Followers

Tuesday, September 15, 2009

போலி டோண்டுவால் நானும் பாதிக்கப்பட்டேன்!

மறந்திருந்த போலி விவகாரம் மோகன் கந்தசாமியின் பதிவால் திரும்பவும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதே மூர்த்தி என்னோடு விளையாண்டதையும் சற்று அசை போடுவோமா?

'இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்' என்ற என் பதிவில் தமிழ் மணத்தின் நிர்வாகிகளில் ஒருவரான காசி ஆறுமுகத்தின் பேரில் 'பதிவுக்குப் பாராட்டுகள்' என்று பின்னூட்டியிருந்தார் மூர்த்தி. நம்மை பாராட்டி காசி எழுதியிருக்கிறார் என்று நானும் சந்தோஷப்பட்டேன். எனக்கு அப்போது போலி விவகாரம் எல்லாம் அந்த அளவு தெரியாது. அந்த பதிவிலேயே டோண்டு ராகவன் 'உங்களை போலி டோண்டு நன்றாக காசியின் பெயரில் ஏமாற்றியிருக்கிறார்' என்று பின்னூட்டியிருந்தார். நான் எழுதுவது பிடிக்காமல் டோண்டு என்னைக் குழப்புகிறாரோ என்று நினைத்து விட்டேன். திடீரென்று ஒரு நாள் என் பதிவுகள் தமிழ் மணத்திலிருந்து நீக்கப்படுகிறது. பிறகு தான் தமிழ் மணத்தின் எச்சரிக்கை கடிதமும் எனக்கு கிடைக்கப் பெற்றது. தாமதமாக நான் அந்த கடிதத்தை பார்க்க நேர்ந்தது என்பதை உணர்ந்து கொண்ட தமிழ் மண நிர்வாகம் பிறகு என்னை திரும்பவும் சேர்த்துக் கொண்டது. அந்த போலியின் பின்னூட்டத்தையும் அழித்து விட்டேன். அப்பொழுதுதான் போலி டோண்டுவின் திருவிளையாடல்கள் மற்றவர்களை எந்த அளவு பாதிக்கும் என்று தெரிந்து கொண்டேன்.

அடுத்ததாக டோண்டுவின் பதிவில் சென்று சில பின்னூட்டங்களை இட்டேன். வந்தது வினை. 'ஏண்டா...சல்மா அய்யுப் என்ற பெயரில் உன் மதத்தை கிழி கிழி என்று கிழித்தானே! அவன் உனக்கு டோண்டு சாரா! இனிமேல் அவனுக்கு பின்னூட்டமிட்டால் இதை விட மோசமாக உன் பதிவில் பின்னூட்டமிடுவேன்' என்று மிரட்டினார். இதற்காக நாம் நம் கருத்தை சொல்லாமல் இருக்க முடியுமா என்று தொடர்ந்து அவருக்கு பின்னூட்டம் இட்டேன். சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் என் தாத்தாவை அழைக்க வரும் போது டோண்டு ராகவனையும் சந்தித்தேன். இது சம்பந்தமாக நானும் அவரும் தனித் தனி பதிவாகவே போட்டுள்ளோம். இது மூர்த்தியை மேலும் எரிச்சல் படுத்தியது. தொடர்ந்து என் பதிவுகளில் என்னையும் என் குடும்பத்தையும் பற்றி எவ்வளவு தரக்குறைவாக எழுத முடியுமோ அந்த அளவு தரக்குறைவாக எழுத ஆரம்பித்தார். அனைத்து பின்னூட்டங்களும் 'டூண்டு' என்ற பெயரில் வரும். படித்தவர்களில் இவ்வளவு தரக் குறைவாகக் கூட எழுத முடியுமா என்று நான் ஆச்சரியப்படுவதுண்டு. அனைத்தையும் படித்து விட்டு 'இறைவன் அவருக்கு நல்ல புத்தியைக் கொடுக்கட்டும்' என்று அழித்து விடுவேன்.

டோண்டு ராகவன் அவர்களோடு எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. சாதியை உயர்த்திப் பிடிப்பதிவிருந்து பல விஷயங்களில் அவரோடு மாறுபடுகிறேன். இதனால் அவரை நான் வெறுக்க வேண்டுமா? அடுத்து 'நீ இவருக்கு பின்னூட்டம் இடக் கூடாது' என்று எந்த உரிமையில் மூர்த்தி எனக்கு கட்டளையிடுகிறார். இது தனி மனிதனின் உரிமையில் தலையிடுவதல்லவா? இதை ஏன் மெத்த படித்த மூர்த்தியும் அவரது நண்பர்களும் உணரவில்லை?

போலி டோண்டுவிடம் சாதி எதிர்ப்பு என்ற நல்ல எண்ணம் இருந்தாலும் அந்த எதிர்ப்பை காட்டிய விதம்தான் பலரையும் எரிச்சல்படுத்தியது. பலரை எதிரிகளாகவும் ஆக்கியது.

சில காலத்துக்குப் பிறகு நம் வாழ்க்கையில் இணையத்தில் இது போன்ற நிகழ்வுகளெல்லாம் நிகழ்ந்துள்ளது என்பதை நினைவூட்டிக் கொள்வதற்காகவே இந்த பதிவு.

'இன்னா செய்தாரே ஒறுத்தல்-அவர்நாண
நண்ணயம் செய்து விடல்.'

6 comments:

Anonymous said...

போலி டோண்டுவிடம் சாதி எதிர்ப்பு என்ற நல்ல எண்ணம் இருந்தாலும்//

சாதி எதிர்ப்பல்ல!. ஒரு குறிப்பிட்ட ஜாதியை மட்டுமே எதிர்பது. இது எப்படி நல்ல எண்ணமாகும்.

கலாட்டாப்பையன் said...

மிகவும் அருமையான பதிவு.

\\டோண்டு ராகவன் அவர்களோடு எனக்கு நிறைய கருத்து வேறுபாடுகள் உண்டு. சாதியை உயர்த்திப் பிடிப்பதிவிருந்து பல விஷயங்களில் அவரோடு மாறுபடுகிறேன். இதனால் அவரை நான் வெறுக்க வேண்டுமா?//

இன்னா செய்தாரே ஒறுத்தல்-அவர்நாண
நண்ணயம் செய்து விடல்.'

நேரத்திற்கு ஏற்ற திருக்குறள்,

suvanappiriyan said...

//மிகவும் அருமையான பதிவு.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாட்டாப் பையன்.

Anonymous said...

ஆமாம் ஆமாம். சாதி உயர்த்திப் பேசுவது தவறு. ஆனால் உம்மைப் போன்ற ஆட்களை போல ஒரு மதத்தை மட்டும் உயர்த்திப் பேசுவது தவறேயில்லை. என்ன கண்றாவி கொள்கையோ இது!

dondu(#11168674346665545885) said...

//சாதியை உயர்த்திப் பிடிப்பதிவிருந்து பல விஷயங்களில் அவரோடு மாறுபடுகிறேன்.//
தவறு, நான் சாதியை எங்குமே உயர்த்திப் பிடிக்கவில்லை. எல்லா குற்றங்களுக்கும் ஒரு சாதியினரே காரணம் எனப் பொதுமைப் படுத்துவதைத்தான் எதிர்த்தேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

வருகைக்கும் உங்கள் கருத்தை தெரிவித்தமைக்கும் நன்றி டோண்டு ராகவன் அவர்களே!