உங்களைப் பற்றி தவறாக
அவதூறு பேசுபவர்களுக்கும் நீங்கள் நன்றி சொல்லுங்கள். அவர்கள் உங்கள் பாவங்களை அழிக்கிறார்கள்
- ஏ.ஆர்.ரஹ்மான்
'ராமாயணம்'
படத்தில் சூஃபி இசையை கொண்டு வந்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்
என்று பலரும் குற்றச்சாட்டை வைக்கின்றனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதமாகத்தான் 'உங்கள் மீது அவதூறு சுமத்துபவர்கள் உங்களின் பாவங்களை
அழிக்கிறார்கள். அல்லது அவர்களின் நன்மையை இழக்கிறார்கள். எனவே அவர்களை அலட்சியப்படுத்தி
விட்டு உங்கள் பாதையில் பயணியுங்கள்’ என்கிறார் ரஹ்மான்.
இவரை இவ்வாறு பேச
வைத்ததற்கு ஒரு நபி மொழியும் காரணம். அந்த நபி மொழியை பாருங்கள்.
நபிகள் நாயகம் அவர்கள் தம் தோழர்களிடம், "திவாலானவர் (ஏதுமற்ற ஏழை) யார் என்று உங்களுக்குத்
தெரியுமா?" என்று கேட்டார்கள்.
அதற்குத் தோழர்கள்,
"எங்களைப் பொறுத்தவரை யாரிடம்
திரஹமோ (பணமோ) அல்லது எந்தப் பொருளோ இல்லையோ அவர்தான் திவாலானவர்" என்று விடையளித்தனர்.
அதற்கு அல்லாஹ்வின்
தூதர் கூறினார்கள்:
"என் சமுதாயத்தாரில்
உண்மையான திவாலானவர் ஒருவராவார்; அவர் மறுமை நாளில்
தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். அதே நேரத்தில் அவர்
உலகில் ஒருவரைத் திட்டியிருப்பார்; மற்றொருவர் மீது அவதூறு
சுமத்தியிருப்பார்; ஒருவரது பொருளை அநியாயமாக
விழுங்கியிருப்பார்; மற்றொருவரது இரத்தத்தைச்
சிந்தியிருப்பார்; இன்னும் ஒருவரை அடித்திருப்பார்.
எனவே, அவருடைய நன்மைகளிலிருந்து பாதிக்கப்பட்டவருக்கு
இழப்பீடாக வழங்கப்படும்; இவருக்கும் இழப்பீடாக
அவருடைய நன்மைகளிலிருந்து வழங்கப்படும்.
பாதிக்கப்பட்டவர்களின்
உரிமைகள் வழங்கப்படுவதற்கு முன்னால் அவருடைய நன்மைகள் தீர்ந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு,
இவர் மீது சுமத்தப்படும். பிறகு அவர் நரக நெருப்பில்
எறியப்படுவார்."
📚
ஆதாரம்: சஹீஹ் முஸ்லிம் (ஹதீஸ் எண்: 2581
/ 6744).
பல பிரச்னைகளுக்கு
தீர்வளிக்கக் கூடிய அழகிய அறிவுரை.
இந்த அறிவுரையை எனக்கும்
பொருத்திப் பார்க்கலாம்.
ஒரு சில சங்கிகள்
நாம் கேட்கும் கேள்விக்கு பதலளிக்காமல் என்னைப் பற்றியும் எனது குடும்பத்தைப் பற்றியும்
ஆபாசமாகவும் அவதூறாகவும் பின்னூட்டம் இடுகிறார்கள். அப்படி ஆபாசமாக எழுதினால் நான்
எழுதுவதை நிறுத்தி விடுவேன் என்பது அவர்கள் எண்ணம். ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டு நீ
எவ்வாறு இந்து மதத்தை விமரிசிக்கலாம் என்பது அவர்கள் வாதம்.
ஆனால் இவர்கள் பலதார
மணம், ஜீவனாம்சம், நபிகளின் திருமணம், ஹிஜாப், தீவிரவாதம் என்று
சகட்டு மேனிக்கு இஸ்லாத்தின் மேல் அவதூறுகளை பரப்பி வருவார்கள். அவர்களுக்கு பதிலளிக்கும்
விதமாக நாம் இந்து மதத்தை ஒப்பீடு செய்தால் 'நீ முஸ்லிம். எப்படி இந்து மதத்தைப் பற்றி எழுதலாம்?'
என்று கேட்பார்கள். ஆபாச அர்ச்சனைகளை தொடர்வார்கள்.
அவர்களை அலட்சியப்படுத்தியே
செல்கிறேன். காரணம் அவர்கள் என்னை அவதூறாக திட்டுவதால் நபிகளின் வாக்குப்படி எனது பாவங்களை
துடைக்கிறார்கள். அவர்களின் நன்மைகளை இழக்கிறார்கள்.
கருத்தை கருத்தால்
சந்திக்க முடியாத கோழைகள் இவர்கள்.
No comments:
Post a Comment