Followers

Wednesday, June 08, 2011

கடவுளுக்கு இமெயில் எழுதும் அதிமேதாவிகள்!


தங்களை பகுத்தறிவாதிகள் என்றும் கடவுள் நம்பிக்கை உடையவர்களை அறிவை அடகு வைத்தவர்கள் என்ற தொனியிலும் பல பதிவுகளை படித்து வருகிறோம். அதில் உச்சகட்டமாக கடவுளுக்கு இமெயில் எழுத விலாசத்தை தேடிக் கொண்டு ஒரு சில பதிவர்கள் பின்னூட்டம் இட்டும் பதிவுகளும் எழுதி வருகிறார்கள்.

கடவுளை பார்த்தது யார்? கடவுளை எப்படி நம்புகிறீர்கள்? உலகில் உள்ள அனைத்து வேதங்களையும் இறைவன் தரவில்லை. அவை அனைத்தும் மனிதர்களாலேயே எழுதப்பட்டு மக்களின் மனதிலே கடவுளின் வார்த்தை என்று ஏற்றப்பட்டது என்று கூறி வருகின்றனர். உலகில் உள்ள அனைவரும் அனைத்து மதங்களையும் துறக்க வேண்டும். அப்பொழுதுதான் மனிதர்கள் நிம்மதியாக வாழ முடியும் என்றும் கூறி வருகின்றனர். 1500, 2000 வருடங்களுக்கு முன்பு இதே நாத்திகத்தை பேசி வந்த சமணர்கள் காலத்தில் உயிர்பலி நடைபெறவில்லையா? அல்லது தற்காலத்தில் நாத்திக இசமான கம்யூனிச நாடான ரஷ்யாவும், சீனாவும் எந்த பிரச்னையும் இல்லாமல் எந்த உயிர் கொலையும் இல்லாமல் சந்தோஷ வாழ்வு வாழ்கிறார்களா என்று கேட்டால் பதில் வராது. சரி. இந்து மதமும் வேண்டாம்: கிறித்தவ மதமும் வேண்டாம்: இஸ்லாமிய மார்க்கமும் வேண்டாம்: இது அல்லாது நீங்கள் வைத்திருக்கும் வாழ்வு முறை என்ன? என்று கேட்டாலும் எந்த பதிலும் வராது. இன்று ஒரு கொள்கை: நாளை ஒரு கொள்கை: நாளை மறுநாள் வேறொரு கொள்கை என்ற ஒரு நிலையற்ற தன்மையிலேயே வாழ்நாளை கழித்துக் கொண்டிருப்பவர்கள்.

இஸ்லாத்தில் நாத்திகர்கள் மிகவும் கம்மி. எனவே இந்துக்களாகிய நம்மில் சிலர் இஸ்லாமிய பெயர்களில் குர்ஆனையும், முகமது நபியையும் நிந்தித்து பதிவுகளும் பின்னூட்டங்களும் இடுவோம். இதன் மூலம் இஸ்லாத்திலும் நாத்திகம் உள்ளது என்பதை நிறுவி விடலாம் என்ற எண்ணத்தில் யாசிர், இக்பால் செல்வன், சீரா, ஆயிஷா என்று இன்னும் வினவு தளத்திலும் பல முஸ்லிம் பெயர்களிலும் பதிவுகளை எழுதியும் பின்னூட்டம் இட்டும் வருகின்றனர். எவ்வளவு தான் மூடி மறைத்தாலும் அவர்கள் இஸ்லாத்தை எழுதும் முறையை வைத்தே முஸ்லிம்கள் அவர்களை இனம் கண்டு கொள்கின்றனர். பலமுறை இதைப்பற்றி பின்னூட்டத்தில் கேட்டும் இருக்கிறேன். சமாளிப்பாகத்தான் பதிலும் வந்தது.

அடுத்து இவர்கள் தற்போது வைக்கும் எந்த கேள்விகளுமே புதிதாக கேட்கப்படவில்லை. தமிழ் மணத்தில் பல முஸ்லிம் நண்பர்கள் பலமுறை தெளிவாக்கி தீர்வு கண்ட கேள்விகளையே பெயர் மாற்றி கேட்கின்றனர். தற்போதும் சளைக்காமல் அனைத்து கேள்விகளுக்கும் பதில் கொடுத்தே வருகின்றனர் இஸ்லாமிய பதிவர்கள். இதே போன்று நாத்திகர்கள் என்று சொல்லக் கூடிய ஒரு சிலர் இஸலாத்தை விமரிசித்தபோது முஸ்லிம்கள் அவர்களை விவாதத்துக்கு அழைத்தனர்.

அவர்களும் ஒத்துக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் விவாதம் நடந்தது. அதன் காணொளியில் சில பாகங்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள். தற்போது கோவிக் கண்ணன், தருமி, இக்பால் செல்வன் போன்றவர்கள் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் ஏ.கே. அப்துல் ரஹ்மானும், பி.ஜெய்னுல்லாபுதீனும் அளிக்கும் பதில்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் அனைத்து பகுதிகளையும் பொறுமையாக பார்த்தாலே நாத்திக வாதிகளின் வாதங்கள் எந்த அளவு பலஹீனமானது எனபதை விளங்கலாம். இறைவன் என்றால் யார்? அவனது தகுதிகள் என்ன? பிக் பேங் தியரிக்கு முன்னால் உலகின் நிலை என்ன? அறிவியலால் எந்த அளவு செல்ல முடியும்? போன்ற பல கேள்விகளுக்கு விடை உண்டு.

இதிலும் அவர்கள் திருப்தியுறவில்லை என்றால் இதே போன்ற ஒரு விவாதத்தை சென்னையில் மீண்டும் வைப்போம். அவர்கள் தரப்பில் கி.வீரமணி முதற்கொண்டு இன்னும் எத்தனை திறமைசாலிகள் நாத்திக தரப்பில் உள்ளனரோ அனைவரும் வரட்டும். இதற்கு உண்டாகும் அனைத்து செலவுகளையும் முஸ்லிம் தரப்பே ஏற்றுக் கொள்ளும். பிளாக்கரில் கணிணியின் முன்பு அமர்ந்து கொண்டு பதிவுகளையும் பின்னூட்டங்களையும் இடுவதை விட இது சிறந்த வழி. யார் மக்களை ஏமாற்றுகிறார்கள்? யார் மூளை சலவை செய்து உண்மையை மறைக்கிறார்கள் என்ற செய்தி அனைத்து மக்களையும் சென்றடையும். இது வெகு இலகுவான வழி. சம்பந்த பட்டவர்கள் வர வசதியில்லாத போது அவர்கள் தரப்பிலிருந்து யாரையும் அனுப்பட்டும. சென்னையில் வேண்டாம் என்றால் வேறு எந்த மாநிலத்திலும், அல்லது எந்த நாட்டிலும் வைத்துக் கொள்ளலாம்.

இதை ஏதோ விளையாட்டுக்காக கேட்கவில்லை. சீரியஸாகவே கேட்கிறோம்

முஸ்லிம்களாகிய நாங்கள் தயார். நாத்திகர்களாகிய நீங்கள் தயாரா?

------------------------------------------------------------------------------------------------

அறிவியல் அறிஞர்களின் வாக்குமூலங்கள்!

விஞ்ஞானிகளின் கருத்துக்களை கீழே தருகிறேன். இந்த கருத்துக்கள் யாவும்”This is the Truth” என்ற வீடியோ டேப்பிலிருந்து எடுக்கப்பட்டது. இனி அந்த விஞஞானிகளின் கருத்துக்களைப் பார்ப்போம்.

டாக்டர் T.V.N. பெர்சாத்!

இவர் உயிரியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். மேலும்Professor of Pediatrics and Child Health, and Professor of Obstetrics, Gynecology and Reproductive Sciences at the University of Manitoba,Winnipeg,Manitoba,Canada. இவர் உயிரியல் துறையில் பணியாற்றியது 16 வருடங்கள். உயிரியல் துறையில் இவரை அறியாதவர் யாரும் இல்லை எனலாம். மேலும் இவர் அறிவியல் சம்பந்தமாக 22 புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். கனடா நாட்டின் மிக உயரிய விருதான ஜே.சி.பி விருதையும் பெற்றுள்ளார். இனி இவர் குர்ஆனைப் பற்றி கூறுவதைக் கேட்போம்.

'
என்னைக் கேட்டால் முகமது எல்லோரையும் போல சாதாரண மனிதராகத்தான் இருந்திருக்கிறார். அவருக்கு எழுதவும் தெரியாது படிக்கவும் தெரியாது. எனவே மிகப் பெரும் இலக்கியங்களை அறிந்திருக்க வாய்ப்பும் இல்லை. மேலும் 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஒருவரைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். ஒரு சில படிக்காத பாமரன் சொல்லும் ஒரு சில கருத்துக்கள் ஆச்சரியமாக அறிவியலோடு ஒத்துப் போவது எல்லா நாட்டிலும் பார்க்கும் சாதாரண நடைமுறைதான். ஆனால் ஒருவர் சொன்ன அனைத்து கருத்துகளும், அறிவியலோடு எந்த விதத்திலும் மோதவில்லை என்பதை நினைத்து நான் ஆச்சரியப் பட்டு போகிறேன். அவருக்கு தெய்வீகத் தன்மை இருக்க வேண்டும். அல்லது அவர் குர்ஆன் என்று சொல்வது இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

2)
டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன்!

“In every one of you, all components of your creation are collected together in your mothers womb by forty days …..”

-Saheeh Muslim 2643 , Bhuhary – 3208
-Saheeh Muslim 2645

இந்த இரண்டு நபி போதனையிலும் முதல் நாற்பது நாளில் கருவில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்கிறதோ அவை அனைத்தும் மிகத் துல்லியமாக விவரிக்கப் படுவதாக லீ சிம்ப்ஸன்அறிவிக்கிறார்.மருத்துவ கருத்தரங்கில் அவர் பேசும்போது :

'
ஆகையால் இந்த ஹதீஸ்களும் அருமையான அறிவியலைப் பேசுகின்றன. மருத்துவம் படிக்காத, எழுதவும் படிக்கவும் தெரியாத ஒருவர் கருவின் வளர்ச்சியை வரிசையாக பட்டியலிடுவது எனக்கு ஆச்சரியத்தை தருகிறது. எனக்கு முன்னால் இங்கு காலையில் பேசியவர்களின் கருத்தையே நானும் ஆமோதிக்கிறேன். கருவின் வளர்ச்சிக்கும் மதத்துக்கும் சம்பந்தமில்லை என்றாலும் அறிவியலை நடத்திச் செல்வதற்கு குர்ஆனும் ஒரு தூண்டுகோலாய் இருக்கிறது என்பதை மறுக்க முடியபது. இது போன்ற உண்மைகள் முகமது காலத்தில் சொல்லப்பட்டிருப்பதால் இவை அனைத்தும் இறைவனின் வார்த்தைகளாகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு நானும் வருகிறேன்.'

டாக்டர் ஜோ லீ சிம்ப்ஸன் மகப்பேறு, அணுவியல் ஆகிய இரு துறைக்கும் தலைவராக பணியாற்றியவர்.மேலும் மகப்பேறு மருத்துவம், மனிதனின் ஜீன்கள் சம்பந்தமான படிப்பு, அணுவியல் போன்ற துறைகளில் பேராசிரியராக Baylor College Of Medicine, Hoston, Texas,USA யில் பணியாற்றுகிறார். Formerly, he was Professor of OB-Gyn and the chairman of the Department of OB- Gyn at the university of Tennessee, Memphis, USA. He was also the president of the American Fertility Society. He has received many awards, including the Association of Professors of Obstetrics and Gynecology Public Recognition Award in 1992.

3)
டாக்டர் இ மார்ஸல் ஜான்ஸன்!

இவர் 200க்கும் அதிகமாக அறிவியல் சம்பந்தமான புத்தகங்களை எழுதியிருக்கிறார். 1981 ல் சவூதி அரேபியா தமாமில் நடந்த மருத்துவ கருத்தரங்கில் தனது அறிக்கையை வாசிக்கும் போது :

'
குர்ஆன் கருவியலின் வெளிப்புறத்தை மட்டும் சொல்லவில்லை. கருவின் உள்ளே நடக்கும் அனைத்து படித்தரங்களையும் எந்த ஒரு சந்தேகமும் இல்லாமல், இன்றைய அறிவியல் உண்மைகளை அடித்துக் கூறுகிறது.ஒரு விஞ்ஞானி என்ற நிலையில் ஒன்றைப் பார்த்து உறுதி செய்து அதன் பிறகுதான் நம்பிக்கை வைப்பேன். மனிதனின் உடற்கூறுகளை நன்கு அறிந்தவன்.உயிரியல் துறையிலும் நன்கு தேர்ந்தவன். குர்ஆனின் மொழி பெயர்ப்பு எனக்கு அங்கிலத்தில் தரப் பட்டது. குர்ஆனிலிருந்து உதாரணங்களை நான் எடுப்பதற்கு முன் முகமதுவுடைய காலத்துக்கு நான் செல்கிறேன். என்னால் அவருடைய போதனைகளை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.குர்ஆன் முகமது நபியால் சொந்தமாக தன் கற்பனையில் சொல்லியிருக்க முடியாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன்.'

Dr e. Marshall Johnson is Professor Emeritus of Anatomy and Developmental Biology at Thomas Jefferson University, Philadelphia, Pennsylvania,USA. There for 22 years he was Professor of Anatomy, the chairman of the department of Anatomy, and the director of the Daniel Baugh Institute. He was also the president of the Teratology society.

4)
டாக்டர் வில்லியம் ஹே!

டாக்டர் வில்லியம் ஹே கடல் அராய்ச்சியில் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானி.

'
இந்த பழமை வாய்ந்த குர்ஆனின் உண்மைகளைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். இது போன்ற உண்மைகள் முகமதுக்கு எப்படி கிடைத்தது என்பது எனக்கு மிகப் பெரும் ஆச்சரியத்தை அளிக்கிறது. குர்ஆனின் வரிகளை படிக்கும் போது வியப்பின் உச்சத்துக்கே சென்று விடுகிறேன்.இந்த குர்ஆன் ஒரு தெய்வீகத் தன்மை வாய்ந்தது என்று தான் நான் நினைக்கிறேன்.'

Dr William W.Hay is a well known marine scientist. He is professor of Geological Sciences at the University of Colorado, Boulder, Colorado,USA. He was formerly the Dean of the Rosential School of Marine and Atmospheric Science at the university of Miami,Miami, Florida.

5)
டாக்டர் ஜெரால்ட் சி. ஜோரிங்கர்

'
நான் சில குர்ஆனின் வசனங்களைப் படிக்கும் போது மனிதனின் உருவாக்கம் எந்த அளவு துல்லியமாக விளக்கப் பட்டுள்ளது என்பதை அறிந்து ஆச்சரியப் படுகிறேன்.எந்த ஒரு வேறுபாடும் அறிவியலுக்கும் குர்ஆனுக்கும் என்னால் காண முடியவில்லை. அறிவியலையும் குர்ஆனையும் என்னால் பிரித்துப் பார்க்கவும் முடியவில்லை.அறிவியல் வார்த்தைகளைக் குர்ஆன் அழகாக கையாள்கிறது. பல வருடங்கள் சிரமப்பட்டு ஒரு அறிவியல் புத்தகத்தை ஒருவர்உண்டாக்கினால் எப்படி இருக்குமோ அது போன்ற ஒரு தோற்றத்தை குர்அன் எனக்குத் தருகிறது.

Dr. Gerald C. Goeringer is course Director and Associate Professor of Medical Embryology at the Department of cell Biology, school of Medicine, Georgetown University, Washington, DC, USA.

6)
டாக்டர் யோசிஹிடே கோசாய்!

'
வானவியலைப் பற்றி குர்ஆன் கூறும் உண்மைகளை கண்டு நான் பிரமிப்படைகிறேன். வானவியல் அறிஞர்களான எங்களைப் போன்றவர்கள் இந்த உலகத்தின் ஒரு சிறு பகுதியைத்தான் இதுவரை ஆராய்ந்திருக்கிறோம். இன்னும் கண்டு பிடிக்க வேண்டியவை எண்ணிலடங்கா! அப்படி கண்டு பிடிப்பதற்குக் கூட அரிய தொலை நோக்கு கருவிகள், அறிவியல் அறிவு போன்றவை அவசியம். இவை அனைத்தும் தனக்குத் தேவையில்லை என்பது போல் குர்ஆனின் உண்மைகள் அமைந்திருக்கின்றன. வருங்காலத்தில் மேலும் பல உண்மைகள் வானவியலைப் பற்றி அறிய குர்ஆன் உதவி புரியும் என்று நினைக்கிறேன்.'

Dr Yoshihide Kozai is Professor Emeritus at Tokyo University, Hongo, Tokyo,Japan, and was the Director of the National Astronomical Observatory, Mitaka, Tokyo, Japan.

7)
பேராசிரியர் தேஜாதத் தேஜாசென்!

மூன்று வருடங்களுக்கு முன்பு தான் குர்ஆனோடு எனக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த கருத்தரங்கின் மூலம் பல உண்மைகளைத் தெரிந்து கொண்டேன். 1400 வருடங்களுக்கு முன்பே அனைத்து உண்மைகளும் குர்ஆனில் பதியப்பட்டுள்ளது என்பதை உணர்கிறேன்.அறிவியலோடு எந்த வகையிலும் மோதாத ஒரு புனித நூலாக குர்ஆனைப் பார்க்கிறேன்.எழுதப் படிக்கத் தெரியாத ஒரு நபரால் இத்தகைய அறிவியல் உண்மைகளை கற்பனையில் கொண்டு வர முடியாது என்பதை ஒரு விஞ்ஞானி என்ற முறையில் ஒத்துக் கொள்கிறேன். இந்த குர்ஆனைக் கொடுத்தது நம்மையெல்லாம் படைத்த அந்த ஒரே இறைவன்தான் என்பதை உறுதி செய்கிறேன். நான் நினைக்கிறேன், நான் முஸ்லிமாக மாறுவதற்கு தருணம் இது தாள் என்று! 'லாயிலாஹா இல்லல்லாஹ் முகம்மதுர் ரசூலுல்லாஹ்' (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை! முகமது நபி அந்த இறைவனின் தூதராக இருக்கிறார்' என்பதை உளமாற ஏற்று இஸ்லாமிய மார்க்கத்துக்குள் நுழைகிறேன். இந்த கருத்தரங்கினால் பல அறிவியல் விற்பன்னர்களைக் காணும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. இவை அனைத்திற்கும் இறைவனுக்கு நன்றி சொல்லக் கடமை பட்டுள்ளேன்.'

Professor Tejatat Tejasen is the chairman of the Department of Anatomy at Chiang Mai University, Chiang Mai, Thailand. Previously he was the Dean of the Faculty Of Medicine at the same University.

Evidence from
“The Scientific Miracles in the Holy Quran”
“This is the Truth” Video Tape

சுவாமி விவேகானந்தர்

மற்ற அனைத்து மக்களையும் விட அத்வைத கொள்கை தங்களுக்கு முன்னரே அறிமுகமாய் இருப்பதற்கு இந்துக்கள் பெருமை அடையலாம். ஆயினும் நடைமுறை அத்வைதம்- அதாவது மாந்தர்கள் அனைவரையும் தம்மைப் போல் சமமானவர் என்று பாவிப்பதும், அவ்வாறே நடந்து கொள்ளும் தன்மையும் இந்துக்கள் மத்தியில் அறவே மலரவில்லை. ஆனால் இத்தகைய சமத்துவத்தை ஒரு மதம் பாராட்டத்தக்க அளவில் அணுகி இருக்கிறது என்றால் அது இஸ்லாம் மட்டுமே என்று நான் அனுபவ பூர்வமாய்க் கூறுகிறேன்.

நான் அழுத்தமாய்ச் சொல்கிறேன், நடைமுறைக்கு இசைவான இந்த இஸ்லாமிய செயல் பாடின்றி வேதாந்தக் கருத்துக்கள் - அது எவ்வளவு தான் சிறப்பானதாக பெருமைக்குரியதாக இருந்தாலும்- பரந்து கிடக்கும் மனித குலத்துக்கு அது பயனற்றதாகவே அமையும்.

Letters Of Swamy Vivekananda page 463

அன்னி பெசன்ட் அம்மையார்

அரேபியாவின் இந்தத் துதருடைய வாழ்க்கையையும், ஒழுக்கப் பண்புகளையும், தூய நடத்தையையும் படிப்பவர்கள் அவர் எப்படி வாழ்ந்தார் என்பதை அறிந்தவர்களுக்கு அந்த வல்லமை மிக்க மாபெரும் இறைத் தூதர்களில் ஒருவரான இறுதித் தூதரைக் குறித்து உயர்வான எண்ணமே ஏற்படும். எனது இந்த நூலில் நான் பலருக்கும் தெரிந்த பல விஷயங்களையே சொல்லி இருக்கிறேன் என்றாலும் நானே அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கும் ஒவ்வொரு முறையும் ஆற்றல் மிக்க அரபு போதகரின் மீது புதிய ஒரு மதிப்பும் புதிய ஒரு மரியாதை உணர்வும் ஏற்படுவதை நான உணர்கிறேன்.

Annie Besant, The life and Teachings of Mohamed 1932, page 4

சர் சி.பி.ராமசாமி அய்யர்

இஸ்லாம் என்றால் எனன? இன்றைக்கு உலகில் செயல்படும் ஒரே ஜனநாயக நெறி என்றே இஸ்லாத்தை நானும் மற்ற சிந்தனையாளர்களும் கருதுகிறோம். நான் ஓர் இந்து. இந்து சமய நம்பிக்கையில் ஆழ்ந்த பற்று கொண்டிருந்தாலும் நான் இதை தைரியமாகவே கூறுகிறேன். மனித குலம் ஒன்றே என்பது இந்து மதத்தின் அடிப்படை தத்துவமாக இருந்தாலும் அதனை நடைமுறைப் படுத்துவதில் எனது சொந்த மதம் வெற்றி பெற வில்லை. இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே எனும் அடிப்படைச் சிந்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையைப் போனறு வேறெந்த மதமும் - அவற்றின் மதக் கருத்தோட்டம் எதுவாயினும் சரியே- கடைபிடிக்கவில்லை. தென் ஆப்ரிக்காவின் போயர் இன மக்கள் பிரச்னை, ஆஸ்திரேலியா அல்லது தென் அமெரிக்க நாடுகள் அல்லது இங்கிலாந்தின் பல்வேறு தரப்பட்ட மக்களின் பிரச்னைகள் போன்று இஸ்லாத்தில் எத்தகைய இனப் பிரச்னைகளும் இருக்கவில்லை.

Sir C.P. Ramasamy Iyer, Eastern Times, 22nd December, 1944

சரோஜினி நாயுடு

இஸ்லாம் தோற்றுவித்த உன்னத மரபுகளில் ஒன்று நீதி மற்றும் நியாய உணர்வாகும். குர்ஆனை நான் ஆய்ந்து படித்த போது அது அறிவுறுத்திய புரட்சிகரமான கொள்கைகள், வெற்று ஞானமாக இல்லாமல் வாழ்வின் நடை முறை போதனையாக நடைமுறை வாழ்வுக்கு இசைவானதாக முழு உலகிற்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதைக் கண்டேன்.

-Sarojini Naidu, Lectures on”The Ideals Of Islam” see sand writings of Sarojini Naidu, Madras, page 167

வானத்தையும், பூமியையும் அவற்றிடையே இருப்பவற்றையும் நாம் விளையாட்டாகப் படைக்கவில்லை. விளையாட்டொன்றை செய்து கொள்ள வேண்டியிருப்பின் எம்மிலிருந்தே அதனைச் செய்திருப்போம். நாம் அவ்வாறு செய்பவர்களாக இருக்கவில்லை. (ஸூரா அன்பியா: 16,17)

60 comments:

saarvaakan said...

மிக்க நன்றி.கல்க்கிறீங்க.இந்த விஞ்ஞானிகளை பற்றி ஆய்ந்து சில பதிவுகள் போடலாம். அந்த ஹதிதுகளின் தமிழாக்களை முழுதாக் வெளியிட்டு இருந்தால் நல்மாக இருக்கும்.40 நாளுக்கு முந்திய கரு என்றால் " அலக்" என்னும் வார்த்தையை வைத்து விளையாட்டு என்று நினைக்கிறேன்.இது குறித்த என்னுடைய பதிவு ஒன்று.


நான் பதிவிடுவது,விவாதிப்பது மாற்று கருத்துகளை தெரிவிக்கவே..கண்ணி யுகத்தில் இன்று விவாதிக்கப் படும் கருத்துகள் இனி வரும் சந்ததிக்கும் தெரிய வேண்டும் என்பத்ற்காகவே பதிவிடுகிறோம்.மாற்றுக் கருத்துகளையும் அப்படியே வெளியிடுவதும் அதற்க்காகத்தான்.

நான் ஒரு தனி மனிதன்.வேலை,குடும்பம் போக மிச்சம் இருக்கும் நேரத்தில் மத ஆய்வு தொடர்பான என் கட்டுரைகளை வெளியிடுகிறேன்.நீங்கள் சொல்வது பார்த்தால் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள் போல் தெரிகிறதே.இந்த மத பிரச்சாரத்திற்காகவே பல ஆட்களை சவுதி இறக்கி விட்டுள்ளது என்ற கணிப்பு சரியா?

பிற மதங்கள் போன்றதுதான் இஸ்லாமும்.சில நிறை குறைகள் உண்டு.முழுக்க முழுக்க நம்பிக்கையின் படி மட்டுமே அமைந்த மதங்களில் ஒன்று.
1.இப்பதிவில் நீங்கள் மேற்கோள் காட்டும் எத்தனை பேர் இஸ்லாமியர்?
அல்லது ஏற்றுக் கொண்டார்கள்?.

2.விவேகானந்த்ரை சுவாமி என்றால் இணைவைப்பது ஆகாதா?

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரரே..
இந்த கொசுக்களின் தொல்லை தாங்க முடியவில்லை.. மல்லாக்க படுத்துக் கொண்டு தீவிரமாக யோசித்து அறிவு ஜீவி ஆக முயற்சிக்கும் கைப்பிள்ளைகள் இவர்கள். ஒரு கருத்தியலை அறிந்து கொள்வதற்கு இவர்கள் அதை சார்ந்தவர்களை அணுகுவதில்லை .. மாறாக அதற்க்கு முற்றிலுமான எதிர் கருத்து கொண்ட குழுவினரிடம் சென்று அவர்கள் எடுத்த வாந்திகளை உண்டு விட்டு, அஜீரண கோளாறால் அங்கிங்கு அலைபவர்கள்.. Its like somebody who learns communism from the CEO of pepsi.
இவர்களின் மற்ற இடுகைகளை பார்த்தால் அவற்றின் பின்னூட்டங்களின் எண்ணிக்கை மிக சொற்பமே,, இஸ்லாம் மீதான விமர்சனங்களுக்கு அவர்கள் பெரும் வரவேற்பு தான் இந்த மாதிரியான பதிவுகளை எழுத தூண்டுகிறது.. இதை அவர்கள் தவறாக புரிந்து கொண்டு தன்னை தானே அறிவு ஜீவிகளாக நினைத்துக் கொள்கிறார்கள்.. இது ஒரு வகையான வியாதி.. குணப்படுத்துவது கடினம் சகோதரரே..
ஆரம்ப காலங்களில் நடுநிலை வாதிகளாய் தம்மை காட்டிக்கொண்டு, சகோ சகோ என்று வார்த்தைகளில் தேன் தடவி பேசி.. பின்னர் தன் நிஜ முகம் காட்டும் நபர்கள் இவர்கள்.. எச்சரிக்கை ஆக இருப்போம்..

கோவி.கண்ணன் said...

//அவர்களும் ஒத்துக் கொண்டு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் விவாதம் நடந்தது. அதன் காணொளியில் சில பாகங்களைத்தான் மேலே பார்க்கிறீர்கள். தற்போது கோவிக் கண்ணன், தருமி, இக்பால் செல்வன் போன்றவர்கள் வைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் ஏ.கே. அப்துல் ரஹ்மானும், பி.ஜெய்னுல்லாபுதீனும் அளிக்கும் பதில்கள் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.//

மற்றவர்கள் பற்றி எனக்கு கருத்து இல்லை, என் பெயரைக் குறிப்பிட்டு இருப்பதால் நான் சொல்லும் பதில்

"மதவாதிகளிடம் நான் விவாதம் வைத்துக் கொள்வதில்லை, ஆனால் பெண் சுதந்திரம் மற்றும் சமூக நலன் என்ற பெயரில் கருத்துகள் இஸ்லாம் பெயரில் திணிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு மறுப்பு எழுதிவருகிறேன்...குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் பெண்கள் காரோட்டத் தடை பாதுகாப்பு தொடர்புடையது மற்றும் உலகுக்கே சவுதி அரேபியாதான் வழிகாட்டுகிறது போன்றவை"

அல்லாவுக்கு உருவம் உண்டு என்று வாதிட்டு வரும் பிஜே அவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் ஏன் பதில் சொல்வதோ, விவாததிற்கோ அழைப்பது இல்லை ?

இஸ்லாம் மட்டுமல்ல, புதிதாக ஒரு மதம் தோன்றினாலும் அதற்கு உலகில் பல பகுதிகளில் சில தலைவர்கள் அது குறித்து தமக்கு பிடித்தக் கருத்துகளைக் கூறுவார்கள், அது அவர்களது மத நல்லிணக்கம் பற்றிய கருத்து மட்டுமே அவை சான்றிதழ் ஆகா. மட்டுமின்றி போற்றுதல் போலவே பல்வேறு தரப்பின் விமர்சனங்களும் உண்டு என்கிற புரிந்துணர்வுகள் வராதவரை பக்கசார்பாளர்களுக்கு பதிலே கிடைக்காது.

உலகில் மாற்றம் ஒன்று மட்டுமே நிலையானது மற்ற்வை எல்லாம் குறிப்பாக மதங்கள் அனைத்துமே காலத்தால் அழியும். முடிந்தால் அறிஞர் அண்ணாவின் மாஜி கடவுள்கள் பற்றி படித்துப்பாருங்கள், ஒருகாலத்தில் ஆளுமை செலுத்திய கடவுள் தற்போது மியூசியத்தில் இருப்பது தெரியவரும். நான் எதையும் குறிப்பிட்டுச் சொல்லாவிடிலும் ஒன்று சொல்லிக் கொள்கிறேன், மனிதகுல விரோதமாக வளரும் எதுவும் அழிந்துவிடும் அல்லது மறக்கப்பட்டுவிடும்.

நீங்கள் முகமது ஆசிக்கைப் போன்று எனக்கு அல்லாவின் பெயரில் சாந்தியும் சமாதானமும் சொல்வதில்லை, காரணம் காஃபிர்களுக்கு அதையெல்லாம் சொல்லக் கூடாது என்று உங்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கிறது, உங்களுக்கு சுவனம் கிடைக்க வாழ்த்து சொல்லவரவில்லை (காஃபிர்களின் வாழ்த்தை ஏற்கக் கூடாது என்று உங்களுக்குத் தெரியும்) அதனால் நம்பிக்கை மட்டுமே தெரிவிக்கிறேன். அவருக்கும் கொஞ்சம் சொல்லிக் கொடுங்கள், அவரும் உங்களோடு சுவனம் வரட்டும்.

நன்றி.


நல்லது மதம் தொடர்புடைய விவாதங்களில் இதுவே உங்களுக்கு நான் இடும் கடைசி பின்னூட்டம், குறிப்பாக நான் மதவாதிகளிடம் விவாதிப்பதில்லை என்பதை மீண்டும் சொல்லிக் கொண்டு விடை பெறுகிறேன்.

எண்ணங்கள் 13189034291840215795 said...

பின் தொடர

எண்ணங்கள் 13189034291840215795 said...

பின் தொடர

சமுத்ரா said...

good one...நல்ல அலசல்..

வாஞ்ஜூர் said...

//விவாததிற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் தயார். நாத்திகர்களாகிய நீங்கள் தயாரா? //

சரியான சவால். பதில் வராது.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் அள்ள முடியும்.

" என்னெவென்று சொல்லி ஏதுரைத்தாலும் கந்தனுக்கு புத்தி கவட்டுக்குள்ளே"

என்று கிராமங்களில் ஒரு சொல் வழக்குண்டு.

.

Anonymous said...

வணக்கம் சகோ. நல்ல பதிவு. ஆனால் சில திருத்தங்கள். நீங்கள் இஸ்லாமில் நம்பும் பல விடயங்களும் நம்பிக்கைச் சார்ந்தது. அவற்றில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. உங்கள் நம்பிக்கை உங்களோடு இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அதே நம்பிக்கையை நாமும் ஏற்க வேண்டும் எனத் திணிப்பது எவ்வகை நியாயம் ? ஒருவரின் நம்பிக்கை அடிப்படையில் மற்றவரின் s சுதந்திரத்துக்குள் தலையிடுவதை நான் எதிர்க்கின்றேன் .. அதே போல கருத்துரிமைகளின் குரலை நசுக்கும் வேலைகளையும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன் ...

ஏன் நாம் நம்பாத ஒரு இஸ்லாத்துக்காக விவாதத்தில் ஈடுபட வேண்டும் .. ஈடுப்பட்டு என்னப் பயன்.. ஈடுபடும் இருத்தரம் முடிவில் தத்தமது நம்பிக்கையில் இருந்து ஒரு துளியும் மாறப் போவதில்லை என்பதே உண்மை ... அப்படியான விவாதங்கள் தேவையற்ற ஒன்று !!! என்பது எனதுக் கருத்து ... அப்படி ஒரு விவாதம் நடத்தித் தான் ஆக வேண்டும் எனில் அதனை செமினாராக புத்திஜீவிகளைக் கூட்டி நடத்துவதே உசிதம் .... அதுவே ஆரோக்யமானது ... ஆனால் அப்படியான செமினார்களில் பொதுச் சபையில் பேச முடியாத பலவற்றை எடுத்து வைக்க வேண்டி வரும், முகமதுவின் படங்களும் இடம்பெறலாம். அதனை விவாதக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கும் மனோபாவம் அனைவருக்கும் வருமா என்பது சந்தேகமே ..

Anonymous said...

மற்றப்படி பொது மேடையில் பேசுவோர் அனைவரும் அனைத்து மதங்களையும் புகழ்வது ஒரு சம்பிரதாயம்.. அவர்களின் ஆழ்மனங்களில் இருப்பதை எவனும் வெளிப்படுத்தாமல் நடிப்பவர்களே ? ஒபாமாவும், டோனி ப்ளேரும் கூட இஸ்லாம் அமைதி மார்க்கம் என சம்பிரதாயத்துக்காக கூறுகின்றார்கள். இதே சம்பிரதாயத் தனத்தை சீக்கிய, இந்து, பௌத்த , யூத என அனைத்துக்கும் கூறுவது மரபு...

அடுத்தது இங்கு யாரும் இஸ்லாமிய பெயரில் பொய் பேச வேண்டியக் கட்டாயம் இல்லை. இக்பால் என்பது இஸ்லாமிய பெயரும் இல்லை, நான் பேசுவது எல்லாம் பொய்யும் எல்லை..

இங்கு பலரைப் போல ஜகா வாங்க எனக்குத் தெரியாது, மனதில் பட்டத்தை பட் என போட்டு உடைத்துவிடுவேன் .. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசத் தெரியாதவன் ..

இன்னொரு திருத்தம் சமணர்கள் காலத்தில் உயிர்ப் பலி நிகழ்த்தியது சமணர்கள் இல்லை .. சமண மதம் ஓங்கிய காலத்தில் தமிழகத்தில் போர்கள் நடைப்பெறாமல் அமைதியான தேசமாகத் தான் இதுவும் இருந்தது ...

மற்றொன்று இஸ்லாத்தைக் காட்டிலும் பல்வேறு அறிவியல், உளவியல் கோட்பாடுகள் பலவும் 2600 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சமண, பௌத்தத்தில் தாராளமாக இருக்கின்றன ? அதனால் அவை தான் உயர்ந்தது, அதில் சொன்னது மட்டும் தான் உண்மை மற்றது எல்லாம் குப்பை எனக் கூறிவிடலாமா?

பொதுச் சபைக்கு வந்த பின் அனைத்து சமயங்களையும், அனைவரும் விமர்சனப் படுத்த வேண்டும் ... அது தான் பேச்சு உரிமை.. இதனை சென்சேனல் படுத்தி அடக்க நினைப்பது பாசிசமாகவே கருத இயலும்..

தொடருங்கள் .. உங்களின் மற்றும் ஆசிக் அகமது போன்றோரின் அனைத்து பதிவுகளையும் படித்து வருகின்றேன். சில உடன்படாதவைகள் என்றெல்லாம் படிக்கின்றேன். அறிவது சிறப்பு ! தனி மனித தாக்குதலையோ , கட்டுகதைகளையோ பரப்பி உளமகிழும் எண்ணம் எமக்கு துளியும் இருந்ததும் இல்லை , இருக்கப் போவதும் இல்லை ..

முகமது ஆசிக்கின் செயல் வருத்தமளிப்பதாகவே இருந்தது .. அதனை வேறு ஒருவர் செய்திருந்தால் விட்டு விட்டிருப்பேன்.. ஆனால் மெத்தப் படித்த ஒருவர் செய்தது வருத்தத்தைத் தந்தது. அடுத்தப் பதிவிலேயே பேச்சின் கண்ணியம் குறித்து எழுதியது சிரிப்பை வரவழைத்தது..

Anonymous said...

இஸ்லாத்தில் இருக்கும் 100 % மோசமானது எனவோ, அல்லது 100 % உன்னதாமனது எனவோ நான் கருதவில்லை. நிறை குறைகள் இருக்கின்றன.. நிறைகள் வரவேற்கப்படும் அதே சூழலில் குறைகளை சுட்டிக் காட்டுவது எனது குணம் .. அதனை மாற்றுவது என்னால் இயலாத ஒன்று சகோ..

அதே போல பல சமயங்களின் இருப்பையும், அந்த சமயங்களையும் இஸ்லாமியர் ஏற்றுத் தான் ஆகவேண்டும். அவற்றில் இருக்கும் குறைகளை சுட்டிக் காடியும், நிறைகளை போற்றவும் வேண்டும்.. ஏனெனில் மனித சமூகம் என்பது அனைவரையும் உள்ளடக்கியது.

இக்கருத்துக்களை தணிக்கை செய்யாமல் வெளியிட்ட தங்கள் அன்புக்கு மிக்க நன்றிகள்.

Anonymous said...

Iqbal,
When you discuss/argue about one's belief , you should stay in the boundary. For the sake of argument, we shouldn't question somebody's birth.
You don't believe in any religion. Then why do you compare different religious scripts and write a sensational blog? You don't believe anything to be the word of God.. then u don't have to quote them. You don't have to show your intellectual there. Playing a guessing game about origins of religions based on ur KNOWLEDGE..
Being an atheist, you believe that everything got created on your own.. For me, it sounds illogical but for u, its ur fundamental theory of evolution. You believe a man called 'Darvin'.
When you argue with a believer of any religion, u can discuss on the principles of that religion and how they get applied to this world. That makes an valid argument. You don't show your intelligence on their religions. You argue from your own ground..

Mr Saarvaagan...
The scientists are stating the fact and its up to them to convert.. There are hundreds of scientists converted to islam just because of the quranic verses. does that prove anything to you?
Yes, you are busy with your own life. Sure :) Saudi doesn't have to spend money on this. Muslims are always ready to defend their faith. They don't need to work for petty money.so don't guess again... :)
swami vivekananda.. we dint mean him to be a GOD.. we consider this to be a title.. "Master". so its not idolatry. Thanks for your understanding..
GOVI.. u dont believe in a religious fanatic's wishes.. You r a great student from ali sina's university. I appreciate it. Islam doesnt prohibit us from saying salam to non-believers. Since u dont need/believe that.. please dont bother..

Anonymous said...

@ Anonymous - Thanks for your nameless namesake comments. You say - // you should stay in the boundary //

Can you draw me what is that boundary exactly to stick with. Then drafting a boundary line, please quote me where do I gone beyond the boundary, Please explain the problem you saw created by me going beyond the boundary.

Do you know I am an Atheist ?. Thats great funny lol. ! Okay let me be an Atheist. So in your POV an Atheist don't have intellectual right to quote religions and discuss.? What made you think I cannot quote because I am beleiving your thoughts right ! So, Why do you guys doing the same for the thing or religions you don't beleive in ? thats again a great lol !

Also Who is that damn s*** darvin .. lol ... U mean Darwin ?

I am not here to show my intellectual ability here ? But I put forth my doubts on the grounds of theories explained in all religions I study and go for the further discussion purely on discussion , but some of you guys dance a baila for no matter things. thats great fun in this intellectual world.

suvanappiriyan said...

சார்வாகன்!

//நான் ஒரு தனி மனிதன்.வேலை,குடும்பம் போக மிச்சம் இருக்கும் நேரத்தில் மத ஆய்வு தொடர்பான என் கட்டுரைகளை வெளியிடுகிறேன்.//

எனக்கு மட்டும் குடும்பம், வேலை எல்லாம் இல்லையா? அல்லது விவாதத்தில் ஈடுபடும் பி.ஜே, அப்துல் ரஹ்மானுக்கு குடும்பம் வேலைகள் இல்லையா? வேலை நேரம் போக கிடைக்கும் ஓய்வு நேரத்தில்தான் இது போன்ற பதிவுகளை இடுகிறோம். எனவே ஒரு முடிவு தெரிவதற்காக ஒரு நாள் அதுவும் விடுமுறை நாளை ஒதுக்குவது சிரமமிருக்காது. ஒன்றுக்கும் உதவாத ஒரு முழு சினிமாவை பார்க்க மூன்று மணி நேரம் ஒதுக்கும் போது கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள ஒரு நாள் ஒதுக்க முடியாதா?

