Followers

Thursday, September 20, 2012

அலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு!

//அலாவுதின் கில்ஜி ஒரு ராணி பத்மினி அழகா இருக்கான்னு அடையவே போர் புரிந்ததிஅ முன்னரே ஒரு பதிவில் சொன்னேன், வழக்கம் போல ,நெருக்கடியான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் கள்ள மவுனம் காக்கும் வழியை கையாண்டீர்கள்.//- வவ்வால்

அலாவுதீன் கில்ஜியைப் பற்றி வவ்வால் சொன்னது இது. என்ன செய்வது? அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட வரலாறு அவ்வளவுதான். மாலிக்காபூர் படையெடுத்து பல கோவில்களை கொள்ளையடித்ததையும் படித்திருப்போம். இந்த மாலிக்காபூர் பிறப்பால் ஒரு இந்து. சில காலத்திற்கு பிறகு இஸ்லாத்தை ஏற்கிறார் என்ற செய்தியை அழகாக மறைத்து விடுவர். அலாவுதீன் கில்ஜியின் உண்மையான வரலாறு என்ன சொல்கிறது என்பதை இனி பார்ப்போம்.

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான். இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.

ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன.

அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் மங்கோலியர் அடுக்கடுக்காய் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தனர். இரண்டு முறை அவர்கள் டெல்லியையும் கைப்பற்றினர். ஆனாலும் அலாவுதீன் கில்ஜி மனம் தளரவில்லை. தன் உயரிய அதிகாரிகளான ஜாபர் கான், காஜிமாலிக், மாலிக் காபூர் ஆகியோரைக் கொண்டு மங்கோலியர்களை மிரண்டு ஒடச் செய்தான். மங்கோலியர்களை வீழ்த்தி இந்தியாவை காத்ததில் மேற்சொன்ன மூன்று அதிகாரிகளின் பங்கு மகத்தானது. இலட்சக்கணக்கில் திரண்டு வந்த வீரமிக்க மங்கோலியர்களை தாக்கி, சின்னாபின்னப்படுத்தி, சிதறி ஓடச்செய்தான் ஜாபர்கான்.

அதனால் நீர் நிலைகளில் தாகம் தீர தண்ணீர் பருக குதிரைகள் தயங்கினால். “ஏன் ஜாபர்கானை கண்டு விட்டீர்களா?” என மங்கோலியர் கேட்டதாக ஒரு கூற்று. அது போன்றதே காஜி மாலிக் மற்றும் மாலிக் காபூரின் ஆற்றலும், டெல்லியை கைப்பற்றிய மங்கோலியர்களை தாக்கி, இடுப்பொடிந்து சிதறி ஓடச் செய்தனர் இவர்கள். மங்கோலியர்களைப் போன்றே அலாவுதின் கில்ஜியும் ஒரு போர் விரும்பியாக (War Lord), தீரனாக, அஞ்சாநெஞ்சினனாக, போர் தந்திரம் மிக்கவனாக இருந்ததே மங்கோலியர் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.

இத்தகைய முஸ்லிம் சுல்தான்களும், தளபதிகளும் இல்லாதிருந்தால் இந்தியா மங்கோலியரால் கைப்பற்றப்பட்டு, அது ஒரு மங்கோலியக் காலனியாகியிருக்கும். அவ்வாறின்றி ஒன்று படுத்திய இந்தியாவை மங்கோலியரிடமிருந்து பாதுகாத்து இந்தியாவாகவே திகழச் செய்தது முஸ்லிம்கள் இந்தியாவிற்கு ஆற்றிய அளவிடற்கரிய பெருந் தொண்டாகும்.

- பேரா. ஏ. தஸ்தகீர் – (முன்னாள் வரலாற்றுத் துறை தலைவர்,
அரசு கல்லூரி)



"உயர்ந்தவன் யார்?
கிராமவாசி? நகரவாசி?
இல்லை, விலைவாசி!"

-கந்தர்வனின் கவிதை ஆட்சியாளர்கள் தயவால் காலங்காலத்திற்கு வாழும் போலும். "முன்னெப்போதும் இல்லாத விலைவாசி உயர்வு" - எனும் வாக்கியத்தை எப்போது சொன்னாலும் பொருந்துகிறது! இப்போது விலைவாசி - அதிலும் உணவுப்பொருட்களின் விலைவாசி-கிடுகிடுவென உயர்ந்து கிடக்கிறது. கட்டுப்படுத்த வழிவகை தெரியவில்லை என்று ஆட்சியாளர்கள் கைவிரிக்கிறார்கள். இந்திய வரலாற்றில் ஒரு ஏடு என் முன்னால் படபடத்து எழுது, எழுது என்கிறது.

ஜியாவுதீன் பரணி என்பார் முகமது பின் துக்ளக் அரசவையில் 17 ஆண்டுகள் பணியாற்றியவர். இவர் மட்டுமல்ல, இவரது முன்னோர்களும் டில்லி சுல்தான்கள் ஆட்சியில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தவர்கள். அவர்களிடமிருந்து தெரிந்துகொண்டும், தனது நேரடி அனுபவத்திலிருந்தும் ஒரு வரலாற்று நூலை எழுதினார். அதன் பெயர் "தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி". அந்தப்பெருநூல் பற்றி எழுதுவது என்றால் பக்கங்கள் போதாது. அலாவுதீன் கில்ஜி காலத்திலும், நூலின் பெயரைத் தாங்கிய ஃபிரோஸ்ஷா துக்ளக் காலத்திலும் எடுக்கப்பட்ட சில பொருளாதார நடவடிக்கைகளை இங்குக் குறிப்பிடுவதே எனது நோக்கம். இது சந்தைப் பொருளாதாரத்தை அதன் போக்கில் விட்டுவிடுவது என்கிற அராஜகச் சிந்தனையை இந்த நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்கள்கூட அங்கீகரிக்கவில்லை என்பதைப் புரியவைக்கும். பொருளியல் துறையில் அரசின் தலையீடு அவசியம் என்பதை 700 ஆண்டுகளுக்கு முந்தைய டில்லி ராஜாக்களே உணர்ந்திருந்தார்கள் என்பதை உணர வைக்கும். இன்றைய டில்லி ராஜாக்களுக்கு இதிலொரு படிப்பினை இருக்கிறது.
அலாவுதீன் கில்ஜி காலத்தில் மங்கோலியர்கள் டில்லி வரை படையெடுத்து வந்துவிட்டார்கள். அவர்களை இவன் விரட்டியடித்துவிட்டாலும் அந்த அபாயம் இருந்து கொண்டேயிருந்தது. மீண்டும் அவர்கள் வந்தால் விரட்டியடிக்க பெரும் படை தேவை என்பதை உணர்ந்திருந்தான். அதை எப்படி உருவாக்குவது என்று யோசனையில் ஆழ்ந்தான். கஜானாவில் பணம் குறைவாகவே இருந்தது. குறைந்த ஊதியத்தில் நிறைய படைவீரர்களைத் திரட்ட முடியுமா? இதற்காகத் தனது ஆலோசகர்களை அழைத்து கருத்துக்களைக் கேட்டான். அவர்களும் உள்ள நிலைமையைப் பட்டவர்த்தனமாகச் சொன்னார்கள்.

"குறைந்த ஊதியத்தில் ஒரு பெரிய நிரந்தரப் படையைப் பராமரிப்பது என்று மேன்மை தாங்கியவரின் மனதில் ஓடும் எண்ணங்கள் சிறிதும் சாத்தியமானவை அல்ல. குதிரைகள், படைக்கலன்களை வாங்கவும், தனது மனைவி குடும்பத்தைப் பராமரிக்கவும் படைவீரனுக்கு இந்தக் குறைந்த ஊதியத்தால் முடியாது. மாறாக அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலைக்கு கொண்டுவந்து விட்டால் மேன்மைதாங்கியவரின் எண்ணத்தை நடைமுறைப்படுத்த முடியும். மங்கோலியர்களின் பெரும் படை எனும் பயத்தைப்போக்க முடியும்" இப்படி அவர்கள் கூறியதும் தனது அனுபவமிக்க மந்திரிமார்களைக் கலந்தாலோசித்தான் அலாவுதீன்.
அவர்களும் இதை ஏற்றுக்கொண்டதோடு மற்றொரு முக்கிய ஆலோச னையைத் தந்தார்கள். பரணி கூறுகிறார்-"தானியங்களின் விலையை அரசு விதிமுறைகள் மூலம் கட்டுப்படுத்தாத வரை இதர அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறையாது என்றார்கள் அவர்கள். தானியவிலைக் குறைவு என்பது சகலருக்கும் நன்மை தருவது. எனவே சில விதிமுறைகள் வகுக்கப்பட்டன. அவை சில ஆண்டுகளுக்கு விலையைக் குறைவாக வைத்திருந்தன"
பொருளாதார விஷயங்களைப் பொறுத்தவரை அதில் தேர்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்பது, அதைத் தனது மந்திரிமார்களிடம் கூறி அவர்களது கருத்தைக் கேட்பது என்கிற ஒரு விரிந்த நடைமுறையை சுல்தான் அலாவுதீன் கொண்டிருந்தது குறிக்கத்தக்கது. படைப்பெருக்கம் என்கிற ராணுவரீதியான நோக்கத்திலிருந்தே இந்தப் பிரச்சனை அலசப்பட்டது என்றாலும், அது முடிவில் உணவு தானிய விலைக் கட்டுப்பாட்டிற்கு இட்டுச்சென்றதை போக்க வேண்டும்.

முடிவில் இதற்காக ஏழு உத்தரவுகளைப் போட்டான் அலாவுதீன். முதல் உத்தரவானது கோதுமை, பார்லி, அரிசி உள்ளிட்ட ஆறு தானியங்களுக்கான விலைகளைத் தீர்மானித்தது. அந்த விலைப்பட்டியலைத் தந்துவிட்டு பரணி எழுதுகிறார் - "இந்த விலை அளவுகள் அலாவுதீன் உயிரோடு இருந்தவரை அப்படியே இருந்தன. நல்ல மழை பெய்தாலும் சரி, நன்றாகப் பெய்யாவிட்டாலும் சரி தானியவிலை ஒரு டாங்குகூட உயரவில்லை. சந்தைகளில் நிலைத்த தானியவிலை என்பது அந்நாளில் ஓர் அதிசயமாகப் பார்க்கப்பட்டது"
இந்த அதிசயம் எப்படிச் சாதிக்கப்பட்டது என்றால் அடுத்துப்போடப்பட்ட ஆறு உத்தரவுகளாலும், இவை அனைத்தும் கறாராக நடைமுறைப்படுத்தப்பட்டதாலும், இரண்டாவது உத்தரவின்படி "சந்தைகளின் கட்டுப்பாட்டாளர்" எனும் ஓர் உயர் அதிகாரி நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக நிறைய ஆட்கள் தரப்பட்டார்கள், உரிய வசதிகள் தரப்பட்டன. புத்திசாலித்தனமான உளவாளிகளும் சந்தைகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
மூன்றாவது உத்தரவின்படி அரசனின் களஞ்சியங்களில் தானியங்கள் சேமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. வரி செலுத்துவோரில் ஒரு பகுதியினர் தானியமாகத் தரும்படி கூறப்பட்டார்கள். "சரியாக மழை பெய்யாவிட்டாலோ அல்லது தானிய வண்டிகள் வந்து சேராவிட்டாலோ, இவற்றின் காரணமாகச் சந்தைகளில் தானியப் பற்றாக்குறை ஏற்பட்டாலோ அரசாங்கக் களஞ்சியங்கள் திறக்கப்பட்டு மக்களின் தேவைக்கேற்ப தானியங்கள் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்பட்டன" என்கிறார் பரணி.

இந்தக் காலத்தில் லாரிகளை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது போல அந்தக்காலத்தில் வண்டிகளை எல்லாம் சந்தைக் கட்டுப்பாட்டாளர் வசம் கொண்டு வந்தான் அலாவுதீன். இது நான்காவது உத்தரவு. பதுக்கலைத் தடுக்கப்போடப்பட்ட உத்தரவு ஐந்தாவது. பதுக்கியவருக்கு மட்டுமல்ல, அதைக் கண்டுபிடிக்காத அதிகாரிகளுக்கும் தண்டனை காத்திருந்தது.

விவசாயிகள் ஒரு குறிப்பிட்ட விலையில் தானியங்களை வியாபாரிகளுக்கு விற்றாக வேண்டும் என்றது ஆறாவது உத்தரவு. இதிலே சுவையான விஷயம் அடுத்து வருவது- "லாபத்தை ஈட்ட கிராமத்தாருக்கு ஒரு வாய்ப்புத் தரும் வகையில் தங்களது விளைச்சலைத் தாங்களே சந்தைக்குக் கொண்டு சென்று, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு விற்க அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள். அதாவது "உழவர் சந்தை" எனும் கருத்தோட்டம் அப்போதே நடைமுறையில் இருந்திருக்கிறது.

ஏழாவது உத்தரவும் முக்கியமானதே. "சந்தை விலை நிலவரம் பற்றியும், சந்தை நடவடிக்கைகள் பற்றியும் மூன்று இலாக்காக்களிலிருந்து தினசரி சுல்தானுக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன" என்கிறார் பரணி. அரசாணை போட்டுவிட்டு பிறகு அதுபற்றி என்ன, ஏது என்றுகேட்காத ஆட்சியாளனாக அலாவுதீன் இல்லை என்பது ஆச்சரியமான விஷயமே.
இவை எல்லாம் சேர்ந்துதான் தானிய விலைகளைக் கட்டுக்குள் வைத்திருந்தன. பரணிக்கு புளகாங்கிதத்தைத் தடுக்க முடியவில்லை. "இது உண்மையில் இந்தக் காலத்தின் அதிசயமே; எந்தவொரு அரசனும் இதைச் சாதித்ததில்லை" என்று மீண்டும் கூறுகிறார்.

தானிய விலைகளை மட்டுமல்ல வேறு சிலவற்றின் விலைகளையும் கட்டுக்குள் வைக்க உத்தரவுகள் போட்டான் அலாவுதீன். அது அந்தக் காலத்திய வாழ்வியலையும் அடையாளம் காட்டுகிறது. குதிரைகள், அடிமைகள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு சகாய விலையைக் கொண்டுவர நான்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. அதில் நான்காவது உத்தரவு கூறியது - 'ஒரு பணிப்பெண்ணின் விலை 5 முதல் 12 டங்காக்கள், ஒரு வைப்பாட்டியின் விலை 20, 30 அல்லது 40 டங்காக்கள் என்று நிச்சயிக்கப்பட்டன. ஓர் ஆண் அடிமையின் விலை 100 அல்லது 200 டங்காக்கள் அல்லது அதற்கும் குறைவு." சுல்தான்கள் காலத்திலேயே நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை வந்துவிட்டது என்றாலும், அடிமைச் சமுதாயத்தின் கூறுகளும் தொடரவே செய்தன.

"சந்தைகளின் கடைகளில் விற்கப்படும தொப்பி முதல் செருப்பு வரையிலான, சீப்பு முதல் ஊசி வரையிலான பொருட்களுக்கும் குறைந்த விலைகளைத் தீர்மானிக்கப் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. இவை மிகவும் சாதாரணப் பொருட்கள் என்றாலும் அவற்றுக்கும் விலைகளை நிர்ணயிக்கவும், விற்பனையாளர்களுக்கான லாபத்தை முடிவு செய்யவும் சுல்தான் பெரும் கவனம் செலுத்தினார்" என்கிறார் பரணி.

டில்லி சுல்தான்கள் என்றால் ஏதோ படை நடத்துவதிலும், இந்து ராஜாக்களை வீழ்த்துவதிலும், கோவில்களை இடிப்பதிலும், மசூதிகளைக் கட்டுவதிலும் காலத்தைப் போக்கியவர்கள் என்கிற சித்திரமே நாமக்கெல்லாம் தரப்பட்டு, இப்போதும் அதுவே மனசில் தங்கியிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு வேறொரு முகமும் உண்டு என்பது பரணி போன்ற அந்தக் காலத்திய வரலாற்றாளர்களின் மூல நூல்களைப் படிக்கும் போதுதான் புரிபடுகிறது.
இதன்பொருள் சுல்தான்களின் முரட்டுத் தனத்தையோ, கொடூரத் தண்டனை முறையையோ மூடி மறைப்பதல்ல. இந்த விலைக் கட்டுப்பாட்டைச் சாதிக்கக்கூட அத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்பட்டன என்பது உண்மையே. "குறைந்த எடைபோட்டு பொருளை விற்றால் விற்றவருக்கு கசையடி கொடுக்கப்படும் அல்லது தொடையிலிருந்து சதை வெட்டப்படும்" என்கிறார் பரணி. இதுவெல்லாம் நடந்தது. ஆனால் வெகுமக்களுக்கு குறைந்த விலையில் பொருட்களைத் தரவேண்டும் என்பதில் அந்த சுல்தான் இவ்வளவு அக்கறை எடுத்துக்கொண்டான் என்பதையும் சேர்த்துச் சொல்வதுதான் வரலாற்றக்கு நியாயம் செய்வதாகும்.

அலாவுதீன் காலத்தில், 'சந்தைக்காரர்கள் நாணயமாக நடந்து கொண்டார்கள்' என்றும், 'அலாவுதீன் மரணமடைந்ததும் சந்தைக்காரர்கள் குதூகலமடைந்து மேளங்கள் முழங்கினார்கள்' என்றும் இரு காட்சிகளையும் சொல்லியிருக்கிறார் பரணி. இதிலிருந்தே விலைவாசியைக் கட்டுப்படுத்த எவ்வளவு தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருந்தான் அலாவுதீன் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.

கில்ஜி வம்ச ஆட்சி முடிந்து துக்ளக் வம்ச ஆட்சி வந்தது. அந்த வம்சத்தைச் சார்ந்தவன் ஃபிரோஸ் ஷா துக்ளக். தனது ஆட்சி பற்றி இவனே தன்வரலாறு எழுதியிருக்கிறான். நூலின் பெயர் "ஃபுது ஹாதி ஃபிரோஷ் ஷாகி" இதிலே தனக்கு முந்திய ஆட்சிகளில் முஸ்லிம் சட்ட விதிகளுக்குப் புறம்பாக விதவிதமான வரிகள் வசூலிக்கப்பட்டதாகவும், தான்அவற்றை எல்லாம் ரத்து செய்ததாகவும் கூறியுள்ளான். நீக்கப்பட்ட வரிகளை வசூலிக்கிற அதிகாரிகளுக்குத் தண்டனை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளான்.

