Followers

Friday, January 31, 2014

பிப்ரவரி 1 - 'உலக ஹிஜாப் தினம்'



போன வருடம் 2013 பிப்ரவரி 1 ந்தேதி அமெரிக்க பள்ளி ஒன்றில் 'உலக ஹிஜாப் தினம்' கொண்டாடப்பட்டது. ஹிஜாபின் அவசியத்தைப் பற்றிய பல கருத்தரங்குகள் நடை பெற்றன. அதே போல் இந்த வருடமும் பிரசாரம் அமெரிக்காவில் முடுக்கி விடப்பட்டுள்ளது.



பெண்கள் தங்களின் பெண்மையை பாதுகாக்கும் கேடயமாக ஹிஜாப் அணிவதை பார்க்கின்றனர். இந்த பெண்மணி கல்லூரியில் படிக்கும் நாட்களில் அமெரிக்காவில் ஹிஜாபோடு சென்றதற்காக அவமானப்படுத்தப்ட்டார். எவரும் கட்டாயப்படுத்தாமல் தனது பாதுகாப்புக்காகவும் தனது இறைவன் விடுத்த கட்டளையை பேணுவதற்காகவும் ஹிஜாபோடு சென்றால் கேலியும் கிண்டலும் தான் அவர்களுக்கு பரிசாக முன்பு கிடைத்து வந்தது. ஆனால் ஹிஜாபின் அவசியத்தை உணர்ந்த முஸ்லிம் பெண்களும், கிறித்தவ பெண்களும் ஹிஜாப் அணிவதை தங்களின் கடமையாக நினைத்து செயல்படுத்தி வருகின்றனர். அதனை நினைவு கூறும் முகமாக இன்றைய தினம் 'உலக ஹிஜாப்' தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஹிஜாபின் அவசியத்தை மாற்றாரும் விளங்கும் வண்ணம் ஆங்காங்கே பல கூட்டங்களையும் இந்த அமைப்பினர் நடத்தி வருகின்றனர்.

அரைகுறை ஆடைகளை அணிந்து ஆண்களின் தடுமாற்றத்துக்கு காரணமாகி பிறகு வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு அல்லல் படுவதை தினம் பத்திரிக்கையில் படிக்கிறோம். இத்தகைய நிலை மாற அனைத்து பெண்களும் கண்ணியமாக உடை அணிந்து பெண்மைக்கு பெருமை சேர்ப்பார்களாக!

http://worldhijabday.com/

இதற்கான பிரத்யேகமான வலைத் தளம்


கிறித்தவ பெண் தனது ஹிஜாப் அனுபவத்தைப் பகிர்கிறார்.



Since I started to wear the Hijab, I am treated differently. It seems to be one extreme or the other. On the negative side, I have had people avoid me. They will go down a different isle at the grocery store, or turn their head away. Some people will just give me evil looks. I have not had anyone say anything negative, though some whisper under their breath so you cannot hear them. It is in their actions toward me. They may think I am a terrorist, and are scared.

Many things I have seen lately show the ignorance of people. Hating on Sikhs because they think they are Muslim. Hating on Muslims because they think all are terrorists. I am hoping to enlighten some of the ignorant to know there are good and bad people in all religions and races of the world. Hopefully, I can help people to see NOT to judge people by their appearance but by their hearts.

On the positive side, more men open doors for me when I am able to get out and about. Some women have asked why I wear Hijab (apparently because I am white, or they think I do not look Muslim). I started wearing the scarves as head cover, but they do not stay in place that well. So I tried the Hijab and like it much better. I started partly for health reasons and partly to be more modest. I know Christians and Jews used to wear the head covering all the time. Some still do.

I am a Christian and my religion also talks about wanting women and men to be modest in the way they dress. I am sure it is personal for every woman that wears Hijab. I know Muslim women who do not wear them. So it is a matter of choice here in the USA. I know in some countries Muslim women are required to wear them or the burka. I am thankful for the religious freedom in my country so those of any faith may worship their own way.

I do believe we are all praying to the same God, whether one calls him Allah, Jehovah, Heavenly Father or something else. This world be a better place if we can only get people to love one another instead of hating. Just the other day at the VA hospital I had a nice talk with a lady about my Hijab. I do not know if she was Muslim, but I was guessing she wasn’t. She was very respectful and curious. I talked with her for about 15 minutes. One person at a time, maybe people will come to understand and be less ignorant about those that look different from them in the world.

http://worldhijabday.com/story-non-muslim-hijabi/

காந்தி ஏன் கொல்லப்பட்டார்?



65 ஆண்டுகள் ஆகின்றன. இதே நாள்… 1948 ஜனவரி 30. மாலை நேரப் பிரார்த்தனைக்காக வந்துகொண்டிருந்தபோது தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். ஒரு தொண்டன்போல் வந்த நாதுராம் கோட்சே, மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அவரைச் சுட்டுக் கொன்றான். காட்டுத்தீபோலப் பரவியது அந்தச் செய்தி: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள்…”

சரியாக தகவல் அறிந்து முதலில் படேல் வந்தார்; சற்று நேரத்திலேயே நேரு ஓடிவந்தார். கவர்னர் ஜெனரல் மவுன்ட்பேட்டன் வந்தபோது கூட்டத்திலிருந்த ஒருவர் கத்தினார்: “காந்தியை ஒரு முஸ்லிம் கொன்றுவிட்டான்.” அதிர்ந்து திரும்பிய மவுன்ட்பேட்டன் பதிலுக்குக் கத்தினார்: “நீ என்ன முட்டாளா? காந்திஜியைக் கொன்றவன் ஒரு இந்து!”

உண்மையில், அந்தச் செய்தியை முதலில் கேட்ட பலருக்கும் கூடுதலாக ஒரு தகவல் ஒட்டிக்கொண்டே சென்றடைந்தது: “காந்திஜியைச் சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்தியைச் சுட்டது ஒரு முஸ்லிம்…”

இந்திய வரலாற்றில் காந்தியின் மரணம் பல உயிர்களைப் பலிவாங்கும் ரத்தக்களரியாக உருமாறாமல் தடுக்கப்பட நேருவும் படேலும் மவுன்ட்பேட்டனும் துரிதமாகச் செயல்பட்டதும் ஒரு காரணம் என்று சொல்ல வேண்டும். உயிர்பெறத் தொடங்கியபோதே அந்த வதந்தியை அணைத்தனர் மூவரும்: “காந்திஜியை சுட்டுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றுவிட்டார்கள், காந்திஜியைக் கொன்றது ஒரு இந்து…”

பெருங்கலவரத்துக்கான முன்னோட்டம்

யோசித்துப்பாருங்கள்… காந்தி கொல்லப்பட்ட தகவலே அறிவிக்கப்படாதபோது, காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்ற வதந்தி எப்படி ஒட்டிக்கொண்டு பறந்திருக்கும்?

அதற்குப் பின் ஒரு பெரிய சதி இருந்தது. குரூர நோக்கம் இருந்தது. இந்து முஸ்லிம் கலவரங்கள் எப்போது எங்கு மூளும் என்று தெரியாத காலகட்டம் அது. தேசப் பிரிவினையோடு உலகின் மோசமான படுகொலைக் களத்தையும் இந்தியா எதிர்கொண்டிருந்த காலகட்டம்.

அப்படியான சூழலில், காந்தியைக் கொன்றது ஒரு முஸ்லிம் என்று வதந்தியைப் பரப்பினால் என்ன நடக்கும்? நாடே ரத்தக்களரியாகும். முஸ்லிம்கள் வேட்டையாடப்படுவார்கள். அதன் வாயிலாக இனி இந்தியாவில் இந்துக்கள் மட்டுமே வாழ முடியும் என்ற சூழலை உருவாக்க முடியும். இப்படி ஒரு விரிவான திட்டம் இருந்தது. காந்தி உடலிலிருந்து வழியும் ரத்தம் உறையும் முன்பே கொலைப் பழி முஸ்லிம்களை நோக்கித் திசைதிருப்பப்பட்டதன் நோக்கம் இதுதான்.

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு ஏன் காந்திமீது ஆத்திரம்?

நாடு சுதந்திரம் அடைந்தபோது இந்தியா-பாகிஸ்தான் என்ற பிரிவினை முடிவானது. நாடு பிளக்கப்படுவதை காந்திஜி விரும்பவில்லை. தனது செல்வாக்கு முழுவதையும் பயன்படுத்திப் பிரிவினையைத் தடுக்க முயன்றார். எனினும் பிரிவினை தவிர்க்க முடியாததாகிவிட்டது. பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு என்றானபோது, இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்று இந்துத்துவவாதிகள் வாதிட்டனர். அதற்காக எந்த விலையைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். ஆனால், காந்தி மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் இருந்தார்: இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அமையும்.

மேலும், மதக் கலவரங்கள் மூலம் மக்கள் மனத்தில் மதவெறியைத் தூண்டி, முஸ்லிம்களை இந்தியாவை விட்டே துரத்தும் திட்டத்தையும் கூடுமானவரை காந்தி முறியடித்தார்; தொடர்ந்து முறியடிக்கப் போராடினார். காலங்காலமாக அந்தந்தப் பகுதிகளில் வாழ்ந்தவர்களே கலவர நாட்களில் வெளியே வர அஞ்சி வீட்டில் முடங்கிக் கிடந்த நாட்களில், ஆயுதப் படையினரே சிறு பிரிவுகளாகச் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்று தயங்கிக் கூட்டம் கூட்டமாகச் சென்ற நாட்களில், கலவர இடங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் சென்றார். பிரார்த்தனைக் கூட்டங்களிலும் மக்கள் சந்திப்புகளிலும் “மத மோதல்கள் வேண்டாம், மனிதனை மனிதன் வேட்டை யாடக் கூடாது” என்று மன்றாடினார்.

கல்கத்தாவில் காந்திஜியின் தலையீட்டைக் கண்ட இந்தியாவின் கடைசி வைசிராயும் முதல் கவர்னர் ஜெனரலுமான மவுன்ட்பேட்டன் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்: “ஒரு முழு ராணுவப் படையாலும் சமாளிக்க முடியாத கல்கத்தாவின் கலவரச் சூழலைத் தனியொரு மனிதரான காந்தி என்ற ஒரு அமைதிப்படை வீரர் சாதித்துக் காட்டியுள்ளார். இது ஓர் அற்புதமான செயல்.”

அந்த அற்புதமான செயல்தான் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகளுக்கு ஆத்திரம் பெருகக் காரணமாக இருந்தது. அந்த ஆத்திரத்தின் விளைநிலம்தான் கோட்சே!

என் உயிர் போகட்டும்!

காந்தி 1.9.1947 அன்று பத்திரிகையாளர்களை அழைத்தார். கல்கத்தாவின் பல பகுதிகளில் கலவரம் ஓய்ந்தபாடில்லை என்று மிகுந்த வேதனையோடு குறிப்பிட்ட அவர், இரவு 8.15 மணி அளவில் தன்னுடைய உண்ணாவிரதத்தைத் தொடங்க இருப்பதை அறிவித்தார். காலவரையறையற்ற உண்ணாவிரதம் அது. கல்கத்தாவில் அமைதி திரும்பினால் மட்டுமே உண்ணாவிரதத்தை முடிப்பேன் என்று திட்டவட்டமாக அறிவித்தார் காந்தி. பதறிப்போனார்கள் யாவரும்.

மூதறிஞர் ராஜாஜி காந்தியைச் சந்தித்தார். “குண்டர் களுக்கு எதிராக நீங்கள் உண்ணாவிரதம் இருப்பதா?” என்று கேட்டார். “குண்டர்களை உருவாக்குவதே நாம்தான். நம்முடைய அனுதாபமும் மறைமுக ஆதரவும் இல்லாமல் அவர்கள் நீடிக்க முடியாது. குண்டர்களுக்குப் பின்னால் இருக்கும் இதயங்களைத் தொட விரும்புகிறேன்” என்றார் காந்தி. “சிறிது காலம் பொறுக்கக் கூடாதா?” என்றார் ராஜாஜி.

“காலங்கடந்துவிடும். முஸ்லிம்களை அபாயகரமான நிலையில் விட்டுவிடக் கூடாது. எனது உண்ணாவிரதம் ஏதாவது பயனளிக்க வேண்டுமென்றால், அது அவர்களுக்குத் துன்பம் நேராமல் தடுப்பதற்கானதாக இருக்க வேண்டும். நான் கல்கத்தாவின் நிலைமையைச் சமாளித்துவிட்டால், பஞ்சாப் நிலைமையையும் சமாளிக்க முடியும். நான் இப்போது தோல்வியடைந்தால், காட்டுத்தீ பல இடங்களுக்கும் பரவும்” என்றார் காந்தி.

“ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால், காட்டுத்தீ மிகவும் மோசமான முறையில் பரவும்” என்றார் ராஜாஜி.

காந்தி உறுதியான குரலில் சொன்னார்: “நல்ல வேளையாக அதனைப் பார்க்க உயிருடன் இருக்க மாட்டேன். நான் என்னால் இயன்றதைச் செய்து முடித்தவனாக இருப்பேன்.”

தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தார் காந்தி.

தனியாள் திட்டமா கொலை?

காந்தியைப் பொறுத்தவரை இந்தியா அனைத்து மக்களுக்குமான நாடு. அதில் எந்தச் சமரசத்துக்கும் இடம் இல்லை. அதுதான் அவருடைய கொலைக்கு வழிகோலியது. காந்தியைக் கொல்வது என்பது நாதுராம் கோட்சே என்ற தனிமனிதனின் திட்டமல்ல. அது ஒரு கூட்டத்தின் பெருந்திட்டத்தின் ஒரு பகுதி. இந்த நாட்டை இந்துமயமாக்குவதுதான் அந்தப் பெருந்திட்டம். மதக் கலவரங்களைத் தூண்டிவிடுவதன் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பது அந்தப் பெருந்திட்டத்தை நிறைவேற்றுவதற்கான செயல்திட்டம். மக்களையே ஆயுததாரிகளாக்கும் எளிமையான ஒரு உத்தி. இந்துத்துவவாதிகளின் அந்தப் பெருந்திட்டத்தின் நீட்சியையே காந்தி கொலையில் தொடங்கி பாபர் மசூதி இடிப்பு, மும்பை கலவரங்கள், குஜராத் படுகொலை என்று சமீபத்திய முசாபர்நகர் கலவரம் வரை பார்க்கிறோம்.

இந்த நாட்டுக்கு காந்தி என்றும் தேவைப்படுகிறார். முக்கியமாக, இந்த நாடு பாசிஸத்தை நோக்கி நகர்த்தப் படும் முயற்சியில் எப்போதெல்லாம் சிக்குகிறதோ அப்போதெல்லாம்தான் அதிகம் தேவைப்படுகிறார். இந்துத் துவத்தின் நிறைவேறாத அந்தப் பெருந்திட்டத்துக்கான செயல்திட்டம் இப்போது மோடி என்ற ரூபத்தில் வருகிறது. இந்தச் சூழலில்தான் “இந்தியாவில் சிறுபான்மையினராகிய ஒருவர், அதாவது அந்த மதநம்பிக்கை பரவியுள்ள அளவு காரணமாகச் சிறுபான்மையினராக உள்ள ஒருவர், அதன் காரணமாகவே தாம் சிறியவராக இருப்பதாக உணருமாறு ஆக்கப்படுகிறார் என்றால், இந்த இந்தியா நான் கனவு கண்ட இந்தியா அல்ல” என்ற காந்தியின் தேவை நமக்கு மேலும் அதிகமாகிறது. இந்த நாட்டின் மகத்தான விழுமியமான மதச்சார்பின்மையின் உன்னதத்தை வார்த்தைகளால் அல்ல; செயல்களால் நாம் உணர்த்த வேண்டிய தருணம் இது!

ஜி. ராமகிருஷ்ணன், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலர், தொடர்புக்கு: grcpim@gmail.com

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/article5633699.ece?utm_source=vuukle&utm_medium=plugin&utm_campaign=vuukle_referral

Thursday, January 30, 2014

இந்திய சவுதி உறவில் மற்றுமொரு புதிய அத்தியாயம்!

இந்திய சவுதி உறவில் மற்றுமொரு புதிய அத்தியாயம்!



சவுதியின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் சல்மான் அடுத்த மாதம் நமது இந்தியாவுக்கு வருகை தர உள்ளார். அந்த பயணத்தில் இந்திய சவுதி உறவில் புதிய அத்தியாயம் எழுதப்படும். மற்றும் பல கோடி டாலர்களுக்கான வர்த்தக ஒப்பந்தங்களும் இடப்படும் என்று நமது நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இளவரசர் சல்மானோடு நடத்திய பேச்சு வார்த்தைகளுக்குப் பின் இந்த பேட்டியை பத்திரிக்கைகளுக்கு தந்தார் ப.சிதம்பரம்.

இளவரசர் சல்மான் ப.சிதம்பரத்தை சென்ற செவ்வாய் கிழமை வரவேற்று உபசரித்தார். இது பற்றி சிம்பரம் சொல்லும் போது 'மன்னர் அப்துல்லா 2006 ல் இந்தியா வருகை புரிந்திருந்தார். அதன் பிறகு 2010ல் பிரதமர் மன்மோகன் சிங் சவுதி அரேபியா வந்தார். இந்த இரண்டு தலைவர்களின் சந்திப்புக்கு பிறகு இந்திய சவுதி உறவானது தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இதற்கு முன்பே கூட மன்னர் சவுத் 1955 ஆம் ஆண்டு இந்தியா வருகை புரிந்தார். 1956ல் ஜவஹர்லால் நேரு சவுதி அரேபியாவுக்கு நல்லெண்ணப் பயணம் மேற்கொண்டார். அதன்பிறகு 1982ல் பிரதமராக இருந்த இந்திரா காந்தி சவுதி அரேபியா வருகை புரிந்துள்ளார். எனவே தொடர்ச்சியாக இரு நாட்டு உறவுகளும் நல்லவிதமாகவே சென்று வருகிறது.

இந்தியாவுக்கு அதிக அளவில் கச்சா எண்ணையை அனுப்பும் நாடுகளில் சவுதி முதலிடத்தில் உள்ளது. மருத்துவ துறை, கல்வி, சுற்றுலா மற்றும் தொழில் துறைகளில் சவுதி அரசின் முதலீடுகள் இந்தியாவில் அதிகம் இந்த சந்திப்பினால் உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.' என்றார்.

இந்த அமைப்புக் குழுவின் சவுதி தலைவரான அப்துல்லா அல் முப்தி தனது அறிக்கையில் ' இளவரசர் சல்மானின் இந்திய பயணமானது இரு நாட்டு உறவுகளில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். 2.8 மில்லியன் இந்தியர்கள் சவுதியில் பணி புரிகின்றனர். இந்தியாவின் நான்காவது மிகப் பெரும் தொழில் பார்ட்னராக சவுதி அரேபியா திகழ்கிறது. சவுதியின் 'சாபிக்' SABIC நிறுவனமானது இந்தியாவின் பெங்களூரில் 100 மில்லியன் செலவில் தொழில் நுட்ப பூங்காவை அமைத்துள்ளது. சைனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் அமைப்பாக இரண்டாவது இடத்தில் இந்த தொழிற்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது." என்றார்.

ப.சிதம்பரம் மற்றொரு அமைச்சரான முக்ரின் பின் அப்துல் அஜீஸையும் சந்தித்தார். நமது அமைச்சரின் வருகையானது மேலும் பல புதிய காண்ட்ராக்டுகள் நமது நாட்டுக்கு கிடைக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவும் பல நாடுகளில் சவுதி முன்னணியில் உள்ளது என்றால் மிகை ஆகாது. இந்த நெருக்கமானது மேலும் தொடர நாமும் பிரார்த்திப்போம்.

தகவல் உதவி

அரப் நியூஸ்

Wednesday, January 29, 2014

கொரியர்களையும் இஸ்லாம் விடவில்லை!



இஸ்லாமிய கலாசாரமும் கொரிய கலாசாரமும் இரு வேறுபட்டவைகள். ஆனால் அந்த மக்களையும் இஸ்லாமிய கொள்கையானது தற்காலங்களில் ஈர்க்க ஆரம்பித்துள்ளது. 35000 கொரிய முஸ்லிம்கள் தங்கள் வாழ்வியலாக இஸ்லாத்தை கொண்டுள்ளார்கள். இது அல்லாமல் வெளி நாட்டு முஸ்லிம்களின் எண்ணிக்கை தனியாக பல ஆயிரங்களைத் தாண்டும்.

கொரிய தலைநகர் சியோலில் உள்ள ஜூம்ஆ பள்ளியைத்தான் இந்த காணொளியில் நாம் பார்க்கிறோம். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற ஒரு கொரிய இளைஞன் எவ்வளவு அழகாக குர்ஆன் ஓதுவதையும் தொழுவதையும் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம். ராக் இசை, பாப் இசை, சினிமா, போதைப் பொருள் என்பதுதான் அங்குள்ள பெரும்பாலான இளைஞர்களின் பொழுதுபோக்கு. ஆனால் அவற்றிற்கு நேர் மாற்றமான இஸ்லாத்தை அந்த இளைஞனை தேர்ந்தெடுக்க வைத்தது எது? வாளா? அந்த இளைஞனை யாரும் சென்று இஸ்லாத்துக்கு வா என்று அழைக்கவில்லை. தனக்கு ஏற்பட்ட இறை நம்பிக்கையினால் இறை தேடலில் ஆரம்பித்து முடிவில் அந்த இளைஞனை அவனது தேடல் இஸ்லாத்தில் கொண்டு விட்டுள்ளது.

ஆடம்பர உலகம்: அவசர உலகம: எங்கும் எந்திர மயம்: இது போன்ற சூழலில் மனித மனம் நிம்மதி தேடி அலைகிறது. அந்த தேடுதல்தான் பலரை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு வருகிறது. இது தான் உண்மை காரணமேயொழிய நம் நாட்டு இந்துத்வாவாதிகள் சொல்வது போல் வன்முறையால் வளர்ந்ததல்ல இந்த மார்க்கம். அந்த இளைஞனின் முகத்தைப் பாருங்கள். எந்த அளவு சாந்தமும் அமைதியும் தவழ்கிறது.

காணொளியில் உள்ள பள்ளியில் ரமலானில் 300க்கும் அதிகமான நபர்கள் நோன்பு திறக்க பள்ளிக்கு வருவார்களாம். இந்நாட்டைச் சுற்றி இது வரை 11 பள்ளி வாசல்கள் உள்ளன. ஆனால் தினம் தினம் இஸ்லாத்தில் இணைவோர் அதிகரித்த வண்ணம் உள்ளதால் இந்த பள்ளிகளின் எண்ணிக்கை வருங்காலத்தில் அதிகரிக்க வாய்ப்புண்டு. கிறித்தவர்களும் பவுத்தர்களும் மட்டுமே கொண்ட இந்நாடு தற்போது இஸ்லாத்தையும் அரவணைத்துக் கொண்டுள்ளது.

'இறைவனின் உதவியும் வெற்றியும் வரும் போது

இறைவனின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை முஹம்மதே! நீர் காணும்போது

உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்'

-குர்ஆன் 30:110

ஜாகிர் நாயக் நாளை ரியாத் வருகை! மறக்க வேண்டாம்!





நம் அனைவரின் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!

இறைவன் நாடினால் எதிர்வரும் 30ம் தேதி வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களின் சொற்பொழிவு சவுதி தலைநகர் ரியாத்தில் நடைபெற உள்ளது.

சகோதர சகோதரிகள் தவறாமல் கலந்து பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம்.

முஸ்லிம் அல்லாத நண்பர்களையும் உடன் அழைத்து வரவும்.

இடம்: மன்னர் ஃபகத் கலாச்சார மையம்,ரியாத்,

நாள்: 30/01/2014 வியாழக்கிழமை

வரைபடம் இணைப்பில் உள்ளது.


Tuesday, January 28, 2014

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - திருமூலர்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே


ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது

நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்..

நாணாமே = வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம். கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது. நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும். அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்ந்தால், இறப்பைப் பற்றிய பயம் இல்லாதிருக்கும்.. வெட்கப் படாமல் நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை. உங்களுடைய சித்தத்தில் எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்.

இவ்வளவு அழகாக ஓரிறைக் கொள்கையை நமது முன்னோர்கள் கடை பிடித்து வந்துள்ளார்கள். ஆனால் இன்று பெரும்பான்மை தமிழர்களின் இறை வணக்கங்களை திருமூலரின் வாக்கோடு ஒப்பிட்டு பார்த்தால் எந்த அளவு முரண்பட்டு உள்ளோம் என்பது தெரிகிறதல்லவா?



Monday, January 27, 2014

ரியாத்திலிருந்து தமிழகம் திரும்பிய தமிழர் பூமாலை!



சவூதி வாகன விபத்தில் கோமா நிலையில் இருந்த தமிழர் India Fraternity Forum, Riyadh முயற்சியால் நாடு திரும்பினார்!

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தாலுகா, பெருமங்களம் பஞ்சாயத்து கீழ்நாரியப்பனூரை சேர்ந்த முதலி என்பவரின் மகன் பூமாலை (வயது 33). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 2011 ம் ஆண்டில் வேலைக்காக சவூதி அரேபியாவின் ரியாத்இற்கு ஓட்டுனர் வேலைக்கு வந்தார். இங்கு அவர் டேங்கர் லாரியில் ஓட்டுநராக பணி செய்து வந்தார். இந்நிலையில் வாகன விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு King Fahd National Guard மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பூமாலை, நினைவு எதுவும் திரும்பாமல் கடந்த ஒன்றரை வருடங்களாக கோமா நிலையில் இருந்து வந்தார். இந்த விபரம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து எஸ்.டி.பி.ஐ கட்சியின் நிர்வாகிகள் சவூதியில் சமூக நல பணிகளை மேற்கொள்ளும் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தை தொடர்புகொண்டு அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் முயற்சியை மேற்க்கொல்ளும்படி கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் கோமா நிலையிலிருந்து ஓரளவு நினைவு திரும்பிய நிலையில் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரத்தின் ரியாத் நிர்வாகிகளின் தொடர் முயற்சியின் காரணமாக மருத்துவமனையின் உதவியுடன் சென்னை செல்லும் விமானத்தில் முதல் வகுப்பில் அவரது ஊரை சேர்ந்த கோவிந்தராசு என்பவர் துணையுடன் நேற்று (25-01-2014) சென்னை அனுப்பிவைக்கப்பட்டார்.

பூமாலையை சென்னை விமானநிலையத்தில் வரவேற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் காஞ்சிபுரம் மாவட்டத் தலைவர் காஞ்சி பிலால், துணைத் தலைவர் அன்சாரி, ஆலந்தூர் தொகுதி செயலாளர் ஹாரூண் ரஷீது ஆகியோர் பூமாலையை பெருமங்களம் பஞ்சாயத்து தலைவர் மருது மற்றும் பூமாலை மனைவி சங்கீதா ஆகியோரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து பூமாலையை மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பூமாலையை தமிழகம் அழைத்துவர எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் இந்தியா ஃப்ரெடர்னிட்டி ஃபோரம் மேற்கொண்ட மனிதநேய முயற்சிக்கு அவரது குடும்பத்தார் தங்களது நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.

IFF, Riyadh - KSA

A.Mohammed Ramujudeen
Riyadh - KSA

கொள்கை ஒன்றாக இருந்தாலும் இஸ்லாமிய இயக்கங்கள் பல பெயர்களில் இயங்குகின்றன. தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாபுலர் .பிரண்ட், ஃபிரடர்னிடி ஃபாரம் என்று பல பெயர்களில் இயங்கினாலும் அனைத்து இயக்கங்களும் பொது சேவையை கருத்தில் கொண்டே இயங்குகின்றன. சாதி, மத வித்தியாசம் பாராமல் இது போன்ற நற்செயல்களை செய்வதற்கு அனைத்து இயக்கங்களும் முன்னுரிமை தர வேண்டும். இரத்ததானம், மரம் வளர்ப்பு, ஏழை மக்களின் கல்விக்கான ஏற்பாடுகள், கிராமங்களின் சுகாதாரம் என்று அனைத்து துறைகளையும் எடுத்து உழைக்க ஆரம்பித்தால் மிகச் சிறந்த எதிர்காலம் இம்மையிலும் மறுமையிலும் இந்த இயக்கங்களுக்கும், அதன் உறுப்பினர்களுக்கும் வல்ல இறைவன் தர தயங்க மாட்டான்.

நுணலும் தன் வாயால் கெடும்!- சம்சுதீன் காசிமி

நுணலும் தன் வாயால் கெடும்!- சம்சுதீன் காசிமி

சம்சுதீன் காசிமிக்கு தவ்ஹீத் ஜமாத்தின் மேல் என்ன கோபம்? 20 வருடங்களுக்கு முன்பெல்லாம் சம்சுதீனைப் போல தலையில் முக்காடோடும் பெரிய ஜிப்பாவும் பெரிய தாடியும் இருந்தால் அவரை ஏகத்துக்கும் மரியாதையோடு நடத்துவோம். அவரின் கால் அழுத்தி விட கை பிடித்து விட என்று ஒரு கூட்டம் எப்போதும் இருந்து கொண்டிருக்கும். வித விதமான சாப்பாடு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் முறை வைத்து அனுப்பப்படும். உழைக்காமல் பாத்திஹா, தர்ஹா, போன்ற மார்க்கம் அனுமதிக்காத செயல்களை முன்னிறுத்தி அவர்களின் வாழ்க்கை எந்த கவலையும் இல்லாமல் ஓடிக் கொண்டிருந்தது.

ஆனால் தவ்ஹீத் சிந்தனை இளைஞர்கள் மத்தியில் ஊடுருவிய உடன் புரோகிதத்துக்கு மிகப் பெரிய அடி விழுந்தது. பெரும் தலைப்பாகை, முக்காடு, நீண்ட ஜிப்பா இதற்கெல்லாம் மதிப்பு இஸ்லாத்தில் கிடையாது. தூய இறை அச்சம் ஒன்றுதான் இறைவன் மனிதர்களிடம் எதிர்பார்ப்பது என்ற உண்மை விளங்கியதால் மார்க்க அறிஞர்கள், இமாம்களை சாதாரணமாகவே பார்க்கத் தலைப்பட்டனர் பொது மக்கள். பாத்திஹாக்கள் குறைந்தது. தட்டு தாயத்துகள் குறைந்தது. தேவையற்ற விருந்துகள் குறைய ஆரம்பித்தது.

காலா காலமாக இதனை எல்லாம் அனுபவித்து வந்த ஒரு கூட்டம் அவ்வளவு இலகுவாக தங்களின் வருமானத்தை இழக்க விரும்புவார்களா? எனவே தான் இந்த மாற்றத்துக்குக் காரணமான தவ்ஹீத் ஜமாத்தின் மீதும் அது நடத்தும் போராட்டங்களின் மீதும் தேவையற்ற விமரிசனங்களை இந்த புரோகிதக் கூட்டம் வைத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் சம்சுதீன் காசிமியின் ஜூம்ஆ பிரசங்கம்.

இந்த மதி கெட்டவரின் பேச்சால் நாளை நடக்க இருக்கும் 28ந்தேதி போராட்டத்துக்கு மேலும் விளம்பரம் கிடைத்துக் கொண்டிருக்கிறது. :-) எனது கிராமத்திலிருந்து மட்டும் மூன்று பஸ்களும் ஐந்து வேன்களும் திருச்சியை நோக்கி செல்கிறதாம். சிறிய கிராமத்திலேயே இந்த நிலை என்றால் மற்ற ஊர்களைப் பற்றி சொல்லத் தேவையில்லை. இந்த போராட்டத்தின் மூலம் முஸ்லிம்களின் விகிதாச்சாரத்திற்கு ஏற்ப அரசு வேலை வாய்ப்புகளை ஆட்சியாளர்கள் தர இறைவனிடம் உதவியை எதிர்பார்ப்போம்.

உள்ளங்களைப் புரட்டக் கூடியன் நம்மைப் படைத்த இறைவன் ஒருவனே!

இன்று நடந்து வரும் சிறை செல்லும் போராட்டத்தை நேரலையில் காண


Sunday, January 26, 2014

இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழச்சி அஜிதா பேகம்!!



காஷ்மீரின் ரியாஸி மாவட்டம், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அருகில் அமைந்திருக்கிறது. தினமும் துப்பாக்கிச்சூடு நடக்கும் யுத்த பூமி. இங்கு ஏ.எஸ்.பி-யாகப் பணிபுரியும் அஜிதா பேகம், கோவையைச் சேர்ந்தவர்.

”காஷ்மீர் கேடரில் பணிபுரிவது ராணுவத்தில் வேலை பார்ப்பதற்குச் சமம். இங்கே ராணுவமும் காவல் துறையும் இணைந்த கூட்டு நடவடிக்கைகள் மூலமா கத்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல்களைத் தடுக்கிறோம். அதனால் நாளரு சவால், பொழுதொரு தேடல் என வாழ்க்கை பரபரப்பாக இருக்கிறது. விடுமுறை சமயங்களில்கூட தமிழ்நாட் டுக்கு வர முடியாது.

அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத் தோழிகளிடம் சோஷியல் நெட்வொர்க் தளங்கள் மூலம் இப்போதும் தொடர்பில் இருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அலுவலகத்துக்குப் போக முடியுமா என்பதே நிச்சயம் இல்லாத நிலைதான் இங்கு. ஏனெனில், எப்போது குண்டு வெடிக்கும், துப்பாக்கிச்சூடு நடக்கும் என்று கணிக்கவே முடியாது. அதனால், வீட்டையே கிட்டத்தட்ட அலுவலகம் போலத்தான் வைத்திருப்போம்.

பிரச்னை என்றால், வீட்டில் இருந்தே அலுவல்களைத் தொடர்வோம். எனது பெயரும் எனக்குப் பெரிய ப்ளஸ். ‘இந்த ஊருப் பொண்ணு’ என்று நினைத்துக்கொண்டு என்னுடன் உடனே நெருக்கமாகிவிடுவார்கள் இந்த ஊர் மக்கள்!” – சந்தோஷமாகச் சிரிக்கிறார் அஜீதா பேகம்.

தமிழகத்திலிருந்து, ஐ.பி.எஸ்.,பணிக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் முஸ்லிம் பெண் அஜிதா பேகம் என்பது குறிப்பிடதக்கது..

- இந்தியாவை ஒளிரச் செய்யும் தமிழர்கள்!

ஆனந்த விகடன் – Feb, 2012

இவர் தற்போது கேரளாவில் எஸ்.பி யாக பணியாற்றி வருகிறார்.

குடியரசு தின செய்தி - இந்திய சவுதி தூதுவர்



I convey my greetings to all my fellow countrymen here in the Kingdom of Saudi Arabia on occasion of the 65th Republic Day of India. On this day, 64 years ago, India became a republic and adopted a forward-looking and resilient constitution, which since its inception has been serving as the guiding light and source of inspiration for India’s legislators and lawmakers. It enshrined the values and principles for which the founding fathers of India stood for, and acted as a protector of rights of all Indians. In the 21st century, the tenets of our constitution are more relevant and pertinent than before. It is due to the implementation of this document in letter and spirit that India today occupies a place of pride in the comity of nations.

India’s relations with the Kingdom of Saudi Arabia predates its independence. The peoples of Indian subcontinent and Arabian Peninsula have been interacting with each other through trade and commerce dating back to several millennia, fulfilling each others’ necessities and requirements. The commonalities in our culture, tradition and language bear testimony to this historic relationship. After India’s independence in 1947, the diplomatic relations between the two countries were established in 1948.

The two countries have been engaged at the highest levels since then. In recent years, the visit of the Custodian of The Two Holy Mosques King Abdullah to India in 2006 was a landmark visit in the bilateral relations of the two countries. The ‘Delhi Declaration’ signed in 2006 provided a vision and roadmap for bilateral cooperation. The visit of Prime Minister Dr. Manmohan Singh to Riyadh in 2010 and the signing of ‘Riyadh Declaration’ elevated the relationship to an “era of strategic partnership” covering political, economic, security and defense areas. Since then the two countries have made significant progress in each of these areas.

As I reflect on India-Saudi Arabia relations in the year 2013, I deem it as a landmark year for all Indian expatriates here in Kingdom. I feel proud as I recall that 1.4 million Indian expatriates availed the concessions announced by the Saudi authorities during the grace period announced by King Abdullah allowing overstaying expatriates to correct their status.Over 1,40,000 Indians left the Kingdom in an orderly manner without facing any penalties or ban on their return. I express my gratitude to King Abdullah for the humanitarian approach the Kingdom adopted while implementing the Nitaqat program. I thank Saudi Ministries of Foreign Affairs, Interior and Labor for their extraordinary support and cooperation to the Indian community.

I would like to mention about the enduring partnership that the embassy forged with the members of Indian community who along with the staff of Indian community schools and media partners rendered valuable services to assist their fellow countrymen. It was with the support of these volunteers that the mission has been able to help the community to fully utilize the grace period within the stipulated time frame. This exercise also brought to the fore the cherished Indian value of “unity in diversity” when all barriers of caste region, religion, and language were transcended to achieve the objective. It also proves as to why Indians remain the most preferred community in Saudi Arabia.
India and Saudi Arabia have signed an ‘Agreement on Labor Cooperation for Domestic Service Workers Recruitment’ early this month to streamline the process of recruitment, to protect the rights of both the employer and domestic service workers and to regulate the contractual relations between them. We are expecting to have in place a Standard Employment Contract shortly that would inter alia specify minimum wage, working hours, paid holidays and dispute settlement mechanism. It is in fact, the first step towards a Comprehensive Agreement on Labor Cooperation covering the entire spectrum of Indian workers in the Kingdom.

Saudi Arabia is India’s 4th largest trading partner with $43.7 billion of trade in 2012-13. The figures in the current financial year are no less impressive so far with bilateral trade so far having crossed $25 billion from April-October 2013. The two sides have been exchanging business delegations to promote trade. Indian companies have been awarded major projects in the Kingdom in 2013. Saudi petrochemical giant Saudi Basic Industries Corporation (SABIC) recently established R&D center in Bengaluru with an investment of over $100 million. In coming months we will witness further efforts and exchanges to strengthen our economic and commercial relationship which forms intrinsic part of strategic partnership.

The two countries have also established institutionalized mechanism of cooperation including Joint Commission Meeting, Saudi India Business Council, India-GCC Industrial Conference, etc. The embassy has launched Saudi India Business Network (SIBN) to facilitate trade and investment. It is also organizing sector specific events to highlight various investment opportunities in India and also act as a forum to share ideas and experiences.

I conclude by expressing my confidence that India and Saudi Arabia, under their wise leadership are on a progressive and forward looking path which not only reflects the collective will of the peoples of the two countries and benefits them but also augurs well for the peace, prosperity and development of the entire region and beyond.

Hamid Ali Rao
Ambassador of India

http://saudigazette.com.sa/index.cfm?method=home.regcon&contentid=20140126193768

இந்தியாவோடு சவுதி அரேபியா நட்புறவு பாராட்டுவதை சவுதியில் உள்ள பாகிஸ்தானிகள் விரும்புவதில்லை. ஆனால் யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தியர்களின் மீதுள்ள அன்பும் பாசமும் சவுதிகளுக்கு என்றுமே குறைவதில்லை. அந்த அளவு நம்மவர்களும் மிக கண்ணியமாகவே நடந்து கொள்கின்றனர். பெரும் பணம் புரளும் தொழிலகங்களையும் இந்தியர்களின் கையில் மிக சாதாரணமாக கொடுத்து விட்டு செல்வதை பார்த்து நான் வியந்துள்ளேன். இரு நாடுகளுக்குமுள்ள நட்புறவு மேலும் அதிகரித்து இந்தியாவும் சவுதியும் பலன் பெற நாமும் பிரார்த்திப்போமாக!

இந்திய குடியரசு தின வாழ்த்துக்கள்!

Saturday, January 25, 2014

'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை!

'ஹஜ் மானியம்' - மத்திய அரசின் ஏமாற்று வித்தை!

பல இந்துத்வாவாதிகள் வைக்கும் குற்றச்சாட்டு 'ஹஜ் மானியம் உங்களுக்கு எதற்கு? வசதியுடைய முஸ்லிம்களுக்குத்தானே கடமை' என்ற வாதத்தை வைக்கின்றனர். நியாயமான கோரிக்கையும் கூட. இது பற்றி இந்த பதிவில் அலசுவோம்.

கேரள ஹஜ் கமிட்டி தலைவரும் வழக்கறிஞரும் சட்டமன்ற உறுப்பினருமான பி.டி.அப்துல் ரஹீம் அவர்கள் தேஜஸ், மாத்யமம் மலையாள நாளிதழ்களில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்:

ஹஜ் மான்யம் என்று கேட்டவுடன் புனித பயணிகளை அரசு இலவசமாக அழைத்துச் செல்வதாகவோ அல்லது புனித யாத்திரைக்கு பெருந் தொகையை ஒதுக்குவதாகவோ பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர். ஆனால் இதில் துளி கூட உண்மையில்லை.

மத்திய அரசின் கீழ் ஹஜ் கமிட்டி வழியாக செல்லும் ஒவ்வொரு புனித பயணியும் பயணம், தங்குமிடம், உணவு உள்ளிட்ட தேவைகளுக்காக சராசரியாக ஒன்றே கால் லட்ச ரூபாய் கட்டுகிறார். இதில் விமானக் கட்டணம் தற்பொழுது 16 ஆயிரம் ஆகும். இது நிரந்தர கட்டணமாகும். விமான பயணத்திற்கு இதனை விட அதிக கட்டணம் தேவைப்பட்டால் அதனை அரசு வழங்கும். இதுதான் ஹஜ் மான்யம். இந்த மான்யமும் அரசின் கீழ் இயங்கும் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே அளிக்கப்படும். தனியார் விமானங்களுக்கு கிடையாது.

உதாரணமாக...கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஹஜ் புனித பயணிகள் கோழ்க்கோட்டில் இருந்து ஹஜ்ஜூக்கு புறப்படுகின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். கோழிக் கோட்டிலிருந்து ஜெத்தா செல்வதற்கு ஏர் இந்தியா வசூலிக்கும் தொகை 17300 ரூபாய் ஆகும். (தற்போது சில ஆயிரங்கள் வித்தியாசப்படலாம்). இந்த தொகைப்படி ஒரு ஹஜ் பயணிக்காக அரசு செலுத்த வேண்டிய மானியத் தொகை வெறும் 1300 ரூபாய் மட்டுமே! (ஜெட் ஏர்வேஸின் விமானக் கட்டணத்தோடு ஒப்பிட்டால் ஒவ்வோர் ஹஜ் பயணிக்கும் ரூ 2000 அரசு திரும்ப தர வேண்டியிருக்கும்.

ஒன்றேகால் லட்ச ரூபாயை புனித ஹஜ் பயணத்திற்காக கட்டும் பயணி மேலதிகமான 1300 ரூபாயை கட்டத் தயங்குவாரா? அதனையும் நாங்களே வழங்குகிறோம் என்று ஹஜ் பயணிகள் கூறினாலும் அரசு இதுவரை சம்மதிக்கவில்லை. நாங்களே வழங்குகிறோம் என பிடிவாதம் பிடித்து வருகிறது. இங்கேதான் ஹஜ் மானியத்தின் பெயரால் அரசு நடத்தும் ஏமாற்று வித்தை அம்பலப்படுகிறது. அதாவது ஆரிய மூளை இங்குதான் வேலை செய்கிறது.

அது எப்படி என்று பார்ப்போமா!

கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தைக் காப்பாற்ற அரசு கண்டு பிடித்த வழிதான் இந்த ஹஜ் மானியம் என்பது. ஹஜ் மானியத்தின் பெயரால் ஒரு பெருந்தொகையை அரசு ஏர் இந்தியாவுக்கு தானமாக வழங்குகிறது. முந்தய ஆண்டுகளை கவனித்தால் இது புரிய வரும். 2008 ஆம் ஆண்டு ஹஜ் மானியமாக 770 கோடி ரூபாய் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசால் வழங்கப்பட்டது. அதற்கு முந்தய வருடம் 2007 ஆம் ஆண்டு 595 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இதே போல் 2009, 2010, 2011 ஆகிய ஆண்டுகளின் புள்ளி விபரங்களை பெற முயற்சி மேற்கொண்டபோது அந்த துறையைச் சார்ந்த அதிகாரிகள் தகவலை தர மறுக்கின்றனர். ஹஜ் ஒதுக்கீடு, நல்லெண்ண பிரதிநிதித்துவக் குழு ஆகியன தொடர்பான வழக்கில் தகவல்கள் ஒருக்கால் வெளியாகலாம்.

2008 ஆம் ஆண்டு 1.10 லட்சம் புனித பயணிகள் ஹஜ் கமிட்டி வழியாக ஹஜ்ஜூக்கு சென்றுள்ளனர். இவர்களுக்காக அரசு ஏர் இந்தியாவுக்கு மானியம் என்ற பெயரால் அளித்த தொகை 770 கோடி ரூபாயாகும். இதன்படி ஒவ்வொரு புனித பயணிக்கும் 70 ஆயிரம் ரூபாய் வீதம் ஏர் இந்தியாவுக்கு மத்திய அரசு அளித்துள்ளது.

எவ்வளவு கடுமையான சீசனாக இருந்தாலும் ஒரு புனித பயணிக்கு கோழிக்கோட்டில் இருந்து ஜெத்தவிற்கோ மதினாவிற்கோ சென்று விட்டு திரும்பி வர விமானக் கட்டணமாக ரூ 70 ஆயிரம் செலுத்தத் தேவையில்லை. விமானக் கட்டணத்திற்காக புனிதப் பயணிகள் அளிக்கும் 16 ஆயிரம் ரூபாயோடு சேர்த்து ரூ 770 கோடியை ஏர் இந்தியாவுக்கு தாரை வார்க்கிறது மத்திய அரசு. பல பயணிகள் சவுதி விமானத்திலும் அனுப்பப்படுகின்றனர். அதற்கு மானியம் கிடையாது. இதன்படி ஒவ்வொரு நபருக்கும் எழுபதாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மானியமாக முஸ்லிம்களின் பெயரால் ஏர் இந்தியாவுக்கு அளிக்கிறது நமது கையாலாக அரசு.

ஏர் இந்தியாவில் பணி புரியும் நபர்களுக்கு நமது ஹஜ் மானியத் தொகை எப்படி அனுப்பப்படுகிறது என்பதை பார்த்தோம். நம் ரத்தத்தை உறிஞ்சி ஏர் இந்தியா குடும்பங்கள் சகல வசதிகளையும் பெற்று வாழ்கின்றன.

இனி வரும் காலங்களில் ஹஜ் புனித பயணம் செல்வோர் 'எங்களுக்கு மானியத் தொகை வேண்டாம்! அப்படி கொடுக்கும் பணத்தில் நாங்கள் ஹஜ் செய்ய விரும்பவில்லை' என்று கையெழுத்து இயக்கம் நடத்தி அதனை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். தவ்ஹீத் ஜமாத், தமுமுக, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போன்ற இயக்கங்கள் இதற்கான போராட்டங்களை அறிவிக்க வேண்டும். வழக்கும் தொடர வேண்டும். அவ்வாறு செய்தால் இந்த ஹஜ் மானியத்தில் உண்டு கொழித்த அனைத்து கருப்பு ஆடுகளும் யார் என்பது வெளி உலகுக்குத் தெரிய வரும்.

முஸ்லிம்களை ஏமாற்றுவதில் காங்கிரஸ் சற்றும் சளைத்ததல்ல. ஓட்டு கேட்டு வரும் அரசியல் கட்சிகளிடம் இத்தனை ஆண்டுகள் ஹஜ் மானியம் யார் யாருக்கு எவ்வளவு வழங்கப்பட்டது? இந்த மானிய பணத்தை இது நாள் வரை அனுபவித்தவர்கள் யார்? யார்? என்ற விபரங்களைக் கேட்க வேண்டும். முக்கியமாக காங்கிரஸ் தொண்டர்களிடம் கேட்க வேண்டும்.

ஆக....இஸ்லாமியரின் ஹஜ் மானிய பணத்தில் தனது ஜீவனை நடத்திக் கொண்டிருக்கிறது ஏர் இந்தியா நிறுவனம் என்பது இதன் மூலம் விளங்குகிறது.. இஸ்லாமியருக்கு உதவினோம் என்ற பெயரும் வந்து விடும்: ஏர் இந்தியாவின் ஊழியர்கள் சுகமான வாழ்வுக்கும் அடித்தளம் இட்டது போல் ஆகி விடும். ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பது இதுதானோ! :-(


Friday, January 24, 2014

சவுதி ஜப்பானிய மாணவர் பரிமாற்றம்!



சவுதி ஜப்பானிய மாணவர் பரிமாற்றம்!

சவுதி கல்வி அமைச்சகத்தின் அடுத்த முயற்சியாக ஜப்பானோடு பல ஒப்பந்தங்களை போட்டுள்ளது. கல்வி விவகாரங்களில் பல உதவிகளை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்கின்றன. அதன்படி இங்குள்ள மாணவர்கள் அங்கு செல்வதும் அங்குள்ள மாணவர்கள் இங்கு வந்து கல்வி கலாசாரங்களை கற்றுக் கொள்வதும் அதிகரித்துள்ளது.

சென்ற டிசம்பர் 26-2013 அன்று ஜப்பானின் பாராளுமன்ற விவகார அமைச்சர் தகாவோ மகீனோ அவர்களால் சவுதி இளைஞர் குழுவுக்கு பாராட்டு பத்திரங்கள் வழங்கப்பட்டன. சவுதி மாணவர் குழுமத்துக்கு முஹம்மத் அல்கர்னாஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த குழு இளவரசர் நவாஃப் பின் பைசலின் அழைப்பின் பேரில் சென்றுள்ளது.

மகீனோ தனது உரையில் 'சவுதியும் ஜப்பானும் மாணவர்களின் முன்னேற்றம், விளையாட்டு கல்வி போன்ற பல துறைகளில் புரிந்துணர்வோடு பல உதவிகளை பரிமாறிக் கொண்டிருக்கின்றன. இந்த முயற்சியானது இரு நாடுகளின் உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்க வைத்துள்ளது' என்றார்.

சவுதி இளைஞர் நலத் துறை தலைவரான அப்துல் அஜீஸின் தலைமையில் இந்த குழு டொயோனோ என்ற ஜப்பானிய கிராமத்துக்கு சென்றது. அந்த கிராமத்தின் அனைத்து மக்களும், அந்த பிராந்தியத்துக்கான மேயர் மினூரோ இடோவும் மகிழ்ச்சியோடு இந்த குழுவை வரவேற்று உபசரித்தனர். இரு நாடுகளின் உறவை எந்த வகையில் மேம்படுத்தலாம் என்ற ரீதியில் கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. இடோ, அராகி என்ற இரு ஜப்பானியர் எவ்வாறு சவுதி இளைஞர்கள் தங்களின் கல்வியை இங்கு பயில்கிறார்கள் என்று விளக்கினர்.

வரும் 2015 ஆம் ஆண்டானது சவுதி ஜப்பான் இரு நாடுகளின் கூட்டு முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களை பூர்த்தியாக்கும் என்ற தகவலையும் அங்கு தெரிவிக்கப்பட்டது. இந்த குழுவானது ஒன்பது நாட்கள் ஜப்பானில் தங்கியிருந்து இளைஞர்களின் முன்னேற்றத்திற்கான நீண்ட கால திட்டங்களை வகுக்கும்.

தகவல் உதவி சவுதி கெஜட்.

