Followers

Tuesday, July 31, 2018

இரண்டு வயது சிறுவனையும் தடுக்கும் கல் நெஞ்சக்காரர்கள்!

இரண்டு வயது சிறுவனையும் தடுக்கும் கல் நெஞ்சக்காரர்கள்!
இஸ்ரேலில் உள்ள ஹெப்ரானில் வசித்து வருபவர் லாமா. இவர் ஒரு சிறந்த எழுத்தாளர். அரசுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வருவதாக கூறி கடந்த மாதம் 24 ந்தேதி இஸ்ரேலிய காவலர்கள் இவருடைய வீட்டிற்கு சென்று கைது செய்தனர். தற்பொது இவர் சிறையில்.
இந்த பெண்மணிக்கு இரண்டு வயதில் யஹ்யா ஃபகூரி என்ற மகன் உள்ளான். சில நாட்களுக்கு முன்பு தனது தாயை சிறையில் சந்திக்க வந்த அந்த சிறுவனை ஈவு இரக்கமின்றி அனுமதி மறுத்துள்ளனர் இஸ்ரேலிய காவலர்கள். அந்த சிறுவனின் ஏக்கம் இவர்களை ஒருநாள் கண்டிப்பாக சுட்டெரிக்கும். நாமும் அந்த சிறுவனின் குடும்பத்துக்காக பிரார்த்திப்போமாக!
முதல் படம்:கைதுக்கு முன்பு தனது மகனை தாய் கட்டி அணைக்கிறார்.
இரண்டாவது படம்: சிறைச் சாலைக்கு வெளியே இரண்டு வயது சிறுவன்
தகவல் உதவி
மில்லி கெஜட்
31-07-2018Monday, July 30, 2018

கொசுவைப் பற்றி இன்று விரிவாக பார்ப்போமா?

பதிவர் திரு நம்பள்கி அவர்கள் போன பதிவில்
//எதை சொன்னாலும், மதத்துடன் சம்பந்தப் படுத்துகிறீர்கள்; சரி! கொசுவைப பற்றி எழுதி மதத்துடன் சமபந்தப் படுத்தி எழுதுங்கள் பார்க்கலாம் ...!//
என்று சலிப்போடு கேட்டிருந்தார். அவருக்காகவே இந்த பதிவை தருகிறேன்.
அன்றைய சிலையை வணங்கிக் கொண்டிருந்த அரபுகளை நோக்கி இறைவன் கூறுகிறான்
'மனிதர்களே! உங்களுக்கு ஒரு உதாரணம் கூறப்படுகிறது. அதைச் செவி தாழ்த்தி கேளுங்கள். ஏக இறைவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்க முடியாது. தேடுவோனும் தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.'
-குர்ஆன் 22:73
மற்றோர் இடத்தில்....
'ஏக இறைவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோரின் உதாரணம் சிலந்திப் பூச்சியைப் போன்றது. அது ஒரு வீட்டை அமைத்துக் கொண்டது. வீடுகளிலேயே சிலந்தியின் வீடுதான் மிகவும் பலஹீனமானது. அதை அவர்கள் அறியக் கூடாதா?'
-குர்ஆன் 29:41
இவ்வாறு இரண்டு இடங்களில் பல தெய்வ வணக்கம் புரிவோரைப் பார்த்து இறைவன் கேட்கிறான். இதனால் கோபமடைந்த அரபிகள் முகமது நபியிடம் கிண்டலாக 'உதாரணத்துக்கு உங்கள் இறைவனுக்கு வேறு உயிரினங்கள் கிடைக்கவில்லையா? அற்பமான ஈயையும் சிலந்திப் பூச்சியையும் உதாரணமாகக் காட்டுகிறானே?' என்றனர்.
இவர்களின் கிண்டலுக்கு மறுப்பு தெரிவிக்கும் முகமாக இறைவன் கீழ் கண்ட வசனத்தை இறக்குகிறான்.
'கொசுவையோ அதை விட அற்பமானதையோ உதாரணமாக கூற இறைவன் வெட்கப்பட மாட்டான். நம்பிக்கை கொண்டோர் 'இது தமது இறைவனிடம் இருந்து வந்த உண்மை' என்பதை அறிந்து கொள்கின்றனர்.'
-குர்ஆன் 2:26
அதாவது மனிதர்கள் நேர் வழி பெறுவதற்காக எந்த அற்ப உயிரினங்களையும் உதாரணமாகக் கூற இறைவன் தயங்க மாட்டான் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. மனிதர்கள் அற்பமாக நினைக்கும் இந்த கொசுவை இறைவன் எவ்வளவு நேர்த்தியாக படைத்துள்ளான் என்பதை இனி பார்ப்போம்.
1. அது பெண்கொசு. 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.
4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.
6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.
8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..
9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படி பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.
10. மனிதனின் இரத்த வாசனையை 60 மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.
11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.
அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு உயிரினத்தையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை இறைவனே நன்கறிந்தவன்.
இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும், படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம். இறைவனே யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
---------------------------------------------------------
கொசுக்களை விரட்டுவதற்காக ஒருவர் தொடர்ந்து கொசுவர்த்திச் சுருள், மேட்கள் போன்றவற்றைப் பயன்படுத்தி வந்தால், அவருக்கு நுரையீரலில் ஒருவகை ஒவ்வாமை ஏற்பட்டு, நுரையீரல் முழுமையாக விரிவடையாமலும், அதன் கொள்ளளவுக்கு உரிய காற்றை செயல்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள இயலாமலும் போய்விட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
கொசு மேட்டில் இருந்து வெளிவரும் புகையை, அப்போது பிறந்த, அல்லது பிறந்து சில மாதங்கள் ஆன குழந்தை தொடர்ந்து சுவாசித்தால் அதற்கு வலிப்பு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று எச்சரிக்கிறது லக்னோ பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. மும்பையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கொசு விரட்டிகளில் பயன்படுத்தப்படும் ரசாயனம் சிலருக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கொசு விரட்டிகளில் உள்ள `டையாக்சின்', புற்றுநோயை ஏற்படுத்தக்கூடியது, `அலெத்ரின்', மனிதர் களின் எடையை குறையைச் செய்யக்கூடியது என்று எச்சரிக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
வேறு வழியில்லாமல்தான் கொசுவிரட்டிகளை நாடுகிறோம். வேறு என்னதான் வழி என்கிறீர்களா? சுற்றுப்புறத்தைத் தூய்மையாக, தண்ணீர் தேங்காமல் வைத்துக்கொள்ளுங்கள். கொசு வலையையும் பயன்படுத்தலாம்.
Sunday, July 29, 2018

ஏவுகணை தாக்குதலை தடுக்க 7000 கோடி!

ஏவுகணை தாக்குதலை தடுக்க 7000 கோடி!

தலைநகரம் டெல்லிக்கு நிறைய அச்சுறுத்தல் உள்ளதாம். பகைவர்கள் நம்மை தாக்கி விடுவார்களாம். அதனால் டெல்லிக்கு உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்க எதிர் ஏவுகணைகளை பொருத்த 7000 கோடிக்கு அமெரிக்காவிடம் பாதுகாப்பு துறை கையெழுத்திட உள்ளது.

காஷ்மீரில் பாகிஸ்தானால் அச்சுறுத்தல் உள்ளது:, அருணாசல பிரதேசத்தில் சீனாவால் அச்சுறுத்தல் உள்ளது. அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் வரவேற்கலாம். டெல்லிக்கு யாரால் அச்சுறுத்தல்? இதற்கு ஏன் 7000 கோடி ரூபாய். பட்டினியால் மூன்று குழந்தைகள் செத்துக் கொண்டுள்ள டெல்லிக்கு 7000 கோடியில் பாதுகாப்பு தேவையா? இதில் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் எத்தனை கமிஷன் போகப் போகிறதோ தெரியவில்லை. 

இதை எல்லாம் பற்றி நீங்கள் பேசினால் 'ஆண்டி இன்டியன்' என்று ஹெச்.ராஜாவால் அழைக்கப்படுவீர்கள்.

தா. பாண்டியன் உடல் நிலையில் முன்னேற்றம்!

தா. பாண்டியன் உடல் நிலையில் முன்னேற்றம்!
85 வயதாகும் இவர், கட்சிப்பணிகளில் தீவிரமாக இயங்கிவருகிறார். நேற்று கோபாலபுரம் சென்று தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம்குறித்து விசாரித்தார். இந்நிலையில், இன்று திடீரென்று அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஒடுக்கப்பட்டோருக்காக தொடர்ந்து குரல் எழுப்பி வருபவரும், பாசிஸத்துக்கு எதிராக களம் கண்டவருமான தா. பாண்டியன் அவர்கள் பூரண நலம் பெற்று மீண்டு வர வாழ்த்துகிறேன்.முன்னால் ஆர்எஸ்எஸ் உறுப்பினர் விடுக்கும் கோரிக்கை!


இந்து சிறுவனின் உயிரை காப்பாற்ற நோன்பை முறித்த முஸ்லிம் இளைஞர்!

பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்திலுள்ள ராஜேஷ் என்ற் சிறுவனுக்கு தலசீமியா என்ற நோய் பாதிக்கப் பட்டது. அவருக்கு உடனடியாக ரத்தம் தேவைப் பட்டது. ஆனால் அந்த அரிய வகை குரூப் ரத்தம் மருத்துவமனையில் இருப்பில் இல்லை.
உடனே இதுகுறித்து அன்வர் ஹுசேன் என்ற ரத்த தான குழு தலைவருக்கு தகவல் தரப்பட்டது. சிறுவனின் அரிய வகை ரத்தமும் அன்வர் ஹுசேனின் நண்பர் ஜாவேத் ஆலம் என்பவரின் ரத்தமும் ஒரே வகை என்பதை உணர்ந்த அன்வர் ஹுசேன் இதுகுறித்து ஜாவேத் ஆலத்திற்கு தகவல் கொடுத்தார்.
புனித ரமலான் மாதம் என்பதாலும் ஜவேத் ஆலம் நோன்பு வைத்திருந்ததால் ரத்தம் வெளியானால் நோன்பு முறிந்து விடும் என்பதை அறிந்த ஜாவேத் ஆலம் ஒரு சிறுவனின் உயிருக்காக நோன்பை முறிப்பதில் தவறில்லை என்பதை உணர்ந்து உடனே நோன்பை முறித்து ரத்த தானம் செய்ய முன் வந்தார்.
இதனை அடுத்து அவரது ரத்தம் சிறுவனுக்கு ஏற்றப் பட்டு சிறுவனின் உயிர் காப்பாற்றப் பட்டது. இதுகுறித்து தெரிவித்த ஜாவேத் ஆலம், " எங்கள் மதம் மனிதர்களுக்கு முதலில் உதவ வேண்டும் என்பதை எங்களுக்கு பயிற்றுவித்துள்ளது. உயிருக்கு போராடும் ஒருவருக்கு உதவுவதற்காக என் நோன்பை முறித்ததில் தவறில்லை என்பதை நான் உணர்வேன் அதையே செய்தேன்" என்றார்,
He said: "My religion teaches me to help a fellow human first, so I broke my fast and donated blood to save little Rajesh. Islam preaches that humanity is bigger than everything." 
தலசீமியா நோய் பாதிக்கப் பட்டவர்கள் மூன்று அல்லது நான்கு வாரங்களுக்கு ஒரு முறை ரத்தம் ஏற்றிக் கொண்டு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் உதவி
கலீஜ் டைம்ஸ்
இந்நேரம்.காம்
24-04-2018

Saturday, July 28, 2018

கலைஞர் பூரண நலம் பெற்று மீண்டு வர நாமும் வாழ்த்துவோம்.