"கஜானா வற்றினாலும் பரவாயில்லை
மக்களின் வயிறு நிரம்ப வேண்டும்
மார்பு பொறுமையாக இருந்தாலும் பரவாயில்லை
இதயம் பொங்கி வழிய வேண்டும்"

- என்கிற கவிதையை அவன் மேற்கோள் காட்டியிருக்கிறான். பொருளாதார விஷயங்களிலும் கவிதையைக் கையாளும் திறம்படைத்த ஒரு சுல்தான் இருந்தான்.

இவனது ஆட்சி பற்றி வரலாற்று நூல் எழுதிய இன்னொருவர் ஷம்ச சிராஜ் அபிஃப். இவர் எழுதிய நூலின் பெயரும் பரணியுடையது போல "தாரீக்கி ஃபிரோஸ் ஷாகி." ஆனால் பரணியின் நூலைக்காட்டிலும் இதில்தான் இந்த சுல்தானின் ஆட்சிபற்றி நிறைய விபரங்கள் உள்ளன. பரணியின் நூலில் முகமது பின் துக்ளக் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது.
விலைவாசி நிலைபற்றி அபிஃப்பும் தகவல் தருகிறார். "அலாவுதீனின் காலத்தில் திறமையான நிர்வாகத்தின் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் தாராளமாகக் கிடைத்தன. ஆனால் ஃபிரோஸ் ஷாவின் காலத்தில் அவரது முயற்சி ஏதுமில்லாமலேயே கடவுளின் கருணையால் அவை குறைந்த விலையில் கிடைத்தன" என்று சிறிதும் தயக்கமின்றி எழுதி வைத்துள்ளார். இதிலிருந்தும் அலாவுதீன் கில்ஜியின் பெருமை பிடிபடுகிறது.
எனினும், ஃபிரோஸ் ஷா எடுத்த சில பொருளாதார நடவடிக்கைகள் பற்றி அபிஃப் கூறத்தான் செய்துள்ளார். அவை மிக நவீனமானவை. நமது தலைமுறைக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடியவை. "நகரத்தில் யாரேனும் வேலையில்லாமலிருந்தால் அவர்களைத் தன்னிடம் அனுப்புமாறு சுல்தான் உத்தரவிட்டிருந்தான். கொத்தவால் தனது மாவட்ட அதிகாரிகளை அழைத்து இவர்கள் பற்றி விசாரிப்பான். அத்தகையவர்கள் சுல்தான் முன்பு கொண்டுவரப்பட்டபோது அவர்கள் வேலையில் அமர்த்தப்பட்டார்கள்" என்கிறார் அபிஃப். சுல்தான் வேலைவாய்ப்பு நிலையம் நடத்தியது போலத்தெரிகிறது! இப்படிப்பட்ட சுல்தான்களும் இருந்திருக்கிறார்கள்.

எத்தகைய வேலைகளில் இவர்கள் அமர்த்தப்பட்டார்கள்? அபிஃப் தொடர்கிறார்-" எழுதத் தெரிந்தவர்களுக்கு அரசாங்க அமைப்புகளிலும் தொழில் தெரிந்தவர்களுக்கு கானி ஜஹானின் கீழும் வேலைதரப்பட்டது. ஒரு குறிப்பிட்ட பிரபுவிடம் அடிமையாக வேலை பார்க்க எவரேனும் விரும்பினால் அதற்கான பரிந்துரைக் கடிதத்தை சுல்தானே எழுதி அனுப்பினான். நிலமான்யம் பெற்றுள்ள ஓர் அமீரிடம் ஒருவர் அடிமையாகப் போக விரும்பினால் அது பற்றிய உத்தரவு அந்த அமீருக்கு அனுப்பப்பட்டது. ஆக, ஒரு சிலர்தான் வேலையில்லாமல் இருந்தார்கள்"

சுல்தான்கள் காலத்தில் அடிமை முறையானது பெரிதும் நெகிழ்ச்சி உடையதாக இருந்ததை நோக்க வேண்டும். மனுசாஸ்திரம் காட்டிய வருணாசிரமக் கட்டமைப்பில் அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் இருந்தது. இப்போதோ அது தான் விரும்பிய பிரபுவை ஓர் அடிமைத் தேர்ந்தெடுக்கும் நிலையில் நெகிழ்ச்சி உடையதாக இருந்தது. "பரிந்துரைக் கடிதம்" அனுப்புகிற முறை அப்போதே இருந்தது. பிரபு என்றால் அப்படிக்கடிதம், அமீர் என்றால் உத்தரவு. அவருக்கு நிலமானியத்தை சுல்தான் தந்திருப்பதால் உத்தரவு. அடிமை முறையானது பிறப்பின் அடிப்படையில் என்பதைவிட வறுமையின் காரணமாக நடைமுறையில் இருந்தது இக்காலத்தில்.

இதன் அர்த்தம் அடிமைகள் எல்லாம் நல்ல வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதில்லை அல்லது அடிமைவேலை கிடைத்ததும் வறுமை காணாமல் போனது என்பதுமில்லை. அடிப்படையில் நிலப்பிரபுத்துவ சமுதாயமாக இருந்த சுல்தான்கள் காலத்தில் வாழ்வு வாய்க்கும் கைக்குமாகவே இருந்தது. யஜமானர்களின் கோபத்தீயில் அடிமைகளும் ஏழைகளும் கருகித் துடிக்கவே செய்கிறார்கள். விஷயம் என்னவென்றால் ஃபிரோஸ் ஷா போன்றவர்களின் சில கருணை நடவடிக்கைகள் இருந்தன என்பது வரலாற்று ஏடுகளில் பதிவாகியிருக்கிறது என்பதுதான்.

வேலையில்லாதாருக்கு வேலை மட்டுமல்ல ஏழைகளுக்காக இலவச மருத்துவமனைகளை உருவாக்கினான் ஃபிரோஸ் ஷா. வரலாற்றாளர் அபிஃப் தரும் அந்தத் தகவல் "பாதிக்கப்பட்ட ஏழைகள் அந்த மருத்துவமனைக்குச் சென்றார்கள், தங்களது நோய்களைச் சொன்னார்கள். மருத்துவர்கள் தங்களது திறமையைப் பயன்படுத்தி ஆரோக்கியத்தைத் தந்தார்கள். மருந்து, உணவு மற்றும் பானங்கள் அரசு செலவில் வழங்கப்பட்டன" மக்களுக்கு மருத்துவ வசதி செய்து தரவேண்டிய கடமையை இப்போது அரசுகள் கைகழுவி வருகின்றன. அதுவும் தனியார்மயமாகிப்போனது. "ரமணா" படத்தில் வருவதுபோல அங்கே பிணத்திற்கும் வைத்தியம் பார்த்து பில் போடுகிறார்கள். இந்த சுல்தான் காலத்திலோ அரசு செலவில் மருந்தும் உணவும்தரப்பட்டது. சகல ஆட்சியாளர்களுக்கும் இந்தச் சரித்திரச் செய்தி சமர்ப்பணம்.

இதனினும் ஆச்சரியமான செய்தி சுல்தான் ஃபிரோஸ் ஷா ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவி வழங்கினான் என்பது. நவீன காலத்து நலத்திட்டம் போல உள்ளது. "திருமண வயதுள்ள புதல்வியைக் கொண்டுள்ள எந்த மனிதரும் திவானி கெய்ராத்துக்கு விண்ணப்பம் தரலாம். அந்த நிறுவன அதிகாரிகளிடம் தனது நிலையையும், வறுமையையும் எடுத்துரைக்கலாம். அவர்கள் உரிய விசாரணைக்குப் பிறகு முதல்தர விண்ணப்பதாரருக்கு 50 டங்கா நிதி உதவியும், இரண்டாம் தரத்தவருக்கு 30 டங்காவும், மூன்றாம் தரத்தவருக்கு 25 டங்காவும் தருவார்" என்கிறார் ஆபிஃப், "எந்த மனிதரும்" எனும் சொல்லாட்சி முக்கியமானது. மத வேறுபாடின்றி, மதத்திற்குள்ளும் சாதி வேறுபாடின்றி இந்தத் திருமண நிதி உதவி அமலாகியிருக்கிறது என்பது அர்த்தமாகிறது. தானம் பெறும் உரிமை பிராமணர்களுக்கே உண்டு, அப்போதுதான் கொடுப்பவருக்கு புண்ணியம் உண்டு என்கிற அந்தக் காலத்தில் தர்மசாஸ்திர விளக்கவுரையாளர்களிடமிருந்து சுல்தான்களின் நடைமுறை பெரிதும் மாறுபட்டிருந்தது என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

புதிய நலத்திட்டங்கள் என்று இந்தக்காலத்து அரசுகள் கூறுகிற சில திட்டங்கள் உண்மையில் மிகப்பழமையானவை என்பதற்கு வரலாற்று ஏடுகளில் ஆதாரம் இருக்கிறது. முஸ்லிம் அரசர்களுக்கும் அறிவுஜீவிகளுக்கும் வரலாற்று உணர்வு அதிகம். அதிலும் போற்றத்தக்க விஷயம் பரணி, அபிஃப் போன்ற வரலாற்றாளர்கள் அரசியல் விவகாரங்களோடு இப்படிப் பொருளாதார நடவடிக்கைகளையும் கவனமாகப் பதிவு செய்திருப்பது. இத்தகைய சரித்திர உணர்வாளர்கள் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவின் பழங்கால வரலாறு போல இடைக்கால வரலாறும் புராணமயமாகிப் போயிருக்கும்.

கடந்த கால வரலாற்றிலிருந்து தற்கால செயல்பாடுகளுக்கு படிப்பனைப் பெறலாம் என்கிற நினைப்பு டில்லி சுல்தான்களுக்கு இருந்தது. இது நடைமுறையில் வெளிப்பட்டது என்பதை பரணி சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்விலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.

முகமது பின் துக்ளக் பற்றி மிக மோசமான கருத்துருவமே நம் மத்தியில் உள்ளது. அவனுக்கு இன்னொரு பக்கமும் உண்டு. அதுபற்றி விவரிக்க இங்கே இடம் போதாது. ஒரேயொரு விஷயத்தை மட்டுமே குறிப்பிடலாம். அவனது சாம்ராஜியத்தில் அமீர்கள் எனப்பட்ட சிற்றரசர்கள் சிலர் அவ்வப்போது கலகம் செய்து வந்தார்கள். துக்ளக் மிகவும் வெறுத்துப்போனான். வரலாற்றாளர் என்ற முறையில் அதுபற்றி பரணியிடம் கலந்து பேசினான். பரணி எழுதியிருப்பதைப் பாருங்கள்- "கலகக்காரர்களின் வெற்றியும், தியோகிர் கைகழுவிப் போனதும் ராஜாவைப் பெரிதும் பாதித்தது. இப்படி வருந்திய நிலையில் ஒருநாள் இந்த நூலின் ஆசிரியராகிய என்னை கூப்பிட்டுவிட்டான். பிறகு கூறினான்: 'எனது ராஜியத்திற்கு நோய் பீடித்துவிட்டது. எந்த வைத்தியத்தாலோயும் இதைச் சரிசெய்ய முடியவில்லை. தலைவலியைச் சரிசெய்கிறார் வைத்தியர். காய்ச்சல் வந்து விடுகிறது. அதற்கு வைத்தியம் பார்க்கும் போது வேறு பிரச்சனை வந்து விடுகிறது. அதுபோல எனது ராஜியத்திலும் ஒழுங்கீனங்கள் வெடித்துக் கிளம்புகின்றன. ஓரிடத்தில் ஒடுக்கினால் இன்னொரு இடத்தில் தோன்றுகிறது. ஒரு பகுதியில் சரி செய்தால் இன்னொரு பகுதியில் பிரச்சனை எழுகிறது. இத்தகைய ஒழுங்கீனங்கள் பற்றி முந்தைய ராஜாக்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள்? நான் பதில் சொன்னேன்"

பரணி சொன்ன ஆலோசனையை துக்ளக் கேட்டானா இல்லையா என்பதைவிட இப்படி கேட்டதும், அது பதிவாகியிருப்பதும் அவர்களது சரித்திர உணர்வுக்கு ஒரு தக்க சாட்சியம். சுல்தான்கள் காலத்திலேயே இப்படி என்றால் நமது காலத்திற்கு சரித்திர உணர்வு எவ்வளவு அவசியம் என்பதைச் சொல்லத்தேவையில்லை. நவீன காலத்தின் குழந்தைகளாகிய நமக்கு அவர்களைக் காட்டிலும் நெடிய வரலாறு உண்டு. அதில் எத்தனையோ படிப்பினைகள் படிந்திருக்கின்றன. குடிமக்களைவிட ஆட்சியாளர்கள் அதைக் கற்பார்களேயானால் தேசத்திற்கு எவ்வளவோ நல்லது செய்ய முடியும்.

அலாவுதீன் கில்ஜி விலைவாசியைக் கட்டுப்படுத்த காட்டிய அக்கறையை, ஃபிரோஸ் ஷா துவக்கிய மக்கள் நலத்திட்டங்களை தற்காலத்து ஆட்சியாளர்கள் கவனத்தில் கொண்டால் இத்துறைகளில் அவர்களைக் காட்டிலும் எவ்வளவோ செய்ய வேண்டும் என்கிற உந்துதல் வரும். அப்படி வந்தால் வரலாற்றாளர்கள் பரணி, அபிஃப் போன்றோரின் நோக்கம் மெய்யாலும் நிறைவேறியதாக அர்த்தம்.
-அருணன்
(செம்மலர் ஜனவரி 2010 இதழில் வெளியான கட்டுரை)

இந்திய வரலாற்றில் யார் யாரையோ தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறோம். அத்தகைய தகுதி கண்டிப்பாக அலாவுதீன் கில்ஜிக்கும் உள்ளது என்றால் அது மிகையாகாது. என்ன செய்வது அதிகார வர்க்கத்தில் உள்ளோர் திட்டமிட்ட சதியால் இன்று பொய்யையும் புரட்டையும் வரலாறாக படித்து வருகிறோம். இனி வரும் காலத்திலாவது புதைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக் கொண்டு வரும் பணியை செய்வதற்கு நல்லோர்கள் முன் வர வேண்டும்.

66 comments:

கோவி.கண்ணன் said...

மறைக்கப்பட்ட வரலாறுகளின் பர்தாக்களை அகற்றும் சுவனப்பிரியனின் பணி போற்றத்தக்கது.

16 முறை கஜினி எப்படி உயிர்பிச்சையுடன் ஓடிப் போனான் என்றும் தெரிந்து கொள்ள ஆவல்

கோவி.கண்ணன் said...

//முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை//

கொள்ளையடித்து, இடங்களைக் கைப்பற்றிக் கொள்வது நாடுகளின் உருவாக்கமா ? ஆவ்வ்...

அண்ணே, ஐரோப்பியர்கள் காலடி வைக்கும் முன் அமெரிக்கா என்ற நாடும் இருக்கவில்லை.

வளைகுடா நாடுகளும் அப்படித்தான்,
உங்க நம்பிக்கைப்படி ஆதாமுக்கு முன்பு உலகம் என்கிற பூமியே இருந்ததில்லை.

அப்பறம்...

மனிதர்கள் சிந்திக்கத் தெரிந்திருக்கும் முன் கடவுள் என்கிற ஒன்றும் இருந்ததில்லை, ஆடுமாடுகளுக்கு கடவுள் இல்லாது போல் தான் இருந்தான்.

எல்லாம் தெரிந்த அண்ணனுக்கு யூதர்களின் இஸ்ரேல் உருவாக்கம் மட்டும் கசந்துவிடும்.

:)))

UNMAIKAL said...

PART 1. முகலாய மன்னர்களின் நீதி

WEDNESDAY, AUGUST 01, 2012 விடுதலை

பாபர் தனது மகன் ஹுமாயூனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அது பாரசீக மொழியில் எழுதப்பட்டுள்ளது.

போபால் அரசு நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அவர் எழுதியதாவது:-

ஓ என் மகனே! இந்தியாவில் பல மதங்களைப் பின்பற்றுவோர் வாழ்கிறார்கள்.

இந்த நாட்டின் அரசாங்கம் உன்னிடம் ஒப்படைக்கப் பட்டிருப்பதற்கு ராசாக்களின் ராசாவாகிய கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டும்.

கீழ்வரும் கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.

1. மத உணர்வுக்கு உரிய மதிப்புக் கொடு.

மத மாச்சரியங்களுக்கு உனது மனது ஆட்பட அனுமதிக்காதே. சார்பற்ற நீதி வழங்கு.

2. பசுக்களைக் கொல்வதைத் தவிர்த்துவிடு. இது இந்திய மக்களின் இதயங்களில் இடம் பிடிக்க உனக்கு உதவும். இதன் மூலம் நன்றிக் கடனாய் நீ இந்த மக்களுடன் பிணைக்கப்படுவாய்.

3. எந்த ஒரு சமூகத்தின் வழிபாட்டுத் தலத்தையும் நீ சிதைக்கக் கூடாது.

எப்போதுமே நீதியை நேசிப்பவனாக இரு.

அது ராசாவுக்கும் மக்களுக்கும் இடையே நல்லுறவைப் பராமரிக்கும்.
அதன்மூலம் பூமியில் அமைதியும் திருப்தியும் நிலவும்.

4. இஸ்லாமைப் பரப்பும் பணியை ஒடுக்குமுறை வாளால் செய்வதைவிட அன்பு வாளால் செய்வது நல்லது.

5. ஷியாக்களுக்கும் சன்னிகளுக்கும் இடையிலான வேறுபாடுகளைப் புறக்கணித்திடு. இல்லையெனில் அது இஸ்லாமிற்கு பலவீனத்தைத் தரும்.

6. உனது குடிமக்களிடம் உள்ள பல்வேறுபட்ட தனித்தன்மைகளை ஓராண்டில் வரும் பல்வேறு பருவங்களாகப் பார். அதுவே அரசு நிர்வாகத்தில் வியாதியைக் கொண்டு வராது.

