Followers

Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Sunday, September 24, 2017

உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?

உயிரினம் வாழத் தகுந்த இடமாக பூமியை மாற்றியது எது?

சாரங்கன்!

//பூமி நின்னுகிட்டு இருக்கு சூரியன் தான் பூமிய சுத்துதான்.. இது தான் குரான் கூறுகிறது. பிஜே வின் பித்தலாட்டங்கள் எல்லாம் அம்பலமாகிடிச்சு//


சவுதி மார்க்க அறிஞர் ஒருவர் சொன்னதாக அந்த செய்தி சொல்கிறது. அதற்கு குர்ஆனின் ஆதாரங்கள் எதனையும் அவர்கள் வைக்கவில்லை. சவுதி மன்னரே சொன்னாலும் அதற்கு குர்ஆனின் ஆதாரம் வேண்டும். இது பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது என்று பார்போம்.

'அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். ஒவ்வொன்றும் வான வெளியில் நீந்துகின்றன.'
-குர்ஆன் (21:33)

பூமி மட்டுமல்ல சூரியனும் மற்ற கோள்களும் பூமியோடு சேர்ந்து சுற்றுவதாக குர்ஆன் கூறுகிறது. நீந்துகின்றன என்ற வார்த்தை பிரயோகம் மிக சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. இவை எல்லாம் எப்படி சாத்தியப்படுகிறது என்பதை பார்போம்



நாம் வாழும் பூமியை சற்று ஆராயப் புகுந்தால் பல்வேறு ஆச்சரியங்கள் நம்மை சூழ்ந்து கொள்ளும். இந்த பேரண்டத்தில் கோள்கள் அனைத்தும் ஒன்றோடொன்று மோதி பிறகு ஒரு சம நிலைக்கு வந்து இன்று வரை தனது ஓட்டத்தை தொய்வின்றி செய்து வருவதாக அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது இந்த பேரண்டத்தில் உள்ள அனைத்து கோள்களும் எந்த மாற்றமும் இல்லாமல் சம அளவில் சுழன்று வருகின்றன.


ஆனால் நமது பூமி மட்டும் 23.45 டிகிரி யில் சற்று சாய்வாக சுழல்வதை நாம் அறிவோம். இந்த ஒரு ஏற்பாடு மட்டும் இல்லை என்றால் நீங்களோ நானோ கணிணி முன்னால் அமர்ந்து செய்திகளை பார்த்துக் கெண்டிருக்க முடியாது. ஆம். 23.45 டிகிரி சாய்வாக சுழல்வதால்தான் வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் என்று மாறி மாறி வருகிறது. இந்த சாய்வில் கொஞ்சம் கூடினாலும் குறைந்தாலும் நமது கதி அதோ கதிதான். பூமியின் சாய்வான சுழற்சியினால் காற்று வீசும்போது அதிக அழுத்தத்திலிருந்து குறைந்த அழுத்தத்திற்கு மாற்றப்படுகிறது. பூமியின் கால நிலையை சீராக வைப்பதற்கு காற்றின் பங்கும் இங்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த சாய்வு இல்லை என்றால் இந்த பூமிப் பந்தானது குளிரில் உறைந்து விடும. அல்லது ஒரேயடியாக வெப்பம் தாக்கி புல் பூண்டுகள் இல்லாமல் கருகி விடும். உயிரினங்கள் வாழ தகுதியற்றதாக இந்த பூமிக் கோளம் மாறி விடும்.

26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூமியின் சாய்வில் ஒரு டிகிரி மாறும். இதனை precision of celestial axis என்பார்கள். அப்படி மாறி உருவானது தான் 23.5 டிகிரி பூமியின் அச்சில் உருவானது. இன்னும் 26,000 ஆண்டுகளுக்கு பின் 24.5 டிகிரிக்கு பூமியின் சுழல் தளம் சாயலாம் எனவே பெரிய வானிலை மாற்றம் ஏற்பட்டு உலகில் பெரிய அழிவு கூட உருவாகலாம்.

அப்படி முன்னர் பூமியின் சாய்வில் உண்டான மாற்றமே பெரு வெள்ளம் உருவாக காரணம் என கூறப்பட்டுள்ளது. இறைத் தூதர் நோவா காலத்தில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தை இங்கு நினைவு கூறலாம். விஞ்ஞானிகள் கூறும் பெரும் பிரளயம் அதுவாகக் கூட இருக்கலாம்.






இவ்வாறு இந்த பூமி 23.5 டிகிரி சாய்வில் சுற்றினால்தான் இங்கு மனிதர்கள் வாழ முடியும் என்று தீர்மானித்த சக்தி எது? இதற்கு முதலில் பூமியின் அடர்த்தி என்ன? சூரியனின் ஈர்ப்பு சக்தியின் அளவு என்ன? அதேபோல் புதன், சுக்கிரன், வியாழன், வெள்ளி, சனி, நிலவு போன்ற அனைத்து கோள்களின் அடர்ததி மற்றும் அவற்றின் ஈர்ப்பு தன்மை தெரிந்த ஒரு சக்தியால்தான் இத்தனை மாற்றங்களையும் நிகழ்த்த சாத்தியம் உண்டு..

//Science and technology have indeed given us much information about the physical world, provided us with abundant comforts and conveniences, increased efficiency and discovered remedies for many diseases that used to be fatal. But science does not and cannot tell us about the meaning of life and death. Science tells us "how" but it never answers the question "why"?. Can science ever tell us what is right and what is wrong? What is good and what is evil? What is beautiful and what is ugly? And to whom are we accountable for what we do? Religion does.// -மர்யம் ஜமிலா.

இந்த ஆச்சரியமான விபரங்களை எல்லாம் பல காலம் உழைத்து அறிவியல் அறிஞர்கள் உண்மைகளை கண்டு பிடித்துள்ளனர். ஆம்....இந்த கோள்களின் சஞ்சாரம் இரவு பகல் மாறி வருவது எவ்வாறு என்று அனைத்திற்கும் காரணத்தைக் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால் இவைகளை இவ்வாறு சுழல விட்ட சக்தி எது? இதற்கு என்ன அவசியம் வந்தது? என்பதை அறிவியலால் சொல்ல முடியாது. அதனை ஆன்மீகத்தால்தான் சொல்ல முடியும். இனி ஆன்மீகத்துக்குள் நுழைவோம்.

--------------------------------------------------------------------------

'இறைவன் உங்களை பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான். பின்னர் அதிலேயே உங்களை மீட்டுவான். அதிலிருந்தே உங்களை வெளியேற்றுவான்'
-குர்ஆன் 71:17,18

"பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்."
- குர்ஆன் 7;10

'உங்களுக்கு பூமியில் குறிப்பிட்ட காலம் வாழ்விடமும் வசதியும் உள்ளன.'
-குர்ஆன் 2:36

'அவனது கட்டளைப்படி வானமும் பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.'
-குர்ஆன் 30:25


பூமியில் மட்டுமே மனிதன் வாழ முடியும் என்று மேற் கண்ட வசனங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. வேற்று கிரகத்திலிருந்து மனிதர்கள் வந்தார்கள், பறக்கும் தட்டு வந்தது என்பதெல்லாம் நிரூபிக்கப் படாத செவி வழி செய்திகள். உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் பூமியில் தான் உள்ளது. சந்திரனுக்கு மனிதன் சென்றாலும் நிரந்தர தங்குதல் என்பது பூமி மட்டுமே! மனிதனின் உடலுக்கு ஏற்றவாறு வெப்பமும் குளிரும் அளவோடு இருப்பது பூமியில் மட்டுமே!

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும். இன்னும் சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனை சாம்பலாக்கி விடும்.மேலும் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாக சுழல்கிறது. இப்படி சாய்வாக சுழல்வதால் தான் கோடை, குளிர்,வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் என்று கால மாற்றங்கள் ஏற்படுகின்றன. வருடம் எல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இருக்காது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 'இதில் தான் வாழ்வீர்கள்' என்று எவ்வாறு அடித்துக் கூற முடியும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இந்த வசனமும் இது இறைவனின் சொல்தான் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை.' - குர்ஆன் 42:29

மேற்கண்ட குர்ஆன் வசனங்களிலிருந்து நமக்கு தெரிய வருவது மனித இனமும் மற்ற பூமியில் உள்ள உயிரினங்களும் பூமியில் மாத்திரமே உள்ளன. வேற்று கிரகங்களிலும் உயிரினங்கள் உள்ளன. ஆனால் அவை பூமியை ஒத்த உயிரினங்களாக இருக்க வாய்ப்பில்லை. அந்த கோள்களின் தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப அங்குள்ள உயிர்களின் உடல்வாகு அமைக்கப்பட்டிருக்கும். இனி வருங்காலத்தில் செவ்வாயிலோ, புதனிலோ, வியாழனிலோ உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை பூமியில் உள்ள உயிரினங்களை ஒத்து இருக்காது என்பது மட்டும் நிச்சயமாக தெரிகிறது. நம் காலத்திலேயே அந்த உயிரினங்கள் கண்டு பிடிக்கப்படலாம். இறைவன் நாடினால் நாமும் அந்த உயிரினங்களை பார்க்கலாம்.

இவ்வாறு வளி மண்டலத்தில் நடக்கும் விந்தைக்கு காரணம் இயற்கை என்று நாத்திகர்கள் சொல்கின்றனர். அவர்களிடம் சில கேள்விகளுக்கு பதிலைக் கேட்போம்.

அனைத்து கோள்களும் தங்களுக்குள் பேசிக் கொண்டு ஈர்ப்பு சக்தியினை பகிர்ந்து கொண்டதா!அதன் அடர்த்திகளையும் பகிர்ந்து கொண்டதா! ஒன்றோடொன்று மோதாமல் இன்று வரை சுற்றி வருவதற்கு அதற்கு பாதை அமைத்துக் கொடுத்தது யார்? அதுவும் தங்களுக்குள்ளேயே பேசி ஒரு முடிவுக்கு வந்ததா? இத்தனை கோள்களிலும் பூமி மட்டும் ஒரு முடிவுக்கு வந்து நான் மட்டும் 23.5 டிகிரி சாய்வாக அமர்ந்து கொள்கிறேன் என்று சூரியனிடம் அனுமதி கேட்டுக் கொண்டதா? இதற்கெல்லாம் எந்த பதிலையும் நாத்திகர்களிடமிருந்து நாம் எதிர்பார்க முடியாது.

நியூட்டனின் விளக்கத்தையும் சற்று பார்போம்.........

உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.

ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)

https://sites.google.com/site/earthrotation

http://www.itacanet.org/the-sun-as-a-source-of-energy/part-1-solar-astronomy/

http://www.pveducation.org/properties-of-sunlight/declination-angle




Tuesday, August 08, 2017

இஸ்லாத்துக்கு மாற எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை!

இஸ்லாத்துக்கு மாற எங்களை யாரும் கட்டாயப்படுத்தவில்லை!

கரூர் மாவட்டம் தோகைமலை தெற்குத் தெருவில் ஹோட்டல் நடத்திவரும் மனோகரன் என்பவர், தனது மகன்களான ராமமூர்த்தி மற்றும் மீனாட்சிசுந்தரம் இருவரையும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த, ஏற்கெனவே இஸ்லாமிய மதத்துக்கு மாறிய சுரேஷ் என்கிற அப்துல் ரஹ்மான் மூளைச்சலவை செய்து, மதமாற்றம் செய்துவிட்டதாக கரூர் மாவட்ட கலெக்டரிடம் நேற்று புகார் கொடுத்தார். அதில். 'தோகைமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தோம், நடவடிக்கை இல்லை. எங்க பகுதியில் உள்ள மசூதியில் உள்ள இஸ்லாமியப் பெரியவர்களும், எங்க பசங்களை 'மசூதிக்கு வர வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. அப்படினா, எங்க மகன்களை மதம் மாத்துனது எதுவும் பயங்கரவாத கோஷ்டியா என்பது தெரியவில்லை. நீங்கதான் எனது மகன்களைப் பழையபடி மீட்டுத் தரணும்" என்று கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.

மனோகரன் புகார் கொடுத்த அன்றே, அதே தோகைமலைப் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி என்பவர் தன் பங்குக்கு கலெக்டரிடம், 'அய்யா அந்த சுரேஷ், என் மகன் சரவணக்குமாரையும் ஸ்லாமிய தத்துக்கு மாத்திட்டார். என் மகனையும் நீங்கதான் மீட்டுத் தரணும்' என்று கண்ணீரும் கம்பலையுமாக புகாரை நீட்டினார். இந்தச் செய்தியை விகடன் இணையதளத்தில் செய்தியாகப் பதிந்திருந்தோம். 

இந்நிலையில் இந்தச் செய்தி பரபரப்பாக, மதமாற்றிய காரியதரிசியாக குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ் என்கிற அப்துல் ரஹ்மான், நேற்று எட்டு மணி போல், சரவணக்குமார், மீனாட்சிசுந்தரம் மற்றும் ராமமூர்த்தி ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு கரூர் பிரஸ் கிளப் வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம்,

"நான் அவர்களை மூளைச்சலவை எல்லாம் செய்து மதமாற்றம் செய்யவில்லை. அவர்கள் மூவரும் தாங்களாக விருப்பப்பட்டுதான் இஸ்லாமிய மதத்துக்கு மாறியிருக்கிறார்கள். நானும் இஸ்லாமியம் பிடித்து, தன்னிச்சையாகத்தான் மதம் மாறினேன். அதுபோல்தான், இவர்கள் மூவரும் இஸ்லாமிய மதம் பிடித்துப்போய், மதம் மாறியிருக்கிறார்கள். என்மீது எந்தத் தவறும் இல்லை. நான் ஒரு கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்தவன். தனியார் கல்லூரியில் பேராசிரியராக இருக்கிறேன். தேவையில்லாமல் என்மீது குற்றம்சாட்டி வருகிறார்கள். அவர்களிடமே கேளுங்கள், நான் அவர்களை மூளைச்சலவைசெய்து, மதம் மாற்றினேனா என்று" என்பதோடு ஒதுங்கிக்கொண்டார்.
 



தகவல் உதவி
விகடன்
09-08-2017

மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. 

இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 2 : 256) 

மார்க்கத்தில் எந்த நிர்பந்தமும் இல்லை என்று அல்லாஹ் கூறிவிட்டு அதற்கான காரணத்தையும் இணைத்தே சொல்கிறான். வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது என்பதே அந்தக் காரணம். சத்தியம் எது? அசத்தியம் எது? என்று தெளிவாக சொல்லப்பட்டு விட்டது. ஆகையால் இஸ்லாம் என்ற சத்தியத்தை யாருடைய நிர்பந்தமும் இல்லாமல் இலகுவாகப் புரிந்த கொள்ளலாம். இவ்வளவு தெளிவான மார்க்கத்தில் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று குர்ஆன் கூறுகிறது. 





Sunday, August 06, 2017

பாகிஸ்தான் செழிக்காது! அபுல் கலாம் ஆசாத்







எவ்வளவு தீர்க்கதிரிசனமான வார்த்தை! பாகிஸ்தான் பிரிவினையில் அவ்வாறு செல்வது முஸ்லிம்களின் எதிர்காலத்தை குட்டிச்சுவராக ஆக்கி விடும். எனவே தனியாக பிரிந்து செல்லாதீர்கள். இநதுக்களோடு சேர்ந்தே ஒரே இந்தியாவில் இருப்போம் என்று கடைசி வரை போராடி பார்த்தார் அபுல் கலாம் ஆசாத். கேட்டார்களா குறுமதியாளர்கள். பேச விட்டார்களா அபுல் கலாம் ஆசாத்தை! பிரித்துக் கொண்டு சென்று 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. அதற்குள் அபுல் கலாம் எதைச் சொன்னாரோ அதனை உண்மையாக்கி விட்டனர் பாகிஸ்தானிகள். எங்கு திரும்பினாலும் பிரச்னை. கொலை, கொள்ளை, ஊழல் என்று இன்று பாகிஸ்தான் செய்வதறியாது திகைத்து நிற்கிறது.

லாகூரிலிருந்து வெளிவந்த ஒரு உருது பத்திரிக்கையில் சோரிஸ் காஷ்மீரி என்ற நிருபருக்கு 1946 ஆம் ஆண்டு அளித்த பேட்டியின் முக்கியமான சிலவற்றை பார்ப்போம்.

கேள்வி: இந்து முஸ்லிம் பிரச்னை அதிகமாகி விட்டது. இந்நிலையில் பாகிஸ்தான் பிரிவினை தவிர்க்க முடியாதது என்று நீங்கள் நினைக்கவில்லையா?

பதில்: பாகிஸ்தான் பிரித்து கொடுப்பதால் இந்து முஸ்லிம் பிரச்னை ஓய்ந்து விடும் என்ற வாதத்தை நான் ஏற்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள இந்துக்களையும் சீக்கியர்களையும் முஸ்லிம்கள் தாக்கும் அபாயம் உண்டு. அதே போல் இங்குள்ள முஸ்லிம்கள் இந்துக்களால் தாக்கப்படும் அபாயம் உள்ளது. இது காலத்துக்கும் தீராத பிரச்னையை உண்டு பண்ணும். அமெரிக்கா ரஷ்யா போன்ற நாடுகள் பாகிஸ்தானில் தளம் அமைத்து இந்தியாவுக்கு தொல்லை கொடுக்கும் அபாயமும் உள்ளது.

பெரும் செல்வந்தர்கள் வணிக நிறுவனங்களை பங்கு கோட்டு கொள்வர். ஏழைகள் மேலும் ஏழைகளாவர். இது பிரச்னைகள மேலும் அதிகமாக்கும்..

கேள்வி: ஆனால் பல உலமாக்கள் மற்றும் முகமது அலி ஜின்னா போன்றவர்கள் பாகிஸ்தான் பிரிவினையை ஆதரிக்கிறார்களே! தனி நாடாக பிரிந்தால் ஒரு குடையின் கீழ் வர சாத்தியம் உண்டல்லவா?

பதில்: பாகிஸ்தான் பிரிவினையால் ஏதேனும் நன்மை நடக்கும் என்பது தெளிவானால் அதற்கு முதல் ஆதரவுக் குரல் நானே கொடுப்பேன். இதனால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. உலமாக்கள் என்று சொல்கிறீர்கள். அக்பருடைய அவையில் இருந்து தனி மதம் கண்ட பல முஸ்லிம்களையும் உலமாக்கள் என்றே கூறுகிறோம். உலமாக்கள் சொல்வதெல்லாம் மார்க்கமாகாது. இஸ்லாத்தின் அடிப்படையை புரிந்து கொள்ள குர்ஆனையும் நபி மொழிகளையும் பார்க்க வேண்டும்.

1000 ஆண்டு காலம் இந்த பரந்த பாரத நாட்டை ஆண்ட முஸ்லிம்கள் இஸ்லாத்துக்காக என்ன செய்து விட்டார்கள்? பெயரளவுக்குத்தான் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தனர். உலமாக்கள் சபைகளை எல்லாம் இந்த அரசர்கள் தடை செய்ததை வரலாறுகளில் பார்க்கிறோம்.

நமது தூதர் நபியவர்கள் 'இந்த உலகம் முழுவதிலும் எனக்கு தொழும் இடமாக ஆக்கப்பட்டுள்ளது' என்று கூறியதை நாம் மறந்து விடக் கூடாது. ஒரு முஸ்லிமுக்கு உலகம் முழுவதுமே புண்ணியமான இடங்கள்தான். அனைத்து நாடுகளையும் படைத்தது ஒரு இறைவனே. எனவே இருக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி அதில் நாம் முன்னேறவே யோசிக்க வேண்டும்.

இவ்வாறு பலதரப்பட்ட மக்களும் கலந்து வாழும் ஒரு நாட்டை துண்டாடி தனியாக ஒரு தேசம் உண்டாக்க இஸ்லாம் வழி காட்டவில்லை. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலங்களை விட சிறுபான்மையாக உள்ள மாநிலங்களில் தங்களின் இஸ்லாமிய நடவடிக்கையை பேணுவதில் அதிக அக்கறை காட்டுவதை பார்க்கிறோம். பிற்காலத்தில் பாகிஸ்தானில் இஸ்லாம் அதன் உண்மை முகத்தை இழந்து விடும் அபாயம் உள்ளது. இறைவனே இதனை நன்கு அறிந்தவன்.

கேள்வி: ஆனால் இந்துக்களும் முஸ்லிம்களும் இரு வேறுபட்ட கலாசாரத்துக்கு சொந்தக்காரர்கள். அனைத்திலும் வேறுபடுகிறார்கள். இந்த இருவருக்குள் ஒற்றுமை எவ்வாறு சாத்தியம் என்று எதிர் பார்க்கிறீர்கள்?

பதில்: இது பற்றி நான் அல்லாமா இக்பாலுடனும், மௌலானா ஹூசைன் அஹமத் மதனியுடனும் நிறைய விவாதித்துள்ளேன். நீங்கள் குர்ஆனை முழுவதும் படித்துப் பாருங்கள். அதில் சில வசனங்கள் மட்டுமே முஸ்லிம்களை நோக்கி சொல்லப்பட்டிருக்கும். அதிகமான அறிவுரைகள் 'மனிதர்களே' என்று உலக மக்களைப் பார்த்துதான் குர்ஆன் பேசும். முஸ்லிம் அல்லாத மக்களோடு நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்ற வழி காட்டுதலும் குர்ஆனில் உள்ளது. வேற்றுமையில் ஒற்றுமை காண்பதுவே குர்ஆன் கூறும் வழிமுறை.

இந்த அகண்ட பாரதத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்சிகள், சீக்கியர்கள் என்று பலதரப்பட்ட மக்கள் கலந்து ஒரு குழுவாக வாழ்ந்து வருகின்றனர். அவரவர் நம்பிக்கையை மதித்து சந்தோஷமாக வாழ்தல் என்பது மிக எளிதானதே. முன்பு நாம் இவ்வாறு வாழ்ந்திருக்கிறோம்.

சுதந்திரம் என்பது அந்நிய நாட்டின் ஆதிக்கத்திலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கிறோம்.. அதற்காக மதத்தின் அடிப்படையில் பிரிவினையை உண்டாக்கி சுதந்திரம் அடைவது என்பது பிரச்னையை மேலும் அதிகமாக்கவே செய்யும். இதை நான் நன்றாக உணர்ந்ததாலேயே இந்த அளவு உங்களிடம் பேசுகிறேன்.

முஸ்லிம்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் குறுகிய வட்டத்திலிருந்து வெளி வர வேண்டும். அவர்கள் உலக மக்களுக்கு நற் செய்தியை கொண்டு செல்லும் முக்கிய பணியை இறைவன் கொடுத்துள்ளான். அதை விடுத்து சாதி, இனம், மொழி என்ற பெயரில் பிரிந்து கொள்வதை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. சிலர் முஸ்லிம்களுக்குள் ஒற்றுமையை உண்டு பண்ண இந்துக்களை எதிரிகளாக்க முற்படுகின்றனர். அப்படி ஒரு ஒற்றுமை வந்தால் அது வெளி உலகுக்கான போலி ஒற்றுமையாகத்தான் இருக்கும். இஸ்லாம் கூறும் உளப்பூர்வமான ஒற்றுமையை உங்களால் கொண்டு வர முடியாது. அதற்கு முஸ்லிம்கள் குர்ஆனையும் முகமது நபியின் வாழ்வு முறையையும் தங்கள் கைகளில் எடுக்க வேண்டும். அதுதான் நிரந்தர தீர்வாகவும் இருக்க முடியும்.

வஹ்ஹாபி என்றும், சூஃபி என்றும், சுன்னத் ஜமாத் என்றும் ஷியா என்றும் முஸ்லிம்கள் பலவாறாக பிரிந்து கிடக்கின்றனர். ஆமீன் என்று சப்தமிடுவதும், கைகளை உயர்த்துவதும் கூட பல இடங்களில் பிரச்னையாக்கப்படுகிறது. சில மொளலவிகள் தங்களுக்கு தோதான ஃபத்வாக்களை கொடுத்து மக்களை அறியாமையில் இன்றும் வைத்துள்ளனர். இதற்கெல்லாம் அழகிய தீர்வை நமது தூதர் நமக்கு காட்டித் தந்திருக்க அதன் பக்கம் ஏனோ நாம் கவனம் செலுத்துவதில்லை.

எனவே முஸ்லிம்கள் சகோதர பாசத்தோடு ஒன்றினைந்து இந்தியா சுதந்திரம் அடைய அனைத்து மக்களோடும் தோளோடு தோள் கொடுத்து ஒத்துழைப்பு நல்க வேண்டும்....

THE MAN WHO KNEW THE FUTURE
by Shorish Kashmiri, Matbooat chattan, Lahore.

மிக நீண்ட பேட்டி. நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது மொழி பெயர்ப்பு செய்து படிப்போம். இவர் எதை எல்லாம் எதிர்பார்த்தாரோ அவை எல்லாம் ஒவ்வொன்றாக நடந்து வந்துள்ளதை பார்த்து ஆச்சரியப்படுகிறோம்..

Friday, July 21, 2017

சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!





பூமியிலேயே வாழ்வீர்கள்! பூமியிலேயே மரணிப்பீர்கள்! அதிலிருந்தே பிறகு வெளிப் படுத்தப் படுவீர்கள்'

- குர்ஆன் 7;175

பூமியில் உங்களை நாம் வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆனால் குறைவாகவே நன்றி செலுத்துகிறீர்கள்.

- குர்ஆன் 7;10


இந்த இரண்டு குர்ஆன் வசனங்களையும் மெய்ப்பிக்கும் விதமாக இன்று தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை வந்துள்ளது. குர்ஆன் இறை வேதம்தான் என்பதற்கு இந்த கட்டுரையும் ஒரு அத்தாட்சியாக உள்ளது. கட்டுரையை அவசியம் படித்துப் பாருங்கள்.

-----------------------------------------

சூரியக் குடும்பத்தில் பூமியைத் தவிர வேறு எங்கும் உயிர்கள் இல்லை!

குளிர் காலத்தில் காட்டுப் பகுதியில் இரவில் குளிர் காய்வதற்காக சுள்ளிகளைப் போட்டு தீ மூட்டுவர். அதைச் சுற்றிலும் கும்பலாகப் பலர் உட்கார்ந்திருப்பர். மிக அருகில் உட்கார்ந்தால் சூடு அதிகம் தாக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். மிகவும் தள்ளி உட்கார்ந்தால் இதமான வெப்பம் கிடைக்காது. எனவே, இதமான வெப்பம் கிடைக்கின்ற அளவுக்கு உகந்த தூரத்தில் உட்கார்ந்திருப்பார்கள். பூமியும் சரி, ‘குளிர் காய்வதற்கு’ ஏற்ப சூரியனிலிருந்து உகந்த தூரத்தில் அமைந்திருக்கிறது. ஆனால், புதனும் வெள்ளியும் சூரியனுக்கு அருகில் உள்ளன. செவ்வாய் கிரகம் சற்றே தள்ளி அமைந்துள்ளது.

