Followers

Wednesday, January 07, 2009

பாலஸ்தீனம் தொடரும் துயரம்!




பாலஸ்தீனம் தொடரும் துயரம்!

பாலஸ்தீனத்தில் தினம் தினம் செத்து மடியும் பொது மக்களையும் சின்னஞ் சிறார்களையும் காணும் போது மனம் கனக்கிறது. அமெரிக்காவுக்கு பயந்து வெறும் பிரார்த்தனையோடு நிறுத்திக் கொள்ளும் அரபு நாடுகளைக் கண்டால் எரிச்சலே மேலோங்குகிறது. பாலஸ்தீனியர்கள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து ஓரணியில் சேராதவரை இவர்களின் வெற்றி வெறும் கானல் நீர்தான்.

இந்த வாரம் வெள்ளிக் கிழமையன்று மசூதியில் உரையாற்றிய இமாம்(தலைவர்) இஸ்ரேலின் அக்கிரமங்களை பட்டியலிட்டுக் கொண்டே வந்தவர் அதிகம் உணர்ச்சிவசப் பட்டதால் மயங்கி விழுந்து விட்டார். அந்த அளவு உணர்வுகளை வெளியிட்டது அங்கு வந்த சவுதிகளையே சிறிது நேரம் உணர்ச்சிவசப் பட வைத்து விட்டது. பாலஸ்தீனியர்களுக்காக பலரும் அள்ளி வழங்கினர். இந்த அரசால் கண்டித்து ஒரு வார்த்தை கூட சொல்ல முடியாமல் தர்ம சங்கடத்தில் உள்ளது வேதனையிலும் வேதனை.

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதை ஒவ்வொரு நாட்டிலும் நடந்தே வந்திருக்கிறது.

சத்தியம் வெல்லும். அது வரை இறைவனிடம் பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழியில்லை.

---------------------------------

சவுதி அரேபியாவில் ரத்ததான முகாம்கள்

சவுதி அரேபியாவில் தம்மாம் மற்றும் அல் கோபர் பகுதிகளில் ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

தம்மாம் சென்ட்ரல் மருத்துவமனையில் சனிக்கிழமை முதல் வியாழ்கிழமை வரை காலை 7.30 மணி முதல் மாலை 4.00 மணி வரையிலும், அல் கோபர் கிங் பஹத் மருத்துவமனையில் காலை எட்டு மணி முதல் மாலை 5.30 மணி வரையிலும் ரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இம்முகாமில் சேகரிக்கப்படும் ரத்தம் இஸ்ரேலிய தாக்குதலில் பாதிக்கப்பட்டு வரும் பாலஸ்தீன மக்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. உங்களது ரத்தம் பாலஸ்தீன உயிரைக் காப்பதற்குப் பயன்பட இம்முகாமில் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதுபோன்ற ரத்ததான முகாம்கள் வளைகுடாவின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்டு வருகிறது.

GAZA CITY: Israeli tanks opened fire yesterday on a school in the Gaza Strip where civilians had taken shelter, killing 43 of them and wounding dozens. Al-Fakhora School in Jabaliya was the third targeted by the Israeli military yesterday. Missile attacks on two other schools killed five more refugees.

On the 11th day of their war on Gaza, Israeli forces entered densely populated cities where Hamas fighters battled them street-by-street. Ezzedin Al-Qassam Brigades, the armed wing of Hamas, said its fighters attacked seven Israeli tanks in Al-Shijiaya, east of Gaza City, and killed 10 soldiers. Israel said it lost five soldiers, four of them in friendly fire. Four Hamas fighters were killed.
Israel’s attack on schools designated as shelters by the UN for civilians fleeing war, raised alarm among humanitarian and rights groups. A senior UN official in Gaza said 350 people had been sheltering at Al-Fakhora School and the United Nations regularly gave the Israeli Army exact geographical coordinates of its facilities to try to keep them safe from attack.

Asked by reporters about the deaths, Israeli Foreign Minister Tzipi Livni said she was “not familiar” with the incident. An Israeli Army spokeswoman said she was looking into information on the incident.

Medics in Gaza said the Israeli offensive has killed at least 660 Palestinians, including 215 children since the offensive began Dec. 27. Another 2,950 people have been wounded.

The Red Cross said that an ambulance post was hit during what it called the most terrifying night of violence yet in Gaza, while the UN reported half-a-dozen Palestinian medical workers dead amid a worsening humanitarian crisis. Israel’s Physicians for Human Rights (PHR) group said that medical teams rescuing the wounded in Gaza were being attacked by Israeli forces. “Testimonies reveal that the army is attacking medical teams that travel to rescue the wounded, including ambulances, doctors and medics in medical uniform,” PHR said in a statement, saying it had reports of 10 such cases.

The group said it had received a phone call from Gaza’s Al-Awda Hospital saying medics were unable to head out to evacuate people wounded in strikes. “We cannot get the ambulances out because we are being fired at.”

Another caller, from the Red Crescent in Gaza, said: “We can’t get ambulances out because as soon as they leave they are fired at from Apaches (assault helicopters).”
Three mobile clinics run by a Danish charitable organization were destroyed by the Israeli Army, an official said in Copenhagen. The Folkekirkens Noedhjaelp (DanChurchAid) clinics were bombarded Monday night despite being clearly marked, said the organization’s secretary-general, Henrik Stubkjaer, in a statement.
Stubkjaer said he was “deeply shocked” by the Israeli military action, which “is aiming directly at humanitarian targets and making all humanitarian work impossible.”
The UN Human Rights Council is expected to convene Friday in Geneva for a special session on the situation in Gaza, a European diplomat said. He said a formal request for the session would be put forward by representatives of the Non-Aligned Movement, the Organization of the Islamic Conference and African and Arab countries.
Under a draft resolution, the council would condemn the Israeli military assault on Gaza and demand that the country halt targeting civilians.

French President Nicolas Sarkozy headed back to Egypt yesterday for more talks with his Egyptian counterpart saying he saw a “glimmer of hope” in achieving a cease-fire in the Gaza Strip.
“Time is against us, we must find a solution and that is why I am heading back to Sharm El-Sheikh,” Sarkozy said after visiting French troops serving with the UN force in southern Lebanon.
“If each party waits for the other to make a move there will be tragedies, tragedies and more tragedies,” he warned, referring to Israeli strikes on the three UN-run schools.

A Hamas delegation was in Cairo to discuss an Egyptian-proposed cease-fire. The talks with the Palestinian delegation, headed by Emad Al-Alami and Mohammed Nasr from Hamas’ Syria-based political leadership, represent the first such contact since fighting began.

— With input from agencies - Arab News

8 comments:

suvanappiriyan said...

யாசிர் அராபத் ஒரு படிப்பினை!

மஹ்முத் அப்பாஸூக்கு முன் பாலஸ்தீனின் அதிபராக இருந்தவர் யாசிர் அராபத். ஒரு போராளியாக தன்னுடைய வாழ்க்கையை ஆரம்பித்தவர். பின் இஸ்ரேல் விரித்த வலையில் வீழ்ந்தார். பலஸ்தீன அதிகார சபை என்று இஸ்ரேலும் மேற்கத்திய நாடுகளும் கொடுத்த சில்லறை அதிகாரங்களால் திருப்தி கொண்டார்.

இஸ்ரேலின் கட்டளைகளுக்கு செவி சாய்த்து ஹமாஸ் மற்றும் பிற இயக்கங்களைச் சேர்ந்த போராளிகளை துன்புறுத்தினார். இஸ்ரேல் மேலும் மேலும் நெருக்கடிகளைக் கொடுத்த போது அதற்கு கட்டுப்பட மறுத்தார் அராபத். அவரின் ஆரம்ப கால வாழ்க்கை மீண்டும் அவரிடம் தென்பட்டது.

தங்களுக்கு இவர் இனியும் உபயோகப்பட மாட்டார் என்பதை புரிந்து கொண்ட இஸ்ரேல் ரமல்லாவில் உள்ள அவரது வீட்டிலேயே அவரை சிறை வைத்தது. அவரின் வீடும் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டது.

இறுதியாக 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாசிர் அராபத் மரணித்தார். அவரது மரணத்தின் முடிச்சுகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

காலம் முழுவதும் அவர்களுக்கு கட்டுப்பட்ட போதிலும் உபயோகப்பட மாட்டார்கள் என்று தெரிய வரும்போது அவர்களை அழிப்பதற்கு இஸ்ரேலின் அதிகாரிகள் கிஞ்சிற்றும் தயக்கம் காட்டுவதில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் யாசிர் அராபத்.

Anonymous said...

ஒரு தேவையான‌ விசயத்தை தொட்டிருக்கிறீர்கள் நண்பரே

பாலஸ்தீனத்திற்கு அரபு தேசங்கள் செய்த துரோகங்கள் கொஞ்சமல்ல. சௌதி மேலை நாடுகளுக்கு அச்சப்பட்டு வாய்மூடி இருக்கிறதா? உலகமெங்கும் ஜனநாயகம் குறித்து வாய்கிழிய வகுப்பெடுக்கும் அமெரிக்கா சௌதியில் அதுபற்றி மூச்சுகூட விடுவதில்லையே ஏன்? பெட்ரோடாலர்களின் முதலீடுகள் அமெரிக்காவில் மட்டுமே செய்யப்படுவதன் காரணம் என்ன?
பாலஸ்தீனில் அரபாத்தை பணியவைப்பதற்காக அமெரிக்காவால் வளர்க்கப்பட்டது தான் ஹமாஸ், ஆப்கானில் சோவியத் சமூக ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்காக அமெரிக்காவால் வளர்க்கப்பட்டது தான் தாலிபான், இன்னும் காஷ்மீர், பிலிப்பைன் என்று தேசியப்பிரச்சனைகளெல்லாம் மதப்பிரச்சனைகளாக குறுக்கப்படுவதன் அரசியல் என்ன? இவை எங்கிருந்து தொடங்குகின்றன? இவைகளை அராயாமல், இந்த அரசியலை புரிந்துகொள்ளாமல் பாலஸ்தீனின் தீர்வை நோக்கி நகரமுடியாது.

தோழமையுடன்
செங்கொடி

suvanappiriyan said...

நண்பர் செங்கொடி!

உலகில் நடக்கும் 90 சதமான தீவிரவாதங்கள் அனைத்தின் சூத்திரதாரி அமெரிக்கா என்பதில் நானும் உங்களோடு ஒத்துப் போகிறேன். யார் தாலி அறுந்தால் என்ன? என் மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும். ஆயுத வியாபாரமும் தனது ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளமும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் நிலைப்பாடே!

//உலகமெங்கும் ஜனநாயகம் குறித்து வாய்கிழிய வகுப்பெடுக்கும் அமெரிக்கா சௌதியில் அதுபற்றி மூச்சுகூட விடுவதில்லையே ஏன்? பெட்ரோடாலர்களின் முதலீடுகள் அமெரிக்காவில் மட்டுமே செய்யப்படுவதன் காரணம் என்ன?//

உங்கள் முதல் கேள்விக்கான பதில் உங்களின் இரண்டாவது கேள்வியிலேயே இருக்கிறது. எல்லாம் பெட்ரோல் படுத்தும்பாடு.

அடுத்து சவுதி அரேபிய மன்னராட்சியின் விமர்சனத்துக்கு வருகிறேன். உலகில் அது எந்த நாடாக இருந்தாலும் எந்த வகை ஆட்சியாக இருந்தாலும் மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும்.

நம் நாடு ஜனநாயக நாடு என்று பெருமைப்பட்டுக் கொள்கிறோம். சமீபத்தில் நான் தமிழகம் வந்த போது ஒரு இடம் வாங்கினேன். அதனை பத்திர பதிவு செய்யும் போது தாசில்தார், வில்லங்க சான்று, சார்பதிவாளர், என்று லஞ்சம் கொடுத்து அனைத்து வேலைகளையும் மன விருப்பமின்றி செய்ய வேண்டியதாயிற்று. அனைத்து அரசு அலுவலகமும் ஏறக்குறைய இதே நிலைதான். அதுவும் பப்ளிக்காக எல்லோர் முன்னிலையிலும் கூச்சமின்றி லஞ்சம் வாங்குகிறார்கள்.

மேலும் மன்னராட்சிக்கு நிகராக நேரு-இந்திரா-ராஜிவ்-சோனியா-ராகுல்-பிரியங்கா என்றும் எம்ஜிஆர்-ஜானகி-ஜெயலலிதா என்றும் தற்போது கருணாநிதி-ஸ்டாலின்-அழகிரி என்றும் மூப்பனார்-வாசன் என்றும் வாரிசுகள் கொடி கட்டிப் பறப்பதைப் பார்க்கிறோம். சவுதிக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம் தேர்ந்தெடுக்கும் முறையே! ரிசல்ட் என்னவோ ஒன்றுதான். அடுத்து ஒரு ஓட்டுக்கு இத்தனை ரூபாய் என்று ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப் படுவதையும் பார்க்கிறோம்.

கம்யூனிச நாடுகளிலும் எத்தனையோ மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளன. ஆப்கானிஸ்தான், கொசொவோ, செசன்யா என்று அங்கும் பட்டியல் நீள்கிறது.

எனவே கம்யூனிசமோ, முதலாளித்துவமோ, மன்னராட்சியோ அல்லது இஸ்லாமிய குடியரசோ எதுவாகவும் இருந்து விட்டுப் போகட்டும். மக்கள் சுபிட்சமாக இருக்க வேண்டும். அதுதான் நமக்கு வேண்டியது.

அடுத்து டாலரிலிருந்து யூரோவுக்கு மாற பல அரபு நாடுகளும் முயற்ச்சித்து வருகின்றன. அது நடந்தால் மகிழ்ச்சியே!

//இவை எங்கிருந்து தொடங்குகின்றன? இவைகளை அராயாமல், இந்த அரசியலை புரிந்துகொள்ளாமல் பாலஸ்தீனின் தீர்வை நோக்கி நகரமுடியாது.//

பாலஸ்தீன் பிரச்னையில் அமெரிக்கா மூக்கை நுழைக்காமல் ஒதுங்கி இருக்கட்டும். பாலஸ்தீன் பிரச்னை ஒரு நாளில் முடிந்து விடும்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

Qunoot prayers reflect Saudi anger over aggression
Khaled Al-Awadh | Arab News

BURAIDAH: With Israeli warplanes, warships and ground troops pounding unarmed civilians in Gaza for the second consecutive week, Muslims in Saudi Arabia expressed their anger and dissatisfaction over the unacceptable situation in Gaza by performing Qunoot prayers almost daily in all mosques of the Kingdom.

“Oh God! Support our Muslim brothers in Gaza. Make their hearts and feet firm. Support them over those who show animosity to them. Destroy their enemies and shake the earth beneath their feet” are the words of this special prayer.

This kind of prayer is a prophetic tradition, or Sunnah, performed at times of hardship, difficulties and wars such as the one taking place against Muslim civilians in Gaza.

Today, the second Friday since the start of the Israeli aggression against Gaza, has been declared as Gaza Day of Anger by the League of Muslim Scholars. Friday sermons and Qunoot prayers are expected to focus on the calamity of the Palestinians in Gaza. The League of Muslim Scholars includes prominent Islamic intellectuals like Shaikh Yousef Al-Qaradawi and Shaikh Salman bin Fahad Al-Odah.

There is a big difference between demonstrations, as it is known in the world, and the Islamic concept of protest known as Qunoot, said Abdulkareem Saji Al-Harbi, an educational supervisor from Qassim.

“This Islamic concept of protest, which is unknown yet to the world, is a spiritual support to Muslim Gazans facing oppression and calamities,” said Al-Harbi adding that it is by far better than public protests. “It is the most civilized and organized kind of protest where you cannot find anarchy or destruction of public properties as you may see in various demonstrations and protests around the world,” Saad Abdulmajeed Al-Ghamdi, a Saudi writer from Jubail, told Arab News yesterday.

Al-Ghamdi added that this Islamic kind of protest shares some of the objectives of demonstrations known to the world such as showing solidarity, support and unity.

Islam leaves it open to Muslims to choose the best possible kind of protest against their enemies as long as the rules of Islam are observed, said the well-known religious scholar Shaikh Salman Fahad Al-Odah.

“It is okay for Muslims to demonstrate and protest in a peaceful manner to show solidarity with their brothers in Gaza as per the rules of every country,” he said.

Al-Odah, however, said that demonstrations should be prevented if they inflict damage, anarchy or wrongdoing. Qunoot is a kind of silent protest, said Fahad Al-Roomi, another Saudi citizen from Riyadh.

suvanappiriyan said...

மன்சூரா அபு அம்ரா அமைதியாக தன் வீட்டினிலே உறங்கிக் கொண்டிருந்த 18-வயது இளம் பெண்- மருத்துவமனை கட்டிலில் உடலெங்கும் காயங்களுடன் கை, கால்கள் முறிந்த நிலையில் கிடத்தப்பட்டிருக்கிறாள். அவளுடைய 17-வயது சகோதரன் எஹியா உயிரற்ற பிணமாக கட்டிட இடிபாடுகளுக்கிடையிலிருந்து கண்டெடுக்கப்பட்டான்.

உம்மு மஹ்மூது தஸ்பி 47 வயதான தாய்-தன் குழந்தையுடன் இரவு முழுவதும் வெட்ட வெளியில், கொட்டும் மழையில் தவித்து நின்றாள். காலையில் தன் வீடு முழுவதும் சிதறிக் கிடந்த சன்னல் கண்ணாடித் துண்டுகளை பெருக்கித் தள்ளுகிறாள்.

உரூத்- பள்ளி மாணவி குப்பைக் குவியலாய் கிடக்கும் தன் வீட்டின் இடிபாடுகளில் தன் புத்தகப்பையைத் தேடிக்கொண்டிருக்கிறாள்.

