Followers

Sunday, January 25, 2026

“கர்கரேயை கொன்றது யார்?"

 

கர்கரேயை கொன்றது யார்?"

மஹாராஷ்டிரா முன்னாள் ஐ.ஜி. எஸ்.எம். முஷ்ரிஃப் எழுதியுள்ள "கர்கரேயை கொன்றது யார்?" எனும் நூல் இந்தியாவின் பயங்கரவாதத்தின் உண்மை முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதில் முதன்மையானது. 26/11 மும்பை தாக்குதலின் போது தீவிரவாத எதிர்ப்புப் படைத் தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்ட பின்னணியை ஒரு முன்னாள் உயர்மட்ட அதிகாரியின் பார்வையில் இந்த நூல் ஆழமாக ஆய்வு செய்கிறது. கர்கரே தனது ஆய்வின் மூலம் பாசிச பார்ப்பனிய அமைப்புகளின் முகத்திரையை கிழித்ததால், அவர் திட்டமிட்டு கொல்லப்பட்டாரோ என்ற வலுவான சந்தேகத்தை ஆசிரியர் எழுப்புகிறார்.

இந்தியாவின் உளவுத்துறையான ஐ.பி. (IB) எவ்வாறு ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு, பார்ப்பனிய அமைப்புகளைப் பாதுகாத்து இஸ்லாமிய இளைஞர்கள் மீது வீண்பழி சுமத்துகிறது என்பதைத் தரவுகளுடன் விளக்குகிறது இந்த நூல். 2008 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் கர்கரே கண்டுபிடித்த உண்மைகள், இந்துத்துவ தீவிரவாத அமைப்பான 'அபிநவ் பாரத்'தின் சதியை வெளிப்படுத்தியதைக் குறிப்பிடும் ஆசிரியர், இது எவ்வாறு முந்தைய குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடையது என்பதையும் ஆராய்கிறார். குறிப்பாக, ஐ.பி. பல முக்கிய தகவல்களை மறைத்து, உண்மையான குற்றவாளிகளைத் தப்பிக்கவிட்டு அப்பாவிகளைச் சிக்கவைப்பதாக ஆசிரியர் ஆதாரங்களுடன் குற்றம் சாட்டுகிறார்.

 

ஹேமந்த் கர்கரேயை ஒரு நாயகனாக வர்ணிக்கும் ஆசிரியர், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க அவர் துணிச்சலாகப் போராடியதையும் இந்நூலில் பதிவு செய்துள்ளார். மும்பை தாக்குதலின் போது சி.எஸ்.டி மற்றும் காமா மருத்துவமனை பகுதிகளில் நடந்த நிகழ்வுகளில் உள்ள மர்மங்கள், சி.சி.டி.வி பதிவுகள் மறைக்கப்பட்டது மற்றும் கர்கரேக்கு வழங்கப்பட்ட தவறான தகவல்கள் போன்ற முரண்பாடுகளை இந்த நூல் விரிவாக அலசுவாதோடு ஒட்டுமொத்தமாக, பார்ப்பனிய ஆதிக்கத்திலிருந்தும், திட்டமிடப்பட்ட மதக் கலவரங்களிலிருந்தும் இந்திய நாட்டைப் பாதுகாக்க மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்நூல் முக்கிய பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.

கர்கரேயை கொன்றது யார்?"
இந்தியாவில் பயங்கரவாதத்தின் உண்மை முகம்
ஆசிரியர்: S.M. முஷ்ரிஃப் ( முன்னாள் ஐ.ஜி)
விலை: 380
நூலை பெற... https://wa.me/+919962918724

 

நரேந்திர மோடி கொடுத்த உதவி தொகையை கர்கரேயின் மனைவி வாங்க மறுத்ததிலிருந்து கொலையாளிகள் யார் என்பதையும் அவர் அறிந்தே வைத்திருந்தார் என்பது தெரிய வருகிறது.




No comments: