Followers

Tuesday, April 28, 2009

பன்றிக் கறியா! ஐயோ வேண்டாம்!

பன்றிக் கறியா! ஐயோ வேண்டாம்!
ஃபுளூ ஜூரம் தாக்கி அமெரிக்காவிலும் அதைச் சுற்றியுள்ள நாடுகளிலும் இதுவரை 170 பேர் இறந்திருக்கிறார்கள். அமெரிக்காவிலிருந்து வரும் அனைத்து பயணிகளையும் நன்கு சோதித்தே நாட்டுக்குள் அனுமதிக்க முடியும் என்று ஐரோப்பிய யூனியனும் கூறியுள்ளது. இந்த ஜூரத்துக்கு இதுவரை மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லையாம். தற்போதுதான் இதற்கான ஆய்வுகளிலேயே இறங்கியிருக்கிறார்கள்.

இந்த நோய் பன்றிக் கறியிலிருந்து பரவுவதாக தற்போது கண்டுபிடித்திருக்கிறார்கள். பன்றிக் கறி சாப்பிடுபவர்களுக்கு இந்த நோய் உடன் தொற்றுகிறதாம். இதைப்பற்றி எல்லாம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தாமல் எத்தனை ஓட்டு விழும் என்ற கணக்கிலேயே தலைவர்களின் பொழுது கழிகிறது.

எனவே இந்த நோயிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முதற்கட்டமாக பன்றிக்கறி சாப்பிடுவதை விட்டொழிப்போம். அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் குர்ஆன் பன்றிக் கறியைத் தடுத்துள்ளதால் ஏற்கெனவே தடை அமுலில் இருக்கிறது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் நமது நாடும் இது விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

'தாமாக செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, இறைவன் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே இறைவன் மனிதர்களாகிய உங்களுக்கு தடை செய்திருக்கிறான்.'
-குர்ஆன் 16:115

JEDDAH: Health Minister Dr. Abdullah Al-Rabeeah announced yesterday that no suspected cases of swine flu had been found in the Kingdom. He said his ministry had taken precautions to protect the health of citizens and residents.

“Since the appearance of the disease in different countries, we have intensified precautionary measures to protect the public,” the minister said, adding that the National Committee on Infectious Diseases had held a meeting to review the situation.
“We have been following the latest development of the disease through reports received from the World Health Organization (WHO). We have also instructed all health centers and departments to inform the ministry of suspected cases.”

Al-Rabeeah said the ministry had made sure that there were adequate amounts of medicine in its warehouses to treat the disease in the event of possible infections. He said a GCC conference on contagious diseases would be held on May 9.
Earlier, Director of Health Affairs in Jeddah Dr. Sami Badawood told Arab News: “People should rest assured we are fully prepared to deal with all types of contingencies.”

Badawood said his staff was following WHO bulletins on a daily basis and that they would act accordingly with people arriving in the Kingdom.
He emphasized that precautionary measures would be taken for all arrivals into the Kingdom. Health centers at airports and other entry points have been put on alert and will screen not only those arriving from infected areas but all arriving passengers.

Badawood said authorities would also clean and spray all aircraft and vehicles coming from infected areas.

He noted that over the years the Saudis working in health centers and quarantine areas had gained invaluable professional experience through dealing with millions of people who come to the Kingdom for Haj and Umrah.

Monday, April 27, 2009

இலங்கை பிரச்னை ஒரு இடியப்ப சிக்கல்!இன்று கலைஞரும் தன் பங்குக்கு உண்ணாவிரதத்தை நடத்தி முடித்து விட்டார். இவரின் உண்ணாவிரதத்தாலோ அல்லது சோனியாவின் நெருக்குதலாலோ தற்போது மேலிருந்து தாக்குதல் நடத்துவதை ஸ்ரீலங்கா படைகள் நிறுத்தி வைத்துள்ளன. ஏதோ ஒரு வகையில் அந்த அப்பாவி பொதுமக்களுக்கு விமோசனம் கிடைக்கட்டும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு மேலும் மக்கள் அரசு கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும். நமது நாடும் இந்த மக்களுக்காக மனிதாபிமான அடிப்படையில் 100 கோடி தருவதாக சொல்லியிருப்பதை வரவேற்போம். இந்த உதவி மேலும் அதிகரிக்க வேண்டும். அந்த மக்களின் சுகாதாரம் பிள்ளைகளின் படிப்பு தற்கால குடியிருப்புகள் போன்றவற்றிற்கு இந்த பணமெல்லாம் மிக சொற்பமே! பொது மக்களிடமிருந்தும், வெளிநாட்டு வாழ் தமிழர்களிடம் இருந்தும் வசூல் செய்யலாம். அந்த மக்களுக்கு இந்த உதவிகள் முறையாக போய் சேருகிறதா என்பதும் கண்காணிக்கப்பட வேண்டும்.

இந்த நேரத்திலாவது நமது மரம் வெட்டி ராமதாஸூம், வாய்ச்சவடால் வைகோவும், கூத்தாடிகளான ஜெயலலிதா விஜயகாந்த் போன்றோர் காழ்ப்புணர்ச்சிகளை தூரமாக்கி அந்த மக்களுக்கு உதவுவதில் அரசுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும்.

