Followers

Tuesday, January 01, 2013

ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா - ஜிஹாத் விளக்கம்!


ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா - ஜிஹாத் விளக்கம்!

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் பயின்ற இந்து மத பெரியவர் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள் கான்பூர் நகரில் இந்த மாதம் நடந்த ஒரு கருத்தரங்கில் இஸ்லாமிய ஜிஹாதைப் பற்றி அழகிய கருத்துரையை வழங்கினார். ஹிந்தி தெரியாதவர்களுக்காக அதனை தமிழில் ஓரளவு மொழி பெயர்த்துள்ளேன். இக்கருத்தரங்கை கான்பூரின் இஸ்லாமிக் எஜூகேஷனும் & ரிசர்ச் ஆர்கனைசேஷனும் இணைந்து நடத்தியது. இனி சுவாமிஜியின் பேச்சைக் கேட்போம்.அன்புள்ள சகோதர சகோதரிகளே! இங்கு நான் சில எண்ணங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்று வந்துள்ளேன். 15 வருடங்களுக்கு முன்பு குர்ஆனை படித்துள்ளேன். பத்திரிக்கையிலும், நண்பர்கள் மூலமாகவும் இஸ்லாத்தைப் பற்றியும் முகமது நபியைப் பற்றியும் பல தவறான கருத்துகள் என்க்குள் விதைக்கப்பட்டிருந்தது. இந்த மக்களும், பத்திரிக்கைகளும் குர்ஆனைப் பற்றி சொல்வது உண்மைதானா என்பதை தெரிந்து கொள்வதற்காக நான் குர்ஆனை ஆராய ஆரம்பித்தேன். கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.

இந்து மக்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்துக்கு மறு பெயர் ஜிஹாத் என்றும், ஜிஹாத் என்பது தீவிரவாதம் என்றும் புரிந்து வைத்துள்ளனர். நான் புரிந்து கொண்ட வகையில் இஸ்லாம் என்றால் என்ன என்பது பற்றியும், ஜிஹாத் என்றால் என்ன என்பது பற்றியும் தெரிந்து கொள்ள மஹா பாரத காலத்துக்கு நாம் செல்ல வேண்டும்.

கௌரவர்கள், பாண்டவர்கள், துரியோதனன், அர்ஜூனன் கதைகள் எல்லாம் நமக்கு நன்றாகவே தெரியும்.

"அர்ஜூனா, இந்த சிக்கலான நேரத்தில் இக்களங்கம் எங்கிருந்து உனக்கு வந்தது; பண்புடையவனுக்கு இது தகாதது; மேலுலகுக்கும் வழிகாட்டாதது; இகவாழ்விலோ இழிவைத் தருவது. இது போன்ற தளர்ச்சிக்கு இடம் தராதே. இது உனக்கு ஏற்றதல்ல. இதய பலவீனத்தை விட்டுவிட்டு எழுந்து நில்."

பகவத் கீதை அத்தியாயம் 2 ல் வரும் வசனங்களே இவை. அநியாயத்துக்கும் அக்கிரமத்துக்கும் எதிராக நடக்கும் ஒரு யுத்தம் யுத்தம் அல்ல அது தர்ம யுத்தம் என்கிறது இந்து மத வேதங்கள். அங்கு போரிடுவதற்கோ தயவு தாட்சண்யம் பார்ப்பதற்கோ எந்த முகாந்திரமும் இல்லை என்கிறது கீதை. இந்த யுத்தத்தில் தோற்றாலும் நீ சொர்க்கம் செல்வாய் என்று உபதேசிக்கப்படுகிறது.

இதே போன்றுதான் மெக்கா நகரில் அந்த மக்களின் குடி விபசாரம், சிலை வணக்கம், வட்டி, பெண் கொடுமை, பெண் குழந்தைகளை கொல்லுதல் போன்ற செயல்களை விமரிசித்து 'ஒரே இறைவனை வணங்குங்கள்' என்று உபதேசித்தார் நபிகள் நாயகம். உடனே அங்கிருந்த குரைஷிகள் இவரையும் இவரது ஆதரவாளர்களையும எதிரிகளாக பாவிக்க தொடங்கினர். பலரை கொலை செய்தனர். அவர்களின் பொருட்களை கொள்ளையடித்தனர். ஊர் விலக்கம் செய்தனர். இவர்கள் செய்த கொடுமைகளை கண்டு மனம் வெதும்பி மதினாவை நோக்கி செல்கிறார் நபிகள். அதே குரைஷி கூட்டம் அங்கும் முஸ்லிம்களை பின் தொடர்ந்து வருகிறது. முஸ்லிம்களை அழிக்கப் பார்க்கிறது.