//நீங்கள் சொல்வது பார்த்தால் எல்லா நாடுகளிலும் எல்லா இடங்களிலும் ஆட்கள் இருக்கிறார்கள் போல் தெரிகிறதே.இந்த மத பிரச்சாரத்திற்காகவே பல ஆட்களை சவுதி இறக்கி விட்டுள்ளது என்ற கணிப்பு சரியா?//

வழக்கமான தவறான புரிதல். விவாதத்துக்கான செலவுகளை பதிவர்களாகிய எங்களின் சொந்த பணத்தைத்தான் தருகிறோம். சவூதி அரசிடமிருந்து இதுவரை ஒரு சல்லி காசு கூட இதுவரை வாங்கியதில்லை. நல்ல விஷயத்தை சொல்வதற்கு அப்படி அவர்கள் கொடுத்தால் அதை வாங்குவதில் தவறும் இல்லை. எங்கு கொடுக்கிறார்கள் என்ற விபரத்தை சொன்னால் வாங்கிக் கொள்ள வசதியாக இருக்கும். :-)

//1.இப்பதிவில் நீங்கள் மேற்கோள் காட்டும் எத்தனை பேர் இஸ்லாமியர்?
அல்லது ஏற்றுக் கொண்டார்கள்?.//

இஸ்லாத்தை ஏற்க வேண்டாம். அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. குறைந்த பட்சம் தூற்றுவதில்லை. குர்ஆனை இகழ்வதிலலை. முகமது நபியை நிந்திப்பதில்லை.

நீங்களும் நாத்திகர்தான். தமிழனும், இக்பால் செல்வனும் நாத்திகர்கள்தான். ஆனால் விமர்சனத்தை எடுத்து வைப்பதில் உங்களுக்கும் அவர்களுக்கும் எத்தனை வித்தியாசம் என்பதை நீங்களும் உணர்வீர்கள். உங்களின் தேடலை நானும் வரவேற்கிறேன். ஒரு சராசரி இஸ்லாமியரை விட அதிகம் இஸ்லாமிய கருத்துக்களை தெரிந்து வைத்துள்ளீர்கள். நீங்கள் கேட்ட எந்த கேள்வியும் தருமி பதிவு முதற்கொண்டு எனக்கு எந்த சங்கடத்தையும் ஏற்படுத்தவில்லை. இதே அணுகுமுறையில் இனியும் எனக்கு ஏற்படப்போவதில்லை.

//2.விவேகானந்த்ரை சுவாமி என்றால் இணைவைப்பது ஆகாதா?//

எப்படி இணை வைப்பதாகும்? 'சுவாமி விவேகானந்தர்' என்ற அடை மொழியோடுதான் உலகம் முழுதும் அறியப்படுகிறார். துறவி என்ற அர்த்தத்தில்தான் இங்கு இந்த சொல் இவருக்கு பயன்படுத்தப்படுகிறது.

Anonymous said...

iqbal,
u r not an atheist? then what the hell are u.. at least, u can clarify ur side what u trying to prove..
oh.. u r correcting the spelling for a noun.. glad u got it right.. so before we discuss, tell me what is ur theory u base ur arguments on..

when you discuss about islam, the muslims are not comfortable with ur pictorial depiction of our prophet. u were not honest enough to remove that and continue with your argument. thats the boundary.. dont bring that freedom of expression shit..
where did you learn religions? just reading ali sina or some third rated blogs, u dont become intellectual. .
Why dont u share ur findings with us? what is your final say? please enlighten me.

U can use our religious scripts to argue with us.. but being a so called 'what-so-ever', u dont have to compare religions and pen ur verdict..

keep your lols with u .. i do have enuf..

ஷர்புதீன் said...

நீங்கள் எல்லோரும் கடவுள் குறித்தும் , நம்பிக்கைகள் குறித்தும் எழுதி வரும் நேரத்தில் எனக்கு உள்ள கருத்தே வேறு மாதிரியாக இருக்கிறது., அதனை வார்த்தைகளில் சொல்லலாமா , இல்லை வீடியோ எடுத்து பதிவிட்டு விவாதம் நடத்தலாம என்பதில்தான் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக குழம்பி வருகிறேன்.

ஏதேனும் ஒரு மாதத்தில் இருப்பவர்களிடம் என்னால் இது குறித்து பேச முடியவில்லை, காரணம் அவர்களிடம் அவர்களது மதம் குறித்த பயங்கர ஈடுபாடு அவர்களை ஒரு இடத்தில் கட்டிபோடுகிறது.,அதனை தவறு என்று கூட நினைக்கவில்லை.

வாதத்தின் முடிவில் நான் ஆதிகனாயிட்டேன் என்று நாத்திகர்களிடம் சொல்லும் தைரியம் இருக்கிறது., ஆனால் நாத்திகனானேன் என்று ஆத்திகர்களிடம் சொல்ல தைரியம் இல்லை.

suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//அல்லாவுக்கு உருவம் உண்டு என்று வாதிட்டு வரும் பிஜே அவர்களுக்கு உங்களைப் போன்றவர்கள் ஏன் பதில் சொல்வதோ, விவாததிற்கோ அழைப்பது இல்லை ?//

இறைவனுக்கு உருவம் இல்லை என்று யார் சொன்னது? ஆனால் நாம் கற்பனை செய்து வைத்திருப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்பதுதான் எங்களின் நிலைப்பாடு.

"அர்ஷின் மீது அவன்(அல்லாஹ்) வீற்றிருக்கிறான்." (திருக்குர்ஆன் 7:54, 10:3, 13:2, 20:5, 25:59, 32:4, 57:4)

"அந்நாளில் சில முகங்கள் மலர்ந்து இருக்கும். தமது இறைவனைப் பார்த்துக் கொண்டிருக்கும்.
(அல் குர்ஆன் 75 : 22)

வானவர்கள் அணியணியாய் நிற்க உமது இறைவன் வருவான்."(திருக்குர்ஆன் 89:22)

பூமியாகிய அதன் மேலுள்ள யாவும் அழிந்து போகக்கூடியதாகும். கண்ணியமும், சங்கையும் உடைய உமது இரட்சகனின் (சங்கையான) முக(ம் மட்டு)மே (அழியாது) நிலைத்திருக்கும்’ என்று குர்ஆன் (55 : 26, 27) கூறுகிறது.
(இன்னும் பார்க்க 2:15, 2:272 13:22, 30:38, 39, 76:9, 92:20, 6:52, 18:28, 28:88)

மேற்கண்ட வசனங்களிலிருந்து தெளிவாக இறைவனுக்கு உருவம் உண்டு என்பதை நாம் அறியலாம்.

இதுபற்றி இதே பி.ஜெய்னுல்லாபுதீன் விவாதம் பண்ணிய நிகழ்வு இணையத்தில் கிடைக்கும். பாருங்கள்.

//"மதவாதிகளிடம் நான் விவாதம் வைத்துக் கொள்வதில்லை,//

'கோவியார்' என்ற பெயரில் உங்கள் வலைப்பதிவில் பல தத்துவ முத்துகளை உதிர்த்து வருகிறீர்கள். சில நாட்களுக்கு பிறகு ஆசிரமம் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த அளவு மதங்களை பற்றி அறிந்துள்ள தாங்கள் 'விவாதம் வைத்துக் கொள்வதில்லை' என்று சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அப்படி ஆசிரமம் ஆரம்பித்தால் சிஷ்யனாக என்னை ஏற்றுக் கொள்வீர்களா? :-)

//பெண் சுதந்திரம் மற்றும் சமூக நலன் என்ற பெயரில் கருத்துகள் இஸ்லாம் பெயரில் திணிக்கப்பட்டால் மட்டுமே அதற்கு மறுப்பு எழுதிவருகிறேன்..//

பெண்களுக்கு சொத்துரிமை, மறுமணம், போன்று புரட்சி கருத்துகளை குர்ஆன் சொன்ன நாளில் நாம் நமது நாட்டில் கணவனோடு சேர்த்து மனைவிகளை நெருப்பில் தள்ளிக் கொண்டிருந்தோம். இன்றும் தள்ளிக் கொண்டிருக்கிறோம்.

//நீங்கள் முகமது ஆசிக்கைப் போன்று எனக்கு அல்லாவின் பெயரில் சாந்தியும் சமாதானமும் சொல்வதில்லை, காரணம் காஃபிர்களுக்கு அதையெல்லாம் சொல்லக் கூடாது என்று உங்களுக்கு நன்கு தெரிந்தே இருக்கிறது,//

இனி சொல்கிறேன். மாற்று மதத்தவர்களுக்கு சலாம் கொல்லக் கூடாது என்று எங்கு படித்தீர்கள் என்ற விபரத்தை தாருங்கள். இஸ்லாமிய நம்பிக்கை படி ஒருவன் இஸ்லாத்தை ஏற்றால் அவருக்கு சாந்தியும் சமாதானமும் கிட்டுகிறது. ஏற்கவில்லை என்றாலும் ஆதமுடைய வழிதோன்றலான நீங்கள் எனது சகோதரனே! எனவே நீங்கள் சந்தோஷமாக இருப்பது எனது சந்தோஷமே! எனவே..... கோவியாரே!....

'உங்களின் மீதும் உங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!'

suvanappiriyan said...

ஷர்புதீன்!


//வாதத்தின் முடிவில் நான் ஆதிகனாயிட்டேன் என்று நாத்திகர்களிடம் சொல்லும் தைரியம் இருக்கிறது., ஆனால் நாத்திகனானேன் என்று ஆத்திகர்களிடம் சொல்ல தைரியம் இல்லை//.

பல வாதங்களில் நாத்திகர்கள் தோல்வியடைந்ததால் ஒத்துக் கொண்டு ஆத்திகனாக மாறி விடுகின்றனர். ஆத்திகர்கள் வாதத்தில் தோல்வியடைய வில்லையாதலால் நாத்திகர்களாக மாற வேண்டிய அவசியம் இல்லை. நாத்திகத்தையே போதித்து வந்த பெரியார்தாசன்(கருத்தம்மா புகழ்) இன்று அப்துல்லாவாக மாறி பிரசாரப் பணியை செய்து கொண்டிருப்பதை நீங்களும் அறிவீர்கள்தானே!

//திரு மக்புல் பிதா ஹுசைன் எனப்படும் பிரபல இந்திய ஓவியர் M.F. ஹுசைன் இறந்தது உண்மைதான் என்றும், அவர் இறந்த விதம் குறித்துதான் இன்னும் சரியாக தெரியவில்லை என்றும் இனைய செய்திகள் தெரிவிக்கின்றன. இது ஒரு தகவலுக்கான இடுக்கையே அன்றி அவரை பற்றியதல்ல...// -ஷர்புதீன்!

இந்த வயதிலும் மாதுரி தீட்ஷித் என்ற நடிகையை விதம் விதமாக வரைந்து அழகு பார்த்ததற்கும், இந்துக்கள் வணங்கும் சரஸ்வதி என்ற பெண் தெய்வத்தை நிர்வாணமாக வரைந்து சர்ச்சையை ஏற்படுத்தி பலரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியதற்கும் படைத்த இறைவன் கேள்விகளை கேட்டால் அதற்கு என்ன பதிலை தரப் போகிறார்?

அன்னாரை இழந்து நிற்கும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

ஷர்புதீன் said...

உண்மையாகவே ஹுசைன் பற்றி நீங்கள் கெட்ட கேள்விக்கு பதில் என்னிடம் இருக்கிறது., ஆனால் அதனை எப்படி சொல்வது என்றுதான் ( வார்த்தையில், ) தெரியாமல் வீடியோ போடலாமா என்று யோசித்து கொண்டிருக்கிறேன் . ஏற்கனவே கடவுள் குறித்தும் எனக்கு அதே கருத்துதான் இருக்கிறது, இரண்டுக்கும் ஒரே பதில்தான் என்னிடம் இதுவரை. யாரேனும் தொலைபேசியில் இது குறித்து பேசுவதாயின் எனது ஈமெயில் முகவரிக்கு உங்களின் எண்ணை தாருங்கள் ( இந்திய தொலைபேசி) நான் பதிவிடுமுன் பேசி பார்கிறேன்!

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//இஸ்லாத்தில் இருக்கும் 100 % மோசமானது எனவோ, அல்லது 100 % உன்னதாமனது எனவோ நான் கருதவில்லை. நிறை குறைகள் இருக்கின்றன.. நிறைகள் வரவேற்கப்படும் அதே சூழலில் குறைகளை சுட்டிக் காட்டுவது எனது குணம் .. அதனை மாற்றுவது என்னால் இயலாத ஒன்று சகோ.. //

உங்களிடம் குறைகளை சுட்டிக் காட்ட வேண்டாம் என்று யாரும் சொன்னார்களா? இதற்கு முன்னால் நீங்கள் எத்தனையோ வாதங்களை வைத்த போது நானும், ஆஷிக்கும் மற்ற பதிவர்களும் கோபப்படாமல் பதில்கள் கொடுத்துக் கொண்டு தானே இருந்தோம்! தமிழன் முகமது நபியின் புகைப்படம் என்று சிலவற்றை வெளியிடும்போது வராத எதிர்ப்பு நீங்கள் வெளியிட்டபோது மட்டும் ஏன் வர வேண்டும் என்று சிந்தித்தீர்களா?

தமிழ் இணையத்தில் உங்களையும், சார்வாகனையும், கோவி கண்ணனையும், தருமியையும் இஸ்லாமிய பதிவர்களாகிய நாங்கள் மதிக்கிறோம். கண்ணியமாக நீங்கள் அனைவரும் வாதத்தை வைக்கக் கூடியவர்கள். இப்படிப்பட்ட ஒருவர் முகமது நபியை பார்க்காது யாரோ ஒருவர் வரைந்த படத்தை வெளியிட்டு பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக செயத காரியத்தைத்தான் எங்களால் ஒத்துக் கொள்ள முடியவில்லை. இதை எடுத்து சொல்லியவுடனாவது நீங்கள் நீக்கியிருக்கலாம். ஆனால் 'அது எனது உரிமையில் கை வைப்பது' என்று சொன்னது மேலும் பலரை கோபப்பட வைத்தது. முகமது நபி தன்னை வரைவதையும், இறைத்தூதர்களை வரைவதையும் முற்றாக தடை செய்தார். காரணம் ஏசுவுக்கு நிகழ்ந்ததைப் போல் முகமது நபியையும் கடவுளாக்கி விடக் கூடாது என்ற நல் எண்ணத்தில் விளைந்ததே!

மதப் பிரசாரம் நாகூரில் செய்து வந்த ஷாகுல் ஹமீது என்ற ஒரு முஸ்லிமை கடவுள் ஸ்தானத்தில் பலரும் போற்றுவதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். இப்படி ஒரு நிலை முகமது நபியின் உருவத்துக்கு வந்து விடக் கூடாது என்பதுதான் எங்களின் அச்சம். ஆனால் அதை உணரும் நிலையில் நீங்கள் இல்லை.

'குர்ஆனில் அதற்கு தடை இல்லை' என்ற வாதத்தை வைக்கிறீர்கள்.

'நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பி இருந்தால் இறைவனுக்கு கட்டுப் படுங்கள். இறைவனின் தூதராகிய முஹம்மதுக்கும் கட்டுப் படுங்கள். உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள். ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை இறைவனிடமும் இந்த தூதரிடமும் கொண்டு செல்லுங்கள். இதுவே சிறந்ததும் மிக அழகிய விளக்கமுமாகும்.'
-குர்ஆன் 4:59

இந்த வசனத்தில் குர்ஆனுக்கும் முகமது நபியின் சொல்லுக்கும் கட்டுப்பட வேண்டும் என்ற கட்டளையின் படி முகமது நபியை உருவமாக வரைவதை குர்ஆனும் தடை செய்கிறது. இதற்கு எந்த பதிலும் தர மாட்டீர்கள். சரி... குர்ஆன் சொல்லும் அனைத்து கட்டளைகளையும் நீங்கள் பின் பற்றுவீர்களா? என்று கேட்டாலும் பதில் தர மாட்டீர்கள்.

// முகமதுவின் படங்களும் இடம்பெறலாம். அதனை விவாதக் கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கும் மனோபாவம் அனைவருக்கும் வருமா என்பது சந்தேகமே .//

அறிவுபூர்வமாக விவாதம் செய்யும் போது முகமது நபியின் உருவப்படம் ஏன் வர வேண்டும்? வாதிப்பதற்கு சரக்கு இல்லாதவர்கள்தானே உருவப்படங்களை கையிலெடுப்பார்கள்? .

கோவி.கண்ணன் said...

//நாத்திகத்தையே போதித்து வந்த பெரியார்தாசன்(கருத்தம்மா புகழ்) இன்று அப்துல்லாவாக மாறி பிரசாரப் பணியை செய்து கொண்டிருப்பதை நீங்களும் அறிவீர்கள்தானே!//

தவறான 'நச்சுக்' கருத்து, அவர் ஏற்கனவே பவுத்தமதத்திற்கு மாறியவர் தான், பிறகு நாத்திக பிரச்சாரங்களை விட்டுவிட்டார். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும் முன்பே நாத்திகராக இல்லை

ஷர்புதீன் said...

வாதங்களின் மீது உள்ள நம்பிக்கையாலோ, உங்களின் மீதுள்ள நம்பிக்கையாலோ இதுவரையுலும் வார்த்தைகள் சரியாகவே இருக்கிறது. - அதனையே இனியும் விரும்புகிறேன்.

சம்பந்தமே இல்லாமல் ஒன்று, சம்பந்தம் உண்டா என்பதை நீங்களே உங்களுக்குள் சொல்லிகொள்ளுங்கள்.

எப்பவும் போல் இனிமையான மனதுடன் எனது வாகனத்தை எடுத்தபொழுது இன்னொரு வாகனம் எனது வாகனத்தின் மீதி இடித்தது., அவரிடம் தன்மையாக அதனை கூறி பரஸ்பரம் சாரி சொல்லி விடைபெற்றேன் - இது ஒரு நிகழ்வு!

அன்று சரியான மன புழுக்கம், மனைவியிடம் / சக வியாபாரியிடம் ஒரு சிறிய வியாபார சண்டை., அப்படியே எனது வாகனத்தை எடுத்தபொழுது காலையில் நடந்த அதே நிகழ்ச்சி, இன்னொரு வாகனத்துடன் இடித்து ., பின்பு சிறிய தடித்த வார்த்தை பிரயோகங்களுக்கு பின் அந்த இடத்தை விட்டு இருவரும் நகர்கிறோம்.

காலையில் இருந்த "நான்" எங்கே போனேன். மாலையில் / காலையில் எது உண்மையான "நான்"? கேள்விகள் யோசிக்க மட்டுமே, பதில் சொல்வதற்காக இல்லை.

suvanappiriyan said...

கோவிக் கண்ணன்!

//தவறான 'நச்சுக்' கருத்து, அவர் ஏற்கனவே பவுத்தமதத்திற்கு மாறியவர் தான், பிறகு நாத்திக பிரச்சாரங்களை விட்டுவிட்டார். அவர் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளும் முன்பே நாத்திகராக இல்லை//

இதில் நச்சுக் கருத்து எங்கிருந்து வருகிறது? அவரது முந்தய தேடல் நாத்திகம். அதில் தோல்வியடய பவுத்தத்தின் பக்கம் அவரது பார்வை திரும்புகிறது. அங்கும் அவருக்கு வெறுமையே தென்படுகிறது. முடிவில் இஸ்லாத்தில் தஞ்சமடைகிறார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு அவர் பெற்ற பெற்றுக் கொண்டிருக்கிற இன்பங்களை அவர் வாயாலேயே கேட்டும் பார்த்தும் மகிழுங்கள் நேரமிருப்பின்.

ஜெமோ இவரது ஆன்மீக தேடலைப் பற்றி சொல்வதை பார்ப்போம்:

தன் ஆன்மீக ஈடேற்றத்துக்காக ஒருவர் எந்த மதத்தையும் ஏற்றுக்கொள்ளலம். அது வரவேற்கத்தக்கது.

நான் பேரா. பெரியார்தாசன் அவர்களை நேரில் அறிவேன். இனிய எளிய மனிதர். இம்மானுவேல் கான்ட் மீது பிடிப்பும் பற்றும் கொண்டவர். என் நண்பர் செந்தூரம் ஜெகதீஷுக்கும் அவருக்கும் நெருக்கம் உன்டு. என்னுடன் ஒரு கூட்டத்திலும் கலந்துகோன்டிருக்கிறார். கான்ட் குறித்து அவரிடம் விவாதித்திருக்கிறேன்.