அமெரிக்க உறவை உதறி தள்ளி விட்டு ஜப்பான் போன்ற நாடுகளின் பக்கம் தனது கவனத்தை சவுதி திருப்பியிருப்பது சந்தோஷமான செய்தியாகவே பார்க்கிறேன். இது தொடர வேண்டும்.

நரேந்திர மோடியின் இடத்தில் ராக்கி சாவன்! :-)



நரேந்திர மோடியின் இடத்தில் ராக்கி சாவன்! :-)

'இந்திய அரசியலின் ஐடம் கேர்ள் அரவிந்த் கெஜ்ரிவால். இவரை விட ஐடம் கேர்ள் ராக்கி சாவன் சிறந்த ஆட்சியைக் கொடுக்க முடியும்' -உத்தவ் தாக்கரே சாம்னா பத்திரிக்கையில் எழுதிய கருத்து.

அதற்கு பதிலளித்த ராக்கி சாவன் 'உத்தவ் தாக்கரேக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்வேன். அரவிந்த் கெஜ்ரிவாலை விட சிறந்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும். டீக் கடையில் டீ விற்ற ஒருவர் குஜராத் முதல் மந்திரியாக ஆகி இன்று பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிடும் போது ராக்கி சாவன் டான்ஸ் பண்ணி ஏன் அரசியல் பண்ண முடியாது?'

ஆஹா... மோடி பிரதம வேட்பாளராக அறிவிக்க போய் நாற்காலி ஆசை ராக்கி சாவனுக்கும் வந்து விட்டது.மோடிக்கு சரியான போட்டி ராக்கி சாவன்.:-) பிஜேபியினர் இனி ரொம்பவும் சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்.

https://www.youtube.com/watch?v=B_EouhIehgI

Thursday, January 23, 2014

பயங்கரவாதத்துக்கு எதிரான சவுதியின் பங்களிப்பு!



பயங்கரவாதத்துக்கு எதிரான சவுதியின் பங்களிப்பு!

சவுதி அரேபியா 'சர்வதேச பயங்கர வாத எதிர்ப்பு மையம்' என்றழைக்கப்படும் "International Center for Counterterrorism (ICCT)" அமைப்புக்கு 100 மில்லியன் டாலரை அன்பளிப்பாக அளித்துள்ளது. யுஎன்னுக்கு சொந்தமான இந்த அமைப்புக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததற்காக மன்னர் அப்துல்லாவுக்கு ஐநா வின் காரியதரசி பான் கி மூன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இதற்கு முன்பும் 10 மில்லியன் டாலரை அமெரிக்காவில் இயங்கும் இதே அமைப்புக்கு சவுதி அரேபியா அன்பளிப்பாக அளித்துள்ளது.

சென்ற செவ்வாய்க் கிழமை ஜெனீவால் நடந்த சந்திப்பில் பான் கி மூன் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசலிடம் கூறும் போது 'உலகில் அமைதியை கொண்டு வரவும் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை வேரறுக்கவும் மன்னர் அப்துல்லா ஆற்றும் பணி போற்றத் தக்கது. சிரியாவில் நடந்து வரும் மனித பேரழிவை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அமைதியை நிலை நாட்டுவது நம் அனைவரின் கடமை. அதற்கான முன் முயற்சியை ஐநா தொடர்ந்து எடுத்து வருகிறது' என்றார்.

தகவல் உதவி

அரப் நியூஸ்

இது போன்று ஐநாவுக்கு அனுப்பும் பணத்தை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விடும் கூத்துகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஏனெனில் ஐநாவை ஆள்வது அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற கூட்டு களவாணிகளே! தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மூக்கை நுழைத்து இன்று வரை அங்கு ரத்தக் களரியை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மேற் சொன்ன நாடுகளே! அதிலும் சாமர்த்தியமாக உள்ளூர் மக்களிடம் மொசாத் மிக சாமர்த்தியமாக புகுந்து அவர்களை மூளை சலவை செய்து அந்நாட்டுக்கு எதிரான கலவரங்களை தூண்டி விடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

நம் நாட்டிலும் மும்பை குண்டு வெடிப்பிலிருந்து பல குண்டு வெடிப்புகளை தீர ஆராய்ந்தால் அதில் மொசாத்தின் கை இருப்பது தெரிய வரும். நமது நாட்டிலுள்ள இந்துத்வாவாதிகளின் செயல்பாடுகளுக்கு மூளையாக செயல்படுவதும் யூதர்களே! தங்கள் மேல் சந்தேகம் வராதவாறு மிக சாமர்த்தியமாக காய்களை நகர்த்துவதில் இஸ்ரேலியர் பலே கில்லாடிகள். எனவே தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பணம் எந்த வகையில் செலவழிக்கப்படுகிறது என்பதையும் சவுதி அரசு ஒரு சிறந்த கமிட்டியின் மூலம் கண்காணிக்க வேண்டும். பான் கி மூனின் அதிகாரமானது நமது நாட்டு ஜனாதிபதியின் அதிகாரத்தை ஒத்ததே! அமெரிக்க, இஸ்ரேல், பிரிட்டனின் உத்தரவு இல்லாமல் ஒரு காயையும் நகர்த்த முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

பசுமை பள்ளி வாசல்கள் இனி அமைப்போமா!



இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு என்ன என்றால் 'புவி வெப்பமயமாதல்' என்று உடன் சொல்லி விடலாம். அந்த அளவு இன்று உலகை இந்த பிரச்னை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. சவுதியில் உள்ள தபூக்கில் நான் ஆண்டுகள் வேலை செய்துள்ளேன். சில நேரங்களில் குழாய்களில் தண்ணீர் ஐஸாக உறைந்து தொங்கிக் கொண்டிருக்கும். அந்த அளவு குளிர். அதிலும் இந்த வருடம் இன்னும் அதிகம். ரோடுகள் எல்லாம் ஐஸ்களால் சூழப்பட்டு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப் பொழிவு. பிலிப்பைனை தாக்கிய புயல். அதில் 6000 க்கும் மேலான மக்கள் பலி என்று சமீப காலங்களில் நடக்கும் பேரழிவுகளை பட்டியலிட்டுக் கொண்டே செல்லலாம்.

இந்த பேரழிவுகளுக்கு நாமும் ஒரு காரணம். வாகனங்களும், தொழிற்சாலைகளும் வெளியிடும் கார்பன் இந்த உலகை தூசுக்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. தொடர்ந்து வற்புறுத்திக் கேட்டதால் எனது பையன்களுக்கு டூ வீலர் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் நான் அதிகம் பயணிப்பது சைக்கிளில்தான். 'என் காலேஜ் ஃப்ரண்டஸ்லாம் கிண்டல் பண்றானுங்க. இனி சைக்கிளில் போகாதீங்க... நம்மகிட்டதான் டூ வீலர் இருக்கே' என்று என் மகன் சொல்வதை பார்த்து சிரிப்பேன். அவனது நண்பர்களுக்காக நான் டூ வீலரில் போக வேண்டுமாம். நான் லீவில் ஊர் சென்ற போது சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன். அந்த ஊரிலேயே தொழில் செய்து வரும் ஒருவர் 'நீ சைக்கிளில் போவதும்: நான் டூ வீலரில் போவதும் சில நேரங்களில் எனக்கே வெட்கமாக இருக்கிறதுப்பா...' என்று சொன்னதை இன்றும் நினைத்தாலும் சிரிப்பு வரும். உடற் பயிற்சி செய்வதற்கு சைக்கிளைப் போன்ற சிறந்த ஒரு சாதனம் வேறு இல்லை என்று சொல்லலாம். விபத்துகளும் இதனால் குறையும். செலவும் மிச்சம். உடலுக்கும் ஆரோக்கியம். புவி வெப்பமயமாதலை ஓரளவு நம்மாலும் குறைக்க முடியும். நமது நாட்டு பணம் அநியாயாத்துக்கு பெட்ரோலுக்காக வெளி நாடு செல்வதையும் ஓரளவு இது குறைக்கும். எனவே இப்படி பல பயன்கள் உள்ளதால் உடல் ஆரோக்கியம் உள்ளவர்கள் லோக்கலுக்கு அதிகம் சைக்கிளையே பயன் படுத்துவோமாக! :-)

இங்கிலாந்தில் உள்ள மேட் MADE (Muslim Agency for Development Education) என்ற என்ற அமைப்பு உலக வெப்பமயமாதலை ஓரளவு குறைக்கும் பொருட்டு பல சேவைகளை செய்து வருகிறது. பள்ளி வாசல்களை எல்லாம் பசுமைக் குடில்களாக தற்போது இவர்கள் மாற்றி வருகின்றனர். பள்ளி வாசல்கள் எங்கும் தற்போது பசுமை பூத்துக் குலுங்குகிறது. உலகில் உள்ள இயற்கை வளங்கள் அனைத்தும் நமக்கு இறைவனின் வல்லமையை பறை சாற்றிக் கொண்டிருக்கின்றன. நபிகள் நாயகத்தின் போதனையும் இதனையே நமக்கு சொல்கிறது.

"ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்'' என்று இறைவனின் தூதர் நபிகள் நாயகம் அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: புகாரி 2320


ஆஹா...என்ன அழகிய ஒரு அறிவுரை. தொழுது கொள், ஹஜ் செய், ஜகாத் கொடு என்பது மட்டும் இஸ்லாம் அல்ல. ஒரு மரத்தை நட்டு அதனால் உயிரினங்கள் பயனுற்றால் அதற்கும் நன்மை எழுதப்படுகிறது என்ற நபிகளின் வார்த்தையை அந்த இளைஞர்கள் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். தொழுவதற்காக கை கால்களை அலம்பி சுத்தம் செய்து கொள்ளும் போது கூட தண்ணீரை சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்ற அறிவுரையையும் நபிகள் நாயகம் நமக்கு போதித்து இருக்கிறார்.

சுற்றுச் சூழலோடு அமைந்த பள்ளி வாசல்கள் என்றால் என்ன?

மான்செஸ்டரில் உள்ள நஜ்மி பள்ளி வாசல் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக உள்ளது. இந்த பள்ளி கட்டுமானமானது ஏற்கெனவே உபயோகப்படுத்தப்ட்ட மரங்களைக் கொண்டு கட்டப்பட்டது. இந்த பள்ளி வாசலின் மின்சாரத் தேவைகள் அனைத்தும் சூரிய சக்தியால் அமைக்கப்பட்டது. மேற் கூரைகள் கண்ணாடிகளால் வேயப்பட்டுள்ளது. ஒளி தேவைப்படும் போது சூரியனின் ஒளியையே பயன்படுத்தக் கூடிய வகையில் கட்டியுள்ளார்கள். பள்ளி வாசலை சுற்றி பசுமை நிறைந்த மரங்களை வளர்க்கின்றனர்.

இந்த அமைப்பின் உப தலைவர் கூறும் போது: 'ஒரு வணக்கத்தலம் இயற்கையோடு கூடியதாக கட்டப்பட்டிருக்க வேண்டும். அந்த சூழல் இருந்தாலே இறைவனை வணங்குவதற்கு நமக்கு ஏதுவாக இருக்கும். இவ்வாறு அமைப்பதற்கு நமக்கு அதிக பொருளாதார செலவும் கிடையாது. சிங்கப்பூரில் 2012ல் இதே போன்ற ஒரு பள்ளியை நிர்மாணித்தோம். கத்தாரிலும் இதே போன்ற பள்ளிகளை அமைக்க திட்டமிருக்கிறது. தண்ணீரை மறு சுழற்சி செய்து பள்ளியை சுற்றியுள்ள தோட்டங்களுக்கு திருப்பி விடுவது. பள்ளியை சுற்றி மரங்கள் செடி கொடிகளை வளர்ப்பது. வெள்ளிக் கிழமைகளில் சொற்பொழிவுகளில் சுற்று சூழலை மாசுபடாமல் எவ்வாறு பராமரிப்பது என்பதையும் மக்களுக்கு புரிய வைப்பது. பள்ளிக்கு தொழ வருபவர்கள் கூடிய வரை நடந்தோ, சைக்கிளிலோ, அல்லது டூ வீலரோ வர அறிவுறுத்துவது. ஒரு நபருக்காக ஒரு நான்கு சக்கர வாகனத்தை உபயோகிப்பதை முடிந்த வரை தவிர்த்துக் கொள்வது. இது போன்ற பல திட்டங்களை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம். இதற்கு மக்களிடம் அதிக ஆதரவும் இருக்கிறது"

"இந்த உலகை மாசுபடாமல் காக்கும் பொருப்பு மற்றவர்களை விட முஸ்லிம்களுக்கு அதிகம் உண்டு. அதனை இறைவனின் இல்லமாகிய பள்ளி வாசல்களிலிருந்து தொடங்குதல் மிக பொருத்தம் இல்லையா?' என்று கேட்கிறார் இந்த அமைப்பின் தலைவர் முராத்.


Creative ideas that can be easily implemented in almost any mosque are:

Use touch sensitive taps in all sinks; they turn on when touched and automatically turn off after a few seconds, reducing water wastage.

Provide recycling bins in the mosque. This makes it easier for community members to recycle glass, cardboard and paper, plastics, and aluminum by separating and collecting recyclables in the home and dropping them off at the neighborhood mosque.

Install solar panels that capture the sun’s energy and convert sunlight into electrical energy.

Put up colorful and informative posters that foster environmental awareness.

Encourage the imam, or leader of the mosque, to dedicate a Friday sermon to the importance of preserving the environment.

Provide bike racks in the parking space of the mosque to encourage worshipers to come to the mosque whenever possible by bike rather than car.

Plant a community garden. Transporting food across the world can be very harmful for the environment and costly. The community can grow fresh, local produce which they can share among themselves or donate to families in need.

Use environmentally friendly cleaning products and bio-degradable plates and cups during community events.



தகவல் உதவி: சவுதி கெஜட்.

Wednesday, January 22, 2014

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இரத்ததான முகாம்

65வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு
ரியாத் மண்டலம் நடத்தும் மெகா இரத்ததான முகாம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ரியாத் மண்டலம் நடத்தும் 27 வது இரத்ததான முகாம்
கிங் ஃபஹத் மெடிகல் சிட்டி மருத்துவமனை KFMC - இரத்தவங்கியில்...

இன்ஷா அல்லாஹ்,
நாள்: 24.ஜனவரி.2014 - காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இடம்: கிங் ஃபஹத் மெடிகல் சிட்டி மருத்துவமனை KFMC - இரத்தவங்கி
மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது!

இரத்ததான தொடர்புக்கு: சோழபுரம் ஹாஜா - 0500498772,ஷாகிர் - 0507946557, மர்கஸ்: 4021854
வாகன தொடர்புக்கு: ஹாஜா அலாவுதீன் - 0595991961
நியூ செனைய்யா நூர்முஹம்மது - 0551445321, நஸீம் அஷ்ரஃப் - 0558837810


அன்புடன் அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் - ரியாத் மண்டலம்

------------------------------------------------------------



Tuesday, January 21, 2014

ஒன்பது வாய் தோல் பைக்கு - சித்தர் பாடல்

ஒன்பது வாய் தோல் பைக்கு ஒரு நாளைப் போலவே

அன்பு வைத்து நெஞ்சே அலைந்தாயே - வன் கழுக்கள்

தத்தி தத்தி சட்டை தட்டி கட்டி பிட்டுக்

கத்திக் குத்தி தின்னக் கண்டு



ஒன்பது வாய் = ஒன்பது வாசல் கொண்ட
தோல் பைக்கு = தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல்
ஒரு நாளைப் போலவே = ஒரு நாளைப் போலவே எல்லா நாளும்
அன்பு வைத்து = அன்பு வைத்து
நெஞ்சே அலைந்தாயே = அலைந்தாயே என் மனமே
வன் கழுக்கள் = வன்மையான கழுகுகள்
தத்தி தத்தி = தத்தி தத்தி கிட்ட வந்து
சட்டை தட்டி = சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து
கட்டி பிட்டுக் = ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு
கத்திக் = கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு
குத்தி = இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து
தின்னக் கண்டு = தின்ன கண்டும்

ஒன்பது வாசல் கொண்ட தோலால் போர்த்தப்பட்ட இந்த உடலின் மேல் ஒரு நாளைப் போலவே எல்லா நாளும் அன்பு வைத்து அலைந்தாயே என் மனமே! வன்மையான கழுகுகள் தத்தி தத்தி கிட்ட வந்து சட்டை போன்ற தங்களின் இறகுகளை தட்டி சப்தம் செய்து ஒன்றோடு ஒன்று கட்டி பிடித்து சண்டையிட்டு கத்தி, சப்தம் இட்டுக்கொண்டு இறந்த உடலை தன் கூறிய அலகால் குத்தி கிழித்து தின்ன கண்டும்

இவ்வாறு அழுகி நாற்றமெடுக்கும் இந்த உடலுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து பாவங்களை செய்கிறாயே என்று கண்டிக்கிறார்.

'வீடு வரை உறவு... வீதி வரை மனைவி.....

காடு வரை பிள்ளை.... கடைசி வரை யாரோ....

என்று கண்ணதாசனும் பாடி விட்டுச் சென்றுள்ளார்.

கடைசி வரை வருவது நாம் உலகில் செய்த நன்மைகளும் தீமைகளும் என்ற உண்மையை உணராமலேயே கவிஞர் போய் சேர்ந்து விட்டார்.

Monday, January 20, 2014

சவுதியில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம்!