முதலில் நாம் சூரிய மண்டல அமைப்பு பற்றிக் கவனிப்பது நல்லது. ஒரு காகிதத்தில் ஒரு புள்ளி வையுங்கள். அதுதான் சூரியன். அந்த புள்ளியைச் சுற்றி நெருக்கமாக ஒரு சிறிய வட்டம் போடுங்கள். புதன் கிரகம் அந்த வட்டத்தில் அமைந்தபடியாக சூரியனைச் சுற்றுகிறது. முதல் வட்டத்தைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அதுதான் வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதை. அதைச் சுற்றி இன்னொரு வட்டம் போடுங்கள். அந்த வட்டத்தில்தான் பூமி அமைந்துள்ளது. நான்காவது வட்டத்தில் செவ்வாய் கிரகம்.

பனிக்கட்டி, பாறை: கோள்கள்

மேலும் வட்டங்களைப் போடலாம். ஐந்து முதல் ஒன்பது வரையிலான வட்டங்களில்தான் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவை அமைந்துள்ளன. இந்த ஐந்துமே பனிக்கட்டி உருண்டைகள். இவை எல்லாமே சூரியனிலிருந்து மிகத் தொலைவில் இருப்பவை. பூமியிலிருந்து பார்த்தால் சூரியன் 25 பைசா அளவில் தெரிவதாக வைத்துக்கொண்டால், வியாழன் கிரகத்திலிருந்து பார்க்கும்போது சூரியன் மிளகு அளவில்தான் தெரியும். வியாழனில் வெயில் சிறிதும் உறைக்காது. எனவேதான் வியாழனும் அதற்கு அப்பால் உள்ள கிரகங்களும் பனிக்கட்டி உருண்டைகளாக உள்ளன.

மாறாக புதன், வெள்ளி, பூமி, செவ்வாய் ஆகியவற்றைப் பாறைக் கோள்கள் என்று சொல்வர். அதாவது, இந்த நான்கிலும் தரை உண்டு. மண் உண்டு. மலைகள், பள்ளத்தாக்குகள் ஆகியனவும் உண்டு.

பூமியில் உயிரினம் தோன்றுவதற்கு உகந்த மற்ற சூழ்நிலைகளையும் கவனிப்போம். முதலாவதாக பூமியில் போதுமான அடர்த்தி கொண்ட காற்று மண்டலம் உள்ளது. இரண்டாவதாக இந்தக் காற்று மண்டலம்தான் சூரியனிலிருந்து வருகின்ற ஆபத்தான எக்ஸ் கதிர்களைத் தடுத்து உயிரினங்களைக் காப்பாற்றுகிறது. உயிரினத்துக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய சில வகை புற ஊதாக் கதிர்களையும் காற்று மண்டலம் தடுக்கிறது. விண்வெளியிலிருந்து வருகின்ற கதிர்வீச்சிலிருந்தும் நம்மை இந்தக் காற்று மண்டலம் காக்கிறது.

நீர்சூழ் உலகு!

மூன்றாவதாக பூமியில் உயிரினத்துக்குத் தேவையான தண்ணீர் இருக்கிறது. பூமியின் மேற்பரப்பில் 71 சதவிகிதம் கடல்களால் ஆனது. தண்ணீரானது துருவப் பகுதிகளில் பனிக்கட்டி வடிவில் உள்ளது. காற்றில் ஆவி வடிவில் உள்ளது. பூமியின் நிலப் பகுதிகளில் ஆறுகளாக ஓடுகிறது. பூமி ஒன்றில்தான் நீர் வடிவிலும் பனிக்கட்டி வடிவிலும் ஆவி வடிவிலும் தண்ணீர் இருக்கிறது.

நான்காவது சாதக அம்சம் பூமியின் பருமன். பூமி தகுந்த பருமன் கொண்டதாக உள்ளதால், அதற்குச் சரியான ஈர்ப்பு சக்தி உள்ளது. அவ்விதம் ஈர்ப்பு சக்தி உள்ளதால்தான் பூமி தனது காற்று மண்டலத்தை இழக்காமல் கெட்டியாகப் பிடித்து வைத்துக்கொண்டுள்ளது.

ஐந்தாவது அம்சம், பூமியின் சுழற்சி வேகம். பூமி தனது அச்சில் உகந்த வேகத்தில் சுற்றுவதால்தான் பூமியில் பொதுவில் கடும் குளிரோ கடும் வெப்பமோ இல்லை. இல்லத்தரசிகள் நெருப்பில் அல்லது தணலில் அப்பளம் சுடும்போது அப்பளம் தீய்ந்து விடாமல் இருக்க அதைத் தக்கபடி திருப்பிப் போடுவார்கள். பூமியின் சுழற்சி வேகம் அந்த அளவில் உள்ளது. இத்துடன் ஒப்பிட்டால் சந்திரனில் 14 நாள் பகல். 14 நாள் இரவு.

ஆறாவது அம்சம், பூமியின் காந்தப் புலம். சூரியனிலிருந்து வரும் ஆபத்தான துகள்கள் பூமியைத் தாக்காதபடி இந்தக் காந்தப் புலம் தடுக்கிறது. மேலே கூறிய அம்சங்கள் அனைத்தும் சேர்ந்து பூமியில் உயிரினம் தோன்றித் தழைக்க உதவியுள்ளன.

வியாழன் உள்ளிட்ட ஐந்து பனிக்கட்டி உருண்டைகளும் உயிரினத்துக்கு உகந்த சூழல்களைக் கொண்டவை அல்ல. மீதியுள்ள புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய கிரகங்களில் உள்ள நிலைமைகளைக் கவனிப்போம்.

சாத்தியமற்ற கிரகங்கள்

புதன் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. எனவே, பகல் வேளையில் அதிகபட்ச வெப்பம் 430 டிகிரி செல்சியஸ். இரவாக உள்ள பகுதியில் குளிர் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ். புதன் கிரகத்தில் உயிரினம் கிடையாது என்பதில் வியப்பில்லை. தவிர, புதன் கிரகத்தில் அனேகமாகக் காற்று மண்டலம் கிடையாது.

வெள்ளி கிரகத்துக்கு ஜோசிய சாஸ்திரத்தில் சுக்கிரன் என்று பெயர். சுக்கிரன் என்றாலே சுக்கிர தசைதான் நினைவுக்கு வரும். ஆனால், வெள்ளி கிரகத்துக்கு சுக்கிர தசை அடிக்கவில்லை. மாறாக, நிரந்தர ‘சனி தசை’தான். வெள்ளி கிரகத்துக்குக் கடந்த காலத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும் அனுப்பிய ஆளில்லா விண்கலங்கள் ‘அமுக்குப் பிசாசு’ அழுத்தியதுபோல நொறுங்கின. வெள்ளி கிரகத்தில் நிலவும் பயங்கரக் காற்றழுத்தமே அதற்குக் காரணம். அது போதாதென வெள்ளியில் எந்த இடமானாலும் வெப்பம் 460 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. வெள்ளி கிரகம் ஒரு அக்கினிக் குண்டம். இது போதாதென வானிலிருந்து அமில மழை பெய்கிறது.

செவ்வாய் தேறுமா?

சூரியனிலிருந்து தள்ளி நான்காவதாக அமைந்த செவ்வாயில் வெயில் தாக்கம் குறைவு. மெல்லிய காற்று மண்டலம் உள்ளது. தண்ணீர் கிடையாது. வடிவில் பூமியை விடச் சிறியது என்பதால், காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்துக்கொள்ள இயலவில்லை. இன்னமும் அது தனது காற்று மண்டலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருகிறது. செவ்வாயின் துருவப் பகுதியில் பனிக்கட்டிகள் உண்டு என்றாலும் காற்று மண்டல அடர்த்தி இன்மை காரணமாக செவ்வாயில் பனிக்கட்டிகள் உருகி நீராக மாறாமல் நேரடியாக ஆவியாக மாறுகின்றன. சூரிய மண்டலத்தில் பூமிக்கு வெளியே குறைந்தது நுண்ணுயிர்கள் இருக்க வாய்ப்பு கொண்ட ஒரே கிரகம் செவ்வாய்தான். ஆனால், இதுவரை தேடியதில் செவ்வாயில் நுண்ணுயிர்கள்கூட இல்லை.

ஆக, சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களில் பூமியைத் தவிர, வேறு எந்தக் கிரகத்திலும் உயிரினம் கிடையாது.

பூமி பெற்றுள்ள விசேஷ சாதகங்களால் பூமியில் உயிரினம் தோன்றியதாகக் கூறலாம். அப்படியானால் சூரிய மண்டலத்துக்கு அப்பால் எங்கோ இருக்கின்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றுகின்ற ஒரு கிரகம் பூமி போன்று அதே சாதக நிலைமைகளைப் பெற்றிருப்பதாக வைத்துக் கொள்வோம். அப்படியான கிரகத்தில் உயிரினம் இருக்குமா? அப்படியும் சொல்லிவிட முடியாது.

- என். ராமதுரை, மூத்த எழுத்தாளர்,.....

தகவல் உதவி
தமிழ் இந்து நாளிதழ்
19-11-2015...

Saturday, May 27, 2017

நோன்பு புற்று நோயை குணப்படுத்தும் காரணிகளில் ஒன்று - புதிய ஆய்வு



நோன்பானது பல மனிதர்களின் புற்று நோயை குணப்படுத்தும் காரணியாக அமைகிறது என்று தற்போதய ஆய்வுகள் தெரிவிக்கினறன. 'தெற்கு கலிபோர்னியா பல்கலைக் கழக' ஆய்வாளர்கள் புற்று நோயால் ஏற்படும் கட்டிகளை எதிர்க்கும் சக்தியை நோன்பு தருகிறது என்ற ஆய்வை வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வானது இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆய்வகத்தில் எலிகளை வைத்து இந்த சோதனையை நிகழ்த்தினர். உணவு உண்ட ஒரு எலியும் உணவு தரப்படாத எலியும் இந்த சோதனையில் பரிசோதிக்கப்பட்டன. உணவு தரப்படாத எலியின் கட்டிகள் எதிர் வினையாற்றி புற்று நோய் கட்டிகளை அழித்து விட்டதை ஆய்வுகளில் உறுதிபடுத்தியுள்ளனர். உணவு தரப்பட்ட எலியின் உடலில் அந்த கட்டிகள் அழிக்கப்படாமல் அப்படியே இருந்ததும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

வால்டர் லாங்கோ என்ற ஆய்வாளர் டெய்லி மெயில் என்ற பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறுகிறார் 'கேன்சரை உற்பத்தி பண்ணும் செல்கள் ஆச்சரியமாக உணவு தரப்படாத எலியின் உடம்பில் தங்களைத் தாங்களே அழித்துக் கொள்கின்றன. உணவு தரப்பட்ட எலியில் இந்த மாற்றத்தை எங்களால் காண முடியவில்லை' என்று கூறுகிறார்.

இதே ஆய்வுகளை மனிதர்களிடமும் சில ஆண்டுகளுக்கு முன் ஆய்வு செய்து பார்த்தனர். கலோரி குறைவாக உள்ள மனிதர்களிடம் புற்று நோய் அறிகுறிகள் வெகுவாக குறைந்திருப்பதை கவனிக்க முடிந்ததாக ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.

தகவல் உதவி
டைம்ஸ் ஆஃப் இந்தியா
10-02-2012

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் 2:184

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

அல்குர்ஆன் 2:185


http://timesofindia.indiatimes.com/home/science/Fasting-may-be-the-best-way-to-combat-cancer/articleshow/11832019.cms

Tuesday, March 14, 2017

அசீமானந்தா விடுதலை - தீர்ப்பை எழுதியது மோடியா? நீதிமன்றமா?



காவி பயங்கரவாதம் மிக மூர்க்கத்தனமாக செயல்பட ஆரம்பித்து இருக்கின்றது. மோடியின் ஆட்சி முடிவதற்குள் தங்களுடைய அனைத்து சதி வேலைகளையும் நிறைவேற்றிக் கொள்ள திட்டங்கள் தீட்டி செயல்படுத்தி வருகின்றது. இந்தியா முழுவதும் மாட்டுக்கறி தின்பவர்களுக்கு எதிராக குறிப்பாக இஸ்லாமிய, தலித், கிருஸ்தவ மக்களுக்கு எதிராக அது மேற்கொண்ட வன்முறைத் தாக்குதல்கள், காவி பயங்கரவாதிகளை விமர்சனம் செய்த எழுத்தாளர்களைக் கொலை செய்தது, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியைத் திணித்தது, செத்த மொழியான சமஸ்கிருதத்தை திணித்தது எனத் தொடங்கிய அதன் பயங்கரவாதம் இப்போது பல்வேறு குண்டுவெடிப்புச் சம்பவங்களில் தொடர்புடைய கேடி சாமியார் அசீமானந்தா விடுதலையில் வந்து நிற்கின்றது. யார் இந்த அசீமானந்தா? ஒரு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி, ஐந்து குண்டுவெடிப்புகளுக்கு மூளையாக செயல்பட்டவன், 119 பேர் உடல் சிதறி உயிரிழக்கக் காரணமான இந்து பயங்கரவாதி. அப்படி குண்டுவைத்துப் பல பேரை கொன்றதைப் பெருமையாக ஒப்புக்கொண்டவன். அப்படிப்பட்டவனைத்தான் நீதிமன்றம் இப்போது விடுதலை செய்திருக்கின்றது.


