'இறைவன் என்ற ஒருவனைப் பற்றி முழுமையாக எனக்கு விளங்காத வரை அதாவது யாராலும் படைக்கப்படாமல் எவ்வாறு தோன்றினான் என்ற உண்மை விளங்காத வரை இறைவன் என்ற ஒருவனை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் என வாதிடுவது உயிர் என்றால் என்னவென்று முழுமையாக எனக்குப் புரியாத வரை அப்படி ஒன்று எனக்குள் இருப்பதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன் எனக் கூறுவதற்கு ஒப்பானதாகும்'
Followers
Tuesday, August 28, 2012
இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல
நீங்கள் குற்றமிழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
ஆம். குற்றமிழைத்துக் கொண்டிருப்பவர்களைத் தேடிக் கண்டுபிடித்து தண்டிப்பது தீர்வாகாது என்பதால் இரண்டு நிலங்களைப் பிரிக்கும் ஒற்றைச் சுவரில் உடைப்பொன்றை ஏற்படுத்தும் கலகக்காரனாய்ச் செயல்படுவதே இக்கட்டுரையாளனின் நோக்கம்.
தென் இந்திய சினிமாக்களில் அதுவும் குறிப்பாக தமிழ் சினிமாக்களில் காலம் காலமாக அல்ல, சரியாக சொல்வதானால் 1995 ஆண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் பல்வேறு படைப்பாளிகளால் தவறாகவும் மிகையாகவும் புண்படும் வண்ணமும் கேலிப் பொருட்களாகவும் எதிர்மறைப் பாத்திரங்களாகவும் சித்தரிக்கப்படுவது சென்ற வாரம் வெளியான வானம் (தெலுங்கு வேதம் படத்தின் மீள்வுருவாக்கம்) வரை தொடர்வது பலரும் எழுதிவரும் தொடர்கதை. இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்திய நிலத்தில் இஸ்லாமியர்களும் மற்ற சமய சமூகத்தை சேர்ந்தவர்களும் மிகச்சரியான புரிதல்களுடன் வாழ்ந்து வந்தது பெருவரலாறு. ஆனால் காந்தியைக் கொன்றழித்த இந்திய தேசத்தின் புதல்வர்கள் ஆளவந்தார்களாக மாறிய வரையிலும் அந்தப் பெருவரலாற்றின் அமைதி தொடர்ந்து தான் வந்தது. பொதுச்சூழலில் என்றைக்கு குண்டுவெடிப்புகளும் உலகளாவிய நிகழ்வுகளில் பல செயல்களும் செய்திகளும் முஸ்லிம்களை சம்மந்தப்படுத்தி வரத் தொடங்கினவோ அன்றைக்கு பிடித்தது சனி.
நான் முஸ்லிம்களில் குற்றவாளிகள் இல்லவே இல்லை என கூறவரவில்லை. முஸ்லிம்கள் என்றாலே குற்றவாளிகள், குண்டுவைப்பவர்கள் என்று கற்பிதம் செய்ய முனையும் ஆதிக்கசக்திகளை துதி பாடி எடுக்கப்படும் திரைப்படங்களைச் சாடுவதே என் நோக்கமாகிறது. எந்த இனத்தில் அல்லது எந்த மதத்தில் குற்றவாளிகள் இல்லாமல் இருக்கிறார்கள்..? எந்த இனத்தை சேர்ந்த அல்லது மதத்தைச் சேர்ந்தவர்கள் முழுக்க நல்லவர்கள் என மார் தட்டிக்கொள்ள முடியுமா..? அங்கனமே முஸ்லிம்களையும் அவர்களில் அங்குமிங்கும் இருக்கும் குற்றவாளிகளை குற்றச்செயல் புரிந்தவர்களை நாம் பார்க்க வேண்டும் என்பது தானே நியாயமாக இருக்க முடியும்..?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டியோ இல்லையோ, உலகுக்கே இளைத்தவாயர்கள் முசல்மான்கள்.
அவர்கள் செய்யக்கூடிய கொடுஞ்செயல்கள் என்னென்ன..?
1.அரபி/உருது பேசுகிறார்கள்.
2.தரையில் வீழ்ந்து தொழுகை புரிகிறார்கள்.
3.கூட்டம் கூட்டமாக வாழ்க்கை நடத்துகிறார்கள்.
4.புத்தகங்கள் அச்சிடுகிறார்கள்.. படிக்கிறார்கள் பேசுகிறார்கள்.
5.இன்னமும் இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என நம்பிக்கொண்டு இங்கேயே இருக்கிறார்கள்.
குழந்தைத் தனமாய் இருக்கிறது. இரண்டு தரப்பாரை எப்பொழுதும் பதற்றத்திலேயே வைத்திருப்பதில் பதவிக்குளிர் காய்கிற அரசியல்வாதிகளும், மதவாதிகளும், இந்த இரண்டு தரப்பாரைச் சார்ந்து பிழைப்பு நடத்தும் அடிவருடிகளும் தவிர பொது மக்கள் இன்னமும் எந்த மதமாயினும் சரி, இணக்கமாக, அந்நியோன்னியமாகத் தான் வாழ்கின்றார்கள்..
இனி சினிமாவுக்கு வருவோம். அடிதடிப் படமாயினும் அரசியல் படமாயினும் சரி... ஊறுகாய் முஸ்லிம்கள் தான். முஸ்லிம்கள் குண்டு வைப்பவர்களாகவும், உருது பேசுகிறவர்களாகவும், தொழுகை புரிபவர்களாகவும், வெளிநாட்டுத் தீவிரவாதிகளாகவும், குண்டடிபட்டு அல்லது குத்துப் பட்டு சாகிறவர்களாகவும் தொடர்ந்து பிம்பமாக்கப்படுகிறார்கள். எந்த வித உலகளாவியப் பார்வையோ அல்லது புரிதலோ அன்றி எடுத்தேன் கவிழ்த்தேன் என எடுக்கப்படுகின்ற படங்களில் தொடர்ந்து சிறுபான்மை முஸ்லிம்கள் கொடுமைக்குட்படுத்தப்படுகின்றனர்.
சமீபத்திய வானம்... இதில் ப்ரகாஷ்ராஜ் நல்ல முஸ்லிம். அவர் தம்பி தீவிரவாதி. குண்டு வைப்பவன்.
ரஜினிகாந்தின் சிவாஜியில் ஹவாலா செய்பவர் ஒரு பாய். (சூப்பரு). உன்னைப் போல் ஒருவனில் கமல் செய்தது பெரும் துரோகம். அவரது குருதிப்புனல் படத்தில் அர்ஜூன் முஸ்லிம். கமல் இந்து. ஏன் இந்த நாயகர்கள் முஸ்லிம் வேஷமே ஏற்கக்கூடாதா..? பெரும்பான்மை மதத்தைத்தான் சார்ந்தவனாய் இருக்க வேண்டும் நாயகன் என்று எழுதப்படாத விதியே இருக்கிற கோடம்பாக்கத்தில் அதை மீற கமலால் கூட முடியாது. சேரனின் பொக்கிஷம் வித்தியாசமாய்த் தொடங்கியதே எனப் பார்த்தால்... அய்யய்யோ பத்மப்ரியாவின் அப்பா(முஸ்லிம்கள்)தான் படத்தின் வில்லன். வாக்கு கொடுத்து அதை மீறுகிறவர். ஏன் இந்த வெறிப்பார்வை..? சேரன் அதே படத்தை கதையை மாற்றி யோசிப்பாரா..? அல்லது எடுப்பாரா..? பத்மப்ரியா ஒரு ஹிந்து சேரன் ஒரு முஸ்லிம் என எடுத்தால்... எடுத்தால் என்று தான் சொல்ல முடியும்.. எடுக்க மாட்டார்கள்.
சரி போகட்டும் என்றால் நம்பள்கி நிம்பள்கி என்று கசாப்பு கடைக்காரர்களாகவும் கறி வெட்டுகிறவர்களாகவும் தானே அதற்கு முன்பு வரை சித்தரிக்கப்பட்டார்கள்..? சில விதிவிலக்குகள் உள்ளன என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவை மனக்காயங்கள் மொத்தத்தையும் மறுதலிப்பதற்கோ மறுப்பதற்கோ மறப்பதற்கோ போதாது என்பதே உண்மை.
இஸ்லாமியர்கள் பற்றி எடுத்துச் சொல்வதற்கு எத்தனை விஷயங்கள் இருக்கின்றன..? ஒரு முழுமையான சினிமா, முழுக்க இஸ்லாமிய குடும்பமொன்றின், இஸ்லாமிய கிராமமொன்றின், இஸ்லாமிய வாழ்க்கைமுறை ஒன்றைப் பதிவு செய்திருக்கிறதா இது வரை தமிழ் சினிமாவில்..? அப்படி ஒரு படம் எடுத்தால் ஓடாதா..? அல்லது இஸ்லாமியர்கள் வரலாற்றில் கதைகளே இல்லையா? இந்த மண்ணில் காலம் காலமாய் இஸ்லாமியர்கள் என்றாலே கறிவெட்டுபவன், தமிழை தப்பாக பேசுபவன் அல்லது குண்டு வைப்பவன் தானா..?
கட்டிடக்கலையில் இருந்து சாஃப்ட்வேர் துறை வரை தையல் கலையில் இருந்து மருத்துவர் வரை விஞ்ஞானிகளில் இருந்து மாலுமிகள் வரை இஸ்லாமியர்கள் சாதிக்கவில்லையா..? அல்லது சாதிப்பதை வெளிச்சொல்ல தமிழ்சினிமா தயாராக இல்லையா..? இது தான் இப்பொழுது நம் முன் நிற்கும் கேள்வி.
எந்த ஒரு படத்திலும், ஆகா.. ஒரு கண்டிப்பான போலீஸ் அதிகாரி இஸ்லாமியர் என கதை சொல்கிறார்களே, பரவாயில்லையே என நினைத்தால் (உதாரணம்:போக்கிரி) உடனே வந்து இறங்குவார் அலிபாய். சர்வதேச குண்டுவைக்கும் டெக்னாலஜிஸ்ட். என்ன கொடுமை இது..?
இவர்கள் எல்லோருமே கதை எழுத மன்னிக்கவும் கதை பண்ண உட்காரும் பொழுதே ஒரு எதிர்மறைப் பாத்திரம் முஸ்லிமாக வந்தாக வேண்டும் என்ற முன் முடிவில் அதை பேலன்ஸ் செய்வதற்காகவே இன்னொரு கதாபாத்திரம் முஸ்லிம்.. அது எதற்கு..? மத ஒற்றுமை பேச, தியாகம் செய்ய.. ஏன் தனியாக ஒரு நல்ல முஸ்லிம் கதாபாத்திரத்தை சிந்திக்கவே முடியாத ஊனமுற்றவர்களாகவே இயங்குகிறீர்கள் இயக்குநர்களே...?
சரி. பொருளாதாரத்தில் கல்வியில் இன்னும் வாழ்நிலைகளில் முன்னேறி இருக்கிற, இந்தியத்திருநாட்டில் எல்லா ஊர்களிலும் பாரபட்சமின்றி பாகுபாடின்றி இடங்களையும் சொத்துக்களையும் வாங்கி இருக்கிற, வாங்குகிற, வாங்கப் போகிற மேல்நிலை முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே சித்தரிக்கிறீர்களே.. அதே நேரம் இன்னமும் கடைநிலையில் அடுத்த வேளை உணவுக்கு கஷ்டப்படுகிற, வாழ்வாதாரத் தேவைக்கு கூட கை ஏந்தும் நிலையில் கல்வி அறிவும் பெறாமல், கூலிகளாகவும் ஏழைகளாகவும் இந்த நாட்டில் பரிதவிக்கிற ஏழை முஸ்லிம்களின் கதையை படமாக்க அல்லது எண்ணிப் பார்க்க கூட நேரமில்லையா தோழர்களே.. அல்லது அப்படி ஏழைகளாக எந்த ஒரு முஸ்லிமும் இல்லை என உங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறதா....?
நமது வீதிகளில் நமது வீடுகளுக்கு இடப்புறமும் வலப்புறமும் வசித்துக் கொண்டு, நம் பிள்ளைகள் படிக்கிற பள்ளிகளில் தம் பிள்ளைகளைப் படிக்க வைத்து, நாம் பணம் சேமிக்கும் வங்கிகளில் தம் பணத்தையும் சேமித்துக் கொண்டு, நம்மிடம் தம் பொருளை விற்று, நம் பொருளை தமக்கென வாங்கி, குருதி கொடுத்து குருதி பெற்று எல்லா விதங்களிலும் சிறுபான்மையினராய் எல்லா நேரங்களிலும் அடுத்து என்ன நிகழுமோ என்ற பதற்றத்துடனே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இஸ்லாமியர் இந்த 'மதச்சார்பற்ற' காந்தி தேசத்தில் செய்யும் பிழைதான் என்ன..? இந்த நிலத்திலேயே தொடர்ந்து வாழ்ந்துவருவதைத் தவிரவும்.
