Followers

Wednesday, November 22, 2006

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

சமண - பௌத்த மதங்களை அழித்த சைவம்!

கி.பி.ஐந்து ஆறு ஏழாம நூற்றாண்டுகளில் தமிழ் நாட்டில் சமண சமயமும் பௌத்த மதமும் பெரிதும் செழித்து வளர்ந்திருந்தது. சைவ வைணவ மதங்கள் முடங்கிக் கிடந்தன. மக்களில்பெரும்பாலோர் சமணராகவும் பௌத்தராகவும் இருந்தனர். நாட்டை ஆண்ட மன்னர்களும் சமண பௌத்த மதங்களைத் தழுவியிருந்தனர்.

கி.பி.ஏழாம் நூற்றாண்டில் சைவ அடியார்களான நாயன்மார்களும், வைணவ அடியார்களான ஆழ்வார்களும் 'பக்தி' இயக்கத்தை ஆயுதமாகக் கொண்டு சமண பௌத்த மதங்களை அழித்திட முற்பட்டனர்.

'சமண சமயம் பலவிதத்தில் தாக்கப்பட்டது. கொடுமைப் படுத்துதல், கழுவேற்றுதல், கொலை செய்தல், கலகம் விளைவித்தல், நில புலங்களைக் கவர்தல் முதலிய செயல்கள் நிகழ்ந்ததைக் காண்கிறோம். இந்துக்கள் சமண மதத்தை அழித்த செய்திகள் பல உள்ளன.
-மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,
Page 68.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால் பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக் குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே!'
-தொண்டரடிப் பொடியாழ்வார், திருமலை, எட்டாவது பாடல்.

ஆழ்வாரின் இந்தப் பாடலின் மூலம் அக்காலத்தில் சமயப் போர் எவ்வளவு வேகம் கொண்டிருந்தது என்பது விளங்குகிறது. இங்கு சாக்கியர்கள் என்று வருவது பௌத்தர்களைக் குறிக்கும்.

திருநாவுக்கரசர்!

தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள பாடலிபுத்திரத்தில் சிறப்புப் பெற்றிருந்த சமணப்பள்ளி இருந்தது. இங்கிருந்து தான் சர்வநந்தி என்பவர் 'லோகவிபாகம்' என்னும் நூலை எழுதினார்.கி.பி. 458 - ல் சிம்மவர்மன் என்னும் பல்லவ மன்னன் காஞ்சிபுரத்தை அரசாண்டிருந்த போது அவ்வரசனது இருபத்திரண்டாவது ஆட்சி ஆண்டில் 'லோகவிபாகம்'பாகத மொழியிலிருந்து வட மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இதன் பிறகு நூற்று அறுபது ஆண்டுகளுக்கு பின்னர் திருமுனைப்பாடி நாட்டில் திருவாமூரில் புகழானார், மாதினியார் புதல்வராகப் பிறந்தவர் மருணீக்கியார். இவரது சமய அறிவால் சமணர்கள் 'தருமசேனர்' என்னும் பெயர் கொடுத்து அவரைப் போற்றினார்கள். நெடுங்காலம் சமணகுருவாக பாடலிபுத்திர சமணப் பள்ளியில் இருந்த தருமசேனர் சமண சமயத்தை விட்டு சைவ சமயத்திற்கு வந்த போதுதான் திருநாவுக்கரசர் என்ற பெயர் மாற்றம் பெற்றார்.
-மயிலை சீனி. வேங்கடசாமி, மகேந்திரவர்மன்,
Chennai, Page 27-29
-Mysore Archaeological Report, 1909-10, Page 112

சமண மதம் துடைக்கப் படுதல்

சமண சமயத்தவனாக இருந்த பல்லவ மன்னன் மகேந்திரவர்மனைச் சைவ சமயத்தில் திருநாவுக்கரசர் சேர்த்தார். அத்தோடு நின்று விடாமல், தாம் அப்பர், தருமசேனர் என்னும் பெயருடன் தங்கியிருந்த பாடலிபுத்திர சமணப் பள்ளியை இடித்துத் தள்ளவும் ஏற்பாடு செய்தார்.

பல்லவ அரசனும் சமணக் கல்லூரியை ஒழித்தான். பள்ளிகளையும் பாழிகளையும் அழித்தான். அவற்றின் சிதைவுகளைக் கொண்டு வந்து திருவதிகையிற் 'குணதரஈச்சரம்' என்று தன் பெயரால் கோவில் ஒன்று கட்டினான்.
-Page 275, பல்லவர் வரலாறு,

இங்கு சமணர் கோவில் இருந்தது என்பதை உறுதிப்படுத்த மஞ்சக் குப்பம் சாலையில் யாத்திரிகர் பங்களாவுக்கு அருகில் இன்றும் சமணத்திற்கு உருவம் காணப்படுகிறது.
-South Arcot District, Gazetter, Page 369.

பெரிய புராணம் தரும் செய்தி!

'வீடறியாச் சமணர் மொழி பொய்யென்று மெய்யுணர்ந்த காடவனுந் திருவதிகை நகரின் கட்கண்ணுதற்குப் பாடலிபுத்திரத்தில் மண் பள்ளியொடு பாழிகளுங் கூட இடித்துக் கொணர்ந்து குணதரவீச்சரம் எடுத்தான்.
-தெய்வப் புலவர் சேக்கிழாரடிகள் அருளிய திருத் தொண்டர் மாக்கதை, ப.இராமநாதபிள்ளை
-திருநாவுக்கரசு நாயனார் புராணம், பாடல் 146, பக்கம் 289.

இஸ்லாம்

இதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.
-வரலாற்றின் வெளிச்சத்தில் ஒளரங்கஜேப், செ. திவான்.

திருஞான சம்பந்தருக்கனுப்பிய தூது!

'மங்கையர்க்கரசியும் குலச்சிரையாரும் ஓர் பிராமணன் மூலமாக திருஞான சம்பந்த மூர்த்திக்கு ஒரு திருமுகம் அனுப்பி, மதுரைக்கு வந்து சமண இருளைப் போக்கி சைவப் பயிர் முன் போல் தழைக்க அனுக்ரஹிக்கும்படி வேண்டினர்.'
-கா.சு. சேஷகிரி அய்யர், சிவபிரானது 64 திருவிளையாடற்சுருக்கம், பக்கம் 84.

கழுவிலேறிய சமணர்கள்!

'பாண்டியவரசர் குலச்சிறை நாயனாரை நோக்கி சமணரைக் கழுவிலேற்றி முறை செய்யுமாறு பணித்தார். பிள்ளையார் அவர் செய்த சிவா பராதங்கருதி விலக்காதிருந்தார். குலச்சிறை நாயனார் முறை செய்யச் சமணர் யாவரும் கழுவிலேறி மாண்டார்கள்.'
-சதாசிவ செட்டியார், தேவாரப் பதிகங்கள், சென்னை
1925, page 18

'அரசர் குலச்சிறையாரை நோக்கி, 'சமணர்களைக் கழுவிலே ஏற்றுக என்று ஆஞ்ஞாபித்தார்..... திடபக்தியுடைய அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நிறையாக நாட்டு வித்து அவைகளில் ஏற்ற, அதிபாதகர்களாகிய சமணர்கள் எண்ணாயிரவரும் தானாகவே ஏறினார்கள்.'
ஏ.ஜி.கோமதி அம்மாள், திருத் தொண்டர் பெரிய புராணம், சைவம் வளர்த்த அரசி, கோவில்பட்டி,
1948, Page 18

'அமைச்சர் குலச்சிறையார் கழுத்தறிகளை நாட்டிய பின் தோல்வியுற்று நின்ற சமணர் அனைவரும் அத்தறிகளில் ஏறி உயிர் துறந்தனர்.'
க. வெள்ளைவாரணன்,பன்னிறு திருமறை வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,
1972, Page 144

சமணர்கள் அனுபவித்த கொடுமை!

'மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.'
-அ.பொன்னம்பலம், அப்பரும் சமபந்தரும், சென்னை,
1983, Page 28

'கழுவிலேறாத சமணர்களை எல்லாம், சைவாச்சாரத்தைக் கொண்டவர்கள் ஒவ்வொருத்தராகப் பிடித்து அந்த முத்தலைக் கழுமரங்களிலே ஏற்றியிருத்திக் கொன்றார்கள். அந்த சமணர்களுக்குப் பாரம்பரியாக அடியார்களானவர்கள் சாவப்பயந்து மனங்குலைந்து விபூதி பூசிக் கொண்டார்கள். அந்த விபூதி கிடையாமல் பசுவின் கோமயத்தை எடுத்திட்டுக் கொண்டார்கள். அதுவும் கிடைக்காத சிலர் பசுவின் கன்றைத் தோள் மேலே தூக்கிப் போட்டுக் கொண்டார்கள்.'
'விபூதி, கோமயம், பசுவின் கன்று இந்த மூன்றுங் கிடையாத சிலர் விபூதி பூசின நெற்றியுடனே நெற்றியை மோதிப் பூசிக் கொள்ள கோமயத்திலுமப்படியே மோதியிட்டுக் கொண்டும் இப்படியாகத் தங்கள் பாசங்களை வென்று பிழைக்க எண்ணினவர்களைக் கொல்லாமல் விட்டு விட்டனர்.'
-பூவை கலயாண சுந்தர முதலியார் பொழிப்புரை, திருவிளையாடற் புராணம்,சென்னை,
1925, Page 494.

நாய் நரி தின்ற சமணர் உடல்கள்!

விபூதி பூசியவர்கள் உயிர் தப்பினர். அதற்கு உடன் பட மறுத்ததால், கழுவிலேற்றிக் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் என்ன ஆயிற்று தெரியுமா?

'கழுவிலேறி இறந்தவர்களெல்லாம் சுற்றப்பட்ட பருந்துகளும், காக்கைகளும், நரிகளும், நாய்களும், தொடர்ந்து கௌவிப் பிடித்திழுத்துத் தின்னக் கிடந்தார்கள்.'

'மற்றிவர் தம்மை யூற்றஞ் செய்திலர் யாருஞ் சுற்றிய சேனங்காக நரிகணாய் தொடர்ந்து கௌவிப் பற்றிநின் றிர்த்துத் தின்னக் கிடந்தனர்.'

பரஞ்சோதி முனிவர் அருளிய திருவிளையாடற் புராணம், உ.வே.சா.பதிப்பு, சென்னை,
1937, Page 1195.

'கூன் பாண்டியன் சைவத்திற் புகுந்த நாளே சமணமும் வீழ்ந்த நாளாகும். அதன்பின் புத்தமதம் திரும்பத் தலை தூக்கவே இல்லை. நம்பியாண்டார் நம்பி காலமாகிய பதினோறாவது நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து அவை அழிந்து பொயின.'
பெ. சுந்தரம் பிள்ளை எழுதிய 'திருஞான சம்பந்தர் காலம்' என்ற ஆங்கில நூல்.