இவ்வறிவுரை ஹுமாயூனுக்கு மட்டுமல்ல.

அவர் வழிவந்தவர்களும் அவுரங்கசீப்பின் ஆரம்ப நாட்கள் வரை கடைப்பிடிக்கப் பட்டிருப்பது வரலாறு.

இந்தக் காலங்களில் கோயில்கள் இடிக்கப்படவில்லை. பசுவதை தவிர்க்கப்பட்டுள்ளது.(338)

ஷெர்ஷா:

குறுகிய கால _ அய்ந்து ஆண்டுகள் மட்டுமே - ஆட்சிதான். அரச வம்சம்கூட இல்லை.

ஆனால் ஆட்சிமுறை, நிர்வாகம், நீதி வழங்கல், வரிவசூல் முதலியனவும் இவற்றிலான சீர்திருத்தங்கள் இவற்றை எல்லாம் நோக்க பல வரலாற்று அறிஞர்கள் வானளாவப் போற்றுகின்றனர்.

மக்கள் நலனை முன்னிறுத்தி ஆட்சி செய்தவர் என்கின்றனர்.

இவருக்கு உவமையாக பிரான்சை ஆண்ட 14அம் லூயி, இரசியாவை ஆண்ட மகா பீட்டர், பிரசியாவை ஆண்ட மகா பிரடரிக் முதலியவர்களைக் கூறுகின்றனர்.

நான்கு நெடுந்தொலைவு சாலைகளை அமைத்தவர் இவரே.

1. வங்காள சோர்கானிலிருந்து மேற்கே சிந்து நதி வரை 1500 மைல் நீளம்.

2. ஆக்ராவிலிருந்து பிரகான்பூர் வரை மட்டுமல்ல.

சாலைகள் அத்தனையிலும் 1700 சத்திரங்களைக் கட்டி இந்து முஸ்லீம்களுக்குத் தனித்தனி தங்கும் விடுதிகளும் சத்திரத்தின் வாயிலில் குடிநீர் பானைகளும் இந்துக்களுக்கு உணவளிக்க பார்ப்பன சமையற்காரர்களையும் ஏற்பாடு செய்திருந்தார். (

எஸ்.ஆர். சர்மா தரும் தகவல்) (345)

நீதி வழங்குவதில் கண்டிப்பானவர்.

அதிகார வர்க்கத்தையும் பெருஞ் செல்வர்களையும் (இந்திய அரசு போல் அல்லாது) குற்றத்திலிருந்து தப்பிச் செல்லவிட மாட்டார்.

ஏழைகளுக்கு நீதி எளிதில் கிடைக்கச் செய்தார்.

உறவினர், உயர்ந்தோர் என்பதற்காக நீதியைச் சாய்க்காமல் அவர்களைத்தான் அதிகம் தண்டிப்பார்.

ஏழை வேளாளனுக்கு மேலான நீதி கிடைத்தது.

தப்காதி அக்பரி (Tabagat-i-Akbari) என்னும் நூலில் நைசாமுதீன் அகமது என்பவர்

ஷெர்ஷாவின் ஆட்சியில் வணிகர்கள் தங்கள் பொருட்களை யாரும் கொள்ளையடித்து விடுவார்களோ என்ற பயமின்றி எங்கும் பயணம் செய்யலாம்.

பாலைவனத்திலும் தூங்கலாம்.

ஷெர்ஷாவின் தண்டனைக்குப் பயந்தும், நீதியைக் காக்க வேண்டுமென்ற பற்றுக்கொண்டும் திருடர்களே வணிகர்களின் பொருட்களுக்குக் காவலிருப்பார்கள் என்கிறார்.

(இன்றைய இந்திய ஊழல் ஆட்சியை எண்ணிப் பாருங்கள். யாருக்கும் வெட்கமில்லை!) _

இந்திய வரலாறு 3ஆம் தொகுதி _ பேரா.கோ.தங்கவேலு எழுதியது.
பழனியப்பா பிரதர்ஸ் வெளியிடு _ 2002 பதிப்பு.

SOURCE: http://viduthalaidaily.blogspot.sg/2012/08/blog-post.html


Continued …......

UNMAIKAL said...

PART 2. முகலாய மன்னர்களின் நீதி

ஷெர்ஷா:


ஷெர்ஷாவின் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு நிகழ்வை வரலாற்றாளர் எர்ஸ்கின் விவரிக்கிறார். (344, 345)

ஷெர்ஷாவின் மூத்த மகன் அதல்கான் ஒரு நாள் யானை மீதேறி ஆக்ரா வீதிகளில் போய்க் கொண்டிருந்தபோது

ஒரு கடைக்காரர் வீடு - சிதிலமடை மடை நிலை _ உரிய மறைப்புகள் இல்லாது கடைக்காரன் மனைவி ஆடையின்றி குளித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த இளவரசன் அவள் அழகில் மயங்கி சிறிது நேரம் நின்று பார்த்ததோடு அவள்மீது ஒரு பீடாவை எறிந்துவிட்டுப் போய் விட்டான்.

அதிர்ந்து போன அப்பெண் கணவன் வந்ததும் தகவலைக் கூறித் தனக்கு மானபங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறி அழுது ஆர்ப்பரித்தாள்.

கணவன் நேரே ஷெர்ஷாவிடம் சென்று புகார் கூறினான். ஷெர்ஷா என்ன செய்தான்?

இஸ்லாம் சட்டவிதிகளின்படி தன் மகனுக்குத் தண்டனை தர வேண்டும் என்றான்.

அதாவது பதிலுக்கு பதில் (கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போல்) இளவரசனின் மனைவி ஆடையின்றி குளிக்க அதை அந்தக் கடைக்காரன் யானை மீதிருந்து பார்த்து அவள் மீது பீடாவை வீச வேண்டும் என்றான்.

(மனு நீதி கொன்ற சோழன் கதைபோல)

இதைக்கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர்.

பல பிரபுக்கள் சொல்லிப் பார்த்தும் ஷெர்ஷா இந்த முடிவிலிருந்து மாற மறுத்துவிட்டார்.

மன்னரின் நேர்மையைக் கண்டு அசந்துபோன கடைக்காரரே இறுதியில் புகாரைத் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

இவ்வாறு நீதி வழங்குவதிலும் வரி வசூல் முறையில் செய்த சீர்திருத்தங்களையும் ஆங்கிலேயர் ஆட்சியிலும் கடைப்பிடித்தனர்.

எனவேதான் வின்சண்ட் ஸ்மித் என்ற வரலாற்று அறிஞர்.

“No government not even the British government has shown so wisdom as this great pathan”

என்று எழுதியிருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

மேலும் தனது சொந்த குடிமக்களுக்கு எதிராக ஜிகாத் (புனிதப் போர்) தொடுத்ததில்லை. (346)

எத்தனை உயர்ந்த உள்ளம்.

மண்ணின் மைந்தர்களை அடியோடு அழிக்கப் போர் செய்த வந்தேறிகளுக்குத் துணைபோன _ இன்னும் ஆதரவுக் கரம் நீட்டும் இந்திய அரசை எண்ணிப் பாருங்கள்.

எத்தனை கொடுமை இது.

எளிய ஷெர்ஷாவின் உயர்வும் முனைவர்களின் இழிவும் புரியும்.

மக்களுக்காக இலக்கியம் படைத்த கபீர்
சமஸ்கிருதம் கிணற்று நீர் என்றால்
மக்களின் மொழி ஓடு நதி என்றார்(197)

அமர்தாசு சீக்கிய மதப் பிரச்சாரத்தை மக்கள் பேசும் மொழியில் செய்தார்.

அதைக் கேட்ட பார்ப்பனர்கள் இவர் ஏன் சமஸ்கிருதத்தைக் கைவிட்டார்? என்று கேட்டனர்.

அதற்கு பதிலுரையாக அமர்தாசு கூறினார்.

கிணற்று நீரைப் பக்கத்து நிலத்திற்குத்தான் பாய்ச்ச முடியும்.

ஆனால் மழைநீர் கொண்டு உலகம் முழுவதிலும் விவசாயம் செய்யலாம் என்றார் (484)

கபீர் கூறியவை:

நீங்கள் உங்கள் இதயத்தைச் சிரைக்கவில்லை
உங்களது முடியை ஏன் சிரைக்கிறீர்கள்?

மனிதனின் பாவங்கள் அவனது இதயத்தின் வேலை
தலையைச் சிரைத்து என்ன பயன்?

புத்தகங்கள் ஒரு சிறை
அதன் கதவுகளில் இப்படி எழுதப்பட்டுள்ளது
கற்கள் உலகை மூழ்கடித்து விட்டன
பண்டிதர்கள் வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் (192)

கற்களைக் கும்பிடுவதன் மூலம்
கடவுளைக் காணமுடியும் என்றால்
நான் மலையைக் கும்பிடுவேன் (196)

பெற்றோர்கள் உயிரோடு இருந்தபோது
அவர்கள் பேச்சைக் கேட்கவில்லை

இறந்ததும் அவர்களுக்கு விருந்து படைக்கிறார்கள்

எலிகளும் நாய்களும் சாப்பிடுவது எப்படி அந்தப்
பரிதாபமான பெற்றோர்களுக்குப் போய்ச் சேரும். (186)

ஆதாரம் :- காலந்தோறும் பிராமணியம் பாகங்கள் 1 மற்றும் 2 : அருணன் எழுதிய நூலிலிருந்து.

- ம.கிருஃச்ணமூர்த்தி

SOURCE: http://viduthalaidaily.blogspot.sg/2012/08/blog-post.html

UNMAIKAL said...

முகம்மது துக்ளக்

இப்போது துக்ளக் பற்றிய தகவல்கள்:
டெல்லியைத் தலைநகராகக் கொண்டு இவர் இந்திய நாட்டில் 1321 முதல் 1388 வரை 67 ஆண்டு களுக்கு ஆட்சி செலுத்தினார்.

1340ஆம் ஆண்டு வாக்கில் நாட்டின் தலைநகரைத் தென்னிந்தியப் பகுதியில் உள்ள தேவகிரிக்கு மாற்றினார்.

தேவகிரி தௌலத்தாபாத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

அமைச்சர்கள் மற்றும் அர சாங்கப் பணியாளர்கள் இந்த மாற்றத்தை விரும்பவில்லை என்பதாலும்

அந்த ஆண்டில் அங்குக் கடும் தண்ணீர்ப் பஞ்சம் நிலவியதாலும் தலைநகர் மீண்டும் டெல்லிக்கு மாற்றப்பட்டது.

அவரது இந்த ஒரு செயலை வைத்து அவருக்குக் கோமாளி என்று பட்டம் சூட்டிப் பலரும் மகிழ்கின்றனர்.

உண்மையில் துக்ளக் கோமாளி அல்ல பிரபல வரலாற்றுப் பேராசிரியர் ஸ்டான்லீலேன் பூல் அவர்களது வார்த்தைகளில்

அவரது எண்ணங்களும் செயல்களும் முன்னோடித் தன்மை கொண்டவை.
அவர் புத்திக் கூர்மை படைத்தவர்
மற்றும் சிந்தனையாளர்.
அவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் அவர் வல்லுநராகத் திகழ்ந்தார்.

இந்தியக் கல்வியில் இலத்தினாகக் கருதப் பட்ட பாரசீக மொழியில் அவர் கவிதை எழுதி வந்தார்.
அவரது உரைநடையும் ஒப்பற்றது.

மேடைப்பேச்சிலும் வல்லவர்.
தத்துவஞானி - குறிப்பாக கிரேக்க தத்துவ ஞானத்தை நன்கு கற்றிருந்தார்.

கூடவே தர்க்க இயலும் (லாஜிக்) கணிதம் மற்றும் அறிவியல் துறைகளிலும் ஞானம் உள்ளவர்.

சமகாலத்துப் பேரறிஞர்கள் அவரிடம் பேசுவதற்கு அச்சப்பட்டனர்.

அக்காலத்தில் பிரபலமாகி இருந்த கையெழுத்துக் (குர்ஆன் போன்ற நூல்களை அழகிய எழுத்துக்களில் நகல் எடுப்பது) கலையிலும் வல்லவர்.

அவரது அழகுணர்வு அவரது முத்திரையுடன் வெளியிடப்பட்ட நாண யங்களின் வாயிலாகப் புலனாகிறது.

சுருக்கமாகச் சொல்வதானால் அக்காலத்திய கலாசாரத்தின் சிறப்பு அம்சங்களை அவரிடம் காணமுடிந்தது.

அவரது மேதா விலாசத்துடன் அவரது நினைவாற்றலும் போற்றக்கூடியதே.

அதே போல் அவரது நெஞ்சுறுதி - தளராத அய ராத உறுதிபடைத்த உள்ளம் அவருக்கு இருந்தது.

தலைநகரை மாற்றியது, நாணயப் புழக்கத்தில் மாற்றம் கொண்டு வந்தது - எல்லாமே நல்ல திட்டங்கள்தான்.

ஆனால் மக்கள் அவரது திட்டங்களை ஏற்கும் நிலையில் இருந்தார்களா என்பது பற்றி அவர் கவலைப்படவில்லை.

மாற்றங்களை மக்கள் எளிதாக ஏற்கமாட்டார்கள் என்பது அவருக்குப் புரியாமல் போய்விட்டது.

மத்திய கால இந்திய வரலாற்றில் ஏனைய நாடுகளுக்குத் தூதர்களை அனுப்பிய விஷயத்தில் அவர் ஒரு முன்னோடி.

அவரது ஆப்பிரிக்க நாட்டின் (மொராக்கோ) தூதரான பிரசித்தி பெற்ற இபன்பட்டூட்டா துக்ளக்கின் சபையை அலங்கரித்தார்.

தலைநகரை மாற்றியது பற்றிச் சில வார்த்தைகள்.

துக்ளக்கின் சாம்ராஜ்யம் வட திசையில் இமயமலையிலிருந்து தென் திசையில் மதுரை வரையிலும்,

மேற்குத் திசையில் பெஷாவரிலிருந்து கிழக்கே வங்காளம் வரையிலும் பரவி இருந்தது.

ரயில்வேக்களும் தொலைத் தொடர்பு வசதிகளும் இல்லாத காலம் அது. மாட்டு வண்டிகளும் குதிரைகளும்தான் பயணச் சாதனங்கள்.

அத்தகைய சூழலில் புவியியல் அடிப்படையில் நாட்டுக்கு மையமான ஒரு இடத்தைத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது அவரது புத்திக் கூர்மைக்கும் ராஜதந்திரத்திற்கும் ஒரு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும்.

நாம் முன்பே குறிப்பிட்டபடி மக்கள் அதை ஏற்கவில்லை.

தண்ணீர்ப் பஞ்சம் மற்றொரு காரணம். அதனால் முயற்சி தோல்வியுற்றது.



நன்றி: கீற்று.

UNMAIKAL said...

PART 1. கஜினி முகம்மது

எட்டாவது நூற்றாண்டில் சிந்து மாகாணப் பகுதியை முஸ்லிம்கள் கைப்பற்றி ஆளத் தொடங்கினர்.

இருப்பினும் கி.பி.1205 வரை டில்லியைத் தலைநகராகக் கொண்டு வட இந்தியாவில் முஸ்லிம்களின் ஆட்சி ஏற்படவில்லை.

கி.பி.1206-இல் கோரி முகம்மதுவின் பிரதிநிதியான குத்புதீன் டில்லியைத் தலைநகராகக் கொண்டு ஆளத் தொடங்கினார். அவர் துருக்கி நாட்டைச் சார்ந்தவர்.

இந்தியாவில் முகலாயர்களின் ஆட்சியை 1526-இல் பாபர் நிலைநிறுத்தினார். அவரது சந்ததிகள் 1764 வரை இந்தியாவை ஆண்டனர்.

மத்திய காலத்தில் அக்பர், ஷாஜஹான் அவுரங்கசீப் போன்ற பிரசித்தி பெற்ற மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

இருப்பினும் நாம் கஜினி முகம்மதுவையும் முகம்மது துக்ளக்கையும் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் - இவர்களைப் பற்றி மக்களிடையே முற்றிலும் தவறான எண்ணங்கள் நிலவுகின்றன.

கஜினி முகம்மது தோல்விக்கு ஒப்பற்ற உதாரணமாகக் காட்டப்படுகிறார்.

“அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவை படையெடுத்தார் என்று கூறப்படுகிறது.

அதன் உட்பொருள் அவர் முதல் பதினாறு முயற்சிகளில் தோல்வியைத் தழுவினார், பதினேழாவது முயற்சியில் சோம்நாத் நகரைக் கைப்பற்றினார் என்பதாகும்.

ஒரு திருத்தம் என்னவெனில் அவர் பதினாறாவது படையெடுப்பில் சோம்நாத் நகரைக் கைப்பற்றினார்.

பதினேழாவது படையெடுப்பில் ஜாட் மன்னர்களைத் தோற்கடித்தார்.

உண்மை நிலை என்னவெனில் உலக சரித்திரத்தில் தலைசிறந்த மாவீரர்களில் ஒருவராக கஜினி முகம்மது குறிப்பிடப்படுகிறார்.

அலெக்சாண்டர் சிந்து நதிக்கரை வரை வந்துவிட்டு கிரேக்க நாட்டிற்குத் திரும்பி விட்டார்.

நெப்போலியன் ரஷ்யர்களாலும் ஆங் கிலேயர்களாலும் தோற்கடிக்கப்பட்டார்.

ஆனால் கஜினி முகம்மது ஒருவர்தான் எல்லாப் போர்களிலும் வாகை சூடித் தோல்வியை ஒரு போதும் காணாத மாவீரர்!

அப்படி என்றால் இந்தப் பதினேழு படை யெடுப்புகள் ஏன்?
ஆம். அவர் இந்தியாவின் மீது பதினேழு தடவைகள் போர் தொடுத்தார் என்பது சரித்திர அடிப்படையிலான உண்மைதான்.

அவரது ஒவ்வொரு படையெடுப்பின் போதும் ஒரு நகர் அல்லது ஒரு பகுதியைக் குறிவைத்தார்.

