கரன் தாப்பர், ஊடகவியலாளர்:
(மணிப்பூர் கலவரம் குறித்து)
45 நாட்களாக 6 வாரங்களாக ஒரே ஒரு சொல் கூட சொல்லாத திரு.மோடிக்கு
நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?? மோடி ஒன்றுமே சொல்லவில்லையே.
மணிப்பூரைப் பற்றியும்,
உங்களைப் போன்றவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தும்
இந்தியப் பிரதமருக்கு நீங்கள் என்ன செய்தி சொல்கிறீர்கள்?
பினாலட்சுமி நெப்ராம்,
வன்முறைக்கு எதிரான வடகிழக்குச் சமூக செயல்பாட்டாளர்:
ஒரு நாட்டின் பிரதமர் அந்நாட்டின்
தந்தையைப் போன்றவர்.
உங்கள் சொந்தக் குழந்தைகள்
செத்துக் கொண்டிருக்கும் போது, கொல்லப்படும்போது,
உடல் உறுப்புகள் துண்டிக்கப்பட்டு ஊனமுறும்போது,
உயிரோடு எரிக்கப்படும் போது, அமைதியாக இருக்க உங்களுக்கு என்ன துணிவு திரு.பிரதமரே?
மௌனம் காக்க உமக்கு என்ன தைரியம்?? எப்படி உங்களால் அமைதியாக இருக்க முடிகிறது??
மணிப்பூரின் பெண்கள்,
கேட்கக்கூட நாதியற்று ஓலமிடுகிறோம். மணிப்பூர் பெண்கள்,
வடகிழக்கு பெண்கள், உறுதியாக சொல்கிறோம் இது ஒரு பிரதமரின் தகுதியான செயல் அல்ல.
உண்மையில், மணிப்பூரில் நடப்பவற்றுக்காக
நீங்கள் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.
இது அல்ல நாம் கனவு கண்ட இந்தியா.
மிகப்பெரிய ஜனநாயகம் இந்த இந்தியா அல்ல. அனைத்து ஜனநாயகங்களின் தாய் நாடல்ல இந்த இந்தியா.
மணிப்பூரின் எல்லைகளும்,
தனித்த அடையாளங்களும் கண்டிப்பாக பாதுகாக்கப்படும்
என்ற உறுதியின் பேரில்தான் மணிப்பூர் 1949ல் இந்தியாவின் ஒரு பிரிவாக மாறியது.
கரன் தாப்பர், ஊடகவியலாளர்:
நீங்கள் சொல்வதை அப்படியே
நானும் திருப்பிச்சொல்கிறேன், அது நாடு முழுதும் எதிரொலிக்கும்:
"இப்படி அமைதிகாக்க எவ்வளவு
கொழுப்பையா உமக்கு திரு. பிரதமரே?"
"Mr.Prime Minister, how dare you keep silent?"
No comments:
Post a Comment