Followers

Wednesday, April 26, 2006

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்!

இஸ்லாத்துக்கும், இந்து மதத்துக்கும் உள்ள வேற்றுமைகள் நமக்கு முன்பே தெரியும். இரணடு மார்க்கத்துக்கும் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன என்பதை சில ஆதாரங்களோடு பார்ப்போம். இஸ்லாமியனான உனக்கு இந்து மத ஆராய்ச்சி ஏன்? என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நான் பிறந்த மண்ணில் தோன்றிய மதம். நான்கைந்து தலைமுறைக்கு முன்பு என் மூதாதையர் பின் பற்றிய மதம். இதைப் பற்றி நான் ஆராயாமல் வேறு யார்தான் ஆராய முடியும்?

'எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச் சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம்'

-குர்ஆன் 14 :4

'இது முந்தய வேதங்களிலும் இப்றாகிம் மூஸாவுக்கு அருளிய வேதங்களிலும் உள்ளது.'

-குர்ஆன் 87 : 18,19

மேற் கண்ட வசனங்களின் மூலம் உலகம் முழுவதற்கும் கொடுக்கப் பட்ட வேதங்களின் உரிமையாளன் ஒருவனே என்பது விளங்குகிறது. அந்த உரிமையாளனை இறைவன், கடவுள்,அல்லாஹ், கர்த்தர் என்று பல்வேறு பெயர்களில் அழைத்து வருகிறோம்.

'இஸ்ரவேலர்களில் ஒரு பிரிவினர் இறைவனின் வார்த்தைகளைச் செவியேற்று விளங்கிய பின் அறிந்து கொண்டே அதை மாற்றி விட்டனர்.'

-குர்ஆன் 2 :75

'யூதர்களில் சிலர் வேதங்களின் வார்த்தைகளை அதற்குரிய இடங்களிலிருந்து மாற்றுகின்றனர்'

-குர்ஆன் 4 : 46

யூதர்களும், கிறிஸ்தவர்களும் தங்களுக்கு அருளப்பட்ட வேதங்களை மாற்றி விட்டனர் என்று சொல்லும் குர்ஆன் மாற்றப் பட்ட அந்த வேதங்களை பின் பற்றக் கூடாது என்று நமக்கு கட்டளையிடுகிறது.நம் நாட்டில் இருக்கும் பிராமணர்களும் இஸ்ரவேல் சமூகத்திலிருந்து தோன்றிய ஒரு பிரிவினர்கள் தான். எகிப்து,ஜோர்டான், இஸ்ரேல் போன்ற நாட்டு பண்டைய மக்களின் பழக்க வழக்கங்கள், தோற்றம் போன்றவை நம் நாட்டு பிராமணர்களை ஒத்திருப்பதன் மூலம் இதை நாம் அறிந்து கொள்ளலாம். எனவே தான் பிராமணர்களுக்கு எப்போதுமே யூதர்களின் மீது ஒரு பிரியம் இருக்கும். திரு டோண்டு அவர்களின் பதிவுகளிலிருந்தும் இதை நாம் அறிந்து கொள்ளலாம்.

ஹிந்து மதம் என்ற பெயர் எப்படி வந்தது?

சிந்து நதியை ஒட்டி வாழ்ந்த மக்கள் பின் பற்றிய மதம் ஆகையால் சிந்துக்கள் என்றாகி நாளடைவில் மறுவி இந்துக்கள் என்றாகி விட்டது. இதைத்தான் மொகலாயர்களின் குறிப்புகளிலிருந்தும், நேருவின் குறிப்பிலிருந்தும், மற்ற ஆதாரங்களின் மூலமும் அறிகிறோம். ஹிந்து என்ற பெயர் தாங்கிய இந்த மதம் ஆரம்ப காலங்களில் ஒரு இறைவனைத் தான் வழிபடச் சொல்கிறது. நாளடைவில் ஊர் பெரியவர்கள்,மகான்கள்,அரசர்கள் அனைவரையும் கடவுளின் அவதாரமாக்கி, இன்று நாம் பார்க்கும் பல ஆயிரம் தெய்வங்களை உருவாக்கி விட்டார்கள். இதற்கு ஒரு சில ஆதாரங்களை இந்து மத கிரந்தங்களிலிருந்தே எடுத்தாய்வோம்.

உபனிஷத் இந்து மதத்தின் முக்கிய வேத நூல்

'ஏகாம் எவாத்விதியாம்'
'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1
(The principal Upanishad by S.Radha Krishnan page 447&448)
(Sacred books of the east volume1> the Upanishad part 1, page 93)

ஸ்வேதஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 6 : 9
'நசாஸ்யா காஸிக் ஜனிதா நா சதிபஹ்'
'அவனைப் பெற்றவர் யாரும் இல்லை. அவனைப் படைத்தவர் யாரும் இல்லை'
(The principal Upanishad by S. Radha krishnan page 745)
(And in sacred books of the east volume 15> The Upanishadpart 2, page 263)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அத்தியாயம் 4 :19
'நா தாஸ்ய ப்ரதிமா அஸ்தி'
'அவனைப் போன்று வேறு யாரும் இல்லை'
(The principal Upanishad by S.Radha Krishnan page 736-737)
(And sacred books of the east volume 15, the Upanishad part 2, page 253)

ஸ்வேதாஸ்வதாரா உபனிஷத் அதிகாரம் 4 : 20
'நா சம்த்ரஸே திஸ்தாதி ரூபம் அஸ்யாஇ நா சக்சுஸா பாஸ்யாதி காஸ் கனைனாம்'
'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

யஜீர் வேதா அதிகாரம் 32 :3
'நா தஸ்யா பிரதிமா அஸ்தி'
'அவனுக்கு இணை வேறு எவரும்இல்லை'

யஜீர் வேதா அதிகாரம் 32 : 3
'அவன் யாருக்கும் பிறக்கவுமில்லை.அவனே வணங்குவதற்கு தகுதியானவன்.'
(The Yajurveda by Devi Chand M.A page 377)

யஜீர்வேதா அதிகாரம் 40 :9
'அந்தாத்மா பிரவிசந்தி யே அஸ்ஸாம்புதி முபஸ்தே'
'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.' அதாவது காற்று தண்ணீர் நெருப்பு போன்றவற்றை வணங்குபவர்கள் மறுமையில் நஷ்டவாளிகள் என்று கூறப்படுகிறது.

பகவத் கீதை அதிகாரம் 10 :3
'நான் இவ்வுலகில் ஜனிக்கும் முன்பே என்னைப் பற்றி அறிந்தவன் இறைவன். இந்த உலகின் ஈடு இணையற்ற அதிபதி'

மேலே எடுத்துக் காட்டிய இந்து மத வேதங்களின் வசனங்கள் இறை வேதமாகிய குர்ஆனோடு எந்த அளவு ஒத்துப் போகிறது என்பதைப் பார்ப்போம்.

குர்ஆனின் சிறிய அத்தியாயமாகிய 'குல ஹீ அல்லாஹீ அகத்' என்று வரும் வசனங்களை மனனம் செய்யாத முஸ்லிம்களே இருக்க மாட்டார்கள். அவ்வளவு பிரபல்யமான ஓரிறைக் கொள்கையையும் உளத் தூய்மையையும் பேசும் இந்த அத்தியாயத்தின் மொழி பெயர்ப்பைப் பாருங்கள்:

'இறைவன் ஒருவன் என்று முகம்மதே கூறுவீராக!'
'இறைவன் தேவையற்றவன்'
'யாரையும் அவன் பெறவுமில்லை, யாருக்கும் பிறக்கவுமில்லை'
'அவனுக்கு நிகராக யாருமில்லை'


குர்ஆன் - 112 :1,2,3,4

'இரவு பகல் சூரியன் சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனையோ சந்திரனையோ வணங்காதீர்கள். வணங்குவதாக இருந்தால் அவற்றைப் படைத்த இறைவனையே வணங்குங்கள்'

-குர்ஆன் 41 ;37

'குறிப்பிட்டுச் சொல்லப் படும் ஒரு பொருளாகக் கூட இல்லாத ஒரு காலம் மனிதனுக்கு இருந்ததில்லையா? மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.'

-குர்ஆன் 76 : 1,2

'அவனைக் கண்கள் பார்க்காது.அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்: நன்கறிந்தவன்.'

-குர்ஆன் 6 : 103

மேற் கூறிய வசனங்கள் எந்த அளவு முந்தய வசனங்களோடு ஒத்துப் போகிறது என்று பாருங்கள். அனைத்தையும் சொன்னது ஒரே இறைவன் தான் என்பது நமக்கு விளங்குகிறது. ஒரே ஒரு வித்தியாசம் மற்ற வேதங்களில் மனிதக் கருத்துகளும் இடைச் செருகலாக சேர்க்கப் பட்டு விட்டன. குர்ஆன் அத்தகைய இடைச் செருகல் இல்லாமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.

நேரம் கிடைக்கும் போது மற்ற ஆதாரங்களையும் அலசுவோம். இந்து மத வேதங்களில் வசன எண்கள் அல்லது பொருள் ஏதும் தவறாக இருந்து அதனைச் சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,

சுவனப் பிரியன்.

72 comments:

மு.மயூரன் said...

எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

1. ஏனைய மத நூல்களில் இடைச்சொருகல்கள் உண்டெனவும், இஸ்லாத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமெனவும் இறைவன் ஏன் அரேபியர்களுக்கு மட்டும் கூற வேண்டும்?

2. அப்படியானால், அரேபியர்கள் மட்டுமே இஸ்லாத்தை பின்பற்றினால் போதுமா, மற்றவர்கள் தத்தமது மதங்களை பின்பற்றினாலேயே நல்லுலகத்தை அடையலாமா?

Tamil Comments said...

ஆகா.. ஆகா.. மிக்க நன்றி தலைவா.

Sriram said...

A post well researched and well written. Good job...

Vajra said...

//
1. ஏனைய மத நூல்களில் இடைச்சொருகல்கள் உண்டெனவும், இஸ்லாத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமெனவும் இறைவன் ஏன் அரேபியர்களுக்கு மட்டும் கூற வேண்டும்?

2. அப்படியானால், அரேபியர்கள் மட்டுமே இஸ்லாத்தை பின்பற்றினால் போதுமா, மற்றவர்கள் தத்தமது மதங்களை பின்பற்றினாலேயே நல்லுலகத்தை அடையலாமா?
//

முதலில் யூதர்களுக்கு "மட்ட்ட்ட்டும்" கூறினார் (chosen people) பிறகு அரேபியர்களுக்கு "மட்ட்ட்ட்டும்" கூறினார். போதும் டா சாமி, அண்ணன் தம்பிச் சண்டை உலக ரேஞ்சில் சண்டையாகிவிட்டது இதனால் தான்.

(ஆபிரஹாமின் மகன் Isaac வழி வந்தவர்கள் யூதர்கள், Ishmael வழி வந்தவர்கள் அரபுகள்)

" ஏகம் சத் விப்ராஹ் பஹுதா வதாந்தி " என்ற உண்மையை இவர்கள் உணர்வதற்க்கு வெகு காலமாகும். சுவணப்பிரியன் "Creation science"ல் இருந்து விலகி ஒரு முயற்ச்சி எடுத்திருக்கிறார் பாராட்டுவோம். அனால் இஸ்லாத்தைப் பரப்புவது தான் நோக்கம் என்றால் மன்னிக்கவேண்டும் பாராட்டை வாபஸ் பெற்றுக் கொள்வேன்.

வஜ்ரா ஷங்கர்.

arunagiri said...

இந்து மதத்தின் போதனைகளில் சில இடங்களில் இஸ்லாத்தைக்காண முடியும்தான். இதில் எனக்கு வியப்பேதும் இருப்பதாகத் தெரியவில்லை- இந்தியா மேற்குடன் கொண்டிருந்த பல தொடர்புகள் தத்துவ மற்றும் கலாசாரப் பரிவர்த்தனைகளுக்கு வழிவகுத்திருந்தது. ரிக் வேத தீ வழிபாடு இஸ்லாத்துக்கு முந்தைய ஜொராஸ்டிரீய சமுதாயத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது. எனவே இந்து மதத்தின் போதனைகள் சிலவற்றை இஸ்லாத்திலும் காண முடியும்தான்.

மற்றொன்றும் கவனிக்க "ஏகம் சத்" முதலான பல மூல வாக்குகளிலும் இறையைப் பலவாறாகக்காணுவது தடை செய்யப்படவோ, இறையின் gender ஆண்மட்டும்தான் என்றோ அருதியிடப்படவில்லை.

இந்து சமூகத்தின் மிக முக்கியக் கூறான விவாதத்தின் மூலம் தத்துவக்களங்களை விஸ்தரித்து வளர்த்தல் என்பதும் இஸ்லாத்தில் அரிதே.

மற்றபடி இஸ்ரேலியர்களும் பார்ப்பனர்களும் ஒன்று என்பது போன்ற மண்ணாங்கட்டித்தனமான அபத்த நாசிசக்கருத்துக்களைப் பரப்ப இறையைக்குறித்துப்பேசும் இந்த வலைப்பதிவை உபயோகிக்காதீர்கள்.

சுவனப்பிரியன் said...

வருகைக்கு நன்றி திரு மயூரன்,திரு தமிழ் கமெண்ட்ஸ்,திரு ஸ்ரீராம், திரு சங்கர்! நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதில் அளிக்கிறேன்.

என்றும் அன்புடன்

சுவனப் பிரியன்

சுவனப்பிரியன் said...

திரு மு.மயூரன்!

//எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன.

1. ஏனைய மத நூல்களில் இடைச்சொருகல்கள் உண்டெனவும், இஸ்லாத்தை மட்டுமே பின்பற்ற வேண்டுமெனவும் இறைவன் ஏன் அரேபியர்களுக்கு மட்டும் கூற வேண்டும்?//

'இந்த குர்ஆன் மனிதர்களுக்கு விளக்கமும், நேர் வழியும் இறைவனை அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்.'

குர்ஆன் 3 :138

'மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் இறைவனின் தூதர் அந்த இறைவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் வேறு யாருமில்லை. அவனே உயிர்ப்பிக்கிறான், மரணிக்கச் செய்கிறான்' என்று முகம்மதே கூறுவீராக!

குர்ஆன் 7 :158

மேற் கண்ட வசனங்கள் மேலும் குர்ஆன் முழுக்க வரும் 'மனிதர்களே' என்று ஆரம்பிக்கும் வசனங்கள் அனைத்தும் உலக மக்கள் அனைவரையும் நோக்கி கூறப்படும் வசனமாகும். அப்படி கூறப்படும் வசனங்களில் நம் நாட்டு மக்களும், நானும் நீங்களும் கூட அடங்குவோம்.

//2. அப்படியானால், அரேபியர்கள் மட்டுமே இஸ்லாத்தை பின்பற்றினால் போதுமா, மற்றவர்கள் தத்தமது மதங்களை பின்பற்றினாலேயே நல்லுலகத்தை அடையலாமா?//
''அல்லாஹ்வைத் தவிர யாரையும் நீங்கள் வணங்கக் கூடாது. பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும். மக்களிடம் அழகானதையே பேச வேண்டும். தொழுகையை நிலை நாட்ட வேண்டும்.ஏழை வரியையும் கொடுக்க வேண்டும்'

குர்ஆன் 2 :83

மேற் கண்ட குர்ஆனின் வசனத்தின் மூலம் ஒரே இறைவனை வணங்கி அவனின் கட்டளைகளின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இறப்புக்கு பிறகு சுவனத்தைத் தருவதாக இறைவன் வாக்களிக்கிறான்.

சுவனப்பிரியன் said...

Tamil Comments said...
//ஆகா.. ஆகா.. மிக்க நன்றி தலைவா.//ஆஹா...... நன்றி திரு தமிழ்!

அப்படின்னா நானும் ஒரு கட்சி ஆரம்பித்து விட வேண்டியதுதான். பம்பரம் எப்படி விளையாடுவது, எங்கு விளையாடுவது என்பது போன்ற அரிய சேவைகளை தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் விஜய காந்த் ஒரு கட்சி ஆரம்பித்து, குறுகிய காலத்தில் இத்தனை வாக்குகளையும் பெற முடியும் என்றால், நான் கட்சி ஆரம்பிப்பதில் என்ன தவறு? உங்களுக்கு என்ன பதவி வேண்டும் இப்பொழுதே முடிவு செய்து கொள்ளுங்கள். சுப்ரமணியம் சுவாமியையும் நம் கட்சியில் இணைக்கலாம் என்றிருக்கிறேன். :- ))))))

srinidhi said...

மேற் கண்ட குர்ஆனின் வசனத்தின் மூலம் ஒரே இறைவனை வணங்கி அவனின் கட்டளைகளின் படி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் இறப்புக்கு பிறகு சுவனத்தைத் தருவதாக இறைவன் வாக்களிக்கிறான்.