டிசம்பர் மாதத்தின் பனிக்கால பண்டிகை கொண்டாட்டங்களில் உலகமே திளைத்திருக்கிறது. ஹகிறிஸ்துமஸ் தாத்தா|-வின் பரிசு மழை தேவலோகத் திலிருந்து பொழியாதா என உலக மக்கள் ஆர்வத்துடன் வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறனர். ஆனால், பாலஸ்தீனக் குழந்தைகள் எந்த நேரம் வானத்திலிருந்து போர் விமானங்கள் அள்ளி இறைக்கும் குண்டுகள் வந்து தம் வீட்டை சாம்பல் மேடாக்கு மோ என்ற அச்சத்துடன், இரவு முழுவதும் அந்த கறுப்பு வானத்தை கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அமெரிக்க ஏவல் நாய் இஸ்ரேல் டிசம்பர் 28ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா நகரை போர் விமானங்கள், ஏவுகனைகள் மூலம் தாக்கத் தொடங்கிவிட்டது. கடந்த ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட 1000 இலக்குகளை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கியுள்ளன. அதி நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய ஹெலிகாப்டர்கள், உளவு விமானங்கள் ஆகியவற்றின் உதவியுடன், மிகத் துல்லியமாக இலக்குகளை தாக்கும் ஜி.பி.எஸ். வசதி படைத்த விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன.

இஸ்ரேலின் இந்த பயங்கரவாத தாக்குதல்களில் 500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான அப்பாவிகள் படுகாயமடைந்துள்ளனர். குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள், என்ற பாரபட்சமின்றி, இரவிலே வீட்டிற்குள் உறங்கிக் கொண்டிருந்த மக்கள் தாக்கப்பட்டுள்ளனர். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமெனில் வீட்டைவிட்டு ஓடவேண்டும். இல்லையெனில் வீட்டோடு சமாதியாக்கப்படுவார்கள் என்ற நிலையில் காசா நகர மக்கள், எந்த நேரத்தில் ஏவுகனை தன் வீட்டின் மீது பாயுமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். தங்கள் வீட்டை விட்டு வெளியேறினால் மாற்று இடமும் இல்லை என்பதால் வெளியேறவும் முடியாத நிலை.

ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான நிஸார் ரய்யான் ஜபாலியா அகதிகள் முகாமில் தங்கியிருந்தார். புத்தாண்டு தினத்தன்று அவருடைய குடியிருப்பையும் திட்டமிட்டு தாக்கின. இஸ்ரேல் ஏவுகனைகள். இதில் ரய்யான் தன் மனைவி, குழந்தைகளோடு கொல்லப்பட்டார். காசா நகரின் பாராளுமன்ற கட்டிடம், இராணுவ நிலைகள், போலிஸ் நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளன. காசா நகருக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வழிகள் முழுவதும் தகர்க்கப்பட்டுள்ளன. இஸ்ரேலின் கேடுகெட்ட இனப்படுகொலையை தட்டிக்கேட்க ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு ஆண்மையில்லை. இஸ்ரேலின் தாக்குதல் குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹஹஅனைத்து விதமான வன்முறைகளையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்|| என அறிவுரை கூறியுள்ளது. இந்த அறிக்கை-பாலஸ்தீன குழந்தைகள் பயிலும் கல்விக் கூடங்களின் மீது விழும் ஏவுகனைகளை தடுத்து நிறுத்துமா?

காசா நகரில் வருங்கால பாலஸ்தீன சந்ததிகளே இல்லாதொழிந்திடும் ஈனச் சதியில் இஸ்ரேல் இறங் கியுள்ளது. இளம் குழந்தைகள் பயிலும் நர்சரிகள், பள்ளி கள் மேல் குண்டுகள் வீசப்படுவது அங்கே மிகவும் சகஜம். இது குறித்து ஹஹமனித உரிமை|| முழக்கமிடும் அமெரிக்காவோ அதன் துதிபாடிகளான மேற்கத்திய நாடுகளோ ய+னிசெப் நிறுவனமோ இதுவரை வாய் திறந்ததில்லை. காசா நகர குழந்தைகள் உலகின் மற்ற குழந்தைகள் பெற்றுள்ள ஹஹவாழும் உரிமை|| இல்லாதவர்களாகவே உள்ளனர். காசா நகர குழந்தைகள் பிறக்கும்போதே ஹஹமரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளாக|| பிறக்கின்றனர். என்றைக்கு மரண தண்டனையை இஸ்ரேல் நிறை வேற்றுமோ? என ஏவுகனைத் தாக்குதலை எதிர்பார்த்தே வாழ்கின்றனர், வளர்கின்றனர்.