ஒரு வருடம் அல்லது இரு வருடம் அல்ல. 13 வருடங்கள் இது போன்ற கொடுமைகளை முகமது நபியும் அவரது தோழர்களும் அனுபவிக்கின்றனர். இவ்வளவு கொடுமைகள் தினம் தினம் நடந்தும் தனது தோழர்களிடம் 'பொறுமையாக இருங்கள். பொறுமையாளர்களோடு நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான்' என்று அமைதியாக உபதேசித்தார். மக்கா குரைஷிகளின் அக்கிரமங்கள் உச்ச கட்டத்தை அடைந்த போதுதான் தங்களை தற்காத்து கொள்ள எதிர்த்து போரிடுகிறார்கள் முஸ்லிம்கள். மதினாவில் பயந்து தஞ்சம் அடைந்த முஸ்லிம்களை கொல்வதற்காக படை திரட்டிக் கொண்டு மக்காவிலிருந்து மதினா நோக்கி குரைஷிகளின் படை வருகிறது. பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்?

நமது நாட்டில் தங்களை வளர்த்துக் கொள்ள சிலர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் நிரந்தரமாக பிரித்து வைக்க முயற்சிக்கின்றனர். இஸ்லாமிய தீவிரவாதம் என்று சொல்லி தங்களை வளமாக்கி கொள்கின்றனர். ஜிஹாதுக்கு தவறான விளக்கத்தை கொடுத்து இந்துக்களை பிரிக்க பார்க்கின்றனர்.நானும் கூட கூட்டத்தில் முன்பு பேசியிருக்கிறேன். ' ஹிந்துக்களின் தலை முடியை பிடித்து இழுத்து அவனது தலையை வெட்டினால் உனக்கு நேராக சொர்க்கம். அதற்கு பெயர்தான் ஜிஹாத். அப்படித்தான் குர்ஆனில் இருக்கிறது' என்று பல கூட்டங்களில் பேசியுள்ளேன். எனக்கு அவ்வாறுதான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு பேசியது என்னுடைய தவறுதான். என்னை விட பெரிய தவறு செய்தது இங்கு அமர்ந்து இருக்கும் முஸ்லிம்கள் தான். இந்த உண்மையை இத்தனை காலம் என்க்கு விளக்காமல் இருந்தது உங்கள் தவறல்லவா?

(போர் சம்பந்தமாக வரும் குர்ஆன் வசனங்களை விளக்கி அது எந்த காலத்தில் யாருக்கு அருளப்பட்டது என்பதை ஆதாரங்களோடு விளக்குகிறார். இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்பதற்கும் ஆதாரங்களை வைக்கிறார்)

அலஹாபாத் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த போது தோழர் அக்ரம் பாய் அவரது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அவ்வாறு நான் செல்லும் போது வழியில் மாடியில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லிம் நான் வருவதை பார்த்து என் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை வேண்டுமென்றே துப்பினார். அருகில் அக்ரமுடைய வீடு. அக்ரமை அழைத்து கொஞ்சம் தண்ணீர் கொண்டு வரச் சொன்னேன். எனது நிலையைப் பார்த்து அக்ரம் பதறி விட்டார். 'என்ன ஆனது' என்று கேட்டார். 'உனது தெருவில் உள்ள ஒரு முஸ்லிம் நான் இந்து என்பதால் என் மீது எச்சிலை துப்பி விட்டார' என்றேன். நான் இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இது போன்றவர்களால்தான் பிரச்னைகள் ஆரம்பமாகின்றன. இது போன்ற ஆட்கள் இந்துக்களிலும் இருக்கிறர்கள், முஸ்லிம்களிலும் இருக்கிறார்கள். நான் முன்பு அலாவுதீன் கில்ஜியைப் பற்றி ஒரு வரலாற்று சம்பவத்தை படித்தேன். அதாவது இநதுக்கள் முஸ்லிம்களுக்கு அடங்கியிருக்க வேண்டும் என்றும் முஸ்லிம்கள் எச்சில் துப்பினால் ஹிந்துக்கள் கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும் என்றும் சட்டம் இயற்றியதாக அந்த புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. அது பொய்யான வரலாற்று திரிபு என்பது பின்னாளில் தெரிந்து கொண்டேன். ஆனால் என் மேல் எச்சில் துப்பிய அந்த நபரின் செயலைப் பார்த்து அலாவுதீன் கில்ஜி கண்டிப்பாக இப்படி ஒரு சட்டம் இயற்றியிருப்பார் என்று முன்பு நினைத்து கொண்டேன். குர்ஆனின் கட்டளைகளை படித்தவுடன் இதன் சட்டங்களுக்கும், இஸ்லாமியர்களின் நடவடிக்கைகளுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளதையும் இங்கு சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளேன். இஸ்லாத்தைப் பற்றி ஏதும் குறை சொல்ல வந்தீர்கள் என்றால் குர்ஆனை கொண்டு எதையும் பேசுங்கள். தவறாக நடக்கும் முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் என்று சொல்லி எனது உரையை முடிக்கிறேன்..


29 comments:

abdullah laafir said...

http://m.facebook.com/photo.php?fbid=110557469118460&id=100004926222910&set=a.107930446047829.14470.100004926222910&refid=56

mohamed said...

சலாம் சகோ சுவனப்பிரியன்,

அருமையான ஆக்கம்.சகோதரர் லட்சுமி சங்கராச்சார்யா அவர்களின் பேச்சு நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தது.அணைத்து மதங்களிலும் சில கயவர்கள் இருக்கிறார்கள்.அவர்களை வைத்து ஒரு மதத்தையோ அல்லது இசத்தையோ எடை போட்டால் இந்த உலகில் நல்லவர்களே இல்லை என்று ஆகிவிடும்.இந்தியாவை பொறுத்த பல நல்ல ஹிந்து சகோதரர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

அதற்க்கு சாட்சியே சகோதரர் லட்சுமி சங்கராச்சாரியார் அவர்கள் பேச்சு.

mohamed said...

சில நாட்களாகவே முக நூலில் சுவாமி வித்யானந்தா என்று காவி பயங்கர வாதி சில அப்பாவி ஹிந்து சகோதரர்களை சேர்த்துக் கொண்டு இஸ்லாத்திற்கு எதிராகவும்,இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் ஆபாசமாக பேசி நச்சுக் கருத்துக்களை விதைத்து முக நூலில் தினமும் இஸ்லாமியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையே பிரச்சனையை உண்டு பண்ணி சந்தோசப் பட்டுக்கொண்டு இருக்கின்றான்.இன்ஷா அல்லாஹ இந்த பதிவை காப்பி பண்ணி அவனுடைய முக நூல் பக்கத்தில் ஷேர் செய்து விடுகிறேன்.

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ முஹம்மத்!

//அருமையான ஆக்கம்.சகோதரர் லட்சுமி சங்கராச்சார்யா அவர்களின் பேச்சு நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்தது.அணைத்து மதங்களிலும் சில கயவர்கள் இருக்கிறார்கள்.அவர்களை வைத்து ஒரு மதத்தையோ அல்லது இசத்தையோ எடை போட்டால் இந்த உலகில் நல்லவர்களே இல்லை என்று ஆகிவிடும்.இந்தியாவை பொறுத்த பல நல்ல ஹிந்து சகோதரர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. //

அனைத்து மதங்களிலும் மார்க்கங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் கலந்தே உள்ளனர். நீங்கள் சொல்வது போல் ஒரு சிலரை வைத்து ஒட்டு மொத்த சமூகத்தையும் எடை போடுவது அறிவீனம்.

//முக நூலில் தினமும் இஸ்லாமியர்களுக்கும் ஹிந்துக்களுக்கும் இடையே பிரச்சனையை உண்டு பண்ணி சந்தோசப் பட்டுக்கொண்டு இருக்கின்றான்.இன்ஷா அல்லாஹ இந்த பதிவை காப்பி பண்ணி அவனுடைய முக நூல் பக்கத்தில் ஷேர் செய்து விடுகிறேன்.//

போஸ்ட் செய்து அவர்களுக்கு உண்மையை விளக்குங்கள்.

நாகூர் மீரான் said...

சலாம் சகோ.சுவனப்பிரியன் !

அருமையான கருத்துள்ள பதிவு..ஒரு சாதாரண நிலையிலுள்ள மனிதர் உண்மையை விளங்கி கொள்வதைவிட எதிர்மறையான கருத்து கொண்ட, அதை மக்கள் மத்தியில் பரப்பிய ஒருவர் அதை ஆதரித்து பேசுவது எவ்வளவு கடினமான காரியம்..சார்வாக்கள் ,செல்வன்கள் போன்றவர்களுக்கு இவர் ஒரு நல்ல முன்மாதிரி...

//இஸ்லாத்தைப் பற்றி ஏதும் குறை சொல்ல வந்தீர்கள் என்றால் குர்ஆனை கொண்டு எதையும் பேசுங்கள். தவறாக நடக்கும் முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள் என்று சொல்லி எனது உரையை முடிக்கிறேன்..//

சில நாட்களுக்கு முன்பு சகோ.ஆனந்த் அவர்களின் பதிவில் வைத்த கருத்தையே ரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டார் ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா.....

அன்னார் முழுமையாக நேர்வழி பெற்று, நடைமுறையில் வாழ்ந்து ,இஸ்லாமை விமர்சிக்கும் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க பிரார்த்திக்கிறேன் !!!

நன்றி !!!

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ நாகூர் மீரான்!

//அன்னார் முழுமையாக நேர்வழி பெற்று, நடைமுறையில் வாழ்ந்து ,இஸ்லாமை விமர்சிக்கும் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க பிரார்த்திக்கிறேன் !!!//

உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும். சார்வாகன்களும், இக்பால் செல்வன்களும் திருந்தட்டும்.

faizeejamali said...

salam Sago excellent article

சுவனப் பிரியன் said...

//salam Sago excellent article//

சலாம் சகோ. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

jaisankar jaganathan said...

எவ்ளோ பணம் குடுத்தீங்க அந்த ஆளுக்கு?

சுவனப் பிரியன் said...

//எவ்ளோ பணம் குடுத்தீங்க அந்த ஆளுக்கு?//

பணத்துக்கு விலை போகிறவர்கள் என்று குற்றச்சாட்டை வைக்கிறீர்களா? சங்கராச்சாரியார்களை இந்த அளவு கேவலப்படுத்த வேண்டாம. உங்கள் ஆட்களே உங்களின் கருத்தை மறுப்பர்.

முதலில் தவறாக விளக்கம் கொடுக்கப்பட்டவர். பிறகு குர்ஆனை விளங்கி உண்மையை தெரிந்து கொண்டவர்.

Anonymous said...

avan seyal

Anonymous said...

avan seyal

Anonymous said...

avan seyal

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,

மனதில் எவ்வித சார்புத்தன்மையும் காழ்ப்புணர்வும் இல்லாமல் நேர்மையான எண்ணத்தோடு சிந்திக்கத்தெரிந்த எவரும் இப்படித்தான் இவரைப்போல உண்மையை மிக எளிதாக யாரும் விளக்காமலேயே சுயமாக விளங்கிக்கொள்வார்கள்..!

//நான் செல்லும் போது வழியில் மாடியில் அமர்ந்திருந்த ஒரு முஸ்லிம் நான் வருவதை பார்த்து என் மீது வெற்றிலை பாக்கு எச்சிலை வேண்டுமென்றே துப்பினார்.//

--------என்னே ஒரு பொறுமை..? பெருந்தன்மை..! தியாகம்..!