2007 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தானில் உள்ள ஆஜ்மீர் தர்காவில் குண்டு வெடித்து மூன்று பேர் கொல்லப்பட்டனர், 17 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வழக்கு சம்மந்தமாக அசீமானந்தா உட்பட 13 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இப்போது இந்த வழக்கில் இருந்து அசீமானந்தா உட்பட 7 பேரை ஜெய்பூர் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் விடுவித்துள்ளது. 3 பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இன்னும் மூன்று பேரை பத்துவருடங்களாக தேடிக்கொண்டே இருக்கின்றது. குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களில் சுனில் ஜோசியும் ஒருவர் ஆவர். இவர் 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். செத்துப்போனவனை குற்றவாளி என்றும், உயிரோடு இருப்பவனை குற்றமற்றவன் என்றும் நீதி மன்றம் விடுவித்துள்ளது. இது ஒன்றும் தற்செயலானது அல்ல. அசீமானந்தா விடுதலை தொடர்பாக நாம் பார்ப்பதற்கு முன்னால் ஏன் மோடி அரசால் திட்டமிட்டு அசீமானந்தா விடுதலை செய்யப்பட்டார் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய காரவான் இதழில் வெளிவந்த அசீமானந்தாவின் பேட்டியைப் பார்த்தோம் என்றால், இதை ஒரளவு நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

2012 ஜனவரி 10, 2013 ஜூன் 22, 2014 ஜனவரி 9, 2014 ஜனவரி 17 ஆகிய நாட்களில் சிறையில் பத்திரிக்கையாளர் லீனா அவர்களால் எடுக்கப்பட்ட அந்தப் பேட்டியில் அசீமானந்தா ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கும், குண்டுவெடிப்புக்கும் உள்ள பல்வேறு திடுக்கிடும் பின்னணியை விளக்கியிருந்தார். மேற்குவங்கத்தில் இருக்கும் ஹூக்ளி மாவட்டத்தில் 1951 ஆம் ஆண்டு பிறந்த அசீமானந்தாவின் இயற்பெயர் நவகுமார் சர்க்கார் என்பதாகும். முதுகலை இயற்பியல் படித்தவர். சிறுவயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மீது ஈடுபாடுகொண்ட அசீமானந்தவை இப்படி கொலைவெறியனாக மாற்றியது விவேகானந்தரின் சிந்தனைகள் தான். “ஹிந்துமதத்தை விட்டு வெளியே ஒருவன் செல்லும் போது ஒரு ஆள் குறைவது மட்டும் நடக்கவில்லை. எதிரிகள் எண்ணிக்கையில் ஒன்று கூடுவதும் நடக்கிறது” என்ற விவேகானந்தரின் இந்துத்துவா சிந்தனையைப் படித்த அசீமானந்தா தன்னை முழுவதுமாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்காக ஒப்படைத்துக் கொண்டார். தன்னுடைய 31 ஆம் வயதில் சன்யாசியானர். அன்று முதல் தன்னுடைய நவகுமார் சர்க்கார் என்ற பெயரை அசீமானந்தா என்று மாற்றிக்கொண்டார்.

‘அசீமானந்தம்’ என்றால் எல்லையற்ற மகிழ்ச்சி என்று பொருளாம். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பழங்குடியினப் பிரிவான வனவாசி கல்யாண் ஆசிரமம் என்ற அமைப்பில் தன் வாழ்நாளில் பெரும்பகுதியைக் கழித்தவர். இதன் மூலம் பழங்குடியின மக்கள் மதம் மாறாமல் தடுத்ததாகவும், கிறித்தவ மிஷனரிகளின் செல்வாக்கை தான் குறைத்தாகவும் அவரே பெருமை பட்டுக் கொள்கின்றார். இவரின் அடிப்படையான நோக்கம் பழங்குடியின மக்களின் வாழ்க்கையை முன்னேற்றுவது கிடையாது, அவர்கள் வேறு மதம் நோக்கி செல்லக்கூடாது என்பதுதான்.

இப்படி வனவாசி கல்யாண் ஆசிரமத்தில் சேர்ந்து தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்த அசீமானந்தா ‘கார்வாப்சி’ செய்வதில் புகழ்பெற்றவர். ஆயிரக்கணக்கான மக்களை இவர் தாய்மதம் திரும்புதல் என்ற பெயரில் இந்து மதத்திற்கு மாற்றியிருக்கின்றார். இதனால் இவர் பெயர் ஆர்.எஸ்.எஸ் வட்டாரத்தில் மிகப்பிரபலம். வெறும் மதத்தைப் பரப்புதல் என்ற எல்லையில் இருந்து முஸ்லிம் மக்களை பழிவாங்க வேண்டும் என்ற திட்டத்துடன் லெப்டினண்ட் கர்னல் ஸ்ரீகாந்த் புரோகித், பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரீஷத்தின் தேசிய செயற்குழு உறுப்பினர் பிரக்கியா சிங் தாகூர், இந்தூர் மாவட்ட ஆர்.எஸ்.எஸ் முன்னாள் தலைவர் சுனில் ஜோஷி ஆகியோருடன் சேர்ந்து சதித்திட்டம் செய்து குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். இதன்படி 2007 ஆம் ஆண்டு பிப்ரவரி 18 அன்று டெல்லியில் இருந்து பாகிஸ்தான் புறப்பட்ட சம்ஜெளதா விரைவு வண்டியில் குண்டுவைத்தனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். அடுத்து 2007 ஆம் ஆண்டு மெக்கா மசூதி அருகே இவர்கள் வைத்த குண்டுவெடித்து 11 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு அக்டோபர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீர் தர்க்காவில் வெடித்த குண்டில் மூன்று பேர் உயிரிழந்தனர். செப்டம்பர் 2006 மற்றும் செப்டம்பர் 2008 இல் மலேகானில் நடந்த இரு தாக்குதல்களில் மொத்தம் 37 பேர் உயிழந்தனர்.

இந்தக் குண்டுவெடிப்புகள் அனைத்தும் மோகன் பகவத்தின் ஒப்புதலோடு செய்யப்பட்டது என்பதைத் தன்னுடைய பேட்டியில் அசீமானந்தா கூறியிருக்கின்றார். மோகன் பகவத் தன்னை சந்தித்து “இது நடப்பது மிக முக்கியம். ஆனால் இதில் சங்கம் சம்பந்தப்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தன்னிடம் கூறியதாக அசீமானந்தா தெரிவித்தார். இந்த வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான சுனில் ஜோஷி 2007 ஆம் ஆண்டு டிசம்பரில் 29 அன்று மத்தியப் பிரதேசத்தில் உள்ள அவரது அம்மா வீட்டருகே மர்ம நபர்களால் துப்பாக்கியில் சுடப்பட்டு உரியிழந்து கிடந்தார். மேலும் இந்த வழக்கு விசாரணையை நடத்திவந்த மும்பை பயங்கரவாத தடுப்புப்பிரிவின் தலைவர் ஹேமந்த் கர்காரே மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் நவம்பர் 26 அன்று மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆரம்பம் முதல் மர்மமான பல சம்பவங்கள் நடந்துள்ளன. எப்படி மோடி, குஜராத் கலவர வழக்கில் இருந்து பல அசைக்க முடியாத வாக்குமூலங்கள் இருந்தும் மோசடியான முறையில் விடுவிக்கப்பட்டாரோ அதே போல இந்த அசீமானந்தாவும் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இப்படி நூற்றுக்கணக்கான பேரை படுகொலை செய்த இந்த ஆர்.எஸ்.எஸ் பொறுக்கி ஒரு கோழையைப் போல ஹரித்வார் அருகே ஒரு கிராமத்தில் பதுங்கியிருந்த போது சி.பி.ஐ ஆல் கைது செய்யப்பட்டான். மறைந்திருந்து தனக்குப் பிடிக்காதவர்களைக் குண்டுவைத்தும், துப்பாக்கியால் சுட்டும் கொலைசெய்யும் இந்தப் பயங்கரவாதக் கும்பல் கோழைகளைப் போல ஓடி ஒளிந்து கொள்கின்றார்கள். தயிர் சோத்தையும், வெண்பொங்கலையும் தின்றுவிட்டு வீரம் பேசும் பொறுக்கிகளின் உண்மையான வீரம் இதுதான். மோகன் பகவத்துக்கு மட்டுமின்றி மோடி போன்றவர்களுக்கும் அசீமானந்தாவின் குண்டுவைப்புச் சதிகள் தெரிந்தே இருந்தன. 2005 டிசம்பரில் அசீமானந்தாவிற்கு ஒரு லட்சம் ரூபாய் விருது, கோல்வாக்கார் நூற்றாண்டையொட்டி கொடுக்கப்பட்டது. இந்த விழாவில் முரளி மனோகர் ஜோஷியும் கலந்துகொண்டார். ஆனால் வழக்கம் போல இப்போது ஆர்.எஸ்.எஸ் காலிகள் அசீமானந்தாவுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்னாலும் சொல்வார்கள்.

இந்திய நீதிமன்றங்களைப் பொருத்தவரை ஆர்.எஸ்.எஸ் காலிகளைத் தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும், இஸ்லாமியர்களை தண்டிப்பதற்கு ஒரு அளவுகோலையும் எப்போதும் பயன்படுத்திவருகின்றன. அப்சல் குருவுக்கும், யாக்கூப் மேமனுக்கு ஒரு சட்டப் புத்தகத்தையும், மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களுக்கு மனுவின் சட்டப் புத்தகத்தையும் வைத்துத் தீர்ப்பு வழங்குகின்றன. இந்திய சமூகத்தின் பொது மனசாட்சி எப்போதும் முஸ்லிம்களின் உயிரையும், தலித்துகளின் உயிரையும் மட்டும் தான் காவு கேட்கின்றது. அது மோடி, அமித்ஷா, அசீமானந்தா போன்றவர்களை கடவுளுக்கு நிகராக பார்க்க பழக்கப்படுத்தப்பட்டு விட்டது. அசீமாந்தா மீது குற்றம் இல்லை என என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் இப்போது விடுவித்துவிட்டது. என்.ஐ.ஏ, சி.பி.ஐ போன்றவற்றிற்கு ஆதாரமே இல்லாமல் ஒருவனை சிக்கவைத்து அவன் கதையை முடிக்கவும் தெரியும், அனைத்து ஆதாரங்களும் இருந்தாலும் ஒருவனை அப்பாவி என தப்புவிக்கவும் தெரியும். அதன் வேலையே ஆளும் அரசுக்கு வாலாட்டி வேலை பார்ப்பதுதான். இனிமேல் என்ன நடக்கும், மோடி தன்னுடைய ராஜகுருவுக்கு எதாவது பதவிகள் தந்து அவரை கெளரவப்படுத்தலாம். இல்லை சுனில்ஜோஷி போன்றவர்களுக்கு நிகழ்ந்தது போன்ற நிலைமையை தன்னுடைய கூலிப்படையை பயன்படுத்தி அசீமானந்தாவிற்கும் செய்து முடிக்கலாம். ஆனால் கண்டிப்பாக ஏதாவது ஒன்று நிச்சயம் நடக்கும்.

இது எல்லாம் இந்தியா இனி ஜனநாயக நாடு என்ற கிழிந்து போன முகமூடியையும் கிழித்து எறிந்துவிட்டு அம்மணமாக பார்ப்பன சனாதன தர்மத்தைச் சட்டமாக ஏற்றுக்கொண்ட நாடு என்ற நிலையை எட்டுவதற்கான முன்னோட்டங்கள் ஆகும். இனிமேல் நீதிமன்றங்கள் மூலம் வழக்காடி தங்களுடைய காவிப்படையினரை வெளியே எடுப்பதைவிட நேரடியாக சிறையைத் தகர்த்து, சினிமா படத்தில் வருவது போன்று வெளியே எடுக்கும் நிலை தொலைவில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகின்றது. இனி யாரை எல்லாம் நாங்கள் கொல்லப் போகின்றோம் என்பதை மோடி ‘மான் கி பாத்’ நிகழ்ச்சியில் முன்கூட்டியே சொல்லிவிட்டுப் போட்டுத்தள்ளும் காலம் நம்மை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றது. வலதுசாரிப் பாசிசம் எல்லாம் ஒரே அணியில் திரண்டு வருகின்றது. ஆனால் இடதுசாரி சித்தாந்தம் தங்களுக்குள் நூற்றுக்கணக்கில் பிளவுபட்டுச் சண்டையிட்டுக்கொண்டு, மறைமுகமாக பாசிச சித்தாந்தத்தின் வெற்றிக்கு துணை செய்துகொண்டு இருக்கின்றது. இந்த நிலை நீடித்தால் அசீமானந்தாக்கள் சட்டத்தின் துணையுடன் அடுத்த குண்டுவெடிப்பை நிகழ்த்தத் தயங்க மாட்டார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

- செ.கார்கி

Friday, January 27, 2017

அறிவோம் இஸ்லாம் - நற்குணங்களின் தாயகம்

அறிவோம் இஸ்லாம் - நற்குணங்களின் தாயகம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கள் மீது அன்பும் பாசமும் கருணையும் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களுடன் மிக அழகிய முறையில் ஒழுக்கத்துடன் நடந்து கொண்டார்கள்.

மக்களில் மிக உன்னதமான குணத்தை அவர்கள் பெற்றிருந்தார்கள். அவர்களிடம் எந்தக் கெட்ட குணமும் இருந்ததில்லை. அவர்கள் இயற்கையாகவோ செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவராக இருந்ததில்லை.

'உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே' என்று அவர்கள் கூறுவார்கள். குழந்தைகள் முதல் அனைவருக்கும் அவர்களே முதலில் ஸலாம் கூறுவார்கள். பெரியவர் களுக்கு கண்ணியமும், சிறுவர்களுக்கு இரக்கமும் காட்டுவார்கள்.

தேவையுடையோருக்கு உதவி செய்வார்கள். புதியவர்களுடன் நட்புடன் நடந்து கொள்வார்கள். தனது பணியாளரை 'சீ' என்ற சொல்லால்கூட சுட்டியதில்லை. ஒரு செயலைச் செய்ததற்காகவோ செய்யாமல் போனதற்காகவோ யாரையும் கண்டித்ததும் இல்லை; கடிந்து கொண்டதும் இல்லை.
நபிகளார் தெள்ளத்தெளிவாக இலக்கிய நயத்துடன் பேசுபவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசு கிறார்கள் என்றால், அதை (வார்த்தை வார்த்தையாக, எழுத்து எழுத்தாக கணக்கிட்டு) எண்ணக்கூடியவர் எண்ணியிருந்தால், ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். அந்த அளவுக்கு நிறுத்தி நிதானமாக பேசி வந்தார்கள். இதனால் மக்களில் மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார்கள்.
இரண்டு விஷயங்களில் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அவர்களுக்கு இரண்டு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டால் அதில் நபிகளார் மிக எளிதானவற்றையே எடுத்துக் கொள்வார்கள். ஆனால் அது பாவமாக இருக்கக் கூடாது. அது பாவமானதாக இருந்தால் அதை விட்டு வெகுதூரம் சென்று விடுவார்கள்.
நபிகளார் கணக்கிடமுடியாத அளவுக்கு தான, தர்மங்களை வழங்கி வந்தார்கள். வறுமைக்கு அஞ்சாமல், ஏழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் செலவு செய்தார்கள். அவர்கள் மக்களில் மிகக் கொடைத் தன்மை உடையவர்களாக இருந்தார்கள்.

நபிகளாரிடம் ஏதாவது ஒன்று கேட்கப்பட்டு, அவர்கள் அதை 'இல்லை' என்று சொன்னதில்லை. தன்னைப் பின்பற்றியவர்களை 'தொண்டர்கள்', 'சீடர்கள்' என்ற அடைமொழி களால் அழைக்காமல், 'தோழர்கள்' என்று வாஞ்சையோடு அழைத்தார்கள். அந்தத் தோழர்களுடன் அளப்பரிய நேசத்துடன் பழகுவார்கள்.

அவர்களில் யாராவது மரணித்து விட்டால், அவர்களது 'ஜனாஸா'க்களில் (இறுதி நிகழ்ச்சிகளில்) தவறாது பங்கேற்பார்கள். ஏழையை அவர்களது இல்லாமை காரணமாக இளக்காரமாகப் பார்க்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாக்குறுதி கொடுத்தால் அதை மீற மாட்டார்கள். அவர்கள் எந்த உணவையும் ஒருபோதும் குறை கூறியதில்லை. அவர்கள் அதை விரும்பினால் உண்பார்கள். இல்லையென்றால் விட்டு விடுவார்கள்.

கல்வி, கண்ணியம், பொறுமை, சகிப்புத் தன்மை, வெட்கம், நம்பிக்கை அனைத்தும் நிறைந்ததாக நபிகளாரின் சபை இருந்தது. அங்கு உரத்த குரல்கள் ஒலிக்காது. கண்ணியத்திற்குப் பங்கம் வராது.

நபிகளார் நன்மையானவற்றைத் தவிர வேறெதையும் பேச மாட்டார்கள். அவர்கள் பேசினால் சபையோர் அமைதி காப்பார்கள். நபிகளார் அமைதியானால் தோழர்கள் பேசுவார்கள். அப்போது தோழர்கள் பேசுவதற்குப் போட்டி போட மாட்டார்கள். யாராவது பேசத் தொடங்கினால் அவர் முடிக்கும் வரை அவருக்காக அமைதி காப்பார்கள். சபைகளில் கண்ணியத்திற்குரியவர்களாகக் காட்சியளிப்பார்கள்.

தங்களது உடல் உறுப்புகளில் எதையும் வெளிக்காட்ட மாட்டார்கள். தேவையற்றதைப் பேச மாட்டார்கள். அதிகமதிகம் மவுனம் காப்பார்கள். அவர்களின் பேச்சு தெளிவானதாக இருக்கும். தேவையை விட அதிகமாகவோ குறைவானதாகவோ இருக்காது.

சகித்துக் கொள்வதும், பொறுத்துப் போவதும், சக்தியிருந்து மன்னிப்பதும், இன்னல்களை இன்முகத்தோடு ஏற்றுக் கொள்வதும் நபிகளாருக்கு இறைவன் வழங்கிய இயற்கைப் பண்புகளாகும்.

அவர்கள் வீரமும் ஈர நெஞ்சமும் கொண்டவர்கள். போர்க் களத்தில் மலை குலைந்தாலும், நிலைகுலையாதவர்களாக இருந்தார்கள். தடுமாற்றம் இல்லாமல், புறமுதுகு காட்டாமல் எதிரிகளை எதிர்த்து நின்றார்கள்.

திரை மறைவில் உள்ள கன்னிப் பெண்களை விட அதிக நாணம் உள்ளவர்களாக நபிகளார் இருந்தார்கள். எவரது முகத்தையும் அவர்கள் ஆழமாக உற்று நோக்கியதில்லை. பார்வையைக் கீழ் நோக்கி வைத்திருப்பார்கள். வெட்கத்தினாலும் உயர் பண்பின் காரணத்தாலும் யாரையும் வெறுப்பூட்டும்படி பேச மாட்டார்கள்.

ஒருவரைப் பற்றி விரும்பாத செய்தி கிடைத்தால், 'அவர் ஏன் இவ்வாறு செய்கிறார்?' என்று கேட்பார்கள். அவரது பெயரை குறிப்பிட்டு சங்கடப்படுத்த மாட்டார்கள்.

உயர் பதவியில் இருப்போர் தனது குடும்ப உறுப்பினர்களுக்கும், உறவினர்களுக்கும் சலுகைகள் வழங்குவது என்பது காலங்காலமாக இருந்து வரும் நடைமுறையாகும். உயர் பதவியில் இருந்தாலும் பொது நிதியில் இருந்து ஒரு பேரீச்சம்பழத்தைக்கூட எடுக்கக் கூடாது என்ற கொள்கையில் நபிகளார் உறுதியாக இருந்தார்கள்.

ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்த்தப்பட்ட ஜாதி, முஸ்லிம்-முஸ்லிம் அல்லாதோர் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் சமநீதி வழங்கினார்கள். மொத்தத்தில் நபிகள் நாயகம், நற்குணத்தின் தாயகமாகவே திகழ்ந்தார்கள்.

'அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது' (திருக்குர்ஆன்-33:21) என்பது இறை வாக்கு.

குடும்பத் தலைவராக, போதகராக, போர்ப்படைத் தளபதியாக, அப்பழுக்கற்ற ஆட்சியாளராக, இறைவனின் இறுதித் தூதராக விளங்கிய நபிகளார், வாழ்வின் எல்லாத் துறைகளிலும் முன்மாதிரியாக வாழ்ந்து காட்டினார்கள்.

'குர்ஆன் கூறும் அனைத்துப் போதனைகளுக்கும் அவர்களது வாழ்க்கையே ஒரு சான்றாக இருந்தது' என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை ஆகும்.

Tuesday, January 19, 2016

தற்கொலைகளை தடுக்க முடியாதா?





படிப்பில் எந்த குறையும் இல்லை: தோற்றத்திலும் எந்த குறைவும் இல்லை: சிந்தனையிலும் எந்த குறையும் சொல்ல முடியாது:. ஆனால் ரோஹித் என்ற அந்த ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மெத்த படித்த மேதாவிகள்தான் அதிக தற்கொலையை நாடுகின்றனர்.

இந்தியாவிலேயே அதிகம் தற்கொலை செய்து கொள்பவர்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. படிப்பு செல்வம் எல்லாம் இருந்தும் மனதில் அமைதி இல்லை. பட தயாரிப்பாளர் ஜிவிக்கு இல்லாத செல்வாக்கா? பண பலமா? ஆனாலும் அவரும் தற்கொலையே தீர்வு என்று செல்கிறார்.

அதே நேரம் உங்கள் அருகில் இருக்கும் இஸ்லாமியர்களை நோட்டமிடுங்கள். தற்கொலையின் நினைவே அவர்களுக்கு இருக்காது. பெற்ற மகன் இறந்தாலும் பெற்ற தாயே இறந்தாலும் 'இறைவன் விதித்தது அவ்வளவுதான்' என்று கூறி வெகு சுலபமாக அதனை எடுத்துக் கொள்வார்கள். இந்தியாவை எடுத்துக் கொண்டால் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் இஸ்லாமியர்கள். ஆனால் எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தற்கொலையை நாடுவதில்லை. ஏனெனில் அவர்களிடம் இருப்பது அசைக்க முடியாத இறை நம்பிக்கை.

உலகில் ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக உலக சுகாதார கழகம் தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த ஆய்வு அறிக்கையின் வரை படத்தைத்தான் நாம் பார்க்கிறோம். ஆச்சரியமாக இந்த வரை படத்தில் இஸ்லாமிய நாடுகள் தற்கொலை விகிதத்தில் மிகவும் பின்தங்கியுள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் இந்த பட்டியலில் முற்றிலுமாக வரவில்லை.

கிறித்தவர்கள், நாத்திகர்கள், இந்துக்கள், யூதர்கள், சீனர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எவரையுமே இந்த தற்கொலையானது விட்டு வைக்கவில்லை. அந்த அளவு மக்களின் வாழ்வு முறை நிம்மதியற்று போய்க் கொண்டுள்ளது. மன அமைதி இழந்த மனிதன் உடன் தற்கொலையை நாடுகிறான்.

மனச்சிதைவு ஏற்பட்டு தற்கொலைகளை நாடுவோரின் புள்ளி விபரங்களை இனி பார்ப்போம்.

அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரம் ஒன்றை தேசிய குற்றப்பிரிவு அமைப்பு (என்சிஆர்பி) வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு மட்டும், ஒரு லட்சத்து 35 ஆயிரம் பேர் இந்தியாவில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்த எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அந்த அதிர்ச்சியளிக்கும் புள்ளி விபரம்.

குடும்பப் பிரச்னை காரணமாக 24.3, தீராத நோயால் 19.6, வறுமையால் 1.7, காதல் விவகாரத்தால் 3.4, போதை பழக்கவழக்கங்களால் 2.7, வரதட்சணையால் 2.4, கடன் தொல்லையால் 2.2… என்ற சதவிகிதத்தில் தங்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

மாநிலங்கள் அளவில் ஒப்பிடும்போது மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 16 ஆயிரத்து 492 பேரும், தமிழகத்தில் 15 ஆயிரத்து 963 பேரும், மகாராஷ்டிராவில் 15 ஆயிரத்து 947 பேரும், ஆந்திராவில் 15 ஆயிரத்து 77 பேரும், கர்நாடகாவில் 12 ஆயிரத்து 622 பேரும் கடந்த 2011ம் ஆண்டில் தற்கொலை செய்துள்ளனர். நாட்டின் மொத்த தற்கொலை எண்ணிக்கையில் இந்த ஐந்து மாநிலங்களின் சதவிகிதம் மட்டும் 56.2. இதர 43.8 சதவிகித தற்கொலைகள் மற்ற 23 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் நடந்துள்ளதாக புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

theguardian
04-09-2014

மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் எனது முப்பாட்டன் ராமசாமியா? பத்மனாபனா? கிருஷ்ண மூர்த்தியா? யாரென்றே தெரியாது. ஆனாலும் ஏதோ ஒரு சாதிப்பிரிவிலிருந்து வந்துள்ளேன். இன்று அந்த சாதியும் துடைத்தெறியப்பட்டு உலக முஸ்லிம்களில் ஒருவனாக உள்ளேன். மனச் சிதைவு என்பது என்னையும் என்னைப் போன்றவர்களையும் சிறிதும் அண்ட விடாது ஐந்து வேளை தொழுகை காப்பாற்றுகிறது. நாங்கள் தொழுவதால் இறைவனுக்கு தகுதி உயர்ந்து விடுவதில்லை. எங்களின் மன நிலையை சீராக்கி கொள்ள இந்த தொழுகை பயன்படுகிறது

எல்லா புகழும் இறைவனுக்கே.....

-----------------------------------------------------------

நபித் தோழர் அனஸ் அறிவித்தார்: "நபி அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி அவர்கள் 'அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன பெரும் பாவங்களாகும்" என்று கூறினார்கள். [நூல்;புஹாரி எண் 2653 ]

உங்கள் கைகளாலேயே நீங்கள் அழிவை தேடிக்கொள்ளதீர்கள் ! -அல் குர்ஆன்(2:195)

உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள் ! அல்லாஹ் உங்கள் மீது மிக கருணை உள்ளவனாக இருக்கிறான்!-அல் குர்ஆன் (4:29)

'நம்பிக்கைக் கொண்டோரின் உள்ளங்கள் இறைவனின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! இறைவனின் நினைவால்தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன'

குர்ஆன் 13:28





Monday, January 18, 2016

இந்துக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்த இஸ்லாமிய அமைப்பு!



பரங்கிப் பேட்டை ஆரிய நாட்டு கிழக்குத் தெருவைச் சேர்ந்த பிரதாப், தியாகராஜன், மணிகண்டன், குப்புசாமி ஆகிய நான்கு பேரின் கூரை வீடுகளும் சென்ற ஜனவரி ஏழாம் தேதி தீ விபத்தால் முற்றிலும் எரிந்து சாம்பலானது. ஏழைகளான இவர்கள் நால்வரும் வீட்டை புணரமைக்க முடியாமல் திகைத்து நின்றனர். இதனை கேள்விப்பட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் பரங்கிப் பட்டை கிளை அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க முன் வந்தது. 60 ஆயிரம் செலவு செய்து அந்த ஏழை மக்களின் கூரை வீடுகளை செப்பனிட்டுக் கொடுத்தது.