புரைதா. சவுதி தலைநகர் ரியாத்திலிருந்து 350 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தோட்டங்களும் வயல் வெளிகலும் நிறைந்த ஒரு அழகிய நகரம். ராஷித் அல் ஸல்லாஸ் என்ற சவுதி நாட்டவர் தனது வீட்டில் வீட்டு டிரைவராக வேலை செய்து வரும் இந்தோனேஷிய டிரைவருக்கு தனது செலவிலேயே திருமண ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். மண்டப வாடகை, சாப்பாட்டு செலவு, பெண்ணுக்கு தேவையான அனைத்து செலவுகளையும் இந்த சவுதி நாட்டவரே ஏற்றுக் கொண்டு அந்த திருமணத்துக்கு தலைமை தாங்கி நடத்தியும் வைத்தார். இந்த திருமணத்துக்கு தனது உறவினர்கள், தொழிலதிபர்கள் என்று அனைவரையும் அழைத்து ஒரு செல்வந்த சவுதியின் திருமணத்தைப் போன்று நடத்தி வைத்துள்ளார். விருந்து உபசரிப்பு முடிந்தவுடன் திருமண அன்பளிப்பாக தனது விலையுயர்ந்த நான்கு சக்கர வாகனத்தையும் அன்பளிப்பாக கொடுத்தது நெகிழ்ச்சியாக இருந்தது.

அல்குதா என்ற தொழிலதிபர் இது பற்றிக் கூறும் போது 'இதை நான் மிகவும் வரவேற்கிறேன். மனிதர்களை இனத்தால், மொழியால், நிறத்தால் வேறுபடுத்துவதை இஸ்லாம் தடை செய்கிறது. ஆனால் ஒரு சில சவுதிகள் இந்த தவறை செய்கின்றனர். அவர்கள் இந்த திருமணத்தை முன்னுதாரமாகக் கொண்டு முஸ்லிம் அல்லாதவர்களையும் அன்பாகவும் பண்பாகவும் நடத்த பழகிக் கொள்ள வேண்டும். இஸ்லாம் அதைத்தான் நமக்கு போதிக்கிறது' என்றார்.

ராபிக்கில் அமைந்துள்ள கல்லூரியின் முதல்வர் டாக்டர் அப்துல்லா சாதி கூறும் போது 'இந்த நிகழ்வை கண்டு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். வெளி நாட்டு தொழிலாளியோடு எவ்வாறு நாம் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த நிகழ்வு நமக்கு அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது. இஸ்லாம் நமக்கு எதை போதிக்கிறது என்பதை இந்த திருமணத்தின் மூலம் நாம் அறிந்து கொள்கிறோம். வெளிநாட்டு தொழிலாளர்களை கேவலமாக நடத்துபவர்கள் சொற்ப எண்ணிக்கையினரே. அந்த ஒரு சிலர் ஒட்டு மொத்த சவுதிகளின் எண்ணங்களை பிரதிபலிப்பவர்கள் அல்ல.' என்றார்.

அக்பர் பாட்சா என்ற தொழிலதிபர் கூறும் போது 'எல்லோரும் இறைவன் முன்னால் சமமே. அரபு அரபு அல்லாதவர் என்ற பாகுபாட்டை இஸ்லாம் நமக்கு கற்றுத் தரவில்லை. மனிதர்களில் சிறந்தவர் இறைவனைக் கண்டு அஞ்சும் ஒரு நல்லடியார் என்பதே இஸ்லாத்தின் பார்வை. இதைத்தான் நபிகள் நாயகமும் போதித்தார். அவரது போதனையை அனைத்து சவுதி நாட்டவரும் தங்களது வாழ்க்கையில் கடைபிடிக்க ஆரம்பித்தால் உலகிலேயே ஒரு சொர்க்க லோகத்தை சவுதியில் காணலாம்' என்றார்.

மணமகனான இந்தோனேஷிய டிரைவர் கூறும் போது 'கடந்த 27 வருடங்களாக நான் சவுதியில் இருந்து வருகிறேன். ஒரு முறை கூட என்னை இழிவாகவோ இம்சிக்கும் வகையிலோ எவரும் நடத்தியதில்லை. எனது முதலாளியைப் போல் அனேகர் சவுதியில் உள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒரு சிலர் செய்யும் தவறுகளை உலக மீடியாக்கள் பெரிதாக்கி பிரச்னைகளை ஏற்படுத்துகின்றனர்.' என்கிறார்.

தகவல் உதவி

அரப் நியூஸ்

17-01-2014

சவுதிகள் அனைவரும் மிகவும் பரிசுத்தமானவர்கள் என்று நான் சொல்ல வரவில்லை. தவறு செய்பவர்கள் எல்லா சமூகத்திலும் இரண்டற கலந்தே உள்ளனர். ஆனால் சவுதிகள் செய்யும் ஒரு சில தவறுகள் மாத்திரம் உலக மீடியாக்களால் பெரிதுபடுத்தப்படுகிறது. இது போன்ற செய்திகள் அவர்களுக்கு கிடைத்தாலும் அதனை வசதியாக ஒதுக்கி விடுகின்றனர்.

Sunday, January 19, 2014

மரணம் - சிறுகதை

மரணம் - சிறுகதை

'நமதூர் கீழத் தெருவை சேர்ந்த அப்துல் குத்தூஸ் அவர்களின் தகப்பனார் அப்துல் ரஹ்மான் இன்று இரவு 8 மணியளவில் காலமாகி விட்டார். அன்னாரின் ஜனாஜா(இறந்த உடல்) நாளை காலை 11 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்'

பள்ளிவாசலின் ஒலி பெருக்கியிருந்து இந்த செய்தியானது மூன்று முறை சொல்லப்பட்டது. ஊர் முழுக்க ரஹ்மான் பாய் இறந்த செய்தியைப் பற்றியே பேச்சாக இருந்தது. நெருங்கிய உறவினர்களும் அக்கம் பக்கத்து வீட்டாரும் ரஹ்மான் பாயின் உடலைப் பார்க்க வந்த வண்ணம் இருந்தனர்.

அப்துல் குத்தூஸ் ஒரே பையன். கவலை தோய்ந்த முகத்துடன் தகப்பனாரின் அருகில் அமர்ந்திருந்தான். இன்னும் திருமணம் ஆகவில்லை. பிகாம் பட்டதாரி. சவுதியில் ஒரு அலுவலகத்தில் கணக்கராக வேலை பார்த்து வருகிறான். தந்தையின் உடல் நிலை மோசமாவதை அறிந்து மூன்று மாத விடுப்பில் தமிழகம் வந்து 10 நாட்கள் ஆகிறது. பக்கத்தில் இருக்கும் டவுன் ஆஸ்பத்திரியில் ஒரு வாரம் வைத்து வைத்தியம் பார்த்து தேறாததால் இறந்த உடலை மட்டுமே அவர்களால் வீட்டுக்கு கொண்டு வர முடிந்தது. குத்தூஸின் தாயார் மர்யம் தனது சொந்தங்களோடு அமர்ந்து அழுது கொண்டிருந்தார்.

வீட்டின் திண்ணையில் அமர்வதற்கு பாய்கள் போடப்பட்டன. தெருவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட நாற்காலிகள் போடப்பட்டன. பக்கத்து வீட்டிலிருந்து குத்தூஸூக்கும் மர்யமுக்கும் மற்றும் உறவினர்களுக்குமாக உணவுகள் கொண்டு வரப்பட்டன. சோகமான சூழல் ஆதலால் சிறிது சாப்பிட்டு விட்டு மற்றவற்றை ஏழைகளுக்கு கொடுத்து விட்டனர்.

இரவு 11 மணி ஆகி விட்டதால் நாளை காலையில் வருவதாக சொல்லி விட்டு பக்கத்து வீட்டுக் காரர்கள் கலைய ஆரம்பித்தனர். இரவு முழுவதும் சோகமாக கழிந்தது குத்தூஸூக்கு.

காலை ஒன்பது மணி. கூட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. பள்ளிவாசல் நிர்வாகியை சந்தித்து மையவாடியில் குழி வெட்ட அனுமதி கேட்டனர். குத்தூஸ் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவன் என்பதால் நிர்வாகி ஹஸன் சற்று குழப்பத்தோடு 'ஏம்பா..அந்த பையன் தவ்ஹீத் ஜமாத் ஆச்சே...ஏதும் பிரச்னைகள் வராதே' என்று கேட்டார்.

'பிரச்னை இதுல என்ன இருக்கு பாய்...'

அரை மனத்தோடு அனுமதி கொடுத்தார் ஹஸன். மைய வாடியில் குழி வெட்டும் வேலையும் நடக்க ஆரம்பித்தது. வீட்டில் இறந்த உடலை குளிப்பாட்ட ஆரம்பித்தனர். உடலை வெள்ளைத் துணியால் போர்த்தி கடைசி பார்வைக்காக வைக்கப்பட்டது. மர்யமும் நெருங்கிய உறவினர்களும் உடலின் அருகில் நின்று அழ ஆரம்பித்தனர். சவ பெட்டி கொண்டு வரப்பட்டு அதனுள் இறந்த உடல் வைக்கப்பட்டது. உடல் பள்ளிவாசலை நோக்கி புறப்பட்டது. இறந்தவர்களுக்காக பிரார்த்தனை செய்யும் முகமாக தொழுகை ஒன்று நடத்தப்படும். அதனை இறந்தவரின் சொந்தங்களே நடத்த பிரியப்பட்டால் அதில் மற்றவர் குறிக்கிடக் கூடாது என்று நபி மொழி இருப்பதால் குத்தூஸ் தலைவராக நின்று தொழ ஆயத்தமானான். சிறிய சலசலப்பு.

'இது என்னப்பா புது பழக்கமா இருக்கு. தொழுகையை பள்ளி இமாம் (மார்க்க அறிஞர்) தானே வைக்கணும்?'

'சொந்தங்கள் தொழ வைக்க அனுமதி இருக்குது பாய்'

ஆளாளுக்கு பேச ஆரம்பித்தனர். அதற்குள் 'அல்லாஹ் அக்பர்' (இறைவன் பெரியவன்) என்று கூறி தொழுகையை ஆரம்பித்து விட்டான் குத்தூஸ். உடன் பலரும் தொழுகையில் கலந்து கொண்டு அந்த கடமையை முடித்தனர்.

இதை சற்றும் எதிர்பார்க்காத நிர்வாகி ஹஸன் குழப்பத்தோடு 'என்ன செய்யலாம் ஹஜ்ரத்?' என்று கேட்டார்.

'என்னை கேட்டா? தொழுகை வைத்த அந்த பையனை கேளுங்கள்' என்றார் கோபமாக! இதனை கண்டு கொள்ளாமல் விட்டால் நமது வேலை போய் விடும் என்ற பயம் அந்த இமாமுக்கு.

இமாமுக்கு ஆதரவாக பலரும் குத்தூஸூக்கு ஆதரவாக இளைஞர்களும் பிரிந்து தங்கள் பக்க நியாயத்தை மற்றவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தனர். பிரச்னை பெரிதாவதை உணர்ந்த நிர்வாகி குத்தூஸிடம் 'நீ எப்படி தொழுக வைக்கலாம்?' என்று கேட்டார்.

'மார்க்கம் அனுமதிக்குது பாய்'

'அதெல்லாம் எனக்கு தெரியாது. உடலை அடக்கம் பண்ண நாங்கள் அனுமதிக்க முடியாது. வேறு எங்காவது அடக்கம் செய்து கொள்ளுங்கள்'

இந்த வார்த்தையை கேட்டவுடன் ஒரே கூச்சல் குழப்பம் பள்ளியினுள்.

'பூட்டை உடைத்து உடலை உள்ளே கொண்டு செல்வோம்' என்று இளைஞர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். நிர்வாகி காவல் துறைக்கு உடன் போன் பண்ணினார். காவல் துறை அதிகாரியும் இரண்டு கான்ஸ்டபிள்களும் அடுத்த அரை மணி நேரத்தில் இடத்திற்கு வந்தனர். காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் பல ஆண்டுகளாக இந்த ஏரியாவில் பணியில் இருப்பதால் முஸ்லிம்களின் பழக்க வழக்கங்களையும் நன்கு அறிந்தே வைத்திருந்தார். அங்குள்ள தற்போதய பிரச்னையையும் இரு தரப்பையும் அழைத்து பொறுமையாக கேட்டார்.

'ஹஸன் பாய்! அந்த பையன் தொழுக வைப்பது உங்கள் மார்க்கத்தில் தடுக்கப்பட்டதா' -கண்ணன்

'எனக்கு தெரியாது சார். இமாமிடம் கேட்போம்! சொல்லுங்க ஹஜ்ரத்' -ஹஸன்

'இதுவரை இறந்தவர்களுக்கு பள்ளி இமாம்தான் தொழ வைத்துள்ளார். அனைத்து ஊர்களிலும் இது தான் நடைமுறைப்படுத்தப்படுகிறது' -பள்ளி இமாம்

'நான் ஊர் வழக்கத்தை கேட்கவில்லை ஐயா! உங்கள் மார்க்கம் அனுமதிக்குதா என்று தான் கேட்டேன்'

'அது நபி மொழிகளை எல்லாம் பார்த்துதான் சொல்லணும்' -ஹஜ்ரத்

உடனே அங்கிருந்த ஒரு இளைஞர் முஸ்லிம் நபி மொழி தொகுப்பின் தமிழாக்கத்தை அதிகாரி கண்ணனிடம் கொடுத்தார்.

'எந்த மனிதரின் குடும்பத்தினர் விஷயத்திலும், அவரது அதிகாரத்திலும் அவருக்கு நீ இமாமாக - தலைவனாக ஆகாதே!' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மஸ்வூத் (ரலி) நூல்: முஸ்லிம் 1079, 1078

இதை படித்துப் பார்த்த அதிகாரி ஆச்சரியத்துடன் 'இவ்வளவு தெளிவா குடும்ப விவகாரத்தில் மற்றவர்கள் தலையிடக் கூடாது என்று இருக்கும் போது அந்த பையனின் விருப்பத்துக்கு நீங்கள் ஏன் குறுக்கே நிற்கிறீர்கள்?' என்றார்.

'அப்போ இத்தனை நாள் நாங்கள் செய்தது தவறு என்கிறீர்களா?' -பள்ளி இமாம்

'தவறு சரி என்று வேறு மதத்துக்காரன் நான் எப்படி சொல்ல முடியும். மார்க்க அறிஞர் நீங்கதான் முடிவை சொல்லணும். நேற்று இறந்த உடல். அதிலும் வயதானவர் கூட. எனக்கு மனது கஷ்டமாக இருக்கிறது. அந்த குடும்பம் எந்த அளவு வேதனைப்படும். இதைப் பற்றி நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? அல்லது அவர் கொடுத்த புத்தகம் தவறா?' அதிகாரி கண்ணன்.


இதே ஊரில் தர்ஹாவை வைத்து பிழைப்பை ஓட்டிக் கொண்டிருக்கும் வேறு சிலர் இமாமுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்தனர்.

'இவனுங்க எப்பவுமே பிரச்னைதான் சார். தர்ஹாவுக்கு போகக் கூடாதுண்டு சொல்வானுங்க. மார்க்க அறிஞர்களை மரியாதை குறைவா பேசுவானுங்க. பாத்திஹா, ஹத்தம், ஹந்தூரி, மீலாது விழா இதெல்லாம் கூடாதுண்டு சொல்வானுங்க. இதெல்லாம் நாங்க பரம்பரையா செய்துகிட்டு வர்றோம். அதை எப்படி சார் நிறுத்த முடியும்'

'மற்ற பிரச்னைகள் எல்லாம் என்னவென்று எனக்கு தெரியாது. இப்போ இறந்த உடலை அடக்கம் செய்ய மாட்டேன் என்று யாரும் சொன்னால் இந்திய சட்டப்படி கிரிமினல் குற்றம். 'வன் கொடுமை' சட்டத்துல உள்ளெ புடுச்சு போடுறதுக்கும் சட்டத்துல இடம் இருக்கு. நீங்க எல்லாம் கண்ணியமானவங்க. ஒரு குற்றமும் பதியப்படாத ஊர். நானும் உங்களை மதிக்கிறேன். அந்த மரியாதையை காப்பாற்றிக் கொள்வது ஊர் பெரிய மனிதர்கள் கையில் தான் இருக்கிறது' - என்றார் கண்ணன் சற்று சூடாக.

பள்ளி இமாமுக்கும் நிர்வாகி ஹஸனுக்கும் முகம் சற்று இறுகியது. பிரியாணியும், நெய் சோறும் தினம் சாப்பிட்டு பழக்கப்பட்ட பள்ளி நிர்வாகியின் வாய் களி திங்க விரும்புமா? எனவே சுருதி சற்று குறைந்தது. நிர்வாகியும் பள்ளி இமாமும் ஊர் பெரியவர்களும் கூடி பேசி உடலை அடக்க அனுமதிப்பது என்ற முடிவுக்கு வந்தனர்.

'சரி சார். நாங்க அனுமதிக்கிறோம்' என்றனர் நிர்வாகிகள் அனைவரும்.

