Followers

Thursday, August 10, 2006

இந்து மதத்துக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர் யார்?

இந்து மதத்துக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர் யார்?

ஒரே இறைவனையும் அவனால் அனுப்பப் பட்ட முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாமிலிருந்து கடைசி தூதரான முகமது நபி வரையுள்ள அனைத்து தூதர்களையும் இஸ்லாமியர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்.

ஆனால் இந்துக்கள் எந்த இறை தூதர்களையும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் இறைத் தூதர்கள் மூலமாக அருளப்பட்ட வேதங்களை வைத்திருக்கின்றார்கள். மனிதர்களைப் பிரிக்கும் சாதி அமைப்புகளை உண்டாக்கும் வர்ணாசிரமத் தத்துவம் பிற்பாடு மனிதக் கரங்களால் ஏற்றப் பட்டிருக்க வேண்டும். வர்ணாசிரமக் கருத்துக்களை நீக்கி விட்டுப் பார்த்தால் குர.ஆன், பைபிள், தோரா, ரிக், யஜீர்,அதர்வண வேதங்கள் அனைத்தின் கருத்துக்களும் பெரும்பாலும் ஒத்துப் போவதைப் பார்க்கிறோம்.

யூத வேதமான தோரா அல்லது பென்ட்டாஸ் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு யூதரிடம் கேட்டால் அவர் மோஸஸ் மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார்.

கிறித்தவ வேதமான சுவிஷேஷம் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு கிறித்தவரைக் கேட்டால் இயேசு கிறிஸ்து மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார்.

இஸ்லாமிய வேதமான திருக் குர்ஆன் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு முஸ்லிமைக் கேட்டால் முகமது நபி என்று உடன் கூறி விடுவார்.

இதே கேள்வியை பழம் பெரும் வேதங்களுக்குச் சொந்தக் காரர்களான இந்துக்களிடம் ரிக், யஜீர், சாம, அதர்வண வேதங்கள் யார் மூலமாக அருளப் பட்டது என்று கேட்டால் அவர்களால் பதில் சொல்ல முடியாது.

இந்து வேதங்களை பகுத்து தொகுத்தவர் வியாசர் என்று சிலர் சொல்வர். வியாசர் எனும் சமஸ்கிரத சொல்லின் பொருளே தொகுப்பாளர் என்பதாகும். ஆனால் இங்கு தொகுப்பாளரைக் கேட்கவில்லை. வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்பதுதான் கேள்வி. இதே போல் தான் இஸ்லாமியரின் வேத நூலான குர்ஆனை முகமது நபிக்கு பிறகு புத்தக வடிவில் தொகுத்தவர் உஸ்மான் என்று வரலாற்று ஆதாரங்களின் மூலம் அறிகிறோம்.

வேதம் என்றால் அது கடவுளின் வார்த்தையாக இருக்க வேண்டும். எனவேதான் அதற்கு நாம் உயர்ந்த மதிப்பைக் கொடுக்கிறோம். மதம் என்று ஒன்று இருந்தால் அதற்கு வேதம் என்று ஒன்று இருக்க வேண்டும். அந்த வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்ற தெளிவு இருந்தாக வேண்டும். சாதாரணமாக அனுப்புனரோ பெறுநரோ இல்லாத ஒரு கடிதம் எவ்வளவு தான் உயர்ந்த நடையில் இருந்தாலும் மக்களிடம் எடுபடுவதில்லை. பழம் பெருமை வாய்ந்த இந்து சமுதாயம் நேர் வழிக் காட்ட வந்த வேதம் யாரால் அருளப் பட்டது என்ற தகவலை தொலைத்து விட்டு நிற்கிறது.

'ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு நேர் வழி காட்டியுண்டு' -(13 : 7) என்று குர்ஆன் கூறுகிறது.

அப்படியானால் இந்து சமுதாயத்திற்கு வந்த இறைத் தூதர் யாராக இருக்க முடியும்?

'ஏ அக்னீ !நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.'

1 : 13,14 - ரிக் வேதம்

நோவாவுடைய பெயர் ரிக் வேதத்தில் 51 இடங்களிலும், யஜீர் வேதத்தில் இரண்டு இடங்களிலும், சாம வேதத்தில் எட்டு இடங்களிலும், அதர்வண வேதத்தில் பதினான்கு இடத்திலும் குறிப்பிடப் பட்டுள்ளது

ஆதாரம் வேத ஆராய்ச்சி தொகுப்பான”NOW OR NEVER” – written by Shames Navad

இதிலிருந்து இந்து சமூகத்துக்கு என்று வந்த தூதர்களில் வேதம் கொடுக்கப் பட்ட தூதர் நோவா என்று அறிய முடிகிறது.

இந்து வேதங்களில் எழுபத்தைந்து இடங்களில் தூதர் நோவாவுடைய குறிப்பு காணப்படுகிறது. இஸ்லாமியரின் வேதமான குர்ஆனில் முகமது நபியின் பெயர் வெறும் ஐந்து இடங்களில் மட்டுமே குறிப்பிடப் படுகிறது. ஆனால் முஸ்லிம்கள் முகமது நபியை இறைத் தூதர் என்று நம்புகிறார்கள். எழுபத்தைந்து இடங்களில் நோவாவின் குறிப்பை தங்கள் வேதங்களில் வைத்திருக்கும் இந்துக்களோ நோவாவை ஏற்க மறுக்கிறார்கள்.

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் குறிப்பிட்ட பிரதேசத்திற்கும் - குறிப்பிட்ட இனத்தினருக்கும் மட்டுமே உரியவர்கள் ஆவார்கள். ஆப்ரஹாம், இஸ்மாயீல் போன்றோர்கள் அரபு இனத்தவருக்காகவும், மோஸஸ், தாவூது, ஏசு போன்றோர் இஸ்ரவேல் இனத்தவருக்காகவும் நோவா அவர்கள் ஜலப் பிரளயத்திற்கு முன்பும், ஜலப் பிரளயத்திற்கு பின்பு சில காலமும் அன்றைய ஆதிக்கத்தின் சந்ததிகள் அனைவருக்கும் பொதுவான தூதராக இருந்தார். பிற் காலத்தில் அவர்கள் குமாரர்கள் மூலமாக சந்ததி பிரிந்த போது ஆரிய சமுதாயத்தினருக்கு மட்டுமான தூதராக நோவா இருந்திருக்கிறார்.

'நோவாவுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும் தூதுச் செய்தி அறிவித்தது போல முஹம்மதே உமக்கும் நாம் தூதுச் செய்தி அறிவித்தோம்.'

4 : 163 - குர்ஆன்

இதன் மூலம் நோவாவுக்கு அருளப் பட்ட வேதத்தைப் போலவே அதற்கு பின் வந்த தூதர்களுக்கும் வேதம் அருளப்பட்டதாக இறைவன் கூறுகிறான். இதன் மூலம் நோவாவுக்கு கொடுக்கப் பட்ட வேதத்திற்கும் முகமது நபிக்கு கொடுக்கப் பட்ட வேதத்துக்கும் பல ஒற்றுமைகள் இருக்க வேண்டும் என்று தெளிவாகிறது. இந்த ஒற்றுமையைப் பற்றி 'இந்து மதம்போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்' என்ற தலைப்பில் முன்பே எழுதியிருக்கிறேன். அது அல்லாமல் மேலும் சில ஒற்றுமைகளைப் பார்ப்போம்.

1). புகழ் அனைத்தும் அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ் ஒருவனுக்கே
1 : 1 - குர்ஆன்

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்

2). இறைவன் அளவற்ற அருளாளன் : நிகரற்ற அன்புடையோன்
1 : 2 - குர்ஆன்

அவன் அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்
3 : 34 : 1 - ரிக் வேதம்

3). நீ எங்களை நேர் வழியில் நடத்துவாயாக
1 : 5

எங்கள் நன்மைக்கான நேர் வழியைக் காட்டு
40 : 16 - யஜுர் வேதம்.

4). நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா?
2 : 107 - குர்ஆன்

பரந்த வானங்களின் மீதும் பூமியின் மீதும் ஆட்சி அதிகாரமும் வல்லமையும் கொண்டவன் அவனே! அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.
1 : 100 : 1 - ரிக் வேதம்

5). கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தம். நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன். எல்லாம் அறிந்தவன்.
2 : 115 - குர்ஆன்

அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்
10 :12 :14 - ரிக் வேதம்

கிழக்கிலும் மேற்கிலும் மேலிழும் கீழிலும் ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கிறான்
10 : 36 : 14 - ரிக் வேதம்

இறைவனின் பார்வை எல்லா பக்கங்களிலும் இருக்கிறது. இறைவனின் முகம் எல்லா திசைகளிலும் இருக்கிறது.
10 : 81 : 3 - ரிக் வேதம்

6). அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்
25 : 2 - குர்ஆன்

பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரணகர்த்தாவாக இருக்கிறார்.
7 : 19 : 1 - அதர்வண வேதம்

7). அவன் தான் இரவையும் பகலையும் அடுத்தடுத்து வருமாறு ஆக்கினான்
25 : 62 - குர்ஆன்

இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத்ததே
10 : 190 : 2 - ரிக் வேதம்

8). நீங்கள் களைப்பாறி அமைதி பெற அவனே இரவையும் காலக்கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
6 : 96 - குர்ஆன்

அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான்.
10 : 190 : 3 - ரிக் வேதம்

9). யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே. பிந்தியவனும் அவனே. பகிரங்கமானவனும் அவனே. அந்தரங்கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
57 : 3 - குர்ஆன்

ஏ பரமேஸ்வர்! நீ அந்தரங்கமானவனும், முந்தியவனும் நன்கறிந்தவனுமாவாய்.
1 : 31 : 2 - ரிக் வேதம்.

10). அல்லாஹ்வுடைய நடை முறையில் நீர் எவ்வித மாறுதலையும் காண மாட்டீர்.
48 : 23 - குர்ஆன்

அவன் நடைமுறையில் ஒன்று கூட மாற்றத்திற்கு உரியத அல்ல.
18 : 15 - அதர்வண வேதம்

11). அல்லாஹ்வுடைய வாக்குகளில் எவ்வித மாற்றமும் இல்லை.
10 : 64 - குர்ஆன்

இறைவனின் புனித வாக்குகளில் மாற்றங்களே இல்லை.
1 : 24 : 10 - ரிக் வேதம்

12). அல்லாஹ் அவன் மிகவும் பெரியவன், மிகவும் உயர்ந்தவன்
13 : 9 - குர்ஆன்

இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்
20 : 58 : 3 - அதர்வண வேதம்

மேற் கண்ட இரண்டு மார்க்கங்களின் வேதங்களின் கருத்துக்களின் ஒற்றுமையைப் பாருங்கள். ஒரு சில வார்த்தை வித்தியாசங்னளை தவிர்த்து பொருள் ஒன்றாக வருவதை ஆச்சரியத்தோடு பார்க்கிறோம். பொருள் மட்டும் அல்லாது வசன நடையும் ஏறக்குறைய ஒன்றாக வருவதைப் பார்க்கிறோம்.

ஒரு விஷயத்தின் முக்கியத்துவத்தை விளக்குவதற்காக ஒரே சொற்றொடரை திரும்ப திரும்ப பயன்படுத்துவது இலக்கியத்தில் ஒரு மரபாகவே கடைபிடிக்கப் படுகிறது. இதே போன்ற சொற்றொடர்கள் குர்ஆனிலும், இந்து மத வேதங்களிலும் எங்கெல்லாம் வருகிறது என்பதை இனி பார்ப்போம்.


இறைவனே மிக அறிந்தவன்

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

தகவல் உதவிக்கு நன்றி
ஜாகிர் நாயக், அபூ ஆசியா,

58 comments:

வஜ்ரா said...

சுவன்

கிணற்றுத் தவளை போல் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்...இறைத்தூதர் இல்லாவிட்டால் மதங்கள் தவறு என்ற எண்ணம் முதலில் தவறு.

இந்து மதத்தில் இறை தூதரும் இல்லை, download (இறக்கப்பட்ட) வேதமும் இல்லை. வேதங்கள் என்பது ஒருவன் அருளி மற்றவன் பெருவதற்கு கடிதம், அஞ்சல் அல்ல. வேதங்கள் என்றும் இருக்கும் உண்மைகள். உங்களுக்கு தெரியவில்லை என்றால் அது இல்லை என்று அர்த்தம் அல்ல.. Theory of Gravitation போல். புவி ஈர்ப்பு சக்தி நியூட்டன் சொல்வதற்கு முன் இல்லையா?!! அல்லது, அமேரிக்கா தான் கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு முன்னர் இல்லாமல் போய் விட்டதா?