மத நல்லிணக்கம் என்பதற்கு பெயர் இதுதான். ஒரு மதத்தவரின் பழக்கங்களை மற்ற மதத்தவர் பின் பற்றுவதன் மூலம் மத நல்லிணக்கம் வளராது. குழப்பமே மிஞ்சும். ஏகத்துவவாதிகளை பொறுத்த வரை மார்க்க விஷயங்களில் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள். அதே நேரம் மனிதாபிமான உதவிகள் செய்வதில் மத வேறுபாடுகளைக் கடந்து முன்னணியில் இருப்பார்கள். சென்னை மழை வெள்ளத்திலும் அந்த மனிதாபிமானத்தைப் பார்த்தோம். இன்று பரங்கிப் பேட்டையிலும் அதே மனிதாபிமானத்தைப் பார்கிறோம்.

எல்லா புகழும் இறைவனுக்கே!...

Friday, January 15, 2016

கிரிஷ் என்ற இளைஞரின் வாழ்வை மாற்றிய இஸ்லாம்!



இந்து மதத்தில் ஆழ்ந்த பிடிப்புடையவர் சகோதரர் கிரிஷ். ஆன்மீக தேடலினால் பல மதங்களையும் ஆய்வு செய்தார். தனது பூர்வீக இந்து மதத்தின் ஆணி வேர் இஸ்லாம் என்பதை தேடலில் தெரிந்து கொண்டார். சனாதன தர்மத்தை போதிக்கும் இஸ்லாத்தை தனது வாழ்வியலாக ஏற்றுக் கொண்டார். தனது பெயரையும் முஹம்மது இஷாக் என்று மாற்றிக் கொண்டார். பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் தற்போது அழைப்புப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். சென்ற 2014 ஆம் ஆண்டு மெக்கா சென்று ஹஜ் பயணத்தையும் முடித்துள்ளார்.

இஸ்லாத்தை உளப்பூர்வமாக ஏற்றவுடன் அவர்களின் முகத்தில் ஒரு தெய்வீககலை தொற்றிக் கொள்வதை பார்த்து பிரமிக்கிறோம். இறை மார்க்கமல்லவா!

இவருடைய வாழ்வு இம்மையிலும் மறுமையிலும் சிறப்பாக அமைய நாமும் பிரார்த்திப்போமாக!

தம் வாய்களைக் கொண்டே இறைவனின் ஒளியை ஊதி அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்த போதிலும் இறைவன் தன் ஒளியை பூர்த்தியாக்காமல் இருக்க மாட்டான்.

(அல்குர்ஆன் : 9:32)

Thursday, January 14, 2016

தர்ஹா கலாசாரம் இந்து சகோதரர்களையும் வழிகெடுக்கிறது!

தீபம் ஏற்றி ஆராதனை செய்தல்: எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் எண்ணெய்யை புனிதமாக கருதுவது: குத்து விளக்கு ஏற்றி வைத்தல்: ...

Posted by Nazeer Ahamed on Thursday, January 14, 2016

தீபம் ஏற்றி ஆராதனை செய்தல்: எரிந்து கொண்டிருக்கும் விளக்கின் எண்ணெய்யை புனிதமாக கருதுவது: குத்து விளக்கு ஏற்றி வைத்தல்: சாமி சிலைக்கு புடவை கட்டி விடுவது போல சமாதிக்கு சால்வை போர்த்துவது: அங்கு பால் ஊற்றினால் இங்கு சந்தனம் பூசுவது: அங்கு தேர் இழுத்தால் இங்கு சந்தனக் கூடு இழுத்தல்: அங்கு மந்திரம் ஓதி திண் பண்டங்கள் கொடுப்பது: இங்கு ஃபாத்திஹா ஓதி தின்பண்டங்கள் வழங்குவது:

அத்தனையும் பார்பனிய கலாசாரம்: அதனை அப்படியே சில பெயர் மாற்றங்களோடு தர்ஹாக்களில் அரங்கேற்றப்படுவதைப் பார்க்கிறோம்.

முன்பு யூதர்கள் நபிகள் காலத்தில் இஸ்லாத்தை அழிக்க இஸ்லாமியராக மாறி பல கட்டுக்கதைகளை இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றியதை நாம் அறிவோம். அந்த நபி மொழிகளை எல்லாம் தரம் பிரித்து தற்போது அறிஞர்கள் உண்மையை கண்டறிந்துள்ளனர்.

அதே போல்தான் இந்தியாவில் இஸ்லாத்தின் வளர்ச்சியை தடுக்க பலர் இஸ்லாமியராக மாறி இது போன்ற பழக்கங்களை புகுத்தி விட்டனர். குர்ஆனின் மொழி பெயர்ப்பு அன்று அந்த மக்களிடம் இல்லாததால் தர்ஹா கலாசாரத்தை அன்றைய மக்கள் அவ்வளவாக எதிர்க்கவில்லை.. அது இன்று இஸ்லாத்தின் ஒரு அங்கமாகவே இந்தியாவில் மட்டும் மாறி விட்டது.

தர்ஹாக்களின் செயல்பாடுகளை வைத்து இன்று வரை எந்த இந்துவாவது இஸ்லாத்தை ஏற்றிருக்கிறாரா? பல வருடங்கள் தர்ஹாவுக்கு வரும் இந்துக்களிடம் எந்த மாற்றத்தையும் காண முடியாது. தர்ஹாவுக்கும் போவார்: காளி கோவிலுக்கும் போவார்: மாதா கோவிலுக்கும் போவார்: அவரைப் பொருத்தவரை எந்த வித்தியாசமும் இல்லை. இது மத ஒற்றுமையை கொடுக்காது. மேலும் குழப்பத்தைத்தான் உண்டு பண்ணும்.

சன் டிவியின் இந்த சீரியலையும் பாருங்கள். இதனை எடுத்த டைரக்டரும் கதாசியரியரும் இஸ்லாத்தை எவ்வாறு புரிந்து வைத்திருக்கிறார்கள்? இன்றைய அறிவியலுக்கும் சவால் விட்டுக் கொண்டிருக்கும் குர்ஆன் எங்கே? மயிலிறகால் வருடி ஊதி விடும் இந்த மூடன் எங்கே? வர்ணாசிரமத்தையும், புரோகிதத்தையும், மூடப்பழக்கத்தையும் ஒழிக்க வந்த இஸ்லாத்தின் பெயரால் இந்த கொடூரங்கள் பரவலாக அரங்கேற்றப்படுகிறது.

ஏகத்துவ வாதிகள் கடந்த 30 வருடங்களாக செய்த தொடர் பிரச்சாரத்தின் காரணமாக இன்று இறைவனின் உதவியால் தமிழகத்தின் பெரும்பாலான இஸ்லாமிய இளைய தலைமுறையினர் தர்ஹா மாயையிலிருந்து விடுபட்டுள்ளனர். விலகி நிற்கும் மற்ற இஸ்லாமியர்களும் ஏகத்துவவாதிகளோடு கைகோர்த்து தர்ஹா வழிபாட்டை இல்லாதொழிப்பார்களாக!

பள்ளிவாசல்கள் அல்லாஹ்வுக்கே உரியன. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்!

குர்ஆன் 72:18


ஹஜ்ரத் அலி அவர்கள் அபுல் ஹய்யாஜ் அல் அஸதியை நோக்கி ‘அறிந்து கொள்! நபிகள் நாயகம் என்னை எதற்காக அனுப்பினார்களோ அதற்காக நானும் உன்னை அனுப்புகின்றேன். பூமியின் மட்டத்தை விட்டும் உயர்ந்திருக்கின்ற எந்த ஒரு சமாதியையும் சமப்படுத்தாமல் விட்டு விடாதே எனப்பணித்து அனுப்பினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்:1662)

Wednesday, January 13, 2016

பெரியார்தாசன் இஸ்லாத்தை சொல்லும் அழகைப் பாருங்கள்!

ஒரு தாழ்த்தப்பட்டவரின் நியாயமான கேள்விகளுக்கு பெரியார்தாசன் பதிலளிக்கிறார்!'நாங்க இந்தியாவிலதான் பிறந்தோம்: எங்கள இந்த...

Posted by Nazeer Ahamed on Wednesday, January 13, 2016

ஒரு தாழ்த்தப்பட்டவரின் நியாயமான கேள்விகளுக்கு பெரியார்தாசன் பதிலளிக்கிறார்!

'நாங்க இந்தியாவிலதான் பிறந்தோம்: எங்கள இந்து என்றுதான் சொல்றாங்க: எங்கள தாழ்த்தப்பட்டவங்க என்று சொல்லி கோவிலுக்குள்ள வர வேண்டாங்கறாங்க... நாங்க செஞ்ச செருப்பை அவங்க போடறாங்க: ஆனா.. எங்கள போடக் கூடாதுங்கறாங்க: எங்க எருமை மாடு குளிக்குதுங்க குளத்துல... எங்கள குளிக்கக் கூடாதுன்னு சொல்றாங்களே... இதெல்லாம் இஸ்லாத்துல சேர்ந்துட்டா போயுடுமா... கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க... '

Tuesday, January 12, 2016

இந்து - இஸ்லாம் - கிறித்தவம் - ஓர் ஒப்பீடு



இந்துத்வா அடிப்படையில் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் பிஜேபி அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு 'இந்து' என்பதன் விளக்கம் தெரியாதாம். சரி நமக்கு தெரிந்ததை சொல்லி வைப்போம்....

இந்து - இஸ்லாம் - கிறித்தவம் - ஓர் ஒப்பீடு

இந்து என்னும் பெயரானது இடைக் காலத்தில் இடப்பட்ட பெயராகும் என்று சுவாமி விவேகானந்தரும், நேருவும், சங்கராச்சாரியாரும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர். ஆதியிலே அது சனாதன தர்மம் என்றும் ஷஷ்வத் தர்மம் ஸ்வ தர்மம் என்றும் அழைக்கப் பட்டுவந்தது.

சனாதன என்னும் சமஸ்கிரத சொல்லின் பொருள் நிலையானது, தொடர்ச்சியானது, தொன்மையானது என்பதாகும்.ஷஷ்வத் என்பதற்கு வானையும் பூமியையும் உயர்ந்த எண்ணங்களோடு ஒன்றினைக்கும் நேர்வழி என்று பொருளாகும்.இந்த சனாதனத்தையும் ஷஷ்வத்தையும் ஒன்றினைத்தால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும்.

இறைவன் குர்ஆனிலே இஸ்லாத்தை 'தீனுல் கய்யும' என்று குறிப்பிடுகிறான். 'தீனுல் கய்யும்' என்ற அரபி வார்த்தையைத் தமிழ்ப் படுத்தினால் 'நிலையான நேரான மார்க்கம்' என்ற பொருளைத் தரும். இதன் மூலம் இரண்டு மதத்தின் பெயர்களும் ஒரே விளக்கத்தைக் கொடுக்கின்றன என்று நம்மால் அறிய முடிகிறது.

ஸ்வதர்மம் என்று பகவத் கீதை (18: 45: 47) குறிப்பிடுகிறது.

ஸ்வப்ஹவ நியாக் கர்மம் - 'மார்க்கம் இயற்கையானது. பெற்றோர்களது அல்ல' என்பது இதன் பொருள்.

இதையே தான் 'தீனுல் ஃபித்ரத்' என்று 'இயற்கையான முறையிலான மார்க்கம்' என்று குர்ஆன் குறிப்பிடுகிறது.

இதிலிருந்து சனாதன தர்மம், ஷஷ்வத் தர்மம், ஸ்வதர்மம், என்பதெல்லாம் சமஸ்கிரத மொழியிலமைந்த இஸ்லாத்தின் மறு பெயர்கள் என்று விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஓரிறைக் கொள்கை!

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திருமூலர் மந்திரத்தை அறியாத தமிழர் எவரும் இல்லை எனலாம். 'நட்ட கல்லும் பேசுமோ? நாதன் உள் இருக்கையில்' என்ற சித்தர்கள் பாட்டையும் இன்றும் நாம் மறந்து விட வில்லை. எனவே ஆரியர்கள் சனாதன தர்மத்தை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்கு முன்பே திராவிடர்களாகிய நம் முன்னோர்கள் ஒரே இறைவனை வணங்கியும், சிலை வணக்கத்திற்கு எதிரான கொள்கையையும் கொண்டிருந்தனர் என்பது தெளிவாகிறது.
ஆரியர்களின் வணக்க வழிபாடுகளும் ஆதியில் ஓரிறையைச் சார்ந்தே இருந்துள்ளது. பிற்பாடு ஏற்பட்ட வழக்கம் தான் பல தெய்வ வணக்கம் என்பதை முன்பு பல ஆதாரங்களோடு பார்த்தோம்.

இஸ்லாத்தின் கடவுள் கொள்கை 'லா இலாஹா இல்லல்லாஹ்' இதன் பொருள் 'வணக்கத்துக்குரியவன் இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பதாகும்.

'அல்லாஹ்' என்றதும் ஏதோ அரபு நாட்டுக் கடவுள். முஸ்லிம்களின் குல தெய்வம் என்று எண்ணி விட வேண்டாம். இந்த பிரபஞ்சத்தை படைத்து காத்து அருள் செய்யும் மாபெரும் ஆற்றலுடையவனை தமிழிலே கடவுள் என்றும், ஆங்கிலத்திலே காட் என்றும், ஹிந்தியில் பகவான் என்றும், பார்ஸியிலே குதா என்றும், ஹீப்ரூவிலே எலோய் அல்லது எலோஹிம் என்றும், அராமிக்கில் ஏலோய் அல்லது எல்லோய் என்றும் அழைப்பது போல் அரபி மொழியில் அல்லாஹ் என்று அழைக்கிறோம்.