பெரிய சிக்கல் தீர்ந்த மகிழ்ச்சியில் கண்ணன் 'பாருங்க பாய்! முஸ்லிம்களான உங்களை சுற்றி இப்போ பெரும் சதி வலை பிண்ணப்படுகிறது. நான் பெரியார் வழியில் வந்த நாத்திகன். அதனால்தான் உங்களுக்குள் பிரச்னையை பெரிதாக்க விரும்பவில்லை. வேறு அதிகாரிகள் யாராவது இதனையே பெரிய இஸ்யூ ஆக்கி இந்த இளைஞர்களை எல்லாம் உள்ளே தள்ளலாம். அந்த இளைஞர்களின் படிப்பும் எதிர்காலமும் வீணாகும். அனுமதி மறுத்த உங்களையும் உள்ளே தள்ளலாம். சட்டத்தில் அதற்கு இடமும் உண்டு. அல்லது அந்த சட்டத்தை எப்படி வளைப்பது என்பதும் எங்களுக்குத் தெரியும். எனவே இனிமேல் ஏதும் பிரச்னை என்றால் உங்களுக்குள் பேசி சமாதானம் ஆகிக் கொள்ளுங்கள். நாடு கெட்டுக் கெடக்குது. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.' என்றார்.

பள்ளி இமாமின் பேச்சைக் கேட்டு தவறிழைத்து விட்டோமோ என்ற யோசனை நிர்வாகி ஹஸனுக்கு வந்தது. 'இப்படி ஒரு ஹதீஸ் இருப்பதை ஏன் ஹஜ்ரத் எனக்கு முன்னாடியே சொல்லவில்லை.' என்று இமாமிடம் கேட்டார்.

'இப்படி ஒரு ஹதீஸ் இருக்குதா? என்று என்னிடம் நீங்கள் ஏன் முன்னாடியே கேட்கவில்லை' என்றார் இமாம். 'கழுவுற மீன்ல நழுவுற மீனாக' இமாம் மாறுவதைப் பார்த்த ஹஸன் வெறுத்துப் போய் தனது தவறை உணர்ந்து கொண்டு வீட்டுக்கு சோகத்தோடு நடையைக் கட்டினார்.

ஒரு நபி மொழியை உயிர்ப்பித்த சந்தோஷத்தில் இளைஞர்கள் இறந்த உடலை அடக்க ஆயத்தமாயினர். ஊர் பொது மக்களும் பிரச்னை சுமூகமாக முடிந்ததை எண்ணி நிம்மதி பெரு மூச்சு விட்டனர். உடல் அடக்கப்படும் வரை அதிகாரி கண்ணன் கூடவே நின்று அங்கு நடப்பதை பார்வையிட்டுக் கொண்டிருந்தார். உடலை குழியில் இறக்குவதையும் இறந்த உடலின் மேல் சொந்தங்களே ஆர்வமோடு மண் வெட்டியால் மண்ணை தள்ளுவதையும் பார்த்துக் கொண்டு நின்றார். மற்ற ஊர்களில் உள்ள இளைஞர்கள் ரஜினி ரசிகர் மன்றமும் கமல், அஜீத் ரசிகர் மன்றமும் வைத்துக் கொண்டு குடித்து விட்டு கும்மாளம் அடிப்பதையே பார்த்து பழக்கப் பட்டவருக்கு புரோகிதர்கள் செய்யும் அத்தனை வேலைகளையும் இந்த இளைஞர்கள் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வதை ஆச்சரியத்தோடு பார்த்துக் கொண்டே தனது சக கான்ஸ்டபிள்களிடம் 'பாருங்கய்யா இந்த பையன்களை! ஊரையே பகைச்சுகிட்டு புரோகிதத்தை ஒழிக்க இவர்கள் காட்டும் ஆர்வத்தில் 10 சதமாவது நாம காட்ரோமாயா! இந்த பையன்களை பார்த்தாவது நாமெல்லாம் திருந்துணும்யா' என்று சொல்லிக் கொண்டே தனது வாகனத்தில் வந்து அமர்ந்தார் கண்ணன்.







Saturday, January 18, 2014

சரத் சந்தோஷூம் சையது சுப்ஹானும்!





சரத் சந்தோஷ் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். சையது சுப்ஹான் நமது மதுரையைச் சேர்ந்தவர். இருவரும் விஜய் டிவி நடத்தும் 'சூப்பர் சிங்கர்' போட்டி நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள். இதில் முதல் இடத்தை பெறுபவருக்கு 60 லட்ச ரூபாய் பெறுமானமுள்ள வீடு கிடைக்கும். ரன்னருக்கு ஒரு கிலோ தங்கமும் கிடைக்கும். செமி ஃபைனலில் முதல் மூன்று இடத்தில் முதல் இடத்தை திவாகரும் இரண்டாம் இடத்தை கேரளாவைச் சேர்ந்த பார்வதியும் பெற்று விட்டனர். மூன்றாம் இடத்துக்கு இரண்டு பேர் போட்டியிடுகின்றனர். அவர்கள் இருவர்தான் சையது சுப்ஹானும் சரத் சந்தோஷூம். இது செமி ஃபைனலே! ஃபைனல் இன்னும் சில வாரங்களில் நடக்கும்.

மூன்றாம் இடத்துக்கான செமி ஃபைனல் தேர்வு தேர்வு எப்படி நடத்தப்பட்டது என்பதை இந்த காணொளி விளக்குகிறது. இரண்டு பேருமே இணைபிரியாத நண்பர்கள். எங்கு சென்றாலும் எங்கு அமர்ந்தாலும் ஒன்றாக செல்வர். ஜாதி மதம் இவர்களை பிரிக்கவில்லை. இந்த இரண்டு உயிர் நண்பர்களுக்கு இடையில் போட்டி. போட்டியின் முடிவுக்கு முன்னால் சையதின தாயாரிடம் கருத்து கேட்டனர். அதற்கு அவர் 'எனக்கு எப்படி சையதோ அது போல் சரத்தும் எனது பிள்ளைதான். யார் வெற்றி பெற்றாலும் சந்தோஷமே' என்று கூறியது மத நல்லிணக்கத்தை மேலும் மெருகூட்டுவதைப் போல் இருந்தது.

மிகக் கடுமையாக நடந்த போட்டியில் சையது சுப்ஹான் வெற்றி பெற்று விடுகிறார். அந்த அரங்கமே வெற்றிக் களிப்பில் இருக்கிறது. ஆனால் வெற்றி பெற்ற சையது சுப்ஹானின் கண்களில் இருந்து வருத்தத்தால் ஏற்பட்ட கண்ணீர் வழிந்தோடி வருகிறது. தனது உயிர் நண்பன் இந்த மாபெரும் போட்டியிலிருந்து விலக நாமும் ஒரு காரணமாக இருந்து விட்டோமே என்ற மன உறுத்துதலால் சையதின் உணர்வுகளை அவரால் கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறார்.

பிண்ணனி பாடகர் ஸ்ரீநிவாஸ் 'சையத்! நீ ஃபைனலுக்கு தேர்வாகியுள்ளாய்! சந்தோஷமாக இரு!' என்று சொல்கிறார். அனால் சையதோ 'எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது! நான் போயிருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன்' என்று சொல்லி தனது நண்பனை கட்டித் தழுவுகிறார். தோல்வியடைந்த சரத்தோ 'சையத் வெற்றி பெற்றது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. அவன் ஃபைனலிலும் தனது திறமையை நன்கு காட்டுவான்' என்று தனது நண்பனின் வெற்றியை பெரிதாக எண்ணுகிறார். நெகிழ்ச்சியான தருணம்.

வெற்றி பெற்றவர் நண்பனுக்காக வருத்தப்படுவதும் தொல்வியடைந்தவர் நண்பனின் வெற்றிக்காக சந்தோஷப்படுவதும் பார்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

அண்ணன் தம்பிகளாக உடன் பிறப்புகளைப் போல் வாழ்ந்து வரும் இந்த ஜோடியைப் போல்தான் நமது பாரதத்தில் பெரும்பாலான குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. பள்ளி நாட்கள், கல்லூரி நாட்களிலெல்லாம் இந்த மத ஒற்றுமையை மிக சர்வ சாதாரணமாக காணலாம். எனது இரண்டு பையன்களும் வீட்டில் பிரியாணி அல்லது சிறப்பான உணவுகள் எது செய்தாலும் தனது இந்து நண்பர்களுக்காக கேரியரில் வைத்து தூக்கத்தை மறந்து டூ வீலரில் சென்று கொடுத்து விட்டு வருவதை ஆச்சரியத்தோடு பார்ப்பேன். சில நேரங்களில் தனது பாட்டி வீட்டுக்கு சென்று பாட்டியிடம் ஏதாவது பலகாரங்கள் செய்யச் சொல்லி தனது இந்து நண்பர்களுக்கு ஆசையோடு கொண்டு செல்லும் இந்த அன்பை விதைத்தது யார்?

அதே போல் எனது பிள்ளைகளின் இந்து நண்பர்களும் தங்கள் வீடுகளில் பொங்கல், தீபாவளி பலகாரங்களை எங்கள் வீட்டுக்கு அனுப்புவது இன்று வரை தொடர்ந்து வருகிறது. அன்பினால் பிணையப்பட்ட இந்த நட்புக்களை சில அரசியல்வாதிகள் தங்களின் சுயநலத்துக்காக பிரிக்க பார்க்கின்றனர். கலவரங்களை தூண்டி விட்டு ஓட்டுக்களை அறுவடை செய்ய முயற்சிக்கின்றனர்.

அரசியல்வாதிகள் என்னதான் திட்டங்களை தீட்டினாலும் இந்திய மக்கள் தாங்கள் என்றுமே மதத்தால் ஒருவரையொருவர் வெறுக்க மாட்டோம் என்பதை பலமுறை நிரூபித்து வந்துள்ளார்கள். அது வரக் கூடிய பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்.

'மார்க்க விஷயத்தில் உங்களுடன் போரிடாதோருக்கும், உங்கள் வீடுகளிலிருந்து உங்களை வெளியேற்றாதோருக்கும் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீதி செலுத்துவதையும் இறைவன் உங்களுக்கு தடை செய்யவில்லை. நீதி செலுத்துவோரை இறைவன் விரும்புகிறான்.'
-குர்ஆன் 60:8

Friday, January 17, 2014

ஆயிஷா ஜாஃப்ரி - சவுதி விமான ஓட்டி!



படத்தில் இருப்பது ஹனாதி ஜக்கரியா அல் ஹிந்தி - 2004 ல் சவுதி விமான ஓட்டியாக வேலையில் சேர்ந்த முதல் சவுதி பெண். பெயரை வைத்து பார்க்கும் போது இவரது தாயோ அல்லது தந்தையோ நமது இந்தியாவை சேர்ந்தவராக இருக்கலாம்.

அடுத்து ஆயிஷா ஜாஃப்ரி என்ற சவுதி பெண்ணும் இதே போல் விமான சம்பந்தமான படிப்பை முடித்து இன்று சவுதிகளை பெருமைபட வைத்துள்ளார். தபுக் பல்கலைக் கழகத்தில் புவியியல் படிப்பை முடித்தார். அதன் பிறகு மாஸ்டர் டிகிரியையும் 'பப்ளிக் ரிலேஷன்' என்ற பிரிவில் முடித்துள்ளார்.

இவர் அல் வதன் தினசரி பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறும் போது: 'விமானம் சம்பந்தப்பட்ட இது போன்ற துறைகளை சவுதி பெண்கள் அதிகம் எடுப்பதில்லை. இது எனக்கு மிகுந்த சவாலான படிப்பாக இருந்தது. எனது உறவினர்களில் சில ஆண்கள் இந்த துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்களின் ஆலோசனைகளையும் உதவிகளையும் பல முறை பெற்று இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளேன். விமான கட்டுப்பாடு, மற்றும் விமான ஓட்டியாக வேலை செய்வது மிக ரிஸ்கான வேலை. பல பேரின் உயிர்களுக்கு நாம் பொறுப்பாகிறோம் என்ற அதிக பலுவும் இந்த வேலையில் சேர்ந்து கொள்கிறது. எந்த நேரமும் எதுவும் இந்த வேலையில் நடக்கலாம் என்பதால் இந்த துறையை தேர்ந்தெடுப்பவர்கள் மிக சொற்பமே!

புவியியல் துறையில் நான் முன்பே பட்டம் பெற்றிருந்ததால் விமானம் சம்பந்தப்பட்ட படிப்பை படிப்பதில் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை. மேலும் காலநிலை, காற்று வீசும் திசைகள் பற்றிய அறிவு போன்றவை எல்லாம் முன்பே நன்றாக படித்திருந்ததால் ஓரளவு சுலபமாக இருந்தது. ஆங்கில அறிவும் ஓரளவு நன்றாக இருப்பது அவசியம். சவுதி பெண்கள் நான் மேற்கூறிய தகுதிகளை வளர்த்துக் கொண்டு இந்த படிப்பை அதிகம் தேர்ந்தெடுத்தால் அவர்களுக்கு மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு என்பதை சொல்லிக் கொள்கிறேன். சவுதி மட்டும் அல்ல. மொத்த வளைகுடாவையும் எடுத்துக் கொண்டாலும் இந்த துறையில் பெண்களின் பங்களிப்பு மிகக் குறைவாகவே உள்ளது. இந்த தொழிலில் ஆண்கள் கலப்பில்லாமல் பெண்கள் மட்டுமே கூட பணிகளை செய்து விடலாம் ஆதலால் இந்த தொழிலானது சவுதி பெண்களுக்கு ஏற்றதாக இருக்கும் என்பது எனது கணிப்பு.

இந்த படிப்பை முடிப்பதற்கு எனக்கு சகல விதத்திலும் மிகவும் உறுதுணையாக இருந்தது எனது தந்தை என்றால் மிகையாகாது' என்று தனது பேட்டியை முடித்துக் கொண்டார் இந்த இளம் சவுதி பெண்மணி.

சவுதி ஓரளவு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் பெண்களின் முன்னேற்றத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது: என்ற வாதம் பரவலாக வைக்கப்படுகிறது. அது பொய்யான வாதம்: பெண்கள் இஸ்லாமிய வரைமுறைக்குள் தங்களின் முன்னேற்றத்தை மிகச் சிறப்பாக தற்காலங்களில் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை விளக்குவதற்கே இதனை தமிழ்படுத்தினேன்.

இன்னும் ஒரு பத்து ஆண்டுகளில் பெண்கள் முன்னேற்றத்தில் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் சவுதி மற்றும் வளைகுடாக்கள் விஞ்சி விடும் என்பது எனது கணிப்பு. அந்த முன்னேற்றம் பெண்மைக்கு இழிவு வராத வகையில் இருக்கும்: இஸ்லாமிய வரையறைக்குள் இருக்கும் என்பது மேலும் அந்த முன்னேற்றத்திற்கு மெருகூட்டுகிறது.

தகவல் உதவி:

சவுதி கெஜட்

திரு அருட்பா - கடவுளின் சுவை

இறைவன் எப்படி இருப்பான்? அவனை எப்படி அடைவது? என்று மனிதன் சிந்திக்காத நாளே இல்லை. நமது முன்னோர்கள் இறைவனைப் பற்றிய ஒரு தெளிவு இல்லாததால் அந்த இறைச் சுவை எப்படி இருக்கும் என்ற ஒரு கற்பனையில் விளைந்த பாடலை இப்போது பார்ப்போம்.

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்

சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே

தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலும் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி

இனித்தநறு நெய்யளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடுந்தெள் ளமுதே

அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே !

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே
---------------------------------------------------

தனித்தனிமுக் கனிபிழிந்து = தனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து

வடித்தொன்றாக் கூட்டிச் = அந்தப் பழச் சாற்றை வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து

சருக்கரையும் = கொஞ்சம் சர்க்கரை

கற்கண்டின் பொடியு = கொஞ்சம் கற்கண்டின் பொடி

மிகக் கலந்தே = நன்றாக கலந்து.

தனித்தநறுந் தேன்பெய்து = சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து

பசும்பாலும் = அதோடு கூட கொஞ்சம் பசும் பால்

தெங்கின் தனிப்பாலும் = மற்றும் தேங்காய்ப் பால்

சேர்த் = சேர்த்து

தொருதீம் பருப்பிடியும் விரவி = அதோடு கொஞ்சம் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி

இனித்தநறு நெய்யளைந்தே = அது மேல நல்ல நெய் விட்டு

இளஞ்சூட்டின் இறக்கி = லேசா சுடவச்சு இறக்கி வச்சா.....

எடுத்தசுவைக் கட்டியினும் = அந்த கட்டி எப்படி சுவையாக இருக்கும்? அதை விட

இனித்திடுந்தெள் ளமுதே = இனிப்பாக இருக்கும் தெளிய அமுதே

அனித்தமறத் = அநித்தம் + அற. உண்மை நித்தியமானது. பொய் அநித்தியமானது. அந்த அநித்தியம் அற (விட்டுப் போக)

திருப்பொதுவில் விளங்குநடத் தரசே ! = பொதுவாக நடமிடும் அரசே

அடிமலர்க்கென் சொல்லணியாம் = உன்னுடைய திருவடிகளில் என்னுடைய சொல்லால் ஆன இந்த

அலங்கலணிந் தருளே = அணிகலனை அணிந்தருளே

------------------------------------------------------

தனித் தனியே மா, பலா, வாழை என்ற முக் கனியையும் பிழிந்து எடுத்து அந்தப் பழச் சாற்றை வடி கட்டி, பின் ஒன்றாகக் கலந்து கொஞ்சம் சர்க்கரை கொஞ்சம் கற்கண்டின் பொடி நன்றாக கலந்து சிறந்த நல்ல தேன் கொஞ்சம் கலந்து அதோடு கூட கொஞ்சம் பசும் பால் மற்றும் தேங்காய்ப் பால் சேர்த்து அதோடு கொஞ்சம் முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு போன்ற பருப்புகளை பொடி செய்து விரவி அது மேல நல்ல நெய் விட்டு லேசா சுடவச்சு இறக்கி வச்சா.....

அந்த கட்டி எப்படி சுவையாக இருக்குமோ? அதை விட உண்மையான இறைவன் நித்தியமானவன்: பொய்யான கடவுள்கள் அநித்யமானது:. அந்த அநித்தியம் என்னிடமிருந்து அகல பொதுவாக நடமிடும் அரசே! இறைவனே! உன்னுடைய திருவடிகளில் என்னுடைய சொல்லால் ஆன இந்த அணிகலனை அணிந்தருளே!

என்று திருவருட்பாவில் கடவுளைப் பற்றி பாடுகிறார்.

குர்ஆன் கூறுவதையும் பார்ப்போம்:

'இறைவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை: அவனுடன் எந்த கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் தனியாகப் பொயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் இறைவன் தூயவன்'

-குர்ஆன் 23:91




Thursday, January 16, 2014

அற்புத திருவந்தாதி - இறைவனை காணாமலே காதல்

காரைக்கால் அம்மையார் அருளிச் செய்த அற்புத திருவந்தாதி.

அன்றுன் திருவுருவம் காணாதே ஆட்பட்டேன்
இன்றும் திருவுருவம் காண்கிலேன் - என்றும் தான்
எவ்வுருவோ நும்பிரான் என்பார்கட்கு என்னுரைக்கேன்
எவ்வுருவோ நின்னுருவம் ஏது’


மிகவும் எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் இந்த பாடல் இயற்றப்பட்டுள்ளது.

அன்று உன் திரு உருவம் காணாதே உனக்கு நான் ஆட் பட்டேன். உன்மேல் காதல் கொண்டேன்.

இன்றும் உன் திரு உருவம் காண்கிலேன்.

என்னிடம், "உன்னுடைய இறைவன் என்ன உருவம்" என்று கேட்பவர்களுக்கு நான் என்ன சொல்லுவேன். எது தான் உன் உருவம் என்று இறைவனிடமே கேட்கிறார் அம்மையார்.

(பிரியாதவன் என்பதன் மரூவு பிரான். எம்பிரான் என்றால் எம்மை விட்டு எப்போதும் பிரியாதவன் என்று பொருள்)

இறைவனை உளப்பூர்வமாக வணங்குவதற்கு நமக்கு முன்னால் இறைவனின் உருவம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது. உலகில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஐந்து வேளையும் உருவம் இல்லாமலேயே இறைவனை உளப் பூர்வமாக வழிபடுவதை தினமும் பார்க்கலாம்.

1500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட ஒரு தமிழ் பாடல் இன்று எழுதியது போல் உள்ளதை நினைத்து நான் ஆச்சரியப்படுகிறேன். தமிழ் மொழியானது அந்த அளவு சிதையாதது இன்று வரை வாழ்ந்து வருகிறது.

------------------------------------------------------

'நீங்கள் இறைவனைப் பார்த்ததுண்டா?' என்று முகமது நபியிடம் கேட்கப் பட்டபோது 'அவனோ ஒளி மயமானவன்.நான் எப்படி அவனைப் பார்க்க முடியும்? என்று பதிலளித்தார்.

ஆதாரம் : முஸ்லிம் :261 - புகாரி 3234, 4855, 7380

மேற்கண்ட நபி மொழி மூலம் முகமது நபியும் இறைவனைப் பார்த்ததில்லை என்று நம்மால் விளங்க முடிகிறது.

இனி இறைவனின் உருவத்தைப் பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன். நன்கறிந்தவன்.'

குர்ஆன் 6 : 103


இந்த வசனத்தின் மூலம் இறைவனை பார்க்கும் சக்தி நமது கண்களுக்கு கொடுக்கப்படவில்லை என்று அறிகிறோம். இறைவனை நான் பார்த்தேன் என்று யாராவது சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று உடன் சொல்லி விடலாம்.

நபி மொழியில் ஒரு இடத்தில் 'ஏழைகளுக்கு உணவளித்தால் அது இறைவனுக்கு உணவளித்தது போல் ஆகும்: ஏழைக்கு உடையளித்தால் அது இறைவனுக்கு அளித்ததாகும் அதாவது 'ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம்' என்ற தத்துவத்தை அழகாக சொல்கிறது. எனவே இஸ்லாமிய நம்பிக்கைபடி உலகிலேயே இறைவனை காண வேண்டுமானால் ஏழைகளுக்கு உதவிட விட வேண்டும் என்று இஸ்லர்ம் கட்டளையிடுகிறது. நற் கருமங்கள் செய்து நல் அடியார்களாக மரணித்தவர்களுக்கு மறு உலகில் இறைவன் தனது முகத்தை காட்டுவான். அந்த நல்ல நாளுக்காக நாம் அதிகமதிகம் நன்மைகளை செய்ய முயற்சிப்போமாக!

Wednesday, January 15, 2014

புரபசர் நரேந்திர மோடி - :-)



வருங்கால இந்திய பிரதமராம்! இந்துத்வாவாதியினர் ஏகத்துக்கும் பிரசாரம் பண்ணுகின்றனர். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் என்று துடைப்பை கையில் எடுத்தாரோ அன்றே மோடியின் பிரதமர் கனவு தவிடு பொடியாகி விட்டது.

Tuesday, January 14, 2014

ஏக இறைவனை பறை சாற்றும் திருநாவுக்கரசரின் தேவாரம் !

திருநாவுக்கரசரின் தேவாரம் 3051.


என்றும்நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம்


இருநிலத்தில் எமக்கெதிரா வாரு மில்லை


சென்றுநாம் சிறுதெய்வம் சேர்வோ மல்லோம்


சிவபெருமான் திருவடியே சேரப் பெற்றோம்


ஒன்றினாற் குறையுடையோ மல்லோ மன்றே


உறுபிணியார் செறலொழிந்திட் டோடிப் போனார்


பொன்றினார் தலைமாலை யணிந்த சென்னிப்


புண்ணியனை நண்ணியபுண் ணியத்து ளோமே.


5. பொ-ரை: சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலை விட்டு ஓடிப்போயின.

கு-ரை: இடைதல் - பின்வாங்குதல். எதிராவார் - இணையாவார்; உம்மை, 'உயர்வாவாரும் இல்லை' என, எதிரது தழுவிற்று. இனி, 'எதிராக ஆரும்' இல்லை என்றலுமாம். 'சேர்வோம் அல்லோமாய்' என, எச்ச மாக்குக. அன்றே - அமணரை விட்டு நீங்கிய அன்றே. உறுபிணி - மிக்கநோய். செறல் - வருத்துதல். "பிணியார்" எனவும், "ஓடிப்போனார்" எனவும் உயர்திணையாக்கியருளியது, அதனது மாட்டாமையாகிய இழிபுணர்த்தற்கு. பொன்றினார் - இறந்தவர். நண்ணிய புண்ணியம் - அடைந்த புண்ணியப் பயன். "சேரப்பெற்றோம், புண்ணியத்துளோம்" என்பவற்றை முதற்கண் வைத்து, 'அதனால்' என்னும் சொல்லெச்சம் வருவிக்க.

சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோமாய், இறந்த பிரமவிட்டுணுக்களுடைய தலைகளை மாலையாகக் கோத்து அணிந்த தலையையுடைய புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உள்ளோமாதலின் யாவர்க்கும் யாம் என்றும் பின்வாங்குவோம் அல்லோம். இப்பரந்த பூமியில் எமக்கு எதிராவார் யாரும் இல்லை. யாம் தேடிச்சென்று சிறு தெய்வங்களைச் சேர்ந்து தொழுவோம் அல்லோம். யாம் ஒன்றினாலும் குறையுடையேம் அல்லேம். அதனால் மிக்க பிணிகள் எம்மைத் துன்புறுத்தலைவிட்டு ஓடிப் போயின.

இந்த உலகத்தில் எவருக்கும் நாம் சளைத்தவரில்லை: இந்த உலகில் நமக்கு எதிரிகள் எவரும் இல்லை: சிறு தெய்வ வணக்கங்களை விட்டொழிப்போம்: பரம் பொருளாகிய சிவபெருமானின் திருவடிகளையே பூஜிப்போம்: எந்த குறையும் எம்மை அண்டாது: இவ்வாறு சிவ பெருமானை மட்டுமே வணங்கியதால் எமக்கு வந்த துன்பங்கள் எம்மை விட்டு விரண்டோடின:

ஏக தெய்வ வணக்கத்தை மிக அழகிய முறையில் இந்த பாடல் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. சிவ பெருமானின் உருவத்தை பின்னால் வந்தவர்கள் தங்களின் கற்பனையால் உருவாக்கிக் கொண்டனர். ஒரு சிலர் உருவமில்லாத வெறும் லிங்கதத்தை மட்டுமே வைத்து வழிபடுவர். சிறு தெய்வங்களாக கருதப்படும் முருகன், பிள்ளையார், சரஸ்வதி, நாகூர் ஆண்டவர், வெங்கடாஜலபதி, ஐயப்பன் போன்றவைகளை வணங்குவது வெற்றியைத் தராது என்று இந்த பாடல் நமக்கு உணர்த்துகிறது.


பெருமபாலான மக்கள் இது போன்ற சிறு தெய்வ வணக்கங்களில் ஈடுபடுவதை சர்வ சாதாரணமாக பார்க்கிறோம். 'நாகூர் தர்ஹாவுக்கு ஏன் போகிறீர்கள்? எந்த ஆதாரத்தில் செல்கிறீர்கள்? முருகன் கடவுள் என்று யார் சொன்னது? அந்த உருவில்தான் கடவுள் உள்ளார் என்பதை எது உனக்கு தெரிவித்தது" என்று கேட்டால் அவர்களிடம் பதில் இருக்காது. இது பற்றிய ஒரு குர்ஆன் வசனத்தை பார்ப்போம.

'பூமியில் உள்ளவர்களில் அதிகமானோருக்கு முஹம்மதே நீர் கட்டுப்பட்டால் அவர்கள் உம்மை இறைவனின் பாதையிலிருந்து வழி கெடுத்து விடுவார்கள். அவர்கள் ஊகத்தையே பின் பற்றுகின்றனர். அவர்கள் அனுமானம் செய்வோர் தவிர வேறு இல்லை.'

-குர்ஆன் 6:116


அன்றைய அரபு மக்களிடம் 'உங்களை படைத்தது யார்?' என்றால் 'அல்லாஹ்' என்று அழகாக பதில் சொல்வார்கள். ஆனால் சிலைகளை செய்து வைத்து அதை பூஜித்து சிறு தெய்வ வணக்கங்களையும் செய்து வந்தனர். ஏன் என்று அவர்களிடம் கேட்டால் 'இந்த சிறு தெய்வங்கள் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசும்' என்ற பதிலை சொல்வார்கள். இதை கண்டிக்கும் முகமாகத்தான் முஹமது நபியைப் பார்த்து இந்த வசனத்தில் இறைவன் அழகிய கேள்வியைக் கெட்கிறான். இன்றும் கூட 'நாகூர் தர்ஹாவுக்கு ஏன் போகிறீர்கள்?' என்று நாம் கேட்டால் 'இறைவனிடம் எங்களுக்காக இங்கு அடங்கி இருப்பவர் பரிந்து பேசுவார்' என்ற பதிலை சொல்கிறார்கள். இதற்கு ஆதாரம் எதனையும் அவர்கள் சமர்ப்பிப்பதில்லை. அன்று இறங்கிய வசனம் இன்றும் நமது தமிழகத்துக்கும் பொருந்துவதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம்.

Monday, January 13, 2014

சிதம்பர ரகசியம் - ஒரு அலசல்

'அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம்' என்று நீங்கள் கேட்கலாம்! இன்று நான் முஸ்லிமாக இருந்தாலும் எனது முன்னோர்கள் முன்பு இந்துக்களாகத்தானே இருந்துள்ளனர். எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் சிதம்பரமும் எங்கள் முன்னோர்களின் வாழ்வில் ஒரு அங்கமாக இருந்திருக்கலாம். இனி இந்த கோவிலின் பிரச்னை பற்றி இணையத்தில் வரும் செய்திகளைப் பார்ப்போம்:

//தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், கரையான் புற்றெடுக்கக் கருநாகம் குடிபுகுந்த கதையாகி விட்டது. தமிழ் அரசர்கள் கோயிக்காக விட்ட தானங்களை, நிலங்களை தீட்சதப் பார்ப்பனர்கள் கபளீகரம் செய்து விட்டனர்.

இந்தப் பார்ப்பனர்கள் கைலாசத்திலிருந்து நேரே இறங்கி வந்தவர்களாம். மூவாயிரம் பார்ப்பனர்களில் தலைமை எண்ணும்போது ஒரு தலை குறைந்ததாம் அந்த ஒரு ஆசாமி நான்தான் என்று சிவனே சொன்னதாகக் கதையளந்து வைத்துள்ளனர்.

தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று பரமசிவன் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு அடி எடுத்துக் கொடுக்க திருத்தொண்டத் தொகையை சுந்தரர் பாடினாராம். தில்லையில் வாழும் பார்ப்பனர்களின் அடியார்களுக்கும் அடியாராம் சிவபெருமான்!

வானம் முட்டும் கோபுரங்கள் கட்டியவர் யார்? அதன் உச்சிக்கெல்லாம் தங்க மூலாம் பூசியவர் யார்? தில்லை நடராசருக்குத் தங்கக்கூரை வேய்ந்து தந்தவர் யார்? சத்திரம், சாவடி கட்டியவர் யார்? அன்றாடம் ஆறுகால பூஜைக்கு உதவி வருபவர் யார்? எல்லாம் நாம் தானே? நாம் போட்டுக் கொடுத்த செல்வம் தானே இவை யாவும்? ஒரு பார்ப்பானாவது, ஒரு செல்லாக் காசாவது கோவில், குளம், தானம் தருமம் இவற்றிற்குக் கொடுத்திருப்பானா? அப்படியிருக்க இவ்வளவு செய்தும் நாம் ஏன் சூத்திரர்களாயிருக்க வேண்டும்? அவர்கள் மட்டும் ஒன்றும் செய்யாமலேயே நம்மை ஏமாற்றி உண்டு, பிராமணர்களாக வாழ வேண்டும்.

இந்தக் கோவிலே அந்த கோவில் பக்தர்களுக்குச் சொந்தமாக இருக்க வேண்டுமே தவிர, அது சில பித்தர் களுக்கு சொந்தமாக இருக்கக்கூடிய வாய்ப்புகள் இருக்காது - இருக்கக் கூடாது

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகத் தமிழர்களின் சைவத்தில் எந்த பிரிவும் (denomination ) கிடையாது. ஆனால் தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த வழக்கறிஞரை வைத்து, அவர்களின் வாதத்தை எதிர்த்து வாதாடாததால், தமிழர்களின் முக்கியமான வரலாற்றுச் சின்னம் ஒரு குறிப்பட்ட சாதியினருக்கு தாரை மட்டும் வார்த்துக் கொடுக்கப்பட்டு விட்டது,

இதில் கவலைப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், பெரும்பாலான தமிழ்நாட்டுத்தமிழர்கள் எனக்கென்ன போச்சு என்றிருக்கிறார்கள். இதைப் பற்றி கருத்துத் தெரிவித்த பதிவர்களையே விரல் விட்டு எண்ணிவிடலாம். மற்றவர்கள் எம்மை முற்போக்குள்ள, மதச்சார்பற்றவர்கள் என்று எண்ண வேண்டுமென்பதற்காக, தமிழர்களின் வரலாற்றுச் சின்னங்களை மற்றவர்கள் அநீதியான முறையில் சொந்தம் கொண்டாடும் போது அமைதி காப்பது சரியான கோழைத்தனம்.

