Followers

Monday, May 15, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான! - 2

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான! - 2

முந்தைய பதிவில் இஸ்லாத்துக்கும் இந்து மதத்துக்கும் உள்ள சில ஒற்றுமைகளைக் கண்டோம். இது போல் இரண்டு வேதங்களிலும் வரக் கூடிய வேறு சில ஒற்றுமைகளையும் பார்ப்போம்.

இந்து மதத்தின் அனைத்து வேதங்களுக்கும் முன்னோடியான மிகப் பழமையான வேதம் ரிக் வேதம். இதில் வரக் கூடிய ஒரு வசனம் :

'ஏகாம் சத் விப்ரா பஹுதா வதன்தி'

-ரிக் வேதம் 1:164:46

'ஒரே இறைவனை அழையுங்கள். அந்த இறைவனுக்கு பல பெயர்கள் உள்ளன.'

உண்மை ஒன்றுதான். படைத்த இறைவன் ஒருவன்தான். அவனை பல பெயர்களில் அழைத்துக் கொள்ளட்டும் என்று விளக்கப் படுகிறது.

அந்த இறைவனுக்கு 33 பண்புகள் இருப்பதாக அந்த பண்புகளின் பெயர்களை பிரம்மா, விஷ்ணு என்று வரிசையாக பட்டியலிடுகிறது.

-ரிக் வேதம் 2 : 1

இந்த 33 பண்புகளையும் நமது இந்து நண்பர்களின் முன்னோர்கள் அவரவர்களின் வசதிக்கு ஏற்றவாறு உருவங்களை வரைந்து கொண்டனர். 'பிரம்மன்' படைப்புத் தொழிலைச் செய்யக் கூடியவன்: 'விஷ்ணு' காக்கும் தொழிலைச் செய்யக் கூடியவன்: என்றெல்லாம் படைத்த ஒரே இறைவனின் பண்புகளை பல கடவுள்களாக பிரித்து விட்டார்கள். நாளடைவில் இந்த உருவங்கள் கடவுள் பெயரால் நம்மிடையே நிலைத்து விட்டன.

இது சம்பந்தமாக குர்ஆன் என்ன சொல்கிறது என்றுபார்ப்போம்.

'அல்லாஹ் என்று அழையுங்கள்! அல்லது ரஹ்மான் என்று அழையுங்கள்! நீங்கள் எப்படி அழைத்த போதும் அவனுக்கு அழகிய பெயர்கள் உள்ளன.'

குர்ஆன் 17 :110

இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். இறைவனின் வல்லமையைக் காட்டக் கூடிய பல பெயர்கள் குர்ஆனில் ஆங்காங்கே வரும். இறைவனின் பண்புகளாக வரக் கூடிய சிலவற்றைப் பட்டியலிடுகிறேன் :

ரப் (அதிபதி) - பஷீர் (பார்ப்பவன்) - ஜப்பார் (அடக்கி ஆள்பவன்) - ஹக்கிம் (ஞானமிக்கவன்) - ஹமீது (புகழுக்குரியவன்) - ஹய்யு (உயிருள்ளவன்) - ரவூப் (இரக்கமுடையவன்) - ரஹ்மான் (அருளாளன்) - ரஹீம் (நிகரற்ற அன்புடையோன்) - சலாம் (நிம்மதி அளிப்பவன்) - அஜீஸ் (மிகைத்தவன்) - அலீம் (அறிந்தவன்) - குத்தூஸ் (தூயவன்) - ஹாக்கிம் (தீர்ப்பு வழங்குபவன்) - மலிக் (அரசன்) - வக்கீல் (பொறுப்பாளன்)

- இது போன்று மொத்தம் 99 பண்புகளை இறைவன் ஆங்காங்கே குர்ஆனில் விவரித்துச் செல்கிறான்.

'அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்.அவர்கள் செய்து வந்ததற்காக தண்டிக்கப் படுவார்கள்.'

குர்ஆன் 7 : 180

இறைவனுக்கு அழகான பெயர்கள் உண்டு என்றும் அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் மேற் கண்ட வசனம் கூறுகிறது. இறைவனின் பெயரை திரித்துக் கூறுவதும் சிதைப்பதும் கடும் குற்றம் எனவும் அவர்கள் தண்டிக்கப் படுவார்கள் எனவும் இவ் வசனம் கடுமையாக எச்சரிக்கிறது.

இன்று முஸ்லிம்களிடம் கூட சிலர் அறியாமையினால் தியானம் என்ற பெயரில் வருடத்தில் இரண்டு மூன்று நாட்கள் இரவு நேரங்களில் அமர்ந்து கோரஸாக ஓதி வருவதை பார்க்கிறோம்.அவர்கள் உபயோகிக்கும் வார்த்தைகளில் ஒன்று 'ஹீ,ஹீ' என்பது. ஹீ என்றால் அரபியில் 'அவன்' என்று அர்த்தம். சாத்தானைக் கூட 'ஹீ' என்று கூறலாம்.

அடுத்து ஒன்று 'ஹக் தூ ஹக்' என்று அரபியும் உருதும் கலந்து புது வார்த்தையை கண்டு பிடித்து திக்ரு என்ற பெயரில் செய்து வருகிறார்கள்.

இன்னொன்று 'அல்லாஹ்' என்ற பெயரில் முதல் எழத்து அ வையும் கடைசி எழுத்து ஹ் ஹையும் இணைத்து 'அஹ்' என்ற புது பெயரை கண்டு பிடித்துள்ளார்கள்.

அடுத்து 'இல்லல்லாஹ்' என்றும் ஓதுகிறார்கள். இதற்கு பொருள் 'அல்லாஹ்வைத் தவிர'. இதற்கும் எந்த பொருளும் இல்லை.

எனவே இறைவனோ, முகமது நபியோ காட்டித் தராத இது போன்ற நவீன வணக்கங்களை செய்வோரைப் பார்த்துதான் மேற் கண்ட வசனத்தில் எச்சரிக்கப் படுகிறது.

ரஜ்னீஷைப் பற்றி நாமெல்லாம் அறிவோம். அமெரிக்காவில் 'ரஜ்னீஷ்புரம்' என்று அமைத்து அமெரிக்க அரசாங்கத்தாலேயே ஒரு கணம் திரும்பிப் பார்க்கப் பட்டவர்.இந்தியாவிலும் புனேயில் உள்ள அவரின் ஆஸ்ரமத்தில் ஓர் வாசகம் எழுதப் பட்டிருக்கும்.

“Osho –Never born, Never died, only visited the planet earth between 11th dec 1931 to 19th jan 1990”

மனிதர்களால் எழுதப் பட்ட தன்னிலை விளக்கங்கள் எங்கு கொண்டு போய் சேர்க்கும் என்பதற்கு மேலே உள்ள வாக்கியங்களை படித்தாலே நமக்கு நன்கு விளங்கும். நம்மைப் போன்ற ஒரு மனிதர். நோய்களுக்கு ஆட்பட்டார்.நம்மைப் போலவே மரணத்தையும் சுவைத்தார்.இருந்தாலும் மனித மனம் அவரை கடவுளாக்க முயற்ச்சிக்கிறது.

எனவே எந்த சமூகத்தவரும் இறைவன் அவர்களுக்கு கொடுத்த வேதத்தின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால ஈருலகிலும் வெற்றியடையலாம். எங்கெல்லாம் மனிதர்கள் தாமாக வழிமுறைகளை அமைத்துக் கொண்டு 'இறைவனை நாங்களும் அடைகிறோம' என்று புதிது புதிதாக மார்க்கங்களை உண்டு பண்ணுகிறார்களோ அவர்கள்ஈருலகிலும் நஷ்டவாளிகளாக ஆகிறார்கள். இறைவன் மிக அறிந்தவன்.

8 comments:

கூத்தாடி said...

எங்கய்யா அந்த இறைவன் இருக்காரு ..என்க்கென்னவோ அவர் தூங்கி ரொம்ப நாள் ஆச்சுன்னு நினைக்கிறேன் ..எனக்கு இறை என்பவர் ஒரு சூப்பர் பவர் என்பதில் நம்ப்பிக்கை இல்லை ..
மறு உலகம் இருபதைப் பற்றிய அக்கறையும் இல்லை...
மதங்கள் ஆன்மீக வறட்சியையே தூண்டுகிறது..

உண்மைகளைத் தேட வேதங்கள் தேவையில்லை ..படிக்கக் கூடாது எனக்கூற வில்லை ஒரு அளவிற்கு மேல் அதைத் தாண்டி சிந்திக்க வேண்டும்..நம் சிந்தனையை தூண்டும் கேள்விகளை எந்த மதம் அனுமதிக்கிறது சொல்லுங்கள்..எல்லா வற்றிற்கும் குரானையும் வேதத்தௌம் ,விவிலியத்தையும் தேடிக்கொண்டு இருக்காதீர்கள்..அதில் உலக உண்மைகளெல்லாம் இருக்கும் எனச் சொல்வது பெரிய காமடி தான் ..
அறிவியல் இவர்கள் சொன்னப் பலவற்றை தவறு என நிரூபத்தி விட்டது ..
ஆன்மீகம் ஒருவனை அடுத்தத் தளர்த்திற்கு எடுத்துச் செல்லும் ..மதம் முடமாக்கும் ..
நல்ல ஆன்மீகவாதி அறிவியல் வாதியும் கூட ..

உங்கள் கருத்தோடு நான் பெருமளவு ஒத்துப் போகா விட்டாலும் இது நல்ல முயற்சி ..

suvanappiriyan said...

திரு கூத்தாடி!

//நம் சிந்தனையை தூண்டும் கேள்விகளை எந்த மதம் அனுமதிக்கிறது சொல்லுங்கள்..எல்லா வற்றிற்கும் குரானையும் வேதத்தௌம் ,விவிலியத்தையும் தேடிக்கொண்டு இருக்காதீர்கள்..அதில் உலக உண்மைகளெல்லாம் இருக்கும் எனச் சொல்வது பெரிய காமடி தான் ..//

'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'

-குர.ஆன் 4 : 82

'அவர்கள் சிந்திப்பதற்காக இந்தக் குர்ஆனில் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியுளளோம். அது அவர்களுக்கு வெறுப்பையே அதிகப் படுத்துகிறது.

-குர்ஆன் 17 : 41

மேற் கண்ட வசனங்கள் மனிதர்களை சிந்திக்கச் சொல்லவில்லையா!

//அறிவியல் இவர்கள் சொன்னப் பலவற்றை தவறு என நிரூபத்தி விட்டது ..//

குர்ஆனில் பல இடங்களில் குழந்தை உருவாதல், பூமியின் அமைப்பு, கோள்களின் அமைப்பு,கடல்களுக்குள் திரை,புவியீர்ப்பு சக்தி,அனைத்திலும் ஜோடி,பூமியில்தான் வாழ முடியும் என்று அறிவியல் கருத்துக்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதற்கு முன்னால் அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் உள்ள ஒற்றுமைகளை என் முந்தய பதிவுகளில் சொல்லியுள்ளேன்.அதையும் சென்று பாருங்கள். எந்த கருத்து குர்ஆனிலிருந்து தற்கால அறிவியலுக்கு மாறுபடுகிறது என்ற விபரத்தை எனக்கு தாருங்கள். உங்கள் கருத்தை நான் பரிசீலிக்கிறேன்.

suvanappiriyan said...

திரு மயூரன்!

//பூமி உருவாக பல ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று அறிவியல் கூறுகிறது. ஆனால் குர்ஆனில் பூமியை படைத்தது இரண்டு நாளில் என்றா வருகிறது?//

'பூமியை இரண்டு நாடகளில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்.'

-குர்ஆன் 41 :9

'இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான்'

-குர்ஆன் 41 :12

'அவனே வானங்களையும் பூமியையும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் ஆறு நாட்களில் படைத்தான்.'

-குர்ஆன் 25 : 59

பூமியைப் படைக்க இரண்டு நாட்கள் அதில் மனிதன் வாழத் தேவையான ஏற்பாடுகள் செய்ய இரண்டு நாட்கள்,வானங்களைப் படைக்க இரண்டு நாட்கள் என ஆறு நாட்களில் அனைத்தையும் படைத்ததாக இறைவன் கூறுகிறான்.இங்கு நாட்கள் என்று பயன் படுத்தப் படும் இடத்தில் 'அய்யாம' என்ற அரபிச் சொல் எடுத்தாளப் பட்டுள்ளது.

'ஹூவல்லதி ஹலகஸ் ஸமாவாத்தி வல் அர்ளி ஃபி சித்ததி அய்யாம்'

'அய்யாம்' என்ற வார்த்தைக்கு அரபியில் இரண்டு பொருள்கள் உண்டு. 24 மணி நேரம் கொண்ட ஒரு நாளுக்கும் அய்யாம் என்ற வார்த்தை பயன்படுத்தப் படும். 100,1000,100000 போன்ற வருடங்களின் கூட்டு என்ற கணக்கிலும் 'அய்யாம்' என்ற வார்த்தை பயன் படுத்தப் படும். அந்த அந்த இடத்திற்கு தக்கவாறு பொருளில் மாறுபடும். இங்கு இறைவன் இதை நாம் பயன் படுத்தும் நாள் கணக்கைக் குறிப்பிடுகிறானா அல்லது ஆறு காலங்கள், ஆறு யுகங்கள் என்ற ரீதியில் குறிப்பிடுகிறானா என்று விளக்கப் படவில்லை.

அறிவியலார் பின்னால் வரக் கூடிய காலங்கள் என்ற பொருள்தான் சரியாக பொருந்தும் என்று கூறுகின்றனர்.பல லட்சக்கணக்கான வருடங்கள் இந்த உலகம் உண்டாக எடுத்துக் கொண்டிருக்கலாம் என்ற அறிவியலின் அனுமானம் இந்த வசனத்திற்கு மாறு படவில்லை. உறுதிதான் செய்கிறது. இறைவனே மிக அறிந்தவன்.

கூத்தாடி said...

மாயூரன்
வேதமோ/விவிலியமோ/குரானோ பிரபஞ்சம் பற்றி ஒரு தெளிவான கருத்துக்களைச் சொல்லவே இல்லை ..
இவர்கள் இப்போது அறிவியல் ரீதியாக பல வற்றை முன்வைத்து அது நிருபிக்கப் படும்ப் போது அதற்கு குரானிலும் /வேதங்களிலும் இருக்கிறது என வார்த்தை விளையாட்டுச் செய்வார்கள்..
விவியலித்திலோ /குரானிலோ /வேதத்திலோ சொல்லியிருந்தால் ஏன் அந்த மார்க்க அறிஞர்கள் அறிவியல் சிலவற்றை அறுதியிட்டுக் கூறும் முன் இவர்கள் சொல்லிருக்க முடியாது..

சுகவீனன் -நான் குரான் சிந்திக்க சொல்லவில்லை என்பதை இங்கு சொல்லவரவில்லை .மதங்களில் சிந்திக்கச் சொல்லலாம் ஆனால் அது ஆனால் அது அவரவர் மத நம்ப்பிக்கையை ஒட்டியே சிந்திக்கச் சொல்லுகிறது..
நீங்கள் உங்கள் மதத்தின் அடிப்படை நம்ப்பிக்கைளை நோக்கி கேள்வி கேட்க முடியுமா ..மதம் என்பதே நம்ப்பிக்கையின் மேல் கட்டப் படுவது .

உங்கள் ஆன்மீகம் உங்களில் இருந்து தொடங்க வேண்டும் ...தேவ தூதர் அல்லது நபிகள் அல்லது பல ஆன்மீகப் பெரியோர்களை மதியுங்கள் ஆனால் அவர்களின் கருத்துக்களின் மீது தீவிரமான விமர்சனப் பார்வையை வையுங்கள் அது மட்டுமே உங்களை உண்மையின் பால் நெருங்கச் செய்யும் அல்லாமல் எல்லாமே என் மதப் புத்தகத்தில் இருக்கிறது என்று சொல்லுவது பெரும்பாலும் உதவாது .

ஜீசஸ் அவர் சார்ந்த மதம் மேல் தீவிர நம்ப்பிக்கைக் கொண்டு இருந்தால் அவர் புனிதராக ஆயிருக்க முடியாது..

சித்தார்த்தன் தீவிர மத பற்றாளனாய் இருந்து இருந்தால் புத்தனாயிருக்க முடியாது ..
முகமது நபியும் அவர் மதம் மேல் நம்பிக்கையாளராக ம்ட்டும் இருந்தால் அவரும் இறைவனை அறிந்து கொண்டு இருக்க மாட்டார்..

You keepholding tight "you" and "me"
Dont you see that these two obscure the one ?

இந்த ஜலாவுதீன் ரூமியின் வரிகளைப் பாருங்கள் ..இதில் எவ்வுளவு உண்மையும் சிந்த்னையைத் தூண்டுவதாக இருக்கிறது ..அவரும் குரானைப் படித்தவர்தாம் ..வெற்று வரிகளை அல்ல ..அறிவால் உணர்வால் ..

நான் ஆன்மிகத்திற்கு எதிரியில்லை மதத்திற்கு /மதம் மேல் மக்களைத் திணிக்கும் சொற்களும் எழுத்தும் என்னைக் காயப்படுத்துகிறது

suvanappiriyan said...

At 1:50 AM, Muse said...
//4. வேறு ஒரு சந்தேகம். பெண்களுக்கும் சுவனத்தில் இடமுண்டு என்பது தெரிந்து சந்தோஷமடைந்தேன். அவர்களுக்கு ஆண்களுக்கு கிடைக்கின்ற அதே மாதிரியான சௌகரியங்கள் கிடைக்கின்றனவா? உதாரணமாக அடிக்கடி ஹிந்துத்துவவாதிகளால் கூறப்படும் ஏழு அழகான, சூடான, என்றுமே கன்னியராக உள்ள, சூப்பர் சுந்தரிகள். சுவனத்தை சென்றடையும் பெண்களுக்கு அந்த அளவு அழகாக இல்லாவிட்டாலும், சுமாரான ஏழு ஆண்கள் கிடைப்பார்களா?

5. அல்லது அவர்களுக்கும் ஏழு சுந்தரிகள்தானா?//

நீங்கள் கேட்ட கேள்வியை முகமது நபி காலத்திலேயே முகமது நபியிடமே ஒரு பெண்மணி கேட்டார். 'ஆண்களைப் பற்றித் தானே திருக்குர்ஆன் கூறுகிறது. பெண்களைப் பற்றி கூறுவதில்லையே ஏன்? என்று உம்மு சலமா என்ற பெண்மணி கேட்ட போது கீழ்க் கண்ட குர்ஆன் வசனம் இறங்கியது.

'முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கைக் கொண்ட ஆண்களும் பெண்களும்,கட்டுப் பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும்,உண்மை பேசும் அண்களும் பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும் பெண்களும்,அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும,தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும்,தமது கற்பை காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும்,இறைவனை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும், ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

குர்ஆன் 33 :35

அரபு மொழியின் இலக்கண விதியை அறிந்து கொண்டால் இந்த குழப்பம் ஏற்படாது.அரபு மொழியில் எல்லா நிலைகளிலும் ஆண் பாலுக்கும் பெண்பாலுக்கும் தனித் தனிச் சொற்கள் உள்ளன. ஆண்களை நோக்கி 'தொழுங்கள்' என்று கட்டளை இடுவதாக இருந்தால் 'ஸல்லூ' என்றும் பெண்களை நோக்கி 'தொழுங்கள்' என்று கட்டளை இடுவதாக இருந்தால் 'ஸல்லீன்' என்றும் கூற வேண்டும்.இரு பாலாருக்கும் கட்டளை இடுவதாக இருந்தால் ஒவ்வொரு கட்டளையையும் இரண்டு தடவை அவரவர்க்குரிய சொற்களால் குறிப்பிட வேண்டும். இதைத் தவிப்பதற்காக குர்ஆனில் மிகப் பெரும்பாலான கட்டளைகள் ஆண்களைக் குறிக்கும் சொற்களாகவே கூறப்பட்டள்ளன.

'உங்களில் ஆணோ,பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்'

குர்ஆன் 3 : 195

'ஆண்களிலோ,பெண்களிலோ நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள் சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப் பட மாட்டார்கள்.'

குர்ஆன் : 4 :124

என்ற வசனத்தின் மூலம் எவருக்கும் அநீதி இழைக்கப் பட மாட்டாது என்று நிரூபணமாகிறது.

//ஹிந்துத்துவவாதிகளால் கூறப்படும் ஏழு அழகான, சூடான, என்றுமே கன்னியராக உள்ள, சூப்பர் சுந்தரிகள்.//

மேற் கண்ட வரிகள் குர்ஆனில் எங்கு வருகிறது என்று சொல்ல முடியுமா?

suvanappiriyan said...

திரு ம்யூஸ்!

At 7:19 AM, Muse said...
>>> ஒரே இறைவனிடமிருந்து இரண்டு கருத்துகள் எப்படி வர முடியும்? <<<

உங்கள் மகனுக்கு நீங்கள் அப்பா. தம்பிக்கோ அண்ணா. நீங்கள் ஒருவரா, பலரா?

எனக்குப் பிறந்ததனால் என் மகனுக்கு நான் தந்தை.என் தாய்க்கு நானும்,என் தம்பியும் பிறந்ததனால் எனக்கு தம்பி. இது மனிதத் தன்மை.

இறைத் தன்மை இப்படிப் பட்டதா? உங்களையும் என்னையும் படைத்தது ஒரே இறைவன். அந்த ஒரு இறைவன் சொல்கிறான் 'நான் ஒருவன். எனக்கு யாரையும் இணையாக்காதீர்கள்.என் உருவத்தை மனிதக் கண்களால் பார்க்க இயலாது' என்கிறான். இதைத்தான் உங்கள் வேதமும் சொல்கிறது. என் வேதமும் சொல்கிறது. பிறகு எங்கிருந்து வந்தது இத்தனை கடவுள் உருவங்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரவில்லையா?

suvanappiriyan said...

திரு ம்யூஸ், கனகவேலன்!

//மனுவை இந்து மதச் சட்டங்களிலிருந்து வெளியேற்றியது டாக்டர் அம்பேத்கார். வருடம் 1950. இன்றைய இந்து மதச்சட்டங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளவற்றை தொகுத்தது டாக்டர் அம்பேத்கார் அவர்களே.

அம்பேத்கார் எழுதிய இந்து சட்டத்தின்படியே எல்லா இந்துக்களும்(சங்கராச்சாரியார் உட்பட) நடக்கவேண்டும்.//

'நடக்க வேண்டும்' என்று தான் சொல்கிறீர்களே யொழிய அம்பேத்கார் அமுல்படுத்திய சட்டம் இன்று நடைமுறையில் இருக்கிறதா? ஒரு சட்டம் என்பது மனிதர்கள் அனைவரும் பின் பற்றாவிட்டாலும் 50 சதமாவது நடைமுறைப் படுத்த வேண்டும். அப்படி நடைமுறையில் இல்லை என்றால் அந்த சட்டத்தினால் என்ன பயன்?