நாகூர் ஹனீபா பாடலில் ஒரு பெண் நபி (ஸல்) அவர்கள் மீது தினமும் "அதிகாலை நேரம், ஸுபுஹுக்குப்பின்னே..." குப்பை கொட்டிய போது அன்னாருக்கு இருந்த அதே பொறுமை..! மாஷாஅல்லாஹ்..!

ஹிந்துக்களின் தலை முடியை பிடித்து இழுத்து அவனது தலையை வெட்டினால் உனக்கு நேராக சொர்க்கம். அதற்கு பெயர்தான் ஜிஹாத். அப்படித்தான் குர்ஆனில் இருக்கிறது' என்று பல கூட்டங்களில் பேசியுள்ளேன். எனக்கு அவ்வாறுதான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. அவ்வாறு பேசியது என்னுடைய தவறுதான்.//

-----------அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ் இவர் விஷ்யத்தில் மேலும் நல்லருள் வழங்கி நேர்வழி காட்டி ஹிதாயத் வழங்கி நல்லுதவிகள் செய்ய பிரார்த்திக்கிறேன்..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

//கிராமத்தில் சொல்லப்படும் பழமொழி ஒன்றைப் போல் குர்ஆனில் உள்ள நல்ல விஷயங்களை படிப்பதை விட்டு விட்டு அதிலிருந்து என்ன தவறுகளை உண்டாக்கலாம் என்று சிநதிக்க ஆரம்பித்தேன். சில முஸ்லிம்களின் நடவடிக்கைகளும், குர்ஆனின் சில வசனங்களும் எதிர்மறையாக என்னை ஒரு புத்தகம் எழுதத் தூண்டியது. அதன் தலைப்பு "THE HISTORY OF ISLAMIC TERRORISM". ஆனால் நான் எழுதியவை அனைத்தும் தவறு என்று பின்னாளில் உணர்ந்து கொண்டேன்.//

--------எனக்கு தருமிகள்/சார்வாகன்கள்/இக்.செல்வன்கள் போன்றோர் நினைவில் வந்து போகின்றனர். அவர்களுக்கும்... நாம் எவ்வளவோ சொல்லி விட்டோம்... சொல்லிக்கொண்டே இருக்கிறோம்..! இறை நாடினால் ஒருநாள் உணர்வார்கள்..! அப்போது அவர் போலவே இவர்களுக்கும் எல்லாம் விளங்கும்.

அப்போது....

//என்னை விட பெரிய தவறு செய்தது இங்கு அமர்ந்து இருக்கும் முஸ்லிம்கள் தான். இந்த உண்மையை இத்தனை காலம் என்க்கு விளக்காமல் இருந்தது உங்கள் தவறல்லவா?//

------------இப்படி மட்டும் அவர்கள் சொல்ல மாட்டார்கள்..!

///பகவத் கீதையில் எந்த சூழலை நாம் பார்ததோமோ அதே சூழல்தான் இங்கு முஸ்லிம்களுக்கும் உள்ளது. இதுதான் இஸ்லாத்தில் ஜிஹாதாக பார்க்கப்படுகிறது. இதற்கு தீவிரவாதம் என்று பெயரிடுவீர்களா? தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஒருவன் எடுக்கும் தற்காப்பு முயற்சிக்கு தீவிரவாதம் என்ற சொல் சரியாகுமா? பகவத் கீதையில் வரும் சம்பவங்களை நியாயப்படுத்தும் பலர் இஸ்லாமியர்களின் தற்காப்பு போர்களை விமரிசிப்பது ஏன்?///

//இஸ்லாத்தைப் பற்றி ஏதும் குறை சொல்ல வந்தீர்கள் என்றால் குர்ஆனை கொண்டு எதையும் பேசுங்கள். தவறாக நடக்கும் முஸ்லிம்களை வைத்து இஸ்லாத்தை எடை போடாதீர்கள்//

------நாம் பலமுறை பலருக்கும் சொல்லிக்கொண்டிருக்கும் அதே வரிகள்..!

இஸ்லாம் பற்றி நேர்மையான வழியில்.... முந்தாநாள்... மதுரை ஆதீனம் இன்று சங்கராச்சாரியார் உரை..! இதுபோன்ற மத தலைவர்கள் மூலம் மதச்சார்பற்ற இந்தியா அதன் சரியான பாதையில் நிச்சயமாக பீடுநடை போட்டுச்செல்லும்..!