'திருஞான சம்பந்தர் மதுரையில் எட்டு ஆயிரம் சமணரைக் கழுவில் ஏற்றினார் என்று சைவ சமய நூல்களாகிய பெரிய புராணம், திருவிளையாடற்புராணம், தக்கயாகப் பரணி முதலிய நூல்கள் கூறுவதும் இவற்றை நினைவு படுத்த மதுரைப் பொற்றாமரைக் குளத்து மண்டபத்தின் சுவற்றில் சமணரைக் கழுவேற்றும் காட்சியைச்சித்திரம் தீட்டி வைத்திருப்பதும், மதுரைக் கொவிலில் நடை பெற்று வரும் உற்சவங்களில் ஐந்து நாள் கழுவேற்று உற்சவம் ஆண்டு தோறும் நடைபெற்று வருவதும் இவை நடைபெற்றதற்கு முதன்மையான சான்றுகளாகும்.'
மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும், பக்கம் அறுபத்தெட்டு.

திருமங்கையாழ்வார்

தொள்ளாற்றுப் போர் வென்ற நந்தியின் பாட்டனான பல்லவ மன்னன் நந்திவர்மன் காலத்தில் திருமங்கையாழ்வார் வாழ்ந்திருந்தார். அவர் சமண பௌத்த சமயங்களைத் தாக்கி வைணவ சமயத்தை நிலை நிறுத்தினார்.
-மாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, சென்னை, பக்கம் இருநூற்று எழுபத்தேழு.

கி.பி.எட்டாம் நூற்றாண்டினரான இரண்டாம் நந்திவர்மன் காலத்தில் சோழ நாட்டின் ஒரு பகுதியான ஆலி நாட்டை ஆண்ட குறுநில மன்னர் திருமங்கை ஆழ்வார்.
இவர் நாகப் பட்டினத்துப் பௌத்த விகாரத்தில்இரந்த பொன்னால் வேயப்பட்ட புத்தர் சிலையைக் கவர்ந்து வந்து அதைக் கொண்டு பல கொவில் திருப்பணிகள் செய்தார். பௌத்த சமண சமயங்கள் மீது நாயன்மாரைப் போலவே மிக்க வெறுப்புற்றவர் என்பதை இவரது பாடல்களைக் கொண்டு நன்கு உணர முடிகிறது.
-மயிலை சினி வேங்கடசாமி, மூன்றாம் நந்திவர்மன்,சென்னை,பக்கம் ஐம்பத்து இரண்டு.
-மா.இராசமாணிக்கம் பிள்ளை, பல்லவர் வரலாறு, பக்கம் இருநூற்று எழுபத்து ஏழு.

'திருமங்கை ஆழ்வார் திருவரங்கம் பெரிய கொவில் விமான மண்டப கோபுராதி கைங்கரியங்கள் செய்யத் திருவுள்ளமாய்ப் பொருள் தேட எண்ணுகையில் நாகப்பட்டினத்தில் ஒரு பொன்னாலான புத்த விக்ரஹமிருப்பதை அறிந்து அதை அறுத்துத் திருப்பணி செய்ய நினைத்து நாகப்பட்டினம் சென்று புத்தன் கோயிலுக்குச் சென்று விக்ரஹத்தை எடுத்து வந்துடைத்துச் சுட்டுரைத்து நன் பொன்னாக்கித் திருமதிள் கைங்கர்யத்துக்கு உபயோகப்படுத்தினர்.'
-நாலாயிர திவ்விய பிரபந்தம், சென்னை, பக்கம் இருபத்திஆறு.

கோயம்புத்தூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை திரு மூர்த்தி மலையிலுள்ள சமணர் கோவில் அமணலிங்கேசுவரர் என்று ஹிந்து மதக் கோவிலாக மாற்றப் பட்டது.
-புலவர் செந்தலை ந. கவுதமன், சூலூர் வரலாறு, பக்கம் நூற்று தொண்ணூற்றொம்பது.

'நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்வத நாதரும், மகா வீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.'
'கிபி பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப் பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமய கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிகிறது.'
-எஸ். பத்மநாபன்,குமரி மாவட்ட கொவில்கள், நாகர் கோவில், பக்கம் 51,52

செஞ்சியை ஆட்சி செய்து வந்த வேங்கடபதி நாயக்கர் சமணர்களுக்கு மிகுந்த கொடுமைகளைச் செய்தார். அதனைத் தாங்க முடியாத சமணர்கள் தப்பியோடினர். செஞ்சி அரசன் அந்நாட்டுச் சமணர் தலையை வெட்டிய காலத்தில் வேறு நாடுகளுக்குத் தப்பிப் போய்விட்ட சமணர்களில் காங்கேய உடையாரும் ஒருவர்.
-மயிலை சீனி. வேங்கட சாமி, சமணமும் தமிழும், பக்கம் எழுபத்து நாலு.

திருவாரூர் திருக்குளம்

தமிழ் நாட்டிலே பெரிய அளவிலானதும் பதினெட்டு ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டதுமான திருவாரூர் திருக்குளம் இப்போதும் இருக்கிறது. திருவாரூரில் சமணர்கள் செல்வாக்குடன் இரந்த காலத்தில் அந்தத் திருக்குளம் சிறியதாக இருந்தது. அத்துடன் அந்தக் குளத்தின் நான்கு பக்கங்களிலும் சமண சமயத்தவருடைய நிலங்களும், மடங்களும், பள்ளிகளும், பாழிகளும் இருந்தன. அப்போது 'தண'டியடிகள்' என்னும் சைவ நாயனார் அந்தக் குளத்தைப் பெரிய குளமாக்கிட முயற்சி செய்தார். அங்குள்ள அரசன் சமணரை ஊரை விட்டுத் துரத்திய பின்னர் அவர்களுடைய கட்டிடங்களையும் நிலங்களையும் அழித்துப் பறித்து அந்தச் சிறிய குளத்தை இப்போதுள்ள பெரிய குளமாகத் தொண்டினான்.
'பன்னும் பாழிப் பள்ளிகளும் பறித்துக் குளஞ்சூழ் கரைபடுத்து'
-திருத் தொண்டர் புராணம், தண்டியடிகள், பக்கம் அறுபத்தொன்பது.

கும்பகோணம் தாலுகாவைச் சேர்ந்த திருநாகேச்சுவரர் கோயிலின் மண்டபக் கற்றூணில் உள்ள சாசனம் தென் கரைத்திமூர் நாட்டில் இருந்த மிலாடுடையார் பள்ளி என்னும் சமணக் கொவிலைக் குறிப்பிடுகிறது. திருக் கோவலூரில் இருந்த 'மிலாட்' அரசனால் கட்டப்பட்ட இந்தச் சமணக் கோவில் பின்னால் இடிக்கப் பட்டது. அக் கோயிற் கற்களைக் கொண்டு இப்போதுள்ள திருநாகேசுவரத்துச் சைவக் கோயில் கட்டப் பட்டது. இவ்வூருக்கு அருகிலுள்ள வயல்களில் சமண உருவங்கள் இன்றும் காணப்படுகின்றன.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

நன்னிலம் ரயில் நிலையத்திற்கு கிழக்கே வர்த்தமானீச்சுவரர் கோயில் இப்போது உள்ளது. ஸ்ரீவர்த்தமானர்(மகாவீரர்) 24 வது தீர்த்தங்கரர். இவரத பெயரைக் கொண்டே இது பழங்காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததைத் தெரிந்து கொள்ள முடிகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவரால் கைப்பற்றப்பட்ட இச்சமணக் கோவில் சைவக் கோவிலாக்கப்பட்டது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பது.

படிக்க படிக்க ஒவ்வொரு உண்மையாக வெளிவருவது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. தமிழக வரலாற்றை தோண்டிப் பார்த்தோமானால் நமது முன்னோர்கள் மதத்தின் பெயரால் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டும் கழுவிலேற்றியும், ஒரு மதத்தவரின் வழிபாட்டுத்தலத்தை இடித்து மற்றொருவர் கோவில் கட்டிக் கொள்வதுமாக அநியாயங்கள் தடையின்றி அரங்கேறியுள்ளது. இதற்கு அரசர்களும் உடந்தையாய் இருந்திருப்பதுதான் விந்தை.

நேரம் கிடைக்கும் போது மேலும்பல வரலாறுகளை பட்டியலிடுகிறேன்.

இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

32 comments:

suvanappiriyan said...

இத்தகைய சிறந்த வரலாற்றுக்கு சொந்தக் காரர்களாகிய நாம் எந்த நியாயத்தின் அடிப்படையில் முகமது நபியின் வரலாற்றை விமர்சிக்க வருகிறோம்? இஸ்லாத்தை விமரிசிப்பதில் குறிப்பிட்ட உயர்சாதி சமூகத்தவரே ஆர்வம் காட்டுவதைப் பார்க்கிறோம். மேலே பௌத்தத்தையும் சமணத்தையும் எந்த அளவு மூர்க்கமாக நம்நாட்டிலிருந்து துடைத்தெறியப் பட்டது என்பதை ஆதாரத்துடன் பார்த்தோம். இன்னும் பார்க்க இருக்கிறோம். ஒரு நணபர் முகமது நபி ஜகாத் (எழைவரி) பணத்தை பலரிடமும் வசூலித்து சுகமாக வாழ்ந்ததைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கிறார். அவருக்கு சில முகமது நபியின் வரலாற்றை நினைவூட்ட விரும்புகிறேன்.

ஒரு முறை நபித் தோழர் உமர்பின் கத்தாப் அவர்கள் முகமது நபி அவர்களின் இல்லத்திற்கு வந்திருந்தார். வீட்டில் உள்ள பொருட்களைப் பார்த்தார். மகமது நபி அவர்களின் வீட்டில் பதனிடப்பட்ட மூன்று தோல் துண்டுகளும் வீட்டின் ஒரு மூலையில் ஒரு கைப்பிடி பார்லிஅரிசியும் கிடந்தது. சுற்றும் முற்றும் பார்த்தார். வேறு பொருட்கள் எதுவும் தென்படவில்லை. உமர் அழத் தொடங்கினார். 'உமரே ஏன் அழுகிறீர்கள்?' என்று முகமது நபி கேட்டார். அதற்கு உமர் 'இறைவனின் தூதரே! நான்ஏன் அழக் கூடாது? அழாமல் வேறென்ன செய்வது? தங்கள் திரு மேனியில் பாயின் அச்சு பதிந்திருப்பதைப் பார்க்கின்றேன். மேலும் தங்கள் வீட்டில் உள்ள பொருட்களையும் பார்க்கின்றேன். இறைவனின் தூதரே! வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை நமக்கு அளிக்குமாறு இறைவனிடம் பிரார்த்தியுங்கள். பாரசிகர்களும், ரோமானியரும் இறைவனை வணங்குவதில்லை. அவர்களுக்கு உண்மையான நம்பிக்கையும் கிடையாது. என்றாலும் ரோமானியப் பேரரசர்களும் பாரசீகப் பேரரசர்களும் அற்புதமான நீரோடைகளுக்கிடையே அமைந்துள்ள அழகிய வீடுகளில் வாழ்கின்றனர். ஆனால் இறைவனின் நபியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தாங்கள், இறைவனின் அடிமை என்று ஏற்றுக் கொள்ளப்பட்ட தாங்கள் வறுமையில் வாழ்கிறீர்கள்.' என்று முகமது நபியைப் பார்த்துக் கூறினார்.

