போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: மக்களை எந்த வழியில் நல்வழிப்படுத்துவது: : கை கால் இழந்து வாழ்வை தொலைத்திருக்கும் பல இளைஞர்களின் எதிர்காலம் என்ன? வசதியாக வாழ்ந்து வரும் நாம் அதற்காக என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்காமல் நாளொன்றுக்கு ஆபாச பதிவுகளாக 6, 7 என்று எழுதிக் குவிததுக் கொண்டிருக்கும் பதிவர்களே! கொஞ்சமாவது சமூக அக்கறையோடு செயல்படக் கூடாதா?
இன்று உச்சகட்டமாக யாழ்ப்பாணத்தில் விபசார விடுதிகளை திறந்தால் நல்லது என்று ஒரு பதிவர் பதிவிடுகிறார். இந்த கொடுமையை என்ன சொல்ல! வேறொரு பதிவரோ தனது பள்ளி கல்லூரிகளில் பெண்களிடம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று பதிவுகளாக எழுதித் தள்ளுகிறார். இன்று வரை அகதி முகாமகளில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளின் மறு வாழ்வுக்கு என்ன செய்வது? அதற்கு இந்த இணையத்தையும் பதிவுகளையும் தமிழ்மணத்தையும் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற கேள்வி உங்கள் மனதில் எந்நேரமும இருக்க வேண்டாமா?
சோனியா காந்தியை திட்டி பதிவிடுவதாலோ கருணாநிதியை கொச்சைப் படுத்துவதாலோ அல்லது ஜெயலலிதாவை ஏசுவதாலோ எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நெடுமாறனையும் கோபால்சாமியையும் நம்பி இனியும் மோசம் போகாமல் இந்திய மத்திய அரசு தரும் உதவிகளை ஏற்றுக் கொண்டு சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப முன் வாருங்கள். தமிழக அரசியல்வாதிகள் எவரையும் இனியும் நம்ப வேண்டாம். அவர்களுக்கு இதனால் எத்தனை ஓட்டு கிடைக்கும் என்றுதான் கணக்கிடுவர். உங்களின் நிரந்தர வாழ்வுக்கு வழி ஏதும் சொல்ல மாட்டார். இனியும் தமிழகத்தை எதிர்பார்க்காமல் உங்கள் நாட்டை கட்டியெழுப்ப இலங்கையர்களான நீங்கள் முதலில் முன்னுக்கு வர வேண்டும்.
நீ என்ன எங்களுக்கு சொல்வது? எங்களை பார்த்துக் கொள்ள எங்களுக்குத் தெரியும்! ஆபாச பதிவுகளை தொடர்ந்து வெளியிடத்தான் செய்வோம் என்றால் இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை.
நலம்வேண்டின் நாணுடமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.
-குறள் 96:960
ஒருவன் தனக்கு நன்மையை வேண்டுவானாயின் தான் தீய செயல்கள் செய்ய வெட்கிப் பின்வாங்குபவனாய் இருத்தல் வேண்டும். தன் உயர் குடிப் பிறப்பைக் காத்துக் கொள்ள விருமபுவானாயின் பெரியார் எல்லாரிடத்தும் பணிவுடையவனாய் இருத்தல் வேண்டும்.
அடுக்கிய கோடிபெறினும் குடிப் பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்.
-குறள் 96:954
நல்ல குடியில் பிறந்தவர் பலவாக அடுக்கிய கோடிக்கணக்கான பொன்னைப் பெறுவதாயிருப்பினும் தம் ஒழுக்கம் குன்றுவதற்குக் காரணமான இழி செயல்களைச் செய்ய மாட்டார்.
'நன்மையிலும் இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்: பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்: இறைவனை அஞ்சுங்கள்: இறைவன் கடுமையாகத் தண்டிப்பவன்'
-குர்ஆன் 5:2
-------------------------------------------------------------
http://www.bbc.co.uk/tamil/multimedia/2012/02/120207_swamy_lankavisit_audio.shtml
சுப்ரமணியம் சுவாமி இலங்கை விஜயத்தின் போது தமிழோசைக்கு அளித்த பேட்டி:
--------------------------------------------------------------
கிழக்கு மாகாணத்தில் வேளாண்மை அறுவடைக்குரிய இந்திய தயாரிப்பான நவீன ரக இயந்திரத்தை செலுத்துவதற்கு பயிற்சி மற்றும் அனுபவம் பெற்ற சாரதிகள் போதியளவு இல்லாத நிலையில் விவசாயிகள் இந்தியாவிலிருந்து சாரதிகளை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
போர் ஓய்ந்த பின்னர் வேளாண்மை அறுவடையில் மனித சக்திக்கு பதிலாக இயந்திரங்களை கூடுதலாக பயன்படுத்தும் நிலைமை கிழக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ளது.
இந்த இயந்திரங்களை செலுத்தக் கூடிய சாரதிகள் உள்ளுரில் இருந்தாலும் அவர்களிடத்தில் பயிற்சியும் தொழில் நுட்ப அனுபவமும் போதியளவு இல்லாத காரணத்தினால் இந்தியாவிலிருந்து சாரதிகளை தாம் வரவழைக்க வேண்டியிருப்பதாக விவசாயிகளும் இயந்திர உரிமையாளர்களும் கூறுகின்றார்கள்.
இந்திய சாரதிகள் ஏஜண்டுகள் ஊடாக அழைத்து வரப்பட்டாலும் சுற்றுலாப் பயண வீசா பெற்றே நாட்டிற்குள் நுழைவதால் சட்ட ரீதியான பிரச்சினைக்கு அவர்கள் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு சுற்றுலா பயண வீசாவில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலை செய்த 6 பேர் அண்மையில் பொலிசாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை உள்ளூர் சாரதிகளுக்கு முறையான பயிற்சி கொடுப்பதன்மூலம் இந்தப் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
-பிபிசி பிப்ரவரி 6 2012
--------------------------------------------------------------
தமிழர்களை காவலதுறையில் சேர்க்க அரசு முடிவெடுத்துள்ளதை பிபிசி வெளியிட்டுள்ளது: அதனைப் பார்ப்போம்:
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் இலங்கை போலிஸில் இணைய விண்ணப்பிக்கலாம் என்று இலங்கை போலிஸார் கூறியுள்ளனர்.
2009 ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிப் போரினால் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து தமிழ் பேசும் போலிஸாரை படைக்கு சேர்ப்பதற்கான மேலும் பொதுவான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
போலிஸ் பணிக்கு முன்னாள் விடுதலலைப்புலிகள் அமைப்பின் போராளிகள் விண்ணப்பிக்கலாம் என்று முறையான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
ஆனால், முன்பு போர் நடந்த பகுதிகளில் ஆட்சேர்ப்புப் பணிகள் நடப்பதாகவும், முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் எவரும் அந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் போலிஸ் தரப்பு பேச்சாளரான சுப்பிரிண்டண்ட் அஜித் றோகண பிபிசியிடம் தெரிவித்தார்.
அனேகமாக அனைத்து முன்னாள் போராளிகளும், பலவந்தமாகவே விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைக்கப்பட்டு, போருக்கு அனுப்பப்பட்டார்கள் என்று அவர் கூறினார்.
எந்த விதமான குற்றச்சாட்டும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல், வழக்கு எதுவும் நிலுவையில் இல்லாமல் மனந்திருந்தி போலிஸில் பணியாற்ற விரும்பும் எந்தவொரு முன்னாள் போராளியும் போலிஸ் பணியில் இணைவது குறித்து கவனம் செலுத்தலாம் என்று அவர் கூறியுள்ளார்.
அனைத்து முன்னாள் போராளிகளும் போலிஸ் படையில் இணைவது அவ்வளவு இலகுவானதல்ல. அவர்கள் விண்ணப்பிக்கும் பதவியின் தரத்துக்கு ஏற்ப சாதாரண, உயர்தர கல்வியை அல்லது பட்டப்படிப்பை அவர்கள் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
அரசாங்கத்தினால் புனர்வாழ்வு நடவடிக்கை என்று கூறி சிறப்பு முகாம்களில் வைக்கப்பட்டிருக்கும் பல முன்னாள் போராளிகள் பள்ளிக்கூட மட்ட சோதனைகளை பூர்த்தி செய்யவிருக்கிறார்கள்.
போரின் இறுதி வேளையில் இவ்வாறு சரணடைந்ததாக கூறப்படும் சுமார் பத்தாயிரம் பேர் தற்போது விடுவிக்கப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறுகிறது.
இன்னும் ஆயிரம் பேர் முகாமில் இருக்கும் நிலையில் ஏனையவர்கள் வழக்கு விசாரணைகளுக்காக காத்திருக்கிறார்கள்.
மேலும் நூற்றுக்கணக்கான விடுதலைப்புலிகள் சிறைகளில் இருக்கிறார்கள்.
போருக்கான மிகப்பெரிய காரணம் மொழிப்பிரச்சினைதான் என்பதால், பெரும்பான்மையாக சிங்களவர்களைக் கொண்ட போலிஸ் படையில் தமிழர்களையும், தமிழ் தெரிந்த முஸ்லிம்களையும் ஆட்சேர்ப்புச் செய்வது அவசியமாகும் என்றும் போலிஸ் பேச்சாளர் கூறினார்.
பெண்கள் உட்பட சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பதவிகளுக்காக 450 தமிழ் பேசுவோர் பயிற்சியை தற்போது ஆரம்பித்துள்ளதாக அவர் கூறினார்.
கடந்த வருடத்தில் போர் ஆண்டு நிறைவு அணிவகுப்பில் இருந்து தாம் திடீரென விலக்கப்பட்டதற்காக தமிழ் போலிஸார் சிலர் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இது ஒரு பாதுகாப்பு பிரச்சினை என்று அவர்கள் கருதுவது போல் தென்படுவதாக ஒருவர் கூறியிருந்தார்.
-பிபிசி
ஜனவரி 30, 2012
அரசு வேலைகளில் இணைந்து சமூகத்தில் கலப்போம்!
தனி ஈழம் அமையும் போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை வேலையற்றறு இருக்கும் இளைஞர்கள் நாட்களை கடத்தாமல் அரசு கொடுக்கும் வேலைகளை பெற்று சமூகத்தில் ஒன்றரக் கலக்க வேண்டும். இதற்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்ய முன் வர வேண்டும்.
93 comments:
neengal solvathu unmaithaan. ipoluthellam thamilmanaththai thiranthaal pothum ore aabaasa thalaippaagathaan ullathu. ithu nalla arokiyamaana apathivukukku neengale vaikkum seivinai pondrathu.ippadiye thodarnthaal yaarum pathivulagam pakkam kooda thirumba maattaargal.
சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது நிலவுவதாக
அன்பின் சுவனப்பிரியன் அண்ணன்,
பதிவின் பேசுபொருளாக வெறும் ஆபாசத்தை மட்டும் முன்வைக்காமல் நிகழ்கால அரசியலையும் அலசியிருப்பது வரவேற்கத்தக்கது.
//சோனியா காந்தியை திட்டி பதிவிடுவதாலோ கருணாநிதியை கொச்சைப் படுத்துவதாலோ அல்லது ஜெயலலிதாவை ஏசுவதாலோ எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. நெடுமாறனையும் கோபால்சாமியையும் நம்பி இனியும் மோசம் போகாமல்//
//அவர்களுக்கு இதனால் எத்தனை ஓட்டு கிடைக்கும் என்றுதான் கணக்கிடுவர். உங்களின் நிரந்தர வாழ்வுக்கு வழி ஏதும் சொல்ல மாட்டார். இனியும் தமிழகத்தை எதிர்பார்க்காமல் உங்கள் நாட்டை கட்டியெழுப்ப இலங்கையர்களான நீங்கள் முதலில் முன்னுக்கு வர வேண்டும். //
//தனி ஈழம் அமையும் போது பார்த்துக் கொள்ளலாம். அதுவரை வேலையற்றறு இருக்கும் இளைஞர்கள் நாட்களை கடத்தாமல் அரசு கொடுக்கும் வேலைகளை பெற்று சமூகத்தில் ஒன்றரக் கலக்க வேண்டும். இதற்கு புலம் பெயர்ந்து வாழும் இலங்கை தமிழர்கள் தங்களால் ஆன உதவிகளை செய்ய முன் வர வேண்டும்.//
ஊதுகிற சங்கை ஊதி விட்டீர்கள். இவற்றறை ஆக்கப்பூர்வமான முறையில் எடுத்துக் கொள்வார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
அஸ்ஸலாமு அலைக்கும்,
நல்ல சிந்தனை
சிந்திப்பார்களா?
செயல்படுத்துவார்களா??
அஸ்ஸலாமு அலைக்கும்...
மாஷா அல்லாஹ். சூப்பரா சொன்னீங்க... ஆபாசத்தை வேரப்போம் இறைவனின் உதவிக்கொண்டு...
உங்களுக்கு ஒரு உள்குத்து பதிவு அங்கே எதிர்பார்க்கலாம்.
உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக சகோ ஷேக் தாவுத்!
//அன்பின் சுவனப்பிரியன் அண்ணன்,
பதிவின் பேசுபொருளாக வெறும் ஆபாசத்தை மட்டும் முன்வைக்காமல் நிகழ்கால அரசியலையும் அலசியிருப்பது வரவேற்கத்தக்கது.//
தாய் மொழி பாசத்தில் நாம் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம். இனி அவரகள் பாடு.
வஅலைக்கும் சலாம்! சகோ ஹாஜா மைதீன்!
//நல்ல சிந்தனை
சிந்திப்பார்களா?
செயல்படுத்துவார்களா??//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ ஸ்நா!
//neengal solvathu unmaithaan. ipoluthellam thamilmanaththai thiranthaal pothum ore aabaasa thalaippaagathaan ullathu. ithu nalla arokiyamaana apathivukukku neengale vaikkum seivinai pondrathu.ippadiye thodarnthaal yaarum pathivulagam pakkam kooda thirumba maattaargal.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வஅலைக்கும் சலாம் சகோ ஆஷிக்!
//மாஷா அல்லாஹ். சூப்பரா சொன்னீங்க... ஆபாசத்தை வேரப்போம் இறைவனின் உதவிக்கொண்டு...//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி!
சகோ அனானி!
//உங்களுக்கு ஒரு உள்குத்து பதிவு அங்கே எதிர்பார்க்கலாம்.//
எனது தாய் மொழியை பேசக் கூடிய ஒரு சகோதரன் தவறான வழிக்கு சமூகத்தைக் கொண்டு செல்லக் கூடாது என்ற நல்ல நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு இது. எனவே எதிர்ப் பதிவு இருக்காது என்றே எண்ணுவோம்.
அஸ்ஸலாமுஅலைக்கும் சகோ.....
சரியான நேரத்தில் சரியான பதிவு....