அ.மார்க்ஸைப் பொறுத்தவரை அவரும் இப்படி ஓர் முடிவை எடுக்கும் நிலையில் தயங்கிக் கொண்டிருக்கிறார் என்றுதான் நான் கேள்விப்படுகிறேன். அதுவும்கூட நல்லதே.

எந்த மதமும் தன்னளவில் மேம்பட்டதோ குறைவனதோ அல்ல. எனக்கு ஒரு வழி ஏற்புடையதாக இருக்கிறது. பிறிதொருவருக்கு அவரது இயல்புகளின் அடிப்படையில் இன்னொரு மதம் ஏற்புடையதாகிறது. ஒருவருக்கு கண்டிப்பான அப்பா தேவைப்படலாம். ஒருவருக்கு நல்லாசிரியனாக மட்டுமே இருக்கும் அப்பா தேவைபப்டலாம். ஒருவருக்கு பாசமே உருவான அப்பா தேவைப்படலாம்.

இஸ்லாம் உறுதியான் பதில்களைச் சொல்லி அறுதியான விசுவாசத்தை எதிர்பார்க்கும் மதம். அந்த விசுவாசமும் கட்டுப்பாடும் அப்துல்லா அவர்களுக்கு சாத்தியமாக்வேன்டுமென்றும், அது அவரை முழுமையும் நிறைவும் கொள்ளச் செய்யுமென்றும் நம்புகிறேன்.

என்னைப்பொறுத்தவரை பொதுவாக இப்படி ஒரு தெளிவான நிலைபாடுகளை இவர்கள் எடுக்கும்போது இவர்களைப் புரிந்துகொள்வது எளிதாகிறது. இவர்களுக்கு இந்து மரபின் மீது உள்ள விமரிசனம் அது இஸ்லாமாக இல்லை என்பதே என்ற புரிதல் அனைத்தையும் எளிதாக்கிவிடுகிறது.

அப்துல்லா அவர்களுக்கு என் மனமர்ந்த வாழ்த்துக்கள்.

-எழுத்தாளர் ஜெய மோகன்

Anonymous said...

திரு சுவனபிரியன் அவர்களுக்கு ,

இஸ்லாத்தின் மீது, முஸ்லீகளின் மீது காழ்ப்புணர்ச்சியுடன் இடப்படும் தமிழ் பதிவுகளை தேடித்தேடி தவறாமல் அப்பதிவர்களை தட்டிகொடுத்து அப்பதிவுகளில் தனக்கே உரித்தானபாணியில் காழ்ப்புணர்ச்சியுட‌ன்
காலந்தோறும் தூபமிடும் பின்னூட்டங்களையே இட்டு மகிழ்வடையும் கோவி.கண்ணன் தாங்களின் விளக்கங்களை பொருட்படுத்தாமல் அலட்சியமே
செய்வார்.

.

suvanappiriyan said...

சகோதரி எண்ணங்கள்!

//பின் தொடர//

ஒரு பதிவில் 'காஃபிர்' என்பதை ஏதோ அருவறுக்கத்தக்க வார்த்தைகளை போல் நினைத்து கேள்வி எழுப்பியிருந்தீர்கள். அதன் தமிழ் அர்த்தம் 'இறை மறுப்பாளன்'. முஸ்லிமான நானும் ஏக இறைவனை மறுத்து பல தெய்வங்களையும் வணங்கினால் நானும் காஃபிர்தான். இது பிறப்பால் வருவதில்லை. ஒருவரது செயலால் வருவது.

ஏக இறைக்கொள்கையை ஏற்றுக்கொண்டதோடு மாத்திரமன்றி நபி வழியையும் இறை கட்டளைகளையும் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஈமான் (நம்பிக்கை) கொண்டவருக்கான எதிர்ப்பதம். எனினும்,எந்த ஒரு மனிதனையும் பார்த்து நேரடியாக காபிர் என்று குறிப்பிட வேண்டாம் என்பதே இஸ்லாமியருக்கு வழங்கப்பட்டிருக்கும் பாடம்.ஏனெனில் அவர் ஆழ் மனதில் நம்பிக்கை கொண்டவராக ஆனால் இன்னும் செயலளவில் வெளிப்படுத்தாத ஒருவராகவும் இருக்கலாம். எனவே இன்னொருவரைக் காபிர் என்று வரையறைப்படுத்தும் தகுதியை எந்த ஒரு சாதாரண முஸ்லிமும் தன் கையில் எடுத்துக்கொள்வதில்லை.

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

வாஞ்சூர் அண்ணன்!

//சரியான சவால். பதில் வராது.

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் அள்ள முடியும்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஷர்புதீன் said...

இந்த காபிர் என்ற வார்த்தை பிரயோகத்த்தில் எனக்கு ஒரு மாற்று கருத்து உண்டு.

இஸ்லாமிய கருத்துக்களை கொண்டவனை இஸ்லாமியர்கள் என்றும் ., இஸ்லாமிய கருத்துக்களை தீவிரமாக கொண்டு , அதனை மற்றவர்களிடமும் கொண்டு சேர்பவனை இஸ்லாமியவாதி என்று நானாகவே ஒரு வரையருத்தேன்.காரணம்.....

எனது முஸ்லிம் நண்பர்கள் இந்து நண்பர்களை சாதரணமாகவும், இந்து மதத்தில் தீவிரமாக செயல்படுபவர்களை ஆர் எஸ் எஸ் இந்து என்றும் அழைப்பார்கள்., அவர் அந்த இயக்கத்தில் உறுப்பினர் இல்லை என்றாலும், அவரது தீவிரத்தை குறிக்கும் சொல்லாக சக இஸ்லாமியர்கள் எடுத்துகொள்வார்கள்.

அதே போன்றுதான் இந்த காபிர் வாதமும்., அதன் அர்த்தம் சாதாரண அர்த்தமாகினும் அதை இஸ்லாமியர்கள் தவிர்த்து மற்றவர்கள் ஒரு மாதிரி திட்டுவதாக தான் எடுத்துகொள்கிறார்கள்.
எனக்கும் கூட "இஸ்லாமியவாதிகளிடம்" என்ற பதத்தை விட "இஸ்லாமியர்களிடம்" என்று பதிவிட்டு இருக்கலாமோ என்ற எண்ணம் உண்டு!

suvanappiriyan said...

ஷர்புதீன்!

// யாரேனும் தொலைபேசியில் இது குறித்து பேசுவதாயின் எனது ஈமெயில் முகவரிக்கு உங்களின் எண்ணை தாருங்கள் ( இந்திய தொலைபேசி) நான் பதிவிடுமுன் பேசி பார்கிறேன்!//

சகோ. ஆஷிக்கின் தொலைபேசி இலக்கம் உங்களிடம் உள்ளதால் அவரிடமே பேசிப் பாருங்கள். சிறந்த விளக்கங்களை தருவார்.

//காலையில் இருந்த "நான்" எங்கே போனேன்.//

பிரச்னைகளை சந்திக்கும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. எனவே நம்மையறியாமல் வார்த்தைகள் கோபத்தில் வந்து விழுந்து விடுகிறது. இந்த மன அழுத்தத்தை ஐந்து வேளை பள்ளியில் சென்று தொழுபவர்களிடம் காண முடியாது. நமக்குள்ள பிரச்னைகளை ஒவ்வொரு தொழுகையிலும் இறைவன் முன் வைத்து நமது பாரத்தை குறைத்து விடுகிறோம். எனவே ஐந்து வேளை தொழுகையினால் பலன் அடைவது நாமே!

ஷர்புதீன் said...

திரும்பவும் நான் குழம்பிய இடத்துக்கே வந்துட்டேன்னு நினைக்கிறேன்...

தொழுகை தரலாம்!! தொழுதவன் எல்லாம் அந்த மனதை கொண்டுள்ளான் என்பதை எற்றுகொள்ளமுடியாதே., சரி என்னிடம் அந்த மனதை கொண்டுவரும் சக்தி இல்லையா என்றால் - முடியுமே ...ஆனால் அதற்க்கு தொழுதுதான் ( மட்டும்தான்) அந்த குணத்தை அடையமுடியுமா ? சவாலுக்காக சொல்லவில்லை., நிறைய மனோவியல் குறித்த புத்தங்கள் படித்ததன் விளைவாக வண்டியை இடித்தவுடன் அந்த மனநிலையை கொண்டு வந்து யோசிக்கிறேனே இப்போதெல்லாம்.

:-)

suvanappiriyan said...

சமுத்ரா!

//good one...நல்ல அலசல்..//

இயற்பியலை மிக எளிமையாக இணையததில் பதிந்து வருகிறீர்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

neethimaan said...

அஸ்ஸலாமு அழைக்கும்.
சகோ.சுவனப்ரியன் அவர்களே,
மிக நல்ல கேள்விகளை எடுத்து வைத்து உள்ளீர்கள். நல்ல விவாதம் நடத்தி உளீர்கள்.ஆணாள், அவர்களிடம் சரியான பதில் இல்லை.

இது நான் சகோ.முஹம்மது ஆசிக் பதிவில் கேட்ட கேள்விகள்.

[[[[அஸ்ஸலாமு அழைக்கும்.
சகோ.ஆசிக், மிக நல்ல சுயபரிசோதனை. நன்றி.
சென்ற கண்டனத்தில் தினமலரையும் இக்பால் செல்வனையும் ஒன்றாக கருதியதில் எனக்கு உடன்பாடு இல்லை. அந்த தினசரி போட்டது கேலிச்சித்திரம். செல்வன் போட்டது கேலி செய்யும் நோக்கம் இல்லை. அவரின் அறியாமையாக இருக்கலாம். நீங்கள் என் எடுத்துச்சொல்ல வில்லை? உங்கள் கமென்ட் ஏதும் அங்கெ காணோமே? அவர் வெளியிடவில்லையா?

படம் சமந்தமாக நீங்கள் கேட்டிருக்கும் லாஜிக்கலான கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை. எதையும் பகுத்தறிவோடு அணுகுவோம் என்பது காணாமல் போய் இந்த விஷயத்தில் காழ்ப்புணர்ச்சியோடு அணுகியுள்ளனர்.

சரி. நடந்தவை நடந்துவிட்டது. செல்வன் அவரின் பதிவில் அந்த படத்தை நீக்கிவிட்டால், உங்கள் பதிவு தேவையற்றது என்றாகிவிடும். ஆகவே, உங்கள் பதிவை நீக்க நீங்க தயாரா?]]]

அதற்கு அவர் பதில் அளித்து இருக்கிறார்.

அவட்ரில் நீங்களும் மற்றவர்களும் சம்பந்தப்பட்டு உள்ளீர்கள் என்பதால் இங்கே அந்த சுட்டியை பதிகிறேன்.

http://pinnoottavaathi.blogspot.com/2011/06/blog-post_07.html

'பேச்சை பேணுக'

saarvaakan said...

வணக்கம்,
சில விஷயங்களை தெளிவு படுத்திவிடலாம்.அனைத்து மதங்களுமே நம்பிக்கை ஒன்றையே அடிப்படையாக கொண்டது என்றாலும் ,நடைமுறையில் சர்ச்சைக் குறிய மதரீதியான சட்டங்கள்[ஷாரியா] அமல் படுத்தப்படுவது இஸ்லாமில் மட்டுமே.
இந்த சட்டங்கள் பல நாடுகளில் பலவிதமாக நடைமுறை படுத்தப்படுகின்றது.
இஸ்லாமும் பிற மதங்கள் போல் அழியாப் பெருவாழ்வை நோக்கிய ஆன்மீக வழிகாட்டி என்றால் யாருக்கும்(குறிப்பாக எனக்கு) ஆட்சேபனை இல்லை.


ஆனால் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஷாரியா அங்கு வாழும் அனைவர் மீதும் பயன் படுத்தப் படுகின்றது.நம் நாட்டில் இருந்தே குடும்ப கஷ்டத்திற்காக அயல்நாடு சென்றவன் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உடல் உறுப்புகளை,உயிரை இழப்பது ச்ரியாகுமா?.அவன் பிற மதத்தை ,நாட்டை சார்ந்தவனாக இருந்தாலும் இது நிறைவேற்றப்படுகின்றது.இஸ்லாமியர்களும் பாதிக்கப் படுகின்றார்கள் என்றாலும் குறைந்த பட்சம் நம்பிக்கை வைக்கும் ஒரு காரியத்திற்காக கஷ்டப் படுகிறார்கள் என்று சொல்லலாம்.

இஸ்லாமிய நாட்டுக்கு வந்தால் அப்படித்தான் என்று இதற்கு விளக்கம் கொடுத்தால் தவறான முன் உதாரணம் ஆகி பிற மதவாதிகளும் இது போல் செய்யும் வாய்ப்பு அதிகம்.அப்படித்தான்.இத்னால் வரும் பிரச்சினைகள் ஏராளம்.இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட் வேண்டும்.மூன்றாம் உலகப் போர் என்பது மத ரீதியாக நடக்கும் அபாயம் இருப்பதால் மத உணர்வுரீதியாக விளங்கப் படுவதை விட அன்றாட வாழ்வின் சுமைகளை குறைத்து,மனித உறவுகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும்.

வரலாற்றுரீதியாக மதங்கள் பெரும்பாலும் மனித விரோதமாகவே இருந்திருக்கின்றன்.தேவையற்ற போர்கள்,ஆக்கிரமிப்புகள் மதம்,கடவுள் பெயரால் நடத்தப் பட்டு உள்ளன.கம்யுனிஸ்டுகள் போன்ற‌ நாத்திகர்களும் இதை செய்து இருக்கிறார்கள் என்றால் எந்த கருத்தையும் வலுக் கட்டாயமாக் அரசு ரீதியாக நடைமுறைப் படுத்தினால் இப்படித்தான் ஆகும் என்பதே ப்தில்.அரசு சட்டம் மத சார்பற்றதாக,தனி மனித சுதந்திரம் பேணுவதாக் இருக்க வேஎண்டும்.'அ' விற்கு 'க்' மதம் பிடிக்கவில்லை என்றால் 'கா' மதத்திற்கோ அல்ல 'கீ' மதத்திற்கோ மாறும் சுதந்திரம் வேண்டும்.பலரிடம் ஒரு மதத்தை பின் பற்றுவது ஏன் என்று கேட்டால் எங்கள் மதகுரு 'அஆஇஈ' அளிக்கும் விளக்கம் கேட்டு பின் செல்லுகிறேன் என்கிறார்கள், வேண்டுமெனில் நேருக்கு நேர் அவரோடு வருகிறாய என்கிறார்கள்.எத்த்னை பேர் ஒருவர் அளிக்கும் விளக்கத்திற்கு மாற்று விளக்கம் இருக்கிறதா என்று சோதிப்பது உண்டு?.ஒரு வசனத்திற்கான் பல் மொழி பெயர்ப்புகள்,பல தஃப்சீர் விளக்கங்கள் ஒப்பீடு செகிறீர்கள்?. இஸ்லாமிய நண்பர்களுக்கு சொல்வது இம்மாதிரி விவாதங்களில் பங்கெடுப்பது உங்கள் புரிதலை வளர்ர்க்கும்.பிற மதங்கள் போல் இஸ்லாமும் விமர்சனத்திற்குட்பட்டதே.

மற்றபடி மதத்தில் அறிவியல் ,சர்வ ரோஹ நிவாரணி,அனைத்தும் அன்றே கூறியிருக்கிறது போன்ற அனைத்து மதங்களுக்கும் பொதுவான நகைச்சுவை கருத்துகளை அவ்வப்போது ஆய்ந்து பதிவிட்டு வருகிறேன்.
நன்றி

suvanappiriyan said...

சார்வாகன்!

//ஆனால் இஸ்லாமியர் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில் ஷாரியா அங்கு வாழும் அனைவர் மீதும் பயன் படுத்தப் படுகின்றது.நம் நாட்டில் இருந்தே குடும்ப கஷ்டத்திற்காக அயல்நாடு சென்றவன் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உடல் உறுப்புகளை,உயிரை இழப்பது ச்ரியாகுமா?.அவன் பிற மதத்தை ,நாட்டை சார்ந்தவனாக இருந்தாலும் இது நிறைவேற்றப்படுகின்றது.இஸ்லாமியர்களும் பாதிக்கப் படுகின்றார்கள் என்றாலும் குறைந்த பட்சம் நம்பிக்கை வைக்கும் ஒரு காரியத்திற்காக கஷ்டப் படுகிறார்கள் என்று சொல்லலாம்.//

நான் சவுதிக்கு எனது வருமானத்திற்காக வருகிறேன் என்றால் இந்த நாட்டு சட்டதிட்டத்துக்கு கட்டுப்பட்டு நடக்கிறேன் என்று ஒத்துக் கொண்டுதான் வருகிறேன்.

மேலும் தவறு செய்பவர்கள் தணடிக்கப்படுவதால் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படுகிறது. நம் நாட்டில் சட்டம் மென்மையாக இருப்பதால்தான் குற்றவாளிகள் பயமில்லாமல் குற்றத்தை செய்கிறார்கள். நமது நாட்டின் பொருளாதாரத்தையே வீழ்த்தும் அளவு ஊழல் செய்த ராஜா சந்தோஷமாக டென்னிஸ் விளையாடிக் கொண்டு இருக்கிறார். நீதிமன்றத்தாலேயே தண்டனை வழங்கப்பட்ட ஜெயலலிதா கோர்ட் அழைத்தால் செல்வதுமில்லை. இன்று வரை வழக்கை இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். இவை எல்லாம் நமது சட்டத்தில் உள்ள ஓட்டைகளை காட்டுகிறது.

//அரசு சட்டம் மத சார்பற்றதாக,தனி மனித சுதந்திரம் பேணுவதாக் இருக்க வேஎண்டும்.'அ' விற்கு 'க்' மதம் பிடிக்கவில்லை என்றால் 'கா' மதத்திற்கோ அல்ல 'கீ' மதத்திற்கோ மாறும் சுதந்திரம் வேண்டும்.பலரிடம் ஒரு மதத்தை பின் பற்றுவது ஏன் என்று கேட்டால் எங்கள் மதகுரு 'அஆஇஈ' அளிக்கும் விளக்கம் கேட்டு பின் செல்லுகிறேன் என்கிறார்கள், வேண்டுமெனில் நேருக்கு நேர் அவரோடு வருகிறாய என்கிறார்கள்//

இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை. முகமது நபியின் உறவினர்களில் பலர் இஸ்லாத்தை ஏற்காமலேயே இறந்திருக்கிறார்கள். இறக்கும் போது ஒரு யூதரிடம் கடன் வாங்கிய நிலையில்தான் முகமது நபியின் இறப்பு இருந்தது. அந்த அளவு மாற்று மதத்தவர் சுதந்திரமாகவே இஸ்லாமிய ஆட்சியில் இருந்திருக்கிறார்கள். பாபரி மசூதி இடிப்புக்கு முன்னால் நமது நாடும் அமைதியாகவே இருந்தது. தாங்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகவே தேவையில்லாத பிரச்னையை கையிலெடுத்து இன்று மிகப் பெரும் சிக்கலாக்கி விட்டார்கள்.

//ஒரு வசனத்திற்கான் பல் மொழி பெயர்ப்புகள்,பல தஃப்சீர் விளக்கங்கள் ஒப்பீடு செகிறீர்கள்?. இஸ்லாமிய நண்பர்களுக்கு சொல்வது இம்மாதிரி விவாதங்களில் பங்கெடுப்பது உங்கள் புரிதலை வளர்ர்க்கும்.பிற மதங்கள் போல் இஸ்லாமும் விமர்சனத்திற்குட்பட்டதே.//

கண்டிப்பாக! இதனால்தான் பல கருத்தரங்குகள். பல கேள்வி பதில் நிகழ்ச்சிகள். இதனால் ஒருவர் மேல் உள்ள கசப்புணர்வு மாற வாய்ப்புள்ளது. விமர்சனம் ஆக்கபூர்வமாக இருந்தால் கண்டிப்பாக முஸ்லிம்கள் வரவேற்பர். இழிவு படுத்த வேண்டும் என்ற நோக்கில் வரும் விமரிசனங்களையே சிலர் எதிர்க்கின்றனர். அதையும் பக்குவமாக சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறோம்.

//மற்றபடி மதத்தில் அறிவியல் ,சர்வ ரோஹ நிவாரணி,அனைத்தும் அன்றே கூறியிருக்கிறது போன்ற அனைத்து மதங்களுக்கும் பொதுவான நகைச்சுவை கருத்துகளை அவ்வப்போது ஆய்ந்து பதிவிட்டு வருகிறேன்.
நன்றி //

தாராளமாக பதிவு இடுங்கள். நானும் வந்து எனது கருத்தைப் பதிக்கிறேன்.

Anonymous said...

@ சுவனப்பிரியன் - என்னைப் பொறுத்தவரை முகமதுவின் புகைப்படம் போல் ஒன்றினைப் பயன்படுத்த தவறாக எண்ணியதில்லை. இஸ்லாத்திலும் வெளிப்படையாக முகமதுவின் படங்களை வரையாதே எனக் கூறப்பட்டதாக் நான் அறியவில்லை. வகாபிகளே அவற்றை வரையத் தடுப்பதாக அறிகின்றேன். சியாக்களில் பல நூறு ஆண்டுகளாக முகமதிவின் படங்களை கதைகளுக்கும், இன்னப் பிறவற்றுக்கும் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் முகமதுவை அவர்கள் வழிப்படுவதில்லை என்பதையும் நான் அறிவேன்.

சரி ! ஒருவேளை முகமதுவின் படத்தைப் போட்டது தமிழ் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினருக்குப் பிடிக்கவில்லை எனில் - நீங்களோ ( அவர்களோ ) எப்படி என்னை அணுகி இருக்க வேண்டும்.

முதலில் கண்ணியமாக எனக்கு விடயத்தை விளக்கமாக சொல்லி மின்னஞ்சல் அனுப்பி இருத்தல் வேண்டும். அதன் பின் அதன் தீவிரம் மற்றும் உணர்வுப் பூர்வமாக பரிசீலித்து இருப்பேன்.

ஆனால் நடந்து என்ன ? முகமது ஆசிக்கும், ஆசிக் அகமதுவும் என்னவென்றே விளக்கமளிக்காமல் பின்னூட்டங்களில் ஆ ! ஊ ! எனக் கதறினார்கள். ஒருவரும் என்னைத் தொடர்புக் கொண்டு எடுத்துக் கூறவில்லை.

முகமது ஆசிக் ஒரு படி மேலே போய் சேற்றை வாரி இழைத்து பதிவிட்டார் ... அப்போது கூட அதனை நான் தமிழ்மணம் ஊடாகவே பார்த்தேன் ...

அதன் பின் ஹலிமா, அனானி, ஆத்திஸ்ட் எனப் பல போலிப் பெயர்களில் இருப்போர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார்கள் ...

அய்யா ! ஒருவரேனும் எனக்கு மின்னஞல் செய்து விளக்கம் கேட்கோவோ, கோரிக்கை இடவோ இல்லை ...

பல பழைய கடுப்புகளை மனதில் வைத்திருந்தார்கள் என்பதையும் அப்போது தான் நான் அறிந்தேன் ...

சொல்லப் போனால் பதிவுலகில் எனதுப் பதிவைப் படித்த ஒரு இஸ்லாமியப் பதிவருக்கு கூட பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்றோ ? எப்படி அணுக வேண்டும் என்றோ ஒரு பக்குவமும் இல்லாமல் இருந்தது ..

முகமதுவின் படங்களை வரையக் கூடாது என்பது இஸ்லாமியரைத் தான் கட்டுப்படுத்தும் - இஸ்லாமியர் அல்லாதோர் அப்படியான படங்களை பயன்படுத்துவது தவறு என்பதை ஏற்காதவன் நான். ஒருவேளை கண்ணியமாக என்னை அணுகி இருந்தால் நட்பு ரீதியாக அப்படங்களை நீக்கி இருப்பேன் ..

ஆனால் கண்ணியம் என்பதே இல்லாமல் போனதால் .. அவற்றை நீக்க முடியாது என தெளிவாகக் கூறிவிட்டேன் !!!

என்னுடைய நிலைப்பாடு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன் ... !!!

நான் செய்ததில் தவறு இல்லை என்பது உண்மை .. என்னை தீவிர நிலைக்கு தள்ளியது தங்கள் தரப்பினர் தான் என்பது தான் உண்மை ..

இப்பின்னூட்டத்தை வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள் !

Anonymous said...

@ சுவனப்பிரியன் - என்னைப் பொறுத்தவரை முகமதுவின் புகைப்படம் போல் ஒன்றினைப் பயன்படுத்த தவறாக எண்ணியதில்லை. இஸ்லாத்திலும் வெளிப்படையாக முகமதுவின் படங்களை வரையாதே எனக் கூறப்பட்டதாக் நான் அறியவில்லை. வகாபிகளே அவற்றை வரையத் தடுப்பதாக அறிகின்றேன். சியாக்களில் பல நூறு ஆண்டுகளாக முகமதிவின் படங்களை கதைகளுக்கும், இன்னப் பிறவற்றுக்கும் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் முகமதுவை அவர்கள் வழிப்படுவதில்லை என்பதையும் நான் அறிவேன்.

சரி ! ஒருவேளை முகமதுவின் படத்தைப் போட்டது தமிழ் இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினருக்குப் பிடிக்கவில்லை எனில் - நீங்களோ ( அவர்களோ ) எப்படி என்னை அணுகி இருக்க வேண்டும்.

முதலில் கண்ணியமாக எனக்கு விடயத்தை விளக்கமாக சொல்லி மின்னஞ்சல் அனுப்பி இருத்தல் வேண்டும். அதன் பின் அதன் தீவிரம் மற்றும் உணர்வுப் பூர்வமாக பரிசீலித்து இருப்பேன்.

ஆனால் நடந்து என்ன ? முகமது ஆசிக்கும், ஆசிக் அகமதுவும் என்னவென்றே விளக்கமளிக்காமல் பின்னூட்டங்களில் ஆ ! ஊ ! எனக் கதறினார்கள். ஒருவரும் என்னைத் தொடர்புக் கொண்டு எடுத்துக் கூறவில்லை.

முகமது ஆசிக் ஒரு படி மேலே போய் சேற்றை வாரி இழைத்து பதிவிட்டார் ... அப்போது கூட அதனை நான் தமிழ்மணம் ஊடாகவே பார்த்தேன் ...

அதன் பின் ஹலிமா, அனானி, ஆத்திஸ்ட் எனப் பல போலிப் பெயர்களில் இருப்போர் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசினார்கள் ...

அய்யா ! ஒருவரேனும் எனக்கு மின்னஞல் செய்து விளக்கம் கேட்கோவோ, கோரிக்கை இடவோ இல்லை ...

பல பழைய கடுப்புகளை மனதில் வைத்திருந்தார்கள் என்பதையும் அப்போது தான் நான் அறிந்தேன் ...

சொல்லப் போனால் பதிவுலகில் எனதுப் பதிவைப் படித்த ஒரு இஸ்லாமியப் பதிவருக்கு கூட பிரச்சனைகளை எப்படி தீர்ப்பது என்றோ ? எப்படி அணுக வேண்டும் என்றோ ஒரு பக்குவமும் இல்லாமல் இருந்தது ..

முகமதுவின் படங்களை வரையக் கூடாது என்பது இஸ்லாமியரைத் தான் கட்டுப்படுத்தும் - இஸ்லாமியர் அல்லாதோர் அப்படியான படங்களை பயன்படுத்துவது தவறு என்பதை ஏற்காதவன் நான். ஒருவேளை கண்ணியமாக என்னை அணுகி இருந்தால் நட்பு ரீதியாக அப்படங்களை நீக்கி இருப்பேன் ..

ஆனால் கண்ணியம் என்பதே இல்லாமல் போனதால் .. அவற்றை நீக்க முடியாது என தெளிவாகக் கூறிவிட்டேன் !!!

என்னுடைய நிலைப்பாடு புரிந்திருக்கும் என நினைக்கின்றேன் ... !!!

நான் செய்ததில் தவறு இல்லை என்பது உண்மை .. என்னை தீவிர நிலைக்கு தள்ளியது தங்கள் தரப்பினர் தான் என்பது தான் உண்மை ..

இப்பின்னூட்டத்தை வெளியிட்டமைக்கு மிக்க நன்றிகள் !

suvanappiriyan said...

இக்பால் செல்வன்!

//சியாக்களில் பல நூறு ஆண்டுகளாக முகமதிவின் படங்களை கதைகளுக்கும், இன்னப் பிறவற்றுக்கும் பயன்படுத்துகின்றார்கள். ஆனால் முகமதுவை அவர்கள் வழிப்படுவதில்லை என்பதையும் நான் அறிவேன்.//

முகமது நபியை சிறப்பிப்பதை விட அதிகமாக அவரது மருமகன் அலியையும், பேரன் ஹூசைனையும் முக்கியப்படுத்துவார்கள். தர்ஹாக்களின் வணக்கத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். 'முகமது நபிக்கு பிறகு வாரிசுரிமையில் இஸ்லாமிய ஆட்சி மருமகன் அலிக்கு வந்திருக்க வேண்டும். அபுபக்கரும், உமரும், உஸ்மானும் எப்படி வரலாம்' என்ற தோனியில் அந்த சிறந்த ஆட்சித் தலைவர்களுக்கு மரியாதை செய்ய மாட்டார்கள். இது போல் முகமது நபியின் கட்டளைக்கு மாற்றமாக பல புதிய சடங்குகளை புகுத்தி விட்டார்கள். முஹர்ரம் மாதத்தில் உடம்பை கீறிக் கொண்டு ரோடுகளில் நடந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். இது போன்று செல்வதை முகமது நபி வன்மையாக கண்டித்திருக்கிறார். எனவே இஸ்லாமிய சட்டங்களை முகமது நபியின் போதனையை வைத்துத்தான் நாம் எடை போட வேண்டுமே ஒழிய ஷியாக்களின் நடவடிக்கைகளை வைத்து அல்ல.

திருவள்ளுவர் எப்படி இருப்பார் என்றே நமக்கு தெரியாது. ஆனால் ஒரு ஓவியரின் புண்ணியத்தால் இன்று ஒரு உருவம் நம் கண் முன்னே ஆழமாக பதிந்து விட்டது. தற்போது கலைஞரின் புண்ணியத்தால் அவரை கடவுள் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். அந்த நிலை முகமது நபியின் புகைப்படத்துக்கும் வந்து விடக் கூடாது என்பதே எங்களின் கவலை.

//பல பழைய கடுப்புகளை மனதில் வைத்திருந்தார்கள் என்பதையும் அப்போது தான் நான் அறிந்தேன் ...//

உங்கள் அந்த புகைப்படத்தைத் தவிர வேறு என்ன கடுப்பு இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் இஸ்லாத்தின் மேல் வைத்த கேள்விகள் அனைத்தும் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் மூன்று வருடத்துக்கு முன்பே ஜோ என்ற பதிவருக்கு நானும், அபு முஹையும், நல்லடியாரும், வஹ்ஹாபியும் விளக்கியுள்ளோம். எனது பழைய பதிவுகளை படித்தாலே விளக்கங்கள் கிடைக்கும்.

//நான் செய்ததில் தவறு இல்லை என்பது உண்மை .. என்னை தீவிர நிலைக்கு தள்ளியது தங்கள் தரப்பினர் தான் என்பது தான் உண்மை ..//

என்னையும் ஆஷிக்கையும் ஒரு பதிவில் பிரதானமாக எதிர் கருத்துக்களை வைத்து அந்த பதிவின் தலைப்பில் மூன்று பன்றிகளின் படத்தைப் போடுகிறீர்கள். அந்த பதிவுக்கு எங்களை இழிவு படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை தவிர வேறு காரணம் இல்லை. இருந்தும் அதை நான் நீக்க சொல்லவில்லை. உங்களுக்கு தெரிந்ததுதான் அவ்வளவுதான் என்று லேசாக எடுத்துக் கொண்டோம்.

ஆனால் தன்னால் மதிக்கப்படும் ஒருவரை யாரோ வெளியிட்ட போட்டோவை நீங்கள் வெளியிட்டது கண்டு கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டது உண்மை. அதற்காக மற்றவர்கள் உங்களை தனிப்பட்ட முறையில் எழுத்தில் தாக்கியதும் தவறே! நண்பர் ஆஷிக்கிடம் சொல்லி உங்கள் சம்பந்தப்பட்ட பதிவை நீக்கி விட சொல்லுகிறேன். அதே போல் நீங்களும் பிரச்னைக்குரிய அந்த படத்தை நீக்கி விடுங்கள். பழைய படி கருத்துக்களால் வாதங்களை வைப்போம். உங்களின் பதிலை எதிர்பார்க்கிறேன். நன்றி.

மறுபடியும் சொல்கிறேன் இது ஒரு அன்பான வேண்டுகோளே!

Anonymous said...

@ சுவனப்பிரியன் - உங்கள் மதங்களில் இருக்கும் எண்ணற்றப் பிரிவுகளைப் பற்றி நான் அறிவேன் .. அவற்றில் எது சரி தவறு என்பதை ஆராய்வதை விட, ஒவ்வொருவரின் நம்பிக்கையும் நம்பிக்கை அடிப்படையில் மதிக்கப்பட வேண்டியவை என்பது எனதுக் கருத்து. எப்படி ஒரு இஸ்லாமியர் அல்லாதோரிடம் முகமதுவின் புகைப்படத்தை போட வேண்டாம் என தாங்கள் எதிர்ப்பார்க்கின்றீர்களோ ? அப்படியே ஒரு சியா சுன்னி தமது நம்பிக்கைகளை தரம் தாழ்த்தாமல் இருக்க வேண்டும் என்பதை எதிர்ப்பார்ப்பார் தானே ! எனக்கு இருப் பிரிவுகளிலும் நண்பர்கள் இருக்கின்றார்கள் என்பதால் இருப் பிரிவினர் குறித்தும் நான் ஓரளவு அறிவேன் !!!

இஸ்லாத்தில் ஒருப் பிரிவினரே முகமதுவின் ( கருதப்படும் ) படங்களை பயன்படுத்தும் போது, இஸ்லாத்தை சாராத நான் பயன்படுத்துவதை இஸ்லாம் சொன்னது என்ற காரணத்தைக் காட்டி கட்டுப்படுத்த முடியாது என்பதே உண்மை .... !!! குரானில் இருப்பதை எல்லாம் நானும் பின்பற்ற வேண்டும் என நினைப்பதோ, அல்லது இஸ்லாமியர் பின்பற்றுவதை நானும் பின்பற்ற வேண்டும் என சொல்வது எவ்வகை நியாயம் ... !!!

ஆனாலும் மற்றவர் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தவன் என்றபடியால் .. என்னால் அப்புகைப்படத்தை நீக்கி இருந்திருப்பேன் .. ஆனால் அது தான் பிரச்சனை , அதனை நீக்கி விடுங்கள், இஸ்லாத்தில் சுன்னிப் பிரிவினர் அதனை விரும்புவதில்லை என முறைப்படி ஒரு வேண்டுகோளை என்னை அணுகி விடுத்து இருந்தால் .. நிச்சயம் அதனை நான் புறந்தள்ளி இருக்கவே மாட்டேன் ?

ஆனால் ! நடந்தது என்ன என்பது உங்களுக்குத் தெரியும் ? அனுபவசாலியாக இருக்கும் தாமே - எனக்கு மின்னஞ்சல் மூலம் விடயத்தை விரிவாகச் சொல்லாமல் விட்டு விட்டீர்கள் ? வேறு யாரும் உங்கள் தரப்பில் இருந்து சொல்லவும் இல்லை.

முகமதுவின் படத்தை இஸ்லாமியர் பயன்படுத்துவதில்லை என்பது எனக்குத் தெரியும் .. ஆனால் அது இஸ்லாமியருக்கு மட்டும் தான் எனவும், இஸ்லாமியர் அல்லாதோரை கட்டுப்படுத்தாது என்பது தான் எனது எண்ணமே !!! இஸ்லாமியர் அல்லாதோரிடம் கண்ணியமான வேண்டுகோள் மூலமாகவே சொல்லி இருத்தல் வேண்டும் அல்லவா ?

அதனைச் செய்யாதது தவறு தானே !!!

நான் முகமதுவை கேவலப்படுத்த நினைத்திருந்தால் .. எத்தனையோ கேவலமான படங்களை அல்லவா போட்டு இருந்திருப்பேன் .. இதனைக் கூட தங்கள் தரப்பில் யோசிக்கவில்லையே என்பதும் சொல்லவேண்டிய ஒன்று ...

Anonymous said...

பன்றியின் புகைப்படங்களைக் குறித்துக் கூறினீர்கள் .. என்னைப் பொறுத்தவரை பன்றியையோ, நாயையோ அன்பான விலங்காகவே நான் கருதுகின்றேன் ... !!! அவற்றை ஏனையோர் போல வசைவதற்காக பயன்படுத்துவது அல்ல. இறைவன் படைத்தது தானே பன்றி .. அப்படியானால் .. அது கேவலமா ?

நான் உங்களை கேவலப்படுத்த எண்ணி இருந்தால் .. சாக்கடையில் உருளும் கொழுத்த கருத்தப் பன்றிகளை போட்டு இருப்பேனே !!!

நன்கு கவனித்துப் பாருங்கள் - அது மூன்றுப் பன்றிக் குட்டிகள் - அது நீதிக் கதையின் தாக்கத்தால் நான் போட்டது. சரி அதில் ஒன்றை நீங்களாகவும், ஒன்றை ஆசிக்காகவும், ஒன்றை நானகவும் என வைத்துக் கொண்டுத் தானே போட்டிருப்பதாக எண்ண வேண்டும். அவற்றில் என்னையும் நான் பன்றியாகக் கருதினேன் . கற்வீடு கட்டிக் கொண்டப் பன்றியாக.

சரி ! அதுவும் தங்கள் மனதைப் புண்படுத்தி இருந்தால். ஒரு மின்னஞ்சல் மூலமாக வேண்டுகோள் வைத்திருந்தால். அதனை எடுத்துவிட்டு மூன்று குரங்குகளையோ, மூன்று நாய்க்குட்டிகளையோக் கூட போட்டி இருப்பேன் ..

ஏன் உங்களவர்களில் இப்படியான பொறுமையான அணுகுமுறை இருக்கவில்லை .. எனது பல இஸ்லாமிய நண்பர்கள் மிகவும் பொறுமையானவர்களாகவே நேரில் கண்டிருந்தேன், பழகி இருந்தேன் .. ஆனால் இஸ்லாத்தை வலைப்பதிவில் பிரதிநிதித்துவம் பண்ணும் நீங்கள் அதை விட பொறுமையாக அல்லவா அணுகி இருத்தல் வேண்டும் ..

Anonymous said...

@ சுவனப்பிரியன் - எனது வேண்டுகோளை ஏற்பீர்களானால் ? முகமதுவின் படங்களை நான் நீக்கத் தயார் ,,,,

1. இஸ்லாமியர்களில் சுன்னிப் பிரிவினர் முகமதுவின் படங்களை பயன்படுத்துவதில்லை - சியாக்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதை சிறியப் பதிவாக நீங்கள் மூவருமே (அல்லது ஒருவரேனும்) எழுத வேண்டும். முகமதுவின் படங்களைப் பயன்படுத்துவது இஸ்லாமிய - சுன்னிப் பிரிவினர் விரும்புவதில்லை ( காரணங்களை நீங்களே விளக்கி விடலாம் சியாக்கள் செய்வது தவறே எனினும் அதனையும் சொல்லிவிடுங்கள்). ஏனெனில் அந்தப் பதிவுகளை மையமாக வைத்துத் தான் - நானும் முகமதுவின் படங்களை நீக்க உதவியாக இருக்கும் ( வாசகர்களுக்கு விளக்கமளிக்கவும் உதவும் ) .

2. ஏனையோர் செய்தவை எல்லாம் இருக்கட்டும். எனது தளத்தை தினமலரோடு ஒப்பிட்டு எழுதிய பதிவை முகமது ஆசிக் நீக்க வேண்டும் - ஒரு சிறு பகிரங்க மன்னிப்பைக் கோர வேண்டும். ( அவர் பதிவிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ - அதனை எனதுப் பதிவில் பயன்படுத்த அனுமதிக்கவும் வேண்டும் )

3. குரானில் சொல்லப்பட்ட அல்லது இஸ்லாமியர் நம்பிக்கைகளை ஏனையோர் ஏற்கத் தாங்கள் விரும்பினால் - அதனை குரானின் அடிப்படையில் வேண்டுகோள் வைக்காமல், உணர்வு ரீதியானது, நட்பு ரீதியானது என்ற அடிப்படையில் வேண்டுகோள் வைக்க வேண்டும் - அப்படியான ஒரு வேண்டுகோளை எனக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும். அதனை பதிவில் பயன்படுத்த எனக்கு அனுமதி தர வேண்டும்.

இவற்றை செய்தால் நிச்சயம் முகமதுவின் படங்களை நீக்கிவிடுவேன் .. அதே போல வேறுப் படங்களை இடவும் மாட்டேன். ஆனால் கல்வியியல், ஆராய்ச்சியல் ரீதியாக முகமதுவின் படங்கள் உள்ள தளங்களுக்கு ( விக்கிப்பீடியா போல ) தொடுப்புக்களை பதிவுகளில் இடுவேன் .. அதனை தடுக்கக் கூடாது.

புரிதலுக்கு மிக்க நன்றிகள் !!! :)

கோவி.கண்ணன் said...

//முடிவில் இஸ்லாத்தில் தஞ்சமடைகிறார். இஸ்லாத்தில் இணைந்த பிறகு அவர் பெற்ற பெற்றுக் கொண்டிருக்கிற இன்பங்களை அவர் வாயாலேயே கேட்டும் பார்த்தும் மகிழுங்கள் நேரமிருப்பின்.//

ஒருவர் பேச்சிலராக இருந்து இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்னு சொல்வது எவ்வளவு அபத்தமோ, அது போன்ற அபத்தமே நீங்கள் சொல்லும் பெரியார் தாசன் நாத்திகத்தில் இருந்து இஸ்லாமுக்கு மாறினார் என்று கூறுவதும், அப்துல்லா என்கிற பெரியார் தாசன் இஸ்லாமுக்கு மாறும் போது நாத்திகன் இல்லை.

மேலும் பெரியார் தாசன் இப்ப உதிர்க்கும் முத்துகளை அவர் நாளையோ மறுநாளோ அவர் கிறித்துவராக மாறும் போது படித்தால் தான் நகைச்சுவையாக இருக்கும், அவர் அப்படி மாறமாட்டார் என்று உங்களிடம் எந்த உத்திரவாதமும் இல்லை என்று நம்புகிறேன் :)

தருமி said...

//இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை. //

ஓ!

VANJOOR said...

// இக்பால் செல்வன் said...

@ சுவனப்பிரியன் - எனது வேண்டுகோளை ஏற்பீர்களானால் ? முகமதுவின் படங்களை நான் நீக்கத் தயார் ,,,,

……….இவற்றை செய்தால் நிச்சயம் முகமதுவின் படங்களை நீக்கிவிடுவேன் .. அதே போல வேறுப் படங்களை இடவும் மாட்டேன். ஆனால் கல்வியியல், ஆராய்ச்சியல் ரீதியாக முகமதுவின் படங்கள் உள்ள தளங்களுக்கு ( விக்கிப்பீடியா போல ) தொடுப்புக்களை பதிவுகளில் இடுவேன் .. அதனை தடுக்கக் கூடாது. //

ம‌து அருந்துவது, சூதாடுவது, விப‌சார‌ம் செய்வது கூடாது என்ற‌ ந‌ல்லோர்க‌ள் கூற்றை ஆதரிக்கிறேன்.

ஆனால் மதுபான , சூதாட்ட விபசார விடுதிகளுக்கு செல்ல ஏதுவாக, வழிகாட்டியாக விளம்பர தொடுப்புக்களை முகவரியுடன் கல்வியியல், ஆராய்ச்சியல் என்ற போர்வையில் நான் தொடர்ந்து பதிவுகளில் இடுவேன். அதனை தடுக்கக் கூடாது ‍‍

என்றும்

திருட‌ன் திருட்டு கொடுத்த‌வ‌னை கூண்டில் ஏற்றும் க‌தையாக?

“தப்பு செய்துவிட்டேன், மாட்டிக்கொண்டேன்,” “முகமது ஆசிக் க‌ண்டித்தார்.”

“ இப்பொழுது நிப‌ந்த‌னையுட‌ன் ம‌ன்னிப்பு கேட்பேன். ஆனால் ப‌ரிகார‌மாக‌ முகமது ஆசிக் நிப‌ந்த‌னைய‌ற்ற‌ ம‌ன்னிப்பு கேட்க‌வேண்டும். “ -- இக்பால் செல்வன்.

என்றும்

HEADS I WIN.
TAILS YOU LOOSE.

பூவா ? த‌லையா? நிக‌ழ்வுக‌ளில் “பூ விழுந்தால் இக்பால் செல்வ‌னுக்கு வெற்றி” “தலை விழுந்தால் முக‌ம‌து ஆசிக்குக்கு தோல்வி” ?

என்று இக்பால் செல்வன் கூறுகிறாரா? விந்தையே.!!!

.

Aashiq Ahamed said...

சகோதரர் இக்பால் செல்வன்,

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்

------
1. இஸ்லாமியர்களில் சுன்னிப் பிரிவினர் முகமதுவின் படங்களை பயன்படுத்துவதில்லை - சியாக்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர் என்பதை சிறியப் பதிவாக நீங்கள் மூவருமே (அல்லது ஒருவரேனும்) எழுத வேண்டும். முகமதுவின் படங்களைப் பயன்படுத்துவது இஸ்லாமிய - சுன்னிப் பிரிவினர் விரும்புவதில்லை ( காரணங்களை நீங்களே விளக்கி விடலாம் சியாக்கள் செய்வது தவறே எனினும் அதனையும் சொல்லிவிடுங்கள்). ஏனெனில் அந்தப் பதிவுகளை மையமாக வைத்துத் தான் - நானும் முகமதுவின் படங்களை நீக்க உதவியாக இருக்கும் ( வாசகர்களுக்கு விளக்கமளிக்கவும் உதவும் ) .
-------

நாயகம் (ஸல்) அவர்கள் தன்னை படம் வரைவதை தடுத்தார்கள் (தான் கடவுளாக்கப்படலாம் என்று எண்ணியதால்). விசயம் அங்கேயே முடிந்துவிட்டது. ஷியாக்கள் என்பவர்கள் அப்படி செய்தால், நாயகம் (ஸல்) அவர்களது கூற்றுக்கு எதிராக செயல்படுகின்றார்கள் என்று தான் அர்த்தம்.

மேலும் பின்வருவதை விக்கிபீடியா சொல்லுகின்றது

//Most Shia scholars nowadays accept respectful depictions and use illustrations of Muhammad in books,[citation needed] though historically they were against such depictions.[4]//

ஷியாக்கள் சென்ற காலங்களில் நாயகம் (ஸல்) அவர்களது படத்திற்கு எதிராக இருந்ததாக குறிப்பிடும் விக்கிபீடியா, தற்போது ஷியாக்கள் தங்கள் புத்தகங்களில் படத்தை உபயோகபடுத்துவதாக கூறியுள்ளது. ஆனால் அதற்கு ஆதாரம் தராமல் "citation needed" என்று குறிப்பிட்டுள்ளார்கள். நான் பல ஷியா தளங்களில் சென்று பார்த்து விட்டேன். அப்படிப்பட்ட படம்/ஓவியம் எதையும் நான் காணவில்லை.

கோவிக்கண்ணன் அவர்கள் எழுதிய பதிவிலும் (இரானியன் என்று ஒரு லிங்க் கொடுத்திருந்தார்) பார்த்தேன். அவர் கொடுத்த எந்த லின்கிலும்/ஆவணப்படத்திலும் நாயகம் (ஸல்) அவர்களது உருவம்/ஓவியம் என்று சொல்லி எதையும் காட்டவில்லை.

மேலும் ஷியா அறிஞர்கள் கண்ணியமான படத்தை ஒப்புக்கொள்வதாகவும் விக்கிபீடியா தெரிவிக்கின்றது. ஒருவேளை, விக்கி சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில் அது நிச்சயம் எங்கள் ஆருயிர் நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு எதிரானது.

நாங்கள் ஏன் பதிவெழுத வேண்டுமென்று எதிர்பார்க்கின்றீர்கள் என்று புரியவில்லை. என்னுடைய பதில் இதோ தெளிவாக இருக்கின்றது. இதனையே தாங்கள் உங்கள் தளத்தில் உபயோகப்படுத்தி, சுட்டிக்காட்டி அந்த படத்தை எடுப்பதற்கு விளக்கம் கொடுத்து கொள்ளலாம்.

Aashiq Ahamed said...

-----
2. ஏனையோர் செய்தவை எல்லாம் இருக்கட்டும். எனது தளத்தை தினமலரோடு ஒப்பிட்டு எழுதிய பதிவை முகமது ஆசிக் நீக்க வேண்டும் - ஒரு சிறு பகிரங்க மன்னிப்பைக் கோர வேண்டும். ( அவர் பதிவிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ - அதனை எனதுப் பதிவில் பயன்படுத்த அனுமதிக்கவும் வேண்டும் )
------

சகோதரர், நாங்கள் எடுத்தோம் கவுத்தோம் என்று அந்த பதிவை இடவில்லை. தீர ஆலோசித்து தான் செயல் பட்டோம். அதில் முக்கியமான ஒன்று, ஒருவேளை சகோதரர் இக்பால் செல்வன் அந்த படத்தை நீக்கினால் நாமும் இந்த பதிவை நீக்கிவிட வேண்டும் என்பதுதான் அது.

ஆகையால் இன்ஷா அல்லாஹ், நீங்கள் அந்த படத்தை எடுத்தவுடன், அது எங்களுக்கு தெரிந்தவுடன் எங்களின் பதிவை நீக்கி விடுவோம்.

முதலில் தாங்கள் அந்த படத்தை தூக்குங்கள். முடிந்தால் முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோருங்கள். அப்படி தங்களுக்கு விருப்பமில்லை என்றால் விட்டு விடுங்கள்.

அப்படி தாங்கள் தூக்கும்பட்சத்தில் நாங்களும் எங்கள் பதிவை தூக்குவோம். தங்களிடம் மன்னிப்பும் கோருவோம். நிச்சயமாக உங்கள் மனம் வேதனை அடைந்திருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். வேறு வழி இல்லாமல் தான் அந்த பதிவு வந்தது. ஆகையால் நாங்கள் மன்னிப்பு கோருவதில் எங்களுக்கு தயக்கமில்லை.

----
3. குரானில் சொல்லப்பட்ட அல்லது இஸ்லாமியர் நம்பிக்கைகளை ஏனையோர் ஏற்கத் தாங்கள் விரும்பினால் - அதனை குரானின் அடிப்படையில் வேண்டுகோள் வைக்காமல், உணர்வு ரீதியானது, நட்பு ரீதியானது என்ற அடிப்படையில் வேண்டுகோள் வைக்க வேண்டும் - அப்படியான ஒரு வேண்டுகோளை எனக்கு மின்னஞ்சல் செய்ய வேண்டும். அதனை பதிவில் பயன்படுத்த எனக்கு அனுமதி தர வேண்டும்.
-----

சகோதரர், எதற்காக இப்படி கேட்கின்றீர்கள் என்று தெரியவில்லை. நான் உங்களின் "பதிவுலக பாய்ச்சல்' பதிவில் தெளிவாக கூறியிருக்கின்றேன். அந்த படம் முஸ்லிம்களின் உணர்வுகளை மிகவும் புண்படுத்தக்கூடியது என்று. அதனையே எங்களின் வேண்டுகோளாக தாங்கள் எடுத்து கொள்ளலாம். வெளிப்படையாக தானே இருக்கின்றன பின்னூட்டங்கள். அப்புறம் எதற்கு மின்னஞ்சல்??? வேண்டுமென்றால் இந்த பதிலையே கூட தாங்கள் வேண்டுகோளாக எடுத்து கொள்ளலாம். இதனை தாங்கள் உபயோகப்படுத்தி கொள்வதற்கும் (இன்னும் பிற இது சம்பந்தமான என்னுடைய பின்னூட்டங்களையும்) அனுமதி தருகின்றேன்.

தாங்கள் எதற்கு இப்படி கண்டிஷன் போடுகின்றீர்கள் என்று முஸ்லிம்கள் சிலருக்கு சந்தேகம் வந்திருக்கலாம். இதில் ஏதாவது உள்அர்த்தம் இருக்குமோ என்றும் சிலர் நினைக்கலாம். ஆனால் தற்போது இதனை பற்றி அலட்டிக்கொள்ளகூடிய நிலையில் நாங்கள் இல்லை.

நடந்ததை மறப்போம். நடக்கப்போவதை நினைப்போம். இந்த பிரச்சனை மூலமாக நமக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை களைவோம்.

தாங்கள் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்பட்டு அந்த படத்தை நீக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

தாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை மூலம் நமக்குள்ளாக இருக்கும் இந்த வேறுபாடு களைந்து நல்லிணக்கம் ஏற்பட எல்லாம் வல்ல இறைவன் உதவுவானாக...அமீன்

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

Abdurrahman said...

ஓ!- தருமி. ஓ!- கோவிக் கண்ணன்!

//தருமி said...

//இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை. //

ஓ!//


கோவிக் கண்ணன்!said
//மேலும் பெரியார் தாசன் இப்ப உதிர்க்கும் முத்துகளை அவர் நாளையோ மறுநாளோ அவர் கிறித்துவராக மாறும் போது படித்தால் தான் நகைச்சுவையாக இருக்கும், அவர் அப்படி மாறமாட்டார் என்று உங்களிடம் எந்த உத்திரவாதமும் இல்லை என்று நம்புகிறேன் :) கோவிக் கண்ணன்! //

இருவருக்கும் பதில் இதோ !!!

பதில் >> பெரியார்தாசனின் விடியோ உரை

...

Anonymous said...

@ வாஞ்சூர் - // “தப்பு செய்துவிட்டேன், மாட்டிக்கொண்டேன்,” “முகமது ஆசிக் க‌ண்டித்தார்.” //

தங்களின் வார்த்தைகளை மீண்டும் சரிப்பார்க்க --- தப்பு செய்தது நானில்லை என்பதை உணர வேண்டும் .. முகமதுவின் படங்களை பயன்படுத்துவது இஸ்லாத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரின் உணர்வுகளுக்கு கேடாக இருப்பதாக தாங்கள் எடுத்து வைத்ததால் தான் .. நட்பு ரீதியாக அவற்றை நீக்க முன்வந்தேன் .. மேலும் மேலும் எனது நட்புக் கரங்களை தள்ளிவிடுவது போல நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளில் கண்ணியமில்லை .... !!!

மீண்டும் சொல்கின்றேன் தப்பு செய்யவும் இல்லை, நான் மாட்டவும் இல்லை ... !!! முகமது ஆசிக் செய்தது கண்டிப்பும் இல்லை ...

முகமதுவின் படங்களை போடக் கூடாது என்பதற்கு எங்கள் மீது கட்டாயமும் இல்லை .. கட்டாயத்தின் பேராலும், கட்டளையின் பேராலும் அவ்வாறான நிர்பந்தங்களைத் தான் தாம் வைக்கவிரும்பினால் அதனை ஏற்க வேண்டிய நிர்பந்தமும் எமக்கு இல்லை ..

ஒருவரின் மனதை புண்படுத்தக் கூடாது என்ற உணர்வு ரீதியான முறையில் தான் பேச வந்தேன் .. எனதுப் பேச்சினை உதாசீனம் செய்ய நீங்கள் நினைத்தால் செய்துக் கொள்ளலாம்.. நான் எதிலும் இறங்கி வந்துப் பேசப் போவதில்லை....

இங்கு யாருக்கும் அஞ்ச வேண்டிய நிர்பந்தம் எனக்கில்லை .. புரிந்துக் கொண்டிருப்பீர்கள் .. பல இளையவர்களுக்கு இருக்கக் கூடி பொறுமை பெரியவர்களுக்கு இல்லாமல் போனதன் பேச்சின் வடிவங்கள் இவை ..

இதில் வெற்றியோ தோலிவியோ என்பதில்லை .. எனது தார்மீக உரிமைகளை உணர்வுகளைக் காட்டி தடுக்க முடியாது, ஆனால் உணர்வுகளை மதித்து எனது தார்மீக உரிமைகள் சிலவற்றை விட்டுக் கொடுக்க வந்தேன் அவ்வளவே !

இவ்வளவு பேசும் நீங்கள் - ஏன் விக்கிபீடியா உட்பட வேறு இணையதளங்களில் முகமதுவின் படங்களை நீக்க முனையவில்லை .. ஏனெனில் உங்களால் அது சாத்தியமில்லை என்பதுவே !!!?

Anonymous said...

@ ஆசிக் அகமது - தங்களின் பொறுமையான பதிலுக்கு அன்புக்கும் நன்றிகள்.

ஏற்கனவே வாஞ்சூருக்கு சொன்னப் பதில் தான். இங்கு நான் உங்களிடம் பேசுகின்றது அச்சத்தின் விளைவாகவோ, தப்பு செய்து விட்டேன் என்பதற்காகவோ இல்லை. முகமதுவின் படங்களை நான் பயன்படுத்துவதில் எனக்கு எந்தத் தப்பும் செய்வதாக இல்லை .... இருப்பினும் சிலரின் உணர்வுகளை மதிக்கும் பொருட்டே நான் இம்முடிவுக்கு வந்தேன் ... இல்லை அதில் விருப்பம் இல்லை எனில் .. நான் எனது வழியில் போகின்றேன் .. நீங்கள் உங்கள் வழியில் போய்விடலாம் ... வாஞ்சூர் போன்றோரின் பேச்சுக்கள் நியாயமற்றவை என்பதை தங்கள் தரப்பு ஏற்க வேண்டும் ..

//சகோதரர், நாங்கள் எடுத்தோம் கவுத்தோம் என்று அந்த பதிவை இடவில்லை. தீர ஆலோசித்து தான் செயல் பட்டோம்.//

அது நிற்க. எதனையும் அலுவல்பூர்வமாக அணுகுகின்றவன் நான். ஆகையாலே பதிவின் மூலமாகவோ - மின்னஞ்சல் மூலமாகவோ மன்னிப்புக் கோரக் கேட்டேன் .. முகமது ஆசிக் மற்றும் நீங்கள் - ஒரு பகிரங்க மன்னிப்புக் கோரினால் நான் அவர் மன்னிப்புக் கோரிய அடுத்த 24 மணி நேரத்துக்குள் முகமதுவின் படத்தினை நீக்கி விடுவேன் - அதற்கு உபகாரமாக தனி மனித தாக்குதல் செய்த தினமலப் பதிவை அவர் நீக்கி விடவேண்டும்.

மற்றது ஒன்று மற்றும் இரண்டாம் கோரிக்கைகளுக்கான பதில்கள் இங்கே பின்னூட்டத்தில் இருந்தே நான் ஏற்றுக் கொள்கின்றேன் ...

அது நிற்க. சியாக்களின் நம்பிக்கை குறித்து நான் விமர்சிக்கப் போவதில்லை .. எப்படி இஸ்லாமியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கப் படவேண்டும் என நினைக்கின்றீர்களோ ? அதே போல சியாக்களின் நம்பிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என நான் நினைக்கின்றேன். அவ்வளவே !!!

புரிதலுக்கு நன்றிகள்.

Anonymous said...

@ ஆசிக் அகமது - இனிமேலாவது புரிந்துக் கொள்ளுங்கள் ஒருவரை டிப்ளமாசியாக எப்படி அணுகுவது என்று .. தாங்கள் முகமதுவின் படத்தைக் கண்ட அடுத்தது என்ன செய்திருக்க வேண்டும் .. என்னை அணுகி அதுக் குறித்து விளக்கமும், விண்ணப்பமும் செய்திருக்க வேண்டும்.

அதை விடுத்து ஆலோசித்து ஒருவரை தனிமனிதத் தாக்குதல் செய்வோம். அவர் எடுத்தார்னா நாமும் எடுப்போம் என்பது .. அவனை நிறுத்தச் சொல்லு நானும் நிறுத்தரேன் என்பது போல இருக்கின்றது. நகைப்புக்குரிய செயல் என்பேன் :)

நீங்கள் முறைப்படி விண்ணப்பம் வைத்திருந்தால் முகமது ஆசிக்கின் பதிவுக்கோ - அதன் எதிர்ப்பதிவுக்கோ தேவையே இருந்திருக்காது. இதனை சென்சேனால் ஆக்கலாம் என்று முடிவு செய்திருந்தீர்களோ என்னவோ ? எனக்கும் தெரியாது.

இப்போது கூட நானாகவே வந்து தான் - பேசிக் கொண்டிருக்கின்றேன். டிப்ளமாசி என்பதை அறிந்தால் சுபம்.

// தாங்கள் எதற்கு இப்படி கண்டிஷன் போடுகின்றீர்கள் என்று முஸ்லிம்கள் சிலருக்கு சந்தேகம் வந்திருக்கலாம். //

சந்தேகம் இருப்பின் என்னை அணுகி விசாரித்துக் கொள்ளலாம். நான் கண்டிசன் போடக் காரணம் .... தவறு என்பது என்பால் இல்லை என்பதற்காகத் தான்.. இல்லை எனில் வாஞ்சூர் போல இன்னும் பலர் கொக்கரித்துக் கொண்டிருப்பார்கள் என்பதற்காகத் தான். வேறொன்றுமில்லை ...

எவ்வளவு விரைவாக எனக்கு ஒரு பகிரங்க மன்னிப்பை நீங்கள் கோருவீர்களோ .. அது நடந்து அடுத்த சில மணிநேரங்களில் முகமதுவின் படத்தை ( உணர்வுக்கு மதிப்பளித்து ) நீக்குவேன்.. இப்படியான உணர்வுக்கு மதிப்பளித்து தங்கள் பதிவுகளைக் கூட எதிர்க்காலத்தில் சில வேற்றுமதத்தினர் மாற்றச் சொல்லிவரலாம் என்பதையும் நினைவில் கொள்க.

மிக்க நன்றி !!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
நல்ல பதிவு சகோ.சுவனப்பிரியன், அதிரடியாக தலைப்பிட்டு சூடாக பதிவை தந்தமைக்கு நன்றி.

இப்பதிவின், தொடர்ந்த பின்னூட்டங்களை கண்டேன். நேற்று முழுதும் நான் வெளியூர் சென்று விட்டதால் விவாதத்தில் உடனே இணைய முடியவில்லை.
===================================

@இக்பால் செல்வன்,

பகிரங்க மன்னிப்பு என்பது ஒருவழிப்பாதையாக இருக்கவேண்டும் என்றும், அதைவைத்து ஹிட்ஸ் பிசினஸ் பண்ணவேண்டும் என்றும் முடிவு கட்டி இருக்கிறீர்கள். இந்த உங்கள் எண்ணங்களை வெட்டவெளிச்சமாக்கி விட்டார் சகோ.வாஞ்சூர் அவர்கள்.

எவனோ ஆதாரம் இன்றி வரைந்த ஒரு குப்பையை, நபி என்று முட்டாளாய் நம்பித்தொலைத்து மதிகெட்டு போட்டீர்களே ஒரு 'அனானி படம்'... இந்த மேட்டர் பற்றி பிறகு பார்ப்போம்.

அதற்கு முன் பன்றி பட மேட்டர் பற்றி பார்த்துவிடுவோமா..?

கண்ணியமான முறையில் நீண்ட விளக்கங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் விவாதத்தில் தரும் பொருமைசாலியான சகோ.சுவனப்பிரியன் மிகவும் சீனியர் பதிவர். சகோ.ஆஷிக் அஹமத் மிகவும் கண்ணியமாக பதில் அளிக்ககூடிய ஒரு பதிவர்.

இவர்களுக்கு 'பதில் அளிக்கிறேன் பேர்வழி' என்று ஒரு பதிவு போட்டீர்கள். அந்த பதிவில், இவர்களின் படங்கள் இருக்கலாம். அல்லது இல்லாதும் இருக்கலாம். அது உங்கள் இஷ்டம். ஆனால், குளோஸ் அப்பில் பன்றிகள் படங்கள் எதற்கு போட்டீர்கள் இந்த பதிவில்..என்று பலமுறை விளக்கம் கேட்கப்பட்டது.. உங்கள் பதில் எவ்வளவு மழுப்பல் வியாக்கியானம்..?

அப்பதிவை எழுதும் போது ஏதோ நீதிக்கதை நியாபகம் வந்ததாய் சொல்கிறீர்கள். அது என்ன நீதிக்கதை? அது எங்கே பதிவில் வருகிறது? அதற்கும் அந்த பதிவிற்கும் என்ன சம்பந்தம்..?

இன்றுவரை உங்களின் அந்த பதிவுக்கும் அந்த பன்றி படத்துக்கும் உள்ள பொருத்தத்தை பற்றி சரியான பதில் கூற இயலவில்லை..!

இது எவ்வளவு கீழ்த்தரமான தனிமனித தாக்குதல்..?

இப்போது உங்களின் புதிய பதில்...

குரங்கு படம்,
நாய் படம்..
என்று இலக்கின்றி போகிறது..!

"உன்னை 'பன்றி' என்று திட்டுவது உனக்கு பிடிக்க வில்லை என்றால்.... குரங்கு ஓகேவா? நாய் ஓகேவா?" என்று கேட்காமல் கேட்கிறீர்கள். இதற்கு பதில் என்ன சொல்வீர்கள்.

"அந்த மூன்றாவது பன்றி நான் என்று சொன்னேனே.. ?
என்னை சொன்னதைத்தானே உங்களை சொல்கிறேன்" ---என்பீர்கள்..!

என்னே... ஒரு வக்கிர புத்தி..?

உங்களை விருந்துண்ண ஒருவர் அழைத்து உங்களுக்கு சைவ நளபாகம் வைத்து இலையில் ஓர் ஓரத்தில் நரகல் வைத்து... "அது பிடிக்கலைன்னா ஓரமா ஒதுக்கிட்டு மத்ததை சாப்பிடுங்க... அதே போலத்தானே என் இலையிலும் இருக்கிறது..? எனக்கு ஏதும் அசூசையாக இல்லையே.. இதுவும்.. நரகலும் இறைவன் படைப்புதான். சாப்பிட்டால் என்ன தவறு?".....என்றால்...???
இது எவ்வளவு கீழ்த்தரமான செயல்..?

சிந்திக்கவும்..!

(தொடர்ச்சி சகோ.சுவனப்பிரியனின் அடுத்த பதிவில் பின்னூட்டமாக...!)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஒரு இஸ்லாமிய கல்லூரியில் படித்த உங்களுக்கு தெரியும். இப்போது இஸ்லாம் பற்றி நன்கு 'புலமை' பெற்ற உங்களுக்கு தெரியும். எங்கே தாக்க வேண்டும். என்ன ஆயுதத்தை உபயோகிக்கவேண்டும் என்று. நீங்கள் அந்த அனானி போட்டோவை நீக்குவதாக ஒத்துகொண்டதற்கு காரணம்.... அது தவறான செயல், குற்றம் என்று உணர்ந்து அல்ல..! அனானி போட்டோ ஏற்கனவே நல்ல வியாபாரம் ஆகி விலை போய்விட்டது. இனி, அடுத்து என்னிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு ஒரு மெயில் வந்துவிட்டால்.. அடுத்த வியாபாரம் களைகட்டும் உங்களுக்கு.

சகோ.வாஞ்சூர் ஒரு அனுபவஸ்தர். உங்களை மாதிரி பலரை பார்த்த அனுபவசாலி. ஒரே ஒரு "மது ஒழிப்பு/மதுக்கடை" உதாரணம் மூலம் உங்களி அப்படியே புட்டு புட்டு வைத்துவிட்டார். அதனால் உங்களுக்கு அவர் மீது கோபம் வர வேண்டும். அதை உங்கள் பதிலில் தெளிவாக பார்த்தேன்.

உங்களுக்கு ஒரு அடிப்படை இன்னும் விளங்கவில்லை.

என்னுடைய அந்த கண்டன பதிவு உங்களின் மட்டமான செயலுக்குத்தான்.

அதில் தலைப்பில் உள்ள வார்த்தை உங்களை சுட்டிருக்கலாம்.

முன்பொருமுறை இதே தளத்தில், மோடி பற்றி அறிந்திராத சகோ.நிருபனுக்கு ஒரே வரியில் விளக்கினேன்.

"நரேந்திர மோடிதான் குஜராத்தின் ராகபக்சே, பின்னாளில், இந்தியாவின் ஹிட்லாராக ஆக்க ஹிந்துத்துவா சக்திகள் முயலுகின்றன"... என்று..!

ஆயிரம் வரிகள் சொல்வதை இந்த ஒரு வரி சொல்லிவிடும்.

அதேபோலத்தான்... டென்மார்க படங்களை அவற்றுக்கு எதிர்ப்பு இருப்பதை அறிந்து, அதைபோட்டால் பரபரப்பாக வியாபாரம் போனியாகும் என்றுதான் தினமலர் போட்டார்கள்.

அதேநேரம், முஸ்லிம்களை இழிவு படுத்தியது போன்றும் ஆயிற்று. இதில் ஒரு குரூர இன்பம் தினமலருக்கு.

இது மற்றவரிடம் இல்லையே?.ஏன்..?அவர்களுக்கு மட்டும் வியாபாரம், லாபம், செல்வம் எல்லாம் வேண்டாமா? வேண்டும்தான். அவர்களுக்கு தெரியும், கருத்துச்சுதந்திரத்துக்கான வரைமுறை, இங்கிதம், எல்லாம்.

இவை எதுவுமே இல்லாத தினமலரின் செயலை.. 'தினமலம்' என்று கூறி கண்டித்தார்கள்.

அதேயே, உங்களுக்கு பயன்படுத்தினால்... படிப்போருக்கு விஷயம் மிக்க எளிதாக விளங்கிவிடும். பலவரிகள் விளக்கி எழுதி சொல்ல வேண்டிய அவசியம் இராது. அதனால்தான் அந்த தலைப்பு வைத்தேன். அதில் கூட உங்கள் பெயரின் மீது அத்தலைப்பு விழக்கூடாது... என்றெண்ணி பிராக்கேட்டில் 'கொடுக்கி' என்று போட்டேன்.

ஆக, 'தினமலம்' என்பது தினலரின் செயலுக்கும் கொடுக்கி தள செயலுக்கும் ஓர் ஒப்புமை. அவ்வளவுதான். தினமலர் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். ஜாமீன் மறுக்கப்பட்டது. தினமலர் மன்னிப்பு கோரியது.

நீங்கள் அந்த 'அனானி போட்டோ'வை நீக்கி விட்டாலும் அதை எங்கிருந்து எடுத்தீர்களோ, அல்லது அதுபோல வேறு எங்காவது இருந்தாலோ, உங்கள் தளத்திலிருந்து நீங்கள் சொல்வதெல்லாம் ஆதாரம் உள்ள உண்மைதான் (?!) என்று 'நம்பி' தரவிறக்கம் செய்த உங்கள் ஜால்ராக்களிடமோ அந்த போட்டோ இருக்கும் என்பதும் தெரியும்.' நாம் போட்ட போட்டோவை பார்த்து முஸ்லிம்கள் பயந்துவிட்டதாக குதூகளிக்கிறீர்கள் ". :) இல்லை,பரிதாபம்..!

எப்படி..? இப்படி..!

"ஒரு அனானி படத்தை எவ்வித ஆதாரமும் இன்றி 'இவர் நபி' என்று நம்பும் இந்த பகுத்தறிவு இல்லாத முட்டாள் கூட்டம்... நபிகள் ஸல்.. அவர்களின் போதனைகளை நம்புவதில்லையே...! அந்தோ பரிதாபம்...!

ஏதோ ஒரு ஈரானிய அனானி தளத்தில் எவ்வித ஆதாரமும் இன்றி இவர் நபி என்று நம்பும் இந்த பகுத்தறிவு இல்லாத முட்டாள் கூட்டம்... அந்த ஈரானியர் நம்பும் "இறைவன் ஒருவன் இருக்கிறான்" என்ற நம்பிக்கையை பதிவாக இடுவதில்லையே..! என்னே ஒரு கயமைத்தனம்..!"

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.கோவி கண்ணன்.

தங்கள் மீது சாந்தி நிலவட்டும் சகோ.கோவி கண்ணன்.

மீண்டும் மீண்டும் பொய்யே சொல்லிக்கொண்டு இருந்தால் எப்படி சகோ.கோவி கண்ணன்..? சென்சிடிவ் விஷயங்களிலாவது கொஞ்சம் மொக்கை போடாமல் சீரியசாக இருங்கள் சகோ.


இப்படித்தான் தலை குப்புற விழுந்தாலும் எங்கள் மீது மண் ஒட்டவில்லை என்பதா..?

இது நபிபடம் என்று, நீங்கள் ஒரு லிங்க் கொடுதீர்கள்...

சகோ.ஆஷிக் வந்து அது நபி இல்லைன்னு ப்ரூவ் பண்ணிட்டார்.

தவறு நிரூபிக்கப்பட்டால் மனுஷன் தன் தப்பை ஒத்துக்கனும்.

ம்ஹூம்... இல்லை. நீங்கள் ஒத்துக்கவில்லை.

ஆனால், உங்கள் லிங்க் தவறென்று மட்டும் உள்ளூர உணர்ந்து, இன்னொரு புதிய லிங்க் கொடுத்தீர்கள். இது தான் நபி என்று.

அதையும்...

"அங்கே சென்றால் நபி படமே இல்லையே... நபியின் உறவினர் படம் அல்லாவா அது... என்று கூறி எதுக்கு இந்த பொய் லிங்க்..?"

....அப்டின்னு சகோ.ஆஷிக் உங்களை கேட்க,.. இப்பவும் உங்கள் தப்பை நீங்கள் ஒத்துக்கலை.

ஆணா, அந்த லிங்க் ரொம்ப அவமானம் ஆகிவிட்டது என்று நைசாக முகத்தில் வாயினுள் ஒட்டி இருக்கும் மண்ணை எல்லாம் துடைத்துவிட்டு... (நான் குப்புற விழலியே..)...இப்போ இங்கே //முகமது படம் இருக்கு// என்று கூறி இன்னொரு புதிய விக்கிபீடியா லிங்கை கொடுத்து இருக்கிறீர்கள்.


அதில் நான் சென்று பார்த்தால்...


ஹஜருள் அஸ்வத் கல்லை எப்படி காபாவில் பொருத்தி கட்டினார்கள் என்று அந்த செயலை --சிவில் இன்ஜினியரிங் டெக்னிக்கை--விளக்கும் ஒரு விளக்கப்படம் (depiction)அது...!

அதில் 'சிறுவனான(!)முகமதையும்' மற்றவர்களையும் வரைந்து இருக்கிறார்கள்.

ஹி.. ஹி...

இன்னொன்றில், முதல் இறைசெய்தி வந்த வானதூதர் ஜிப்ரீல் மற்றும் ஹிரா குகையுடன் காட்சிப்படுத்துகின்றனர்.

ஆக இவையும் நபி படம் இல்லை. அவை depiction கள் என்று அவற்றுக்கு கீழேயே விக்கிபீடியா தெளிவாக கூறுகிறது.

முதலில் depiction- என்றால் என்ன என்று தெரியுமா?

இதில் depiction-க்கு அதே உங்களின் விக்கிபீடியா விளக்கம்:

Depiction is meaning conveyed through pictures.

A picture resembles its object in a way a word or sound does not. Resemblance is no guarantee of depiction, obviously.

(அதாவது இங்கே படம் அல்ல பிரதானம்... அந்த செய்தி/சம்பவம் தான் முக்கியம்.)

எனக்கு இப்போது ஒரு சந்தேகம் சகோ...

நாத்திகம் என்பதுக்கும் மனிதப்பண்புக்கும் சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் ஒன்றுக்கொன்று அணுவளவேனும் தொடர்பு ஏதும் இருக்கிறதா..?

Aashiq Ahamed said...

சகோதரர் இக்பால் செல்வன்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் கருத்து எனக்கு ஏமாற்றம் அளிக்கின்றது. தாங்கள் கூறி இருக்கும் பல கருத்துக்கள் (உதாரணத்துக்கு விக்கிபீடியா குறித்த கருத்துக்கள்) குறித்து என்னுடைய விளக்கங்களை கொடுக்க தோன்றினாலும் அது நம்முடைய மத்திய புள்ளியை விட்டு நீங்கி விடுமோ என்று அஞ்சுகின்றேன். ஆகையால் அது பற்றி மட்டும் தற்போது பேச விரும்புகின்றேன்.

சகோதரர், முதலில் அந்த படத்தை போட்டது தாங்கள். "ஒன்று" நடக்காமல் இருந்திருந்தால் "இரண்டு" நடந்திருக்காது. ஆக, "இரண்டு" நடக்க தூண்டியது இந்த "ஒன்று" தான்.

ஆகையால் நான் கேட்டுகொள்வது, தாங்கள் அந்த படத்தை முதலில் தூக்க வேண்டும். பின்னர் இன்ஷா அல்லாஹ், நாங்கள் எங்களுடைய பதிவையும் தூக்குவோம். தங்களிடம் வருத்தமும் தெரிவிப்போம்.

இனி தாங்கள் தான் சொல்ல வேண்டும்...

இதில் யாருக்கும் தோல்வியும் இல்லை, வெற்றியும் இல்லை...

நன்றி,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

vanjoor said...

//இக்பால் செல்வன் said...

இவ்வளவு பேசும் நீங்கள் - ஏன் விக்கிபீடியா உட்பட வேறு இணையதளங்களில் முகமதுவின் படங்களை நீக்க முனையவில்லை .. ஏனெனில் உங்களால் அது சாத்தியமில்லை என்பதுவே !!!? //

குடிப்பவனிடம் குடி குடியை கெடுக்கும். குடிப்பதை நிறுத்திவிடு. என கூறினால்

அரசாங்கமே டாஸ்மாக் கடைகள் நடத்துகிறது. நீங்கள் அவைகளை நீக்க முனையவில்லை .. ஏனெனில் உங்களால் அது சாத்தியமில்லை என்பதுவே !!!? என குடிப்பவன் கூறுவது போல் அல்லவா இருக்கிறது

விக்கிபீடியா வின் தகுதி என்ன?
Welcome to Wikipedia, the free encyclopedia that anyone can edit.

விக்கிபீடியாவில் எவரும் எதையும் பதிபிக்கலாம்.

விக்கிபீடியாவில் இக்பால் செல்வன் என்று குறிபிட்டு கூட எதையும் எழுதலாம் தானே .
----------------------------
சுவனபிரியன்,முஹமது ஆசிக், ஆசிக் அஹமது ஆகியோரின்
பின்னூட்டங்கள் சீராக முன்பின் முரண் இன்றி (பல்டி அடிக்காமல் ) குற்றம் சுமத்த பிறர் தலை தேடாமல் இருக்கும்

அதே நேரத்தில்

இக்பால் செல்வனின் பின்னூட்டங்கள் அனைத்தையும் உற்று நோக்குங்கால் அதிகமான முன்னுக்குப்பின் முரண்பாடுகளையும் நொண்டிசாக்குகளையும் வாசகர்கள் கண்டிருப்பீர்கள்.

இஸ்லாத்தின் மீது தன் காழ்ப்புணர்ச்சியான அவதூறான செய‌ல்பாடுக‌ள் எந்த‌ அள‌வு இஸ்லாமிய‌ர்க‌ளின் ம‌ன‌தை புண்ப‌டுத்தும் என்ற‌ ஆய்வு முய‌ற்ச்சியில் இறங்கி உழ‌ன்று கொண்டிருப்பதை இக்பால் செல்வ‌னுக்கு ம‌ன‌ச்சாட்சி என்று ஒன்று இருந்தால் அதுவே அதுவே உண‌ர்த்த‌ட்டும்.

இக்பால் செல்வன் said...
// நீங்கள் உங்கள் வழியில் போய்விடலாம் ... வாஞ்சூர் போன்றோரின் பேச்சுக்கள் நியாயமற்றவை என்பதை தங்கள் தரப்பு ஏற்க வேண்டும் ..//

இக்பால் செல்வன் said...
//சந்தேகம் இருப்பின் என்னை அணுகி விசாரித்துக் கொள்ளலாம். நான் கண்டிசன் போடக் காரணம் .... தவறு என்பது என்பால் இல்லை என்பதற்காகத் தான்.. இல்லை எனில் வாஞ்சூர் போல இன்னும் பலர் கொக்கரித்துக் கொண்டிருப்பார்கள் என்பதற்காகத் தான். வேறொன்றுமில்லை//

இஸ்லாமிய பதிவர்களிடம் எவரும் யார் கழுத்திலும் கயிற்றை கட்டி பிடித்து கொண்டிருக்கவில்லை. தேவையும் இல்லை. பதிவுகளில் கூடி கும்மி அடிக்கும் கூட்டு குழுவும் இஸ்லாமிய பதிவர்களிடம் இல்லை.

இக்பால் செல்வனின் தொடரும் நிபந்தனைகளில் இதன் இலக்கம் என்ன? இக்பால் செல்வனின் நிபந்தனைகளின் அளவுகோல் தான் என்ன? நிச்சயமாக சுவனப்பிரியன், முஹமது ஆசிக், ஆசிக் அஹமது இதை முன்னுதாரணமாக கொள்ள மாட்டார்கள்.

கொக்கரித்து கொண்டிருப்பது யார்? என வாசகர்கள் நன்கறிவார்கள். கூற‌வும் வேண்டுமோ?

அந்தர் பல்டியார் கொக்கரித்து கொண்டிருப்பதை கூறவா வேண்டும். வாசகர்கள் நன்கறிவார்கள்.

இக்பால் செல்வனின் நொண்டிச்சாக்குக‌ளை ப‌டித்து ப‌டித்து புளித்து போய்விட்ட‌து.

..

Anonymous said...

@ சுவன்ப்பிரியன்

@ ஆசிக் அகமது

@ முகமது ஆசிக்

@ வாஞ்சூர் மற்றும் இன்னும் பலர் ---

இந்த முகமதுவின் படம் குறித்த பதிவுலகச் சர்ச்சைக்கு ஒரு முடிவுக்கு வரலாம் என்றெண்ணித் தான் உங்கள் யாவரிடம் பேச வந்தேன். ஆனால் இப்பேச்சில் ஆசிக் அகமது கொண்டிருந்த கண்ணியம் மற்றவர் யாரிடமும் இல்லாதததை உணரக் கூடியதாக இருந்தது. பரவாயில்லை ... நீங்கள் உங்கள் வழியில் தொடரலாம் .. யாம் எம்வழியில் தொடருவோம் ...