முஸ்லிம்கள் ஒரே இறைவனை 'அல்லாஹ்' என்னும் பெயர் கொண்டு அழைப்பதற்கு காரணம் அரபு மொழி விசுவாசத்தால் என்று எண்ணிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் என்னும் பெயர் ஏக இறைவனால் அங்கீகரிக்கப் பட்ட ஒரு பெயராகும். இன்னும் அனைத்து மத வேதங்களில் அறிமுகப் படுத்தப் பட்டு அங்கீகரிக்கப் பட்ட பெயராகவும் இருக்கிறது.

இந்து மதத்தின் நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வண வேதத்தின் இறுதியில் 'அல்லாஹ் உபநிஷர்' என்னும் தலைப்பில் ஒரு உபநிஷத்தே இடம் பெறுகிறது. அதில் ஒரு சுலோகம் கூறுகிறது.

'இல்லாம் தபர இல்லாம் இல்லல்லே. இல்லல்லாம் ஓமல்லாம் இல்லல்லாம் தியான நிஸ்வரூபாயா'

இதன் பொருள் : 'அல்லா - அந்த ஏக தெய்வத்திற்கு யாதொரு இணையுமில்லை. சத்திய தெய்வத்தின் ஓம்கார சப்தத்தை வாழ்த்துங்கள்'

பைபிள கூறுகிறது

'அல்லேலூயா' கர்த்தருடைய ஊழியக் காரரே துதியுங்கள். கர்த்தருடைய நாமத்தை துதியுங்கள்.'
113 : 1 - சங்கீதம்

ஹிப்ரு மொழியில் கர்த்தருடைய திரு நாமம் 'அல்லேலூயா' என்று பைபிள் கூறுகிறது. கிறித்தவர்கள் 'அல்லேலூயா' என்று ஜெபிப்பதைப் பார்க்கிறோம்.

'அல்லேலூயா' எனும் பெயரின் இறுதியில் இடம் பெறும் 'யா' என்பது விளிவேற்றுமை சொல்லாகும் யா = (ya)…

'அல்லேலூயா' என்பதை 'யா அல்லோலு' என்று எழுதினாலும் கூறினாலும் பொருள் மாறுவதில்லை.

ஹிப்ரு மொழி என்பது அரபு மொழிக்கு சகோதர மொழியாகும். ஹிப்ரு மொழியிலான 'அல்லேலூயா' அல்லது 'யா அல்லேலு' என்பதற்கு இணையான அரபு மொழி வார்த்தை 'யா அல்லாஹ்' என்பதாகும்.

கிறித்தவர்கள் ஏகஇறைவனை 'யாஅல்லேலு' என்றழைக்கிறார்கள். முஸ்லிம்கள் அதே ஏக இறைவனை 'யா அல்லாஹீ' என்றழைக்கிறார்கள்.

இன்னும் அல்லாஹ் என்னும் சொல்லுக்கு ஆண்பால், பெண்பால கிடையாது. பன்மை கிடையாது. ஆனால் அல்லாஹ் என்னும் சொல்லுக்கு மாற்றமாகப் பயன் படுத்தப்படும்எல்லா சொற்களுக்கும் பண்மையும் பாலும் கற்ப்பிக்கப் படுவதைக் காண்கிறோம். கடவுள் என்பதை கடவுளர்கள் என்றும் ஆண்டவன்என்பதை ஆண்டவர்கள் என்றும GOD – GODS – GODDESS என்றும் கூறுவதைப் பார்க்கிறோம். ஆகவே ஏக இறைவனின் தனித்துவத்தைக் காட்ட அந்த இறையை அல்லாஹ் எனும் பெயர் கொண்டு அழைக்கிறோம்.

அந்த இறைவன் எங்கிருக்கிறான்?

ஏழு வானங்களுக்கு அப்பால் அவனுடைய சிம்மாசன (அர்ஷ்) த்தின் மீதிருக்கிறான் என்று இஸ்லாம் கூறுகிறது.

அர்ரஹ்மான் (அளவற்ற அருளாளன்) அர்ஷின் மீது ஒழுங்குற அமைந்தான்.
20 : 5 - குர்ஆன்

அவனுடைய குர்ஸியும் வானங்களிலும் பூமியிலும் பரவி இருக்கிறது.
2 : 255 - குர்ஆன்

'அவனுடைய குர்ஸி என்பது இறைவனின் பாதத்தின் ஸ்தலமாகும். அர்ஷ் என்பதன் பெறுமதி பற்றி இறைவனைத் தவிர வேறு எவரும் அறிய மாட்டார்கள்.' என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : தாரகுத்னீ, ஹாகிம்

கிறித்தவ வேதமான பைபிள் கூறுகிறது

'கர்த்தருடைய சிம்மாசனம் பரலோகத்தில் இருக்கிறது.'
11 : 4 - சங்கீதம்

இந்து மதம் கூறுகிறது

எங்கு சென்று எதுவும் திரும்புவதில்லையோ அது என்னுடைய உயர்ந்த உறைவிடம் அதை சூரியன் பிரகாசிக்கச் செய்வதில்லை. சந்திரனும் இல்லை. அக்கினியும் இல்லை.
15 : 6 - பகவத் கீதை

மூன்று மார்க்கங்களும் இறைவனின் இருப்பிடத்தைப் பற்றிய செய்தியை ஒன்றாகவே சொல்கின்றன.

இத்தகைய உயர்வான இடத்தில் இருக்கும் ஏக இறைவனை யாரும் கண்டதுண்டா?

'என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது'
7 : 143 - குர்ஆன்

'பார்வைகள் அவனை அடைய முடியாது'
6 : 103 - குர்ஆன்

'தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை'
1 : 18 - யோவான்

'அவன் மகாத்மா காணுதற்கரியவன்'
7 : 19 - பகவத் கீதை

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

'அர்ஜீனா! சென்று விட்டனவும் நிகழ்வனவும், இனி வருவனவும் ஆகிய பொருள்களை நான் அறிவேன். ஆனால் என்னை எவனும் அறியான்.'
7 : 25,26 - பகவத் கீதை

மூன்று மார்க்கங்களுமே இறைவனைக் காண முடியாது. அதற்குரிய சக்தி நம் கண்களுக்கு கொடுக்கப் பட வில்லை என்று கூறுகிறது. ஆனால் மூன்று மதங்களிலும் உள்ள மத குருமார்களில் சிலர் இறைவனை என் கண்ணால் பார்த்தேன் என்றெல்லாம் அவ்வப்போது புருடா விடுவார்கள். பாவம் அவர்களுக்கும் வயிற்றுப் பிழைப்புக்கு மக்களிடம் எதையாவது சொல்ல வேண்டும் அல்லவா!

'இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லை'
32 : 3 - அதர்வண வேதம்

'யார் இயற்கையை வணங்குகிறார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கின்றார்கள்.'
40 : 9 - அதர்வண வேதம்

'அண்டத்தின் முக்கூறு மூலமான மண்ணுலகையும், விண்ணுலகையும் ஆக்கி பொருளனைத்தினையும் தனித்தியங்கி ஆதரவளிப்பவன் அவனே.'
1 : 15 : 4 - ரிக் வேதம்

'அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும், சந்திரனையும் உண்டாக்கினான்.'
10 : 190 : 3 - ரிக் வேதம்

'ஒப்பாரிக்கு உலகை ஆள்பவன், இயங்கும் இயங்காப் பொருள்களுக்கும் தலைவன். ஆன்மாவுக்கு அகத் தூண்டல் அளிப்பவன்.'
1 : 89 : 5 - ரிக் வேதம்

'வல்லமை கொண்ட அந்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்'
8 : 1 : 1 - ரிக் வேதம்

'அந்த வணக்கத்துக்குரியவன் இறைவன் ஒருவன்தான்'
6 : 45 : 16 - ரிக் வேதம்

'இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அனுப்பப் பட்ட இறைவனின் தூதர். எனக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவன். எனக்குப் பின்னர் வரவுள்ள அஹமத் என்ற பெயருடைய தூதரைப் பற்றி நற்செய்தி கூறுபவன்' என்று மேரியின் மகன் ஏசு கூறியதை நினைவூட்டுவீராக.

61 : 6 - குர்ஆன்

ஏசுநாதர் தன் மக்களிடம் 'தனக்குப் பிறகு அகமது என்ற பெயரில் ஒரு தூதர் வர இருக்கிறார்' என்று போதித்ததை இறைவன் இங்கு கோடிட்டுக் காட்டுகிறான்.

Shwetashvatara Upanishad Chapter 4 verse 20

It is mentioned in Shwetashvatara Upanishad

“na samdrse tisthati rupam asya, na caksusa pasyati kas canainam”.
“His form cannot be seen, no one sees Him with the eye”.
(Shwetashvatara Upanishad 4:20)

(The Principal Upanishad by S. Radhakrishnan pg. 737)
(And in Sacred books of the East Volume 15, the Upanishad part II, Page no. 253)

BHAGWAD GEETA 7:20

The most popular amongst all the Hindu Scriptures is the Bhagwad Geeta.

Bhagwad Geeta mentions
“Those whose intelligence has been stolen by material desires worship demigods” that is “Those who are materialistic, they worship demigods” i.e. others as deities besides the True God.
(Bhagwad Geeta 7:20)

It is mentioned in Bhagavad Gita
“He who knows Me as the unborn, as the beginning-less, as the Supreme Lord of all the worlds...”
(Bhagwad Geeta 10:3)

YAJURVEDA
Vedas are the most sacred amongst all the Hindu Scriptures. There are principally 4 Vedas: Rig Ved, Yajur Ved, Sam Ved, and Atharva Ved.

i. Yajurveda Chapter 32, Verse 3

It is mentioned in Yajurveda
“na tasya pratima asti”
“There is no image of Him”

It further says, “as He is unborn, He deserves our worship”.
(Yajurveda 32:3)

(The Yajurveda by Devi Chand M.A. pg. 377)

ii. Yajurveda Chapter 40 Verse 8

It is mentioned in Yajurveda Chapter 40 verse 8
“He is bodiless and pure”.
(Yajurveda 40:8)

(Yajurveda Samhita by Ralph I. H. Griffith pg. 538)

iii. Yajurved Chapter 40 Verse 9

It is mentioned in Yajurved
“Andhatma pravishanti ye assambhuti mupaste”
“They enter darkness, those who worship natural things.”
E.g. worship of natural elements air, water, fire, etc.
(Yajurveda 40:9)

It further continues and says
“They sink deeper in darkness those who worship sambhuti i.e. created things”
E.g. created things such as table, chair, idols, etc.

(Yajurveda Samhita by Ralph T. H. Griffith pg. 538)



மேற்கண்ட வேத வசனங்களின் மூலம் நம் அனைவரையும் படைத்தது ஒரே இறைவன் தான் என்ற முடிவுக்கு வருகிறோம். எனவே நம் கைகளால் படைத்தவைகளை விடுத்து நம்மை படைத்த அந்த ஒரே இறைவனையே வணங்குவோம். இறப்புக்குப் பிறகு சுவனத்தையும் பரிசாக பெறுவோம்.

தகவல் உதவிக்கு நன்றி
ஜாகிர் நாயக், அபு ஆசியா

என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்.

Sunday, January 10, 2016

இஸ்லாமிய பெண்கள் கடத்தலில் தொடர்புடைய பிஜேபி எம்பி!



'ஆல் இந்தியா முஸ்லிம் மஜ்லிஸ்'(AIMMM) ன் உண்மை அறியும் குழு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளது. 12 லிருந்து 15 வயது நிரம்பிய இஸ்லாமிய பெண்களை கிராமங்களிலிருந்து கடத்திச் செல்வது: பிறகு அவர்களை சில காலம் தங்க வைத்து பல இந்து இளைஞர்களைக் கொண்டு வன்புணர்வு செய்விக்க வேண்டியது. சில காலம் கழித்து அந்த பெண்களை இந்து இளைஞர்களோடு வாழ நிர்பந்திக்கப்படுத்துவது. மேலும் சிலருக்கு வாழ்வை சீரழித்து கிராமத்தில் திரும்ப விட்டு விடுவது. இது கடந்த ஒரு வருடங்களாக தொடர்ச்சியாக நடப்பதாக உத்தர பிரதேசத்தின் பல கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். உத்தர பிரதேசத்தின் குஷி நகரில்தான் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இவ்வாறு கடத்தப்பட்ட சிறுமிகள் உபியின் கோரக்பூர் நகருக்கு கொண்டு வரப்படுகின்றனர். இவ்வாறான கடத்தல்களுக்கு ஆதரவாக இருந்து செயல்படுபவர் பிஜேபியின் எம்பி யோகி ஆதித்யநாத் என்ற அதிர்ச்சிகரமான செய்தியை 'முஸ்லிம் மஜ்லிஸ்' கண்டுபிடித்துள்ளது. ஒரு யோகியின் வேலையை பார்த்தீர்களா? இறை பக்தி உடைய ஒருவன் செய்யக் கூடிய செயலா இது? இந்து மதத்துக்கே இது ஒரு இழுக்கல்லவா? இந்து மதத்தை வளர்க்கும் வழி இதுதானா?

