இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! - மூன்று
ஒரே இறைவனை வணங்கச் சொல்லும் வேறு சில வசனங்களையும் இந்து மத வேதங்களிலிருந்து பார்ப்போம்.
ரிக் வேதம்
'மா சிதான்யாத்வி சன்ஷதா'
'பரிசுத்தமானவனைத் தவிர வேறு யாரையும் வணங்கக் கூடாது'
ரிக் வேதம் 8 : 1: 1
'யா எகா இத்தாமுஸ்துதி'
'தனித்தவனும் ஈடு இணையற்றவனுமான அவன் புகழப் பட்டவன்'
ரிக் வேதம் 6 : 45 : 16
'உங்கள் இறைவன் ஒரே இறைவனே!' என்பதே எனக்கு அறிவிக்கப் படுகிறது. நீங்கள் இதை ஏற்கிறீர்களா?' என்று முகம்மதே கேட்பீராக'
குர்ஆன் 21 : 108
மேற் கண்ட இரண்டு வசனங்களையும் சொன்னது ஒருவன்தான் என்று மேலும் உறுதியாகிறது.இவ்வளவு தெளிவாகவும் விளக்கமாகவும் ஒரு இறைவன் தான் என்று இந்து மத வேதங்கள் சொல்லியிருக்க இத்தனை தெய்வங்களை எப்படி உண்டாக்கினர்? இதை மதக் குருக்களும் எப்படி அனுமதித்தனர் என்று நாம் வியந்து போகிறோம்.
ஒருவன் முஸ்லிமாக இருக்க வேண்டுமானால் ஒரு கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். அது என்ன? 'லா இலாஹா இல்லல்வாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' அதாவது 'இறைவன் இல்லை அல்லாஹ்வைத் தவிர முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்ற இந்த கொள்கையில் உறுதியாக இருப்பது அவசியம். இதில் முதல் கொள்கையான இறைவன் ஒருவனே என்பதை ஹிந்து மத வேதங்களிலிருந்தே முந்தய பதிவுகளில் எடுத்துக் காட்டியுள்ளேன. அடுத்த கொள்கை முகமது நபியை நம்ப வேண்டும். இவரைப் பற்றி ஹிந்து மத வேதங்கள் என்ன சொல்கிறது என்று ஒவ்வொன்றாக பார்ப்போம்.
இந்து மதக் கோட்பாடுகளின் படி இறைவன் பல அவதாரங்களை எடுத்து இந்த பூமிக்கு வருவதாக சொல்லப் படுகிறது. எப்பொழுதெல்லாம் பூமியில் குழப்பங்கள் ஏற்படுகிறதோ அந்த நாட்களில் இறைவன் மனித ரூபத்தில் அவதாரம் எடுத்து பூமிக்கு வருவான் என்று போதிக்கப் படுகிறது.
'மனித ரூபத்தில் வருவது இறைவனுக்கு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இது நடக்கக் கூடியதே' என்று பலரும் வாதிடுகின்றனர். முதலில் நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள் வேண்டும்: மனிதனுக்கு உள்ள தன்மைகள் வேறு. நம்மைப் படைத்த இறைவனுக்குள்ள தன்மைகள் வேறு.
'அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன் அவனுக்கு சிறு உறக்கமோ ஆழ்ந்த உறக்கமோ ஏற்படாது' - குர்ஆன் 2 :255
'உனது இறைவன் மறதி உடையவனாக இல்லை' - குர்ஆன் 19 :64
'அவனே உணவளிக்கிறான். அவனுக்கு உணவளிக்கப் படுவதில்லை' -குர்ஆன் 6 :14
'நான் மனிதர்களிடத்தில் செல்வத்தை நாடவில்லை. அவர்கள் உணவளிப்பதையும் நான் நாடவில்லை.அல்லாஹ்வே செல்வம் அளிப்பவன். உறுதியானவன். ஆற்றல் உடையவன். -குர்அன் 51 : 57,58
'சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்.ஆட்சியில் அவனுக்கு பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை' என்று முகம்மதே கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப் படுத்துவீராக' - குர்ஆன் 17 :111
மேற்கண்ட குர்ஆனின் வசனங்களின் மூலம் மனிதனுக்கும் இறைவனுக்கும் உள்ள பல தன்மைகள் மாறுபடுகிறது. தூக்கம்,மறதி,அசதி,துன்பம்,பிறப்பு,இறப்பு போன்ற பலகினங்களுக்கெல்லாம் அப்பாற்ப் பட்டவனே இறைவன். இதைத்தான் அனைத்து மத வேதங்களும் சொல்கிறது. இத்தனை தன்மைகள் மாறி இருக்க இறைவன் மனிதனாக அவதாரம் எடுத்தால் அது இறை சக்திக்கு இழுக்கல்லவா?
