Followers

Sunday, January 25, 2026

யோனி பூஜை; - பெண் குறி வழி பாடு

 யோனி பூஜை; - பெண் குறி வழி பாடு

"இது ஓரு யோனி பூஜை"

பெண் குறி வழி பாடு, சக்தி வழிபாடு என்ற பெயரில் இந்தியாவுக்கே உரிய ஆபாச ஆன்மிகம்...
கைலாயத்திலிருக்கும் சிவன்
சொன்னதைக் கேட்காமல் அவர்
மனைவி பார்வதி தேவி தன் தந்தை தக்ஷனின் யாகத்தில் கலந்து கொள்கிறாள். அவமானப்படுகிறாள். அது பொறுக்காமல் தற்கொலை
செய்து கொள்கிறாள் .
அவள் தற்கொலையைத் தடுக்க ஓடிவரும் சிவன் 51 பாகங்களாக
சிதறிப்போன தன் தேவியின் உடலில் யோனி விழுந்த இடம் தெரியாமல் அல்லாடுகிறார்.
காமதேவன் கண்டுபிடித்து வழிபடுகிறான்.
அந்த யோனி வழிபாட்டு ஸ்தலம் தான் இக்கோவிலாம்!
அசாம் மாநிலம் - கௌஹாத்தியில்
நீலாச்சல் மலைச் சாரலில் அமைந்துள்ளது '
காமாக்யா' சக்தி பீடம். அன்னை சதி தேவி
(பார்வதி) யின் யோனி பாகம் விழுந்த யோனி பீடமாய் இத்தலம் அறியப்படுகிறது.
சக்தி பீடங்கள் அனைத்திற்கும் முதன்மையானது யோனி பீடமே என்று புராணங்கள் அறுதியிட்டுப் போற்றுகின்றன.
அதனால் அந்தயோனி மட்டுமே இங்கு வழிபடு கடவுள். கற்பாறையில் செதுக்கி வைத்திருக்கிறார்கள். அந்தப் பாறைப் பகுதியில் நீர் கசிந்து வழிந்து கொண்டிருக்கும்.
பார்வதி பெண்குறியில் ஆண்டுக்கொரு முறை நான்கு
நாட்கள் உதிரப் போக்கு ஏற்படுவதால் இதை மாத விலக்கு என்று சொல்லக்கூடாது. வருஷ விலக்கு எனலாம்.
இந்தக்கோவிலில் இன்றும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் கோவில் வாசலை அடைத்துவிடுவார்கள். தேவி தீட்டாகும் நாட்கள்.
அந்நாட்களில் திருக்கோயிலில் பக்தர்களுக்கு
அனுமதி கிடையாது
அந்த 3 நாட்கள் முடிந்தப் பின் மீண்டும் கோவில் வாசல் திறக்கும். இந்த மூன்று நாள்களிலும் அந்த நீரில் சிவப்பு சாயத்தைக் கலக்கிச் சிவப்பு நீர் வழிவது போல ஏற்பாடு செய்கிறார்கள்.
"ருது ரத்தம் போலக் காட்சியளிக்கச்
செய்கிறார்களாம்" பார்வதியின் மாதவிடாயாக
பக்தர்களுக்கு (புனித நீராக)
கொடுப்பார்கள்.
உலகெங்கும் இருந்து இந்த மூன்று நாள்களிலும் பத்து லட்சம் பக்தர்கள் அங்கே கூடுவார்களாம். சாதுக்களும்,
சன்னியாசிகளும், சன்னியாசினிகளும்
இங்கே கூடுவார்களாம். அந்த மூன்று நாள்களாம் இந்த மூன்றுநாள்களும்!
பூஜை, புனஸ்காரம் எதுவும் இந்த மூன்று நாள்களில் கிடையாதாம்.
பூசாரிகளும் பக்தர்களும்ஆணாக
இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த மூன்று நாள்களில் செவ்வாடைதான் அணிய வேண்டுமாம்
திருமணமாகாத பெண்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டுமாம்.
மூன்றாம் நாள் கடவுளச்சிக்கு `சடங்கு செய்யப்பட்டுக் கழுவிக் குளிப்பாட்டி அதன்பிறகுதான் கோயில் கதவுகள் திறக்கப்படுமாம்.
நாடெங்கும் வந்திருந்த பக்தர்களுக்கு சிவப்புத்துணியில் ஒரு பகுதி அல்லது ஒரு நூலிழை பிரசாதமாக
வழங்கப்படுகிறது. மாதாவின் மாத விலக்கு ரத்தம் படிந்தது எனக் கருதப்படும் இது அவர்களுக்கு
`மாலை’ யாம்
இதை வாங்கிப் பூஜை செய்து வந்தால் - நினைப்பதெல்லாம் நடந்து விடுமாம்!
இக்கோயிலில் உயிர்ப்பலி கொடுக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. கருவறையிலேயே உயிர்ப்பலி கொடுக்கின்றனர்.
19-ஆம் நூற்றாண்டு வரை இந்தக் கோயிலில் மனிதர்களைப் பலி தருவது வழக்கம்.
பிரிட்டிஷ் அரசு தடை செய்து விட்டது..
இது போன்ற பார்பன மூட நம்பிக்கைகளை முஸ்லிமகளாகிய நாங்களும் பின்பற்ற கர்வாபஸி என்ற பெயரில் ஆர் எஸ் எஸ் அழைப்பு விடுக்கிறது. இதை எப்படி பக்தி என்று ஏற்க முடியும்?