அதுவரை தலையணையில் சாய்ந்திருந்த முகமது நபி அவர்கள் சட்டென எழுந்து அமர்ந்து பின் வருமாறு கூறினார்: 'உமரே! தாங்கள் இந்த விஷயம் குறித்து இன்னுமா சந்தேகம் கொள்கிறீர்கள்? இந்த உலகில் கிடைக்கும் அமைதியான வசதியான வாழ்க்கையை விட மறு உலகில் கிடைக்கக் கூடிய அமைதியும் வசதியும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கையே சிறந்தது.'
-திர்மதி, ரியாளுஸ் ஸாலிஹீன்
486- ஹதீது எண்.

பிலால் அவர்கள் அறிவிக்கிறார்கள் : முகமது நபி அவர்கள் தமக்குக் கிடைத்த அன்பளிப்புப் பொருட்களைத் தமக்கு எதிர்காலத்தில் பயன்படட்டும் என்று எந்தப் பொருளையும் தமக்கென்று வைத்துக் கொண்டதில்லை. தமக்குக் கிடைத்தவற்றை எல்லாம் ஏழைகளுக்கும் தேவைப்படுவோருக்கும் வழங்கி விடுவார்.ஒருமுறை முகமது நபி அவர்களுக்கு நான்கு ஒட்டகங்கள் நிறைய பொருட்கள் கிடைத்தன. ஆனால் அவர் அவற்றில் தமக்கென்று எதையும் எடுத்துக் கொள்ளவில்லை. இந்தப் பொருட்கள் அனைத்தையும் தேவைப் படுவோருக்கு வழங்காமல் வீட்டிற்குச் செல்ல மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.'
-ரியாளுஸ்ஸாலிஹீன்
465,466- ஹதீது எண்

முகமது நபி அவர்கள் தம் வாழ்நாளில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் குவித்தவர்.ஆனால் அவர் மரணத் தருவாயில் கடனாளியாக இருந்தார். அவரது கேடயம் மதீனாவில் உள்ள ஒரு யூதக் குடி மகனிடம் அவர் பெற்றக் கடனுக்குப் பகரமாக வைக்கப்பட்டிருந்தது.
-ரியாளுஸ் ஸாலிஹீன்
504 - ஹதீது எண்.

'முகமது நபி அவர்கள் நன்கு அரைக்கப்பட்ட மாவை ரொட்டியாகச் சமைத்து சாப்பிட்டதுண்டா? என ஸஹ்ல் பின் ஸஃத் அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'முகமது நபி அவர்கள் மரணிக்கும் வரை அந்த மாவைப் பார்த்ததே இல்லை' எனக் கூறினார்கள். 'அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடை இருந்ததா?' என்று கேட்டதற்கு 'சல்லடைஇருந்ததில்லை' என்று கூறினார். பிறகு 'அப்படியாயின் கோதுமையை எப்படி மாவாக்கினீர்கள்?' எனக் கேட்கப்பட்டதும் 'அதை இடித்த பின் அதில் ஊதுவோம். பறக்கக் கூடிய உமி போன்றவை பறந்ததும் அதில் நீரைச் சேர்த்து குழைத்துக் கொள்வோம்'
ஆதாரம் : புகாரி, அஹ்மத், இப்னுமாஜா

வஹ்ஹாபி said...

//இஸ்லாம்

இதே கால கட்டத்தில் தான் மக்காவில் இஸ்லாம் தோன்ற ஆரம்பித்தது. முகமது நபி தன்னுடைய பிரச்சாரத்தை துவக்கியது இந்த கால கட்டத்தில்தான். இஸ்லாம் தொன்றுவதற்கு முன்பே உலகின் பல்வேறு பாகங்களில் ஒரு மதத்தவரின் வழிபாட்டுத் தவங்களை இன்னொரு மதத்தினர் அழித்ததையும் அல்லது அதனை தங்களது வழிபாட்டுத் தலமாக மாற்றியதையும் சரித்திரத்தில் நாம் காண முடிகிறது.//

திவானின் கருத்தில் கடுமையான பிழை இருக்கிறது.

'தோன்ற' என்ற சொல்லுக்குப் பகரமாக, 'புத்தெழுச்சி' என்று இருக்க வேண்டும்.

பதிவுகளைச் சான்றுகளின் அடிப்படையில் எழுதுவதற்குப் பாராட்டுகள்!

மாசிலா said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

Depicting Buddha as Hindu by RSS, specially to the international community, and pretending to respect Him, is a stategy to hoodwink the mases, as was done about Ambedkar. The process started long time back by declaring Buddha as an avatara of god in some times around eighth century and finalised till 12th century. Manohar Joshi, the then Chief Minister of Maharashtra, writing in the Introduction of Dr. Ambedkar's W&S vol. 16, (1998) does mention Buddha as tenth incarnation of God, knowingly that the Buddhists all over the world do not believe in God, let alone its incarnations. At the same time, an average Brahmin takes a great pride that Buddhism was driven away from this land by Adi- Sankara. They ignore that a non-existent religion can not die.

Declaring the Buddha as ninth avatara of Vishnu, by the Brahmanic Puranas, was meant to cause confusion in the minds of people with the result that Buddhism came to be treated as a "heretical" and "aesthetic" branch of Brahmanism. The modern scholars like Kane, Radhakrishnan, Swami Vivekanand and Tilak, have pushed this confusion further back to the time of origin of Buddhism, by saying that Upanishadas are the origin of Buddhist thought, thus claiming both that Buddhism was just a refined "Hinduism", and also claiming with pride that Buddhism was driven away by the Brahmanas and it has died down,

(Source:http://www.ambedkar.org/books/dob15.htm)

gulf-tamilan said...

//நேரம் கிடைக்கும் போது மேலும்பல வரலாறுகளை பட்டியலிடுகிறேன்//
post soon!!
பதிவுகளைச் சான்றுகளின் அடிப்படையில் எழுதுவதற்குப் பாராட்டுகள்

suvanappiriyan said...

வருகை புரிந்து கருத்தைப் பதிந்த வஹ்ஹாபிக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

suvanappiriyan said...

குலசேகர நல்லூர் சிவன் கோவில!

இராமநாதபுரத்திலிருந்து வட மேற்கேயும், நல்லூர் திருச்சூளை என்னும் இடத்திலிருந்து மேற்கேயும் உள்ள குல சேகர நல்லூரில் சிவன் கோவில் இருக்கிறது.

குலசேகர பாண்டியன் இந்தக் கிராமத்திலிருந்த சமணர்களைத் துரத்தி விட்டு சமணக் கொவிலை சைவக் கோவிலாக மாற்றினான்.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று நாற்பத்தி ஏழு

பஸ்தீபுரம்!

கொள்ளேகால் தாலுகாவில் பஸ்தீபுரத்தில் இருந்த சமணக் கோவிலை இடித்து அந்தக் கற்களைக் கொண்டு சிவன் சமுத்திரம் என்னும் இடத்தில் காவிரி ஆற்றில் ஒரு பாலம் கட்டினார்கள்.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று அறுபத்தி ஆறு.

விசயமங்கலம்!

ஈரோடு தாலுகாவில் விசய மங்கலத்துக்கருகில் அரசண்ணாமலை என்ற குன்றில் சமணக் கோவில் இருந்தது. இப்போது அக் கோவில் சிவன் கோவிலாக மாற்றப் பட்டிருக்கிறது.
-சமணமும் தமிழும், பக்கம் நூற்று அறுபத்தேழு

கும்பகோணம் விநாயகர் ஆலயம்!

கும்பகோணம் நாகேசுவரசாமி திருமஞ்சன வீதியில் உள்ள விநாயகர் ஆலயத்தில் பகவரிஷி என்னும் பெயருள்ள புத்தர் கோவில்கள் பல பிற்காலத்தில் விநாயகர் கோவில்களாக்கப்பட்டன. இங்குள்ள விநாயகர் கோவிலும் அதில் உள்ள புத்தர் உருவமும் இதற்குச் சான்றாகும்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் நாற்பத்தி ஐந்து.

காஞ்சிபுரத்திற்கு தென்மேற்கே பல்லவபுரம் என்ற பல்லாவரத்திற்கு அருகில் 'கணிகிலுப்பை' என்ற ஊரில் புத்தர் கோவிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள். அத்தோடு அங்கிருந்த புத்த உருவங்களையும் ஏரிக் கரையில் கொண்டு போய்ப் போட்டு விட்டார்கள்.
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்,பக்கம் நாற்பத்தி ஐந்து.

suvanappiriyan said...

//தலித் மலம் அள்ளுவதற்குக் காரணம் இஸ்லாம். இஸ்லாத்தை இங்கு கொண்டுவந்த வந்தேறி கொள்ளைக்கூட்டங்கள்தாம் இதையும் கொண்டுவந்தன.//
-Nesa Kumar

நல்ல வேளை! இந்தியாவில் தலித்கள் உருவாவதற்கு இஸ்லாம்தான் காரணம் என்று சொல்லாமல் விட்டார்.

இந்தியாவில் எந்த கூட்டம் ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு கைபர் கணவாய் வழியாக வந்தேறிகளாக வந்து கூடாரம் அடித்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அதை விளக்க வேண்டிய அவசியமெல்லாம் இல்லை.

இன்றுவரை மலம் அள்ளுபவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்நாட்டு பூர்வ குடிகளை கோவிலுக்குள் அனுமதிக்காமல் இருப்பது இஸ்லாமா! பார்ப்பணியமா!