இவர்களுக்கு மற்ற பிள்ளைகளைப் போல என்ஜினியர் ஆகவேண்டும், டாக்டர் ஆக வேண்டும், பெரிய விஞ்ஞானியாக வேண்டும் என்ற கனவுகளெல்லாம் கிடையாது உயிரோடு வாழவேண்டும் என்பதுதான் மிகப் பெரிய ஆசை! ஈத் பெருநாளிலே தனக்கு அப்பா நல்ல சட்டை எடுத்துக் கொடுக்க வேண்டும்,, பரிசுப் பொருள் வாங்கித் தரவேண்டும் என பாலஸ்தீனக் குழந்தை ஆசைப்படுவதில்லை அந்த பெருநாளிலாவது நம் மேல் ஏவுகணைகள் பாயாமல் இருக்க வேண்டுமே என்றுதான் பிரார்த்திக்கின்றது.

இஸ்ரேலின் தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக் கிறது. வருகின்ற பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி அங்கே வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தங்களின் வெற்றியை உறுதி செய்யும் முயற்சியில் முக்கிய அரசியல் வாதிகள் ஒன்று கூடி முடிவெடுத்தது தான் இப்போது நடந்து கொண்டிருக்கு காசா நகரத்தின் மீதான தாக்குதல் என சொல்லப்படுகிறது. கதிமா கட்சியின் தலைவியும், இஸ்ரேல் வெளிவிவகாரத் துறை அமைச்சருமான டிசிப்பி லிவினி மற்றும் லேபர் கட்சியின் தலைவரும், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சருமான எஹ{த் பராக் ஆகிய இருவரின் தேர்தல் சதித்திட்டம் தான் இந்த தாக்குதல். ஊழல் புகாரில் சிக்கியுள்ள இஸ் ரேல் பிரதமர் எஹ{த் ஒல்மர்ட் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இஸ்ரேல் மக்கள் மத்தியில் தன் செல் வாக்கை வளர்த்துக் கொள்ள வேண்டி இத் தாக்குதலுக்கு அனுமதி அளித்துள்ளார். ஒவ்வொரு தேர்தல் காலத்திலும் இஸ்ரேலை ஆளும் அரசியல்வாதிகள் பாலஸ்தீனத்தை தாக்கி அழித்து தங்களின் தேச பக்தியை தம் நாட்டு மக்களிடம் நிரூபிப்பது வழக்கம். இம்முறை நடக்கும், தாக்குதலும் இந்த ஈனத்தனமான அரசியல் வாதிகளின் செய்கைதான் என சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

தன் ஏவல் நாய் இஸ்ரேல் நடத்தும் இந்த கொடூரமான, நியாயமற்ற, காட்டு மிராண்டி தாக்குதலை அமெரிக்கா வெளிப்படையாக ஆதரித்து அறிக்கை வெளி யிட்டுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினர் ஏவுகனைத் தாக்குதல் நடத்தியதன் பதிலடியாகவே இஸ்ரேல் தாக்கியுள்ளதாகவும், இது மிகவும் நியாயமான தாக்குதல்தான் எனவும் சாவு வியாபாரி, சர்வதேச பயங்கரவாதி ஜார்ஜ் புஷ் ஊளையிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாரக் ஒபாமா இத்தாக்குதல் பற்றி இதுவரை வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார். ஈராக் மீதான போர், இஸ்ரேலுக்கு அளவுக்கு மீறிய சலுகைகள் என பல்வேறு நடவடிக்கைகளால், அரபு நாடுகளில் ஜார்ஜ் புஷ் தன் செல்வாக்கை தொலைத்து விட்டார்.

புதிதாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள பாரக் ஒபாமா இதிலிருந்து மாறுபட்டிருப்பார் என அரபு நாடுகள் நம்பிக்கை கொண்டிருந்தன. ஹஹஇந்த நேரத்தில் ஒபாமாவின் மௌனம் அவர் இஸ்ரேலின் நடவடிக்கைகளை அங்கீகரிப்பதாக அர்த்தமளிக்கும்|| என்கிறார் ஹகான்ப் பிளிக்ட்ஸ் போரம்| என்ற அமைப்பைச் சேர்ந்த பால் வுட்வேர்ட். இவருடைய இந்த அமைப்பு ஹமாஸ் போன்ற இஸ்லாமிய அமைப்பு களைப் பற்றிய மேற்கத்திய நாடுகளின் தவறான கணிப்பை மாற்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பாகும். கெய்ரோ பல்கலைக் கழகத்தைச் சார்ந்த முஸ்தபா அல் சயீத் கூறுகையில் ஹஹஒபாமாவைச் சுற்றி உள்ள நபர்கள் இஸ்ரேலுக்கு மிக நெருக்கமான நண்பர்கள் என்பதால் எந்த நிலையிலும் அவர்கள் இஸ்ரேலின் கருத்துக்கு மாற்று சொல்ல துணிய மாட் டார்கள்|| எனக் கூறுகிறார். தற்போது பாரக் ஒபாமா தன் வெளி விவகார கொள்கையை தீர்மானிக்கும் குழுவில் ஹிலாரி கிளின்டனை அமைச்சராகவும், ராஹ்ம் இம்மானுவேலை முதன்மை செயலாளராகவும் தெரிவு செய்திருப்பதை சுட்டிக் காட்டியே இதைக் கூறுகிறார்.

