Followers

Saturday, June 24, 2023

உபி - காஜியாபாத்

 உபி - காஜியாபாத்


மவ்லவி ஷவ்கத் அலியை காவல் துறை கைது செய்துள்ளது. கைதுக்கான காரணம் அவர் கோச்சிங் சென்டரில் கூட்டாக தொழுகை  செய்ததுதான். இறைவனை வணங்குவது இவ்வளவு பெரிய குற்றமா? அட சண்டாளர்களா....




உபி - அயோத்தியா

 

உபி - அயோத்தியா


 

மஹாரஞ்ச்கன்ஜ் அருகில் உள்ள கிராமம் பூரா பாபா. பார்பன சமூகத்தைச் சேர்ந்த பாண்டே என்பவன் பூஜா என்ற தலித் பெண்ணை வன் புணர்வு செய்து அதனை வீடியோவாக்கியுள்ளான். பிறகு இதை வைத்து மிரட்டி ஆசைக்கு இணங்க அழைத்துள்ளான். இதற்கு பூஜா உடன்படவில்லை. இணையத்தில் வீடியோவை வெளியிடுவேன் என்று கூறியுள்ளான். அதற்கும் பணியவில்லை பூஜா. இதனால் கோபமடைந்த பாண்டே தனது நண்பர்களோடு பூஜாவின் வீட்டுக்குள் புகுந்து வன் புணர்வு செய்துள்ளான். ஏற்கெனவே பலகீனமாக இருந்த பூஜா இறந்து விடுகிறார். உடனே இறந்த உடலை மரத்தில் கட்டி தொங்க விட்டு ஓட்டமெடுத்துள்ளது பார்பன கூட்டம். இது அந்த பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

अयोध्या में दलितों की बहन बेटियाँ सुरक्षित नहीं है आज थाना महराजगंज अंतर्गत ग्राम बौरा बाबा की मठीया पूजा की ब्राह्मण समाज का सोनू पांडेय ने रेप करके हत्या कर दिया. कुछ दिन पहले पूजा की रेप करते वीडियो बना लिया और बार बार पूजा को शारीरिक संबंध बनाने के लिये मजबूर कर्ता रहा पूजा के मना करने पर सोनू पांडेय वीडियो सोशल मीडिया पर वाइरल करने को बोलता रहा आज पूजा के घर से सोनू पांडेय और उसके कुछ साथी ने जबरदस्ती ले गये और उसका रेप करके पेड़ से लटका दिया जिससे पूजा की मौके पर मौत हो गई,,

 

 

Thursday, June 22, 2023

சத்ரபதி சிவாஜி இஸ்லாமியருக்கு எதிரியா?

 

சத்ரபதி சிவாஜி இஸ்லாமியருக்கு எதிரியா?

 

சிவாஜியின் தாத்தாவும் அப்பாவும் வேலை பார்த்தது இஸ்லாமிய மன்னர்களிடத்தில்...

 

சிவாஜியின் அப்பா அவ்வாறு வேலை பார்த்து வரும் போது இஸ்லாமிய மதத்தில் ஐக்கியம் கொண்டு இஸ்லாமியராகவே மாறி பெங்களூருவில் மரணித்தார்.

 

இஸ்லாமிய பெண்ணையும் இரண்டாந்தாரமாக மணந்து கொண்டார்.

 

சித்தி இப்றாகீம், மராட்டிய மன்னன் சிவாஜியின் மெய் காப்பாளர் மற்றும் தளபதியாக திகழ்ந்தவர், சிவாஜியின் நிழலாக இருந்த ஒரு இஸ்லாமியர்,

 

சிவாஜி அதிகம் செல்லும் ஆன்மீக தலம் ஹசரத் ஷாஹா ஷரிப் தர்ஹா அடக்ஸ்தலம்,

இந்த தலத்திற்கு சென்ற பிறகு தான் சிவாஜியின் பாட்டனார் மொலுஜிக்கு இரு மகன்கள் பிறந்தனர்,

 

அந்த பெரியவர் பெயரை தான் தன் இரு மகன்களுக்கு சூடினார்,

 

மூத்தவர் ஷாஹாஜி(சிவாஜியின் தந்தை)

 

ஷர்போஜி(சிவாஜி சித்தப்பா)

 

இங்கு எங்குமே சிவாஜி இஸ்லாமிய எதிர்ப்பைக் காட்டவில்லை. அப்படி என்றால் எதிர்ப்பு என்பதெல்லாம் பின்னாளில் பார்பனர்களால் புனையப்பட்டவைகளே...