//தலித்தை அரியணையில் ஏற்றிட இந்தியா தயாராகத்தான் இருக்கிறது. ரம்பர் ஸ்டாம்பு என்றாலும் ஜனாதிபதியாக ஒரு தலித் இங்கே இருந்திருக்கிறார். சவுதியில் ரம்பர் ஸ்டாம்பாகவாவது ஒரு அரபியல்லாத, அங்கேயே உழைத்து ஓடாய்ப்போகும் இந்திய-தலித்-முஸ்லிமை தலைவராக நியமிப்பார்களா?//
-Nesa Kumar

சவூதிக்கு ஆட்சியாளராக வரக் கூடியவர் அரச குடும்பத்தவராகவும், சவூதி நாட்டவராகவும் இருக்க வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இது கூட இன்னும் நேச குமாருக்கு தெரியவில்லையா? குமுதத்தில் பல கட்டுரைகளை எழுதிய இவருக்கு இநத விபரம் நான் சொல்லித் தெரிய வேண்டுமா? புதிதாக இஸ்லாம் ஆன பல தமிழ் சகோதரர்கள் சில நேரங்களில் பள்ளியில் இமாமாக நின்று தொழ வைக்கும் அழகிய காட்சியைப் பார்க்கிறேன். அந்த சகோதரரைப் பின் பற்றி பல சவூதிகள் தொழுவதையும் பார்க்கிறேன்.

இதே போன்று கோவிலில் மந்திரம் சொல்ல ஒரு தலித்தை நியமிக்க நேச குமாரால் முடியுமா? இதற்கு சங்கர மடம் ஒத்துக் கொள்ளுமா? வேதத்தைக் காதால் கேட்டாலே ஈயத்தை காய்ச்சி ஊற்றச் சொல்லும் மதம் அல்லவா உங்களின் பூர்வீக மதம்.!

“சூத்திரன் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் இராமன் "சம்புகா" என்பவனைக் கொன்றான். அந்தச் சூத்திரன் அப்போது செய்த தவறு அவன் தவம் செய்தான்.”

சூத்திரன் தவம் செய்ததற்கே உங்களின் கடவுளான ராமன் சம்புகனை கொன்றான். அப்படி இருக்க சூத்திரர்களை கோவிலகளில் வேதம் சொல்ல சமூகம் அனுமதிக்குமா?

//சுவனப்பிரியன் போன்றவர்கள் அது 100% இஸ்லாமிய நாடு என்று சர்டிபிகேட் கொடுப்பதை இணையத்திலேயே பார்க்கிறோம்//
-Nesa Kumar

இது போன்று நான் எங்கும் சவூதிக்கு சர்டிபிகேட் கொடுக்கவில்லையெ! இஸ்லாமிய குற்றவியலை ஓரளவு சரியாக நடைமுறைப்படுத்துகிறார்கள். பெஹ்ரைன், குவைத், கத்தார், ஈராக் போன்ற அக்கம்பக்கத்து நாடுகளுக்கு இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஓரளவு சவூதி தேவலாம் என்றுதான் சொல்லியிருந்தேன்.

suvanappiriyan said...

At 3:52 AM, மாசிலா said...

(நண்பர் மாசிலா அவர்களின் கருத்து சில எடிட்டிங்குகளுடன்)

நன்றி. நன்றி.
மிகவும் அருமையான பதிவு.
மனதை மிகவும் நோகடிக்கும் நிறைய உண்மைகளை தெரிந்துகொண்டேன்.
இப்படிப்பட்ட கொலைகார பாவிகளா இந்த சைவர்கள்?
…………………………..
நினைத்தாலே குலை நடுங்குகிறதே!
…………………….இப்படியெல்லாம் செய்தது.
இதற்கு அரசர்களும், மன்னர்களும் விளக்கு பிடித்தார்களா?
கேவலம்!
வெட்கம்! வெட்கம்!

ஆதாரத்துடன் எழுதுவது நன்று.

தொடர்ந்து எழுதிவரவும்.

மீண்டும் நன்றிகள் பல உரித்தாகுக.

வாழ்த்துக்கள்!

வஞ்சிக்கப்பட்டு உயிர்விட்ட அனைவரின் ஆத்மா உங்களைப்போன்றவர்கள் தரும் சரித்திர ஆதரவுடைய தகவல்களினால் மீண்டும் நம்முள் உயிர்பெற்று பழிவாங்கிய பேய்களுக்கு வாழ்க்கைப் பாடம் கற்றுக்கொடுக்கும். அதற்கான ஆரம்பமே உங்களின் பதிவு.

வாழ் நாளில் எதைவேண்டுமானாலும் மறைத்துவிடலாம், மறந்தும்விடலாம். அனால், உண்மைகளையும் சரித்திரத்தையும் ஒருபோதும் எவராலும் மறைக்கவும், மறக்கவும் முடியாது. உலகத்தின் எந்த மூலைக்கு ஓடினாலும் உன் சரித்திரம் உன்னை விடாமல் துரத்தி துரத்தி பிடிக்கும். என்றாவது ஒரு நாள் கட்டாயம் அகப்பட்டுக்கொள்வாய். ஏனென்றால் உலகம் உருண்டையானது. நீ எங்கு ஓடினாலும், திரும்ப மறுபடியும் கிளம்பிய இடத்துக்கே வந்து சேர்வாய். வகையாய், உன் வருகைக்காக காத்திருக்கும் எதிரிகளிடம் மாட்டியும் கொள்வாய். குற்றவாளி கூண்டில் நிறுத்தப்படுவாய் நீ, அயோக்கியனே!
அதுவும் அநியாயம், அட்டுழியம், கொலை, தீ, கலாச்சார, பண்பாட்டு, சமூக அழிப்பு அகியவைகளினால் அப்பாவிகள் இம்மண்ணில் சிந்திய ரத்தத்தில் வளர்ந்த நீ நிம்மதியற்று வாழ்வாய்!

என்றாவது ஒருநாள், உன் அகங்காரத்தினாலும், ஆனவத்தினாலும் நீயே உன்னை அழித்துக்கொள்வாய்!
இது உறுதி!

suvanappiriyan said...

// அன்றுமுதல் இன்றுவரை கூச்சமின்றி நடைபெறும் ஜிகாதி இனப்படு கொலைகளினை இந்த சைவ-சமண மோதலின் ஒரு நிகழ்வினை வைத்து சமாளிக்க நினைக்கும் நேர்மையற்ற அறிவுஜீவித்தனத்திற்கு சகோதரர் ஜாவா குமாரின் கட்டுரை ஆழமான அறிவார்ந்த தமிழ் இலக்கியம் சார்ந்த வாதங்களை நேர்மையாக எடுத்து வைக்கிறது.//
-Aravindhan Neelagandan

அதாவது ஒரே இறைவனை வணங்குங்கள் என்று சொன்ன ஒரே காரணத்திற்காக சொந்த ஊரை விட்டு விரட்டியவர்களோடு முகமது நபி போரிட்டது தவறாம் நீலகண்டன் பார்வையில்.

அதே சமயம் சமணர்களையும் பௌத்தர்களையும் சைவர்கள் எதிர்த்ததற்கான அருமையான ஒரு காரணத்தை நிலகண்டன் ஜாவா குமார் என்பரிடமிருந்து கடன் வாங்கிப் போட்டிருக்கிறார். அதையும் பார்ப்போம்.

//முதற்கண் சமண பௌத்தப் பிரிவினர் யாவரும் ஏதோ புத்தரையும், மஹாவீரரையும் போன்றே அன்புருவாய்த் திகழ்ந்து வந்தனர் என்று கொள்வதே பெருந்தவறென்பதை தம் சமயம் விட்டுப் போன முதியவரான அப்பர் பெருமானை சுண்ணாம்புக்காளவாயில் சுட்டெரித்தும், கல்லைக் கட்டிக் கடலில் எறிந்தும், ஆனைகளை விட்டு மிதிக்க
வைத்தும் பார்த்த நிகழ்வுகள் மெய்ப்பிக்குமாறு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டேயுள்ளன. //

அதாவது சமணர்களும் பௌத்தர்களும் தீய காரியங்களை செய்து வந்தது போலவும், சைவர்கள் மடடுமே நீதியோடும் நேர்மையோடும் நடந்து கொண்டதாகவும் இவரின் வாதம் செல்கிறது.

//காரணப் பொருளையும் காரியப் பொருளையும் குழப்பியிருந்த அத்திநாத்திவாதியரை மறக்கருணைமிக அவர் சாடியிருக்கலாம். ஆயின் அந்தச் சமணர், சாக்கியர் கூட்டமும் கூட
தம்மிச்சையால் எதையும் செய்யவில்லையென்பதையும் அவரை அங்ஙனம் இயக்கியிருப்பதும் தம்பிரான் தன் திருவிளையாடலே என்பதையும் ஐயந்திரிபறத் திருமுறையிலேயே
பதிவு செய்துள்ளார். //

அதாவது சமணர்களும் பௌத்தர்களும் தவறான பாதையில் இருந்தது அவர்களின் சொந்த புத்தியினால் இல்லையாம். கடவுளின் கிருபையினால் அவர்கள் தவறான வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். அவர்களை நேர்வழிப் படுத்த சைவர்கள் சமணர்களை கழுவிலேற்றியதும் கடவுளின் கிருபையினால் என்று மறைமுகமாக சொல்கிறார்.

//துறவுக்கோலமின்றி முக்தியில்லை என்ற பௌத்தர்தம் கோட்பாடே அதன் வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம். //

பௌத்த மதம் வீழ்ந்ததற்கு அந்த மதத்தின் கொள்கைகள்தான் காரணம் என்கிறார். சைவர்கள் பௌத்தர்களை கொடுமைப்படுத்தியதாக மேலே சொல்லப்பட்டிருக்கும் அனைத்து ஆதாரங்களும் நேரம் போகாமல் விளையாட்டுக்காக எழுதப் பட்டது என்கிறாரா ஜாவா குமார்?

//அசோகர் காலத்தில் மீன்பிடிக்கும் தொழிலையே ban செய்து அவர்களைத் தீண்டத்தகாதவர்கள் ஆக்கி விட்டதாகச் சொல்வார்கள்.//
R.Sambath

தீண்டத்தகாதவர்கள் இவ்வாறு உருவாகியிருக்க நேசகுமாரோ இந்தியாவில் தீண்டாமை தோன்ற இஸ்லாம்தான் காரணம் என்கிறார்.

//திரு.குமார் அவர்களின் தமிழ்நடை அற்புதம். ஆனால் எனக்கு பல இடங்களில் சுத்தமாக புரியவில்லை. இன்னும் சற்று எளிமையாக எழுதியிருக்கலாம்.//
R.Sambath

இப்படி புரியாமல் எழுதினால் படிப்பவர்களால் கேள்வி கேட்க முடியாது அல்லவா?எல்லாம் வசதிக்காகத்தான்.

//கமலஹாசனொரு வெட்கங்கெட்ட மூன்றாந்தர copy cat நடிகன்,பொய்களை விற்றுப்பிழைக்கும் கீழ்த்தர ஜன்மம். அவனுக்கு தெய்வீக ஆண்டாள் கூட தெருகூவல் வியாபாரி வாலி போல கேவலம் சினிமா பாட்டு எழுதுகிறவர்தாம். ஹே ராம் டைட்டிலில் சினிமா பாடல்கள் எழுதியவர் வரிசையில் திருவில்லிபுதூர் ஆண்டாள் என போட்டு அரிப்பை தீர்த்துக்கொண்ட இழிபிறவி அந்த கமல்ஹாசன் என்கிற சாக்கடை விலங்கு. (சாக்கடை விலங்குகள் மன்னிக்கவும்)//
-Aravindhan Neelagandan

கமலஹாசனும் ரஜினியைப் போல் ரிஷிகேஷ், ஆஸ்ரமம், ருத்திராட்சக் கொட்டை, சனாதனத்தை வளர்க்க தன்மனைவி மூலம் ஆஸ்ரமப் பள்ளி என்றெல்லாம் புரோகிதத்துக்கு வக்காலத்து வாங்கியிருந்தால் அரவிந்தன் பார்வையில் உயர்ந்திருப்பார். தொழில் தவறாக இருந்தாலும் அதில்வரும் வருமானத்தை ஏழை மாணவர்களின் படிப்பு செலவுக்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கி பல நல்லறங்கள் செய்து வருபவர் கமலஹாசன். எனவே கமலஹாசன் அரவிந்தனுக்கு வேண்டப்படாதவராகத்தான் இருப்பார்.இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

// ஏற்கனவே 'இந்துக்களின் இறை இல்லம் காபா' என்பதாக கூறி வாங்கிக்கட்டிக்கொண்ட சுவனப்பிரியனும்//

நான் வாங்கிக் கட்டிக் கொண்டேனா?

அடக் கடவுளே!

நான் கேட்ட கேள்விகளுக்கு ஆதாரத்தோடு பதில் சொல்லத் தெரியாமல் தத்துபித்தென்று பதில் என்று கொடுத்து விட்டு ஓடியது யார் என்று பதிவை தொடர்ந்து படித்தவர்களுக்கு தெரியும்.

suvanappiriyan said...

காஞ்சிபுரம்!

காஞ்சிபுரத்தில் முக்கியமானவைகளாகக் கருதப்படும் எல்லாவற்றிலும் காமாட்சி அம்மையார் கோயில்ஒன்றாகும்.

'காமாட்சி அம்மன் கோயில் ஆதியில் பௌத்தரின் தாராதேவி ஆலயம். இவ்வாலயத்தில் பல புத்த உருவங்கள் இருந்தன.'
-மயிலை சீனி வேங்கடசாமி, பௌத்தமும் தமிழும், பக்கம் ஐம்பத்து ஐந்து.

'ஸ்ரீ ஆச்சாரியாள் பௌத்தமத நிரஸனம் செய்து வேத மதத்தை நிலை நாட்டிக் காஞ்சியில் ஷண்மத ஸ்தாபனம் செய்தபோது 'சத்தி' மதத் தலைமை ஸ்தாபனமாகப் பிரதிஷ்டை செய்ததே இந்தக் காமாட்சி அம்மன் கோவில் ஆகும்.'
-எம்.கே.ஸ்ரீநிவாசன்,காஞ்சிக் கோவில்கள், காஞ்சிபுரம், பக்கம் முப்பத்தது ஐந்து.

காஞ்சிபுரத்திலுள்ள 'புத்தர் கோவில் தெரு' இப்போது 'காமாட்ஷி அம்மன் சந்நிதித் தெரு' என்ற பெயரைப் பெற்றிருக்கிறது.
-சோமலெ,செங்கற்பட்டு மாவட்டம்,சென்னை, 1963, பக்கம் நூற்று முப்பத்தொன்பது.

suvanappiriyan said...

மாசிலா!

//வாழ் நாளில் எதைவேண்டுமானாலும் மறைத்துவிடலாம், மறந்தும்விடலாம். அனால், உண்மைகளையும் சரித்திரத்தையும் ஒருபோதும் எவராலும் மறைக்கவும், மறக்கவும் முடியாது. உலகத்தின் எந்த மூலைக்கு ஓடினாலும் உன் சரித்திரம் உன்னை விடாமல் துரத்தி துரத்தி பிடிக்கும். என்றாவது ஒரு நாள் கட்டாயம் அகப்பட்டுக்கொள்வாய்.//

அழகாக அனுபவித்து சொல்லப் பட்ட வார்த்தைகள். உங்களின் ஆதங்கமும் வேகமும் புரிகிறது. அதற்காக ஒருமையில்……….. என்றெல்லாம் சொல்வதை தவிர்த்திருக்கலாமே!இனி எழுதும் போது நண்பர்கள் இது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்துக் கொள்ளவும்.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

------------------------------
சுல்தான்!

//Declaring the Buddha as ninth avatara of Vishnu, by the Brahmanic Puranas, was meant to cause confusion in the minds of people with the result that Buddhism came to be treated as a "heretical" and "aesthetic" branch of Brahmanism//

பவுத்தம் சம்பந்தமாக கருத்தை இங்கு பதித்தமைக்கு நன்றி! தொடர்ந்து பின்னூட்டம் இடுவதற்கும் நன்றிகள்.

--------------------------------

கல்ஃப் தமிழன்!

//post soon!!
பதிவுகளைச் சான்றுகளின் அடிப்படையில் எழுதுவதற்குப் பாராட்டுகள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

ஒரு தலித் குடும்பம் மீது ஏவி விடப்பட்ட, அதிர்ச்சிக்குள்ளாக்கும் இந்த அராஜக வன்முறை குறித்து குமுதத்தில் வாசித்தேன். மனதை மிகவும் பாதித்தது !

மகாராட்டிர மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் கயர் லாஞ்சி. அங்கே தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பய்யாலால் குடும்பத்தினர் தங்களுக்குச் சொந்தமான சிறிய நிலத்தில் விவசாயம் செய்து கௌரவத்துடன் வாழ்ந்து வந்தனர். ஆனாலும் பெரும்பான்மையாக இருந்த 'உயர்த்தப்பட்ட' சாதியைச் சேர்ந்த கயவர்கள் அக்குடும்பத்தை பல விதங்களிலும் கொடுமைக்கு உட்படுத்தி வந்தார்கள். பய்யாலாலுக்கு ஆதரவாக சித்தார்த் என்பவர் உதவி செய்ய , அந்த நபர் ஒரு நாள் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டிருக்கிறார். அப்போது விதைக்கப்பட்டது, அக்குடும்பத்தினர் சந்திக்கவிருந்த பயங்கரத்தின் விதை !

காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாருக்கு பய்யாலால் குடும்பத்தினர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள். அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்தது தான் வன்கொடுமையின் உச்சம் !! பய்யாலால் கண் முன்னே அவருடைய மனைவி, மகள் மற்றும் இரண்டு மகன்களை ஊரைச் சேர்ந்த 'உயர்த்தப்பட்ட' சாதியைச் சேர்ந்த 'தெரு நாய்கள்' தெருவில் இழுத்துச் சென்று, நிர்வாணமாக்கி பயங்கரமாக அடித்து நொறுக்கியிருக்கிறார்கள். அண்ணனையும், தங்கையையும் எல்லார் முன்பும் உடலுறவு கொள்ளச் சொல்லி நிர்பந்தம் செய்திருக்கிறார்கள் ! அவர்கள் மறுக்க, பெண்களின் அந்தரங்க உறுப்புகளில் குச்சிகளால் துளைத்துச் சித்திரவதை செய்திருக்கிறார்கள்.

பிறகு, ஏறக்குறைய அந்த கிராமத்திலிருந்த அத்தனை 'உயர்த்தப்பட்ட' சாதி ஆண் மிருகங்களும் தாயையும், மகளையும் பகிரங்கமாக வன்புணர்ச்சி செய்து, நால்வரையும் அடித்தே கொன்று போட்டார்கள். உடல்களை ஒரு கால்வாயில் போட்டு விட்டு ஊரே கை கழுவியிருக்கிறது ! இத்தனை கொடூரங்களும் காட்டுமிராண்டி கூட்டத்தின் வெறியாட்டத்திற்கு குலை நடுங்கிப் போய் ஓளிந்திருந்த பய்யாலாலின் கண் முன்னே நடந்திருக்கிறது. காவல் துறையும் பெரிதாக நடவடிக்கை ஒன்றும் எடுக்கவில்லை.

ஊடகங்கள் மெதுவாக விழித்துக் கொண்டு இந்த அநியாய, அக்கிரம சம்பவத்தை ரிப்போர்ட் செய்த பிறகு, அங்கு பெரிய போராட்டம் வெடித்திருக்கிறது. ஆனாலும், பல குற்றவாளிகள் தப்பித்திருக்கிறார்கள். இன்று தனிமரமாய் நிற்கும் பரிதாபத்துக்குரிய பய்யாலால், சுதந்திரமடைந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் நம் நாட்டில் நிலவும் காட்டுமிராண்டித்தனமான சாதி வெறிக்கு உதாரணமாய் கதறுகிறார் !

கீழ்வெண்மணிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசமில்லை. உலக அரங்கில் நம்மை தலை குனிய வைத்திருக்கும் சம்பவம் இது.

நன்றி: குமுதம்

டெயில் பீஸ்: இது போன்ற, தாழ்த்தப்பட்டவர் மீதான, தினம் ஓர் அராஜக வன்கொடுமை, நாட்டின் ஏதோ ஒரு மூலையில் நடந்த வண்ணம் இருக்கிறது ! நாமும் செய்தியை வாசித்து விட்டு, உருப்படியாக ஒன்றும் செய்ய முடியாமல், சாதி/மதம் குறித்து தினம் இணையத்தில், பயனில்லாத வகையில், தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான விஷயம் ! தீண்டாமை நிலவும் ஏதாவது ஒரு தமிழ்நாட்டு கிராமத்தில் விழிப்புணர்வு ஏற்படவும், தாழ்த்தப்பட்டவர் நல்வாழ்வு பெறவும், கூட்டாக நாம் பங்களிக்க முடியும் என்று தோன்றுகிறது.. எவ்வாறு செய்யலாம் என்று நீங்கள் கூறுங்கள் !!!

எ.அ. பாலா

Thanks Mr Bala

மாசிலா said...

படிப்பவர் யாராக இருப்பினும் குற்றம் புரிந்தவர் இருப்பின் அவரை விழிப்புணர்வு அடையவைக்கும் நோக்குடன் எழுதப்பட்டதே என் "நீ" எனும் ஒருமை நிலை.
வஞ்சகர்களின் கொலைவெறி ஆட்டங்களை வெளிச்சம்போட்டு காட்டிய உங்களை வணங்குகிறேன். அழிந்தது என் இனத்தினரே!
தேவை விழிப்புணர்வு!
நன்றி!

suvanappiriyan said...

அரவிந்தன் நீலகண்டன்!

