ஆஸ்கார் ரஹ்மானுக்கு கொடுத்தது தவறு- இஸ்மாயில் தர்பார்.
கேள்வி: ஏ.ஆர்.ரஹ்மான் வேறொருவர் பாடலை திருடி ஆஸ்கார் விருது பெற்று விட்டார்? ஆஸ்கார் விருது பணம் கொடுத்து வாங்கப்பட்டது என்று சொன்னீர்களாமே?
இஸ்மாயில் தர்பார்: நான் இரண்டு வருடம் முன்பு நாக்பூர் சொந்த வேலையாக போனபோது ஒரு நிருபர் ஆஸ்கார் அவார்டைப் பற்றி கேட்க 'உரியவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஒரு தொகைக்கு வாங்கப்பட்டது' என்றேன். இப்பொழுதும் அதைத்தான் சொல்கிறேன்.
கேள்வி: எப்படி விலை கொடுத்து வாஙகப்பட்டது என்று சொல்வீர்கள்? படமும் சிறப்பாக இருந்தது, பாடலும் சிறப்பாக இருந்தது.
இஸ்மாயில் தர்பார்: பாடல் சிறப்பாக இருந்ததா? அது அவருடைய பாடலா? அவர் சொந்தமாக டியூன் போட்டு எழுதியதா? அப்படி அது அவர் போட்ட மெட்டு என்று நிரூபித்து விட்டால் காலம் பூராவும் அவருக்கு சேவை செய்ய தயாராக இருக்கிறேன். ஆஸகார் விருது கொடுக்கும் அளவுக்கு அந்த பாடலில் என்ன இருக்கிறது?
கேள்வி: அது விருது கொடுப்பவர்களின் பொருப்பு அல்லவா? ஆஸ்கார் கமிட்டியிடம் தங்கள் கருத்தை வாபஸ் வாங்குவதாக சொன்னீர்களாமே!
இஸ்மாயில் தர்பார்: ஆம். ஆஸ்கார் கமிட்டியினர் என்னை தவறாக விளங்கிக் கொள்ளக் கூடாதல்லவா? எனவே அவர்களுக்கு எனது நிலையை விளக்கினேன். வரும் காலத்தில் நானும் கூட எனது படத்தை ஆஸ்காருக்கு அனுப்பலாம். எனவே அவர்களிடம் முறுகல் நிலையை விரும்பவில்லை. ஆனால் ரஹ்மான் விஷயத்தில் எனது கருத்து அப்படியேதான் இருக்கிறது.
கேள்வி: அவர்மேல் உள்ள பொறாமையில்தான் இவ்வாறு அபாண்டமாக குற்றம் சாட்டுகிறிர்கள் என்ற கருத்து வைக்கப்படுகிறதே?
இஸ்மாயில் தர்பார்: எனக்கு எந்த பொறாமையும் இல்லை. நான் உழைக்கிறேன். என் குடும்பமும் நானும் சாப்பிடுகிறோம். நான் சப்பாத்தி சப்ஜி சாப்பிடுகிறேன். அவர் இட்லி சாம்பார் சாப்பிடுகிறார்.(வட நாட்டுக்காரன் தனது புத்தியை காட்டியதற்கு எனது கண்டனங்கள். இட்லி சாம்பாரின் அருமை இவருக்கு எங்கு தெரியப் போகிறது? ) இவை அனைத்தையும் எனக்கு தருவது இறைவனே! நான் யாருக்கும் கூஜா தூக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவரிடம் உள்ள திறமையை மக்கள் முன் வைக்காமல் விருதுகளை வாங்க என்ன செய்ய வேண்டும்? யாரை பிடிக்க வேண்டும் எனபதை எல்லாம் நோட்டம் விட்டுக் கொண்டு பணம் பண்ணுவதிலேயே குறியாக இருக்கிறார். அதிலும் சொந்த பாடலாக இருந்தாலும் பரவாயில்லை. வேறொருவரின் பாடலுக்கு இவர் எப்படி விருது வாங்கிக் கொள்ளலாம். இதுதான் எனது கேள்வி. அவருக்கு கூஜா தூக்குபவர்கள் அவரை கீழே தள்ளப் பார்க்கிறார்கள். நான் அவரது தவறை சுட்டிக் காட்டி சரியான வழிக்கு அழைத்து வர முயற்ச்சிக்கிறேன்.
கேள்வி: விருது விவகாரத்தில் முன்பும் ஒருமுறை விமரிசிக்கப்பட்டீர்கள்தானே?
இஸ்மாயில் தர்பார்: ஆம். முன்பு தேவதாஸ் படமும் சாதியா(அலைபாயுதே) படமும் நேசனல் அவார்டுக்காக போட்டியில் இருந்தபோது விருதை சாத்தியாவுக்கு கொடுத்தார்கள். இரண்டரை வருடம் கஷ்டப்பட்டு அந்த படத்துக்கு இசை அமைத்ததன் வலி எனக்குதான் தெரியும். இதனால் 10 படங்கள் என் கையை விட்டு போனது. அதுவும் சாதியா ஒரு டப்பிங் படம். இந்த படத்துக்கு நேஷனல் அவார்ட் கொடுத்து எனது படத்தை ஒதுக்கியது என்ன வகை நியாயம்?
கேள்வி: உங்களுக்கு நேஷனல் அவார்ட் கிடைக்கவில்லை என்ற பொறாமையால்தான் ரஹ்மான் மீது குற்றம் சுமத்துகிறீர்கள் என்கிறார்களே?
இஸ்மாயில் தர்பார்: இதற்கு முன்பே பதில் சொல்லி விட்டேன். ரஹ்மான் என்னிடம் நேரிடையாக வந்து 'யாருடைய பாடலையும் திருடவில்லை. எனது சொந்த மெட்டு' என்று சொல்லச் சொல்லுங்கள் பார்ப்போம்.... ஒரு இசை அமைப்பாளனான எனக்கு நன்கு தெரியும் அந்த பாடல் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று.
(இரண்டு காணாளிகளின் சுருக்கம் இது. ஹிந்தி தெரியாதவர்களுக்காக மொழி மாற்றம் செய்தேன்,)
இஸ்மாயில் தர்பார் குறைபட்டுக் கொண்ட தேவதாஸ் பாடல்.
http://www.youtube.com/watch?v=UyERhf2GnWY&feature=related
ஒருவரின் பாடலை திருடுவது என்பது எல்லோரும் செய்து கொண்டிருப்பதே! முதலில் இந்த ராகங்களுக்கும் பாடல்களுக்கும் எவரும் உரிமை கொண்டாட முடியாது. ஏழு ஸ்வரங்களை வைத்து அவரவர் திறமையால் பாடலை உருவாக்குகிறார்கள். மக்களின் ரசனையை புரிந்து கொண்டு சில மாற்றங்களை செய்பவர் பிரபல்யம் ஆகிறார். சங்கர் கணேஷ் போன்றவர்கள் கூசசப்படாமல் மற்றவர்களின் பாடல்களை அதே வருடத்திலேயே சில உல்டா செய்து “பட்டு வண்ண ரோசாவாம்” (உச்சி வகுந்தெடுத்து) மாதிரி அமைத்து விடுவார்கள்.
'தங்கப்பதக்கத்தின் மேலே....” என்ற டிஎம்எஸ்ஸின் எம்ஜிஆர் பாடல் நமக்கு எல்லாம் தெரிந்த ஒன்று. ஏ.ஆர்.ரஹ்மானின் 'என்ன விலை அழகே...' பாடலை கேளுங்கள். அந்த பாடலுக்கும் இந்த பாடலுக்கும் உள்ள ஒற்றுமையை உணருவீர்கள். இதற்காக எம்எஸ்வி ரஹ்மானை கோபிக்க முடியுமா?
எனவே இதை எல்லாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் ஈஸியாக எடுத்துக் கொள்ள வேண்டும். பொறாமைபடுபவரின் முக பாவம் எவ்வாறு செல்லும் என்பதற்கு இந்த காணொளி ஒரு சாட்சி.:-) நமது பதிவுலகில் கூட ஒரு பதிவர் 'மகுடம் ஏறும் பதிவுகளெல்லாம் தரமானவை அல்ல' என்று குறை பட்டுக் கொண்டார். இவருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக தமிழ்மண மகுடத்தை தூக்கி விடுங்கள் என்று சொல்லவதும், ரஹ்மானை பிடிக்காததால் ஆஸ்கார் விருதையே கொச்சைப் படுத்தும் இஸ்மாயில் தர்பாரும் கொஞசம் சிந்திக்க வேண்டும். ரஹ்மான் இவரை கண்டு கொள்வதே இல்லை. அவர் பாட்டுக்கு மேலும் மேலும் சிகரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். :-)
பால் மோர்லேயுடன் ஏஆர்ஆர்....
வைர முத்து ரஹ்மான் பற்றி ...
சங்கர் மகாதேவன் ரஹ்மானைப் பற்றி...
யுடியூபில் வந்த சில கமெண்டுகள்:
a R Rahman is such a good hearted fellow. He is a genius guy in music that everyone knows. You (ismail) don't know how to praise your own indian...Westners have been telling that Indian hate each other. Now, you proved once again..shame on you...bloody ismail...you r such a jealous fellow...if you want publicity try doing other ….
jsenthilsg
hehehhehh why would THE ARR react to stupid people like you... never seen such a looser .. first go and train yourself for todays world and todays music.... update your knowledge and take some medicines. Devdas music was just ok.... it was a sanjay lelal bansali film so u got noticed... dumbo.. sanjay lela bansali's music in gujarish has proved who is the master behind hum dil de chuke sanam and devdas... :D take your medicines and sit at your home .
giteshmediatec
டிஸ்கி: ரஹ்மான் சார்! இளம் வயதிலேயே நான்கு தலைமுறைக்கு சொத்து சேர்த்தாகி விட்டது. அது போதும். சினிமா துறைக்கு ஒரு தலைமுழுக்கைப் போட்டுவிட்டு இருக்கும் பணத்தை தொழிலில் முதலீடு செய்யுங்கள். ஒரு உம்ரா ஹஜ்ஜையும் முடித்துவிட்டு நற்பணி மன்றங்கள் அனாதை ஆசிரமங்களில் கவனத்தை செலுத்துங்கள். இஸ்மாயில் தர்பார் முதற்கொண்டு சினிமாத் துறையை தூரமாக்குங்கள். தர்ஹா வணக்கத்தையும் அது சரிதானா என்பதை குர்ஆனை திறந்து கொஞ்சம் பார்வையிடுங்கள். இவை எல்லாம் உங்களின் மறு உலக வாழ்க்கையை செம்மையாக்கும் வழிகள். சிந்திப்பீர்களாக!
55 comments:
//அவர் பாட்டுக்கு மேலும் மேலும் சிகரத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறார். :-) //
இதெல்லாம் தவறு என்று மூமின்கள் சொல்வதுண்டே!
'பாவம்' செய்கிறார்!!
இறுதிக் கணக்கு வேறு இருக்கே!
திரு தருமி!
//இதெல்லாம் தவறு என்று மூமின்கள் சொல்வதுண்டே!
'பாவம்' செய்கிறார்!!
இறுதிக் கணக்கு வேறு இருக்கே!//
அதற்குதான் டிஸ்கியில் ஒரு தீர்வை சொல்லியிருக்கிறேனே! அவர் கண்ணில் இந்த பதிவு பட்டு ஒருகால் தனது தெழிலை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளதல்லவா!
அவர் புலம்பல் பைத்தியகாரத்தனமானது...ஆனால் ரஹ்மான் என்று இந்த தர்கா வழிபாடு எனும் பைத்திய காரத்தனத்தை விடுவார் என தெரியவில்லை....
சகோ ஹாஜா மைதீன்!
//ஆனால் ரஹ்மான் என்று இந்த தர்கா வழிபாடு எனும் பைத்திய காரத்தனத்தை விடுவார் என தெரியவில்லை....//
அவரை சுற்றி உள்ளவர்கள் அனைவரும் சூஃபியிசத்தை தூக்கிப் பிடிப்பவர்கள். குர்ஆனை திறந்த மனத்தோடு ஆராய்ந்தால் அவர் செய்யும் தர்ஹா வழிபாடுகள் எவ்வளவு தவறானது என்பதை விளங்கிக் கொள்வார்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
//தனது தெழிலை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளதல்லவா!//
ஒன்று, உங்கள் "மத வெறி"யை நினைத்தால் பாவமாயிருக்கிறது.
இரண்டாவது, இசை வேண்டாமென்று சொல்லும் உங்கள் 'தெய்வத்தை' நினைத்தால் மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. எப்படி இப்படி ஒரு தெய்வமோ!... வேடிக்கையான சாமி!!!
//தர்கா வழிபாடு எனும் பைத்திய காரத்தனத்தை விடுவார் ..//
அவர் உங்கள் மதத்திற்கு வந்த வழியே அது தானே!
Mr Tharumi,
///ஒன்று, உங்கள் "மத வெறி"யை நினைத்தால் பாவமாயிருக்கிறது. இரண்டாவது, இசை வேண்டாமென்று சொல்லும் உங்கள் 'தெய்வத்தை' நினைத்தால் மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. எப்படி இப்படி ஒரு தெய்வமோ!... வேடிக்கையான சாமி!!!///
உங்கள் பார்வைக்குத் தென்படும் நமது மார்க்கம் எல்லாமே வேடிக்கையாகத் தோற்றமளிக்கும்போது, இசைபற்றிய மார்க்கத்தின் நிலைப்பாடும் வேடிக்கையாக ஏன் இருக்கக் கூடாது?
இசையை ஒருவர் தவிர்ந்து கொள்வதை, நீங்கள் ஏன் மத வெறி என்னும் சொற்றொடருக்குள் அடக்குகிறீர்கள்?
//தர்கா வழிபாடு எனும் பைத்திய காரத்தனத்தை விடுவார் ..//
///அவர் உங்கள் மதத்திற்கு வந்த வழியே அது தானே!///
ஒரு மதத்தையோ ஒரு கொள்கையையோ ஏற்பதற்கு, ஒருவர் பல வழிகளில் அல்லது பல சந்தர்ப்பங்களின் துணையுடன் ஏற்கலாம்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட மதத்துடனோ கொள்கையுடனோ உடன்படாத செயல்களைத் தொடர்வது, ஏற்கத்தக்கது அல்ல.
- Ismath
திரு தருமி!
//இரண்டாவது, இசை வேண்டாமென்று சொல்லும் உங்கள் 'தெய்வத்தை' நினைத்தால் மிகுந்த வேடிக்கையாக இருக்கிறது. எப்படி இப்படி ஒரு தெய்வமோ!... வேடிக்கையான சாமி!!!//
பல செயல்களை தவிர்த்துக் கொள்ளச் சொல்லும் குர்ஆன் இசையை பற்றி நேரிடையாக தடையை கூறவில்லை. முகமது நபியின் ஹதீதுகளில் சில இசையை தடை செய்கிறது. வேறு சில ஹதீதுகள் விஷேஷ நாட்களில் சில வரையறைகளுக்குட்பட்டு ஆடல் பாடல்களில் ஈடுபடுவதை தடுக்கவில்லை. இரண்டையும் கலந்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும். நமக்கு கொடுக்கப்பட்ட வாழ்நாளை பற்றி நாம் விசாரிக்கப்படுவோம். அந்த வாழ்நாளை வேடிக்கையிலும் விளையாட்டிலும் வீணே முழுவதும் கழிப்பதை இஸ்லாம் தடுக்கிறது. இசைக்கு முழு நேர அடிமையாகாமல் தன்னை பார்த்துக் கொள்வதும் ஒரு முஸ்லிமுக்கு அவசியம்.
குர்ஆனே மிக அழகிய ராகங்களில் ஓதப்படுவதுதானே!
இறைவனே அறிந்தவன்.
///இறைவனே அறிந்தவன்.///
எனக்கு எதுவும் தெரியாதே..........
இசைக் கடவுள்
ஒருத்தருக்கு விருது தரவில்லை என்று கிசு கிசு ஒன்று படித்தேன் பாவம் இந்த இசைக்கடவுள் (????), யார் இந்த இசைக்கடவுளோ (????) தெரியவில்லை????? யாரவது இந்த இசைக்கடவுளுக்கு (????) விருது கொடுக்க சிபாரிசு செய்ங்க, இந்த இசைக் கடவுளின் (????) கோபம் தீரட்டும்.
// உங்கள் பார்வைக்குத் தென்படும் நமது மார்க்கம் எல்லாமே வேடிக்கையாகத் தோற்றமளிக்கும்போது, //
நல்லா கண்டுபிடிச்சிட்டீங்க. நன்றி
Mr Tharumi,
// உங்கள் பார்வைக்குத் தென்படும் நமது மார்க்கம் எல்லாமே வேடிக்கையாகத் தோற்றமளிக்கும்போது, //
///நல்லா கண்டுபிடிச்சிட்டீங்க. நன்றி///
இதில் கண்டுபிடிக்க என்ன இருக்கிறது? உண்மையும் அதுதானே!
- Ismath
//குர்ஆன் இசையை பற்றி நேரிடையாக தடையை கூறவில்லை. முகமது நபியின் ஹதீதுகளில் சில இசையை தடை செய்கிறது. //
எஸ்கேப்பு அப்டிம்பாங்களே .. அதுதான் இதுவா?
,,இசைக்கு முழு நேர அடிமையாகாமல் //
ஓ! part time அப்டின்னா ஓகேவா?!!!
திருமபவும் சொல்கிறேன்: உங்கள் தெய்வம் வேடிக்கையானது; உங்கள் மதவெறி பயங்கரமானது.
Mr Ravanan
///இறைவனே அறிந்தவன்.///
///எனக்கு எதுவும் தெரியாதே..........///
உங்களின் உளறலில் இருந்தே விளங்குகிறது, உங்களுக்கு எதுவும் தெரியாதென்று!
- Ismath
அண்ணே, அவர் தர்ஹாவில் வழிபட்டார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஜியாரத்தும் வழிபாடும் ஒன்றா?
நண்பர் சுவனப்பிரியனின் எதிர்கால பதிவுகள்.
1.அப்துல் கலாம் ஜனாதிபதி ஆகி இருக்க கூடாது!!!!
2.அபுல் கலம் ஆசாத் கல்வி அமைச்சர் ஆனதும் தவறு.
3.பாகிஸ்தானின் அப்துஸ் சலாமிற்கு நோபல் பரிசு கொடுத்தது தவறு
4.அசாருத்தீன் கிரிக்கெட் அணித் தலைவர் ஆனது தவறு!.
5.உமறுப்புலவர் சீறப்புராணம் எழுதியது த்வறு!
6.கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை எழுதுவதும் தவறு!
..........
போட்டுத் தாக்குங்கள்!!!!!!!!!!!!!!!
ஹா ஹா ஹா
நன்றி
நண்பர் சார்வாகன்!
//நண்பர் சுவனப்பிரியனின் எதிர்கால பதிவுகள்.
1.அப்துல் கலாம் ஜனாதிபதி ஆகி இருக்க கூடாது!!!!
2.அபுல் கலம் ஆசாத் கல்வி அமைச்சர் ஆனதும் தவறு.
3.பாகிஸ்தானின் அப்துஸ் சலாமிற்கு நோபல் பரிசு கொடுத்தது தவறு
4.அசாருத்தீன் கிரிக்கெட் அணித் தலைவர் ஆனது தவறு!.
5.உமறுப்புலவர் சீறப்புராணம் எழுதியது த்வறு!
6.கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை எழுதுவதும் தவறு!//
ரஹ்மானுக்கு ஆஸ்கார் கொடுத்ததில் எனக்கு சந்தோஷமே! திறமைமிக்கவரை தேடித்தான் கொடுத்துள்ளார்கள். இஸ்மாயில் தர்பார்தான் பொறாமையால் ரஹ்மானுக்கு ஆஸ்கார் கொடுத்திருக்கக் கூடாது என்கிறார். பதிவை இன்னொர முறை நன்றாக படியுங்கள்.
//5.உமறுப்புலவர் சீறப்புராணம் எழுதியது த்வறு!//
கண்டிப்பாக! ஒரு தலைப்பை எடுத்துக் கொடுத்ததற்கு நன்றி! முகமது நபியை பல இடங்களில் இறைவனுக்கு ஒப்ப பாடல் பாடியுள்ளார். நடக்காத சம்பவங்களை எல்லாம் சுவைக்காக அதிகப்படுத்தி எழுதியுள்ளார். இதை எல்லாம் இஸ்லாம் தடுக்கிறது.