படிக்கும் காலங்களில் 'எம்ஜிஆர் ரசிகன்: கலைஞரின் தொண்டன்' என்று நோட் புக்கில் கிருக்கி வைத்திருந்தேன். இதைப் பார்த்த ஆசிரியர் 'மீசையே முளைக்கல்ல உனக்குல்லாம் எதுக்குடா அரசியல் சினிமால்லாம்' என்று அன்பாக கடிந்து கொண்டார்.
இன்று வரை அரசியலாகட்டும்: சினிமாவாகட்டும் தாமரை இலையில் பட்ட தண்ணீரைப் போலத்தான் நான். 
கலைஞரின் உடல் நிலை வயது மூப்பால் மோசமாகியுள்ளது. இது எல்லோருக்கு இயற்கை. ஆனால் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக குடும்பத்தை விட்டு ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தில் குவிந்து கிடப்பதை பார்க்கிறேன். இங்கு மட்டும் ஏன் இந்த நிலைமை? வெளியூர் பயணங்களையும் தவிர்த்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். தலைவர்கள் இறந்தால் அரசு பேரூந்துகளை ஏன் உடைக்கிறார்கள்? இவர்களது வரிப் பணத்தில் அல்லவா அந்த பஸ்கள் ஓடுகின்றன.
செல்வம் கொழிக்கும் சவுதி அரேபியாவை எடுத்துக் கொள்ளுங்கள். 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த மன்னர் ஃபஹதின் கல்லரையை பாருங்கள். வெறும் களி மண்ணாலும், கூழாங் கற்கலாலும் உள்ளது. அவர் இறந்த போது இங்கு பணி புரியும் எவருக்கும் விபரம் தெரியாது. தொலைக்காட்சிகளை பார்த்துதான் தெரிந்து கொண்டோம். உலக கோடீஸ்வரனாகவும், எவ்வளவு பெரிய மன்னனாகவும் இருந்தாலும் மனிதனின் வாழ்க்கை அவ்வளவுதான்.
இதை உணர்ந்து திமுக உடன்பிறப்புகள் எந்த செய்தி வந்தாலும் அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டு பொது மக்களுக்கு இடையூறு தராமல் தங்கள் வருத்தத்தை தெரிவிப்பார்களாக! தலைவர்களும் அதனைத்தான் விரும்புவார்கள்.
கலைஞர் பூரண நலம் பெற்று மீண்டு வர நாமும் வாழ்த்துவோம்.


இந்த பழக்கம் நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது?

தஞ்சை மாவட்டம் ராஜகிரி கிராமத்தில் பிறந்த சகோதரர் இப்றாஹிம். இந்த இளம் விமானி விமானத்தை இயக்குவதற்கு முன் இறைவனை தொழுது விட்டு இறைவனிடம் பாதுகாவல் தேடி விட்டு தனது பயணத்தை தொடர்கிறார்.
இந்த பழக்கம் நம்மில் எத்தனை பேரிடம் உள்ளது?


இறைவனை அஞ்சுவோருக்கு இது ஒரு முன்னோடி ஜமாஅத்!

இறைவனை அஞ்சுவோருக்கு இது ஒரு முன்னோடி ஜமாஅத்!

மண்டலங்கள் ஆடி விட்டன; மாவட்டங்கள் கலகலத்து விட்டன; கிளைகள் கலைந்து விட்டன; மர்கஸூகள் காலியாகி,மயானமாகி விட்டன; அனைத்துக்கும் தலைமை தாங்குகின்ற தலைமை தலைகீழாகக் கவிழ்ந்து கிடக்கின்றது; அதன் விளைவாக நாளொன்றுக்கு ஆளொன்றாக இந்த ஜமாஅத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஜகாத் வசூல் சரிந்து விட்டது; ஃபித்ரா வசூல் பிசுபிசுத்து விட்டது; தவ்ஹீது பிரச்சாரத்திற்குத் தடை ஏற்பட்டு விட்டது;  நிர்வாகத் திறமையின்மை; நீர்த்துப் போன நம்பகத்தன்மை; தலைமை பொறுப்பில் அனுபவமில்லாத சிறுவயதினர்; ததஜ உறுப்பினர்கள் ஆட்டு மந்தையினர்.

இவை எல்லாம் என்னவென்கிறீர்கள்? கூடப்பயணித்தவர்கள் கொளுத்தி போடுகிற கொத்து கொத்தான விமர்சனங்கள்.தலைமைக்கு எதிராக சமூக வளைத்தளங்களில்,முகநூல் போராளிகளால் முழு நேரத் தொழிலாகப் பரப்பப்படுகின்ற அவதூறுகள்.இதில் ஏதேனும் உண்மை இருக்கின்றதா? என்றால் அதுதான் இல்லை என்பது தான் உண்மை.

இந்த முகநூல் புரளிகளுக்கு ஓர் உதாரணத்தை பார்ப்போம்.

சலீம் என்ற ஒரு குடும்பத் தலைவர்.அவரது குடும்பத்தில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை காரணமாக அவருக்கு வேண்டாதவர்கள் 'சலீமுக்கு வாதம் அடித்து விட்டது; நாக்கு வெளியே தள்ளி விட்டது; நடமாட முடியாமல் முடங்கி விட்டார்; மூச்சு இழுத்துக்  கொண்டிருக்கின்றது; பேச்சு நின்று விட்டது; இன்றோ நாளையோ இறந்து விடுவார்' என்று முகநூலில் பதிவு செய்கின்றார்கள்.

இதைப் பார்த்து விட்டு வெளிநாடுகளில்,வெளியூர்களில் வசிக்கும் உறவினர்கள் அலறுகின்றார்கள்.ஆனால் ஊரில் உள்ளவர்கள் இந்தச் செய்திகளைப் பார்த்து விட்டு அலட்சியம் செய்கின்றார்கள்.இவை முகநூல் போராளிகள் பின்னுகின்ற பிம்பங்கள், பிதற்றல்கள் என்று புறந்தள்ளுகின்றார்கள்.காரணம் என்ன?

சலீம் சுகமாகவும் சுறுசுறுப்பாகவும் செயல்படுகின்றார். வீட்டு வேலைகளை நன்கு கவனித்துக் கொண்டு தனது வியாபாரத்தையும் நடத்திக் கொண்டிறுக்கின்றார். நல்ல விதமாக நடமாடிக் கொண்டிறுக்கின்றார். அதனால் தான் ஊரில் உள்ள மக்கள் இந்த முகநூல் செய்திகளைப் பார்த்து அவர்கள் ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்.

இதுபோன்று தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றிய மேற்கண்ட விமர்சனங்கள் அமைந்திருக்கின்றன.

ஜமாஅத்தின் அன்றாட அலுவல்கள் அதன்பாட்டிற்கு நடந்து கொண்டிருக்கின்றன.

அதே சமயம், மண்டலங்களின் சந்தேகங்கள் உடனடியாக சரி செய்யப்படுகின்றது.

மாவட்டங்களிடம் சில கேள்விகள் இருந்தது உண்மை தான்.மாநில செயற்குழு அந்தச் சலனங்களையும் சலசலப்புகளையும் சரி செய்து சீர்படுத்துகின்றது. உண்மை விளக்கத்தை உள்ளது உள்ளபடி தலைமை போட்டு உடைக்கின்றது. உறுத்தலோடு வந்த சில உறுப்பினர்கள் உள திருப்தியோடு சென்றனர்.உண்மையை விளங்கிய அவர்கள்,மாநிலத்திற்கு உறுதுணையாக இருப்போம் என உறுதியளித்துவிட்டு செல்கின்றனர்.

இது உண்மைக்குக் கிடைத்த பரிசு என்று தலைமை இதை உணர்கின்றது.அத்தனை உறுப்பினர்களும் தலைமையின் உண்மை நிலையை உள்வாங்கிக் கொள்கின்றார்கள்.

இதன் பிறகு மாவட்ட செயற்குழுக்கள் நடத்தப்பட்டு கிளைகளில் ஏற்பட்ட ஐயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன.

பீ.ஜே. என்ற பெருந்தலை உருண்டதில்  ஒரு புயல் உருவாவது இயற்கையே.இப்போது புயலுக்குப் பின்னே அமைதி நிலவுகின்றது. ஜமாஅத் அடுத்தக் கட்ட நகர்வை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

ஏழைக்கு போய்ச் சேர வேண்டிய இந்த ஃபித்ரா வந்து விடக் கூடாது; அது ஏழைக்குப் போய் சேர்ந்து விடக்கூடாது என்பதில் தான் வெளியே சென்றவர்களுக்கு  எத்தனை மகிழ்ச்சி. இத்தனே ஃபித்னாக்களையும் தாண்டி ஃபித்ரா வசூல் எப்போதையும் போன்ற இலக்கத்தையும் இலக்கையும் எட்டியது.அல்ஹம்துலில்லாஹ்.

*தடைப்பட்டு விட்டதா தவ்ஹீது வளர்ச்சி?*

முகநூல் போராளிகள் முகநூலில் முகங்காட்டியும் முகங்காட்டாமலும் அள்ளி விட்ட சரடுகள்,அவிழ்த்து விட்ட பொய்கள் அத்தனையையும் தாண்டி ஜகாத் வசூல்களும் சாதாரணமாக வந்து சேர்ந்தன.அதிலும் சரிவில்லை.

ரமலான் மாத இரவுத் தொழுகைகளில் எந்தவிதத் தொய்வும் தேய்வும் இல்லை. மர்கஸ்கள் மயானமாகவில்லை. மாறாக மக்கள் நிரம்பி வழிகின்ற தியானக் கூடங்களாகவே விளங்கின.இடப் பற்றாக்குறை தான் பெரும் குறை என்றானது.

பெருநாள் திடல் தொழுகைகளில் மக்கள் வெள்ளம் அதே அளவில் இன்னும் சொல்லப் போனால் வழக்கத்தை விட அதிகமான அளவில் பெருக்கெடுத்து ஓடியது.

எண்ணிக்கை அதிகம் இருந்தால் அல்லாஹ்வின் அருள் என்றும்,எண்ணிக்கை குறைந்து விட்டால் அது அவனது சாபம்; இழிவு என்று ஒரு போதும் இந்த ஜமாஅத் முடிவு செய்யாது.

காரணம் விலகிச் சென்றவர்கள் தவ்ஹீது ஜமாஅத் நிர்வாகத்திற்கு ஒரு சிறிய தலைவலி வந்தாலும் அல்லாஹ்வின் சாபம், இழிவு என்று தெரிவிக்கின்றனர்.
இதன் மூலம் மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக வாதிடுகின்றனர் என்பதை விளக்குவதற்கு இடையே இந்தக் கருத்தை இங்கு பதிவு செய்கின்றோம்.

கூட்டம் குறைந்துவிட்டது, ஜமாஅத் அழிந்துவிட்டது என்று அவர்கள் எண்ணிக்கையை ஆதாரமாகக் காட்டிப் பொய்யைப் பரப்பும் போது,நாம் உண்மை நிலையை எடுத்துக்காட்டி விளக்குவது நம்மீது கடமை என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

அண்மையில், மேலப்பாளையத்தில் ஜனாஸா அடக்கத் தடை மறு அவதாரம் எடுத்திருக்கின்றது.இதுவரையில் இங்கு பெரிய அளவில் பிரச்சினை ஏதும் ஏற்பட்டதில்லை. இப்போது அது ஏற்பட்டதற்குக் காரணம்,"பீஜேவே போய் விட்டான்,நீங்க என்னலே இதை தூக்கிக் கொண்டு அலையுறீங்க" என்று அவர்கள் திருநெல்வேலி தமிழில் எழுப்புகின்ற அந்தக் கேள்வியிலிருந்து பிரச்சினையின் மையக் கருவை விளங்க முடிந்தது.

மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளி முஹல்லாவில் நபிவழியில் தொழுகை நடத்தி அடக்குவதற்கு இதுவரையில் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. இப்போது இந்த முஹல்லாவிலும் அடக்கத் தல மறுப்புப் பிரச்சினையைக் கிளப்புகினறார்கள்.இதன் மூலம் தவ்ஹீது ஜமாஅத்தின் நாடி பிடித்துப்  பார்க்கின்றார்கள்.

இப்போது அடக்கத்தல மறுப்பு,அடுத்து திருமணம்,தெருக்களில் நடைபெறுகின்ற பெண்கள் பிரச்சாரம், தெருமுனை பிரச்சாரம் என்று தவ்ஹீதுக் கொள்கையை அடக்குவதற்கும் புதைகுழியில் போட்டுப் புதைப்பதற்கும் இதை அஸ்திரமாகவும் அஸ்திவாரமாகவும் ஆக்க நினைக்கின்றார்கள் என்பதை தவ்ஹீது ஜமாஅத் புரிந்துக் கொண்டது.

அதனால் நமது உரிமையை விட்டுக் கொடுக்கக்கூடாது என்ற அடிப்படையில் எதிர்ப்புகளை எதிர்கொண்டு ஜனாஸாவை அடக்கம் செய்து விட்டு வந்தது. அந்த அடக்கத்தின் போது சிறிய தள்ளுமுள்ளுகள் ஏற்பட்டன.காவல்துறை இருதரப்பிலும் வழக்குகள் பதிவு செய்தது.

இதன் அடிப்படையில், என் மீதும்,மாநிலச் செயலாளர் செய்யது அலி,மாவட்டத் தலைவர் ஜூபைர் அஹ்மத், பொருளாளர் முஹைதீன் உட்பட 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து காவல்துறை கைது செய்யும் நிலையில் இருந்தது.அதனால் அவர்கள் அனைவரும் மதுரை உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமீன் எடுக்க நேர்ந்தது.

பிரச்சினை அத்துடன் நிற்கவில்லை.அடக்கம் செய்த மறுநாள் நள்ளிரவு மாவட்டத் தலைவர் ஜூபைர் அஹ்மத் அவர்கள் விற்பனைக்காக தனது அலுவலகத்திற்கு முன்னாள் நிறுத்தியிருந்த 3 கார்கள் எதிரிகளால் திட்டமிட்டுக் கொளுத்தப்பட்டது.

இதை இங்கு குறிப்பிடுவதற்கு காரணம்,தவ்ஹீது பிரச்சாரத்திற்குத் தடை ஏற்பட்டுள்ளது என்று இந்த முகநூல் போராளிகள் முராரி ராகம் பாடுகின்றார்களே,அது அத்தனையும் பொய் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகத் தான்.

உடல் நலம் நன்றாக உள்ள ஒரு மனிதரை முகநூல் போராளிகள் நொடிந்து கிடக்கும் நோயாளியாக்கிய அதே பிம்பமும் பிதற்றலும் தான் ஜமாஅத் விஷயத்தில் எட்டி, எகிறிக் குதிக்கின்றதே தவிர ஜமாஅத் தனது நேர்முகப் பிரச்சாரக் களத்தில் அசுர பலத்தில் அச்சமின்றி வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றது என்பது தான் யதார்த்தம்.

*அனுபவமில்லாத தலைமையா?*

முகநூல் போராளிகள் மாநிலத் தலைமையை நோக்கி வைக்கின்ற அடுத்தக் குற்றச்சாட்டு பலவீனமான தலைமை! அனுபவமில்லாதவர்களின் தலைமை!! இது பற்றி இப்போது பார்ப்போம் :

ஒரு முப்பது வயதுள்ள ஓர் இளைஞர் தான் இன்றைய மாநில நிர்வாகத்திற்குத் தலைமை தாங்குகின்றார்.ஒப்பிட்டுப் பார்க்கையில் அனுபவமில்லாதவர் தான்.அவரைத் தூக்கி வைத்தவர்கள் தான் இன்று இந்த விமர்சனத்தையும் வைக்கின்றார்கள்.ஏற்றுக் கொள்வோம்.ஆனால் அவரது தலைமையின் கீழ் ஒரு 36 ஆண்டு கால ஆலமரம் வீழ்த்தப்பட்டுள்ளது.பலவீனமான ஒரு ஜமாஅத், பலமான ஒருவர் மீது இப்படி நடவடிக்கை எடுக்க முடியுமா?

அதற்கான நடவடிக்கை தொடர்பான அறிக்கையின் மை காய்வதற்குள் முன்னால் அடுத்த கட்ட நடவடிக்கையாக பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம் நீக்கப்படுகின்றார்.அனுபவமில்லாத தலைமைக்கு இது எப்படி சாத்தியமானது?

இங்கு ஆள்பவர் சிறு வயது இளைஞராக இருக்கலாம்.ஆனால் அவரையும் உயர்நிலைக் குழுவினரையும்,அனைத்து உறுப்பினர்களையும் ஆள்வது குர்ஆன் ஹதீசும்,அதையொட்டி அமைந்த இந்த அமைப்பின் நிர்ணயச் சட்டமும் தான்.அதனால் தான் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க முடிகின்றது. இங்கு அனுபவமின்மை என்ற பேச்சுக்கு அறவே இடம் இல்லை. சொல்லப்போனால் இந்த ஜமாஅத்தின் ஆளுமையும் அதன் பலமிக்க இறையாண்மையும் இப்போது வெளிப்பட்டிருக்கின்றதே தவிர அதன் பலவீனம் எதுவும் வெளிப்படவில்லை. இதை தான் முகநூல் போராளிகள் தலைகீழாகப் புரட்டிக் காண்பிக்கின்றார்கள்.

இந்த ஜமாஅத்திலிருந்து அன்றாடம் ஆட்கள் காலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்ற வாதமும் ஓர் அபத்தமாகும்.இந்த ஜமாஅத்தை விட்டு யாரும் அப்படி வெளியாகவில்லை என்பது தான் மறுக்க முடியாது மற்றோர் உண்மையாகும்.

இந்த ஜமாஅத்திலிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறியவர்கள் எங்கே சென்றார்கள்?பிரிந்து சென்றவர்களிடமா?அப்படியானால் அவர்களிடம் கூட்டம் எகிறியிருக்க வேண்டுமே!எப்படிப் பார்த்தாலும் அந்தப் பக்கம் ஐம்பதைத் தாண்டவில்லையே!ஆனால் நாம் ஏற்கனவே சொன்னது போல நமது இரவுத் தொழுகைகளிலும் பெருநாள் திடல் தொழுகைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்ததே!

எனவே,இவர்கள் கள யதார்த்தத்தை உணரவில்லை.முகநூல் எனும் மாய உலகில் வீழ்ந்து கிடக்கிறார்கள் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

இவர்களது ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கும் அவதூறுப் பிரச்சாரங்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்கள் செவி சாய்க்காத போது அவர்களை நோக்கி இவர்கள் ஆட்டுமந்தைகள் என்ற கணைச் சொற்களை அள்ளி வீசுகின்றனர். அதாவது கண் மூடித்தனமாக தக்லீத் செய்கின்றவர்கள் என்று குறிப்பிடுகின்றனர்.

இவர்களின் ஆட்பிடிப்புக்கு ஆட்படாத,அகப்படாத உறுப்பினர்களை இப்படி வசை பாடுகின்றனர்.

உண்மையில்,இந்தக் குற்றச்சாட்டிற்கும் இந்த கணைச் சொற்களுக்கும் இந்த ஜமாஅத் உறுப்பினர்கள் முற்றிலும் அப்பாற்பட்டவர்கள் ஆவர்கள்.

காரணம்,இந்த ஜமாஅத்தில் உள்ளவர்கள் பீஜேவை த்கலீத் செய்பவர்களாக இருந்தால் அவரைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் அவரது நீக்கத்தை எதிர்த்திருக்க வேண்டும்.அந்த அளவுக்கு இந்த ஜமாஅத் உறுப்பினர்கள் அவர் மீது மரியாதையும் மதிப்பும் கொண்டிருந்தனர். ஆனால் ஓர் உறுப்பினர் கூட அவரது நீக்கத்தை எதிர்க்கவில்லை.மாறாக மனச் சங்கடத்துடன் வரவேற்கவே செய்தனர்.தக்லீத்,தனிநபர் வழிபாடு இல்லை என்பதை நிரூபித்தனர்.

*யார், யாரை தக்லீத் செய்கிறார்கள்?*

ஆனால் இதற்கு நேர்மாறாக முகநூல் போராளிகள் அல்தாஃபி விஷயத்தில் ஆட்டு மந்தைகளாக உள்ளனர்.

அவர் அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தது தப்புத் தான்!ஆனால் அவர் தப்பு செய்யவில்லை என்று சொல்லி விட்டார் என்று சர்வ சாதாரணமாகக் கடந்து செல்கின்றனர்.

ஒரு காலத்தில் தனக்கென்று நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் ஒருவர் போனில் பேசிய விவகாரம் இந்த ஜமாஅத்தில் பூதாகாரமாகப்  பார்க்கப்பட்டது.இன்று ஜமாஅத்தை விட்டு வெளியே சென்ற பிறகு,ஒரு பெண்ணுடன் சில மணி நேரங்கள் தனித்திருந்த பாவம் சர்வ சாதாரணமாகப் பார்க்கப்படுகின்றது.

இங்கு தான் இந்த ஜமாஅத்தின் இறையச்சம்  பளிச்சென்று தெரிகின்றது.இந்த ஜமாஅத்தில் உள்ளே இருப்பதற்கும் வெளியே இருப்பதற்கும் உள்ள வித்தியாசம் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகின்றது.

உங்களில் ஒருவர்  (அந்நியப்) பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம்.காரணம் ஷைத்தான் அவர்களுடன் மூன்றாம் நபராக இருக்கின்றான் என்று ரசூல்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர்(ரலி)

நூல் : முஸ்னத் அஹ்மத் எண் : 114

இந்த ஹதீஸின் படி, பஞ்சுப் பொதியும் பற்றி எரியும் தீயும் பக்கத்தில் பக்கத்தில்  இருந்தது. ஆனால் பற்றவில்லை என்பது பச்சைப் பொய். அதில் பத்தினி வாதம் பேசுவது சுத்த பைத்தியக்காரத்தனம்!அப்படி ஒரு சாத்தியத்தை இந்த ஹதீஸ் மறுக்கின்றது.