மொத்தத்தில் பாதுகாக்கப்பட்டு பரப்பப்பட வேண்டிய மிகவும் சிறந்த பதிவு சகோ.சுவனப்பிரியன்..!

ஜசாக்கல்லாஹு ஹ்கைர்.

அல்லாஹ் தங்களின் கல்வி அறிவையும் எழுதும் நேரத்தையும் மென்மேலும் விசாலமாக்கி வைப்பானாக. ஆமீன்.

jaisankar jaganathan said...

//குர்ஆனை விளங்கி உண்மையை தெரிந்து கொண்டவர்./

அந்த உண்மைய தெரிஞ்சுக்கிட்டா யாரும் இஸ்லாமிய மத்ததில் இருக்க மாட்டாங்களே

சிராஜ் said...

@jeisangar jeganaathan

// எவ்ளோ பணம் குடுத்தீங்க அந்த ஆளுக்கு? //

நீங்க இஸ்லாத்தை திட்ட எவ்வளவு பணம் வாங்குறீங்களோ?? அதே அளவு... ஹி..ஹி..ஹி

சுவனப் பிரியன் said...

சலாம் சகோ முஹம்மது ஆஷிக்!

//நாகூர் ஹனீபா பாடலில் ஒரு பெண் நபி (ஸல்) அவர்கள் மீது தினமும் "அதிகாலை நேரம், ஸுபுஹுக்குப்பின்னே..." குப்பை கொட்டிய போது அன்னாருக்கு இருந்த அதே பொறுமை..! மாஷாஅல்லாஹ்..!//

பிரிட்டிஷார் அன்று விதைத்த வெறுப்பின் எச்சங்கள் இன்றும் முஸ்லிம்களிடமும் இந்துக்களிடமும் இருக்கிறது. ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டாலே ஒரு வன்மம் தெரிக்கும் சிலரது முகத்தில். இது தவறு. எல்லோரும் ஆதமுடைய மக்களே! அனைவரும் சகோதரர்களே! என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.

//------------இப்படி மட்டும் அவர்கள் சொல்ல மாட்டார்கள்..!//

வருங்காலத்தில் கண்டிப்பாக அந்த நிலையை அடைவார்கள் இன்ஷா அல்லாஹ்.

//அல்லாஹ் தங்களின் கல்வி அறிவையும் எழுதும் நேரத்தையும் மென்மேலும் விசாலமாக்கி வைப்பானாக. ஆமீன்.//

வருகைக்கும் உங்களின் பிரார்த்தனைக்கும் நன்றி சகோ.

சுவனப் பிரியன் said...

//avan seyal//

கண்டிப்பாக உங்களையும் என்னையும் படைத்த அந்த ஏக இறைவனின் செயல். இதில் மாற்றுக் கருத்தே இல்லை.

சுவனப் பிரியன் said...

//அந்த உண்மைய தெரிஞ்சுக்கிட்டா யாரும் இஸ்லாமிய மத்ததில் இருக்க மாட்டாங்களே//

100 கோடிக்கு மேல் குர்ஆனை விளங்கியவர்கள் தான் இஸ்லாத்தில் உள்ளனர். இன்னும் சில நாட்களில் இந்த சங்கராச்சாரியாரும் ஏக இறைவனை வணங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நாத்திகத்தை நோக்கி சென்று கொண்டிருந்த என்னை இழுத்து வந்ததே இந்த குர்ஆன் தான்.

Anonymous said...

//இஸ்லாம் பற்றி நேர்மையான வழியில்.... முந்தாநாள்... மதுரை ஆதீனம் இன்று சங்கராச்சாரியார் உரை..! இதுபோன்ற மத தலைவர்கள் மூலம் மதச்சார்பற்ற இந்தியா அதன் சரியான பாதையில் நிச்சயமாக பீடுநடை போட்டுச்செல்லும்..!//

ஆம், இந்தியா இஸ்லாமிய தேசமாகி, அரபு அப்துல்லாவின் நேரடி ஆட்சியின் கீழ் போகும் வரை பீடு நடை போட்டு செல்லும், மதுரை ஆதினமும் சங்கராச்சரியார் போன்றவர்களும் மத சார்பின்மை மத ஒற்றுமை பற்றி பேசி கொண்டிருக்கும் நேரத்தில், அவரது மத நம்பிக்கையையும் வழிபாட்டையும் புதைப்பதற்கு இங்கே அல்லாவின் அடிமைகளால் குழி தோண்டப்பட்டு கொண்டிருப்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை. மாய்ந்து மாய்ந்து சங்கரச்சரியும் ஆதீனமும், இஸ்லாமை புகழ்ந்து பேசுவது போல், இவர்கள் பின்பற்றும் இந்து சமயத்தையோ அதன் நல்ல விஷயங்களையோ எந்த அல்லாவின் பிள்ளையும் புகழ்ந்து பேச போவது இல்லை. சொல்லப்போனால் பிற சமயங்களை இஸ்லாமியர்கள் ஒரு மத நம்பிக்கையாகவே ஏற்று கொள்வது இல்லை. இந்த நாட்டில் இந்து சமயத்தை பின்பற்றுபவன் இந்துத்துவ வாதி, காவி வெறியன், அதே நேரத்தில் இங்கே தாவா பண்ணிக்கொண்டு இந்த நாட்டை இஸ்லாமிய மயம் ஆக்குவோம், இங்கே ஷரியா கொண்டு வருவோம் என்று கூறுபவர்கள் உத்தமர்கள் மத சார்பற்றவர்கள். சங்கராச்சாரியார் இவர்களை புகழ்ந்ததால், இவர்களும் ஆஹா அவர் உத்தமர் என்று புகழ்கிறார்கள், அதே நேரம் அவர் இஸ்லாமை பற்றி எதாவது விமர்சித்து இருந்தால் இந்து பயங்கரவாதி, காவி பயங்கரவாதி என்ற பட்ட பெயர்கள் கிடைத்திருக்கும்.

வருங்காலத்தில், சங்கராச்சரியார் போன்றவர்கள் தனது தெய்வத்தை வணங்க ஜிஸ்யா கட்ட வேண்டிய நிலை வரும்போது, தான் பேசியது தவறோ என்று யோசிப்பார். அந்த நேரத்தில் அவரால் யோசிக்க மட்டும் தான் முடியும், பேச முடியாது.

//எல்லோரும் ஆதமுடைய மக்களே! அனைவரும் சகோதரர்களே! என்ற எண்ணம் மேலோங்க வேண்டும்.//

இதை சொல்லி சொல்லி தான் இங்கே மத மாற்ற வேலை சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இவர்கள் மத சார்பின்மை பற்றியும் பேசுகிறார்கள் அது விந்தை தான். வெளி வேடம் போடுவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது

//இந்த சங்கராச்சாரியாரும் ஏக இறைவனை வணங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.//

மத சார்பின்மை என்பதல்ல இங்குள்ள முஸ்லிம்களின் நோக்கம், தன்னுடைய மதமே இங்கே உயற வேண்டும் இங்கே ஆட்சி செய்ய வேண்டும் என்பதே இங்குள்ள அல்லாவின பிள்ளைகளின் நோக்கம், அதற்காக அவர்கள் இடும் முக மூடியே இந்த மத சார்பின்மை வேடம்.

Nasar said...

அஸ்ஸலாம் அலைக்கும் சகோ ...
நேற்று மதுரை ஆதீனம் அவர்கள்
இன்று ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள்
நாளை திருவாளர்கள் சார்வாகன்,தருமி,இ.செல்வன் ...!!!!???
" உண்மையை ஒருபோதும் நிரந்தரமாக மறைக்கமுடியாது "

சுவனப் பிரியன் said...

சகோ சிராஜ்!

//நீங்க இஸ்லாத்தை திட்ட எவ்வளவு பணம் வாங்குறீங்களோ?? அதே அளவு... ஹி..ஹி..ஹி//

சரியான நெத்தியடி பதில். :-)

சுவனப் பிரியன் said...