// 6.கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதை எழுதுவதும் தவறு!//
உண்மைகளை கவிதைகளாக கவிக்கோ வடிக்கட்டும். இவரும் ஒரு தர்ஹா பிரியர். ஆக... இசை, கவிதை இதில் லயித்தவர்களெல்லாம் தர்ஹா விரும்பிகளாக இருப்பதையும் நாம் பார்க்கிறோம். இவர்களின் லயிப்பு படைத்த இறைவனை விடுத்து படைப்பினங்களிடம் செல்ல வைத்து விட்டது. எனவே இசையையும் கவிதையையும் ஒரு அளவோடு ரசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.
நீங்கள் கொடுத்த மற்ற நான்கு பேரும் திறமைசாலிகள். அதில் அப்துல் கலாம் மாத்திரம் இளமையில் பிராமணர்களோடு அதிகம் இருந்ததால் இந்து மதத்தையும் சில நேரம் போட்டு குழப்பிக் கொள்வார். மற்றபடி நாட்டுப் பற்று மொழிப் பற்று இவற்றில் குறை காண முடியாது.
சகோ புதுகை அப்துல்லா!
//அண்ணே, அவர் தர்ஹாவில் வழிபட்டார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஜியாரத்தும் வழிபாடும் ஒன்றா?//
உங்கள் வாதப்படி அவர் ஜியாரத (இறந்தவர்களின் அடக்கத்தலத்துக்கு செல்வது)சென்றதாகவே வைத்துக் கொள்வோம். முகமது நபி வலியுறுத்திய ஜியாரத் என்பது என்ன? நபிகள் நாயகம் அவர்கள் மறுமை ஞாபகம் உங்களுக்கு ஏற்படும் என்பதற்காக இறந்த மைய வாடிக்கு செல்ல ஓக்கப்படுத்தினார்கள். நம் ஊரில் பொதுவில் உள்ள மைய வாடிக்கு சென்றால் அங்குள்ள அமைதியும், வரிசையாக உள்ள இறந்தவர்களின் கபுர்களும் நமக்கு அச்சத்தை ஊட்டும். மனிதன் நேர் வழி பெற வாய்ப்பாகவும் அமையும்.
ஆனால் தர்ஹாக்களின் நிலை என்ன? சந்தனமும் சாம்பிராணி வாசனையும், நெய் சோறின் வாசமும் ஆண்களும் பெண்களும் இடித்துக் கொண்டு மகானின் ஆசி பெற முயற்ச்சிப்பதும் இவை எல்லாம் உங்களுக்கு இறப்பின் ஞாபகத்தை ஊட்டுமா?
அடுத்து நாகூர் தர்ஹாவில் அடஙகியிருப்பவர் பயன்படுத்தியதாக சொல்லி அவர் அணிந்த செருப்பை உங்கள் தலையில் வைத்து ஆசி வழங்குகிறார்கள். இவை எல்லாம் நம்மை நாமே இழிவு படுத்திக் கொள்வதில்லையா? இறந்து நாகூரில் அடக்கம் பண்ணப்பட்டிருப்பவர் இறை நேசர் என்பது உங்களுக்கு எப்படி தெரியும்? அது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையல்லவா!
மேலும் அங்கு சென்று நெற்றியை தரையில் வைக்கிறீர்கள். அவரிடம் 'எனக்கு அதைத்தாருங்கள். இதைத்தாருங்கள்' என்று கோரிக்கை வைக்கிறீர்கள். இறந்து போன ஒருவருக்கு அது விளங்குமா என்ற சிந்தனை உங்களுக்கு வருவதில்லை. முகமது நபியே தன்னுடைய அடக்கஸ்தலத்தில் யாரும் வந்து பிரார்த்தனை செய்யக் கூடாது என்று தடை விதித்திருக்கும் போது நபியை விட பெரியவரா நாகூரில் அடங்கியிருப்பவர் என்ற சிந்தனை ஏன் உங்களுக்கு வருவதில்லை.
4441. 'நபி(ஸல்) அவர்கள் எழாமல்போன அந்த நோயின்போது, 'அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக. அவர்கள் தங்களின் இறைத்தூதர்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக்கிவிட்டார்கள்" என்றார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு இல்லையானால் அவர்களின் அடக்கத் தலம் வெளிப்படையாக அமைக்கப்பட்டிருக்கும். 'தம் அடக்கத் தலம் எங்கே வணக்கத் தலமாக்கப்பட்டுவிடுமோ' என்று அவர்கள் அஞ்சினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :5 Book :64
இந்த ஹதீதின் மூலம் தனக்கு கட்டிடம் கட்டுவதை நபிகள் தடுத்ததை பார்க்கிறோம். இன்று வரை மண்ணால் மூடப்பட்டுத்தான் நபியவர்களின் அடக்கஸ்தலம் உள்ளது. நாகூரிலும், ஏர்வாடியிலும், அஜ்மீரிலும் அடங்கியிருப்பவர்கள் முகமது நபியை விட தகுதியில் சிறந்தவர்களா என்று சிந்தியுங்கள்.
குர்ஆனிலும் தர்ஹா வணக்கம் சொல்லப்படவில்லை. முகமது நபியும் அதை வணக்கமாக்கவில்லை. பிறகு எதற்கு இப்படி ஒரு தேவையில்லாத பழக்கம்? நன்மை செய்கிறோம் என்று தவறாக நினைத்து பாவத்தை ஏன் சுமக்க வேண்டும்?
LONDON, Feb 12: Slain Al Qaeda leader Osama bin Laden urged his younger children to go live peacefully in the West and get a university education, his brother-in-law said in an interview published on Sunday.
What do you think about Saudi's making of the most expensive copy of the Holy Book. Did you ever discuss this with any of your Saudi friends.
I am sure you talk them about
these things.
நண்பர் அனானி!
//What do you think about Saudi's making of the most expensive copy of the Holy Book. Did you ever discuss this with any of your Saudi friends.
I am sure you talk them about
these things.//
இது போன்று பொருளாதாரத்தை வீணடிப்பதற்கு இஸ்லாமும் தடை விதிக்கிறது. இதை கண்டித்து முன்பு ஒரு பதிவே இட்டுரிக்கிறேன். பல சவுதிகளிடம் இதைப் பற்றி பேசியும் இருக்கிறேன்.
//LONDON, Feb 12: Slain Al Qaeda leader Osama bin Laden urged his younger children to go live peacefully in the West and get a university education, his brother-in-law said in an interview published on Sunday.//
பிரிட்டனும் அமெரிக்காவும் சேர்ந்துதானே அமைதியாக இருக்கும் நாடுகளில் குழப்பத்தை உண்டு பண்ணுவது. ஒரு நாள் அவர்களின் நாட்டுக்கும் இப்படிப்பட்ட இழப்புகள் வரும் போது செய்த தவறை உணருவார்கள். உலகில் அமைதி அழிய காரணமே நேடோ படைகள்தான்.
//திருமபவும் சொல்கிறேன்: உங்கள் தெய்வம் வேடிக்கையானது; //
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்: உங்கள் தெய்வமும், நபியும் வேடிக்கையான தத்துவங்கள் சொல்கிறார்கள். எனக்கு உங்களிடம் இரு கேள்விகள்: (இதற்குப் பதில் கடைசியாக அல்லாவைச் சந்திக்கும்போது அவரிடம் பதில் சொல்லிக் கொள்கிறேன் என்று சொல்லாமல் ... )
1) உங்களின் pants-ன் நீளம் எங்கே முடிவடைகிறது? கணுக்காலுக்கு மேலே இரண்டு மூணு அங்குலம் இருக்குமா?
2) எப்போதும் உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறீர்களா?
ஏற்கெனவே ஒரு கேள்வி கேட்டிருந்தேனே .. ஏன் கழுத்தை அறுக்கும் போது 'அல்லாஹூ அக்பர்' என்று உங்கள் மக்கள் சொல்கிறார்கள். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?
//திருமபவும் சொல்கிறேன்: உங்கள் தெய்வம் வேடிக்கையானது; //
இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்: உங்கள் தெய்வமும், நபியும் வேடிக்கையான தத்துவங்கள் சொல்கிறார்கள். எனக்கு உங்களிடம் இரு கேள்விகள்: (இதற்குப் பதில் கடைசியாக அல்லாவைச் சந்திக்கும்போது அவரிடம் பதில் சொல்லிக் கொள்கிறேன் என்று சொல்லாமல் ... )
1) உங்களின் pants-ன் நீளம் எங்கே முடிவடைகிறது? கணுக்காலுக்கு மேலே இரண்டு மூணு அங்குலம் இருக்குமா?
2) எப்போதும் உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறீர்களா?
ஏற்கெனவே ஒரு கேள்வி கேட்டிருந்தேனே .. ஏன் கழுத்தை அறுக்கும் போது 'அல்லாஹூ அக்பர்' என்று உங்கள் மக்கள் சொல்கிறார்கள். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?
///LONDON, Feb 12: Slain Al Qaeda leader Osama bin Laden urged his younger children to go live peacefully in the West..//
அனானி கேட்டது - நீங்கள் வெறுக்கும் அந்த நாட்டுக்கு உங்கள் தலை ஏன் தன் பிள்ளைகளை அனுப்புகிறார் என்ற ironyயைப் பற்றிக் கேட்கிறார்!!!