அது போலத் தான் இந்து மத வேதமும்.

..
யூத வேதமான தோரா அல்லது பென்ட்டாஸ் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு யூதரிடம் கேட்டால் அவர் மோஸஸ் மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார்.
..

மோசஸ் வேதங்கள் சொல்லவில்லை. அவர் சொன்னது 10 commandments. தோரா மோசஸ் தோன்றுவதற்கு முன் இருந்தே இருந்து வந்துள்ளது. தோரா எழுதியது மோசஸ் மட்டும் அல்ல. பல யூத ரபி மார்கள் பல காலங்களில் எழுதியதைத் தொகுத்துத் தான் தோரா என்று யூதர்கள் பின்பற்றுகின்றனர்.

ஜோ/Joe said...

//கிறித்தவ வேதமான சுவிஷேஷம் யார் மூலமாக அருளப் பட்டது என்று ஒரு கிறித்தவரைக் கேட்டால் இயேசு கிறிஸ்து மூலமாக அருளப் பட்டது என்று கூறி விடுவார்.//

குரான் முகமது நபி மூலமாக இறைவனால் அருளப்பட்டது என்ற நம்பிக்கை போல புதிய ஏற்பாடு இயேசுவால் அருளப்பட்டது என்று கிடையாது .இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் அவருடைய காலத்தில் இருந்த 5 பேர் தனித்தனியாக எழுதியதே பழைய ஏற்பாட்டில் உள்ளது

Ram said...

செம காமடி போங்க...!! இதேமாதிரி இன்னும் நிறைய எழுதுங்க!!
பல விஷயத்த நீங்களே டிபைன் பண்ணி அறிவிச்சிட்டீங்க... சபாசோ சபாசு.


வேதம் என்றால் அது கடவுளின் வார்த்தையாக இருக்க வேண்டும்.

ஏன்?????

'ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு நேர் வழி காட்டியுண்டு' -(13 : 7) என்று குர்ஆன் கூறுகிறது.

அப்படியானால் இந்து சமுதாயத்திற்கு வந்த இறைத் தூதர் யாராக இருக்க முடியும்?

குரான் சொன்னா சொன்னதுதான் போங்க...!!


வேதம் யார் மூலமாக அருளப் பட்டது என்பதுதான் கேள்வி. யார்மூலம் வந்தால் என்ன? யார் சொன்னார்ன்னு பாக்காம என்ன சொல்லுதுன்னு பாருங்க...!!

கிறுத்துவர்களின் பைபிளையும் வேதத்தையும் ஒப்பிட்டும் இப்பிடி எழுதிருக்காங்க... அதையும் படிங்க...!! ஒரே காமடிதான்...!!

ஆனா ஒன்னு எழுதறத மட்டும் நிறுத்திடாதீங்க... வெளுத்துக்கட்டுங்க...!!

CAPitalZ said...

Hindu religion is not created by ONE man.

It is constructed with many men & women. It is not a dictatorship but democracy.

It doesn't put down other religions like
"if you are not hindu you are against the god"
"Come save your self by joing _____ god from others" - [indirectly saying you are demon if you are with other gods]
"Some demon supporters are praying stones" - [it doesn't matter; your religion no need to condemn others just to get people on your side]

Is it okey to say "Your wife is not good so come with me?"

The good solution is to correct the wrong doings rather than just switch.

______
CAPital
http://1paarvai.wordpress.com/
http://1kavithai.wordpress.com/
http://1seythi.wordpress.com/

சிறில் அலெக்ஸ் said...

//இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் அவருடைய காலத்தில் இருந்த 5 பேர் தனித்தனியாக எழுதியதே பழைய ஏற்பாட்டில் உள்ளது//

புதிய ஏற்பாட்டில் எனப் படிக்கவும்...

supersubra said...

அன்புள்ள சுகவனப்பிரியனுக்கு

நீங்கள் இஸ்லாம் பற்றி எழுதுங்கள். தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம். ஆனால் உங்களுக்கு ஏன் பல இந்துக்களாலும் கூட முழுமையாக புரிந்து கொள்ளப்படாத அல்லது தவறாக புரிந்துகொள்ளபட்ட ஒரு பேருண்மைதான் இந்து மதத்தின் ஆதாரம். வேதம் என்பது வித் என்னும் வேர்ச்சொல்லில் இருந்து வந்தது. அதாவது அறியப்பட்டது என்னும் பொருள் படும். என்றும் உள்ள உண்மைகள் பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் அனைத்தையும் அடக்கிய ஒரு நூல் தொகுப்புதான் வேதங்கள். முனிவர்கள் அதைதொகுத்தவர்களே.என்னுடைய வலைத்தளத்தின் முகப்பில் உள்ள ரிக்வேதச்செய்யுளை படித்துப்பாருங்கள்.
http://supersubra.googlepages.com

suvanappiriyan said...

வஜ்ரா!

//கிணற்றுத் தவளை போல் பேசுகிறீர்கள் என்று நினைக்கிறேன்...//

அப்படிங்களா! அப்பொ எல்லா விபரமும் தெரிந்த நீங்கள் தான் எனக்கு விளக்கம் கொடுத்து கிணற்றிலிருந்து தூக்கி விடனும.

//இந்து மதத்தில் இறை தூதரும் இல்லை, download (இறக்கப்பட்ட) வேதமும் இல்லை.//

'ஏ அக்னீ !நியூஹ் அவர் தூதர் என்று ஒப்புக் கொள்கிறேன்.'

1 : 13,14 - ரிக் வேதம்

இந்த வசனம் ரிக் வேதத்தில் வருவதைப் பற்றிய உங்கள்கருத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?

//அமேரிக்கா தான் கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு முன்னர் இல்லாமல் போய் விட்டதா?

அது போலத் தான் இந்து மத வேதமும்.//

கொலம்பஸ் கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே அமெரிக்கா இருந்திருக்கிறது. ஒத்துக் கொள்கிறேன். அது போல் இந்து மத வேதங்களை உண்டாக்கிய, அருளிய கொலம்பஸ் யார்?

இதற்கான விளக்கத்தை இந்த கிணற்றுத் தவளைக்குத் தர முடியுமா?

suvanappiriyan said...

ஜோ!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! உங்கள் பதிவுகள் பலவற்றைப் படித்துள்ளேன்.

//புதிய ஏற்பாடு இயேசுவால் அருளப்பட்டது என்று கிடையாது .இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் அவருடைய காலத்தில் இருந்த 5 பேர் தனித்தனியாக எழுதியதே பழைய ஏற்பாட்டில் உள்ளது//

புதிய ஏற்பாட்டின் முகப்பில் இயேசு கிறித்துவின் பரிசுத்த சுவிஷேம் என்று கத்தோலிக்க பைபிளிலும், 'நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் புதிய ஏற்பாடு' என்று புராட்டஸ்டண்ட் பைபிளிலும் குறிப்பிடப் பட்டுள்ளது. யார் எழுதியிருந்தாலும் அது ஏசு சொன்ன வார்த்தைகள் என்று தானே பொருள் கொள்ள முடியும்!

அதே சமயம் இயேசுவின் மரணமும், அவரது அடக்கம், அவருக்காக துக்கம் கொண்டாடிய விபரம் ஆகியவையும் புதிய ஏற்பாட்டில் வருவதால் இயேசுவின் கருத்துக்களோடு பவுல் போன்றோரின் மனிதக் கருத்துகளும் புகுந்துள்ளன என்பது தெளிவாகிறது.

'பினபு இயேசு கலிலியா எங்கும் சுற்றி நடந்து அவர்களுக்கிடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்
4 : 23 - மத்தேயு

இயேசு கலிலேயாவில் வந்து தேவனுடைய ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசிங்கித்தார்.
1 : 14 - மாற்கு

காலம் நிறைவேறிற்று தேவனுடைய ராஜ்ஜியம் சமீபமாயிற்று. மனம் திரும்பி சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்.
1 : 15 - மாற்கு

இயேசுவைப் பற்றி எழுதிய மத்தேயுவும் மாற்கும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை (புத்தகத்தை) இயேசு பிரசிங்கித்ததாகக் கூறுகிறார்கள். மாற்கு ஒரு படி மேலே போய் தேவனுடைய புத்தகம் அது என்கிறார். தேவனால் அருளப்பட்டதும், ராஜ்ஜியத்தின் சுவிசேஷம் எனப் பெயர் பெற்றதும் இயேசுவால் மக்களுக்குப் பிரசிங்கப் பட்டதுமான அந்த புத்தகம் எங்கே?

அந்த புத்தகம் மட்டும் காப்பாற்றப் பட்டிருந்தால் அது முழுக்க குர்ஆனின் கருத்துக்களையே சொல்லியிருக்கும். இயேசு பிரசிங்கித்த அந்த புத்தகத்தின் ஒரு தோல் ஆவணம் ஜோர்டானில் கிடைத்து அது ரகசியமாக அமெரிக்காவில் பாதுகாக்கப் பட்டும் வருகிறது என்பதை 'குகையில் தங்கிய அந்த ஏட்டுக்குரியோர்' என்ற தலைப்பிலும் விளக்கியுள்ளேன்.

suvanappiriyan said...

கேபிடல்!

//Hindu religion is not created by ONE man.

It is constructed with many men & women. It is not a dictatorship but democracy.//

புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே
8 : 1 : 1 -ரிக் வேதம்

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

இறைவன் ஒருவன் தான் என்பது உங்கள் வேதத்திலிருந்தே விளங்குகிறது. அந்த வேதங்களை மக்களுக்கு சொன்ன தூதர்கள் வேண்டுமானால் ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்களாக இருக்கலாம்.

//"Some demon supporters are praying stones" - [it doesn't matter; your religion no need to condemn others just to get people on your side]

Is it okey to say "Your wife is not good so come with me?"//

இதே வார்த்தையை சைவர்களைப் பார்த்து சமணர்கள் சொல்லலாம். இந்துக்களைப் பார்த்து பௌத்தர்கள் சொல்லாம். ஆரியர்களைப் பார்த்து திராவிடர்கள் சொல்லாம்.

The good solution is to correct the wrong doings rather than just switch.

அதையே தான் நானும் சொல்லுகிறேன்.

suvanappiriyan said...

இந்திரஜித்!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//யார்மூலம் வந்தால் என்ன? யார் சொன்னார்ன்னு பாக்காம என்ன சொல்லுதுன்னு பாருங்க...!!//

அதையே தாங்க நானும் சொல்றேன்.

suvanappiriyan said...

வியாபாரி!

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

//அவரவர் மதம் அவரவர்களுக்கு, இதில் உயர்வு தாழ்வு வேண்டாமே. எந்த மதத்தில் குறைகள் இல்லை, நாம் வேண்டிப் பிறந்தோமா இதே மதம் வேண்டும் என்று.//

நான் உயர்வு தாழ்வு கற்ப்பிக்கவில்லையே! நம் அனைவரையும் படைத்தது ஒரே இறைவன்தான். அவனே பல நாடுகளுக்கும் பல இனத்தவருக்கும் அவ்வப்போது தூதர்களை அனுப்புகிறான். ஒரு தூதருக்கும் மற்ற தூதருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் முஸ்லிம்கள் காட்டுவதில்லை.இது போன்ற ஒரு மன நிலைக்கு நாம் வந்து விட்டால் ஒரு மதத்தவர் மற்றொரு மதத்தவரை வெறுக்கும் தன்மை தானாக மாறி விடும் அல்லவா!

//மதமே அல்ல, ஒரு தொன்று தொட்டு வரும் கலாச்சாரம் எனும் போது உங்கள் கேள்வி அடிபட்டுப்போகிறது.//

உண்மைதான்! மதம் என்று நம் வழக்கத்தில் உள்ளதால் அந்த வார்த்தையைப் பயன் படுத்தினேன். இஸ்லாமிய மார்க்கம், இந்து மார்க்கம், கிறித்தவ மார்க்கம் என்று உபயோகப் படுத்துவதுதான் சிறந்த வார்த்தையாக இருக்கும். இதனால் சொல்ல வந்த கருத்து எவ்வாறு அடிபட்டுப் போகும்?

தருமி said...

இறைவனால் அனுப்பப்பட்ட தூதர்கள் அனைவரும் குறிப்பிட்ட பிரதேசத்திற்கும் - குறிப்பிட்ட இனத்தினருக்கும் மட்டுமே உரியவர்கள் ஆவார்கள்//

1. அப்படியானால் மதங்களுக்குள் universality என்பது இல்லை என்ற பொருள்தானே ?

2.அப்படியானால், ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு மட்டுமே வந்த ஒரு தூதரின் கொள்கைகள் மற்ற இனத்தவர்களுக்கு பொருந்தாத,கட்டுப்படுத்தாத கொள்கைகளாகத்தானே கருதப்பட வேண்டும்.

ஜயராமன் said...

சுவனப்ரியன் அவர்களே,

தங்கள் பதிவு அபத்தத்தின் உச்சக்கட்டம்.

தங்களுக்கு இந்து மத்த்தின் அடிப்படையே தெரியவில்லே என்று என் குறைந்த புத்திக்கு தோண்றுகிறது.

இஸ்லாமைப் பத்தியும் தங்களுக்கு தெரியவில்லையா? அல்லது, நான் அறிந்த இஸ்லாம் ஒரு புரட்டா? புரியவில்லை.

தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். எல்லா மதங்களும் ஒரே செய்தியை சொல்லுகின்றன என்றால் நீங்கள் எங்களை கஃபீர் என்று குரான் ஏன் சொல்லுகிறது என்று சொல்லுங்கள். எங்களுக்கு ஒரு டயம் குடுத்து இஸ்லாமுக்கு ஏன் மாற வேண்டும் என்று கெடு வைக்கிறது.

வேதங்கள் இறைவனின் உயிர் மூச்சு. நீங்கள் முதலில் உருவானீர்களா? இல்லை தங்கள் உயிர் மூச்சா? வேதங்கள் இறைவனால் கூட படைக்கப்படவில்லை. வேதங்கள் என்றும் மாறாத உண்மைகள்.

அந்த ஒவ்வொரு வேத்த்தையும் தன் ஞானக்கண்ணால் கண்டு அறிந்தவர்கள் வெவ்வேறு ரிஷிகள். அவர்களே இந்த வேத்த்தை நமக்கு கொடுத்தவர்கள். ஆனால், அவர்களால் இது உருவாக்கப்படவில்லை என்று இந்துமதம் தெளிவாக இருக்கிறது. ஒவ்வொரு வேத மந்திரத்தையும் எந்த ரிஷி கண்டெடுத்தார் என்பதற்கு வேத்ததில் அட்டவணை உண்டு.

தாங்கள் சொல்வது போல் ஒன்றும் தெரியாதது அல்ல. ரிஷி என்ற வார்த்தைக்கே மந்திர-த்ரஷ்டா (மந்திரங்களை கண்டெடுத்தவர்) என்றே பொருள்.

அவ்விதம் வேதங்கள் ஒன்றும் நீங்கள் நினைப்பது போல அனாதைகள் இல்லை.

மேலும், வேத்த்தில் தூதன் என்கிற வார்த்தை எங்கு பார்த்தாலும் வருகிறது. தூதனின் முதல் தூதன் அக்னி (அக்னிமீளே புரோஹிதம்... என்றே ரிக்வேதம் துவங்குகிறது.. புரோஹிதம் என்றால் தூதன்...) நீங்கள் குறிப்பிட்ட ரிக்வேத்த்தில் நோஹா என்றொரு வார்த்தை இல்லை. அது தூதன் என்பது அக்னியை. சரியாக வேத ஆங்கில பெயர்ப்புகளை படித்துவிட்டு பதிவு போடவும்.

வேதமும், குரானும் சொல்வது ஒரே செய்தி என்பது படா தமாசு. இந்து மத்த்தின் லட்சியம் மோட்சம். துலுக்கர்களின் லட்சியம் சுவனத்தில் அல்லாவால் சப்ளை செய்யப்பட்ட பல பெண்கள், மதுவுடன் உல்லாசம்.

இவை இரண்டும் எப்படி ஒன்றாகும்?

நன்றி

Muse (# 01429798200730556938) said...

சுவனப்பிரியன்,

ஜாலியாக இருக்கிறது.

என்னுடைய கிண்டல் பின்வருமாறு:

ஹிந்துக்களின் நம்பிக்கைப்படி இறையே இங்கே அவதரிக்கிறது. ஒரு முறை, இரு முறை அல்ல, குறைந்தது பத்துமுறை. இருபத்திரண்டு முறை என்று சொல்கிற அஃபிஷியல் கருத்துக்களும் உண்டு.

யோஸித்துப் பார்த்ததில் மற்ற இடங்களுக்குத் தன்னுடைய தூதர்களை அனுப்பிய இறை இந்தியாவில் தானே நேரடியாக வரக் காரணம் (அதுவும் மீண்டும், மீண்டும்) ஹிந்துக்கள் கடவுளை கடவுள் என்று உடனேயே தெரிந்துகொண்டுவிடும் ஞானம் கொண்டவர்கள் என்பதுதான்.

suvanappiriyan said...

சூபர் சுப்ரா!

//நீங்கள் இஸ்லாம் பற்றி எழுதுங்கள். தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறோம். ஆனால் உங்களுக்கு ஏன் பல இந்துக்களாலும் கூட முழுமையாக புரிந்து கொள்ளப்படாத அல்லது தவறாக புரிந்துகொள்ளபட்ட//

இறைவன் கொடுத்த வேதம் மனிதனுக்கு புரியாமல் இருக்குமா? குர்ஆன் கூட முதலில் புரோகிதர்களால் தான் புரிய முடியும்? சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது என்ற கருத்து இருந்தது. பிறகு அத்தகைய கருத்து தவறானது என்று நிரூபிக்கப் பட்டது.

நான் இந்து மத வேதங்களை பதிவதன் நோக்கம் இந்து, இஸ்லாம, கிறித்தவம், யூதம் போன்ற அனைத்து மதங்களை தந்தது ஒரே இறைவன்தான் என்பதை எனக்குத் தெரிந்த விபரங்களைக் கொண்டு விளக்குவதே! இதன் மூலம் ஒரு மதத்தவர் மற்ற மதத்தவரை வெறுக்கும் தன்மை குறைய வாய்ப்பிருக்கிதல்லவா! இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு முன்னால் நானும் ஒரு இந்து தானே! ஒருக்கால் நான் தகவல்களை தவறாக தந்திருந்தால் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக் கொள்கிறேன்.

suvanappiriyan said...

சிறில் அலெக்ஸ்!
//புதிய ஏற்பாட்டில் எனப் படிக்கவும்...//

வருகைக்கும் தவறை சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி!

மு. மயூரன் said...

சுவனப்பிரியன்,

உங்களுடைய பார்வையிலிருக்கும் மிகப்போதாமையான விடயம், மதங்களை கடவுள்கள் உருவாக்குகிறார்கள் என்று கண்மூடித்தனமாக நம்புவதுதான்.

மதங்களை மனிதர்களே உருவாக்குகிறார்கள் என்ற உண்மையை நீங்கள் இருட்டடிப்பு செய்து கடவுளை திணிப்பதற்கு முயல்வதுதான் எல்லா குழப்பங்களுக்கும் காரணம்.

மத நூல்கள் மக்களிடமிருந்தே வெளிப்படுகின்றன. மக்களின் சிந்தனையோட்டங்களின், கற்றலின் திரட்சியாக மக்களிடமிருந்து மக்களால் எழுதப்படுகின்றன. அல்லது மக்களில் ஒரு பகுதியினரால், தமது தேவைகளுக்காக எழுதப்படுகின்றன.

இறைவன் வந்து p2p இணைப்பில் நூல்களை அனுப்பிவைக்கிறார்கள் என்ற முட்டாள்த்தனமான ஏமாற்றுக்கதைகளை சொல்லி, மக்களின் அறிவினை இருட்டடிப்பு செய்ய முயலாதீர்கள்.

மக்கள் கடவுள்களை தமது தேவைக்காக உருவாக்கினார்கள். மக்கள் ஆன்மீகத்தை தமது அனுபவங்கள், சிந்தனைகளூடாக உருவாக்கினார்கள். மக்களின் இந்த உருவாக்கங்கள் எல்லாம், அவ்வவ்கால அறிவுத்தேடல்களோடு ஒன்றிணைக்கப்பட்டு மதங்களாக திரள்கின்றன.

கடவுளை உருவாக்கியமையானது மானிடவியல் வளர்ச்சிப்போக்கில் ஒரு முக்கிய காலகட்டம். இந்த காலகட்டத்தை எல்லா மனித இனங்களும் கடந்துவந்தன.

நெருப்பை கண்டுபிடித்ததைப்போல், சில்லை கண்டுபிடித்ததைப்போல், பணத்தை கண்டுபிடித்ததைப்போல், கடவுள் என்ற எண்ணக்கருவை உருவாக்கிக்கொண்டமை மனித வரலாற்றின் முக்கிய வளர்ச்சிக்கட்டம். எல்லா நாகரிகங்களும் கடவுள்களை உருவாக்கின.

நம்பிக்கைகளின், நடைமுறைகளின் ஒழுங்குபடுத்தப்பட்ட, நிறுவன வடிவமாக மதம் தோன்றியது.

மதங்களை மக்களின் வரலாற்றுத்தேவை உருவாக்குகிறது. மதங்கள் மக்களிடமிருந்து திரள்கிறது. இஸ்லாம் தோன்றிய காலகட்டத்தில் இஸ்லாத்துக்கான தேவை அந்த சமூகத்தில் எழுந்தது. இஸ்லாத்தையும் குர் ஆனையும் வராற்றின் கொதிநிலை உருவாக்கியது. அதேபோலவே கிறிச்துவமும். ஏபிரகாமிய மதங்கள் நிலத்தொடர்பை கொண்ட இடங்களில் உருவானதால் அவை தம்மிடையே தொடர்புற்ற பல கதைகளை கொண்டுள்ளன.

கிழக்கே அக விடுதலை, ஆன்மீகம், அகரீதியான தேடல் போன்ற மனிதக்கண்டுபிடிப்புக்கள் அவர்கள் மதங்களில் முக்கிய இடம்பெற்றன. ஆன்மீக கண்டுபிடிப்புக்களின் பரிசோதனைகளின் சிறப்பான விளைபொருளாக சமணமும் பவுத்தமும் திரள்வுற்றன.

இதில் கடவுள்கள் எங்கேயும் சம்பந்தப்படுவதில்லை. மக்கள் தமக்கான மதங்களை உருவாக்குகிறார்கள். அதங்கள் காலாவதியாகின்றன. அவற்றை மக்களே தேவைவரும்போது தூக்கியெறிந்துவிடுகிறார்கள்.

இந்துமதத்தைப்பற்றிய எனது புரிதல்,

அது சிந்துவெளி நாகரிகத்தின், அதன் பின் இந்தியாவுக்குள் கொண்டுவரப்பட்ட பல்வேறு நாகரிகங்களின் அறிவுத்தேடல்களின் தொகுப்பு.

வேதங்களை மக்களே உருவாக்கினர்.
மக்கள் தமது அறிவினை, சிந்தனைகளை பாடல்களாக, உரையாடல்களாக சேர்த்துவைத்த கருவூலங்களே வேதங்கள், மக்கள் தமது சிந்தனையின் உச்சங்களை உபநிடதங்கள் வாயிலாக சேமித்தனர்.

சித்தாந்த தத்துவ நூல்கள் இன்னொருபகுதி மக்களின் சிந்தனைச்சேமிப்பாக இருக்கின்றன.

இங்கே கடவுள் வந்து எதனையும் எழுதிவைக்கவில்லை. யாரும் தரவிறக்கம் செய்யவும் இல்லை. பகவத்கீதையும் மனிதக்கண்டுபிடிப்பே.

திரிபிடகம், தம்மபதம் எல்லாம் நன்கு நிரூபிக்கப்பட்ட மனிதக்கண்டுபிடிப்புக்கள்.

புத்தர் என்கிற சதாரண மனிதர் பவுத்த தத்துவங்களை தொடக்கிவைத்தார்.

இந்துமதம் ஒரு பெரும் நிலப்பரப்பையும் பரவலான மிகப்பெரிய அறிவியல் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்திருக்கிறது. குட்டிக்குட்டி சமயங்கள் விழுங்கப்பட்டும் சேர்க்கப்பட்டும் அது பிரதேசப்பெயரோடு எழுகையுற்றிருக்கிறது.
அதனிடத்தில் ஒன்றுக்கொன்று முரணான பல கருத்துக்கள் உண்டு. ஒன்றுக்கொன்று முரணான பல முடிபுகள் உண்டு.

நூற்றுக்கணக்கான கடவுள்கள் உண்டு.


மதங்கள் மக்களால் மக்களுக்காக உருவானவை. அவற்றை அதிகார வர்கம் வசதியாக கையிலெடுக்கமுடியும். மதங்களை தேவை வரும்போது மக்களே கழற்றி எறிவர்.

சும்மா கடவுள் கதை எல்லாம் மக்களை மந்தைகளாக்கும் புரட்டு. ஏமாற்றுவேலை

suvanappiriyan said...

ஜெயராமன்!]

//அல்லது, நான் அறிந்த இஸ்லாம் ஒரு புரட்டா? புரியவில்லை. //

//தாங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள். எல்லா மதங்களும் ஒரே செய்தியை சொல்லுகின்றன என்றால் நீங்கள் எங்களை கஃபீர் என்று குரான் ஏன் சொல்லுகிறது என்று சொல்லுங்கள். எங்களுக்கு ஒரு டயம் குடுத்து இஸ்லாமுக்கு ஏன் மாற வேண்டும் என்று கெடு வைக்கிறது.//

"இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர் வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து இறைவனை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார்" - குர்ஆன் 2 : 256

"இணை கற்பிப்போரில் உம்மிடம் அடைக்கலம் தேடுவோர் இறைவனின் வார்த்தைகளைச் செவியுறுவதற்காக அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பீராக!பின்னர் அவர்களை பாதுகாப்பான இடத்தில் சேர்ப்பீராக!அவர்கள் அறியாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்." - குர்ஆன் 9 : 6

"உங்கள் மார்க்கம் உங்களுக்கு! என் மார்க்கம் எனக்கு" என முகம்மதே கூறுவிராக" - குர்ஆன் 109 : 6

மேற் கண்ட மூன்று வசனங்களும் கட்டாய மத மாற்றத்தை தடை செய்வதோடு, சிறு பான்மையினருக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்று சொல்கிறது. ஈயத்தை காய்ச்சி ஊற்றுதல், பெண்ணின் மூக்கை அறுத்தல், நாக்கை அறுத்தல், பிள்ளைக் கறி சமைத்து கேட்டல் என்ற புராணங்களையே சிறு வயதிலிருந்து நீங்கள் படித்து வந்ததால் குர்ஆனைப் படிக்கும் போதும் அந்த ஞாபகம் வந்திருக்கலாம்.

//ஒவ்வொரு வேத மந்திரத்தையும் எந்த ரிஷி கண்டெடுத்தார் என்பதற்கு வேத்ததில் அட்டவணை உண்டு.//

கண்டெடுத்தவர்களைக் கேட்கவில்லை. உருவாக்கியவர் யார் என்பதுதான் கேள்வி.

//நீங்கள் குறிப்பிட்ட ரிக்வேத்த்தில் நோஹா என்றொரு வார்த்தை இல்லை. அது தூதன் என்பது அக்னியை. சரியாக வேத ஆங்கில பெயர்ப்புகளை படித்துவிட்டு பதிவு போடவும்.//

நோவா மட்டும் அல்ல நீங்கள் எதிர்பார்த்திருக்கும் கல்கி பகவானே முகமது நபிதான் என்று ஒரு பிராமணர் ஆராய்சசி செய்து ஒரு கட்டுரை வெளியிட்டுன்னார்.1400 ஆண்டுகளுக்கு முன்பே கல்கி வந்து விட்டார் என்று பண்டிட் வேத பிரகாஷ் உபாத்யா 'கல்கி அவதார்' என்ற நூலிலே மிகவும் விரிவாக அலசி இருக்கிறார். இவர் இதற்காக வைக்கும் எட்டு ஆதாரங்களை என்னுடைய முந்தய 'இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்' என்ற பதிவில் விரிவாக விளக்கி இருக்கிறேன்.

வெறும் வாய் வார்த்தையாக இதை இவர் கூறவில்லை. வேதங்களையும், உபநிஷத்துகளையும், புராணங்களையும் ஆராய்ந்து அந்த விபரங்களை எல்லாம் ஆதாரங்களோடு தொகுத்துதான் இந்த நூலை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இவர் பிராமண வகுப்பைச் சேர்ந்தவர். வங்காளத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.

இந்நூலை அலகாபாத் பல்கலைக் கழகத்திலிருந்து எட்டு பண்டிதர்கள் பார்வையிட்டு ஆதாரபூர்வமான செய்திகளையே தொகுத்து வழங்கியுள்ளார் என்று கூறி மதிப்புரை வழங்கி தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.

'அந்த அராபியர் தூதர்களுக்கெல்லாம் முத்திரையாக (இறுதியாக) இருப்பார்'
1 : 163 : 1 - ரிக் வேதம்

ஜெயராமனை விட நூலை வெளியிட்ட அந்த பிராமணரின் வாக்கு மூலங்களே பல பதில்களைச் சொல்லும்.

//வேதங்கள் இறைவனின் உயிர் மூச்சு. நீங்கள் முதலில் உருவானீர்களா? இல்லை தங்கள் உயிர் மூச்சா? வேதங்கள் இறைவனால் கூட படைக்கப்படவில்லை. வேதங்கள் என்றும் மாறாத உண்மைகள்.//

ஜெயராமன் என்ன சொல்ல வர்ராறுன்னு யாராவது புரிந்தவர்கள் சொல்கிறீர்களா? எனக்கு தலையை சுத்துது.


//இந்து மத்த்தின் லட்சியம் மோட்சம். துலுக்கர்களின் லட்சியம் சுவனத்தில்//

பதில் இல்லை என்றால் இப்படி எல்லாம் கோபமான வார்த்தைகள் விழும். துருக்கி பல நாடுகளை ஆண்டதால் முஸ்லிம்களை துருக்கியர் என்பர். நீங்கள் நினைப்பது போல் இது வெல்லாம் என்னை கோபப் படுத்தாது : - ))

// சுவனத்தில் அல்லாவால் சப்ளை செய்யப்பட்ட பல பெண்கள், மதுவுடன் உல்லாசம். //


சுவனத்தில் வெண்ணெய் வழிந்தோடும் ஓடைகளும் சேமித்து வைக்கப் பட்ட தேனும் இன்னும் பழ ரசங்கள் பால் தயிர் நீர் எல்லாம் கைக்கெட்டும் தூரத்தில் கிடைக்கும் வகையில் சதா சிற்றாறுகளாய ஓடிக் கொண்டிருக்கும். அவைகள் உன்னுடைய மகிழ்ச்சியை அதிகப் படுத்தும். ஏரியில் நிரம்பிக் கிடக்கும் தாமரை மலர்கள் உன்னுடைய ஆத்மாவை வலிமைப் படுத்தும்.
4 : 34 : 6 - அதர்வண வேதம்

ஹி..ஹி.. இது குர்ஆன்ல இல்லீங்கோ! சத்தியமா அதர்வண வேதத்தில இருக்கிறது.

suvanappiriyan said...

சாம்!

1.அப்படியானால் மதங்களுக்குள் universality என்பது இல்லை என்ற பொருள்தானே ?

2..அப்படியானால், ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு மட்டுமே வந்த ஒரு தூதரின் கொள்கைகள் மற்ற இனத்தவர்களுக்கு பொருந்தாத,கட்டுப்படுத்தாத கொள்கைகளாகத்தானே கருதப்பட வேண்டும்.

ஆதாமிலிருந்து நோவா ஆப்ரஹாம், தாவீது, ஏசு, முகமது நபி முதலான அனைத்து தூதுவர்களும் உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பல்வேறு சமுதாயத்திற்கும் அனுப்பப் பட்டனர். இந்த அனைத்து தூதர்களையும் உலகுக்கு அனுப்பி வைத்த இறைவன் ஒருவன் தான். எனவே தான் அனைத்து வேதங்களின் கருத்துக்களும் சிற் சில வித்தியாசங்களுடன் ஒன்றையொன்று ஒத்திருக்கிறது. இதில் வேற்றுமை என்று எதைச் சொல்கிறீர்கள். ஒனறுக்கொன்று வரும் வேற்றுமைகள் கூட வேதங்களில் புரோகிதர்களின் கைகள் புகுந்ததால் ஏற்பட்டதே!

மற்ற தூதர்களெல்லாம் அந்த அந்த சமுதாயத்திற்கு மட்டுமே அனுப்பப் பட்டனர். ஆனால் முகமது நபியோ முழு உலகுக்கும் இறுதி தூதராக அனுப்பப் பட்டார். இதனால் தான் குர்ஆன் முழு உலக மக்களும் பின் பற்றத்தக்க வகையில் அதன் கருத்துக்கள் அமைந்துள்ளது.

'உம்மை மனித குலத்துக்கு தூதராக அனுப்பியுள்ளோம்'
4 : 79 -குர்ஆன்.

'மனிதர்களே! இத்தூதரரான முகம்மத் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மையைக் கொண்டு வந்துள்ளார்.'
4 : 170 -குர்ஆன்

மேற்கண்ட குர்ஆனிய வசனங்களின் மூலம் இந்த குர்ஆன்உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்று விளங்குகிறது.

suvanappiriyan said...

வஜ்ரா!


வஜ்ரா ஷங்கர் said...
circular logic என்றால் என்ன என்று தேடிப் பார்க்கவும்...கிணற்றிலிருந்து வெளியில் வந்து விடலாம்...
4:20 AM
1.இந்த வசனம் ரிக் வேதத்தில் வருவதைப் பற்றிய உங்கள்கருத்தை நான் தெரிந்து கொள்ளலாமா?

2.இந்து மத வேதங்களை உண்டாக்கிய, அருளிய கொலம்பஸ் யார்?

இதற்கான விளக்கத்தை இந்த கிணற்றுத் தவளைக்குத் தர முடியுமா?
இந்த இரண்டு கேள்விக்கான பதிலைக் கேட்டிருந்தேன். என்னுடைய மற்ற பதிவான 'எகிப்தில் இன்றும் பாதுகாக்கப் படும் உடல்' என'ற தலைப்பில் இங்கு கேட்டதற்கான பின்னூட்டத்தை அளிக்கிறீர்கள். அப்படியானால் அந்த இரண்டு கேள்விக்கும் பதில் இல்லையா? நீங்களே கிணற்றுத் தவளையாய் இருந்து கொண்டு என்னைப் போய்...ஹி ...ஹி

suvanappiriyan said...

ம்யூஸ்!
//ஜாலியாக இருக்கிறது.

என்னுடைய கிண்டல் பின்வருமாறு:

ஹிந்துக்களின் நம்பிக்கைப்படி இறையே இங்கே அவதரிக்கிறது. ஒரு முறை, இரு முறை அல்ல, குறைந்தது பத்துமுறை. இருபத்திரண்டு முறை என்று சொல்கிற அஃபிஷியல் கருத்துக்களும் உண்டு.//

எப்போதுமே நீங்கள் வித்தியாசமாக கிண்டுபவர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

ஜெயராமன்!

//எல்லா மதங்களும் ஒரே செய்தியை சொல்லுகின்றன என்றால் நீங்கள் எங்களை கஃபீர் என்று குரான் ஏன் சொல்லுகிறது என்று சொல்லுங்கள்.//

சூத்திரர்கள் என்று மற்ற சாதியினரை நீங்கள் குறிப்பிடும் வார்த்தையின் பொருள் போல் காபிர் என்ற வார்த்தையும் இருக்குமோ என்ற ஐயத்தில் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

காபிர் என்ற வார்த்தை குப்ர் என்ற வார்த்தையிலிருந்து பிறந்தது. குப்ர் என்ற வார்த்தைக்கு ஏற்க மறுத்தல் என்று தமிழில் பொருள் வரும் ஏக இறைவனை ஏற்காத அனைவரும் காபிர்கள் என்று அழைக்கப் படுவர். இது எதும் அவமானகரமான வார்த்தைப் பிரயோகம் ஒன்றும் அல்ல.காபிர் என்ற வார்த்தையை தமிழ்ப் படுத்தினால் இணை வைப்பவர் அதாவது இறைவனுக்கு இணை வைப்பவர் என்ற பொருளில் வரும்.இறைவனுக்கு இணையாக பல உருவங்களை வணங்குவதால் இந்த வார்த்தைப் பிரயோகம் பயன்படுத்தப் படுகிறது.எனவே இதை ஒரு வித்தியாசமாக பார்க்கத் தேவையில்லை.வித்தியாசமாக தெரிந்தால் சிலை வணக்கத்தை விட்டு விடுங்கள். காபிர் என்ற அந்த வார்த்தைப் பிரயோகத்துக்குள் நீங்கள் வர மாட்டீர்கள்.

suvanappiriyan said...

ஆக்னர்!

//எந்த இந்து கடவுளும் தனது இறைத் தூதராக யாரையும் நியமிக்கவில்லை//

இந்து கடவுள், இஸ்லாமிய கடவுள், கிறித்தவ கடவுள் என்று தனித் தனியாக வெல்லாம் இல்லீங்க. இந்த உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒரே இறைவன் தான் என்ற வாதம் தான் லாஜிக்காக ஒத்து வரும். இந்தியாவுக்கு இந்து கடவுள் என்றால் ஐரோப்பிய கண்டத்துக்கு யார்? அமெரிக்கா, அரேபியாவுக்கு யார் என்ற கேள்விகளும் வருமல்லவா?

//.கடவுளின் ஆசிர்வாதம் பெற்ற இவர்கள் போன்ற ஞானிகள்தான் வேதங்களை தொகுத்தனர்.இது எனது கருத்து.//

இது உங்கள் கருத்து. பண்டிட் வேத பிரகாஷ் உபாத்யாய் என்ற சமஸ்கிரதம் தெரிந்த பிராமணர். இந்து மத வேதங்களும் குர்ஆனிய கருத்துக்களும் இந்த உலகத்துக்கு கொடுத்தது ஒரே இறைவன் தான் என்று கூறுகிறார். அந்நூலை அலகாபாத் பல்கலைகழகத்தை சேர்ந்த எட்டு பண்டிதர்கள் ஆராய்ந்து உண்மையையே சொல்லுகிறார் என்று மதிப்புரை வழங்கியிருக்கிறார்களே.

“Now or Never” என்ற புத்தகத்தில் ஷாம்ஸ் நவத் எனற வேத ஆராய்ச்சியாளர் வேதங்களைக் கொண்டு ஆராய்ந்து நோவாதான் இந்து மதத்தின் தூதர் என்றும் சொல்கிறாரே!

//உங்கள் மதநம்பிக்கையை உங்களோடு நிறுத்திக்கொள்ளுங்கள்.//

நான் ஆதாரங்களாகத் தருவது என் மத நூல்கள் மட்டும் அல்லவே! உங்கள் மதத்தின் வேதங்களின் கருத்துக்களில் இருந்துதானே அனைத்து ஆதாரங்களையும் தருகிறேன்.

Muse (# 01429798200730556938) said...

சுவனப்பிரியன்,

சூத்திரர்கள் என்று மற்ற சாதியினரை நீங்கள் குறிப்பிடும் வார்த்தையின் பொருள் போல் காபிர் என்ற வார்த்தையும் இருக்குமோ என்ற ஐயத்தில் கேட்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.


ஜயராமன் அந்த அர்த்தத்தில் கேட்டிருக்க மாட்டார். மீண்டும் படித்தபோதும் எனக்கு அங்கனமே தோன்றுகிறது.

சூத்திரர் என்ற வார்த்தைக்கும், காஃபிர் என்ற வார்த்தைக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. சூத்திரர் என்பது ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பொருள். காஃபிர்கள் என்பதற்கோ அல்லாவையும், முகம்மது நபியையும் ஏற்றுக்கொள்ளாத மற்றவர்கள் என்று பொருள். சூத்திரர்களை அழிக்க வேண்டும் என்று ஹிந்து மதம் சொல்வதில்லை.

மாற்ற முடியாதவை என்று சொல்லப்படுகின்ற ஹிந்து ஸ்க்ரிப்ச்சர்களின் கருத்துப்படி (மாற்றக்கூடியவை உண்டு) நான்கு வர்ணத்தாரும் உயர்ந்தவரோ, தாழ்ந்தவரோ இல்லை. ஆயினும் தூய்மை பற்றிய கருத்துக்கள் ஒரு லிமிட்டுக்கு மேல் முக்கியத்துவம் பெற்றுவிட்டதும், அடிமை மனோபவம் சிறிது சிறிதாகப் புகுந்துவிட்டதாலும், உண்மையில் வேதங்கள் என்ன கூறுகின்றன என்பது தெரியாததாலும் பரத கண்டத்தில் வாழ்ந்த மக்கள் பிறப்பினடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிக்கும் கீழான குணத்தைப் பெற்றுவிட்டனர். இது வருந்தத்தக்க உண்மையே. இந்த ஜாதி வேறுபாட்டின் பாதிப்பு இன்றும் மிகவும் கொடியதாக இருக்கிறது. உதாரணமாக, இஸ்லாமியராக மதம் மாறிய பின்னரும் அராபிய, ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் இன்னமும் தாங்கள் ஒரு குறிப்பிட்ட க்ளானைச் (clan) சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொண்டு சண்டையிடுவதைக் குறிப்பிடலாம். மனிதர்கள் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட குழுவோடு இணைத்துக்கொள்ளுவது மனித மனத்தின் இயல்பால் விளைவது. ஆனால், தவறான காரணங்களுக்காக உயர்வு தாழ்வு பாராட்டுவது தவிர்க்கப்படவேண்டும் என்பதை ஹிந்து மதம் கூறுகிறது.

காஃபிர் என்கிற பதத்திற்கு இணையான பதத்தை ஹிந்துக்கள் உபயோகித்தார்கள். அது "ம்லேச்சர்கள்" என்பதே. இப்போது யாரும் அதை உபயோகிப்பதில்லை. ஏனெனில் இதெல்லாம் மாறக்கூடியவைகளுக்குள் வருவது.

வித்தியாசமாக தெரிந்தால் சிலை வணக்கத்தை விட்டு விடுங்கள். காபிர் என்ற அந்த வார்த்தைப் பிரயோகத்துக்குள் நீங்கள் வர மாட்டீர்கள்.

சிலை வணக்கத்தை விட்டுவிட்ட, ஆனால் அல்லாவையோ, முகம்மது நபிகள் (ஸல்) அவர்களையோ, குரானையோ ஏற்றுக்கொள்ளாதவர்களும் இந்த வார்த்தைக்குள் வரமாட்டார்களா?

Muse (# 01429798200730556938) said...

சுவனப்பிரியன்,

“Now or Never” என்ற புத்தகத்தில் ஷாம்ஸ் நவத் எனற வேத ஆராய்ச்சியாளர் வேதங்களைக் கொண்டு ஆராய்ந்து நோவாதான் இந்து மதத்தின் தூதர் என்றும் சொல்கிறாரே!

இந்த யுக்தி பற்றிய விளக்கங்கள் கீழேயுள்ள லிங்கில் கிடைக்கின்றன:

http://rajivmalhotra.sulekha.com/blogs/blogdisplay.aspx?cid=4755

Muse (# 01429798200730556938) said...

இந்து மத வேதங்களும் குர்ஆனிய கருத்துக்களும் இந்த உலகத்துக்கு கொடுத்தது ஒரே இறைவன் தான் என்று கூறுகிறார்.

எல்லா மதங்களிலும் இந்த ஒற்றுமையை காணலாம். உதாரணமாக, கிருத்துவத்திலும், யூத மதங்களிலும்.

suvanappiriyan said...

மயூரன்!

//இறைவன் வந்து p2p இணைப்பில் நூல்களை அனுப்பிவைக்கிறார்கள் என்ற முட்டாள்த்தனமான ஏமாற்றுக்கதைகளை சொல்லி, மக்களின் அறிவினை இருட்டடிப்பு செய்ய முயலாதீர்கள//

இறைவனை நம்புவதால் மனிதனின் அறிவு எவ்வாறு இருட்டடிப்பு செய்யப்படும்? பெரும்பாலான அறிவியல் மேதைகள் ஆன்மீகவாதிகளாகவே இருந்திருக்கிறார்கள். நாத்திகம் பேசிய சீனாவும், ரஷ்யாவும் கூட தோல்வியை ஒப்புக் கொண்டு ஆன்மீக வாசலைத் திறந்து விட்டிருக்கிறார்கள். இங்கு இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் நாத்திகம் ஏன் இந்த அளவு வளர்ந்திருக்கிறது என்றால் இந்து மதத்தின் பலகீனமான கொள்கைகளே!

மனிதனை நான்கு வர்ணங்களாக பிரித்து அதையும் இறைவன் பெயராலேயே நீங்கள் அதாவது உங்கள் மதத்து புரோகிதர்கள் ஏற்றி வைத்திருப்பதால் தான் மத நம்பிக்கையை வெறுக்கிறீர்கள். உங்கள் மதத்திலேயே மேல் சாதியினரிடத்தில் பத்து சதம் கூட நாத்திக வாதம் பேசுபவர்கள் இல்லை. இது ஏன்? அதிலும்படித்தவர்கள், பல பெரும்பதவிகளை வகிப்பவர்கள் கூட நாத்திக வாதம் பேசுவதில்லையே? இந்து மதம் அவர்களை இழிவு படுத்தாதனால் கடவுள் மறுப்புக்குள் அவர்கள் செல்லவில்லை. மற்ற சாதியினர் வேறு வழியில்லாமல் நாத்திகத்தின் கதவுகளைத் தட்டுகிறார்கள். நீங்கள் எவ்வளவு தான் நாத்திகம் பேசினாலும் இந்து மதத்தின் பிடியிலிருந்து நீங்கள் விடுபட முடியாது.நான் எந்த மதமும் இல்லை என்று சொன்னாலும் நீங்கள் இந்து தான். உங்கள் அடி மனத்தில் குடி கொண்டிருக்கும் இறை நம்பிக்கையை எறிந்துவிடவும் முடியாது. இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் உங்களையும் மீறி பீறிட்டு இறை உணர்வு வெளியேறியே தீரும்.

செல்போன், கணிணி, தொலைக்காட்சி என்று எந்த செயற்கைப் பொருளும் யாரோ ஒருவரால் செய்யப் பட்டு நம் கண்முன் காட்சி அளிக்கிறது. இவை தன்னைத் தானே உற்பத்தி செய்து கொள்ள முடியாது. எனவே செய்யப் பட்டவைகளுக்கு ஒரு செய்தவர் உண்டு.

அப்படியானால் சூரியன், சந்திரன், மனிதன், கால்நடை, பறவையினங்கள் போன்றவை எவ்வாறு உருவாயின? செயற்கைப் பொருட்கள் தானாக உற்பத்தி செய்து கொள்ளாத போது இயற்கைப் பொருட்களும் தானாக உருவாகியிருக்க முடியாது. இயற்கைப் பொருட்கள் உருவாவதற்கு முன்னால் ஒரு செய்முறை தகவல் இருந்திருக்க வேண்டும் என்று நம் அறிவு சொல்கிறது. அந்த தகவல் எது என்பதுதான் பலரிடம் ஏற்படும் குழப்பம்! அந்த தகவலை நான் இறைவன் என்கிறேன். நீங்கள் வேறு பெயர்களை வைத்துக் கொள்கிறீர்கள். அவ்வளவு தான் வித்தியாசமே!

'நமது அடியாரான முகம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளராகவும் இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள். இறைவனைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.'
2 : 23 - குர்ஆன்

'அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? இது இறைவன் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'
4 : 82 - குர்ஆன்

இது போன்ற வசனங்களின் சவால்கள் இன்று வரை முறியடிக்கப் படாததால் நான் குர்ஆனை இறை வேதம் என்றே நம்புகிறேன்.இதற்கு முன் அருளிய வேதங்களையும் நம்புகிறேன். மதிக்கிறேன்.

suvanappiriyan said...

மயூரன்!

பாமரர் மட்டும் அல்ல மெத்த படித்தவர்களும் குர்ஆனைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம்

டாக்டர் கெய்த் மூர் உலக அளவில் புகழ் பெற்ற உயிரியல் துறை அறிஞர் ஆவார்.இவர் உயிரியலில் மனிதனின் கரு வளர்ச்சியைப் பற்றி பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அப்படி அவர் எழுதிய புத்தகங்களில் "The Developing Human" என்ற புத்தகம் அமெரிக்க அரசால் சிறந்த புத்தகமாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. டாக்டர் கெய்த் மூர் Anotomy and cell Biology துறைகளில் பேராசிரியராக டொராண்டோ பல்கலைக் கழகம் கனடாவில் பணியாற்றுகிறார். இக்கல்லூரியில் Anotomy துறையில் எட்டு வருடங்களாக தலைமைப் பதவியுலும் இருந்து வருகிறார். இனி அவர் தரும் விளக்கங்களை பார்ப்போம்.