அப்படி தனித்திருந்தது எவ்வித தவறும் நிகழாமல் தன்னை தற்காத்துக் கொண்டேன் என்று யாராவது வாதிடுவாரானால் அவர் தன்னை, கற்புக்கரசர் யூசுஃப் நபியை விட உயர்ந்தவர் என்று கற்பனை செய்கின்றார் என்றே அர்த்தம்.

உண்மையாளர்,கற்புக்கரசர்,பத்தினித்தனத்தின் மறுபதிப்பு என்று போற்றத்தக்க அல்லாஹ்வின் தூதர் சங்கைமிகு யூசுஃப்(அலை) அவர்கள் ஓர் அரசியின் கழுகுப் பிடியிலிருந்து சாக்குப் பையில் போன்ற தன் சட்டையின் பின்பகுதி கிழிய, தலைதெறிக்கத்  தப்பி வந்த பின் அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இதோ:

"எனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது.என் இறைவன் மன்னிப்பவன் ; நிகரற்ற அன்புடையோன்"

அல்குர்ஆன் 12:53

இவை அவர்கள் சந்தித்த அந்தச் சோதனையின் பிம்பத்தையும் பிரமாண்டத்தையும் அப்படியே நம் மனக்கண் முன் பிரதிபலிக்கச் செய்கின்றன.எம்மாபெரிய கற்புக்கரசரும் எவ்வளவு பெரிய அதிபரம யோக்கியரும் ஒழுக்கத்தின் இமயமும் சந்தர்ப்பம் வாய்க்கும் போது ஒரு பெண்ணுடனான  தனிமைச் சந்திப்பின் போது,அல்லாஹ் காப்பாற்றவில்லை என்றால் பற்றியெரியும் காமத் தீயில் கரிந்து பஸ்பமாகி  விடுவார்கள் எனபதற்கு அவர்களது வார்த்தைகள் எடுத்துக்காட்டுகளாகும்.அதனால் அந்நியப்பெண்ணுடன் தனித்திருந்து விட்டு,தப்பி விட்டேன், தஃவா   மட்டுமே செய்தேன் என்பதெல்லாம் கடுகளவும் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயமாகும்.

*இந்த ஜமாஅத்தின் தலைவர் எப்படி இருக்க வேண்டும்?*

'அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன.இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன.அவற்றை மக்களில் பெரும்பாலானோர் அறிய மாட்டார்கள். எனவே,சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறவர் தம் மார்க்கத்திறகும் தம் மானம் மரியாதைகளுக்கும் களங்கம் ஏற்படுத்துவதிலிருந்து விலகி விடுகிறார்.சந்தேகத்திற்கிடமானவைகளில் விழுகிறவர் வேலியோரங்களில் (கால் நடைகளை) மேய்ப்பவரைப் போன்றவராவார்.அவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும்.

எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கிறது. எச்சரிக்கை! நிச்சயம் அல்லாஹ்வின் பூமியில் அவனுடைய எல்லைகள் அவனால் தடை செய்யப்பட்டவையாகும்.

எச்சரிக்கை! உடலில் ஒருசதைத் துண்டு இருக்கிறது.அது சீர் பெற்று விட்டால் உடல் முழுவதும் சீர் பெற்று விடும்.அது சீர் குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்து விடும்.புரிந்து கொள்ளுங்கள்.அதுதான் இதயம்!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நுஃமான் இப்னு பஷீர்  (ரலி) அறிவித்தார்.

நூல் : புகாரி 52

ஒரு தலைவர் என்பவர் இந்த மேற்கண்ட ஹதீஸ் அடிப்படையில் இருக்க வேண்டும்.

அப்படி ஒரு தலைவர் அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர் இந்த ஜமாஅத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார்.இந்த ஜமாஅத்திற்கு இந்த ஆதாரம் போதுமானது.

இதில் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில்,பெண்ணுடன் தனித்திருந்தது ஒரு சிறிய பாவமாகவும் பரப்பியது ஒரு கொடூர பாவமாகவும் பார்க்கப்படுவது தான்.

அது போல இப்படிப்பட்ட தப்பைச் செய்தவர் முபாஹலாவுக்கு அழைத்தது அதை விடக்கொடிய பாவம்! இத்தகையவர்களுக்கு என்ன இறையச்சமிருக்கின்றது என்பது கேள்விக்குறியாகிவிட்டது.

இதிலும் வேதனைக்குரிய விஷயம் என்னவெனில், முபாஹலாவுக்கு அழைத்தவர் உத்தமராகவும் சத்திய சீலராகவும் அதற்கு பதில் கொடுக்க வந்தவர்கள் படுபயங்கரமான பாவிகளாகவும் இந்த முகநூல் போராளிகளால் பார்க்கப்படுவது தான்!

இதுமாதிரியான கட்டத்தில் அதில் புலனாய்வு,புலன் விசாரணை என்று பூதக்கண்ணாடிப் போட்டுக் கொண்டு உள்ளே புகுந்து, புலனறிவைப் போட்டுக் கசக்க வேண்டிய அவசியம் இந்த ஜமாஅத்திற்கு அறவே தேவையில்லை.

அப்படிப்பட்டவர்களின் பழைய,பாழாய் போன வரலாறைத் தோண்டி பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமோ,தேவையோ இந்த ஜமாஅத்திற்கு இல்லை.

அந்நியப் பெண்ணுடன் தனித்திருந்தார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபணமானால் போதும்.அடுத்த நிமிடம் அவர் பதவியை விட்டு அப்புறப்படுத்தப்படுவார்.மேலும் அவர்,ஒரு காலத்துக்கும் இந்த ஜமாஅத்தின் தலைமைப் பொறுப்புக்கு வர முடியாது என்பதை தனது அமைப்புச் சட்டத்தின் ஒரு விதியாக இந்த ஜமாஅத் ஆக்கி விட்டது.இப்படி ஒரு சட்டத்தை வகுக்க அடித்தளமாக அமைந்தது அல்குர்ஆன் தான்.

"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், பிள்ளைகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!" என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 25:74

அதனால் இந்த ஜமாஅத் நெஞ்சு நிமிர்த்தி,இது இறைவனை அஞ்சுவோருக்கு முன்னோடி ஜமாஅத் என்று அடித்துச் சொல்கின்றது.

நன்றி : ஏகத்துவம் மாத இதழ் (மலர் - 16 ; இதழ் - 5)

கட்டுரை ஆசிரியர் : மவ்லவி.M.ஷம்சுல்லுஹா ரஹ்மானி M.A.

ரியாத் மாநகரில் மாபெரும் 82வது மெகா இரத்ததான முகாம்!

ரியாத் மாநகரில் மாபெரும் 82வது மெகா இரத்ததான முகாம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (ரியாத் மண்டலம்) சார்பாக ரியாத் மாநகரில் 82வது மெகா இரத்ததான முகாம் (இந்த வருட ஹஜ் பயணிகளில் தேவைப் படுவோருக்காக…) நேற்று நடத்தப்பட்டது.
இடம் : சுமைஷி மருத்துவமனை. (KSMC)


கரை புரண்டு ஓடும் காவிரி நீர்......

தஞ்சை மாவட்டம் ராஜகிரியில் குடமுருட்டி ஆற்றில் கரை புரண்டு ஓடும் காவிரி நீர். இங்கிருந்து பிரியும் பல வாய்க்கால்களின் தண்ணீர் ராஜகிரி பண்டாரவாடை கிராமங்களின் குடி நீர் தேவையை பூர்த்தியாக்குகின்றன.

ஆனால் வாய்க்கால்கள் பராமரிப்பு இன்றி இருப்பதால் தண்ணீர் பல இடங்களில் வீணாகிறது. பொது மக்களும் வாய்க்கால் குளங்களில் குப்பைகளை கொட்டி தங்கள் பங்குக்கு நீராதாரத்தை வீணாக்குகின்றனர். மக்களிடம் நீர் நிலைகளை பராமரிப்பதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும். கிராமங்களில் உள்ள தவ்ஹீத் ஜமாத் போன்ற இயக்கங்கள் மக்களிடம் இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த முன் வர வேண்டும்.


Thursday, July 26, 2018

சீக்கியர்களின் வாள்களை தவறாக பரப்பி வரும் இந்துத்வா!

சீக்கியர்களின் வாள்களை தவறாக பரப்பி வரும் இந்துத்வா!
சீக்கியர்கள் பயன்படுத்தும் கிர்பான் தயாரிக்கும் தொழிற்சாலை பஞ்சாபில் உள்ளது. இதன் போட்டோக்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆயுத குவியல் என்று பொய்யான தகவலை கேரளாவில் இந்துத்வாக்கள் பரப்பி வருகின்றனர். பகவா திவானே என்ற ஆர்எஸ்எஸ் காரனின் முகநூல் பக்கத்தில் இருந்து பரப்பப் பட்டுள்ளது. உடன் பல ஷேர்கள் செய்து இந்த பொய்யான செய்தியை பலருக்கும் கொண்டு சேர்த்துள்ளனர் இந்துத்வாவினர்.
“सोते रहो हिन्दुओ तुम्हारे खिलाफ भीषण रक्तपात की तैयारी कर रहा हैं मुस्लिम समुदाय…!!
केरल मे पी.एफ़.आई के जेहादियों की असलाह की फ़ेक्ट्री पर छापा मारकर भारी मात्रा मे हथियारों का जखीरा पकड़ा गया है जहाँ से पूरे भारत की मस्जिद मदरसों और मुस्लिम बहुल इलाको मे हथियार भेजे जा रहे थे यह खबर आपको किसी न्यूज चैनल पर नहीं दिखायी जायेगी” (“Keep sleeping Hindus, Muslims are planning a bloodshed against you. During a PFI factory raid in Kerala, large quantities of weapons were recovered. The arms and ammunition were being supplied to mosques and madrasas in Muslim-dominated areas across India.”)
'இந்த பேக்டரி 20 வருடமாக இயங்கி வருகிறது. பஞ்சாப் முழுக்க நாங்கள் கிர்பானை வினியோகம் செய்கிறோம். இங்கு சில நாட்களுக்கு முன்பு டூரிஸ்ட் வந்த சில இளைஞர்கள் எங்களின் தொழிற்சாலையை புகைப்படம் எடுத்தனர். அதனை இவ்வாறு தவறாக பரப்புவார்கள் என்று எங்களுக்கு தெரியாது.' என்கிறார் இதன் உரிமையாளர் பச்சன் சிங்.
தகவல் உதவி
கேரவன்
26-07-2018
மலையாளிகளிடம் இந்துத்வாவின் பாச்சாக்கள் என்றுமே பலிக்கப் போவதில்லை.
பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய்யிலேயே வாழ்வை கழிக்கும் இந்துத்வாக்களின் முடிவையும் இறைவன் வெகு சீக்கிரம் எழுதுவானாக!என்றுமே மறக்க முடியாத சென்னை வெள்ள நிகழ்வில் எடுத்த படம்!


பள்ளி வாசலில் கிடைத்த பரிசு பொருள்!