சினிமா கட்டாயம் தலையாய கலை என நம்புகிறேன். பத்து படங்கள் போதும் தேசம் அமைதியுற என நிச்சயமாக அடித்துச் சொல்ல விழைகிறேன். அதனால் உங்கள் முன்வைக்கிறேன். என்ன செய்யக் கூடாது என்பதுவும் என்ன செய்ய வேண்டும் என்பதுவும்....
உங்களுக்குத் தெரியாதா இயக்குநர்களே..?
-ஆத்மார்த்தி
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14467:2011-05-08-04-10-28&catid=1:articles&Itemid=264
நன்றி: கீற்று
இது போன்ற நடு நிலைவாதிகள் பெரும்பான்மையாக உள்ள நமது நாடு இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் உலகுக்கு எடுத்துக் காட்டாய் அமையும். ஆத்மார்த்தியை ஆரத் தழுவி அன்பை செலுத்துவேம். சினிமா என்ற ஒரு அருமையான ஊடகத்தை இன்று காலிகள் ஆக்கிரமித்து உள்ளார்கள். அந்த நிலையை மாற்ற அறிவுஜீவிகள் முன் வர வேண்டும். ஈரானும், எகிப்தும் அருமையான கதையம்சம் கொண்ட பல திரைப்படங்களை உலகுக்கு அளித்து வந்துள்ளது. அந்த வரிசையில் தமிழ்ப் படங்களும் வரும் நாளை எதிர்பார்ப்போம்.
//1.அரபி/உருது பேசுகிறார்கள்.//
இஸ்லாம் உலக மொழிகள் அனைத்தையும் ஒரே தரத்திலேயே பார்க்கிறது. ஐந்து வேளை தொழுகை நேரங்களில் மட்டுமே முஸ்லிம்கள் அரபியில் ஓதுவார்கள். அது உலக ஒருமைப்பாட்டிற்காக! உருது பேசக் கூடிய முஸ்லிம்கள் தமிழகத்தில் மிகச் சொற்பமே! பெரும்பான்மை தமிழக முஸ்லிம்கள் வீடுகளிலும் ஆங்கிலம் கலக்காத தூய தமிழையே பேசி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
74 comments:
//பெரும்பான்மை மதத்தைத்தான் சார்ந்தவனாய் இருக்க வேண்டும் நாயகன் என்று எழுதப்படாத விதியே இருக்கிற கோடம்பாக்கத்தில் அதை மீற கமலால் கூட முடியாது. //
கள்ளழகர் படத்தில் விஜயகாந்து ஒரு முஸ்லிம்.
ஆனால் எல்லாப்படங்களிலும் முஸ்லிம் ஹீரோ கேரக்டராக இருக்க படம் பாகிஸ்தானில் தான் எடுக்க வேண்டும். :)
எங்கேயோ யாரையோ கொறைச் சொல்றிங்க, ஆரியா யார் ? முசல்மான் இளைஞர் தானே ? அவர் ஏன் தன் பெயரை ஆரியாவாக ஆக்கிக் கொள்ள வேண்டும். இஸ்லாமியர்களுக்கே திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க இந்துப்பெயர் தேவைப்படுது, அவங்க நடிக்கும் படத்தில் பாத்திரம் இந்துப் பெயரைக் கேட்கிறீர்கள்.
எனக்கு தெரிந்து தமிழ் படத்தில் ஹீரோ கேரக்டர்கள் தெலுங்கு பேசியோ, கன்னடம் பேசியோ, தெலுங்கு பேசும் குடும்பத்தைச் சார்ந்தவர்களாகப் பார்த்ததில்லை, தமிழ்நாட்டில் கன்னடம், தமிழை தாய்மொழியாகக் கொண்டவர்கள் இல்லையா ?
பாரதி இராஜ தாஜ்மஹால் என்ற படத்தில் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட ஹிரோயின் பாத்திரம் காட்டி இருப்பர், மற்றபடி தமிழ் சினிமாவில் பிற மொழி பாத்திரங்கள் 'நோ' கவர்ச்சிகாக முண்டு கட்டி கேரளா ஸ்டைல் என்று குரூப் டான்ஸ் ஆடவிடுவார்கள் அவ்வளவு தான்.
இஸ்லாமியர்கள் திரைப்படம் பார்க்கத் தடை என்னும் பொழுது அதில் காட்டப்படும் கேரக்டர் கழுதையாக இருந்தால் என்ன குதிரையாக இருந்தால் என்ன ?
சலாம் சகோ...
எல்லா மதத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள்....அனால் முஸ்லிம்களை மட்டும் குறி வைத்து எழுதுவதன்,சினிமா எடுப்பதன், பேசுவதன் நோக்கம் முஸ்லிம்களை ஏற்று கொள்ளாத ஒரு பிற்போக்கான மனப்பாங்கே...
ஸலாம் சகோ.ஆத்மார்த்தி....
///எல்லா விதங்களிலும் சிறுபான்மையினராய் எல்லா நேரங்களிலும் அடுத்து என்ன நிகழுமோ என்ற பதற்றத்துடனே வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு இஸ்லாமியர் இந்த 'மதச்சார்பற்ற' காந்தி தேசத்தில் செய்யும் பிழைதான் என்ன..? இந்த நிலத்திலேயே தொடர்ந்து வாழ்ந்துவருவதைத் தவிரவும்.///
காயத்துக்கு ஆத்மார்த்தமாக மருந்திட்டு கட்டுப்போட்டு பரிவோடு நீவிவிட உங்களைப்போல பலர் இன்னும் இருக்கும்வரை... இந்த நிலத்திலேயே தொடர்ந்து வாழ்ந்துவருவதிலே பிழை ஒன்றும் இல்லையே சகோ..!
பகிர்வுக்கு நன்றி சகோ.சுவனப்பிரியன்..!
நியாயமான கேள்விகள்......ஆரியாவை அப்படி இருக்கும் நிலைக்கு தள்ளிவிட்ட சமுதாயத்தை பற்றி பேசினால் நலம்.பேசுவார்களா?
இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பது தமிழ் சினிமாவின் மனநோய். இது சமூகத்தில் ஒருவிதமான தவறான பிம்பத்தை ஏற்படுத்தி வைத்துள்ளது என்பது உண்மை. இதனை தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் இத்தனை நாள் எதிர்க்காமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.
இந்தியாவில் விடுதலைக்கு பின் மதக்கலவரங்களில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள்தான். அதிகமாக கொலை செய்யப்பட்டவர்களும் இஸ்லாமியர்கள்தான். இந்துக்கள் பெரும்பான்மையினராக உள்ள ஒரு நாட்டில், சிறுபான்மையினர் கலவரங்களில் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் - பாதிக்கப்பட்டவர்களே பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவது எப்படி?
கோவி கண்ணன்!
//இஸ்லாமியர்கள் திரைப்படம் பார்க்கத் தடை என்னும் பொழுது அதில் காட்டப்படும் கேரக்டர் கழுதையாக இருந்தால் என்ன குதிரையாக இருந்தால் என்ன ? //
அவர்கள் கழுதையையோ குதிரையையோ காட்டி விட்டுப் போகட்டும். அதற்கு குறிப்பாக தவறு செய்பவர்களை இஸ்லாமியர்களாக திட்டமிட்டு நுழைப்பதன் அவசியம் என்ன? என்பதுதான் கேள்வி. இன்று வரை போலீஸ் காலடி படாத எத்தனையோ முஸ்லிம் கிராமங்கள் தமிழகத்தில் உண்டு. அந்த அளவு குற்ற செயல்களை தவிர்ந்து வாழும் ஒரு சமூகத்தின் மீது ஏன் இந்த ஒட்டு மொத்த அவமதிப்பு. இஸ்லாமியர்களிலும் தவறிழைப்பவர்கள் உண்டு. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் நம் சினிமாவில் அநியாயத்துக்கு இஸ்லாத்தின் பெயரை இழுத்து காசு பார்க்க பார்க்கிறார்கள். அதுதான் விமர்சனத்துக்கு உள்ளாகிறது.
//அவர்கள் கழுதையையோ குதிரையையோ காட்டி விட்டுப் போகட்டும்.//
@சுவனப்பிரியன், உங்கள் பதிவை தமிழ் அறியாதவர்கள் படிப்பதில்லை - படிக்க வாய்ப்பில்லை. ஆகையால், அவர்களைப் பற்றி உங்கள் பதிவில் எப்படி வேண்டுமானாலும் - கழுதையாகவோ, குதிரையாகவோ உருவகித்து - எழுதும் உரிமை உங்களுக்கு உள்ளதா?
:-))))))))))
பரவாயில்லையே சகோ.சினிமாவெல்லாம் பூந்து விளையாடுகிறாரேன்னு பார்த்து ஆத்மார்த்தின்னு போட்டு புஸ்வாணமாக்கிட்டிங்களே!
சினிமாக்காரர்கள் சமூகத்தின் பங்காளிகள் எனபதோடு சமூகத்தை வியாபர சமரசங்களோடு ஓரளவுக்கு சரியாக பிரதிபலிப்பவர்கள்.கமல்,அர்ஜுன் எல்லாம் கண்ணுக்கு தெரிந்ததே மணி ரத்னத்தின் பம்பாய் படத்தை விட்டு விட்டாரே!நல்லாத்தானே சொல்லியிருந்தார்.ஆனால் கதாநாயகனை இஸ்லாமியராகவும்,கதாநாயகியை இந்துவாகவும் ஏன் காட்டவில்லை என்று கொடி பிடித்து கல் எறிந்த கூட்டத்தையும் சொல்லியிருக்கலாமே!
இந்தியாவின் இஸ்லாமிய தீவிர வாதம் பம்பாயில் தாவுதி இப்ராஹிம் மூலமாகவும் இந்துத்வா தீவிரவாதம் கரசேவை பாபர் மசூதி இடிப்போடும் துவங்குகிறது.
உலகளாவிய இஸ்லாமிய தீவிர வாதம் பாகிஸ்தானில் உலகளாவிய இஸ்லாமியக் கனவு வருடாந்திரக் கூட்டங்களில் துவங்கி இரட்டைக்கோபுர தகர்ப்பில் திசை மாறி வலம் வருகிறது.
ரஜனியின் திரைப்படத்தில் ஹவாலா பாய் என்ற குறியீடு சரியானதுதான்.பணமாற்று செய்பவர்களுக்கு இது புரிந்து ஒன்றுதான்.ஏன் பிரணாப்,ப.சிதம்பரம் போன்றவர்களுக்கும் கூட தெரிந்த ஒன்றாக இருந்த போதும் தங்கள் அரசியல் சுய லாபங்களுக்காக கறுப்பு பணத்தை வெளியிடாத மாதிரி அடக்கியே வாசிப்பார்கள்.
தமிழ் திரைப்படத்துறையில் சமூகம் சார்ந்து நிறைய இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.எனவே ஆத்மார்த்தி சொல்வதுதான் வேத வாக்கு என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.
சலாம் அன்பின் சுபி,
//இஸ்லாமியர்கள் திரைப்படம் பார்க்கத் தடை என்னும் பொழுது அதில் காட்டப்படும் கேரக்டர் கழுதையாக இருந்தால் என்ன குதிரையாக இருந்தால் என்ன ? // நம்ம காவி கண்ணுவின் பதிவுகளும் பின்னூட்டங்களும் படிப்பவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள். எங்கள் ஊரில் அருமையான் சொல்லாடல் உண்டு. ஒருவன் யார் என்பதை அவன் பேச்சு காட்டி விடுகிறது. காவி கன்னுவுக்கு மிகச்சரியாக பொருந்தும் வாசகம். மனதின் வக்கிரத்தின் வெளிப்பாடான வார்த்தை தான் இந்த கழுதை மற்றும் குதிரை. என்னை கலுதையாகவும் குதிரையாகவும் காட்ட இவன் யார் மிஸ்டர் காவி. சினிமா என்ற இந்த கேடு கெட்ட விபச்சார கூடம் போது வெளியில் கட்டமைத்து இருக்கும் முஸ்லிம்களை பற்றி கட்டமைக்க விரும்பும் கட்டமைக்கும் செய்தி என்ன? கமல் என்ற அயோக்கியன் கொடுத்த உன்னை போல் ஒருவனை செருப்பை மலத்தால் அடித்தது போல் என்னை போல் ஒருவனா நீ என்று சகோதரர் ஞானி குமுதத்தில் கிழித்து எறிந்து இருந்தாரே. மேலும் சகோ சுகுணா திவாகரின் இரண்டு சினிமா பற்றிய பதிவுகள்
http://suguna2896.blogspot.com/2009/09/blog-post_22.html
http://suguna2896.blogspot.com/2008/11/blog-post_15.html
சகோ ஹூசைனம்மா!
//@சுவனப்பிரியன், உங்கள் பதிவை தமிழ் அறியாதவர்கள் படிப்பதில்லை - படிக்க வாய்ப்பில்லை. ஆகையால், அவர்களைப் பற்றி உங்கள் பதிவில் எப்படி வேண்டுமானாலும் - கழுதையாகவோ, குதிரையாகவோ உருவகித்து - எழுதும் உரிமை உங்களுக்கு உள்ளதா?
:-))))))))))//
இதற்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் பதில் சொல்ல வேண்டும். :-(
சகோ சதீஷ் செல்லதுரை!