-----------------------------------
அந்த சுவனத்தில் 72 கன்னிகளுடன் சுகமாக இருக்கலாம் என்றும் கூறியிருப்பதால் ஜிகாதிகள் தற்கொலைப் படையாகவும், கொலைப்படைகளாகவும் மாறுகிறார்கள் என்பதையும் சேர்த்துச்
சொல்லுங்கள் ஐயா. அல்லாவை ஏற்காதவர்களை இஸ்லாம் எப்படி மதிக்கிறது, அவர்கள் குறித்து
குரான் என்ன கூறுகிறது என்பதையும் எழுதுவீர்களா. இறை நம்பிக்கை என்பதை அச்சத்தினை
உருவாக்கி திணிப்பதில் இஸ்லாம் போல் பிற மதங்கள் இல்லை.வேதங்கள், உபநிடதங்களுடன்
குரானை ஒப்பிட வேண்டாம், தலையும் புரியாமல் வாலும் புரியாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக
எடுத்து எழுதி தானும் குழம்பி அடுத்தவர்களையும் குழப்ப வேண்டாம். உபநிடதங்கள் மிரட்டுவதில்லை, அவனை வழிபடாவிட்டால்... என்று எச்சரிக்கை விடுவதில்லை, போர் செய்
என்று அழைப்பு விடுவதில்லை. அவை தத்துவதேடலின் விளைவுகள். ஏகத்துவத்தை கேள்வி
கேட்டால் தலையை கொய்யச் சொல்லும் இஸ்லாமிற்கும், இந்த தத்துவத் தேடல்களும்
பெரும் வேறுபாடு உண்டு. .

srinidhi said...

சுவனத்தில் சூடான சுந்தரிகள் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்தாலே போதுமே, உங்கள் கட்சியில் ஆண்கள் சேர்ந்துவிடுவார்களே :)

சுவனப்பிரியன் said...

திரு சங்கர!

//முதலில் யூதர்களுக்கு "மட்ட்ட்ட்டும்" கூறினார் (chosen people) பிறகு அரேபியர்களுக்கு "மட்ட்ட்ட்டும்" கூறினார். போதும் டா சாமி, அண்ணன் தம்பிச் சண்டை உலக ரேஞ்சில் சண்டையாகிவிட்டது இதனால் தான்.//

மயூரனுக்கு நான் கொடுத்திருக்கும் பதிலைப் பார்த்தால் குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்று விளங்கும்.வேதக்காரர்களுக்குள் சண்டை மூண்டது இறைவன் கொடுத்த கட்டளைகளை வேதக்காரர்கள் சரிவர பின்னற்றாததனால்தான். இன்று நாம் பார்க்கும் வளைகுடா குழப்பங்கள் அனைத்துக்கும் மூல காரணம் கருப்புத் தங்கமான பெட்ரோல். மேற்கத்திய நாடுகளின் சூழ்ச்சிகளால் இன்று தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு இறைவனின் கட்டளைகளை எப்படி காரணம் ஆக்க முடியும்?

//அனால் இஸ்லாத்தைப் பரப்புவது தான் நோக்கம் என்றால் மன்னிக்கவேண்டும் பாராட்டை வாபஸ் பெற்றுக் கொள்வேன்.//

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். யாரும் யாரிடமும் தங்களின் கருத்தை புகுத்த முடியாது. இறைவன் ஒவ்வொரு மனிதனுக்கும் பகுத்து அறியும் அறிவை கொடுத்திருக்கிறான. என்னுடைய பதிவுகள் இஸ்லாத்தைப் பற்றி நம் இந்திய ஊடகங்களால் தவறாக சித்தரிக்கப் பட்டுள்ளதை முடிந்த வரை விளக்குவதே!தீவிரவாதம்,பெண்ணடிமை,தீண்டாமை,மூடப் பழக்க வழக்கங்கள் போன்றவற்றிற்கு எதிரானதுதான் இஸ்லாம் என்பதை என் பாணியில் விளக்கி வருகிறேன். அவ்வளவுதான்.

'ஏக இறைவனை மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன்.நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு.என்மார்க்கம் எனக்கு' என முகம்மதே! கூறுவீராக.

குர்ஆன் 109 :4,5,6

Kanagavelan said...

//ஒரே ஒரு வித்தியாசம் மற்ற வேதங்களில் மனிதக் கருத்துகளும் இடைச் செருகலாக சேர்க்கப் பட்டு விட்டன. குர்ஆன் அத்தகைய இடைச் செருகல் இல்லாமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.//

இந்து வேதங்களில் இடைச்செருகல் உண்டு என்பதற்கு ஆதாரம் கூறுங்கள்

குரானில் அப்படி இடைச்செருகல் இல்லை என்பதற்கு ஆதாரம் கூறுங்கள்

Vajra said...

//
ஏகத்துவத்தை கேள்வி
கேட்டால் தலையை கொய்யச் சொல்லும் இஸ்லாமிற்கும், இந்த தத்துவத் தேடல்களும்
பெரும் வேறுபாடு உண்டு. .
//

ஸ்ரீநிதி, "வேறுபாடுகள் உண்டு" என்று குழப்பத்திற்கு வகை செய்யவேண்டாம். ஒற்றுமைகளே இல்லை என்று ஒரே போடாக போட்டு முடித்துவிடவேண்டியது தான்.

இந்த தத்துவத் தேடலினால் கிடைக்கப் பெற்ற அறிவு இவர்களைச் சென்றடய குறைந்தது இன்னுமொறு 1000 ஆண்டுகளாவது பிடிக்கும்.

//
'ஏக இறைவனை மறுப்பவர்களே! நீங்கள் வணங்குவதை நான் வணங்குபவன் அல்லன்.நான் வணங்குபவனை நீங்கள் வணங்குவோரில்லை. உங்கள் மார்க்கம் உங்களுக்கு.என்மார்க்கம் எனக்கு' என முகம்மதே! கூறுவீராக.

குர்ஆன் 109 :4,5,6
//

சுவணப்பிரியன்,

இந்தியாவில் மதத்தின் பெயரால் போர், என்ற Concept ஐக் கொண்டு வந்ததே இஸ்லாம் தான். அப்போது எங்கு போனது குர ஆன் ன் இந்தப் பகுதி?

அதற்கு முன்னால் போர் என்றால் மன்னர்கள் மோதிக் கொள்வார்கள், விவசாயி விவசாயம் செய்வான் என்று கிரேக்க அறிஞர்கள் இந்தியாவைப் பற்றி எழுதி வைத்திருக்கிறார்கள்.

வஜ்ரா ஷங்கர்.

சுவனப்பிரியன் said...

திரு கனக வேலன்!

//இந்து வேதங்களில் இடைச்செருகல் உண்டு என்பதற்கு ஆதாரம் கூறுங்கள்//

'பிராமணன் முதல் வருணத்தான் ஆனதாலும் பிரம்மாவின் முகமாகிய உயர்ந்த இடத்தில் பிறந்ததினாலும் எல்லா வருணத்தாருடைய பொருள்களையும் தானம் வாங்கத் தலைவனாகிறான்' - மனு த.சா.ஆ .1 சு., 100

'சூத்திரன் பிராமணர்களைத் திட்டினால் அவன் தாழ்ந்த இடமான காலில் பிறந்தவனாகையால் அவன் நாக்கை அறுக்க வேண்டும்' (மனு த.சா.அ. 8.சு 270)

'பிராமணனுக்கு மங்கலத்தையும், சத்திரியனுக்கு வலுவையும், வைசியனுக்குப் பொருளையும், சூத்திரனுக்கு தாழ்வையும் காட்டுகிற பெயரை இட வேண்டும்' - மனு (த.சா.அ 2 சு,31)

'பிராமணர் இந்த மனு நூலைப் படிக்கலாம் மற்ற வருணத்தாருக்கு ஓதுவிக்கக் கூடாது' - மனுத.சா.அ 1.சு 103)

'சூத்திரன் பக்கத்தில் இருக்கும்போது வேதம் ஓதக்கூடாது' (மனு த.சா.அ.1 சு99)

'பல மனைவிகளை உடையவன் அவர்களின் புணர்ச்சிக்காகவும், பசு மாடுகளின் புல்லுக்காகவும், பிராமணரைக் காப்பாற்றவும் பொய சொன்னால் குற்றமில்லை' (மனு த.சா.அ.8 சு-112)

மேற் கூறிய வசனங்கள் அனைத்தும் இந்து மத சட்டங்கள் என்று நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். மேற் சொன்ன கட்டளைகளை நம்மை படைத்த இறைவன் சொல்லியிருக்க முடியுமா? என்று சிந்தித்து பாருங்கள். இவை அனைத்தும் எந்த ஒரு ஆராய்ச்சியும் பண்ணாமல் மனிதர்களின் இடைச் செருகல் என்று ஊகிக்க முடியும். ஸ்ரீநிதியின் கேள்விக்கும் இதிலேயே பதில் உள்ளது. நேரம் கிடைக்கும் போது அவருக்கும் பதிலளிக்கிறேன்.

//குரானில் அப்படி இடைச்செருகல் இல்லை என்பதற்கு ஆதாரம் கூறுங்கள்//


'அவர்கள் இந்த குர்ஆனை சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் அனேக முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.'

குர்ஆன் 4 :82

குர்ஆன் ஒரே நேரத்தில் மொத்தமாக அருளப்படவில்லை. மாறாக 23 ஆண்டுகள் சிறிது சிறிதாக அருளப்பட்டது. இதை முகமது நபி சுயமாகக் கூறியிருந்தால் இத்தனை ஆண்டுகளில் எத்தனையோ விஷயங்களில் முரண்பட்டிருப்பார்கள்.

'அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு செய்தியை அவர்கள் கொண்டு வரட்டும்.'

குர்ஆன் 52 :34

எழுதப் படிக்கத் தெரியாதவர் எதை இறை வேதம் என்று கொண்டு வந்தாரோ அது அன்றைய அரபிகளின் இலக்கியத்தை மிஞ்சும் வகையில் அமைந்திருந்தது. பொய் கலப்பில்லாத ஒரே இலக்கியமாகவும் அமைந்திருந்தது. இன்றைய அறிவியல் கருத்துக்களுக்கு சிறிதும் மாற்றமில்லாமல் அமைந்திருக்கிறது. பல அறிவியல் கருத்துகளை முந்தைய பதிவுகளில் விளக்கியுள்ளேன். இது போன்று இன்னும் பல உண்மைகளை இனி வரும் காலங்களில் பதிப்பேன்.

முழு மனித குலத்துக்கான மேற் கொன்ன குர்ஆனின் அறை கூவல் இன்றளவும் எவராலும் எதிர் கொள்ளப் படவில்லை. இது சம்பந்தமாக வரும் மற்றய வசனங்கள்.

2 : 23 ஃ 10 : 38 ஃ 11 : 13 ஃ 17 ; 88 ஃ 28 : 49 ஃ 52 :34

'இறைவனாகிய நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.'

குர்ஆன் 15 : 9

முகமது நபி காலத்தில் எழுதப் பட்ட குர்ஆனின் மூலம் இன்றும் துருக்கி இஸ்தான்புல் மியூஸியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதையும் தற்போது உங்களிடம் உள்ள குர்ஆனையும் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு எழுத்துக் கூட மாற்றம் இருக்காது. இன்னும் பல சான்றுகளை நேரம் கிடைக்கும் போது தருகிறேன்.

Kanagavelan said...

நீங்கள் காட்டும் மனுதர்மம் ஒர் வேதமல்ல. ரிக், யசூர், சாமம் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களில் மாற்றம் உண்டு என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள்.

குரானில் மாற்றமில்லை என்று அது கூறுவதை காட்டுகிறீர்கள். ஒரு புத்தகம் அதற்குள் "இதில் மாற்றமில்லை" என்று எழுதியிருப்பது அதில் மாற்றமில்லை என்பதற்கு ஆதாரமா?

முகமது நபி சொன்ன அனைத்து வசனங்களும் இன்று குரானில் இருக்கின்றன என்பதற்கு என்ன ஆதாரம்?

மு.மயூரன் said...

//அல்லாஹ்வைத் தவிர யாரையும் நீங்கள் வணங்கக் கூடாது.//

இதை எல்லா மனிதர்களுக்குமா அல்லா சொல்லி இருக்கிறார்?

அடக்கடவு(?)ளே! என்னுடைய அம்மாவும் அப்பாவும் தங்கையும் வீட்டில் இந்துசமய உருவப்படங்களை வைத்து அல்லவா வணங்கி வருகிறார்கள். அவர்கள் நரகத்துக்கா போவார்கள்?

சுவனப்பிரியன் said...

திரு சங்கர்!

//இந்தியாவில் மதத்தின் பெயரால் போர், என்ற Concept ஐக் கொண்டு வந்ததே இஸ்லாம் தான். அப்போது எங்கு போனது குர ஆன் ன் இந்தப் பகுதி?//

எல்லோருக்கும் தெரிந்த இந்திய வரலாற்றை எவ்வளவு சாமர்த்தியமாக மறைக்கிறீர்கள்! உங்கள் கேள்விக்கான அழகிய பதிலை 'சோ ராமசாமி பரப்பும் அவதூறுகள்' என்ற பதிவிலே சென்று பாருங்கள். ஆதாரங்களோடு எடுத்தெழுதி இருக்கிறேன். சமணர்களை கழுவிலேற்றியது இஸ்லாமா? ஆரியமா? புத்த மதததை அழித்து அதன் சுவடே தெரியாமல் ஆக்கியது இஸ்லாமா? ஆரியமா?

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அரசன் என்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில்,அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அகண்ட பாரதத்தை முஸ்லிம்கள் (மொகலாயர்கள்) உண்டாக்கி விட்டு சென்றார்கள். அதனால்தான் நாம் இன்று வல்லரசாக ஆவதற்கு முயற்ச்சித்து வருகிறோம். எனவே உங்களை நான்கேட்டுக் கொள்வது முஸ்லிம்களை வாழ்த்த வேண்டாம்.தூற்றாமல் இருந்தாலே போதும்.

சுவனப்பிரியன் said...

திரு ஸ்ரீநிதி!

//சுவனத்தில் சூடான சுந்தரிகள் கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்தாலே போதுமே, உங்கள் கட்சியில் ஆண்கள் சேர்ந்துவிடுவார்களே :)//

இஸ்லாம் தவிர மற்ற மதத்துக் காரர்களெல்லாம் பெண்களுக்காக அலைவது போலவும், சொர்க்கத்து கன்னிகளை தருவதாக சொல்லி அவர்களை இஸ்லாத்தில் சேர்த்து விடலாம்: கொள்கை ஒரு பொருட்டல்ல என்றெல்லாம் சொல்வது மற்றவர்களைக் கேவலப் படுத்துவது போல் இல்லையா? மாற்று மத நண்பர்களை மிகவும் மதிக்கக் கூடியவன் நான்.படித்தவர்...பண்பாளர்...எல்லாம் தெரிந்தவர்...நீங்கள் போய் இப்படியெல்லாம் சிந்திககலாமா? :-)

மேலும் நீங்கள் பின் பற்றும் மதத்தில் இறைவன் பெயரால் எத்தனை ஆபாசங்களை மனிதக் கரங்களால் ஏற்றி வைத்திருக்கிறீர்கள் என்பதும் நீங்கள் அறிந்ததுதானே! :-))

ஆரோக்கியம் kettavan said...

திரு சுவனப்பிரியன்,
"உங்கள் மார்க்கம் உங்களுக்கு; எங்கள் மார்க்கம் எங்களுக்கு" என்று தெளிவாகச் சொன்ன பின்னரும் விதண்டாவாதத்துக்காக வீண்வாதம் செய்துவரும் சிலரிடம் (பின்னூட்டமிட்ட அனைவரும் அல்லர்) மல்லுக்கட்டி வருகிறீர்கள். உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள். தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. முன்முடிவோடு தம் விஷமக் கருத்தை சொல்லும் (உதாரணம் இஸ்லாம் தலையைக் கொய்யச் சொல்கிறது போன்ற வாதங்கள்)நபர்களுடன் சரியான வாதமும் செய்ய இயலாது

மு.மயூரன் said...

என்னுடைய கேள்விக்கான பதிலை ஆர்வத்தோடு எதிர்பார்க்கிறேன்.

Vajra said...

//
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அரசன் என்று ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்த நேரத்தில்,அனைவரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து அகண்ட பாரதத்தை முஸ்லிம்கள் (மொகலாயர்கள்) உண்டாக்கி விட்டு சென்றார்கள். அதனால்தான் நாம் இன்று வல்லரசாக ஆவதற்கு முயற்ச்சித்து வருகிறோம். எனவே உங்களை நான்கேட்டுக் கொள்வது முஸ்லிம்களை வாழ்த்த வேண்டாம்.தூற்றாமல் இருந்தாலே போதும்.
//

நல்ல கூத்து ரா சாமி,

ஆக, முகலாயர் வருகைக்கு முன்னால் இந்தியா ஒரு தேசமல்ல...அவர்கள் தான் இன்தியர்களைப் பண்படுத்தியவர்கள்? அப்படித் தானே?

நடத்துங்கள் கச்சேரியை... நிரையவே திம்மிக்கள் தமிழ்மணத்தில் இருக்கிறார்கள்.

வஜ்ரா ஷங்கர்.

சுவனப்பிரியன் said...

திரு மயூரன்!
//அடக்கடவு(?)ளே! என்னுடைய அம்மாவும் அப்பாவும் தங்கையும் வீட்டில் இந்துசமய உருவப்படங்களை வைத்து அல்லவா வணங்கி வருகிறார்கள். அவர்கள் நரகத்துக்கா போவார்கள்?//

'ஒரே இறைவனையன்றி உங்களுக்கு எந்த நன்மையும், தீமையும் செய்யச் சக்தியற்றவற்றை வணங்குகிறீர்களா?' என்று கேட்பிராக! அந்த இறைவனே செவியுறுபவன்: அறிந்தவன்.