கல்லும் செம்பும் கடவுளா? PART 1
கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல் புல்லறிவாகுமேடி குதம்பாய் புல்லறிவாகுமேடி - குதம்பைச் சித்தர்
ஓசையற்ற கல்லை நீர் உடைத்தது உருக்கள் செய்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீருஞ் சாற்றுறீர்
வாசலில் பதித்த கல் மழுங்கவே மிதிக்கிறீர்
ஈசனுக்கு உகந்த கல் இரண்டு கல்லுமல்லவே - சிவவாக்கியர்
அண்டாண்டங் கடந்து நின்ற சோதி தானும்
அவனிதன்னில் உடைந்த கல்லில் அமருமோ? - அகஸ்தியர் ஞானம்
நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
இட்டு வைத்த இடத்தை விட்டு எழுந்திராத தேவரை
வட்டமிட்டு மாந்தர்கள் வணங்குமாறு எங்கனே! - சிவவாக்கியர்
உளி இட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளிஇட்ட செம்பும் பொருளாவ தெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்
கொல்லனும் குசவனும் கல் தச்சனும் கன்னானும்
கொட்டிய சம்மட்டியாலே தட்டிய உருவங்களை வல்வினை அகற்றுமென்று சொல்லி உங்கள் வாயிலே
மண்களை வாரிப் போட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளாதீர்! - வேதாந்த சாத்திரம்
எத்தனைதான் கல்லுகளை பூசித்தாலும்
ஈனர்களே உங்களுக்கு மோட்சமுண்டோ
பித்தர்களே கல்லுகளை விலைக்கு வாங்கி
பிரானென்றே சிலையினிலே முட்டுகின்றீர் - சங்கராச்சாரி
சற்குருவை அறியாமல் உலகிலேதான்
சண்டாளர் கல்லுகளைத் தெய்வமென்று
பொய்க் குருக்கள் சொன்ன புத்தி தன்னைக் கேட்டு
பூசை செய்து கல்லுகளைப் போற்றி செய்வார் - ஞானோபதேசம்
நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திர மேதடா
நட்ட கல்லும் பேசுமோ..... ....... - சிவவாக்கியர்
மாறுபட்ட மணி குலுக்கி மலர் இறைத்து வீணிலே
ஊறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே - சிவவாக்கியர்
சாவதானத் தத்துவச் சடங்கு செய்யு மூடர்காள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் சொல்வேன் - சிவவாக்கியர்
செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமுஞ்
செமனையுந் துருவையுந் தெய்வமென்று கூறுறீர் – சிவவாக்கியர்
வட்ட மதி இரவிதனைப் பூசிப் போரும்
மண்ணை இலிங்கமாக வைத்துப் பூசிப்போரும்
சுட்ட உருமரச் சிலைகள் பூசிப் போரும்
துய்ய செப்பு கல்லுருவைப் பூசிப்போரும்
திட்டமுடன் எட்டெழுத்துப் பொருளென்போரும்
சிறந்த எழுத்தஞ்சுமே பொருளென்போரும்
விட்ட இடம் தன்னை அறியார் இவரெல்லரும்
விட்ணு வென்றும் சிவனென்றும் விளம்புவாரே
- சங்கராச்சாரி உடலறி விளக்கம்
கும்பிடு கோவில் குளம் மடம் சேத்திரம்
கோபுரம் தேர் திருவாசல்
கோலமாய் முகிழ்த்து சிலை சித்திர படஞ்செய்
கொத்துவேலைகளுக்குப் பார்த்தால்,
சம்பரமாய் ஆண் பெண் குறிகளைக் காட்டு சாயலு மோகலீலைகளின்
சாத்திர மன்மதன் நூல்
கொக்குவத்தினிற்
சாற்றுகின் றதனினு மென்மடங்காய்
விம்பவா சனஞ்சிங்காரித்து ரதத்தின்மீது
சாமிகள் வைத்து யதனில்
தாசிவேசிகளையேற்றி ராசதெரு வீதியில்
தட்சணம் புரியும் செயலால்
கெம்பித ரெனும்பிற வஞ்சரே மதிகள்
கெட்ட அந்தகர்களே இதெல்லாம்
கியானமோ அல்லதக் கியானமோ உங்கள் கிறுக்கைவிட் டிதற்குரை பகருவீர்.- சங்கராச்சாரி உடலறி விளக்கம்
கல்லினுஞ் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே - பட்டினத்தார்
உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப்
புளியிட்ட செப்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே - பட்டினத்தார்
ஒருவன் ஓர் இரும்புகொண்டு உருத்தரித்து வைத்ததில் பெரிய பாவை பேசுமோ அறிவிலாத பேதைகாள் - சிவவாக்கியர்
பண்ணி வைத்த தேவரைப் பரப்பி வைத்திருந்து நீர்
எண்ணி எண்ணி யென்னநின்றுரைக்கிறீர்கள் பேதைகாள் - சிவவாக்கியர்
SOURCE: ---------------- ஈ.வெ.ரா.மணியம்மையார் - விடுதலை - 18.2.1950
CONTINUES …..
கல்லும் செம்பும் கடவுளா? PART 2.
அண்டர்கோன் இருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகள்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே - சிவவாக்கியர்
கல்லிலேயுஞ் செம்பிலேயும் என் கருத்தை வைத்துப் போற்றாமல்
சொல்லிறந்த பாழ் வெளியில் தூங்குவது மெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்
செம்பினால் மரத்தால் மண்ணால் சிலையினால் செங்கல் தன்னால்
பைம் பொன்னால் மெழுகால் நீற்றால் படிக்கத்தால் உருப்படுத்தி
நம்பியே தெய்வமென்று நாடோறும் தொழுவோரெல்லாம்
உம்பர்கோன் பதி இழந்து உழலுவார் நரகில்தானே - பேரின்பமணி மாலை
கருடன், கழுகு, மயில், திருடும் நாய், பெருச்சாளி
கடிக்கும் பாம்பு, குரங்கு, பிடிக்கும் குதிரை, யானை
குருடுகளே மாடுகளையும், அதன் சாணியையும் பெண்
குறியையும், தெய்வமென்று வெறி கொண்டலையாதேயும் - மெய்ஞ்ஞான விளக்கம்
கழுதை மாடாடு பன்றிக் கடூரமாம் பாம்பு பல்லி
பழுதுள்ள மிருகம் தன்னை பாரா பரமதுவே என்று
முழுதுமே மதிகளற்ற மூடராய் மனிதர் கூடித்
தொழுதிடுந் தெய்வமென்று சொல்லுவதெந்த நீதம்
- திருமூலர் திருவிருத்தம்
வில்வம், துளசி, கொன்றை, கொல்லும் அலரி, ஆத்தி,
வேம்பு, அரசு, பள்ளி, ஓம் பால்சனை, அருகம், புல், ஓதி, தருப்பை, மாவும் நல்குங் கதியென்றெண்ணி
பொருளைக் காணாமற் போனீர் இருளின் மக்களே - மெய்ஞ்ஞானம்
SOURCE: ---------------- ஈ.வெ.ரா.மணியம்மையார் - விடுதலை - 18.2.1950
இஸ்மத்,
//இசையை ஒருவர் தவிர்ந்து கொள்வதை, நீங்கள் ஏன் மத வெறி என்னும் சொற்றொடருக்குள் அடக்குகிறீர்கள்?//
நானும் நீங்களும் இசையை நாமாகத் தவிர்த்தால் அது வேறு. ஆனால் சாமியும், தூதுவரும் இதைத் 'தூ" என்று சொல்வது வேடிக்கை என்றேன்.
ரஹ்மானுக்கு இசையும், அப்துல் ரஹ்மானுக்கு கவிதைய்ம் தங்கள் மூச்சுக் காற்று போன்றது. அதை நிறுத்தச் சொல்லும் உங்களைப் பார்த்தால் வேதனையாகவும், நிறுத்தச் சொல்லும் உங்கள் கடவுள் & Co பார்த்தால் வேடிக்கையாகவும் தானே இருக்கும்.
//ஒரு மதத்தையோ ஒரு கொள்கையையோ ஏற்பதற்கு, ஒருவர் பல வழிகளில் அல்லது பல சந்தர்ப்பங்களின் துணையுடன் ஏற்கலாம்.
//
பரிட்சைக்குப் படிக்கறதோ, பிட் அடிக்கறதோ முக்கியமில்ல, பாசாகறதுதான் முக்கியம்னு சொல்றீங்க.
Mr Tharumi
,,இசைக்கு முழு நேர அடிமையாகாமல் //
///ஓ! part time அப்டின்னா ஓகேவா?!!!///
முழு நேர அடிமையாகாமல் என்றால், அதை முற்றாகத் தவிர்ந்துகொள் என்று அர்த்தம்.
அதென்ன Part Time என்னும் உள் குத்து?
///திருமபவும் சொல்கிறேன்: உங்கள் தெய்வம் வேடிக்கையானது; உங்கள் மதவெறி பயங்கரமானது.///
சுவனப்பிரியனின் எழுத்துக்கள், அவரது மார்க்கத்தைச் சொல்லுகிறது.
சும்மா சொல்லக் கூடாது, அவரை எதிர்க்கும் தங்களின் வெறித்தனம், First Class!
தொடருங்கள்!
- Ismath
**
பல செயல்களை தவிர்த்துக் கொள்ளச் சொல்லும் குர்ஆன் இசையை பற்றி நேரிடையாக தடையை கூறவில்லை. முகமது நபியின் ஹதீதுகளில் சில இசையை தடை செய்கிறது. வேறு சில ஹதீதுகள் விஷேஷ நாட்களில் சில வரையறைகளுக்குட்பட்டு ஆடல் பாடல்களில் ஈடுபடுவதை தடுக்கவில்லை. இரண்டையும் கலந்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
**
இஸ்லாமிய வாழ்க்கை நெறிகள் எல்லாத்தையும் தெளிவாச் சொன்ன அல்லா இங்க மட்டும் சறுக்கியதேனோ?
இந்தியன்!
//இஸ்லாமிய வாழ்க்கை நெறிகள் எல்லாத்தையும் தெளிவாச் சொன்ன அல்லா இங்க மட்டும் சறுக்கியதேனோ?//
ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை மிக அழகாக இஸ்லாம சொன்னது போல் வேறு எந்த மார்க்கமும் சொன்னது கிடையாது. இசையை பொருத்த வரை அது ஒரு பொழுது போக்கு. அதற்கு அடிமையாகாமல் இருக்க வேண்டும் என்பதே இங்கு சொல்லப்படுகிறது. இசை என்பது ஒரு போதையை போன்றது. அதிகம் ஏறி விட்டால் தன்னிலையை மறந்து விடுவான். எனவேதான் தவிர்த்து கொள்ள முகமது நபி கட்டளையிடுகிறார்.
அதே நேரம் சில விஷேஷ நாட்களில் சந்தோஷமான நாட்களில் இஸ்லாமிய வரம்புககு உட்பட்டு சில பாடல்களை சில கவிதைகளை பாடிக் கொள்வதில் தவறில்லை என்றும் அறிகிறோம். இதில் குழப்பத்திற்கு வேலையே இல்லை.
திரு தருமி!
//அனானி கேட்டது - நீங்கள் வெறுக்கும் அந்த நாட்டுக்கு உங்கள் தலை ஏன் தன் பிள்ளைகளை அனுப்புகிறார் என்ற ironyயைப் பற்றிக் கேட்கிறார்!!!//
எங்கள் தலை எல்லாம் உசாமா அல்ல. முகமது நபி. முகமது நபிக்கு எதிராக என் தந்தையே ஒரு கருத்தை சொன்னாலும் அது புறம் தள்ளப்பட வேண்டியது ஒரு இஸ்லாமியனின் பார்வையில். எனது பார்வையும் அதுதான்.