எனவே இறைவன் அவ்வப்போது அனுப்பிய இறைத் தூதர்களையே கடவுளின் அவதாரம் என்று மக்கள் விளங்கிக் கொண்டார்கள் என்பது தான் சரியான வாதமாக படுகிறது. இதைத்தான் பல ஹிந்து வேதங்களும் உறுதிப் படுத்துகின்றன. யுக முடிவு நாள் சமீபத்தில் ஒரு தூதர் வருவார் அவர் அரபு நாட்டில் தோன்றுவார். அவர் பெயர் அகமது அல்லது முகமது என்பதாகும் என்றெல்லாம் பல வேதங்களில் சொல்லப் பட்டுள்ளன.
'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்.' - குர்ஆன் 14 :4
இந்த வசனத்தின் மூலம் உலகில் உள்ள மூல மொழிகள் அனைத்துக்கும் தூதரும் வேதமும் வந்திருக்கிறது என்பதை அறியலாம். தமிழ் மொழியிலும் வேதமும் தூதரும் வந்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றிய தெளிவான சான்றுகள் நம்மிடம் இல்லை.
'அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்டதையும் இப்றாகீம் இஸ்மாயில இஸ்ஹாக் யஃகூப் மற்றும் அவர்களின் சந்ததிகளுக்கு அருளப் பட்டதையும் மூஸா ஈஸா(ஏசு) மற்றும் நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து கொடுக்கப் பட்டதையும் நம்பினோம். அவர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்ட மாட்டோம் நாங்கள் அவனுக்கே கட்டுப் பட்டவர்கள்' என்று கூறுவீராக! - குர்ஆன் 3 : 84
மேற்கண்ட வசனத்தின் மூலம் இறைத் தூதர்களுக்கிடையில் 'அவர் உயர்ந்தவர்' 'இவர் தாழ்ந்தவர்' என்ற பாரபட்சம் காட்டக் கூடாது என்று விளங்குகிறது. இனி இந்து மதத்தில் முகமது நபியைப் பற்றி முன்னறிவிப்பு சொல்லப் பட்டிருப்பதை வரிசையாக காண்போம்.
பவிஷ்ய புராணா
வேற்று நாட்டைச் சேர்ந்த வேற்று மொழி பேசக் கூடிய ஆன்மீகவாதி தன் தோழர்களோடு தோன்றுவார்.அவர் பெயர் முகமத். இவர்கள் அனைவரும் பாலைவனப் பிரதேசத்தில் தோன்றுவார்கள். இவர் மனிதருக்கெல்லாம் முன் மாதிரியாக திகழ்வார்.
- பவிஷ்ய புராணா - ப்ரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - சுலோகம் அய்ந்திலிருந்து எட்டு வரை.
மிகத் தெளிவாக முகமது நபி வருகையைப் பற்றி இங்கு சொல்லப் படுகிறது.
'உங்களுக்கு முகமது நபியிடம் அழகிய முன் மாதிரி இருக்கிறது.' - குர்ஆன் 33 :21
இரண்டு வேதங்களின் கருத்துக்களும் எந்த அளவு ஒத்துப் போகிறது என்று பாருங்கள்.
முகமது நபியின் வருகையை இதற்கு முன் உள்ள வேதங்களிலும் சொல்லியிருக்கிறேன் என்று இறைவன் குர்ஆனில் பல இடங்களில் சுட்டிக் காட்டுகிறான்.
'நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் தமது பிள்ளைகளை அறிவது போல்இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.' - குர்ஆன் 2 :146
முகமது நபி மக்காவிலிருந்து விரட்டப் பட்டு மதீனா வருவார்கள் என்பதைத் தங்கள் நபிமார்களிடமிருந்து அறிந்து வைத்திருந்த யூதர்கள் தமது அன்றைய தாயகமான எகிபது பாலஸ்தீன் பகுதியிலிருந்து மதீனா வந்தனர்.முகமது நபி வரும் போதுஅவர்களை முதலில் ஏற்பவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக இங்கே வந்து குடியேறினர். ஆனால் அவர்களின் வாரிசுகளோ முகமது நபி வந்த போது அவர்களை இறைத் தூதர்என்று அறிந்து கொண்டே மறுத்தனர். தமது பதவி செல்வாக்கு போய்விடும் என்று அஞ்சினர். அது தான் இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது.
பவிஸ்ய புராணம்
'இந்த வேற்று நாட்டுத் தூதர் அரபுலகம் அனைத்தையும் தமது ஆளுகையின் கீழ்க் கொண்டு வருவார். ஆரிய தர்மம் அவரது நாட்டில் காணப்படாது.பல தெய்வ வணக்கம் ஒழிக்கப்படும்அவருக்கு பல எதிரிகள் உண்டாவார்கள்.அனைவரையும் வெற்றிக் கொண்டு உண்மையை நிலை நாட்டுவார்.அவர்கள் தாடி வைத்திருப்பார்கள்.மாமிசத்தை சாப்பிடுவார்கள்.பன்றிக் கறியை சாப்பிட மாட்டார்கள். வேதம் அனுமதித்த அனைத்தையும் சாப்பிடுவார்கள். பிரார்த்தனைக்காக அழைப்பும்(பாஙகு) கொடுப்பார்கள். அவர்கள் முசல்மான் என்று அழைக்கப் படுவார்கள்.
பவிஸ்ய புராணா - பிரதி சரக் பர்வ் - காண்டம் 3 - அத்தியாயம் 3 - ஸ்லோகம் பத்திலிருந்து இருபத்தி ஏழுவரை.
அது எப்படி இவ்வளவு துல்லியமாக பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சொல்ல முடியும் என்ற கேள்வி நமக்கெல்லாம் வரும். அதற்கு இறைவன் குர்ஆனிலேயே பதிலும் அளிக்கிறான்.
'பூமியிலும் வானத்திலும் அணு அளவோ அதை விடச் சிறியதோ அதை விடப் பெரியதோ உனது இறைவனை விட்டும் மறையாது. அவை தெளிவான பதிவேட்டில் பதியப்பட்டிருக்கிறது. - குர்ஆன் 10 :61
இந்த வசனத்தின் மூலம் எத்தனை நபி வருவார். எங்கெங்கெல்லாம் வருவார் அவர்களின் சட்டங்கள் என்பன போன்ற விபரங்களை ஏற்கெனவே எழுதி வைக்கப் பட்டுள்ள பதிவேட்டிலிருந்து எடுத்து இறைவன் கொடுத்திருக்கிறான் என்று விளங்க முடிகிறது.
மேலும் பல விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம் இறைவன் நாடினால்!
என்றும் அன்புடன்
சுவனப் பிரியன்.
2 comments:
ஐயா,
தங்கள் கட்டுரை வியப்பை தருகிறது.
இதிலுள்ள விஷயங்கள் என்னை மலைக்க வைக்கின்றன.
எல்லா வழிகளும் என்னிடமே வந்து சேருகின்றன என்கிறார் இறைவன் கீதையில்.
தங்களின் இந்த கட்டுரை மத நல்லிணக்கிற்கு மிக நல்ல உதாரணம்.
தங்கள் திருப்பணி தொடருக.
ஒரு நாலைந்து வருஷங்களுக்கு முன் வசந்த் சாதே (இவர் காங்கிரஸ் அரசியல்வாதி. இறைவனடி சேர்ந்துவிட்டார்...) ஒரு அருமையான பேச்சை நான் பம்பாயில் கேட்கும்படி ஆனது.
பல விளக்கங்களை ஆழ்ந்த கருத்து அமைத்து அவர் சொன்னார். முகம்மதுவும் இறை தூதரே என்று இந்துக்கள் ஒத்துக்கொள்கிறார்கள். இந்து சமயத்தில் இருந்த பலப்பல பிரிவுகளை ஒன்று சேர்த்த ஆதிசங்கர்ர் முகம்மதுவிற்கு பின் வந்திருந்தால், முகம்மதுவையும் இந்து இறை தூதருடன் சேர்த்திருப்பார் என்று.
நன்றி
Thanks for your opinion Mr Jayaraman!
Post a Comment