பள்ளி வாசலில் கிடைத்த பரிசு பொருள்!
நேற்று நான் தங்கியுள்ள வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளிக்கு இரவு தொழுகைக்காக சென்றேன். தொழுகை முடிந்தவுடன் ஒரு உருது அறிஞர் சொற்பொழிவு உருது மொழியில் ஆற்றினார். சொற்பொழிவு முடிந்தவுடன் சில கேள்விகள் கேட்டார். யாரும் பதிலளிக்காமல் அமர்ந்திருந்ததால் தமிழனான நான் எழுந்து அதற்கு பதிலளித்தேன்.
கேள்வி:
எல்லாவற்றையும் விட சிறந்த செல்வங்கள் என நபிகள் நாயகம் அவர்கள் கூறியவை எவை?
பதில்:
1) இறைவனை நினைவு கூறும் நாவு 2) இறைவனுக்கு நன்றி செலுத்தும் உள்ளம் 3) இறை வழியில் நடந்திட கணவனுக்கு உதவிடும் நம்பிக்கையுள்ள மனைவி. (திர்மிதி)
இந்த பதிலை கேட்டவுடன் பாகிஸ்தானிய அறிஞர் எனக்கு அன்பளிப்பாக ஒரு அழகிய டிபன் பாக்ஸை அளித்தார். இதே போல் வேறொரு கேள்வி கேட்க மற்றொரு பாகிஸ்தானிக்கும் ஒரு பரிசு பொருள் கிடைத்தது. பொருளின் வெகுமதி குறைவாக இருந்தாலும் ஒரு அந்நிய தேசத்தில் அந்நிய மொழியில் கேள்வி கேட்டு அதற்கு பதிலும் அளித்து பரிசு வாங்கும் போது ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது. இது என்னைப் போன்ற இளைஞர்களுக்கு  மேலும் ஆர்வத்தை அதிகரிக்கும்.
பள்ளிவாசல்கள் வெறும் தொழும் இடமாக மட்டுமே நபிகள் காலத்தில் இருந்ததில்லை. அரசாங்கமே பள்ளியில்தான் நடக்கும். கல்வி கற்பித்தல், உடற்பயிற்சி, போன்றவைகளையும் பள்ளியிலேயே நடத்த பழக வேண்டும். பள்ளியோடு தொடர்புடைய சிறுவர்களின் வாழ்வும் பிரகாசமாக இருக்கும்.
மேலும் மொழியை பொருத்த வரை உலக மொழிகள் அனைத்தும் மனிதர்கள் விளங்கிக் கொள்ள இறைவனால் படைக்கப்பட்டவையே. தாய் மொழிப் பற்று இருக்கலாம். அது வெறியாக மாறி விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தாய் மொழி அழியாமல் மற்ற உலக மொழிகளையும் ஆர்வமுடன் கற்க வேண்டும்.


பதிவு தமிழில் இருக்கு ,பின்னூட்ட இறங்கல்கள் அரபித்தமிழில் இருக்கு

//பதிவு தமிழில் இருக்கு ,பின்னூட்ட இறங்கல்கள் அரபித்தமிழில் இருக்கு. தமிழும் இறந்து விட்டது//
Vethiyan Vethiyan
இறங்கல்கள் அல்ல. இரங்கல்கள். உங்களிடமும் தமிழ் செத்து விட்டது என்று நான் கூற மாட்டேன்... 
ஒருவர் மரணித்தவுடன், அல்லது மரணச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் "இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் எனக் கூற வேண்டும்.
"நாங்கள் இறைவனுக்கு உரியவர்கள். மேலும் நாங்கள் அவனிடமே திரும்பச் செல்பவர்கள்’ என்பது இதன் பொருள்.
பல முஸ்லிம்களுக்கு இந்த பிரார்த்தனையின் தமிழ் அர்த்தம் தெரியாது. எனவே அரபியில் இலகுவாக எழுதி விடுவார்கள். பொருள் உணர்ந்து எழுதுவதுதான் சிறப்பு. இதை படிக்கும் இஸ்லாமியர்கள் இனி தமிழ் அர்த்தத்தோடு பதிவார்களாக. மாற்று மதத்தவர்களும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

திரு தங்கமணி! -2

திரு தங்கமணி!
//இது தமிழ் மொழிபெயர்ப்பில் தமிழ் மொழிபெயர்ப்பாளர் குரான் வசனத்தில் விளையாடியது. ஆங்கிலத்தில் free for the free என்றுதான் இருக்கிறது. சுதந்திரமான்வனுக்கு சுதந்திரமானவன் என்றுதான் இருக்க வேண்டும். தமிழில் மொழிபெயர்க்கும் போது, சுதந்திரமானவனுக்காக ( கொலை செய்த) சுதந்திரமானவன் என்று போட்டு விளையாடியிருக்கிறார்கள். குரான் வசனத்தை மாற்றுவதற்கு உங்களிடம் எதாவது தண்டனை உண்டா?//
'உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்கு காது, பல்லுக்குப் பல்,மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகியவற்றை தோராவில்(தவ்ராத்தில்) அவர்களுக்கு விதியாக்கினோம். பாதிக்கப்பட்ட யாராவது அதை மன்னித்தால் அது அவரின் பாவங்களுக்கு பரிகாரமாக ஆகி விடும்.'
-குர்ஆன் 5:45
உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண் என்றால் என்ன பொருள் கொள்வீர்கள்? கொலையுண்டவனின் வாரிசு கொலை செய்தவனை பழிக்கு பழி வாங்கலாம். அல்லது மன்னித்து விடலாம் என்ற பொருள் அதில் மறைந்துள்ளது. படிக்கும் யாவருமே இதை எளிதில் புரிந்து கொள்வர். குர்ஆனில் உள்ள சில விளங்காத வசனங்களுக்கு முகமது நபி தனது ஹதீதுகளில் விளக்கமளித்துள்ளார். அந்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அடைப்புக்குரிகளை மொழி பெயர்ப்பாளர் இடுகின்றனர்
உதாரணத்துக்கு என்னிடம் ஒரு அடிமை இருந்து அவனை ராஜா என்ற ஒருவன் கொன்று விட்டதாக வைத்துக் கொள்வோம் நான் பழி தீர்ப்பதற்காக ராஜாவின் அடிமையை கொன்று போட்டால் என்னை அந்த இறைவன் மன்னிப்பானா? ராஜா குற்றம் செய்ததற்க்காக அவன் அடிமை எப்படி தண்டனையை அனுபவிக்க முடியும்? இது அநியாயம் இல்லையா? ஒரு இறைவன் இப்படி சொல்லியிருக்க முடியுமா? அப்படிப்பட்டவன் ஒரு இறைவனாக இருக்க முடியுமா?
இந்த சிறிய விஷயத்தை விளங்கிக் கொள்ள இவ்வளவு விளக்கம் தேவையில்லை தங்கமணி!
'வறுமை காரணமாக உங்கள் குழந்தைகளை கொல்லாதீர்கள். உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்'
-குர்ஆன் 6:151
வறுகைக்காக குழந்தைகளை கொல்வதை தடை செய்கிறது குர்ஆன். நாமோ கள்ளிப் பாலையும், அரிசிகளையும் சேலம் ராமநாதபுரங்களில் கொடுத்து சமாதியாக்குகிறோம்.
'இறைவன் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்: விபசாரம் செய்ய மாட்டார்கள்: இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.'
-குர்ஆன் 25:68.
தக்க காரணமின்றி ஒரு உயிரை கொல்வதை இந்த அளவு தடை செய்யும் குர்ஆன் எஜமானன் செய்த குற்றத்திற்காக அடிமையை கொலை செய்யச் சொல்லுமா? கவிதை நடையில் ஒரு வாக்கியத்தை சொல்லும் போது சில சொற்களை விடுவது அனைத்து மொழிகளிலும் உள்ள மரபு. இதை படிப்பவர் வெகு இலகுவாக புரிந்து கொள்வார். வீம்பு பண்ணுபவர் வேண்டுமென்றே மறுதலிப்பார். இதுதான் இங்கு நடக்கிறது.

திரு தங்கமணி!

திரு தங்கமணி!
//திரு பரமசிவம்,
சுவனப்பிரியனிடம் கேட்டால் பதில் சொல்லாமல் விழிக்கிறார். இஸ்லாமிய அடிமைமுறையை ரொம்ப நல்லது என்று பிரச்சாரம் செய்யும் அவருக்கு நீங்கள் முடிந்த அளவுக்கு உதவுகிறீர்கள்.
இதற்கும் விளக்கம் சொல்லி அவருக்கு உதவலாமே?
முகம்மதின் இந்த அறிவுரைக்கு இன்னமும் நீங்கள் பதில் சொல்லவில்லையே?
Q.2:178 – O you who believe! retaliation is prescribed for you in the matter of the slain, the free for the free, and the slave for the slave, and the female for the female.
உங்கள் அடிமையை ஒருவர் கொன்றுவிட்டால் நீங்கள் யாரை கொல்லவேண்டும் என்று முகம்மது சொல்கிறார்? கொன்றவரையா? கொன்றவரது அடிமையையா?//
'நம்பிக்கை கொண்டோரே! சுதந்திரமானவுனுக்காக கொலை செய்த சுதந்திரமானவன்: அடிமைக்காக கொலை செய்த அடிமை: பெண்ணுக்காக கொலை செய்த பெண்: என்ற வகையில் கொல்லப்பட்டோருக்காகப் பழி வாங்குவது உங்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது. கொலையாளிக்கு கொல்லப்பட்டவனின் வாரிசாகிய அவனது சகோதரன் மூலம் ஏதேனும் மன்னிக்கப்படுமானால் நல்லவிதமாக நடந்து அழகிய முறையில் நஷ்ட ஈடு அவனிடம் வழங்க வேண்டும். இது உங்கள் இறைவன் எளிதாக்கியதும் அருளமாகும். இதன்பிறகு யாரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.'
-குர்ஆன் 2:178
தங்கமணி குறிப்பிடும் குர்ஆன் வசனம் இதுதான். வசனத்தின் பாதியை எடுத்து வைத்துக் கொண்டு விளக்கம் தெரியாமல் உள்ளேன் என்று சொல்வது நகைப்பிற்கிடமானது. இந்த கேள்விக்கு முன்பே பதில் சொன்னதாலும் அதை விட்டு வேறு கேள்விக்கு சென்றேன். இனி விளக்கத்தைப் பார்ப்போம்.
ஆண், பெண், அடிமை,சுதந்திரமானவன் என்று யார் கொல்லப்பட்டாலும் அநியாயமாக கொல்லப்பட்டவனுக்காக கொன்றவனை அவனது இரத்த பந்தங்கள் கொல்வதற்கு குர்ஆன் அனுமதி அளிக்கிறது. ஒரு அரசாங்கம் இருந்தால் உண்மையை விசாரித்து கொலையுண்டவன் பக்கம் நியாயம் இருப்பின் தண்டனை வழங்க அதிகாரம் வழங்கப்படுகிறது. கொல்லப்பட்டவனின் வாரிசு பெருந்தன்மையாக நடந்து அவனை மன்னித்து விட்டாலோ அல்லது உயிருக்கு பகரமாக பணத்தை வாங்கிக் கொண்டாலோ அதற்கும் குர்ஆன் அனுமதிக்கிறது. அதை விடுத்து இதை எல்லாம் உதாசீனம் செய்து விட்டு வேறு வழிகளில் சென்று பழி தீர்ப்பதோ, அவரது வாரிசுகளை பழி தீர்ப்பதோ தடை செய்யப்படுகிறது. இதற்கு கடுமையான தண்டனை உண்டு என்றும் குர்ஆன் எச்சரிக்கிறது. இதன் மூலம் கால காலமா தலைமுறை தலைமுறையாக பழி தீர்க்கும் படலங்கள் ஒரு கட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.
ஆனால் நம் நாட்டு சட்டம் என்ன சொல்கிறது. ஒருவன் அநியாயாமாக கொல்லப்பட்டால் தண்டனை பெற்ற கைதியை மன்னிக்கும் அதிகாரத்தை நமது நாட்டு ஜனாதிபதிக்கு கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவனின் மனநிலை டெல்லியில் ஏஸி அறையில் அமர்ந்திருக்கும் ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியும்? அவனது வலியை உணர முடியுமா? என்றெல்லாம் சிந்திக்காமல் சட்டத்தை இயற்றி வைத்துள்ளோம்.
எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக் கூடிய சட்டங்களே குர்ஆனின் சட்டங்கள் என்பதற்கு இந்த வசனமும் ஒரு சிறந்த உதாரணம்.