உசாமா சில நேரங்களில் அப்பாவிகள் கொல்லப்படவும் காரணமாயிருந்திருக்கிறார். எனவே அவரை ஒரு முன்மாதிரியாக எந்த முஸ்லிமும் கொள்ள முடியாது.
ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் அமைதி பூங்காவாக திகழ்வதாக மீடியொக்களின் பரப்புரையை அவரும் நம்பியிருக்கலாம். பள்ளியில் படிக்கும் மாணவன் துப்பாக்கியால் 10 பேரையும் 15 பேரையும் சுட்டுக் கொல்வது வாடிக்கையாகி விட்டது. ஆஸ்திரேலியாவில் நம் இந்தியர்களை தீர்த்துக் கட்டுவதும் தொடர்கதையாகி வருகிறது. இன்று வந்த தின மலர் செய்தியையும் பார்த்து விடுங்கள்.
அக்காபுல்கோ : மெக்சிகோவில் போ்தை மருந்து கடத்தல் கும்பல்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 12 போலீசார் உள்பட 22 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் கும்பல்களால் அந்நாட்டு அரசு கடும் பிரச்னையை சந்தித்து வருகிறது.
தெற்கு மாகாணமான கரிரோ மற்றும் அக்காபுல்கோ ஆகிய மாகாணங்களில் நேற்று போதை மருந்து கடத்தல் கும்பல்கள் நடமாட்டம் இருப்பதாக அறித்த போலீசார் அங்கு சோதனை நடத்த சென்றனர். இரு தரப்பிலும் ஏற்பட்ட சண்டையில் 12 போலீசார் கொல்லப்பட்டனர். மேலும் 11 போலீசார் காயமடைந்தனர். 10 போதை மருந்து கடத்தல் கும்பல் கொல்லப்பட்டதாக கரிரோ நகர போலீஸ் செய்திதொடர்பாளர் தெரிவித்தார். இதன் மூலம் மெக்சிகோவில் கடந்த 6 ஆண்டுகளில் இதுவரை 47 ஆயிரம் பேர் போதை மருத்து கடத்தல் கும்பல்களின் வன்முறையால் பலியாகியுள்ளதாக அதிபர் வட்டாரம் தெரிவித்துள்ளது.
-தின மலர் 20-03-2012
சிவனின் திரு விளையாடலுக்குள்ளான "தருமி" க்கு சிவபெருமானே
முட்டுக்கொடுத்தும் கூட நக்கீரனால் மூக்குடைக்கப்பட்டு "தருமி" அல்லாடியதை
சரி சிவனாலேயே திருப்தி பெறாத
தருமிக்கு படைத்தவன் யார்?, கடவுள் யார்?, தெய்வம் யார்? தருமிக்காக உலகம் படைக்கப்பட்டதா? அல்லது உலகத்துக்காக தருமி படைக்கப்பட்டாரா?
உலகம் போற்றும் மகான்கள், அறிஞர்கள், விஞ்ஞானிகள் , ஆராய்ச்சியாளர்கள் , சரித்திர ஆசிரியர்கள் இவர்களுக்கெல்லாம் மேலாக "தருமி" மேம்பட்டவரா? எப்படி? எந்த வகையில்? எத்தனை காலமாய்?
அகில உலக பதிவர்களின் பதிவுகளுக்கெல்லாம் மதிப்பெண் கொடுக்க வல்லமை அருளப்பெற்றவரா?
அல்லது வலையுலக, பதிவுலகத்தின் எட்டுபட்டி நாட்டண்மையா?
“குண்டக்க மண்டக்க” வாக நடிகர் பார்த்திபனை நினைவூட்டும் ………..
-நக்கீரன் said...
நண்பர் சுவனப்பிரியன்....
ரஹ்மானும், இஸ்மாயில் தர்பாரும் show businessல் இருக்கின்றார்கள். அவர்கள் அப்படிதான் பேசுவார்கள். பொறாமைபடுவார்கள். அது அவர்களின் வியாபார தந்திரம். சினிமாவே தேவையில்லை என்று இறையச்சம் உள்ளவர்கள் அந்தப் பக்கம் போக மாட்டார்கள், அவர்களின் கூத்தை படிக்கவும் விமர்சிக்கவும் மாட்டார்கள். சினிமா உங்களை ஈர்க்கின்றது என தெரிகிறது. நாங்கள் செய்வதை நீங்கள் செய்யலாமா? சினிமா போதை ஒரு பக்கம் கிடக்கட்டும்.
எனது கேள்வி ரஹ்மான் இஸ்லாமியரா? இல்லையா? முழு இஸ்லாமியரா இல்லை பாதி இஸ்லாமியரா?
அவர் பாட்டில் முழ்கி அடிமையாக இருக்கிறார் என்பது எப்படி நமக்கு தெரியும். வெளிச் செய்திகளை பார்த்தால் இஸ்லாமிய கடமைகளை செய்து கொண்டுதானிருக்கிறார். பாட்டையும் உருவாக்குகிறார்.
இமாம் ஷேக் அப்துல்லா ஜமாளி, எப்படி அழகாக தர்காகள் இஸ்லாமிய சுன்னத் என்று விளக்குகிறார். அப்படி ஒரு பெரிய மார்க்க அறிஞர் சொல்லும் போது தர்க்கா எப்படி தப்பாகும்.
என்னையே எடுத்துக் கொள்ளங்குள் பல தர்க்காகளுக்கு சென்றுள்ளேன். கியாமத நாளில் தர்கா சென்ற காஃபீர்களுக்கு எண்ணை கொப்பரை தவிர special treatment ஏதாவதை அல்லா வைத்திருக்கிறாரா?
ரஹ்மான் பல நல்ல காரியங்களை செய்கிறார் இஸ்லாமிய கடமைகளை செய்கிறார் என தெரிகிறது. அப்படி இருக்கும் போது அவர் அந்த துறையில் இருக்ககூடாது என்ற நேரிடியான வசனம் அதீஸ் இல்லாத போது, அது போதும் விட்டு வா என்றால் எப்படி சரி. பாட்டு என்றும் கிடையாது எந்த துறையில் obsession அதிகதன்மை இருந்தால் ஒரு தனிமனிதனுக்கு தவறுதான். இருமல் மருந்தில் மது அதிகமானாலும் தவறுதான்.
ரோடோரம் வியாபாரம் செய்யும் ஒரு இஸ்லாமிய அன்பர் உங்களை பார்த்து சவுதியில் சம்பாதித்தது போதும், இந்தியா வந்து நல்ல காரியங்கள் செய்யுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?
@பங்கார்பேட் சிங்காரி சைட்...
//பரிட்சைக்குப் படிக்கறதோ, பிட் அடிக்கறதோ முக்கியமில்ல, பாசாகறதுதான் முக்கியம்னு சொல்றீங்க. //
இது தருமியைப் பார்த்துக் கேட்கின்றது போல் உள்ளது, அதாவது புராணத்தில் வரும் தருமி.. ஹீ ஹீ ஹீ.... உண்மை சொன்ன நக்கீரனுக்கு நெருப்புத்தண்டனை, இதுதான் நியாயம் என்பார்களோ!!!!. நடத்துங்க நடத்துங்க.....
சகோ நரேன்!
//எனது கேள்வி ரஹ்மான் இஸ்லாமியரா? இல்லையா? முழு இஸ்லாமியரா இல்லை பாதி இஸ்லாமியரா?//
இசை அமைப்பாளர் ரஹ்மானின் உண்மை நிலையை நம்மை படைத்த ரஹ்மானே அறிவான்.
'தனக்கு இணை கற்ப்பிக்கப்படுவதை இறைவன் மன்னிக்க மாட்டான். அதற்கு கீழ் நிலையில் உள்ள பாவத்தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். இறைவனுக்கு இணை கற்ப்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.'
-குர்ஆன் 4:48
இங்கு இறைவன் தனக்கு இணையாக எவரையும் வணங்குவதை மன்னிக்கவே மாட்டேன் என்கிறான். நன்மை என்ற பெயரில் தர்ஹாவுக்கு சென்று பிரார்த்திப்பவர்கள் பெரும் பாவத்தில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே நாம் அறிவுறத்துகிறோம். அதற்கு கீழ் உள்ள பாவங்களை அவர்களின் செயல்களுக்கு ஏற்ப மன்னிப்பதாக இறைவன் கூறுவதையும் கவனியுங்கள்.
மனிதர்களுக்கு செய்யும் துரோகங்களுக்கு பாதிக்கப்பட்ட அந்த மனிதன் மன்னிக்காத வரை தான் மன்னிக்க மாட்டேன் என்று வேறொரு இடத்திலும் இறைவன் கூறுகிறான். எனவே இணை வைப்பிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும் என்பதே நமது அவா.
'தங்களுக்கு உதவுவார்கள் என இறைவனையன்றி பல கடவுள்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். அவ்வாறு இல்லை. தங்களை இவர்கள் வணங்கியதை அவர்கள் மறுத்து இவர்களக்கு எதிராவார்கள்.'
-குர்ஆன் 19: 81,82
நாகூரில் அடங்கியிருப்பவர், அஜ்மீரில் அடங்கியிருப்பவர், ஏர்வாடியில் அடங்கியிருப்பவர் தங்களுக்கு பரிந்துரைப்பார்கள் உதவுவார்கள் என தங்கள் தலையைக் கொண்டு போய் சமாதியில் வைக்கிறாரகள். சமாதியை நோக்கி பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள். நாளை மறுமையில் தங்களை வணங்கியவர்களை மறுத்து அவர்களுக்கு எதிராவார்கள் என்கிறான் இறைவன். எதற்கு இந்த தேவையில்லாத பிரார்த்தனை என்பதுதான் எங்களது கேள்வி.
//இமாம் ஷேக் அப்துல்லா ஜமாளி, எப்படி அழகாக தர்காகள் இஸ்லாமிய சுன்னத் என்று விளக்குகிறார். அப்படி ஒரு பெரிய மார்க்க அறிஞர் சொல்லும் போது தர்க்கா எப்படி தப்பாகும்.//
மேலே உள்ள வசனத்துக்கு அடுத்த வசனத்தில் இறைவன் கூறுவதைப் பார்ப்போம்.
'ஒரேயடியாக தூண்டி விடுவதற்காக நம்மை மறுப்போரிடம் ஷைத்தான்களை அனுப்புகிறோம் என்பதை நீர் அறியவில்லையா? எனவே அவர்கள் விஷயத்தில் அவசரப்படாதீர்.அவர்களுக்காக துல்லியமாகக் கணக்கிடுகிறோம்.'
