Followers

Sunday, January 25, 2026

இஸ்ரேலின் மொசாத்துக்கே அல்வா கொடுத்த ஈரானிய உளவாளி

 

இஸ்ரேலின் மொசாத்துக்கே அல்வா கொடுத்த ஈரானிய உளவாளி

 

"இங்கே ஒரு ஈ, காக்கா கூட எங்கள் அனுமதி இல்லாமல் நுழைய முடியாது" - இதுதான் இஸ்ரேலிய உளவுத்துறையான மொசாட்டும், ராணுவமான IDF-ம் காலம் காலமாக உலகிற்குச் சொல்லி வந்த பெருமை.

 

ஆனால், அந்தப் பெருமை இப்போது சுக்குநூறாக உடைந்து சிதறியிருக்கிறது.

 

இஸ்ரேலின் அதீத பாதுகாப்பு வளையத்திற்குள் புகுந்து, அதன் ரகசியங்களை உறிஞ்சி எடுத்துச் சென்ற அந்த ‘நிழல் மனிதனின்’ கதை இப்போது அம்பலமாகியுள்ளது.

 

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரின் இதயப்பகுதியில் அமைந்துள்ள 'கிர்யா' (Kirya) மற்றும் 'பீர் ஷெபா' (Be'er Shebaa) ஆகிய இடங்கள் சாதாரணமானவை அல்ல.

 

அவை இஸ்ரேலின் அதீத பாதுகாப்பு கொண்ட நிலத்தடி கட்டளை தலைமையகங்கள் The PIT என அறியப்பட்ட Underground Command Centers போர் காலங்களில் இஸ்ரேலின் ஒட்டுமொத்த ராணுவ நடவடிக்கைகளும் இங்கிருந்துதான் தீர்மானிக்கப்படுகின்றன.

2023 அக்டோபர் - இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போர் உச்சகட்டத்தில் இருந்த நேரம். அந்தப் பதற்றமான சூழலில், ஒரு IDF கேப்டன் சீருடையில் கம்பீரமாக உள்ளே நுழைகிறான் ஒருவன். அவன் பெயர் Assaf Shmuelevitz.

 

அவன் வெறும் சாதாரண ஆள் அல்ல, உளவுத்துறை அனுபவம் கொண்ட ஒரு வழக்கறிஞர், முன்னாள் Paratrooper.

 

அவனது பின்னணியும், IDF அதிகாரி போன்ற அவனது உடல்மொழியும் பாதுகாப்பு அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவியது.

 

எவ்வித அனுமதியும் இன்றி, இஸ்ரேலின் மிகவும் ரகசியமான நிலத்தடி பதுங்கு குழிகளுக்குள் அவன் சாதாரணமாக உலாவினான்.

சுமார் ஒரு வாரம் அந்தப் பதுங்கு குழிகளுக்குள்ளேயே இருந்த அசாஃப், அங்கிருந்த உயர்மட்ட அதிகாரிகளுடன் கலந்து பழகினான்.

இஸ்ரேலின் போர்த் திட்டங்கள், இலக்குகள் மற்றும் ரகசிய உத்திகள் அடங்கிய ஆவணங்களை அவன் சேகரித்தான்.

 

அவன் சேகரித்த ஒவ்வொரு துளி தகவலும் அடுத்த சில நிமிடங்களில் ஈரானின் உளவுத்துறையான 'மொசாத்'-ன் பரம எதிரியான ஈரானிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுருக்கலாம்.

ஒரு வார கால 'ஜேம்ஸ் பாண்ட்' பாணி உளவு வேலைக்குப் பிறகு, அவன் அங்கிருந்து அமைதியாக வெளியேறினான்.

 

ஆனால், போர் மேகங்கள் விலகி, இஸ்ரேலிய உளவுத்துறை தனது கோப்புகளைச் சரிபார்த்தபோதுதான் அந்தப் அதிர்ச்சித் தகவல் தெரிந்தது.

 

தங்களுக்குள் ஒரு Lone wolf ஊடுருவிச் சென்றதை அவர்கள் உணர்ந்தார்கள்.

 

சமீபத்தில்தான் அந்த உளவாளியின் அடையாளத்தை இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது.

 

"ஈரானிய உளவாளியா? அதுவும் எங்கள் இதயப் பகுதிக்குள்?" என மொசாட்டே இன்று அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

ஈரான் தனது காய் நகர்த்தல்களை எவ்வளவு நுணுக்கமாகச் செய்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியா?

இஸ்ரேலின் பெருமைமிக்க பாதுகாப்புச் சுவர்களை ஒரு தனிமனிதன், அதுவும் ஒரு வார காலம் உள்ளேயே இருந்து உடைத்தெறிந்திருக்கிறான் என்றால், உளவுத் துறையில் ஈரான் இப்போது “மொசாட்”ஐ விஞ்சும் அளவிற்கு உருவெடுத்துள்ளதா?

உலக உளவுத்துறை வரலாற்றில் ஒரு மறக்க முடியாத கறையாக மாறிவிட்டது!

 

மெசாட்”டுக்கே சத்திய சோதனையா?

 



 

No comments: