Followers

Tuesday, July 26, 2022

சனா கான்

 "எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்."

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிப் படங்களில் நடித்தவர் சனா கான். இவர் நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞராகத் திரையுலகில் பணியாற்றி வருபவர்.
அதேபோல, கடந்த 2012-ல் சல்மான் கான் தொகுத்து வழங்கிய இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதிப் போட்டிவரை வந்தார்.
சமீபகாலமாக சனா கான் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி என எதிலும் பணியாற்றுவதில்லை. கடந்த 2020-ல் முஃப்தி அனஸ் சயத் என்பவரைத் திருமணம் செய்து திருமண வாழ்வில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி ஒன்றைப் பதிவு செய்த சனா, தனது வாழ்வின் கடுமையாக நாள்கள் குறித்தும் தான் ஹிஜாப் அணிந்ததற்கான காரணம் குறித்தும் பேசியிருந்தார்.
இது பற்றிக் கூறிய அவர், “எனது கடந்தகால வாழ்க்கையில் பெயர், புகழ், பணம் எல்லாம் என்னிடம் இருந்தன. ஆனால் நிம்மதி என்னிடம் இல்லை. அந்த நாள்கள் மிகவும் கடுமையான ஒன்றாக இருந்தன. மிகுந்த மன உளைச்சலுடன் இருந்தேன்.
அப்போது 2019-ல், ரமலான் நாளன்று எனக்கு ஒரு கனவு வந்தது. அதில் ஒரு கல்லறையைப் பார்த்தது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அந்தக் கல்லறையில் நான் இருப்பதைப் பார்த்தேன்.
அந்தக் கனவு, இதுதான் என் முடிவு என்று எனக்கு உணர்த்தியது போல் இருந்தது. இது எனக்குக் கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. அதன்பின் ஏராளமான இஸ்லாமிய உரைகளைக் கேட்க ஆரம்பித்தேன்.
குறிப்பாக அதிலிருந்த 'உங்களின் கடைசி நாள் ஹிஜாப் அணிந்த முதல் நாளாக இருக்க விரும்பவில்லை' என்ற அழகிய வாசகம் ஒன்று என்னை ஆழமாகச் சிந்திக்க வைத்தது.
மறுநாள் காலையில் நான் எழுந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அன்று முதல் ஹிஜாப் அணிய ஆரம்பித்தேன். இனி இதை ஒருபோதும் அகற்ற மாட்டேன் என்று உறுதி செய்து கொண்டேன். இப்போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என்றார்.
நன்றி: ஆனந்த விகடன்



Sunday, July 24, 2022

லவ் ஜிஹாத் காமெடியாகிப் போனது....

 லவ் ஜிஹாத் காமெடியாகிப் போனது....


உபி - கஸ்கஞ்ச்


சுமன் சவ்ஹான் (34) ஆகாஷ் சோலங்கி (28) இருவரும் ராதா என்ற பெண்ணிடம் பணம் தருவதாக ஆசை காட்டி லவ் ஜிஹாதில் இரு முஸ்லிம்கள் தன்னை இஸ்லாத்துக்கு மாறச் சொல்வதாக புகார் கொடுக்க வைத்தனர்.. விசாரணையில் புகாரில் சிக்கிய இருவரும் முஸ்லிம் பெயரில் ஒளிந்துள்ள இந்துக்கள். பிஜேபியில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். ராதாவிடம் மருத்துவ பரிசோதனைக்கு வர காவல் துறை பணிக்கவே அவளும் பணத்துக்காக ஆசைப்பட்டு பொய் கூறியதாக ஒத்தக் கொண்டுள்ளாள். தற்போது மூவரையும் காவல்துறை கைது செய்துள்ளது.


நாட்டை கலவர பூமியாக்குவதில் இந்த நாய்களுக்கு அப்படி என்ன ஒரு சந்தோஷம். இவர்கள்தான் தேச துரோகிகள்.


தகவல் உதவி

டைம்ஸ் ஆஃப் இந்தியா

24-07-2022





'நான் அய்யராக மாற முடியுமா? பூணூல் போட முடியுமா?'

 'ஏன் இஸ்லாம் மதத்துக்கு மாறுகிறீர்கள்? இந்து மதத்தில் என்ன குறை?'


'சாதி பாகுபாடு. என்னை தலித் என்பதால் இழிவாக பார்க்கிறார்கள்.'


'அப்போ சாதி மாறுங்களேன். சத்ரியனா ஏத்துக்கிறாங்களே?'


'நான் அய்யராக மாற முடியுமா? பூணூல் போட முடியுமா? கருவறைக்குள் சென்று மந்திரம் ஓத முடியுமா?'


'அது எப்படி? அது நடக்காதுல்ல'


'அது நடக்காது என்பதால்தான் சாதி வேற்றுமை பார்க்காத இஸ்லாத்தை ஏற்கிறேன்... போதுமா?'




காலம் மாறிக் கொண்டே வருகிறது...

 


Sunday, July 17, 2022

ஏணிப்படிகள்

 Three friends together created this masterpiece from Ahmednagar Maharashtra.. Sameer Bagwan, Aasif Pathan, Aejaz Khan are its inventors from Darbar Fabrication.




Friday, July 15, 2022

'பாரத் மாதா கீ ஜே'

 உபி- முராதாபாத்


ஜாஹித் என்ற முஸ்லிமுக்கு சொந்தமான ஷோ ரூமிலிருந்து 2.67 லட்சத்துக்கான மர சாமான்கள் வாங்கப்பட்டுள்ளது. இதனை வாங்கியவர் கான்ஷியாம் வர்மா என்ற பிஜேபி தலைவர். இதற்கான பாக்கி தொகையை ஜாஹித் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கன்ஷியாம் வர்மா ஜாஹிதின் வீட்டுக்கு புல்டோஷரை அனுப்பியுள்ளார். 


ஆட்சி அதிகாரம் இருப்பதால் இப்படி பொது மக்களின் காசை சாப்பிடுகிறோமே என்ற வெட்கம் துளி கூட இருப்பதில்லை இது போன்ற ஜந்துக்களுக்கு... அனைத்து குற்ற செயல்களையும் செய்து விட்டு 'பாரத் மாதா கீ ஜே' என்று கோஷம் வேறு போடுவார்கள் இந்த வெட்கங்கெட்டவர்கள்.




Thursday, July 07, 2022

எவருக்கும் உதவாமல் நெருப்பில் எரிகின்றனர்.

 முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளில் ஆடுகளை வாங்கி அதனை அறுத்து தாங்களும் உண்டு ஏழைகளுக்கும் பெரும்பகுதியை கொடுக்கின்றனர்.


ஆனால் இங்கோ ஆட்டை அதன் வயிற்றில் அறுத்து யாகம் நேர்ச்சை என்ற பெயரில் எவருக்கும் உதவாமல் நெருப்பில் எரிகின்றனர்.


இந்துக்களில் பெரும்பாலான மக்கள் ஆடு மாடுகளை வளர்ப்பது ஹஜ்ஜூப் பெருநாளை உத்தேசித்தே. ஹஜ்ஜூப் பெருநாளுக்கு சில நாள் முன்பிருந்தே ஆடு, மாடுகள் நல்ல விலைக்கு விற்று தீர்ந்து விடும். இவற்றை வளர்த்த இந்துக்களும் மகிழ்ச்சியாக உள்ளனர். கிராம பொருளாதாரத்தை ஓரளவு செழிப்பாக்குகிறது இந்த ஹஜ்ஜூப் பெருநாள். யுட்பில் பல இந்து வியாபாரிகளின் பேட்டியையும் நாம் பார்க்கலாம்.




Monday, July 04, 2022

அமித்ஷா கூறும் ராமராஜ்யம் இதுதானா?

 தெலுங்கானா - சங்கரெட்டி 


நரேஷ் (வயது 26) தலித்.


மேல் சாதி காரர்களால் மிருகத்தனமாக அடிக்கப்படுகிறார். கிராம மக்கள் சுற்றி நின்று வேடிக்கை பார்க்கின்றனர். காதல் விவகாரமாம். எதுவாக இருந்தாலும் இப்படித்தான் மிருகத்தைப் பொன்று அடிப்பார்களா? 


அமித்ஷா கூறும் ராமராஜ்யம் இதுதானா? சாதியின் பெயரால் இன்னும் எத்தனை உயிர்கள் பலியிடப்படும். 