அப்பாவி பொது மக்கள் கொல்லப்படுவதில் எல்லோருக்கும் கோபம் வருவது இயற்கை. இதனால் இலங்கை அரசாங்கத்தையும் அதை கண்டிக்காத சோனியா, கலைஞர் போன்றோரையும் எப்படி எல்லாம் திட்ட வேண்டுமோ அத்தனை வசை மொழிகளையும் போட்டு பதிவர்களாகிய நாம் திட்டி தீர்த்து விட்டோம். இங்கு ஒன்றை நாம் வசதியாக மறந்து விடுகின்றோம். அந்த அப்பாவி மக்களை யுத்த பிரதேசத்திலிருந்து வெளியேற விடாமல் தடுத்து வைத்துக் கொண்டிருக்கும் விடுதலைப் புலிகளை நாம் யாருமே கண்டிப்பதில்லை. ஏனென்றால் கண்டிக்கும் அனைவருக்கும் 'தமிழின துரோகி' என்ற பட்டம் கிடைத்து விடுமே என்ற பயம் தான். புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பி வந்து பலரும் '12, 13 வயது என் பிள்ளளைகளை எல்லாம் வலுக்கட்டாயமாக போரில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்களை மீட்டுக் கொடுங்கள் அய்யா!' என்று கதறி அழுதது என் கண்ணில் நீரை வரவழைத்தது. பிரபாகரன் என்ற ஒற்றை மனிதரை அரியணையில் ஏற்றுவதற்காக இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்கப் போகிறோம்?

பத்மனாதன், அமிர்தலிங்கம், ராஜீவ் காந்தி, ஆயிரக்கணக்கில் தமிழ் முஸ்லிம்கள், இன்று அரணாக பலி கொடுக்கப்படும் வன்னி பகுதி மக்கள் என்று இவர்களால் தமிழ் மக்களுக்கு கிடைத்த துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. தமிழ் ஈழம் உருவாக சாத்தியமே இல்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். அப்படியே உருவானாலும் சர்வாதிகாரியான பிரபாகரனை தலைவனாக தமிழ் முஸ்லிம்கள் என்றுமே ஏற்க்கப் போவதுமில்லை. தமிழர்களிலேயே பாதிக்கு மேற்பட்டவர்கள் பிரபாகரனை தலைவனாக ஏற்றுக் கொள்வதில்லை. இந்த நிலையில் இவர் எந்த காலத்தில் தமிழ் ஈழத்தை உருவாக்கப் போகிறார்? எனவே எஞ்சியுள்ள மக்களை காப்பாற்றவாவது புலிகள் சரணடைந்து இலங்கைப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

அகதி முகாம்களில் தங்கியுள்ள அந்த மக்களுக்கு சாதி மத பேதமின்றி உதவிகள் போய்ச் சேர வேண்டும். அந்த மக்களுக்கு சாந்தியும் சமாதானமும் நிலவ எல்லோருக்கும் பொதுவான அந்த இறைவனை இந்நேரத்தில் பிரார்த்திக்கிறேன்.

Friday, April 24, 2009

மரணத்தைத் தொட்ட இந்தியர்!உத்தர பிரதேச மாநிலம் ஆஸம்காட் நகரிலிருந்து பிழைப்பு தேடி சவூதி வந்தவர்தான் அபு ரஃபி. வயது 25. வேலை நேரத்தில் சவூதி இளைஞனோடு அபு ரஃபிக்கு வாய்த்தகராறு ஏற்படுகிறது. கோபத்தில் அந்த சவூதி கத்தியை எடுத்து ரஃபியை நோக்கி குத்த வருகிறான். தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ரஃபி சவுதியிடம் இருந்த கத்தியை பிடுங்கி அவனையே கொன்று விடுகிறார். நீதி விசாரணை நடைபெறுகிறது. 'இது திட்டமிட்ட கொலை' என்று முடிவாகி 'கொலைக்கு கொலை' என்ற இஸ்லாமிய சட்டத்தின் படி அபு ரஃபிக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.

இந்த சம்பவம் நடந்த இடம் சவூதி அரேபியாவில் இருக்கும் அபஹா என்ற நகருக்கு பக்கத்தில் உள்ள கமீஸ்முஸாயத் என்ற சிற்றூராகும். இந்த சம்பத்தைக் கேள்விப்பட்ட பலரும் இது தற்காப்பு கொலைதான் என்பதை விளங்கிக் கொண்டு நமது இந்திய தூதரகத்தை அணுகியிருக்கிறார்கள். இந்திய தூதர் எம்.ஓ.எச்.ஃபாரூக்(அதாங்க....நம்ம பாண்டிச்சேரி .பாரூக் பாய்தான்) மேலும் இந்திய தூதரக அதிகாரிகள் பலரும் உண்மை நிலையை சம்பத்தப்பட்டவர்களுக்கு விளக்க மூடப்பட்ட வழக்கு திரும்பவும் திறக்கப்படுகிறது. நீதிபதிகள் தீர ஆராய்ந்து 'இது தற்காப்பு கொலைதான்' என்ற முடிவுக்கு வந்து கடைசி நிமிடத்தில் மரண தண்டனையை ரத்து செய்து ரஃபியை விடுதலையாக்கியுள்ளார்கள். மரணத்தின் வாசலைத் தொட்டு விட்டு இன்று ஒரு புது மனிதனாக தனது குடும்பத்தை சந்திக்க உத்தர பிரதேசம் நோக்கி செல்கிறார் அபு ரஃபி.