-----------------------------------------------

இதே போன்ற வழி முறைகள்தான் சற்று மாறுதலாக தமிழகத்தில் அரங்கேற்றப்படுகின்றன. கல்லூரிக்குச் செல்லும் இளம் இஸ்லாமிய மாணவிகளை காதல் வலையில் விழ வைத்து பின்னர் அவர்களை இந்துக்களாக மணம் புரிந்து கொள்கின்றனர். பெரும்பாலான பெண்களை சுகம் அனுபவித்து விட்டு அவர்களின் ஊருக்கே திருப்பி அனுப்பி விடும் கொடுமையும் நடந்து வருகிறது. இதற்கு பெண்ணை பெற்ற பெற்றோர்களும் காரணம் என்று சொல்வேன். வயது வந்த பெண்களை தக்க ஆண் துணையின்றி கல்லூரிக்கு அனுப்புவதே முதலில் தவறு. தன்னை ஒருவன் 'அழகி' என்று வர்ணித்து விட்டால் மயங்கி விடும் பெண்களே அதிகம். அவர்களின் வயது அப்படி. சினிமாக்களாலும் சீரியல்களாலும் சீரழிந்த சமூகத்துக்கு மத்தியில் நாம் வாழ்ந்து வருகிறோம். கல்லூரிக்கு பாதுகாப்பாக உங்களால் அனுப்ப முடியவில்லையா... அஞ்சல் வழி மூலம் கல்லூரி படிப்பை தொடரச் சொல்லுங்கள். யாரிடம் செல் போனில் பேசுகிறாள் என்பதையும் கண்காணியுங்கள். 'என் மகள் அப்படி எல்லாம் போக மாட்டாள்' என்ற பெற்றோரின் நம்பிக்கையே பல பெண்களின் வாழ்வை சீரழித்துள்ளது. குடும்ப மானமா? பெண்ணின் கல்லூரி படிப்பா என்பதை முடிவு செய்ய வேண்டியது நமது கைகளில்தான் இருக்கிறது.

நம் அனைவரின் குடும்ப பெண்களின் மானத்தையும் இந்த கயவர்களிடம் இருந்து இறைவன் காத்தருள்வானாக!

http://www.coastaldigest.com/index.php/news/82800-yogis-hindu-yuva-vahini-accused-of-abducting-raping-teenage-muslim-girls

இந்து சகோதரருக்கும் இந்துத்வாவுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்!

இந்துத்வாவுக்காக தினம் தினம் பதிவுகள் எழுதி விவாதித்துக் கொண்டிருக்கும் ராம் நிவாஸ் கல்யாண ராமன் கைதையொட்டி நேற்று ஒரு பதிவு இட்டார். அதை அப்படியே தருகிறேன்.....

//வழமையா... ஃபத்வா போட்டு... தக்பீர் சொல்ல பிளான் பண்றவய்ங்க... புதுசா... போலீசு... கோர்ட்டுன்னு... போயிருக்காங்கே...

ஒருவேளை அறிவு வளர்ந்திடுச்சோ....

அய்யய்யோ... இவிங்களுக்கு அறிவுலாம் வளர்ந்திச்சுன்னா...

1400 வருசத்துக்கு முந்தின அரேபிய கலாச்சாரத்தை இங்கே எப்படி நிலைநாட்ட முடியும்..?...

போச்சா.. போச்சா... பி.ஜேவோட இம்புட்டு வருச உழைப்பு மண்ணோட மண்ணாப்போச்சா.....

பார்த்துக்கிட்டே இருங்க..... குரான்ல, ஹதீஸ்ல...... போலீஸ், கோர்ட்டுங்கிற வார்த்தைலாம் இல்லை...
அதனால ஏக இறை கொள்கையை ஏத்துக்கிட்ட ஈமாந்தாரிகள்..... போலீஸ், கோர்ட்டுன்னு போகக்கூடாதுன்னு... ‪‎புதுசா ஒரு‬.....‎ஃபத்வா போடப் போறாய்ங்க‬.....//

நாம் நேரான வழியில் சென்றால் அவர்களுக்கு எரிகிறது பார்த்தீர்களா? நாமும் நரகல் நடையில் எழுத வேண்டும்: அவர்களின் கடவுள்களை திட்டி பதிவு எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்போதுதான் பிஜேபிக்கு ஆள் பிடிக்க முடியும்.

------------------------------------------------------------

இனி இந்து பிற்படுத்தப்பட்ட சகோதரர் ஒருவரின் பதிவையும் அவரின் உண்மையான அன்பையும் இனி பார்போம்.

//இந்துத்துவா சித்தாந்தம் பேசுபவர்களின் வெற்றி இசுலாமியர்களின் உணச்சிவசப்படுதலில் இருக்கிறது என்பதை நீங்கள் புரிந்துக் கொண்டால் இந்துத்துவா கொள்கை பேசுபவர்களை தோல்வியடைச் செய்யலாம்.

இசுலாமியர்களின் உணர்ச்சிகளை தூண்டுவதற்காக எந்த ஒரு இந்துவும் செயல்படுவதில்லை இந்துத்துவா சிந்தணையுடையவர்கள் அதை சரியாக செய்கின்றார்கள்.

இசுலாமியர்கள் அறிவுவசப்பட வேண்டும் உங்களுக்கு எதிரான தாக்குதல்களை அறிவுவசப்பட்டு எதிர்த்து வெற்றி காண வேண்டுமே தவிற உணர்ச்சிவசப்படுதலின் மூலம் அல்ல.

அறிவுவசப்பட்டு எடுக்கும் முடிவும் சட்டத்திற்கு உட்பட்டு இருத்தல் வேண்டும் ஃபேஸ்புக்கில் மத நல்லிணக்கத்தை சீர் குழைக்கும் வகையில் தொடர்ந்து அவதூறு பிரச்சாரம் செய்த கல்யாண் ராமன் போன்றவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி எப்படி சிறையில் அடைத்தீர்களோ அப்படி தான் இருக்க வேண்டும்.

உங்களை அசிங்கப்படுத்துபவர்களை சட்டபடி எதிர் கொள்ளுங்கள் அறவழியில் போராட்டம் செய்யுங்கள் உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள் உங்கள் மீது தவறு இல்லையென்றாலும் அதையே காரணம் காட்டி உண்மையின் பக்கம் இருக்கும் இந்துக்களை உங்களுக்கு எதிராக திருப்பி விடுவார்கள் இந்துத்துவா சக்திகள்.

உங்களின் நல்ல மனதை நான் அறிவேன் நான் புரிந்துக் கொண்டது போல் உண்மையின் பக்கம் நின்று பேச கூடிய இந்துக்களின் மனங்களை கவரும் வகையில் நடந்து கொள்ளுங்கள்.

அனைவரையும் ஒரே நேரத்தில் கவர்ந்து விட முடியாது ஆனால் சிறுக சிறுக முடியும்.

பெரியார் மண்ணில் மதவெறி அரசியல் செய்ய முடியாது பிரிவினைவாதிகளுக்கு இங்கு இடம் இல்லை.

இசுலாமியர்கள் தடித்த வார்த்தைகளை பயன் படுத்தாதீர்கள் மென்மையாகவே பேசுங்கள் உங்கள் தரப்பு நியாயங்களை எல்லோருக்கும் அழகான முறையில் எடுத்து கூறுங்கள் ஒரு நாள் இல்லை ஒரு நாள் அனைவரும் புரிந்து கொள்வார்கள்.

இன்னும் அதிகமாக எழுத வேண்டும் என் மனதில் அவ்வளவு வலிகள் இருக்கிறது ஒவ்வொன்றாக பின் வரும் நாட்களில் கூறுகிறேன்.
என்னை இசுலாமியர் என்று கூறி திட்டும் என் சொந்த மதத்தவர்களை நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம் அவர்கள் காழ்புணர்ச்சியில் பேசுகிறார்கள் இந்துத்துவா கொள்கை என்றால் என்னவென்றே தெரியாமல் புரிதல் இல்லாமல் திட்டி தீர்த்து கொண்டு இருக்கிறார்கள் மென்மையான விளக்களின் மூலம் நான் பதில் கூறி கொள்கிறேன்.

இந்துக்களும் இசுலாமியர்களும் ஒற்றுமையாக என்றென்றும் இருக்க வேண்டும் என்பதே இந்த சாமாணியனின் விருப்பம். நன்றி

Senthil Prakash Selvaraj

செந்தில் பிரகாஷ் //


இந்து சகோதரர்களையும் இந்துத்வா வெறியர்களையும் பிரித்துப் பார்க்க நாம் பழகிக் கொண்டு விட்டால் நம் நாட்டில் 90 சதமான மத மோதல்களை தடுத்து விடலாம். எனது நாட்டை காவி வெறியர்களிடமிருந்து இறைவன் காப்பாற்றுவானாக!

Friday, January 08, 2016

அப்துல் ரஹ்மான் அவர்களுக்கு 'பத்ம பூஷன்' கொடுக்க வேண்டும்!



ஒரு ஆளுக்கு பத்தாயிரம் ரூபாய் என சராசரியாக வைத்து கொண்டாலும் காகா கம்பனியில் இருந்து இந்தியாவுக்கு ஒரு லட்சம் பேர் சம்பாதிக்கும் பணத்தால் அமீரகத்தில் இருந்து வரும் அன்னிய செலாவணி என்பது மட்டும் 100 கோடி ரூபாய்.

வருடத்துக்கு 1200 கோடி ரூபாய். மிகப்பெரிய பணம் காகா அப்துல் ரஹ்மான் அவர்களால் இந்தியா பயன் பெறுகின்றது. சுமார் ஒரு லட்சம் தமிழர்கள் வீட்டு அடுப்பு எரிகின்றது. அவர்கள் வாழ்வு சிறக்கின்றது. அவர்கள் மகள் திருமணம் நடக்குது. அவர்கள் மகன் படிப்பும், மகள் படிப்பு, அவர்கள் சொந்த வீடு என எல்லா கனவும் நனவாகின்றது. கிட்ட தட்ட ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய எல்லா பொறுப்பும் காகா ஏற்கின்றார். அதே போல பல இளைஞர்கள் அங்கே வேலை வாய்ப்புக்கு போவதால் மற்றவர்களுக்கு இங்கே "போட்டி" குறைகின்றது. ஆக எப்படி பார்த்தாலும் காகா அவர்களுக்கு இந்த மறைவுக்கு பின்னராவது பத்மவிபூஷன் தர வேண்டும். பாபா ராம்தேவ் என்ன செஞ்சு கிழிச்சான்? அவனுக்கே பத்ம விருதுக்கு அரசு சிந்திக்கும் போது அப்துல்ரஹ்மான் காகாவுக்கு கண்டிப்பாக பத்ம விருது கொடுத்தே ஆக வேண்டும்.

ஏனெனில் அங்கே ETA கம்பனியில் இருப்பது கீழக்கரை இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல, அங்கே பார்ப்பனர்கள் உள்ளிட்ட இந்துக்கள், கிருத்துவர்கள், இஸ்லாமியர்கள் என எல்லா தமிழர்களும் தான் இருக்கின்றனர். சம நிலையில் இருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் அங்கே மதம் என்பது இல்லை.. இல்லை.. இல்லவே இல்லை..

எனவே அவருக்கு தான் பத்ம விருதுகளில் முதன்மையான விருதை கொடுக்க வேண்டும். இங்கே ராம்தேவ் போன்றவர்களின் மத காழ்ப்புணர்வுகளுக்கு அரசு இடம் கொடுக்காமல் அப்துல்ரஹ்மான் காகாவுக்கு கொடுத்தால் தான் இந்தியாவில் மதசார்பின்மை என்பது
உண்மையாகும்!

- அபிஅப்பா என்கிற தொல்காப்பியன்
மயிலாடுதுறை

Monday, January 04, 2016

நாசா விண்வெளிக்கு அனுப்பிய 'ரோபோ' வா இது!







இஸ்லாம் திருமணத்தை மிக எளிமையாக நடத்த நமக்கு கட்டளையிடுகிறது. இங்கு ஒரு 'ரோபோ' நிற்கிறது. இதற்கு பெயர் மாப்பிள்ளையாம். பெண்ணிடம் வெட்கமில்லாமல் வரதட்சணை வாங்கும் இந்த 'ரோபோ'. இந்த 'ரோபோ' வை தட்டிக் கேட்க வேண்டிய மத குருமார்கள் அதற்கு மாற்றமாக 200, 500, 1000 என்று பணம் வாங்கிக் கொண்டு 'அல் ஃபாத்திஹா' வையும் வெட்கங் கெட்டு ஓதி விட்டு வருவார்கள்.

அதே நேரம் ஏகத்துவ வாதிகள் நடத்தும் 'நபி வழித் திருமணத்தையும்' பாருங்கள். மாப்பிள்ளைக்கும் அங்கு விருந்துக்கு வந்திருப்பவர்களுக்கும் ஏதாவது வித்தியாசம் தெரிகிறதா? இதில் ஒரு மணமகன் 84 கிராம் மஹராக பெண்ணுக்கு கொடுத்து திருமணம் முடிக்கிறார். பெண்ணுக்கு மஹராக ஒரு லட்சம், இரண்டு லட்சம் என்று ஆண்களை கொடுக்கச் சொல்லி இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால் அதற்கு மாற்றமாக பெண்ணிடம் 'வீடு கொடு' 'நகை போட்டு வா' 'விருந்து வை' என்று கூசாமல் கேட்கிறோமே இறைவனின் பயம் நமக்கு வர வேண்டாமா?

"மேலும், மணப்பெண்களுக்கு அவர்களின் உரிமையான மணக்கொடையை மனமுவந்து அளித்து விடுங்கள் ..." (அல்குர்ஆன் 004:004)

அல்லாஹ்வின் தூதர் எதை உங்களிடம் கொண்டு வந்தாரோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், இன்னும் எதைவிட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் (59:7)

அல்லாஹ்வும் அவன் தூதரும் ஒரு காரியத்தைப்பற்றி கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல்குர்ஆன் (33:36)

பெண்ணுக்கு மஹர் கொடுத்து எளிமையான முறையில் திருமணங்களை நடத்த உறுதி பூணுவோம்.