கீழ்வெண்மணி படுகொலை - பார்ப்பனர்களின் பங்கு

 

கீழ்வெண்மணி படுகொலை - பார்ப்பனர்களின் பங்கு


 //கீழ்வெண்மணி படுகொலை மட்டும் ஒரு பார்ப்பனரால் நிகழ்த்தப்பட்டிருந்தால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு 'திராவிடர்கள்' அதனையே பேசப்படு பொருளாகக் கொண்டிருந்திருப்பார்கள். அவர்களின் துரதிஷ்டம், கொன்றது கோபாலகிருஷ்ண நாயுடுவாகப் போய்விட்டான்//

 

இப்படி ஒரு பதிவு ஏனென்று தெரியவில்லை யாரோ ஒரு திராவிட ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட so called கம்யூனிஸ்டால் எனக்கு திரும்பத்திரும்ப மீள்பதிவு என்று அனுப்பப் பட்டுக் கொண்டே உள்ளது. அதில் அவர்களுக்கு ஒரு திருப்தி போலும்.

 

பரவாயில்லை ஏதோ பதிலை எதிர்பார்க்கின்றார்கள் போலத் தெரிகின்றது.

 

முதலில் இதற்கு, “நாகை தாலுக்கா உணவு உற்பத்தியாளர் சங்கம் என்றுதான் பெயர். அதற்கு அப்போதைய தலைவர் ஆய்மழை மைனர் என்று சொல்லப்பட்ட, ஆய்மழை எஸ்.எஸ். ராமனாதத் தேவர்.

 

இது என்ன ஹோட்டல்காரன் சங்கமா? என்றுதான் இரிஞ்சூர் பி. கோபால கிருஷ்ணநாயுடு தலைவரானபோது "நாகை தாலுக்கா நெல் உற்பத்தியாளர் சங்கம்" என்றாகின்றது.

 

அந்த சங்கத்தின் உப தலைவர் யார் தெரியுமோ? ஆதமங்கலம். . தியாகராஜ அய்யர். அந்த சங்கத்தின் காரியதரிசி யார் தெரியுமோல்லியோ? .எஸ். மணி அய்யர். சட்ட ஆலோசகர் வி.எஸ். ராமஸ்வாமி அய்யங்கார், அப்பறம், ஜீ.ராமமூர்த்தி அய்யர்ன்னும் ஒருத்தர் இருந்திருக்கா தெரியுமோ?

 

எல்லாத்தையும் விட வெண்மணி சம்பவம் நடந்த அன்று மாலை நெல் உற்பத்தியாளர்கள் சங்க கனவான்களும் அவாளது அடியாட்களும், நுனியாட்களுமாக யார் தலைமையில் போனார்கள் தெரியுமா? சாட்சாத் மாங்குடி கிருஷ்ணமூர்த்தி அய்யர்.

 

பார்ப்பனர்கள் பூராவும் பத்திரமாக பதுங்கிவிட்டார்கள். அங்கே தவுசலே அதாவது பஞ்சாயத்தே என்ன தெரியுமோல்லியோ அரைப்படி நெல்லு இல்ல ஓய்? செங்கொடிய எறக்கு.,மஞ்சக்கொடிய புடி ங்கறது தான் ஓய்!

 

அந்த சங்கத்தில் இருந்த பாதி பேர்வழி அவாள்தான். அவா பதுங்கி இருந்ததின் காரணம் எது தெரியுமோ பாவா நவநீத கிருஷ்ணன், .ஜி.கஸ்தூரி ரெங்கன் என்ற பெரியாரின் பேராயுதங்கள். வரலாற்றை வாய்தா வாங்குவதுபோல பார்க்கக்கூடாது. வரலாற்றின் வழி நெடுக நடக்கவேண்டும்.

 

அப்போதுதான் பார்வை விசாலமாகும். மீண்டும் என்னை உசிப்பினால் என்னுடைய கேள்விகள் உங்களுக்கு வலிக்கும். எனக்கு பகை முரண் எது ? நட்பு முரண் எது ? என்பதும், இன்றைய அரசியல் சமூகத்தின் அக,புறச்சூழல் புரியும் என்பதால் கடந்து செல்கின்றேன். போதும் என நினைக்கின்றேன்.

 

அய்ம்பது ஆண்டுகால நெருப்பின் கருகல் வாடையும், அது கலந்த காற்றின் வீச்சும் முகர்வதற்கு நறுமணமாக இருக்காது என்பதை மட்டும் சொல்லிக் கொள்கின்றேன்.

 

-கவுதமன் பசு

தோழர் வசீகரன் கார்த்திக் பதிவு.