Followers

Friday, August 25, 2006

ஜிஸ்யா வரியும் மன்னர் ஒளரங்கஜேப்பும்!

ஜிஸ்யா வரியும் மன்னர் ஒளரங்கஜேப்பும்!

நம்முடைய வரலாற்றுப் பாட நூல்களில் எத்தனையோ பொய்களை அரங்கேற்றி இன்று வரை மாணவர்களுக்கு போதித்து வருகிறார்கள். இயற்கையாகவே ஒரு சில இந்துக்கள் எந்த காரணமும் இன்றி முஸ்லிம்கள் மேல் வெறுப்பை உமிழ காரணம் இளம் வயதில் படித்த இத்தகைய வரலாற்று பாட நூல்களே! அவற்றுள் ஒரு பொய் ஒளரங்கஜேப் முஸ்லிம அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியைப் புகுத்தி கொடுமை படுத்தினார் என்பது. இதை நாமும் நம்பி விடுகிறோம்.

இஸ்லாமிய ஆட்சியில் வரி எவ்வாறு வசூலிக்கப் படுகிறது?

முஸ்லிம்கள் மீது ஜகாத் எனும் வரியை இஸ்லாம் கடமையாக்கியுள்ளது. முஸ்லிம்கள் தங்களிடமுள்ள் தங்கம், வெள்ளி, பணம், வியாபாரப் பொருட்கள், ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய அனைத்திலிருந்தும் ஜகாத் எனும் வரி செலுத்தக் கடமைபட்டுள்ளனர்.

தங்கம், வெள்ளி, மற்றும் பணத்தில் இரண்டரை சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப் படும் பொருட்களில் அய்ந்து சதவீதமும், இயற்கையாக விளையும் பொருட்களில் பத்து சதவீதமும் முஸ்லிம்கள் ஜகாத் எனும் வரி செலுத்தியாக வேண்டும். இது எவ்வளவு கணிசமான வரி என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முஸ்லிம்களிடத்திலும் இந்த தொகையை கட்டாயமாக வசூலிக்க இஸ்லாமிய அரசுக்கு குர்ஆன் கட்டளை இடுகிறது.

இப்படி வசூலிக்கும் தொகையை யாருக்கு கொடுக்க வேண்டும்?

ஏழைகள், பரம ஏழைகள், கடன் பட்டிருப்பவர்கன், போரில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ராணுவ வீரர்கள், மற்றும் நாடோடிகள் நலனுக்காக இந்த வரியை அரசாங்கம் செலவு செய்யும். ஒரு அரசாங்கம் மக்களுக்குச் செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளும் இந்த ஜகாத் எனும் வரியிலிருந்தே செய்யப் பட்டன.

மொத்த அரசாங்கமும், முஸ்லிம்களிடமிருந்து பெறப்படும் ஜகாத் வரியிலிருந்தே நடந்து வரும் போது, அந்த நாட்டில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் எந்த வரியும் செலுத்தாமலிருப்பது எந்த வகையிலும் நியாயமாகாது. முஸ்லிம் அல்லாதவர்கள் மீதும் ஜகாத் வரியை கடமையாக்கினால் இஸ்லாமிய சட்டத்தை இந்துக்கள் மீது திணிப்பதாக ஆகும். எனவே தான் இது போன்ற நிலையில் முஸ்லிம் அல்லாதவர்கள் மீது ஜிஸ்யா என்ற வரியை (ஜகாத் என்ற வரிக்கு பகரமாக) விதிக்க குர்ஆன் கட்டளையிடுகிறது. இதைத்தான் ஒளரங்கஜேப்பும் செய்தார். இதைத்தான் நமது வரலாற்று ஆசிரியர்கள் குறை கண்டு எழுதி வைத்திருக்கிறார்கள்.

அடுத்து ஒளரங்கஜேப் மத வெறி உடையவரஇந்துக்களை கொடுமைப் படுத்தினார் என்ற கருத்தும் வரலாறுகளில் காணப்படும். ஒளரங்கஜேப் எப்படிப் பட்டவர் என்று தெரிந்து கொண்டால் இதற்கும் விடை கிடைக்கும்.

ஒளரங்கஜேப்பின்் உயில்மௌலவி ஹமீதுத்தீன் என்பவரால் பாரசீக மொழியில் எழுதப்பட்ட சக்கரவர்த்தி ஒளரங்கஜேப்பின்் வாழ்க்கை பற்றிய நூலின் 8வது அத்தியாயத்தில் அவரது உயிலில் சொல்லப்பட்ட விஷயங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதிலிருந்து:

1. நான் இந்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்து இந்த நாட்டை ஆண்டேன் என்பது சத்தியமானது. ஆனால் நான் என் வாழ்நாளில் ஒரு நல்ல காரியம்கூடச் செய்ததில்லை என்பதற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். ஆனால் இப்போது வருந்துவதனால் எந்தப் பயனுமில்லை. என் இறுதிச் சடங்குகளை என் அருமை மகன் ஆஸம்தான் செய்யவேண்டும் என்பது என் விருப்பம். வேறுயாரும் என்னுடலைத் தொடக்கூடாது.

2. என் பணியாள் ஆயா பேக்கிடம் என் பணப்பை உள்ளது. அதில் கவனமாகச் சேமித்து வைத்த 04 ரூபாயும் 02 அனாக்களும் இருக்கின்றன. எனக்கு ஓய்வான நேரத்தில் நான் குர்ஆன் பிரதிகளை கையால் எழுதிக்கொடுத்தேன், தொப்பிகள் தைத்தேன். அந்த தொப்பிகளை விற்றுத்தான் நான் நேர்மையாக சம்பாதித்த பணம்தான் அது. அந்த பணத்தில்தான் (என் உடல்மூடும்) க·பன் துணி வாங்கப்பட வேண்டும். இந்த பாவியின் உடலை மூட வேறு எந்தப் பணமும் செலவிடப்படக் கூடாது. இது எனது இறுதி விருப்பம்.
(என் கையால் எழுதப்பட்ட) குர்ஆனின் பிரதிகளை விற்று நான் 305 ருபாய்கள் பெற்றேன். அந்தப் பணமும் ஆயாபேக்கிடம்தான் உள்ளது. இந்த பணத்தில் வாங்கப்படும் இனிப்பு சோறு ஏழை முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்பது என் விருப்பம்.

3. என்னுடைய சாமான்கள் அனைத்தும் -- துணிமணிகள், மைக்கூடுகள், எழுதுகோல்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்தையும் என் மகன் ஆஸமிடம் கொடுத்துவிட வேண்டும். என் சவக்குழி வெட்டுவதற்கான கூலியை இளவரசர் ஆஸம் கொடுப்பார்.

4. ஒரு அடர்ந்த காட்டில் எனக்கான குழி தோண்டப்பட வேண்டும். என்னைப் புதைத்த பிறகு, என்னுடைய முகத்தைத் திறந்து வைக்க வேண்டும். என் முகத்தை மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டாம். திறந்த முகத்தோடு நான் அல்லாஹ்வை சந்திக்க விரும்புகிறேன். அவனுடைய உச்ச நீதிமன்றத்துக்கு திறந்த முகத்தோடு போகின்றவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

5. எனது க·பன் துணி தடித்த கதர்த்துணியால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.எனது உடலின் மீது விலையுயர்ந்த கம்பளம் எதையும் போர்த்த வேண்டாம். எனது சவஊர்வலம் செல்லும் வழியில் மலர்களைத் தூவவேண்டாம். என் உடல்மீதும் மலர்களை வைக்க யாரையும் அனுமதிக்கக் கூடாது. எந்த இசையும் இசைக்கவோ பாடவோ கூடாது.

6. எனக்காக கல்லறை எதுவும் கட்டக்கூடாது. வேண்டுமானால் ஒரு மேடை அமைத்துக்கொள்ளலாம்.

7. பல மாதங்களுக்கு என்னால் என் ராணுவ வீரர்களுக்கும் என் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கும் என்னால் சம்பளம் கொடுக்க முடியவில்லை. நான் இறந்தபிறகு, என்னுடைய தனிப்பட்ட வேலைக்காரர்களுக்காவது அவர்களுக்கான முழு சம்பளங்களும் கொடுக்கப்பட வேண்டும், ஏனெனில் கஜானா காலியாக இருக்கிறது. நிஅமத் அலீ எனக்கு மிகவும் நம்பிக்கையான ஊழியன். என் உடலை அவன்தான் சுத்தப்படுத்துவான். என் படுக்கை தூசியாக இருக்க அவன் அனுமதித்ததேயிலை.

8. என் நினைவாக எந்த கட்டிடமும் எழுப்பக் கூடாது. எனது கல்லறையில் என் பெயர் பொறிக்கப்பட்ட எந்தக் கல்லும் வைக்கக் கூடாது. கல்லறையில் அருகில் மரங்களை நடக்கூடாது. என்னைப் போன்ற ஒரு பாவிக்கு நிழல் தரும் மரங்களின் பாதுகாப்பைப் பெறுவதற்குத் தகுதியில்லை.

9. எனது மகன் ஆஸம் டெல்லியிலிருந்து ஆட்சி செய்வதற்கான அதிகாரம் பெற்றவனாகிறான். பிஜாபூர், கோல்கொண்டா ஆகிய மாகாணங்களை நிர்வகிக்கும் பொறுப்பு கம்பக்ஷிடம் விடப்பட வேண்டும்.

10. அல்லாஹ் யாரையும் சக்கரவர்த்தியாக்கக் கூடாது. சக்கரவர்த்தியாக இருப்பவன்தான் இந்த உலகிலேயே துரதிருஷ்டம் மிக்கவன். எந்த சமூக கூட்டங்களிலும் எனது பாவங்களை குறிப்பிடக்கூடாது. எனது வாழ்க்கையின் கதையை யாரிடமும் சொல்லக் கூடாது.

கி.பி. 1658-லிருந்து 1707-வரை இந்தியாவை ஏறத்தாழ அரை நூற்றாண்டு ஆண்ட ஆறாவது முகலாய மகா சக்கரவர்த்தியின் மரண விருப்பங்கள் இவை! அவருடைய விருப்பப்படியே சாதாரண செங்கற்களால் கட்டப்பட்ட அவரது கல்லறையை இன்றும் ஔரங்காபாத்-தில் காணலாம்.
மேற்கண்ட உயிலின் வாசகங்கள், நவம்பர் மாதம் 7-ம் தேதி, 1976-ம் ஆண்டு தேதியிடப்பட்ட '·பதஹ்' என்ற வார இதழில், எஸ். அஜ்மீர் சிங் என்பவரால் பிரசுரிக்கப்பட்ட ஒரு வரலாற்றுக் கட்டுரையிலிருந்து மொழிபெயர்த்துப் போடப்பட்டது.

தன் முகத்தை மண்ணுக்குள் புதைக்க வேண்டாம் என்றும் திறந்த முகத்தோடு இறைவனை சந்திப்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப் படுவதாகவும் ஒளரங்கஜேப் கூறியிருப்பது அவருடைய சொந்தக் கருத்தே! மனிதர்களை புதைக்கும் போது உடல் முழுவதும மண்ணுக்குள் சென்று விட வேண்டும் என்று தான் முகமது நபியின் வாக்கு உள்ளது. ஒளரங்கஜேப்புக்கு தவறான தகவலை இது விஷயத்தில் யாரும் தந்திருக்கலாம். இறைவனே மிக அறிந்தவன்.

தமிழகம் வரை தமது ஆட்சியை ஒளரங்கஜேப்்விரிவு படுத்தியிருந்தார். இவ்வளவு எளிமையாகவும் குர்ஆனின் போதனைப் படியும் தன் வாழ்க்கையை அமைத்துக் ் கொண்டவர் இந்து மக்களை கொடுமைப் படுத்தியிருப்பாரா? அப்படியே கொடுமை படுத்தியிருந்தாலும் அவை வரலாறுகளில் பதியப் பட்டிருக்குமே! மேலோட்டமாக சொல்லாமல் ஆதாரத்தோடு அதை வரலாற்றாசிரியர்கள் விளக்கி இருக்க வேண்டுமே! மேலும் மொகலாயர்களின் ஆட்சிக்கு முன் இந்தியாவை ஆண்டவர்களின் ஆட்சியை விட முஸ்லிம்களின் ஆட்சி நிம்மதியாக இருந்ததால்தான் 800 வருடம் இந்தியாவை அவர்களால்ஆள முடிந்தது.
ஒளரங்கஜேப் ஒரு விளக்கம்!

ஒளரங்க என்ற சொல்லிற்கு 'அரசு சிம்மாசனம்' என்று பொருள் வரும். 'ஜேப்' என்ற சொல்லுக்கு அழகு என்றும் பொருள். இவ்விரு பார்சிய சொல்லுக்கும் 'அழகிய அரசு சிம்மாசனம்' எனறு பொருள் வரும். ஆனால் 'ஒளரங்கஜேப்' என்று அழைப்பதற்கு பதிலாக 'ஒளரங்கசீப்' என்றே பலரும் கூறி வருகின்றனர் நமது நாட்டு பாடநூல்களிலும் ஒளரங்கசீப் என்றே இவர் பெயரை குறிப்பிடுகிறார்கள். ஒளரங்கஜேப்பின் பெயரையே மாற்றி அமைத்தவர்கள் அவரது வரலாற்றில் எந்த அளவு பொய்களை கலந்திருக்கிறார்கள் என்பதை ஆதாரத்தோடு திரு செ. திவான் எழுதிய Aurangazeb In The Light Of History எனும் நூலை பார்வையிடலாம்.

-தந்தையை சிறையில் தள்ளியவர்
-சகோதரர்களை கொன்று விட்டு சக்ரவர்த்தியானவர்
-இந்துக்களை வேலை நீக்கம் செய்தவர்
-சிவாஜியை அழிக்க முயன்றவர்
-இராஜபுத்திரர்களின் விரோதி
-சீக்கியர்களின் விரோதி
-மத வெறியர்

போன்ற பல குற்றச்சாட்டுகளும் கடைந்தெடுத்த பொய் என்பதை வரலாற்று நூல்களை ஆதாரமாகக் கொண்டு எழுதப் பட்டள்ளது.
பாடப் புத்தகங்களில் வரலாறுகளை எழுதும் வரலாற்றாசிரியர்கள் இனி மேலாவது வரலாறுகளில் உண்மையை எழுதட்டும். அது முடியாத காரியம் என்கிறீர்களா?

நம்பிக்கையில் தானே நம் வாழ்க்கை ஓடுகிறது.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்.

8 comments:

suvanappiriyan said...

ஒளரங்கஜேப் இந்து கோயில்களை இடித்தாரா?

1679 ல் அவருடைய ராணுவத்தில் 'மன்சூதார்கள் ' என்றழைக்கப்படும் உயர் ராணுவ அதிகாரிகளின் எண்ணிக்கை 575. அதாவது பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களுக்கு ஒரு மன்சூதார் என்ற கணக்கில் இருந்தனர். அதில் 182 பேர் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் (நிச்சயமாக இடதுசாரிகள் அல்ல). அதுபோன்று நம்பிக்கைக்குரிய அமைச்சர்களில் முக்கியமானவர்கள் ராஜா ஜெஸ்வத் சிங், ராஜா ஜெய்சிங் ராஜா அவ்ராத்சிங் ஹதா, பீஷம்சிங் கத்வானி ஆகியவர்கள்.
சுவாத்தி என்றரசன் மஹோலியைக் கைப்பற்றுவதற்காக படை எடுத்துச் சென்றபோது அதை காப்பாற்றுவதற்காக ராஜா மனோகர்தாஸ் என்ற மன்சூதார் தலைமையில் ஒரு படையை அனுப்பிவைத்தார் என்று வரலாறு கூறுகிறது.
திரு P. N. பாண்டே அவர்கள் அலகாபாத்தில் மேயராக இருந்தபோது கோயில் பற்றிய ஒரு பிரச்சினை வந்தது. ஒரு கோயிலுக்கு வழங்கப்பட்டுக்கொண்டிருந்த மானியம் நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் அதை மீண்டும் வழங்கக் கோரி அந்த கோயிலின் Trust வழக்குத் தொடர்ந்தது. அதற்கு ஆதாரமாக Royal Farman என்று சொல்லப்படும் அரசு ஆணை ஒன்றை முன் வைத்தது. அந்த அரசு ஆணை மன்னர் அவுரங்கசீப் அவர்களினால் பார்ஸி மொழியில் வழங்கப்பட்டிருந்தது.
மதவெறிப் பிடித்து கோயிலை இடிக்கும் மன்னன் ஒரு கோயிலுக்கு மானியம் எப்படி வழங்கமுடியும் ? அது பொய்யான ஆவணமாகத்தான் இருக்கமுடியும் என்று பாண்டே கருதினார். இருந்தாலும் அதை பரிசீலிக்கக் கருதி பாரஸீக மொழியிலிருக்கும் அரசு ஆணைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்துக்கொண்டிருந்த திரு ராஜா தேவ்பஹ்தூர் பர்மன் அவர்களிடம் கொடுத்து ஆராய்ந்தபோது அது உண்மையானதுதான் என்று ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. தவிர மேலும் ஆரய்ந்தபோது
மதுரா கோயில் உள்பட நானூறுக்கும் மேற்பட்ட கோயில்கள், குருதுவாராக்கள், ஜெய்ன மடங்களுக்கு மானியம் வழங்கி அவற்றின் பராமரிப்புக்கு உதவினார் என்பதும் தெரியவந்தது. இதை பற்றி பேராசிரியர் சதீஷ்சந்திரா தன்னுடைய ' 'Essays on Medieval India ' வில் இப்படி கூறுகிறார் :-
Not only did many old Hindu Temples continue to exist in different parts of the country, there is also documentary evidence of Aurangazeb 's renewal of land grants enjoyed by Hindu Temples at Madhura and elsewhere, and of his offering gifts to them. (such as to the Sikh Gurudwara at Dehra Dun, continuation of Madad-i-m 'aash grants to math of Nathpanthi yogis in Pargana Didwana, Sarkar Nagar to Ganesh Bharti...

கோயிலுக்கு மானியம் வழங்கும் மன்னன் காசி விஸ்வநாதர் ஆலயத்தைமட்டும் ஏன் இடிக்கவேண்டும் ? அதை இடித்து பொன்னும் பொருளையும் கொள்ளை அடித்தான் என்று வரலாற்றில் காணப்படவில்லை; இல்லை அணு ஆயுதம் chemical weapon அப்படி இப்படி என்று பொய்யை உலகிற்கு சொல்லி புஷ் மஹாராஜா ஈராக்கைத் தாக்கி அழித்ததைப் போல் அங்கு வைரங்களும் வைடூரியங்களும் நிறைந்துகிடக்கின்றன என்ற பேராசையில் கோயிலை இடித்தான் என்றும் வரலாறு இல்லை. பின் ஏன் இடிக்கவேண்டும் ? தலைமைப் பூசாரி திருவாளர் பண்டிட் மகந்த்ஜி கட்ச் ராணியை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்று பரமபதம் ஆடியது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. இதை பூசிமெழுகினால் எப்படி ? ஆனால் ஒரு திருத்தம், பூசாரி சாரின் செயலால் கோயிலின் தூய்மைக் கெட்டுவிட்டது எனவே அங்குள்ள விக்ரகத்தை எடுத்துவிட்டு வேறு இடத்தில் வைக்குமாறு ராஜாக்கள் humbly கேட்டுக்கொண்டதால் அந்த கோயிலை இடித்துவிட்டு இப்போதிருக்கும் இடத்தில் கோயில் கட்டிக்கொடுத்தார் என்பதுதான் வரலாற்று நிகழ்வு. ் இந்த தகவலை ஆராய்ந்துச் சொன்னவர் மிஸ்டர் பாண்டே
அவுரங்கசீப் ஆலயத்தை இடித்ததை நம்மால் ஜீரணிக்கமுடியவில்லை. ஆனால் பல கோயில்கள் இந்து மன்னர்களால் இடிக்கப்பட்டு சூரையாடப்பட்டுள்ளதே! அதை ஏன் நாம் கண்டுக்கொள்வதில்லை ? சாசங்கன் என்ற மன்னன் குப்த கோயில்களை இடித்துத்தள்ளியிருக்கிறான் என்பது வரலாற்று உண்மை; ஹர்ஷ்பேறு என்ற மன்னன் கோயில்களை இடித்து அங்குள்ள பொன்னும் பொருளைகளையும் கொள்ளையடிப்பதையே தொழிலாகக் கொண்டிருந்தான், அதற்கென்று தனிப்படை அமைத்து தனி மந்திரியும் அமைத்திருந்தான்; பார்மரா நாட்டு மன்னன் குஜராத்திலுள்ள சமணக்கோயில்களை இடித்து தள்ளியுள்ளான்; இப்படி பட்டியல் நீண்டுக்கொண்டு போகிறதே! ஏன் நம்ம காஞ்சி காமாட்சி அம்மன் கோயில்கூட சமணக் கோயிலாக இருந்ததாக வரலாறு கூறுகிறதே!!

suvanappiriyan said...

ஒளரங்கஜேப்புக்கு எதிரிகள் யார? யார்?