சட்டம் மக்களின் வாழ்க்கையில் கலந்திருந்தால் பாப்பாரப் பட்டி, கீரிப் பட்டி சம்பவங்கள் நடந்திருக்குமா? இத்தனைக் கொடுமைகளையும் தாழ்த்தப் பட்டவர்களுக்கு செய்து விட்டு 'அப்படித்தான் செய்வோம்' என்று மேல்சாதிக் காரர்கள் பத்திரிக்கைக்கு பேட்டியும் கொடுக்கிறார்கள். இன்றும் மதுரை ராமநாதபுரம் மாவட்டங்களில் தனிக் குவளை, சிரட்டையில் தேனீர் என்ற நிலை இருக்கிறதே! பல கிராமங்களில் அவர்களுக்கென்று தனி முடி திருத்தும் நிலையங்கள்.கடவுள்களின் தேரை வடம் பிடித்து இழுப்பதற்கு அனுமதிக்கிறீர்களா? அம்பேத்கார் போட்ட தீண்டாமை ஒழிப்பு சட்டத்தினால் சம்பத்தப் பட்டவர்களை உங்களால் என்ன செய்ய முடிந்தது?

suvanappiriyan said...

திரு கூத்தாடி!

//வேதமோ/விவிலியமோ/குரானோ பிரபஞ்சம் பற்றி ஒரு தெளிவான கருத்துக்களைச் சொல்லவே இல்லை .//

தவறான வாதம். குர்ஆன் பிரபஞ்சத்தைப் பற்றி ஒரு பட்டியலே இடுகிறது. 6;25 - 2;36 - 7;24 - 9;36 - 13;2 - 31;10 - 13;2 - 31;29 - 35;13 - 36:38 - 39:5 போன்ற வசனங்களை குர்ஆனில் தேடிப் பாருங்கள். இந்த பிரபஞ்சத்தைப் பற்றி இன்றைய விஞ்ஞானி பேசுவதுபோல் பேசுகிறது..

//ஏன் அந்த மார்க்க அறிஞர்கள் அறிவியல் சிலவற்றை அறுதியிட்டுக் கூறும் முன் இவர்கள் சொல்லிருக்க முடியாது..//

உங்கள் வாதம் நகைப்பிற்கிடமானது. அறிவியல் உண்மைகள் பத்து நூற்றாண்டுகளாகத்தான் ஒன்றன் பின் ஒன்றாக உலகுக்குத் தெரிய வருகின்றன. இந்த உண்மைகள் அனைத்தும் பதினான்கு நூற்றாண்டுக்கு முன்பே குர்ஆனில் சொல்லப் பட்டிருப்து இது இறைவேதம் என்பதற்கு சாட்சியல்லவா!முன்பே கண்டு பிடிக்காதது மனிதனின் தவறே ஒழிய வேதத்தை எப்படி குறை காண முடியும்?. இன்னும் பல உண்மைகள் இந்த குர்ஆனில் புதைந்து கிடக்கின்றது.இனி வரும் காலங்களில் இதை விட ஆச்சரியப் படப் போகிறோம் பாருங்கள்.

//எல்லாமே என் மதப் புத்தகத்தில் இருக்கிறது என்று சொல்லுவது பெரும்பாலும் உதவாது .//

நான் அப்படி சொல்லவில்லையே! மனிதன் நேர் வழி பெறுவதற்காக இறைவனால் அருளப்பட்ட வேதம்தான் குர்ஆன். கல்விகற்க சொல்கிறது. உழைக்க சொல்கிறது. நன்மை திமைகளை பட்டியலிடுகிறது. இறைவனை வணங்கவும் சொல்கிறது.

'அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா?என்று கேட்பீராக.அறிவுடையோர்தான் நல்லறிவு பெறுவார்கள்.' -குர்ஆன் 39:9

//நான் ஆன்மிகத்திற்கு எதிரியில்லை மதத்திற்கு /மதம் மேல் மக்களைத் திணிக்கும் சொற்களும் எழுத்தும் என்னைக் காயப்படுத்து//

அதற்கு காரணம் உங்கள் மார்க்கம் மதத்தின் பெயரால் மனிதர்களை கூறு போட்டு வர்ணாஸரமத்தை உருவாக்கியதால். அதே போல் எல்லா மதக் கருத்துகளையும் மேம் போக்காக பார்ப்பதால் மதத்தின் மேல் உங்களுக்கு வெறுப்பு எற்படுகிறது. மற்ற மதக் கருத்துக்களையும் ஆழ்ந்து படியுங்கள். நாத்திகம் உங்கள் மனத்திலிருந்து சிறிது சிறிதாக விலகும்.