முதல் - முகமதுவின் படங்கள் ( என்றத் தோற்றத்தில் ) முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்த எவ்வித தடையும் இல்லை . சட்டத்தில் தடைக் கொண்டு வந்தால் மாத்திரமே அதை நாம் பின்பற்ற முடியும்.

இரண்டு - நானிட்ட முகமதுவின் படங்கள் டென்மார்கிலோ - தினமலரிலோ - எகிப்திய செய்திதாள் ஒன்றிலோ வெளியானது போல கேலிச் சித்திரம் இல்லை .. வரைவுச் சித்திரம் ஆகையால் அதில் குற்றம் என்றோ / தவறு என்றோ அர்த்தமில்லை.

மூன்று - இதனால் முஸ்லிம்களின் சில பிரிவினர் மத உணர்வுகள் புண்பட்டதாக நினைத்தால் - உங்கள் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டிய நோக்கம் எனக்கில்லை என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். இருப்பினும் அதற்கு என்னால் ஒரு சிறு மன்னிப்புத் தான் கோர முடியும். மன்னிக்க ( உணர்வுகளை மதித்து மாத்திரமே ).

நான்கு - எனதுக் கருத்துச் சுதந்திரத்தில் மதங்களைக் காட்டி தலையிடுவதை நிறுத்திக் கொள்வது உசிதம். ஒரு உடன்பாட்டுக்கு வர முடியாத நிலையில் யாம் எம்வழியில் தொடர்வோம் .. தாங்கள் உங்கள் வழியில் தொடரலாம் ...

ஐந்து - எனதுப் பக்க நியாயங்களை உணர்ந்த அல்லது உணரக் கூடிய வகையில் இருந்த முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து நண்பர்களுக்கு மிக்க நன்றிகள் !!!

இதற்கு மேல் பேசி எனது நேரத்தை விரயமாக்க நான் விரும்பவில்லை .... !!!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ இக்பால் செல்வன்,

///முதல் - முகமதுவின் படங்கள் ( என்றத் தோற்றத்தில் ) முஸ்லிம் அல்லாதவர்கள் பயன்படுத்த எவ்வித தடையும் இல்லை . சட்டத்தில் தடைக் கொண்டு வந்தால் மாத்திரமே அதை நாம் பின்பற்ற முடியும்.///

---இந்த...

மூடநம்பிக்கைக்கு

...எந்த நாட்டு சட்டத்தில் தடை வர வேண்டும்..?

இந்திய நாட்டு சட்டத்திலா..?

ஆதாரமற்ற கற்பனை ஓவியங்களுக்கு தடை என்றால்... ஏகப்பட்ட ஹிந்துமத சிலைகள், கடவுள் படங்கள், திருவள்ளுவர் படங்கள், பண்டைய மன்னர்களின், புலவர்களின் படங்கள்... என சகலமும் தடை செய்யப்படுமே..!

ஆக...

மூட நம்பிக்கையை சட்டம் போட்டு ஒழித்தால் மட்டுமே திருந்துவேன் என்கிறீர்கள்..!

இதே முடிவை ஹிந்து தெய்வ சிலை வணக்கம் உட்பட, விடுதலைப்புலி தடை, பொட்டா, தடா சட்டங்கள் எதிர்ப்பு என அனைத்திலும் நடமுறைப்படுத்தலாமே..! /படுத்தி இருந்திருக்கலாமே..?

அது ஏன்...? தேவை என்றால் மட்டும் இந்திய சட்டங்களை பின்பற்றுவது...

தனக்கு தேவை இல்லை என்றால் மட்டும் இந்திய சட்டங்களை எதிர்ப்பது...

என்ற இரட்டை நாக்கு...?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@இக்பால் செல்வன்...

///இரண்டு - நானிட்ட முகமதுவின் படங்கள் டென்மார்கிலோ - தினமலரிலோ - எகிப்திய செய்திதாள் ஒன்றிலோ வெளியானது போல கேலிச் சித்திரம் இல்லை .. வரைவுச் சித்திரம் ஆகையால் அதில் குற்றம் என்றோ / தவறு என்றோ அர்த்தமில்லை.///

பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமோ..?

ஒருவர் எப்படி இருப்பார் என்று தெரியாமல், கற்பனையாக வரைந்தாலே அது முட்டாள்தனம் தானே..!?

நபிக்கு உருவம் வரையக்கூடாது என்ற இஸ்லாமிய நடைமுறை கட்டுக்கோப்பை கேலி செய்வதுதானே..?

அப்படி கேலி செய்யும் ஒரு அழகிய சித்திரம், தங்க முலாம் பூசப்பட்டு வைரக்கற்கள் பதிக்கப்பட்டு இருந்தாலுமே கூட அது கேலிச்சித்திரம்தானே..?

ஆக.. நீங்கள் வரைந்தது கேலிச்சித்திரம்தான்.

ஆக, ஓர் உதாரணமாக,
உங்களின் இதே அனானி படத்தை...

"ஃபுட்பால் செல்வன்" என்ற ஒரு புதிய பதிவர்...

"என் தந்தையின் பயோடேட்டா"

---என்ற ஒருபதிவின் தலைப்புக்கு அருகே இட்டிருந்தால்...

படிக்கும் வாசகர்கள் 'ஓகோ.. இதுதான் ஃபுட்பால் செல்வனின் தந்தை போலும்' என்று உணர்ந்து கொள்வர்.

ஆனால், ஃபுட்பால் செல்வனின் தந்தையை அறிந்தோர் கடுமையாக எதிர்ப்பர். கண்டனம் தெரிவிப்பர். அது அவரது தாயாக கூட இருக்கலாம். உண்மையான தந்தையாகவே கூட இருக்கலாம். மற்ற அவரது சகோதரர்களாக இருக்கலாம். இங்கே கண்டனம் ஃபுட்பால் செல்வனின் ஈனச்செயலுக்குத்தான்.

ஃபுட்பால் செல்வனின் செயல்... குடும்பத்தார் அல்லாத மற்றவர்களை பொருத்தவரை அது முட்டாள்த்தனம்.

ஆனால், அந்த குடும்பத்தாரை பொருத்தவரை அச்செயல், அக்கிரமம்...
அவதூறு...
அநியாயம்...
நிந்தனை...
அசிங்கமான செயல்...
தனி நபர் (அப்பா) தாக்குதல்...
அதன்மூலம் அந்த குடும்பம் மீது தாக்குதல்...

அல்லவா...
சகோ.இக்பால் செல்வன்..?

சரிதானே..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ இக்பால் செல்வன்,
///மூன்று - இதனால் முஸ்லிம்களின் சில பிரிவினர் மத உணர்வுகள் புண்பட்டதாக நினைத்தால் - உங்கள் உணர்வுகளைப் புண்படுத்த வேண்டிய நோக்கம் எனக்கில்லை என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள். இருப்பினும் அதற்கு என்னால் ஒரு சிறு மன்னிப்புத் தான் கோர முடியும். மன்னிக்க ( உணர்வுகளை மதித்து மாத்திரமே ).///

மிக்க நன்றி சகோ.இக்பால் செல்வன்..!

மனதை புண்படுத்தி இருக்கும் என்று உங்களால் உணர முடிகிறது. காரணம் அந்த அனானி படம். புண்படுத்தும் அந்த படத்தை இன்னும் எதற்கு உங்கள் பதிவில் வைத்து இருக்கிறீர்கள்..?


//மன்னிக்க ( உணர்வுகளை மதித்து மாத்திரமே ).//

---இந்த வார்த்தை உண்மை என்றால்... உணர்வுகளை மதிப்பவர் என்பது உண்மை என்றால...

அந்த அனானி படத்தை நீங்கள் தூக்கி அல்லவா இருந்திருக்க வேண்டும்..?


எங்கள் உணர்வுகளை மதிக்காத
உங்கள் மன்னிப்பை எப்படி உண்மை என்று நாங்கள் நம்புவது..?

எதற்கு இந்த பொய்..?

எதற்கு இந்த உள்ளத்தில் கள்ளம்..?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ இக்பால் செல்வன்,

////நான்கு - எனதுக் கருத்துச் சுதந்திரத்தில் மதங்களைக் காட்டி தலையிடுவதை நிறுத்திக் கொள்வது உசிதம். ஒரு உடன்பாட்டுக்கு வர முடியாத நிலையில் யாம் எம்வழியில் தொடர்வோம் .. தாங்கள் உங்கள் வழியில் தொடரலாம் ...///---நான் தான் உடன்பாட்டுக்கு சரி என்றேனே.. ஆறு வேண்டுகோள்களுடன்..?

பார்க்க வில்லையா..?

அடுத்த பதிவில் ஒரு பின்னூட்டமாக இருக்கிறது.

அது இங்கே மீண்டும்....

//////////////////////////////////
சகோ.இக்பால் செல்வனின் அந்த மூன்று வேண்டுகோள்களையும் நான் ஏற்க தயார்...அவர் பின்வரும் எனது ஆறு வேண்டுகோள்களை ஏற்றுக்கொண்டால் மட்டுமே..!

1. 'நாங்கள் என்ன பதிவு எழுத வேண்டும்', 'எதைப்பற்றி எழுத வேண்டும்', 'எப்போது எழுதவேண்டும்' என்ற "எங்களின் கட்டுப்பாடுள்ள கருத்துச்சுதந்திரத்தில்" சகோ.இக்பால் செல்வன் அவர்கள், தன் மூக்கை நுழைத்து அறிவுரை கூறுதலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அப்படி அவர் அறிவுரை கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் ஒப்புக்கொள்ளவேண்டும். அதனை அனைவருக்கும் அறிவிக்க வேண்டும். ஏனென்றால்... நாங்கள் இனி இஸ்லாமிய பதிவுகள் போட்டால் அது இக்பால் செல்வன் சொன்னபடி இவர்கள் எழுதியதோ என்று படிப்போர் சந்தேகம் கொண்டு விடக்கூடாது அல்லவா..? அதற்குத்தான்.

2. ஏனையோர் செய்தவை எல்லாம் இருக்கட்டும். எனது இஸ்லாமிய சகோதர்களுக்கான தன்னுடைய எதிர் பதிவில் உள்ள பன்றிகள் படத்தை(அதற்கு இதுவரை அறிவிற்கு பொருந்தும் சரியான பதிலை அளிக்காத நிலையில்..) சகோ.இக்பால் செல்வன் அவர்கள் அப்பதிவில் இருந்து நீக்க வேண்டும் - இதற்கு ஒரு சிறு பகிரங்க மன்னிப்பைக் கோர வேண்டும். ( அவர் பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ - அதனை எனதுப் பதிவில் பயன்படுத்த அனுமதிக்கவும் வேண்டும் )

3. குரானில் சொல்லப்பட்ட அல்லது இஸ்லாமியர் நம்பிக்கைகளை தாராளமாய் விமர்சிக்க எவருக்கும் உரிமை உண்டு. அப்படி, சகோ.இக்பால் செல்வன் அவர்கள் விரும்பினால் - அதனை குரானின் அடிப்படையில் கேள்விகளை வைக்க வேண்டும். அப்படி கேள்விகளை வைக்காமல், அவர்கள் சொன்னது, இவர்கள் சொன்னது, இங்கே இப்படி உள்ளது, அங்கே அப்படி உள்ளது என்ற ஆதாரமற்ற அடிப்படையில் பொய் பரப்புரைக்காக இஸ்லாமிய காழ்ப்புனர்ச்சிக்காக மட்டுமே இனி பதிவுகள் எழுதக்கூடாது.

4. ஈழம் பற்றிய சகோ.நிருபன் பதிவில், எனது பல நீண்ட பின்னூட்டங்களில் நான் கூறிய பல விஷயங்களை விட்டுவிட்டு, மாற்றுச்சிந்தனைக்காக ஒரு உதாரணமாக ஈழஸ்தான் என்று கூறியதை மட்டும் சகோ.இக்பால் செல்வன் அவரது பதிவொன்றில் எடுத்துப்போட்டு என்னை ஏதோ ஈழத்தமிழர்களின் வில்லன் போல சித்தரித்திருப்பதை தவறு என்று விளக்கி எனது மற்ற பின்னூட்டங்களையும் உங்கள் தளத்தில் வெளியிட வேண்டும்.

5. இயேசுவா/மகமதா பதிவில், "அந்த அனானி புகைப்படம் நபிஅல்ல வெறும் கற்பனைதான்...", "நபி படம் என்பது உண்மை அல்ல", "பதிவிற்கு பொருந்தாத போலிப்படம்" என்று என்று நீங்களே பலமுறை, பல இடங்களில், பலரிடம் இப்பொருள்பட கூறியுள்ளீர்கள். மிகவும் நன்றி சகோ.இக்பால் செல்வன் அவர்களே..! ஆக அந்த படம் நபியுடையதல்ல .. அது பொய்ப்படம் என்று பலர் உங்கள் மூலமாக அறிந்து கொண்டார்கள். ஒரு பொய்யான தகவலை உங்கள் வாசகர்களிடம் நீங்கள் பதிவிட்டு பரப்பியதற்காக உங்கள் வாசகர்களிடம் ஒரு பகிரங்க மன்னிப்பு கேட்டுவிட்டு, குற்ற நெஞ்சின் பிராயச்சித்தமாக அந்த படத்தை நேர்மையான முறையில் நீக்கிவிட வேண்டும். காக்கா பற்றிய பதிவில் அந்த பறவையின் படம் கிடைக்காவிட்டால் பூனையின் படத்தை போட்டு பதிவு எழுதியதற்கு ஒப்பான செயலுக்கு ஒரு மன்னிப்பு வேண்டல். அவ்வளவுதான்.

6. ஆனால், கல்வியியல், ஆராய்ச்சியல் ரீதியாக முகமதுவின் படங்கள் உள்ள தளங்களுக்கு ( விக்கிப்பீடியா போல ) தொடுப்புக்களை பதிவுகளில் இடுங்கள். அதனை தடுக்க நாங்கள் யார்..? ஆனால், அந்த சுட்டிகளில்... 'எவை எவை பொய்யான ஆதாரமற்றவை..', 'எவற்றுக்கு மட்டும் ஆதாரங்கள் உள்ளன' என்பதையும் உங்கள் வாசகர்களுக்கு அந்த சுட்டியின் அடியிலேயே அறிவித்து விடுங்கள். இதுதான் வாசகர்களை ஏமாற்றாத நேர்மை.

சகோ.இக்பால் செல்வன் அவர்கள், எனது மேற்படி ஆறு வேண்டுகோள்களையும் ஏற்றுக்கொண்டால், அதனை ஏற்றுக்கொண்டாதாக அறிவித்து அதன்படி அவர் நடது காட்டினால், அவரது செயலுக்கு கண்டனம் தெரிவித்த எனது "பதிவுலக.......கொடுக்கி" என்ற பதிவை இன்ஷாஅல்லாஹ் நீக்கிவிடுகிறேன். சகோ.இக்பால் செல்வனின் அந்த மூன்று வேண்டுகோள்களையும் நான் ஏற்க தயார்..!
////////////////////////////////

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ இக்பால் செல்வன்...
///ஐந்து - எனதுப் பக்க நியாயங்களை உணர்ந்த அல்லது உணரக் கூடிய வகையில் இருந்த முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாத அனைத்து நண்பர்களுக்கு மிக்க நன்றிகள் !!!///

---உங்கள் பக்கம் அணுவளவும் நியாயமே இல்லை என்பதே இங்கே விவாதப்பொருள்.

இருந்தும், உங்களிடம் பலர் அன்பாக பண்பாக இதுவரை விவாதித்துத்தான் வருகிறோம்...

என்றாவது நீங்கள் உண்மைகளை அறியக்கூடும் என்பதற்காக...
===================================

உங்களால் இன்னும் சரியான விடையளிக்கப்படாத கேள்விகள்..!

உங்கள் ஈழப்பதிவில் எனது பின்னூட்டங்களின் இருட்டடிப்புக்கும், கருத்து திரிபுக்கும் எங்கே மன்னிப்பு..?

இக்பால் செல்வன் says...///நன்கு கவனித்துப் பாருங்கள் - அது மூன்றுப் பன்றிக் குட்டிகள் - அது நீதிக் கதையின் தாக்கத்தால் நான் போட்டது. சரி அதில் ஒன்றை நீங்களாகவும், ஒன்றை ஆசிக்காகவும், ஒன்றை நானகவும் என வைத்துக் கொண்டுத் தானே போட்டிருப்பதாக எண்ண வேண்டும்.///

சக பதிவர்களை பன்றிகள் என்று கூறியதற்கு எங்கே பகிரங்க மன்னிப்பு...?

இக்பால் செல்வன் says...
///ஒரு மின்னஞ்சல் மூலமாக வேண்டுகோள் வைத்திருந்தால். அதனை எடுத்துவிட்டு மூன்று குரங்குகளையோ, மூன்று நாய்க்குட்டிகளையோக் கூட போட்டி இருப்பேன்..///----நாய் என்றும் குரங்கு என்றும் கூட போடுவேன் என்ற தனி மனித தாக்குதல்களுக்கும் நீங்கள் மன்னிப்பு கோர வேண்டும்..!


அப்புறம் தங்களை...

"டிப்ளமசியாக அணுகுவது" எப்படி..?

"முறைப்படி விண்ணப்பிப்பது" எப்படி..?


எப்படி அணுகினாலும், ஒரு ஆயுதம் வேண்டாம் என்றால்... வேறு ஒரு ஆயுதம் கொண்டு எங்களை தாக்குவதே உங்கள் நிலைப்பாடு என்று தெள்ளத்தெளிவாக கண்டு கொண்டோம்.

உங்கள் வார்த்தைகளில் தெளிவு இல்லை. உண்மை இல்லை. நேர்மை இல்லை. சகோதரத்துவம் இல்லை. மாறாக, நயவஞ்சகமும் இஸ்லாமிய விரோதமுமே நீக்கமற எங்கும் நிறைந்துள்ளது என்பது உங்களை இதுவரை இங்கே படித்தோருக்கு நன்கு விளங்கிவிட்டது.

Anonymous said...

திரு சுவனப்பிரியன் அவர்களே, மிக பெரிய அறிவியல் விசயங்களை தன்னுள் வைத்திருக்கும் குரான், தற்காலத்திய உன்னத அறிவியல் கண்டுபிடிப்புகளான செல் போன் பற்றியும், தொலை காட்சி பற்றியும் எதாவது தகவல்களை சொல்கிறதா, உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்ட இந்த பொருள்களை பற்றி ஏதும் தகவல் இல்லாமல் இருக்க முடியாதே

M. JAYA PRAKASH
Kanyakumari

suvanappiriyan said...

//திரு சுவனப்பிரியன் அவர்களே, மிக பெரிய அறிவியல் விசயங்களை தன்னுள் வைத்திருக்கும் குரான், தற்காலத்திய உன்னத அறிவியல் கண்டுபிடிப்புகளான செல் போன் பற்றியும், தொலை காட்சி பற்றியும் எதாவது தகவல்களை சொல்கிறதா, உலகத்தையே உள்ளங்கைக்குள் கொண்டு வந்து விட்ட இந்த பொருள்களை பற்றி ஏதும் தகவல் இல்லாமல் இருக்க முடியாதே

M. JAYA PRAKASH
Kanyakumari//

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல.
(திருக்குர்ஆண்:86:11,12,13,14)

திருக்குர்ஆண் முகம்மது நபியின் கற்ப்பனை அல்ல. மாறாக தன்னுடைய கூற்றாகும் என்பதை இறைவன் சத்தியம் செய்து கூறும்போது திருப்பித் தரும் வானம் என்ற அற்ப்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

வானம் எதைத் திருப்பி தருகிறதென்றால் ஏராளாமான விசயங்களை திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.

கடலிலிருந்தும்,நீர் நிலைகக்ளிலிருந்தும் உருஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக திருப்பித் தருகிறது.

இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது. திருப்பித் தருகின்ற தன்மையை வானம் பெற்றுருகின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ தொலைக்காட்சி போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.

மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு துருமபவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.

இன்றைக்கும் செயற்கைக் கொள் மூலம் ஓளி பரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. இங்கேயிருந்து நாம் ஓளி பரப்ப நினைப்பதை வானத்திற்கு அனுப்பினால் வானம் உடனே நமக்கு அனுப்புகிறது.

மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கின்றான்.

இன்னும் நாம் சிந்திக்கும் பொது ஏராளமான விசயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.

திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னாள் சொல்வார்களா?

இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முகம்மது சொல்கிறார் என்றால் நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது, படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.