இது ஒரு நல்ல பதிவு.வரவேற்கப்படவேண்டியது. இன்னும் ஈழம் ஈழம் என்று சொல்லி மக்கள் மேலும் துன்பப்படுவதை விட முதலில் வாழ்வாதாரத்துக்கான நேர்மறையான செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவது வேண்டும்.திட்டங்களைப் பற்றி,செயல்பாடுகளைப் பற்றிப் பேசினால்தான் அடுத்தகட்டமான செயல் நடக்கும்.பின் பலன் வரும்.வெறும் வெறுப்பு மனோபாவம் அங்கே உள்ளவனுக்கு சோறு போடாது...நான் இன்னும் ஒன்று சொல்வேன். இலங்கையில் இந்திய (அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு வணிகர்கள்) நிறைய முதலீடு செய்து வியாபாரம் பெருகினால்தான் 'வேலைவாய்ப்பு' அதிகரிக்கும். ஆயுதம் துப்பாக்கி மட்டுமல்ல...'வணிகம்' இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய ஆயுதம். அதைக் கையாளத் தெரிஞ்சவன் ஜெயிக்கிறான் எனில் அது நம் கையில் இருந்தாகவேண்டும்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்யவேண்டும்.வியாபாரம் கைக்கொள்ளப் பட வேண்டும்.அதற்கு தமிழகம் எவ்விதத்தில் துணைபுரியலாம் என்பது பற்றி பேசப்படவேண்டும்,விவாதிக்கப்படவேண்டும். இல்லையெனில் சிங்கள முதலாளிகள் மட்டுமே இருப்பர்.தமிழர்கள் தொழிலாளிகளாகவே இருப்பர்.
//இதற்கு மேல் சொல்வதற்கு என்னிடம் ஒன்றும் இல்லை.//
இருக்கிறது! குடிகாரர்களை திருத்துவதை விட, மேற்கொண்டு யாரேனும் குடிகாரர்களாக ஆகாமால் பார்த்துகொண்டால் போதும்! ஆரம்பத்தில் யாருடனும் பேசும்போதும், பல விஷயங்கள் பேசிக்கொண்டே இருப்பேன், கண்டிப்பாக அதில் ஏதேனும் கன்டன்ட் இருப்பதாக பார்த்துக்கொண்டேன், ஆரம்பத்தில் பெரிய மேதாவி மாதிரி என்ற பட்ட பெயர் கிடைத்தாலும், தற்போது அது நல்லதொரு பயனே கொடுக்கிறது. ( இந்த மாதிரி சிறிய சிறிய விசயங்களில் காட்டிய அக்கறையை உறவுகள் பேணுவதில் காட்டாததால் (rigid) நான் விட்ட பெரிய கோட்டை ,தனிக்கதை)
சின்ன சின்ன விசயங்களில் காட்டும் அதீத அக்கறை நம்மை மிகவும் மேன்படுத்த உதவுகிறது! இது எனது அனுபவப்பாடம்! மத விசயங்களில் நாம் அதீத அக்கறை காட்டுவதே, நல்லதொரு சமூகம் உருவாகத்தானே, இதிலும் காட்டுவோம்!
சலாம் சகோ சுவனப்பிரியன்,
இலங்கையின், குறிப்பாக வடக்கு மற்றும் வட கிழக்கு மாகாண புணரமைப்பில் தமிழ் மக்களின் பங்களிப்பு அதிகம் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசையும்.
இதற்க்கு இலங்கைப் பதிவர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமும். இதை பற்றி சகோதரர்கள் சிந்திப்பார்கள் என்றே நம்புகிறேன்.
உண்மையை சொல்வதென்றால் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படும் பதிவர்கள் மிகுந்த திறமை சாலிகள். எனவே தமது திறமையை ஆக்கப் பூர்வமாக
பயன் படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையும். அந்த திசையில் பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக உண்டு.
சகோ, சுவனப்பிரியன்!
இப்பதிவுக்கு எனது கருத்துக்கள் அவசியப்படுமா தெரியவில்லை! அவசியப்படுமாயின் கூறவும்! எந்தவொரு பதிலையும் வழங்குவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்!
இன்னொன்று, அனானி குறிப்பிட்டது போல உள்குத்து போடப் போவதில்லை! கருத்துக்களினால், தர்க்கரீதியாக விவாதிக்க விரும்புகிறேனே, தவிர தாக்கும் எண்ணம் எல்லம் இல்லை!
nalla oru aalosanai!
சகோ ஐடியாமணி!
//இப்பதிவுக்கு எனது கருத்துக்கள் அவசியப்படுமா தெரியவில்லை! அவசியப்படுமாயின் கூறவும்! எந்தவொரு பதிலையும் வழங்குவதற்கு நான் தயாராகவே இருக்கிறேன்!//
இந்த பதிவுக்கு உங்கள் கருத்துதான் மிக அவசியம். தாராளமாக சொல்லுங்கள். விபசாரத்தை பெரும்பாலான ஆண் வர்க்கமான நாம் வெகு இலகுவாக எடுத்துக் கொள்கிறோம். ஆனால் இந்த தொழிலால் பாதிக்கப்பட்ட பெண்களை பற்றியோ அவர்களின் எதிர்காலம் பற்றியோ கொஞ்சம் கூட சிந்திப்பதில்லை. இளமை இருக்கும் வரை அந்த பெண்ணுக்கு வருமானத்தக்கு குறைவிருக்காது. அதன் பிறகு முதுமை அடையும் போது ஆட்கொல்லி நோய்களையும் சுமந்து கொள்கிறாள். சமூகத்தினால் ஒதுக்கப்படுகிறாள். வருமானமும் போய் விடுகிறது. இவளால் பெற்றெடுக்கப்படும் குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் இழி சொல்லை சுமந்து மன நோயாளியாகிறார்களே!! இதற்கெல்லாம் உங்களிடம் என்ன பதில் இருக்கிறது.
//இன்னொன்று, அனானி குறிப்பிட்டது போல உள்குத்து போடப் போவதில்லை! கருத்துக்களினால், தர்க்கரீதியாக விவாதிக்க விரும்புகிறேனே, தவிர தாக்கும் எண்ணம் எல்லம் இல்லை!//
தாராளமாக உங்களின் கருத்துக்களை சொல்லுங்கள். மனிதனுக்கு இறைவன் கொடுத்த பல உணர்வுகளில் காமமும் ஒன்று. அதனை நம் சமூகத்தை பாதிக்காமல் இதனால் எந்த ஒரு பிறப்பும் இழிவடையாமல் நமது இன்பத்தை அடைந்து கொள்ள வேண்டும். இதற்கு சமூகத்தில் அனைவராலும் ஒத்துக் கொள்ளப்பட்ட ஒரு வழியே திருமணம். இதன் மூலம் மட்டுமே எவருக்கும் தீங்கில்லாமல் நமது தேவைகளை போக்கிக் கொள்ள முடியும்.
அருமையான ஆக்கப்பூர்வமான பதிவு. இலங்கை தமிழர்கள் மீதான உங்கள் உண்மையான அக்கறை.
வணக்கம் சகோ உங்கள் எண்ணத்தை பதிவாக சொல்லி இருக்கின்றீர்கள் !
ஆனால் இந்தியாவால் தான் தமிழனுக்லு விடிவு வரும் என்றால் ராஜீவ் -ஜே.ஆர் ஒப்பந்தம் எல்லாம் என்னாச்சு என்று சோனியா சொல்வாரா?
இயந்திரங்கள் அதிகம் இல்லாத இடத்தில் தொழில் வினைத்திரன் பிரச்சனை வருவது இயல்புதானே இனி வரும் காலத்தில் உரியவர்கள் முயன்றால் விரைவில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் வருவார்கள் அதை உருவாக்கவேண்டியது அரச கடமை சகோ!
சலாம் சகோ சிராஜ்!
//உண்மையை சொல்வதென்றால் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படும் பதிவர்கள் மிகுந்த திறமை சாலிகள். எனவே தமது திறமையை ஆக்கப் பூர்வமாக
பயன் படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையும். அந்த திசையில் பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக உண்டு.//
உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். இலங்கைத் தமிழர்கள் திறமைசாலிகள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதை ஆக்க வழியில் பயன்படுத்த ஏன் தயக்கம் என்பதுதான் நமது கோரிக்கை.
ஈழத் தமிழர்கள் படும் சிரமத்தை விட ஜப்பான் மாதாமாதம் இயற்கை அழிவுகளான சுனாமி, பூகம்பம், எரிமலை என்று சொல்லொணா துயரங்களை சுமந்து வருகிறது. ஆனால் அடுத்த இரண்டு நாட்களில் எந்த நாட்டையும் எதிர்பார்க்காமல் உடன் களத்தில் இறங்கி நாட்டை புணரமைத்து விடுகிறார்கள். மறுநாள் தங்களின் வேலையை பார்க்க சென்று விடுகிறார்கள்.
ஆனால் ஈழத்திலோ நிலைமை தலை கீழ். கருணாநிதி ஏதாவது செய்வார்: ஜெயலலிதா பார்த்துக் கொள்வார்: வைகோ இதோ வந்து விட்டார்: சுப்ரமணியம் சுவாமி பிரச்னையை முடித்து விடுவார்: என்று எத்தனை எதிர்பார்ப்புகள்: எத்தனை ஆண்டுகள் காத்திருப்பு: எத்தனை இளைஞர்களின் படிப்பு முகாம்களில் பாழாகிறது: இதைப் பற்றி எல்லாம் வசதி படைத்த புலம் பெயர்ந்த தமிழர்கள் சிந்திக்கக் கூடாதா? ஒரு புலம் பெயர்ந்த தமிழர் வன்னியில் உள்ள ஒரு சிறுவனையோ சிறுமியையோ தத்து எடுத்து அவர்களின் படிப்பை தொடரச் செய்ய முடியாதா? இப்படி எல்லாம் சிந்திப்பதை விடுத்து யாழ்ப்பாணத்தில் விபசார விடுதிகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைப்பது நம் இனத்தை நாமே குழி தோண்டி புதைப்பதாகாதா என்பதே எனது ஆதங்கம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ மாயன் அகமும் புறமும்!
// நான் இன்னும் ஒன்று சொல்வேன். இலங்கையில் இந்திய (அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டு வணிகர்கள்) நிறைய முதலீடு செய்து வியாபாரம் பெருகினால்தான் 'வேலைவாய்ப்பு' அதிகரிக்கும். ஆயுதம் துப்பாக்கி மட்டுமல்ல...'வணிகம்' இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய ஆயுதம். அதைக் கையாளத் தெரிஞ்சவன் ஜெயிக்கிறான் எனில் அது நம் கையில் இருந்தாகவேண்டும்.
புலம் பெயர்ந்த தமிழர்கள் முதலீடு செய்யவேண்டும்.வியாபாரம் கைக்கொள்ளப் பட வேண்டும்.அதற்கு தமிழகம் எவ்விதத்தில் துணைபுரியலாம் என்பது பற்றி பேசப்படவேண்டும்,விவாதிக்கப்படவேண்டும். இல்லையெனில் சிங்கள முதலாளிகள் மட்டுமே இருப்பர்.தமிழர்கள் தொழிலாளிகளாகவே இருப்பர்.//
அழகாக சொல்லியிருக்கிறீர்கள்: ஒரே மொழியை பேசக் கூடிய தமழ் முஸ்லிம்கள் அரசோடு ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். அவர்களைப் போல் மற்ற தமிழர்களும் சமூகத்தோடு ஒன்றர கலக்க வேண்டும். அரசு தரும் வேலைகளை ஏற்க வேண்டும். முதலில் சமூகம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறட்டும். அதன் பிறகு சுய ஆட்சி என்றெல்லாம் சிந்திக்கலாம்: மனிதனுக்கு உண்ண உணவில்லாமல் தனி ஈழத்தை வைத்துக் கொண்டு என்ன செய்விர்கள்? அதிலும் 72 சாதி பூசல்கள்: இதில் தனியாக அரசு அமைத்தால் ஒற்றுமை வருமா என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்.
சகோதரர் ஷர்புதீன்,
அஸ்ஸலாமு அலைக்கும்,
//இருக்கிறது! குடிகாரர்களை திருத்துவதை விட, மேற்கொண்டு யாரேனும் குடிகாரர்களாக ஆகாமால் பார்த்துகொண்டால் போதும்!//
மாஷா அல்லாஹ்.எவ்வளவு ஆக்கப்பூர்வமான கருத்து சகோதரர்.
//உறவுகள் பேணுவதில் காட்டாததால் (rigid) நான் விட்ட பெரிய கோட்டை ,தனிக்கதை)//
இன்ஷா அல்லாஹ் எல்லாம் நல்லபடியா மாறும்.
//மத விசயங்களில் நாம் அதீத அக்கறை காட்டுவதே, நல்லதொரு சமூகம் உருவாகத்தானே,//
ஆம்.
//இதிலும் காட்டுவோம்!//
இன்ஷா அல்லாஹ். உங்கள் கருத்து அப்படியே என்னை மிகுந்த பாதிப்புள்ளாக்கி விட்டது.
நிச்சயமாக ஒரு அழகான சமுதாயம் அமைய பாடுபடுவது நம் கடமை. தொடர்ந்து செய்வோம்.
வஸ்ஸலாம்..
சகோ ஷர்புதீன்!
//சின்ன சின்ன விசயங்களில் காட்டும் அதீத அக்கறை நம்மை மிகவும் மேன்படுத்த உதவுகிறது! இது எனது அனுபவப்பாடம்! மத விசயங்களில் நாம் அதீத அக்கறை காட்டுவதே, நல்லதொரு சமூகம் உருவாகத்தானே, இதிலும் காட்டுவோம்!//
உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டமா! இந்த வழியிலேயே தொடருங்கள். வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிப்பீர்கள். அனுபவித்த நாங்கள் சொல்கிறோம்.
அகதிகள் முகாம்களுக்கும் போர் நடந்த இடத்திற்கும் சென்று எடுத்த வீடியோக்களை புதிய தலைமுறை நிகழ்ச்சியில் பார்த்தேன், மிகவும் வேதனையாக இருந்தது.எத்தனை பெண்கள் விதவையாக...
இலங்கை தமிழர்கள் தற்போது ஆக்கபூர்வமாக செயல் படும் தருணம் இது. வெளிநாடு வாழ் ஈழ தமிழர்கள் தான் உதவ முன்வரவேண்டும். அவர்களுக்கு அதிக பொறுப்பும் இருக்கிறது இந்த பிரச்சனையில். செய்வார்களா..?
சகோ சுவனப்பிரியன்!
நான் விபச்சாரம் குறித்த எனது பார்வையை தொடர் பதிவாக எனது பதிவிலே எழுதிவருகிறேன்! எனவே விபச்சாரம் குறித்த கருத்துக்கள் அனைத்தையும் அங்கு முன்வைக்கவே விரும்புகிறேன்! இங்கே எனக்கு நீங்கள் வழங்கிய பதிலில், சில வினாக்களை எழுப்பியுள்ளீர்கள்! அவற்றுக்கு கண்டிப்பாக எனது தொடரில் பதில் சொல்வேன்!
இங்கு நான் சொல்ல நினைப்பது உங்களின் இன்னொரு கருத்துப் பற்றி,
”போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: மக்களை எந்த வழியில் நல்வழிப்படுத்துவது: : கை கால் இழந்து வாழ்வை தொலைத்திருக்கும் பல இளைஞர்களின் எதிர்காலம் என்ன? வசதியாக வாழ்ந்து வரும் நாம் அதற்காக என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்காமல் நாளொன்றுக்கு ஆபாச பதிவுகளாக 6, 7 என்று எழுதிக் குவிததுக் கொண்டிருக்கும் பதிவர்களே! கொஞ்சமாவது சமூக அக்கறையோடு செயல்படக் கூடாதா?”
இப்பந்தியில் நீங்கள் வைத்திருக்கும் ஒரு குற்றச்சாட்டு, ஈழத்தில் யுத்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவவில்லை என்பது! இதனை நான் மறுக்கிறேன் சகோ!
சிலவிஷயங்களை நாம் வெளிப்படையாக சொல்லமுடியாது! இங்கே பகிரங்கமாக நிதி சேகரித்து, ஈழத்துக்கு அனுப்புபவர்கள் மீது கடுமையான கண்காணிப்பு இருக்கிறது! இன்னொன்று புலம்பெயர் மக்களுடன் பகிரங்கமாக உறவாடும் நிலையில் இன்று ஈழத்தமிழர்கள் இல்லை!
காரணம் புலம்பெயர் தமிழர்களாகிய எம்மீது புலிமுத்திரை குத்தப்பட்டுளதுதான்! யார் யாரெல்லாம் வெளிநாடுகளுக்கு அதிக நேரம் போன் பேசுகிறார்கள் என்பதை அங்கே கடுமையாக கண்காணிக்கிறார்கள்
மேலும் ” எனக்கு வெளிநாட்டில் இருக்கும் ஒருவர் பணம் அனுப்பினார்” என்று வெளிப்படையாக பேச ஈழத்தில் பல்ர் தயங்குகிறார்கள்! ஒருவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவது தெரிந்துவிட்டால், அவரைக் கடத்திக்கொண்டு போய், கப்பம் கேட்கும் நிலைமைதான் ஈழத்தில் உள்ளது
ஈழத்தில் இப்போது என்ணற்ற ஆயுத குழுக்களும், சமூக விரோத கும்பல்களும் நிறைந்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்!
ஆகவே, நாம் என்ன உதவி செய்தாலும் அதனை அடுத்தவருக்குத் தெரியாமல் ரகசியமாகவே செய்கிறோம்! பகிரங்கமாக அனைவருக்கும் அறிவித்துவிட்டு, உதவி செய்யப் போய், எமது உறவுகளுக்கு ஆபத்தினைத் தேடித்தர நாம் விரும்பவில்லை!
நான் வேலை பார்க்கும் நிறுவனம் பற்றி என்னால் பகிரங்கமாகச் சொல்ல முடியவில்லை! இருந்தாலும் இது ஒரு நிதி நிறுவனம்! வெளிநாடுகளில் இருந்து, இலங்கை., இந்தியாவுக்குப் பணம் அனுப்பும் ஒரு நிறுவனம்!
எனக்கு நன்கு தெரியும் நாள் தோறும் எவ்வளவு பணம் எமது நிறுவனத்தில் இருந்து மட்டும் அனுப்பப்படுகிறது என்று!
மேலும், யுத்தம் முடிவடைந்த இந்த இரண்டரை ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு வந்து சேர்ந்தோரி எண்ணிக்கை மிக மிக அதிகமாகும்! நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டு, பணத்தை வாரி இறைத்து, ஆபத்தில் இருக்கும் எமது உறவுகளை வெளிநாடுகளுக்கு எடுத்துக்கொண்டுதான் இருக்கிறோம்!
மேலும் எத்தனையோ ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் இப்போது, இந்தியாவில் தங்கியுள்ளார்கள்! அவர்களுக்கு அங்கு வேலை வாய்ப்பு இல்லாத போது நாம் தானே பணம் அனுப்புகிறோம்!
மேலும், இப்போது பெரும்பாலான குடும்பங்களில் வீட்டுக்கு ஒருவராவது வெளிநாட்டில் இருக்கிறார்கள்! நான் பெருமைக்காக சொல்லவில்லை! எனது உறவினர்கள் மட்டும் ஃபிரான்ஸில் 34 பேர் இருக்கிறோம்!
அதேபோல கனடா, லண்டன் என்று எங்குமே அதிகளவு ஈழத்தமிழர்கள் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்! நாம் இங்கு பணத்தினை பெருமளவு சேகரித்து, ஒரு சங்கமாகச் செயற்பட்டு, பணத்தினை இலங்கை அரசிடம் ஒப்படைத்து, இதனை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுங்கள் என்று சொல்லமுடியாது!
எம்மால் அரசாங்கத்தை நம்ப முடியாது! ஆகவே நாம் தனிநபர்களாக, எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துகொண்டுதான் இருக்கிறோம்! மேலும், எமது உறவுகளைக் கடத்திவைத்துக்கொண்டு, ரகசியமாக எமக்கே போன் பண்ணி, மிரட்டி எம்மிடம் பணம் பறிக்கும் கும்பலகளும் இருக்கிறார்கள் என்று சொன்னேன் அல்லவா?
அந்தக் கும்பல்களுக்கும் சேர்த்துதான் நாம் இங்கு குளிரிலும், பனியிலும் கஷ்டப்பட்டு உழைத்து பணத்தை அனுப்புகிறோம்! காரணம் எப்போது, எமது உறவுகளை கடத்தி வைத்துக்கொண்டு போன் பண்ணுவார்கள் என்று எமக்குத் தெரியாது!
எனவே, நாம் ஈழத்தில் இருக்கும் உறவுகளை நாம் கைவிட்டு விட்டோம் என்பது, தவறான ஒரு கூற்று என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்!
இன்னொன்று சகோ,
யாழ்ப்பாணத்தில் விபச்சார நிலையங்கள் வேண்டும் என்ற எனது கூற்றுக்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன்! எனது கருத்தை ஏன் அங்கிருப்பவர்கள் எதிர்க்கவில்லை என்று எனக்கே புரியவில்லை! அதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!
சகோ தனி மரம்!
//ஆனால் இந்தியாவால் தான் தமிழனுக்லு விடிவு வரும் என்றால் ராஜீவ் -ஜே.ஆர் ஒப்பந்தம் எல்லாம் என்னாச்சு என்று சோனியா சொல்வாரா? //
ராஜீவ் காலத்திலேயே இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். திரு பிரபாகரனின் பிடிவாதத்தால் அன்றே முடிய வெண்டிய பிரச்னையை இடியப்ப சிக்கலாக்கி விட்டனர். அடுத்த ராஜிவின் கொலை பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. அதுதான் விடுதலைப் புலிகளின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.
//இயந்திரங்கள் அதிகம் இல்லாத இடத்தில் தொழில் வினைத்திரன் பிரச்சனை வருவது இயல்புதானே இனி வரும் காலத்தில் உரியவர்கள் முயன்றால் விரைவில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்கள் வருவார்கள் அதை உருவாக்கவேண்டியது அரச கடமை சகோ!//
உங்கள் கருத்தை ஒத்துக் கொள்கிறேன். மேலும் எல்லாவற்றிற்கும் அரசையே எதிர் நோக்காமல் வசதி படைத்த தமிழர்களும் பொருளாலும் உடல் உழைப்பாலும் இலங்கையை திரும்பவும் கட்டியெழுப்ப முன் வர வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
சகோ ஹாஜா மைதீன்!
//சரியான நேரத்தில் சரியான பதிவு....//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ சீனி!
//nalla oru aalosanai!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ கார்பன் கூட்டாளி!
//அகதிகள் முகாம்களுக்கும் போர் நடந்த இடத்திற்கும் சென்று எடுத்த வீடியோக்களை புதிய தலைமுறை நிகழ்ச்சியில் பார்த்தேன், மிகவும் வேதனையாக இருந்தது.எத்தனை பெண்கள் விதவையாக...//
ஆம் சகோ. நானும பார்த்தேன். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒரு தலைமுறையே சோகத்தை சுமந்து வாழ்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வணக்கம் சகோ,
தாங்கள் குர்ஆனை மதிப்பவர் என்பதால்,
தங்களிடம் சில உண்மையான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.
நீங்கள் உயிருக்கு உயிராக நேசிக்கும் குர் ஆன் மீது ஆணையாக இப் பதிவு தொடர்பில் உங்கள் கருத்துக்களை கேட்கின்றேன்.
பதிவர்கள் ஆபாசம் எழுதுகின்றார்கள் என்று கூறி வெறும் இரண்டு பதிவர்களை மாத்திரம் முன்னிறுத்தி இவ் இடுகையினை வரைந்திருக்கிறீர்கள்.
ஆயிரத்திற்கும் மேலான பதிவர்கள் உள்ள பதிவுலகில் தங்கள் பார்வையில் இரண்டே இரண்டு பதிவர்கள் மாத்திரம் தான் கண்ணில் தென்பட்டார்களோ?
அடுத்த கேள்வியை அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறேன்.
போரினால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தை சேர்ந்த நீங்களும் உங்களைப் போன்ற பதிவு எழுதும் மற்ற இளைஞர்களும் உங்கள் நாட்டை எவ்வாறு சீர் படுத்துவது: மக்களை எந்த வழியில் நல்வழிப்படுத்துவது: : கை கால் இழந்து வாழ்வை தொலைத்திருக்கும் பல இளைஞர்களின் எதிர்காலம் என்ன? வசதியாக வாழ்ந்து வரும் நாம் அதற்காக என்ன செய்திருக்கிறோம் என்று சிந்திக்காமல் நாளொன்றுக்கு ஆபாச பதிவுகளாக 6, 7 என்று எழுதிக் குவிததுக் கொண்டிருக்கும் பதிவர்களே! கொஞ்சமாவது சமூக அக்கறையோடு செயல்படக் கூடாதா?
//
யாருமே நாள் ஒன்றுக்கு ஆறு ஏழு ஆபாச பதிவுகள் எழுதவில்லை!
தாங்கள் நேசிக்கும் மறைநூல் மேல் ஆணையாக இதனை நிரூபிக்க முடியுமா?
ஆதாரமற்ற குற்றச்சாட்டினை வைத்து இப் பதிவினை எழுதியிருக்கிறீர்களா?
ஐடியாமணி தொடர்பாக நீங்கள் கூறிய கூற்றுக்களை ஒரு புறம் வைப்போம்!
இப்போது என் மீது நீங்கள் கூறியிருக்கும் கருத்துக்களை கேட்கின்றேன்.
கடந்த நான்கு நாட்களுக்கு முன்பதாக ஈழத்தின் சம கால அரசியல் நிலமை, இலங்கை அரசிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்த நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களின் எதிர்காலம் குறித்து செய்ய வேண்டிய செயற்பாடுகள் தொடர்பில் எழுதினேனே அது உங்களுக்கு தெரியவில்லையா?
அந்தப் பதிவினை தாங்கள் படிக்கலையா?
போரால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில், போர் தொடர்பான என் அனுபவங்கள் தொடர்பாக, போரால் பாதிக்கப்பட்ட போராளிகள், சிறையில் வாடும் போராளிகளுக்கு செய்ய வேண்டிய செயல்கள் எவை என்று எழுதிய பதிவுகள் எவையுமே உங்கள் கண்ணில் படவில்லையா? அல்லது வேண்டுமென்றே சேறு பூசும் வகையில் இப்படி ஒரு பதிவினை எழுதி, அதற்குள் என்னையும் இழுத்து அவதூறு செய்யனும் எனும் நோக்கில் இந்தப் பதிவினை எழுதியிருக்கிறீர்களா?
உங்கள் மறை நூல் மேல் ஆணையாக நான் மேற்படி விடயங்கள் தொடர்பாக பதிவெழுதவில்லை என்பதை சத்தியம் செய்து கூற முடியுமா?
இல்லையேல் தாங்கள் எழுதிய இப் பதிவு தொடர்பில் தவறான நோக்கில் என்னைப் பற்றிய பார்வையினையும் உட் செலுத்து என்னை அவதூறு செய்யும் நோக்கில் இப் பதிவினை எழுதியிருக்கிறீங்க என்பதனை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க முடியுமா?
சகோ, போர், போரால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு வேண்டிய உதவிகள்,
ஈழ மக்களிடையே காணப்படும் சாதிய, பிரதேசவாத பிரிவுகளை வேரோடு களைவது தொடர்பான விடயங்கள், முன்னாள் போராளிகளின் நிலை தொடர்பாக யாருமே எழுதவில்லை, நாளொன்றுக்கு ஆறேழு ஆபாசம் எழுதுகின்றார்கள் என்று கூறும் உங்களுக்கு,
மேற்படி பதிவுகள் கண்ணுக்கு தெரியவில்லை! ஆபாசப் பதிவுகள் தான் கண்ணுக்கு தெரிகின்றன என்றால்
நீங்கள் ஆபாசத்தையும் ரகசியமாக படிக்கிறீங்க என்று தானே அர்த்தம்!
நமக்கு பிடிக்காத ஒன்றைப் பற்றி ஏன் அடிக்கடி பேச வேண்டும்?
Assalam alikum brother,
really this article for used all youth people, not tamil people,
insha allah, future
tamil and singalam people merge make one society,
ur brother
rahmanfayed
வேறொரு பதிவரோ தனது பள்ளி கல்லூரிகளில் பெண்களிடம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று பதிவுகளாக எழுதித் தள்ளுகிறார். இன்று வரை அகதி முகாமகளில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளின் மறு வாழ்வுக்கு என்ன செய்வது? அதற்கு இந்த இணையத்தையும் பதிவுகளையும் தமிழ்மணத்தையும் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற கேள்வி உங்கள் மனதில் எந்நேரமும இருக்க வேண்டாமா? //
சகோ, இன்று வரை அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இல்லை!
வெறும் 147 போராளிகள் தான் இன்று சிறையில் இருக்கிறார்கள்.
அடுத்த விடயம், என்னைக் கெடுத்த பெண்கள் என்ற தொடரில் ஆபாசம் இருக்கிறது என்று தங்களால் நிரூபிக்க முடியுமா?
கொச்சையாக ஏதாவது ஓர் விடயம் எழுதப்பட்டிருக்கிறது என்று தங்கள் மறை நூல் மேல் ஆணையாக நிரூபித்து இங்கே ஓர் சுட்டி கொடுக்க முடியுமா?