 

சொல்லப் போனால் சிவாஜியை இந்து மன்னனாக முடி சூட்டுகிறோம் என்று சொல்லியே சிவாஜியின் கஜானாவையே காலி செய்தவர்கள் சித்பவன் பார்பனர்கள். 'நீ சூத்திரன்.. அதற்கு பரிகாரமாக நீ மன்னனாக வேண்டுமானால் ஒரு கோடி பார்பனர்களுக்கு தந்து முடி சூட்டிக் கொள்ள வேண்டும்’ என்று கொள்ளையடித்து நாட்டை நாசமாக்கியவர்கள் பார்பனர்கள். சிவாஜி இறந்த பிறகும் அவரது உழைப்பில் உருவான கோட்டைகளை ஆளுக்கொன்றாக பிரித்துக் கொண்டு அதனையும் சரிவர ஆளத் தெரியாமல் பிரிட்டிஷ் காரனிடம் கொடுத்து மான்யம் வாங்கி ஒதுங்கிக் கொண்டவர்கள். மராட்டிய பேஷ்வாக்கள் இவர்கள்தான்.

 

 ஆக... சிவாஜிக்கு எதிரி முஸ்லிம்கள் அல்ல... சித்பவன் பார்பனர்களே.




 

Wednesday, June 21, 2023

இப்படி அமைதிகாக்க எவ்வளவு கொழுப்பையா உமக்கு திரு. பிரதமரே?

 

கரன் தாப்பர், ஊடகவியலாளர்:

 

(மணிப்பூர் கலவரம் குறித்து) 45 நாட்களாக 6 வாரங்களாக ஒரே ஒரு சொல் கூட சொல்லாத திரு.மோடிக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?? மோடி  ஒன்றுமே சொல்லவில்லையே.

 

மணிப்பூரைப் பற்றியும், உங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும் இந்தியப் பிரதமருக்கு நீங்கள் என்ன செய்தி சொல்கிறீர்கள்?

 

பினாலட்சுமி நெப்ராம், வன்முறைக்கு எதிரான வடகிழக்குச் சமூக செயல்பாட்டாளர்:

 

ஒரு நாட்டின் பிரதமர் அந்நாட்டின் தந்தையைப் போன்றவர்.

 

உங்கள் சொந்தக் குழந்தைகள் செத்துக் கொண்டிருக்கும் போது, கொல்லப்படும்போது, உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு ஊனமுறும்போது, உயிரோடு எரிக்கப்படும் போது, அமைதியாக இருக்க உங்களுக்கு என்ன துணிவு திரு.பிரதமரே? மௌனம் காக்க உமக்கு என்ன தைரியம்?? எப்படி உங்களால் அமைதியாக இருக்க முடிகிறது??

 

மணிப்பூரின் பெண்கள், கேட்கக்கூட நாதியற்று ஓலமிடுகிறோம். மணிப்பூர் பெண்கள், வடகிழக்கு பெண்கள், உறுதியாக சொல்கிறோம் இது ஒரு பிரதமரின் தகுதியான செயல் அல்ல. உண்மையில், மணிப்பூரில் நடப்பவற்றுக்காக நீங்கள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

 

இது அல்ல நாம் கனவு கண்ட இந்தியா. மிகப்பெரிய ஜனநாயகம் இந்த இந்தியா அல்ல. அனைத்து ஜனநாயகங்களின் தாய் நாடல்ல இந்த இந்தியா.

 

மணிப்பூரின் எல்லைகளும், தனித்த அடையாளங்களும் கண்டிப்பாக பாதுகாக்கப்படும் என்ற உறுதியின் பேரில்தான் மணிப்பூர் 1949ல் இந்தியாவின் ஒரு பிரிவாக மாறியது.