'என்னால் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. இறைவன் எனக்கு அளித்த இந்த மறுவாழ்வை சரியாக பயன்படுத்திக் கொள்வேன். மக்கா சென்று புனித கடமைகளை நிறைவேற்றவும் எண்ணியுள்ளேன். என் விடுதலைக்காக அல்லும் பகலும் உழைத்த தூதரக அதிகாரிகள் குறிப்பாக தூதர் எம்.ஓ.எச்.ஃபரூக் போன்றோருக்கு நான் என்றும் கடமைபட்டுள்ளேன். இறைவனுக்கு நன்றி செலுத்துகின்றேன்'- என்கிறார் அபு ரஃபி

'இறைவன் தடை செய்துள்ள உயிர்க் கொலையை தக்க காரணமின்றி செய்யாதீர்கள். அநியாயமாகக் கொல்லப்பட்டோரின் பொறுப்பாளருக்கு அதிகாரம் அளித்துள்ளோம். அவர் கொல்வதற்க்காக வரம்பு மீறிட வேண்டாம். அவர் உதவி செய்யப்பட்டவராவார்.'
-குர்ஆன் 17:33

Sunday, April 12, 2009

பட்ட பின்னாலே வருகின்ற ஞானம்- இலங்கையும் கலைஞரும்!

முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட கேள்வி - பதில் அறிக்கை:

தமிழர்கள் பேரணியில் பேசிய கருணாநிதி, அலெக் சாண்டருக்கு நிகரான ஒரு மன்னனை போல் பிரபாகரனை நடத்த வேண்டும் என்றும், போர் முடிந்த பின் இலங்கையில் அதிகாரப் பகிர்வு மூலம் சம சுதந்திரத்தோடு வழிவகுக்க வேண்டுமென்றும் குறிப் பிட்டதை, இங்குள்ள நெடுமாறன் கும்பல் திசை திருப்பிப் பேசி வருவதை, விடுதலைப் புலிகளின் தலைவர்கள் கேள்வி யுற்று நெடுமாறன் கும்பலைப் பாராட்டிக் கொண்டிருக்கிறார் களாமே, உண்மையா?

வரலாறு படிக்காதவர்கள் அல்லது படித்தவர்கள் சொல்லி காதில் வாங்காதவர்கள் வேண்டுமானால் நெடுமாறன் கும்பலைப் பாராட்டி மகிழலாம். பிரபாகரனைக் கைது செய்து இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டுமென்ற ஜெயலலிதாவுக்கு நன்றி கூட தெரிவிக்கலாம். விடுதலைப் புலிகள் தமிழகத்தில் இப்படி தவறான பேர்வழிகளின், தவறான பேச்சைக் கேட்டு, தவறான முறைகளைக் கடைபிடித்ததால் தான், இலங்கைத் தமிழர்களின் பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமலேயே இருக்கிறது என்பதை இலங்கைத் தமிழர் கள் மீது அன்பும், பாசமும் கொண்டுள்ள நடுநிலையாளர் கள் நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர். அந்த நடுநிலையாளர்களில் நானும் ஒருவன்.

அ.தி.மு.க.,வில் கூட்டணி தர்மம் உள்ளது என்றும், தி.மு.க., கூட்டணியில் அது இல்லை என்றும் ராமதாஸ் கூறியிருக்கிறாரே?

அ.தி.மு.க., கூட்டணியில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனும், ம.தி.மு.க.,வுடனும் உடன் பாடு ஏற்படுவதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடித்து வந்தது. அதனால் தான், 3ம் தேதி மதுரையில் நடந்த மார்க்சிஸ்ட் மாநிலக் குழுக் கூட்டத்தில், அ.தி.மு.க.,வுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு காண்பதற்கும், உடன்பாடு எட்டாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முடிவு செய்யவும் கட்சியின் மாநில செயற்குழுவுக்கு முழு அதிகாரம் அளித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதி என்பதில் ஏற்பட்ட சிக்கலால் காத்துக் காத்துக் களைத்துப் போன வைகோ விரக்தியின் விளிம்பில் நின்று கொண்டு, "கூட்டணி பற்றியோ, தேர்த லைப் பற்றியோ சிந்திக்கக் கூடிய மனநிலையில் இல்லை' என்று மனம்நொந்து பேசினார்.

இப்படி நம்பி வந்தவர்களை நட்டாற்றில் தவிக்கவிட்டு, மனம் நைந்து போகும் அளவுக்கு இழுபறி நிலையை வேண்டுமென்றே நீட்டித்து வேடிக்கை பார்ப்பதைத் தான் கூட்டணி தர்மம் என்று ராமதாஸ் கூறுகிறாரோ என்னமோ?

இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய காங்கிரஸ் அரசு ஏதும் செய்யவில்லை என்று ராமதாஸ் சொல்லியிருக்கிறாரே?

ஐந்தாண்டு காலம் தொடர்ந்து மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகித்து, இரண்டு முக்கிய இலாகாக்களின் அமைச்சர் பதவிகளைப் பெற்று அனுபவித்துக் கொண்டிருந்த நேரத்திலும், கூட்டணியில் அங்கம் வகிப்பவர் என்ற முறையில் பிரதமர் மன் மோகன் சிங், சோனியாவை சந்தித்து தனக்குத் தேவையானதைப் பற்றிப் பேசிய போதும், ராமதாஸ் அவரது இந்தக் கருத்தை தெரிவித்திருந்தால், அவரது நேர்மையையும், தைரியத்தையும் பாராட்டியிருக்கலாம்.

கடைசிக்கணம் வரை பதவிச் சுகத்தை கரும்பாகச் சுவைத்து விட்டு, இப்போது காங்கிரஸ் அரசு மீது புழுதிவாரித் தூற்றுவதை, தமிழகத்து மக்கள் நிச்சயம் பதம் பிரித்துப் பொருள் புரிந்து கொள்வர். லோக்சபா தேர்தலையொட்டி, அவர் ஓதுவதையெல்லாம் "வேதம்' என்றா ஒத்துக்கொள்ள முடியும்?

இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசு எதுவுமே செய்யவில்லையா?

இலங்கைத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு தன்னால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதை நடுநிலை அரசியல் பார்வையாளர்கள் நன்றாகவே அறிவர். காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையிலும், இலங்கையில் ஒன்றுபட்ட அமைப்புக்குள், அங்கு வாழும் அனைத்துத் தரப்பினரும் சம உரிமைகளைத் துய்க்க உறுதி செய்யப்படும் வகையில், அரசியல் ரீதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அடிப்படையாக அமைந் துள்ள இந்தியா- இலங்கை அமைதி ஒப்பந்தத்தில் குறிப் பிட்டுள்ளபடி, சம்பந்தப்பட்ட தரப்பினர் ஒப்பந்தத்தை எட்ட காங்கிரஸ் உதவிடும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தையும் கபட நாடகம் என்று ராமதாஸ் போன்றவர்கள் சொன்னாலும் சொல்வார்கள். அதையும் வெளியிட இங்கே சில எரிச்சல் ஏடுகள் தயாராகவே இருக்கின்றன. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த முடிவுக்கு கலைஞர் முன்பே வந்திருந்தால் எத்தனையோ அப்பாவி தமிழர்களின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும்.

பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் யாருக்கும் உதவாதல்லவா!

இலங்கை அதிபர் ராஜபக்ஷே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங் களை முன்னிட்டு, இலங்கை அரசு முக்கிய முடிவை எடுத்துள்ளது. பாதுகாப்புப் பகுதியில் புலிகள் வசம் சிக்கியுள்ள அப்பாவி மக்கள், அங்கிருந்து வெளியேறுவதற்கு வசதியாக 48 மணி நேர போர் நிறுத்தம் செய்யப்படும். இந்த போர் நிறுத்தம் இன்று(நேற்று) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. புத்தாண்டு போன்ற கொண் டாட்ட காலங்களில் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதும் இதற்கு முக்கிய காரணம். இந்த வாய்ப் பை புலிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆயுதங்களை கீழே போட்டு விட்டு உடனடியாக சரணடைய வேண்டும். தங்களுக்கு தோல்வி ஏற்பட்டுள்ள தை ஏற்றுக் கொள்ள வேண்டும். பயங்கரவாதம், வன்முறை ஆகியவற்றை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் சம்மதம் உண்டா? இதற்கிடையே, பாதுகாப்புப் பகுதியில் இருந்து பொதுமக்களை மீட்பதற்கான நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலி தலைவர் பிரபாகரன் சம்மதம் தெரிவிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை அரசு சார்பில் வெளியாகும், "சண்டே அப்சர்வர்' பத்திரிகையில், "புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்கள் பலர் சண்டையில் பலியாகி விட்டனர். பொட்டு அம்மான், சூசை போன்ற சிலர் தான் தற்போது பிரபாகரனுடன் உள்ளனர். இது போன்ற சூழ்நிலையில், பாதுகாப்புப் பகுதியிலுள்ள அப்பாவி மக்களை மீட்கும் நடவடிக்கைக்கு, பிரபாகரன் சம்மதம் தெரிவிக்கக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் வசம் சிக்கியுள்ள அப்பாவி மக்கள் அங்கிருந்து வெளியேற வசதியாக, கடந்த ஜனவரியில் 48 மணி நேர போர் நிறுத்தத்தை இலங்கை அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை. அதற்கு பின், தற்போது தான் மீண்டும் போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஐ.நா., கருத்தின்படி போர் நடக்காத பகுதியில் சிக்கியிருக்கும் அப்பாவித் தமிழர்கள் ஒரு லட்சம் பேர், இப்பகுதியில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட வேண்டுமென அதிகளவில் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், இப்போர் நிறுத்தத்தை அரசு அறிவித்திருக்கிறது. இப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை சத்தம் வரக்கூடாது என்பதை அமைதி காண விரும்பும் இந்த நாடுகள் வலியுறுத்தியதுடன், மக்கள் மீட்பு முக்கியம் என்றும் வலியுறுத்தியுள்ளன. இதற்கிடையே, புதுக்குடியிருப்பு அருகே நடந்த சண்டையில் 20 புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டாவது அப்பாவி தமிழர்கள் போர் பகுதியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட வேண்டும்.

போர்... போர்... போர்.... என்று தங்களின் வாழ்நாளைக் கழித்த அந்த மக்கள் இனியாவது அமைதியான வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.

Saturday, April 11, 2009

4வது அணி: தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு புது சவால்சென்னை: லோக்சபா தேர்தல் களத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது. இதில், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல்வேறு சமூக அமைப்புக்கள் இணைந்துள்ளன. இந்தக் கூட்டணி, தமிழகத்தின் முக்கிய கட்சிகளான தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்குப் புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.

லோக்சபா தேர்தலில், தி.மு.க., - அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணிகள், தே.மு.தி.க., என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. தற்போது, மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் பல்வேறு கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்கள் இணைந்து, நான்காவது அணியாக களம் இறங்குகின்றன. தமிழக முஸ்லிம்களை ஒன்று திரட்டி, அவர்களை சமூக, பொருளாதார நிலையில் முன்னேற்ற, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் துவக்கப் பட்டது. கடந்த தேர்தல்களின் போது, அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணிகளுக்கு இக்கட்சி மாறி மாறி தார்மீக ஆதரவு அளித்து, அக்கட்சிகளை வெற்றியடையச் செய்து வந்தது.

கடந்த பிப்ரவரியில் தாம்பரத்தில் நடந்த மாபெரும் மாநாட்டில் த.மு.மு.க., என்ற அமைப்பு, மனிதநேய மக்கள் கட்சி என்ற அரசியல் அமைப்பாக மாறியது. மனிதநேய மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் பரவலாக ஆதரவு உள்ளது. லோக்சபா தொகுதிகளில், கிட்டத்தட்ட 20 தொகுதிகளில் இக்கட்சி கணிசமாக ஓட்டுக்களை கொண்டுள்ளது. அதிக அளவில் முஸ்லிம் ஓட்டுக்கள் உள்ள தஞ்சாவூர், திருச்சி, வேலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மத்திய சென்னை ஆகிய ஆறு தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் கட்சியாக இக்கட்சி உள்ளது.

லோக்சபா தேர்தலில் தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள மனிதநேய மக்கள் கட்சி முடிவு செய்தது. முதலில், தி.மு.க., வுடன் பேச்சுவார்த்தை நடத்தப் பட் டது. கூடுதல் தொகுதிகள், தனிச் சின்னம் என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது. தி.மு.க., இக் கோரிக்கையை நிராகரித்தது. அ.தி.மு.க., ஒத்து வராததால், லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி முடிவெடுத்தது.

இதையடுத்து, தங்கள் கொள்கைகளுக்கு உடன்பாடான கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களை ஒருங்கிணைத்து, லோக்சபா தேர்தலைச் சந்திக்க அக்கட்சி திட்டமிட்டது. இதன்படி, நடிகர் சரத் குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, முடிவு எட்டப்பட்டது. அடுத்ததாக, கொங்கு வேளாளர் பேரவை உள் ளிட்ட பல்வேறு சமூக அமைப்புக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. தற்போது, தமிழகத்தில், மனிதநேய மக்கள் கட்சி தலைமையில் நான்காவது அணி உருவாகியுள்ளது. இக்கூட்டணியில் உள்ள கட்சிகள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கான தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நெல்லை தொகுதி சமத்துவ மக்கள் கட்சிக்கும், தென்காசி தொகுதி புதிய தமிழகத்திற்கும் ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முஸ்லிம் மக்கள் அதிகமாக உள்ள மத்திய சென்னை, மயிலாடுதுறை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட மனிதநேய மக்கள் கட்சி திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இதுகுறித்து ஆலோசனை நடந்து வருவதாகவும், இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மயிலாடுதுறையில் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாவும், மத்திய சென்னையில் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் ஹைதர்அலியும், ராமநாதபுரத்தில், அந்த மாவட்டச் செயலர் கலிமுல்லாகானும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதநேய மக்கள் கட்சி, தமிழக லோக்சபாத் தேர்தலில் போட்டியிடுவதால் தி.மு.க.,வுக்குத் தான் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகை யில், "பெரும்பாலான தேர்தல்களில் தி.மு.க.,விற்குத் தான் த.மு.மு.க., ஆதரவு அளித்து வந்தது. புதுச்சேரி உட்பட 40 லோக்சபா இடங்களை தி.மு.க., கூட்டணி பெறவும், தமிழ கத்தில் தி.மு.க., ஆட்சி ஏற்படவும் த.மு.மு.க., பெரும்பங்கு வகித்தது. பொதுவாக முஸ்லிம் ஓட்டுக்கள் தி.மு.க.,விற்குத் தான் அதிகம் கிடைக்கும். இந்நிலையில், அச் சமூகத்தினரின் அதிகமான ஓட்டுக் களை கைவசம் வைத்திருக்கும் மனிதநேய மக்கள் கட்சி இம்முறை தனித்துப் போட்டியிடுவதால், அதிக நஷ்டம் தி.மு.க.,விற்கு ஏற்படும். அதேவேளையில், குறிப்பிட்ட சில தொகுதிகளில் நான்காவது அணியால் அ.தி.மு.க.,விற்கும் பாதிப்பு ஏற்படும்' என்றனர்.

நன்றி: தின மலர்

இவர்களால் தேர்தலில் எதுவும் சாதிக்க முடிகிறதோ இல்லையோ 'சிறுபான்மையினரை வார்த்தை ஜாலங்களால் மயக்கி விடலாம்' என்ற எண்ணத்தில் இனி கலைஞரோ ஜெயலலிதாவோ காய் நகர்த்த முடியாத நிலை உருவாகியுள்ளது. கல்வி வேலை வாய்ப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் கொடுக்காமல் இனி ஓட்டு வாங்க முடியாது என்பதே நிதர்சனமான உண்மை. இதை கலைஞரோ ஜெயலலிதாவோ உணர்ந்ததாக தெரியவில்லை.

பார்ப்போம் அரசியல் முடிவுகள் யாருக்கு சாதகமாக இருக்கிறது என்று.

Thursday, April 09, 2009

பாதை திரும்பிய பகுத்தறிவாளர்!

பாதை திரும்பிய பகுத்தறிவாளர்!

'எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான மார்க்கத்தில்தான் பிறக்கின்றன. பெற்றோர்கள்தான் தம் குழந்தைகளை இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி யூதர்களாகவோ, கிறித்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ மாற்றி விடுகின்றனர்.'

-முகமது நபி ஆதாரம்: புகாரி அறிவிப்பவர்: அபு ஹூரைரா

திருவாரூர் அருகிலுள்ள அடியக்க மங்கலத்தில் பிறந்தவர் கலிக்குஸ்ஸமான். பிறப்பால் இவர் முஸ்லிமானாலும் இஸ்லாத்தின் கொள்கைகளை சரியாக விளங்காததனால் நாத்திகத்தை இவர் மனம் நாடுகிறது. தி.க வில் சேர்ந்து திரு வீரமணிக்கும் நெருக்கமாகிறார். நாத்திக பிரச்சாரத்தை வீரமணியோடு தமிழகமெங்கும் செய்து வந்தவர்தான் கலிக்குஸ்ஸமான்.

இந்த நிலையில்தான் 2007-ல் பி.ஜெய்னுல்லாபுதீன் என்ற அறிஞர் நாத்திகம் சம்பந்தமாக எழுதிய ஒரு புத்தகம் இவரது கைக்கு கிடைக்கிறது. அந்த புத்தகம் இவரின் பல கேள்விகளுக்கு விடையளிப்பதாக இருந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழ்ச்சியில் எழுப்பப்டும் கேள்விகளும் அதற்கான அறிவுசார்ந்த பதில்களும் இவரது சிந்தனையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. இதன் பிறகு குர்ஆனை படிக்க ஆரம்பித்தார். குர்ஆன் இவரை ஆட்கொள்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் பணியாற்றும் இவரது மகளார் தந்தையை அமெரிக்காவிற்கு வருகை தர அழைக்கிறார். 'அமெரிக்காவில் வீட்டில் இருக்கும் போது அதிகமாக போரடிக்கும். அதனால் வரும் போது புத்தகங்கள் வாங்கி கொண்டு வாருங்கள்.' என்று மகளார் அவரிடம் தெரிவித்திருந்தார்.

எனவே அவர் சென்னையில் மண்ணடிக்குச் சென்று பி.ஜே எழுதிய நூல்களை வாங்கிக் கொண்டு விமானத்தில் ஏறுகின்றார். பறக்கின்ற விமானத்துடன் அவரது சிந்தனை விமானமும் சிறகடித்துப் பறக்கின்றது.

குர்ஆனின் வானம் தொடர்பான வசனங்கள் வானத்தில் பறக்கும் அவரது மனதில் படுகின்றன. அடுக்கடுக்கான அகன்ற வானங்களைப் பற்றிய பல அறிவியல் உண்மைகள் எழுதப்படிக்கத் தெரியாத முகமது நபியால் எப்படி சொல்ல முடிந்தது? என்று ஆச்சரியப்படுகிறார்.

இந்த குர்ஆன் மனிதனால் இயற்றப்படவில்லை. மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆற்றல், சக்திதான் இந்த குர்ஆனை அருளியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வருகிறார்.

அதுவரை நோன்பு பிடித்திராத அவர் கடந்த ரமளானில் முப்பது நோன்புகளை நோற்று முடித்தார். 'மேற்கு நோக்கி வணங்குபவர்களே! கஃபாவை நோக்கி தொழுபவர்களே! விமானம் கஃபாவிற்கு மேல் பறக்கும் போது எதை நோக்கித் தொழுவீர்கள்?' என்று வினா எழுப்பி விடைத்தவர் இன்று விடை கண்டு ஏக இறைவனை வணங்குகிறார்.

தெருத் தெருவாக நாத்திகப் பிரச்சாரம் செய்த அவர் இன்று வேலூரில் தெருத் தெருவாக ஓரிறைக் கொள்கையை பிரச்சாரம் செய்கிறார். இவர் இந்த கொள்கையிலேயே நிலைத்து நிற்க நாமும் பிரார்த்திப்போமாக!

தகவல் உதவி ஏகத்துவம் வார இதழ்.

'எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே!' - என்ற பாடல் வரிகளையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.

'தக்க காரணத்துடனேயே வானங்களையும் பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலகட்டம் வரை ஓடும்.'
-குர்ஆன் 39: 5

Wednesday, April 08, 2009

ஒபாமாவிடம் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!சமீபத்தில் துருக்கி நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமா முஸ்லிம்களிடம் நேசக்கரம் நீட்டியுள்ளார். புஷ்ஷை பின்பற்றியே இவரின் பயணமும் இருக்கும் என்ற கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக இவரின் தற்போதய பேச்சு அமைந்துள்ளது. துருக்கியில் உள்ள புராதன பள்ளிவாசலுக்கும் அதிபரோடு சென்றுள்ளார். இவரின் தந்தை முஸ்லிம் என்பதால் இஸ்லாமியம் என்பது இவருக்கு புதிதல்லவே.

இந்த மாற்றம் மேலும் தொடர்ந்து பல நல்ல காரியங்கள் ஒபாமாவால் உலகுக்கு ஆற்றப்பட வேண்டும். முன்னால் அதிபர் புஷ்ஷின் கிறுக்குத்தனமான நிர்வாகத்தால் சீரழிந்த அமெரிக்க இஸ்லாமிய உறவு பராக் ஒபாமாவால் சீர் திருத்தம் பெற வாழ்த்துவோமாக!

ISTANBUL: US President Barack Obama ended his trip to Turkey yesterday by calling for peace and dialogue with Islam and the creation of a Palestinian state living side by side with Israel. He later flew to Baghdad and told wildly cheering US troops it was time for Iraqis to take responsibility for their country.
In his first trip as president to the Muslim world, Obama sought to rebuild ties after anger at the invasion of Iraq, the war in Afghanistan and accusations his predecessor George W. Bush was biased in favor of Israel.
“I came to Turkey because I am deeply committed to rebuilding a relationship between the United States and the people of the Muslim world, one that is grounded in mutual interest and mutual respect,” Obama said.