In the Holy Quran God speaks about the stages of Mans embryonic development:

“We created man from an extract of clay. Then we made him as a drop in a place of settlement, firmly fixed. Then we made the drop in to an alaqah (leech,suspended thing,and blood clot) then we made the alaqah in to a mudghah (chewed – like substance)…… “ - Quran 23 : 12,13 ,14


“மருத்துவம் படிக்காத, எந்த நுண்ணோக்கி வசதியும் இல்லாத, எழுதப் படிக்கத் தெரியாத ஒரு சமூகத்தில் தோன்றிய ஒரு தனி நபரான முகமது நபி இப்படி ஒரு உண்மையை சொல்லவே முடியாது. குர்ஆன் கண்டிப்பாக இறைவனின் வார்த்தைகள் தான் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.' என்று தனது அறிக்கையை சமர்ப்பித்தார்.

உதவிய புத்தகங்கள் :

1) “The Developing Human” – Moor and Persaud, 5th edition, page8,65,9
2) “Human Development as described in the Quran and Sunnah” – Moor and others page no 36,37,38

ஜோ/Joe said...

//புதிய ஏற்பாட்டில் எனப் படிக்கவும்...//
சிறில்,
என் சார்பாக திருத்தம் அளித்தமைக்கு மிக்க நன்றி!

ஜோ/Joe said...

//'பினபு இயேசு கலிலியா எங்கும் சுற்றி நடந்து அவர்களுக்கிடையே ஜெப ஆலயங்களில் உபதேசித்து ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார்
4 : 23 - மத்தேயு//

இங்கே சுவிசேஷம் என்ற வார்த்தையை நீங்கள் தவறாக புரிந்திருக்கிறீர்கள் .கத்தோலிக்க மொழி மாற்ற பைபிளில் இதை 'நற்செய்தி' என்று குறிப்பிட்டிருப்பார்கள் .அதற்கு பொருள் நீங்கள் சொல்லுவது போல ஒரு புத்தகத்தைக் குறிக்காது .'நற்செய்தி' என்பது ஒரு செய்தி .இயெசு சொன்ன செய்தி என்ன ? நீங்கள் உங்களை அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்யுங்கள் .கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பதற்கு பதிலாக ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள் .உங்கள் பகைவருக்கும் அன்பு காட்டுங்கள் .இவற்றை பின்பற்றி நடந்தால் பரலோக ராஜ்ஜியத்தில் இடமுண்டு .அந்த இறுதி நாள் சமீபத்திலிருப்பதால் மனம் திரும்பி இறைவனுக்கு உகந்தவர்களாக நடந்து கொள்ளுங்கள் என்பதே அந்த 'நற்செய்தி' .இதையே அவர் மலைப் பொழிவுகளில் விளக்கமாக சொல்லியிருக்கிறார் .ஆக அது இயேசு பரப்ப நினைத்த நல்ல செய்தியே தவிர குறிப்பிட்ட புத்தகத்தை அல்ல.

மு. மயூரன் said...

//இறைவனை நம்புவதால் மனிதனின் அறிவு எவ்வாறு இருட்டடிப்பு செய்யப்படும்? //

மக்கள் எழுதிய நூல்களை, மக்கள் திரட்டிய அறிவினை எல்லாம், இறைவன் இறக்கியதாக சொல்லிக்கொள்ளுதல் அம்மக்களின் அறிவினை இருட்டடிப்பு செய்வதுதானே?

//பெரும்பாலான அறிவியல் மேதைகள் ஆன்மீகவாதிகளாகவே இருந்திருக்கிறார்கள். நாத்திகம் பேசிய சீனாவும், ரஷ்யாவும் கூட தோல்வியை ஒப்புக் கொண்டு ஆன்மீக வாசலைத் திறந்து விட்டிருக்கிறார்கள்.//

இங்கே ஆன்மீகத்தை எதற்கு கொண்டுவருகிறீர்கள்? கடவுளை மறுக்கு ஆன்மீகவாதிகள் எத்தனையோபேரை இந்தியா கண்டிருக்கிறது. புத்தர் மகாவீரர் போன்றோர் கடவுளை வலியுறுத்தவில்லை. மதமும் புனித நூற்களும் தான் இங்கே பிரச்சன. ஆன்மீகம் அல்ல. ஆனால், தத்துவரீதியாக ஆன்மீகம் பற்றிய பொதுப்பார்வையினையும் நான் நிராகரிக்கிறேன்.

//இங்கு இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திலும் நாத்திகம் ஏன் இந்த அளவு வளர்ந்திருக்கிறது என்றால் இந்து மதத்தின் பலகீனமான கொள்கைகளே!//

தவறான தகவல்.
உலகில் எங்கெல்லாம் மதங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் நாத்திகம் , இறைமறுப்பு இருந்தே வந்திருக்கிறது. இறை மறுப்பே ஆதியானது. முதலில் இருந்தது. இறைக்கொள்கை பின்னர் வந்தது.

சீனா, சோவியத் யூனியன் போன்றன அரசியல் யாப்பளவில் கூட இறைமறுப்பை கொண்டிருந்தன.

இந்துமதத்தின் கேவலத்தை நான் எந்தளவிலும் குறை கூறவில்லை.

//மேல் சாதியினரிடத்தில் பத்து சதம் கூட நாத்திக வாதம் பேசுபவர்கள் இல்லை. இது ஏன்?//

எங்குமே அதிகாரவர்க்கம் நாத்திகம் பேசுவதை தவிர்த்துக்கொள்கிறது. விரும்பி ஆத்திகம் பேசுகிறது. அதிகாரத்தை தக்கவைக்க கடவுள் நிறைய உதவிகள் செய்வார்.

//அதிலும்படித்தவர்கள், பல பெரும்பதவிகளை வகிப்பவர்கள் கூட நாத்திக வாதம் பேசுவதில்லையே? இந்து மதம் அவர்களை இழிவு படுத்தாதனால் கடவுள் மறுப்புக்குள் அவர்கள் செல்லவில்லை. மற்ற சாதியினர் வேறு வழியில்லாமல் நாத்திகத்தின் கதவுகளைத் தட்டுகிறார்கள்//

:-)

அப்படி அல்ல.
சிந்தனையாளர்களே கடவுள் மறுபுக்குள் செல்கிறார்கள்.
ஒடுக்கப்பட்ட மக்கள் இன்னும் மிக மிக தீவிரமாக கடவுள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு, முதலில் இந்த குருட்டுத்தனமான நம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.

விளிம்பு நிலை மக்கள் பற்றிய அடிப்படை உண்மையினையே நீங்கள் தெரிந்துவைத்திருக்கவில்லை. அவர்கள் எப்போதும் கடவ்ளுக்கு அடிமையாகவே உள்ளனர்.

//இன்றில்லாவிட்டாலும் ஒரு நாள் உங்களையும் மீறி பீறிட்டு இறை உணர்வு வெளியேறியே தீரும்.//

கடவுளை தாண்டி இந்த உலகில் எதுவும் நடக்கமுடியாதென்றால், கடவுளின் விருப்பப்படித்தான் நான் அதனை மறுக்கிறேன்.
அதனை மறுப்பது அதற்கு பிடித்திருக்கிறது. கடவுளின் விருப்பத்துக்கு எதிராக கடவுள் நம்பிக்கையாளர்கள் நீங்கள் பேசலாமா?

//இயற்கைப் பொருட்கள் உருவாவதற்கு முன்னால் ஒரு செய்முறை தகவல் இருந்திருக்க வேண்டும் என்று நம் அறிவு சொல்கிறது//

அந்த தகவலை யார் உருவாக்கியது?
அது தானாக தோன்றியதா?
அது தானாக தோன்றுமானால், இந்த அண்டத்தின் தோற்றத்தின் மூலம் ஏன் தானாக தோன்றியிருக்கக்கூடாது?

உலகில் உயிர்கள் தானாக தோன்றியதென்று விஞ்ஞானத்தின் எந்த தரப்பும் சொல்லவில்லையே?

திடீரென ஒருவர் வந்து உலகைபடைத்தார் என்று மதங்கள்தான் சொல்லிக்கொண்டு இருக்கின்றன.


இந்துமத வேதங்களை மக்கள்தான் உருவாக்கினர் என்ற கருத்தை சொன்னேன். ஏற்றுக்கொள்கிறீர்களா? இனி வேதங்களை தந்த இறைதூதர் யார் என்று கேட்கமாட்டீர்களே?


அதுசரி கடவுள் ஏன் இப்போது இஸ்ரேலை ஆதரிக்கிறார்? லெபனான் மக்களையும் அரபிக்களையும், குழந்தைகளையும் கொல்வது கடவுளுக்கு பிடிக்குமோ?

நீங்கள் கடவுள் இருக்கு என்று ஒற்றைக்காலில் நிற்பீர்களானால்,

நான் சொல்வேன், ஒரு அரபியாக, ஒரு கம்யூனிஸ்டாக, ஒரு ஜெர்மானிய யூதனாக, சீனனாக, வியட்நாமியனாக ஈழத்தமிழனாக நான் சொல்லுவே.
கடவுள் குழந்தைகளின் ரத்தம் குடிக்கும் ஒரு பேய்.
பேயே அன்றி வேறில்லை.

suvanappiriyan said...
This comment has been removed by a blog administrator.
suvanappiriyan said...

அசலம் ஒன்!

//தக்க பதில் கொடுத்த சுவனப்பிரியனுக்கு நன்றிகள்//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சதயம்!

//முடிந்த வரை எதிர்ப்பை தெரிவித்துவிட்டு பதில் சொல்ல இயலாமல் நழுவுவது சிரிப்பை வரவழைக்கிறது.//

என் பெற்றோர் இஸ்லாமியர் ஆனதால் நான் முஸ்லிமாக இருக்கிறேன். அதே போல் இந்து நண்பர்களின் பெற்றோர் இந்துக்களாக இருப்பதால் அவர்களும் இந்துக்களாக இருக்கிறார்கள். எனவே தான் இருக்கும் மதத்தை விட்டுக் கொடுக்காமல் பேசுகிறார்கள். இது மனித இயல்பு. நான் படித்த உண்மைகளை எடுத்துத் தருகிறேன். விருப்பமுள்ளவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். விரும்பாதவர்கள் விட்டு விடட்டும். இதில் வெற்றி, தோல்வி, சிரிப்பு, கோபம் என்றெல்லாம் சொல்லி மற்ற மதத்தவரை விமர்சிப்பதை இஸ்லாமும் விரும்பவில்லை நண்பரே!

//இறைவன் ஒருவனே...
அவன் எல்லாருக்கும் பொதுவானவன்...
இறைவன் முன் அனைவரும் சமம்...//

அழகிய வரிகள். இதை மனித குலம் உணர்ந்து விட்டால் பல பிரச்னைகள் தீர வழியுண்டு.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நேரம் கிடைக்கும் போது உங்கள் பதிவையும் பார்வையிடுகிறேன்.

suvanappiriyan said...

ம்யூஸ்!

//எல்லா மதங்களிலும் இந்த ஒற்றுமையை காணலாம். உதாரணமாக, கிருத்துவத்திலும், யூத மதங்களிலும்.//

'நூஹீக்கும் அவரது வழித் தோன்றல்களில் தாவூத், சுலைமான், அய்யூப், யூசுப், மோசே, ஹாரூன், ஸக்கரியா, யஹ்யா, ஈசா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸ, யூனுஸ், லூத்ஆகியோருக்கும் நேர் வழிக் காட்டினோம்.'
6 : 84,85,86 -குர்ஆன்

நீங்கள் சொல்லும் கருத்தைத்தான் குர்ஆனும் சொல்கிறது.

suvanappiriyan said...

ம்யூஸ்!

//எல்லா மதங்களிலும் இந்த ஒற்றுமையை காணலாம். உதாரணமாக, கிருத்துவத்திலும், யூத மதங்களிலும்.//

'நூஹீக்கும் அவரது வழித் தோன்றல்களில் தாவூத், சுலைமான், அய்யூப், யூசுப், மோசே, ஹாரூன், ஸக்கரியா, யஹ்யா, ஈசா, இல்யாஸ், இஸ்மாயீல், அல்யஸ, யூனுஸ், லூத்ஆகியோருக்கும் நேர் வழிக் காட்டினோம்.'
6 : 84,85,86 -குர்ஆன்

நீங்கள் சொல்லும் கருத்தைத்தான் குர்ஆனும் சொல்கிறது.

suvanappiriyan said...