குர்ஆன் 5 :76

தமிழில் அல்லாஹ்வை இறைவன் என்றும் கடவுள் என்றும் கூறுகிறோம். நமக்கு அனைத்தையும் வழங்கிய ஒருவன் இருக்க பிள்ளையார்,முருகன்,சிவன்,பார்வதி,காளி,ராமன்,கிருஷ்ணன் என்று இஷ்டத்துக்கு இறைவனுக்கு உருவத்தைக் கொடுத்தால் அவனுக்கு கோபம் வராதா? சுவனப் பிரியனான என்னை நீங்கள் பார்க்காமல் அகோரமான ஒரு உருவப்படத்தை காட்டி 'இது தான் சுவனப்பிரியன்' என்றால் அதைக் கேள்விப்படும் நான் மனது வருத்தப் பட மாட்டேனா? சாதாரண மனிதனுக்கே இந்த நிலை என்றால் நம்மை படைத்த இறைவனின் தோற்றம் தெரியாமல் நீங்களாக எப்படி கற்பனை செய்து கொள்ள முடியும்?

சுவனப்பிரியன் said...

திரு ஸ்ரீநிதி!

//ஜிகாதிகள் தற்கொலைப் படையாகவும், கொலைப்படைகளாகவும் மாறுகிறார்கள் என்பதையும் சேர்த்துச்
சொல்லுங்கள் ஐயா.//

''கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் செய்யும் குழப்பத்திற்குப் பதிலாகவோ இல்லாமல் ஒருவர் மற்றொருவரைக் கொலை செய்தால் அவர் எல்லா மனிதர்களையும் கொலை செய்தவர் போலாவார்' என்றும் 'ஒரு மனிதரை வாழ வைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ வைத்தவர் போலாவார்' என்றும் இஸ்ராயீலின் மக்களுக்கு இதன் காரணமாகவே விதியாக்கினோம். அவர்களிடம் நம்முடைய தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தனர். இதன் பின்னர் அவர்களில் அதிகமானோர் பூமியில் வரம்பு மீறுவோராகவே உள்ளனர்.'

குர்ஆன் 5 : 32

ஒரு மனிதனின் உயிரை குர்ஆன் எந்த அளவு மதிக்கச் சொல்லுகிறது பாருங்கள். ஜிதாஹிகளுக்கு சரியான பொருள் விளங்காததால்தான் ஒரு சிலர் ஆயுதத்தை கையில் எடுத்து அதிலும் அப்பாவிகளை இலக்காக்குகிறார்கள். இது எல்லா மதத்திலும் ஒரு சில இடங்களில் நடப்பது வருத்தத்துக்குரியது. குஜராத் கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்காக நான் அனைத்து ஹிந்து மக்களையும் குறை சொல்லக் கூடாதல்லவா!

சுவனப்பிரியன் said...

'நமது அடியாரான முகம்மதுக்கு நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு அதில் நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாதத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்.

குர்ஆன் 2 : 23

முகமது நபிக்கு கொடுத்தது நிறைவடைந்த இறை வேதம்தான் என்று இறைவனே குர்ஆனில் நற் சான்றிதழ் வழங்குகிறான். கனக வேலன் கேள்விக்கு மேற் கண்ட வசனமே பதில்.

Tamil Comments said...

சுவனப் பிரியன்,

கனகவேலின் கேள்விக்கு உங்களின் முயற்சி பதிலாகாது. அவர் கேட்பது குர்-ஆன் மாற்றப் படவில்லை என்பதற்கான ஆதாரம். அதற்கு நீங்கள், 'குர்-ஆனிலேயே கூறியுள்ளது என்கிறீர்கள்'. இது எப்படி பதிலாகும். நீங்கள் காட்டும் அந்த வரி கூட திணிக்கப் பட்டிருக்கலாம் அல்லவா ? ஆகவே குர்-ஆன் மாற்றப்படவில்லை என்பதற்கு ஆதாரமாக வேறு சில சம்பவங்கங்களை ஆதாரமாகக் காட்டலாமே.

நண்பர் கனகவேல்,

வெவ்வேறு காலகட்டங்களில் உள்ள குர்-ஆன் பிரதிகள் தற்போது பாதுகாக்கப்பட்டு இருக்கின்றன. அவைகள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றன. குர்-ஆனை புத்தக வடிவில் தொகுத்தவர் உதுமான் என்பவராவார். நபிகள் இறந்து 19 வருடங்களில் குர்-ஆன் புத்தக வடிவில் வந்துவிட்டது. இந்த உதுமானின் குர்-ஆன் பிரதியும் தற்போதுள்ள பிரதியும் ஒன்றேதான். ஆனால் உதுமானது குரானில் உச்சரிப்பு குறிகள் இல்லை. அவைகள், அரபி அல்லாத மற்றவர்கள் படிக்க எளிதாக இருக்கும் வகையில் அந்த குறிகள் பிறகு சேர்க்கப் பட்டன. கீழ்காணும் லின்க்-கை படிக்கவும்

http://news.bbc.co.uk/1/hi/world/asia-pacific/4581684.stm

சுவனப்பிரியன் said...

திரு கனக வேலன்!

//நீங்கள் காட்டும் மனுதர்மம் ஒர் வேதமல்ல. ரிக், யசூர், சாமம் அதர்வணம் ஆகிய நான்கு வேதங்களில் மாற்றம் உண்டு என்பதற்கு ஆதாரம் காட்டுங்கள்.//

மனு தர்மம் தான் ஹிந்து மதத்தின் சட்ட திட்டங்களை நிர்ணயிக்கக் கூடியது என்று சங்கராச்சாரியார் கொடுத்த பேட்டியைப் படித்திருக்கிறேன். அது எங்களைக் கட்டுப் படுத்தாது என்றால் ஹிந்து மத சட்டத்திலிருந்து அதை எடுத்து விட வேண்டியது தானே! பெரும் பான்மை சமூகமான நீங்கள் சட்டதிருத்தம் கொண்டு வருவது வெகு இலகுவாயிற்றே! ஆனால் இதற்கு எக்காலத்திலும் சட்டதிருத்தம் கொண்டு வர சங்கராச்சாரியார் ஒத்துக் கொள்ள மாட்டார் என்பதும் உங்களுக்குத் தெரியுமே!பிறகு எப்படி மனுவை ஒதுக்க முடியும்?

திரு அருணகிரி தன பின்னூட்டத்தில்

//ரிக் வேத தீ வழிபாடு இஸ்லாத்துக்கு முந்தைய ஜொராஸ்டிரீய சமுதாயத்தில் உள்வாங்கப்பட்டிருந்தது. .

மற்றொன்றும் கவனிக்க "ஏகம் சத்" முதலான பல மூல வாக்குகளிலும் இறையைப் பலவாறாகக்காணுவது தடை செய்யப்படவோ,இறையின் gender ஆண்மட்டும்தான் என்றோ அருதியிடப்படவில்லை.//

ரிக் வேதத்தில் தீ வழிபாடு உள்ளதை அருணகிரி ஒத்துக் கொள்கிறார்.

'இயற்கை பொருட்களை வணங்கியவர்கள் இருளில் நுழைந்து விட்டனர்.'-யஜீர்வேதா அதிகாரம் 40 :9

ரிக் வேதத்துக்கும் யஜீர் வேதத்துக்கும் கொள்கையில் எந்த அளவு வேறுபாடு உள்ளதை நீங்களே பாருங்கள்.

பல உருவங்களில் இறைவனை வணங்குவதற்கு இந்து மத வேதங்கள் தடை செய்யவில்லை என்று அருணகிரியே ஒப்புதல் அளிக்கிறார்.

'அவன் ஒருவனே!அவனன்றி மற்றொருவர் இல்லை'
-சந்தோக்யா உபனிஷத் 6:2:1

'அவன் உருவத்தை யாரும் பார்க்க முடியாது. அவனது உருவை பார்க்கும் சக்தி எந்த கண்களுக்கும் இல்லை'
(The principal Upanishad by S.Radhakrishnan page 737)
(And in sacred books of the east volume 15, The Upanishad part 2, page 253)

உங்களின் வேதம் சொல்கிறது இறைவனின் உருவத்தை பார்க்க முடியாது என்று. ஆனால் வேதங்களில் பல உருவங்களில் இறைவனை வழிபடலாம் என்ற சட்டம் உள்ளது என்று அருணகிரி சொல்கிறார். இதில் ஏதோ ஒன்றில் மனிதக் கரம் புகுந்திருப்பது தௌளத் தெளிவாக தெரிகிறது அல்லவா? இது போல் இன்னும் எத்தனை மாற்றங்களைச் செய்திருப்பார்கள்? எனவே தான் இறைவன் மனிதக் கரம் புகுந்த வேதங்களை பின் பற்றக் கூடாது என்கிறான். இறைவனின் உருவத்தை பார்க்க முடியாது என்கிறபோது இத்தனை தெய்வங்களின் உருவங்களை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற கேள்வியும் வருகிறதல்லவா?

Kanagavelan said...

//மனு தர்மம் தான் ஹிந்து மதத்தின் சட்ட திட்டங்களை நிர்ணயிக்கக் கூடியது என்று சங்கராச்சாரியார் கொடுத்த பேட்டியைப் படித்திருக்கிறேன். அது எங்களைக் கட்டுப் படுத்தாது என்றால் ஹிந்து மத சட்டத்திலிருந்து அதை எடுத்து விட வேண்டியது தானே!//

உண்மைதான். அதனை இந்துமதச் சட்டத்திலிருந்து எடுத்துவிட்டார்கள். அதனை இந்துக்கள் யாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதாகத் தெரியவில்லை. சங்கராச்சாரியாரை பின்பற்றும் இந்துக்கள் எத்தனை சதம்? முஸ்லீம்கள் எல்லோரும் கொமேய்னியை பின்பற்றுகிறார்களா?

//உங்களின் வேதம் சொல்கிறது இறைவனின் உருவத்தை பார்க்க முடியாது என்று. ஆனால் வேதங்களில் பல உருவங்களில் இறைவனை வழிபடலாம் என்ற சட்டம் உள்ளது என்று அருணகிரி சொல்கிறார். இதில் ஏதோ ஒன்றில் மனிதக் கரம் புகுந்திருப்பது தௌளத் தெளிவாக தெரிகிறத//

பார்க்கமுடியாத உருவத்தை சிற்றறிவு படைத்த மனிதர்கள் பார்ப்பதற்காக உருவம் வைத்து வழிபடலாம் என்று இருக்கலாமே? மின்சாரத்தையோ அணுவையோ மனிதக்கண்களால் காணமுடியாது. ஆனால், அதனைக் குறிக்க ஒரு குறியீடு வைத்து புரிந்துகொள்கிறோமே? அது போல காரணமும் அதிலேயே கொடுக்கப்பட்டிருந்தால், நீங்கள் சொல்வது போன்ற மனிதக்கரம் புகுந்திருப்பதற்கான ஆதாரமாகக் கொள்ளமுடியாதே?


நன்றி தமிழ் கமெண்ட்ஸ்.

//குர்-ஆனை புத்தக வடிவில் தொகுத்தவர் உதுமான் என்பவராவார். நபிகள் இறந்து 19 வருடங்களில் குர்-ஆன் புத்தக வடிவில் வந்துவிட்டது. //

ஆக, நபிகள் காலத்தில் நபிமொழிகள் குரானாக தொகுக்கப்படவில்லை. நபிமொழிகள் அனைத்து குரானில் தொகுக்கப்பட்டுவிட்டன என்பதற்கு ஆதாரத்தை கூறுங்கள்.

Muse (# 5279076) said...

எத்தனை முறை ஐயா சொல்லுவது?

ஸ்ம்ருதிகள் மாறக்கூடியவை. மாறியுமிருக்கின்றன. ஸ்ருதிகள் மட்டுமே மாறாதவை.

உதாரணத்திற்கு மனு ஸ்மிருதியே ஒவ்வொரு யுகத்திற்குமேற்றவாறு மாற்றப்படுவதுதான்.

ஒவ்வொரு அரசரும் ஒவ்வொரு ஸ்ம்ருதியை பின்பற்றினர். மனு ஸ்ம்ருதியை பின்பற்றியவர்கள் மிக மிகக் குறைவு. (இந்திய அரசியல் சட்டம் ஹிந்து சட்டங்களுக்கு பெரும்பாலும் எடுத்துக்கொண்டது மனு ஸ்மிருதி இல்லை. எதுவென்று கூறுபவர்க்கு பரிசு)

சரி அதை விடுங்கள். ஹிந்து மதம் ஏகத்துவத்தை இறுதி உண்மை என்று கூறுவது போல, உண்மை பல வடிவங்களில் கானப்படும் என்றும், எந்த வடிவத்தை வணங்கினாலும் (உதாரணத்திற்கு அல்லாவை ஒரு ஆணாக ஸல் அவர்கள் கண்டதுபோல)இறுதியில் உண்மையை அடையலாம் என்றும் கூறுகிறது. இஸ்லாமும் அதே போல மற்றவர்கள் தங்களின் ஆன்மீக அனுபவத்திற்கேற்ப இறையை வழிபட்டுக்கொள்ளலாம் என்று கூறுகிறதா?

Muse (# 5279076) said...

மயூரன் அவர்களே,

>>>என்னுடைய அம்மாவும் அப்பாவும் தங்கையும் வீட்டில் இந்துசமய உருவப்படங்களை வைத்து அல்லவா வணங்கி வருகிறார்கள். அவர்கள் நரகத்துக்கா போவார்கள்? <<<

உங்களுடைய அம்மாவும் தங்கையும் மட்டுமல்ல, ஜனாப் சுவனப்பிரியனின் அம்மாவும், தங்கையும் கூட சுவனத்தை அடைய முடியாது என்று கேள்விப்படுகிறேன். ஏனென்றால் இஸ்லாமிய பெண்களுக்கு ஆத்மா கிடையாதாம்.

எந்த அளவு நிஜமென்று தெரியவில்லை. எனக்கு ஆத்மாவெல்லாம் தெரியாது. ஆஸ்த்மாதான் தெரியும்.

சுவனப்பிரியன் said...

திரு கனக வேலன்!

மனுவை ஹிந்து மத சட்டங்களிலிருந்து வெளியேற்றியது யார்? எப்போது என்ற ஆதாரத்தை தர முடியுமா?

நீங்கள் வேண்டுமானால் சங்கராச்சாரியாரை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஹிந்து மதத்தின் ஆணி வேரான மேல் ஜாதியினர் இன்றும் சங்கராச்சாரியாரின் வாக்குக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். சோ,ஆர்.வெங்கட்ராமன்,சேஷன் போன்றோர் இன.றும் கூட சங்கராச்சாரியாருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் பார்க்கிறோமே!

குர்ஆன் தொகுக்கப் பட்ட வரலாறு:

முகமது நபிக்கு இந்த குர்ஆன் 23 வருடங்கள் சிறிது சிறிதாக அருளப்பட்டு முகமது நபி காலத்திலேயே முழுமையும் பெற்று விட்டது. அருளப்பட்ட இந்த குர்ஆனை முகமது நபி முழுவதும மனனமும் செய்திருந்தார்கள்.

'உமக்கு நாம் ஓதிக் காட்டுவோம் : நீர் மறக்க மாட்டீர்' -(குர்ஆன் 87 : 6) என்ற குர்ஆனின் வசனத்தின் மூலம் குர்ஆன் முகமது நபியின் உள்ளத்தில் பாதுகாக்கப் பட்டது என்ற உத்தரவாதத்தையும் இறைவன் வழங்குகிறான்.

ஏராளமான நபித் தோழர்கள் குர்ஆனை முழுமையாக மனனம் செய்திருந்தார்கள். குறிப்பாக அபூபக்கர்,உமர்,உஸ்மான்,அலீ,தல்ஹா,ஸஅது போன்ற நபித்தோழர்கள் குர்ஆனை முழுமையாக மனனம் செய்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். மனனம் செய்தவை மறந்து விடாமல் இருப்பதற்காக ஒவ்வொரு தொழுகையிலும் சில அத்தியாயங்களை ஓத வேண்டும் என்ற ஏற்பாட்டையும் முகமது நபி செய்திருந்தார்.

அன்றைய காலத்தில் இருந்த ஒரு சில எழுதப் படிக்கத் தெரிந்தவர்களை அழைத்து தமக்கு வரக் கூடிய இறைச் செய்தியை குறிப்பெடுக்க சொன்னார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் அபூபக்கர்,உமர்,அலீ,உஸ்மான,முஆவியா,காலித்பின்வலீத்,உபை பின் கஅப்,ஸைத் பின் ஸாபித் போன்றோர். இந்த எழுத்தர்கள் முகமது நபி சொல்லச் சொல்ல பேரீச்சை மரப் பட்டைகளிலும்,வெண்மையான கல் பலகைகளிலும்,பதனிடப் பட்ட தோல்களிலும்,கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். இவ்வாறு எழுதப் பட்டவை முகமது நபியின் வீட்டில் வைத்து பாதுகாக்கப் பட்டது.

முகமது நபியின் மரணத்துக்குப் பிறகு அபூபக்கர் ஆட்சிக்கு வருகிறார். அவரது ஆட்சியில் நடந்த போர்களில் குர்ஆனை மனனம் செய்த எழுபது நபித் தோழர்கள் கொல்லப்படுகிறார்கள். இப்படியே போனால் வருங்கால சந்ததிக்கு குர்ஆன் கிடைக்காமல் போய் விடுமே என்ற கவலையினால் குர்ஆனை ஒழுங்கு படுத்தும் பணியை ஸைத் பின் ஸாபித் என்ற நபித் தோழரிடம் அபூபக்கர் ஒப்படைத்தார். அவரும் அந்த பொறுப்பை ஏற்று பல தோழர்களிடம் சிறு சிறு அத்தியாயாமாக இருந்த குர்ஆன் பிரதிகளை எல்லாம் ஒன்றாக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.குர்ஆனை மனனம் செய்தவர்களையும் அழைத்து,எழுதப் பட்ட ஏடுகளையும் சரி பார்த்து அத்தியாயங்களை வரிசைக் கிரமமாக எழுதும் பணியை மேற் கொண்டார்.இப்படி பாதுகாக்கப் பட்ட மூலப் பிரதி ஆட்சியாளரான அபூபக்கரின் வசம் வைத்து பாதுகாக்கப் பட்டது.