“I believe we can have a dialogue that is open, honest, vibrant ... and I want you to know that I am personally committed to a new chapter of American engagement,” he said at a meeting with Turkish youngsters.

Obama’s visit, in which he said America “will never be at war with Islam,” marks a strong shift in US policy after his predecessor Bush upset Muslims with his backing for Israel, invasion of Iraq and branding of Iran as part of an “axis of evil.”
He pleased Muslims with his call to push aggressively for a two-state solution for Israelis and Palestinians, in a challenge to the new Israeli government of right-winger Benjamin Netanyahu.

“I believe that peace in the Middle East is possible. I think it will be based on two states side by side, a Palestinian state and a Jewish state,” Obama said.
“I think in order to achieve that, both sides are going to have to make compromises. I think we have a sense of what those compromises should be and will be. Now what we need is political will and courage on the part of leadership.”

He also called for a “balanced” approach toward Israel, saying the Jewish state was not behind all problems in the Middle East. “In the Muslim world, the notion that somehow everything is the fault of the Israelis lacks balance because there are two sides to every question,” Obama said.

The president sent a similar message to Israel, saying: “You have to see the perspective of the Palestinians.”

Obama rejected critics who said his speech in Prague on nuclear disarmament, his calls for Middle East peace and engagement with Iran were too idealistic. “My attitude is that all these things are hard. I am not naive. If it would be easy it would already be done,” he said.

“Moving the ship of state is a slow process. States are like big tankers. They are not like speedboats. You can’t just whip them around and go in a new direction. Instead, you slowly move it and eventually you end up in a very different place.”
Respecting Muslim sensitivity, he said he would like to wrap up the youth meeting before the call to prayer.

Visiting the 17th-century Sultanahmet Mosque, better known as Blue Mosque, in the ancient heart of Istanbul, Obama took off his shoes as tradition requires and was accompanied by Turkish Prime Minister Recep Tayyip Erdogan amid tight security. Two Muslim preachers guided Obama inside the grandiose edifice. He combined his visit to the mosque with a tour of the sixth-century Hagia Sophia church.

Obama also met Muslim, Christian and Jewish scholars based in Istanbul.
On an unannounced visit to Iraq later, Obama said American forces had “performed brilliantly ... under enormous strain.”

“It is time for us to transition to the Iraqis,” he said as an estimated 600 troops cheered. “They need to take responsibility for their country.”

Obama also met with Iraqi Prime Minister Nuri Al-Maliki, who said afterward that he had “assured the president that all the progress that has been made in the security area will continue.” Obama said he had “strongly encouraged” the Iraqi leader to take steps to unite political factions, including integrating Sunnis into the government and security forces.

Saturday, April 04, 2009

இரத்த தானத்தில் முன்னணி வகிக்கும் அமைப்பு!
இரத்ததானம் செய்வதில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் சவூதி அரேபியாவிலும் முதலிடம் வகிக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளும் இரத்தான முகாம்களை நடத்தி, மக்கள் சேவையில் முன்னிலை வகிப்பது அனைவரும் அறிந்ததே. அதோடு TNTJ, அவசர தேவைகளுக்காகவும் இரத்ததானம் வழங்கி உயிர்காத்து வருகின்றது.

சவூதி அரேபியா - ரியாதிலுள்ள மிகப்பெரிய மருத்துவமனையான "கிங் ஃபஹத் மெடிகல் சிட்டி" மருத்துவமனையிலுள்ள இரத்த தான பிரிவு அதிகாரிகள், ரியாத் TNTJ வைத் தொடர்பு கொண்டு, உடனடியாக "இரத்தத் தட்டுக்கள் Platelets" தானம் தேவை என வேண்டுகோள் விடுத்தனர். இம்மருத்துவமனையில், ரியாத் TNTJ வால் பல மாபெரும் இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது. இவ்வகையான தானத்தில், இரத்தத்தில் உள்ள "இரத்தத் தட்டுக்கள்" பிரித்தெடுக்கப்பட்டு, மீண்டும் இரத்தம் கொடையாளியின் உடலிலேயே செலுத்தப்படும்.

உடனடியாக, ரியாத் TNTJ விடம் இரத்த தானத்திற்காக பதிவு செய்தவர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டு, கடந்த 09. மார்ச். 2009 திங்கள் கிழமை அன்று இரவு 7 மணிக்கு, இரத்த தானம் செய்யப்பட்டது. இதில் 9 பேர் கலந்து கொண்டனர்.

ரியாத் இரத்த தான பொறுப்பாளர், மண்டலச் செயலாளர் சகோ. அப்துர் ரஹ்மான் நவ்லக் அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உடனடி தேவைக்கு உதவிய கொடையாளிகளுக்கும், ரியாத்TNTJ வுக்கும் மருத்துவமனை அதிகாரிகள் நன்றி தெரிவித்தனர்.

மத அமைப்புகள் இந்த அமைப்பை முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படத் துவங்கினால் மத துவேஷங்கள் மறையும்: மனித நேயம் வளரும்.

Thursday, April 02, 2009

அக்ஷய் குமார் என்ற புது கோமாளி(கூத்தாடி)!


அக்ஷய் குமார் என்ற புது கோமாளி(கூத்தாடி)!

மும்பையில் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில் இந்தி நடிகர் அக்ஷய் குமார் கலந்து கொண்டார். மனிதருக்கு உற்சாகம் அதிகரிக்கவே வேகமாக வந்து தனது மனைவின் கையால் தனது ஜீன்ஸ் பேண்டின் பட்டனை அவிழ்க்க சொல்கிறார். அவரின் மனைவி டிவிங்கில் கன்னாவும் கொஞ்சமும் வெட்கம் இல்லாமல் பொது மக்கள் முன்னிலையில் அவிழ்க்க அது தற்போது விவாதமாகி இருக்கிறது. இந்த கூத்தாடிகள் தங்களின் பெயர் செய்திகளில் வர வேண்டும் என்பதற்காக எதையும் செய்ய தயாராகி விடுகிறார்கள்.

இந்த விவகாரத்தை போலீஸ் வரை சிலர் கொண்டு போக தற்போது மன்னிப்பு கேட்டிருக்கிறாராம். இந்த கூத்தாடிக்கு இது தவறு என்பது முன்பே தெரியாதா? தனது மனைவியாகவே இருந்தாலும் பொது மக்கள் முன்னிலையில் இப்படி ஒரு காரியம் செய்பவன் ஒரு கிறுக்கனாகத்தானே இருக்க முடியும்?. இந்த கூத்தாடிகளையும் தலைவர்களாக ஏற்றுக் கொண்டு இவர்கள் பின்னால் அலையும் இளைய சமுதாயத்தை திருத்துவது யார்? சில நாட்களுக்கு முன் நடிகர் விஜய் 'ஏய் பேசிக்கிட்டிருக்கேன்ல' என்று ரசிகர்களை கேவலப்படுத்தியதையும் பார்த்தோம்.

நமது அரசியல்வாதிகளும் இந்த கூத்தாடிகளின் பின்னால் செல்வதுதான் மேலும் வேதனை. விஜயகாந்த் என்ற கூத்தாடிக்கு முதல்வராவதற்கு என்ன தகுதி இருக்கிறது? மரத்தை சுற்றி சுற்றி நடிகைகளை துரத்தியதை தவிர வேறு எந்த திறமையும் இல்லை. இன்று இவரும் முதல்வராகி விடலாம் என்று இவர் நினைக்கும் நிலையில்தான் தமிழக வாக்காளர்களின் எண்ண ஓட்மும் இருக்கிறது.

'ஜெய் ஹோ!'

Wednesday, April 01, 2009

ஆட்சியாளர் எப்படி இருக்க வேண்டும்!

முகமது நபி காலத்தில் மக்கா வெற்றிப் போரின் போது உயர் குலத்து பெண்ணொருத்தி திருடி விட்டார். எனவே அவருடைய குலத்தார் தண்டனைக்கு அஞ்சி அவருக்காகப் பரிந்துரைக்கும் படி கோரி நபித் தோழர் ஜைத் அவர்களிடம் வந்தார்கள். ஜைத் அவர்கள் முகமது நபியிடம் அந்த பெண்ணுக்காக பரிந்து பேசியபோது முகமது நபி அவர்களின் முகம் கோபத்தால் நிறம் மாறியது. 'இறைவனின் தண்டனைகளில் ஒன்றைக் குறித்து அதைத் தளர்த்தி விடும்படி என்னிடம் நீ பரிந்தா பேசுகிறாய்?' என்று கேட்டார்.

மாலை நேரம் வந்தபோது முகமது நபி மக்களுக்கு உரையாற்ற எழுந்து நின்றார். 'உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்ததெல்லாம் அவர்கள் தம்மிடையேயுள்ள உயர்ந்தவன் திருடிவிடும் போது அவனை தண்டிக்காமல் விட்டு வந்ததும் பலவீனமானவன் திருடி விடும்போது அவனுக்குத் தண்டனை கொடுத்து வந்ததும்தான். இறைவன் மீது ஆணையாக! என் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் வெட்டியிருப்பேன்.' என்று அம்மக்களிடம் பிரசிங்கித்தார்.

அறிவிப்பவர் ஜூபைர். ஆதாரம் புகாரி.

சட்டத்துக்கு முன் பாகுபாடு காட்டப்படுவதை தன்னால் சகித்துக் கொள்ள முடியாது என்ற போதனையை இதன் மூலம் நாம் பெறுகிறோம். இத்தகைய எண்ணவோட்டம் நமது அரசியல்வாதிகளிடம் கொஞ்சமாவது இருக்கிறதா என்றும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறோம். எத்தனை பொய்கள்! எத்தனை ஊழல்கள்! கொலையே செய்தாலும் கட்சித் தலைவரின் மகன் என்றால் தைரியமாக உலா வர முடிகிறது. நீதி மன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் திரும்பவும் ஓட்டுக் கேட்டு மக்களிடம் வர முடிகிறது. கொலைக் குற்றம் சாட்டப்பட்ட மதத் தலைவர் தண்டிக்கப்படாமல் தனது பணியை திரும்பவும் செய்ய முடிகிறது. இவை எல்லாம் சட்டம் எல்லோருக்கும் இந்நாட்டில் சமமில்லை என்பதையே காட்டுகிறது.

அடுத்து தேர்தல் கூத்து நமது நாட்டில் ஆரம்பமாகி விட்டது. பொருளாதார பலம் யாரிடம் இருக்கிறதோ அவரே வெற்றி பெறும் சூழ்நிலை. 500க்கும் 1000க்கும் ஓட்டுக்கள் விலை போவது ஜனநாயகத்தையே கேலிக் கூத்தாக்குகிறது. மேலும் என்ன என்ன தமாஷாக்கள் அரங்கேற்றப் படுகின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போம்.