ம்யூஸ்!
//சிலை வணக்கத்தை விட்டுவிட்ட, ஆனால் அல்லாவையோ, முகம்மது நபிகள் (ஸல்) அவர்களையோ, குரானையோ ஏற்றுக்கொள்ளாதவர்களும் இந்த வார்த்தைக்குள் வரமாட்டார்களா?//

ஒரே இறைவன் தான் என்ற உறுதியான நம்பிக்கையில் இருக்க வேண்டும். மேலும் அறிவு பூர்வமாக சிந்திக்கும் போது எவை எல்லாம் தனி மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ கேடு தருமோ அவற்றிலிருந்து விலகி வாழ்பவர்கள், காஃபிர்கள் என்ற வட்டத்துக்குள் வர மாட்டார்கள். இறைவனே மிக அறிந்தவன்.

Muse (# 01429798200730556938) said...
This comment has been removed by a blog administrator.
Muse (# 01429798200730556938) said...

சுவனப்பிரியன்,

ஒரே இறைவன் தான் என்ற உறுதியான நம்பிக்கையில் இருக்க வேண்டும். மேலும் அறிவு பூர்வமாக சிந்திக்கும் போது எவை எல்லாம் தனி மனிதனுக்கோ, சமுதாயத்துக்கோ கேடு தருமோ அவற்றிலிருந்து விலகி வாழ்பவர்கள், காஃபிர்கள் என்ற வட்டத்துக்குள் வர மாட்டார்கள். இறைவனே மிக அறிந்தவன்.

அப்படியானால் உருவ வழிபாட்டில் ஈடுபடாத ஹிந்துக்களும், கிருத்துவர்களும் காஃபிர்கள் இல்லை. ரொம்ப ஸந்தோஷம். நான் காஃபிர் இல்லை.

ஆனால், தாங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் இஸ்லாமியர்களிலேயே நிறையப் பேர் காஃபிர்கள்தான் இல்லையா?

suvanappiriyan said...

மயூரன்!

//மக்கள் எழுதிய நூல்களை, மக்கள் திரட்டிய அறிவினை எல்லாம், இறைவன் இறக்கியதாக சொல்லிக்கொள்ளுதல்//

குர்ஆனை முகமது நபி தன் சொந்த கற்பனையில் எல்லா நாட்டுக்கும் பொருந்தும் வகையில், இன்றைய அறிவியல் கருத்துக்களுக்கு முரண்படாமல் தர முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அதிலும் இவர் எழுதவும் படிக்கவும் தெரியாதவர். இதை இறைவன் தான் கொடுத்திருக்க முடியும் என்று நான் மட்டும் அல்ல உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒத்துக் கொள்கிறார்கள்.

//கடவுளை மறுக்கு ஆன்மீகவாதிகள் எத்தனையோபேரை இந்தியா கண்டிருக்கிறது.//

கடவுளை மறுக்கும் ஆன்மீகவாதிகளா? :-(
குழப்புறீங்களே மயூரன். அப்போ ஆன்மீகத்துக்கு மறு பெயர் நாத்திகமா? :-)


//உலகில் எங்கெல்லாம் மதங்கள் உள்ளனவோ அங்கெல்லாம் நாத்திகம் , இறைமறுப்பு இருந்தே வந்திருக்கிறது. இறை மறுப்பே ஆதியானது. முதலில் இருந்தது. இறைக்கொள்கை பின்னர் வந்தது.//

முஸ்லிம் நாடுகள் எங்கேயும் நாத்திக வாதத்தை நீங்கள் பார்க்க முடியாது. இந்தியாவிலும் முஸ்லிம்களிடத்தில் நாத்திக வாதத்தைப் பார்க்க முடியாது. அதற்கு காரணம் மனித கரம் புகாத குர்ஆன் அவர்கள் வசம் இருப்பதே!

உலகின் முதல் மனிதரான ஆதம் இறை அடியாராகத்தான் இருந்தார். அவரின் வழித் தோன்றல்கள் தான் நானும் நீங்களும். இதில் கூட உலக சகோதரத்துவத்தை எந்த அளவு இஸ்லாம் சொல்கிறது பார்த்தீர்களா? இதனால்தான் இஸ்லாத்தில் தீண்டாமை அறவே ஒழிக்கப் பட்டிருக்கிறது.

//சீனா, சோவியத் யூனியன் போன்றன அரசியல் யாப்பளவில் கூட இறைமறுப்பை கொண்டிருந்தன.//

சட்டத்தில் எழுதி வைத்துக் கொள்வதால் ஏதேனும் பயன் இருக்கிறதா? மக்கள் பின் பற்ற வேண்டுமே!

தீண்டாமை தவறு என்று நமது அரசியல் சட்டத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். அதை உங்களால் செயல் படுத்த முடிகிறதா? இரண்டு நாட்களுக்கு முன்பு கூட 'அனைவரும் அர்ச்சகராகலாம்' என்ற சட்டம் செல்லாது என்று கோர்ட் தீர்ப்பு வந்திருக்கிறதாம். அரசியல் சட்டத்தின் வலிமை இந்த அளவுக்குத் தான்.

//அதனால்தான் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு, முதலில் இந்த குருட்டுத்தனமான நம்பிக்கைகளிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கருத்து நிலவுகிறது.//

ஒடுக்கப் பட்ட மக்களுக்கு கல்வி வேலை வாய்ப்பை வாங்கிக் கொடுக்க பாடுபடுங்கள். அதை விடுத்து அவர்கள் நாத்திகத்தின் பக்கம் சென்றால் ஒரு ஆபத்திலிருந்து தப்பிக்க இன்னொரு ஆபத்தை விலைக்கு வாங்கியதாக ஆகி விடும். இஸ்லாம் இறைவனையும் போற்றிக் கொண்டு தீண்டாமையையும் ஒழித்துக் காட்டவில்லையா?

//விருப்பப்படித்தான் நான் அதனை மறுக்கிறேன்.
அதனை மறுப்பது அதற்கு பிடித்திருக்கிறது. கடவுளின் விருப்பத்துக்கு எதிராக கடவுள் நம்பிக்கையாளர்கள் நீங்கள் பேசலாமா?//

'மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு உண்மை வந்து விட்டது. நேர் வழி நடப்பவர் தனக்காகவே நேர் வழி நடக்கிறார். வழி கெட்டவர் தனக்கு எதிராகவே வழி கெடுகிறார். நான் உங்கள் மீது பொறுப்பாளன் அல்ல' என்று முகம்மதே கூறுவீராக.
10 : 108 - குர்ஆன்

இதன் மூலம் விதியின் மீது பழி போடும் உங்களின் சமாளிப்பு இறைவன் முன் செல்லுபடியாகாது என்பது தெளிவாகிறது.

//அந்த தகவலை யார் உருவாக்கியது?
அது தானாக தோன்றியதா?//

'வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறி மாறி வருவதிலும்அறிவுடைய மக்களுக்குப்பல சான்றுகள் உள்ளன.'
'அவர்கள் நின்றும், அமர்ந்தும், படுத்த நிலையிலும் இறைவனை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் பூமி படைக்கப் பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். ' எங்கள் இறைவா! இதை நீ வீணாக படைக்கவில்லை. நீ தூயவன் எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக' என்று அவர்கள் கூறுவார்கள்'
3 : 190, 191 - குர்ஆன்

இது போன்ற வசனங்களை எல்லாம் படைத்த இறைவனைத் தவிர வேறு யாரும் சவால்விட்டு சொல்ல முடியாது. படைத்த ஒருவன் இல்லாமல் இவை எல்லாம் சீராக இயங்கவும் முடியாது. அந்த இறைவன் யார்? அவன் எப்படிப் பட்டவன் என்பதை எல்லாம் யுக முடிவு நானில் இறைவன் மக்களுக்கு விளக்குவதாக அதே இறைவன் குர்ஆனில் விளக்குகிறான். அது வரை மனிதர்களாகிய நாம் பொறுமை காக்க வேண்டும்.

//இந்துமத வேதங்களை மக்கள்தான் உருவாக்கினர் என்ற கருத்தை சொன்னேன். ஏற்றுக்கொள்கிறீர்களா? இனி வேதங்களை தந்த இறைதூதர் யார் என்று கேட்கமாட்டீர்களே?//

இந்துக்களிடம் உள்ள வேதங்கள் இறைவன் கொடுத்ததுதான், அவர்களின் தூதர் நூஹ் தான் என்பதிலும் நான் உறுதியாக இருக்கிறேன். மனிதர்களைப் பிரிக்கும் வர்ணாசிரமக் கொள்கைகள் வேண்டுமானால் நீங்கள் சொல்வது போல் மனிதர்கள் பிற்காலத்தில் ஏற்றி இருக்கலாம். இறைவனே மிக அறிந்தவன்.

//அதுசரி கடவுள் ஏன் இப்போது இஸ்ரேலை ஆதரிக்கிறார்? லெபனான் மக்களையும் அரபிக்களையும், குழந்தைகளையும் கொல்வது கடவுளுக்கு பிடிக்குமோ?//

'ஒரு சோதனையை அஞ்சுங்கள். அது உங்களில் அநீதி இழைத்தோரை மட்டுமே பிடிக்கும் என்பதல்ல. இறைவன் கடுமையாக தண்டிப்பவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.'
8 : 25 - குர்ஆன்

லெபனான் தன்னுடைய இஸ்லாமிய கலாச்சாரத்திலிருந்து மெல்ல விலகிக் கொண்டிருந்தது. விபசாரம், மது, சூது இவற்றை எல்லாம் தன் நாட்டில் தாராளமாக அனுமதித்தது. அப்பொழுதுதான் தன் நாட்டுக்கு அதிக வெளி நாட்டினர் வருவர். இதன் மூலம் தங்களின் பொருளாதாரம் மேலும் பெருகும் என்று ஆட்சியாளர்கள் நினைத்தனர். பல சவூதிகள் கூட சந்தோஷமாக இருப்பதற்கு லெபனான் நோக்கி ஓடுவதைப் பார்க்கிறோம். இதனால் கோபமுற்ற இறைவன் லெபனானுக்கு ஒரு படிப்பினைளைத் தர நினைத்திருக்கலாம். அது போன்ற ஒரு சோதனை வரும் போது சில நேரங்களில் நல்லோர்கள் கூட பாதிக்கப் படுவர் என்பதைத்தான் மேற்கண்ட வசனம் தெளிவாக்குகிறது. உண்மையை இறைவனே அறிவான்.

//கடவுள் குழந்தைகளின் ரத்தம் குடிக்கும் ஒரு பேய்.
பேயே அன்றி வேறில்லை.//

அது உங்களின் விருப்பமாக இருந்தால் அதற்கு நான் என்ன செய்ய முடியும்.

'நம்பிக்கைக் கொண்டோருக்கு இறைவன் உதவுபவன். இருள்களிலிருந்து வெளிச்சத்துக்கு அவர்களைக் கொண்டு செல்கிறான். ஏக இறைவனை மறுப்போருக்கு தீய சக்திகளே உதவியாளர்கள். வெளிச்சத்திலிருந்து இருள்களுக்கு அவர்களைக் கொண்டு செல்கின்றனர். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பர்.'
2 : 257 - குர்ஆன்

suvanappiriyan said...

ஜோ!

//நீங்கள் சொல்லுவது போல ஒரு புத்தகத்தைக் குறிக்காது .'நற்செய்தி' என்பது ஒரு செய்த//

ஒரு செய்தி ஒரு புத்தகமாகவோ, தொகுப்பாகவோ ஆகாது. ஏசு தன் வாழ்நாளில் பல வருடங்கள் அலைந்து மக்களுக்கு இறைவனின் செய்திகளை போதித்த தொகுப்புகளைத் தான் நானும் புத்தகம் என்கிறேன். ஆப்ரஹாம்,மோசே, டேவிட், முகமது போன்ற தூதர்களுக்கெல்லாம் இறைவனின் வேதங்கள் இருக்கும் போது ஏசுவுக்கு மடடும் எந்த வேதமும் வழங்கப் பட வில்லையா?

'தமக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துபவராக அவர்களின் அடிச் சுவட்டில் மேரியின் மகன் ஏசுவைத் தொடரச் செய்தோம். அவருக்கு இன்ஜீலை (பைபிளை) யும் வழங்கினோம். அதில் நேர் வழியும் ஒளியும் இருந்தது. அதற்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப் படுத்துவதாகவும் உள்ளது.'
5 : 46 - குர்ஆன்

மேற்கண்ட குர்ஆனிய வசனத்தின் மூலம் ஏசுவுக்கு வேதம் வழங்கப் பட்டது உறுதியாகிறது.