டெல்லியில் பட்டினியால் 3 குழந்தைகள் பலி.

டெல்லியில் பட்டினியால் 3 குழந்தைகள் பலி.
தந்தை வேலைக்கு சென்றுள்ளார். வேலைக்கு சென்றவர் தாமதமாகவெ பசியால் துடிதுடித்து மூன்று குழந்தைகள் இறந்துள்ளன.
பாலிமர் நியூஸ்
26-07-2018
உலகில் எங்குமே பட்டினி சாவுகள் தற்போது நடைபெறவில்லை. இது மகா கேவலம். இது பற்றி எல்லாம் கவலையில்லாமல் வழக்கம் போல் அதானிக்கும் அம்பானிக்கும் ஏஜண்ட் வேலை பார்க்க மோடி ஆப்ரிக்கா கிளம்பி விட்டார்.

Wednesday, July 25, 2018

அரே..... பக்தாள்ஸ்.... அவர் எமதர்மராஜா.... :-)


நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு....


இறைவனடி சேர்ந்து விட்டார் இலங்கையைச் சேர்ந்த இர்ஃபான் ஹஃபீஸ்!


இறைவனடி சேர்ந்து விட்டார் இலங்கையைச் சேர்ந்த இர்ஃபான் ஹஃபீஸ்!

தன்னம்பிக்கையும், தன் உந்து சக்தியும், மனஉறுதியும் (Will Power) இருந்தால் எப்படியும் வாழ்ந்து காட்டலாம் என்பதற்கு ஒரு மிகப் பெரிய எடுத்துக்காட்டு இர்ஃபான் ஹஃபீஸ்.

முன்பொரு முறை அறிஞர் ஏ.சி. அகார் முஹம்மத் அவர்கள் இவரைப் பேட்டி கண்ட காணொளியைக் கண்டேன். மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இப்படியும் மனிதர்கள் வாழ்கிறார்கள் என்றெண்ணி நமது நல்ல நிலையைக் கண்டு அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தினேன். படுக்கையில் கிடக்கும் இவரை இத்தனை ஆண்டு காலமாக இன்முகத்துடன் இவரின் பெற்றோர் கவனித்திருக்கிறார்கள். அந்தப் பேட்டியில் அவரின் தந்தைதான் பேசினார். படுத்த படுக்கையிலும் நூல்கள் எழுதி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இர்ஃபான் ஹஃபீஸ்.

இவரது பொறுமையை இறைவன் அங்கீகரித்து, இவரது கப்றை சுவனப் பூஞ்சோலையாக ஆக்கி, ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸில் இவரை இறைவன் நுழையச் செய்வானாக!தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்

தமிழகத்தில் ஆட்சி செய்த முதல் முஸ்லிம் மன்னர்
-------------------
பேராசிரியர் டாக்டர் மேஜர் சையத்
ஷஹாபுதீன் M.A., M.Phil., Ph.D.
பிரான்சிஸ் டே(Francis Day), ரௌலண்சன்(Rowlandson), ஸ்டுராக் (Stu-rrpck) போன்ற ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் கருத்துப்படி இஸ்லாம் தமிழ் மண்ணில் கி.பி. ஏழாம் நூற்றாண்டின் இறுதிக்குள்ளாகவே தழைக்கத் தொடங்கி விட்டது.
தமிழகக் கடற்கரை நெடுகிலும் முஸ்லிம் குடும்பங்கள் வாழ்ந்து வந்ததையும், அவர்கள் இஸ்லாமிய நெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகியதையும் ‘துஹ்ஃபதுல் முஜாஹிதீன்’ என்ற அரபு மொழி நூலில் அதன் ஆசிரியர் ஷேக் ஜியாவுதீன் என்பவர் பறைசாற்றுகிறார். பழவேற்காடு, கோவளம், பரங்கிப் பேட்டை, தொண்டி, பெரிய பட்டணyம், பௌத்திர மாணிக்கப் பட்டணம்,என்ற வாலிநோக்கம் காயல்பட்டிணம், கோட்டாறு, குளச்சல் போன்ற நகரங்களில் முஸ்லிம் சமுதாய அமைப்புக்கள் கி.பி. எட்டாம் நூற்றாண்டிலேயே நிலைபெற்று விட்டன.
தமிழகத்தில் முதல் பள்ளி வாசல் கி.பி. 738 -ஆம் ஆண்டு ஹாஜி. அப்துல்லா இப்னு அன்வர் என்பவரால் கட்டப்பட்டது. அப் பள்ளிவாசல் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திற்கு எதிரில் உள்ளது. ‘கல்லுப் பள்ளி’ என்று இன்றளவும் அது அழைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், இந்திய வரலாற்றில் முஸ்லிம்களின் அரசாட்சி ஏற்படுத்திய வகையில் முகமதுபின் காசிம், சிந்து – முல்தான் பகுதிகளில் கி.பி. 712-இல் அராபியர் ஆட்சி ஏற்படுத்தியதையும், முகமது கோரியின் முயற்சிகளின் பயனாக கி.பி. 1260-இல் அடிமை வம்ச ஆட்சி குத்புதீன் ஐபக் தலைமையில் ஏற்பட்டதையும், தென்னகத்தில் மாலிக் கபூர் படையெடுப்பிற்குப் பிறகு முஸ்லிம்கள் ஆட்சிப் பொறுப்பேற்றதையும், மாபர் எனப்படும் மதுரை சுல்தானியத்தைப் பற்றியும் வரலாறு பகர்கிறது. ஆனால், வரலாற்றுத் தடயங்களை ஆய்வு செய்யும் போது வெளிப்படும் உண்மையென்னவென்றால், தமிழகத்தில் முதன் முதலில் அராபியர் ஆட்சி ஏற்படுத்திய முஸ்லிம் மன்னர், சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ்வே ஆவார்.
சுல்தான் சையத் இப்ராஹீம் வலியுல்லாஹ், புனித மதினா மாநகரில் கி.பி. 1145-ஆம் ஆண்டு சைய்யிதா ஃபாத்திமா என்ற அம்மையாருக்கும், மதினாவின் ஆளுநர் சையத் அஹ்மத் என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர். இவர் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் பேரர் ஹுசைன்(ரலி) அவர்களின் பதினாறாவது தலைமுறையினர் என்பது குறிப்பிடத் தக்கது. இவர் ஆரம்பத்தில் ஆட்சி நிர்வாகத்தில் தந்தைக்கு உற்றத் துணையாக இருந்தார். தமது 25-ஆம் வயதில் ஸைனப் என்ற பெண்மணியை மணந்து இல்லற வாழ்க்கையை இனிதே மேற்கொண்டார்.
இறைத்தூதரின் ஏவலின்படி தமது 42-ஆம் வயதில் இஸ்லாமிய சமயப் பிரச்சாரப் பணியை மேற்கொண்டார். மார்க்கப் பணி சிறப்புடன் செய்ய தமது நெருங்கிய நண்பர்களுடனும், உறவினர்களுடனும் ஆலோசனை நடத்தினார். அதில் குறிப்பிடத் தகுந்தவர்கள் அவரது மைத்துனர் ஜைனுல் ஆபிதீன் மற்றும் மாவீரர்கள் சையத் காதிறும், சையத் முகையிதீனும் ஆவர். அவர்கள் ஆலோசனைக்கு ஏற்ப ‘றூம்’ நாட்டு அதிபதி மகமது பாதுஷாவின் உதவியை நாடினர்.
‘றூம்’ நாட்டு மன்னர் மட்டற்ற மகிழ்ச்சியுடன் புனித தீன் பிரச்சாரப் பணியினை மேற்கொள்ளத் தேவையான பொருளுதவி மற்றும் ஆளுதவி செய்ய முன் வந்தார். தமது படைத் தளபதிகளில் மதிநுட்பத்திலும், வீரத்திலும், பொறுமையிலும், கல்வியிலும், சமயப் பற்றிலும், விவேகத்திலும் சிறந்தவரான அப்பாஸ் என்னும் துருக்கிய தளபதியை சுல்தான் சையத் இப்ராஹீம்(வலி)க்கு துணையாக அனுப்பினார்.
முதல் கட்டமாக கி.பி.1165-இல் ஈரான், ஈராக், பலுசிஸ்தானம் ஆகிய பகுதிகளைக் கடந்து சிந்து, முல்தான் பகுதிகளில் மூவாயிரம் தொண்டர்களுடன் வந்தடைந்து அமைதியான முறையில் இஸ்லாமியச் சமயப் பிரச்சாரம் செய்து வெற்றி கண்டார்.
பிறகு அடுத்த கட்டமாக கி.பி. 1186-இல், கண்ணூர் வழியாகத் தமிழகம் வந்தார்கள். நெல்லை, மதுரை, நாகை ஆகிய பகுதிகளில் சமயப் பணி மேற்கொண்டு அமைதியாக இஸ்லாமியச் சமயக் கருத்துக்களை விளக்கி வியாக்கியானம் செய்து வந்தார்கள்.
அப்போது பாண்டி நாட்டை அரசாண்ட ஐந்து மன்னர்களுக்குள்ளும் சுமுக உறவு நிலவவில்லை. அவர்களுக்குள் போட்டியும், பூசலும், பகைமையும் மலிந்து காணப்பட்டன. இதன் விளைவாக மார்க்க விளக்கம் புரிய வந்த சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்கள், வாளேந்த நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.
குலசேகரப் பாண்டியனின் ஆதிக்கத்திற்குட்பட்ட நெல்லைப் பகுதியில் சமயப் பிரச்சாரம் செய்து வந்த சுல்தான் சையது இப்ராஹிம்(வலி) அவர்களை எதிர்த்து மதுரையை ஆண்ட திருப்பாண்டியன் நெல்லையைத் தன் குடையின் கீழ்க் கொண்டு வரப் போர் தொடுத்தான்.
அப்போரில் திருப்பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பிறகு தப்பி ஓடி திருப்பதியில் தஞ்சம் புகுந்தான். இதனால் அச்சமுற்ற குலசேகரப் பாண்டியனும் நெல்லையை விட்டுச் சென்று முகவைப் பகுதியை ஆண்ட தமயன் விக்கரம பாண்டியனிடம் தஞ்சம் புகுந்தான். இதன் விளைவாக, நெல்லை, மதுரை ஆகிய பகுதிகள் சுல்தான் சையது இப்ராஹீமின் மேலாண்மையின் கீழ் வந்தன. இப்பகுதிகளை மீட்பதற்காக விக்கிரம பாண்டியன் சுல்தானுக்கு எதிராக போர் தொடுத்தான்.
இப்போர் ‘பத்துநாள் போர்’ என்றழைக்கப்படுகிறது. இப்போரில் விக்கிரம பாண்டியனுடைய படைகள் தோற்கடிக்கப்பட்டன. அவனது இரு புதல்வர்களும் பல தளபதிகளும் கொல்லப்பட்டனர். வெற்றி வாகை சூடிய சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) ஏறத்தாழ பன்னிரெண்டாண்டுகள் (கி.பி. 1195 முதல் கி.பி. 1207 வரை) பாண்டிய நாட்டின் கிழக்குப் பகுதியில் வைப்பாற்றிற்கும், வைகை நதிக்கும் இடைப்பட்ட பகுதியை ஆட்சி செய்தார்.
இதுவே தமிழ் மண்ணில் தோன்றிய முதல் முஸ்லிம் மன்னராட்சியாகும். இதன் தலைநகரம் பௌத்திர மாணிக்கப் பட்டிணமாகும்.இதுவே இப்பொழுது அழைக்கபடும் வாலிநோக்கமாகும்
சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) தமது ஆட்சிக் காலத்தில் நாணயங்களை வெளியிட்டார். அவரது சம காலத்தவர் சோழ நாட்டை ஆண்ட மூன்றாம் குலோத்துங்கன் என்பது குறிப்பிடத்தக்கது. சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) எல்லா மக்களிடமும் குறிப்பாக முஸ்லிமல்லாதவர்களிடமும் அன்புடனும், பாசத்துடனும், மனித நேயத்துடனும் ஆட்சி புரிந்தார். இஸ்லாமிய மார்க்க விஷயங்களிலும் தாராள தன்மையையே கடைப்பிடித்து ஒழுகினார். தமிழ் நாட்டின் வரலாற்றிலேயே ‘முதல் முஸ்லிம் அரசர்’ என்ற பெருமையுடையவரும் சுல்தான் சையது இப்ராஹீம்(வலி) அவர்களே!
தமிழ் மண்ணில் அமைதியான ஆட்சி ஏற்பட்ட பிறகு அப்பாஸ் தலைமையிலான படைகள் அரேபியாவிற்கு திருப்பி அனுப்பப் பட்டன. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி விக்கிரம பாண்டியனின் உறவுக்காரனான வீரபாண்டியன் திருப்பதி மன்னனின் துணையுடன் படையெடுத்து வந்து கடுஞ் சமர் புரிந்து சுல்தான் சையது இப்ராஹீமை வெற்றி கொண்டான். முகவை மாவட்டத்திலுள்ள ஏர்வாடி என்ற இடத்தில் சுல்தான் சையது இப்ராஹீம் நல்லடக்கம் செய்யப்பட்டார். மதினா மாநகரின் ஒரு பகுதியான ‘யர்புத்’ என்ர இடத்திலிருந்து சுல்தான் சையது இப்ராஹீம் அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் ‘யர்புத்’ என்றே அழைக்கப் பட்டது.
இச்சொல் நாளடைவில் மருவி ‘ஏர்வாடி’ எனலாயிற்று. அவருடைய ‘தர்கா’ இன்றளவும் இந்து, முஸ்லிம் கலாச்சாரப் பண்பாட்டின் இணைப்பாகவும், மத நல்லிணக்கத்தின் எடுத்துக் காட்டாகவும் விளங்குவது பாராட்டுதற்குரியது.
ஆண்டு தோறும் நடைபெறும் ‘உருஸ்’ நிகழ்ச்சியில் முஸ்லிம்களோடு இந்துக்களும் மிக்க ஆர்வத்தோடு பங்கேற்பதைப் பார்க்கலாம். அவர் ‘ஷஹீதான’ பிறகு அவரது தம்பி மகன் சையது இஸ்ஹாக், பாண்டிய மன்னரிடம் பெற்ற மானிய கிராமங்களை வைத்து பராமரித்து வந்தார். ‘அன்னாரது அரசாட்சி பற்றிய வரலாறில்லாமல் பாண்டியன் வரலாறு இருளாகவே உள்ளது. என்று ம.இராச சேகர தங்கமணி (பாண்டிய வரலாறு, 1978, ப. 432) வருந்துவது நியாயமன்றோ? இதுபோல் எழுதப்படாமல் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்துவார்களாக.
References:
1.ஷேக் ஜியாவுதீன், துஹ்ஃபத்துல் முஜாஹிதீன் (அரபி)
2.ஹுஸைனி S.A.Q. The History of the Pandiyan country
3.சுல்தான் சையது இப்ராஹிம் வெளியிட்ட நாணயங்கள்.
4.காதிர் உசேன்கான், South India Musalmans. Madras:1910
5.வண்ணக் களஞ்சிய புலவர், ‘தீன் விளக்கம்’ காப்பியம்.
6.தாரா சந்து, Influence of Islam on Indian culture. Allahabad:1936
நன்றி: குர்ஆனின் குரல் (ஆகஸ்ட், 1997)
தட்டச்சு & வடிவம்: தாஜ்


 எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு; அதேசமயம் கோளாறு என்னவென்றால் முஸ்லிம் மன்னரின் கல்லறை இன்று வழிபாட்டு தலமாகி விட்டது! வெகுஜன மக்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள சக்தி மன்னருக்கும் இருப்பதாக கருதி தங்கள் பிரார்த்தனைகளை சமாதியிடம் கேட்டு அல்லாஹ்'மன்னிக்கவே மாட்டேன்'எனறு சொன்ன பாவத்தை செய்கின்றனர்!

Tuesday, July 24, 2018

ஆற்று நீரை வரவேற்கும் கிராம மக்கள்!

ஆற்று நீரை வரவேற்கும் கிராம மக்கள்!
சிறுவனாக இருக்கும் போது எங்கள் ஊரில் ஓடும் குடமுருட்டி ஆற்று நீரை வரவேற்க நண்பர்களோடு செல்வது வழக்கம். நண்பர்களோடு குளிக்கவும் செய்வோம். ஒரு முறை மடுவத்தில் கால் வைத்து என்னை தண்ணீர் மிக வேகமாக உள் இழுத்தது. திக்கு முக்காடி போனேன். நண்பர் ஆரிஃபின் உதவியால் அன்று நான் காப்பாற்றப்பட்டேன். ஒவ்வொரு முறை ஆற்றங்கரைக்கு போகும் போது அந்த நிகழ்வு நிழலாடும்.
இறைவன் கொடுத்த அளப்பரிய மழையால் இன்று காவிரி கரை புரண்டு ஓடுகிறது. வரும் நீரை இந்த அரசு எந்த வகையில் சேகரிக்க வேண்டும் என்று யோசித்தால் நல்லது. ஒவ்வொரு ஆண்டும் இதே போன்று மழையை இறைவன் பயனுள்ளதாக ஆக்கித் தந்தருள்வானாக!


அழிவை நோக்கி செல்கிறார் அல்தாஃபி!

அழிவை நோக்கி செல்கிறார் அல்தாஃபி!
முன்பு தலைமையால் ஓரங்கட்டப்பட்டு தாய்லாந்தில் ஒரு கடையில் சேல்ஸ் மேனாக நின்ற பொட்டோவை பார்த்த போது மனது அனுதாபத்தால் "வலிக்கிறது" என்று பதிவு போட்டவன் நான். ஆனால் இன்று ஏகத்துவ எதிரிகளை விட மோசமாக கிளைகளை உடைத்தால் தான் தலைமை ஆட்டம் காணும் என்றும், ஆர்எஸ்எஸூம் தவ்ஹீத் ஜமாத்தும் ஒன்று என்ற பொருள்படியும் பேசி வருகிறார். இந்த ஆட்டங்கள் எல்லாம் தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களை மேலும் ஒற்றுமையாக்கும்.
ஏகத்துவத்தை இவரும் சொல்லட்டும். இவர் பக்கம் உண்மை இருந்தால் தவ்ஹீத் ஜமாத் என்ன? ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் இவர் பக்கம் வரலாம். எனவே ஆக்கபூர்வமாகவும், பொறுமையாகவும் தனது அடிகளை எடுத்து வைப்பதை விட்டு விட்டு 'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்பது போல் உளறிக் கொட்டுகிறார். இனியும் காலம் கடந்து விடவில்லை. தவ்ஹீத் ஜமாத்தின் எதிர்ப்பை கை விட்டு அவர் ஒரு தனி அமைப்பு கண்டு அங்கு மக்களை அழைக்கட்டும். அதை விடுத்து தவ்ஹீத் ஜமாத்தை உடைக்க காய் நகர்த்தினால் இவரே உடை பட்டு போவார்.
இதற்கு முன்னால் முயற்சித்தவர்களுக்கும் அது தான் முடிவாக இருந்தது. அல்தாஃபியை பலமுறை சந்தித்து உரையாடியவன் என்ற உரிமையில் கேட்டுக் கொள்கிறேன். அழிவை உங்கள் கைகளாலேயே தேடிக் கொள்ளாதீர்கள்.

மணமகன் தேவை

அஸ்ஸலாமு அலைக்கும்,

மணமகன் தேவை

பெயர் :
பெனாசிர் பேகம்

வயது : 21

நிறம் : சிவப்பு

படிப்பு : +2

உயரம் : 5.5

தாய்மொழி : தமிழ்


படித்த கொள்கையில் உறுதி உள்ள தஞ்சை நாகை திருவாரூர் மாவட்ட்திலுள்ள உள்ளவர்கள் தொடர்பு கொள்ளவும்.

தொலை பேசி எண் :

அப்துல் அஜீஸ் :7845869555, 9786771479

ஸ்வாமி அக்னிவேஷ் பிஜேபி குண்டர்களால் தாக்கப்ட்டார்!

ஸ்வாமி அக்னிவேஷ் பிஜேபி குண்டர்களால் தாக்கப்ட்டார்!
பல உயரிய விருதுகள் பெற்ற மற்றும் தலித் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்திய ஸ்வாமி அக்னிவேஷ் பிஜேபி குண்டர்களால் மூர்க்கமாக தாக்கப்பட்டுள்ளார். இது ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாகூர் நகரில் நடந்துள்ளது. பிஜேபிக்கு எதிராக யார் கருத்து சொன்னாலும் அது இந்து மத போதகராக இருந்தாலும் அவர்களையும் விட்டு வைப்பதில்லை இந்த பாசிச வாதிகள்.
மோடிக்கு வெட்கம் என்று ஒன்று இருக்குமானால் இனியாவது ராஜினாமா செய்து விட்டு குஜராத்தை நோக்கி ஓடட்டும்.Monday, July 23, 2018

ஃபிரிஜர் பாக்ஸ் மற்றும் குளிப்பாட்டும் ஸ்டாண்ட் இலவசமாக


#ஜனாஸா(இறந்த உடல்) வைக்கும் ஃபிரிஜர் பாக்ஸ் மற்றும் குளிப்பாட்டும் ஸ்டாண்ட் இலவசமாக வழங்கப்படும்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மதுரை மாவட்டம்
மஹபூப்பாளையம் கிளை சார்பாக இறந்தவர்களின் ஜனாஸா வைப்பதற்குறிய குளிர்சாதனப்பெட்டி மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் ஸ்டாண்ட் இலவசமாக வழங்கப்படுகிறது தேவைப்படுபவர்கள் மஹபூப்பாளையம் கிளை நிர்வாகிகளை தொடர்புகொள்ளவும்.