அப்புறம் எதற்காக இப்படி ஓர் பதிவினை எழுதி அதனுள் என் பெயரையும் சேர்த்து, பதிவர்கள் ஆபாசத்தை எழுதுகின்றார்கள் என்று பறைசாற்ற வேண்டும்?
மேற்படி பதிவு தொடர்பில் என்னை அவதூறு செய்யும் நோக்கில் நீங்கள் எழுதியிருப்பதற்கு மறை நூலை மதிக்கின்ற மனப்பாங்கு உடையவராக நீங்கள் இருப்பவராயின் மன்னிப்பு கேட்டு, அனைத்து பதிவர்கள் முன்னும் விளக்கத்தினை வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்.
நண்பா, ஈழத்து அரசியல் நிலமை வேறு, தமிழகத்து அரசியல் நிலமை வேறு!
என் பதிவுகளில் மக்களை கவனிக்காத தமிழ்க் கூட்டமைப்பு அமைச்சர்கள், அரசுடன் ஒட்டியிருக்கும் தமிழ் அமைச்சர்கள் எனப் பலரையும் விமர்சித்திருக்கிறேன்.
ஆட்சேபனை இல்லை என்றால்
எனது இணையத் தளத்தின் மீது அமெரிக்காவில் வழக்கு தொடர்வது தொடர்பில் ஒரு அமைச்சரும், அவரது அடிவருடியும் அனுப்பிய லெட்டரையும் அனுப்பி வைக்கிறேன்.
ஸோ...ஆதாரமற்று ஏனையோர் மீது சேறு பூசுவதை தவிருங்கள்! இல்லையே ஆதாரங்களை முன் வையுங்கள்!
நாளொன்றுக்கு 6,7 பதிவுகள் எழுதி தள்ளுவதாக கூறுகின்றீர்கள்.
இன்று பெப்ரவரி ஒன்பதாம் திகதி.
இன்று வரை
)
கலியாணம் கட்டாத பசங்களின் ஹவுஸ்புல் பார்ட்டி!
ரேவரியின் படைப்புக்கள் பற்றிய விமர்சனம் + ரகசியம்
என்னை கெடுத்த சிட்டுக்கள் - சூடான & சுவையான சுய சொ...
கையை தூக்கி பேசினே கண்டபடி சுட்டுப்புடுவேன் - கேப்...
பதிவுலக துக்க தினம் & பதிவர் மாயாவின் நினைவு நாள்!...
The Roommate : Physical - சைக்காலஜி & த்ரிலிங் பட ..
.
பதிவர் மாயா அகால மரணம் அடைந்து விட்டார்!
மப்படித்த கேப்டனும், சொல் அம்பு தொடுத்த ஜெயாவும்!
ஈழத் தமிழர் வாழ்வை அழிக்க தயாராகும் மகிந்த & இந்தி...
நாளை எனக்கு கல்யாணமாம் - என்ன நான் செய்வேன் சொல்லு...
என்னை கெடுத்த பெண்கள் - சூடான & சுவையான தொகுப்பு
கலியாணம் கட்டாத இளசுகளின் ஹவுஸ்புல் கச்சேரி!
என்னை கெடுத்த குட்டிப் பிசாசுகள் - சூடான & சுவையான...
என்னோட பாய் பிரெண்டிற்கு அறுபது பவுண்ல தாலி கட்ட ப...//
இந்தப் பதிவுகளில் எத்தனை பதிவுகளில் முகம் சுழிக்கும், அருவருக்கத் தக்க, பெண்கள் படிக்கக் கூடாத பதிவுகள் இருக்கின்றன?
சொல்லுங்கள்!
பதிவர் மாயாவினைப் பற்றி எழுதியது, ஈழ மக்கள் பிரச்சினை பற்றி எழுதியது, என்னுடன் கூடப் படித்த கல்லூரி பெண்கள் பற்றி எழுதுவது ஆபாசமா?
கல்லூரிப் பெண்களைப் பற்றி எழுதிய பதிவில் ஓர் ஆபாசத்தினை காட்ட முடியுமா?
மாயன்:அகமும் புறமும் said...
இன்னும் ஈழம் ஈழம் என்று சொல்லி மக்கள் மேலும் துன்பப்படுவதை விட முதலில் வாழ்வாதாரத்துக்கான நேர்மறையான செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவது வேண்டும்.
மிகவும் உண்மை. ஆனால் தமிழகத்தில் இலங்கை பொருட்களை புறக்கணி இலங்கை மீது பொருளாதார தடை கொண்டுவா போன்ற செயல்பாடுகள் அல்லவா நடை பெறுகிறது. அப்படி நடந்தால் பாதிப்படைய போவது ஏற்க்கெனவே யுத்தத்தால் நொந்து போன இலங்கை தமிழர்களே.
உங்களின் நேர்மையான, மழுப்பல்லற்ற பதிலை எதிர்பார்க்கின்றேன்!
தொடர்ச்சியாக ஈழப் போர் தொடர்பாக எழுத முடியாது! இலங்கையைப் பொறுத்த வரை கருத்துச் சுதந்திரம் இல்லை!
அடுத்த விடயம், ஈழப் போர் தொடர்பில் நான் தொடர்ந்து எழுதும் போது, பல பதிவர்கள்
தொடர்ந்தும் அவலங்களை தம்மால் படிக்க இயலவில்லை, நிறுத்தச் சொல்லி கோரியிருந்தார்கள்!
அடுத்த விடயம், ஈழ மக்களைப் பொறுத்த வரை யாருமே யாருக்கும் உதவாமல் இருப்பதில்லை!
உதவுவோர் எல்லோரும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அவசியமும் கிடையாது
முதலில் விஷம கருத்துக்களை ஏனையோர் பார்வையில் படும் வண்ணம் எழுதுவதை நிறுத்துங்கள் நண்பா
இந்த இணைப்பில் புலம் பெயர் மக்களிடம் ஈழ மக்கள் எதிர்பார்க்கும் விடயங்கள், புலம் பெயர் மக்கள் ஈழ மக்களிற்கு வழங்கும் பங்களிப்புக்கள் தொடர்பில் எழுதியிருக்கிறேன்.
http://www.thamilnattu.com/2011/12/blog-post_05.html
சுவனப்பிரியன் said...
சகோ மாயன் அகமும் புறமும்!
// தனி ஈழத்தை வைத்துக் கொண்டு என்ன செய்விர்கள்? அதிலும் 72 சாதி பூசல்கள்: இதில் தனியாக அரசு அமைத்தால் ஒற்றுமை வருமா என்பதும் சிந்திக்க வேண்டிய விஷயம்//
சகோ,
இந்தச் சாதியம் களையப்பட வேண்டும், பிரதேசவாதம் அழிக்கப் பட வேண்டும்
தமிழன் எல்லாம் ஒரு குடையின் கீழ் வரனும் என்று நான் தான் பதிவெழுதியிருக்கிறேன்!
அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
நல்லதொரு விஷயத்தினை கையில் எடுத்துள்ளீர்கள்
//
உண்மையை சொல்வதென்றால் ஆபாசமாக எழுதுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்படும் பதிவர்கள் மிகுந்த திறமை சாலிகள். எனவே தமது திறமையை ஆக்கப் பூர்வமாக
பயன் படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையும். அந்த திசையில் பயணிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு மிகுதியாக உண்டு. //
100 சதவீதம் உண்மை...
தன் கொண்டு நிச்சயம் சமூகத்தில் எழுத்தின் வாயிலாகவே மாற்றத்தை கொண்டுவர முடியும். ஆனால் பல வேளைகளில் அவர்களை தங்கள் திறமையை வீணடிப்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமே :-(
இனியேனும் ஆரோக்யமான விஷயங்களில் தானும் ஈடுபட்டு மற்றவர்களையும் அதன் பால் ஈர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் (இன்ஷா அல்லாஹ்)
நல்லதொரு ஆக்கத்திற்கு இறைவன் உங்களுக்கு நற்கூலியை இரட்டிப்பாக்கி தருவானாக ஆமீன்
//தன் கொண்டு நிச்சயம் சமூகத்தில் எழுத்தின் வாயிலாகவே மாற்றத்தை கொண்டுவர முடியும். //
தன் **திறமைக்**கொண்டு என வாசிக்கவும்.
ivargalaal thirattigal pakkam povathaiyae thavirthu vittaen
- dhivya mittal
சகோ நிரூபன்!
//இல்லையேல் தாங்கள் எழுதிய இப் பதிவு தொடர்பில் தவறான நோக்கில் என்னைப் பற்றிய பார்வையினையும் உட் செலுத்து என்னை அவதூறு செய்யும் நோக்கில் இப் பதிவினை எழுதியிருக்கிறீங்க என்பதனை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க முடியுமா?//
உங்கள் பெயரையோ ஐடியா மணியின் பெயரையோ பதிவில் குறிப்பிடாதபோது குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்க அது நீங்கள்தான் என்று நீங்களாகவே எப்படி முடிவு செய்து கொண்டீர்கள்?
நான் சொன்ன குற்றச்சாட்டுகளை செய்தது நீங்கள்தான் என்றால் ஆபாசத்தைப் பரப்பியதற்க்காக நீங்கள் அல்லவா தமிழ் சமூகத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
//மேற்படி பதிவுகள் கண்ணுக்கு தெரியவில்லை! ஆபாசப் பதிவுகள் தான் கண்ணுக்கு தெரிகின்றன என்றால்
நீங்கள் ஆபாசத்தையும் ரகசியமாக படிக்கிறீங்க என்று தானே அர்த்தம்!
நமக்கு பிடிக்காத ஒன்றைப் பற்றி ஏன் அடிக்கடி பேச வேண்டும்?//
உங்களின் பதிவுகளை ஆபாசம் என்று நீங்களே ஒத்துக் கொள்ளுகிறீர்கள். இணையத்தில் பொதுவில் ஒரு கருத்தை வைத்தால் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இவர்களை முகம் சுழிக்க வைக்காமல் நமது பதிவுகள் இருக்க வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் பதிவின் தலைப்புகளைப பாருங்கள். அடுத்து அந்த பதிவுகளில் தரவிறக்கியிருக்கும் படங்களையும பாருங்கள். உங்களுக்கு இவை எல்லாம ஆபாசமாக தெரியவில்லையா?
//பதிவர்கள் ஆபாசம் எழுதுகின்றார்கள் என்று கூறி வெறும் இரண்டு பதிவர்களை மாத்திரம் முன்னிறுத்தி இவ் இடுகையினை வரைந்திருக்கிறீர்கள்.
ஆயிரத்திற்கும் மேலான பதிவர்கள் உள்ள பதிவுலகில் தங்கள் பார்வையில் இரண்டே இரண்டு பதிவர்கள் மாத்திரம் தான் கண்ணில் தென்பட்டார்களோ?//
இங்கு எவருடைய பெயரையும் நான் குறிப்பிடவில்லை. ஐடியா மணியின் பதிவுதான் எனக்கு இந்த பதிவை எழுத தூண்டியது. இணையத்தில் ஆபாசம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு எழுதுபவர்கள் இன்னும் அதிகமான பேர் இருந்தாலும் அவர்களை எல்லாம் நான் மதிப்பது இல்லை. நமது மதிப்பிற்குரிய சில பதிவர்கள் இது போன்று தடம் மாறி செல்வதுதான் எனது ஆதங்கத்தக்கு காரணமே! உங்களின் பதிவுகள் ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாக இருந்தது. நான் பலமுறை உங்கள் தளத்தில் வந்து பின்னூட்டம் இட்டும் இருக்கிறேன். அந்த நேரங்களில் மாதத்தில் ஒன்றோ அல்லது இரண்டோதான் சற்று ஆபாசமாக வரும். ஆனால் இந்த மாதம் பிறந்து எட்டு நாட்களே முடிந்திருக்கிறது. அதற்குள் நீங்கள் வெளியிட்டிருக்கும் பதிவுகளின் தலைப்புகளை திரும்பிப் பாருங்கள். அதில் வெளியிட்டிருக்கும் படங்களையும் பாருங்கள்.
//ஐடியாமணி தொடர்பாக நீங்கள் கூறிய கூற்றுக்களை ஒரு புறம் வைப்போம்!//
ஏன் அதனை ஒதுக்க வேண்டும்? ஐடியா மணியின் கருத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? நேரிடையான பதில் தேவை. ஒரு நண்பன் தவறு செய்யும் போது அதை தட்டிக் கேட்பது ஒரு சிறந்த நண்பனுக்கு அழகல்லவா!
//யாழ்ப்பாணத்தில் விபச்சார நிலையங்கள் வேண்டும் என்ற எனது கூற்றுக்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன்! எனது கருத்தை ஏன் அங்கிருப்பவர்கள் எதிர்க்கவில்லை என்று எனக்கே புரியவில்லை! அதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!//
ஐடியா மணிணின் இந்த கருத்துக்கும் உங்களின் பதில் என்ன?
சகோ ஐடியாமணி!
//இப்பந்தியில் நீங்கள் வைத்திருக்கும் ஒரு குற்றச்சாட்டு, ஈழத்தில் யுத்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் உதவவில்லை என்பது! இதனை நான் மறுக்கிறேன் சகோ!//
விவரமாக விளக்கியதற்கு நன்றி! உங்களைப் போல் புலம் பெயர்ந்த அனைத்து ஈழ உறவுகளும் யாழ்ப்பாணத்தில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த மக்களுக்கு மேலும் உதவலாம். அரசின் மேல் நம்பிக்கை இல்லை என்றால் தனியார் தொண்டு நிறுவனங்களை நாடலாம். ஆனால் விபசாரம் பற்றிய உங்கள் கருததில் நான் முற்றிலுமாக மாறுபடுகிறேன் சகோ. அதை உங்கள் பதிவிலும் நேரம் கிடைக்கும் போது எனது எண்ணங்களை பதிக்கிறேன்.
//எனவே, நாம் ஈழத்தில் இருக்கும் உறவுகளை நாம் கைவிட்டு விட்டோம் என்பது, தவறான ஒரு கூற்று என்பதை இங்கே சொல்லிக்கொள்கிறேன்!//
ஒருகால் செய்திகள் வெளி வராமல் இருந்திருக்கலாம். தெளிவுபடுத்தியமைக்கு நன்றி! புலம் பெயர்ந்த வசதியில் இருக்கும் அனைவரும் ஒவ்வொரு குடும்பத்தை தத்து எடுத்துக் கொள்ளலாம். இது பிரச்னையை சுலபமாக தீர்க்கும்.
//யாழ்ப்பாணத்தில் விபச்சார நிலையங்கள் வேண்டும் என்ற எனது கூற்றுக்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன்! எனது கருத்தை ஏன் அங்கிருப்பவர்கள் எதிர்க்கவில்லை என்று எனக்கே புரியவில்லை! அதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!//
உங்களுக்கு பின்னூட்டமாக எதிர்ப்புகள் வரவில்லை என்பதற்காக அங்குள்ளவர்கள் அனைவரும் உங்கள் கருத்தை ஆதரிக்கிறார்கள் என்று எப்படி எடுத்துக் கொண்டீர்கள்? இது நமது சமூகத்தை நாமே கேவலப்படுத்துவது போல் இருக்கிறதல்லவா?