‘கோயில்’ என்று உலகமெங்கும் வாழும் தமிழர்கள் போற்றும் சிதம்பரம் தீட்சிதர்களுக்கு மட்டும் பாத்தியதையான கோயில் என்றால்,, தீட்சிதர்கள் ஏனைய தமிழ்ச்சைவர்களை விட வேறொரு Denomination என்றால், தமிழர்கள் சிதம்பரத்துக்கு எதற்காகப் போக வேண்டும். உண்மையில் சிதம்பரம் மீண்டும் தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை “தீட்சிதர்களுக்குப் பாத்தியதையான”” சிதமபரம் கோயிலை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும். அப்படி அங்கு சென்றாலும் எந்தக் காணிக்கையும் செலுத்தக் கூடாது, தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் ஒற்றுமை இல்லை, அது தான் இதற்கெல்லாம் காரணம். அடுத்ததாக திருவரங்கம் போன்ற கோயில்களுக்கும் இப்படி நடக்காதென்று, என்ன நிச்சயம்?//


படித்து விட்டீர்களா? சைவர்களின் மெக்காவாக போற்றப்படுவது சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில். மெக்கா என்றவுடன் எனக்கு கஃபாவின் ஞாபகம் வந்தது. அந்த கஃபாவுக்குள் நுழைய யாரின் அனுமதியையும் பெறத் தேவையில்லை. நேற்று இஸ்லாத்தை ஏற்ற ஒரு தலித் சகோதரன் கூட உரிமையோடு அந்த கஃபாவுக்கு நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு செல்லலாம். உண்டியல் இல்லை. இறைவனிடம் உங்கள் கோரிக்கைகளை வைக்க எந்த மத குருமார்களும இல்லை. உலக மக்கள் யாவரும் வந்து தங்கள் தலையை தரையில் வைத்து தங்களது தாய் மொழியில் மணிக் கணக்கில் அழுது இறைவனிடம் தங்கள் குறைகளை சொல்லிக் கொண்டிருப்பர். எத்தனை நாள் வேண்டுமானாலும் நீங்கள் அங்கு இலவசமாக தங்கிக் கொள்ளலாம். தூக்கத்தை தியாகம் செய்து முதல் ஆளாக நீங்கள் போனால் முதல் வரிசையில் நீங்கள் நின்று கடமையான தொழுகைகளை தொழ முடியும். அங்கேயே இறந்து விட்டால் அரசு செலவில் உங்கள் உடலை குளிப்பாட்டி உங்களுக்கு பிரார்த்தனை தொழுகையும் உலக மக்கள் முன்னிலையில் நடைபெறும். அருகில் உள்ள மைய வாடியில் எந்த பாகுபாடும் இல்லாமல் உங்கள் உடல் அடக்கமும் செய்யப்படும்.

நாடு, இனம், நிறம் என்று எந்த பாகுபாடும் இல்லாமல் உலக மக்கள் ஒன்றாக கூடி தினம் ஐந்து வேளை தொழுகைகளை இந்த பள்ளியில் எந்த ஒரு காவலர் துணையுமின்றி நிறைவேற்றுகிறார்களே! அப்படியிருக்க.....

சைவர்களின் மெக்கா தில்லை நடராஜர் கோவில் என்ற பெயர் பெற்ற இந்த தில்லை நடராஜரை வணங்க வருபவர் அதிகம் தமிழர்களே! உலக நாடுகளிலிருந்து பக்தி மேலீட்டால் அங்கு வருபவர்களை தமிழில் பாடக் கூடாது என்றும், பணம் கொடுத்தால் மட்டுமே உள்ளே அனுமதிப்போம் இல்லை என்றால் வெளியிலேயே தரிசனம் பண்ணி விட்டு போ என்று அங்குள்ள பார்பனர்கள் சொல்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான சொத்துக்கள் அங்குள்ள பார்பனர்களால் களவாடப்படுகிறது. இது பற்றி அரசும் கண்டு கொள்வதில்லை. நகைகளும் சொத்துக்களும் கொள்ளை போவதாக அங்குள்ள தீட்ஷிதர்களே சொல்கிறார்கள்.

எனவே புனித கஃபா ஆலயத்தை பின் பற்றி வழிபட வரும் மக்கள் எந்த மொழியில் பாட, பிரார்த்தனை செய்ய ஆசைப்படுகிறார்களோ அந்த மொழியிலேயே பாடவும் பிரார்த்தனை செய்யவும் அனுமதிக்கப்பட வேண்டும். புரோகிதர் தேவையில்லை: இறைவனிடம் நாங்கள் நேரிடையாக எங்கள் பிரார்த்தனையை வைக்கிறோம் என்று பக்தர்கள் கேட்டால் அவர்கள் விருப்பத்துக்கு விட வேண்டும். தற்போது உள்ள தீட்ஷிதர்களே தொடரட்டும். விருப்பமுள்ளவர்கள் அவர்களை வைத்து பூஜைகள் செய்து கொள்ளட்டும். அங்குள்ள நிர்வாகத்தை கவனிக்க அந்த ஊர் மக்களைக் கொண்ட ஒரு கமிட்டி அமைத்து நிலைமையை சீராக்கலாம். அரசு மேற்பார்வையிடலாம். அந்த மேற்பார்வையும் அரசியல் கலப்பில்லாமல் இருக்க வேண்டும். பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது அரசின் கடமை. அதனை இந்த அரசு செய்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Sunday, January 12, 2014

இறப்பு ஒன்றுதான் நிரந்தர சுகம்! - திருவருட்பா

உலகில் இருக்கும் காலமெல்லாம் ஏதாவது ஒரு வகையில் துன்பம் நம்மை வந்தடைகிறது. இன்பமும் வந்தடைகிறது. சில ஆண்டுகளில் இந்த உயிர் பிரிந்து மற்றுமொரு உலகத்துக்கு நாம் செல்லும் போதுதான் இந்த இன்ப துன்பமற்ற நிலையை நாம் அடைய முடியும் என்று பல சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ஆனால் இறப்புக்கு பிறகுதான் ஒருவனின் உண்மையான நிரந்தர வாழ்க்கையே ஆரம்பிக்கிறது என்கிறது இஸ்லாம்.

பத்ரகிரியார் இறப்பின் சுகத்தைப் பற்றி பாடும் போது....

ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்

என்று முடிக்கிறார். அந்த இறப்பு என்பது தூக்கத்தைப் போன்றதுதான். அதாவது நிரந்தர தூக்கம். அந்த தூக்கமானது தூங்காமல் தூங்கிய நிலையை அடைகிறது. தூங்குவது போல் நமக்கு தோற்றம் அளித்தாலும் உண்மையில் அந்த மனிதனின் உயிர் இறைவன் வசத்தில் என்றும் உயிர்ப்புடனே இருக்கும் என்று இந்த பாடல் நமக்கு அறிவுறுத்துகிறது.

இதே கருத்தை வள்ளலார் திருவருட்பாவில் பாடும் போது

இன்றுவரு மோநாளைக் கேவருமோ அல்லதுமற்
றென்றுவரு மோஅறியேன் எங்கோவே-துன்றுமல
வெம்மாயை யற்று வெளிக்குள் வெளிகடந்து
சும்மா இருக்கும் சுகம்.

சீர் பிரித்த பின்

இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது மற்று
என்று வருமோ அறியேன் என் கோவே - துன்று மல
வெம் மாயை அற்று வெளிக்குள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்

பொருள்:

இன்று வருமோ = இன்று வருமோ

நாளைக்கே வருமோ = நாளைக்கே வருமோ

அல்லது = அல்லது

மற்று என்று வருமோ அறியேன் = அது என்று வருமோ, நான் அறியேன்

என் கோவே = என் தலைவனே

துன்று மல வெம் மாயை அற்று = காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி

வெளிக்குள் வெளி கடந்து = வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதை தாண்டி

சும்மா இருக்கும் சுகம் = சும்மா இருக்கும் சுகம்

இறப்பு என்பது இன்று வருமோ நாளைக்கே வருமோ அல்லது அது என்று வருமோ, நான் அறியேன்: என் தலைவனே! காலம் காலமாக, தொன்று தொட்டு வரும் மாயை விலகி வானில் பல வெளிகள் அடுக்கடுக்காக உள்ளதையும் தாண்டி உன்னை அடைந்து எந்த கவலையும் இல்லாமல் சும்மா இருக்கும் அந்த நாளே எனக்கு சுகமளிக்கும் நாள்.

வள்ளலார் விரும்பும் இத்தகைய நிலை வாழும் நாளில் மனித உயிர்களுக்கு தீங்கிழைக்காமல் இறைவன் சொன்னபடி அவனை வணங்கி வாழ்ந்து இறந்த நல்லவர்களுக்கே கிடைக்கும். அநியாய உயிர்க் கொலைகள் செய்து இறைவன் சொன்ன கட்டளைகளை மீறிய தீயவர்களுக்கு இந்த உலகை விட மிகப் பெரிய தண்டனை காத்துக் கொண்டிருப்பதாக அதே இறைவன் கூறுகிறான்.

'இறைவன் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர் தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை. கேள்விகள் கேட்கப்படும் அந்த தீர்ப்பு நாளில் இறைவன் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு.'

'அவர்களே நேர் வழியை விற்று வழி கேட்டையும், மன்னிப்பை விற்று வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள். நரகத்தை சகித்துக் கொள்ளும் அவர்களின் துணிவை என்னவென்பது'

-குர்ஆன் 2:174,175


'நம்பிக்கை கொண்டேரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால் மட்டுமே உள்ளங்கள் அமைதியுறுகின்றன'

-குர்ஆன் 13:28


"எவனொருவன் மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்"

-குர்ஆன் 5:32


இனிய உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்..


Saturday, January 11, 2014

அமெரிக்கர்கள் தமிழில் பாடினால் எப்படி இருக்கும்?



நான் சிறுவனாக இருக்கும் போது ஹிந்திப் பாடல்களையும், மேற்கத்திய ஆங்கில பாடல்களையும் தமிழர்களாகிய நாம் பாடுவது பெருமைக்குரிய விஷயமாக கருதப்பட்டது.. போனி எம் பாடல்கள் ஒன்றிரண்டு சிறு வயதிலேயே எனக்கு மனனமாகத் தெரியும். குர்பானி, ஷான், ஷோலே, ஹம் கிஸிஸே கம் நகின் போன்ற படத்தின் பாடல்கள் தான் எங்களது நண்பர்கள் குழுமத்தில் அதிகம் பாடப்படும். இதை பாடுபவர்கள் சிறந்த ஜீனியஸாகவும் அப்போது கருதப்படுவர் :-). அந்த மேற்கத்திய மற்றும் ஹிந்திப் பாடல்களின் தாக்கங்கள் இளையராஜா வந்தவுடன் சற்று மாறியது. மேலும் சில ஆண்டுகள் கழித்து ரஹ்மான் திரை இசைக்கு வந்தவுடன் நிலைமை தலை கீழாக மாறி விட்டது. இன்று ரஹ்மான் இசை அமைத்த பல பாடல்களை மேற்கத்திய நாட்டவர் காப்பி பண்ணுவது, அதை இசைத்து மகிழ்வது அதிகமாகி வருகிறது. 'பல்லேலக்கா' பாடலை எவ்வளவு உற்சாகத்தோடு அமெரிக்கர்கள் பாடுகிறார்கள் என்பதை இந்த காணொளியில் பாருங்கள்.









ஏரியல் ஷெரோன் மறைந்தார்!



ஏரியல் ஷெரோன்! தனது வாழ்நாளில் பல தவறுகளை அதிகார மமதையில் செய்தவர். பாலஸ்தீன மக்களுக்கு சொல்லொணா துயரத்தைக் கொடுத்தவர். யாசிர் அரஃபாத் இறப்பதற்கு காரணமாக்கப்படுபவர். பல வாக்குறுதிகளை மீறியவர். தான் எனற அகம்பாவத்தில் வாழ்ந்தவர். கடந்த எட்டு வருடங்களாக கோமாவில் கஷ்டப்பட்டு இன்று நிரந்தர உலகத்துக்கு சென்றுள்ளார். தான் செய்த தவறுகளை எண்ணி வருந்தும் நேரம் இனிதான் ஆரம்பம். மனிதன் என்னதான் ஆட்டம் போட்டாலும் அவனுக்கு சொந்தம் இந்த ஆறடி நிலமே!

ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா..... என்ற பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது.

2001 முதல் 2006 ஆம் ஆண்டுவரை அவர் இஸ்ரேலிய பிரதமராக பதவி வகித்தார். இஸ்ரேலிய இராணுவத்தின் ஆரம்பக்காலத்திலிருந்து அதன் தளபதிகளில் ஒருவராக இருந்த ஏரியல் ஷெரோன், மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டவர். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.



மனிதன் வாழும் காலங்களில் முடிந்த வரை நன்மையை செய்து விட்டு இறக்க வேண்டும். பல குற்றங்களை செய்து விட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனையை சுமந்து கொண்டு இன்று செல்கிறார். இவரைப் போன்ற தலைவர்கள் நமது நாட்டிலும் ஒன்றிரண்டு பேர் உள்ளனர். இவரது இறப்பையும் அவர் சென்று சேர்ந்த இடத்தையும் நினைத்தாவது நமது நாட்டு அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்.




முஸ்லிம்களால் இந்தியா பெறும் மற்றுமொரு உதவி!

வட்டியை உண்போர் மறுமை நாளில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். இறைவன் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான்.

-குர்ஆன் 2:275


வட்டியை இறைவன் கடுமையாக தடுக்கிறான். எனவே முஸ்லிம்களில் பெரும்பாலோர் இந்த பாவத்திலிருந்து தவிர்ந்தே வருகின்றனர்.பொருளாதாரம் சுழற்சி முறையில் எல்லோரிடமும் பரவலாக்கப் பட வேண்டும் என்பதாலேயே இறைவன் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கலாம். ஆனால் பொருளாதாரத்தை வீட்டிலேயே வைக்கவும் முடியாது. லட்சக்கணக்கான ரூபாய்களின் பாதுகாப்பிற்கு நாம் வங்கிகளையே நாட வேண்டியுள்ளது. அவ்வாறு இதுவரை செலுத்தப்பட்ட பணத்துக்கான வட்டித் தொகையை பெரும்பாலான முஸ்லிம்கள் வாங்குவதே இல்லை. தற்போது இந்த பணம் மலை போல் பேங்கில் குவிந்து கிடக்கிறது. 1.5 டிரில்லியன் டாலருக்கு சமமான இந்திய ரூபாய்கள் இஸ்லாமியர்களால் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் இது கிட்டத் தட்ட 64500000000000 ரூபாய்க்கு சமமான தொகையாகும். இது சற்று மிகைப்படுத்தப்பட்டதாக தோன்றலாம். இருந்தாலும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான பெருந் தொகை வங்கிகளில் சீந்துவாரின்றி கிடக்கிறது. இந்தியாவில் தற்போது 13 கோடி முஸ்லிம்கள் உள்ளனர். ஒரு குடும்பத்துக்கு ஐந்து பேர் என்று வைத்துக் கொண்டாலும் ஒவ்வொரு குடும்பமும் 24 லட்சம் இனாமாக பெறும். அல்லது வட்டியில்லாத கடனாகக் கூட கொடுத்து அவர்கள் வாழ்வை முன்னேற்றலாம். இதன் மூலம் அரசு உதவியின்றியே இந்தியாவில் முஸ்லிம்கள் தங்களின் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள முடியும். அல்லது வறுமை கோட்டுக் கீழ் உள்ள அனைத்து மதத்தவரையும் கணக்கெடுத்து இந்த தொகையை பிரித்துக் கொடுக்கலாம்.

உதாரணத்துக்கு ஒரு அரசு உத்தியோகத்திலிருந்து ஒரு முஸ்லிமும் ஒரு இந்துவும் ஓய்வு பெறுவதாக வைத்துக் கொள்வோம். பிராவிடண்ட் ஃபண்ட் மூலியமாக இந்த இருவருக்கும் கிடைப்பது 0.5 மில்லியன் என்று வைத்துக் கொள்வோம். இந்த தொகையை பிக்சட் டெபாசிட்டில் 12 வருடத்துக்கு அந்த இந்து நண்பர் வங்கியில் இருப்பு வைக்கிறார். அடுத்த 12 வருடத்தில் அந்த நபர் பெறும் தொகை 1.8-2 மில்லியன் ரூபாய்கள். ஆனால் முஸ்லிமுக்கு வட்டி தடுக்கப்பட்டது. எனவே இந்த முஸ்லிம் அதே 12 வருடங்களுக்கு பிறகு பெறும் தொகை 0.5 மில்லியன் மட்டுமே. எந்த அளவு தொகை வித்தியாசப்படுகிறது என்று பாருங்கள். எனவே இதற்கு ஒரு மாற்று வழியை நாம் தேட வேண்டியது அவசியமாகிறது.

இந்த தொகை இருப்பு இருப்பது நமது இந்திய நாணய மதிப்பின் சரிவை காப்பாற்றுகிறது என்று கூட சொல்லலாம். மேலும் வளைகுடாவில் வேலை செய்து வரும் பெரும்பாலான முஸ்லிம்கள் மாதா மாதம் தங்களின் செலவு போக ஒரு பெரும் தொகையை நமது நாட்டுக்கு அனுப்பி வருகின்றனர். அமெரிக்கா கனடா போன்ற நாடுகளில் உள்ள மற்ற மதத்தவர் குடும்பத்தோடு அங்கு தங்கியுள்ளதால் இந்தியா அனுப்புவது சொற்ப பணமே! இவ்வளவு ஊழல்கள் நமது நாட்டில் மலிந்தும் பொருளாதாரம் முன்னேறிச் செல்கிறது என்றால் அது மறைமுகமாக இஸ்லாமியர் அனுப்பும் பணமும் என்றால் மிகையாகாது.

இஸ்லாமிய வங்கி முறையை நடைமுறைபடுத்த முஸலிம்கள் இனிமேலாவது முயற்சி செய்ய வேண்டும். அதில் கிடைக்கும் லாபத்தை வைத்து வறுமையானவர்களை தேடி அவர்களின் வாழ்வை வளப்படுத்தலாம். சவுதி அரேபியா, மலேசியா, எகிப்து போன்ற நாடுகளில் இந்த இஸ்லாமிய வங்கி முறையானது மிகச் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது.

http://www.linkedin.com/groups/Interest-amount-Indian-Muslims-Deposit-3973265.S.59341848

Friday, January 10, 2014

கெஜ்ரிவால் பிரதமராக மக்கள் ஆதரவு!

கெஜ்ரிவால் பிரதமராக மக்கள் ஆதரவு!- பத்திரிக்கை செய்தி