இப்படிக்கு
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மஹபூப்பாளையம் கிளை மதுரை மாவட்டம்
8531891754 8531891755
8531891756


இறைவன் இந்த காவி கயவர்களை நாசமாக்குவானாக!

80 வயது முதியவர் ஹமீத் பசு மூர்க்கர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். இடம் ஜம்மு காஷ்மீர் பனிஹால். இவ்வாறு சட்டத்தை கையில் எடுக்கும் காவி நாய்களை கேட்க எவனும் இல்லை. ஒரு சமூகத்துக்கு அழிவு காலம் நெருங்கி விட்டால் அதிகமாக துள்ளுவார்கள். அதைத்தான் சமீப காலமாக பார்க்கிறோம்.
இறைவன் இந்த காவி கயவர்களை நாசமாக்குவானாக!


சிங்கப்பூரின் பிரம்படி எப்படிபட்டது?

சிங்கப்பூரின் பிரம்படி எப்படிபட்டது?
குற்றங்கள் செய்து சிங்கப்பூர் போலீசிடம் சிக்கினால் , கை கால்களைக் கட்டி குனிய வைத்து , ‘பின் புற’த்தில் வலிமையான குச்சியால் அடி பின்னுவார்கள் . ஒவ்வொரு அடியும் ஒவ்வொரு ஜென்மத்துக்கும் வலிக்கும் என்கிறார்கள்.
நாலு பிரம்படிக்கு பதிலா அபராதம் 5 லட்சம் சிங்கப்பூர் டாலர் கட்டுறயா என்றால் சரி என கட்டுவார்கள் என்பதே அடி எப்படி இருக்கும் என சொல்லும்.
மூங்கில் போன்ற ஒரு மரத்தின் குச்சி 1.5 இன்ச் தடிமனாகவும் 4 அடி நீளமாகவும் இருக்க வேண்டும். அடிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஊற வைப்பார்கள் குச்சி உடையாமல் இருக்க. புண் ஆனால் சீழ் பிடிக்காமல் இருக்க ஆன்டிசெப்டிக் மருந்து தடவப்படும்.
முழு நிர்வாணமாக கீழே படத்திலே இருப்பது போல கட்டி வைத்து மேலே சிறுநீரகத்தை பாதுகாக்கும் தடுப்பு வைத்து அடிப்பார்கள்.
முதல் அடியிலேயே பெரும்பாலானோர் மயக்கம் அடைந்துவிடுவார்கள். பின்பு மயக்கம் தெளியவைத்து தெளிய வைத்து அடிப்பார்கள். மொத்தமாக 24 அடி அடிக்கலாம் என சட்டம் அனுமதி வழங்கியுள்ளது.
4 அடி என்றால் ஒரே காவல் அதிகாரியே அடிப்பார் அதற்கும் மேல் என்றால் இரண்டு மூன்று மாறிக் கொள்வார்கள். உச்சகட்ட விசையோடு ஓங்கி அடிக்கவேண்டும் என்பதே விதி. மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்திலே தடி இறங்கும்.
மயக்கம் தெளிய வைக்க அல்லது மருத்துவரீதியா வலுவாக இருக்கிறாரா என பரிசோதிக்க மருத்துவர் உடன் இருப்பார்.
4 அடிகளுக்கு மேல் வாங்கினாலே பின்பக்க தசை கிழிந்துவிடும். 5 அடிகளுக்கு மேல் என்றால் ஒருவருடம் நடக்கவே முடியாது. புண் ஆறினாலும் தழும்புகள் மறையாது.
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வது சிங்கபூரிலே இல்லை. ஏன்னா இந்த அடி தான். ரவுடித் தனம், திருட்டு, கருப்பு பணம், கொள்ளை என்று அனைத்தையும் ஒழித்தது இந்த அடிதான்.
24 அடி வாங்கினவன் வாழ் நாளிலே திரும்ப ஒழுங்கா நடக்க கூட முடியாது. அப்புறம் எங்க பொம்பளை கையபிடிச்சு இழுக்கறது? கொள்ளையடிக்கறது?
நம்நாட்டு புனிதர்களுக்காகவே இதை கொண்டு வரனும். ஒரு வருசம் நடைமுறையிலே இருந்தா போதும் இந்தியா சிங்கப்பூராகி விடும்.


பாராட்டுக்குரிய சென்னை காவல் துறை இயக்குனர்!

பாராட்டுக்குரிய சென்னை காவல் துறை இயக்குனர்!
லஞ்சம் தர மறுத்த கல்லூரி மாணவர் ஹாரூனை தாக்கிய சேத்துப்பட்டு ஆய்வாளர் இளைய ராஜாவை தற்காலிக பணிநீக்கம் செய்ததோடு, மாணவர் ஹாரூனின் இல்லத்திற்க்கே சென்று நடந்த சம்பவத்திற்க்கு வருத்தம் தெரிவித்தார் சென்னை மாநகர காவல்துறை இயக்குநர் திரு. ஏ.கே .விஸ்வநாதன்.
இவ்வாறு தைரியத்தோடு சம்பவங்களை எதிர் கொள்ள சமூகம் பழகி விட்டால் லஞ்சம் கேட்கும் அதிகாரிகளும் திருந்தி விடுவார்கள்.


Sunday, July 22, 2018

விரல் விட்டு என்னும் கூட்டம் செய்தது என்ன?

//இத்தனை வருடங்களாக பகுத்தறிவை பரப்பியும் இன்னமும் தமிழ்நாட்ல விரல் விட்டு எண்ணும் அளவுலதான் நீங்க எல்லாம் இருக்கீங்க. அப்டியே இருந்து மெலுக்காக பொழப்ப ஓட்டிகிட்டே இருங்களேன். உங்கள நம்ப ஒரு கூட்டம் இருக்கும். அவ்வப்போது தாலி அறுப்பு பூணூல் அறுப்பு, மாட்டுக்கறி விருந்து என உங்க பொழப்பு ஜாலியா ஓடிகிட்டு இருக்கும். அதுல மண் அள்ளி போட்டுக்காதீங்க.// Sabarinivas Elangovan
விரல் விட்டு என்னும் கூட்டம் செய்தது என்ன
இந்து மதத்தில் குழந்தை திருமணம் தான் நடந்து கொண்டிருந்தது. அதனை பெரும்பாலும் ஒழித்தாகி விட்டது .பல தார மணம்,கைம்பெண் மறுமணம் தவறு என்றிருந்த மத நம்பிக்கையை அடித்து நொறுக்கியது இந்த விரல் விட்டு எண்ணும் கூட்டம் தான்
சாலை போட கூட இந்த சாதியினர் வர கூடாது என்று நூறு வருடம் முன்பு கூட போராடி சாலை போடுவதை நிறுத்திய இந்து மத நம்பிக்கையாளர்கள் இப்போது யாராவது அப்படி செய்ய முடியுமா ?அதனை நிறுத்தியாகி விட்டது .சில இடங்களில் இன்னும் மிச்சமிருக்கும் இந்துமதவெறியால் நடைபெறும் இந்து மதம் காரணமான தீண்டாமை நிகழ்வுகளுக்கும் கூடிய விரைவில் சாவுமணி அடிக்கப்படும்.
பெண்களை படிக்க அனுப்பாதே ,சொத்துரிமை கொடுக்காதே என்று தான் மனு முதல் சங்கராச்சாரியார் வரை சொல்லியது-அதனை அடித்து நொறுக்கியாகி விட்டது
மத மற்றம் பெருங்குற்றம் ,கொலை செய்வோம் என்றிருந்த சூழலை இந்த விரல் விட்டு எண்ணக்கூடிய கூட்டம் மாற்றி பிடித்த கடவுளை தேர்ந்தெடுத்து கொள்ளும் சூழல் உருவாக்கியது.விரல் விட்டு என்னும் கூட்டத்தை தவிர மீதி இருக்கும் மிக மிக அதிக இந்து வெறியர்கள் தான் மதமாற்ற தடை சட்டம் வேண்டும்,அதனை மிக கடுமையாக்க வேண்டும் என்று கதறி கொண்டிருக்கிறார்கள்
மதம் கடந்த திருமண உறவுகளை பதிவு செய்ய வந்த ஸ்பெஷல் marriage ஆக்ட் கீழ் நடக்கும் திருமணங்களில் தமிழ்நாடு தான் நம்பர் ஒன்.பதிவு செய்யப்படும் திருமணங்களில் பத்து சதவீதத்துக்கும் மேலான திருமணங்கள் இதன் கீழ் தான் பதிவு செய்யப்படுகின்றன
பெண்களுக்கு சொத்துரிமை,கல்வியில் முன்னுரிமை (தமிழ்நாட்டில் கல்லூரிகளில் படித்து கொண்டிருக்கும் 24 லட்சம் மாணவ மாணவியரில் மாணவர்களை விட மாணவிகள் அதிகம் இருக்கும் சூழலை உருவாக்கியாகி விட்டது இந்த விரல் விட்டு எண்ணும் கூட்டம் )பணிகளில் இட ஒதுக்கீடு என்று மாத உத்திர போக்கு காலங்களில் அனைத்து பதவிகளிலும் பெண்கள் பங்கு பெரும் சூழலை உருவாக்கியாகி விட்டது .சிதம்பரம் நடராஜர் கோவிலை தமிழக அரசு எடுத்து கொண்டு ஏமாற்றப்பட்டு கொண்டிருந்த பல கோடி ரூபாய் வருவாயை கண்டுபிடித்த EO ஒரு பெண் அதிகாரி.
சாதிவெறி ஊறிய உச்சநீதிமன்றம் இதனை இப்போது அடித்தாலும் வேறு வழியின்றி ஒவ்வொன்றாக இறங்கி விரல் விட்டு எண்ணும் கூட்டம் சொல்லும் அனைத்தும் சரி என்று தான் தீர்ப்பு தர வேண்டும்
மாட்டுக்கறிக்காக அடித்து கொள்ளும் மதவெறியர்கள் நிரம்பிய நாட்டில் ,விரல் விட்டு எண்ண கூடிய சிலரை தவிர தீவிர இந்துக்கள் நிரம்பிய தமிழ்நாட்டில் எந்த பகுதியிலும் சுவையான மாட்டு கறி உணவு கிடைக்கும் சூழலை அதனை 35 சதவீதத்துக்கும் அதிகமான இந்து மதத்தின் கீழ் சுட்டி காட்டப்படும் மக்கள் உண்ணும் சூழலை உருவாக்கியாகி விட்டது
கடந்த நூறு ஆண்டுகளில் இந்த விரல் விட்டு எண்ணும் கூட்டம் சாதித்தது என்ன அவர்களை தவிர்த்த தீவிர இந்து மத பற்றாளர்கள் சாதித்தது என்ன என்பதை அலச தயார் .நீங்க ரெடியா ? Poovannan Ganapathy