உசிலம்பட்டி கொடுமைகளும் குர்ஆனின் எச்சரிக்கையும்!
'என்ன பாவத்துக்காக கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப் பட்ட பெண் குழந்தை விசாரிக்கும் போது'
-குர்ஆன் 81 :8,9
'வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம் அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.'
-குர்ஆன் 17 : 31
உசிலம் பட்டியிலும், சேலம் போன்ற பகுதிகளிலும் பெண் குழந்தை பிறந்தவுடன் கள்ளிப் பால்,அல்லது நெல் மணிகளைக் கொடுத்து கொன்று விடும் பழக்கம் இன்றும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. இப்படிகொல்லப் பட்ட பெண் குழந்தைகள் மறுமை நாளில் இறைவனுக்கு முன்னால் தன் பெற்றோர்களின் மேல் 'எந்த காரணத்திற்காக ஒரு பாவமும் அறியாத நாங்கள் கொல்லப் பட்டோம்' என்று வழக்கு தொடர்வார்கள் என்று மேற் சொன்ன வசனம் சொல்லிக் காட்டுகிறது. அனைவருக்கும் உணவளிக்கக் கூடியவன் இறைவன். அப்படி இருக்க உங்களுக்கு கொல்லும் உரிமையைக் கொடுத்தது யார்? என்றும் இறைவன் குர்ஆனில் கேட்கிறான்.கிராமங்களில் இந்த கொடுமை என்றால் நகரங்களிலோ ஸ்கேன் போட்டுப் பார்த்து வயிற்றிலேயே சமாதி கட்டும் பழக்கம் இன்றும் நடந்து வருகிறது.
இஸ்லாம் அரபு நாடுகளுக்கு வருவதற்கு முன்பு இதே போல் பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்து விடுவார்கள். பெண் குழந்தை பிறந்ததைக் கேள்விப் பட்டால் அவன் ஊருக்குள் வர வெட்கப் பட்டுக் கொண்டு இரண்டு மூன்று மாதங்கள் வெளியூர் சென்று விடுவானாம். அந்த அளவு மூடர்களாக அன்றைய அரபுகள் இருந்திருக்கின்றனர்.
முகமது நபிக்குப் பிறகு இரண்டாவது கலீபாவாக பொறுப்பேற்ற உமரைப் பற்றி நாம் அறிவோம். அவர் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு அவருக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. அன்றைய அரபியர்களின் மூட பழக்கத்தின் படி தன் குழந்தையை கொன்று விடுவது என்று உமர் முடிவு செய்கிறார். அதன்படி அந்தக் குழந்தையை அழைத்துக் கொண்டு ஆளரவமற்ற இடத்துக்கு வருகிறார். பிறகு அங்கு தன் குழந்தையை உயிரோடு புதைப்பதற்காக குழியைத் தோண்டுகிறார். அப்பொழுது அவரது தாடியில் மண் ஒட்டிக் கொள்கிறது. இதைப் பார்த்த அந்த குழந்தை தன் கையால் அந்த மண்ணைத் தட்டி விடுகிறாள். குழி வெட்டி முடிந்தவுடன் அந்த குழந்தையை குழியில் இறக்குகிறார் உமர். அப்பொழுது அந்த சிறுமி 'நீங்களும் வரவில்லையா?' என்று அப்பாவியாக கேட்டது. மனதைக் கல்லாக்கிக் கொண்ட உமர் மண்ணைத் தள்ளி அந்தக் குழந்தையை உயிரோடு சமாதியாக்குகிறார். எந்த அளவு அன்றைய சமூகம் கல் நெஞ்சம் படைத்ததாக இருந்திருந்தால் இத்தகைய கொடூரங்களை அரங்கேற்றியிருக்கும்.
பல வருடங்கள் கழித்து முகமது நபியின் பிரச்சாரத்தால் கவரப்பட்டு உமர் இஸ்லாத்தை ஏற்கிறார். ஒரு நாள் முகமது நபியிடம் தன் பெண் குழந்தையை தன் கையாலேயே கொன்றதை நினைவு கூர்ந்து தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். அவரைத் தேற்றிய முகமது நபி அறியாமைக் காலத்து பாவங்களை இறைவன் மன்னித்து விடுவதாக வாக்களித்துள்ளான் என்று சொல்லி அவரை அனுப்பி வைக்கிறார்.
உமருடைய வாழ்க்கை வரலாற்றைப் படித்த காந்திஜி காங்கிரஸ் காரர்களைப் பார்த்து 'நீங்கள் நீதமான ஆட்சி நடத்த வேண்டும் என்றால் உமருடைய ஆட்சியைப் போன்று இந்தியாவை நடத்துங்கள்' என்று சொல்லும் அளவுக்கு உமருடைய இஸ்லாத்திற்கு பிறகான கடைசி காலங்கள் இருந்தன.
” எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய, அதை ஆக்கியவனையோ, அதில் உள்ள தெய்வீகத் தன்மையையோ, இலக்கண இலக்கிய அள வையையோ, அமைப்பையோ, அற்புத தன்மையையோ அளவாகக் கொண்டது ஆகாது.”
-இது பெரியாருடைய எண்ணங்களாகும். இறைவன் சம்பந்தமாக பல மாற்றுக் கருத்துக்கள் நமக்கும் அவருக்கும் இருந்தாலும் சில விஷயங்களில் அவர் இஸ்லாத்தோடு ஒத்துப் போவதை பல இடங்களில் பார்க்கிறோம்.
//” எந்த நூலை எடுத்துக் கொண்டாலும் அதன் மதிப்பு, அந்த நூலின் பயனை அளவாகக் கொண்டதே ஒழிய,//
எந்த ஒரு நூலும் அதன் உண்மையான மதிப்பு மனித குலத்துக்கு அதனால் விளைந்த நன்மையை வைத்தே என்பதில் நமக்கும் மாற்றுக் கருத்துகள் இல்லைதன் குழந்தையை தன் கையாலேயே கொன்ற உமர், முகமது நபியை கொல்வதற்காக வாளை எடுத்து வந்த உமர் குர்ஆனின் போதனைகளுக்குப் பிறகு எந்த அளவு பண்படுத்தப் பட்டார் என்பதை நினைத்து ஆச்சரியமடைகிறோம். அதே போல் எவ்வளவுதான் வறுமை ஏற்படினும் தமிழகத்தில் தன் குழந்தையை தன் கையாலேயே கொல்லத்துணியும் மாபாதகச் செயலை செய்யமுஸ்லிம்கள் துணியாததற்கு மேற் கண்ட குர்ஆனிய வசனங்களே காரணம். இஸ்லாத்தில் தீண்டாமை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டதற்கும் குர்ஆனில் தீண்டாமைக்கு எதிராக வரும் வசனங்களே காரணம். அந்த அளவு குர்ஆனின் வசனங்கள் முஸ்லிம்களின் வாழ்க்கையோடு பிண்ணிப் பிணைந்துள்ளது.
பெண் குழந்தை கொல்லப் படுவதற்கு மூல காரணம் என்ன? வரதட்சணை கொடுமை. இந்த கொடுமையை அகற்றுவதற்கு நம் அரசாங்கமும், படித்தவர்களும், இளைஞர்களும் முயற்ச்சிக்க வேண்டும். இன்று அரபு நாடுகளில் மாப்பிள்ளை பெண்ணுக்கு சீதனமாக ஒரு லடசம்,இரண்டு லட்சம் என்று நம் நாட்டுக்கு நேர் மாறான வகையில் கொடுப்பதால் தற்போது பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு கொடுத்து சந்தோஷிப்பதை நாம் நேரிடையாகப் பார்க்கிறோம்.
'ஒரு மனைவியை விவாகரத்து செய்து இன்னொருத்தியை மணந்து கொள்ள நீங்கள் விரும்பினால் அவளுக்கு ஒரு குவியலையே கொடுத்திருந்தாலும் அதில் எதையும் பிடுங்கிக் கொள்ளாதீர்கள். அக்கிரமாகவும்,பெரும் குற்றமாகவும் உள்ள நிலையில் அதைப்பிடுங்கிக் கொள்கிறீர்களா?' - குர்ஆன்(4 :20)
மேற்கண்ட வசனத்தின் மூலம் மணப் பெண்ணின் விருப்பத்தில் ஒரு பொற்குவியலையே தரலாம் என்று விளங்குகிறோம்். ஒருக்கால் பிணக்கு வந்து பிரியும் படி நேர்ந்தால் பெண்ணுக்கு கொடுத்த எந்த பொருளையும் திரும்ப வாங்கக் கூடாது என்றும் அது அக்கிரமம் என்றும் குர்ஆன் கட்டளையிடுகிறது. இதை எல்லாம் உள் வாங்கிக் கொண்ட அரபு சமூகம் இன்று ஆண்கள் பணம் கொடுத்து திருமணம் முடிப்பதை பார்க்கிறோம். குர்ஆனின் போதனை அவர்களை அந்த அளவு மாற்றியிருக்கிறது. இதே போன்று பெண்ணுக்கு பணம் கொடுத்துதிருமணம் முடிக்கும் பழக்கத்தை தமிழகத்தில் கொண்டு வர இளைஞர்கள் முயற்ச்சிக்க வேண்டும். வரதட்சனை கொடுமை மட்டும் ஒழிந்து விட்டால் பெண் குழந்தைகள் கள்ளிப் பால் கொடுத்து கொல்லும் காட்டுமிராண்டித் தனம் முற்றிலுமாக ஒழிந்து விடும்.
'தங்க கடிகாரம் வைர மணியாரம்
தந்து மணம் பேசுவார்!- பொருள்
தந்து மணம் பேசுவார்!
மாமன் தங்கை மகளான மங்கை
உனக்காக உலகை விலை பேசுவார்....
உலகை விலை பேசுவார்.....
தன் தங்கை மகளை தன்மகனுக்கு மணம் முடிக்க நினைக்கும் மாமன் பெண்ணுக்கு சீதனமாக உலகையே விலை பேச தயாராகிறான். இதன் மூலம் அன்றைய தமிழர்கள் பெண்ணுக்கு பணம், பொன் போன்றவற்றைக் கொடுத்தே மணம் முடித்திருக்கிறார்கள் என்று விளங்குகிறோம். பிறகு ஆரியர்களின் வருகையால் இந்த பழக்கம் மாற்றப் பட்டு அவர்களின் வழக்கமான வரதட்சனை இன்று தமிழர்களிடத்திலும் வேரூன்றி விட்டது.
சனாதன தர்மத்தையும், வரதட்சனைக் கொடுமையையும் தமிழுலகுக்கும் நம் பாரத நாட்டுக்கும் தந்த புண்ணியம் நம் நாட்டு ஆரியக் கலாசாரத்தையே சாரும்.
இறைவனே மிக அறிந்தவன்.
என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்
5 comments:
//தன் தங்கை மகளை தன்மகனுக்கு மணம் முடிக்க நினைக்கும் மாமன் பெண்ணுக்கு சீதனமாக உலகையே விலை பேச தயாராகிறான். இதன் மூலம் அன்றைய தமிழர்கள் பெண்ணுக்கு பணம், பொன் போன்றவற்றைக் கொடுத்தே மணம் முடித்திருக்கிறார்கள் என்று விளங்குகிறோம். பிறகு ஆரியர்களின் வருகையால் இந்த பழக்கம் மாற்றப் பட்டு அவர்களின் வழக்கமான வரதட்சனை இன்று தமிழர்களிடத்திலும் வேரூன்றி விட்டது//
இந்தப் பாட்டை உள்ளடக்கிய பாசமலர் படம் இப்ப அம்பது வருஷத்துக்கு முன்னால வந்ததுங்க..ஆரியருங்க பாசமலர் படத்துக்கு அப்புறம் வந்ததா நெனச்சுக்கிட்டு இருக்கீங்களா?...சரியாப் போச்சு போங்க..
புலிப் பாண்டி!
//.ஆரியருங்க பாசமலர் படத்துக்கு அப்புறம் வந்ததா நெனச்சுக்கிட்டு இருக்கீங்களா?...சரியாப் போச்சு போங்க..//
நான் எப்பங்க பாசமலர் படத்துக்கு பின்னால ஆரியர் வந்தாங்கனனு சொன்னேன். பதிவை சரியாக நீங்கள் படிக்கல்லையா?பண்டைய காலத் தமிழர்களிடத்தில் வரதட்சணை கொடுக்கும் பழக்கம் இருந்ததில்லை என்பதை பல நூல்கள் நமக்கு தெளிவு படுத்துகின்றன. அந்த நூல்கள் எல்லாம் என் ஞாபகத்தில் இல்லை. எனவே தான் கண்ணதாசனின் பாசமலர் படத்தின் பாடலை ஒரு உதாரணத்திற்காக கையாண்டேன். ஆரியர் வருகைக்கு அளவு கோலாக இந்த திரைப்படப் பாடலை நீங்களாக கற்பனை செய்து கொண்டு கேட்டால் இதற்கு நான் என்ன பதில் சொல்வது?
வணக்கத்துடன் வருக நண்பரே!
//தவறாக நினைக்க வேண்டாம்.//
இதில் தவறாக நினைப்பதற்கு என்ன இருக்கிறது. தாராளமாக உங்களின் கருத்தைச் சொல்லுங்கள்.
//இந்திய தமிழ் முஸ்லீம்களிடையே 'வரதட்சிணை' கொடுமை இல்லை என நிச்சயமாக நம்புகின்றீர்களா? உறுதியாக? அப்படியெனில் மகிழ்வேன்.//
இந்திய தமிழ் முஸ்லிம்களிடத்திலே இந்துக்களுக்கு சமமாக வரதட்சணை கொடுமை தலை விரித்தாடுகிறுது. இந்துக்களைப் பார்த்து முஸ்லிம்களும் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார்கள். கடந்த இருபது வருடங்களாக தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் இதன் கொடுமையை குர்ஆனின் ஆதாரங்களோடு எடுத்து விளக்கியதால் இஸ்லாமிய இளைஞர்களிடையே மிகப் பெரிய விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே வரதட்சணை வாங்கியவர்கள் பொது மக்கள் முன்னிலையில் பெண்ணின் தந்தை இடத்தில் பல பேர் முன்னிலையில் திருப்பி கொடுத்த நிகழ்ச்சிகள் ஏராளம். இது போன்ற மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக பி. ஜெய்னுல்லாபுதீன் என்பவரும் இன்னும் பல சமூக ஆர்வலர்களும் பெரும் தொண்டாற்றி இருக்கின்றனர். தற்போது வரதட்சணை வாங்கும் திருமணங்களில் கலந்து கொள்வதில்லை என்ற முடிவும் எடுத்திருக்கிறார்கள். இதே போன்ற பிரச்சாரம் இந்துக்களிடத்திலும் ஏற்பட வேண்டும்.
//அதை தடுக்க முனையும் எந்தவொரு முயற்சியும் வரவேற்க தக்கதே - அது மத பிரச்சாரமாகவே இருந்தாலும்.
[வேன்டுமானால் இப்பொதைக்கு உடனடி நிவாரணமாக 'இஸ்லாம்' மதத்தை முயன்று பார்க்கலாம். :) j/k]//
நான் இதை மதப் பிரச்சாரமாக சொல்லவில்லை. சமூக நலனில் அக்கறை கொண்டதாலேயே இதை எழுத வேண்டியதாகி விட்டது. இது போன்ற கொடுமைகள் குறைவதற்கு குர்ஆனோ, பைபிளோ, பகவத் கீதையோ உதவினால் அதையும் வரவேற்கலாம் தானே!
வரதட்சணை வாங்குவதை இறைவன் கண்டிக்கிறான் என்பதை விளங்கியதாலேயே ஏற்கெனவே வாங்கிய ஒரு லட்சம் அல்லது இரண்டு லடச ரூபாயை பெண்ணின் தந்தையிடம் திரும்ப ஒப்படைக்க முயலுகிறான் ஒருவன். படித்த குடும்பங்களில் தான் வரதட்சனை கொடுமை அதிகம் என்பதையும் பத்திரிக்கை வாயிலாக நாம் அறிய முடிகிறது.
//இந்துக்களைப் பார்த்து முஸ்லிம்களும் இந்த பழக்கத்துக்கு அடிமையாகி விட்டார்கள்.//
அப்படிங்களா?
இந்துக்கள் மற்ற மதத்தினரை குண்டு வைத்துக் கொல்வதில்லை..1400 வருஷங்களாக ஒரே சாமி, அவன் அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும் என்பதுபோலல்லாமல் காலத்துக்கேற்ப ஒத்து வாழ்கின்றனர்...
இதையும் கூட பாத்து பழகிக்கலாமே..என்ன நாஞ்சொல்றது??
புலிப் பாண்டி!
//இந்துக்கள் மற்ற மதத்தினரை குண்டு வைத்துக் கொல்வதில்லை..//
1) அசோக வம்சத்தாரை அழித்தது எந்த மதம்?
2) புத்த மதம் இந்தியாவில் துடைத்தெறியப் பட்டது எந்த மதத்தால்?
3) அரிச்சந்திரனைப் பொய் சொல்லும்படி படாதபாடு படுத்தியது எந்த மதம்?
4) கற்பனைக் கடவுளான ராமன் அயோத்தியில்தான் பிறந்தார் என்று பொய் சொல்லி பாபர் மசூதியை இடித்து தரை மட்டமாக்கியது எந்த மதம்?
5) சமூக சேவை செய்து வந்த பாதிரியாரையும் அவரது மகனையும் உயிரோடு கொளுத்தியது எந்த மதம்?
6) கோத்ரா ரயில் விபத்தை 'முஸ்லிம்கள்தான் ரயிலை எரித்தனர்' என்ற பொய்க் காரணம் சொல்லி ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்று இந்திய முன்னேற்றத்தை இருபது ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்றது எந்த மதம்?
7) காந்தியார் கொலைக்கு முன் திருவுளச் சீட்டுப் போட்டு ஒத்திகை நடத்தியது எந்த மதம்?
8) காந்தியார் இறந்தவுடன் சந்தோஷத்தில் ஒருவருக்கொருவர் இனிப்பு வழங்கிக் கொண்டது எந்த கூட்டம்? எந்த மதம்?
9) காந்தியாரைக் கொன்ற கோட்ஸேயை தியாகியாக்கி அவனை புகழ்ந்து தமிழ் மணத்தில் பதிவு போட்டது எந்த இனம்? எந்த மதம்?
இதுக்கெல்லாம் பதில் சொல்லட்டுங்களா? அல்லது உங்களுக்கு பதில் தெரியுங்களா? என்னாங்க நாஞ் சொல்றது?
Post a Comment