Followers

Sunday, March 10, 2013

"தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி

"தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி[அமெரிக்காவின் இரட்டை கோபுரங்கள் இடிக்கப்பட்ட பின்னணியில் அமெரிக்காவினால் பழி சுமத்தப்பட்ட, தாலிபான்களைச் சந்திக்க புறப்பட்ட நங்கை நல்லாள் பிரிட்டன் நாட்டைச் சார்ந்த பத்திரிகையாளர் யுவான்னி ரிட்லி தாலிபானால் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்ட பின்லேதன்அவர்களைச் சந்திக்க வேண்டும், அவரைப்பற்றி எழுத வேண்டும் அதன் மூலம் பத்திரிகை உலகில் சாதனையை நிகழ்த்த வேண்டும் என்றெல்லாம் திட்டமிட்டவர் தாலிபானின் கையில் சிக்கி, சிறைப்பட்டார்.

தாலிபான் யுவான் ரிட்லியை கொலை செய்துவிடுவார்கள் என்றே முழு உலகமும் எதிர்பார்த்தது. அவர் கொலை செய்யப்பட வேண்டும், அதன் மூலம் தாலிபான்களை காட்டுமிராண்டிகளாகக் காட்ட வேண்டும் என்பது அமெரிக்காவின் திட்டம். ஆனால் யுவான் ரிட்லி தாலிபான் பிடியில் இருந்து வெளியேறி மேற்கத்தியர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். தனது அந்த மகத்தான சாதனையை நூலாகவும் வெளியிட்டார். நாடறிந்த எழுத்தாளர் சகோதரர் மு.குலாம் முஹம்மது அவர்கள்"தாலிபான் பிடியில்" எனும் பெயரில் அதனை தமிழ் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

நீங்கள் இங்கு காண்பது அதிலிருந்து சில பகுதிகளே ஆகும். இந்நூலைப்பற்றிய விபரங்கள் கட்டுரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நூலை ''விஸ்வரூபம்'' எனும் பெயரில் ஆஃப்கானிஸ்தானைப்பற்றி தப்பும் தவறுமாக படமெடுத்திருக்கும் கமலஹாஸனுக்கும் அவரது சகாக்களுக்கும் எவரேனும் அனுப்பி வைத்து அவர்களுக்கு உண்மை எது பொய் எது என்பதை அறிவுறுத்தினால் நல்லது. -adm. nidur.info ]

தாலிபான் பிடியில்" - யுவான்னி ரிட்லி

தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது

ஆஃகானிஸ்தானியப் பெண்கள் புர்கா அணிந்திருக்கிறார்கள். ஆனால் தங்கள் வீரத்தை வெளிக்காட்டிட வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயமாக அதனை நழுவ விடமாட்டார்கள். அவர்களின் உறுதி, மனத்திடம் இவை என்னை வெகுவாகக் கவர்ந்தன.

குழி விழுந்த விழிகளைப் பெற்ற பெண்ணொருத்தி என்னிடம், ஒரு கேள்வியைக் கேட்டாள். அது மிகவும் நெருடலாக இருந்தது. அந்தக் கேள்வி, "உனக்கு எத்தனை குழந்தைகள்?" என்பதே!

நான் எனக்கு ஒரே ஒரு குழந்தைதான் என்றேன். சிரித்தாள் அவள். "உங்களுக்கு எத்தனை குழந்தைகள்?" என ஓர் எதிர் வினாவை வீசினேன். இதற்கு அந்தப்பெண்மணி பொட்டில் அறைந்தாற்போல் பதில் சொன்னாள்.

"அமெரிக்கர்களும், பிரிட்டன் நாட்டைச் சார்ந்தவர்களும் ஒரு குழந்தையைப் பெறும் அளவிற்கே பலமுடையவர்கள் ஆனால் எங்களால் 15 குழந்தைகள் வரை பெற்றிட முடியும். உங்களால் மிகக் குறைந்த அளவு ஆண்களையே இராணுவத்திற்கு அனுப்பிட இயலும். எங்களால் பல ஆண்களை போர்வீரர்களாகத் தந்திட இயலும். ஆக்கிரமிப்பாளர்களுக்கெதிராக ஒரு பெரும் படையையே எங்களால் அனுப்பிட இயலும்."

"எங்கள் குழந்தைகள் துப்பாக்கிகளோடு தான் பிறக்கின்றார்கள். துப்பாக்கிகளோடுதான் வளருகின்றார்கள். துப்பாக்கிகளோடுதான் விளையாடுகிறார்கள். அவர்கள் வீர விளையாட்டுகளைப் போர்க்களங்களிலே காட்டுபவர்கள். அங்கேதான் அவர்கள் தங்கள் மரணத்தையும் சந்திக்கின்றார்கள். போரும், பட்டினியும், போராட்டங்களும் எங்கள் வாழ்வின் பிரிக்கமுடியாத பகுதிகள். இப்படி என் பிள்ளைகளை அநியாயத்திற்கெதிரான போரிலே தந்துவிட்டு, தேவையானால் நானும் சென்று போராடுவேன்."

இப்படி அந்தப் பெண் பேசி முடித்ததும், அந்தப் பேச்சை ஆமோதிப்பது போல் சிரித்தாள், கிழவி ஒருத்தி தன் பொக்கை வாய் திறந்து. இந்த பொக்கைவாய் சீமாட்டி நூறு வயது நிரம்பியவள். அவள் பல போர்களைச் அச்ந்தித்து இருக்கிறாளாம். இந்தப் பெண்மணி என்னைப்பார்த்து ஏதோ உரக்கச்சொன்னாள். எல்லோரும் சிரித்தார்கள்.

அவள் என்ன சொன்னாள் என எனது 25 வயது தோழியிடம் கேட்டேன். அவள் அதனை மொழிபெயர்த்துச் சொன்னாள்...

அவள் ஆஃப்கானிஸ்தான் பெண்ணாம். அமெரிக்கர்களை எதிர்த்து போராடுவாளாம். ஆஃப்கானிஸ்தான் மக்களை அதுவும் குறிப்பாக பெண்களை யாரும் அடிமைப் படுத்திட இயலாதாம். இந்த மொழிபெயர்ப்பைக் கேட்டவுடன் நான் அந்தப் பெண்ணைப்பார்த்து பொறாமைப்பட்டேன்.

உண்மையில் அவர்களின் எண்ணங்கள் ஏற்றம் மிக்கவை. அவர்கள் காட்டும் வீரம் வைரம் பாய்ந்தது. விவேகம் நிறைந்தது.

இன்றுவரை ஆஃப்கானிஸ்தானிய பெண்களையோ அவர்களின் உணர்வுகளையோ நாம் புரிந்து கொள்ளவில்லை என்பதை நான் உணர்ந்தேன்.

அதுபோல் புர்காவை வெறுக்கக் கற்றுக்கொண்டுள்ளோம் அல்லாமல் புர்காவினுள்ளிருக்கும் பெண்மையையும் அதன் பொன்னறிய பண்புகளையும் நாம் புரிந்து கொள்ளவில்லை, என்பதையும் உணர்ந்தேன்.

நான் ஆஃப்காணிஸ்தானுக்குள் வருவதற்கு முன் தாலிபான்களைப் பற்றிப் படித்த நூல்கள் என் நினைவுக்கு வந்தன. "புர்காவிற்குள்" என்ற ஆவணப்படதைப் பார்ப்பவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும், தாலிபான்களைப்பற்றிய தவறான எண்ணங்களை மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள். இந்தப் படத்தைப் பார்ப்பவர்கள், தாலிபான்கள் கொடூரமானவர்கள் அவர்களை உடனேயே அழித்தாக வேண்டும் என்ற முடிவுக்கே வருவார்கள். ஷெய்ரா ஷா என்ற பெண்மணிதான் இந்த ஆவணப்படத்தை தயாரித்திருந்தார்.

"புர்காவுக்குள்" என்பது ஓர் ஆவணப்படம் என்றே உலக மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. உண்மையில் அது உண்மைச் சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஆவணப்படமல்ல, மாறாக கற்பனைக்கதை.

ஆனால் அதனைத்தயாரித்தவர் அதை ஓர் ஆவணப்படம் எனக் குறிப்பிட்டிருந்தார். அதனால் பார்ப்பவர்கள் அத்தனையும் உண்மை என நம்பினார்கள். அதனால் தாலிபான்களை வெறுத்தார்கள்.

