தோழர் துரை
குணா எழுதியது...
*
இந்த சினிமாவை நான் பார்த்த
பிறகு அம்மா அப்பாவையும் பார்க்க வைக்க வேண்டுமென்று விரும்பினேன்..ஏனென்றால்
இந்தப் படத்திற்கும் அம்மா அப்பாவிற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
1976-ம்ஆண்டில்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா திருவோணம் காவல் நிலைய காவல் துறை அப்பாவை
கைது செய்தது.காவல் நிலைய லாக்கப்பில் அப்பாவின் இரண்டு கைகளையும் மேலே தூக்கி
கட்டி இரண்டுகால் தொடையிலும் இரண்டு காவலர்கள் ஒவ்வொரு பக்கமும் ஏறி நின்று கொண்டு
உள்ளங்காலில் அடிக்கத் தொடங்கி உடல் முழுவதும் ரத்தம் தெறித்து நின்றது.இரவு 7
மணிக்கு அடிக்கத் துவங்கி நடுரவு சுமார் மூன்று மணிக்கு பல லத்திகம்புகள் முறிய
நின்றது.
அப்பா மீது
காவலர்கள் சொன்ன குற்றச்சாட்டுகள் மணிக்கிரான்விடுதி ஆகாச வீரப்பையா கோவில்
அருகில் 10 வண்டி நெல் மூட்டைகளை வழிமறித்து திருடியதாக புகார்.இந்தப் புகாரைக்
கொடுத்தவர் சிவவிடுதி கிராமத்தை சார்ந்த முத்துச்சாமி மணியார்.இந்த குற்றச்சாட்டை
ஒப்புக்கொள்ள சொல்லியே காவல்துறை அப்பாவை சித்திரவதை செய்தது.
காடுவெட்டிவிடுதி
கிராமத்தில் செட்டியார் டீக்கடையில் எல்லா சாதியினருக்கும் சில்வர் டம்ளரில் டீ, பறையர்களுக்கு
மட்டும் ஈயக்குவளை,கொட்டாங்குச்சியில்
டீ, இந்தப்பாகுபாடு
இந்தத் தீண்டாமையை கண்டித்து அப்பா அன்றைய மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு புகார் மனு
அளித்திருந்தார். அதற்கு எதிர்வினையாற்றவே..
பத்து
கிராமத்து கள்ளர்களும் திருவோணம் மாரியம்மன் கோவில் ஆசாரத்தில் கூட்டம் போட்டு
சிவவிடுதி முத்துச்சாமி மணியார் மூலமாக
திருட்டு
புகார் கொடுக்க வைத்தார்கள்.பின்னாளில் அந்த வழக்கு பொய்யானது என அப்பா நிரூபித்து
நிலைய எழுத்தர், ஏட்டு, எஸ்ஐ மூன்று
பேரும் மூன்று மாதம் மட்டுமே இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்கள்.
இடை நீக்கம்
செய்யப்பட்ட காவலர்கள் பெயர்கள் அப்பாவுக்கு ஞாபகத்தில் இல்லை என்றாலும் அவர்கள்
வடுவூர் அம்மாபேட்டை அதிராம்பட்டினம் ஊரைச் சேர்ந்தவர்கள் என்று சொல்கிறார்.
நேற்று இரவு
அக்கா வீட்டில் ஜெய்பீம் பார்த்துவிட்டு வந்த அப்பா மிகவும் அமைதியாக இருந்தார்
நான் எதுவும் கேட்கவில்லை அவரும் எதுவும் சொல்லவில்லை.
குறிப்பு-
இந்த வழக்கில் அப்பாவிற்கு
உதவியாக இருந்தவர்கள்.
1 தோப்பவிடுதி
முத்துசாமி ஊராட்சி மன்ற உறுப்பினர் (இறந்துவிட்டார்)
2
பத்துபுளிவிடுதி சிதம்பரம் CPI (நலமுடன் இருக்கிறார்)
3
பத்துபுளிவிடுதி பால்ராஜ் CPI
(நலமுடன்
இருக்கிறார் )
4
பத்துபுளிவிடுதி குழந்தைவேல் CPI
(நலமுடன்
இருக்கிறார்)
5
வெள்ளதேவன்விடுதி முத்து CPI
(நலமுடன்
இருக்கிறார்)
6 நம்பிவயல்
சிவக்கொல்லை
ஆறுமுகம் CPI (நலமுடன்
இருக்கிறார்)
7
பில்லுவெட்டிவிடுதி குழந்தைவேல் CPI
(நலமுடன்
இருக்கிறார்)
2 comments:
திரைப்படங்கள் மனதில் . பாலியில் சார்ந்து தகாத ஆசைகளை விதைக்கிறது என்பதை சிறு
வயதில் அனுபவரீதியில் அறிந்து கொண்டதால் திரைப்படங்கள் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
நான் திரைப்படங்கள் பார்த்து 43 வருடங்கள் . . . கழிந்து விட்டன. ஜெய்பீம் படம் பார்க்க மாட்டேன்.
நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை.
எனினும் சமூகப்படங்கள் வருவது பாராட்டத்தக்கது. ஏழைகளுக்கு கடுமையான மனித உரிமை மீறல் பண்டைய காலத்தில் நடந்துள்ளது என்பது உண்மை. அதை எடுத்துக்காட்டுவது நன்று. ஆனால் பழைய கதைகளை வறுத்துக்கொண்டு இருப்பது முடிவான தீர்வல்ல. இன்று மனித வளமிக்க வாழ்வு அமைய உதவ வேண்டும். மது சுருட்டு பீடீ கஞ்சா. . ..நச்சு இலக்கியம் -சினிமா மற்றும் பெண்களின் அழகை மையமாக வைத்து எழுதப்படடும் கதைகள் ....கட்டுரைகள் . . .வெளியீடுகள் . . ..இதிலிருந்து மனிதன் விடுதலை அடைய வேண்டும். அதற்கு இன்று சமூக ஏணியில் அடியில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவிட வேண்டும்.வழிகாட்ட வேண்டும்.
இந்தியாவில் உள்ள இளைஞர்கள் அனைவரும் பிரம்மச்சரியம் கடைபிடித்து வாழ்ந்தால் மகத்தான இந்தியா .. . .பொற்காலம் இந்தியாவில் பிறந்து விடும்.வாழ்க்கை போராட்டத்திற்கு தேவையான ஆற்றல் அறிவு வித்தைகள் அனைத்தும் அவனுக்கு வந்து விடும்.
Post a Comment