ஸலாம் சகோ.சுவனப்பிரியன்,
மிக அவசியமான பதிவு.
முன்பு தமிழ்மணத்தில் கட்டண சேவை பெற்று ஓரினச்சேர்க்கையை ஆதரித்து ஒரு நாளைக்கு இரண்டு பதிவு என்று தொடர், எழுதியவரின் இறுதி நிலை என்னவானது என்று நாம் நன்கு அறிவோம்.
இதுபோல, 18+ தலைப்புகள் வைத்து பரபரப்புக்காக ஆபாச பதிவுகளை கழிந்தவர்கள் எல்லாம் காணாமல் போனதுதான் பதிவுலக வரலாறு..!
நன்மை செய்வோம். தீமையை தடுப்போம். நம்மால் களத்திலிறங்க இயலாவிடின், நன்மை செய்வோரையும் தீமையை தடுப்போரையும் நம் எழுத்தின் மூலமாவது ஆதரிப்போம்.
நன்மையை ஏவி தீமையை தடுக்கும் உங்களுக்கு எனது முழு ஆதரவை தெரிவிக்கிறேன்..!
நன்மையை கொன்று தீமையை ஏவுவோர் மீதும் இதனை ஆதரிப்போர் மீதும் எனது வன்மையான கண்டனங்களை இங்கே தெரிவிக்கிறேன்..!
சகோ நிரூபன்!
//ivargalaal thirattigal pakkam povathaiyae thavirthu vittaen
- dhivya mittal//
//இனியேனும் ஆரோக்யமான விஷயங்களில் தானும் ஈடுபட்டு மற்றவர்களையும் அதன் பால் ஈர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்//
-ஆமினா
சகோதரிகள் திவ்யா மித்தல் மற்றும் ஆமினா போன்ற பல்லாயிரம் சகோதரிகளின் கேள்விக்கு உங்களின் பதில் என்ன நிரூபன்!
இருவர்தான் கேட்டது. கேட்காதவர்கள் இன்னும் ஆயிரம்....
Anonymous said...
ivargalaal thirattigal pakkam povathaiyae thavirthu vittaen
- dhivya mittal
4:13 AM
திரட்டிகள் உடனடியாக கவனிக்க வேண்டிய பின்னூட்டம் இந்த சகோதரியினுடையது..!!!
இவருக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள் திரட்டிகள்..?
சகோ,
நல்ல பதிவு. இதன் மூலம் உங்கள் ஆதங்கம் தெரிகிறது.
ஒருவரை குறை சொல்வதானால் தனியாக சொல்லுங்கள் அல்லது நேரடியாக சொல்லுங்கள் தவறில்லை. மறைமுகமாக வேண்டாம். இது வேண்டுகோள் தான் :) தவறாக எண்ணாதீர்கள்.
(என்னையே ஒரு சகோதரர் மறைமுகமாக திட்டியதாக நான் உணர்கிறேன் அவர் மறுத்த பொழுதும். உண்மை இறைவனுக்கு மட்டுமே தெரியும். அதை என்றோ மறந்து விட்டேன்..இருப்பினும் அது இன்று ஞாபகத்திற்கு வருகிறது)
பாராட்டுவதாயின் பொதுவில் பாராட்டுங்கள்.
அதே நேரத்தில்
சகோ idea மணி அவர்களின் கருத்துக்களில் நியாயம் இருப்பதாகத்தான் தெரிகிறது.
அந்த விபசார பதிவை இதுவரை படிக்கவில்லை.
சகோ நிரூபன், நல்ல பதிவுகளை தந்திருக்கின்றார். இந்த பதிவுகளை பற்றி எனக்கு தெரியவில்லை.
காமும் மனித உணர்ச்சிகளில் ஒன்று. அதை பற்றி எழுதுவது தவறா என்றால் இல்லை என்றே சொல்வேன். தனியாக எழுதலாம். எச்சரிக்கை கொடுத்து எழுதலாம்.(இப்பொழுத்தான் பார்த்தேன் நான் பார்த்த ஒரு பதிவில் நிரூபன் எச்சரிக்கை செய்திருக்கிறார்).
அதே நேரத்தில் எதற்கும் ஒரு அளவு உண்டும் என்பதையும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மூன்று தமிழர்களின் தூக்கு தண்டனை பற்றி நிறைய படித்து எனக்கு விரக்தியே வந்துவிட்டது...என் மன நிலையே மாறிவிட்டது. தொடர்ந்து அதுபோல் சிந்தித்தால் எழுதினால் அது அவர்களுக்கும் நல்லதல்ல. படிப்பவர்களுக்கும் நல்லதல்ல. அதே நேரத்தில் முக்கியமானவற்றிற்கு அதிமுக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஒரு கசப்பான உண்மையை சொல்ல வேண்டுமெனில் மதங்களில் இல்லாதா ஆபாசமா?
இதற்க்கு எந்த மதமும் விதிவிலக்கல்ல .
நல்லதை படிக்க மதம் பக்கம் சென்றால் அங்கு ஆபாசமே கொட்டி கிடக்கின்றது. முத்துக்கள் நிறைய இருந்தாலும் ஆபாசத்தை பார்க்கும் பொழுது அருவருப்பாகத்தான் இருக்கிறது.
நன்றி
விவரமாக விளக்கியதற்கு நன்றி! உங்களைப் போல் புலம் பெயர்ந்த அனைத்து ஈழ உறவுகளும் யாழ்ப்பாணத்தில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த மக்களுக்கு மேலும் உதவலாம். அரசின் மேல் நம்பிக்கை இல்லை என்றால் தனியார் தொண்டு நிறுவனங்களை நாடலாம். //
மீண்டும் வணக்கம் சகோ!
அமைப்பை உருவாக்க அரசும் அதன் அருவடிகளும் அயல் நாட்டு அன்னக்காவடிகளும் விடமாட்டார்கள் என்பது இன்னுமா புரியவில்லை .புலம்பெயர்ந்தவர்கள் கொண்டு வரும் பணத்தினை எப்படி ஆட்டை போட்டு தம் அரசியல் செயல்களுக்கு பயன்படுத்தலாம் என்று நோக்கும் இனவாதிகள் ஆட்சியில் எப்படி தனியார் தொண்டு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல் படமுடியும் இரவோடு இரவு வெள்ளை வானில் கடுத்தப்பட்டவர்கள் பற்றி வாய் திறக்க முடியாமல் தான் நாங்களும் இருக்கின்றோம்!
உங்களைப் போல் புலம் பெயர்ந்த அனைத்து ஈழ உறவுகளும் யாழ்ப்பாணத்தில் ஒரு அமைப்பை ஏற்படுத்தி அந்த மக்களுக்கு மேலும் //ஏன் பாய் புலம் பெயர்ந்தவன் மட்டும்ந்தான் கொடுக்கனுமா உள்ளூரில் வேறபகுதியில் இருப்பவன் உதவக்கூடாது அல்லது உதவ முன் வருவோரை தாக்காமல் வழிவிடலாமே அரச இயந்திரம்? புலம்பெயர்ந்தவன் ஊருக்கே அல்லிக் கொடுக்கனும் உள்ளூரில் இருப்பவன் உல்லாசமாக
நித்திரை கொள்ளனுமா??அட போங்க சார்!
ராஜீவ் காலத்திலேயே இந்த பிரச்னை ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும். திரு பிரபாகரனின் பிடிவாதத்தால் அன்றே முடிய வெண்டிய பிரச்னையை இடியப்ப சிக்கலாக்கி விட்டனர். அடுத்த ராஜிவின் கொலை பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. அதுதான் விடுதலைப் புலிகளின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது. //
சகோ என் கேள்வி இந்தியா என்ன செய்தது என்றுதான் தோல்விக்கு காரணம் இல்லை உங்கள் பார்வையில் பிரபாகரன் இல்லாத இந்த 2 வருடங்களிம் மத்திய அரசி ராஜீவின் குடும்பத்தால் தானே ஆழப்படுகின்றது அப்போது ஏன் இன்னும் ஒரு தீர்வையும் சொல்லாமல் சகுனி ஆட்டம் போடுவது தீர்க்க நினைக்கும் பிரச்சனைகளைக் கூட இடியப்பச் சிக்கல் ஆக்குவதே இந்த பன்னாடைகள் தான் தெரியுமோ கூட்டனியை குழப்பி விடுவதும் இனவாத அரசை காவல் காப்பது இந்த வேட தாரிகள் தான். 1
ஆகவே ஈழத்தமிழன் இந்தியாவிடம் அடங்கித்தான் தீர்வைப் பெறனும் என்று உபதேசம் செய்வதை நிறுத்துங்கள். முதலில்.
வேண்டும் என்ற எனது கூற்றுக்கு, யாழ்ப்பாணத்தில் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறேன்! எனது கருத்தை ஏன் அங்கிருப்பவர்கள் எதிர்க்கவில்லை என்று எனக்கே புரியவில்லை! அதைத்தான் நானும் யோசித்துக்கொண்டு இருக்கிறேன்!//
ஐடியா மணிணின் இந்த கருத்துக்கும் உங்களின் பதில் என்ன?
// பாய் இங்கே இன்னொரு கேள்வி தொக்கி நிற்குது அங்கிருப்பவர்கள் அடக்குமுறையில் இருக்கின்றார்கள் புலம் பெயர்ந்த நாம் சுதந்திரமாக பலவிடயங்களை விவாதிக்கின்றோம் இதில் ஏன் அவர்கள் பதில் வரனும் என்று நீங்கள் முனைப்புக்காட்டுகின்றீர்கள்??? யாழில் எத்தனை பதிவாளர்கள் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியும் அல்லது இதுவரையில் ஒரு சிலரைத் தவிர இந்த மாதிரி விவாதங்களில் உண்மை யார் பக்கம் என்பதில் அவர்களுக்கே புரிதல் இல்லை இப்படி இருக்கும் போது ஏன் அவர்களையும் இழுத்து வாருங்கள் என்று கூப்பாடு போடுவது???
ஈழத்தமிழன் இந்தியாவிடம் அடங்கித்தான் தீர்வைப் பெறனும் என்று உபதேசம் செய்வதை நிறுத்துங்கள்.// பேச்சுவார்த்தை என்பதற்கு இவர்கள் அகராதியில் இடமே இல்லை.பேசினால் அது பணிந்து போவதற்கு சமம்.தவறு நடந்தால் அதை அடுத்தவன் மீது பழிபோடுவது.அவர்கள் கொலை செய்தால் அதை வீரம் என்பார்கள். அடுத்தவன் செய்தால் ஐயகோ என்று பழிபோடுவார்கள்...சிந்திக்கத் தெரியாத கூட்டமாய்ப் போய்விட்டது...
//சகோ என் கேள்வி இந்தியா என்ன செய்தது என்றுதான் தோல்விக்கு காரணம் இல்லை உங்கள் பார்வையில் பிரபாகரன் இல்லாத இந்த 2 வருடங்களிம் மத்திய அரசி ராஜீவின் குடும்பத்தால் தானே ஆழப்படுகின்றது//
நல்லா இருக்கு.பிரச்னையை தீர்க்கமுடியாத படிக்கு சிக்கலாக்கிட்டு (பிரபாகரனை) எதுவும் சொல்லக் கூடாதாம்.அத சொன்னா இந்தியா ஏன் எதுவும் செய்யலைன்னு கேப்பாங்களாம்.மொத்தத்தில் சுயமா எதுவுமே செய்யாத கூட்டமா போயிட்டிருக்கு இலங்கைத்தமிழர் கூட்டம்.வெறுப்பை மட்டும் சொல்லிக்கிட்டு. பிரபாகரன் இறந்ததும் அப்படியே நிமிஷத்துல எல்லாம் சரியாகிடனும். தான் ஒண்ணும் செய்யாமலேயே! குத்தம் குறை சொல்றதுக்கு மட்டும் ஆளுங்க வரிசையா வருவாங்களாம்.அதான் பிரபாகரன் இல்லையே சீக்கிரம் முடிக்க வேண்டியுதுதானே என்பாங்களாம்
இலங்கையின் வடக்கே யுத்த மோதல்கள் இடம்பெற்ற பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளை அகற்றி முடிப்பதற்கு இன்னும் பத்து ஆண்டுகள் எடுக்கும் என ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனத்தை (யூஎன்டிபி) சேர்ந்த அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
தேசிய கண்ணிவெடிகளுக்கான நடவடிக்கை நிலையத்தின் தகல்களின்படி வடக்கில் இன்னும் 126 சதுர கிலோ மீட்டர் பரப்பளவான பிரதேசத்தில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியிருக்கின்றது.
தொடர்புடைய விடயங்கள்
• மீள்குடியேற்றம்
கண்ணிவெடி அகற்றும் பணிகளில் முன்னணி நிறுவனமாகிய தேசிய கண்ணிவெடி நடவடிக்கை நிலையத்தின் பொறுப்பிலேயே வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கு ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனம் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இலங்கை இராணுவத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவுடன் ஆறு சர்வதேச கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களும் இரண்டு உள்ளுர் நிறுவனங்களும் வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கின்றன.
இதேவேளை யுனிசெஃப் நிறுவனம் யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் மீள்குடியேறுகின்ற பொதுமக்கள் மத்தியில் கண்ணிவெடி அபாயம் தொடர்பான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
மனிக்பாம் முகாமில் இன்னும் 6700 பேர் உள்ளனர்
கண்ணிவெடிகள் முற்றாக அகற்றப்படாத காரணத்தினால் வவுனியா மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் 6700 பேர் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் இன்னும் தங்கியிருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
2009 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் 554 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டிருப்பதாக ஐநாவின் மனிதாபிமான பணிகளுக்கான இணைப்பு அலுவலகத்தின் அறிக்கையொன்று கூறுகின்றது.
கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள அநேகமான பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக ஐநாவின் அபிவிருத்தி நிறுவனத்தின் கண்ணிவெடி அகற்றும் பிரிவு கூறியிருக்கின்றது.
எனினும், அடையாளம் தெரியாத வெடி பொருட்களை அகற்றுவதில் அதிக நேரத்தைச் செலவு செய்ய வேண்டியிருப்பதாகவும் அதிக தொழிலாளர்களை ஈடுபடச் செய்ய வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இந்த வெடிப்பொருட்களைக் கண்டறிவதற்கும் அவற்றை அகற்றுவதற்கும் தேவையான நவீன கருவிகள் இல்லாத காரணத்தினால் அதிக பொறுமையுடனும் பாரம்பரிய முறையில் ஆளணி சக்தியைப் பிரயோகிக்க வேண்டியிருப்பதாக ஐநாவின் அபிவிருத்தி நிறுவன அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருக்கின்றார்.
யுத்த மோதல்கள் முடிவுக்கு வந்ததன் பின்னர் கண்ணிவெடி அகற்றுவதற்குத் தேவையான நிதியை உதவி நாடுகளிடம் இருந்து பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள தடங்கல்களும் கண்ணிவெடி அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு முக்கிய காரணமாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கண்ணிவெடி விபத்துக்களில் கடந்த 2010 ஆம் ஆண்டு 47 பேர் பாதிக்கப்பட்டிருந்த அதேவேளை கடந்த வருடம் 24 ஆகக் குறைந்திருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
6-2-2012
பிபிசி-தமிழ்பிரிவு
சுவனப்பிரியன் said...
சகோ நிரூபன்!
//இல்லையேல் தாங்கள் எழுதிய இப் பதிவு தொடர்பில் தவறான நோக்கில் என்னைப் பற்றிய பார்வையினையும் உட் செலுத்து என்னை அவதூறு செய்யும் நோக்கில் இப் பதிவினை எழுதியிருக்கிறீங்க என்பதனை ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்க முடியுமா?//
உங்கள் பெயரையோ ஐடியா மணியின் பெயரையோ பதிவில் குறிப்பிடாதபோது குற்றம் உள்ள நெஞ்சு குறுகுறுக்க அது நீங்கள்தான் என்று நீங்களாகவே எப்படி முடிவு செய்து கொண்டீர்கள்?//
சகோ, சுவனப்பிரியன்,
ஒரு பொது மேடையில் விவாதிக்கின்றோம், அல்லது சிலரை குறி வைத்து பதிவு ஒன்றினை எழுதுகின்றோம் என்றால் கருத்துக்களை காத்திரமாக வைக்க வேண்டியளவிற்கு மன உறுதி இருக்க வேண்டும்!
குர் ஆன் மேல் கூட நம்பிக்கை கொண்டு கருத்துச் சொல்ல முடியாத அளவிற்கு நீங்கள் பொய் பேசிவிட்டீர்களே இப் பதிவில்.
நண்பரே, குற்றம் உள்ள நெஞ்சு குறு குறுக்கவில்லை
தங்கள் பதிவில் உள்ள வரியும், பதிவின் மையக் கருத்தில் ஈழத்தில் வாழும் பதிவர்கள் அல்லது ஈழத்தினைப் சேர்ந்த பதிவர்களுக்கான பதிவாக இப் பதிவினை தாங்கள் எழுதியிருப்பதும் என்னை கேள்வி கேட்க வைக்கிறது.
//வேறொரு பதிவரோ தனது பள்ளி கல்லூரிகளில் பெண்களிடம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று பதிவுகளாக எழுதித் தள்ளுகிறார். இன்று வரை அகதி முகாமகளில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளின் மறு வாழ்வுக்கு என்ன செய்வது? அதற்கு இந்த இணையத்தையும் பதிவுகளையும் தமிழ்மணத்தையும் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற கேள்வி உங்கள் மனதில் எந்நேரமும இருக்க வேண்டாமா? ///
மேற்படி வரிகளை நீங்கள் தானே பதிவில் சேர்த்திருக்கிறீங்க.
யாரை குறிவைத்து சேர்த்தீங்க?
என் பின்னூட்டங்கள் தொடர்பான சரியான பதிலை முன் வையுங்கள் பார்க்கலாம்!
சுவனப்பிரியன் said...
உங்கள் மீதும் சாந்தியும் //
நமக்கு பிடிக்காத ஒன்றைப் பற்றி ஏன் அடிக்கடி பேச வேண்டும்?//
உங்களின் பதிவுகளை ஆபாசம் என்று நீங்களே ஒத்துக் கொள்ளுகிறீர்கள். இணையத்தில் பொதுவில் ஒரு கருத்தை வைத்தால் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இவர்களை முகம் சுழிக்க வைக்காமல் நமது பதிவுகள் இருக்க வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் பதிவின் தலைப்புகளைப பாருங்கள். அடுத்து அந்த பதிவுகளில் தரவிறக்கியிருக்கும் படங்களையும பாருங்கள். உங்களுக்கு இவை எல்லாம ஆபாசமாக தெரியவில்லையா? //
நான் ஒத்துக் கொள்ளவில்லை, வாரத்தில் ஒரு தடவை ஹவுஸ்புல் பார்ட்டி என்று பதிவின்
ஆரம்பத்தில் முன் எச்சரிக்கை அறிவிப்பு வைத்து தான் ஒரு நடிகையின் போட்டோவுடன் ஒரு இரட்டை அர்த்த ஜோக் எழுதுவேன்.
ஓக்கே!
ஆபாசம் எனப்படுவது காமக் கதைகள் எழுதுவது, நிர்வாணமாக பெண்களின் படங்களை பிரசுரிப்பது, தகாத உறவு கதைகளை எழுதுவது தான் ஆபாசம் என அடியேன் அறிந்திருந்தேன்.
என்னைப் பொறுத்த வரை நாகரிகமான முறையில் பொது மேடையில் இரட்டை அர்த்ததில் ஒரு ஜோக் எழுதுவது ஆபாசம் என்று இதுவரை யாருமே கற்பிக்கவில்லை!
சுவனப்பிரியன் said.//
இணையத்தில் பொதுவில் ஒரு கருத்தை வைத்தால் பெண்கள், சிறுவர்கள், இளைஞர்கள் இவர்களை முகம் சுழிக்க வைக்காமல் நமது பதிவுகள் இருக்க வேண்டும். நீங்கள் கொடுத்திருக்கும் பதிவின் தலைப்புகளைப பாருங்கள். அடுத்து அந்த பதிவுகளில் தரவிறக்கியிருக்கும் படங்களையும பாருங்கள். உங்களுக்கு இவை எல்லாம ஆபாசமாக தெரியவில்லையா?//
நண்பரே,
மறுபடியும் சொல்கிறேன்,
வாரத்தில் ஒரேயொரு பதிவில் மாத்திரம் ஹவுஸ்புல்பார்ட்டி என தலைப்பிட்டு, என் பதிவிற்கு வரும் அத்தனை வாசகர்களுக்கும் பகிரங்கமாக அறிவிப்பு கொடுத்து இது பெண்கள் குழந்தைகளுக்கு உகந்த பதிவு அல்ல என்று எழுதுகின்றேன்.
தாங்கள் சொல்லும் பதிவுத் தலைப்புக்களில் என்ன ஆபாசம் இருக்கின்றது? கொஞ்சம் விளக்கி கூற முடியுமா?
என்னை கற்பழித்த பெண் அப்படி எங்கேயாச்சும் எழுதியிருந்தால் அதனை ஆபாசம் என எடுக்கலாம்! என்னை கெடுத்த பெண்கள் என நாகரிகமாக ஓர் தலைப்பினை முன் வைத்தால் அதனை ஆபாசம் என எப்படி எடுக்க முடியும்?
சகோ,என்னுடைய நேரத்தை செலவளித்து
தாங்கள் நேர்மையாக பின்னூட்டம் அளிப்பீர்கள் எனும் நம்பிக்கையில் தான் என் கருத்தினை இங்கே வைத்திருந்தேன்.
தங்கள் பதிவில் உள்ள வரிகளான
//
நிரூபன் said...
வேறொரு பதிவரோ தனது பள்ளி கல்லூரிகளில் பெண்களிடம் எவ்வாறு நடந்து கொண்டோம் என்று பதிவுகளாக எழுதித் தள்ளுகிறார். இன்று வரை அகதி முகாமகளில் காலம் தள்ளிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான அகதிகளின் மறு வாழ்வுக்கு என்ன செய்வது? அதற்கு இந்த இணையத்தையும் பதிவுகளையும் தமிழ்மணத்தையும் எப்படி பயன்படுத்திக் கொள்வது என்ற கேள்வி உங்கள் மனதில் எந்நேரமும இருக்க வேண்டாமா? //
//
இப்படி எழுதும் போது
யாராச்சும் மாற்றுக் கருத்துக்களை முன் வைக்க வரும் போது
பதில் சொல்ல உங்களால் முடியுமா என நினைத்து எழுத வேண்டும்!
சகட்டு மேனிக்கு நீர் விரும்பின் யார் மீதும் சேறு பூசலாம்! எதிர்த்து கேள்வி கேட்டால் குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும் எனச் சொல்லி தப்பிப்பது! இது அழகா?
சகோ, என்னைப் பொறுத்த வரை, உள்குத்தோ, வெளிக் குத்தோ, அல்லது விவாதப் பதிவுகளோ, இல்லை சர்ச்சைக்குரிய விடயங்களோ
கேள்விகள் வரும் போது பதில் சொல்லுவேன்! என் தரப்பில் பிழை என்றால் மன்னிப்பும் கோரியிருக்கிறேன்!
ஆனால் தாங்கள் ஓர் பதிவினை எழுதி விட்டு
சகட்டு மேனிக்கு என் பதிவுகளைப் பற்றியும் விமர்சித்து விட்டு
ஆதாரங்களை நான் முன் வைக்கும் போது
அது தொடர்பில் மறு வார்த்தை பேசாது
குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும் எனச் சொல்கிறீர்கள்?
என்ன நோக்கில் இந்தப் பதிவினை எழுதினீங்க?
உங்களை நோக்கி எதிர்க் கேள்வி யாருமே கேட்கமாட்டாங்க! நீங்க என்ன வேண்ணாலும் சொல்லிட்டு போகலாம் என்றா எழுதினீங்க?
பதிவுத் தலைப்புக்கள் தொடர்பாக நீங்கள் முன் வைத்திருக்கும் குற்றச்சாட்டுக்கள் உட்பட ஈழ மக்கள் தொடர்பாக எழுதவில்லை எனும் விடயங்க உட்பட
இங்கே முன் வைத்திருக்கும் விடயங்களுக்கு சரியான பதிலைக் கொடுங்கள்!
இல்லையேல் பொது வெளியில் மன்னிப்பு கேட்டு உங்கள் கருத்தினை வாபஸ் வாங்குங்கள்!
சகோ நிரூபன்!
உண்மையில் எனக்கு உங்கள் மேலோ அல்லது ஐடியா மணி மேலோ எந்த காழ்ப்புணர்வும் கிடையாது. எந்த ஒரு உள்நோக்கத்தையும் வைத்துக் கொண்டு இந்த பதிவை எழுதவில்லை. நான் சொன்ன அனைத்து காரணத்தையும் உங்களுக்கு ஏன் பொருத்திக் கொள்ளுகிறீர்கள்?
18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு என்று குறிப்பிடுவதால் அதற்கு கீழ் வயதுள்ளவர்கள் உங்கள் பதிவை பார்க்க மாட்டார்களா? சினிமா நடிகைகளின் அரை குறை போட்டோக்களை அந்த பதிவுகளில் இடம் பெற செய்வது ஏன்?
உங்களின் பழைய பதிவுகளையும் தற்போது இட்டு வரும் பதிவுகளையும் கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள். எவ்வளவு வித்தியாசம் என்பது உங்களுக்கே தெரியும். இதற்கு முன்பு கூட ஒரு பதிவின் பின்னூட்டத்தில் இதைப் பற்றி உங்களுக்கு சொல்லியிருக்கிறேன். நமமுடைய எழுத்தால் ஒரு இளைஞனோ ஒரு இளைஞியோ கெடுவதற்கு நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்? இதனை ஒரு அண்ணனை போல் பாவித்து அறிவுரையாக எடுத்துக் கொள்ளுங்களேன். பதிவில் முக்கியமாக சம்பந்தப்பட்ட ஐடியாமணி இதனை சாதாரணமாகத்தானே எடுத்துக் கொண்டார்? நீங்கள் ஏன் மன்னிப்பு என்ற வார்த்தை வரையில் செல்கிறீர்கள்?
உங்கள் அளவில் உங்கள் பதிவில் ஆபாசம் இல்லை என்று நினைத்தால் இது உங்களுக்கான பதிவு இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். இந்த பதிவை நான் எழுத ஆரம்பித்ததே ஐடியா மணியின் பதிவைப் பார்த்துதான். அவரது கருத்துக்கான உங்களின் பதிலை கேட்டிருந்தேன். அதற்கும் இதுவரை பதில் இல்லை. எனவே உங்கள் அளவில் நீங்கள் ஆபாசமாக எழுதவில்லை என்று சொல்வதால் இது உங்களுக்கான பதிவே அல்ல. விபசாரத்தை ஆதரிப்பவர்களுக்கும் ஆபாச படங்களை வெளியிடுபவர்களுக்குமான அவர்களின் கருத்துக்களுக்கு எதிரான பதிவு. இத்தோடு உங்கள் அளவில் பிரச்னை முடிந்தது. நன்றி!
ஆபாசத்தை தவிருங்கள் என்று ஏதோ ஆபாச நடிகைகளின் படத்தை போட்டு இதை தவிருக்கவும் என்று சொல்லுவிர்கள் என்று தப்பகாக நினைப்பவருக்கு இந்த பதிவு ஓர் கண்ணத்தில் 'பலார்' 'பலார்'. நன்றி ஐயா
சுவனப்பிரியன் எல்லோரும் பதிவர்கள் தானே!
அனானியாக உங்கள் பதிவிற்கு நீங்களே கமெண்ட் போடுறீங்களா?
வாழ்க வளமுடன்!
அனானிமஸ் ஆப்சனை நீக்கிடுங்கள்!
முள்ளந்தண்டு உள்ளோர் தங்கள் புரோபைலில் கருத்து சொல்லுவார்கள்!
மறைநூலின் முன் பொய் பேசுவோர் அனானியாக கருத்துரைப்பார்கள்!
இந்த பதிவினால் சிலர் மனம் வருத்தப்பட்டிருக்கும். சிலர் தாம் சொல்ல நினைத்ததை சுவனப்பிரியன் சொல்லி விட்டார் என்று சந்தோஷமும் பட்டிருப்பர். இந்த பதிவின் காரணத்தால் இனி வரும் காலங்களில் பதிவுகளில் ஆபாசம் குறைந்தால் அதற்காக சந்தோஷப்படுகிறேன். இதனால் அவர்கள் என்னை கோபமாக பார்த்தாலும் நான் அவர்களிடம் என்றுமே நட்புக் கரம் நீட்டியவனாகவே இருப்பேன்.
நிரூபன்!
//சுவனப்பிரியன் எல்லோரும் பதிவர்கள் தானே!
அனானியாக உங்கள் பதிவிற்கு நீங்களே கமெண்ட் போடுறீங்களா?//
இது அடுத்த தவறான புரிதல். எனக்கு நானே அனானியில் வந்து பின்னூட்டம் இடும் நிலையில் நான் இல்லை. எனது கருத்துகளை மற்ற தளங்களிலும் எனது பெயரிலேயே சென்று சொல்வேன்.
//முள்ளந்தண்டு உள்ளோர் தங்கள் புரோபைலில் கருத்து சொல்லுவார்கள்!
மறைநூலின் முன் பொய் பேசுவோர் அனானியாக கருத்துரைப்பார்கள்!//
ஆம். எனக்கு முள்ளந்தண்டு இருக்கிறது. மற்றவர்களைப் பற்றி நான் அறியேன். நான் அனானியாக கருத்துரைக்கவும் இல்லை. மறை நூலின் முன் பொய் பேசவும் இல்லை.
சுவனப்பிரியன் எல்லோரும் பதிவர்கள் தானே!
அனானியாக உங்கள் பதிவிற்கு நீங்களே கமெண்ட் போடுறீங்களா?
வாழ்க வளமுடன்!
அனானிமஸ் ஆப்சனை நீக்கிடுங்கள்!
முள்ளந்தண்டு உள்ளோர் தங்கள் புரோபைலில் கருத்து சொல்லுவார்கள்!
மறைநூலின் முன் பொய் பேசுவோர் அனானியாக கருத்துரைப்பார்கள்! //
என் கேள்விக்கும் திசைதிருப்பி இப்படி அனானி புகுந்து கொண்டதால் தான் தொடரவில்லை சகோ!
எனக்கு முகம் தெரிந்தவர்கள் கூட மோத என் நேரமும் தயார் இப்படி அனானிக்கு பதில் சொல்ல தயார் இல்லை நன்றி சுவர்ணப்பிரியன் .
அல்லாவின் பேரால் நல்லது நடக்கட்டும்!
\\ nirupan etharkku itthanai kopam. nalladukkuthane.
A Good article..... useful One and a practical analysis.... Keep it up Sir
திரு தனிமரம்!
வேலை முடிந்து விட்டது. இனி கொஞ்சம் ஃப்ரீயாக பேசலாம்.
// பாய் இங்கே இன்னொரு கேள்வி தொக்கி நிற்குது அங்கிருப்பவர்கள் அடக்குமுறையில் இருக்கின்றார்கள் புலம் பெயர்ந்த நாம் சுதந்திரமாக பலவிடயங்களை விவாதிக்கின்றோம் இதில் ஏன் அவர்கள் பதில் வரனும் என்று நீங்கள் முனைப்புக்காட்டுகின்றீர்கள்??? யாழில் எத்தனை பதிவாளர்கள் சுதந்திரமாக கருத்துச் சொல்ல முடியும் அல்லது இதுவரையில் ஒரு சிலரைத் தவிர இந்த மாதிரி விவாதங்களில் உண்மை யார் பக்கம் என்பதில் அவர்களுக்கே புரிதல் இல்லை இப்படி இருக்கும் போது ஏன் அவர்களையும் இழுத்து வாருங்கள் என்று கூப்பாடு போடுவது???//
சகோதரரே! இதை நான் சொல்லவில்லை. திரு ஐடியாமணி தனது பின்னூட்டத்தில் சொன்ன கருத்து அது.
//சகோ என் கேள்வி இந்தியா என்ன செய்தது என்றுதான் தோல்விக்கு காரணம் இல்லை உங்கள் பார்வையில் பிரபாகரன் இல்லாத இந்த 2 வருடங்களிம் மத்திய அரசி ராஜீவின் குடும்பத்தால் தானே ஆழப்படுகின்றது அப்போது ஏன் இன்னும் ஒரு தீர்வையும் சொல்லாமல் சகுனி ஆட்டம் போடுவது தீர்க்க நினைக்கும் பிரச்சனைகளைக் கூட இடியப்பச் சிக்கல் ஆக்குவதே இந்த பன்னாடைகள் தான் தெரியுமோ கூட்டனியை குழப்பி விடுவதும் இனவாத அரசை காவல் காப்பது இந்த வேட தாரிகள் தான். 1
ஆகவே ஈழத்தமிழன் இந்தியாவிடம் அடங்கித்தான் தீர்வைப் பெறனும் என்று உபதேசம் செய்வதை நிறுத்துங்கள். முதலில்.//
மத்திய அரசு தன்னால் ஆன உதவிகளை செய்தே வருகிறது. பல ஆயிரம் வீடகளை சோனியா அரசு கட்டிக் கொடுத்திருக்கிறது. பல கிராமங்களில் மக்கள் குடியேற வழியில்லை. காரணம் கண்ணி வெடிகள். முழுவதுமாக அதனை அகற்ற 10 வருடம் பிடிக்கும் என் பிபிசி சொல்லும் செய்தியை பாருங்கள். இது யார் குற்றம். மனிதர்கள் வாழும் கிராமங்களில் கண்ணி வெடிகளை புதைத்து வைப்பதுதான் மக்கள் நலத்தை பேணுவோர் செய்வதா?
//ஏன் பாய் புலம் பெயர்ந்தவன் மட்டும்ந்தான் கொடுக்கனுமா உள்ளூரில் வேறபகுதியில் இருப்பவன் உதவக்கூடாது அல்லது உதவ முன் வருவோரை தாக்காமல் வழிவிடலாமே அரச இயந்திரம்? புலம்பெயர்ந்தவன் ஊருக்கே அல்லிக் கொடுக்கனும் உள்ளூரில் இருப்பவன் உல்லாசமாக
நித்திரை கொள்ளனுமா??அட போங்க சார்!//
மற்றவர்கள் கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. தமிழ் நாட்டு தமிழர்களில் வசதியுடையவர்களும் கண்டிப்பாக உதவ வேண்டும். ஏன் நானே ஒரு சமயம் உதவியிருக்கிறேன். நம்பிக்கையான தொண்டு நிறுவனம் கிடைத்தால் இனியும் செய்ய தயாராய் இருக்கிறேன்.
இவர்களை எல்லாம் விட அகதிகளாக ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்திருக்கும் இலட்சக்கணக்கான மக்களுக்கு வசதியுள்ளவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது என்பதையே சொல்ல வந்தேன். ஐடியா மணியும் இதையே அழகாக விளக்கியுள்ளார்.
நல்ல பதிவு வரவேற்கிறேன் தோழரே. இந்த ஒரு கருத்தை மட்டும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
//இந்திய மத்திய அரசு தரும் உதவிகளை ஏற்றுக் கொண்டு சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்ப முன் வாருங்கள்//
மதிய அரசு கொடுக்கும் உதவிகளை யாரும் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்யவில்லை. அப்படி கொடுக்குமேயானால் அதை வாங்கி கொள்வதிலும் தவறில்லை. இந்திய கொலைகார அரசுதான் ஈழத்தில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட காரணமாக இருந்தது. பிள்ளையையயும் கில்லி விட்டு விட்டு தொட்டிலையும் ஆட்டிய கதைதான் அது. சரி அது ஒருபக்கம் இருந்தாலும் அந்த உதவிகளை கொலைகாரன் ராஜபக்சே இடம் கொடுத்திருக்கிறது. அவன் எல்லை தாண்டி வாயிற்று பிழைப்புக்கு மீன் பிடிக்கும் மீனவர்களையே இறக்கம் இல்லாமல் சுட்டு கொல்லும் கயவன். அவன் எப்படி அந்த பணத்தை தமிழர்களுக்கு கொடுப்பான் என்பது கேள்வி குறியே. உலக வரலாற்றில் கொடியவர்களாக பதியப்பட்டவர்கள்தான் ஹிட்லர், ராஜபக்சே, நரேந்திர மோடி. இந்த சாத்தான்கள் வேதம் ஓதும் என்று சொன்னால் நம்ப முடியுதா? அது மட்டு மல்லாமல் சுப்பிரமணிய சுவாமி அவனை எல்லாம் ஒரு ஆள் என்று அவனது கருத்தை ஆதாரமாக காட்டி இருக்கீங்கள். அவன் ஒரு கோமாளி பய அண்ணா! இது தெரியலையே உங்களுக்கு. அங்கு என்ன நடக்கிறது என்று களப்பணி செய்யும் சகோதரர்கள் சொல்லாமல் சாமி சொல்வதை எல்லாம் ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது.
மற்றபடி நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
சகோ தமிழ்மாறன்!
//சரி அது ஒருபக்கம் இருந்தாலும் அந்த உதவிகளை கொலைகாரன் ராஜபக்சே இடம் கொடுத்திருக்கிறது. அவன் எல்லை தாண்டி வாயிற்று பிழைப்புக்கு மீன் பிடிக்கும் மீனவர்களையே இறக்கம் இல்லாமல் சுட்டு கொல்லும் கயவன். அவன் எப்படி அந்த பணத்தை தமிழர்களுக்கு கொடுப்பான் என்பது கேள்வி குறியே. உலக வரலாற்றில் கொடியவர்களாக பதியப்பட்டவர்கள்தான் ஹிட்லர், ராஜபக்சே, நரேந்திர மோடி. இந்த சாத்தான்கள் வேதம் ஓதும் என்று சொன்னால் நம்ப முடியுதா?//
ராஜபக்ஷேயிடம் கொடுக்கும் உதவி உரியவர்களை சேராது என்று நீங்கள் நினைத்தால் அதை உரிய முறையில் தமிழகத்தில் உள்ள காங்கிரஸ்காரர்கள் மூலமாக சோனியாவக்கொ அல்லது பிரதமருக்கோ தெரிவிக்கலாமே! உங்கள் குற்றச்சாட்டு நிரூபணமானால் பணத்தை தமிழர் பிரதிநிதிகளிடம் அரசு கொடுக்குமே! அதை விடுத்து சகட்டு மேனிக்கு இந்திய தலைவர்களை தூற்றி பதிவிடுவது அழகிய செயலா?
//அது மட்டு மல்லாமல் சுப்பிரமணிய சுவாமி அவனை எல்லாம் ஒரு ஆள் என்று அவனது கருத்தை ஆதாரமாக காட்டி இருக்கீங்கள். அவன் ஒரு கோமாளி பய அண்ணா! இது தெரியலையே உங்களுக்கு. அங்கு என்ன நடக்கிறது என்று களப்பணி செய்யும் சகோதரர்கள் சொல்லாமல் சாமி சொல்வதை எல்லாம் ஆதாரமாக எடுத்து கொள்ள முடியாது.//
சுப்ரமணிய சுவாமியை அரசியல் கோமாளி என்று முன்பு நானே பலமுறை கூறியுள்ளேன். பிபிசி கொடுத்த செய்தியை மற்றவர்களும் அறிந்து கொள்வதற்காக வெளியிட்டேன். இவரின் முழு கருத்தையும் நான் ஒத்துக் கொண்டதாக சொல்லவில்லையே!
//மற்றபடி நல்ல பதிவு வாழ்த்துக்கள்.//
நீங்கள் நல்ல பதிவு எனகிறீர்கள். வேறு சிலருக்கோ இந்த பதிவு கசக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ இருதயம்!
//A Good article..... useful One and a practical analysis.... Keep it up Sir//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ அப்துல்!
//nirupan etharkku itthanai kopam. nalladukkuthane.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
வஅலைக்கும் சலாம் ரஹ்மான் ஃபய்த்!
//Assalam alikum brother,
really this article for used all youth people, not tamil people,
insha allah, future
tamil and singalam people merge make one society,
ur brother
rahmanfayed//
உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்! அது நடந்து விடக் கூடாது என்பதில்தான் சிலர் குறியாக இருக்கின்றனர்.
முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ பலினோ!
//அருமையான ஆக்கப்பூர்வமான பதிவு. இலங்கை தமிழர்கள் மீதான உங்கள் உண்மையான அக்கறை.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சலாம் சகோ முஹம்மது ஆஷிக்!
//முன்பு தமிழ்மணத்தில் கட்டண சேவை பெற்று ஓரினச்சேர்க்கையை ஆதரித்து ஒரு நாளைக்கு இரண்டு பதிவு என்று தொடர், எழுதியவரின் இறுதி நிலை என்னவானது என்று நாம் நன்கு அறிவோம்.//
சரியான நேரத்தில் அவரை ஞாபகப்படுத்தினீர்கள். இன்று வரை பதிவுலகில் அவரை காணவில்லை.
//நன்மையை கொன்று தீமையை ஏவுவோர் மீதும் இதனை ஆதரிப்போர் மீதும் எனது வன்மையான கண்டனங்களை இங்கே தெரிவிக்கிறேன்..!//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோ.
வஅலைக்கும் சலாம் சகோ ஆமினா!
//இனியேனும் ஆரோக்யமான விஷயங்களில் தானும் ஈடுபட்டு மற்றவர்களையும் அதன் பால் ஈர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன் (இன்ஷா அல்லாஹ்)
நல்லதொரு ஆக்கத்திற்கு இறைவன் உங்களுக்கு நற்கூலியை இரட்டிப்பாக்கி தருவானாக ஆமீன்//
வருகைக்கும் கருத்தைப் பதிந்தமைக்கும் நன்றி சகோதரி!
சகோதரி திவ்யா மித்தல்!
//ivargalaal thirattigal pakkam povathaiyae thavirthu vittaen
- dhivya mittal//
உங்கள் பின்னூட்டத்தை பார்த்தாவது இனி ஆபாசமாக எழுதுவதை அவர்கள் குறைத்துக் கொள்ளட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சமூக அக்கறை கொண்ட இந்த பதிவுக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.கூடவே ஈழப்பிரச்சினையையும் தொட்டுள்ளீர்கள்.ஆனால் அதன் பல பரிமாணங்களை நீங்கள் இன்னும் உள்வாங்கிக்கொள்ளவில்லையென்பதோடு விடுதலைப்புலிகள் என்ற ஒற்றைப்பார்வையோடு மட்டுமே உங்கள் கருத்துக்கள் இருப்பதாக படுகிறது.
இலங்கை போன்ற சிறிய நாட்டிற்கு ஒரு அரசு ஒருமுகத்தன்மையோடு இயங்க வேண்டும் என நினைத்தால் போர் முடிந்த காலத்திற்குப் பின் இரண்டு வருடங்கள் என்பதே அதிகம்.
இலங்கை அரசுக்கு இனம் கடந்து செயல்பட அதன் பல தரப்பு மக்களின் நம்பிக்கையை பெறுவது மிக முக்கியம்.விடுதலைப்புலிகளின் தவறுகளை சுட்டிக்காட்டும் தருணத்தில் ராஜபக்சே அரசு செய்ய தவறியதையும், தவறுவதையும் சுட்டிக்காட்டுவதே பக்க சார்பற்ற கருத்து வெளியிடலாக இருக்கும்.
மேற்கத்திய நாடுகளின் சுயநல்ங்கள்,சீனாவின் கடல் பொருளாதாரம்,இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை,காங்கிரஸின் தனிப்பட்ட சுயநல்ங்கள்,தமிழகம்,புலம்பெயர் வாழ் தமிழர்கள்,வட,கிழக்கில் அரசியல் சார்ந்தவர்கள்,குழுக்கள் என பல காரணிகளால் அப்பாவி மக்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டாலும் முக்கிய காரணமாக முழு இலங்கையும் ஒற்றை ஆட்சிக்குள் இயங்குவதறகு தடையாக இருப்பது சம உரிமை என்ற அங்கீகாரமின்மையே.