//நியாயமான கேள்விகள்......ஆரியாவை அப்படி இருக்கும் நிலைக்கு தள்ளிவிட்ட சமுதாயத்தை பற்றி பேசினால் நலம்.பேசுவார்களா?//
நியாயமான கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். ஆனால் பதில் வராது.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சகோ அருள்!
//இதனை தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமிய சமூகத்தினர் இத்தனை நாள் எதிர்க்காமல் இருப்பதுதான் வியப்பாக இருக்கிறது.//
முன்பெல்லாம் இந்த கூத்தாடிகளுக்கு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் எந்த வரவேற்பும் இருக்காது. அதிகமானோர் படமே பார்க்க மாட்டார்கள்.
தற்போது டிஷ் வரப் போய்தான் வீடுகளுக்குள் இந்த கூத்தாடிகளை முஸ்லிம்கள் அனுமதிக்கும் கட்டாயமாகி விட்டது. இனி வரும் காலங்களில் டிஎன்டிஜே, தமுமுக போன்ற சமுதாய இயக்கங்கள் இந்த கூத்தாடிகளை ஒரு வழிக்கு கொண்டு வர முயற்சிக்க வேண்டும்.
அடப்பாவமே...!
இங்கே ஓர் 'இஸ்லாமோபோபியா நோயாளி' செய்யும் வரலாற்று திரிபை பாருங்கள்..!
////இந்தியாவின் இஸ்லாமிய தீவிர வாதம் பம்பாயில் தாவுதி இப்ராஹிம் மூலமாகவும் இந்துத்வா தீவிரவாதம் கரசேவை பாபர் மசூதி இடிப்போடும் துவங்குகிறது.////
எது முந்தி..? எது பிந்தி..? வரலாறு தெரியாத கூமுட்டைகள் இல்லை யாரும் இங்கே..!
இது....
எப்படி இருந்திருக்க வேண்டும் தெரியுமா...?
வாங்க நான் சொல்லி தருகிறேன்..!
காந்தியை கொன்ற 1948 இல் துவங்கிய சு'தந்திர' இந்தியாவின் இந்துத்வா தீவிரவாதம் 1992 கரசேவை பாபர் மசூதி இடிப்போடு தொடர்ந்து இன்னும் வேகம் பெற்று பல்வேறு குண்டுவெடிப்புகளோடு அதுவும் இந்திய ராணுவத்தினர் சப்ளை செய்த RDX பாம்களுடன் 'ராஜ நடராஜ நடை' போட்டு வருகிறது..!
ஆனால்... 1993 இல் நடந்த பம்பாய் குண்டுவெடிப்பில் சஞ்சய்தத் உட்பட பல ஹிந்துக்கள் பங்காற்றி இருந்தாலும்... பாம் சப்ளை தாவூத் இபாராஹீம் என்பதாலும், இதில் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் தண்டனை பெற்றவர்கள் பெரும்பான்மையாக முஸ்லிம்கள் என்பதால்... வரலாறு இதை இஸ்லாமிய தீவிரவாதம் என்கிறது..!"
சகோ ஃபெரோஸ்!
// கமல் என்ற அயோக்கியன் கொடுத்த உன்னை போல் ஒருவனை செருப்பை மலத்தால் அடித்தது போல் என்னை போல் ஒருவனா நீ என்று சகோதரர் ஞானி குமுதத்தில் கிழித்து எறிந்து இருந்தாரே.//
சரியான கேள்வி. ஆனால் இந்த கூத்தாடிகள் எந்த வகையிலாவது தமிழனிடமிருந்து பணத்தை கறக்க வேண்டும். அதற்காக எது வேண்டுமானாலும் செய்வார்கள்.
‘முஸ்லீம் என்றால் தீவிரவாதி’-தமிழ் சினிமாவின் மோசடி
சினிமாவில் தீவிரவாதிகள் என்றாலே இசுலாமிய இன மக்களையே காட்டுகிறார்களே ?
- அப்துல் காதர்,பாளையங்கோட்டை
இஸ்லாமிய காதபாத்திரங்களே இல்லாத புராண கதைகள் திரைப்படங்களான அந்தக் காலத்திலேயே, அந்த நிலையை தலைகீழாக மாற்றி ஒரு இந்து கதாபாத்திரம்கூட இல்லாமல் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழலில் திரைப்படங்கள் வந்தது, திராவிட இயக்கங்கள் செல்வாக்கு பெற்ற பிறகே.
‘அலிபாபாவும் 40 திருடர்களும், குலேபகாவலி, பாக்தாத் திருடன்’ போன்ற படங்கள் முழுக்க முழுக்க இஸ்லாமிய சூழ்நிலையிலேயே வந்த திரைப்படங்கள்.
‘ராஜாதேசிங்கு’ திரைப்படம் இந்து மன்னனுக்கும், இஸ்லாமிய தளபதிக்கும் இடையில் இருந்த நட்பை சொல்லியது.
அதற்குப் பின்னர் வந்த பீம்சிங்கின் ‘பாவமன்னிப்பு’ படம் ஒரு படி மேலே போய் நேரடியாக திராவிட இயக்க கருத்தை மையமாக வைத்தே கதாபாத்திரங்கள் அமைந்தன.
அந்தப் படத்தில் இஸ்லாமியராக வரும் நாகைய்யா மிகவும் நல்லவர். ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்ப்பார்.
இந்துக் குழந்தையை (சிவாஜி) தன் குழந்தையாக எடுத்து வளர்ப்பார்.
கிறிஸ்தவராக வரும் சுப்பையா அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் குணம் உடையவராக இருப்பார்.
இந்துவாக வரும் எம்.ஆர்.ராதாதான் அந்தப் படத்தின் வில்லன். படம் முழுக்க அடுத்தவர்களுக்கு தீங்கு செய்து கொண்டே இருப்பார்.
80களில் வந்த இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணனின் அடுக்குமல்லி (தேங்காய் சீனிவாசன்), இயக்குநர் ராஜசேகரின் படிக்காதவன் (நாகேஷ்) வாழ்க்கை (வி.கே. ராமசாமி) போன்ற திரைப்படங்களில் கூட நல்ல குணம் கொண்ட குணச்சித்திர கதாபாத்திரங்கள் இஸ்லாமிய பாத்திரங்களாகவே வந்திருக்கின்றன.
மணிரத்தினத்தின் ‘ரோஜா’ திரைப்படத்திற்கு பிறகே தமிழ் சினிமாவில் இஸ்லாமியர்களை வில்லன்களாக சித்தரிக்கும் போக்கு ஆரம்பித்தது.
அதுவரை தமிழ் சினிமாவில் அரைகுறை ஆடை அணியும் பெண்களும் பல ஆண்களோடு சகஜமாக பழகும் பெண்களும், காபரே நடனம் ஆடும் பெண்களும், (கே. பாலசந்தரின் நூற்றுக்கு நூறு திரைப்படம்) கிறிஸ்தவர்களாகவே காட்டி கொண்டிருந்தார்கள்.
அதில் பெரிய வேடிக்கை அந்தக் கதாபாத்திரத்தில் நடித்த பெண்கள் யாரும் கிறிஸ்தவர்கள் இல்லை.
பெரும்பாலும் ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்களே.
“பாகிஸ்தான் தீவிரவாதிகளை காட்டுவதற்கு, இஸ்லாமிய குறியீடு பயன்படுத்தப்படுகிறது” என்று காரணம் இப்போது சொல்லப்படுகிறது.
ஆனால், அதுவல்ல உண்மை. இஸ்லாமியர்கள் மீதான காழ்ப்புணர்ச்சிதான் இதுபோன்ற படங்கள் வருவதற்கு காரணம்.
இப்போதாவது பாகிஸ்தானோடு எல்லைப் பிரச்சினைதான். ஆனால் பாகிஸ்தானோடு போர் நடந்தபோதேகூட, தமிழில் இஸ்லாமிய எதிர்ப்பு படங்கள் வந்தது கிடையாது;
அதற்கு மாறாக இயக்குநர் ஏ.சி. திருலோகசந்தரின் ‘பாரதவிலாஸ்’ திரைப்படத்தில், பாகிஸ்தானுக்கு எதிரான போரில் தன் உயிரையே தியாகம் செய்கிற ராணுவ வீரனை ஒரு இஸ்லாமியராகத்தான் காட்டியிருந்தார்.
ARTICLE SOURCE: http://mathimaran.wordpress.com/2010/12/
திரைப்படம் என்பது ஒரு வியாபாரம்!! லாபம் என்பதே குறிக்கோள், பெரும்பான்மையான ரசிகர்களை திருப்தி படுத்தவே இத்தகைய கேரக்டர்கள் உருவாக்கபடுகின்றன! இங்கு நீதி நியாயங்களுக்கு இடமில்லை !! யாரை எப்படி காட்டினால் வசூல் அள்ளும் என்பதே முக்கியம் ஊடகங்கள் அனைத்தும் அதன் முதலாளி நலன் சார்ந்து இயங்குபவைதான்
சகோ ராஜ நடராஜன்!
//பரவாயில்லையே சகோ.சினிமாவெல்லாம் பூந்து விளையாடுகிறாரேன்னு பார்த்து ஆத்மார்த்தின்னு போட்டு புஸ்வாணமாக்கிட்டிங்களே!//
இப்பொழுது வரும் படங்களெல்லாம் பார்க்கும்படியாகவா இருக்கிறது? முனபெல்லாம் படங்களை பார்த்து மக்கள் தங்கள் வாழ்வியலை திருத்திக் கொண்ட காலம் ஒன்று இருந்தது. நான் படிக்கும் காலங்களில் சலங்கை ஒலி, சிந்து பைரவி, அபூர்வ ராகங்கள்,அவள் ஒரு தொடர்கதை என்றும் பழைய படங்களாக தங்கப்பதக்கம், கௌரவம், புதிய பறவை என்று பல படங்களைச் சிறந்ததாக செல்லலாம். ஆனால் தற்போது சமூகத்தை சீரழித்ததில் இந்த கூத்தாடிகளுக்கு அதிக பங்குண்ட என்பதை மறுக்க இயலாது.
//உலகளாவிய இஸ்லாமிய தீவிர வாதம் பாகிஸ்தானில் உலகளாவிய இஸ்லாமியக் கனவு வருடாந்திரக் கூட்டங்களில் துவங்கி இரட்டைக்கோபுர தகர்ப்பில் திசை மாறி வலம் வருகிறது.//
வருடாந்திர கூட்டங்கள் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?
சகோ ஹாஜாமைதீன்!
//எல்லா மதத்திலும் குற்றவாளிகள் இருக்கிறார்கள்....அனால் முஸ்லிம்களை மட்டும் குறி வைத்து எழுதுவதன்,சினிமா எடுப்பதன், பேசுவதன் நோக்கம் முஸ்லிம்களை ஏற்று கொள்ளாத ஒரு பிற்போக்கான மனப்பாங்கே...//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
///எல்லாப்படங்களிலும் முஸ்லிம் ஹீரோ கேரக்டராக இருக்க படம் பாகிஸ்தானில் தான்///-----வில்லனாக இருக்க மட்டும்தான் முஸ்லிம் போல..! பாகிஸ்தான் படத்தில் எல்லா வில்லனும் முஸ்லிம்தானமே..!
///இஸ்லாமியர்கள் திரைப்படம் பார்க்கத் தடை///-----நீங்கள் எடுக்கும் எல்லா சினிமாவும் ஆபாச சினிமாக்கள் என்றால்... ஆபாச சினிமாக்கள் பார்க்கத்தான் தடை..! உமர் முக்தார் மாதிரி நல்ல படம் எடுக்க என்ன கேடு..?
///அதில் காட்டப்படும் கேரக்டர் கழுதையாக இருந்தால் என்ன குதிரையாக இருந்தால் என்ன ?///-----உங்களுக்குத்தான் இறைவன் தேவை இல்லை... குர்ஆன் தேவை இல்லை... சுவனம் தேவை இல்லை... அப்புறம் எதுக்கு போட்டுக்கிட்டு தினமும் வெட்டியா அதைப்பத்தியே... இஸ்லாமிய துவேஷ பதிவா போட்டுக்கிட்டு... தினமும் முஸ்லிம் எதிர்ப்பு பின்னூட்டமா போட்டுக்கிட்டு...?
சலாம் சகோ ஆஷிக்!
//காயத்துக்கு ஆத்மார்த்தமாக மருந்திட்டு கட்டுப்போட்டு பரிவோடு நீவிவிட உங்களைப்போல பலர் இன்னும் இருக்கும்வரை... இந்த நிலத்திலேயே தொடர்ந்து வாழ்ந்துவருவதிலே பிழை ஒன்றும் இல்லையே சகோ..!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
சுவனப் பிரியன் said...
// //முன்பெல்லாம் இந்த கூத்தாடிகளுக்கு இஸ்லாமியர்களுக்கு மத்தியில் எந்த வரவேற்பும் இருக்காது.// //
இந்த மனப்பான்மைதான் தவறானது. இஸ்லாமியர்கள் பார்க்கவில்லை என்பது போதுமானது அல்ல.மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்பதே தமிழ் சினிமாவை எதிர்க்க போதுமானதாகும்.
