Followers

Saturday, July 31, 2021

குர்ஆன் மனிதனைப் பார்த்து கேட்கிறது.....

 

குர்ஆன் மனிதனைப் பார்த்து கேட்கிறது.....

 

55:10 இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.

 

55:11. அதில் கனிவகைகளும் பாளைகளையுடைய பேரீத்த மரங்களும்-

 

55:12. தொலிகள் பொதிந்த தானிய வகைகளும், வாசனையுள்ள (மலர் புற்பூண்டு ஆகிய)வையும் இருக்கின்றன.

 

55:13. ஆகவே, நீங்கள் இரு சாராரும் உங்கள் (இரு சாராருடைய) இறைவனின் அருட்கொடைகளில் எதைப் பொய்யாக்குவீர்கள்?

https://www.facebook.com/nazeersuvanappiriyan/videos/792424624774901




 

 

பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணம்

 பாகிஸ்தான் - பலுசிஸ்தான் மாகாணம்


மேலிருந்து அழகிய இயற்கைக் காட்சி. இந்த அழகிய நாட்டை நம்மிடமிருந்து பிரித்தவர்கள் அனைவரும் தேச துரோகிகள். பாகிஸ்தானை இந்தியாவோடு சேர்த்து அகண்ட இந்துஸ்தானாக மாற வேண்டும். 




Monday, July 12, 2021

சிறு வயது முதலே கண்ணில் கோளாறு.


 


12 வயதான இந்த சிறுவனுக்கு சிறு வயது முதலே கண்ணில் கோளாறு. நிறங்கள் இவனுக்கு தெரிவதில்லை. எல்லாம் ஒரே நிறங்களாகவே இததனை ஆண்டுகள் பார்த்து வந்துள்ளான்.

 

மருத்துவர்கள் சில சிகிச்சைகளை செய்த பின்பு ஒரு கண்ணாடியை தருகின்றனர். அந்த கண்ணாடியின் மூலம் முதன் முதலாக தனது வாழ்வில் நிறங்களை பார்க்கிறான் அந்த சிறுவன். நிறங்களை பார்த்த சந்தோஷத்தில் குலுங்கி அழ ஆரம்பித்து விடுகின்றான். நெகிழ்ச்சியான சம்பவம்.

 

நாம் கேட்காமலேயே இறைவன் நமக்கு அனைத்து அவயங்களையும் சரி வர கொடுத்துள்ளானே! இது பற்றி என்றாவது நினைத்து படைத்தவனுக்கு நன்றி செலுத்தியிருக்கிறோமா?

 

” மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.

குர்ஆன் (7:10)

Sunday, July 11, 2021

பாகிஸ்தான் - பலுசிஸ்தான்

 பாகிஸ்தான் - பலுசிஸ்தான்


இங்குள்ள ஹிங்க்லாஜ் மாதா மந்திரில் அங்குள்ள இந்துக்கள் தங்களின் மத வழிபாடுகளை எவ்வித அச்சமுமின்றி நிறைவேற்றுகின்றனர்.


அமித்ஸாவும் மோடியும் இவர்களுக்கு குடியுரிமை தருகிறேன் வாருங்கள் என்று கூப்பிட்டு வருடம் ஒன்றுக்கு மேல் ஆகிறது. ஆனால் எவரும் தான் பிறந்த மண்ணை விட்டு வரவில்லை.  அங்கு நிம்மதியாக இருப்பதாலேயே மோடி கொடுக்கும் வாய்ப்பை இவர்கள் பயன்படுத்தவில்லை.


ஒரு வேளை இந்தியா வர விரும்பினால் யோகி போன்ற ஆட்சியாளர் தயவில் வாழ வேண்டி வரும். இங்கு சாதிக்கு ஒரு நீதி கொடுக்கப்படுகிறது. தலித்துக்கு ஒரு நீதி, பார்பனருக்கு ஒரு நீதி என்று செயல்படும் இந்நாட்டை எப்படி இவர்கள் ஏற்பார்கள். மறந்தும் கூட வந்து விட மாட்டார்கள்.






Thursday, July 08, 2021

உத்தர பிரதேசம் - பஹேரி

 

உத்தர பிரதேசம் - பஹேரி

 

அவ்ஸஃப் 17 வயது

 

ஜமீன் 15 வயது

 

ஜாய்த் 16 வயது

 

இந்த மூன்று இளைஞர்களும் கழுத்து முறிக்கப்பட்டு உடல் முழுக்க கீறல்களோடு சித்திரவதை அனுபவித்து கொல்லப்பட்டுள்ளார்கள்.

 

இந்த இளம் வயதில் தங்கள் ஆண் பிள்ளைகளை இழந்த குடும்பத்தவரின் மன நிலையை நினைத்துப் பாருங்கள்.

 

இந்துத்வ தேச விரோதிகளை ஊக்குவிக்கும் அரசுகளாக மாநில அரசும் ஒன்றிய அரசும் செய்லபடுவதாலேயே துணிந்து இது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

 

இவ்வாறு கொலை செய்தால் பிஜேபியில் முக்கிய பொறுப்பு கிடைக்கும் சட்ட பாதுகாப்பும் கிடைக்கும் என்ற நினைப்பிலேயே இது போன்ற கொலைகள் பெரும்பாலும் நிகழ்கின்றன.

 

இறைவா! இந்த அநியாயக்காரர்களையும் அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் அரசுகளையும் நிர்மூலமாக்குவாயாக!

 

இந்த குடும்பத்தவர் அனுபவிக்கும் வேதனையை அந்த நாசகார கொலைவெறி பிடித்த குடும்பங்களுக்கும் தருவாயாக!




 

 

 

 

Tuesday, July 06, 2021

சிகரெட் - பாலகுமாரன்.

 


சிகரெட்

பாலகுமாரன்.

 

இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.

 

சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.

 

நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?

 

நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அதுவொரு போதையான ரசாயனம். அது என்ன செய்யும்?

 

கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு அமைதி படர்கிறது. கண் கிறக்கமான ஒரு நிலைமை ஏற்படுகிறது.

 

இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

 

உதவியும் செய்தது. என்ன உதவி?

 

சுற்றுப்புறம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக்க சிகரெட் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டேன். அப்படி சிந்திப்பதால்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

 

காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட் வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்காகவே பலமணி நேரம் கூட்டங்களில் உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து அமைதியாக பேச முடியவில்லை.

 

வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம், தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும் வெளியே யோய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிடதன் நிறைவு பூர்த்தியாகும்.

 

இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்ய குறைவான சிந்தனை. உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.

 

பத்தொன்பது வயதில் தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து நாற்பத்தைந்தாவது வயதில் உச்சகட்டத்தை அடைந்தது. இழுத்து இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் போயிற்று. இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரிதானது. மேல் வயிறு பெரிதாக இருந்ததால் நடக்கும்போது மூச்சு வாங்கியது. மாடிப்படி ஏறும்போது சிரமமாக இருந்தது.

 

எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் இவனை மாற்ற முடியாதுஎன்று கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். நிச்சயம் ஒருநாள் நீங்களாக விட்டுவிடுவீர்கள் என்றும் சொன்னார்கள்.

 

அது நேர்ந்தது.

 

திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள். வளர்ந்து படிக்க வேண்டிய ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என் குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி, என்று சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும் வீட்டு வாசலில் நின்றே அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.

 

மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை.

 

முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரை மணிஇன்னும் அரைமணிஎன்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்தது ஆரோக்யமாக தெரிந்தது.

 

அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன். இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு பிறகு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை.

 

நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.

 

நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி மறுபடியும் புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக & நன்கு சுவாசிக்கிறவனாக & மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக் கொள்பவனாக மாறினேன்.

 

ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா?

 

சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டேன்.

 

அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட்டை நிறுத்தி ஆரோக்யத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.

 

பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.

 

இரண்டாயிரத்து பதினொன்றில் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.

 

சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.

 

ஆனால், இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.

 

நுரையீரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

 

ஒருபிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை வேகமாக செலுத்தினால்தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்ற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்துகொண்டார்கள்.

 

இதை எப்படி சரி செய்வது?

 

வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.

 

மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

 

வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்பொழுதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும்படி ஒரு அவஸ்தை.

 

ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத் தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை. ஜூரம் இல்லை. ஆனால், ஆக்சிஜன் குழாயை எடுத்துவிட்டால் மூச்சுத்திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது, உண்ண முடியாது, எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்ததுபோன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.

 

ஒருநாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக்கொண்டேன். அப்படி புகைத்தால்தான் கதை எழுத வரும் என்று முட்டாள்தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.

 

மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சு திணறி இதோஇதோஎன்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

 

நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பரவாயில்லை.

 

மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல், வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.

 

சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிடுங்கள்.

 

சிகரெட் உங்களை இன்றல்லபிற்பாடு ஒருநாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 

இந்த இருமல், இந்த முதுகு குனியல், இந்த தளர்வு, இந்த வேதனையெல்லாம் சிகரெட் பிடிப்பதால் விரைவாக ஒரு மனிதனுக்கு வரும். நல்லபடியாக சுவாசம் செய்து கொண்டிருந்தால் எழுபத்தைந்து வயது வரை ஆரோக்யமாக நிச்சயம் இருக்கலாம். அறுபத்தாறு வயதில் தள்ளாடுகின்ற நிலைமை & எழுத முடியாத நிலைமை & பேச முடியாத நிலைமை & ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால் அது வேதனைக்குரியது.

 

அது தவிர எந்நேரமும் நம்மைச் சுற்றி தாங்கும்படியாக நம் உறவினர்களுக்கு நாம் சுமையாக இருக்கிறோம் என்பது இன்னும் இம்சையான விஷயம்.

 

வீட்டிலுள்ள முக்கியமான ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால் அந்த வீடே நோய்வாய்ப்படும். எனவே எது விஷமோ, எது மிக கொடூரமாக நம்மை தாக்குமோ அதிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.

 

புகை பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல, உங்கள் குடும்பத்திற்கு தீங்கானது. உங்கள் வாழ்க்கையை சிதறடிக்கப் போவது. உங்கள் வளர்ச்சியை அறுத்தெறியப் போவது. உங்கள் ஞானத்தை பொசுக்கப் போவது. எனவே, சிகரெட்டை மனதாலும் நினையாமல் நன்கு மூச்சு இழுத்து வெளியே விடுகின்ற பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள். சிகரெட் ஆசையே வராது.

பல வலிகளோடு கேட்கும் இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?

 பல வலிகளோடு கேட்கும் இந்த கேள்விகளுக்கு என்ன பதில்?

'கீழ் சாதி என்று சொல்லப்படும் எங்கள் பெண்களை போகப் பொருளாக பாவிப்பீர்களோ. எங்களுக்கும் கவுரம், மானம் இருப்பதை ஏன் மறந்தீர்கள்? நாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து முன்னுக்கு வந்தால் அந்த வீடுகளையும் பொருட்களையும் உடைத்து நாசமாக்குகிறீர்களே? எங்களுக்கும் வாழ்வில் உயருவதற்கு அதிகாரம் இல்லையா? சொல்லுங்கள் மேல் சாதியினரே'
பதில் இருக்கிறதா சங்கிகளே!



மனித மிருகத்துக்கு பெயில்

 40 பேரை கொன்று குவித்த மனித மிருகத்துக்கு பெயில் வழங்கப்பட்டு எம்பியாகவும் ஆக்குகிறது நமது சட்டம்.

30 ஆண்டு காலம் பழங்குடியினர் வாழ்வுக்காக போராடிய போராளிக்கு பெயில் தராது கொன்றிருக்கிறது அதே நமது சட்டம்.



Sunday, July 04, 2021

ஹரியானாவில் இன்று நடந்த மஹா பஞ்சாயத்து!

 

ஹரியானாவில் இன்று நடந்த மஹா பஞ்சாயத்து!

 

இங்கு என்ன பேசப்படுகிறது?

 

'லவ் ஜிஹாத்' செய்பவர்களை கொல்வோம்'

 

'ஜெய் ஸ்ரீராம்'

 

'துப்பாக்கி இயக்கவும் தெரியும் அதை வைத்து கொல்லவும் தெரியும்'

 

'ஜெய் ஸ்ரீராம்'

 

எதற்றெடுத்தாலும் 'ஜெய் ஸ்ரீராம்'. அங்கு வாசிக்கப்பட்டவை அனைத்தும் தேச விரோத பேச்சுக்கள். எங்கெல்லாம் தேச விரோத செயல்கள் நடைபெறுகிறதோ அங்கெல்லாம் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷமும் வந்து விடுகிறது.

 

இவ்வாறு மூளை சலவை செய்யப்பட்டு வன்முறையை பயிற்று விக்கும் ஒரு கும்பலால் நாடு மிகப் பெரும் அழிவை நோக்கி செல்கிறது.

 

இந்து மதத்தை காக்க வேண்டுமானால் முதலில் தீண்டாமையை களைந்து அனைத்து மக்களையும் சமமாக நடத்தினாலேயே இந்து மதத்தை விட்டு எவரும் செல்ல மாட்டார். தவறை தங்களிடம் வைத்துக் கொண்டு 'லவ் ஜிஹாத்' என்று கூப்பாடு போடுவதால் எந்த மாற்றமும் வந்து விடப் போவதில்லை.

 

தான் பிறந்த மதத்தை விட்டு வெளியேறுவது அவ்வளவு சுலபமாக நடந்து விடுவதில்லை. பெற்றோர், உற்றார் உறவினர்களை பிரிய வேண்டி வரும். பிறந்த வீடும் போனதால் வாழ்வாதாரத்துக்கு சிரமப்பட வேண்டும். திருமணம் முடிப்பதிலும் பல சிக்கல்கள். காசுக்காக மதம் மாறி விட்டான் என்ற இழிச் சொற்கள். மேலும் தற்போது சங்கிகளின் ஆட்சியால் சிஏஏ போன்ற சட்டங்களால் பல அச்சுறுத்தல்கள்.

இத்தனையையும் தாங்கிக் கொண்டு ஒருவன் இந்து மதத்திலிருந்து இஸ்லாம் மதத்தை தேர்வு செய்கிறான் என்றால் குறை எங்கிருக்கிறது என்பதை தேடுங்கள் சங்கிகளே!

உலகிலேயே மன நோயாளிகள் அதிகம் கொண்ட மாநிலங்களாக வட மாநிலங்கள் மாறி வருகின்றன. நாட்டின் எதிர் காலத்துக்கு இது நல்லதல்ல. இந்த சங்கிகளால் இந்து மதம் மிகப் பெரும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பது எனது கணிப்பு. நடு நிலை இந்துக்கள் வாய் மூடி மவுனிப்பதே அவர்கள் இப்படி துள்ளக் காரணம்.