அந்த மன்னரை வெற்றிகண்டு நகரைக் கைப்பற்றி, தங்கம் - வைர நகைகளைக் கைப்பற்றி தம் நாட்டிற்குத் திரும்பிவிட்டார்.

அவரது நோக்கம் தங்கம் - வைர நகைகளைக் கைப்பற்றுவது தான் - ஆட்சியை நிலைநாட்டுவது அல்ல.
Continued ……

UNMAIKAL said...

PART 2. கஜினி முகம்மது

அவரது பதினேழு படையெடுப்புகள் பற்றிய விவரம்:
1. இந்தியாவின் எல்லை நகரங்கள் - கைபர் கணவாயை ஒட்டிய பகுதி - கி.பி.1000,

2. பெஷாவர் மற்றும் வால்ஹிந்த் கி.பி.1001,

3. பீரா (பாட்டியா) 1004,

4. மூல்டான் 1006,

5. நவாஸா 1007,

6. நாகர்க்கோட் 1008,

7. நாராயண் 1009,

8. மூல்டான் 1010,

9. நிந்துனா 1013,

10. தாணேசர் 1014,

11.லோஹ் கோட் 1015,

12. மதுரா மற்றும் கன்னோஜி 1018,

13. ராஹிப் 1021,

14. கிராட் லோஹ்கோட் மற்றும் லாஹோர் 1022,

15. க்வாலியர் மற்றும் காளிஞ்ஜார் 1023,

16. சோம்நாத் 1025,

17. ஜாட் மன்னர்கள் 1026.

கஜினி முகம்மதுவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் நாம் முன்பே குறிப்பிட்டபடி - நாடு பிளவுபட்டு மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடுபட்டதுதான்.

சிந்து நதிக்கரையில் காந்தாரப் பகுதியைப் பிராமண மன்னர்கள் ஆண்டு வந்தனர். டில்லி கன்னோஜி பகுதிகள் கல்தோமரர்கள் வசம் இருந்தது. புத்த மதத்தைத் தழுவிய பாலர்கள் கங்கை நதிப்பகுதியில் மகத நாட்டை ஆண்டு வந்தனர்.

குப்தப் பேரரசின் சந்ததியினர் மால்வா பகுதியை ஆண்டனர். நர்மதைப் பகுதி காலாச்சூரிகள் வசம் இருந்தது.

ஆனால் இவர்களது ஒற்றுமை இன்மையும் பரஸ்பரப் பூசல்களும் இந்தியாவின் மீது படை எடுப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.

கஜினி நகரில் முகம்மதுவின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது.

பேரறிஞர்களையும் புலவர்களையும் அவர் ஆதரித்தார்.

பாரசீக மொழியின் மிகப் பிரசித்தி வாய்ந்த கவிஞர் ஃபிர்தௌசி கஜினியின் தர்பாரில்தான் இருந்தார்.

அதேபோல் புகழ்பெற்ற வானியல் மற்றும் வரலாற்றுப் பேரறிஞர் அல்பெரூனி கஜினியின் சபையை அலங்கரித்தார்.

கஜினி ஒரு அழகிய நகரமாகத் திகழ்ந்தது. அவரது ராஜ்ஜியம் கஜினி நகருக்கு மேற்குத் திசையில் மத்திய ஆசியா வரை பரவி இருந்தது.

இந்தியாவை ஆள்வதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

இருப்பினும் சில குறைகளையும் குற்றங்களையும் நாம் குறிப்பிட்டேயாகவேண்டும்.

இந்தியாவின் நகரங்களைச் சூறையாடியதையும் சொத்துக்களைக் கொள்ளை அடித்ததையும் எப்படி மன்னிக்க முடியும்?

ஆனாலும் நாம் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில்

இச்சம்பவங்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பதினோராவது நூற்றாண்டில் நிகழ்ந்தவை.

அக்காலகட்டத்தில் உலகெங்கும் பல்வேறு மன்னர்கள் = நாடுகளிடையே போர்கள் நிகழ்ந்துவந்தன.

வெற்றி பெற்ற மன்னரின் படைகள் தாம் கைப்பற்றிய நகரின் சொத்துக்களைச் சூறையாடுவதும்

கட்டடங்களை இடிப்பதும்

ஊரை எரிப்பதும்

சகஜமாக நிகழ்ந்தன.

இந்தியாவில் சாளுக்கியர்கள் காஞ்சிபுரத்தை வெற்றிகொண்டபோது அதைத்தான் செய்தனர் –

அவர்களைப் பழிவாங்கிய பல்லவர்கள் வாதாபி நகரைச் சூறையாடிக் கொளுத்தினர்.

சோழ மன்னர்களும் தாங்கள் வெற்றிகொண்ட நகரங்களில் அதைத்தான் செய்தனர்.

அவரைத் தோல்விக்கு உதாரணமாக நாம் கொண்டுள்ள கணிப்பு தவறு என்று சுட்டிக் காட்டுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

நன்றி: கீற்று.

UNMAIKAL said...

PART 2. கஜினி முகம்மது

அவரது பதினேழு படையெடுப்புகள் பற்றிய விவரம்:
1. இந்தியாவின் எல்லை நகரங்கள் - கைபர் கணவாயை ஒட்டிய பகுதி - கி.பி.1000,

2. பெஷாவர் மற்றும் வால்ஹிந்த் கி.பி.1001,

3. பீரா (பாட்டியா) 1004,

4. மூல்டான் 1006,

5. நவாஸா 1007,

6. நாகர்க்கோட் 1008,

7. நாராயண் 1009,

8. மூல்டான் 1010,

9. நிந்துனா 1013,

10. தாணேசர் 1014,

11.லோஹ் கோட் 1015,

12. மதுரா மற்றும் கன்னோஜி 1018,

13. ராஹிப் 1021,

14. கிராட் லோஹ்கோட் மற்றும் லாஹோர் 1022,

15. க்வாலியர் மற்றும் காளிஞ்ஜார் 1023,

16. சோம்நாத் 1025,

17. ஜாட் மன்னர்கள் 1026.

கஜினி முகம்மதுவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் நாம் முன்பே குறிப்பிட்டபடி - நாடு பிளவுபட்டு மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடுபட்டதுதான்.

சிந்து நதிக்கரையில் காந்தாரப் பகுதியைப் பிராமண மன்னர்கள் ஆண்டு வந்தனர். டில்லி கன்னோஜி பகுதிகள் கல்தோமரர்கள் வசம் இருந்தது. புத்த மதத்தைத் தழுவிய பாலர்கள் கங்கை நதிப்பகுதியில் மகத நாட்டை ஆண்டு வந்தனர்.

குப்தப் பேரரசின் சந்ததியினர் மால்வா பகுதியை ஆண்டனர். நர்மதைப் பகுதி காலாச்சூரிகள் வசம் இருந்தது.

ஆனால் இவர்களது ஒற்றுமை இன்மையும் பரஸ்பரப் பூசல்களும் இந்தியாவின் மீது படை எடுப்பவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்கி இருந்தது.

கஜினி நகரில் முகம்மதுவின் ஆட்சி சிறப்பாகவே இருந்தது.

பேரறிஞர்களையும் புலவர்களையும் அவர் ஆதரித்தார்.

பாரசீக மொழியின் மிகப் பிரசித்தி வாய்ந்த கவிஞர் ஃபிர்தௌசி கஜினியின் தர்பாரில்தான் இருந்தார்.

அதேபோல் புகழ்பெற்ற வானியல் மற்றும் வரலாற்றுப் பேரறிஞர் அல்பெரூனி கஜினியின் சபையை அலங்கரித்தார்.

கஜினி ஒரு அழகிய நகரமாகத் திகழ்ந்தது. அவரது ராஜ்ஜியம் கஜினி நகருக்கு மேற்குத் திசையில் மத்திய ஆசியா வரை பரவி இருந்தது.

இந்தியாவை ஆள்வதற்கு அவர் முயற்சிக்கவில்லை.

இருப்பினும் சில குறைகளையும் குற்றங்களையும் நாம் குறிப்பிட்டேயாகவேண்டும்.

இந்தியாவின் நகரங்களைச் சூறையாடியதையும் சொத்துக்களைக் கொள்ளை அடித்ததையும் எப்படி மன்னிக்க முடியும்?

ஆனாலும் நாம் நினைவில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில்

இச்சம்பவங்கள் 1000 ஆண்டுகளுக்கு முன்பு பதினோராவது நூற்றாண்டில் நிகழ்ந்தவை.

அக்காலகட்டத்தில் உலகெங்கும் பல்வேறு மன்னர்கள் = நாடுகளிடையே போர்கள் நிகழ்ந்துவந்தன.

வெற்றி பெற்ற மன்னரின் படைகள் தாம் கைப்பற்றிய நகரின் சொத்துக்களைச் சூறையாடுவதும்

கட்டடங்களை இடிப்பதும்

ஊரை எரிப்பதும்

சகஜமாக நிகழ்ந்தன.

இந்தியாவில் சாளுக்கியர்கள் காஞ்சிபுரத்தை வெற்றிகொண்டபோது அதைத்தான் செய்தனர் –

அவர்களைப் பழிவாங்கிய பல்லவர்கள் வாதாபி நகரைச் சூறையாடிக் கொளுத்தினர்.

சோழ மன்னர்களும் தாங்கள் வெற்றிகொண்ட நகரங்களில் அதைத்தான் செய்தனர்.

அவரைத் தோல்விக்கு உதாரணமாக நாம் கொண்டுள்ள கணிப்பு தவறு என்று சுட்டிக் காட்டுவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

நன்றி: கீற்று.

அஜீம்பாஷா said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

"அலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு!" அருமையாக ஆதாரங்களுடன் விளக்கியதற்கு மிக்க நன்றி.
எப்போதும் போல உங்கள் பதிவுக்காக காத்திருந்து உடனே தாங்கள் எழுதியது தப்பு (எந்த விஷயமானாலும்) என்று உடன் பின்னூட்டம் இட்ட உங்கள் உடன் பிறவா தம்பி(கோவியார்)என்னே பாசம் உங்கள் மீது.மனுஷன் அசர மாட்டேங்கிறார் ஆதாரங்களுடன் விளக்கினாலும் ஊ ஹும் இது தேறாத கேஸ்.

அஞ்சா சிங்கம் said...

//முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை//

அண்ணே அசோகரின் மௌரிய பேரரசை பற்றி நீங்கள் கேள்விப்பட்டதே இல்லையா ..................................?
கனிஷகர் , ஹர்ஷவர்தன் , இவங்க எல்லாம் யாருன்னு தெரியமா ............................?
கூகுள் போயி இவர்கள் ஆண்ட பரப்பளவை நல்லா விளக்கெண்ணை ஊற்றி உத்து பார்க்கவும் .........................
இவர்கள் எல்லாம் முஸ்லீம்கள் வருவதற்கு முன்பு இந்த மண்ணை ஆண்டவர்கள் .............................
அலாவுதீன் கில்ஜியின் நிர்வாக திறமையை விளக்கு விளக்கு என்று விளக்கிவிட்டீர்கள் . உங்களுக்கு புண்ணியமாக போகும் அவர் ஆட்சிக்கு வந்த முறையையும் ..(யாரை எதற்க்காக கொன்று ) கடைசி காலத்தில் எப்படி இறந்தார் என்றும் (யாரால் எப்படி கொல்லபட்டார் ) என்று நீங்களே சொல்லி விட்டால் எந்த வரலாற்று திரிபும் இல்லாமல் . 100 % அக்மார்க் சுபி வரலாறை தெரிந்து கொண்ட பாக்கியவான் ஆவேன் .................................
முகமது நபிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் , மரணத்தில் ஒரு ஒற்றுமை இருப்பது போல் படுகிறது ...நீங்களே உங்கள் வரலாறை சொல்லிவிட்டால் நல்லா இருக்கும் .................ஏனென்றால் நாங்கள் எல்லாம் தவறாக கற்ப்பிக்க பட்டவர்கள் ........முஸ்லீம் மன்னர்கள் நல்லவர்கள் .அவர்கள் யாரையும் கொலை செய்ய வில்லை .. இவர்களாக போயி அவர்களின் வாளை கழுத்தால் தாக்கி இறந்து விட்டால் அதற்க்கு அவர்கள் எப்படி பொறுப்பு ................?
யாரையும் கற்பழிக்கவில்லை அவர்களாக .........................(வேண்டாம் ) எப்படி பாய்ன்ட் எடுத்து குடுக்குறேன் .அடுத்தமுறை பதிவு எழுத பயன்படும் ...

NKS.ஹாஜா மைதீன் said...

தெரியாத வரலாற்று உண்மைகளை தெரிந்து கொண்டேன்...

suvanappiriyan said...

அஞ்சா சிங்கம்!

//முகமது நபிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் , மரணத்தில் ஒரு ஒற்றுமை இருப்பது போல் படுகிறது ...நீங்களே உங்கள் வரலாறை சொல்லிவிட்டால் நல்லா இருக்கும் ............//

பரவாயில்லை.....வரலாறு மிக நன்றாகவே தெரிந்து வைத்துள்ளீர்கள். :-)

அஞ்சா சிங்கம் said...

UNMAIKAL said...

/////ஒரு கடைக்காரர் வீடு - சிதிலமடை மடை நிலை _ உரிய மறைப்புகள் இல்லாது கடைக்காரன் மனைவி ஆடையின்றி குளித்துக் கொண்டிருந்தவளைப் பார்த்த இளவரசன் அவள் அழகில் மயங்கி சிறிது நேரம் நின்று பார்த்ததோடு அவள்மீது ஒரு பீடாவை எறிந்துவிட்டுப் போய் விட்டான்.

அதிர்ந்து போன அப்பெண் கணவன் வந்ததும் தகவலைக் கூறித் தனக்கு மானபங்கம் ஏற்பட்டு விட்டதாகவும் தற்கொலை செய்துகொள்ளப் போவதாகவும் கூறி அழுது ஆர்ப்பரித்தாள்.

கணவன் நேரே ஷெர்ஷாவிடம் சென்று புகார் கூறினான். ஷெர்ஷா என்ன செய்தான்?

இஸ்லாம் சட்டவிதிகளின்படி தன் மகனுக்குத் தண்டனை தர வேண்டும் என்றான்.
அதாவது பதிலுக்கு பதில் (கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போல்) இளவரசனின் மனைவி ஆடையின்றி குளிக்க அதை அந்தக் கடைக்காரன் யானை மீதிருந்து பார்த்து அவள் மீது பீடாவை வீச வேண்டும் என்றான். //////////////////

/////////////////////////////////////////////////////////////////////////////////////////////

ஐயோ ஐயோ இதுக்கு என்னத்தை சொல்றது இது தெரிஞ்சி செய்யிறதா இல்லை தெரியாமல் செய்யுதானே புரிய மாட்டுது . எங்கேயாவது காப்பி பண்ண வேண்டியது . அதை அப்படியே பேஸ்ட் பண்ணிட வேண்டியது . இது தான் இஸ்லாமிய நீதியாம் ..............பாருங்க மக்களே . யார் செய்த தப்புக்கு யாருக்கு தண்டனை என்று ... இளவரசன் மனைவி என்னய்யா பாவம் செய்தால் ..? தப்பு செய்தது இளவரசன் அவனுக்கு நறுக்கி விட்டால் அது தண்டனை அதை விட்டு அப்பாவி பெண்ணை நிர்வாண படுத்தி பாப்பாராம் .................உங்களுக்கு மட்டும் இப்படி கோணலாக மட்டுமே யோசிக்க தோன்றுமோ ..?



suvanappiriyan said...

கோவி கண்ணன்!

//16 முறை கஜினி எப்படி உயிர்பிச்சையுடன் ஓடிப் போனான் என்றும் தெரிந்து கொள்ள ஆவல்//

ஒரு படையெடுப்பை குறைச்சுபுட்டீங்களே! மொத்தம் 17. கஜினியின் நோக்கம் செல்வங்களை கொள்ளையடித்து தனது நாட்டை வளமாக்குவது. ஒரு இந்தியன் என்ற முறையில் இதனை நான் வெறுக்கிறேன்.

ஆனால் அன்றைய காலத்தில் இது தவறாக பார்க்கப்பட்டவில்லை. எல்லா நாட்டு மன்னர்களும் இந்த தவறை செய்துள்ளனர். நமது தமிழ்நாடும் இந்து மன்னர்களாலேயே பல இடங்களில் கொள்ளையிடப்பட்டுள்ளது.

suvanappiriyan said...

சகோ அஜீம் பாஸா!

//"அலாவுதீன் கில்ஜியின் மறைக்கப்பட்ட வரலாறு!" அருமையாக ஆதாரங்களுடன் விளக்கியதற்கு மிக்க நன்றி.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ ஹாஜா மைதீன்!

//தெரியாத வரலாற்று உண்மைகளை தெரிந்து கொண்டேன்...//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

suvanappiriyan said...

சகோ உண்மைகள்!

//கஜினி முகம்மதுவின் வெற்றிகளுக்கு முக்கிய காரணம் நாம் முன்பே குறிப்பிட்டபடி - நாடு பிளவுபட்டு மன்னர்கள் ஒருவருக்கொருவர் சண்டையில் ஈடுபட்டதுதான். //

பல அருமையான தகவல்களை தொடர்ந்து தந்து வரும் தங்களுக்கு மிக்க நன்றி!

அஞ்சா சிங்கம் said...

UNMAIKAL said...
//////////ஆனால் கஜினி முகம்மது ஒருவர்தான் எல்லாப் போர்களிலும் வாகை சூடித் தோல்வியை ஒரு போதும் காணாத மாவீரர்!///////////////////

அப்படியா நான் மங்கோலிய மன்னன் செங்கிஸ்கான் தான் என்று நினைத்திருந்தேன் ....................அவன்தான் காலிபாவை ஜமுக்காளத்தில் சுற்றி செவுத்தில் அடித்து கொன்ற மாவீரன் ................ புனிதமான கலிபாவின் ரத்தம் இந்த மண்ணை நனைக்க கூடாது என்று முஸ்லீம்கள் கேட்டுகொண்டதற்கு இணங்க இவ்வாறு செய்தான் இதுதான் உண்மையான கருணை மதசகிப்பு தன்மை என்று கூட சொல்லலாம் ..............:)

அஞ்சா சிங்கம் said...

