Followers

Wednesday, March 22, 2006

தறகொலைகளைத் தடுக்க முடியாதா?

தறகொலைகளைத் தடுக்க முடியாதா?

'நம்பிக்கைக் கொண்டோரே!உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள்! இறைவன் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.' (குர்ஆன் 4;29)

இருதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் செரியன் மறைவு நமக்கு மிகப் பெரும் இழப்பு. அவருக்கு வாழ்க்கையில் என்ன குறை?புகழ் பணம் அனைத்தும் இருந்தும் மனதில் அமைதி இல்லை. மன அழுத்தம் ஏற்பட்டு அதை தீர்க்க வழி தெரியாமல் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சினிமாத் துறையில் ஜீ.வி யைத் தெரியாதவர்கள் இல்லை எனலாம். பணம் புகழ் அழகிய குடும்ப பந்தங்கள் இருந்தும் கடன் தொல்லை என்ற பிரச்னையால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலையை நாடுகிறார். பணம் படைத்த அவரின் உறவினர்கள் நினைத்து இருந்தால் அவரின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் வலம் வரும் அவரை இழந்திருக்கவும் மாட்டோம்.

அதே போல் எங்கள் ஊரை ஒட்டி இருக்கும் அரிசன காலனியை எடுத்துக் கொள்வோம். எங்கள் ஊரை அடுத்து ரயில்வே நிலையமும் உள்ளது. மாதத்துக்கு ஒரு தற்கொலை எப்படியும் இந்த ரயில் நிலையத்தில் காண முடியும்.சமீபத்தில் கூட 40 வயதே ஆன எனக்கு மிகவும் பரிச்சயமான அருள் என்பவரின் உயிர் தற்கொலையில் பிரிந்தது என்று கேள்விப் பட்டு மிகவும் வருத்தம் உற்றேன். என் சிறு வயதிலிருந்தே இது போன்ற தற் கொலைகளை எங்கள் ஊர் ரயில்வே நிலையத்தில் அதிகம் நேரில் பார்த்துள்ளேன..

எங்களோடு ஒன்றாக படித்த எங்கள் உடற் பயிற்சி ஆசிரியரின் மகன் தற்கொலை செய்து கொண்டான். பத்தாம் வகுப்பு தேறிய சமயம் தான் விரும்பிய பாடம் எடுக்க முடியவிலலையே என்ற ஏக்கம் தான் அவனின் தற்கொலைக்கு காரணம். எப்பொழுதும் கல கலப்பாக இருந்த அவனின் உருவம் இனனும் என் மனதை விட்டு அகல மறுக்கிறது.

படித்தவர்கள் அதிகம் வாழும் கேரளாவில் தற்கொலைகள் அதிகம் ஏன் நடக்கிறது? என்ற ஆய்வு மேற் கொண்டனர். அதே போல் முஸ்லிம்கள் அதிகம் வாழும் கோழிக்கோடு, மலப்புரம் மாவட்டங்களில் ஏன் தற்கொலைகள் நடப்பதில்லை என்ற ஆய்வும் மேற் கொள்ளப் பட்டது. ஆய்வின் முடிவில் 'முஸ்லிம்கள் தங்களுக்கு எத்தகைய இழப்பு ஏற்பட்டாலும் 'அனைத்தும் இறைவன் செயல்' என்று சொல்லி விட்டு வேறு வேலைகளைப் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். இந்த இறை நம்பிக்கை யினால்தான் இஸ்லாமிய சமூகத்தில் தற்கொலைகள் நடப்பது மிகவும் அரிதாக இருக்கிறது' என்ற உண்மை வெளிப் பட்டது.

'ஒவ்வொரு வருடமும் ஒரு தடவையோ, இரண்டு தடவைகளோ தாங்கள் சோதிக்கப் படுவதை அவர்கள் உணர மாட்டார்களா? பின்னரும் அவர்கள் திருந்திக் கொள்ளவில்லை. படிப்பினை பெறுவதும் இல்லை.' (குர்ஆன் 9;126)

'ஒவ்வொரு துன்பத்திலுருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான்' (குர்ஆன் 6;64)

உர்வா இப்னு ஜூபைர் என்ற நபித் தோழர் போரில் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அன்றைய தினமே அவருடைய மகன்களில் ஒருவரும் இறந்து விட்டார் என்ற செய்தி சொல்லப் படுகிறது. அப்பொழுது அவர் சொன்னார், 'இறைவா!எல்லாப் புகழும் உனக்கே!எதையும் என்னிடம் இருந்து எடுத்துக் கொண்டால், அதை விட சிறந்ததை எனக்குத் தந்து விடுவாய்.கடுமையான இழப்புகளைக் கொடுத்து என்னை சோதித்து உன்னுடைய பாதுகாவலில் என்னை வைத்திருக்கிறாய்.என் உடம்பில் இரண்டு கால்களும் இரண்டு கைகளும் இருக்க அதில் ஒன்றை மட்டும் எடுத்து என் மேல்கருணை புரிந்தாய். அதே போல் என்னுடைய மகன்களில் ஒருவனை மட்டும் அழைத்துக் கொண்டு மற்ற மூவரையும் என்னுடன் வாழச் செய்திருக்கும் உன் கருணையே கருணை' என்று பிரார்த்தித்தார்.

இப்னு அப்பாஸ் என்ற நபித் தோழர் தன் கண் பார்வையை இழந்த போது சொன்னார் 'இறைவன் என் இரு கண்களின் பார்வையை எடுத்து விட்டாலும் என் இதயமும் மூளையும் அதை விட பிரகாசமடையும். இறைவனை துதித்துக் கொண்டிருக்கும்.என் நாக்கு உறையில் இடப் படாத கத்தியைப் போன்றும் இருக்கும்' என்று சொன்னார். முகமது நபி தன் தோழர்களை எந்த அளவு வாழ்க்கையில் எதிர் நீச்சல் போடக் கூடியவர்களாக மாற்றியிருக்கிறார் என்று வியந்து போகிறோம்.

உலக சுகாதாரக் கழகம் வெளியிடும் அறிக்கையில் 1973-ல் உலகின் மொத்த ஜனத் தொகையில் 3 சதவீதம் பேர் மன அழுத்த்தால் பாதிக்கப் பட்டிருந்தனர் என்று கூறுகிறது. இது 1978-ல் 5மூ மாறியது. அமெரிக்கர்களில் 4-ல் ஒருவர் இது போன்ற மன அழுத்தத்திற்கு ஆளாவதாக புள்ளி விபரம் சோல்கிறது. சிகாகோ நகரில் 1981 -ல் கூடிய மன நல கருத்தரங்கில் நூறு மில்லியன் மக்கள் உலகம் முழுவதும்மன அழுத்தம் அல்லது மன நோய்க்கு ஆளாகிறார்கள் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.அமெரிக்கா ஜப்பான் அய்ரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் தான் இக்குறை அதிகம் காணப்படுகிறது.கடவுள் மறுப்பு கொள்கை இந் நாடுகளில் வளர்ந்ததால் தான் இது போன்ற பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டி இருக்கிறது.

முஸ்லிம்களிலும் ஒரு சிலர் இது போன்ற மன நோயாளிகளை ஏர்வாடி. நாகூர் போன்ற தர்காக்களில் கட்டி வைத்து அவர்களின் நோயை அதிகம் ஆக்குகிறார்கள். ஏர்வாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் மன நோயாளிகள் கரிக் கட்டை ஆனதை நாம் பார்த்தோம். நோயாளிகளின் உயிரையே காப்பாற்றாத அந்த நல்லடியார் நோயை எப்படி குணப் படுத்துவார் என்று ஏனோ இவர்கள் சிந்திப்பது இல்லை. ஏர்வாடியைப் போன்று நாகூரிலும் மற்ற தர்காக்களிலும் கட்டிப் போடப் பட்டிருக்கும் மன நோயாளிகளை அரசாங்கமே தன் பொறுப்பில் எடுத்து மன நல காப்பகத்தில் சேர்த்தால் பலரின் வாழ்வு பிரகாசமடையும்.

பைபிளிலும் இந்து மத வேதங்களிலும் தற்கொலை செய்து கொள்வது பாவம் என்றே வருவதாக நினைக்கிறேன்.எது நடந்தாலும் படைத்த இறைவன் மேல் பாரத்தைப் போட்டு விட்டு எதிர் நீச்சல் போடக் கற்றுக் கொண்டு விட்டால் நோடிப் பொழுதில் நம் மனச் சுமை இறங்கி விடும். இது போன்ற பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி மன நல மருத்துவரின் ஆலோசனையையும் கேட்டு வருவது நல்லது.

'கடவுளே உனக்கு கண் இல்லையா? என் மகன் தானா உனக்கு கிடைத்தான்' என்று இறைவனை திட்டுவதிலிருந்தும்

'கடவுள் என் வாழ்வில் கடன் காரன்:
கவலைகள் தீர்ந்தால் கடன் தீரும்'
என்று த்ததுவங்கள்பேசித் ்் திரியாமலும்

'கடவுளை மற: மனிதனை நினை' என்று சொல்லாமல், 'கடவுளையும் நினை, மனிதனையும் நினை' என்று சொல்வோமாக என்று கூறி இப் பதிவை முடிக்கிறேன்.

2 comments:

Jafar ali said...

இந்த பின்னூட்ட பதிவு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு என்னுடைய நம்பிக்கை (ஈமான்) வலைதளத்தில் பதிந்ததது. தங்களுடைய பதிவை ஒட்டிய செய்தி என்பதால் இங்கு பின்னூட்டமிடுகிறேன்.

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

என் இனிய மார்க்கத்தின் சகோதரர்களே...

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வுடைய தூதரின் நடைமுறைகளை உறுதியாக பற்றி பிடித்து வாழ்கின்ற மனிதனின் உள்ளத்தில்; தன்னம்பிக்கையும், சொல்லிலும், செயலிலும் திடமான உறுதிப்பாடும், உலக வாழ்வில் அல்லாஹ்வை தவிர்த்து வேறு எதற்கும் அஞ்சாத தன்மையும் நிறைந்திருக்கும். இத்தகையவனின் உள்ளம்; அவனுக்கேற்படும் உலக வாழ்வியல் சார்ந்த அத்தனை பிரச்சனைகளயும் எதிர் கொண்டு திடமான மனதுடன் அல்லாஹ்வின் உதவி கொண்டு வெற்றி பெறுவான்.

மாறாக யாருடைய உள்ளம் மேற்குறிப்பிட்ட தன்மைகளிலிருந்து மாறுபட்டதோ அவன் கோழைத்தனமான முடிவின்பால் தள்ளப் படுகிறான். சிந்திக்கும் தன்மையை முற்றிலும் இழந்து, ஏற்பட்டிருக்கும் பிரச்சனைக்கு தீர்வு காண தெரியாமல், தன் உயிரை மாய்த்து கொண்டால் அனைத்துக்கும் தீர்வேற்பட்டு விடும் என்ற தவறான முடிவின் பால் தன்னை உட்படுத்தி கொள்கிறான்

பிரச்சனையை சந்தித்து எதிர் நீச்சல் போட தெரியாத கோழையாகிய இவனின் இந்த முடிவால், பாதிக்கப்படும் அவனின் குடும்பத்தை பற்றியோ, நாம் நம்பிக்கை கொண்டு இருக்கிற இறப்புக்கு பிறகு உள்ள வாழ்க்கையை பற்றியோ இத்தகையவன் சிந்திப்பதே இல்லை.அல்லாஹ் உலகில் இவனை வாழ்வதற்காக அனுப்பி இருக்க; இவனோ வாழ்வில் ஏற்படும் சோதனைகளை பொறுமையுடனும், விவேகத்துடனும் அனுகாமல் தன் இன்னுயிரை போக்கி கொள்கிறான். ஒரு முஸ்லிமின் பார்வையில் இவனின் இந்த முடிவு சரியானதுதானா?

ஈமானில் உறுதிப்பாடு உள்ள ஒரு முஸ்லிமாகிறவன் தன்னுடைய சகல கஷ்டங்களையும், துன்பங்களையும் அல்லாஹ்வின் மீது பொறுப்பு சாட்டி, அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் தீர்ப்பை எதிர் நோக்கியவனாக இருப்பான். மேலும் துன்பத்தால் துவண்டு இருக்கும் மனதை அல்லாஹ்வின் திக்ரை கொண்டு அமைதி படுத்தி கொள்வான்.
இத்தகையவனின் மனதானது அவனுக்கு ஏற்படும் துன்பத்தை அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் சோதனையாக கருதி, பொறுமையாக இருக்கும். இவன் தான் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப் பட்ட முஸ்லிம்.

வாழ்வில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு, பிறரால் அவமானப் படுத்த படுதல், காதல் தோல்வி,இன்னும் பிற காரணங்களால் பாதிக்கப் படுபவன் தன் மனதை ஒரு நிமிடம் சிந்திக்க விடாமல் தன் விலை மதிக்க முடியா உயிரை முடிவுக்கு கொண்டு வந்து விடுகிறான். ஒரு புள்ளி விவரத்தின் படி முஸ்லிம் நாடுகளில் தற்கொலை சதவிகிதம் மிக மிக குறைவு. காரணம்; முஸ்லிம்களின் நம்பிக்கை (ஈமான்) தான் முழு முதற்க் காரணம். ஆனால் இந்தியாவிலோ அன்னிய சமூகத்தினருடன் கலந்திருப்பதால் முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தற்கொலை சம்பந்தமான இஸ்லாத்தின் நிலைபாட்டை; நம் சமுதாயம் தெளிவு பெரும் பொருட்டு விளக்கம் அளிக்க நாம் கடமை பட்டுள்ளோம்.

suvanappiriyan said...

திரு ஜாபர் அலி!

தற்கொலைகளைப் பற்றி நன்றாக அலசி இருக்கிறீர்கள். அனைத்துக்கும் மூல காரணம் மனிதனிடம் இறைவனைப் பற்றிய எண்ணம் மறக்கடிக்கப் பட்டதும், நாத்திக வளர்ச்சியுமே காரணம. தீண்டாமை ஒழிவதற்கு நாத்திகம் அவசியம் என்பார்கள். பெரியாராலும், வீரமணியாலும் இரட்டைக் குவளை, சிரட்டையில் தேனீர், மலம் தின்ன வைத்த கொடுமை, பாப்பாரப் பட்டியில் இன்று வரை நடக்கும் கொடுமைகளை தடுக்க முடிந்ததா?இல்லையே!