அபூபக்கரின் மரணத்திற்கு பிறகு உமர் ஆட்சிக்கு வருகிறார்.குர்ஆனின் மூலப் பிரதி உமரின் வசம் வருகிறது. உமரின் மரணத்திற்கு பிறகு உமருடைய மகளும் முகமது நபியின் மனைவியுமாகிய ஹப்ஸா விடம் குர்ஆனின் மூலப் பிரதி வருகிறது. அதன் பிறகு உஸ்மான் ஆட்சிக்கு வருகிறார். அவருடைய காலத்தில் மூலப் பிரதியிலிருந்து பல பிரதிகள் எடுக்கப் பட்டு உலகம் முழுவதும் அனுப்பி வைக்கப் படுகிறது. அப்படி அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப் பட்டு வருகிறது.ஒன்று துருக்கி நாட்டின் இஸ்தன்புல் நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும், மற்றொன்று ரஷ்யாவின் தாஷ்கண்ட் நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் மக்களின் பார்வைக்காக வைக்கப் பட்டுள்ளது. அந்த இரண்டு பிரதிகளையும் தற்போது உங்கள் கையில் உள்ள குர்ஆன் பிரதியையும் ஒத்துப் பாருங்கள். இறைவன் நமக்கு கொடுத்த போதனைகள் எதுவும் மாற்றப் படவில்லை,சிதைக்கப் படவில்லை என்பது நிரூபணம் ஆகும்.

Evidence from Bhuhary 0006, 1902,3220,3554,4998,4988,4989.

சுவனப்பிரியன் said...

திரு ம்யூஸ்!

//உங்களுடைய அம்மாவும் தங்கையும் மட்டுமல்ல, ஜனாப் சுவனப்பிரியனின் அம்மாவும், தங்கையும் கூட சுவனத்தை அடைய முடியாது என்று கேள்விப்படுகிறேன். ஏனென்றால் இஸ்லாமிய பெண்களுக்கு ஆத்மா கிடையாதாம்.//

பொய்களைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும். பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டு பேசிய சங்கராச்சாரியார் பிறகு இந்து மத பெண்களின் எதிர்ப்பை கண்டு ஒளிந்து கொண்டதை நீங்கள் பத்திரிக்கையில் படிக்கவில்லையா! குர்ஆன் பெண்களைப் பற்றி கூறுவதை கீழே தருகிறேன். பார்த்து தெளிவு பெறுங்கள்.

'உங்களில் ஆணோ,பெண்ணோ எவரது செயலையும் நான் வீணாக்க மாட்டேன்'.என்று இறைவன் அவர்களுக்குப் பதிலளித்தான்.'

குர்ஆன் 3 :195

'ஆண்களிலோ,பெண்களிலோ நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்தோர் சொர்க்கத்தில் நுழைவார்கள் சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப் பட மாட்டார்கள்.'

குர்ஆன் : 4 :124

'முஸ்லிமான ஆண்களும் பெண்களும், நம்பிக்கைக் கொண்ட ஆண்களும் பெண்களும்,கட்டுப் பட்டு நடக்கும் ஆண்களும் பெண்களும்,உண்மை பேசும் அண்களும் பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும் பெண்களும்,அடக்கமாக நடக்கும் ஆண்களும் பெண்களும,தர்மம் செய்யும் ஆண்களும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும் பெண்களும்,தமது கற்பை காத்துக் கொள்ளும் ஆண்களும் பெண்களும்,இறைவனை அதிகம் நினைக்கும் ஆண்களும் பெண்களும், ஆகிய அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான்.

குர்ஆன் 33 :35

'அவர்களும் அவர்களின் பெற்றோர் மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்க சோலைகளில் நுழைவார்கள்.'

குர்ஆன் 13 :23

மேற் சொன்ன இறைவனின் வாக்குப்படி நானும் என் பெற்றோரும் நல்லறங்கள் செய்து மரணித்தால் சொர்க்கத்தில் பிரவேசிப்போம். மற்றொரு விஷயம்! மறுமை நாளில் இறைவன் முன்னால் நீங்கள் 'இறைவா! சுவனப் பிரியனுக்கு இவ்வளவு உண்மை தெரிந்திருந்தும் எங்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.' என்று என் மேல்் வழக்கு தொடரக் கூடாது என்பதற்காக அனைத்தையும் கூறி நான் தப்பித்துக் கொண்டேன். சொர்க்கமா நரகமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விட்டேன். பதில் திருப்தி தானே!

சுவனப்பிரியன் said...

திரு ம்யூஸ்!

//உதாரணத்திற்கு அல்லாவை ஒரு ஆணாக ஸல் அவர்கள் கண்டதுபோல//

அது எப்படி பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று ஏதாவது விரதமா?முகமதுநபி இறைவனை ஆணாக உருவகப் படுத்தியதாக எதில் படித்தீர்கள்? விளக்கம் தர மடியுமா?

//இஸ்லாமும் அதே போல மற்றவர்கள் தங்களின் ஆன்மீக அனுபவத்திற்கேற்ப இறையை வழிபட்டுக்கொள்ளலாம் என்று கூறுகிறதா?//இறைவன் சொன்ன சட்டதிட்டங்களை கடை பிடித்துத் தான் மனிதர்கள் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அவரவர் தங்களின் ஆன்மீக அனுபவத்திற்கு எற்ப இறையை வழி பட்டுக் கொள்ளலாம் என்றால் முடிவில் குழப்பம் தான் மிஞ்சும். ஒருவர் 'நான் சாய்பாபா பக்தர்' என்கிறார், மற்றொருவர் ' கல்கி விஜயகுமார்தான் என் கடவுள்' என்கிறார், வேறொருவரோ சங்கராச்சாரியாரை காலில் விழுந்து வணங்குகிறார். இதெல்லாம் உங்களுக்கு வேடிக்கையாக படவில்லையா?

அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடியவன் ஒருவன் இருக்கிறான். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அவ்வப்போது ஒவ்வொரு சமூகத்துக்கும் வேதங்களையும் இறைவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான். இதை எல்லாம் தூர எறிந்து விட்டு 'நான் என் அனுபவத்திற்கேற்ப இறைவனை வழிபடுவேன்' என்பது இறைவனுக்கு நீங்கள் பாடம் சொல்லிக் கொடுப்பது போல் ஆகாதா?

புலிப்பாண்டி said...

உண்மைதான். அதனை இந்துமதச் சட்டத்திலிருந்து எடுத்துவிட்டார்கள். அதனை இந்துக்கள் யாரும் பின்பற்ற வேண்டும் என்று சொல்வதாகத் தெரியவில்லை. சங்கராச்சாரியாரை பின்பற்றும் இந்துக்கள் எத்தனை சதம்? முஸ்லீம்கள் எல்லோரும் கொமேய்னியை பின்பற்றுகிறார்களா?

சங்கராச்சாரிகள் பொதிக்கும் இந்துமத வேதங்களை திருத்த முடியுமென்றால் யாரால் திருத்தப்பட்டன? யார் அந்த அதிகாரத்தைக் கொடுத்தார்கள். இப்படி இந்து மதச்சட்டங்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதால்தான் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது.

இந்தியாவில் இந்துக்கள் 80% சதவீதம் என்று சொல்லிக் கொள்கிறோமே? இந்துக்கள் என்றால் அவர்களுக்கான அடிப்படை தகுதிகள் எவை?

Kanagavelan said...

//மனுவை ஹிந்து மத சட்டங்களிலிருந்து வெளியேற்றியது யார்? எப்போது என்ற ஆதாரத்தை தர முடியுமா?//
மனுவை இந்து மதச் சட்டங்களிலிருந்து வெளியேற்றியது டாக்டர் அம்பேத்கார். வருடம் 1950. இன்றைய இந்து மதச்சட்டங்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளவற்றை தொகுத்தது டாக்டர் அம்பேத்கார் அவர்களே.

அம்பேத்கார் எழுதிய இந்து சட்டத்தின்படியே எல்லா இந்துக்களும்(சங்கராச்சாரியார் உட்பட) நடக்கவேண்டும்.

ஆக, ரிக் யசூர் சாம அதர்வண வேதங்களில் இடைச்செருகல் இருக்கின்றன என்பதற்கு ஆதாரம் இல்லையா?


//பேரீச்சை மரப் பட்டைகளிலும்,வெண்மையான கல் பலகைகளிலும்,பதனிடப் பட்ட தோல்களிலும்,கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். இவ்வாறு எழுதப் பட்டவை முகமது நபியின் வீட்டில் வைத்து பாதுகாக்கப் பட்டது.//
நபிகள் கூறிய அனைத்து மொழிகளும் எலும்புகளிலும், பலகைகளிலும் எழுதப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.//குர்ஆனை மனனம் செய்தவர்களையும் அழைத்து,எழுதப் பட்ட ஏடுகளையும் சரி பார்த்து அத்தியாயங்களை வரிசைக் கிரமமாக எழுதும் பணியை மேற் கொண்டார்.இப்படி பாதுகாக்கப் பட்ட மூலப் பிரதி ஆட்சியாளரான அபூபக்கரின் வசம் வைத்து பாதுகாக்கப் பட்டது.//

அப்படி எழுதப்பட்ட அனைத்தும் இந்த குரான் தொகுப்பில் இருக்கின்றன என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.

சுவனப்பிரியன் said...

திரு கனக வேலன்!

//ஆக, ரிக் யசூர் சாம அதர்வண வேதங்களில் இடைச்செருகல் இருக்கின்றன என்பதற்கு ஆதாரம் இல்லையா?//

ரிக் வேதத்தில் தீ வழிபாடு அனுமதிக்கப் பட்டுள்ளது. யஜீர் வேதத்தில் இயற்கை பொருட்களை வணங்க தடை செய்யப் பட்டுள்ளது. ஒரே இறைவனிடமிருந்து இரண்டு கருத்துகள் எப்படி வர முடியும்? இது இடைச் செருகல் இல்லையா?

//நபிகள் கூறிய அனைத்து மொழிகளும் எலும்புகளிலும், பலகைகளிலும் எழுதப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.//

முகமது நபிக்கு தெரிந்தது அரபி மொழி ஒன்றுதான். அவர்களின் தோழர்களுக்கும் அரபி மொழி மட்டுமே தெரியும்.குர்ஆன் இறங்கியதும் அரபி மொழி. இப்படி இருக்க குறிப்புகள் அனைத்தும் அரபியில் தானே இருக்கும். குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!

//அப்படி எழுதப்பட்ட அனைத்தும் இந்த குரான் தொகுப்பில் இருக்கின்றன என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.//

முகமது நபி வீட்டில் பாதுபாக்கப் பட்ட குர்ஆன், தோழர்களில் அவர்களாக தம் வீடுகளில் சிறிய சிறிய அத்தியாயங்களாக சேர்த்து வைத்த குர்ஆன், குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த நபித் தோழர்களின் வாக்கு மூலம் அனைத்தையும் ஒன்றாக்கி சரிபார்க்கப் பட்டு பிறகு தான் ஆட்சியாளர் அபூபக்கரிடம் கொடுக்கப் பட்டது. இதில் தவறு வருவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லையே!

சுவனப்பிரியன் said...

வருகைக்கு நன்றி திரு புலிப்பாண்டி!

//இந்து மதச்சட்டங்கள் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதால்தான் நாளுக்கு நாள் அழிந்து வருகிறது.

இந்தியாவில் இந்துக்கள் 80% சதவீதம் என்று சொல்லிக் கொள்கிறோமே? இந்துக்கள் என்றால் அவர்களுக்கான அடிப்படை தகுதிகள் எவை?//

இதற்கான பதிலை இந்து மத நண்பர்களிடம் இருந்து நானும் ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

Muse (# 5279076) said...

>>>பொய்களைச் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும்.<<<

பொய் இல்லை. அறியாமை. சில வருடங்களுக்கு முன்பு ஒரு புத்தகத்தில் படித்த இந்த பொய்யை பற்றி விளக்கமறிய நேசகுமாரிடமும் இது பற்றி கேட்டேன். அவர் என் கருத்து தவறு என்று கூறினார். தவறை திருத்தி விளக்கமளித்த தங்களுக்கும் நன்றி.

>>>பெண்களை தரிசு நிலத்துக்கு ஒப்பிட்டு பேசிய சங்கராச்சாரியார் பிறகு<<<

சங்கராச்சாரியார் - இந்த பெயரை அடிக்கடி கேள்விப்படுகிறேன். யார் அவர்? ;-)

>>>>மறுமை நாளில் இறைவன் முன்னால் நீங்கள் 'இறைவா! சுவனப் பிரியனுக்கு இவ்வளவு உண்மை தெரிந்திருந்தும் எங்களுக்கு தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.' என்று என் மேல்் வழக்கு தொடரக் கூடாது என்பதற்காக அனைத்தையும் கூறி நான் தப்பித்துக் கொண்டேன். சொர்க்கமா நரகமா என்பதை உங்கள் முடிவுக்கே விட்டு விட்டேன். <<<<

எனக்கு சொர்க்கமும் கிடையாது. நரகமும் கிடையாது. சத்யமான அந்த பரப்ரம்மத்தோடு கலந்துவிடுவேன். அல்லது என் மனம் விரும்பினால் மீண்டும் பிறந்து ஞானத்தை அடைய முயல்வேன். அப்படி நேருமானால் ஹிந்து மதம் பற்றிய தெளிவான உண்மையை அறியும் வாய்ப்பு பெற்று, அவ்வுண்மைகளால் உய்வடைய எல்லாம் வல்ல இறையான அல்லாவை வேண்டுகிறேன். நீங்களும் எனக்கு இந்த வரத்தை தர அல்லாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிக்கொள்கிறேன்.

>>>>அது எப்படி பொய்களை மட்டுமே சொல்லுவேன் என்று ஏதாவது விரதமா?<<<

ஐயா எனக்கு இஸ்லாம் பற்றி அதிகம் தெரியாது. எனவே நான் கூறுவதில் தவறேதேனும் இருக்குமானால் அதை திருத்திக்கொள்வது என் ஈமான். ஒரு ஹிந்துவாகவிருப்பதால் என் பலத்தை மட்டுமல்ல பலவீனங்களையும் ஒத்துக்கொள்கிறேன். திருத்திக்கொள்ளவும் முயல்கிறேன். இதற்கு உதவி செய்தால் உங்களுக்கும் நன்றி.

>>> முகமதுநபி இறைவனை ஆணாக உருவகப் படுத்தியதாக எதில் படித்தீர்கள்? விளக்கம் தர மடியுமா?<<

இந்த கட்டுரையின் தலைப்பை பதிலாகத் தருகிறேன்:

இந்து மதம் போதிப்பதும் ஒரே இறைவனைத்தான்! (இது ஆண்பால்தானே?)

நான் பார்த்த ஒரு குரான் மொழிபெயர்ப்புகளில் அல்லாவை அவன், இவன் என்று ஆணாகவே உருவகப்படுத்தியிருந்தார்கள். அவள், இவள் என்று சொல்லவில்லை. ஹிந்து மத வேதங்களைப்போல அது, இது, இறை என்றும் குறிப்பிடவில்லை.

தங்களின் விளக்கம் இந்த விஷயத்தில் என் அறிவை பலப்படுதும் என நம்புகிறேன்.


>>>இறைவன் சொன்ன சட்டதிட்டங்களை கடை பிடித்துத் தான் மனிதர்கள் வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. <<<

இறைவன் (இதுவும் ஆண்பால்தானே? என் கண்ணிற்கு ஒன்றும் ஆகவில்லையே?) சொன்னாரா? எப்போது? எதில்? நான் சன் டிவியும், ஜெயா டிவியும் அடிக்கடி பார்ப்பேன். அதில் இது பற்றி எந்த செய்தியும் வரவில்லையே. அவருடைய அட்ரெஸ் கொடுத்தீர்களென்றால் அவரை நேரில் பார்த்து பேச விருப்பமாகவிருக்கிறது.

யாரோ ஒரு தனி மனிதர் அவருடைய அனுபவத்தைக் கூற, அது மட்டும்தான் உண்மையென்றும், எல்லா உண்மைகளும் கண்டறியப்பட்டுவிட்டதாகவும் கூறுவது நாடுகளை பிடிக்கவும், மக்களை அடிமையாக வைக்கவும் மட்டுமே உதவும். இந்த கீழ்த்தரமான செயலை உயர்வான ஒன்றாக என்னால் கருத முடியவில்லை. நாம் பின்பற்றுவதாலேயே ஒன்று உயர்ந்தது என்பது குழந்தைகளின் அறிவுத் திறனுக்கு ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விஷயம்தான். சொன்ன பேச்சைக் கேட்காவிட்டால் பூச்சாண்டி பிடித்துவிடுவான் என்பதற்கும் நான் சொன்னதை கேட்காவிட்டால் உனக்கு நரகம் என்று கூறுவதற்கும் ஒரு வித்தியாசமுமில்லை.