இஸ்ரேலின் மொசாத்துக்கே அல்வா கொடுத்த ஈரானிய உளவாளி

 

இஸ்ரேலின் மொசாத்துக்கே அல்வா கொடுத்த ஈரானிய உளவாளி

 

"இங்கே ஒரு ஈ, காக்கா கூட எங்கள் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது" - இதுதான் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டும், ராணுவமான IDF-ம் காலம் காலமாக உலகிற்குச் சொல்லி வந்த பெருமை.

 

ஆனால், அந்தப் பெருமை இப்போது சுக்குநூறாக உடைந்து சிதறியிருக்கிறது.

 

இஸ்ரேலின் அதீத பாதுகாப்பு வளையத்திற்குள் புகுந்து, அதன் ரகசியங்களை உறிஞ்சி எடுத்துச் சென்ற அந்த ‘நிழல் மனிதனின்’ கதை இப்போது அம்பலமாகியுள்ளது.

 

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள 'கிர்யா' (Kirya) மற்றும் 'பீர் ஷெபா' (Be'er Shebaa) ஆகிய இடங்கள் சாதாரணமானவை அல்ல.

 

அவை இஸ்ரேலின் அதீத பாதுகாப்பு கொண்ட நிலத்தடி கட்டளை தலைமையகங்கள் The PIT என அறியப்பட்ட Underground Command Centers போர் காலங்களில் இஸ்ரேலின் ஒட்டுமொத்த ராணுவ நடவடிக்கைகளும் இங்கிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.

2023 அக்டோபர் - இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம். அந்தப் பதற்றமான சூழலில், ஒரு IDF கேப்டன் சீருடையில் கம்பீரமாக உள்ளே நுழைகிறான் ஒருவன். அவன் பெயர் Assaf Shmuelevitz.

 

அவன் வெறும் சாதாரண ஆள் அல்ல, உளவுத்துறை அனுபவம் கொண்ட ஒரு வழக்கறிஞர், முன்னாள் Paratrooper.

 

அவனது பின்னணியும், IDF அதிகாரி போன்ற அவனது உடல்மொழியும் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவியது.

 

எவ்வித அனுமதியும் இன்றி, இஸ்ரேலின் மிகவும் ரகசியமான நிலத்தடி பதுங்கு குழிகளுக்குள் அவன் சாதாரணமாக உலாவினான்.

சுமார் ஒரு வாரம் அந்தப் பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருந்த அசாஃப், அங்கிருந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்து பழகினான்.

இஸ்ரேலின் போர்த் திட்டங்கள், இலக்குகள் மற்றும் ரகசிய உத்திகள் அடங்கிய ஆவணங்களை அவன் சேகரித்தான்.

 

அவன் சேகரித்த ஒவ்வொரு துளி தகவலும் அடுத்த சில நிமிடங்களில் ஈரானின் உளவுத்துறையான 'மொசாத்'-ன் பரம எதிரியான ஈரானிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுருக்கலாம்.

ஒரு வார கால 'ஜேம்ஸ் பாண்ட்' பாணி உளவு வேலைக்குப் பிறகு, அவன் அங்கிருந்து அமைதியாக வெளியேறினான்.

 

ஆனால், போர் மேகங்கள் விலகி, இஸ்ரேலிய உளவுத்துறை தனது கோப்புகளைச் சரிபார்த்தபோதுதான் அந்தப் அதிர்ச்சித் தகவல் தெரிந்தது.