'இறைவனை அஞ்சுவோரை அளவற்ற அருளாளனிடம் குழுவாக ஒன்று சேர்க்கும் நாளில் குற்றவாளிகளை நரகை நோக்கி தாக முள்ளோராக ஓட்டிச் செல்வோம்'
-குர்ஆன் 19: 83,84,85,86
உங்களைப் போல் அறியாத மக்கள் தவறாக தர்ஹாவை நாடியிருந்தால் இறைவன் நினைத்தால் ஒருக்கால் மன்னிக்கலாம். ஆனால் தெரிந்து கொண்டே வீம்புக்காக தர்ஹா வணக்கத்தை நியாயப் படுத்தும் ஷேக் ஜமாலி போன்றவர்களுக்காக இறைவன் கூறும பதில்தான் மேலே நாம் பார்த்தது.
சகோ நரேன்!
//ரோடோரம் வியாபாரம் செய்யும் ஒரு இஸ்லாமிய அன்பர் உங்களை பார்த்து சவுதியில் சம்பாதித்தது போதும், இந்தியா வந்து நல்ல காரியங்கள் செய்யுங்கள் என்று சொன்னால் எப்படி இருக்கும்?//
நான் இங்கு பார்க்கும் அலுவலக வேலை இஸ்லாத்தில் தடை செய்யப்படவில்லை. கையூட்டு, தவறாக பொருள்சேர்த்தல், தன்மானத்துக்கு இழுக்கு, என்று எந்த தடங்கலும் எனக்கு இல்லை. இதை விட நல்ல வேலையாகவும் இதே சம்பளமாகவும் எனக்கு தமிழகததில் ஒரு வேலைக்கு எற்பாடு செய்து கொடுங்கள். அடுத்த வாரமே தமிழகத்தில் இருக்கிறேன்.
ரஹ்மான் பணி புரியும் இந்த தொழில் முழுக்க முழுக்க சினிமா துறையை சார்ந்தது. சினிமாவில் வரும் ஆபாசங்களும், வன்முறைக் காட்சிகளும், குடும்ப சண்டைகளும்தான் பெரும் பாலும் நமது சமூகத்தை சீரழித்து வருகிறது. இதை விட சிறந்த துறைகள் அவர் முன் இருக்க எதற்கு இதை இன்னும் அவர் பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்ற நல்லெண்ண கோரிக்கைதான். வேறொன்றுமில்லை.
//ரஹ்மான் பல நல்ல காரியங்களை செய்கிறார் இஸ்லாமிய கடமைகளை செய்கிறார் என தெரிகிறது. அப்படி இருக்கும் போது அவர் அந்த துறையில் இருக்ககூடாது என்ற நேரிடியான வசனம் அதீஸ் இல்லாத போது, அது போதும் விட்டு வா என்றால் எப்படி//
இப்படி நல்ல உள்ளம் கொண்டு நற்காரியங்கள் செய்து வருபவர் இறைவன் சொல்லாத ஒரு வணக்கத்தை செய்து தவறில் ஏன் வீழ வேண்டும் என்ற ஆற்றாமையால் வந்த பதிவே இது. அவர்மேல் உள்ள நல்லபிப்ராயத்தில்தான் இந்த கருத்தை முன் வைக்கிறேன். பல முறை மக்கா வந்துள்ளார். எங்காவது ஒரு இடத்திலாவது ஒரு தர்ஹாவாவது காண முடியுமா? அட..முகமது நபிக்கே வெறும் மண்ணால்தானே சமாதி கட்டப்பட்டுள்ளது. அங்கு எந்த ஒரு பிரார்த்தனையும் நடைபெறவில்லையே! இஸ்லாத்தின் பெயரால் இது போன்ற பழக்கங்களை செய்ய வேண்டாம் என்றுதான் சொல்லுகிறோம்.
//பாட்டு என்றும் கிடையாது எந்த துறையில் obsession அதிகதன்மை இருந்தால் ஒரு தனிமனிதனுக்கு தவறுதான். இருமல் மருந்தில் மது அதிகமானாலும் தவறுதான்.//
இதைத்தான் நான் இந்த பதிவில் சொல்ல வந்தது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே!
//ரஹ்மானுக்கு இசையும், அப்துல் ரஹ்மானுக்கு கவிதைய்ம் தங்கள் மூச்சுக் காற்று போன்றது. அதை நிறுத்தச் சொல்லும் உங்களைப் பார்த்தால் வேதனையாகவும், நிறுத்தச் சொல்லும் உங்கள் கடவுள் & Cஒ பார்த்தால் வேடிக்கையாகவும் தானே இருக்கும். //
அதெப்படிங்க தருமி சார்,
சுவனப்பிரியனுக்கு இறைநம்பிக்கையும், இறைவனுக்கு ஒவ்வொரு கணமும் அஞ்சி நடப்பதும் (அதாவது ஒரு கொள்கையில் உறுதியாக இருப்பது) உங்களுக்கு மதவெறியாக தெரிகிறது, ஆனால் கவிஞர் அப்துல் ரஹ்மானுக்கோ அல்லது இசையமைப்பாளர் ரஹ்மானுக்கோ நீஙகள் பொறுத்துவது மூச்சுக்காற்று. மிக மிக அருமை!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!?!
காரணம் இவர் ஒரு இஸ்லாமியர்.
மிக்க நன்றி தருமிசார் இவ்வளவு அப்பட்டமான பெரிய ஒரு குற்றச்சாட்டை (அபாண்டத்தைச்) சுமத்தியதற்கு.....
முபீன்..
திரு. தருமி அவர்களே!,
கடவுள் இல்லை என்று சொல்லுங்கள் அது உங்கள் உரிமை ஆனால், கடவுள் இல்லை என்று கூறிக்கொண்டு அதென்ன இசையுடன் தொடர்புடைய கடவுள் (?!) மட்டும் உங்களுக்கு அப்படி தேனாக இனிக்கிறது, காரணம் தெரிந்து கொள்ளலாமா?
சு.பி.,
என் 3 கேள்விகளுக்கான பதில் ...?
@தருமி
////1) உங்களின் pants-ன் நீளம் எங்கே முடிவடைகிறது? கணுக்காலுக்கு மேலே இரண்டு மூணு அங்குலம் இருக்குமா?/////
ஆடைகளை பொறுத்தவரை ஆபாசமாகவும் மற்றும் கவர்ச்சியாகவும் சாலையை பெருக்குவதுபோல் மிகவும் நீண்ட ஆடை அணிவதையும் தவிர்க்கவே இஸ்லாம் சொல்கிறது.ஆடை அணிய தடுக்கப்பட்டமுறையை தெளிவாக பின்வரும் நபிமொழியில் அறியலாம்.
(புஹாரி 584.அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்).
இரண்டு வியாபாரங்களைவிட்டும் ஆடை அணியும் இரண்டு முறைகளைவிட்டும் இரண்டு தொழுகைகளைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (இரண்டு தொழுகைகளாவன) ஃபஜ்ருக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். (ஆடை அணியும் இரண்டு முறைகளாவன) ஓர் ஆடை மட்டும் உள்ளபோது தம் கைகள் உள்ளே இருக்குமாறு சுற்றி அதை அணிந்து கொள்வதையும் மர்ம உறுப்பு வானுக்குத் தெரியுமாறு ஓர் ஆடையை முழங்காலைச் சுற்றிக் கட்டிக் கொள்வதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள். 'முனாபதா', 'முலாமஸா' என்ற இரண்டு வியாபாரங்களைவிட்டும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.
(குறிப்பு: இந்தக் கல் எந்தப் பொருளின் மீது விழுகிறதோ அந்தப் பொருளை இவ்வளவு விலைக்குத் தருகிறேன் என்று கூறி விற்பது முனாபதா எனப்படும். குவிக்கப்பட்ட பொருட்களைப் பிரித்துப் பார்க்கவிடாமல் அதைத் தொட்டுப் பார்க்க மட்டுமே அனுமதிக்கும் வியாபாரம் முலாமஸா எனப்படும்)
//////2) எப்போதும் உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறீர்களா?/////வீட்டிலுள்ள கழிவறையை நாம் எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருப்போம் அதனால் வீட்டிலுள்ள கழிவறையில் சிறுநீர் கழிக்கும்போது உட்கார்ந்துகொண்டு போவது வழக்கம்.வெளியில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தும்போது அங்கு நாம் சுத்தத்தை எதிர்பார்க்கமுடியாது அந்த மாதிரி இடத்தில் நின்று போவதில் தவறில்லை.மேலும் கால்சட்டை அணிந்தவர்களாக இருந்தால் உட்கார்ந்து கொண்டு போவது கடினமாக இருக்கும் அந்த நேரத்திலும் நின்று செல்வதால் தவறில்லை.பின்வரும் நபிமொழியின் படி இடத்திற்கு தகுந்தார்போல் நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பதும் தவறல்லவே.
(புஹாரி 225. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்).
'நானும் நபி(ஸல்) அவர்களும் நடந்து சென்று கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் ஒரு சுவரின் பின்னாலுள்ள ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்தார்கள். உங்களில் ஒருவர் எவ்வாறு நிற்பாரோ அதைப் போன்று நின்றவர்களாகச் சிறுநீர் கழித்தார்கள். அப்போது நான் கொஞ்சம் ஒதுங்கிச் சென்றேன். உடனே நபி(ஸல்) அவர்கள் என் பக்கம் கை அசைத்து அழைத்தார்கள். நான் வந்து அவர்கள் தங்கள் தேவையை நிறைவேற்றும் வரை அவர்களின் பின் பக்கம் நின்று கொண்டிருந்தேன்".
//// ஏன் கழுத்தை அறுக்கும் போது 'அல்லாஹூ அக்பர்' என்று உங்கள் மக்கள் சொல்கிறார்கள். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?/////
அல்லாஹ் அக்பர் என்றால் இறைவனே மிகப்பெரியவன் என்று அர்த்தம் அவனை வெல்ல (அ)அவனைப்போல யாருமில்லை என்ற அர்த்தமும் கொள்ளலாம்.இந்த உணவை கொடுத்த இறைவனே மிகப்பெரியவன் என்று நன்றி சொல்லியே அறுக்கின்றார்கள்.