ஆனால் என் கண் முன்னால் நான் பார்க்கும் தாலிபான்கள் முற்றிலும் மாறுபட்டவ்ர்களாக இருந்தார்கள். என்னுள் ஓர் தணியாத ஆசை, இல்லை வேட்கை தலைதூக்கியது. அது தாலிபான்களைப்பறிய உண்மைகளை உலகுக்குச் சொல்லியாக வேண்டும் என்பதே.

அவர்கள் பண்பாளர்கள். அவர்களின் புத்திசாலித்தனம், பெருந்தன்மை இவற்றிற்கு முன் முட்டாளாக சிறுமைப்பட்டு நின்றேன், நான்.

....எத்துனை கள்ளங்கபடமற்ற உள்ளம் தாலிபான்களுக்கு. இந்த தாலிபான்களையா இதயம் இல்லாதவர்களாகக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள், உலக ஊடகங்களில், நொந்து போனேன்.

ஜெலாலாபாத் முதல் காபூல் வரை உள்ள வனப்பகுதி, வனப்பும், செழிப்பும் நிறைந்து கோலாகலமாக என்னை மகிழ்வித்தன. தாலிபான்களின் பூமிதான் எத்தனை ரம்மியமானது. இயற்கையின் எடுப்பும், எழிலும் அங்கே பள்ளிக் கொண்டிருந்தன. இயற்கை தன்னை அலங்கரித்துக் கொண்டு, காண்பவர்களை கவர்ந்திழுத்துக் கொண்டிருந்தது. மலையும், மடுவுமாக எங்கணும் இயற்கையின் கோலங்கள்.

குண்டு போட்டு புகை மண்டலத்தைக் கிளப்பி, நான் பின்லேடனை பிடித்து விடுவேன் என்ற புஷ்ஷின் பம்மாத்து இங்கே பலிக்காது என்பதை அந்த மலைகளைப் பார்த்த மாத்திரத்திலேயே நான் உணர்ந்தேன்.

.... நான் கொலை செய்யப்படவெண்டும் என சி.ஐ.ஏ என்ற அமெரிக்க உளவுத்துறை விரும்பியது.தாலிபான்கள் காட்டுமிராண்டிகள் என உலகிலுள்ள எல்லாப் பத்திரிகையாளர்களும், எழுத்தாளர்களும் நம்பிட வேண்டும். அதற்காக பத்திரிகை துறையில் கொடிகட்டிப்பறந்த நான் கொலை செய்யப்பட வேண்டும் என அமெரிக்க உளவுத்துறை விரும்பியது. விரும்பியதோடு நின்றுவிடவில்லை. அதற்கான ஏற்பாடுகளையும் செய்தது.

...ஆனால் தாலிபான்கள் தங்களது சீரிய முயற்சியால் உண்மைகளைக் கண்டுபிடித்தார்கள். அவர்கள் என்னைப் பற்றிய உண்மையான தகவல்களைத் திரட்டியதோடு மட்டுமல்ல, அமெரிக்க உளவுத்துறையின் தகிடுதத்தங்களையும் கண்டுபிடித்து விட்டார்கள்.

சவால்களும், சோதனைகளும் நிறைந்த அவரது ஆஃப்காணிஸ்தான் பயணத்தைப் பற்றி மேலும்தெரிந்துகொள்ள இந்நூலை வாங்கிப்படியுங்கள். அமெரிக்க கைக்கூலிகளின் பொய்களுக்கு பதிலளியுங்கள்.

நூலைப்பற்றிய விபரங்கள் :

"தாலிபான் பிடியில்"

தமிழாக்கம்: மு. குலாம் முஹம்மது M.Com., M.A.,JMC.

VERGAL PUBLICATIONS

52/1, Mannady Street,

Konica Color Lab Building,

4th Floor, Room: 7

Mannady, Chennai - 600 001.

Website: www.darultrust.in

6 comments:

sornamithran said...

இந்த மதங்கள்தான் இந்த மனிதர்களை என்ன பாடு படுத்துகின்றன?

faizeejamali said...

அடக்குமுரைக்கு எதிராக போராடுவது படாத பாடு, தேவை அற்றது என்ட்ரால் இன்திய சுதன்திர போராட்டமும் கேலிகூதுதான்

Anonymous said...

poovannan says:
March 11, 2013 at 4:00 pm

http://parliamentofindia.nic.in/lsdeb/ls11/ses1/0528059603.htm

There were so much fear of disturbances, riots and ethnic clashes and all that. Mr. Vajpayee was campaigning in Assam. I have got here a book which describes the fact that when he was addressing roadside election meetings in Assam, in that highly surcharged atmosphere, he had said this and I am quoting:

“Foreigners have come here; and the Government does nothing. What if they had come into Punjab instead, people would have chopped them into pieces and thrown them away.”

Sir, I submit that in that atmosphere prevailing in Assam at that time, for a responsible leader to make statements like this, that they should be chopped into pieces and thrown away, is something which could be nothing but inflammatory. I can tell you that soon after this, that famous or infamous Nellie massacre took place in Assam. I submit that Mr. Vajpayee contributed to creating this atmosphere by this type of inflammatory speeches made by him. This is very different to the type of speech that he made here yesterday,

அசாமில் ஒரே நாளில் 2000 திற்கும் அதிகமான இஸ்லாமியர்கள் ஒரே நாளில் கொல்லபட்டார்கள்.அதற்க்கு முன்பு அங்கு பேசி தூண்டிய தலைவர் யார் தெரியுமா .திரு வாஜ்பாயி
இந்த கொலைகளை புரிந்தவர்கள் ஹிந்துக்களா இல்லையா

Anonymous said...

poovannan says:
March 11, 2013 at 5:39 pm

மதத்தை பரப்பாமல் இந்தியா முழுவதும் சுயம்பாக ஹிந்து மதம் குதித்ததா என்ன
கொள்ளை அடிப்பதை குறிப்பிட்ட சாதிகளுக்கு என்று ஒதுக்கி விட்டு விட்டு அது இந்து மதம் அல்ல அவர்கள் இந்துக்கள் அல்ல என்றால் என்ன ஞாயம்
கொள்ளை அடிக்காத மன்னனே கிடையாது. தாய்ப்பாலுக்கு கூட வரி போட்ட திருவன்கோர் ராஜாக்கள் இங்கு உண்டு
அந்தமானில்,வடகிழக்கில் பழங்குடிகள் இருக்கிறார்கள்.அவர்களுக்கு தசாவதராம் ,சிவராத்திரி தெஇர்யுமா.பசுவை உண்ண மாட்டார்களா .ஹிந்து மிச்சிஒனரியொ ,கிருத்துவ மிச்சிஒனரியொ எவன் முதலில் போகிறானோ அவன் அவர்களை இழுத்து போட்டு விடுகிறான்.
ஆதிசங்கரர் பல புத்த விகாரங்களை இந்து கோவில்கள் ஆக்கினார்.கடல் தாண்ட கூடாது என்பதால் ஒரு குறிப்பிட்ட வரைபகுதிக்குள் இந்து மதத்திற்கு harvesting நடந்தது.

Anonymous said...

பூவண்ணன் says:
March 11, 2013 at 8:54 am

ஹிந்து மத ஆதரவாளர்களின் புத்திசாலித்தனமே அலாதியானது.ஷியாக்களும் சுன்னிகளும்,அஹேம்டியாக்களும் வெட்டி கொலை செய்து கொண்டால் இஸ்லாமிய உட்குழுக்களுக்குள் சண்டை என்று உண்மையை எழுதுவார்கள்.ஆனால் வன்னியர்களும்,முக்குலத்தோரும் தலித்களும் அடித்து கொண்டால்.குஜ்ஜர்களும் மீனாக்களும் வெட்டி கொண்டால் ஹிந்துக்களுக்குள் கலவரம் என்று செய்தி வராது.
வெறி பிடித்து பழிவாங்கும் விதமாக ஹிந்துக்கள் சீக்கியரை வெட்டி கொன்றால் அதை குறிப்பிட்ட கட்சியை சார்ந்த மக்கள் (சீக்கியர் உட்பட )செய்ததாக திசை திருப்புவார்கள்(சாவர்க்கர் சாமர்த்தியமாக காந்தி கொலை வழக்கில் இருந்து நழுவி கொண்டது போல )

faizeejamali said...

தாலிபான்களின் போராட்டதுக்கு மதம் காரனமா? அல்லது அடக்குமுரை காரனமா? ஹின்து ஈழதமிழர் போராலி தாலிபான் முஸ்லிம் என்பதால் மதவாதி தீவிரவாதி