UNMAIKAL said...
/////அத்தகைய சூழலில் புவியியல் அடிப்படையில் நாட்டுக்கு மையமான ஒரு இடத்தைத் தலைநகராகத் தேர்ந்தெடுத்தது அவரது புத்திக் கூர்மைக்கும் ராஜதந்திரத்திற்கும் ஒரு ஒப்பற்ற எடுத்துக்காட்டாகும்.//////////////////////

எனக்கு இன்னைக்கு நல்லா பொழுது போகும் போல இருக்கு யாருயா நீ எங்க இருந்து வரீங்க ......ஹி....ஹி .....

தலை நகரை மாற்றுவது என்றால் அரசு அலுவலகங்களை மாற்றினால் போதும் ... ஆனால் தில்லியில் இருந்து அனைத்து மக்களையும் ஆடு மாடு பூனைக்குட்டி உட்பட எல்லாத்தையும் புதிய நகருக்கு மாற்ற முயற்சிக்கும் மன்னனை கோமாளி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வார்களாம் ...

/////////////அவர் புத்திக் கூர்மை படைத்தவர்
மற்றும் சிந்தனையாளர்.
அவரது காலத்தில் எல்லாத் துறைகளிலும் அவர் வல்லுநராகத் திகழ்ந்தார்.

இந்தியக் கல்வியில் இலத்தினாகக் கருதப் பட்ட பாரசீக மொழியில் அவர் கவிதை எழுதி வந்தார்.
அவரது உரைநடையும் ஒப்பற்றது.

மேடைப்பேச்சிலும் வல்லவர்.
தத்துவஞானி - குறிப்பாக கிரேக்க தத்துவ ஞானத்தை நன்கு கற்றிருந்தார்.

கூடவே தர்க்க இயலும் (லாஜிக்) கணிதம் மற்றும் அறிவியல் துறைகளிலும் ஞானம் உள்ளவர்.

சமகாலத்துப் பேரறிஞர்கள் அவரிடம் பேசுவதற்கு அச்சப்பட்டனர்.//////////


அவருக்கு சம்மர் சாட் அடிக்க தெரியும் .. தரையில் கால் படாமல் ட்ரிப்புள் சாட் அடிப்பார் ................இதையெல்லாம் ஏன் விட்டுவிட்டீர்கள் ..
அவரின் புத்திகூர்மைக்கு ரெண்டு எடுத்துகாட்டு சொல்றேன் .. தன் கூட பிறந்த சகோதரனை .. கொன்று துண்டு துண்டாக நறுக்கி கறி சமைத்து அதை அவன் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு குடுத்து கட்டாய படுத்து திங்க வைக்கும் அளவிற்கு புத்தி ரொம்ப கூர்மையா தான் இருந்தது .....
வேலைக்காரன் கைதவறி உடைத்துவிட்ட சீனத்து பீங்கான் கோப்பையை . சீனாவிற்கே சென்று வாங்கி வரசொன்னான் அதும் நடந்து சென்று ..............எப்பேர் பட்ட நகைச்சுவை உணர்வாளன் ....................சிந்திக்க மாட்டீர்களா.................?

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

வழக்கம் போல நீங்களே மாட்டிக்கிறிங்க:-))

அலாவுதின் கில்ஜி...ராணி பத்மினியை அடைய செய்த போரை நான் சொன்னால் அதை விட்டு எல்லாம் சொல்லுறிங்களே :-))

மேலும் மாலிக் காபுர் ஒரு முன்னாள் இந்துன்னு இப்போ மட்டும் சொல்லுங்க, நீங்க தானே இந்திய முஸ்லீம்கள் 90% மதம் மாறீயவர்கள்னு சொன்னீங்க, மேலும் அரசன் உத்தரவு இல்லாமலா மாலிக் காபுர் போர் புரிந்தான்.

அக்பர் அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்தியதாலே அவரை கெட்டவர்னு நீங்களே சொல்றிங்க ,அக்பர் என்ன இந்துவா? அதாவது இஸ்லாமியருக்கு தனிச்சிறப்பு தரவில்லைனா அவர் கெட்டவர் ,தீவிர இஸ்லாமியராக இருந்தால் நல்லவர்னு , நல்லவர்,கெட்டவருக்கு கூட மதமே அளவுகோல் என்பவருக்கு , மோடி இந்துக்குகளுக்கும், ராச பக்சே பவுத்த சிங்களவருக்கும், ஹிட்லர் நாஜிக்களுக்கும், இஸ்ரேலிய பிரதபர் யூதர்களுக்கும் நல்லவராக தானே தெரிவார், அதனை நீங்கள் குறை சொல்வது ஏன்?


அப்போ மட்டும் அவர்கள் இஸ்லாமியர்களை மதிக்கணுமா?

பாபர்,அக்பர், அவுரங்க சீப் எல்லாம் மங்கோலிய செங்கிஸ்கான் வழி வந்தவர்கள்.ஆப்கான் எல்லாம் அரபிய வழி கிடையாது.

காந்தகார் எல்லாம் அப்போவே இந்தியாவை ஆண்ட குஷானர்கள் வசம் இருந்த பகுதி.

கஜினி,கோரி முகமது அலாவுதீன் கில்ஜி என எல்லாருமே அப்போதைய இந்துஸ்தானில் இருந்த பழங்க்குடியினர் ,பின்னர் இஸ்லாமுக்கு மதம் மாறியவர்கள்.

குத்புதீன் ஐபெக் ஒரு ஆப்ரிக்க அடிமை .

எனவே நீங்க நினைக்கிற அரபு இஸ்லாமியர்கள் யாருமே இந்தியாவை ஆளவில்லை :-))

அஷ்ரஜ், அஜ்லப் என இஸ்லாமியர்களில் இரு வகை, அதன் பொருள் என்ன என உங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை.

இந்தியாவுக்கு படை எடுத்தவர்கள் எல்லாம் அஜ்லப் முசல்மான்களே :-))

உங்களைப்போன்றவர்களால் தான் இஸ்லாமியர்கள் மீது மாற்று மதத்தினர் நட்பு பாராட்டாமல் ஒதுக்குவது.

கோவி.கண்ணன் said...

//ஒரு படையெடுப்பை குறைச்சுபுட்டீங்களே! மொத்தம் 17//

நான் தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறேன், 16 முறை அவனை உயிரோடு விட்டதால் தான் 17 ஆம் முறை அவனால் மீண்டும் உள்ளே வந்து அள்ளிச் செல்ல முடிந்திருக்கிறது

Unknown said...

Hello brother. Muhammad and gilgee ooda maranatha pathi solluga please ennaku theriyadhu. :p

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

கஜினி முகமது எடுத்தது எல்லாம் படை எடுப்பா? எல்லாம் கொள்ளை அடிக்கும் முயற்சி.

மேலும் வலு குறைந்த , மற்றும் அசந்து இருக்கும் காலத்தில் திடீர் என தாக்குவது.

சோம்நாத் கோவிலை தாக்கும் போது விழாக்காலம் அனைவரும் கோயிலில் விழாவில் மூழ்கி இருக்கும் போது அத்இரடியாக புகுந்து தாகினான், அப்போது மன்னர்களும் கோயிலில் நாட்டியம் பார்த்துக்கொண்டு இருந்தார்களாம்.

நல்ல பாதுகாப்புடன் இருக்கும் வீட்டிலும் நள்ளிரவில் புகுந்து கொள்ளை அடித்துவிட்டு ஓடுவது இப்போதும் உண்டு தானே.

கோரி முகமதுவை ஒரு ஜாட் வீரன் ஈட்டியால் குத்தினான் ,குத்துப்பட்டு ஊருக்கு ஓடிப்போய் தான் செத்தான் ,இது வரலாறு.

கஜினி முகமதுவை ஜாட் வீரர்கள் ராஜஸ்தானில் வைத்து துவைத்து எடுத்தார்கள், பின்னர் ஓடிப்போய் , குளிர் காலத்தில் மீண்டும் வந்து அசந்து இருந்த போது தாக்கினான் கஜினி.

கஜினி இந்தியாவின் கடும் குளிர் காலத்தில் தான் படை எடுப்பான், அப்போது தான் இந்தியாவில் அனைவரும் அதிகம் விழிப்புணர்வு இல்லாமல் சோம்பலாக இருப்பார்கள்.

கஜினியை எதிர்த்து போரிட்டது ஜாட் ராஜாக்கள் கூட அல்ல ஜாட் பஞ்சாயத்து ஊருக்கு கூடி ஊருக்கு கொஞ்சம் பேர் என திரட்டி காவல் பணி செய்யும் அவர்கள் தான் சண்டையிட்டது.

இதே போன்று ஜாட் பஞ்சாயத்து(காப் என்று பெயர்) தான் கோரி முகமது காலம் வரைக்கும் பெரிய சண்டைகள் போட்டது. அப்போதைய மன்னர்கள் சிற்றரசர்களா ,கேளிக்கையிலே கவனம் செலுத்திக்கொன்டு இருந்தார்கள்.

கஜினி முகமது நின்று சன்டையிட்டு இருந்தால் சமாதி கட்டியிருப்பார்கள், வர வேண்டியது கொள்ளை அடிக்க வேண்டியது , திரும்பி ஓட வேண்டியது, 2-3 நாட்களுக்கு மேல் இந்திய மண்ணில் இருப்பதில்லை, இதனை எப்படி படை எடுப்பு என்கிறீர்கள்.

இன்னும் சொல்லப்போனால் எல்லையோர பகுதிகளை மட்டுமே தாக்குவது, உள்ளே கொஞ்சம் வந்து சோழர்கள்,சாளுக்கியர்களை தொட்டு இருந்தால் , அங்கேயே மட்டையாகி இருப்பான் கஜினி முகமது இதனை நான் சொல்லவில்லை பல வரலாற்று ஆசிரியர்களும் சொல்லி இருப்பது.

எனவே இதில் பெருமையாக பீற்றிக்கொள்ள என்ன இருக்கிறது என பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்,உண்மையில் மதம் என்ற அடிப்படையில் கொள்ளையையும் பெருமையாக பேசும் அழுக்கான மதவாத முகம் தான் வெளிப்படுகிறது.

R.Puratchimani said...


//UNMAIKAL said...
PART 2. முகலாய மன்னர்களின் நீதி

ஷெர்ஷா://



இதுக்குதான் வரலாற்றை ஒழுங்க படிக்கனும் . ஷெர்ஷா இந்த ஆளு முகலாய மன்ன ஹுமாயுன ஓட ஓட விரட்டினான்.

இவர் இன்னும் கொஞ்ச காலம் உயிர் வாழ்ந்திருந்தால் முகலாய வம்சமே அழிந்து போயிருக்கும்.

அக்பர் நல்லாட்சி புரிய இவரு காரணம்னு சொல்றாங்க.

இவர இசுலாமியர்னு சொல்லலாம் தப்பில்லை.


இவர் நல்லாட்சி புரிந்தார் என்றுதான் பள்ளி புத்தகம் சொல்கிறது.

ராவணன் said...

ஒரு படம்....வேண்டாம் ஒரு கார்ட்டூனைப் போட்டு உங்களை டான்ஸ் ஆடவைக்கும் யூதர்களிடம் உங்கள் வீரத்தைக் காட்டுங்கள்.

இந்தியாவில் குண்டு வைத்து அப்பாவிகளைக் கொல்வதில் என்ன வீரம் உள்ளது?

R.Puratchimani said...

அஞ்சா சிங்கம் said...
//முகமது நபிக்கும், அலாவுதீன் கில்ஜிக்கும் , மரணத்தில் ஒரு ஒற்றுமை இருப்பது போல் படுகிறது ...நீங்களே உங்கள் வரலாறை சொல்லிவிட்டால் நல்லா இருக்கும் .................ஏனென்றால் நாங்கள் எல்லாம் தவறாக கற்ப்பிக்க பட்டவர்கள் ........முஸ்லீம் மன்னர்கள் நல்லவர்கள் .அவர்கள் யாரையும் கொலை செய்ய வில்லை .. இவர்களாக போயி அவர்களின் வாளை கழுத்தால் தாக்கி இறந்து விட்டால் அதற்க்கு அவர்கள் எப்படி பொறுப்பு ................?
யாரையும் கற்பழிக்கவில்லை அவர்களாக .........................(வேண்டாம் ) எப்படி பாய்ன்ட் எடுத்து குடுக்குறேன் .அடுத்தமுறை பதிவு எழுத பயன்படும் ...//

பாஸ் சீக்கிரமா பதிவு போடுங்க ஆர்வமா இருக்கேன்

naren said...

நண்பர் சுவனப்பிரியன்,

கலக்கள் பதிவுகள். ))))

நல்லவர்களை கெட்டவர்களாக்குவதும், கெட்டவர்களை நல்லவர்களாக்குவதும்--- சரித்தரத்தின் சரித்திரம்.

அடியெனும் சில கெட்டவர்களை நல்லவர்களாக்கும் சரித்தரத்தை எழுத முயற்சிக்கிறேன்.

நன்றி.

ராஜ நடராஜன் said...

சகோ.சுவனப்பிரியன்!வரலாற்றையும் தொடுங்க.காரணம் வரலாற்றிலும் நிறைய ஓட்டைகள் இருக்கின்றன.பதிவுகள்,பின்னூட்டங்கள் மூலம் அதனையும் கொஞ்சம் சரி செய்ய முயற்சிப்போம்.

இஸ்லாமிய படையெடுப்புக்கு முன்பிருந்த அரசாட்சி முறையையும் சேர்த்தே இஸ்லாமிய ஆட்சிமுறையில் ஆவணப்படுத்துதல்,சட்டமயமாக்குதல் என்பவை நிகழ்ந்தன.அதனை பிரிட்டிஷ்காரர்கள் இன்னும் சிறப்பாக ஆவணப்படுத்தியதின் எச்சமே இப்போதைய இந்திய சட்டங்கள்.சுதந்திர இந்தியாவின் சட்ட மாற்றங்கள் என இந்திய சட்டங்கள் ஒரு தொடர்கதையே.

போர் குறித்த ஒரே வார்த்தை ரத்தம் சிந்துதல்.இதில் மாலிக்காபூர் என்ன,அசொக சக்ரவர்த்தி என்ன?ரத்தத்தின் நிறம் சிவப்பு.

suvanappiriyan said...

சகோ ராஜ நடராஜன்!

//இஸ்லாமிய படையெடுப்புக்கு முன்பிருந்த அரசாட்சி முறையையும் சேர்த்தே இஸ்லாமிய ஆட்சிமுறையில் ஆவணப்படுத்துதல்,சட்டமயமாக்குதல் என்பவை நிகழ்ந்தன.அதனை பிரிட்டிஷ்காரர்கள் இன்னும் சிறப்பாக ஆவணப்படுத்தியதின் எச்சமே இப்போதைய இந்திய சட்டங்கள்.சுதந்திர இந்தியாவின் சட்ட மாற்றங்கள் என இந்திய சட்டங்கள் ஒரு தொடர்கதையே.

போர் குறித்த ஒரே வார்த்தை ரத்தம் சிந்துதல்.இதில் மாலிக்காபூர் என்ன,அசொக சக்ரவர்த்தி என்ன?ரத்தத்தின் நிறம் சிவப்பு.//

அந்த காலத்தில் எல்லா மன்னர்களுமே போரில் தங்கள் மக்களை ஈடுபடுத்தி சிரமத்துக்கு உள்ளாக்கினார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. இதில் முஸ்லிம்களை மட்டும் பல பொய்க் கதைகளை புனைந்து அதனை வரலாறாக நம் பிள்ளைகளுக்கு கொடுப்பதை வெளிக் கொணர்வதே இந்த பதிவின் நோக்கம்.

suvanappiriyan said...

நண்பர் நரேன்!

//நல்லவர்களை கெட்டவர்களாக்குவதும், கெட்டவர்களை நல்லவர்களாக்குவதும்--- சரித்தரத்தின் சரித்திரம்.

அடியெனும் சில கெட்டவர்களை நல்லவர்களாக்கும் சரித்தரத்தை எழுத முயற்சிக்கிறேன்.//

எழுதுங்கள். தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சலாம் சகோ.சுவனப்பிரியன்,
உண்மையிலேயே இன்றுதான் அலாவுதீன் கில்ஜி பற்றியும் பிரோஸ் ஷா துக்ளக் பற்றியும் இவ்வளவு விஷயங்கள் அறிந்து கொண்டேன். பரணி, அஃபிஃப், அருணன் இவர்களுடன் உங்கள் பணியும் மாபெரும் மகத்துவமிக்கது சகோ.சுவனப்பிரியன். மிகவும் நன்றி சகோ.

அலாவுதீன் கில்ஜி-ஃபிரோஸ் ஷா துக்ளக் பற்றி இவ்வளவு செய்திகள் எழுதி இருக்கிறீர்களே... அதைப்பற்றி எல்லாம் ஏதும் சொல்லாமல், இங்கே சிலர்... மனம்போன போக்கில் மதி இழந்து ஏதோதோ உளறுவதை பார்த்தால்... அவர்கள் வயித்தெரிச்சல்... அவர்களின் காழ்ப்புணர்வு வார்த்தைகளில் அப்படியே தெரிகிறது. அல்லாஹ் இவர்களுக்கு நல்ல புத்தியை தரட்டுமாக..!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.உண்மைகள்,
தங்களுக்கும் மிகவும் நன்றி சகோ. ஏகப்பட்ட விஷயங்களை அளித்துள்ளீர்கள். ஒவ்வொன்றையும் தனித்தனி பதிவாக இடலாம். தங்கள் பனி தொடர வாழ்த்துகிறேன்.

Anonymous said...

//உங்களைப்போன்றவர்களால் தான் இஸ்லாமியர்கள் மீது மாற்று மதத்தினர் நட்பு பாராட்டாமல் ஒதுக்குவது. //

Exactly what I wanted to say.

Islam and parpaneeyam to be eradicated from this earth for betterment of India. Both of them are parasites.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அசோகர் எப்படி ஆட்சிக்கு வந்தார்...
என்றும்...

அப்புறம் புத்த மதத்தை தழுவதற்கு முன்னர் வரை, என்னவெல்லாம் அசோகர் செய்தார்... என்றும் அஞ்சா சிங்கம் விளக்கினால்...

எனக்கு ஏன் இப்படி சிரிப்பு சிரிப்பு சிரிப்பா வருது...?

