ஏ ஆர் ரஹ்மானின் மகளின் திருமண
புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் ரஹ்மான். அங்கு வந்து சங்கிகள் வன்மத்தை
கொட்டியுள்ளார்கள். தமிழ் கலாசாரம் எங்கே ? முக்காடு எதற்கு? பொட்டு இல்லையா? அரேபிய அடிமை என்று ஏகத்துக்கும்
விமர்சனம்.
முதலில் தமிழனின் கலாசாரம்
எது? முற்றாக ஆரியர்களால் உள் வாங்கப்பட்டு
இன்று ஆரிய கலாசாரமாகவே மாறி விட்ட தமிழனுக்கு ஏது கலாசாரம்.?
கீழடியில் இத்தனை ஆண்டுகள்
ஆராய்ந்த பிறகும் தமிழர்கள் கும்பிடும் எந்த சிலைகளையும் காண முடியவில்லையே?
இப்போது கோவில்களில் உள்ள சிலைகள் எல்லாம் ஆரிய
இறக்குமதி அல்லவா?
ரஹ்மான் இஸ்லாத்துக்கு மாறினாலும்
தான் தமிழன் என்பதை மறக்கவில்லை. தமிழ் மொழி பற்றும் கொஞ்சமும் குறையவில்லை. தமிழ்
முஸ்லிம்களின் ஒட்டு மொத்த நிலையும் இதுதான். ஏனெனில் உலக மூல மொழிகள் அனைத்தையும்
படைத்தது தான் தான் என்று இறைவன் குர்ஆனிலே கூறுகிறான். அதில் தாய் மொழியின் மேல் இயற்கையாகவே
ஒரு பற்று இருக்கும். அது எனக்கும் உள்ளது. குர்ஆன் அரபியில் இறங்கியதால் அந்த மொழியின்
மேல் ஒரு மதிப்பு இருக்கும். மற்றபடி அது ஒரு தேவ பாஷை என்ற அளவில் தூக்கி வைத்து கொண்டாட
மாட்டோம். இதுதான் உலக முஸ்லிம்களின் நிலை.
மற்றபடி தமிழ் கலாசாரம் ஏன்
பேணப்படவில்லை என்ற கேள்வி வருகிறது. எது தமிழ் கலாசாரம்?
1. பெண்களின் மார்பை அளந்து அதன் வளர்ச்சிக்கு ஏற்ப வரி விதித்து
வசூலித்தது நமது முந்தய கலாசாரம்.
2. சூத்திரன் வேதம் ஓதினால் அவனது நாக்கை அறுக்க வேண்டும் என்று
சொன்னது நமது கலாசாரம்.
3. அக்ரஹாரம், சேரி என்று வாழும் இடங்களையே
பிரித்து அதனை நியாயப்படுத்துவது நமது கலாசாரம்.
4. மனிதனை பல்லக்கில் தூக்க வேண்டும் என்று இன்றும் போராடுவது நமது
கலாசாரம்.
5. மனிதர்களை பார்பனன், வைஷியன்,சூத்திரன் என்று பிளவுபடுத்தி
இன்று கோவில்களிலும் அவரவர் தகுதிக்கேற்ப இடங்களை ஒதுக்கி வைப்பது நமது கலாசாரம்.
6. பெண் கல்வி கூடாது, மாதவிடாய் தீட்டு என்று கூறி பெண்களை மூலையில் முடங்க வைத்தது நமது கலாசாரம்.
இது போன்ற இன்னும் பல பெருமைகளை
கொண்டது நமது கலாசாரம். இதில் எந்த கலாசாரத்தை ஏ.ஆர்.ரஹ்மான் பின்பற்ற வேண்டும் என்று
சங்கிகள் விரும்புகிறார்கள் என்று சொன்னால் அவரும் பின்பற்ற வசதியாக இருக்கும்.
ஆக்கம்
சுவனப்பிரியன்
No comments:
Post a Comment