ஒரு முழுமையான இந்துக்கள் கிராமத்தில் தமிழ் சினிமா பார்த்து வளரும் ஒரு குழந்தை சற்று பெரியவனான பின்பு, ஒரு இஸ்லாமிய பகுதிக்கு (பரங்கிப்பேட்டை, லால்பேட்டை, அதிராம்பட்டினம்) போனால் அங்கு இருப்பவர்கள் எல்லாம் தீவிரவாதிகள் என்று நினைக்கும் வாய்ப்பு உண்டு.
பன்முகப் பண்பாடு கொண்ட நாட்டில் இதுவெல்லாம் ஆரம்பத்திலேயே தடுக்கப்பட வேண்டும்.
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் எல்லா கதாநாயகர்களும் சினிமாவில் புகை பிடித்தார்கள். இப்போது அவ்வாறு இல்லை. இதற்கு பசுமைத் தாயகத்தின் தொடர் எதிர்ப்பே காரணம் ஆகும்.
இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாகக் காட்டப்படுவதும் தடுக்கப்பட வேண்டும்.
//Feroz said...
சலாம் அன்பின் சுபி,
நம்ம காவி கண்ணுவின் பதிவுகளும் பின்னூட்டங்களும் படிப்பவர்கள் வாயால் சிரிக்க மாட்டார்கள். எங்கள் ஊரில் அருமையான் சொல்லாடல் உண்டு. ஒருவன் யார் என்பதை அவன் பேச்சு காட்டி விடுகிறது. காவி கன்னுவுக்கு மிகச்சரியாக பொருந்தும் வாசகம்.
மனதின் வக்கிரத்தின் வெளிப்பாடான வார்த்தை தான் இந்த கழுதை மற்றும் குதிரை. என்னை கலுதையாகவும் குதிரையாகவும் காட்ட இவன் யார் மிஸ்டர் காவி.
கமல் என்ற அயோக்கியன் கொடுத்த உன்னை போல் ஒருவனை செருப்பை மலத்தால் அடித்தது போல் என்னை போல் ஒருவனா நீ என்று சகோதரர் ஞானி குமுதத்தில் கிழித்து எறிந்து இருந்தாரே. மேலும் சகோ சுகுணா திவாகரின் சினிமா பற்றிய பதிவு.
http://suguna2896.blogspot.com/2009/09/blog-post_22.html //
உன்னைப் போல் ஒருவனும் கரப்பான்பூச்சிகளும் PART 1.
‘‘போங்கடா போலி செக்யூலரிஸ்ட்களா,
தொப்பி போட்டு நோன்புக்கஞ்சி குடிப்பவர்கள், முஸ்லீம்களைத் தாஜா செய்பவர்கள், அல்லாவின் பெயரால் முஸ்லீம்கள் பல திருமணங்கள் செய்பவர்கள்’ என்னும் வகையான கருத்துக்களைத் தெரிவிப்பதிலோ அல்லது அத்தகைய பின்னூட்டங்களை அனுமதிப்பிலோ மாறுபாடில்லாதவர்கள்,
போகிற போக்கில் பொத்தாம் பொதுவாகச் சொல்கிற விஷயம், ‘‘சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் விஷத்தை விதைக்காதீர்கள்’’.
காலங்காலமாக சாதி எதிர்ப்புப் பார்வைக்கும் அரசியலுக்கும் சாதி அரசியல் என்றும் சாதிப் பார்வை என்றுமே முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கிறது.
அரசியலை அம்பலப்படுத்துபவர்கள் நல்லிணக்கத்தைக் கெடுப்பவர்களாகவும் பிரிவினைவாதிகளாகவுமே அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள்.
இது நமக்குப் புதிதில்லை.
ஆனால் போகிற போக்கில் ‘சமூக அக்கறை’ குறித்தெல்லாம் இவர்கள் எடுக்கிற கிளாஸ்கள்தான் நமக்குத் தாங்க முடியவில்லை, எது நடந்ததோ அது நன்றாகவே நடந்திருக்கலாம், எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கவில்லை, எனவே எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாக நடக்க வாய்ப்பில்லை, ஏனெனில் நண்பா, எல்லாம் ‘இங்கிருந்தே எடுக்கப்பட்டது’.
ஆனால் இவர்கள் போகிற போக்கில் ஏதோ உளறுகிறார்கள் என்றில்லாமல் எவ்வளவு ஆபத்தான பாசிச மனோபாவம் கொண்டவர்கள் என்பதற்கு அந்த 'ஜெர்மி பெந்தாம்’ தியரி ஒரு உதாரணம். மேலும் உதிர்க்கிற முத்துக்களைப் பாருங்கள்.
‘‘ஐம்பதாண்டு காலமாக மனித உரிமை மண்ணாங்கட்டி சமாச்சாரத்தைப் பேசி பேசி வீடு முழுக்க மூட்டைப்பூச்சிகள். பெரும்பான்மையின் பாதுகாப்பு என்கிற ஒரு காரணம் போதும் அவர்களை நசுக்கிக் கொல்வதற்கு’’
இங்கே எங்கே வந்தது ஐம்பதாண்டு?
ஒருவேளை பாகிஸ்தான் உருவான காலத்திலிருந்தே முஸ்லீம்களை நாடு கடத்தியிருக்க வேண்டும் என்கிறீர்களா?
ஆனால் நண்பா, இந்தியாவில் தீவிரவாததிற்கு வயது வெறும் 50 அல்ல. சாதாரண பிளேக் நோயால் பாதிக்கப்படக் கூடாது என்று எலியை அழிக்கச் சொன்ன வெள்ளைக்காரனை ‘மதத்தை அழிக்கப் பார்க்கிறான்’ என்று வன்முறையைத் தூண்டி விட்டாரே பாலகங்காதர திலகர்,
‘இந்து சனாதன தருமத்தைக் காப்பாற்ற ஜார்ஜ் பஞ்சயனைச் சுட்டுக்கொல்கிறேன்’ என்று சட்டைப்பையில் கடிதம் எழுதி வைத்திருந்தானே வாஞ்சிநாதன்,
‘‘முஸ்லீம்களுக்கு நாட்டைத் தனியாகப் பிரித்துக் கொடுத்து விட வேண்டும்’’ என்று 1910ல் தீர்மானம் போட்டதே இந்துமகாசபை
அந்த தீவிரவாதத்திற்கு அடுத்த வருடம் வந்தால் வயது 100 ஆகப்போகிறது.
‘‘எனக்குத் தெரிஞ்சு எந்த இந்தியனோ குறிப்பா இந்துவோ பாகிஸ்தானுக்கோ, ஆப்கானிஸ்தானுக்கோ போயி பொது இடங்களில் குண்டு வைச்சதாகவோ,
ரயில்வே ஸ்டேசன்களில் புகுந்து பச்சைக் குழந்தையிலிருந்து பூக்காரக் கிழவி வரை சுட்டுக் கொன்னதாகவோ, பாராளுமன்றத்துக்குள் புகுந்து சுட்டதாகவோ சரித்திரம் இல்லை’’ என்கிறார் திருவாளர் பத்தாம் நம்பர்.
அட முண்டமே! வாக்கெடுப்பு நடத்துகிறேன் என்று வாக்கு கொடுத்து 60 ஆண்டுகளுக்கும் மேலாய் ராணுவத்தை நிறுத்தி தினமும் காஷ்மீர் மக்களைக் கொன்று குவிக்கிறதே உன் இந்தியா,
அஸ்ஸாமில் பெண்களை இந்திய ராணுவ மிருகங்கள் சிதைத்து தீர்த்ததே,
அவ்வளவு ஏன் ஈழத்தில் கடைசி இழவு விழும் வரை காத்திருந்து விட்டு எள்ளும் தண்ணியும் இறைத்து விட்டு வந்து
டாட்டாவும் அம்பானியும் பிசினஸ் செய்ய சுடுகாடுகளைப் புனரமைத்துக்கொண்டிருக்கிறதே,
இன்னமும் நேபாளத்தில் ரெண்டு பார்ப்பான் பிரச்சினைக்காக ஒரு ஆட்சியைக் கவிழ்த்துத் தன் தாலியறுக்கும் குணத்தைக் காட்டியதே உன் இந்தியா,
எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும், மேலாதிக்கம் குறித்தும், அடுத்த நாட்டில் குண்டு போடுவது குறித்தும் பேசுவதற்கு இந்திய நாய்களுக்கு யோக்கியதை இருக்கிறதா?
முதலில் இந்த ‘காமன் மேன்’ என்னும் கருத்தாக்கமே அபத்தமானதும் ஆபத்தானதுமாகும்.
இந்த காமன்மேனுக்கு 3000 முஸ்லீம்கள் இனப்படுகொலை செய்யப்படும்போது கோபம் வராதாம்,
CONTINUED….
ராஜ நடராஜன் said...
// //ரஜனியின் திரைப்படத்தில் ஹவாலா பாய் என்ற குறியீடு சரியானதுதான்.பணமாற்று செய்பவர்களுக்கு இது புரிந்து ஒன்றுதான். பிரணாப்,ப.சிதம்பரம் போன்றவர்களுக்கும் கூட தெரிந்த ஒன்றாக இருந்த போதும் தங்கள் அரசியல் சுய லாபங்களுக்காக கறுப்பு பணத்தை வெளியிடாத மாதிரி அடக்கியே வாசிப்பார்கள்.// //
சட்டவிரோத செயல்களை ஒரு சமூகத்துடன் தொடர்புபடுத்தி பேசுவது சரியல்ல. தமிழ்நாட்டுக்குள் தங்கத்தையும் நவரத்தினங்களையும் எந்த சமூகம் கடத்துகிறது? பலசரக்கு கடைகளில் கலப்படப்பொருட்களை எந்த சமூகம் விற்கிறது? - என்று ஒவ்வொன்றுக்கும் ஒரு பிரிவினரை அடையாளம் காட்டமுடியும்.
இந்தக் குற்றங்கள் அனைத்தும் சட்டம் ஒழுங்கு சிக்கலே தவிர, சமுதாய அடையாளம் அல்ல.
எல்லா தீவிரவாதச் செயல்களும் இஸ்லாமியர்களின் வேலை என்று காட்டும் தமிழ்சினிமா, எத்தனைப் படங்களில் உண்மையான தீவிரவாதக் கூட்டமான இந்துத்வா கூட்டத்தை தீவிரவாதிகளாகக் காட்டியது. மனசாட்சி உள்ளவர்கள் பதில் சொல்லுங்கள்.
உன்னைப் போல் ஒருவனும் கரப்பான்பூச்சிகளும் PART 2.
வாழ வேண்டிய ஒரு கல்லூரிப் பெண் போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்படும்போது கோபம் வராதாம்,
ஈழத்தில் ஒட்டு மொத்தமாய் ஒரு இனத்தின் மீது படுகொலைகள் ஏவப்படும்போது கோபம் வராதாம்,
பிறகு எப்போதுதான் கோபம் வருமாம்?
தான் பயணிக்கிற பேருந்தில், ஓடும் ரயிலில், தக்காளி வாங்கும் மார்க்கெட்டில், முக்கிப் பேள்கிற டாய்லெட்டில் குண்டு வெடித்தால் மட்டும் கோபம் வருமாம்.
சக மனிதர்கள் குறித்து எந்த அக்கறையுமற்று இருப்பவனுக்குப் பெயர் காமன்மேனா, டாபர்மேனா?
இந்த காமன்மேனுக்குக் குண்டு வெடிப்பதுதான் பிரச்சினை என்றால் ஒட்டுமொத்த குண்டையும் காமன்மேனில் தலையில் கொண்டு போய்ப் போடுங்கள், மரணபயம் போகும்.
அப்புறம் ‘தனிநபர் தாக்குதல் கூடாது’ என்கிறார்கள் நண்பர்கள்.
நல்லது தனிநபரைத் தாக்கக் கூடாது. ஒரு ஒட்டுமொத்த சமூகத்தை எப்படி வேண்டுமானாலும் சித்தரிக்கலாம் அல்லவா?
ஈழ ஆதரவுப் பதிவர்களில் சிலர் கூட கமலின் உ.போ.ஒருவனைப் பாராட்டுகிறார்கள்.
இதே கமல்ஹாசன்தான் நண்பர்களே, ஈழப்பிரச்சினைக்காக திரையுலகம் நடத்திய கூட்டத்தில் ‘‘அடக்குமுறை இருக்கும் நாட்டில் தீவிரவாதம் வெடித்தே தீரும்’’ என்று ஆவேச வேடம் போட்டவர்.
இப்போது சொல்லுங்கள் நண்பர்களே கமலின் சமூக அக்கறையின் நிறம் என்ன?
குண்டு வெடிக்கிறது, குண்டு வெடிக்கிறது என்று கூப்பாடு போடுபவர்களே,
உலகமெங்கும் ஆயுதம் தாங்கிய குழுக்களின் வன்முறைகளை விடவும் அரச பயங்கரவாதத்தாலும் ராணுவ பயங்கரவாதத்தாலும் கொல்லப்பட்டவர்கள்தான் அதிகம்.
அதுகுறித்து உங்கள் சினிமா, கலைஞானிக்கள் ஒரு வார்த்தை, ஒரே வார்த்தை பேசியிருப்பார்களா?
அல்லது நீங்கள்தான் அதுகுறித்து என்றாவது எழுதியிருப்பீர்களா?
மும்பை குண்டு வெடிப்பு பற்றி பொங்கலோ பொங்குபவர்கள் போபாலுக்காகவும் இன்னமும் கல்பாக்கத்து அணு உலைகளால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்காகவும் பொங்குவீர்களா?
மேலும் ஒரு முஸ்லீம் பெண்ணின் மரணத்தை ஏதோ நாய்க்குட்டி செத்துப்போச்சு ரேஞ்சுக்குப் பேசும்போது என்னால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடியவில்லை,
வெண்ணெய் போட்டு உருவி கமலுக்கு உபதேசிக்க முடியவில்லை.
ஒரு முஸ்லீமாய் அன்னியப்படுத்தப்படும் வலி, ஒரு தலித்தாய் நிராகரிக்கப்படும் வலி இதையெல்லாம் புரிந்துகொள்ளக் கூட முயற்சிக்கா விட்டால் எனக்கு படைப்பெல்லாம் சு&&&&&&&&மயிருக்குத்தான் சமம்.
மற்றமையை உணர்வதே நீதி, அறம், தார்மீகம், படைப்பு, கலை. ‘ஆனாலும் நண்பா...’ என்ற உங்கள் நாகரீக இழுதல் கேட்கிறது.
Posted by சுகுணா
FULL ARTICLE : http://suguna2896.blogspot.sg/2009/09/blog-post_22.html
/வருடாந்திர கூட்டங்கள் என்று நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள்?//
சகோ. எனக்குத் தெரிந்து வளைகுடா நாடுகளில் அமைதியாக இருக்கும் இஸ்லாம்,உலக இஸ்லாமிய தீவிரவாதமாக மாறியது முன்பு பாகிஸ்தானில் கலந்துரையாடல் செய்த பன்னாட்டு இஸ்லாமியர்களின் சந்திப்பில் உருவாகிய அமெரிக்காவுக்கும்,இஸ்ரேலுக்கும் எதிரான பிரகடனங்கள்தான்.
உங்க பிஜேயை விட சிறந்த சமூக சிந்தனையாளன் பழனி பாபா என்பேன்.ஆனால் அவருக்கும் கூட பாகிஸ்தானிய பங்களிப்புண்டு என்ற செய்திகள் இருந்ததுண்டு.அது அந்தக் காலம்.
இஸ்லாமியர்கள் தமிழ் சினிமாவைப் பற்றியோ அல்லது நீங்கள் கூறும் அமைப்பு ரீதியாக போராட வேண்டுமென்பதெல்லாம் தேவையற்ற ஒன்று.தனது மத நம்பிக்கைகளை விட கல்வியிலும்,கல்வி சார்ந்த தொழில்களிலும் முன்னேறினால் போதும்.சமூக அங்கீகாரம் இயல்பாகவே வந்து விடும்.
**** //பரவாயில்லையே சகோ.சினிமாவெல்லாம் பூந்து விளையாடுகிறாரேன்னு பார்த்து ஆத்மார்த்தின்னு போட்டு புஸ்வாணமாக்கிட்டிங்களே!//***
ஆத்மார்த்தி சொன்னதை தான் சொல்லுவதாகச் சொல்லனுமா? இதென்ன கூத்து?? அவர் சொன்னதாத்தான் சொல்ல முடியும்.
தன் பதிவை பிரபலப்படுத்தவே
"பதிவர் சந்திப்பை புறக்கணிப்போம்"
"பதிவர் சந்திப்பு சொதப்பிவிட்டது"னு எதிர்மறையாக தலைப்பு கொடுத்து, பதிவர் சந்திப்பையே அவலப்படுத்தும் தலைப்பு கொடுப்பதையெல்லாம் கண்டிக்க வக்கில்லாத நீங்க, இதை மட்டும் பூதக்கண்ணாடி போட்டுப் பார்ப்பது ஏன்?
நடராஜன், உங்களுக்கு நீதிபதி ஸ்தானத்தில் இருக்க தகுதி கெடையாது. அடிக்கடி நீங்க அந்தப் பதவியை எடுதுக்கிறீங்க.
நீங்க, பதிவுலகுக்கு தெரியாமல் இந்து சாமியை கும்பிட்டுக்கிட்டு நாத்திக வேடமிடும் ஒரு ஆள் னு நான் பச்சையா சொல்லனுமா?
அதனால இந்த "நீதிபதி" போல நடிப்பதை நிறுத்திவிட்டு இந்துவாக பேசுங்க. புரியுதா?
நீங்க பேசுற நியாயம் அநியாமாயிருக்கு, மேலும் சகிக்கலை.
***தமிழ் திரைப்படத்துறையில் சமூகம் சார்ந்து நிறைய இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள்.எனவே ஆத்மார்த்தி சொல்வதுதான் வேத வாக்கு என்று எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.***
ஆத்மார்த்தி சொன்னது வேதவாக்குனு யார் சொன்னா?
ஆத்மார்த்தி சொன்னதை பாருங்கனுதான் சொல்றாரு.
நீதிபதி நீங்க சொல்றது மட்டும்தான் வேதவாக்கு இல்லையா? :))))
***ராஜ நடராஜன் said...
அருள்!உங்க பின்னூட்டம் உங்க தல ராமதாஸ்க்கு சினிமாவுக்கு எதிராக கூட்டம் சேர்க்க இஸ்லாமிய சகோக்களையும் இழுக்கிற மாதிரி தெரியுதே:)***
நடராசர்: உங்க பின்னூட்டம் நீங்க இந்துத்தவா கைக்கூலி போல தெரியுது. :)))
என்னைப் போல் ஒருவனா நீ ?
முதல் பக்கம்...
நான் மனசாட்சியின் குரலுக்கு எப்போதும் செவி கொடுக்கிற ஒரு நடுத்தர வகுப்பு மனிதன். என்னால் பிறருக்கு வலியும், பிறரால் எனக்கு வலியும் ஏற்படக்கூடாது என்று விரும்பும் சாதாரண மனிதன். ஜாதி மதம் மொழி இனம் அடிப்படையில் மனிதரை மனிதர் உயர்வு தாழ்வு பார்க்கக்கூடாது என்று விரும்பும் ஒருவன்.
குற்றம் சாட்டப்பட்ட எவரும் முறையாக விசாரிக்கப்பட்டு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்றே விரும்புகிறவன். கொலைக் குற்றவாளிக்குக் கூட அதிகபட்சமாக ஆயுள் தண்டனையே தரப்படலாமே தவிர மரண தண்டனை கூடாது என்று நினைக்கிறவன். சட்டத்தை என் கையில் எடுத்துக் கொள்ள ஆசைப்படாதவன்.
நீ என்னைப் போல் ஒருவனா ? நிச்சயம் இல்லை.
எனக்கு எல்லா தீவிரவாதமும் அருவெறுப்பானது. உனக்கு அப்படியில்லை. நீ இஸ்லாமிய தீவிரவாதத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து எதிர்க்கிறாய்.
மேலவளவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் தலைவர் முருகேசனைக் கொன்றவர்களும் , தருமபுரியில் அப்பாவியான கல்லூரி மாணவிகளை பேருந்திலேயே வைத்து எரித்தவர்களும், மதுரையில் பத்திரிகை அலுவலகத்தைத்தாக்கி அப்பாவி ஊழியர்களைக் கொன்றவர்களும் இது போன்ற எண்ணற்ற தீவிரவாதசெயல்களில் ஈடுபட்டவர்கள் பலரும் தமிழகச் சிறைகளில்தான் இருக்கிறார்கள். அவர்களை விசாரணையில்லாமல் கொல்ல வேண்டும் என்ற கோபம் உனக்கு வரவில்லை.
இஸ்லாமிய தீவிரவாதிகளையும் அவர்களுக்கு உதவி செய்ததால் ஹிந்து வெடி மருந்து வியாபாரியையும் கொல்லப் புறப்படுகிறாய்.
உனக்கு ஆர்.டி.எக்ஸ் வெடி மருந்து விற்றவன் மட்டும் மகாத்மா காந்தியா ? அவனை ஏன் கொல்லாமல் விட்டிருக்கிறாய் ? அவனிடம் ஆர்.டி.எக்ஸ் தொடர்ந்து வாங்கியவர்கள்/வாங்குகிறவர்கள் எல்லாரும் உன்னைப் போல தீவிரவாத எதிர்ப்பாளர்களா என்ன ?
நீ இஸ்லாமிய தீவிரவாதிகளை போலீஸ் பிடித்தால் உடனே சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று சொல்லுகிற இந்து தீவிரவாதத்தின் குரலாகவே பேசுகிறாய். அப்படிச் செய்யாமல் போலீஸ் இருப்பதில் எரிச்சலடைந்து மிரட்டல் வேலையில் ஈடுபடுகிறாய்.
எந்த மதத்து தீவிரவாதியாக இருந்தாலும் சரி, அவர்களை விசாரிக்காமல் சுட்டுக் கொன்றுவிடவேண்டும் என்று நினைக்கிறவர்கள் சார்பாக புறப்பட்டு வந்தவனும் அல்ல நீ.
அப்படி நினைக்கிறவர்கள் கருத்தை ஏற்பதாக இருந்தால், மசூதியை இடித்து மதக் கலவரங்களை உற்பத்தி செய்த அத்வானியையும், அரசு இயந்திரத்தின் உதவியோடு முஸ்லிம்களை கும்பல் கும்பலாகக் கொல்ல ஏற்பாடு செய்த மோடியையும் சுட்டுக் கொல்ல நீ புறப்பட்டிருப்பாய்.
ஆனால் உனக்கு செலக்டிவ் அம்னீஷியா இருக்கிறது.
நீ என்னைப் போல் ஒருவன் அல்லவே அல்ல. நான், குற்றம் சாட்டப்படுபவர் மோடியானாலும் சரி முகமது ஆனாலும் சரி முறையான நீதி விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்றே வலியுறுத்தும் சாமான்யன்.
உன்னைப் போல் ஒருவன் என்று நீ சொல்வது என்னையல்ல என்றால் யாரைப் பார்த்து அப்படிச் சொல்லியிருக்கிறாய் ?
படத்தில் இன்னொரு நாயகனாக வருகிற காவல் அதிகாரியைப் பார்த்துத்தான். அதுதான் அசல் அர்த்தம். நாங்கள்தான் எங்களைச் சொன்னதாக தப்பாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.
அந்தக் காவல் அதிகாரி யார் ? முதலமைச்சர், தலைமைச் செயலாளர் எல்லாரும் முழு அதிகாரத்தைத் தன்னிடம் கொடுத்தால்தான் பிரச்சினையைத் தீர்க்கமுடியும் என்று மிரட்டுபவர் அவர். முழு அதிகாரமும் போலீசிடம் இருந்தால்தான் விசாரணையில்லாமல் சுட்டுக் கொல்லமுடியும் அல்லவா ? அவர் கருத்தும் உன் கருத்தேதான்.
கடைசியில் நீ கேட்டபடி அந்த தீவிரவாதிகளை ஒப்படைக்கிறார். மூன்று பேர் ஜீப் குண்டில் செத்ததும் நீ அவர் ஆள்தான் என்பது அவருக்குத் தெரிந்துவிடுகிறது.
நீ எந்த இடத்திலும் குண்டு வைக்கவில்லை அது வெற்று மிரட்டல்தான் என்று பின்னர் போனில் சொல்லும்போது அது தனக்கு முன்பே தெரியும் என்கிறார். அப்படி தெரியுமென்றால், நான்காவது தீவிரவாதியை சுட்டுக் கொல்லும்படி அவர் சொல்லியிருக்கத் தேவையே இல்லையே . உன் மிரட்டலை சாக்காக வைத்து அவர் அந்த தீவிரவாதிகளை விசாரணை இல்லாமல் கொல்லும் தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்கிறார் என்பதுதான் உண்மை.
கடைசியில் நீ இருக்கும் இடத்தையும் உன்னையும் கண்டுபிடித்தபிறகு உன்னை சுட்டுக் கொல்லாமல் கை குலுக்கி வழியனுப்பி வைக்கிறார். ஏன் ? நீ அவரைப் போல் ஒருவன் என்பதனால்தான்.
காவல் துறை என்கவுண்ட்டர் என்ற பெயரில் விசாரணை இல்லாமல் தான் கொல்ல விரும்புபவர்களைக் கொல்லும் வசதிக்காக, உன்னைப் போன்றவர்களை மறைமுகமாக ஆதரிக்கும் என்பதுதான் உன் படத்திலிருந்து எனக்குக் கிடைக்கும் முக்கியச் செய்தி.
நீ நிச்சயம் என்னைப் போல் ஒருவன் அல்ல. நான் நிச்சயம் உன்னைப் போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.
நான் நிச்சயம் உன்னைப் போல் ஒருவனாக இருக்க விரும்பவே மாட்டேன்.
