Followers

Thursday, July 31, 2008

கி.வீரமணி விவாதத்திற்க்கு ஒத்துக்கொள்வாரா?

கி.வீரமணி விவாதத்திற்க்கு ஒத்துக்கொள்வாரா?

போன வார உணர்வு இதழில் 'பகிரங்க விவாதத்திற்க்கு அழைப்பு' என்ற செய்தியைப் பார்த்தேன். அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் உள்ள ஒற்றுமையை சிலாகித்து உணர்வு வார இதழில் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தார்கள். இதை விமர்சிக்கப் புகுந்த 'உண்மை' இதழ் 'மதத்தையும் அறிவியலையும் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்' என்றும் 'குர்ஆனுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் உள்ள வேறுபாடுகளை தங்களால் பட்டியல் இட முடியும்' என்றும் குறிப்பிட்டிருந்தது.

இந்த சவாலை ஏற்றுக் கொண்ட பி.ஜெய்னுல்லாபுதீன் கி.வீரமணியை பகிரங்க விவாதத்துக்கு அழைத்துள்ளார். வீரமணியானாலும் ஜெய்னுல்லாபுதீன் ஆனாலும் இருவருமே வாதத் திறமை உள்ளவர்கள். இப்படி ஒரு பயனுள்ள விவாதம் நடைபெற்றால் தமிழுலகுக்கு பல உண்மைகள் தெரிய வரும். ஜெய்னுல்லாபுதீன் தரப்பு விவாதத்துக்கு தயார். வீரமணி தரப்பிலிருந்து என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்.

என்றும் அன்புடன்
சுவனப்பிரியன்

5 comments:

Anonymous said...

இவங்க பப்பூ இசுலாமியரிடம் வேகுமா என்ன?

எவனாவது தயிர்சாதம் மாட்டினால் செத்த பாம்பை அடிக்கற மாதிரி நாயடி பேயடி போடுவார்கள்!

suvanappiriyan said...

வாங்க அனானி!

தயிர் சாதம் புளியோதரை எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். தங்களை பகுத்தறிவாதிகள் என்று கூறிக் கொள்வோர் நடைமுறையில் எவ்வாறு உள்ளார்கள்? பெரியார் சிலைக்கு மாலை இடுவார்கள். அது சிலையாயிற்றே! அந்த சிலைக்கு விளங்குமா? என்றெல்லாம் இவர்கள் சிந்திப்பதில்லை. ஆனால் தங்களைத் தாங்களே பகுத்தறிவாதிகள் என்று கூறிக் கொள்வார்கள்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

உங்களின் பின்னூட்டம் என்ன காரணத்தினாலோ மறைந்து விட்டது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

அப்துல் குத்தூஸ் said...

மீண்டும் வருகைக்கு வாழ்த்துக்கள் சுவனப்பிரியன் அவர்களே.

நேரம் கிடைத்தால் இங்கு சென்று பாருங்கள்.

http://kuddusa35.blogspot.com/2008/08/1.html

http://kuddusa35.blogspot.com/2008/08/2.html

http://kuddusa35.blogspot.com/2008/08/3.html

suvanappiriyan said...

அப்துல் குத்தூஸ்!

கருத்துக்கு நன்றி. நீங்கள் அளித்த வலைப்பக்கங்களையும் பார்த்தேன். திரு வீரமணியிடம் இருந்து என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்.