளது. இதற்காண தகுந்த பதிலை சகோதரர் பி. ஜைனுல் ஆப்தினின் விளக்கத்தைக் கீழ் காண்போம் :
அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?
பி.ஜெயின் பதில் :
விதியை நம்புவதால் நீங்கள் கூறுவது போன்ற கேள்விகள் எழுகின்றன. விதியை நம்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்போது வேறு விதமான கேள்விகûளை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஒவ்வொரு மனிதனும் தனது முடிவின் படி தான் செயல்படுகிறான். இதில் இறைவனின் தலையீடு ஏதுமில்லை என்று நம்பினால் நீங்கள் கேட்டுள்ள கேள்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
ஆனால், கடவுள் என்பவன் பலவீனனாக, கையாலாகாதவனாகக் கருதப்படும் நிலை இதனால் ஏற்படும்.
''நடந்தது, நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கவிருப்பது அனைத்தையும் அறிந்தவன்'' என்பது கடவுளின் பண்பாகும். அந்தப் பண்பு இல்லாதவன் கடவுளாக இருக்க முடியாது.
நாளைய தினம் நீங்கள் சென்னை வரவிருக்கிறீர்கள். இது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியுமா என்று கேட்கப்படும் போது தெரியாது என்று நீங்கள் கூறினால் அப்படி ஒருவனை இறைவனாக ஏற்கத் தேவையில்லை.
நாளை நடப்பது எப்படி எனக்குத் தெரியாதோ அது போல இறைவனுக்கும் நாளை நடப்பது தெரியாது என்று ஆகிறது.
நாளை நீங்கள் சென்னை வருவது இன்றைக்கே இறைவனுக்குத் தெரியும் என்பது உங்கள் விடையாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்திருக்கிறானோ அது நடந்து தீர வேண்டும்.
நாளை எது நடக்கும் என்று இறைவன் அறிந்து வைத்துள்ளானோ அதைத் தான் உங்களால் செய்ய முடியுமே தவிர அதை மீற முடியாது என்பதும் இந்த விடைக்குள் அடங்கியுள்ளது.
அதாவது நாளை என்ன நடக்கும் என்பது இறைவனுக்குத் தெரியும் என்று நீங்கள் நம்பினால் விதியின் நம்பிக்கையும் அதனுள் அடங்குகிறது.
அவனுக்குத் தெரியாது என்று நம்பினால் அப்படி ஒரு இறைவன் தேவையில்லை என்று ஆகிறது.
இரண்டு நம்பிக்கைகளிலுமே சில சங்கடங்கள் உள்ளன.
இதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள்.
(நூல்: அஹ்மத் 6381)
இஸ்லாத்தின் கொள்கை, கோட்பாடு, சட்டத் திட்டம் பற்றி என்ன கேள்வி கேட்கப்பட்டாலும் அதற்கு அறிவுப்பூர்வமான விடை இஸ்லாத்தில் உண்டு. விதியைப் பற்றி மட்டும் விவாதிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை விதித்து விட்டதால் அதற்கு மேல் எவரும் விளக்கம் கூற முடியாது.
அப்படிக் கூற ஆரம்பித்தால் மேலே நாம் சுட்டிக் காட்டிய இரண்டு சங்கடங்களில் ஒன்றை எதிர் கொள்ளாமல் இருக்க முடியாது.
அறிவுப்பூர்வமான பல்லாயிரக்கணக்கான கொள்கை கோட்பாடுகளைத் தந்த இறைவன் நம்மைச் சோதிப்பதற்காகக் கூட இந்த நிலையை ஏற்படுத்தியிருக்கலாம்.
அதே நேரத்தில் விதியைப் பற்றி மற்ற மதங்களின் நம்பிக்கை போல் இஸ்லாத்தில் விதியைப் பற்றிய நம்பிக்கை அமையவில்லை.
''எல்லாமே விதிப்படி நடக்கும். எனவே உழைக்காதே! நோய் வந்தால் மருத்துவம் செய்யாதே'' என்று இஸ்லாம் கூறவில்லை.
மாறாக எது நடந்து முடிந்து விட்டதோ அந்த விஷயங்களில் மட்டுமே விதியின் மேல் பாரத்தைப் போடுமாறு இஸ்லாம் வழிகாட்டுகிறது.