//அடுத்தநாள் திரு.சுவனப்பிரியன் இதையே தன் பதிவில் எழுதியிருக்கிறார். அனானியாக எழுதியது அவர்தான் எனில் என் பதிவில் தன் பேர் போட்டே தன் கருத்தை எழுதியிருக்கலாம். //

அந்த அனானி நான்தான் என்று வழக்கமான ஒரு பொய்யை சொல்லியிருக்கிறீகள். என் கருத்தை வைப்பதாக இருந்தால் அதை என் பெயரிலேயேதான் வைப்பேன். அனானி பெயரில் வருவதற்கு எந்த அவசியமும் இல்லை என்றும் சொல்லிக் கொள்கிறேன்.

//நூல்களிலெங்கும் சமணருக்கு எதிராக கூறப்பட்டிருக்கும் வன்மையான நிகழ்வு என்பது சமணர் கழுவேறிய சம்பவமே ஆகும். இதற்கு கல்வெட்டு ஆதாரமோ அன்றி சமண இலக்கிய ஆதாரமோ கிடையாது என்பதனை கணக்கில் எடுக்க வேண்டும். மேலும் அவ்வாறு கழுவேற்றப்பட்டதாக கூறப்படுவோரும் தாமகவே கழுவேறியதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா அல்லது வலுக்கட்டாயமாக ஏற்றப்பட்டதாக சைவ இலக்கியங்கள் கூறுகின்றனவா என்பது அடுத்த கேள்வி.//
-Aravindhan Neelagandan

ஒரு வரலாற்று சம்பவத்தை கல் வெட்டில் பொதித்திருந்தால்தான் ஒத்துக் கொள்வேன் என்பது எந்த வகை நியாயமோ எனக்குத் தெரியவில்லை. இங்கு நான் பதிவில் குறிப்பிட்டது ஏதோ ஓரிருவர் அல்ல. பல வரலாற்றாசிரியர்கள் சமணர்கள் கழுவிலேற்றிக் கொல்லப்பட்டதை ஆதாரத்தோடு விளக்குகிறார்கள். எந்த ஒரு மனிதனும் தன் உயிரை சித்திரவதைக்கு உடபடுத்தி தானாகவே கழுவிலேறி மாய்த்துக் கொள்ள விரும்ப மாட்டான். ஓரிருவர்என்றாலும் ஒத்துக் கொள்ளலாம். ஆனால் இங்கு சொல்லப் படுவதோ பல ஆயிரம் சமணர்கள்.

மேலும் பல ஆதாரங்களையும் பார்ப்போம்.

கழுகு மலை!

'அரைமலை' எனும் பெயருடைய 'கழுகு மலை' தூத்துக்குடி மாவட்டத்திலுள்ளது. கழுகுமலையின் தென்புற மலைச் சரிவில் முக்குடையின் கீழ் உள்ள சமண முனிவர்களின் சிலைகள் அறுபதுக்கும் மேற்பட்டவை செதுக்கப்பட்டுள்ளன. ஒரு பெரிய சமண சிலை மாடத்தினுள் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சமணர்கள் சிறப்பாக வழிபாடு செய்தனர். சமண சித்தாந்தமும் போதிக்கப்பட்டது.
-தி.இராசமாணிக்கம், நெல்லைக் குடைவரைக் கோவில்கள், பக்கம் முப்பத்து நாலு,முப்பத்து ஐந்து.

'அரைமலை' என்று அழைக்கப் பட்ட மலையிலும் சமணர்கள் கழுவேற்றப் பட்டனர். அதனால் இவ்வூர் கழு (கு) மலை எனப் பெயர் பெற்றது பின்னால் மருவி கழுகுமலையானது என்றும் கூறப்படுகிறது.'
-இளசை.கு.பக்தவத்சலம், கழுகுமலைத் தல வரலாறு,கோயிற்பட்டி, 1972, பக்கம் எட்டு.

மதுரையில் பாண்டிய நாட்டு அமைச்சர் குலச்சிறையார் அரசப் பணியாளர் என்ற முறைப்படி கழுத்தறிகளை நாட்ட ஏற்பாடு செய்கின்றார்.
-ந.சுப்பு ரெட்டியார், ஞானசம்பந்தர், சென்னை, 1986, பக்கம் இருநூற்று இருபத்து மூன்று.

அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர்.
-கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.

கழுவேற்றுதல் என்பது அன்றைய சைவர்களின் அரச நீதி என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார்.தன் வாழ்நாளை இந்துமத பிரச்சாரத்துக்கு அர்ப்பணித்துக் கொண்ட மரியாதைக்குரிய கிருபானந்த வாரியார் சொல்வதை நம்புவதா? 'ஆர்.எஸ்.எஸ் ஒரு வன்முறை இயக்கமல்ல'என்று அதன் புகழ் பாடி வரும் அரவிந்தன் நீலகண்டனின் வார்த்தைகளை நம்புவதா என்பதை பதிவைப் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.

//எனக்கு என்ன வருத்தம் என்றால் தமிழ்நாட்டுச் சைவர்களை விட, ஈழத்துச்சைவர்கள் தங்களை சைவர்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்கிறார்கள். தமிழ்நாடு
போலில்லாமல் பாடசாலையில் தேவாரம் திருவாசகம் இவற்றை எல்லாம் படித்தும் இருக்கிறார்கள். அவர்கள் யாருமே இதுபோன்ற அவதூறுகளுக்கு விளக்கம் தர
முன்வருவதில்லையே. ஏன்? //

எப்படி வருவார்கள்? சைவர்களுக்கு எதிராக ஆதாரம் ஒன்றா? இரண்டா? ஏதோ சமாளிக்கலாம் என்பதற்கு. ஓராயிரம் சான்றுகளல்லவோ நம் சைவருக்கு எதிராகத் திரும்பியிருக்கிறது.! :-((

suvanappiriyan said...

காஞ்சி காமாட்சி!

“scholars have for long opined that the idol now worshipped as Sankaracharya in the present Kamatchi Temple, originally represented the Buddha.”
'காமாட்சியம்மன் ஆலயமே பௌத்தர் கோவிலாக இருந்திருக்க வேண்டுமென்று பலர் கருதுகிறார்கள்.'
-k.r.venkatraman, Devi Kamatchi in kanchi, Tirunelveli, 1973, Page 39.
-எம் ராதாகிருஷ்ண பிள்ளை, தமிழ் வளர்த்த கோவில்கள், சென்னை,
1989, Page 50,51.

கச்சீஸ்வரர் கோவில்!

காஞ்சிபுரத்தில் உள்ள கச்சீஸ்வரர் கோவிலின் முன் கோபுரத்தின் அஸ்திவாரக் கல் கட்டிடத்தில் சில புத்த உருவங்களும் உள் மண்டபத்திலும் சில கல் தூண்களிலும் புத்த உருவங்கள் இப்போதும் இருக்கின்றன. இவைகளால் இந்த ஆலயம் பூர்வத்தில் புத்தர் கோவிலெனத் தெரிகிறது.
-பௌத்தமும், தமிழும், பக்கம் ஐம்பத்து மூன்று, ஐம்பத்து நான்கு.

ஏகாம்பரேஸ்வரர் கோவில்!

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் வெளி மதில் சுவர்களில் சில புத்த உருவங்கள் சிற்பமாக அமைக்கப் பட்டிருக்கின்றன. இந்த மதிற்சுவர் விஜய நகர அரசனான கிருஷ்ணதேவராயரால் கி.பி.1509-ல் கட்டப்பட்டது. பழைய புத்தர் கோவில்களை இடித்து அக்கற்களைக் கொண்டு இந்த மதிற்சுவர் கட்டியிருக்க வேண்டும் என்பர் மயிலை சீனி வேங்கடசாமி.
-பௌத்தமும், தமிழும், பக்கம் ஐம்பத்து நான்கு.

ஐயப்பன் கோவில்!

மலையாள நாட்டில் ஐயப்பன் கோவில் என்று வழங்கப்படுவது முற்காலத்தில் பௌத்தக் கோவிலாக இருந்தது.
சாத்தன் என்பது சாஸ்தா என்பதன் திரிபு. சாஸ்தா என்பதும் புத்தருக்கு மற்றொரு பெயர். காவு அல்லது கா என்பது தோட்டம். சாத்தான் காவு என்றால் புத்தரது தோட்டம் என்பது பொருள்.
-பௌத்தமும் தமிழும், பக்கம் எழுபத்து மூன்று.

'புகழ் பெற்ற சாஸ்தா (புத்தமத) கோயிலே அய்யப்பன் கோவிலாக மாற்றப் பட்டது. தர்மசாஸ்தா என்கிற பெயரும், சரணம் என்கிற முழக்கமும் இதனை உறுதி செய்கின்றன.'
-அ.மார்க்ஸ், மசூதிக்குப் பிறகு மாதா கோவிலா?, புதுவை, 1994, பக்கம் இருபத்தைந்து.

suvanappiriyan said...

ஒரு அரிய நிகழ்ச்சி!

இன்று இரவு இந்திய நேரம் பத்தரை மணிக்கு (சவூதிநேரம் இரவு எட்டு மணிக்கு) சவூதி சேனல் இரண்டில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இஸ்லாத்தைப் பற்றி எதுவும் தெரியாத நான் இன்று ஓரளவு மற்றவருக்கு எடுத்துச் சொல்லும் அளவுக்கு தேர்வு பெற்றது இப்பள்ளியில் சேர்ந்தவுடன்தான். புதிதாக இஸ்லாத்தில் இணைந்தவர்கள் பல கலாச்சாரத்தைக் கொண்ட மக்கள் எந்த அளவு ஈடுபாட்டோடு இந்த மார்க்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள் என்பதையும் ஆங்கில மொழியில் பார்க்கலாம். நேரம் கிடைப்பவர்கள் பார்த்து பயன் பெறவும்.

suvanappiriyan said...

திருச்சிராப் பள்ளி!

கி.பி.ஐந்தாம் நூற்றாண்டில் 'சிரா' என்ற சமண முனிவரின் கீழ் சீடர்கள் பலரைக் கொண்டு திகழ்ந்தது சிராப் பள்ளி. சமணப் பள்ளியைத் தாங்கி நின்ற மலை இப்பெயரைத் தனக்கும் பெயராக வாங்கியது. 'திரு' என்ற அடைமொழி சேர்த்து திருச்சிராப் பள்ளி எனச் சொல்லத் தொடங்கினர் மக்கள். காலப் போக்கில் மலைக்குப் பக்கத்தில் இருக்கும் ஊருக்கும் இதுவும் பெயராக விளங்கி வருகிறது.
-பெ.கா.அண்ணாமலை, உடைந்த தெய்வங்கள், பக்கம் பதினெட்டு.

இங்கு சமணப்பள்ளியை அமைத்திடவும் தீர்த்தங்கரரை வழிபடவும் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் (கி.பி.615-630) பெரிதும் உதவினான். காலம் கழிந்தது. சமணராக இருந்த மகேந்திரவர்மன் சைவராக மாறிய போது திருச்சிராப் பள்ளியில் இருந்த சமணப்பள்ளியை அழித்தொழித்து அங்கு சிவ ஆலயத்தை எழுப்பினான்.
-ம.ராதாகிருஷ்ணன், தென்னாட்டுக் கோயில்கள்,பாகம் இரண்டு,பக்கம் நூற்று பதினேழு.
-South Indian Inscriptions Vol 1,No 33.