வஅலைக்கும் சலாம் சகோ நாசர்!

//நேற்று மதுரை ஆதீனம் அவர்கள்
இன்று ஸ்ரீ லஷ்மி சங்கராச்சார்யா அவர்கள்
நாளை திருவாளர்கள் சார்வாகன்,தருமி,இ.செல்வன் ...!!!!???
" உண்மையை ஒருபோதும் நிரந்தரமாக மறைக்கமுடியாது "//

இறைவன் நாடினால் அவர்களும் உங்கள் எண்ணத்தை பூர்த்தியாக்கி வைப்பார்கள்.

சுவனப் பிரியன் said...

//மாய்ந்து மாய்ந்து சங்கரச்சரியும் ஆதீனமும், இஸ்லாமை புகழ்ந்து பேசுவது போல், இவர்கள் பின்பற்றும் இந்து சமயத்தையோ அதன் நல்ல விஷயங்களையோ எந்த அல்லாவின் பிள்ளையும் புகழ்ந்து பேச போவது இல்லை.//

அந்த பெருமைகளால்தான் மதுரையிலும் தர்மபுரியிலும் தினமும் வெட்டு குத்து நடந்து வருகிறதே.... அதை நாங்கள் வேறு பிரபலப் படுத்த வேண்டுமா?

முதலில் நீங்கள் உங்கள் மதத்தில் புரையோடிப் போயிருக்கும் சாதி வெறியை அகற்ற முயற்சி செய்யுங்கள் சகோதரரே!

//மத சார்பின்மை என்பதல்ல இங்குள்ள முஸ்லிம்களின் நோக்கம், தன்னுடைய மதமே இங்கே உயற வேண்டும் இங்கே ஆட்சி செய்ய வேண்டும் என்பதே இங்குள்ள அல்லாவின பிள்ளைகளின் நோக்கம், அதற்காக அவர்கள் இடும் முக மூடியே இந்த மத சார்பின்மை வேடம்.//

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்'

'யாதும் ஊரே யாவரும் கேளீர்'

"நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே

சுற்றிவந்து மொணமொணன்று சொல்லும் மந்திரம் ஏதடா?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்

சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?"

இந்த கருத்துக்களெல்லாம் அரபு நாட்டிலிருந்து இறக்குமதி ஆனதாக சொல்கிறீர்களா?

நமது முன்னோர்கள் முன்பு ஏக இறைவனையே வணங்கி வந்துள்ளனர். பின்னால் வந்த படையெடுப்புகளால் பல தெய்வ கொள்கைக்கு மாறி விட்டோம். அதுதான் உண்மை.

2000 அல்லது 2500 வருடங்களுக்கு முன்பு நமது பாரதம் அல்லாவின் தேசமாகத்தான் இருந்தது.

Anonymous said...

//நீங்க இஸ்லாத்தை திட்ட எவ்வளவு பணம் வாங்குறீங்களோ?? அதே அளவு...//

பணம் எங்கே கொடுக்கிறார்கள் எதவாது கலவரம் வரும் போது அட்டை போட்டுக்கிட்டா தான் உண்டு.... ஹி..ஹி..ஹி

Ebrahim Ansari said...

இன்றைய காலகட்டத்தில் பலரும் அறியும் வண்ணம் பல ஊடகங்களில் வெளியிடப்படவேண்டிய பதிவு. தவறான எண்ணங்களையும் கண்மூடித்தனமான ஆராயத கருத்துக்களையும் போக்கிட உதவும் பதிவு.

Peer Mohamed said...

Good one kaakka !!!

faizeejamali said...

Dai anonymous sambandham illaama kulappurathe un velai ovvuru madhamamum than madham parappapada vendum padhugaaka pada vendum endre virumbugirathu aarya samajam etharku? Rss etharku ? Vihvahindh parishath etharku ? Sivasena etharku ? Babar masoothi kattava ? Islaathai parappava ? Ayogyiyane indhiyavai hindu naadagave arivithu paar insha allah naangal orupothum dhawa paniyai vidamattom jananaayaga mugamoodi engalukku Thevaiillai valla allahvin udhaviyum anbum engalukku pothum.