>>>> அவரவர் தங்களின் ஆன்மீக அனுபவத்திற்கு எற்ப இறையை வழி பட்டுக் கொள்ளலாம் என்றால் முடிவில் குழப்பம் தான் மிஞ்சும்.<<<

கண்டிப்பாக இல்லை. இதில் என்ன குழப்பமிருக்கிறது? எனக்கு வெண்மை நிறம் பிடிக்கும். என் தம்பிக்கு பச்சை நிறம் பிடிக்கும். ஒவ்வொருவருடைய குணமும், விருப்பங்களும் வேறு வேறாகவிருக்குமாறுதான் அந்த ஆதிபராசக்தி படைத்துள்ளாள். அவளின் படைப்பான நீங்கள் அல்லாவை முஹம்மதின் வழியாக வணங்க விரும்புகிறீர்கள். நானோ அல்லாவை எங்கும் நிறைந்த பரப்ரம்மமாக அறிகிறேன். என் நண்பருக்கோ கடவுளின் தேவையோ, பக்தியோ இல்லை, நாத்திகராகவும், நல்ல மனிதராகவும் இருக்க விரும்புகிறார். ஹிந்து மதம் இப்படி எல்லாம் இருக்க அனுமதிக்கிறது. இதை அனுமதிக்காதவர்களை எவ்வளவு பெரிய மத, சமூகத் தலைவராகவிருந்தாலும் இடது கையால் விலக்கிவிட்டு முன்னேறுகிறது.

>>>> ஒருவர் 'நான் சாய்பாபா பக்தர்' என்கிறார், மற்றொருவர் ' கல்கி விஜயகுமார்தான் என் கடவுள்' என்கிறார், வேறொருவரோ சங்கராச்சாரியாரை காலில் விழுந்து வணங்குகிறார். இதெல்லாம் உங்களுக்கு வேடிக்கையாக படவில்லையா?<<<

இஸ்லாமியர்களில் சிலர் தங்களை சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் ஷியா குழுவென்றும், சிலரோ வகாபிகள் என்றும் கூறுகிறார்கள். சூபிக்களோ ஹிந்து மத கருத்துக்களின் உண்மையால் பாதிக்கப்பட்டு இறையை தன் காதலனாகவும், தங்களை அவரின் காதலியாகவும் காண்கிறார்கள். வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

>>>> அனைத்தையும் படைத்து பரிபாலிக்கக் கூடியவன் ஒருவன் இருக்கிறான். இப்படித்தான் நடக்க வேண்டும் என்று அவ்வப்போது ஒவ்வொரு சமூகத்துக்கும் வேதங்களையும் இறைவன் கொடுத்துக் கொண்டிருக்கிறான்.<<<

"அவ்வப்போது" கொடுத்துக் கொண்டிருக்கிறானா (மீண்டும் ஆண்பால்)? அப்படியானால் இறுதி வேதம் என்ற ஒன்று இல்லை என்கிற உண்மை உங்களுக்கும் தெரியுமா? உங்களின் மனத்தெளிவு சந்தோஷமளிக்கிறது.

>>> இதை எல்லாம் தூர எறிந்து விட்டு 'நான் என் அனுபவத்திற்கேற்ப இறைவனை வழிபடுவேன்' என்பது இறைவனுக்கு நீங்கள் பாடம் சொல்லிக் கொடுப்பது போல் ஆகாதா? <<

ஆகாது. அல்லாவின் விருப்பப்படிதான் நாம் இயங்குகிறோம் என்பதில் எனக்கு கருத்து வேறுபாடில்லை. அல்லா என்னை பரப்பிரம்மத்தை வணங்க செய்கிறாள். வேறு ஒருவரை முருகப் பெருமானாக வணங்க செய்கிறாள். உங்களை குரான் கூறியபடி வணங்கசெய்கிறாள். இதை எதிர்த்து நீங்கள் வழிபடுவதாலேயே அந்த வழியைத்தான் பின்பற்றவேண்டும் என்பது அந்த ஆதிபராசக்தி, அண்டங்களை படைத்து, காத்து, மாற்றி லீலைகள் செய்பவளான அல்லாவை ஏளனம் செய்வது போலவும், (உங்கள் பாஷையில்) பாடம் சொல்லிக்கொடுக்க முயற்சி செய்வது போலவும் ஆகிவிடும்.

Muse (# 5279076) said...

>>>> யஜீர் வேதத்தில் இயற்கை பொருட்களை வணங்க தடை செய்யப் பட்டுள்ளது.<<<

அந்த குறிப்பிட்ட பகுதியை இங்கே கூறுங்களேன்.

Muse (# 5279076) said...

>>> ஒரே இறைவனிடமிருந்து இரண்டு கருத்துகள் எப்படி வர முடியும்? <<<

உங்கள் மகனுக்கு நீங்கள் அப்பா. தம்பிக்கோ அண்ணா. நீங்கள் ஒருவரா, பலரா?

சுவனப்பிரியன் said...

வருக மாயவரத்தான்!

//ஜெயலலிதா வாழ்க.

மாயவரத்தில் அதிமுக தொண்டர்களுக்காக விருந்து வைத்த என் அம்மா வாழ்க!//
இது என்ன கூத்து! தலைப்புக்கு சம்பந்தம் இல்லாமல்! சரி உங்களுக்கும் பதில் வைத்திருக்கிறேன்.

'அவர்களைப் பெற்றவர்கள் தவிர மற்றவர் அவர்களின் தாய் ஆக முடியாது. அவர்கள் வெறுக்கத் தக்க சொல்லையும் பொய்யையும் கூறுகின்றனர்' - குர்ஆன் 58 :2

உங்களையும் உங்களைப் போன்ற லட்சோப லட்சம் ரத்தத்தின் ரத்தங்களையும் பார்த்து பேசுவது போல் இருக்கிறதல்லவா இந்த குர்ஆன் வசனம்! ஜெயலலிதா வாகட்டும் கருணாநிதி யாகட்டும் அனைவருக்கும் அவரவருக்கு சொத்து சேர்ப்பது தன் பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகளையும் அமைச்சர்களாக்கி அழகு பார்ப்பது இதைத் தானே நாம் பார்த்து வருகிறோம்.இந்த ஆட்சியாளர்கள் சுகபோகமாக இருக்க மறத் தமிழன் உயிரையும் கொடுக்கத் தயாராகிறான்.தாயாகவும் தெய்வமாகவும பூஜித்து சுயமரியாதையை விடுத்து அவர்களின் காலிலும் விழுகிறான். இதற்கு பெயர்தான் பகுத்தறிவாதமோ?

Kanagavelan said...

//
/நபிகள் கூறிய அனைத்து மொழிகளும் எலும்புகளிலும், பலகைகளிலும் எழுதப்பட்டிருந்தன என்பதற்கு ஆதாரம் தாருங்கள்./

முகமது நபிக்கு தெரிந்தது அரபி மொழி ஒன்றுதான். அவர்களின் தோழர்களுக்கும் அரபி மொழி மட்டுமே தெரியும்.குர்ஆன் இறங்கியதும் அரபி மொழி. இப்படி இருக்க குறிப்புகள் அனைத்தும் அரபியில் தானே இருக்கும். குழப்பத்தில் இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!//

நபி கூறிய அனைத்து மொழிகளும் என்று நான் குறிப்பிட்டது பாஷைகள் அல்ல. அவ்வாறு தோன்றியமைக்கு காரணமான என் வரிகளுக்கு வருந்துகிறேன். நபி கூறிய குரான் வரிகள் அனைத்தும் என்று இருந்திருக்கவேண்டும். நபிகள் கூறிய அனைத்து குரான் வரிகளும் எலும்புகளிலும் பலகைகளிலும் தோல்களிலும் எழுதப்பட்டன என்பதற்கு ஆதாரம் தாருங்கள்.


//முகமது நபி வீட்டில் பாதுபாக்கப் பட்ட குர்ஆன், தோழர்களில் அவர்களாக தம் வீடுகளில் சிறிய சிறிய அத்தியாயங்களாக சேர்த்து வைத்த குர்ஆன், குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த நபித் தோழர்களின் வாக்கு மூலம் அனைத்தையும் ஒன்றாக்கி சரிபார்க்கப் பட்டு பிறகு தான் ஆட்சியாளர் அபூபக்கரிடம் கொடுக்கப் பட்டது. இதில் தவறு வருவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லையே!//

நடுவில் காணாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனவே. சேமித்து வைத்திருந்தது கரையான் அரித்திருக்கலாம். ஆடுமாடு தின்றிருக்கலாம். காணாமல் போயிருக்கலாம். நீங்கள் சொல்வது ஊகமே தவிர, ஆதாரம் இல்லையே.

சுவனப்பிரியன் said...

திரு ம்யூஸ்!

//நான் பார்த்த ஒரு குரான் மொழிபெயர்ப்புகளில் அல்லாவை அவன், இவன் என்று ஆணாகவே உருவகப்படுத்தியிருந்தார்கள். அவள், இவள் என்று சொல்லவில்லை. ஹிந்து மத வேதங்களைப்போல அது, இது, இறை என்றும் குறிப்பிடவில்லை//

'அவர்கள் கூறுவதை விட்டும் அவன் தூயவன்.மிக மிக உயர்ந்தவன்.'

குர்ஆன் -17 :43

'அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறாதீர்கள்! அல்லாஹ்வே அறிவான்! நீங்கள் அறிய மாட்டீர்கள்.'

குர்ஆன் - 16 :74

இறைவன் எப்படிப் பட்டவன். அவன் ஆணா பெண்ணா என்றெல்லாம் அந்த இறைவன் சொல்லாத போது நாமாக எப்படி கற்பனை செய்து கொள்ள முடியும்? அது என்றால் உயர்திணை ஆகாது. அவர்கள் என்றால் பன்மையாகி விடும். பல கடவுள்கள் என்றாகி விடும்.'தன்னை யாரும் பெறவுமில்லை:யாராலும் பெறப்படவுமில்லை' என்று சொல்வதிலிருந்து மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு அப்பாற் பட்டவனே இறைவன். அப்படி ஒரு சொல் தமிழில் இல்லை. எனவே நாம் விளங்கிக் கொள்வதற்காக மொழி பெயர்ப்பாளர்கள் அவன் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்கள். குர்ஆனின் எந்த இடத்திலும் இறைவன் தன்னை ஆண் என்று குறிப்பிட்டுக் கொள்ளவில்லை. .

சுவனப்பிரியன் said...

திரு ம்யூஸ்!

'உண்மை தெரியாமல் இஸ்லாத்தை விமரிசித்து விட்டேன்' என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. குர்அன் தமிழ் மொழி பெயர்ப்பை தொடர்ந்து படித்து வாருங்கள். மூன் ப்பளிகேஷன் வெளியிட்ட பி.ஜைனுல்லாபுதீன் அவர்களின்மொழி பெயர்பப்பில் தமிழும் எளிமையாக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

//இறைவன் (இதுவும் ஆண்பால்தானே? என் கண்ணிற்கு ஒன்றும் ஆகவில்லையே?) சொன்னாரா? எப்போது? எதில்?//

'இந்த குர்ஆனே எனது நேரான வழி, எனவே இதனையே பின் பற்றுங்கள். பல வழிகளைப் பின் பற்றாதீர்கள். அவை அவனது ஒரு வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும்.நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.'

குர்ஆன் - 6 : 153

உங்கள் விருப்பத்திற்கு பல வழிகளையும் பின் பற்றாதீர்கள் வழி தவறி விடுவீர்கள் என்று இறைவன் தெளிவாக விவரிக்கிறான்.இதற்கு முன்னால் வந்த வேதங்களை ஏன் பின் பற்றக் கூடாது என்பதன் காரணத்தையும் நான் முன்பே விளக்கியிருக்கிறேன்.

//இது பற்றி எந்த செய்தியும் வரவில்லையே. அவருடைய அட்ரெஸ் கொடுத்தீர்களென்றால் அவரை நேரில் பார்த்து பேச விருப்பமாகவிருக்கிறது.//

தமிழகத்தில் இருந்தால் விண் டிவியிலும் அய்ரோப்பா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் நீங்கள் இருந்தால் டான் டிவியிலும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழச்சி ஒளிபரப்பப் படுகிறது. அதை தொடர்ந்து பார்த்து வாருங்கள். பல உண்மைகள் விளங்கும்.

மூன் பப்ளிகேஷன், இரண்டாவது மாடி,போஸ்ட் ஆபீஸ் தெரு, மண்ணடி,சென்னை-600001 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்களை நேரிலும் சந்தித்து மார்க்க விளக்கங்கள் பெறலாம்.

Muse (# 5279076) said...

>>>'உண்மை தெரியாமல் இஸ்லாத்தை விமரிசித்து விட்டேன்' என்று ஒத்துக் கொண்டதற்கு நன்றி. குர்அன் தமிழ் மொழி பெயர்ப்பை தொடர்ந்து படித்து வாருங்கள். மூன் ப்பளிகேஷன் வெளியிட்ட பி.ஜைனுல்லாபுதீன் அவர்களின்மொழி பெயர்பப்பில் தமிழும் எளிமையாக்கப் பட்டுள்ளது. உங்களுக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
<<<

சுவனப்பிரியன், உண்மையை அறிவதும், அறிய விழைவதும் மனித இயல்பு. அந்த வகையில் தெரியாததை தெரியாது என்று ஒத்துக் கொள்வதுதான் கற்றுக்கொள்வதற்கான முதல்படி (ஹிந்து மதம் அப்படித்தான் கூறுகிறது). மூன் ப்பளிகேஷன் வெளியிட்ட பி.ஜைனுல்லாபுதீன் அவர்களின்மொழி பெயர்பப்பில் வெளியாகியுள்ள குரானை இங்கே பெங்களூரில் வாங்க முயற்சிப்பேன். நன்கு படிக்கவும் விரும்புகிறேன். இன்ஷா அல்லாஹ்!!

>>>இறைவன் எப்படிப் பட்டவன். அவன் ஆணா பெண்ணா என்றெல்லாம் அந்த இறைவன் சொல்லாத போது நாமாக எப்படி கற்பனை செய்து கொள்ள முடியும்? அது என்றால் உயர்திணை ஆகாது. அவர்கள் என்றால் பன்மையாகி விடும். பல கடவுள்கள் என்றாகி விடும்.'தன்னை யாரும் பெறவுமில்லை:யாராலும் பெறப்படவுமில்லை' என்று சொல்வதிலிருந்து மனிதர்களின் வாழ்க்கை முறைக்கு அப்பாற் பட்டவனே இறைவன். அப்படி ஒரு சொல் தமிழில் இல்லை. எனவே நாம் விளங்கிக் கொள்வதற்காக மொழி பெயர்ப்பாளர்கள் அவன் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்கள். குர்ஆனின் எந்த இடத்திலும் இறைவன் தன்னை ஆண் என்று குறிப்பிட்டுக் கொள்ளவில்லை<<

1. பிறகு எதற்காக எப்போதும் இறையை அவன், இவன் என்று கூற வேண்டும்? அவள் என்று ஏன் கூறவில்லை?

2. இதற்கு ஆணானவன் பெண்ணைவிட உயர்ந்தவன் என்ற கருத்து காரணமாக இருக்கிறதா?

என்னுடைய கேள்விக்கு தங்கள் பதில் மழுப்பலாகத்தான் இருக்கிறது. என்னுடைய கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை என்றே தோன்றுகிறது.

உங்களுடைய பதிலுக்கு என்னுடைய கேள்வியை பொருத்த முயற்சி செய்திருக்கிறீர்கள்.

3. தமிழில் சரியான வார்த்தை பிரயோகம் இல்லை என்று கூறுகிறீர்கள். மூல மொழியான அரபியில் கடவுளை எங்கனம் அழைக்கிறார்கள்? அவ்வார்த்தைகள் பால் அடிப்படியிலானதா, அல்லது பால் சாரா வார்த்தையா? பால் சாரா வார்த்தை என்றால் அது அஹ்றிணையைக் குறிக்கிறதா? அல்லது இறையை குறிக்க இம்மூன்றும் தாண்டிய புனிதமான வார்த்தை பிரயோகத்தை அரபி பயன்படுத்துகிறதா?

4. வேறு ஒரு சந்தேகம். பெண்களுக்கும் சுவனத்தில் இடமுண்டு என்பது தெரிந்து சந்தோஷமடைந்தேன். அவர்களுக்கு ஆண்களுக்கு கிடைக்கின்ற அதே மாதிரியான சௌகரியங்கள் கிடைக்கின்றனவா? உதாரணமாக அடிக்கடி ஹிந்துத்துவவாதிகளால் கூறப்படும் ஏழு அழகான, சூடான, என்றுமே கன்னியராக உள்ள, சூப்பர் சுந்தரிகள். சுவனத்தை சென்றடையும் பெண்களுக்கு அந்த அளவு அழகாக இல்லாவிட்டாலும், சுமாரான ஏழு ஆண்கள் கிடைப்பார்களா?

5. அல்லது அவர்களுக்கும் ஏழு சுந்தரிகள்தானா?

>>>உங்கள் விருப்பத்திற்கு பல வழிகளையும் பின் பற்றாதீர்கள் வழி தவறி விடுவீர்கள் என்று இறைவன் தெளிவாக விவரிக்கிறான்.<<<

1. என்னுடைய கேள்வியே சொன்னது இறைவன் என்பதை எங்கனம் நீங்கள் நிரூபிக்கிறீர்கள்? நீங்களோ, குரானோ, அல்லது ஜெய்னுல்லாபுதீனோ கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு நீங்கள் தரும் அத்தாக்ஷி என்ன? இது நம்பிக்கையின் அடிப்படையில் செய்ய வேண்டிய விஷயம் என்றால், "அல்லா என்று ஒரு கடவுள் இல்லை" என்பதும் ஒரு நம்பிக்கைதானே?

2. ஏறத்தாழ இதே கருத்தைத்தானே வேறு சில மதங்களும் கூறுகின்றன. அப்படியிருக்கையில் உங்களுடையது மட்டுமே சரியானது என்பதை தாங்கள் நடைமுறையில் எங்கனம் வலியுறுத்தி, நிச்சயம் செய்கிறீர்கள்?

3. இதை நடைமுறைப்படுத்த தாங்கள் (இஸ்லாம்) மேற்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?

4. இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சமுதாயத்தில் (பூலோகத்தில்) எங்கனம் நடத்தப்படவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது?

5. இறைவனின் பெயரால், மதத்தின் அடிப்படையில் அப்பாவி பொதுமக்களை கொல்பவர்கள், குண்டு வைப்பவர்கள், மனிதர்களைக் கொல்லுபவர்கள், வன்முறையில் ஈடுபவர்கள் அனைவருக்கும் நரகம்தான் கிடைக்கும் என்று நான் கருதுகிறேன். உங்களுடைய கருத்து என்ன?

>>>> தமிழகத்தில் இருந்தால் விண் டிவியிலும் அய்ரோப்பா அல்லது மத்திய கிழக்கு நாடுகளில் நீங்கள் இருந்தால் டான் டிவியிலும் 'இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்' என்ற நிகழச்சி ஒளிபரப்பப் படுகிறது. அதை தொடர்ந்து பார்த்து வாருங்கள். பல உண்மைகள் விளங்கும்.<<<

நான் இருக்கும் பெங்களூரின் ஒரு பகுதியில் இவை தெரிவதில்லை. ஆனால், க்யூ டிவி தெரிகிறது. அவ்வப்போது பார்க்கிறேன். ஒரு மார்க்க அறிஞர் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். பிரமிக்க வைக்கும் நினைவாற்றல். எல்லா மத நூல்களிலிருந்தும் அத்தியாயம், பக்கம் முதலான தகவல்களைக் கூட, அம்மதக் கருத்துக்களோடு கூறுகிறார். ரசிக்கும்படியாகவும், நம்முடைய புத்தியை உபயோகிக்க ஒரு நொடி மறந்தாலும் அவர் கூறுவதை நம்பிவிடக்கூடிய அபாயத்துடனும் அது நன்றாகவே இருக்கிறது. என்ன, அவர் சொல்லுகிற பதில் தவறானது என்று கூற வாய்ப்பில்லை என்பது தெரியாமல் நடத்திவருகிறார்கள்.

>>> மூன் பப்ளிகேஷன், இரண்டாவது மாடி,போஸ்ட் ஆபீஸ் தெரு, மண்ணடி,சென்னை௬00001 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு பி.ஜெய்னுல்லாபுதீன் அவர்களை நேரிலும் சந்தித்து மார்க்க விளக்கங்கள் பெறலாம்.<<

நான் கடவுளின் அட்ரெஸ் கேட்டதற்கு நீங்கள் கொடுத்த பதில் இது. ஹிந்துக்களில் சிலர் ஷிர்டி, புட்டபர்த்தி சாயி பாபாக்களையும், கல்கியையும் வணங்குவதை குறை கூறும் தாங்கள் கடவுளின் அட்ரெஸ்ஸாக பி.ஜெய்னுல்லாபுதீனின் அட்ரெஸ்ஸைக் கொடுத்துள்ளீர்கள்.

எந்த மதத்தவராகவிருந்தாலும் மனித மனம் ஒன்று போலத்தான் சிந்திக்கிறது. செயல்படுகிறது. ஆனால் ஒரே டிஸ்ட்ரிப்யூட்டரிடமிருந்து, ஒரே விதமான அரிசியை, ஒரே விதமான விலையில் வாங்கும் இரு வேறு கடைக்காரர்கள் தங்கள் கடை அரிசிதான் சிறந்தது என்று கூறுவதற்கும், நீங்கள் இஸ்லாம் "மட்டுமே" சிறந்தது என்று கூறுவதற்கும் வித்யாசம் இல்லை. யார் நன்கு மார்கெட்டிங் செய்கிறார்களோ (இந்த மார்கெட்டிங்கில் பலவகை உண்டு) அவர்களிடம் மக்கள் செல்கிறார்கள். அதிக மக்கள் செல்வதாலேயே ஒரு கடையின் அரிசி மற்ற கடையை விட உயர்வானது என்று கூறுவது அறிவீனம்.

சுவனப்பிரியன் said...

திரு கனக வேலன்!
//நடுவில் காணாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனவே. சேமித்து வைத்திருந்தது கரையான் அரித்திருக்கலாம். ஆடுமாடு தின்றிருக்கலாம். காணாமல் போயிருக்கலாம். நீங்கள் சொல்வது ஊகமே தவிர, ஆதாரம் இல்லையே.//

குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த நபித் தோழர்களின் வாக்கு மூலம் அனைத்தையும் ஒன்றாக்கி சரிபார்க்கப் பட்டு பிறகு தான் ஆட்சியாளர் அபூபக்கரிடம் கொடுக்கப் பட்டது. இதில் தவறு வருவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லையே!

முகமது நபி காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்தவர்கள் ஒருவர இருவர்அல்ல. நூற்றுக் கணக்கானவர்.அவர்கள் அனைவரையும் அழைத்து குர்ஆனை ஒப்புவித்து பிறகு தான் சரிபார்க்கப் பட்டது. எனவே இதில் தவறு வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இன்றும் கூட முஸ்லிம் கிராமங்களில் முழுகுர்ஆனையும் மனனம் செய்த அனேக வாலிபர்களை பார்க்க முடியும்.

சுவனப்பிரியன் said...

திரு ம்யூஸ்!

//இஸ்லாமியர்களில் சிலர் தங்களை சுன்னி பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றும், சிலர் ஷியா குழுவென்றும், சிலரோ வகாபிகள் என்றும் கூறுகிறார்கள். சூபிக்களோ ஹிந்து மத கருத்துக்களின் உண்மையால் பாதிக்கப்பட்டு இறையை தன் காதலனாகவும், தங்களை அவரின் காதலியாகவும் காண்கிறார்கள். வேடிக்கையாகத்தான் இருக்கிறது.//

ஷியா,சன்னி,வகாபி,சூஃபி என்ற பிரிவுகள் இருந்தாலும் அனைவருக்கும் குர்ஆன் ஒன்றுதான்.இறைத் தூதர் முகமது நபிதான். பிறகு ஏன் பிரிவு என்றால் முகமது நபி குர்ஆனுக்கு கொடுத்த விளக்கத்தை முறையாக விளங்காமல் தங்கள் இஷ்டத்துக்கு விளங்கிக் கொண்டதனாதல் வந்த விளைவுகளே நாம் மேலே பார்த்தது.

ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரிவில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுள். அத்தனைப் பேருக்கும் கொள்கைகளிலும் மிகுந்த வேறுபாடு. ஆனால் இந்த பல தெய்வக் கொள்கையை இந்து மத வேதங்கள் கண்டிக்கின்றன. எனவே மதத்தின் அடிப்படையையே பெரும்பான்மையானவர்கள் மறந்து விட்டார்கள். இதற்கு காரணம் மத விவகாரங்களில் கொடுக்கப் பட்ட அளவுக்கதிகமான சுதந்திரம். இதைத்தான் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்.

Muse (# 5279076) said...

>>> ஷியா,சன்னி,வகாபி,சூஃபி என்ற பிரிவுகள் இருந்தாலும் அனைவருக்கும் குர்ஆன் ஒன்றுதான்.இறைத் தூதர் முகமது நபிதான். பிறகு ஏன் பிரிவு என்றால் முகமது நபி குர்ஆனுக்கு கொடுத்த விளக்கத்தை முறையாக விளங்காமல் தங்கள் இஷ்டத்துக்கு விளங்கிக் கொண்டதனாதல் வந்த விளைவுகளே நாம் மேலே பார்த்தது.

ஆனால் இந்து மதத்தில் உள்ள பிரிவில் ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுள். அத்தனைப் பேருக்கும் கொள்கைகளிலும் மிகுந்த வேறுபாடு. <<<

அதாவது பல புத்தகங்களாலும், பல கடவுள்களாலும்,பல குருமார்களாலும், பல்வேறுபட்ட கருத்துக்களாலும் (உங்கள் கருத்துப்படி) ஏற்படும் குழப்பங்கள் நீக்கப்படவேண்டும். தவிர்க்கப்படவேண்டும்.

ஆனால், ஒரே புத்தகத்தையும், ஒரே கடவுளையும், ஒரே இறைத்தூதரையும் வைத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வது சரியானது. விரும்பவேண்டியது. சரிதான்.

>>> ஆனால் இந்த பல தெய்வக் கொள்கையை இந்து மத வேதங்கள் கண்டிக்கின்றன. <<<

இல்லை. இருப்பது ஒன்றுதான் என்று கூறுவதோடு, அதை பல வடிவங்களிலும் வணங்குவது ஏற்றுக்கொள்ளக்கூடியதே என்றுதான் ஹிந்து மதம் கூறுகிறது.

>>> எனவே மதத்தின் அடிப்படையையே பெரும்பான்மையானவர்கள் மறந்து விட்டார்கள்.<<<

உண்மை. மதத்தின் அடிப்படையை பெரும்பாலானாவர்கள் மறந்து விட்டார்கள். அதனால்தான் இந்த சமூகம் பலவீனமடைந்து தங்களின் மத கருத்துக்களைப்பற்றி ஒன்றும் தெரியாமல் கீழ்த்தரமான சில பழக்கங்களுக்கு இடம் கொடுத்துவிட்டது. பிற மத கருத்துக்களின் ஆதிக்கத்தால் தன் மதக் கருத்துக்களில் மாற்றக்கூடியவைகளைக்கூட மாற்றக்கூடாது என அடம் பிடிக்கும் குழந்தையாகவுள்ளது.

>>இதற்கு காரணம் மத விவகாரங்களில் கொடுக்கப் பட்ட அளவுக்கதிகமான சுதந்திரம்.<<<

நீங்கள் ஆபிரகாமிய மதங்களின் அடிப்படையில் ஹிந்து மதத்தை அணுகுகிறீர்கள். ஹிந்து மதத்தில் தனிமனித சுதந்திரம் இருப்பதால்தான் அது இந்த அளவு நுணுக்கமாகவுள்ளது. ஆனால் சமுதாயமானது பிற ஆதிக்க மதங்களின் பாதிப்பால் குறுகிய கருத்துக்கள் தன்னை பாதுகாக்கும் என்ற தவறான எண்ணத்தில் சுருங்கியுள்ளது. அதை விரிவடையச் செய்யவும், உண்மையை விளக்கவும்தான் ஷங்கரர், ராமானுஜர், மத்வர், விவேகானந்தர், ஜெ கிருஷ்னமூர்த்தி, ரமண மகரிஷி, மேல்மருவதூர் அடிகள், நாராயண குரு போன்றோர் அவதரிக்கின்றார்கள். அவர்களின் காலில் ஹிந்துக்கள் விழுவதால் அவர்கள் மனமும் விசாலமாகிறது.

அனைத்து கேள்விகளும் பதிலை கண்டடையவில்லை என்றாலும், சில கேள்விகளுக்காவது பதிலளித்தது எனக்கு சந்தோஷமளிக்கிறது. என்னுடைய சந்தேகங்களுக்கு கோபம் கொள்ளாமல் பதிலளித்ததற்கு மிக்க வந்தனங்கள்.

சுவனப்பிரியன் said...

திரு ம்யூஸ்!

//2. இதற்கு ஆணானவன் பெண்ணைவிட உயர்ந்தவன் என்ற கருத்து காரணமாக இருக்கிறதா?//

நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறீர்கள். அலுவலக வேலைகளையும் பார்த்தாக வேண்டும். நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது பதிலளிக்கிறேன்.இப.போது ஆண் பெண் பிரச்சனைக்கு வருவோம்.

''பெண்கள் உங்களுக்கு ஆடை.நீங்கள் அவர்களுக்கு ஆடை'

குர்ஆன் 2 :187

'பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன. அவர்களை விட ஆண்களுக்கு ஓர் உயர்வு உண்டு. அல்லாஹ் மிகைத்தவன்: ஞானமிக்கவன்'

குர்ஆன் - 2 : 228

மேலே உள்ள வசனங்களின் முலம் ஆணும் பெண்ணும் சமம் என்று கூறும் குர்ஆன் ஒரு சில சந்தர்ப்பங்களில் பெண்ணை விட ஆண் உயர்வாகிறான் என்றும் கூறுகிறது.கணவன் மனைவி இரண்டு பேரும் இல்லறத்தில் ஈடுபட்டாலும் உண்ண உணவு, உடுக்க உடை,இருக்க இருப்பிடம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கணவன் தான் மனைவிக்குத் தர வேண்டும் என்ற இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதற்கு காரணம் இரு பாலாருக்கும் உள்ள உடல் அமைப்பு. நீங்களும நானும் கீழாடை மட்டுமே அணிந்து கொண்டு சில நேரங்களில் வெளியில் கூட செல்லாம். வித்தியாசமாக பார்க்க மாட்டார்கள். அதே ஒரு பெண் 'பெண் உரிமை' என்று கூறிக் கொண்டு மேலாடை எதுவும் இல்லாமல் வந்தால் இந்த சமூகம் அங்கீகரிக்குமா? முன்னேற்றமடைந்த அமெரிக்க சமூகம் தான் இதற்கு ஒத்துக் கொள்ளுமா? ஆண்கள் செய்யும் பார வண்டி இழுப்பது,மூட்டைகள் தூக்குவது போன்ற கடினமான வேலைகளை பெண்களை செய்யச் சொல்லி ஒரு மாதத்திற்கு பிறகு அவர்களின் தோற்றத்தை பாருங்கள். ரெஸ்லிங் விளையாடும் அமெரிக்கப் பெண்களைப் பாருங்கள். அந்த பெண்களிடம் இருக்கும் பெண்மை அவர்களை விட்டு சென்றிருக்கும். எனவே பெண்கள் மென்மையானவர்கள். அவர்களின் உடலுக்கு ஏற்றவாறு தான் நாம் வேலையும் கொடுக்க முடியும்.

அதே போல் ஆணும் பெண்ணும் சமசம் என்று கூறிக் கொண்டு ஆணாகிய நான் பத்து மாதம் குழந்தையை சுமக்கவேண்டும் என்று சொன்னால் என்னை பைத்தியக் காரன் என்று சொல்ல மாட்டீர்களா?

இஸ்லாம் பெண்களுக்கு கொடுத்திருக்கும் உரிமைகளை 'பெண்ணின் கருவறை சுருங்கி விரிதல்' என்ற பதிவில் சென்று பாருங்கள். வரிசையாக பட்டியலிட்டுள்ளேன்.

'சிலரை மற்றும் சிலரைவிட அல்லாஹ் மேன்மை படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள். ஆண்களுக்கு அவர்கள் பாடுபடடடதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்!அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.'

குர்ஆன் - 4 : 32

மேற் கண்ட வசனத்தின் மூலம் ஆணோ பெண்ணோ ஒருவரை ஒருவர் பார்த்து பொறாமை படாமல் அவரவர்க்கு கொடுக்கப் பட்ட கடமைகளை சரிவர செய்து வருவதே நிம்மதியான வாழ்வைத் தரும்.

சுவனப்பிரியன் said...

திரு ம்யூஸ்!

//என்னுடைய கேள்வியே சொன்னது இறைவன் என்பதை எங்கனம் நீங்கள் நிரூபிக்கிறீர்கள்? நீங்களோ, குரானோ, அல்லது ஜெய்னுல்லாபுதீனோ கூறுவதை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கு நீங்கள் தரும் அத்தாக்ஷி என்ன? இது நம்பிக்கையின் அடிப்படையில் செய்ய வேண்டிய விஷயம் என்றால், "அல்லா என்று ஒரு கடவுள் இல்லை" என்பதும் ஒரு நம்பிக்கைதானே?

2. ஏறத்தாழ இதே கருத்தைத்தானே வேறு சில மதங்களும் கூறுகின்றன. அப்படியிருக்கையில் உங்களுடையது மட்டுமே சரியானது என்பதை தாங்கள் நடைமுறையில் எங்கனம் வலியுறுத்தி, நிச்சயம் செய்கிறீர்கள்?

3. இதை நடைமுறைப்படுத்த தாங்கள் (இஸ்லாம்) மேற்கொள்ளும் வழிமுறைகள் என்னென்ன?

4. இக்கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் சமுதாயத்தில் (பூலோகத்தில்) எங்கனம் நடத்தப்படவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது?

5. இறைவனின் பெயரால், மதத்தின் அடிப்படையில் அப்பாவி பொதுமக்களை கொல்பவர்கள், குண்டு வைப்பவர்கள், மனிதர்களைக் கொல்லுபவர்கள், வன்முறையில் ஈடுபவர்கள் அனைவருக்கும் நரகம்தான் கிடைக்கும் என்று நான் கருதுகிறேன். உங்களுடைய கருத்து என்ன?//

என்னுடைய பதில் :

1.அவ்வாறு செயல்பட குர்ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறது. குர்ஆன் இறை வேதம் தான் என்று நான் நம்புகிறேன்.

2.மற்றவையும் இறை வேதம் என்றாலும் அவற்றில் மனிதக் கரங்கள் புகுந்து விட்டதாக குர்ஆன் சொல்கிறது. அது உண்மைதான் என்றும் விளக்கியும் இருக்கிறேன்.