* * * * * * * * * * * * * * * * * * *
சென்ற வருடம் மும்பையில் என் பிரிய நடிகர் நசிருதீன் ஷா நடித்த ‘எ வெட்னெஸ்டே’ ‘ஷூட் ஆன் சைட்’ என்ற படங்களைப் பார்த்ததும் இரண்டுமே தீவிரவாதம் தொடர்பானவை என்பதால் ஒப்பிட்டு எழுத நினைத்தேன். தமிழ் வாசகர்கள் இவற்றை டி.வி.டிகளாகக் கூட பார்க்கும் வாய்ப்பில்லாத நிலையில் எழுதுவதற்கான உந்துதல் குறைந்துபோய் விட்டது.
கமல்ஹாசன் ‘வெட்நெஸ்டே’வை தமிழில் தயாரிக்கிறார் என்ற் செய்தி வந்ததும், நிச்சயம் கமல் என்ற ஸ்டாரால் நசீரின் யதார்த்தமான நடிப்பைத் தரமுடியாது என்பதால், தமிழ்ப் படம் ஹிந்தியின் தரத்தில் இருக்காது என்று கருதினேன். டெல்லி கணேஷ் மாதிரி ஒருத்தர் நடிக்க வேண்டிய ரோலில் கமல் நடித்தால் என்ன ஆகுமோ அதுதான் தமிழ் வெட்நெஸ்டேவுக்கு ஆகியிருக்கிறது.
என்னைப் பார், என் நடிப்பைப்பார் என்று ஒவ்வொரு பிரேமிலும் சொல்லிக் கொண்டே நடிக்கும் பாணியில் கமல் என்ற நல்ல நடிகர் சிக்கிக் கொண்டு பல காலம் ஆகிறது. கமல் என்ற நல்ல திரைக்கதையாசிரியர், இயக்குநரையும் அந்த நடிகர் தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்துவிடுவது இன்னொரு சோகம்.
அதனால்தான் படம் முழுவதும் காமன் மேன் சூப்பர் மேனாகவே இருக்கிறான். ஒருவேளை கமல் நடிக்காமல் இயக்கத்தை மட்டும் செய்கிற எதிர்காலத்தில் இது மாறக்கூடும். காமன் மேனை காமன் மேனாகவே காட்டக் கூடும்.
இந்தப் படம் வெற்றிகரமாக ஓடுகிறது என்று சொல்கிறார்கள். மகிழ்ச்சியாகவும் கவலையாகவும் இருக்கிறது. குத்துப்பாட்டு, ஆக்ஷன்,ஆபாசம்,செண்ட்டிமெண்ட் மசாலாக்கள் இல்லாமல் ஒரு படம் ஆதரிக்கப்படுவது மகிழ்ச்சிதான். ஆனால் இந்தப் படமும் வணிக ஃபார்முலாவுக்குள்ளேதான் இருக்கிறது என்பதும் வித்யாசமான படம் என்ற முகமூடிக்குள் இருந்துகொண்டு ஆபத்தான கருத்துகளைப் பரப்புகிறது என்பதும் பெரும் கவலையை ஏற்படுத்துகிறது.
சென்சார் விதிகளுக்கு விரோதமான முறையில் டி.வி. பப்பெட் ஷோ வழியே பகிரங்கமான பாகிஸ்தான் எதிர்ப்பு, முஸ்லிம்களை கீழ்த்தரமாகக் கிண்டல் செய்யும் வசனங்கள்,வேலைக்குச் செல்லும் திறமையும் உறுதியும் உடைய நவீனப் பெண்ணை வேண்டுமென்றே சிகரெட் பிடிப்பவளாகக் காட்டும் வக்கிரம், கம்ப்யூட்டர் மேதை என்றால் அவன் பார்ப்பனனாகத்தான் இருப்பான் என்று குறிப்பாக உணர்த்தும் அபிவாதயே வசனங்களின் ஜாதியம் போன்றவை ஒரிஜினல் ஹிந்தியில் இல்லாதவை. கமல் தமிழுக்கு அளித்திருக்கும் ‘கொடைகள்’ இவை.
பத்து பேரை ஒரே ஆள் தனியாக அடித்து வீழ்த்தும் ஹீரோவும் உன்னைப் போல் ஒருவன் ஹீரோவும் ஒருவன்தான். ஆர்.டி.எக்ஸ் குண்டுகள் வைப்பது முதல் க்ளைமேக்சில் குண்டு வைத்த ஜீப்பை ஒரு பொட்டல் காட்டில் நிறுத்தி வைப்பதுவரை மொட்டைமாடியில் தனியாக இருந்துகொண்டே சாதிப்பது எல்லாம் விஜய் பட ஃபேண்ட்டசியின் இன்னொரு வடிவம்தான்.
மாற்று சினிமா இது இல்லை. இதுவும் இன்னொரு ஏமாற்று சினிமாதான்
சகோ.முநதைய திரைப்படங்கள் என்று சிலவற்றை நீங்கள் குறிப்பிடுவதால் மீண்டும் ஒரு பின்னூட்டம்.தமிழ் திரைப்படத்தை இதுவரை நான்கு விதமாக பிரிக்கலாம்.சங்கீதம் அறிந்தவர்கள் மட்டுமே நடித்த சின்னப்பா,தியாகராஜ பாகவதர் கால கட்டம்,பின் சமூக கதைகள் சார்ந்த கறுப்பு வெள்ளை திரைப்படங்களோடு நடிப்புக்கு முக்கியத்துவமான வர்ணங்கள் பூசிக்கொண்ட ஈஸ்ட்மென் கலர் படங்கள்.அதற்கும் பின் பாரதிராஜாவின் 16 வயதினிலேக்குப் பின் யதார்த்தங்களை பதிவு செய்யும் திரைப்படங்கள் எனலாம்.இப்பொழுது கிராமியத்தையும் தாண்டிய நகரம்,கிராமம் என்ற கலவையோடு கதை,ஒளிப்பதிவு,எடிட்டிங்,இயக்கம்,நடிகர் என்ற முக்கியத்தோடு படங்கள் வருகின்றன.பல காட்சி அமைப்புக்கள் குடும்பத்தோடு தவிர்க்கப் பட வேண்டிய கூச்சம்(பாக்கியராஜ் காசை கீழே போட்டு தேடச்சொல்வது மாதிரி) முன்பிருந்து இப்பொழுது தொலைக்காட்சி வீட்டுக்குள்ளேயே வந்த பின் அதை அனுமதித்தே ஆகவேண்டிய கட்டாய நிலையில் மக்கள் ரசனை மாறிக்கொண்டே வருகின்றன.
ரம்ஜான் விடுமுறைக்குத்தான் வாகை சூடவா படம் பார்த்தேன்.உங்களுக்கும் அருளுக்கும் இந்தப் படத்தை சிபாரிசு செய்கிறேன்.
ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும். PART 1
1970களில் அமெரிக்கா தொடங்கி வைத்த இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை இந்தியாவில் 1980களில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் சங் பரிவாரங்கள் மிக வெளிப்படையாகவும்,
காங்கிரஸ் அதனை அப்படியே கைகளில் மதசார்பற்ற உறையை மாட்டிக் கொண்டும் இந்திய சூழலில் உள்வாங்கிக் கொண்டன.
இந்தியப் பெரும் ஊடகங்களும் முழுக்க அரசின் ஊதுகுழலாக, அமெரிக்க அடிவருடிகளாக, மேற்கில் இருந்து வரும் அனைத்தையும் அப்படியே ரகம் பிரிக்காமல் பிரச்சாரம் செய்யும் நிறுவனங்களாக மாறின.
1970களின் இறுதியில் பனிப்போரின் பொழுது சோவியத் யூனியனுக்கு எதிராக ஆப்கான் முஜாஹிதீன்களை யார் உருவாக்கியது?
ஆப்கானில் எல்லைப் பகுதியில் இருந்த மதரசாக்களின் பாடத் திட்டங்களில் மாற்றம் கொணர்ந்தது யார்? 1989 வரை நீடித்த இந்தப் போரின்பொழுது ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு யார் நிதி உதவி, ராணுவ தளவாட உதவிகள் அளித்தது?
இந்தப் போரில் அமெரிக்கா, பிரித்தானியா, சவூதி அரேபியா, பாகிஸ்தான், இஸ்ரேல், இந்தோனேசியா, சீனா மற்றும் இந்திரா காந்தியின் தலைமையிலான இந்திய அரசின் பங்கு என்ன?
யார் இந்த ஒசாமா பின்லேடன்?
ஒசாமா எந்தக் காலகட்டத்தில் ஒரு நாட்டின் தலைவர் போல் அமெரிக்காவின் பெண்டகன் படைகள் பாதுகாக்க அமெரிக்கா முழுவதும் உலா வந்தார்?
இப்படி அடுக்கடுக்கான கேள்விகளை உருவாக்குவதும் அதன் விடைகளைக் கண்டடைவதும்தான் அறிவார்ந்த மக்கள் ஊடகங்கள் நாட்டுக்குச் செய்யும் தொண்டாக இருக்க இயலும்.
1990களில் பெர்னார் லூயிஸ் எழுதிய The Roots of Muslim Rage என்கிற புத்தகத்தில் தான் இந்த நாகரீகங்களின் மோதல் சொல்லாடல் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது.
1992களில் அமெரிக்காவைச் சேர்ந்த சாமுவேல் ஹண்டிங்டன் முன்வைத்த நாகரீகங்களின் மோதல் சித்தாந்தத்தின் பின்னணி என்ன?
அவர் 1992ல் நிகழ்த்திய ஒரு கல்லூரிப் பேச்சை எப்படி 1993ல் அமெரிக்க வெளியுறவு துறை தத்தெடுத்தது.
அது எப்படி 1996ல் The Clash of Civilisations and the Remaking of the World Order - Samuel P. Huntington என்கிற பெரும் நூலாக விரிவாக்கப்பட்டு வெளிவந்ததன் பின்னணி என்ன?
இந்த சித்தாந்தங்களின் பின்னணியில் அமெரிக்கப் பிரச்சார ஊடகங்களும், ரூபர்ட் முர்டாக் வசம் உள்ள உலக ஊடகங்களும் மேற்குலக மூளைகளைச் சலவை செய்யத் தொடங்கின.
இந்தியாவில் சங் பரிவாரங்கள் ஏற்கனவே ஹிந்து அபிமான உணர்வை விதைத்து அதில் இஸ்லாமிய எதிர்ப்பை பல தளங்களில் விதைத்து கச்சிதமாக இங்குள்ள பெரும்பான்மை ஹிந்துக்களை மூளை சலவை செய்துகொண்டிருந்தது.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு அல்ல, அது ஒரு ஹிந்து நாடு என்கிற விஷமும் சமமாக இங்கு விதைக்கப்பட்டே வந்தது.
இஸ்லாமியர்கள் இங்கு இரண்டாம் பிரஜைகளே என்கிற உணர்வை மூர்க்கத்துடன் முன்வைத்தார்கள்.
அவர்கள் விரும்பிய இஸ்லாமியராக இருந்ததால்தான் அப்துல் கலாமுக்கு ஜனாதிபதி பதவியைச் சூட்டி மகிழ்ந்தார்கள்.
கீதை வாசிப்பவராக, சங்கராச்சாரியார் காலில் விழுபவராக சாட்ஷாத் அப்துல் கலாம் விளங்கினார்.
ஆயிரக்கணக்கில் இஸ்லாமியர்களை வேட்டையாடிய பொழுது அவர் தனது கண்களை மூடிக்கொண்டார்.
அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் பகுதி மீனவ சகோதரர்கள் நூற்றுக்கணக்கில் இலங்கை ராணுவத்தால் வேட்டையாடப்பட்டபோது அந்தத் துயர ஓலம் கேட்காது அவர் தனது காதுகளை மூடிக்கொண்டார்.
ஹிந்து அபிமானிகள் தொடர்ந்து இந்த தேசம் இஸ்லாமியர்களால் துண்டாடப்படவிருக்கிறது என ஒரு பயத்தை சதா விதைத்துக் கொண்டு அதில் தங்களின் அரசியல் அறுவடைகளைச் செய்தவண்ணம் இருந்தனர். -- கட்டுரை
ஆக்கம்: அ.முத்துகிருஷ்ணன்
CONTINUED....
ARTICLE BY : MUTHUKRISHNAN
FULL ARTICLE: http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=53&Itemid=40
CONTINUED…….
ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும் PART 2.
இந்தியா உடைபடும் என்ற ஓலத்திற்கும் இந்தியாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
மாறாக, இதை எழுதுபவர்கள் இந்தப் பயத்தைக் காட்டி வெளி நாட்டுவாழ் இந்தியர்களிடம் (NRI) பணத்தைக் கறந்த வண்ணம் உள்ளனர்.
இவர்களைப் பொறுத்தவரை உடையும் இந்தியா ஒரு பணம் காய்க்கும் மரம்; தங்க முட்டையிடும் வாத்து.
ஜெருசலேத்தில் உள்ள அல் அக்சா மசூதியை இடிக்க இஸ்ரேல் தொடர்ந்து முனைந்து வரும் நிலையில் அவர்களின் முன்னோடிகளான ஆர்.எஸ்.எஸ். இங்கு பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கியது.
யூதவெறியும் ஹிந்து மதவெறியும் தங்களின் பொது எதிரியாக இஸ்லாத்தைக் கருதித்தான் கைகோர்க்கிறது.
இந்தக் கூட்டுதான் அணிசேரா நாடுகளின் தலைமையில் இருந்த இந்தியாவை அமெரிக்காவின் ஒரு மாகாணம் அளவிற்கு வெளியுறவுக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்க வழிவகுத்தது.
1992 தொடங்கி இந்தியாவின் பல நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து ஆயிரக்கணக்கானவர்கள் மாண்டனர்.
இந்தக் கூட்டணியின் இஸ்லாமிய எதிர்ப்பிரச்சாரத்திற்கு இவை எல்லாம் நல்ல தீனியாக அமைந்தது.
இந்தியா முழுவதும் உள்ள எல்லா மொழிகளிலும் வெளிவரும் திரைப்படங்களிலும் இஸ்லாமிய எதிர்ப்பு, தீவிரவாதம் என்கிற பெயரில் நம் மீது பிம்பங்கள் தொடர்ந்து வீசப்பட்டன.
பாகிஸ்தான் முழுவதும் இஸ்லாமியர்களின் தெருக்களில் ஆயுதங்களைக் குவித்து வைத்துள்ளனர் என்பதான சித்திரங்கள் ஒவ்வொரு குழந்தையின் மனதிலும் பதிக்கப்பட்டது.
நான் லாகூர் நகரத்தில் தெருத் தெருவாக சில தினங்கள் திரிந்தேன். ஆயுதம் ஏந்திய காவல்துறை அல்லது ராணுவ வீரர்களைக் கூட காண இயலவில்லை.
பாகிஸ்தானில் உள்ள வறுமையை சொற்களால் சித்தரிக்க இயலாது. அதை விட அங்கும் தினசரி குண்டுவெடிப்புகள் நிகழ்கிறது.
பாகிஸ்தான் முழுதும் தீவிரவாதிகள் என்றால் அங்கே யார் குண்டு வைப்பது என்பதை அறிய அங்குள்ள நாளிதழ்களைத் திறந்து பார்த்தால் அது முழுவதும் இந்திய உளவுத் துறை, ஸிகிகீ என்றுதான் விரிவாகக் கூறுகிறது.
இங்கு நம் நாளிதழ்களில் மிஷிமி புராணம். இரு நாடுகளும் அப்பாவி மக்களைப் பிணையமாக வைத்து ஆடும் ஒரு சதுரங்க விளையாட்டில் ஈடுபடுகின்றன.
மிக சாதாரணமாக ஆட்டோ ஓட்டும் ஒருவர், மீன் கடை வைத்திருப்பவர், கறிக்கடை வைத்திருக்கும் பாய், ஜவுளிக்கடை வைத்திருக்கும் ஒரு அத்தா என நமக்கு அறிமுகம் இல்லாத இஸ்லாமியர்கள் அனைவரையும் நகரங்கள் தீவிரவாதிகளாகப் பார்க்க பழக்கி வருகிறது.
நல்லவேளை, எங்கள் கிராமங்கள் இந்தக் கிருமியால் இன்னும் பீடிக்கப்படவில்லை.
இருப்பினும் இந்தியர்களின் மூளையைச் சலவை செய்ய காஷ்மீர், தீவிரவாதம் என்று படம் எடுக்கும் இயக்குநர்களுக்குப் பல இடங்களில் இருந்து பணம் பெட்டிகளில் கைமாறியது.
உளவுத்துறை, உள்துறை அமைச்சகம், இந்திய முதலாளிகள் என ஒரு பெரும் கூட்டு நிதி மூலதனம் இஸ்லாமிய வன்முறை பிம்ப உருவாக்கத்திற்குப் பின்னணியில் இயங்குகிறது.
2004 முதல் 2009 வரை நடந்த பல குண்டு வெடிப்புகள் இதே மனநிலையை இன்னும் இறுக்கமாக்கவே உதவியது.
இந்தியாவில் ஒரு நவீன மோஸ்தர் உருவாக்கப்பட்டது.
ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தால் அதன் செய்தி வெளியாகும் போதே அது இஸ்லாமியர்களின் கைவரிசை என எல்லா செய்தி ஊடகங்களும் எந்த ஆதாரமும் இல்லாமல் அறிவிக்கும்.
அத்துடன் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் அறிவித்து சில இளைஞர்களை வரிசையாக உட்காரவைத்துக் காட்டுவார்கள்.
இதில் இரட்டை ஆதாயம். ஒன்று, இப்படி நடந்தாலே அது இஸ்லாமியர்கள் என்று பொதுமக்களுக்கு அடையாளம் காட்டுவது,
அடுத்து, பாருங்கள், நாங்கள் நொடிப் பொழுதில் கயவர்களைப் பிடித்துவிட்டோம் என மக்களின் நம்பிக்கையைப் பெறுவது.
இந்த நடை முறைகள் எதையாவது நீங்கள் கேள்வி கேட்க முயன்றால் நீங்களும் தீவிரவாதிகள்தான் என எழுத சில ஹிந்துத்துவ கைக்கூலி எழுத்தாளர்கள் தயார் நிலையில் இங்கே.
நாந்தேடு குண்டு வெடிப்புகள், தானே குண்டு வெடிப்புகள், மேலாகாவ் குண்டுவெடிப்புகள், மெக்கா மசூதி வெடிப்புகள் என தொடர் வெடிப்புகள் இந்தியாவை உலுக்கியது. எல்லா வெடிப்புகளிலும் ஒரே நடைமுறைதான்.
உடனே 20 - 25 இஸ்லாமிய இளைஞர்களைக் கைது செய்வதும் அவர்களை சித்திரவதை செய்வதும், குற்றவாளிகளைப் பிடித்துவிட்டோம் என காவல் துறை பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதும் அச்சு பிசகாமல் நிகழ்ந்தது. - கட்டுரை ஆக்கம் : அ.முத்துகிருஷ்ணன்
CONTINUED …..
FULL ARTICLE: http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=53&Itemid=40
ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும் PART 3
இவை எல்லாவற்றுக்கும் பெரும் திருப்பமாக அமைந்தது. இந்தியாவில் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியின் செயல்பாடு.
அவர்தான் ஹேமந்த் கர்கரே. அவர் மாலேகாவ் குண்டிவெடிப்பு முழுவதும் ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் சதிவேலை என்பதைக் கச்சிதமாக நிறுவினார்.
அவர் தாக்கல் செய்த 4000 பக்க அறிக்கை அபிநவ் பாரத், சாத்வி பிரக்ஞயா தாக்கூர், பிரசாத புரோஹித் ஆகியோரின் வரலாற்றை விவரித்தது. கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதைப் போலவே நாந்தேட்டில் ஆர்.எஸ்.எஸ்.காரர் ஒருவருக்குச் சொந்தமான கிட்டங்கி ஒன்றில் சங் பரிவார் ஊழியர்களுக்கு வெடிகுண்டு செய்யும் பயிற்சி நடந்தபோது ஏற்பட்ட விபத்தால் குண்டு வெடித்ததாக கண்டுபிடிக்கப்பட்டது.
இதைப் போலவே தானே குண்டு வெடிப்பின் முடிச்சுகளும் அவிழ்ந்தது.
ஹிந்துத்துவ தீவிரவாதத்தை அம்பலப்படுத்திய காரணத்தால்தான் மும்பை தாக்குதல்களின் பின்னணியில் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார்.
Who killed Hemant Karkare என்கிற நூலை மகாராஷ்டிராவின் முன்னாள் ஐ.ஜி.முஷ்ரில் எழுதியுள்ளார். அதில் அவர் எவ்வாறு ஹேமந்த் கர்கரேயின் மீது சங் பரிவார் ஒரு கண் வைத்திருந்தது என்பதை விளக்கியுள்ளார்.
அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பிலும் முதலில் பழி பாகிஸ்தானின் லஷ்கர் ஏ தொய்பா அமைப்பின் மீதுதான் போடப்பட்டது.
ஆனால் விசாரணையில் மெல்ல ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் உள்ள ஹிந்துத்துவ தீவிரவாதக் குழுக்களின் செயல் இதில் இருப்பது தெரியவந்தது.
அதன்பின் இந்தக் குண்டு வெடிப்பு எப்படி எல்லாம் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்டது என்பதை சுவாமி அசீமானந்தா விரிவாக நாட்டிற்கு எடுத்துரைத்தார்.
அடுத்துப் பெரிய அளவில் பேசப்பட்டது சம்ஜவுத்தா எக்ஸ்பிரஸ் வெடிப்புகள்.
2008 நவம்பரில் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தவுடன் லஷ்கர் ஏ தொய்பா, ஜைஷ் ஏ முகமத் குழுக்கள்தான் இதன் பின்னே உள்ளது என அரசு வாய்கிழிய அறிக்கைகள் விட்டு நம் மூளைகளைச் சலவை செய்தது.
ஆனால் விசாரணையில் மெல்ல அபிநவ் பாரத் என்கிற அமைப்பும் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி பிரசாத் சிரிகாந்த் புரோஹித் இருப் பதும் தெரியவந்தது.
இதே பிரசாத் புரோஹித் தான் மாலேகாவ் குண்டு வெடிப்புகளுக்கு வெடி மருந்து உள்பட தொழில்நுட்ப உதவிகளையும் சாத்வி பிரக்ஞயா தாக்கூருக்கு வழங்கியவர்.
இதே அபிநவ் பாரத் இந்தியாவின் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியைக் கொலை செய்ய தீட்டிய திட்டத்தை ஹெட்லைன்ஸ் டுடே செய்தி ஊடகம் ஆதாரங்களுடன் வெளியிட்டது.
ராணுவத்தின் உளவுப் பிரிவுக்கும் அபிநவ் பாரத் அமைப்பிற்கும் நிகழ்ந்த உரையாடல்களின் எழுத்து வடிவை தெகல்கா இதழ் வெளியிட்டது.
செப்டம்பர் 16, 2011ல் புதுதில்லியில் நடைபெற்ற அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள் கூட்டத்தில் உளவுப் பிரிவின் சிறப்பு அதிகாரி ஹிந்துத்துவ தீவிரவாதிகளின் துணையுடன் நடத்தப்பட்ட 16 குண்டு வெடிப்புகள் பற்றிய விசாரணைகளின் பட்டியலை வெளியிட்டார்.
ஹிந்துத்துவ தீவிரவாதம் என்கிற சொல் ஊடகங்களில் புழக்கத்திற்கு வந்தவுடன் சங் பரிவார் மற்றும் அதன் வெகுஜனத் தலைவர்கள் அத்வானி உட்பட தீவிரவாதம் என்று ஒன்றுதான் உள்ளது, அதில் ஹிந்து தீவிரவாதம் இஸ்லாமிய தீவிரவாதம் என்று பிரிக்க இயலாது என்றார்கள்.
அமெரிக்கா தனது எண்ணெய்க்கான யுத்தத்தில் தொடர்ந்து வளைகுடா நாடுகளில் 20 ஆண்டுகளாக அப்பட்டமாக ஒரு போரை நிகழ்த்தி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதிகள் பலர் பல நேரங்களில் இதனை சிலுவைப் போர் (crusade) என்றே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.
இருப்பினும் இதனை கிறிஸ்தவ தீவிரவாதம் (christion terrorism) என்று ஒருமுறை கூட எந்த ஊடகமும் அறிவிக்கத் துணிந்ததில்லை.
இதுவரை இஸ்லாமியத் தீவிரவாதம், கிறிஸ்துவ தீவிரவாதம் என்ற சொல்லை மிக சகஜமாகப் புழங்கியவர்களுக்கு ஹிந்து தீவிரவாதம் என்ற சொல் தொண்டையில் சிக்கிக் கொண்டது.
எல்லா மதங்களிலும் தீவிரவாதிகள் இருக்கவே செய்கிறார்கள்.
ஆனால் பொத்தாம் பொதுவாக இஸ்லாமிய தீவிரவாதம் என்கிற போர்வையில் சாமானியர்களைத் தான் இதுவரை பலியாடுகளாக மாற்றியுள்ளோம்.
தீவிரவாதிகளைப் பிடிக்க இயலாதபோது நாம் அப்பாவிகளை பிடித்து வழக்கை முடிப்பதை வாடிக்கையாக மாற்றியுள்ளோம்.
மாவோயிஸ்டுகளைப் பிடிக்க முடியவில்லை என்றால் பழங்குடிகளைப் பிடித்து சித்திரவதை செய்து வழக்கை முடிக்கிறோம். -
கட்டுரை ஆக்கம் : அ.முத்துகிருஷ்ணன்
CONTINUED…
FULL ARTICLE: http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=53&Itemid=40
ஷாருக்கானும் அடையாள அரசியல் வேட்டையும் .PART 4
ஆனால் இந்தக் காலகட்டங்களில் சுவாமி அசீமானந்தா, சாத்வி பிரக்ஞயா தாக்கூர், புரோஹித் ஆகியோர் நரேந்திர மோடி முதல் அனைத்து பி.ஜே.பி. தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாயின.
ஹைதராபாத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி நகைக் கடை ஒன்றில் வேலை செய்து வந்த முகமத் ரயீசித்தின், மெக்கா மசூதி வழக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளன்றே அவனது வேலை பறிபோனது.