வெள்ளை மாளிகையின் அரியணையின் யார்வந்து அமர்ந்தாலும், பிணம் தின்னி இஸ்ரேலை தன் செல்ல நாயாக வைத்திருப்பார்கள். இந்த ஏவல் நாய் பாலஸ்தீன மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையாம் பிஞ்சுக் குழந்தைகளின் குரல் வளைகளை கடித்து ரத்தம் குடிப்பதை கண்டு மகிழ்ந்திருப்பார்கள். அமெரிக்காவின் ஆதிக்கத்தில் ஐ.நா. சபையும் வெறும் அறிக்கைகளும், அறிவுரைகளும் மட்டுமே வெளியிட்டு தன் கடமையை முடித்துக்கொள்ளும் வீரம் விளைந்த பாலஸ்தீன மண்ணின் மைந்தர்கள் தம் வேறுபாடுகளை புறம்தள்ளி ஒன்றுபட்டு எழுந்து நின்றால் உலகமே அவர்களின் பின்னால் நிற்கும். சர்வதேச பயங்கரவாதி அமெரிக்காவிற்கும் அதன் அடியாட்களுக்கும் முடிவு கட்டும் பயங்கரவாதம்-மனித குல நாகரிகத்துக்கு எதிரானது. பயங்கரவாதத்தை எதிர்த்து மனித நேய போராட்டத்தில் நாமும் கரம் இணைப்போம். பாலஸ்தீனம் காக்க குரல் கொடுப்போம். ஒரு நாடும், இனமும் அழியாமல் காப்போம். பாலஸ்தீன பாலகர்களின் உயிர் காப்போம்.

-வழக்கறிஞர் வெ. ஜீவகிரிதரன்

suvanappiriyan said...

ஐ.நா.மன்றத்தின் போர்நிறுத்த தீர்மானம் வந்தும் காசாவில் மோதல்கள் நீடிக்கின்றன.

இஸ்ரேலிய போர் விமானங்கள் மற்றும் தாக்குதல் ஹெலிகாப்டர்கள் காசா பகுதியில் தமது இலக்குகள் மீதான தாக்குதல்களை வெள்ளியன்றும் தொடர்ந்தன.

உடனடியான மற்றும் நீடிக்கத்தக்க போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மன்ற பாதுகாப்பு சபையின் தீர்மானம் வியாழன் இரவு வந்திருந்த நிலையிலும் தாக்குதல்கள் தொடர்ந்தன.

இஸ்லாமியவாத இயக்கமான ஹமாஸ் காசா பகுதியிலிருந்து தெற்கு இஸ்ரேலுக்குள் ராக்கெட் தாக்குதல்களை தொடர்ந்தது.

ராணுவதாக்குதல்கள் தொடரும் என்று இஸ்ரேலிய பிரதமர் எஹுட் ஓல்மர்ட் அவர்கள் கூறியுள்ளார்.

போர்நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான ஐ.நா. மன்ற தீர்மானத்தை "செயற்படுத்தமுடியாத ஒன்று" என்று கூறிய அவர், "கொலைகார பாலஸ்தீன இயக்கங்கள்" அந்த ஒப்பந்தத்தை மதித்து நடக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

ஐ.நா. மன்ற தீர்மானத்தை ஹமாஸ் இயக்கமும் புறந்தள்ளியது.

காசாவில் இஸ்ரேலிய சிப்பாய்களின் செயல் போர்க்குற்றத்தின் குணாம்சங்களைத் தாங்கி நிற்கிறது: ஐ.நா.

காசாவில் இஸ்ரேலிய சிப்பாய்கள் சப்பந்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஒரு சம்பவம் போர்க்குற்றத்தின் அனைத்து கூறுகளையும் தாங்கிநிற்கிறது என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான தலைமை ஆணையர் நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.

காசா நகரின் ஜெய்தூண் பகுதிக்கு கடந்த நான்கு தினங்களாக அம்புலன்ஸ் வண்டிகளை செல்ல இஸ்ரேலிய இராணுவ அனுமதிக்கவில்லை என்று வியாழனன்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட அறிக்கை குறித்து அவர் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளார்.

அதன் பின்னர் செஞ்சிலுவைச் சங்கம் உயிர்தப்பிய பலரை அங்கு கண்டுள்ளது. அவர்களில் உயிரிழந்த தாயின் உடலருகே கண்டெடுக்கப்பட்ட நான்கு குழந்தைகளும் அடங்குவார்கள்.