திருச்சி உச்சிப்பிள்ளையார் கோயிலின் பின் பக்கத்தில் இன்றும் சமண முனிவர்களுடைய கற்படுக்கைகளைக் காண முடிகிறது. அந்தப் படுக்கைகளில் சமண முனிவர்களின் பெயர்களும் குறிக்கப் பெற்றுள்ளன. 'சிரா' எனும் பெயருடைய கற்படுகையும் உள்ளது. சமணப் பள்ளி கோயிலானாலும் பெயர் போகாமல் சிராப்பள்ளி என்றே இன்றும் வழங்கப்படுகிறது.
-ச.தண்டபாணி தேசிகர், ஆதினக்கோவில்கள், தருமபுரம், 1949, பக்கம் முன்னூற்று ஆறு.

திருஞான சம்பந்தர் தேவாரத்தில் இதனை 'சிராப்பள்ளி' என்றே குறிப்பிடுவதையும் விஜய நகர மன்னர்கள் காலம் வரை 'சிராப்பள்ளி' என்றே அழைக்கப் பட்டதையும் ஆதிகாலச் சமணச் சின்னங்கள் அங்கு இருந்ததையும் தெளிவுப்படுத்துகிறது.
-தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக் களஞ்சியம், ஐந்தாவது தொகுதி, பக்கம் எழுநூற்று நாற்பத்து ஒன்று.

suvanappiriyan said...

புத்தர் ஆலயங்களில் கொள்ளை!

ஈழ நாட்டில் முதல்சேனன் (கி.பி.831-851) ஆட்சி புரிந்து கொண்டிருந்த காலத்தில் பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் படையெடுத்துச் சென்றான்.பல நகரங்களைக் கொள்ளையிட்டான். அத்தோடு நின்று விடவில்லை. ஈழத்திலிருந்த பொன்னாலான புத்தர் சிலைகளையும் புத்த விகாரங்களிலிருந்த விலையுயர்ந்த பொருட்களையும் கைப்பற்றி வந்தான் என்று மகா வம்சம் என்ற இலங்கை வரலாற்று நூல் கூறுகிறது.
-K.V.Subramaniya Iyer, Historical Sketches Of Ancient Deccan, 1917,Page 140-141

“The Tamils now ravaged the country Anuradhapura, the beautiful city, was plundered and left desolate. The jewels in the kings place. The golden images which the piety of Kings and Princes had placed in Buddhist Vibaras, the golden statue of Buddha that Mihindu 2.
-L.F.Blaze, A History of Ceylon,clombo,1903,Page 54.

ஈழ நாட்டில் மன்னன் முதல்சேனன் சீமாறன் சீவல்லபனின் தாக்குதலைத் தாக்கு பிடிக்க முடியாத நிலையில் மலேயாவுக்கு ஓடியபோது பாண்டிய நாட்டுப் படையோடு போர் புரிந்த இளவரசன் மகீந்தன் மடிந்தான். பாண்டிய மன்ன்ன் புத்தர் ஆலயங்களிலுள்ள செல்வங்களைக் கொள்ளையிட்டதோடு பொன்னாலான புத்தர் சிலைகளையும் கவர்ந்து சென்றான் என்பதனை இலங்கை வரலாற்று நூலும் தெரிவிக்கிறது.

suvanappiriyan said...

கல் வெட்டு சொல்லும் செய்தி!

'ஸ்வஸ்தி ஸ்ரீ அருளிச் செயல் கொட்டாறான
மும்முடி சோழ புரத்து நாகர் கோயிலிற்
பள்ளி உடைய குணவீர பண்டிதனும்,
கமல வாகன பண்டிதனும் கொட்டாற்று
நாகர்க்கும் நாகராசாவுக்கும் உச்சிச்சந்தப்
பூசைக்கு நாள் ஒன்றுக்கு அமுதுபடி
நானாழி ஆகவும் திரு நந்தா விளக்கு
இரண்டாகவும் நடாத்திக் கொண்டு
பொதும்படி கற்பித்து தொண்ணூற்று
ஆறாமாண்டு கார்முதலுக்குப் பள்ளிச்
சந்தமாக விட்டுக் கொடுத்த நிலமாவது...'
-திருவிதாங்கூர் தொல்பொருள் ஆராய்ச்சித் தொடர் வெளியீடு, பகுதி ஆறு, பக்கம் நூற்று அறுபத்து மூன்று

இதில் காணப்படும் குணவீர பண்டிதன் கமலவாகன பண்டிதன் ஆகிய பெயர்களே இவர்கள் சமணர்கள்தான் என்பதைத் தெரிவிக்கப் போதுமான ஆதாரமாகும். இந்து சமய ஆலயங்களிக்கப்படும் நில புலன்களை மான்யம் எனவும் பிற சமய ஆலயங்களுக்கு அளிக்கப்படும் நன்கொடைகளைப் பள்ளிச் சந்தம் எனவும் குறிப்பிடுகிறோம். இந்த கல்வெட்டு ஒன்றே இது ஒரு சமணப் பள்ளியாகும் என்பதற்கும் பின்னர் இந்து ஆலயமாக மாற்றப் பட்டிருக்கிறது என்பதற்கும் தக்க சான்றாகும்.
-எஸ். பத்மனாதன்,நாகராஜர் ஆலயம், நாகர்கோவில், 1969, பக்கம் பதின்மூன்று.

நாகராஜர் கோவில் தூண்களில் சமண சமயத் தீர்த்தங்கரர்களான பார்சவநாதரும், மகாவீரரும் தவக் கோலத்தில் நின்றும் அமர்ந்தும் காட்சி தருகின்றனர்.
-எஸ். பத்மனாபன்,குமரிமாவட்டக் கோவில்கள்,1970,பக்கம் ஐம்பத்து மூன்று.

கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை உள்ள இடைப்பட்ட காலத்தில் நாகராஜர் கோவில் இந்து சமயக் கோவிலுக்குரிய மாற்றங்களைப் பெற்றிருக்க வேண்டும்எனத் தெரிகிறது.
-அ.கா.பெருமாள், குமரி மாவட்ட வரலாறு, நாகர் கோவில்,1995, பக்கம் நூற்றி மூன்று.

அரவிந்தன் நீலகண்டன் கல்வெட்டைக் காட்டினால்தான் ஒத்துக் கொள்வேன் என்று ஒரு வாதத்தை வைத்தார். அவருக்காக கல்வெட்டு சான்று ஒன்றையும் தந்துள்ளேன். வேறு ஏதும் ஆதாரமான விபரங்கள் கிடைத்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்குமாறு நண்பர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

suvanappiriyan said...

மாசிலா!

பாதிக்கப் பட்டது உங்களின வழித்தோன்றல்கள் மட்டும் அல்ல. என்னுடைய மூதாதையர்களும் சமணர்களில் இருந்திருக்கலாம். ஏனெனில் சமணம் திருச்சி, தஞ்சைப் பகுதிகளில்தான் அக்காலத்தில் செழித்து வளர்ந்திருந்தது. அதிகாரத்தில் இன்று வரை கோலோச்சுபவர்களால் தமிழகத்தின் வரலாறு மறைக்கப்பட்டது. நீங்கள் சொல்வது போல் உண்மை என்றாவது வெளிவந்தே தீரும். அது தான் தற்போது ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்த கட்டுரையில் வந்திருக்கும் ஆதார நூல்கள் யாவும் தமிழக நூலகங்கள் அனைத்திற்கும் சென்றடைய வேண்டும். மலிவு விலைப் பதிப்பாகவும் செல்வந்தர்கள் வெளியிட வேண்டும். இது போன்ற வழிகள் மூலமே சாதாரண மக்களையும் இந்த உண்மைகள் சென்றடைய முடியும்.

ஸயீத் said...

\\வஞ்சகர்களின் கொலைவெறி ஆட்டங்களை வெளிச்சம்போட்டு காட்டிய உங்களை வணங்குகிறேன்.\\

சகோதரர் மாசிலா அவர்களே இஸ்லாத்தைப் பொருத்தவரை வணக்கம் என்பது இறைவன் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்றும் மற்ற யாராக இருந்தாலும் (இறைத்தூதராக இருப்பினும்) அவரை வணங்கக்கூடாது என்பதுமே முக்கிய கோட்பாடு என்பதை அறிந்து கொள்ளுங்கள், நீங்கள் "நான் உங்களைப் பாராட்டுகிறேன்" என்று கூறினாலே போதுமானது.

இதுபோல் கண்டவரையெல்லாம் வணங்குவதால்தானே நம்மை எல்லோரும் எளிதாக ஏமாற்ற முடிகிறது, நீங்களும் ஏமாற்றப்பட்டோரில் சேர வேண்டுமா?.

suvanappiriyan said...

I agree with you Mr Saeed.

suvanappiriyan said...

Question : ஏகத்துவத்தை நன்கு உணர்ந்தாக கூறும் தாங்கள் இன்னும் உருவ வழிபாடு செய்கிறீர்களா. பிறப்பின் அடிப்படை யில் பிராமணர்கள் உயர்ந்தவர்கள் என்ற கொள்கையை ஒப்புக் கொள்கிறீர்களா?

ஆத்மராம்: மனுநீதி அடிப்படையிலான சாதி அமைப்பு முறை நல்ல நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நாளடைவில் அதன் நோக்கம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்று உலகில் பிராமணர்கள் என்று கூறிக் கொள்ளும் எவரும் மனுநீதி குறிப்பிடும் பிராமணர் ஆகமாட்டார்கள். எனவே பிராமணர் என்று யாரும் இல்லை. பிறப்பின் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு கூடாது. உருவ வழிபாடு ஆன்மீகத்தின் ஓர் அங்கமே! சாதாரண மக்கள் இறைவனை அடைவதற் கான ஒரு எளிய முயற்சிதான். எப்படி எல்லா நதிகளிலும் கடலில் சென்று கலக்கிறதோ அது போன்றே வழிபாட்டு முறை பலவாறாக இருந்தா லும் கடவுளை அடைவதே நோக்கமாகும். நான் உருவ வழிபாட்டை தவிர்த்து வருகிறேன். உருவமற்ற வழிபாட்டு முறை ஆன்மீகத் தின் உயர்ந்த படித்தரம் எனினும் அதனை எல்லோராலும் பின்பற்ற முடியாத நிலையே உள்ளது. ஒவ்வொருவரும் அதை உணர்ந்து திருந்தினால்தான் தடுக்க முடியும். நாளடை வில் அது குறைந்து விடும். படித்தவர்களால் மட்டுமே அது சாத்தியம். நான் படித்தவன் என்பதால், இறைவன் நாடினால் இஸ்லாத்தை முழுமையாக கடைபிடிக்கக் கூடியவனாக மாறுவேன்... "என்றார்.