 

கரன் தாப்பர், ஊடகவியலாளர்:

 

நீங்கள் சொல்வதை அப்படியே நானும் திருப்பிச்சொல்கிறேன், அது நாடு முழுதும் எதிரொலிக்கும்:

 

"இப்படி அமைதிகாக்க எவ்வளவு கொழுப்பையா உமக்கு திரு. பிரதமரே?"

 

"Mr.Prime Minister, how dare you keep silent?"




ஹிட்லர்களின் இறுதி வரலாற்றை, என்றும் ஸ்டாலின்களே எழுதுகிறார்கள் ..

 ஹிட்லர்களின் இறுதி வரலாற்றை,

என்றும் ஸ்டாலின்களே எழுதுகிறார்கள் ..




Monday, June 19, 2023

என்ன "தம்பி" கேட்டாய்...? #திராவிடம்னா என்னவா...?

 

 

 

என்ன "தம்பி" கேட்டாய்...?

#திராவிடம்னா என்னவா...?

அட அற்பமே...

அங்கம் சிதைந்த சிற்பமே...

சொல்கிறேன் கேள்...

அன்றொரு நாள்... நீ,

அநாதையாய்த் தெருவில் நாயோடு நாயாய்க் கிடந்தாய...

அப்படி 2000 ஆண்டுகளாய் அடிமைப்பட்டு கிடந்த உன்னை...

100 ஆண்டுகளுக்கு முன்

தத்தெடுத்து தலைவாரி விட்டதே...

அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம்...

சக்கிலியனைத் தொட்டால் தீட்டு...

சாணனைப் பார்த்தாலே தீட்டு...

என்ற வர்ணாசிரமத்தின்... சீழ் பிடித்த சிந்தனைகளைக் கொன்று...

*"சீமானாக" உன்னை மேடை ஏற்றி இன்று பரிணாம வளர்ச்சி கொடுத்ததே...

அதன் பெயர் தான் "தம்பி" திராவிடம் ...

கம்பனில்லையா... வள்ளுவரில்லையா... என்று,சங்க காலத்தில் சரித்திரம் தேடும் தரித்திரமே...

பனையேறியே செத்துப் போன உன் படிக்காத பாட்டனை நினை...

பானை செய்தே உடைந்து போன உன் தாத்தாவின் தகுதியை யோசி...

விவசாயக்கூலியாய் வரப்புகளில்... நண்டோடு உண்டாடிய

கைநாட்டுகளுக்கு காரணம் யார்...?

செருப்பு தைத்த கைகளுக்குள்.... பேனாவைக் கொடுத்தது யார்..?

பிணமெரித்த தீப்பந்தத்தில்... விளக்கேற்ற சொன்னது யார்...?

வண்ணான்... அம்பைட்டையன்... என்ற வார்த்தைகளை எல்லாம்... வழக்கொழிக்கச் செய்தது யார்...?

சூத்திரன் என்றும்... பஞ்சமன் என்றும்...

மொத்த தமிழனையும்... ஆரியன் அழைத்தபோது...

முதன்முதலில் ஆத்திரம் கொண்டது யார்...?

அதன் பெயர் தான் "தம்பி" #திராவிடம்

. மராட்டியர்களிடமும்... நாயக்கர்களிடமும்... தோல்வியடைந்து நிலத்தையும் நாட்டையும்... இழந்தபோது வராத ரோஷம்...



நம்பூதிரி பார்ப்பணர்களால்...

தன்தாய்மார்கள்... வரி செலுத்த வழியின்றி வெற்று மார்போடு...

வீதியில் அலைந்தபோது... வராத கோபம்...

நூற்றாண்டு திராவிடம் தந்த சமூகநீதியால்...

அந்த சமூகநீதி நூறு ஆண்டுகளில் தந்த பொருளாதார வளத்தால்...

உடல் பருத்து... கொழுப்பேறியபோது... திணவெடுத்து.

மெல்ல மெல்ல நக்கத் தொடங்கிய #நாய்களுக்கு ...

செக்கும் தெரியாது... சிவலிங்கமும் தெரியாது...

அதுபோல்.., தெற்கும் தெரியாது... திராவிடமும் தெரியாது தான் "தம்பி"...