3.உண்மையை எடுத்துச் சொல்வது நம் கடமை.மற்றவர்கள் மனம் புண்படாத வகையில் நம் கருத்துக்களை கொண்டு செல்ல வேண்டும். இதற்கு எடுத்துக் காட்டாக குர்ஆனில் பல தூதர்களின் வாழ்க்கை முறை சொல்லப் பட்டுள்ளது.

4.'உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு'

-குர்ஆன் 109 :6

5.'அவர்கள் எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள்.விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான்.'

குர்ஆன் 25 : 68

அப்பாவிகளை குண்டு வைத்து தகர்ப்பவர்கள் கண்டிப்பாக நரகவாசிகளே!

Muse (# 5279076) said...

>>>> 1.அவ்வாறு செயல்பட குர்ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளை இடுகிறது. குர்ஆன் இறை வேதம் தான் என்று நான் நம்புகிறேன்.

2.மற்றவையும் இறை வேதம் என்றாலும் அவற்றில் மனிதக் கரங்கள் புகுந்து விட்டதாக குர்ஆன் சொல்கிறது. அது உண்மைதான் என்றும் விளக்கியும் இருக்கிறேன். <<<<

இரண்டுமே நம்பிக்கை சார்ந்த விஷயங்கள்தான்.

>>>> 4.'உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு' <<<

பிறகு மத மாற்றம் எதற்கு?

>>> அப்பாவிகளை குண்டு வைத்து தகர்ப்பவர்கள் கண்டிப்பாக நரகவாசிகளே! <<<

உங்களது தைரியத்தைப் பாராட்டுகிறேன். மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்களே என்பதை நிரூபித்திருக்கிறீர்கள்.

Muse (# 5279076) said...

நமது வார்த்தையாடலை என்னுடைய வலையில் (http://bliss192.blogspot.com) தனிப்பதிவாகப் போட்டுள்ளேன்.

சுவனப்பிரியன் said...

திரு ம்யூஸ்!

//பிறகு மத மாற்றம் எதற்கு?//

நன்மையிலும் இறை அச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள். வரம்பு மீறலிலும், பாவத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்.இறைவனை அஞ்சுங்கள். இறைவன் கடுமையாகத் தண்டிப்பவன்.

குர்ஆன் 5 :2

'வேதம் கொடுக்கப் பட்டோரிடமும், எழுதப் படிக்கத் தெரியாதோரிடமும் 'இஸ்லாத்தை ஏற்கிறீர்களா?' எனறு கேட்பீராக! அவர்கள் இஸ்லாத்தை ஏற்றால் நேர் வழி பெற்றனர். புறக்கணித்தால் எடுத்துச் சொல்வது மட்டுமே உமக்குக் கடமை.இறைவன் அடியார்களைப் பார்ப்பவன்.'

குர்ஆன் - 3 :20

மேலே சொன்ன வசனங்களின் மூலம் இறைச் செய்தியை எடுத்துச் சொல்வது அனைத்து முஸ்லிம்களின் கடமை. அப்படி சொல்லும் போது கோபத்தில் எதிர்த் தரப்பு ஏதேனும் கடுமையான வார்த்தைகளை வீசினால் 'உங்கள் மார்க்கம் உங்களுக்கு! என் மார்க்கம் எனக்கு' என்று ஒதுங்கி விட வேண்டும் என்று குர்ஆன் கட்டளை இடுகிறது. மற்ற மதத்தவர்களை விடுங்கள். முஸ்லிம்களுக்குள்ளேயே இஸ்லாத்தை எடுத்துச் சொல்ல வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம். எனவே மேலே உள்ள வசனங்கள் முஸ்லிம்களுக்கும் பொருந்தும்.

சுவனப்பிரியன் said...

திரு ம்யூஸ்!

தனிப் பதிவாகவே போட்டதற்கு வாழ்த்துக்கள்!

பல கேள்விகளுக்கு நேரமின்மையால் பதில் சொல்ல முடியவில்லை. நேரம் கிடைக்கும் போது அவ்வப்போது வருகிறேன். ஜெய்னுல்லாபுதீனையும் கல்கியையும் ஒன்றாக்கி இருக்கிறீர்கள். ஜெய்னுல்லாபுதீனின் கருத்து குர்ஆன் ஹதீஸீக்கு மாற்றமாக இருந்தால் அந்த கணமே ஜெய்னுல்லாபுதீனின் கருத்துக்களை தூக்கி எறிந்து விடுவேன்.இது தான் என் நிலை.

சுவனப்பிரியன்.

dondu(#4800161) said...

போலி மாயவரத்தான், போலி காசி ஆகியோர் இட்டப் பின்னூட்டங்களை ஒரு சாதாரண எலிக்குட்டி சோதனை கூட செய்யாது, அவர்கள் பின்னூட்டங்களுக்கு பதில் வேறு கொடுக்கிறீர்கள்.

இந்த அடிப்படை அறிவு இல்லாமல் நீங்க என்னத்த இந்துமதத்தப் பத்தி பேசி, என்னத்த ஸ்தாபிக்கிறது?

சம்பந்தப்பட்ட டிஸ்ப்லே பெயர்களின் சுட்டியைத் தொடர்ந்து போய்ப் பாருங்கள். உங்களை போலி டோண்டு நன்றாகவே சதாய்த்திருக்கிறார்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதற்கு சரியான பிளாக்கர் எண் 4800161 எலிக்குட்டி சோதனையில் தெரித, என்னுடைய போட்டொ இந்தப் பக்கத்தில் ஹ்டெரிதல் ஆகிய இரண்டு சோதனைகளும் சேர்ந்து வெற்றி பெற வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுவனப்பிரியன் said...

//போலி மாயவரத்தான், போலி காசி ஆகியோர் இட்டப் பின்னூட்டங்களை ஒரு சாதாரண எலிக்குட்டி சோதனை கூட செய்யாது, அவர்கள் பின்னூட்டங்களுக்கு பதில் வேறு கொடுக்கிறீர்கள்.

இந்த அடிப்படை அறிவு இல்லாமல் நீங்க என்னத்த…..//

வாங்க டோண்டு அண்ணா!

உங்க அளவுக்கு கணிணி அறிவு எனக்கில்லைங்கண்ணா! சவூதியிலே உட்கார்ந்து கிட்டு ஏழு கிளைகளின் வரவு செலவுகளைப் பார்க்கிறதுக்கே எனக்கு நேரம் போதலைங்கண்ணா! இதுல நான் என்னத்தப் போயி எலிக்குட்டி சோதனையெல்லாம் பண்றதுங்கண்ணா!போலி டோண்டுவுக்கு துபாயில ரசிகர் மன்றம் எல்லாம் தொடங்கிட்டாங்கண்ணா! அசல் நீங்க இதெல்லாம் கவனிக்காம இருக்கப் படாதுங்கண்ணா! என்னாங்கண்ணா நான் சொல்லுறது! :- (

dondu(#4800161) said...

"இதுல நான் என்னத்தப் போயி எலிக்குட்டி சோதனையெல்லாம் பண்றதுங்கண்ணா!"

அதாவது, சொன்னாலும் தெரியாது, தனக்காலும் தெரியாது, அப்படித்தானே? ஐயா, போலியாக இன்னொருவர் பெயரில் அசிங்கமாக ஒருவர் வலைப்பூ ஆரம்பிக்கிறார், அதே பெயரில் உங்கள் பதிவில் பின்னூட்டமிடுகிறார். கணினி அறிவு இல்லாததால் அதை அனுமதித்து விட்டீர்கள். பரவாயில்லை. ஆனால் அதை இன்னும் அப்படியே வைத்து அழகு பார்ப்பது என்ன நியாயம் சார்? போலி செய்தது ஒரு வகையான கொலை. இன்னொருவரின் நல்ல பெயரைக் கொலை செய்கிறார். அதை அப்படியே வைத்துக் கொள்வதில் நீங்கள் accessory after the fact ஆகிறீர்கள். உங்களுக்கு உங்கள் உங்கள் குரான்படி என்ன தண்டனை என்பதையும் மார்க்கப் பெரியவர்களிடம் கேட்டு, அது புரிந்தால் எழுதவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kanagavelan said...

At 5:54 AM, சுவனப்பிரியன் said...

திரு கனக வேலன்!
//நடுவில் காணாமல் போவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றனவே. சேமித்து வைத்திருந்தது கரையான் அரித்திருக்கலாம். ஆடுமாடு தின்றிருக்கலாம். காணாமல் போயிருக்கலாம். நீங்கள் சொல்வது ஊகமே தவிர, ஆதாரம் இல்லையே.//

குர்ஆன் முழுவதையும் மனனம் செய்த நபித் தோழர்களின் வாக்கு மூலம் அனைத்தையும் ஒன்றாக்கி சரிபார்க்கப் பட்டு பிறகு தான் ஆட்சியாளர் அபூபக்கரிடம் கொடுக்கப் பட்டது. இதில் தவறு வருவதற்கு எந்த வாய்ப்புகளும் இல்லையே!

முகமது நபி காலத்திலேயே குர்ஆனை மனனம் செய்தவர்கள் ஒருவர இருவர்அல்ல. நூற்றுக் கணக்கானவர்.அவர்கள் அனைவரையும் அழைத்து குர்ஆனை ஒப்புவித்து பிறகு தான் சரிபார்க்கப் பட்டது. எனவே இதில் தவறு வருவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை. இன்றும் கூட முஸ்லிம் கிராமங்களில் முழுகுர்ஆனையும் மனனம் செய்த அனேக வாலிபர்களை பார்க்க முடியும்.//

திரு சுவனப்பிரியன்,

இதனை என் நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பி வைத்தார். இந்த குரான் வரிகள் குரான் மாற்றப்பட்டிருப்பதாக சொல்கின்றதே. இதன் எண்கள் தவறென்றால் கூறுங்கள். திருத்திக்கொள்கிறேன்.


A'isha (Allah be pleased with her) reported that it had been revealed in the Qur'an that ten clear sucklings make the marriage unlawful, then it was abrogated by five sucklings and Allah's Apostle (saw) died and before that time it was found in the Qur'an. (Sahih Muslim, Vol. 2, p.740).

சுவனப்பிரியன் said...

திரு கனகவேலன்!
//A'isha (Allah be pleased with her) reported that it had been revealed in the Qur'an that ten clear sucklings make the marriage unlawful, then it was abrogated by five sucklings and Allah's Apostle (saw) died and before that time it was found in the Qur'an. (Sahih Muslim, Vol. 2, p.740).//
ஹதீஸ்களைப் பொறுத்தவரை அது பற்றிய அறிவு நமக்கு அதிகம் இருந்தால்தான் சரியான முறையில் விளங்கிக் கொள்ள முடியும். குர்ஆனை படித்த மாத்திரத்தில் யாரும் விளங்கிக் கொள்ளலாம். ஏனெனில் அது இறைவனின் வார்த்தை. ஹதீஸ்களைப் பொறுத்த வரை இஸ்லாத்தின் வளர்ச்சியை காண சகிக்காத யூதர்களில் சிலர் இஸ்லாமாக மதம் மாறுவதாக நடித்தனர். பிறகு 'முகமது நபி இப்படி சொன்னார்' 'முகமது நபி அப்படி சொன்னார்' என்றெல்லாம் குர்ஆனுக்கு மாற்றமாக பல பொய்களை பரப்பினார்கள். இதைப் பார்த்த மார்க்க அறிஞர்கள்அதையெல்லாம் சரி கண்டு பொய் எது உண்மை எது என்ற என்று தரம் பிரித்தார்கள். பொய்யாக மதம் மாறுவதாக நடித்தது யார் என்பதெல்லாம் பின்னாளில் தெரிய வந்தது. அறிவிப்பாளர் நம்பகமானவராக இருந்தால் அந்த ஹதீஸ் ஏற்றுக் கொள்ளப்படும். பொய்யர்,ஞாபக மறதி உடையவர,, குறிப்பிட்ட நபரை பார்த்தே இருக்காதவர் போன்றோர் அறிவிக்கும் ஹதீஸ்கள் பலகினமானவை என்று தள்ளப்படும்.

குர்ஆனை மனனம் செய்த நபித்தோழர்கள் பலரும் பலமுறை சரிபார்த்து தொகுக்கப் பட்டதே குர்ஆன்.நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸின் படி சில ஆயத்துக்கள் நீக்கப் பட்டிருக்குமானால் இது பற்றிய குறிப்புகள் கண்டிப்பாக வந்திருக்கும். நபித் தோழர்களும் இதனை சுட்டிக் காட்டியிருப்பார்கள். அப்படி எதுவும் வரவில்லை. குர்ஆனில் வரும் கருத்துக்களுக்கும் நபி மொழிக்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதால் இது யூதர்களின் இட்டுக் கட்டிய ஹதீஸ் என்பது நமக்கு நன்றாக விளங்கும்.

சுவனப்பிரியன் said...

திரு டோண்டு sir!

உங்களை தவறாக விமரிசித்து வந்த எந்த பின்னூட்டத்தை நான் அனுமதித்தேன் என்று சொல்ல முடியுமா? நீங்கள் தானே மாயவரத்தான் பேரில் வந்ததும், காசி பெயரில் வந்ததும் போலி என்று சொன்னீர்கள்? இதில் உங்கள் பெயர் வருவதற்கு வேலையே இல்லையே சார்? இப்படி ஒவ்வொன்றையும் பரிசோதித்துக் கொண்டிருந்தால் மற்ற வேலைகளுக்கு நேரம் இருக்காது அல்லவா? அடுத்து இத்தனை பேர் இருக்கும் போது உங்களை மட்டும் அவர் சுற்றி சுற்றி ஏன் வருகிறார்? அந்த அளவு அவர் மனம் காயப்படும்படி என்ன பதிவைப் போட்டீர்கள் என்று சிந்தியுங்களேன்.

gilli said...

மிக்க நன்றி சுவனப்பிரியன்,

எல்லோறுக்கும் சரியான விலக்கங்கள் நன்று.
வாதத்திர்குதான் மருந்து விதண்டாவாததிர்கு அல்ல

அதனால் முரன்பாடான கேள்விகள்க்கு பதில் சொல்ல தேவையில்லை.

Kanagavelan said...

//நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸின் படி சில ஆயத்துக்கள் நீக்கப் பட்டிருக்குமானால் இது பற்றிய குறிப்புகள் கண்டிப்பாக வந்திருக்கும். நபித் தோழர்களும் இதனை சுட்டிக் காட்டியிருப்பார்கள். அப்படி எதுவும் வரவில்லை. குர்ஆனில் வரும் கருத்துக்களுக்கும் நபி மொழிக்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதால் இது யூதர்களின் இட்டுக் கட்டிய ஹதீஸ் என்பது நமக்கு நன்றாக விளங்கும்.//

யூதர்கள் இட்டுக்கட்டிய ஹதீஸை ஏன் இன்னமும் இந்த சகி முஸ்லீம் புத்தகத்தில் இருக்கிறது. நீங்களே இது இட்டுக்கட்டிய ஹதீஸ் என்பது நன்றாக விளங்கும் என்று சொல்வதை ஏன் இன்னமும் சகி முஸ்லிம் புத்தகத்தில் வைத்திருக்கிறார்கள்?

எனக்கென்னமோ குரானில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பதைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

dondu(#4800161) said...

"நீங்கள் தானே மாயவரத்தான் பேரில் வந்ததும், காசி பெயரில் வந்ததும் போலி என்று சொன்னீர்கள்?"
நான் கூறியதற்கப்புறமாவது எலிக்குட்டியை வைத்துப் பார்த்திருக்க வேண்டாமா நீங்கள்? ஒரு நொடியில் செய்ய வேண்டிய வேலைக்கு இப்படி அழும்பு செய்கிறீர்களே.

"இப்படி ஒவ்வொன்றையும் பரிசோதித்துக் கொண்டிருந்தால் மற்ற வேலைகளுக்கு நேரம் இருக்காது அல்லவா?"
எந்த மற்ற வேலைகள் ஐயா? இம்மாதிரி பொறுப்பற்ற பதில்கள் போடுவதா?

போலிப் பின்னூட்டம் என்பது எந்த முறையில் பார்த்தாலும் வெறுக்கத் தக்கதே. அது ஆபாசமாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல. என் பெயரில் அவதூறு என்பதற்காகக் நான் கூறவில்லை. வேறு இரண்டு மதிப்புக்குரிய வலைப்பதிவாளர்கள் பெயரில் போலியாகப் பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் அனுமதித்து அழகு பார்க்கிறீர்கள். உம்முடைய மன நிலையில் ஏதோ பிறழ்வு இருக்கிறது.

அதுவும் தமிழ்மணத்தை நமக்கெல்லாம் கொடுத்த காசிக்கு நீங்கள் செய்தது நன்றி மறந்த செயல். இப்படி நடக்கத்தான் உங்கள் மார்க்கம் உங்களுக்கு சொல்லிக் கொடுத்தது என்றால் அதை உங்கள் அல்லாதான் காப்பாற்ற வேண்டும்.

"அடுத்து இத்தனை பேர் இருக்கும் போது உங்களை மட்டும் அவர் சுற்றி சுற்றி ஏன் வருகிறார்? அந்த அளவு அவர் மனம் காயப்படும்படி என்ன பதிவைப் போட்டீர்கள் என்று சிந்தியுங்களேன்."
உங்கள் கேள்வியில் பிழை உள்ளது. இம்முறை போலி என்னைத் தாக்கவில்லை. வேறு இருவரைத் தாக்கியிருக்கிறான். அவனுக்கு மனம் என்று இருந்தால்தானே காயம் எல்லாம் படுவதற்கு? உங்களுக்கு மனசாட்சி இருக்கிறதா என்பதுதான் இப்போதைய என் கேள்வி.

இப்பின்னூட்டத்தின் நகல் எனது "முரட்டு வைத்தியம் - 4" என்னும் பதிவிலும் பின்னூட்டமாக இடப்படுகிறது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Kanagavelan said...

A'isha (Allah be pleased with her) reported that it had been revealed in the Qur'an that ten clear sucklings make the marriage unlawful, then it was abrogated by five sucklings and Allah's Apostle (saw) died and before that time it was found in the Qur'an. (Sahih Muslim, Vol. 2, p.740).

உங்கள் புத்தகத்திலேயே பல மாற்றங்களை செய்ததை நீங்களே எழுதிக்காட்டிக்கொண்டு, மற்ற மதப்புத்தகங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன எழுதுவது சரியா?

சுவனப்பிரியன் said...

திரு கனக வேலன்!

//எனக்கென்னமோ குரானில் நிறைய மாற்றங்கள் செய்திருப்பதைத்தான் குறிப்பிடுகிறார்கள் என்று தோன்றுகிறது.//

"சில சொற்களை இவர் (முகமது) நம் மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்"

-குர்ஆன் 69 : 44-45-46

மேற்கண்ட குர்ஆன் வசனத்தின் மூலம் குர்ஆனில் கை வைத்தால் முகமது நபியையே தண்டிப்பேன் என்று இறைவன் கூறுகிறான். முகமத நபியின் நிலையே இவ்வாறு இருக்க மற்றவர்கள் குர்ஆனில் கூட்டியும் குறைத்தும் இருப்பார்கள் என்று எவரும் நம்ப முடியுமா? இன்னொரு இடத்தில் "இந்த குர்ஆனை நாமே அருளினோம்: நாமே பாதுகாப்போம" என்று இறைவனே கூறுகிறான். இறைவனை நம்பும் முஸ்லிம்கள் அந்த இறைவனின் வாக்கையும் உளமாற நம்புகிறார்கள்.

அடுத்து இந்த குர்ஆன் முகமது நபியே தன் சொந்த கற்பனையில் கூறியிருந்தால் மேற் கண்ட வசனத்தை வசதியாக நீக்கியிருக்கலாம்.அப்படி எந்த நீக்கமும் இல்லாமல் இந்த வசனம் இடம் பெற்றுள்ளதால் இது இறை வேதம் தான் என்பது மேலும் உறுதியாகிறது.

மேலும் ஹதீதுகளைத் தொகுத்தவர்கள் கேள்விப் பட்ட ஹதீதை பதிந்து விடுவார்கள். அதன் பிறகு அதன் தரம் நம்பகத்தன்மை போன்றவற்றைத் தரம் பிரித்து நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இது போன்ற பலகீனமான ஒன்றிரண்டு ஹதீஸ்கள் புகாரியிலும் இடம் பெற்றுள்ளன. எனவே இது விஷயத்தில் குழப்பம் வர வாய்ப்பே இல்லை.

சுவனப்பிரியன் said...

வருகைக்கு நன்றி திரு கில்லி!

Kanagavelan said...

//இது போன்ற பலகீனமான ஒன்றிரண்டு ஹதீஸ்கள் புகாரியிலும் இடம் பெற்றுள்ளன. //

பலகீனமான ஹதீஸ் என்றால் என்ன? இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸை பலகீனமான ஹதீஸ் என்று கூறுகிறீர்களா? அது நிச்சயமாக இட்டுக்கட்டப்பட்டது என்று தெரிந்தே ஏன் அதனை ஹதீஸ் என்று வைத்திருக்க வேண்டும். ஆக அதனை வைத்தவர்கள் அது பலமான ஹதீஸ் என்றுதான் வைத்திருக்கிறார்கள். பின்னால் வந்தவர்கள் அதனை பலவீனமான ஹதீஸ் என்று சொல்லிவிடுகிறார்கள்.

அந்த புகாரி ஹதீஸ்கள் என்ன என்ன? கூறமுடியுமா?

//"சில சொற்களை இவர் (முகமது) நம் மீது இட்டுக் கட்டியிருந்தால் இவரை வலது கையால் தண்டித்திருப்போம். பின்னர் அவரது நாடி நரம்பைத் துண்டித்திருப்போம்"

-குர்ஆன் 69 : 44-45-46//

இந்த வசனமும் செருகப்பட்டிருக்கலாமே?

//"இந்த குர்ஆனை நாமே அருளினோம்: நாமே பாதுகாப்போம" //

இதுவும் செருகப்பட்டிருக்கலாமே?

//அடுத்து இந்த குர்ஆன் முகமது நபியே தன் சொந்த கற்பனையில் கூறியிருந்தால் மேற் கண்ட வசனத்தை வசதியாக நீக்கியிருக்கலாம்.//
தான் எழுதியதை எல்லோரும் நம்பவேண்டும் என்பதற்காக கூறியிருக்கலாமே?

சுவனப்பிரியன் said...

திரு கனக வேலன்!

ஒரு தாய் தன் மகனிடம் இவர்தான் தகப்பன் என்று சொல்கிறாள். அதை அந்த மகனும் ஒத்துக் கொள்கிறான். இது உலக நியதி. அதை விடுத்து நான் எப்படி நம்புவது? என்று குதர்க்கமாக கேட்டால் அந்த பையனின் சிந்தனையில் கோளாறு என்று தான் முடிவுக்கு வருவோம். அது போல் தான் இருக்கிறது உங்களின் ஒவ்வொரு கேள்வியும். குர்ஆன் இறை வேதம் தான். முகமது நபி இறைத்தூதர்தான் என்று பல சான்றுகளோடு முன்பே விளக்கியிருக்கிறேன். வாதத்துக்கு பதில் இருக்கிறது. விதண்டாவாதத்துக்கு பதில் இல்லை.

'இந்தக் குர்ஆன் இறைவன் அல்லாதோரிடமிருந்து இட்டுக் கட்டப் பட்டதாக இல்லை. மாறாக தனக்கு முன் சென்றதை உண்மைப் படுத்துவதாகவும் தெளிவுபடுத்தும் வேதமாகவும் உள்ளது.இதில் எந்த சந்தேகமும் இல்லை. இது அகிலத்தின் இறைவனிடமிருந்து வந்தது.' -குர்ஆன் 10 :37

'இதனை முகமது இட்டுக் கட்டி விட்டார்' என்று அவர்கள் கூறுகிறார்களா? 'நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இது போன்ற ஒரு அத்தியாயத்தையேனும் கொண்டு வாருங்கள். இறைவனையன்றி உங்களால் இயன்றவர்களை துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள்' என்று முகம்மதே கூறுவீராக! - குர்ஆன் 10 :38

'அவர்கள் எந்தச் சான்றைக் கண்டாலும் அவற்றை நம்ப மாட்டார்கள்.நேரான வழியை அவர்கள் கண்டால் அதை தங்களது வழியாகக் கொள்ள மாட்டார்கள்.வழி கேடான பாதையை அவர்கள் கண்டால் அதை தமது வழியாக்கிக் கொள்வார்கள்.அவர்கள் நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியதும் அவற்றை அலட்சியப் படுத்தியதும் இதற்குக் காரணம்.' குர்ஆன் 7: 146

என்ற குர்ஆன் வசனங்களைக் கூறி உங்கள் வாதத்துக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்.

Kanagavelan said...

என் பின்னூட்டத்தை வெளியிடாததற்கு காரணம் ஏதும் உண்டா? தெரிவியுங்கள் திருத்திக்கொள்கிறேன்.

சுவனப்பிரியன் said...

திரு கனக வேலன்!

வழக்கமாக எழுதுவதை விட சற்று கோபத்தில் பினனூட்டம் வந்திருந்தது. எனவே தான் பிரசுரிக்கவில்லை. முதலில் நீங்கள் குர்ஆன் வேறு முகமது நபியின் வார்த்தை வேறு என்பதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.முகமது நபியின் காலத்திலிருந்து இன்று வரை ஒரு வாக்கியமும் மாற்றப்படவில்லை என்று நானும் மற்றும் பல சகோதரர்களும் விளக்கியுள்ளோம். ஆனால் ஹதீதுகளில் ஒரு சில யூதர்களால் முகமது நபியின் பெயரால் தவறாக 'முகமது நபி சொன்னார்' என்று பலதும் இட்டுக் கட்டப் பட்டுள்ளது. அவை யெல்லாம் எவை என்று இனம் காணப்பட்டு ஒதுக்கப் பட்டு விட்டது.ஆனால் அவை அளைத்தும் இட்டுக் கட்டப் பட்டவை என்ற குறிப்புடன் இன்றும் ஹதீதுகளில் இருக்கும். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகத் தெளிவாகவே இருக்கிறார்கள்.

'இந்து மதத்தை ஏன் விமரிசிக்கிறீர்கள்' என்று கேட்டுள்ளீர்கள். நான் விமரிசிக்கவில்லை. உங்கள் மதத்தின் கருத்துக்களும் இஸ்லாத்தின் கருத்துக்களும் ஒத்துப் போவதைத்தான் விளக்கியிருக்கிறேன். இரண்டையும் சொன்னது ஒரே இறைவன்தான் என்றும் கூறியிருக்கிறேன்.இதனால் இந்துக்களும் முஸ்லிம்களும் இன்னும் நெருங்கி வர வாய்ப்பு இருக்கிறதல்லவா?

அடுத்து வலைப் பதிவில் நேசகுமாரும், மலர் மன்னனும், கால்கரி சிவாவும் இஸ்லாத்தை விமரிசிக்க வில்லையா? அவர்களை விடவா நான் அதிகம் விமரிசித்து விட்டேன்!அவர்கள் பகையை வளர்க்கிறார்கள். நான் நட்பை வளர்க்கிறேன். என் பதிவுகள் அனைத்தும் இஸ்லாத்தைப் பற்றி தவறாக விளங்கியிருக்கும் மாற்று மதத்தவர்களுக்கு அவர்களின் எண்ணம் தவறு என்பதை விளக்குவதற்காகவே!

தொடர்ந்து நீங்களும் அழகிய முறையில் எழுதி வாருங்கள். நானும் பதிலளிக்கிறேன் : பிரசுரிக்கிறேன் :

என்றும் அன்புடன்

சுவனப் பிரியன்.

Kanagavelan said...

//சற்று கோபத்தில் பினனூட்டம் வந்திருந்தது. //

நான் கோபமாக எழுதியது போன்று எனக்கு தோன்றவில்லை. நான் எழுதியதை வெளியிட்டு அதில் நான் என்ன கோபமாக எழுதியிருக்கிறேன் என்று காட்டியிருக்கலாமே?

//நீங்கள் குர்ஆன் வேறு முகமது நபியின் வார்த்தை வேறு என்பதை நன்றாக விளங்கிக் கொள்ளுங்கள்.//

இது முஸ்லீம்கள் நம்புவது. ஆனால் மற்றவர்கள் குரானை முகம்மது எழுதியது என்றுதானே கருதுவார்கள்?

சுவனப்பிரியன் said...

திரு கனகவேலன்!

//ஒரே ஒரு வித்தியாசம் மற்ற வேதங்களில் மனிதக் கருத்துகளும் இடைச் செருகலாக சேர்க்கப் பட்டு விட்டன. குர்ஆன் அத்தகைய இடைச் செருகல் இல்லாமல் பாதுகாக்கப் பட்டுள்ளது.//- சுவனப்பிரியன்

//இந்து வேதங்களில் இடைச்செருகல் உண்டு என்பதற்கு ஆதாரம் கூறுங்கள்//

இந்து வேதங்களில் இடைச் செருகல் உண்டு என்பதற்கு ஆதாரம் கேட்டிருக்கிறீர்கள். இந்து மத வேதங்களில் மிகவும் பழமையானது என்று சொல்லப்படும் ரிக் வேதத்தை எடுத்துக் கொள்வோம். இந்த வேதத்தில் உள்ள புருஷசுக்தா என்ற பிரிவில் அத்தியாயம் 13 -ல் வரும் வரிகளைத் தருகிறேன்
brAhmaNo asya mukhamAseet | bAhoo rAjanya: krta: |
ooru tadasya yad vaishya | padbhyAm shoodro ajAyata || 12 ||
(asya) His (mukham) mouth (Aseet) became (brAhmaNa:)
the Brahmin, (bAhoo) his arms (krta:) were made (rAjanya:)
Kings. (yad) what were(asya ooru) his thighs, (tad) they were
made into (vaishya:) the merchants, (padbhyAm) and from his feet
(shoodro) were the servants (ajAyata) born.
அதாவது மாறக்கூடிய ஸ்மிருதியும், மாறாத ஸ்ருதியும் (வேதமும்) மனிதனை பிறப்பினால் பிரிக்கவே செய்கின்றன. மனிதனின் பலவேறு தொழில்களின் பேரில் இப்படி தோற்றம் பெற்றதாக யாரும் இதை ‘திரிக்க‘ முடியாது. ஏனெனில் உலகம் தோற்றம் பெறுகையிலேயே மனிதன் இப்படியான சாதிகளாக தோற்றம் பெறுவதாக மனுவும், புருஷ சூக்தமும் சொல்லுகின்றன. ஆனால் அறிவியலை நம்புகிறவர்கள் மனிதனாகி, காட்டாளாகி, சமூகமாய் மாறுகையில் தான் இந்த வேலைஅடிப்படை பிரிவினைகள் தோன்றியிருக்கமுடியும் என்று அறிவார்கள். ஆனால் புருஷ சூக்தம் மற்றும் மனுவின் நோக்கம் மனிதனை அவனது சாதி அடிப்படையிலான பிறப்பே மிக இயல்பானதாகவும், கடவுளின் திட்டமாகவும், மாற்ற முடியாததாகவும் காட்டவும் அதனடிப்படையில் சாதியச் சுரண்டலை காலங்காலமாக நிலைநிறுத்தவும்தான் என்பதை கொஞ்சம் யோசிக்கத் தெரிந்த, நேர்மையான அணுகுமுறை கொண்ட எவரும புரிந்து கொள்ள முடியும். நம்மையெல்லாம் படைத்த இறைவன் இப்படி ஒரு கருத்தை மனிதர்களைப் பார்த்து கூறியிருக்க முடியுமா? அப்படி கூறியிருந்தால் அவன் இறைவன் ஆக முடியுமா? எனவே இங்கும் மனிதக் கரம் புகுந்திருப்பது தெரியவில்லையா?

இது ஒரு புறம் இருக்க கோவில்களிலும் மற்ற சமய சடங்குகளிலும் தமிழ் ஏன் தள்ளி வைக்கப் பட்டிருக்கிறது?இதற்கான காரணத்தை வேதமே சொல்கிறது பாருங்கள்.

சுக்ல யஜீர் வேதம்

'தஸ்மாது ப்ராம்மணேன நம்லேச்சித வை : நம அப்பாஷித வை...'

'தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தது.நல்லவர்களை தேவர்கள் என்றும் கெட்டவர்களை அசுரர்கள் என்றும் வேதம் கூறுகிறது. இதன்படி சமஸ்கிரத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள். மிலேச்ச பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள். அதாவது சமஸ்கிரத பாஷை அல்லாத மொழி பேசியோர் தோற்றார்கள். எனவே தெய்வீகமான சமஸ்கிரத பாஷை பேசிய பிராமணர்கள் உயர்ந்தவர்கள். மற்ற பாஷைகள் தெய்வீகத் தன்மை அற்றது என்று வேதம் கூறுகிறது. இதையே தான் மனுவும் தனது மனுஸ்ருமிதியிலே கூறுகிறார்.

- அக்னிஹோத்ரம் இராமானுஜ தாத்தாசாரியார்

உலகில் உள்ள மொழிகளின் மூலங்களை படைத்தவன் இறைவன். அப்படி இருக்க இறைவனே ஒரு மொழியை உயர்ந்தது என்றும் மற்ற மொழியை தாழ்ந்தது என்றும் கூறுவானா? இடையில் மனிதக் கரம் புகுந்திருக்கிறது என்பது தெரிகிறதல்லவா?

பகவத் கீதை!

பகவத் கீதையும் வருணாஸ்ரமத்தை தாங்கிப் பிடிப்பதாகத்தான் இருக்கிறது. பெண்களும் சூத்திரர்களும் பாவ யோனியிலேயே பிறப்பதாக பெண்களையும், சூத்திரர்களையும் இழிவுபடுத்துகிறது. இதைப்பற்றி மேலும் விபரங்கள் அறிய திரு ஜெயமோகனின் திண்ணை கட்டுரைகளும், திரு தங்கமணியின் பதிவில் கீதை சம்பந்த பட்டவையும் மிகவும் உபயோகமாக இருக்கும். நம்மை படைத்த இறைவன் கண்டிப்பாக இப்படிப் பட்ட கருத்துக்களை சொல்ல மாட்டான் என்பது மட்டும் நிச்சயம். அப்படியானால் இதிலும் மனிதக் கரம் புகுந்திருப்பது நமக்குத் தெரிகிறது. இன்னும் எவ்வளவோ எழுதலாம் விரிவஞசி இத்தோடு முடிக்கிறேன்.

sivamjothi28 said...

சாதியும் மதமும் சமயுமும் காணா
ஆதிய அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி

திருவடி தீக்ஷை(Self realization)

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள். இது அனைவருக்கும் தேவையானது.
நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.


Utube videos:
(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
www.youtube.com/watch?v=FOF51gv5uCo


Online Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454