Followers

Monday, August 24, 2026

வங்கதேசத்தில் இந்து குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை


 



வங்கதேசத்தில் இந்து குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை

 

தமிழ் இந்து நாளிதழ்

24-08-2026

 

 

தலைப்பை பார்த்து விட்டு சங்கிகள் 'முஸ்லிம்கள் இப்படித்தான்' என்று திட்டி பின்னூட்டம் இட ஆரம்பித்து விட்டார்கள்.

 

ஆனால் அந்த கொலையை செய்ததும் இரண்டு இந்துக்கள் என்ற செய்தியை விபரமாக தராமல் தலைப்பை குதர்க்கமாக வைத்த இந்து தமிழ் நாளிதழை கண்டிக்கிறோம்...

 

இனி பங்களாதேஷ் அரசு கொடுத்துள்ள செய்தியை பார்போம்..

 

 

 

இதுகுறித்து ரங்க்​பூர் போலீஸ் கமிஷனர் முகமது அப்​துல் மபூத் கூறிய​தாவது: கடந்த வியாழக்​கிழமை இரவு கணபதி சக்​கர​வர்த்​தி​யின் வீட்டு மாடிக்கு முக்தோ மற்​றும் சித்​தார்த்தா ஆகியோர் சென்று உள்​ளனர். இரு இளைஞர்​களும் சேர்ந்து மாடி​யில் போதைப் பொருளை உட்​கொண்டு ஆடல், பாடலில் ஈடு​பட்டு உள்​ளனர். மொட்டை மாடி​யில் யாரோ நடமாடு​வதை உணர்ந்த கணபதி தனி​யாக மாடிக்​குச் சென்​றுள்​ளார். அங்கு இரு​வர் போதை​யில் மிதப்​பதை பார்த்து அவர்​களை கடுமை​யாக கண்டித்து உள்​ளார்.

 

 

இந்த தகராறு முற்றிப் போய் அவரையும் தடுக்க வந்த அவரது குடும்ப உறுப்பினர்களையும் கொலை செய்துள்ளது மது போதையில் இருந்த இந்து இளைஞர்கள்.

 

வங்காளதேசத்தில் நான்கு பேர் கொண்ட இந்து குடும்பத்தை இரண்டு நபர்கள் கொலை செய்ததாகவும், பின்னர் மறுநாள் காலை அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு, இரவு முழுவதும் அவர்களது வீட்டிலேயே பேரீச்சை சாப்பிட்டு, குளித்து, சக்திவாய்ந்த மனமயக்கப் பொருளான யபாவை உட்கொண்டு கழித்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

23 வயதான சித்தார்த்த தாஸ் மற்றும் 19 வயதான முக்தா தாஸ் என அடையாளம் காணப்பட்ட குற்றவாளிகள், கொலைகளுக்குப் பிறகு பல மணி நேரம் வீட்டிலேயே தங்கியிருந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களின் கைபேசிகளில் இருந்து தங்கள் கைரேகைகளை அழிக்க முயன்றதாகவும், மேலும் அது ஒரு கொள்ளைச் சம்பவம் போல் தோற்றமளிக்க அந்த இடத்தை நாடகமாக்கியதாகவும் டாக்கா ட்ரிப்யூன் செய்தி வெளியிட்டுள்ளது.

 

ரங்க்பூர் நகரில் உள்ள தகிகஞ்ச் சுடுகாட்டில் இருந்து அந்த இருவரையும் காவல்துறை கைது செய்தது. கொலைகள் நடந்த மச்சுவாபாரா பகுதியைச் சேர்ந்தவர்கள் இருவரும்.

 

செய்திகளை முழுமையாக வாசித்தால் உண்மை தெரியும்!

செய்தியை முழுமையாக வாசிக்காத வாசகர்கள்!

தலைப்பை கேவலமாக உள்நோக்கத்துடன் பதிக்கும் செய்தி நிறுவனம்!

இவ்விரண்டு அறியாமை மற்றும் வன்மங்களின் உச்சம்!

· 

No comments: