திருவாரூர் – குடவாசல்
அம்மையப்பன் ஊராட்சி
தனது தாயார் நினைவாக ஒரு தர்ஹாவை கட்டி அதன் இருபுறமும் பள்ளி வாசலும் மதரஸாவும் பல கோடி செலவில் கட்டியுள்ளார் ஒரு செல்வந்தர். இங்கு பள்ளிவாசலுக்கு முக்கியத்துவம் இல்லாமல் தர்ஹா நடுவில் நிற்கிறது. எந்த சமாதிகளை உடைக்க அலி யை நபிகள் நாயகம் அனுப்பினார்களோ அந்த சமாதி நடுவில் நிற்கிறது. உலக முடிவு நாள் வரையிலும் இந்த தர்ஹாவுக்கு வந்து யாரெல்லாம் இணை வைக்கிறார்களோ அத்தனை பாவங்களும் இதனை கட்டிய செல்வந்தருக்கும் ஒரு பங்கு சென்று சேரும். இத்தனை கோடிகள் செலவு செய்து பாவத்தை ஏன் இவர் சுமக்கிறார்.
தாயாருக்கு நன்மை செய்ய இஸ்லாம் எத்தனையோ வழிகளை காட்டியிருக்க ஏன் தர்ஹா மாயை? சம்பந்தப்பட்டவர்கள் யோசிப்பார்களாக...
-------------------------------------------------------
யஹூதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபிப்பானாக. ஏனெனில் அவர்கள் தங்களின் நபிமார்கள் மற்றும் நல்லவர்களின் கப்ருகளை மஸ்ஜிதாக ஆக்கிக் கொண்டனர்’ (நூல்: புகாரி)
கப்ருகள் பூசப்படுவதையும், அவற்றில் எதனையும் எழுதப்படு வதையும்,அதன் மீது கட்டிடம் எழுப்பப்படு வதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடுத்தனர்’ அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: திர்மிதி.
உயரமாக்கப்பட்ட எந்த கப்ரையும் தரைமட்டமாக்காமல் விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள்’ என்று அலி (ரலி) அவர்கள் கூறினார்கள்’ அறிவிப்பவர்: அபுல் அய்யாஜ் அல் அஜதி (ரலி) நூல்கள்: அபூதாவூத், நஸயீ,
திர்மிதி,
அஹ்மத்.
நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) புலாலா அவர்களை கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,”கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்” என்று கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம் முதல்பாகம் 312
எனது கப்ரை(கந்தூரி) விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்’ அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத்.
கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக, “அபீமிர்சத்” என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். ஆதாரம் : முஸ்லிம்
கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களை நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்’ என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.ஆதாரம்: திர்மிதி, இப்னுமாஜா,
அஹ்மத்,
மற்றும் இப்னு ஹிப்பான்.
இதற்கு பிறகும் நான் தர்ஹாவுக்கு போவேன். என்னை யார் தடுப்பது என்று கேட்டால் சொல்வதற்கு ஒன்றுமில்லை. இறைவன் உங்களுக்கு நேர் வழி காட்டட்டும்.
No comments:
Post a Comment