இந்திய தரத்தோடு ஒப்பிடும்போது சில வசதிகளை வளைகுடாவில் அனுபவித்தாலும் இரண்டாம்தர குடிமகனாக இருப்பதில் ஆட்சேபனையில்லையென்ற மனோபாவத்துடன் கருத்துக்கள் இருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.
நீங்கள் நிரூபன்,ஐடியா மணி என பெயர் சொல்லியே வாதிடலாம்.பின்வாங்க வேண்டிய அவசியமேயில்லை.இதில் என்ன பிரச்சினையென்றால் சமூக அக்கறையோடு நிருபன் பதிவிட்டால் கருத்து பரிமாறலுக்கு மிஞ்சினா ஐந்து பேர் வருவார்கள்.ஆனால் தலைப்பை கோக்கு மாக்கா வைத்தால் நிறைய பேர்களின் கவனம் செல்லுகிறதென நினைக்கின்றேன்.குறிப்பிட்ட இருவரும் தலைப்பில் கவனம் செலுத்தலாம் என்ற ஆதங்கம் எனக்கும் உள்ளது.
ஆரோக்யமான விவாதம் நடக்குது, மகிழ்ச்சி
//உங்களிடமிருந்து இப்படி ஒரு பின்னூட்டமா! இந்த வழியிலேயே தொடருங்கள். வாழ்க்கையின் இன்பத்தை அனுபவிப்பீர்கள். அனுபவித்த நாங்கள் சொல்கிறோம். //
ஹை ஹஸ்கு புஸ்கு ... நைசா நம்மள வேற பக்கம் இழுக்குறீன்களா., எப்படி வாழ்வது என்பதற்கான வரைமுறை வகுக்கபடின் அதில் முழு மூச்சாய் ஈடுபட அடியேன் ரெடி ., வணங்குவது எப்படி என்பது குறித்து இன்னும் நான் தெளிவு பெறவில்லை, தெளிவு பெர்ற்றவர்களை குறைசொல்லவும், அடியேன் தயாரில்லை, (கார்வாங்கியபின்) குறுக்கே வரும் பைக்குகாரனை திட்டுவதர்க்குமுன் நான் பைக் ஓட்டிய காலத்தை நினைத்துபாற்பது எனது வழக்கம். நான் இன்னும் பைக்கே வாங்கலே , இதுல எங்கே பொய் கார்காரனாகி பைக்காரன திட்ட!
அவசியமான பதிவு. திரட்டிகளுக்குச் சென்றால், துபோன்ற ஆபாசத் தலைப்புகள் நிறைந்து கிடக்கிண்றன என்பதினாலும்தான் நானும் திரட்டிகள் பக்கம் செல்வதில்லை. ரீடரில் மட்டுமே படிப்பது.
இவ்வாறு எழுதுபவர்கள் வழக்கமாகச் சொல்வது: நல்லதும் எழுதுகிறோம், ஆபாசமும் எழுதுகிறோம், அதையும் 18+ என்று எச்சரிக்கை செய்தே எழுதுகிறோம் என்ற சலித்த காரணம். நல்லதை எழுதுகிறோம் என்று சொல்கிறார்கள், நல்லதல்லாததை ஏன் எழுத வேண்டும்? மொக்கை/நகைச்சுவை எழுதுவது வேறு. சமூகத்திற்குத் தேவையில்லாததை எழுதி மனதைக் கெடுப்பது வேறு. இதில் 18+ என்று எச்சரிக்கை செய்வது, உண்மையில் எச்சரிக்கை அல்ல, ஆவலைத் தூண்டவே செய்யும் என்பதைத் திண்ணமாய் எழுதுபவர்கள் அறிந்தே செய்கீறார்கள்.
ஒருவர் தம் வாழ்வில் நல்லதுகள் (உதவிகள்) செய்வதாலேயே கெட்டதைச் செய்வதற்கு கூடுதல் உரிமை பெற்றவர்களாய் ஆகிவிட மாட்டார்கள். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், “உபகாரம் செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாதே” என்று. அது இங்கு பொருந்தும்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ஆக்கப்பூர்வமாக எழுதவேண்டிய எத்தனையோ விஷயங்கள் இருந்தும் அவ்வப்போது ஆபாசப் பதிவுகளையும் சேர்த்து எழுதுபவர்களுக்கு சொல்லவேண்டிய அருமையான உபதேசம் சகோ, மாஷா அல்லாஹ்!
சிலர் எழுதும் தலைப்புகளைப் பார்த்தாலே அருவருப்பாக உள்ளது என்பதால், ஃபாலோவராக இருக்கக்கூட பிடிக்கவில்லை :( பதிவுலகில் தமிழ் எழுத்துக்கள் என்றாலே பயனுள்ளவைதான் என்ற நிலை இனியாவது வரவேண்டும்.
திரு ராஜநடராஜன்!
//சமூக அக்கறை கொண்ட இந்த பதிவுக்கு முதற்கண் வாழ்த்துக்கள்.கூடவே ஈழப்பிரச்சினையையும் தொட்டுள்ளீர்கள்.ஆனால் அதன் பல பரிமாணங்களை நீங்கள் இன்னும் உள்வாங்கிக்கொள்ளவில்லையென்பதோடு விடுதலைப்புலிகள் என்ற ஒற்றைப்பார்வையோடு மட்டுமே உங்கள் கருத்துக்கள் இருப்பதாக படுகிறது.//
விடுதலைப் புலிகளைப் பற்றி முன்பு நானும் நல்ல அபிப்ராயமே கொண்டிருந்தேன். ஆனால் அவர்கள் தங்களை எதிர்ப்பவர்களை எந்த தாட்சண்யமும் இல்லாமல் கொலை செய்து வந்ததை பார்த்த பொழுது எனது எண்ணம் முற்றிலுமாக மாறி விட்டது. இவர்கள் கையில் ஆட்சியும் அதிகாரமும் வந்தால் மக்களின் நிலை இன்னும் மோசமாகத்தான் போகும். பத்மனாபா, அமிர்தலிங்கம், ஒரே மொழி பேசிய முஸ்லிம்கள், இவர்களை எதிர்த்த தமிழ் இந்துக்கள் என்று சகட்டு மேனிக்கு ஒரு சர்வாதிகாரம் தான் அங்கு தலைவிரித்தாடியது. எல்லாம் முடிந்து விட்டது. இனி பேசி புண்ணியம் இல்லை.
இதனால் நான் ராஜபக்ஷே தூக்கி வைத்து கொண்டாடவில்லை. தமிழர்களுக்கென்று தனி அரசு அமையும் வரை காலத்தை கடத்தாமல் நமது மத்திய அரசையும், ராஜபக்ஷேயையும சில விடயங்களிலாவது அனுசரித்து சென்று வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல வேண்டும். தற்போதய சூழ்நிலையில் தமிழர்களுக்கு வேறு வழியில்லை. இதைத்தான் நான் சொல்ல வருவது.
//இந்திய தரத்தோடு ஒப்பிடும்போது சில வசதிகளை வளைகுடாவில் அனுபவித்தாலும் இரண்டாம்தர குடிமகனாக இருப்பதில் ஆட்சேபனையில்லையென்ற மனோபாவத்துடன் கருத்துக்கள் இருப்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.//
உங்கள் வாதப்படி வளைகுடாவில் இரண்டாம்தர குடிமகனாக நடத்தப்படுவதாகவே வைத்துக் கொள்வொம். இதனால் எனது படிப்புக்கோ, உத்தியோகத்துக்கோ, மனைவி மக்களோடு வாழ்வதற்கோ விடுமுறையைக் கழிப்பதற்கோ, இறை வழிபாட்டுக்கோ என்ன தடையை பெற்று விட்டேன். ஒரு வெளி நாட்டில் இவை அனைத்தும் ஒரு சாமான்யனுக்கு தொடர்ச்சியாக கிடைக்கும் போது அவன் அந்த நாட்டோடு அதன் சட்ட திட்டத்தோடு ஒத்து போவதில் என்ன பிரச்னை? தனி ஈழம் கிடைக்கும் வரை அரசோடு ஒத்துப் போவதில் இவர்களுக்கு என்ன பிரச்னை. பூகோள ரீதியாக தனி ஈழம் அமைக்க முடியுமா? மலையக மக்களையும் முஸ்லிம்களையும் எப்படி நடத்துவார்கள். அடுத்து தமிழர்களுக்குள்ளே புரையோடிப் பொயிருக்கும் சாதி வேறுபாடு இதை எல்லாம் வென்று ஐடியா மணி நிரூபன் போன்றவர்களை வைத்து தனி ஈழம் அமைத்தால் அது எப்படிப் பட்டதாக இருக்கும் என்பதை நீங்களெ சொல்லுங்கள். ஒன்றுபட்ட இலங்கைதான் நிரந்தர தீர்வு என்பது எனது கருத்து.
//குறிப்பிட்ட இருவரும் தலைப்பில் கவனம் செலுத்தலாம் என்ற ஆதங்கம் எனக்கும் உள்ளது.//
நன்றி! இதை சம்பந்தப்பட்டவர்கள் படிக்க வேண்டும்.
சகோ சி.பி.செந்தில் குமார்!
//ஆரோக்யமான விவாதம் நடக்குது, மகிழ்ச்சி//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோதரி ஹூசைனம்மா!
//நல்லதல்லாததை ஏன் எழுத வேண்டும்? மொக்கை/நகைச்சுவை எழுதுவது வேறு. சமூகத்திற்குத் தேவையில்லாததை எழுதி மனதைக் கெடுப்பது வேறு. இதில் 18+ என்று எச்சரிக்கை செய்வது, உண்மையில் எச்சரிக்கை அல்ல, ஆவலைத் தூண்டவே செய்யும் என்பதைத் திண்ணமாய் எழுதுபவர்கள் அறிந்தே செய்கீறார்கள்.//
சம்பந்தப்பட்ட பதிவர்களுக்கு உண்மையை இதை விட தெளிவாக யாரும் சொல்ல முடியாது.
//ஒருவர் தம் வாழ்வில் நல்லதுகள் (உதவிகள்) செய்வதாலேயே கெட்டதைச் செய்வதற்கு கூடுதல் உரிமை பெற்றவர்களாய் ஆகிவிட மாட்டார்கள். தமிழில் ஒரு பழமொழி சொல்வார்கள், “உபகாரம் செய்யாவிட்டாலும், உபத்திரவம் செய்யாதே” என்று. அது இங்கு பொருந்தும்.//
அருமை! தாய்க் குலமே சொல்வதால் இனி சம்பந்தப்பட்டவர்களின் பதிவில் மாற்றங்களை எதிர்பார்ப்போம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி!
வஅலைக்கும் சலாம்! சகோ அஸ்மா!
//சிலர் எழுதும் தலைப்புகளைப் பார்த்தாலே அருவருப்பாக உள்ளது என்பதால், ஃபாலோவராக இருக்கக்கூட பிடிக்கவில்லை :( பதிவுலகில் தமிழ் எழுத்துக்கள் என்றாலே பயனுள்ளவைதான் என்ற நிலை இனியாவது வரவேண்டும்.//
இவர்கள் இப்படி எழுதுவது அதிக ஃபாலோயர்களையும் படிப்பவர்களையும் கவருவதற்காக என்ற வாதம் வைக்கப்படுகிறது. அது தவறு என்பது உங்கள் பின்னூட்டத்தின் மூலம் அவர்கள் உணர்ந்து கொள்வார்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.
சகோ,
சுவனப்பிரியன்
இன்றைய தமிழ்மணம் சூடான இடுகையில்
எத்தனை ஆபாச பதிவுகள் இருக்கின்றன என்று ஒரு விசிட் அடித்திட்டு வாங்க
http://kaalnadaidoctor.blogspot.com.au/2012/02/blog-post_10.html
மேற்கத்திய நாடுகளின் சுயநல்ங்கள்,சீனாவின் கடல் பொருளாதாரம்,இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை,காங்கிரஸின் தனிப்பட்ட சுயநல்ங்கள்,தமிழகம்,புலம்பெயர் வாழ் தமிழர்கள்,வட,கிழக்கில் அரசியல் சார்ந்தவர்கள்,குழுக்கள் என பல காரணிகளால் அப்பாவி மக்களின் வாழ்க்கை நிலை பாதிக்கப்பட்டாலும் // அடடா...இப்பதான் எல்லா காரணமும் பட்டியலிடப்படுகிறது. இல்லேன்னா ஒரே பேச்சு...இந்தியா தவறு செய்தது(வி.புலிகள் சரியாகவே செய்தார்கள்), அதனால் தான் இப்படி என்றே பாட்டு பாடிக்கொண்டிருப்பார்கள்...
சுவனப்பிரியன் said...
உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்! அது நடந்து விடக் கூடாது என்பதில்தான் சிலர் குறியாக இருக்கின்றனர்.
சகோ சுவனப்பிரியன், சரியாக சொன்னீர்கள். அதுதான் பலருக்கு முக்கியமா பிரச்சனை. அங்கே இலங்கையில் வாழும் மக்கள் பல மதங்களை சேர்ந்தவர்கள் ஒன்றாகி நலமாக வாழக்கூடாது அனுமதிக்க கூடாது இதுவே முக்கியமான குறிகோள். ஒரு சகோதரி சொன்னார் உபகாரம் செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாதே என்று. உதவி என்று ஒன்று செய்தால் தானே தன் உதவி பெற்றவன் நல்வாழ்வை அனுபவிக்கும் சூழலை பார்த்து மகிழ முடியும்.
நான் இன்று பார்வையிட்ட பதிவு இலங்கை விடயங்களை பற்றி சரியாக புரிந்து கொள்ள உதவும்.
புலம்பெயர் தமிழர்களின் கனவு ஈழம்..!
http://funnyworld-star.blogspot.com/2012/02/blog-post.html
http://www.srilankamirror.com/tamil/index.php?option=com_content&view=article&id=11643:2012-02-10-01-54-39&catid=1:2011-08-15-11-15-22&Itemid=337
மதிய அரசு கொடுக்கும் உதவிகளை யாரும் வாங்க வேண்டாம் என்று பிரச்சாரம் செய்யவில்லை. அப்படி கொடுக்குமேயானால் அதை வாங்கி கொள்வதிலும் தவறில்லை. இந்திய கொலைகார அரசுதான் ஈழத்தில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட காரணமாக இருந்தது//
பல்லாயிரக்கணக்கான தமிழர்களை பணயமாக வைத்து அவர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாயிருநத விடுதலைப்புலிகள் பற்றியும் சொல்லணுமா இல்லையா? தான் தப்பிச்சா போதும். மக்கள் செத்தா பரவால்ல என்று இருந்தவர்கள் மாவீரர்களானது எப்படி?
Post a Comment