திராவிட_மாடல்

 

படித்ததில் பிடித்தது...

 




Saturday, June 17, 2023

சீதை மீது நிகழ்த்தப்பட்ட பெரும் வன்முறை இதுதான்!

 சீதை மீது நிகழ்த்தப்பட்ட பெரும் வன்முறை இதுதான்!




எத்தனைமுறை படித்தாலும் நெஞ்சம் பதருகிறது

 எத்தனைமுறை படித்தாலும் நெஞ்சம் பதருகிறது இவர்கள் பட்ட வேதனையை. ஆனால் இவர்கள்தான் இன்று அந்த பார்ப்பன சனாதனத்தை தூக்கிப்பிடிக்கும் தூண்களே....

எப்போதுதான் திருந்தும் இந்த சா(வா)ணரக்கூட்டம்....? இன்று நாடார் குலமென்று நெஞ்சு நிமிர்த்தி திரிகின்ற சாணார்கள்
19'ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் 18 வகை கீழ் சாதி பட்டியலில் தான் இருந்தார்கள். சக்கிலியனைத் தொட்டாதான் தீட்டு, ஆனால் சாணானைப் பார்த்தாலே தீட்டு என்று ஓரங்கட்டப்பட்ட சமூகம். ஆனால் இப்போது... கன்னியாகுமாரி மாவட்ட பாஜகவின் தூண்களாக இருப்பவர்கள்
இவர்களே.! 1754-ல் திருதாங்கூர் சமஸ்தானத்தின் இராணுவச் செலவுகளுக்காக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டும் ‘தலைஇறை’ எனும் வரி விதிக்கப்பட்டது. இத்தலைஇறையைக் கட்ட முடியாமல் பலரும் வாழ வழி தேடி திருநெல்வேலிக்குத் தப்பியோடினர். 1807-ல் மட்டும் ஈழவர், நாடார்,
சாம்பவர் சாதி மக்களிடம் ‘தலைஇறை’யாக வசூலிக்கப்பட்ட தொகை 88,000 ரூபாய். இவ்வரி வசூலிப்பு, ஆடவரின் மீசைக்கு வரி, வளைந்த கைப்பிடியுள்ள குடைக்கு வரி, பெண்களின் மார்புக்கு வரி எனப் பல்வேறு வகைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது. இப்பார்ப்பனியக் கொடுங்கோன்மையை எதிர்த்த ஐயா
முத்துக்குட்டி என்பவர் தமது ‘அகிலத் திரட்டு’ எனும் நூலில் அன்று நடைமுறையிலிருந்த பல்வேறு வரிகளைப் பதிவு செய்கிறார். “தாலிக்கு ஆயம்; சருகு முதல் ஆயம்; கம்புத் தடிக்கு ஆயம்; தாளமேறும் சான்றோருக்கு ஆயம்; அரிவாள் தூர்வெட்டிக்கு ஆயம்; வட்டிக்கு ஆயம்; வலங்கை சென்றோர் கருப்புக்
கட்டிக்கும் ஆயம் வைத்தானே கருநீசன்” என்று குறிப்பிடுகிறார். மேற்கண்ட அரையாடை சாதிக்கொடுமைகள் நடைபெற்ற பொழுது, இந்துமத மடாதிபதிகளோ சைவ மடாதிபதிகளோ, சங்கராச்சாரிகளோ அச்சாதிக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை. ஆதிக்கத்திலிருந்து விடுதலை... 1800களில் நாடார், பரவர், ஈழவர்,
முக்குவர், புலையர்..உள் ளிட்ட 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியமுடியாது. அப்படி அணி வது மாபெரும் குற்றம் எனப்பட்டது. முழங்காலிற்கு கீழும் இடுப்பிற்கு மேலும் ஆடை (முண்டு) அணியக் கூடாது.! பொது வெளியில் முலைகளை திறந்து காட்டிக் கொண்டே தான் திரிய வேண்டும். திருவிதாங்கூர்
மன்னன் நகர்வலம் வரும் போது பாதையெங்கும் வரிசையாக திறந்து காட்டிக் கொண்டே தான் நிற்க வேண்டும். குறிப்பாக நம்பூதிரி பெண்கள் முன்னால் அடுத்த சாதிப் பெண்கள் கொங்கைகளை ஆட்டிக் கொண்டு தான் நிற்க வேண்டும். முலைகளின் அளவிற்கு ஏற்ப "முலை வரி" விதிக்கப் பட்டது.! இந்தக் கொடுமைக்கு எதிராக
பெண்கள் கொதித்து எழுந்தார்கள். போராட்டம் வெடித்தது.! அவ்வப்போது போராட்டங்களும் அடக்கு முறைகளும் தொடர்ந்தன. இந்நிலையில் மீட் 'எனும் ஆங்கில பாதிரியாரின் முயற்சியால் 1823 இல் கிறிஸ்தவ பெண்கள் குப்பாயம் எனும் மேலாடை அணியலாம் என்று உத்தரவாயிற்று. தன்மானமுள்ள நாடார் பெண்கள் மானத்தை