மதிப்பிற்குரிய சுவனப்பிரியரே,
காழ்ப்புணர்வின்றி அறியாமல் கேட்பவர்களுக்கு முறையான பதிலை தருவதில் சிறப்புண்டு.
காழ்ப்புணர்வுடன் சந்து கிடைக்காதா சிந்து பாடிவிடலாம் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு பதிலிடுவது முறையல்ல.
பாறையின் மேல் உங்களது எழுதுகோலை ஏன் வீணடிக்க வேண்டும்.
.
ஹலோ பங்கார்பேட் சிங்காரி
///பரிட்சைக்குப் படிக்கறதோ, பிட் அடிக்கறதோ முக்கியமில்ல, பாசாகறதுதான் முக்கியம்னு சொல்றீங்க.///
நீங்கள் இன்னும் சித்தியடையாமல் இருப்பதற்கு, நீங்கள் பின்பற்றும் அணுகுமுறைகள்தான் காரணம்.
Try a new way approach! Best of luck!
- Ismath
நக்கீரன் said...
பேராசானாகவா இருந்தா "நண்டு எப்படி வடைதின்னும்" என்ற ரீதியில் ஆராய்ச்சி கட்டுரை எழுதியா "டொக்டர்" பட்டமா …….
இஸ்லாம், முஸ்லீம்கள் என்றாலே பிட்டத்துக்குள் ஊசி மிளகாய் ஏற்றிவிட்டால் போல் உணர்வேறி துடிக்கனுமா?.
ஆற்றாமையால் புலம்பி குழப்பி தீரனுமா?
தொட்டிலில் பெற்ற குழந்தையை இட்டு ஆட்டுபவளை கண்ட மலடி தொட்டி கட்டி அம்மிகுழவியை போட்டு ஆட்டுகிற மாதிரியா?
ஒருவேளை ஏதோ ஒரு நிறுவனத்துக்கு "கைக்கூலி" யாக இருப்பதன் வெளிப்பாடோ?
ஸோ வாட்?
சுவனபிரியன் அவர்களே, தாங்களின் கொள்கையில் வழுவாது உறுதியாக இருங்கள்.
தாங்கள் சரியான வழியில் சென்றுகொண்டிருக்கின்றீர்கள் என்பதற்கு அறிகுறி.
தாங்கள் இறைவனுக்கு பதில் கூற கடமைபட்டிருக்கின்றீர்கள் அன்றி வேறு யாருக்கும் இல்லை.
கற்றுக்கொடுத்தேன் என தம்பட்டமடிப்பவர்களுக்கு சுவனப்பிரியன் ஏன் கற்றுக்கொடுக்கவேண்டும்?
இதுகாறும் கற்றுக்கொடுக்கிறேன் என்று எப்படி வயிறு வளர்க்கப்பட்டது?
- நக்கீரன்
Mr Tharumi
//நானும் நீங்களும் இசையை நாமாகத் தவிர்த்தால் அது வேறு. ஆனால் சாமியும், தூதுவரும் இதைத் 'தூ" என்று சொல்வது வேடிக்கை என்றேன்.///
நாம் இசையை தவிர்க்கும்போது, வேடிக்கையின் தத்துவங்கள், மத வெறி, இன்னும் பல ஏளனச் சொல்லாடல்கள்.
நீங்கள் இசையை நீங்களாகவே தவிர்ப்பின், அது வேடிக்கை (??) அல்ல. அது வேறு. அப்படித்தானே!
- Ismath
திரு தருமி!
//என் 3 கேள்விகளுக்கான பதில் ...?//
//1) உங்களின் pants-ன் நீளம் எங்கே முடிவடைகிறது? கணுக்காலுக்கு மேலே இரண்டு மூணு அங்குலம் இருக்குமா?
2) எப்போதும் உட்கார்ந்துதான் சிறுநீர் கழிக்கிறீர்களா?
ஏற்கெனவே ஒரு கேள்வி கேட்டிருந்தேனே .. ஏன் கழுத்தை அறுக்கும் போது 'அல்லாஹூ அக்பர்' என்று உங்கள் மக்கள் சொல்கிறார்கள். அந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன?//
பழைய பதிவுகளிலேயே இதற்க்கெல்லாம் பதில் கொடுத்து விட்டேனே! தற்போது மீண்டும் சகோ அப்துல் அஜீஸ் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளித்து உள்ளார்.
சலாம் சுவனப் பிரியன்,
ஆகா நிறைய மக்கள் வந்து இருக்காங்களே.... கவனிக்காம விட்டாச்சே...
//பழைய பதிவுகளிலேயே இதற்க்கெல்லாம் பதில் கொடுத்து விட்டேனே!//
இப்படி ஒரு பதிலா?! அப்படி கொடுத்திருந்தால் ஏனிப்படி மறுபடி கேட்கிறேன். கொஞ்சம் தொடுப்பு கொடுங்களேன்.
உங்கள் நண்பர் கழுத்தை அறுப்பது என்று நான் சொன்னது மனிதக் கழுத்து என்பதைப் புரிந்து கொள்ளாமல் கோழி கழுத்து என்று நினைத்துக் கொண்டார் போலும்!
//நீங்கள் கொடுத்த மற்ற நான்கு பேரும் திறமைசாலிகள். அதில் அப்துல் கலாம் மாத்திரம் இளமையில் பிராமணர்களோடு அதிகம் இருந்ததால் இந்து மதத்தையும் சில நேரம் போட்டு குழப்பிக் கொள்வார்.//
இதை முழுவதும் ஒத்துகொள்கிறேன், எனது சிந்தனையே இதனை பற்றியதுதான், ஒருவேளை சுவனப்பிரியன் பிறந்த போது சினிமாவில் வருவதை போல ஒரு ஹிந்து ப்ராமினருக்கு மாற்றி கொடுத்திருந்தால் ....? 1930 களில் பிறந்திருந்தால்?
எனது எந்த சிந்தனையும் கடைசி வரை சரி என்று ஒத்துக்கொள்ளமாட்டேன், அறிவியலாளர்கள் மாற்றிகொள்வதை போல் மாற்றிகொள்வேன் . ஆனால் பீ ஜெ போன்றவர்களாலும், இன்னும் சில மத பிடிப்பாளர்களாலும் மாற்றிகொள்ளமுடியாது. 1995 சொன்ன ஒரு கருத்தை பிற்பாடு திருத்திக்கொள்ள முடியாது, காரணம் இன்றைய கருத்தை என்று திருத்துவீகள் என்ற கேள்வி வரும்?
சரி என்னதான் சொல்ல வருகிறீர்கள் என்ற கேள்விக்கு இதுதான் எனது கேள்வி , பதில் தாருங்கள் , உடன்பாடு இருந்தால் திருந்திகொள்கிறேன்
எனது வளர்ப்பு, சூழல், இதனை பொறுத்தே கடவுள் சார்ந்த சிந்தாந்தங்கள் இருந்தது, திடீரெண்டு இதுவரை செய்தது தவறு என்று பல ஆதாரங்களோடு ( எனக்கு உடன்பாடுதான் சில கருத்துக்களில் ) என்னை மாற்றிய பீ ஜெ போன்றவர்களை போன்று நாளை இன்னொருவர் வந்து வேறு ஒரு முறை இஸ்லாமிய வாழ்க்கை சிந்தாந்தங்களை சொன்னால் , காது கொடுக்க கூடாது என்று எப்படி நீங்கள் சொல்ல முடியும்? எனக்கு இருக்கும் அடிப்படை அறிவில் இதனை குறித்து அறிந்துகொள்ளமுடியும்,.எல்லோருக்கும் முடியுமா? அப்ப அவர்கள் கதி? அவர்களுக்கு யாருடைய பேச்சு பிடித்ததோ, புரிந்ததோ அதனைத்தான் பின்பட்ட்ருவார்கள்? ,
கேள்விகள் கேட்டு கொண்டே இருப்பது அதற்க்கான விடை எங்கேர்ந்தாவது வராதா என்றுதானே தவிர, எனது அறிவாற்றலை காட்ட அல்ல, அப்படி காட்ட வேண்டிய ஆளிடம் காட்டாமல் இழந்து தனிமரமாக நிற்கும் நான் அதற்க்கு தகுதியானவனும் அல்ல. ஆனால் இஸ்லாமியத்தை நான் தூக்கி பிடித்திருந்தால் எவ்வளவு தனிநபர் லாபம் கிடைத்திருக்கும் தெரியுமா?
மிக பெரிய இடுக்கையே எழுதி இஸ்லாமியர்களை ( எனது நெருங்கிய சொந்தத்தை கிழி கிழி என்று கிழித்திருப்பேன் ., உங்களுக்கு தெரிந்துகொள்ள வேண்டுமாயின் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுங்கள்., நீங்கள் நம்பும் உண்மை இஸ்லாமியர்கள் அதன் மூலம் பயன்பெறட்டும் ) சாம்பிள் ஒன்று - வாரத்தொலுகை செய்யும் ( அவரே ஒத்துகொள்ளும் விஷயம்) எனது ரத்த சொந்தம் ., என்னை தொழாதவன் என்று பீ ஜெ க்கு முன்னால் குற்றம் சாற்றுகிறார்,நான் ஆமோதித்தால் அவருக்கு பலன் உண்டு என்பதால். பதிலுக்கு நான் அவரை வாரமுசல்லி என்பதை நிரூபிக்க வேண்டிய ஆவசியமே இல்லை, காரணம் மனிதன் பலகீனவனாச்சே !ஆனால் இதில் நான் அவரைவிட இஸ்ட்ராங் ஆனவன் )
இஸ்லாத்தை பற்றி முழுமையாக "தருமி" தெரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருப்பதை தெளிவாக தன்னுடைய சந்தேக கேள்விகளின் மூலமாக திட்டவட்டமாக தெளிவாக்கி இருப்பதனால்,
சுவனப்பிரியன் அவர்கள் தமிழகத்தில் உள்ள இஸ்லாமிய சென்ட்டர்களின் தொடுப்புகளையும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தொடுப்புகளையும் கொடுத்து உதவுங்கள்.
இஸ்லாத்தை பற்றி விளக்கம் தரவோ, விவாதங்கள் செய்யவோ எந்த தயக்கமும் காட்டாமல் ஆவண செய்ய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஒரு போதும் மறுத்ததில்லை.
இஸ்லாத்தை பற்றி பதிவுகளின் பின்னூட்டங்கள் வாயிலாக
முழுமையாக விளக்கமளிப்பது எளிதல்ல.