//.கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் என்பதற்கு பதிலாக ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்டுங்கள் .//

குர்ஆனிய வசனங்களை மேற் கோள் காட்டி சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட கண்ணுக்கு கண் என்ற சட்டம் பைபிளுக்கு முந்திய வேதமான தௌராத்திலேயே உள்ளதாக இறைவன் குர்ஆனிலே மேற்கோள் காட்டுகிறான்.

'உயிருக்கு உயிர், கண்ணுக்கு கண், மூக்குக்கு மூக்கு, காதுக்குக் காது, பல்லுக்குப் பல் மற்றும் காயங்களுக்குப் பதிலாக அதே அளவு காயப்படுத்துதல் ஆகிறவற்றை தவ்ராத்தில் அவர்களுக்கு விதியாக்கினோம். பாதிக்கப் பட்ட யாராவது அதை மன்னித்தால் அது அவரின் பாவங்களுக்குப் பரிகாரமாக ஆகும்.'
5 : 45 - குர்ஆன்

//.அந்த இறுதி நாள் சமீபத்திலிருப்பதால் மனம் திரும்பி இறைவனுக்கு உகந்தவர்களாக நடந்து கொள்ளுங்கள் என்பதே அந்த 'நற்செய்தி' .இதையே அவர் மலைப் பொழிவுகளில் விளக்கமாக சொல்லியிருக்கிறார்//

இதன்படி ஏசு கடவுள் அல்ல. அவர் ஆபரஹாம், மோசே, முகமது போன்ற இறைத் தூதர்களைப் போன்றவர்தான் என்ற நம்பிக்கையில் இருக்கிறீர்கள். மகிழ்ச்சி. அதே சமயம் பிரச்சார கூட்டங்களில் கர்த்தராகிய ஏசு கிறிஸ்து உங்களை அழைக்கிறார் என்று கூறப்படுகிறதே இதன்படி ஏசு ஒரு இறைத் தூதரா அல்லது இறைவனா? இந்த தலைப்புக்கு சம்பந்தம் இல்லாவிட்டாலும் கிறித்தவராகிய நீங்கள் இதற்கு விளக்கம் கொடுத்தால் பலரும் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

மு. மயூரன் said...

சுவனப்பிரியன்,

விவாதங்கள் ஓரளவுக்கு மேல் பயன் தரப்போவதில்லை.
நீங்க்ளே சொன்னதுபோல், இறைமறுப்பாளர்களின் செயலுக்கு இறைவன் பொறுப்பாளியல்ல. எனவே என்னை கட்டுப்படுத்தும், தன்வழிப்படுத்தும் ஆற்றல் அவருக்கில்லை. என் வழியை தீர்மானிக்கும் ஆற்றல் அவரை விட என்னிடம் அத்கமாயுள்ளது. என்னளவில் அவரை விட நானே ஆற்றல் மிக்கவன்.

அது ஒரு புறமிருக்க,

குருட்டுத்தனமான மத நம்பிக்கை எவ்வாறு மனிதாபிமானத்தை, அடிப்படை மனித் அநேயத்தைக்கூட மறுதலித்துவிடுகிறது என்பதற்கும், மத நம்பிக்கை எப்போதும் அதன் உச்ச நிலையில் காட்டுமிராண்டித்தனமாகவே மாறிவிடும் என்பதற்கும் உங்கள் பதில் மிக நல்ல எடுத்துக்காட்டு.

லெபனானில் சாகும் அப்பாவிகளின் சாவை, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இவ்வளவு கேவலமாக, மனிதத்தன்மையற்று நீங்களும் , உங்கள் மதமும் நியாயப்படுத்துமானால், அந்த மதத்தை, அதனை பின்பற்றுவோரின் கருத்துக்களை எள்ளளவும் நான் மதிப்பதற்கில்லை.

உங்களுடனான உரையாடல் இத்தோடு முற்றுபெறுவதாய் உணர்கிறேன்.

மதத்துக்காக மனிதர் அல்ல.
மனிதருக்காகவ்வே மதம்
மனிதாபிமானமற்ற மதவாதிகளோடு பேச எதுவுமில்லை.

suvanappiriyan said...

ம்யூஸ்!

நான் ஜெயராமனுக்கு கொடுத்த பதிலை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டீர்கள்? நான் சொல்ல வந்தது பல விதங்களில் இஸ்லாமும், இந்துவும், கிறித்தவமும் ஒத்த கருத்துடையனவாய் இருக்கின்றன. அனைத்தையும் தந்தது ஒரே இறைவன் தான் என்ற பொருளில்.

ஆனால் நீங்களோ

//. காஃபிர்கள் என்பதற்கோ அல்லாவையும், முகம்மது நபியையும் ஏற்றுக்கொள்ளாத மற்றவர்கள் என்று பொருள். சூத்திரர்களை அழிக்க வேண்டும் என்று ஹிந்து மதம் சொல்வதில்லை.//

இதன் மூலம் நீங்கள் சொல்ல வருவது 'இஸ்லாம் மற்ற மதத்தவரை கொல்லச் சொல்கிறது' என்ற தவறான கருத்தைச் சொல்ல வருகிறீர்கள். நரேந்திர மோடியும, அத்வானியும் செய்யும் தவறுகளுக்கு இந்து மதம் எப்படி பொறுப்பேற்க முடியாதோ அது போல் எங்காவது குண்டு வைக்கும்ஒரு சில இஸ்லாமிய பெயர் தாங்கிகளுக்கு இஸ்லாமும் பொறுப்பாக முடியாது. இந்து மத புராணங்களில் இது போன்ற கதைகளும் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டவே நான் பட்டியலிட வேண்டியதாகி விட்டது. அது உங்கள் மனதை புண்படுத்தியதாக நான் உங்கள் பின்னூட்டத்தின் மூலம் தெரிந்து கொண்டேன். இதே போல் தான் மற்றவர்களுக்கும் இருக்கும் என்று சற்று சிந்தியுங்கள். தற்போது அந்த பின்னூட்டத்தை எடுத்து விட்டேன் உங்களுக்காக! என்றும் போல் நண்பர்களாகவே இருப்போம். நன்றி!

suvanappiriyan said...

ம்யூஸ்!

//ஆனால், தாங்கள் சொல்லியிருப்பதைப் பார்த்தால் இஸ்லாமியர்களிலேயே நிறையப் பேர் காஃபிர்கள்தான் இல்லையா?//

முதலில் ஒருவன் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்து விடடதாலேயே முஸ்லிம் ஆகிவிட முடியாது. அரசாங்க கெஜட்டில் வேண்டுமானால் முஸ்லிம் என்ற பிரிவில் வருவார். ஆனால் இறைவன் அவரை இஸ்லாமியன் என்று ஒத்துக் கொள்வதற்கு இறைவன் சொன்ன முக்கிய கட்டளைகளை தன் வாழ்க்கையில் கடை பிடிக்க வேண்டும். அப்துல்லா என்ற பெயரை வைத்துக் கொண்டு இறைவனுக்கு செய்ய வேண்டிய வணக்கத்தை தர்ஹாவிலும், தனி மனிதனிடத்தும், சிலைகளிடத்தும் சென்று நிறை வேற்றினால் அவனும் காபிராகி விடுகிறான். அநியாயமாக உயிர்க் கொலைகளை செய்பவனும் காபிராகி விடுகிறான். இதுபோல் அரபி பெயர் வைத்த காஃபிர்கள், இஸ்லாமியர்கள் என்று சொல்லிக் கொண்டு நிறைய இருக்கிறார்கள். மார்க்க அறிஞர்கள் எனப்படுவோர் அந்த மக்களுக்கு குர்ஆனை சரியாக விளங்க வைக்காததே முக்கிய காரணம்.

suvanappiriyan said...

இங்கு நண்பர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் என்னால் முடிந்த வரை பதிலளித்துள்ளேன. மேலும்ஒரு சில பதில்களை என்னுடைய மற்றைய பதிவான 'குர்ஆனும் இந்து மத வேதங்களும்' என்ற தலைப்பில் தருகிறேன். இந்த பதிவில் பின்னூட்டங்கள் அதிகமாகி விட்டதால் சில நேரங்களில் என் கணிணி மக்கர் பண்ணுகிறது. அதிக நேரமும் எடுத்துக் கொள்கிறது. எனவே இங்கு பின்னூட்டம் இடுபவர்கள் 'குர்ஆனும் இந்து மத வேதங்களும்' என்ற பதிவில் பதிலைப் பெற்றுக் கொள்ளவும். நன்றி.

Unknown said...

இசுலாத்தில் ஆண் பெண்சம அதிகாரம்உடையவர்கள் ஒரு பெண் தலாக் சொல்ல முடியுமா?

Unknown said...

விவசாரம் என்றால் என்ன?இசுலாம் அடிபடையில

vrkumar18 said...

இஸ்லாமிய குட்டை குழப்பிகள் ௨ள்ளவரை ௨லகில் அமைதி நிலவாது....

vrkumar18 said...

இஸ்லாமிய குட்டை குழப்பிகள் ௨ள்ளவரை ௨லகில் அமைதி நிலவாது....

vrkumar18 said...

இஸ்லாமிய குட்டை குழப்பிகள் ௨ள்ளவரை ௨லகில் அமைதி நிலவாது....

நானும் ஹிந்து said...

பாலியல் பலாத்காரம் செய்தவன் எப்படி கடவுள் தூதராக முடியும்.கடவுளுக்கு ஒரு நல்லவர் கூடவா கண்ணுக்கு தெறியவில்லை.

vrkumar18 said...

#### அப்படிங்களா! அப்போ எல்லா விபரமும் தெரிந்த நீங்கள் தான் எனக்கு விளக்கம் கொடுத்து கிணற்றிலிருந்து தூக்கி விடனும். ####
இந்த ஒரு வாதமே, சுவனப்பிரியன் மனநிலை பாதிக்கப் பட்ட நோயாளி என்பது ஊர்ஜிதம்....

vrkumar18 said...

#### அப்படிங்களா! அப்போ எல்லா விபரமும் தெரிந்த நீங்கள் தான் எனக்கு விளக்கம் கொடுத்து கிணற்றிலிருந்து தூக்கி விடனும். ####
இந்த ஒரு வாதமே, சுவனப்பிரியன் மனநிலை பாதிக்கப் பட்ட நோயாளி என்பது ஊர்ஜிதம்....

Unknown said...

தன்னை வணங்காதவனிட்கு நரகதண்டணை விதிக்கும் அல்லாஹ் எப்படி தேவைகள் அற்றவன் ஆக முடியும்??? முகம்மதுவின் கற்பணை அல்லாஹ் என்று மட்டுமே சொல்லமுடியும்..

தேவைகள் அற்றவனிற்கு ஏன் இத்தணை தேவை? மறுப்பனிற்கு ஏன் இப்படி கொடிய தண்டணை???

தனக்குள் சிவனை தேடு..
சிவன் முகம்மது வழியிலும் இல்லை, இயேசுவின் வழியிலும் இல்லை.

சிவன் ஒவ்வொரு ஜீவனிலுள்ளும்,இருக்கிறான்.. அவனை கண்டரிய வேண்டும் என்றால் இந்த இறைதூதன் என தன்னைத்தானே புகழ்ந்து தம்பட்டம் அடித்துக்கொண்ட பைத்தியங்கள் எழுதிய கிருக்களை குப்பையில் போட்டுவிட்டு சுயபுத்தியால் பிரபஞ்சசக்தியுடன் தொடர்புவையுங்கள். உனக்குள் இருக்கும் சிவனை நீ உணரலாம்..

Anonymous said...

75 பெயர்கள் வந்துள்ள வசனகுறிப்புகளை வெளியிடுங்கள் நண்பா

Anonymous said...

75 நோவாவின்பெயர்கள் கொண்ட அந்த வசனகுரிப்புகளை வெளியிடுங்கள் நண்பா

Vaanara Putran Jeisriraam said...

மதம் என்பது காட்டில் வாழும் யாணைகளுக்கு பிடிக்க வேண்டுமே தவிர,6 அறிவு படைத்த மனிதர்களுக்கு அல்ல.. மதம் என்பது மனிதன் சுயலுக்கத்துடன் வாழ புதிப்பிக்க பட்ட ஒன்று. இந்துவுக்கு வேதங்களாகவும், இஸ்லாமியர்களுக்கு குரானும், கிறிஸ்துவர்களுக்கு (Bible) என்று உருவாக்கப்பட்டது.இப்படி ஒரு புரிதல் வராத வரைக்கும் நீங்கள் ஒரு கிணற்று தவளை என்று தான் சொல்லவேண்டும்.

M.prabu said...

சூப்பர் சரியான விளக்கம்