மறைக்க கிறிஸ்தவர்களாக மாற ஆரம்பித்தனர்! கிறிஸ்தவம் திருவாங்கூரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக புனிததோமாவால் தொடர்ந்த நிலைமாறியது. ஹிந்து நாடார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்த மானமுள்ள நாடார்களும் குப்பாய உரிமைக்காக வெகுண்டு எழுந்தார்கள்! ஐயா வைகுண்டர் தலைப்பாகை அணிந்து
தனிமதமேகண்டார். கலவரங்கள் தொடர்ந்தன! வழக்குகளும் தொடர்ந்தன. முலைவரி சட்டம் கடுமையாக பின்பற்றிருந்த காலத்தில், நாஞ்செலி என்ற பெண்ணிடம் திருவிதாங்கூர் சமஸ்தான அதிகாரிகள் உன்னோட முலை பெரிதாக உள்ளது ரெண்டு வரி கட்ட வேண்டும் என்று கேட்க, அப்போது கோபம் கொண்ட நாஞ்செலி வீட்டுக்குள்ள
சென்று அரிவாள் எடுத்து தனது முலையை அறுத்து எரிந்தாள். அதன் பிறகு தான் முலைவரி சட்டம் நீக்கப்பட்டது. அத்தகைய வீர மூதாதையருக்கு பிறந்த நபர்கள் தான் இன்றும் பார்ப்பனர்களுக்கு வால் பிடித்துக் கொண்டு திரிகின்றனர். மருத்துவம்* 1820 களில் ஆரம்பித்த காலரா தொற்று நோயால், இந்தியா
முழுவதும் பிணங்கள் கொத்து கொத்தாக விழுந்து கொண்டிருந்தன! மருந்தே இல்லாத காலராவிற்கு பலியானவர்கள் 15 இலட்சம் பேரென்று புள்ளி விபரம் சொல்கிறது! அந்த நேரத்தில் மெடிக்கல் மிஷனால் 1838 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது தான் நெய்யூர் மருத்துவ மனை! உலகின் பழமையான மிஷன் மருத்துவ மனை.!
இந்தியாவின் முதல் புற்று நோய் ஆராய்ச்சி நிலையம் என்று அதற்கு அளவில்லாத பெருமைகள் உண்டு. டாக்டர். தாம்சன், டாக்டர். வேத மாணிக்கம் ஆகியோரால் 1883 ஆம் ஆண்டு மார்த்தாண்டத்தில் கட்டப் பட்டது மார்த்தாண்டம் மிஷன் மருத்துவமனை. ( பொன்னாரின் சிலுவைப் பாலம் ஆரம்பிக்கிற இடம்)
1895 இல் சால்வேஷன் ஆர்மியால் வடசேரியில் கட்டப் பட்டது கேத்ரின் பூத் மருத்துவ மனை! 1936 இல் குளச்சலில் கட்டப் பட்டது சார்லஸ் பீஸ் தொழுநோய் மருத்துவ மனை.! இன்னுமுண்டு பட்டியல்.! இன்று போல கிட்னியை விற்று கல்லீரலை ரிப்பேர் செய்ய வேண்டிய அவசியமில்லை. இவை அத்தனையும் இலவச
மருத்துவ மனைகள்.! நாஞ்சில் மண்ணில் காலராவிற்கு தப்பித்த யாரோ ஒருவனின் சந்ததி தான் நம்மிடம் "பார்.. பார் .! குஜராத்தை பார்" என்று அக்குளை சொறிகிறான்.! கல்வி !!!. நாஞ்சில் நாட்டு கிறிஸ்தவ மிஷினறி பள்ளிக் கூடங்களை குறித்து தனித்து எழுத வேண்டிய அவசியம் இல்லை! இலவசகல்வி வழங்கிய
பல பள்ளிக் கூடங்கள் நூறு வயதைக் கடக்கின்றன. இது மதம் சார்ந்த பதிவல்ல ஆனால் ஒரு மதத்தின் ஒடுக்கமுறையிலிருந்து மீண்ட சமூகம் இன்று அதே பார்ப்பனிய சூழ்ச்சியால் மத வெறி பிடித்து அலைகிறார்கள். அந்த பார்ப்பனிய சூழ்ச்சியில் இருந்து விடுபட அந்த சமூக இளைஞர்கள் தங்களுடைய பழைய வரலாறுகளை
தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் எந்த பக்கம் நிற்க வேண்டும் என்ற தெளிவு வரும். ஒடுக்கப்பட்ட சமூக தோழர்கள் உள்பட அனைவரும் #நாடார்_வரலாறு #கறுப்பா? #காவியா? என்ற புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டுகிறேன். @rattibha

