#மருத்துவர்_அனுரத்னா_அவர்களின்_பதிவு!
ஒருமுறை மருத்துவ கல்லூரியில் அவசர சிகிச்சை
பிரிவில் பணியில் இருந்த நேரம் ஒரு 25வயது பெண் கர்ப்பம் கலைந்து இரத்த போக்கோடு
அவரது உடை அனைத்தும் இரத்தத்தில் தோய்ந்த நிலையில் வந்தார்.
அவரை பரிசோதித்துவிட்டு
அவரை வார்டுக்குள் நான் அனுப்ப வேண்டும்.உடனிருப்பவரை வரச்சொல்,''உடையை மாற்றுப்பா'' என சொல்லிகொண்டே கருவுற்று
இருக்கும் அடுத்த பெண்ணை பரிசோதிக்க தொடங்கிவிட்டேன். நீண்ட நேரமாகியும் கர்ப்பம்
கலைந்த பெண் துணி மாத்தாமல் இருக்க,நான்
கோபத்தில் ''என்னம்மா செய்ற,சீக்கிரம்
மாத்தும்மா துணியை'' என கத்தினேன். 'மேடம் நான் காதல் திருமணம் புரிந்துகொண்டவள்,நானும் கணவரும் மட்டும் தான்,அவரோ வேலைக்கு போய்விட்டார்,நான் fancy பொருள் கடையில் வேலை பார்க்கிறேன்,வேலை பார்த்த இடத்தில் இருந்து கரு கலைந்த உடன்
அப்படியே இங்க வந்துட்டேன்'' என அழுதார்.
அவரை தேற்றுவதா,அவர்கு எந்த உடையை கொடுப்பது,விடுதியில் மாணவிகளிடம் கேட்டு உடை வாங்குவோமா என
சிந்தித்து கொண்டிருக்கும் போதே அடுத்த cases உடைய உறவினர்கள் என்னிடம் சண்டைக்கு
வந்துட்டாங்க.அந்த ஒரு case
மட்டுமே பார்க்குறிங்க,என் மகளை பார்,என்
மருமகளை பார்,எங்க பிள்ளைங்க பிரசவ
வலியில் இருப்பது தெரியலயா என சிலர் கத்தினார்கள்.இவர்கள் கத்திக்கொண்டு இருக்கும்
அதே நேரத்தில் முஸ்லிம் மதத்தை சார்ந்த பெண் ஒருவர் அமைதியாக அந்த கருகலைந்த
பெண்ணிற்கு உடை மாற்றிக்கொண்டு இருந்தார்.அவராக முன்வந்து இது மனதார செய்தார்.
இந்து மதத்தை சார்ந்தோர்
30பேர் இருந்த இடத்தில் சக இந்து பெண்ணிற்கு உடை மாற்ற யாரும்
முன்வரவில்லை.அங்கிருந்து ஒரே முஸ்லிம் பெண் தன் மகளின் பிரசவத்திற்காக வந்தவர்
யாரும் கேட்காமல் தானாக உதவ முன்வந்தார்.காரணம் அவர் மற்ற உயிர்களை உயிர்களாக
மட்டுமே பார்த்திருக்கார்.அவரை மனமுவந்து பாராட்டினேன்.அவர் மகளை மிகச்சிறப்பான
முறையில் பிரசவம் பார்த்து அனுப்பி வைத்தேன்.
முஸ்லிம் மக்களோடு பழகிப்பார்த்தவர்களுக்கு தான்
அவர்களின் ஈகை குணம் தெரியும்.பழகிப்பாருங்கள்.அவர்களின் வீடுகளுக்கு போய்
பாருங்கள்.அந்த பெண்கள் எவ்வளவு கனிவாக உபசரிக்கின்றனர் என தெரியும்.
இந்திய சுதந்திர போராட்டம் முதல் இன்றைய
தூத்துக்குடி பிரச்சனை வரை நம்மோடு துணை நிற்பவர்கள் முஸ்லிம் சகோதரர்கள்.
அவர்களை
வாழ்த்துவோம்!அவர்கள் இந்தியர்கள்.
நாம் அனைவரும் இனத்தால் ஒன்றே.
நாம் அனைவரும் இணைந்தால் நன்றே!
இனிய ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்.
மருத்துவர்.அனுரத்னா
15/6/18
நன்றி: Anu Ratana
2 comments:
இவர்கள் கத்திக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் முஸ்லிம் மதத்தை சார்ந்த பெண் ஒருவர் அமைதியாக அந்த கருகலைந்த பெண்ணிற்கு உடை மாற்றிக்கொண்டு இருந்தார்.அவராக முன்வந்து இது மனதார செய்தார்.
இந்து மதத்தை சார்ந்தோர் 30பேர் இருந்த இடத்தில் சக இந்து பெண்ணிற்கு உடை மாற்ற யாரும் முன்வரவில்லை.அங்கிருந்து ஒரே முஸ்லிம் பெண் தன் மகளின் பிரசவத்திற்காக வந்தவர் யாரும் கேட்காமல் தானாக உதவ முன்வந்தார்
-------------------------------------------------------------------------------------
நற்பண்புகளும் ஒழுக்கமும் எந்த சமூகத்தின் ஏகபோகமாக என்றும் இருந்ததில்லை.உதவி செய்த பெண்ணை முஸ்லீம் ஆக . .மற்றவர்களை இந்து பெண்களாக ஏன் பார்க்கின்றீர்கள்.
இந்த இடத்தில் இப்படிப்பட்ட ஆளுமை உள்ள பெண்கள் கூடியிருக்கின்றார்கள். மற்ற பெண்கள் இரத்தக்போக்கில் குளித்துக்கொண்டிருக்கும் பெண்ணை கவனித்திருக்க மாட்டாா்கள்.யாருடைய மதமும் இங்கு காரணம் அல்ல.
மசுதிக்கு குண்டு வைத்தவன் முஸ்லீம் . . .அல்கொய்தா. .அல உம்மா. . .பேடா ஹராம் என்று 100க்கணக்கில் உலகில் பயங்கரவாத இயக்கங்கள் செயல்படுவதை மருத்துவா் அறிய மாட்டாா் போலும்.
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://ibctamilnadu.com/article/murder-1651733103&ved=2ahUKEwjXtMCZusr3AhUmIbcAHRSlA7MQFnoECAQQAQ&usg=AOvVaw0dtKWKphY0DcDZFyi8e8BI
Post a Comment