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

///16 முறை கஜினி எப்படி உயிர்பிச்சையுடன் ஓடிப் போனான் என்றும் தெரிந்து கொள்ள ஆவல்///

/////ஒரு படையெடுப்பை குறைச்சுபுட்டீங்களே! மொத்தம் 17/////

///நான் தெளிவாகத்தான் சொல்லி இருக்கிறேன், 16 முறை அவனை உயிரோடு விட்டதால் தான் 17 ஆம் முறை அவனால் மீண்டும் உள்ளே வந்து அள்ளிச் செல்ல முடிந்திருக்கிறது///

----அட...!
அப்படின்னா அவனை 17 -வது முறை கொன்னுட்டாங்களா...! அதுதான் அவன் 18 வது தடவை வராததுக்கு காரணமா..?

அப்படிபோடு..! இப்போதான்யா நமக்கு வரலாறு புரியுது..!

(முகங்குப்புற மண்ணில் விழுந்தாலும் மீசையில் மண்ணே ஓட்டலைங்க்கிற 'வீர வரலாற' பத்தி சொன்னேன்..! ஹோய்..ஹோய்..ஹோய்...)

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.அஞ்சாசிங்கம்....

////ஐயோ ஐயோ இதுக்கு என்னத்தை சொல்றது இது தெரிஞ்சி செய்யிறதா இல்லை தெரியாமல் செய்யுதானே புரிய மாட்டுது . எங்கேயாவது காப்பி பண்ண வேண்டியது . அதை அப்படியே பேஸ்ட் பண்ணிட வேண்டியது . இது தான் இஸ்லாமிய நீதியாம் ..............பாருங்க மக்களே . யார் செய்த தப்புக்கு யாருக்கு தண்டனை என்று ... இளவரசன் மனைவி என்னய்யா பாவம் செய்தால் ..? தப்பு செய்தது இளவரசன் அவனுக்கு நறுக்கி விட்டால் அது தண்டனை அதை விட்டு அப்பாவி பெண்ணை நிர்வாண படுத்தி பாப்பாராம் .................உங்களுக்கு மட்டும் இப்படி கோணலாக மட்டுமே யோசிக்க தோன்றுமோ ..?////-----சபாஷ்..! கைகொடுங்க சகோ..! இப்படித்தான் இருக்க வேண்டும்..! உங்களை நான் மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன்..! மிகச்சிறந்த பதில்..! நன்றி சகோ..! நான் சொல்ல நினைத்த கருத்தை நீங்கள் உங்கள் பாணியில் சொல்லி விட்டீர்கள்..!

அப்புறம்... அதை எழுதியவரே... அதை கிண்டல் பண்ணி இருக்கார் பாருங்க... கவனிக்கலையா..?

//(மனு நீதி கொன்ற சோழன் கதைபோல)//---அது எவ்வளவு பெரிய மாபெரும் தவறான தீர்ப்பு என்று..! :-)

எனிவே... இதுபோல உங்களிடம் இருந்து ஆக்கப்பூர்வமான கமெண்டுகள் இன்னும் வரவேற்க்கப்படுகின்றன..!

suvanappiriyan said...

சலாம் சகோ ஆஷிக்!

//அலாவுதீன் கில்ஜி-ஃபிரோஸ் ஷா துக்ளக் பற்றி இவ்வளவு செய்திகள் எழுதி இருக்கிறீர்களே... அதைப்பற்றி எல்லாம் ஏதும் சொல்லாமல், இங்கே சிலர்... மனம்போன போக்கில் மதி இழந்து ஏதோதோ உளறுவதை பார்த்தால்... அவர்கள் வயித்தெரிச்சல்... அவர்களின் காழ்ப்புணர்வு வார்த்தைகளில் அப்படியே தெரிகிறது. அல்லாஹ் இவர்களுக்கு நல்ல புத்தியை தரட்டுமாக..! //

பதிவை படிக்கும் நடுநிலையாளர்கள் எது உண்மை என்பதை விளங்கிக் கொள்வார்கள் அல்லவா? அது போதும் நமக்கு.

Anisha Yunus said...

//பரணி சொன்ன ஆலோசனையை துக்ளக் கேட்டானா இல்லையா என்பதைவிட இப்படி கேட்டதும், அது பதிவாகியிருப்பதும் அவர்களது சரித்திர உணர்வுக்கு ஒரு தக்க சாட்சியம். சுல்தான்கள் காலத்திலேயே இப்படி என்றால் நமது காலத்திற்கு சரித்திர உணர்வு எவ்வளவு அவசியம் என்பதைச் சொல்லத்தேவையில்லை. நவீன காலத்தின் குழந்தைகளாகிய நமக்கு அவர்களைக் காட்டிலும் நெடிய வரலாறு உண்டு. அதில் எத்தனையோ படிப்பினைகள் படிந்திருக்கின்றன. குடிமக்களைவிட ஆட்சியாளர்கள் அதைக் கற்பார்களேயானால் தேசத்திற்கு எவ்வளவோ நல்லது செய்ய முடியும்.
//
Hats off!!!!!!
உண்மையில் எனக்குமே பல விஷயங்கள் இப்படி படித்துதான் தெரிந்து கொள்கிறேன்... என் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தார் என்பதற்காகக் கூட அலாவுதீன் கில்ஜி, துக்ளக் ஆகியோரின் சரித்திரத்தை தேடி படிக்ககூட விரும்பாதிருந்தேன் நான்.... இப்பொழுது சில நாட்கள் முன்பு சகோ.முஹம்மது ஆஷிக்கின் சுதந்திரத்தைப் பற்றிய பதிவிலிருந்து கண்ணீர் வராவதுதான் குறையாக உள்ளது. அந்தளவு சரித்திரத்தில் பொய்கள் கலந்து விட்டிருக்கின்றன அதுவும் அந்தக் காலத்திலிருந்தே என நினைக்கையில்..... சுப்ஹானல்லாஹ்.... வருத்தமே மிஞ்சுகிறது...!

//இனி வரும் காலத்திலாவது புதைக்கப்பட்ட வரலாறுகளை வெளிக் கொண்டு வரும் பணியை செய்வதற்கு நல்லோர்கள் முன் வர வேண்டும்.//
இன்ஷா அல்லாஹ்... இதுவே என் எண்ணமும்.... அல்லாஹ் இதைக் கபூலாக்கித் தருவானாக. ஆமீன்.

பகிர்ந்தமைக்கு நன்றி பாய்.
வஸ் ஸலாம்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

90 சதவீத இஸ்லாமியர்கள் இந்துக்கள்னு சொல்லிட்டு, அப்புரமா இந்தியர்கள் மீது படை எடுத்த இஸ்லாமியர்களின் புகழ் பாடுறிங்க , இப்போ இந்துக்களின் மீதான காழ்புணர்ச்சியை சொல்லுறிங்களா,அல்லது இந்தியா என்ற தேசத்தின் மீதான காழ்ப்புணர்ச்சியை சொல்லுறிங்களா?

ஆக மொத்தம் இந்தியா, இந்து ஆகியோரின் மீதான காழ்ப்புணர்ச்சியை , இந்து,இந்தியனாக இருந்து மதம் மாறியதால் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாமா?

என்னதான் மதம் என்றாலும் , நாட்டை கேவலப்படுத்த துணிவதை எப்படி எடுத்துக்கொள்வது,ஆக மொத்தம் தாய் நாடு என்ற கருத்தாக்கம் எல்லாம் உங்களூக்கு இல்லை.

ஆப்கானில் இருந்து வந்தவன் எப்படி கொள்ளை அடித்தான், அப்போ எதுவும் செய்ல்லையே என இந்தியர்களாக இருப்பவர்களைப்பார்த்து நீங்கள் பெருமையாக சொல்லிக்கொள்வதன் மூலம் நீங்கள் எல்லாம் இந்தியர்கள் அல்ல இஸ்லாமியர்கள் என தெளிவாக சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா?

உங்களை எல்லாம் பேசவிட்டு வேடிக்கை பார்த்ததே உங்களின் உள் மனதில் என்ன இருக்கு என தெரிந்து கொள்ளவே. சிட்டிசன், நீங்கள் எல்லாம் தெளிவாக சொல்ல வருவது என்ன என மக்களுக்கு புரிந்து இருக்கும், இனிமேல் உங்களிடம் பேசும் போது அன்னியனிடம் பேசுவது போல பேச வேண்டும் என மக்கள் புரிந்து இருப்பார்கள்.

வருங்காலத்தில் அரபு தேசத்தில்(இஸ்லாமிய) தமிழன் சிறையில் காப்பாற்றுங்கள் என சொல்லும் போது கை கொட்டி சிரிப்பார்கள் என்பதை புரிந்து கொள்ளவும்.

suvanappiriyan said...

வவ்வால்!

//ஆக மொத்தம் இந்தியா, இந்து ஆகியோரின் மீதான காழ்ப்புணர்ச்சியை , இந்து,இந்தியனாக இருந்து மதம் மாறியதால் காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாமா?//

முஸ்லிம்களின் நாட்டுப் பற்றை எவரிடமும் சென்று நிரூபிக்க அவசியமில்லை. அது இந்தியனாக பிறந்த ஒவ்வொரு முஸ்லிமின் ரத்தத்திலும் ஓடிக் கொண்டிருக்கும். பெரும்பான்மையான இந்திய மக்களும் இதை அறிந்தே வைத்துள்ளனர்.

இந்த பதிவு சொல்ல வருவது என்ன? அன்றைய அரசர்கள் எல்லேர்ரும் கொள்ளையடிப்பதில் எவருக்கும் சளைத்தவர்கள் இல்லை. அப்படி இருக்கும் போது முஸ்லிம்களை மட்டும் இந்த நாட்டை கொள்ளையடித்து சென்றனர் என்று வரலாறு முழுக்க தனித்து சொல்லப்படுவது ஏன்? முஸ்லிம் மன்னர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? இதைத்தான் நடுநிலையாளர்கள் கேட்கின்றனர். நமது நாட்டு வரலாற்று நூல்கள் திருத்தப்பட வேண்டும். உண்மைகளை மாணவர்களுக்கு சொல்ல வேண்டும் என்பதே இந்த பதிவு வைக்கும் கொரிக்கை.

suvanappiriyan said...

சகோ அன்னு!

//உண்மையில் எனக்குமே பல விஷயங்கள் இப்படி படித்துதான் தெரிந்து கொள்கிறேன்... என் சமூகத்தை சேர்ந்தவராக இருந்தார் என்பதற்காகக் கூட அலாவுதீன் கில்ஜி, துக்ளக் ஆகியோரின் சரித்திரத்தை தேடி படிக்ககூட விரும்பாதிருந்தேன் நான்.... இப்பொழுது சில நாட்கள் முன்பு சகோ.முஹம்மது ஆஷிக்கின் சுதந்திரத்தைப் பற்றிய பதிவிலிருந்து கண்ணீர் வராவதுதான் குறையாக உள்ளது. அந்தளவு சரித்திரத்தில் பொய்கள் கலந்து விட்டிருக்கின்றன அதுவும் அந்தக் காலத்திலிருந்தே என நினைக்கையில்..... சுப்ஹானல்லாஹ்.... வருத்தமே மிஞ்சுகிறது...!//

இத்தனை காலமும் இதனை கண்ட கொள்ளாத நம்மவர்களின் அலட்சியப் போக்கையும் இங்கு கவனிக்க வேண்டும். இந்திய முஸ்லிம்களை சுற்றி எந்த அளவு நாச வேலைகள் 50 வருடங்களாக பின்னப்பட்டு வருகிறது என்பதை அறியாதவர்களாகவே பெருந்தன்மையாக இருந்திருக்கிறோம். வருங்காலத்தில் இந்த வரலாறுகள் திருத்தப்பட்டு உண்மை செய்திகள் மாணவர்களை அடையும் காலம் கண்டிப்பாக வரும். அதற்காக பிரார்த்திப்போம்.

Unknown said...

Mr Ravana,

///ஒரு படம்....வேண்டாம் ஒரு கார்ட்டூனைப் போட்டு உங்களை டான்ஸ் ஆடவைக்கும் யூதர்களிடம் உங்கள் வீரத்தைக் காட்டுங்கள்.///


ஓர் ஓவியம் வரைந்ததற்கே, இந்தியா முழுவதும் காவடி ஆட்டம் ஆடி, வரைந்தவரை துரத்தி விட்ட இந்துக்களின் வீரத்தைப் பார்த்து மெய்சிலிர்க்கிறேன்.


///இந்தியாவில் குண்டு வைத்து அப்பாவிகளைக் கொல்வதில் என்ன வீரம் உள்ளது?///


யார் குண்டு வைக்கிறார்கள், யார் அப்பாவிகளைக் கொல்கிறார்கள் என்றறிய இந்திய ஊடகங்களை நாடாது, றோவிடம் கேட்டுப் பாருங்கள்.

அவர்களுக்குத் தெரியும், ஆனால் விடை கிடைக்காது!

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ சகோ.வவ்வால்....

உங்கள் மனதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. காழ்ப்புணர்வோடு அப்பட்டமாக புளுகப்பட்ட பொய்மூட்டைகளை ஒருவர் ஆதாரபூர்வமான பதிவுகள் கொண்டு அழித்தொழிக்கும்போது... ஏற்படும் ஆற்றாமை, செயலற்ற கையறுநிலை... உண்மையிலேயே பித்து பிடித்தது போலத்தான் இருக்கும்.

அப்போது, அதை நிரூபித்தவரையும் அவருக்கு ஆதரவு அளிப்போரையும் கண்டால் அந்நியனாகத்தான் தெரியும். சந்தேகமே இல்லை.

ஆனால், மெய்யான நடுநிலை சமநோக்கு உணர்வோடு நீங்கள் உணர்ந்து... உண்மையின் பக்கம் உங்கள் கருத்தை மாற்றிக்கொண்டால்... இன்ஷாஅல்லாஹ்... நாங்கள் உங்கள் சகோதரனாக தெரிவோம்.

அப்புறம் உங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்..!

1947 ஆகஸ்டு 15 க்கு பின்னர்தான் ரிபப்ளிக் ஆப் இந்தியா என்ற நாடு அதிகாரபூர்வமானது..!

அப்போது, படேல்-ராஜாஜி போன்ற ஃபாசிஸ்டுகள், முஸ்லிம் இந்தியர்களை பாகிஸ்தானுக்கு தொரத்த வேண்டி... கராச்சிக்கு விட்ட இலவச ரயில்ககளில், ஏறாமல் இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் 'இதுதான் எனது தேசம்' என்று தங்கள் சுதேசியத்தை தேசப்பற்றை நிரூபித்தவர்கள்.

எனவே, நாங்கள் தான் தேசபக்தியை நிரூபிக்காத முஸ்லீம் அல்லாத மற்றவரை அந்நியனாக பார்க்க வேண்டும். ஆனாலும், முஸ்லிம்கள் அப்படி ஒருபோதும் எண்ணியதே இல்லை..!

உங்களுக்கு இறைவன் அறிவொளி தந்து நல்லருள் புரிய இறைஞ்சுகிறேன்.

வவ்வால் said...

ஆஷிக்கு,

கொடுத்த காசுக்கு மேல கூவ வேண்டாம்,

இதே போல ராபர்ட் கிளைவ், டல்ஹவுசி, ரிப்பன் பிரபு எல்லாம் இந்தியாவுக்கு பாடுப்பட்டாங்கன்னு பெருமிதமாக எழுத வேண்டியது தானே?

பெண் பித்து பிடித்து படை எடுத்து சண்டை போட்ட அலாவுதின் கில்ஜி எல்லாம் உத்தமராக காட்டும் போது சந்தேகம் வரத்தானே செய்யும்.

மேலும் இஸ்லாம் என்ற மதத்தினை பெருமையாக சொல்லிக்கொள்ள வேண்டியது தானே அதை விட்டு அவர்கள் படை எடுத்து இந்துஸ்தானை அடிமையாக வைத்து , ஒருங்கிணைத்து முன்னேற வைத்தார்கள், யாரையும் கொல்லவில்லை என ஏன் விளம்பரம், கஜினி முகமது தான் உன் பாட்டனா அப்போ?


உங்களை தானகா வெளிப்படுத்திக்கொள்ள வைக்கவே கிண்டிவிட்டேன், நீங்களும் அடுத்து அடுத்து இஸ்லாமிய ஆக்ரமிப்பாளர்கலை புகழ்ந்து பதிவைப்போட்டு சாயம் வெளுத்து போனது தான் மிச்சம்.

சவுதி அரேபியா அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்குன்னு சொன்னா நீங்க எல்லாம் கோவப்படுவதும் ஏன்னு எனக்கு புரியலை :-))

//1947 ஆகஸ்டு 15 க்கு பின்னர்தான் ரிபப்ளிக் ஆப் இந்தியா என்ற நாடு அதிகாரபூர்வமானது..!
//

ரிபப்ளிக் என்றால் என்னனு அகராதியில் தேடிப்பாரும், என்ன இருந்தாலும் படிப்புக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை தானே :-))

"In India, Republic Day commemorates the date on which the Constitution of India came into force replacing the Government of India Act 1935 as the governing document of India on 26 January 1950.[1]"

source:http://en.wikipedia.org/wiki/Republic_Day_(India)

இந்தியாவில ரிபப்ளிக் டே, இன்டிபெண்டன்ஸ் டே னு ரெண்டு இருக்காம், பாவம் இந்திய வரலாற்றினை விட அரேபிய வரலாற்ரையே அதிகம் படிப்பாரா இருக்கும் :-))

நன்னயம் said...

"ஓர் ஓவியம் வரைந்ததற்கே" ஒரு ஓவியமா? நீர் ஒரு முட்டாள் என்பதை தெளிவாக காட்டியுள்ளீர். ஒரு மதத்தின் கடவுளை நிர்வாணமா வரைந்திருக்கிறார். (அதுவும் பெண் தெய்வம்) ஆனால் அதைக் கூட பல இந்துக்கள் கருத்து சுதந்திரம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இதுவே இஸ்லாமில் நடந்திருந்தால் வரைந்தவன் தலை இருந்திருக்காது. ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஹுசைனின் செயலை ஆதரிக்கவில்லை. அதையும் இதில் குறிப்பிடுகிறேன். ஆனால் விதிவிலக்காக இங்கு ஒருவர் ஹுசைனுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்திருக்கிறார்

நன்னயம் said...