யானை வேண்டுமென்பர். யானை கொடுத்தால் பானை வேண்டுமென்பர்.
பானையயும் கொடுத்து விட்டால்
யானையை பானைக்குள் போட்டுத்தாவென்பர்.
என்னே மனிதன்!!!
கிறிஸ்தவ மிஷனரிகள் தொன்று தொட்டு இன்று வரை உலகெங்கும் கிறிஸ்துவத்தை பரப்பி மற்ற மதத்தினரை கிறிஸ்துவத்துக்கு மாற்றிக் கொண்டிருக்கின்றார்களே.
இவர்களுக்கு மாற்று மதங்களின் வேதங்கள் ஏதாவது தண்டனை கூறுகிறதா? இல்லையே !!!!
பைபிள்: உபாகமம். அதிகாரம் 13 . ஸ்லோகம் 6 - 9
BIBLE: DEUTRONOMY. CHAPTER 13 VERSE 6 - 9
6. உன் தாய்க்குப் பிறந்த உன் சகோதரனாகிலும், உன் குமாரனாகிலும், உன் குமாரத்தியாகிலும், உன் மார்பிலுள்ள உன் மனைவியாகிலும், உன் பிராணனைப்போலிருக்கிற உன் சிநேகிதனாகிலும் உன்னை நோக்கி: நாம் போய் வேறே தேவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி,
If thy brother, the son of thy mother, or thy son, or thy daughter, or the wife of thy bosom, or thy friend, which is as thine own soul, entice thee secretly, saying, Let us go and serve other gods, which thou hast not known, thou, nor thy fathers;
7. உன்னைச் சுற்றிலும் உனக்குச் சமீபத்திலாகிலும் உனக்குத் தூரத்திலாகிலும், தேசத்தின் ஒருமுனை தொடங்கி மறுமுனைமட்டுமுள்ள எவ்விடத்திலாகிலும் இருக்கிற ஜனங்களுடைய தேவர்களில், நீயும் உன் பிதாக்களும் அறியாத அந்நிய தேவர்களைச் சேவிக்கும்படி இரகசியமாய் உன்னை ஏவிவிட்டால்,
Namely, of the gods of the people which are round about you, nigh unto thee, or far off from thee, from the one end of the earth even unto the other end of the earth;
8.. நீ அவனுக்குச் சம்மதியாமலும், அவனுக்குச் செவிகொடாமலும், உன் கண் அவன்மேல் இரக்கங்கொள்ளாமலும், அவனைத் தப்பவிடாமலும், அவனை ஒளித்து வைக்காமலும்,
Thou shalt not consent unto him, nor hearken unto him; neither shall thine eye pity him, neither shalt thou spare, neither shalt thou conceal him:
9. அவனைக் கொலை செய்துபோடவேண்டும்; அவனைக் கொலை செய்வதற்கு, முதல் உன் கையும் பின்பு சகல ஜனத்தின் கையும் அவன்மேல் இருக்கக்கடவது.
But thou shalt surely kill him; thine hand shall be first upon him to put him to death, and afterwards the hand of all the people.
ஆதாரம்:http://www.tamil-bible.com/lookup.php?Book=Deuteronomy&Chapter=13&Verse=6+-+9&Kjv=2
SOURCE: மதம் மாற்ற முயற்ச்சிப்பவர்களை கொல்லவாம்.
-------------------
பைபிள் புதிய ஏற்பாடு : BIBLE NEW TESTAMENT.
பைபிள்: மத்தேயு 5 அதிகாரம். ஸ்லோகம். 39
BIBLE: MATHEW CHAPTER 5. VERSE 39
39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு.
39. But I say unto you, That ye resist not evil: but whosoever shall smite thee on thy right cheek, turn to him the other also.
ஆதாரம். http://www.tamil-bible.com/lookup.php?Book=Matthew&Chapter=5&Verse=39&Kjv=2
--------------------------
மேற்கண்டவைக்கு நேர் மாறாக ஏசுவே என்ன சொல்கிறார்? சிரிப்பதா? அழுவதா?
பைபிள் புதிய ஏற்பாடு : NEW TESTAMEANT.
பைபிள்: யோவான் 18 அதிகாரம் ஸ்லோகம். 22 – 23.
BIBLE: JOHN. 18. VERSES 22 - 23
22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
22.And when he had thus spoken, one of the officers which stood by struck Jesus with the palm of his hand, saying, Answerest thou the high priest so?
23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார்.
23.Jesus answered him, If I have spoken evil, bear witness of the evil: but if well, why smitest thou me?
ஆதாரம். http://www.tamil-bible.com/lookup.php?Book=John&Chapter=18&Verse=22-23&Kjv=2
SOURCE: கிறிஸ்துவ போலிமாயைக்கு சவால்? -
.
யார் கழுத்து?, யாரால்?, எப்பொழுது?, எங்கு?, என்ன இறைச்சட்டம் நிறைவேற்ற?, என்ன காரணம் கூறி "அல்லாஹு அக்பர்" என்று அறுக்கப்பட்டது?.
ஏழைபிராமண பெயர் கொண்ட தருமி ஐயா!
உங்களை நான் புது அவதாரமாகவே நான் காண்கிறேன், ஒவ்வொரு நாளும் உங்கள் பெயரைகாணும் பொழுதும் திருவிளயாடல் புராணம் மெய்ப்பெருகிறது, ஏழை பிராமண தருமி என்று ஒருவர் இருந்தார் அவர் சிவனுடன் உரையாடினார் என்னும் உண்மையை நீங்கள் உங்களின் பெயராக தேர்ந்தெடுத்து உலகிற்கு காட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்!.
இசையில் கடவுளைத்தேடும் இம்முயற்ச்சி நீங்கள் எடுத்து வைத்திருக்கும் முதல் அடி.
வாழ்க வளமுடன்,
அருண்.
திரு தருமி!
//உங்கள் நண்பர் கழுத்தை அறுப்பது என்று நான் சொன்னது மனிதக் கழுத்து என்பதைப் புரிந்து கொள்ளாமல் கோழி கழுத்து என்று நினைத்துக் கொண்டார் போலும்//
“உமது இரட்சகனுக்காகவே தொழுது அவனுக்காகவே அறுத்துப் பலியிடுவீராக.” (108:02)
“(இவ்வாறு குர்பானி செய்யப்பட்ட) வற்றின் மாமிசங்களோ அல்லது அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைந்து விடுவதில்லை, எனினும் உங்களிலுள்ள பயபக்திதான் அவனை அடையும்.” (22:37)
“அ(றுக்கப்பட்ட)வைகளிலிருந்து நீங்களும் புசியுங்கள், கஷ்டப்படும் ஏழைக்கும் உண்ணக்கொடுங்கள்.” (22:18)
ஆடு கோழிக்கான அறுத்தலுக்கான சட்டங்கள் இவை.
2:85.இவ்வாறு உறுதிப்படுத்திய நீங்களே உங்களிடையே கொலை செய்கின்றீர்கள்; உங்களிலேயே ஒருசாராரை அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றுகிறீர்கள்; அவர்கள்மீது அக்கிரமம் புரியவும், பகைமை கொள்ளவும் (அவர்களின் விரோதிகளுக்கு) உதவி செய்கிறீர்கள். வெளியேற்றப்பட்டவர்கள் (இவ்விரோதிகளிடம் சிக்கி) கைதிகளாக உங்களிடம் வந்தால், (அப்பொழுது மட்டும் பழிப்புக்கு அஞ்சி) நஷ்டஈடு பெற்றுக்கொண்டு (அவர்களை விடுதலை செய்து) விடுகிறீர்கள்-ஆனால் அவர்களை (வீடுகளை விட்டு) வெளியேற்றுவது உங்கள் மீது ஹராமா(ன தடுக்கப்பட்ட செயலா)கும். (அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை(கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை.
இந்த வசனத்தின் முலம் அநியாயமாக ஒருவனை கொலை செய்வது பெரும் பாவம் என்று விளங்குகிறோம். இது போல் பல வசனங்கள் உண்டு. பழிக்குப் பழியான கொலையிலோ, அல்லது நியாயமான போர்க்களங்களிலோ இல்லாது ஒருவன் அநியாயமாக கொலை செய்தால் அது இறை தண்டனைக்கு உரியது. அவ்வாறு கொல்லும் போது 'இறைவனுக்காக செய்கிறேன்' என்று நினைத்து 'அல்லாஹூ அக்பர்' என்று சொல்லிக் கொண்டு சென்றாலும் இறைவனிடம் தண்டனையை அடைவான். இது மனிதர்களை அநியாயமாக கொல்பவர்களைப் பற்றி குர்ஆன் கூறும் சட்டம்.
மற்றபடி சிறுநீர் அமர்ந்து கழிப்பது சிறப்பு என்றும் முடியாத பட்சத்தில் நின்று கொண்டும் சிறுநீர் கழிக்கலாம் என்று உங்கள் பதிவிலேயே வந்து கூறியிருக்கிறேன்.
நான் அணியும் பேண்ட் கணுக்கால் வரை இருக்கும். பெருமைக்காக தரையில் படும்படி ஆடை அணிவதை ஆண்களுக்கு நபியவர்கள் தடை செய்கிறார்கள். இது சுகாதாரமானது கூட.
ஆராவாரிக்கும்
கல்வி கிரகங்களுக்கும்,
கல் விக்கிரகங்களுக்கும்
ஆர்ப்பாட்டம் இன்றி
சத்திய மார்க்கமாம் இஸ்லாத்தின் நெறி தவறாது
முறையான, வழி கெடுக்காத
பதிலளித்து வரும்
சுவனபிரியனுக்கு
எனது வாழ்த்துகள்.
.
Mr Tharumi
///உங்கள் நண்பர் கழுத்தை அறுப்பது என்று நான் சொன்னது மனிதக் கழுத்து என்பதைப் புரிந்து கொள்ளாமல் கோழி கழுத்து என்று நினைத்துக் கொண்டார் போலும்!///
தங்கள் வினா மனிதக் கழுத்தைப் பற்றியது அல்ல. தங்களுக்கு அளித்த விடையும் அது சம்பந்தமானது அல்ல.
தங்கள் வினாவிற்கான விடையுடன் அறுப்பது உணவுக்காக என்றும், என அந்த நண்பரின் பதில் இருக்கிறது.
ஆக, உணவிற்கென்று அறுப்பவை மனிதன் நீங்கலாக என்று கிரகிப்பது, தங்களுக்கு சிரமம் போலும்!
- Ismath
Post a Comment