அவரது நேர்வழிக்காக நாமும் பிரார்த்திப்போமாக!

priyamudanprabu said...

இந்து மதமும் தேவையில்லாதது , இஸ்லாமும் தேவையில்லாது

இந்த பித்த மதங்களைவிட்டு மனிதனாக இருக்க முயற்ச்சியுங்கள்

suvanappiriyan said...

திரு பிரபு!

//இந்து மதமும் தேவையில்லாதது , இஸ்லாமும் தேவையில்லாது

இந்த பித்த மதங்களைவிட்டு மனிதனாக இருக்க முயற்ச்சியுங்கள்//

இந்து மதத்தை விட்டு விட சொல்கிறீர்கள். அது உங்களின் தனிப்பட்ட கருத்து. அதே போல் இஸ்லாத்தையும் விட்டுவிடுமாறு எனக்கு ஆலோசனை வழங்குகிறீர்கள். என்ன காரணத்தினால் நான் இஸ்லாத்தை விட வேண்டும் என்பதை விளக்கினால் நன்றாக இருக்கும். ஒருவன் மனிதனாக வாழ்வதற்கு இஸ்லாம் எந்த வகையில் தடையாக இருக்கிறது என்பதையும் சற்று விளக்குங்களேன்.

priyamudanprabu said...

உலகம் முழுக்க நடக்கும் பல போர்களுக்கும் அப்பாவிமக்கள் உயிர் இழப்புக்கும் காரணம் மதம்தான்
அதில் எந்த மதமும் விதிவிளக்கல்ல

மதம் வேண்டாம் மனிதனை நேசி என்பது என் கருத்து
உங்கள் மதத்தை நான் விட சொல்லவில்லை

இனி உங்கள் வலைப்பூ பக்கம் நான் வரமாட்டேன்


இது வேலயற்ற வேலை என தோனுது

என் கருத்து உங்களை வருத்தமடைய செய்தால்/செய்திருந்தால் மன்னிக்க

மதம் மனிதனின் முதல் எதிரி

கடவுளை சுற்றி போட பட்ட வேலிதான் மதம்
சிலர் இங்கே வேலியை கடவுளாக்கி விட்டார்கள்

அயோக்கியர்களின் முதல் ஆயுதம் மதம்

suvanappiriyan said...

திரு பிரபு!

//உலகம் முழுக்க நடக்கும் பல போர்களுக்கும் அப்பாவிமக்கள் உயிர் இழப்புக்கும் காரணம் மதம்தான்
அதில் எந்த மதமும் விதிவிளக்கல்ல//

மதமோ மார்க்கமோ காரணமல்ல. அந்த மதத்தையும் மார்க்கத்தையும் சரியாக விளங்கிக் கொள்ளாததால் வரும் விளைவே இந்த சண்டைகள். இந்து மதத்தை படித்து தெரிந்துதான் மோடி முஸ்லிம்களை கொன்றாரா? அவரின் அறியாமை. அதே போல் தாலிபான்கள் இன்று செய்யும் செயல்களுக்கு இஸ்லாம் எப்படி காரணமாக முடியும்? எனவே மக்களின் அறியாமையை களைய முயற்சச்சிக்க வேண்டுமேயொழிய மதமே தேவையில்லை என்று ஒதுக்குவது பல புதிய பிரச்னைகளையே உண்டாக்கும்.

//இனி உங்கள் வலைப்பூ பக்கம் நான் வரமாட்டேன்//

என்ன இப்படி கோபித்துக் கொள்கிறீர்கள் பிரபு! தொடர்ந்து வாருங்கள். கருத்துக்களையும் கூறுங்கள்.

//கடவுளை சுற்றி போட பட்ட வேலிதான் மதம்
சிலர் இங்கே வேலியை கடவுளாக்கி விட்டார்கள்//

அழகாக சொல்லியிருக்கிறீர்கள். நம் நாட்டில் பல தெய்வ வணக்கம் வந்ததே மதப் பெரியோர்களை தெய்வ நிலைக்கு உயர்த்தியதுதான். முஸ்லிம்களிடமும் தர்ஹாவை வணங்கும் வழக்கம் வந்ததும் இப்படித்தான். தர்ஹா வணக்கத்துக்கும் இஸ்லாத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இஸ்லாத்தின் பெயரால்தான் அனைத்து கூத்துக்களும் அரங்கேறுகின்றன.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள்.

Anonymous said...

மதம் ஏன் ஒரு மனிதனுக்கு தேவை கவனபிரியன்

Anonymous said...

மதம் ஒரு மனிதனுக்கு தேவையா காரணங்களை கூறவும்

A.Anburaj Anantha said...

சமண பௌத்த மதங்கள் நடைமுறைக்கு சாத்தியமற்ற நிா்வாணம் அனைவருக்கும் சைவ உணவு கொல்லாமை கொள்கையை மிகக் கடுமையாகவும் முட்டாள்தனமாகவும் சமூக வாழக்கை பாதிக்கும் அளவிற்கு பின்பற்ற கட்டாயப்படுத்தப்பட்டதனாலும் மேறபடி மதங்கள் தங்கள் தகுதியை இழந்து அழிந்து போயின என்பது உண்மை. இது ஒரு இயல்பான சமூக பாிணாமம் என்பதை அனைவரும் உணர வேண்டும். தகுதியான கருத்துக்கள்தான் காலத்தை வென்று நிற்கும்.சமண பௌத்தம் போதித்த அருமையான சிறந்த கருத்துக்களை இந்தியாவின் பிற மக்கள் -இந்துக்கள் - தங்கள் வாழ்வில் முழுமையாக ஏற்றுக் கொண்டாா்கள் என்பது உண்மை. அந்த வகையில் சமணமும் பௌத்தமும் அழிககப்படவில்லை. சமூக பாிணாமத்தில் அவைகளால் அடுத்த படிக்கு ஏற இயலவில்லை.
சமண பௌத்த மடங்களில் நிலவிய மிதமிஞ்சிய ஆடம்பரம் ஒழுக்ககக் கேடுகளும் அவைகளின் அழிவிற்கு பெரும் காரணம். குறிப்பாக இந்தியாவில் நுழைந்த துருக்கி மற்றும் அரேபிய காடையா்களின் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணமாகும்.

கெளாதமா் இன்றும் என்றும் இந்துக்கள் மனதில் அருளாளராக அன்பின் பாிபுரணமாக அழியா ஒவியமாக ஒளிவீசி வாழ்ந்து கொண்டிருக்கின்றாா் என்பதை யாராலும் மறுக்க முடியுமா ?
பழத்தை சாப்பிட்டு விட்டோம்.ஜீரணித்து சத்துக்களை உடம்பு ஏற்றுக் கொள்கின்றது. சக்கைகள் மலமாக வெளியேறுகின்றது. சமண பௌத்த மதங்களுக்கு ஏற்பட்டது இதுதான். அவைகள் அழிக்கப்படவில்லை. ஜீரணிக்கப்பட்டது.நாலந்தா மற்றும் தட்சசீல பல்கைலைக்கழகங்களின் அழிவு யாரால் ஏற்பட்டது என்பது அனைவவருக்கும் தொியும்.
சைவ-வைணவ சண்டை சைவ-சமண பௌத்த சண்டைகள் மிகவும் குறுகிய காலங்கள் மட்டுமே அதுவும் மதத்தை வைத்து வயிறு வளா்த்த மக்கள் மத்தியில்தான் இருந்தது.பெரும்பான்மையான மக்கள் 95சதவீத மக்கள் என்றும் மதச்சண்டையில் ஈடுபடவேயில்லை.சைவ-வைணவ சமய வேறுபாடுகளை ஒழிக்க ஏராளமான புனிதா்கள் தோன்றி மேற்படி பிரச்சனைகளை தீா்த்து வைத்து விட்டாா்கள். சமய சமரசம் ஏற்பட்டு விட்டது.

Dr.Anburaj said...

ரி விடுங்கள். விசயத்திற்கு வருவோம். சைவ இலக்கியங்கள் மட்டுமே சமணக் கழுவேற்றலைக் குறித்து குறிப்பிடுகின்றன. அதற்கு (சமண இலக்கியங்களில் அல்லது கல்வெட்டு சாசனங்கள் போன்றவற்றில்) புறச்சான்று கிடையாது. அத்துடன் சமணர்கள் தாமே கழுவேறுவதாகக் கூறினார்கள் என கூறியிருந்தேன். அதனை மறுத்து இல்லை. அவர்கள் கழுவேறுவதாகக் கூறவில்லை சைவ அரச நீதியின் படி சமணர்கள் கழுவேற்றப்பட்டார்கள் என்று திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகளே கூறியுள்ளார் என்பதாக ஒரு ஆதாரத்தை அளித்துள்ளீர்கள். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். நீங்கள் கூறிய இந்த 'ஆதாரத்தின்' தன்மையை உங்களுக்கே காட்டிடுகிறேன். நீங்கள் கூறுகிறீர்கள்.

//அனல்வாது, புனல்வாது புரிந்து தோல்வியுற்ற எட்டாயிரம் சமணர்கள் அரச நீதிப்படி கழுவிலேற்றித் தண்டிக்கப் பட்டனர். -கிருபானந்த வாரியார், சிவனருட்செல்வர், சென்னை 1986, பக்கம் நானூற்று முப்பது.//




இதோ சிவனருட்செல்வர் நூலில் உண்மையில் திருமுருக கிருபானந்த வாரியார் கூறிய வார்த்தைகளை அப்படியே தருகிறேன். நீங்கள் கூறியதற்கும் அதற்கும் இருக்கும் வேறுபாட்டினை நீங்களும் வாசிப்பவர்களும் உணர்ந்து கொள்ளலாம்.

"இந்த வாதில் தோற்றால் தோற்றவர் என்ன செய்வது?" என குலச்சிறையார் கேட்டார். கோபமும் பொறாமையும் கொண்ட சமணர்கள், "வாதில் நாங்கள் அழிவோமாயின் எம்மை இந்த மன்னவன் கழுவினில் ஏற்றட்டும்." என்று கூறினார்கள். ...நீதில் வழுவாத மன்னன் மந்திரியாரை நோக்கி "வாதில் தோற்ற சமணர்கள் முன்னம் ஞானசம்பந்தர் அடியார் குழாத்துடன் தங்கியிருந்த திருமடத்திற்கு தீ வைத்தார்கள். ஆதலின் இவர்கள் ஒப்புக்கொண்டபடி கழுவில் ஏற்றி அரசநீதியை நிலை நிறுத்துக" என்றான்."


இதுதான் திருமுருக கிருபானந்த வாரியார் எழுதியது. இப்போது சொல்லும் ஐயா யார் கூறுவது உண்மை?