"ஓர் ஓவியம் வரைந்ததற்கே" ஒரு ஓவியமா? நீர் ஒரு முட்டாள் என்பதை தெளிவாக காட்டியுள்ளீர். ஒரு மதத்தின் கடவுளை நிர்வாணமா வரைந்திருக்கிறார். (அதுவும் பெண் தெய்வம்) ஆனால் அதைக் கூட பல இந்துக்கள் கருத்து சுதந்திரம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இதுவே இஸ்லாமில் நடந்திருந்தால் வரைந்தவன் தலை இருந்திருக்காது. ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஹுசைனின் செயலை ஆதரிக்கவில்லை. அதையும் இதில் குறிப்பிடுகிறேன். ஆனால் விதிவிலக்காக இங்கு ஒருவர் ஹுசைனுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்திருக்கிறார்

ஜீவன்சிவம் said...

அலாவுதீன் மட்டுமல்ல இன்னும் நிறைய இசுலாமிய மன்னர்களின் ஆட்சி முறை, வாழ்க்கை நம்ப முடியாத அளவிற்கு
மிக சிறப்பாக இருந்திருகிறது என்பது வரலாறு. அது நம் ஆட்சியாளர்களால் மூடி மறைக்கப்பது நம் துரதிர்ஷ்டம்.

ஆனால் இசுலாமிய மன்னர்களால் தான் ஒன்றுபட்ட இந்திய உருவானது என்பதில் நமக்கு பெருமைபட்டுகொள்ள ஒன்றும் இல்லை. இன்னும் சொல்ல போனால் இன்றைய அத்தனை பிரச்சனைக்கும் அன்றே பிள்ளையார் சுழி போடபட்டிருகிறது என்பது தான் உண்மை. இசுலாமிய படையெடுப்புக்கு முன் இந்திய ராஜ்யங்கள் சீரும் சிறப்புமாகதான் இருந்திருக்கும். இல்லையென்றால் அவ்வளவு தொலைவில் இருந்து நம்மை கொள்ளையடிக்க வருவானேன். (இசுலாமியர்கள் முதன்முதலில் இங்கு வந்தது கொள்ளையடித்து செல்லத்தானே..?)

அஞ்சா சிங்கம் said...

முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

அசோகர் எப்படி ஆட்சிக்கு வந்தார்...
என்றும்...

அப்புறம் புத்த மதத்தை தழுவதற்கு முன்னர் வரை, என்னவெல்லாம் அசோகர் செய்தார்... என்றும் அஞ்சா சிங்கம் விளக்கினால்...

எனக்கு ஏன் இப்படி சிரிப்பு சிரிப்பு சிரிப்பா வருது...?////////////////////////////////////
///////////////////////////////////////////
சிரிப்பு வருதா ..........? தர்காவில் போயி தாயத்து கட்டினால் சரியாகி விடும் ...............:-)

முஸ்லீம்கள் வருவதற்கு முன் இந்தியா என்ற நாடு இருக்கவில்லை ...என்று உங்கள் குடுகுடுப்பை சாமியார் சுபி சொன்னதற்க்குதான் தான் ...................................இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே இருந்த மௌரிய பேரரசின் பரப்பளவை பார்க்க சொன்னேன் ....................அதற்க்கு பதில் சொல்லாமல் என்னென்னவோ சமாளித்து விட்டு அவர் எஸ்கேப் ஆகிட்டாரு .................மௌரிய பேரரசின் காலத்தில் இருந்ததை விட முகலாயர்கள் குறைந்த அளவு பரப்பயே ஆட்சி செய்தார்கள்..கோணலா இருந்தாலும் அது என்னோடதாக்கும் (சிம்ரன் சொன்னது நினைவுக்கு வருது )

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

// முஸ்லிம் மன்னர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பல ஆக்கபூர்வமான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியதை மறைக்க வேண்டிய அவசியம் என்ன? //

கஜினி முகமது ,அலாவுதீன் கில்ஜி ,அவுரங்க சீப் எல்லாம் நல்லவர்னு எழுதும் நீங்கள் அக்பர் கெட்டவர்னு எழுத வேண்டியத்ன் காரணம் என்ன?

அவர் நல்லவரா,கெட்டவரா என்பதற்கு மதப்பிடிப்பினை அளவுகோல் ஆக வைக்க வேண்டிய அவசியம் என்ன?

வெள்ளைக்காரர்களில் கொடுமை செய்தது ,கொள்ளை அடித்து ஊருக்கு கொண்டு சென்றது எல்லாமும் தான் வரலாற்றில் சொல்லப்பட்டு இருக்கு. நீங்கள் வரலாற்றினை படிக்கவில்லை எனில் யார் பொறுப்பு?

மேலும் அடிமைப்படுத்தி ஆண்டுவிட்டு போனவர்களை அதிலும் இஸ்லாமிய மன்னர்களை மட்டும் பெருமைப்படுத்தி வரலாறு எழுத வேண்டும் என துடிப்பது ஏன்?

இன்னர் நம்மை அடக்கி ஆண்டார்கள் என பெருமைப்பட்டுக்கொள்ல என்ன இருக்கு.

மேலும் செய்த நன்மை, தீமைகளின் சதவீதத்தின் அடிப்படையில் தான் கடந்த கால ஆட்சியாளர்களை வகைப்படுத்தி அடையாளப்படுத்த முடியும்.

இஸ்லாமிய மன்னர்கள் செய்ததை விட ,வெள்ளை ஆட்சியாளர்கள் நாட்டில் நிர்வாகம் சிறப்பாக செய்துவிட்டு போனதால் அதனையும் குறிப்பிட வேண்டும் தானே.

மேலும் வெள்ளைக்காரன் இந்தியாவை எப்படி பிடித்தான்? அவனுக்கு இங்கு வரி வசூலிக்கும் உரிமை எப்படி வந்தது?

அப்போது இருந்த நவாப்புகளும், சுல்தான்களும் தானே வெள்ளைக்காரனுக்கு பட்டயம் எழுதி கொடுத்தது?

ஆர்காட் நவாப் முகமது அலி தமிழகத்தில் வரி வசூலிக்கும் உரிமையை கம்பெனியாருக்கு கொடுத்தது என்பது வரலாறு.

வெள்ளைக்காரனுக்கு அடிமை சேவகம் செய்ய வழிக்கொடுத்ததும் இஸ்லாமிய ஆட்சியாளர்கள் தானே அதையும் சொல்லுங்க :-))

எனவே இஸ்லாமிய ,ஆட்சியாளரோ, வெள்ளையரோ பெருமையாக சொல்லிக்கொண்டு இங்கே யாரும் இல்லை, ஆனால் இஸ்லாமியர்களில் உங்களை போல சிலர் மட்டும் இஸ்லாமிய ஆட்சியாளர்களை பெருமைப்படுத்தி மகிழ மதம் மட்டுமே காரணமாக இருக்கிறது என்றால் , தாய்நாடு , சொந்த மண் என்ற கருத்தாக்கம் மனதில் இல்லை என்று தானே நினைக்க வேண்டியதாக இருக்கிறது.

அலெக்சாண்டருக்கு அரபிய தீபகற்ப நாடுகள், ஈரான்,இராக் எல்லாம் அடிமையாக இருந்தது , எனவே இப்போது அங்குள்ளவர்கள் எல்லாம் அதனை பெருமையாக நினைவு கூறுகிறார்களா?

இப்போதைய ஆஃப்கானை ஹர்ஷர் எல்லாம் ஆண்டு இருக்கிறார், ,ஆப்கானியர்கள் ஹர்ஷருக்கு கீழ் வாழ்ந்ததை பெருமையாக வரலாறு என நினைவு கூர்கிறார்களா?

இந்தியாவில் இஸ்லாமிய மன்னர்கள் செய்த பச்சை படுகொலைகள், அடிமை வியாபாரம் எல்லாம் மறைக்கப்பட்டே இந்திய வரலாறு பள்ளிகளில் சொல்லப்படுகிறது.

அதே சமயம் வாரன் ஹேஸ்டிங்க் அடிமை வியாபாரம் செய்தார் என குற்றம் சாட்டப்பட்டு ,இங்கிலாந்தில் வழக்கு நடந்தது என்ற வரலாற்றினை கல்லூரி பாடப்புத்தகத்தில் காணலாம். ஆதாரம் சென்னை பல்கலை பி.ஏ,எம்.ஏ , வரலாறு புத்தகங்கள்.

நான் போட்டி தேர்வுகளுக்கு (சிவில் சர்வீஸ், டிஎன்பிஸ்சி)வரலாற்றினை விருப்ப பாடமாக எடுத்து படித்ததால் ஓரளவுக்கு வரலாறு தெரியும்.

மறைக்கப்பட்ட வரலாறு, பாடப்புத்தகத்தில் உள்ள வரலாறு என இரண்டும் படித்துள்ளேன், நீங்கள் தான் வரலாற்று திரிபு செய்துக்கொண்டுள்ளீர்கள்.

Unknown said...

Mr Ethicalist,


///நீர் ஒரு முட்டாள் என்பதை தெளிவாக காட்டியுள்ளீர். ஒரு மதத்தின் கடவுளை நிர்வாணமா வரைந்திருக்கிறார். (அதுவும் பெண் தெய்வம்) ஆனால் அதைக் கூட பல இந்துக்கள் கருத்து சுதந்திரம் என்று கூறியிருந்தார்கள்.///

இந்துக்கள் கருத்துச் சுதந்திரம் என்று சொன்னதாக நீங்கள் பிதற்றுகிறீர்கள்.

கருத்துச் சுதந்திரம் என்று வாய் கிழியக் கதறும் இந்திய ஊடகங்கள்கூட, காவடியாட்டம் ஆடிய கூட்டத்தோடு சேர்ந்து ஊளையிட்டன.

வரைந்தவர், இன்னொரு நாட்டுக் குடிமகனாக உயிரைவிட்டபின், காவடியாட்டம் ஆடிய கூட்டத்தோடு ஊளையிட்ட ஊடகங்கள், இரங்கல் துதி பாடி கருத்துச் சுதந்திரத்தைப்பற்றி, சிலாகித்திருந்தன.

///ஆனால் இதுவே இஸ்லாமில் நடந்திருந்தால் வரைந்தவன் தலை இருந்திருக்காது.///

அந்த முஸ்லிம் பெயர்தாங்கி ஓவியர், நாட்டை விட்டு ஏனாம் ஓடினார்? உங்களிடம் அவர் கிடைத்திருந்தால் அவர் தலையென்ன, உயிரோடே கொளுத்தி இருப்பீர்கள். இது இந்தியாவில் சகஜம்தானே!

ஒருவரின் உண்மையான உருவத்தை வரைந்தால், முஸ்லிம்கள் என்ன செய்யப் போகிறார்கள்?

கற்பனை வடிவத்தில், கேவலமாக வரையும்போது யாரும் பொறுமை காக்க மாட்டார்கள்தான்!

///ஆனால் பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஹுசைனின் செயலை ஆதரிக்கவில்லை. அதையும் இதில் குறிப்பிடுகிறேன்.///

வரைந்தவரின் கருத்துச் சுதந்திரத்தை, இஸ்லாமியர்கள் ஆதரிக்கவில்லை என்றும் ஒரு போடு போடுகிறீர்கள். இந்துக்கள் மட்டுந்தான் கருத்துச் சுதந்திரத்தை மதிப்பவர்களா?

///ஆனால் விதிவிலக்காக இங்கு ஒருவர் ஹுசைனுக்கு மறைமுக ஆதரவு தெரிவித்திருக்கிறார்///

வரைந்தவரின் செயல் கருத்துச் சுதந்திரம் என்று சொல்லும் இந்துக்களை புகழும் தாங்கள், அவரின் செயலுக்கு மறைமுக ஆதரவை (நீங்களாகவே சொல்லிக்கொள்ளும்) நான் தெரியப்படுத்தினால், சினம் கொள்வதன் அர்த்தம் என்ன?

Unknown said...

Hello suvana priyan. Ippo neega islaam pathi ealuthuriga ippo ungaluku eadhira sila per blog la ealudhuraga aavagaluku neega kettavan ungaluku aavaga kettavan. Innum 100 years kalichu unga blogs ah yaravadhu padicha? Sila per neega nallavar nu solluvaga sila per aavaga nallavar nu solluvaga appo yar thaan nallavar? Varalarum ippadi thaan mannan nu oruthan irundha aavana pidichavagalum irupaga pidikadhavagalum irupaga. Yaro ealudhunadhu vandhu solradha vida aadharathoda sonnalum aadhu unmai illa. Aadharam ellam aavaravar virupathuku thaan ippo ealuthuraga.

suvanappiriyan said...

அஞ்சா சிங்கம்!

//முஸ்லீம்கள் வருவதற்கு முன் இந்தியா என்ற நாடு இருக்கவில்லை ...என்று உங்கள் குடுகுடுப்பை சாமியார் சுபி சொன்னதற்க்குதான் தான் ...................................இஸ்லாம் தோன்றுவதற்கு முன்னரே இருந்த மௌரிய பேரரசின் பரப்பளவை பார்க்க சொன்னேன் ....................அதற்க்கு பதில் சொல்லாமல் என்னென்னவோ சமாளித்து விட்டு அவர் எஸ்கேப் ஆகிட்டாரு ...............//

அசோகர் ஸ்திரமாக ஆட்சி செய்திருந்தால் அந்நியர் இந்தியாவில் நுழைந்திருக்க முடியுமா? அசோகர் காலத்திலேயே அவரது கட்டுப்பாட்டிலிருந்து இந்தியா பல குறு மன்னர்களால் பிரிக்கப்பட்டு விட்டது. அவ்வாறு பிரிந்ததினாலேயே அந்நிய நாட்டவர் நம் நாட்டை வெகு இலகுவாக பிடிக்க முடிந்தது. அதிலும் முஸ்லிம்கள் 1000 வருடம் ஒரு அகண்ட பாரதத்தை ஆள்வதென்பது அவ்வளவு லேசான காரியம் அல்ல.

கொஞ்சம் குடுகுடுப்பையை ஓரமாக வைத்து விட்டு பொறுமையாக சிந்திக்கவும். :-)

Anonymous said...

அஞ்சா சிங்கம் said...

@வவ்வால்
/////மேலும் வெள்ளைக்காரன் இந்தியாவை எப்படி பிடித்தான்? அவனுக்கு இங்கு வரி வசூலிக்கும் உரிமை எப்படி வந்தது?///

என்ன அறிவு பூர்வமான கேள்வி எல்லாம் இங்க வந்து கேட்டுகிட்டு இருக்கீங்க . முதல் முதலில் இவர்களுக்கு அனுமதி கொடுத்தவர் பெயர் ஜஹாங்கீர் ...அதுவும் பரிசு பொருட்களுக்காக .அதை நாம் இப்போது லஞ்சம் என்று சொல்கிறோம் .
வெளிநாட்டு சாராயதிற்க்காக இந்தியாவை அடகு வைத்த மன்னன் ஒரு முஸ்லீம்தானே...?
இதற்க்கு முன்னர் அக்பர் காலத்தில் இதே கிழக்கிந்திய கம்பெனி வியாபார ஒப்பந்தம் போட முயன்ற பொது . சிறப்பு சலுகை எல்லாம் தரமுடியாது என்று அக்பர் திருப்பி அனுப்பிவிட்டார் .. சுபி சாமியார் சொல்றாரு அக்பர் கெட்டவர்ன்னு .

அஞ்சா சிங்கம் said...

@ சுபி அண்ணாச்சி

///////அசோகர் ஸ்திரமாக ஆட்சி செய்திருந்தால் அந்நியர் இந்தியாவில் நுழைந்திருக்க முடியுமா?////////

முஸ்லீம்கள் ஸ்திரமாக ஆட்சி செய்திருந்தால் வெள்ளையர்கள் இங்கு வந்திருக்க முடியுமா ..?
எந்த சாம்ராஜியதிர்க்கும் ஆரம்பம் முடிவு எல்லாம் உண்டு . மவுரிய பேரரசிற்கு முன்னாள் நந்த வம்சம் இருந்தது ...அதுவும் ஒரு பேரரசுதான் ..மவுரிய அரசின் காலம் , கி.மு.322 -185 ....ஏறதாழ 500 ஆண்டுகள் அதன் பின்பு சுங்க பேரரசு .......
சபாஷ் சுபி ஐயா உங்கள் கூற்றை நன்றாக மீண்டும் பார்க்கவும் .. நீங்கள் அந்நியர் என்று சொல்வது யாரை ..?
ஒவ்வொரு இடத்திற்கு ஏற்றார் மாதிரி கருத்து சொல்கிறீர்கள் ...உங்களை நாங்கள் அந்நியர் என்று சொன்னால் . இல்லை இல்லை நாங்கள் அந்நியர் இல்லை நாங்கள் தான் இந்தியாவை ஒன்று படுத்தினோம் என்கிறீர்கள் ...
அப்படி இல்லை ஏற்கனவே இங்கு பெரிய சாம்ராஜ்யம் இருந்தது என்று காட்டினால் அவர்கள் ஸ்திரமாக ஆளவில்லை நாங்கள் தான் ஸ்திரமாக ஆண்டோம் என்கிறீர்கள் ................சரி அதுவும் தவறு . வெள்ளையன் உங்களை தோற்கடித்து விட்டான் என்று கூறினால் அது யூத சதி என்று சொன்னாலும் சொல்வீர்கள் ........வெள்ளையன் கூடத்தான் ஸ்திரமாக ஆளவில்லை ..............என்ன சொல்ல வரீங்க நீங்க ஒரே குடுகுடுப்பை சத்தம் தான் பலமாக கேட்கிறது ......................

அஞ்சா சிங்கம் said...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
//////அப்புறம்... அதை எழுதியவரே... அதை கிண்டல் பண்ணி இருக்கார் பாருங்க... கவனிக்கலையா..?

//(மனு நீதி கொன்ற சோழன் கதைபோல)//---அது எவ்வளவு பெரிய மாபெரும் தவறான தீர்ப்பு என்று..! :-)
//////////////////////////////////////////////////////////////////////////////////

அப்படியா ஆச்சரியம்தான் ஆனால் என் கண்ணுக்கு இந்த வரி தெரிகிறதே

///////இஸ்லாம் சட்டவிதிகளின்படி தன் மகனுக்குத் தண்டனை தர வேண்டும் என்றான்.
அதாவது பதிலுக்கு பதில் (கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்பது போல்)....................//////

இப்படிதான் இஸ்லாம் சட்டவிதிகளை அவர் கிண்டல் செய்திருக்காரா ....?
முழு கருத்தை வைத்து விவாதம் பண்ணவும் ரெண்டு வரியை வைத்து வேண்டாம் ..பாவமாக இருக்கிறது ....................

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ அஞ்சாசிங்கம்,
அட அதாங்க...
இஸ்லாமிய சட்டத்தை ஒழுங்கா புரிஞ்சிக்காம கோமாளி மாதிரி ஒரு தீர்ப்பு சொல்லி இருக்காருன்னு இன்னொரு கோமாளியான மனுநீதி சோழனை சொல்லி காட்றாருன்னு சொல்ல வந்தேன்... ஸ்ஸ்ஸ்ஸ்... நான் உங்களை பாராட்டி எழுதினாலும் உங்களுக்கு பிடிக்காதா..? அவ்ளோ வெறுப்பா உங்களுக்கு முஸ்லிம்கள் மேலே..? திருந்துங்கப்பா.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

@ வௌவால்,

"எனக்கு எது சுதந்திர தினம் எது குடியரசு தினம் என்று தெரியாமல் இருக்கு. ஏன்னா நான் அரேபியா காரன். இந்தியன் இல்லை" ---இதைத்தானே பிலாசபி பதிவிலும் 'தமிழன் இல்லை' என்று சொன்னீர்..? இங்கே இந்தியர் இல்லைன்னு சொல்றீர். முஸ்லிம்களை வேற்று நாட்டவர் வேறு இனத்தவர் என்று சொல்வதில்தான் என்ன ஒரு கேவலமான கொலைவெறி உங்களுக்கெல்லாம்..! ச்சே..!

'இதுவரை தேசப்பற்றை நிரூபிக்காதவர்கள் நீங்கள்தானே' என்று நான் சொன்னதை கண்டு கொள்ளவே இல்லை.

"தேசப்பற்று எல்லாம் 1950 jan 26 க்கு அப்புறம் தான் பார்க்கணும்" என்று நீங்கள் சொல்வதை நான் ஏற்க முடியாது.

ஏனெனில், இந்திய சுதந்திரத்துக்கு பின்னர்தான் - 1947 aug 15 க்கு பிறகே ரிபப்ளிக் ஆப் இந்தியா என்ற மனப்பான்மை வந்தாச்சு. ஆகஸ்ட் 15 இல்லாம குடியரசு சாத்தியமாக வாய்ப்பே இல்லை. சுதந்திரம் அடைந்த போதே... எது எது இந்தியா பாகிஸ்தான் என்று சொல்லப்பட்டு விட்டது. தேர்தல் நடக்க வில்லை என்றாலும் அப்போதிலிருந்தே 'இது இந்திய குடி(மக்களின்)அரசு' என்ற எண்ணம் அனைவர் மனதிலும் ஏற்பட்டாச்சு.

எனவே, அப்படி இருக்கும்போது... aug-15 க்கு பிறகு முஸ்லிம்களை பாகிஸ்தான் போக சொன்ன படேல்-ராஜாஜி போன்றவர்கள் தேசவிரோதிகள்தான். 1950 க்கு முன்னர் போக சொல்லலாம்... என்று ஏதாவது சப்பைக்கட்டி அவர்களை காப்பாற்ற ச்சீப்பாக முயல வேண்டாம்.

இப்போவும் எங்களை துரத்த ஏதாவது காரணம் தேடும் உங்களைப்போல கேவலமான தேச விரோதிகள் இருக்கிறார்கள்.

இதை நான் சொன்னால் ஏற்க மாட்டீர். வழக்கம்போலவே நான் சொன்ன மெயின் மேட்டரை விட்டுட்டு ஏதாவது நொண்டி மறுப்பு சொல்வீர்.

ஆர் எஸ் எஸ் இடம் காசு வாங்கிக்கொண்டு இங்கே மொக்கை கமெண்டு போட்டு கூவுபவர் யார் என்று... கொடுத்த காசுக்கு குறைவாக கூவும் உமக்கே நன்கு தெரியும்..!

ஹோய்...ஹோய்....ஹோய்......

அஞ்சா சிங்கம் said...

எதற்கெடுத்தாலும் ஆதாரம் இருக்கா சுட்டி தரமுடியுமா என்று கேட்பீர்கள் ..
நான் ஒரே ஒரு சுட்டி தானே குடுத்தேன் .. அதை வசதியாக தூக்கிவிட்டீர்கள் ..........
பரவாயில்லை இது உங்கள் கடை நீங்க வச்சதுதான் சட்டம் ................................:-)

suvanappiriyan said...

//எதற்கெடுத்தாலும் ஆதாரம் இருக்கா சுட்டி தரமுடியுமா என்று கேட்பீர்கள் ..
நான் ஒரே ஒரு சுட்டி தானே குடுத்தேன் .. அதை வசதியாக தூக்கிவிட்டீர்கள் ..........
பரவாயில்லை இது உங்கள் கடை நீங்க வச்சதுதான் சட்டம் ................................:-)//

ஆபாச தளங்களின் சுட்டிகளை நான் அனுமதிப்பதில்லை. சவுதி அரசும் அனுமதிப்பதில்லை. எனவே தான் பிரசுரிக்கவில்லை.

suvanappiriyan said...

//அப்படி இல்லை ஏற்கனவே இங்கு பெரிய சாம்ராஜ்யம் இருந்தது என்று காட்டினால் அவர்கள் ஸ்திரமாக ஆளவில்லை நாங்கள் தான் ஸ்திரமாக ஆண்டோம் என்கிறீர்கள் ................சரி அதுவும் தவறு . வெள்ளையன் உங்களை தோற்கடித்து விட்டான் என்று கூறினால் அது யூத சதி என்று சொன்னாலும் சொல்வீர்கள் ........வெள்ளையன் கூடத்தான் ஸ்திரமாக ஆளவில்லை ..............என்ன சொல்ல வரீங்க நீங்க ஒரே குடுகுடுப்பை சத்தம் தான் பலமாக கேட்கிறது ......................//

மவுரியப் பேரரசு கிமு 180 லேயே வீழ்ந்து விடுகிறது. அந்த மவுரிய பேரரசில் தமிழகம் வரவில்லை என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். அதன் பிறகு தான் டெல்லி சுல்தான்களின் ஆட்சி 1210 ல் ஆரம்பமாகிறது. மவுரிய பேரரசு வீழ்ந்து 1400 வருடங்களுக்குப் பிறகுதான் இஸ்லாமியர் ஆட்சி டெல்லியை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்யப்பட்டது. 1400 வருடங்களில் நமது இந்தியா பல குறுநில மன்னர்களின் கைகளுக்கு சென்று விட்டது. மொகலாய மன்னரான ஒளரங்கசீப்பின் காலத்தில்தான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் போன்ற அனைத்து நாடுகளையும் ஒரு தலைமையின் கீழ் கொண்டு வருகிறார்.

அவர் உண்டாக்கி விட்டுச் சென்ற அகண்ட பாரதத்தை வெள்ளையர்களும் நாமும் சேர்ந்து இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் என்று குறுக்கி விட்டோம். அவரை பாராட்ட விட்டாலும் பரவாயில்லை. ஆனால் அவரை தூற்றுவதைத்தான் இங்கு விமரிசிக்கிறேன்.

வவ்வால் said...

சு.பி.சுவாமிகள்,

//மொகலாய மன்னரான ஒளரங்கசீப்பின் காலத்தில்தான் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் போன்ற அனைத்து நாடுகளையும் ஒரு தலைமையின் கீழ் கொண்டு வருகிறார்.//

உங்களுக்கு மிகுந்த கற்பனை வளம் உள்ளது கதை எழுதினால் நன்றாக கல்ல்லா கட்டலாம் :-))

அவுரங்க சீப்பின் காலத்தில்,

சிவாஜியின் கீழ் மேற் கடற்கரை, தமிழகம் எல்லாம்.

பஞ்சாப்பில் சீக்கியர்கள் தனியாக நின்றார்கள்,

ஆப்கானில் , அவுரங்க சிஇப்பிடம் இருந்து பிரிந்த மகன் அவரத்உ பெயரும் அக்பர் தனியாவர்த்தனம்ம் செய்து கொண்டிருந்தார்.

பீஜாப்புர், கோல்கொண்டா தனியாக நின்றத்உ.

ஹைதராபாத் நிசாம் அவரும் தனியாக நின்றார்.

வங்கம்,மற்றும் அசாமில் அகோம் அரசன் மிர் காசிம் தனியாக நின்றார்.

அப்போ அவுரங்க சீப் என்ன தான் ஆண்டார்/

இவர்களை எல்லாம் அடக்கி ஒன்றாக ஆக்க 27 ஆண்டுகள் போரிலேயே கழித்தார் ஆனால் பலன் பெரிதாக இல்லை, ஒரு பக்கம்ம் படை எடுத்து இணைத்து விட்டு இன்னொருப்பக்கம் போனால் , மீண்டும் தனியாக போய்விடுவார்கள், சுத்தி சுத்தி ஓடுவதே அவுரங்க சீப்பின் வேலை :-))

அவுரங்க சீப்பின் மறைவுக்கு பின்னர் எல்லாம்ம் தன்னிச்சையான தேசங்கள் ஆகிவிட்டன. அப்புறம் எங்கே அவுரங்க சீப்பு ஒன்றிணைத்தார்னு கூசாமல் பொய் சொல்லிக்கிட்டு இருக்கிங்க.

உண்மையில் ஒரு அளவுக்கு தேசமாக்கியது வெள்ளைக்காரனே, அவன் போகும் போது 266 சதஸ்தானங்கள் தனியாக இருந்ததும், படேல் ஃபெவிகால் போட்டு ஒட்டியதும் வரலாறு.

வரலாற்றினை மாற்றி எழுதுகிறேன் என கதை விட்டால் கேட்டுக்கொண்டிருக்க இங்கு அனைவரும் அரேபியர்கள் இல்லை :-))

இதுக்கும் மேலும் தேய்ஞ்ச ரெக்கார்டு போல அவுரங்க சீப்பு தான் சீப்பு எடுத்து இந்தியா மொத்தத்துக்கும் தலை சீவினார்னு சொல்லிக்கொண்டு இருந்தால் அது உங்க இஷ்டம்.
------------

வெள்ளைக்காரனுக்கு இந்தியாவை விற்ற இஸ்லாமிய நவாப்புகளும்,நிசாம்கள் பற்றியும் சொன்னேன் ஒன்றுமே சொல்லக்காணோம் :-))

அஞ்சா ஸிங்கமும் அதனை குறிப்பிட்டுள்ளார்.

வழக்கம் போல இக்கட்டான கேள்வி என்னில் கள்ள மவுனம்ம் சாதிக்கிறீர்கள் போல.

Unknown said...

இந்திய வரலாற்றில் ஆரியர்களால் எழுதப்ப…ட்ட கட்டுக்கதையான கஜினி முகம்மது இந்தியாவை கொள்ளை அடித்தார். சோமநாதர் ஆலயத்தை தாக்கி அங்குள்ள செல்வங்களை எல்லாம் கொள்ளை அடித்தார் என்ற வரலாற்றுத்திரிப்பின் மூலம் இந்துக்களின் மனதில் முஸ்லிம்களை வெறுக்கும் மனப்பான்மையை உருவாக்கிய ஆரிய மாயை யின் பின்னணியில் உள்ள உண்மை சம்பவம் ஆதாரங்களுடன்

இது chach Nama http://en.wikipedia.org/wiki/Chach_Nama என்ற வரலாற்று நூலில் தெளிவாக எழுதப்பட்டுள்ளது

இந்த போர் கொள்ளையடிக்க நிகழ்ந்த போர் இல்லை கொள்ளையர்களை அழிக்க நடந்த யுத்தம்

வரலாற்றுக்கு வருவோம் in 661-712AD காலகட்டத்தில் சிந்து பகுதியை ஆண்ட பிராமண அரசன் ராஜா தாகிர்https://en.wikipedia.org/wiki/Dahir_(Raja) இவனது முக்கிய தொழில் கடற்கொள்ளை . இவன் அரபுகளின் கடல் வாணிப வழிகளில் இந்த தாக்குதல் தொடர்ந்தது இது kutch ,Debal today karchi and kathiyavar தளங்களில் இருந்து தொடர்ச்சியாக நடந்தது இறுதியாக இலங்கையிலிருந்து அரபு நாடு சென்ற கப்பலை தாக்கி அதில் இருந்த பரிசுப்பொருட்களை கொள்ளை அடித்ததோடு மட்டுமல்லாமல் புனித யாத்திரை சென்ற பெண்களை மானபங்கப்படுத்தினான்.

https://en.wikipedia.org/wiki/Muhammad_bin_Qasim

According to history writer Mr. BERZIN , Umayyad interest in the sindh region occurred because of attacks from Sindh Raja Dahir on ships of Muslims and their imprisonment of Muslim men and women.

According to historian Mr. Wink, Umayyad interest in the region was galvanized by the operation of the Meds and others.[2] Meds (a tribe of Scythians living in Sindh) had pirated upon Sassanid shipping in the past, from the mouth of the Tigris to the Sri Lankan coast, in their bawarij and now were able to prey on Arab shipping from their bases at Kutch, Debal and Kathiawar

அப்போது ஈராக்கின் கவர்னர் ஹஜ்ஜாஜ் பின் யூசுப் அவர்கள் ராஜா தாகிர் மன்னனுக்கு கடிதம் எழுதி புனித பயணம் சென்ற பெண்களை விடுவிக்கவும் கொள்ளையடித்த செல்வங்களை திரும்ப ஒப்படைக்கவும் கோரிக்கை வைத்தார் ஆனால் கடற்கொள்ளையனான அந்த புஷ்கரண பிராமண மன்னன் அதற்கு மறுக்கவே muhamed bin Quasim (கஜினி முகம்மது ) தலைமையில் 6000 சிரியர்கள் கொண்ட காலாட்படை சிந்து பகுதியிலிருந்தும்ம ற்றும் ஈரானில் இருந்து 5 கப்பல்படையணிகள் debel இன்றைய கராச்சி துறைமுகத்தையும் தாக்கியது .இது நடந்தது கிபி 710 இல்

முகம்மது பின் காசிமின் படை சிந்து ந்திக்ககரையில் அணிவகுத்து நின்ற தாகி அரசனின் படைகளுடன் தொடர் தாக்குதல் நடத்தியது இருதியாக ராஜா தாகிர் கொல்லப்பட்டான் அவனால் கொள்ளை அடித்து சோமநாதர் ஆலயத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செல்வங்களை மீட்டு இஸ்லாமிய ஆட்சியை நிறுவி yazid ibn al -muhallab அவர்களை fars, kirman ,makran and Sindh பகுதிகளுக்கு கவர்னராக நியமித்தார்

இது தான் உண்மை யான வரலாறு கடற்கொள்ளை யடித்து ஆலயத்தினுள் மறைத்து வைக்கப்படிருந்த செல்வங்களை மீட்ட சம்பவத்தை ஆலயத்தை கொள்ளையடித்ததாக திரித்து எழுதி விட்டனர் இந்த டவுசர் கூட்டம்!!!!

தீரன் படை said...

மனிதன். மதத்தை கடந்து விட்டான்

மதம் என்ற போர்வையை pothi கொண்டு

Dr.Anburaj said...

அருமையான வரலாற்று பட்டிமன்றம்.படித்தேன். அரேபிய அடிமைகள் இந்திய முஸ்லீம்கள். இவர்கள் முஸ்லீம்கள் அனைவரையுடம் தக்கியா என்ற கொள்கையின் அடிப்படையில் இந்துக்கள் மத்தியில் புகழ்ந்தே பேசுவார்கள்.

முஸ்லீம் மன்னா்களும் அரசனாக இருந்து சில நல்லகாரியங்களைச் செய்திருக்கத்தான் செய்வார்கள்.
ஆனால் கடலளவு கொலைக் கொடுரங்கள் மத்தியில் மயிரளவு நன்மைகளைப் பற்றி யார் பேச முடியும்.
முஸ்லீம்கள் மனதில் காபீர்கள் என்ற காழ்புணா்ச்சி தவறான நடவடிக்கைக்கு தூண்டு கோலாக அமைந்தது. சிந்துவை எப்படி தாக்கினான் ? எத்தனை பேர் செத்தார்கள் ? செத்தவனை காபீர் என்று இழிவாக பேசியது யாா ? காபீர் பெண்கள் என்ன ஆனார்கள் ?
என்று ஆயிரம் ஆயிரம் கேள்விகளுக்கு என்ன விடை ?
இந்தியா 1000 ஆயிரம் ஆண்டுகள் ஒரு பண்பாடற்ற நாட்டு மக்களை காபீர்கள் என்று இழிவு படுத்தி அவர்களை ஏதும் செய்ய துணிந்த நபர்கள் ஆட்சியாளராக இருந்துள்ளார்கள் என்பதுதான் உண்மை.

Dr.Anburaj said...

இது எப்படி என் கண்ணில் படாமல் போனது.
----------------------------
800 ஆண்டுகளாக முஸ்லீம்களும் 200 ஆண்டுகளாக இந்துஸ்ததானை ஒஒருங்கிணைத்தார்களாம். இந்தியாவை உருவாக்கியதே முகலாயர்கள்தாம். குருடா்கள்.
1947 ல் 565 சமஸ்தானங்களாகத்தான் இந்துஸ்தான் இருந்தது. ஏன் ? முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் கிழிதத கிழிப்பு என்ன ?

Nava said...

/முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை//
ஏன் அசோகர் காலத்தில் கிட்டத்தட்ட ஏக இந்தியாதானே இருந்தது. ஏன் எப்போதும் தங்களை போன்றவர்களுக்கு இந்தியாவின் சுயத்தில் எப்போதும் நம்பிக்கையே இருப்பதில்லை.