Followers

Thursday, June 20, 2013

பெல்ஜியம் சிறுவர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்களா?

பெல்ஜியம் சிறுவர்கள் தவறாக வழி நடத்தப்படுகிறார்களா?

நூற்றுக் கணக்கான ஐரோப்பிய இறைஞர்களை தற்போது சிரிய சண்டையில் பங்கெடுப்பதை காணக் கூடியதாக இருக்கிறது. பஸர் அல் அசாத்துக்கு எதிரான போரில் இந்த இளைஞர்களை பலர் மூளை சலவை செய்து பயன்படுத்தி வருகின்றனர். போதையிலும், விபசாரத்திலும், நாத்திகத்திலும் தங்களின் வாழ்வை தொலைத்துக் கொண்டிருந்த ஐரோப்பிய இளைஞர்களுக்கு அரு மருந்தாக தற்போது இஸ்லாம் கிடைத்து வருகிறது. ஆனால் சில இஸ்லாமிய அமைப்புகள் இந்த இளைஞர்களை 'ஜிகாத்' என்ற பெயரில் மூளை சலவை செய்து சிரியாவுக்கு அனுப்பி வைக்கிறது. இதற்கு அமெரிக்க ஆதரவும் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. கம்யூனிஸ சித்தாந்தத்தில் ஊறிப் போன பஸர் அல் அசாத்தை எப்படியாவது வெளியேற்ற அமெரிக்கா எதையும் செய்ய தயாராக உள்ளது.

முன்பு இதே தவறை ரஷ்ய படைகளை வெளியேற்ற ஆப்கானிஸ்தானத்திலும் அமெரிக்கா செய்ததை நாம் மறந்து விட முடியாது. தாலிபான்களுக்கு பயிற்சியும் ஆயுதங்களும் கொடுத்து வளர்த்து விட்டதே அமெரிக்காதான். முடிவில் அமெரிக்காவுக்கு தாலிபான்களே பெரும் தலைவலியாய் மாறிப் போயினர். இன்று வரை அது ஒரு இடியாப்ப சிக்கலாக போய்க் கொண்டுள்ளது.

படத்தில் உள்ள 19 தே வயதான பிரைன்டி மல்டர் சிறந்த விளையாட்டு வீரர். நன்றாக படிக்கக் கூடியவன். இரண்டு வருடங்களுக்கு முன்பு இஸ்லாத்தின் சட்டங்களின் மேல் விருப்பம் கொண்டு முஸ்லிமாக மாறியுள்ளான். தனது பெயரையும் அபு காசிம் என்று மாற்றிக் கொண்டுள்ளார். தனது சகோதரி இடத்தில் 'நீயும் இஸ்லாத்துக்கு வந்து விடு. தூய இறைவனின் பாதையில் செல்கிறேன். இதுவே நேரான வழி' என்று உபதேசம் செய்ய ஆரம்பித்துள்ளார். தனது பெற்றோர்களையும் இஸ்லாத்தை ஏற்க அழைப்பு விடுத்த வண்ணம் உள்ளார். இது வரை ஓகே.



பிரைன் தற்போது அபு காசிம்

ஆனால் ஒரு சில தவறான இஸ்லாமியர்களின் வழி காட்டுதலால் தனது கல்லூரி படிப்பை நிறுத்தியுள்ளார். தனது பெற்றோர்களை பார்ப்பதையும் தவிர்த்து வந்துள்ளார். தற்போது சிரியாவில் அரசு எதிர்ப்பு படையில் தீவிரமாக உள்ளதாக பிபிசி ஆவணப்படம் சொல்கிறது. படததில் இருப்பது தனது மகன்தான் என்பதை அவரது பெற்றோரும் உறுதி செய்துள்ளனர்.

இஸலாமிய நடைமுறை இதற்கு முற்றிலும் மாறானது. கல்வியை கற்கச் சொல்லி இஸ்லாம் ஊக்கமளிக்கிறது. இஸ்லாத்தை பெற்றோர்கள் ஏற்கா விட்டாலும் அவர்களுக்கு பணிவிடை செய்வது அவசியமானது என்றும் அது அவனின் கடமை என்றும் போதிக்கிறது. அடுத்து போர்க் களங்களில் முதியோர், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள், மத குருமார்கள் போன்றவர்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்கக் கூடாது என்று கட்டளையே இடுகிறது. தற்போது இவை அனைத்தையுமே அந்த இளைஞன் 'ஜிஹாத்' என்ற பெயரில் மீறுகிறான்.

ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், ஈராக், லிபியா என்று பல நாடுகளை நாசமாக்கிய அமெரிக்க, இஸ்ரேலிய கூட்டுப் படைகள் தற்போது கண் வைத்திருப்பது சிரிய அரசாங்கத்தின் மீது. அஸர் அல் பசாத்தை அகற்ற எந்த விலையையும் கொடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது. அதற்காக அப்பாவி ஐரோப்பிய இளைஞர்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுகின்றனர். 'ஜிஹாத்' என்ற பெயரில் எகிப்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தி எதனை சாதித்தார்கள்? முர்ஸியும் தற்போது அமெரிக்க கைப்பாவையாக மாறி விட்டார்.

எனவே புது வாழ்வை நோக்கி வசந்தத்தை நோக்கி ஆவலோடு வந்திருக்கும் அந்த இளம் குருத்துக்களை படுகுழியில் தள்ள நாம் அனுமதிக்க கூடாது. சிரிய ஆட்சியை அகற்ற பக்கத்து நாடுகள் தங்களால் ஆன முயற்சிகளை எடுத்துக் கொள்ளட்டும். இதற்காக ஐரோப்பாவிலிருந்து இந்த சிறுவர்களை அழைத்து வருவதற்கு முஸ்லிம்களாகிய நாம் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.





புத்தகங்கள் படிக்கும் அபு காசிம்



மற்றொரு இளைஞர் தற்போது முஹம்மது மீராவாக...

இந்த நிலை தொடர்ந்தால் இஸ்லாத்தின் வளர்ச்சி ஐரோப்பாவில் வெகுவாக பாதிக்கப்படும். எனவே ஐரோப்பிய நாடுகளில் உள்ள தவ்ஹீத் அமைப்பினர் இதுபோல் சிறுவர்களை போருக்கு அனுப்பும் குழுக்களை கவனித்து அதனை தடுக்க முயற்சிக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்ன? ஜிஹாதுக்கு என்ன விளக்கம்? அது எவ்வாறு தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பதை விளக்க வேண்டும். கண்டிப்பாக தூய பிரசாரத்தின் மூலம் சிறந்த மாற்றத்தை ஐரோப்பாவில் உண்டு பண்ணலாம். அமைதி இழந்து தவிக்கும் அந்த மக்கள் இன்று சாரை சாரையாக இஸ்லாத்தை நோக்கி வருகின்றனர். இது தொடர வேண்டுமாயின் சிறுவர்களை போரில் ஈடுபடுத்தப்படும் இந்த நிகழ்வு முற்றாக நிறுத்தப்பட வேண்டும.

தகவல் உதவி:

http://www.bbc.co.uk/news/magazine-22277462