 

தங்களுக்குள் ஒரு Lone wolf ஊடுருவிச் சென்றதை அவர்கள் உணர்ந்தார்கள்.

 

சமீபத்தில்தான் அந்த உளவாளியின் அடையாளத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.

 

"ஈரானிய உளவாளியா? அதுவும் எங்கள் இதயப் பகுதிக்குள்?" என மொசாட்டே இன்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

ஈரான் தனது காய் நகர்த்தல்களை எவ்வளவு நுணுக்கமாகச் செய்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியா?

இஸ்ரேலின் பெருமைமிக்க பாதுகாப்புச் சுவர்களை ஒரு தனிமனிதன், அதுவும் ஒரு வார காலம் உள்ளேயே இருந்து உடைத்தெறிந்திருக்கிறான் என்றால், உளவுத் துறையில் ஈரான் இப்போது “மொசாட்”ஐ விஞ்சும் அளவிற்கு உருவெடுத்துள்ளதா?

உலக உளவுத்துறை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத கறையாக மாறிவிட்டது!

 

மெசாட்”டுக்கே சத்திய சோதனையா?

 



 

“கர்கரேயை கொன்றது யார்?"

 

கர்கரேயை கொன்றது யார்?"

மஹாராஷ்டிரா முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிஃப் எழுதியுள்ள "கர்கரேயை கொன்றது யார்?" எனும் நூல் இந்தியாவின் பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் முதன்மையானது. 26/11 மும்பை தாக்குதலின் போது தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட பின்னணியை ஒரு முன்னாள் உயர்மட்ட அதிகாரியின் பார்வையில் இந்த நூல் ஆழமாக ஆய்வு செய்கிறது. கர்கரே தனது ஆய்வின் மூலம் பாசிச பார்ப்பனிய அமைப்புகளின் முகத்திரையை கிழித்ததால், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டாரோ என்ற வலுவான சந்தேகத்தை ஆசிரியர் எழுப்புகிறார்.

இந்தியாவின் உளவுத்துறையான ஐ.பி. (IB) எவ்வாறு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, பார்ப்பனிய அமைப்புகளைப் பாதுகாத்து இஸ்லாமிய இளைஞர்கள் மீது வீண்பழி சுமத்துகிறது என்பதைத் தரவுகளுடன் விளக்குகிறது இந்த நூல். 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கர்கரே கண்டுபிடித்த உண்மைகள், இந்துத்துவ தீவிரவாத அமைப்பான 'அபிநவ் பாரத்'தின் சதியை வெளிப்படுத்தியதைக் குறிப்பிடும் ஆசிரியர், இது எவ்வாறு முந்தைய குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையது என்பதையும் ஆராய்கிறார். குறிப்பாக, ஐ.பி. பல முக்கிய தகவல்களை மறைத்து, உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு அப்பாவிகளைச் சிக்கவைப்பதாக ஆசிரியர் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறார்.

 

ஹேமந்த் கர்கரேயை ஒரு நாயகனாக வர்ணிக்கும் ஆசிரியர், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அவர் துணிச்சலாகப் போராடியதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். மும்பை தாக்குதலின் போது சி.எஸ்.டி மற்றும் காமா மருத்துவமனை பகுதிகளில் நடந்த நிகழ்வுகளில் உள்ள மர்மங்கள், சி.சி.டி.வி பதிவுகள் மறைக்கப்பட்டது மற்றும் கர்கரேக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் போன்ற முரண்பாடுகளை இந்த நூல் விரிவாக அலசுவாதோடு ஒட்டுமொத்தமாக, பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்தும், திட்டமிடப்பட்ட மதக் கலவரங்களிலிருந்தும் இந்திய நாட்டைப் பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்நூல் முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.

கர்கரேயை கொன்றது யார்?"
இந்தியாவில் பயங்கரவாதத்தின் உண்மை முகம்
ஆசிரியர்: S.M. முஷ்ரிஃப் ( முன்னாள் ஐ.ஜி)
விலை: 380
நூலை பெற... https://wa.me/+919962918724

 

நரேந்திர மோடி கொடுத்த உதவி தொகையை கர்கரேயின் மனைவி வாங்க மறுத்ததிலிருந்து கொலையாளிகள் யார் என்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார் என்பது தெரிய வருகிறது.