Followers

Monday, August 21, 2006

கவிதை அரங்கேறும் நேரம்! - சுட்டவைகள்

கவிதை அரங்கேறும் நேரம்! - சுட்டவைகள்

எப்பொழுது பார்த்தாலும் மதத்தை பிடித்தே தொங்கிக் கொண்டு இருக்கிறீர்களே! கதை கவிதை என்றெல்லாம் வித்தியாசமாக பதிவு போடக் கூடாதா? என்று தனி மடலில் சில நண்பர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். கதைக்கு பிரச்னை இல்லை. குர்ஆனிலிருந்தே பல சிறிய வரலாறுகளை அவ்வப்போது கொடுத்து வருகிறேன். இந்த கவிதை மாத்திரம் நமக்கு வராதுங்க. ஆனால் கவிதைகளை ரசிப்பேன். அவவ்ப்போது படித்து ரசித்து நினைவில் நிற்கும் ஒரு சில கவிதைகளை பட்டியலிடுகிறேன். கவிஞர்களின் பெயர் நினைவில் இல்லை.

ரசித்த கவிதைகள்!

‘நான்கு வேளை சாப்பாடு அளவில்லா நொறுக்குத் தீனி நாலு காலு ஜீவன்கள் ஆடு, மாடு, என்று உள்ளே தள்ளி, நிலை தடுமாறி விழும்வரை பட்டை அடித்து நீராவி இஞ்ஜின் கணக்கா புகை விட்டு நெஞ்சுவரை வயிறு பெருக்கினால் நல் இதயம் எங்கே கிட்டும்?’


இயற்கை கொடுத்ததெல்லாம்இயல்பாய் கொடுத்திடமனசில்லாமல்போயிடுச்சுதண்ணீரோ தாய்பாலோதடைபோட்டு நிறுத்தியாச்சுகள்ளமில்லாபயிரும் வயிரும்காய்ஞ்சுதான் போச்சுமரத்தயெல்லம்வெட்டியாச்சுமாடிவீடும் கட்டியாச்சுதொல்லுலகில்நல்லோர் இருந்தும்எப்படி பெய்யும் மழை?


காவிரி

காவிரியைக் கடக்க

ஓடம் தேவையிலலை...- இனி

ஒட்டகம் போதும்

-------------------------------

கால காலமாய.....

காலிலே சலங்கை பூட்டி
கோவிலிலே ஆட விட்டீர்கள்

முதுகிலே சூடு வைத்து
அந்தப் புரத்திற்குள்
அனுப்பினீர்கள்!

உப்பில்லா உணவு கொடுத்து
மூலையிலே அமர்த்தினீர்கள்

சந்தேகம் வந்தபோதெல்லாம்
நெருப்பிலே இறக்கினீர்கள்

இப்போது.....
வேலைக்கு அனுப்பிவிட்டு
வேவு பார்க்கிறீர்கள்!

--------------------------------

பல்லவி

குடிப்பதற்கு தண்ணீர் தேடி
இரவெல்லாம் கண் விழித்து
வீதி வீதியாய்
குடங்களோடு அலைந்தோம்...

எங்கள் துயரம் தீர்க்க
எம்.எல.ஏ வைத் தேடினோம்

தொலை பேசியில்
எப்போது கேட்டாலும்
கிடைத்த பதில்...

'தூங்குகிறார்...'
'குளித்துக் கொண்டிருக்கிறார்....'

----------------------------------

மாற்று

கிராமத்து
வீடுகளில் கூட
ஹார்லிக்ஸ்,
காம்ப்ளான்
பாட்டில்கள்...

ஒன்றில் உப்பும்
இன்னொன்றில்
ஊறுகாயுமாக!

-----------------------------

அவதாரம்

வேலு நாச்சியாராய்
குதிரை மீது ஏறி வந்தேன்

இராணி மங்கம்மாளாய்
வீரவாள் சுழற்றினேன்

ஜான்ஸி ராணியாய்
எதிரிகளைப் பந்தாடினேன்...

குக்கர் சத்தம் கேட்டது
சமயலறைக்குள்
ஓடினேன்!

---------------------------

நன்றி

பேருந்து நெரிசலில்
சிக்கித் தவித்த அந்த
தாயிடமிருந்து
குழந்தையை வாங்கினேன்.

இறங்கிச் செல்கையில்
நன்றியோடு பார்த்தாள்...
கைப்பிள்ளையின்
கால் கொலுசை
தடவியபடி!

-------------------------

விநாயகர்

வங்கியின் முன்னால்
செல்வ விநாயகர்

நீதிமன்ற வளாகத்தில்
நீதி தரும் விநாயகர்

மருத்துவ மனையில்
வினை தீர்க்கும் விநாயகர்

வழியோரங்களில்
வழிவிடும் பிள்ளையார்

குளத்தங்கரையில்
அரச மரத்துப் பிள்ளையார்

அவரவர் இடத்தில்
அகலாமல் இருந்தனர்

நேற்று
ஆயுதப் படை சூழ
ஊர்வலமாக வந்து
கடலிலே கரைந்தார்
அரசியல் பிள்ளையார்!

ஆஹா... கவிதை சம்பந்தமாக ஒரு பதிவு போட்டாச்சு.... இப்போ திருப்திதானே! J

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

No comments: