1618 ஆம் ஆண்டு இதே நாளில்,
குஜராத்தில் உள்ள தஹோத் என்ற இடத்தில் அவுரங்கசீப்
பிறந்தார்.
அக்காலத்தில்,
அவரது தந்தை ஷாஜஹான் குஜராத்தின், அதாவது மேற்கு இந்தியாவின் ஆளுநராக இருந்தார். அவரது
தாயாரின் பெயர் மும்தாஜ்.
1658 ஆம் ஆண்டில்,
அவுரங்கசீப் முகலாய சுல்தானியத்தின் பேரரசரானார்.
இந்தியாவில் அவுரங்கசீப் ஒரு வில்லனாகக் கருதப்படுகிறார்.
அவுரங்கசீப்பின் அரசவையில்
இருந்த இந்துக்களின் எண்ணிக்கை பின்வருமாறு.
• அக்பரின் ஆட்சிக்காலத்தில்,
மொத்தம் 98 மன்சப்தார்கள் இருந்தனர். அவர்களில் 22 பேர் இந்து மன்சப்தார்கள், அதாவது 22.5%.
• ஷாஜஹானின் ஆட்சிக்காலத்தில்,
437 மன்சப்தார்கள் இருந்தனர்.
அவர்களில் 98 பேர் இந்து மன்சப்தார்கள்.
22.4%.
• அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில்,
575 மன்சப்தார்கள் இருந்தனர்,
அவர்களில் 182 பேர் இந்துக்கள். அதாவது, 31.6%.
ஔரங்கசீப்பின் ஆட்சியில்,
ஒவ்வொரு மூன்றாவது மன்சப்தாரும் இந்துவாக இருந்தார்.
ஔரங்கசீப் என்ன செய்தாலும், அதை இந்த மன்சப்தார்களைக்
கொண்டே செய்தார். ஔரங்கசீப் ஒரு வில்லனாக இருந்திருந்தால், எந்த மன்னர்களும் சமஸ்தானங்களும் அவருக்கு ஆதரவளித்திருக்க மாட்டார்கள்.
இராஜபுத்திர இளவரசிக்குப் பிறந்த ஷாஜஹான்!
முகலாயப் பேரரசர் ஜஹாங்கீர் மார்வாடா மன்னர் ராஜா
உதயசிங்கின் மகளை திருமணம் செய்தார். அந்த இராஜபுத்திர இளவரசி ஜகத்கஸாயினி
என்பவரின் வயிற்றில் பிறந்தவர்தான் முகலாயப் பேரரசர் ஷாஜஹான்.
ஷாஜஹானின் தந்தையார் ஜஹாங்கீர், அக்பருக்கும் இராஜபுதன இளவரசிக்கும் பிறந்தவர். ஜஹாங்கிருக்கும் இராஜபுதன
இளவரசிக்கும் பிறந்தவர் சாஜஹான். ஷாஜஹானின் உடலில் ஓடிய ரத்தத்தில் முகலாய
ரத்தத்தை விட இந்திய ரத்தமே அதிகமாக இருந்தது என்பர் வரலாற்றாசிரியர் லேன்பூல்.
குலாம் ரசூல், இந்தியாவை
ஆண்ட முஸ்லிம் மன்னர்கள், தஞ்சாவூர்.
1998, page 461.
“Like his father Shah-jahan was the offspring of a
union with a Rajput princess, a daughter of the proud Raja of Marwar, and had
more Indian than Mughal blood in his veins.”
Stanley Lane-poole, Aurangzib, New Delhi, Page 14.
************************************
ஹிந்து
ராணியின் பேரன் ஒளரங்கஜேப்!
இத்தகைய ஷாஜஹானுக்கு மகனாகப் பிறந்த மஹா சக்ரவர்த்தியாகிய
ஒளரங்கஜேப் ஒரு ஹிந்து ராணியின் பேரனாயிருந்தும் மதத் துவேஷிகள் அவரையும் சும்மா
விடவில்லை. அபாண்டப் பழிகளை அவர் மீது அடுக்கிக் கொண்டே செல்கிறார்கள் என்பதனை
அறிகிறபோது வேதனையான விசித்திரமாகத்தான் இருக்கிறது. அது மட்டுமா?
நவாப் பாயின்
கணவர் ஒளரங்கஜேப்!
ஒளரங்கஜேப்புக்குப் பின் முகலாயப் பேரரசில் அரியணை ஏறிய
பகதூர்ஷாவின் தாயார் நவாப் பாய் (Nawab Bai)காஷ்மீர்
இந்து அரசரின் மகள். (She was the
daughter of Raja Raju of the Rajuari State of Kashmir) இராஜ புதன வழியில் வந்த நவாப்
பாயின் (ரஹ்மத்துன்னிஷா) கணவர் யார் தெரியுமா? மாமன்னர்
ஒளரங்கஜேப்தான்.
பரூக்கி, இந்தியாவை
ஆண்ட முஸ்லிம் மன்னர்கள்,
page 545.
உதயபுரி மஹல் அல்லது பாய் உதயபுரி (Udai Puri Mahal) என்ற மனைவியும்
ஒளரங்கஜேப்பிற்கு இருந்ததாகச் சொல்லப் படுகிறது. (Kam Baksh) காம்பக்ஸ்என்ற ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தவர் இவர்தான்.
டி.எப்.ஆர். மஆலிசாஹிப், முஸ்லிம் மன்னர்களின் இந்து ராணிகள், பத்ஹூல்
இஸ்லாம்.
1957, November, Chennai.
ஐம்பது வயதைத்
தாண்டிய நிலையில்.....
ஹிந்து இராஜபுத்திர ராணியார் ஷாபாய், ஜகத் கஸாயினி ஆகியோரின் வழியில் கி.பி.1618 ல் தோன்றியவர்
ஒளரங்கஜேப். அவரது வாழ்வில் நவாப் பாய், உதயபுரி மஹல்
என்ற இரு இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டவர் ஒளரங்கஜேப்.
ஹெச்.எல்.ஓ.காரட், சீதாராம் கோலீ, இந்து தேச சரித்திரம்,
1942, Page 170, Chennai.
இது போல் இந்துக்களோடு ரத்த உறவும், திருமண பந்தமும் உடைய ஒரு அரசர் இந்துக்களை கொடுமை படுத்தினார் என்று நம்
வரலாற்றுப் பாட நூல்களில் தொடர்ந்து படித்து வருகிறோம். அதோடு இந்த மன்னர்கள் இந்த
தேசத்தை எந்த அளவு நேசித்திருந்தால் திருமண உறவு முதற் கொண்டு நம் நாட்டிலேயே
ஏற்படுத்திக்கொண்டு இங்கேயே இறக்கவும் விருப்பம் தெரிவித்திருப்பார்கள். இன்று
இவர்களின் உறவுகள் இந்தியர்களை மணந்து இந்நாட்டு இரத்தம்ஆகி விட்ட பிறகு எப்படி
இவர்களை நாம் அன்னிய தேசத்தவர் என்ற வார்த்தையை பிரயோகிக்க முடியும்?
No comments:
Post a Comment