சீக்கியர்கள் தங்கள் மத நடவடிக்கைகள் தவிர அரசியலில் தீவிரம் காட்டிப் பேரரசருக்கு எதிராக ஆலோசனைகளும் ஆயுதங்களும் தந்து கிளர்ச்சிக்கு உதவிக்குக் காரணமான குருதேஜ பஹ்தூர் கொல்லப்பட்டார், எனவே சீக்கியர்கள் எதிரி.
மூடப்பழக்க வழக்கங்களைத் தடுக்கும்பொருட்டு ஜோதிடம் பார்த்தல், பஞ்சாங்கம் தயாரித்தல், குழந்தைத் திருமணம், உடன்கட்டை ஏறுதல் போன்ற வைகளுக்குத் தடை விதித்ததார். எனவே ராஜபுத்திரர்கள் எதிரி.
காட்டுமிராண்டிகளாக வாழ்ந்து பொது மக்களுக்கும் சமூகத்திற்கும் தொல்லை கொடுத்த 'சத்நாமிகள் ' என்ற கூட்டத்தாரை அழித்ததால் அந்த இனம் பாதுஷாவுக்கு பரம்பரை எதிரி.
மராட்டியர்களின் நாயகனாகக் கருதப்பட்ட சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்ததார். அவர் தந்திரமாகத் தப்பிச்சென்று அவுரங்கசீப்புக்கு எதிராக மராட்டிய மக்களிடம் பிரச்சாரம் செய்தகாரணத்தினால் மராட்டியர்கள் எதிரி.
ஷியா முஸ்லிம்கள் தங்கள் உடல் முழுவதும் அலகுகள் குத்திக்கொண்டும் சாட்டையால் தங்களை அடித்துக்கொண்டும், மார்பில் அடித்துக்கொண்டும் மொஹரம் பண்டிகையைக் கொண்டாடினர். அந்த பண்டிகை ஊர்வலத்திற்கு தடை விதித்ததால் ஷியா முஸ்லிம்கள் அவுரங்கசீப்புக்கு எதிரி. (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம் - கரைகண்டம் கி. நெடுஞ்செழியன்)
காசி விஸ்வநாதர் ஆலயத்தை இடித்ததோடு மட்டுமல்லாமல் இந்துக்கள் மீது ஜெஸ்யா வரியை விதித்து கொடுமைப் படுத்தியதினால் 340 ஆண்டுகளுக்குப் பின் ஆர். எஸ். எஸ், சங் பரிவார் இத்யாதி இத்யாதி எதிரி.
அவுரங்கசீப், தான் முடி சூட்டிய நாளிலிருந்து இறுதி நாள் வரை போராட்டங்களை சந்திக்க வேண்டியவராக இருந்தார். அவர் பதவி ஏற்றதும் இறந்ததும் போர்களத்தில். அவருக்கு எதிரான சதித் திட்டங்கள் பெரும்பாலும் மந்திர்களில் தீட்டப்பட்டன. எனவே அன்னை இந்திரா காந்தியின் பாணியில் Oparation Blue Star (ஆமிர்தசரஸ் பொற்கோயில்) நடத்தி எதிரிகளை ஒழிக்கவேண்டிதாகிவிட்டது. இத்தகைய அடக்குமுறைகளுக்கு இந்து மன்சூதார்களே அனுப்பப்பட்டனர். ஆனால் அதனால் சேதமடைந்த ஆலயங்களை அவுரங்கசீப் தன்னுடைய நேரடிப் பார்வையில் செப்பனிட்டதாக 'கிஸ்ஸா யே ஆலம்கீர் ' என்ற உர்து மொழி புத்தகத்தில் ஓம் ப்ரகாஷ்லால் சியால்கோட்டி எனவர் குறிப்பிட்டுள்ளார் (1909 ம் ஆண்டு லாகூர் பதிப்பு). மூல நூலான ஆலம்கீர் நாமா, ஈஸ்வர்தாஸ் நாகர் என்பவரால் பார்ஸி மொழியில் எழுதப்பட்டது.
'மனமது செம்மையானால் மந்திரம் தேவை இல்லை ' என்பார்கள். தெளிந்த அறிவும் பரந்த கண்ணோட்டமும் இருந்தால் உண்மை அதன் வடிவில் தெரியும். அவை இல்லாதவரை அவுரங்கசீப் அல்ல எல்லாமே மஞ்சளாகத்தான் தெரியும்.

ஒளரங்கஜேப்பைப் பற்றிய மேலதிக விபரங்களைத் தனி மெயிலில் தந்துதவிய நண்பர்க்கு நன்றிகள் பல.

suvanappiriyan said...

ஜிஸ்யா வரியைப் பற்றிய மேலும் சில தகவல்கள்!
பேரரசர் அக்பரால் நீக்கப்பட்ட ஜெஸ்யா வரியை மீண்டும் கொண்டுவந்து இந்துக்களை துன்புறுத்தினான் அவுரங்கசீப் - இது ஒரு குற்றச்சாட்டு. ஜெஸ்யா வரி என்றால் என்ன ? இஸ்லாமிய ஆட்சியில் பாதுகாப்புக் கொடுக்கவேண்டிய மாற்று சமயத்தவர்களை 'திம்மி 'கள் என்று அழைக்கப்பட்டனர். அத்தகையவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக ஒரு வரி போடப்பட்டது. அதற்கு ஜெஸ்யா வரி என்று பெயர்.
அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்தது 1658. ஜெஸ்யா வரி போடப்பட்டது ஆட்சிக்கு வந்து 22 வருடம் கழித்து அதாவது 1679 ல். அவர் ஆட்சிக்கு வந்தவுடனேயே 80 க்கும்மேற்பட்ட வரிகளை நீக்கியிருக்கிறார். அவைகளில் சில: கங்கையில் புனித நீராட போடப்பட்டிருந்த வரி நீக்கப் பட்டது; அஸ்தியை கங்கையில் கரைக்கப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; மீன், காய்கறி போன்ற உணவுப்பொருள்களுக்குப் போடப்பட்டிருந்த வரி நீக்கப்பட்டது; சாலை வரி, தொழில் வரி, ஆடுமாடு மேய்ச்சல் வரி, விற்பனை வரி போன்றவைகள் நீக்கப்பட்டன; தீபாவளியின்போது செய்யப்படும் தீப அலங்கார வரி, முஸ்லிம்களின் பராஅத் இரவு செய்யப்படும் தீப அலங்கார வரி நீக்கப்பட்டன; விதவைகள் மறுமண வரி நீக்கப்பட்டது இப்படி 80 வகையான வரிகள் நீக்கப்பட்டன.
இத்தனை வரிகளை நீக்கியவர் ஜஸ்யா வரியை ஏன் போடவேண்டும் ? இதை 'கரைகண்டம் கி. நெடுஞ்செழியன் ' சொல்வதை பார்ப்போம். 'அதுவும் அவர் ஆட்சிக்கு வந்து 22 ஆண்டுகளுக்குப் பிறகு கி.பி. 1679 ல் ஜெஸ்யா வரியை விதிக்க முடிவு செய்தார். அதே நேரத்தில் ஏழைகள், பெண்கள், குழந்தைகள், உடல் ஊனமுற்றோர், அரசு பணியில் உள்ளோர், வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்வோர் என எண்ணற்றோர் இந்த வரியிலிருந்து விலக்குப் பெற்றனர். மொத்தத்தில் இந்த வரியைச் செலுத்தியவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன ' '.
'இந்த வரி விதிப்பானது இஸ்லாமியர் அல்லாதோர் இஸ்லாமியராக மதம் மாறவேண்டும் என்ற நிர்பந்தத்திற்காகவோ, இஸ்லாத்தை இந்த வரிவிதிப்பின் மூலம் நாடு முழுவதும் பரப்பிவிடலாம் என்ற ஆசையினாலோ ஒளரங்கஜேப் இந்த வரிவிதிப்பை அமுல்படுத்தவில்லை. ஆனால் இந்த வரிவிதிப்பின் மூலம் அரசியல் ரீதியாகத் தன்னை எதிர்த்து கிளர்ச்சி செய்து வந்த தக்கான சுல்தான்களைத் திருப்தி படுத்திவிடலாம் என்று ஒளரங்கஜேப் ஒரு அரசியல் கணக்கைப் போட்டார் என்கிறார் பேராசிரியர் சதீஸ் சந்திரா. ' (முஸ்லிம் மன்னராட்சியில் இந்தியாவின் முன்னேற்றம்).
பொருளாதார சீர்திருத்தத்திற்காவே ஜெஸ்யா வரி விதிக்கப்பட்டதாகவும் 1705 ம் ஆண்டு இந்த வரியினை அவுரங்கசீப் அடியோடு நீக்கிவிட்டார் என்றும் இந்திய சரித்திரத்தில் மாற்றம் செய்து முஸ்லிம்களுக்கு எதிராக முதன் முதலில் எழுதிய சர் எலியட் என்ற ஆங்கிலேயே வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
இந்த வரி யாருக்கு எப்படி போடப்பட்டது ?
எல்லா செலவுகளும் போக ஆண்டொன்றுக்கு வருமானத்தில் ரூபாய் 52 மிஞ்சினால் அதற்கு வரி ரூ.3/4. ரூபாய் 250 மிஞ்சினால் வரி ரூ61/2. ரூபாய் 2500 மிஞ்சினால் வரி ரூ 13. அதற்குமேல் வரி இல்லை. இதை நடுத்தர வர்க்கமாக இருந்தால் இரண்டு தவணைகளிலும் சாதாரண வர்க்கமாக இருந்தால் மூன்று தவணைகளிலும் செலுத்தலாம்.
வரி விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:
ஆறு மாதங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்கு வரி இல்லை; உழவருக்கு வரி இல்லை; தச்சருக்கு வரி இல்லை; பொற்கொல்லருக்கு வரி இல்லை; கருமாருக்கு வரி இல்லை; கொத்தனாருக்கு வரி இல்லை; கூலி வேலை செய்பவருக்கு வரி இல்லை; அரசாங்க ஊழியருக்கு வரி இல்ல அவர் எந்த பதவியில் இருந்தாலும்; அர்ச்சகர், புரோகிதர், துறவிகள் இவர்களுக்கு வரி இல்லை. (அப்போதெல்லாம் டை கட்டிக்கொண்டு ஆபிஸிலும் பேங்கிலும் உத்தியோகம் பார்க்காத காலம்)
அப்படியானால் வரி வசூலித்தது எவ்வளவு ? ஒரு புள்ளி விபரம்:
1680-81 ம் ஆண்டில் பாதுஷாபூர் என்ற பட்டணத்தில் வாழ்ந்த மக்களின் முஸ்லிம் அல்லாதோர் எண்ணிக்கை 1855. அதில் வரி விலக்கு அளிக்கப்பட்டவர் களின் எண்ணிக்கை 1320. வரி அளித்தவர்கள் 535 பேர் மட்டுமே. வசூலிக்கப்பட்ட மொத்தத் தொகை ரூபாய் 2950.

suvanappiriyan said...

Thanks for your visit and comments Mr Asalamone.

Endrum Anbudan
suvanppiriyan

suvanappiriyan said...

அன்பு இணைய நண்பர்களுக்கு!

என்னுடைய உறவினர்கள் குடும்பத்தோடு மெக்கா புனித யாத்திரைக்கு சவூதி வந்திருந்ததால் அவர்களோடு இந்த ஒரு வாரம் சென்று விட்டது. எனவே இணையத்தின் பக்கம் வருவதற்கு நேரமில்லாமல் இருந்தது. விருந்தினர்கள் மெக்கா சென்று விட்டதனால் இனி வழக்கம் போல் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்வோம்.

சுவனப் பிரியன்.

ரிஷி (கடைசி பக்கம்) said...

ஹலோ சுவனப்பிரியன்!

முதலில் ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் நான் ஒரு முஸ்லீம் அல்ல!

நல்ல பதிவு. அந்த காலத்தில் ஒளரங்கசீப் எப்படி இருந்தார் என்பது பற்றி பல விதமான கருத்துக்கள் இருந்தாலும் நீங்கள் சொல்வதையும் மற்றவர்கள் சொல்வதையும் முழுவதையும் சரியா என்று சரிபார்க்க முடியாது!

ஆனால் நம் பாட புத்தகங்கள் முஸ்லீம் மன்னர்கள் மற்றும் முஸ்லீம்கள் பற்றியும் ஓரு தவறான பிம்பத்தை உருவாக்குகின்றன என்பதை மறுக்க முடியாது!
நானே அப்படி ஒரு தவறான பிம்பத்தை இளம் வயதில் கொண்டிருந்தவன்.

நிச்சயமாக இந்த விஷயம் எல்லோருடைய உள்ளத்திலும் முஸ்லீம் பற்றி ஒரு தவறான எண்ணத்தை தோற்றுவிக்கிறது. ( என் தாயாரும் அடக்கம்)

ஆனால் பிறகு எனக்கு ஏற்பட்ட சந்தர்பமும் வாய்ப்பும் புரிந்துகொள்ள உதவின!

எனவே இதுபோல ஒரு தனிப்பட்ட பர்சனாலிடி பற்றி debate நிறுத்திவிட்டு ஒட்டு மொத்தமாக attitude of the text books மாற்ற முயற்சி செய்யுங்கள்!
அதை பற்றி பதியவேண்டும்!
இந்த உலகம் எல்லோருக்கும்தான் என உரத்து கூறுங்கள்!

இதுவே என்னுடைய தாழ்மையான கருத்து!

suvanappiriyan said...

//இதுபோல ஒரு தனிப்பட்ட பர்சனாலிடி பற்றி debate நிறுத்திவிட்டு ஒட்டு மொத்தமாக attitude of the text books மாற்ற முயற்சி செய்யுங்கள்!
அதை பற்றி பதியவேண்டும்!
இந்த உலகம் எல்லோருக்கும்தான் என உரத்து கூறுங்கள்!//

Thanks to your comments Mr Kadaisi Pakkam

-Suvanappiriyan

suvanappiriyan said...

Thanks for your comments Mr Arokyam kettavan!