சிந்தனை பக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.

Saturday, June 10, 2023

தஞ்சாவூர் ஸ்டோரி...

 

தஞ்சாவூர் ஸ்டோரி...

 

இதை ஒரு படமாக சங்கிகள் எடுக்கலாமே...

 

சதி பற்றி ஒரு புதிய செய்தி....

 

நமது தஞ்சை மண்ணை சிவாஜி வம்சாவளியில் வந்த மராட்டிய ர்கள் ஆண்டு வந்த காலம். தஞ்சை நகரில்  கணவனை இழந்த ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக நெருப்பில் தள்ள முயல்கின்றனர். சுற்றிலும் பார்பனர்கள் உட்கார்ந்து மந்திரங்களை ஓதிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் நெருப்பில் இறங்காமல் 'ஐயோ என்னைக் காப்பாற்றுங்கள்' என்று அபயக் குரலை எழுப்புகிறாள். அந்த பெண்ணின் பெயர் கோகிலா. அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரி லிட்டில் ஸ்கான் என்பவர் 'ஏன் இப்படி கொடுமைபடுத்துகிறீர்கள்' என்று கேட்கிறார். உடனே பார்பனர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு 'எங்கள் மத விவகாரத்தில் தலையிடாதே' என்கின்றனர்.

 

'ஒரு பெண் அநியாயமாக எரிக்கப்படுகிறாள். இது உங்கள் மத சுதந்திரமா?' என்று கோபத்தோடு கேட்டு அந்த பெண்ணை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து தன்னோடு திருநெல்வேலி கொண்டு செல்கிறார் அந்த அதிகாரி. சில நாட்களுக்குப் பிறகு இருவருக்கும் காதல் மலர்கிறது. அந்த பெண்ணை திருமணம் முடிக்கிறார். அந்த பெண்ணும் தனது பெயரை ஸ்காலிடா என்று மாற்றிக் கொண்டு கிருத்தவ மதத்தை தழுவுகிறார்.

 

சில ஆண்டுகளுக்குப் பிறகு கணவன் இறந்து விடவே தனது பொருட்செலவில் 'நெல்லை கிருத்தவ சீர்திருத்த சபை' என்ற ஒன்றை நிறுவுகிறார். அது இன்றும் செயல்பட்டுக் கொண்டுள்ளது.

 

இஸ்லாமும் கிருத்தவமும் இந்த மண்ணில் எப்படி நுழைந்தது என்பதற்கு இந்த வரலாற்று நிகழ்வு சிறந்த எடுத்துக் காட்டாக திகழ்கிறது.

 

-விடுதலை ராஜேந்திரன் பேசிய காணொளியிலிருந்து எடுத்தது

 

எழுதியது : சுவனப்பிரியன்