எது நடக்கவில்லையோ அந்த விஷயங்களில் விதி என்று ஒன்று இல்லாவிட்டால் எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடக்குமாறு வழிகாட்டுகிறது; உழைக்கச் சொல்கிறது; பாடுபடச் சொல்கிறது.
எனவே இஸ்லாம் கூறுவது போல் விதியை நம்புவதால் மனிதனின் முன்னேற்றத்துக்குக் கடுகளவும் அது தடையாக இராது.
அதே நேரத்தில் விதியை நம்புவதால் மனித குலத்துக்குக் கிடைக்கும் நன்மைகளை நினைத்துப் பார்த்தால் அதற்காகவாவது விதியை நம்புவது தான் மனித குலத்துக்கு உகந்ததாகும்.
ஒரு மனிதன் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி ஒரு காரியத்தில் ஈடுபடுகிறான். அந்தக் காரியம் கைகூடவில்லை என்று வைத்துக் கொள்வோம்.
விதியை நம்புகின்றவன் ''நாம் என்ன தான் முயன்றாலும் இறைவனின் நாட்டமும் இருக்க வேண்டுமல்லவா?'' எனக் கூறி மறு நாளே சகஜ நிலைக்கு வந்து விடுவான்.
அவன் விதியை நம்பாதவன் என்று வைத்துக் கொள்வோம்.
இவ்வளவு பாடுபட்டும் கைகூடவில்லையே என்று புலம்பியே மன நோயாளியாவான். அந்த அளவுக்குப் போகா விட்டாலும் அவன் சகஜ நிலைக்கு வருவது மிகவும் தாமதமாகும்.
உங்களுக்குத் தவறி விட்டதற்காக நீங்கள் கவலைப்படாமல் இருப்பதற்காகவும், அவன் உங்களுக்கு வழங்கியதில் நீங்கள் பூரித்துப் போகாமல் இருப்பதற்காகவும், (விதியை ஏற்படுத்தியுள்ளான்) கர்வமும் பெருமையும் கொண்ட ஒவ்வொருவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்.
(திருக்குர்ஆன் 57:23)
விதியை நம்புவதால் இரண்டு நன்மைகள் ஏற்படும் என்று இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
நமக்கு செல்வங்களையும், வசதிகளையும், வாய்ப்புகளையும் அல்லாஹ் தாராளமாக வழங்கினால் நம்மிடம் ஆணவமும், கர்வமும் குடியேறும்.
விதியை நம்புவதன் மூலம் இந்த மன நோயிலிருந்து விடுபடலாம்.
''இந்தச் செல்வங்கள் அல்லாஹ்வின் விதிப்படி தான் நமக்குக் கிடைத்துள்ளனவே தவிர நம்மால் அல்ல'' என்று நினைத்தால் ஆணவம் இருந்த இடம் தெரியாமல் மறையும்.
அது போல் தாங்க முடியாத துன்பம் நமக்கு ஏற்பட்டால் நாம் இடிந்து போய் விடுவோம். பல நாட்கள், பல மாதங்கள் எதிலும் ஈடுபாடு காட்டாமல் விரக்தியடைந்து விடுவோம். இந்த மன நோயையும் விதியின் மீதுள்ள நம்பிக்கை நீக்கும்.
''நம்மால் என்ன செய்ய முடியும்? அல்லாஹ்வின் நாட்டம் அவ்வளவு தான்'' என்று நினைத்தால் மிக விரைவாக ஒருவன் சகஜ நிலையை அடைவான்.
இவ்விரு நன்மைகளும் விதியை நம்புவதால் மனித குலத்துக்கு ஏற்படுவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.
தனக்கு எவ்வளவு செல்வம் கிடைக்க வேண்டும் என்ற விதி இருக்கிறதோ, அதன்படி செல்வம் வந்து சேர்ந்து விடும் என்று நம்பி அவர் எந்தத் தொழிலும் செய்யாமல் வீட்டில் முடங்கிக் கிடக்க மாட்டார். மாறாக, செல்வத்தைத் தேடி அலைவார். இந்த அக்கறையை வணக்க வழிபாடுகளுக்கும் வழங்க வேண்டும் என்று அவர் நினைக்காதது முரண்பாடாகவும் உள்ளது.
எனவே, விதியைப் பற்றி சர்ச்சைகளைத் தவிர்த்து விட்டு மனிதர்களால் அறிந்து கொள்ள இயலாத ஒன்றிரண்டு விஷயங்களை அல்லாஹ் வைத்திருக்கிறான் என்று முடிவு செய்து, விதியை நம்புவதால் கிடைக்கும் பயன்களை மனதில் நிறுத்தி, விதியை நம்புவது தான் நல்லது.
//அனைத்து செயல்களும் இறைவனால் செய்யப்படுகிறது என்றால், மனிதன் செய்யும் தீய செயலும் இறைவனால் தான் செய்யப்படுகிறது. அப்படி இருக்கும் போது அவனுக்கு நரகம் கொடுப்பது எவ்வகையில் நியாயம்?//
மனிதர்கள் பகுத்தறிவு பெற்றவர்கள். அதன் காரணமாகவே சுயேச்சையானவர்கள். நன்மை தீமையை உணர்ந்து; பிரித்தறிந்து நடக்க வேண்டியவர்கள். எந்த தீயவனும் "என் விதிப்படித் தான் நடக்கிறது - என்னை குற்றம் சொல்லாதீர்" என்று கூறி தப்பிக்க முடியாது. தலைவிதியை நாம் சுருக்கமாக: 'இந்த வழியில் சென்றால் நன்மை உண்டாகும்' - இந்த வழியில் சென்றால் தீமை உண்டாகும்' உன் அறிவின் துணை கொண்டு வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டியது உன் பொறுப்பு' : - சொல்லிவிடலாம்.
சாலையின் குறுக்கே கவனக்குறைவாகச் சென்று விபத்தில் அடிபட்டுவிட்டு 'எல்லாம் எந்தலைவிதி' என்று புலம்பக்கூடாது. இங்கே இறைவனின் விதி ஒன்று தான்:'வன்மையும் மென்மையும் மோதும் போது மென்மை சேதமடையும்'
விதியைப் பற்றி சுருக்கமாகச் சொல்வதென்றால் - Take the Past as Fate as you cannot change it. Try the Future by your effort since you don't know it.
//ஆனால் இறைவனுக்கு தெரியுமா தெரியாதா என்பதுதான் கேள்வி.//
அய்யா கனகவேலன்,
இறைவனுக்குத் தெரியுமா தெரியாதா என்று தெரிந்துக்கொள்ள மிகவும் விரும்புகிறீர்கள்.
இறைவனுக்கு எல்லாம் தெரியும். பகுத்தறிவை - பகுத்து அறியும் அறிவை - அவன் தான் மனிதனுக்கு அளித்தான். அதனால் அவன் தலையிடுவதில்லை. நாம் தான் பகுத்து அறிய வேண்டும். நம் அறிவுக்கு உதவியாகத்தான் இத்தனை தூதர்கள் அவன் புறமிருந்து.
அறிவு வரும்வரை தான் மனிதக்குஞ்சுக்கு கைப்பிடித்து நடத்த முடியும். அப்புறமும் என் கைப்பிடித்து தான் நீ நடக்க வேண்டும் என்றால் ஏன் எனக்கு அறிவைக்கொடுத்தாய் என்று கேட்பான்.
கத்தியை வைத்து பழத்தையும் அறுக்கலாம். கழுத்தையும் அறுக்கலாம். கத்தி போன்றது தான் அறிவும்.
எல்லோரையும் நல்லவனாகவே, நல்லதை தேர்ந்தெடுக்கும் அறிவுடையவனாகவே படைத்திருக்கலாமே (நன்மை தீமை ஏன்?) என்று அடுத்த கேள்வியை நீங்கள் கேட்கும் முன்...
கீழ்க்காணும் சில வினாக்களுக்கு பதிலளித்து விட்டு வாருங்கள்
1). இரவென்றும் பகலென்றும் இரு காலப்பிரிவு ஏன்? நாளெல்லாம் இரவாகவோ, (அ)பகலாகவோ இருந்திருக்கலாமே.
2). குளிர் என்றும் வெப்பம் என்றும் இரு காலநிலை ஏன்?
3). நேர் என்றும் எதிர் என்றும் இரு குறியீடு ஏன்? மின்சாரம் தேவைப்படாமல் செய்திருக்கலாமே?
இந்த கேள்விகளுக்கு நீங்கள் அளிக்கும் பதில் நீங்களே சிந்தித்துப்பார்க்கவேண்டியது. நாமும் தான்.
இதற்கு மேலும் விவாதம் தேவையில்லை. தேவை என்று நீங்கள் சொன்னாலும் நான் வரமாட்டேன். அஸ்ஸலாமு அலைகும். நன்றி.
Post a Comment