காயமடைந்தவர்களை காப்பாற்றி அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்க வேண்டிய பொறுப்பு இஸ்ரேலுக்கு இருக்கிறது என்று நவநீதம்பிள்ளை கூறியுள்ளார்.

ஹமாஸ் அமைப்பினால் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதலையும் அவர் கண்டித்துள்ளார். BBC.Tamil.com. 10/01/20098

suvanappiriyan said...

இஸ்ரேல் பள்ளிக் கூடம் மீது நடத்திய தாக்குதல்களில் 40 பேர் பலி


காசா நிலப்பகுதியில் இருக்கும் ஐநா மன்றத்தின் பள்ளிக்கூடம் மீது இஸ்ரேலின் விமானப்படையினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.

காசாவின் வடக்கே இருக்கும் ஜபல்யா என்கிற இடத்தில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடங்கிய 11 வது நாளில் இது நடந்துள்ளது.

காசாவில் நிலவும் தற்போதைய சூழல் மிகபெரிய மனித நேய நெருக்கடியாக உருவாகியிருப்பதாக சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் தெரிவித்திருக்கிறது.

காசா பகுதியில் இஸ்ரேலின் நிலத்தாக்குதல் தொடரும் பின்னணியில் பேசிய செஞ்சுலுவைச் சங்கத்தின் சார்பில் பேசவல்ல மூத்த அதிகாரி ஒருவர், காசாவில் வாழும் மக்களின் வாழ்க்கை என்பது சகித்துக்கொள்ளமுடியாத ஒன்றாக மாறியிருப்பதாக தெரிவித்தார்.

அங்குள்ள பொதுமக்களைக் காப்பாற்ற மேலதிக நடவடிக்கைகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.

இந்த தாக்குதல்கள் ஆரம்பித்ததில் இருந்து இதுவரை 560 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசா பகுதியில் இருக்கும் பொதுமக்களில் பலர் குடிநீர் மற்றும் எரிவாயு இன்றி தவிப்பதாகவும் பலர் பசியுடன் வாழ்வதாகவும், அவர்களுக்கு மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை என்றும் அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

காசா நிலப்பகுதி மோதல்கள் தொடரும் பின்னணியில் இந்த வன்முறை மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ராஜீயத்துறை முயற்சிகளும் வேகம் பிடித்து வருகின்றன.

காசாவில் நடக்கும் இஸ்ரேலிய தாக்குதல்களை நிறுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஹமாஸ் அமைப்பிடம் வலியுறுத்தும்படி சிரிய அதிபர் பஷர் அல் அசாத் அவர்களிடம் தாம் வலியுறுத்தியதாக பிரஞ்ச் அதிபர் நிகோலஸ் சர்கோசி அவர்கள் தெரிவித்தார். டமாஸ்கஸில் நடந்த பேச்சுக்களின் முடிவில் இதை அவர் கூறினார்.

சிரியா ஹமாஸ் அமைப்பின் முக்கிய ஆதரவாளராக பார்க்கப்படுகிறது.

BBC.Tamil.com. 07-01-2009


--------------------------------------------------------------------------------

suvanappiriyan said...

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

துன்பங்களையும், இழப்புகளையும் சகித்துக் கொண்டால் அதற்கான கூலி சுவனமாகும்.
இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவ்வப்போது சோதனைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. சில நேரங்களில் அவர்களின் குழந்தைகளின் மீது வருகின்றது. சில நேரங்களில் அவர்களது செல்வம் அழிந்துவிடுகின்றது.(அவன் அந்த எல்லாச் சோதனைகளிலும் பொருமை மேற்க்கொள்கிறான். இவ்விதம் அவனது உள்ளம் தூய்மைப்படுத்தப்பட்ட வண்ணமிருக்கின்றது. தீமைகளை விட்டு விலகிய வண்ணமிருக்கின்றது.) இறுதியில் அல்லாஹ்வை சந்திக்கும் போது அவனது வினைப்பட்டியலில் பாவமேதும் இல்லாத நிலையில் அவன் சந்திக்கின்றான்'. என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள் அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி) நூல்: (திர்மிதி)



உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. ''அல்லாஹ்வின் உதவி எப்போது?'' என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. திருக்குர்ஆனின் உபதேசம் 2:214.


நம்பிக்கை கொண்டோரே! சகித்துக் கொள்ளுங்கள்! சகிப்புத் தன்மையில் (மற்றவர்களை) மிகைத்து விடுங்கள்! உறுதியாக நில்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! வெற்றி பெறுவீர்கள்.
- 3:200