சில தினங்கள் சித்திரவதை, அதன் பின் சில ஆண்டுகள் சிறைச்சாலை, அதன் பின் வழக்கு விசாரிக்கப்பட்டு விடுதலை.
இந்திய நீதிமன்றமே இவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்தும் ஹைதராபாத்தில் உள்ள எந்த நிறுவனமும் அவருக்கு வேலை கொடுக்கத் தயாராக இல்லை.
நீங்கள் இன்றும் ஹைதராபாத் சென்றால் முகமத் ரயீசித்தினை சந்திக்கலாம்.
அவர் பிளாட்பாரத்தில் வெயிலுக்குத் தண்ணீர் பழம் விற்றுக் கொண்டிருக்கிறார்.
இவரைப் போல் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 20 பேரின் கண்ணீர் கதைகள் உள்ளிட்ட அறிக்கையை ஆந்திர சிறுபான்மையினர் ஆணையர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்துள்ளார்.
முகமத் ரயீசித்தின்னைப் போல் ஆயிரக் கணக்கானவர்களின் கதைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.
இவர்களின் கதைகள் எல்லாமே ஏறக்குறைய ஒரே கதையாகவே உள்ளது.
எல்லா கதைகளின் நீதி ஒன்றே: இஸ்லாமியப் பெயர் ஒன்றே இவர்களின் இந்தக் கதிக்குக் காரணம்.
ஷாருக்கானிடம் அமெரிக்கா மன்னிப்பு கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன?
இஸ்லாமியப் பெயர்களைத் தாங்கி வாழ்வது தவிர வேறு ஏதும் செய்யாத இந்த இந்திய இளைஞர்களில் யாரிடமேனும் இந்திய அரசு என்றாவது மன்னிப்பு கோருமா?
கட்டுரை ஆக்கம் : அ.முத்துகிருஷ்ணன்
FULL ARTICLE: http://www.amuthukrishnan.com/index.php?option=com_content&view=article&id=53&Itemid=40
பாகிஸ்தான் முழுதும் தீவிரவாதிகள் என்றால் அங்கே யார் குண்டு வைப்பது என்பதை அறிய அங்குள்ள நாளிதழ்களைத் திறந்து பார்த்தால் அது முழுவதும் இந்திய உளவுத் துறை, ஸிகிகீ என்றுதான் விரிவாகக் கூறுகிறது. ///ஷியாவும் சுன்னியும் தாங்களாகவே அடித்துக் கொண்டு பள்ளிவாசல்களில் குண்டு வைத்துக்கொண்டு செத்துவிடுவார்கள்...இதில் இந்தியா வேறு தலையிடணுமாக்கும்...
ஆயிசா என்ற திரைப்படத்தை எத்தனை இஸ்லாமியர்கள் பார்த்தீர்கள்...!கைய தூக்குங்க......!
அந்த வேஷம் கலைந்த நாயகன், அந்த அம்மணியிடம் வாங்கிக் கட்டிக்கொண்டதை நினைத்தால் சிப்பு, சிப்பாக வருது.
எதிர் கருத்து இருக்க வேண்டிய தான், ஆனால் அந்த ஆளிடம் காழ்ப்புணர்ச்சியல்லவா இருக்கிறது. எப்போ முஸ்லிம்களைப் பற்றி யாராவது பதிவு போட்டாலும் இந்தாளு வந்து எதையாவது சொல்லி விட்டு தான் செல்வார். இப்ப பெண்மணி வாயாலே "நறுக்" குன்னு குட்டு பட்டுட்டார்.
ராவணன் said
ஊறுகாயா....? என்னா காமடி..? ஊறுகாய் தண்ணியடிக்கும் போது பயன்படும் புனிதமான ஒன்று. உன்னைப் போன்றவர்களுக்கு எப்படித் தெரியும். முஸ்லிம்களும் பிராமணர்களும் ஒன்றே. உங்களைப் போன்றவர்களை நொங்கெடுக்கவே சோனியா போன்ற கிறித்துவர்கள் உள்ளார்கள். இந்த மூன்று பீடைகளும் அழிந்தால் மட்டுமே உலகம் உருப்படும். on இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல
Invitation for S.priyan.
லண்டன் பி.பி.ஸியில் தமிழக முஸ்லிம்களைப் பற்றிய ஒரு ஆய்வு தொடர்.
http://meiyeluthu.blogspot.fr/2012/08/blog-post_28.html
பாரிஸில் தமிழ்க்கடைகள் ஒரு சிறப்புப்பார்வை!
http://meiyeluthu.blogspot.fr/2012/08/blog-post_26.html
சகோ வருண்!
//ஆத்மார்த்தி சொன்னது வேதவாக்குனு யார் சொன்னா?
ஆத்மார்த்தி சொன்னதை பாருங்கனுதான் சொல்றாரு.
நீதிபதி நீங்க சொல்றது மட்டும்தான் வேதவாக்கு இல்லையா? :))))//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
திரு வீடு சுரேஷ்குமார்!
//ஆயிசா என்ற திரைப்படத்தை எத்தனை இஸ்லாமியர்கள் பார்த்தீர்கள்...!கைய தூக்குங்க......!//
கண்டிப்பா நான் இன்னும் பார்க்கல்ல.... :-)
//ஆயிசா என்ற திரைப்படத்தை//
அது குறும்படம்தானே? நான் பாத்துட்டேன் (குடும்பத்தோடு). கதையையும் படித்தேன். இரண்டின் சுட்டிகளை எனக்கு அனுப்பித் தந்தவரும் ஒரு முஸ்லிமே.
This is why dont include muslims in cinemas. Not only that, exclude them in every walk of life. Then, nobody will complain.
Suvanapriyan, I do this. You are one of the many reasons for this change in me. In fact I started hating muslims after reading some muslim bloggers.
I am sure you are inspiration for many muslim haters.
Understand that what you are doing is damage to Muslims and Islam. No, I dont believe you will change. You will remain as a brainwashed religious fundamentalist. But you must at least know.
வணக்கம் சகோ,
யார் சொன்னது மூமின்கள் ஊறுகாய் என்று
"நமக்கு மிகவும் பிடித்த [மாட்டுக்கறி ]உப்புக்காணம்"
உங்க ஊரில் என்ன விலை???
நன்றி
//உப்புக்காணம்"//
அடடே...எங்கள் கிராமத்தில் புழங்கும் ஒரு அழகிய சொல். ஆனால் நான் சாப்பிடுவதில்லை. கறியை உப்பு மஞ்சள் தடவி வெயிலில் காய வைப்பர். பிறகு எண்ணெயில் பொறித்து பருப்பு சாம்பாருக்கு தொட்டுக் கொண்டால் அட..அட...ருசிச்சு சர்பிடுபவர்களை பார்க்க வேண்டுமே.....அதற்கெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும் சார்வாகன். :-)
//Suvanapriyan, I do this. You are one of the many reasons for this change in me. In fact I started hating muslims after reading some muslim bloggers.//
வர்ணாசிரமத்தினால் இத்தனை காலம் சுகமாக வாழ்ந்தவர்கள்: இந்த நாட்டின் பூர்வீக குடிமக்களை சூத்திரர்கள் என்று கூறி ஆண்டு வந்தவர்கள்: தங்களின் பொன்னான காலம் சரிந்து வருகிறதே......அதற்கு சுவனப்பிரியன் போன்ற பதிவர்களும் காரணமாக உள்ளார்களே என்ற ஆதங்கம் பலருக்கு வருவது இயற்கையே....சாதி வெறியை தூக்கி எறிந்து அனைத்து மக்களையும் கோவிலுக்குள் கொண்டு செல்ல உங்கள் தலைவர்கள் மூலம் முயற்சி எடுக்கவும். இல்லை என்றால் உங்களைப் போன்ற இந்துத்வா வாதிகளைத் தவிர வேறு யாரும் இந்து மதத்தில் தங்க மாட்டார். நல்லதுக்குத்தான் சொல்றேன்.
பிறகு உங்கள் இஷ்டம். இதனால்
எனக்கில்லை கஷ்டம். :-(
***Anonymous said...
This is why dont include muslims in cinemas. Not only that, exclude them in every walk of life. Then, nobody will complain.
Suvanapriyan, I do this. You are one of the many reasons for this change in me. In fact I started hating muslims after reading some muslim bloggers.
I am sure you are inspiration for many muslim haters.
Understand that what you are doing is damage to Muslims and Islam. No, I dont believe you will change. You will remain as a brainwashed religious fundamentalist. But you must at least know.
2:30 PM ***'
You know what I hate? Anonymous bloggers like you, moron! They are cowards. Who cares what they think? They often pretend like well-wishers and what not.
Wimps like you should keep your mouth shut! Dont you ever share your opinion! Wimps should not have any opinion!
//அவர்கள் கழுதையையோ குதிரையையோ காட்டி விட்டுப் போகட்டும். அதற்கு குறிப்பாக தவறு செய்பவர்களை இஸ்லாமியர்களாக திட்டமிட்டு நுழைப்பதன் அவசியம் என்ன? //
கட்டுரையில் (நீங்கள் எழுதியது அல்ல) இஸ்லாமியர்களை ஹீரோ பாத்திரமாக காட்டவில்லை என்பதற்கு தான் நான் பதில் சொல்லி இருந்தேன், அவர்களை வில்லனாகக் காட்டுவது பற்றி நானும் என்பதிவில் கண்டனம் தெரிவித்து எழுதி வந்துள்ளேன். இப்போதெல்லாம் பொட்டு வைத்த வில்லன்கள் தான் தமிழ் படத்தில் அதிகமாக வருகிறார்கள். :)
விஜய் ஒரு கிறித்துவர் அவரின் பாத்திரங்கள் எதுவுமே கிறித்துவ ஹீரோ பாத்திரம் கிடையாது, வேண்டுமென்றால் இதை இப்படி எழுதலாம், "சிறுபான்மை மதப்பிரிவை சார்ந்தவர் பெரும்பான்மையினர் வேடத்தில் பெரும்பான்மையினரிடம் பணம் பண்ணுகிறார்" - இதைப் படிக்கிறவர்களுக்கு கருத்து நேர்மை என்று பாராட்டுவார்களா ?
குற்றம் பற்றிப் பேச எண்ணிக்கை அளவு எந்த விதத்தில் பயன்படும் என்று தெரியவில்லை. 1000 பேருக்கு ஒரு காவல் நிலையம் என்றால் 1000 பேர் குற்றவாளிகளாக இருக்கிறார்கள் என்று பொருள் இல்லை, அதில் 995 பேரை பாதுகாக்கக் காவல் நிலையம் என்று தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.
விமானத்தில் ஏறுகிறவன் எத்தனை பேர் இடுப்பில் வெடிகுண்டு கட்டிக் கொண்டு ஏறுகிறான், ஆனாலும் ஆண் பெண் பேதமின்றி எல்லோரையும் அவிழ்த்து பார்த்து தானே உள்ளே விடுகிறார்கள்.
குற்றவாளியை குற்றவாளியாகப் பாருங்கள், அவர்களுக்கு மதச் சாயம் பூசி எங்க மதத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்று புலம்பாதீர்கள், ஐயர் ஆடுவெட்டுவதாக காட்சி இருந்தால் படம் நகைச்சுவையாகிவிடும்.
ஒரு சமூகம் பற்றிய பொது எண்ணம் வளர அந்த சமூகத்தின் செயல்பாடுகளும் உள்ளடங்கியதாகத்தான் உள்ளது.
என்னதான் திருவாளர் அருள் பசுமை தாயகம் என்று எழுதி வந்தாலும் நீங்களோ மற்றவர்களோ வெகு சுலபமாக 'மரம் வெட்டியில் வேதாந்தம்' என்று சொல்லுவீர்களா மாட்டீர்களா ?
ஒரு சமூகம் பற்றிய கருத்தாடல் மாற அந்த சமூகம் முற்றிலுமாக தம்மை மாற்றிக் கொள்ள முன்வந்து மாற்றிக் கொண்டால் பின்னர் கொஞ்ச காலத்தில் அந்த சமூகம் பற்றிய எண்ணங்கள் மாறலாம். இதற்கு யாரையும் குறைச் சொல்ல முடியாது.
உங்களுக்கு இந்துத்துவாதிகள் என்றால் என்ன சிந்தனை ஏற்படுமோ, அதே தான் உங்களைப் பற்றிய மற்றவர்களின் சிந்தனைகளாக இருக்கும்.
//நம்ம காவி கண்ணுவின் பதிவுகளும் //
சுவனப்பிரியனை சு.பிரியன் என்று விழித்தால் உங்களுக்கு வலிக்கலாம், அதே போன்ற வலிகள் பிறருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து இது போன்ற தரமற்ற பின்னூட்டங்களை மட்டுறுத்தவும். விருப்பமில்லை என்றால் உங்கள் பதிவுக்கு என்னுடைய கருத்து தேவையற்றது என்று வெளிப்படையாகக் கூறவும், இல்லாத பட்சத்தில் அந்த பின்னூட்டத்தையும் தாங்களே போட்டதாகக் கூட நான் கருதக் கூடும்.
வஹாபிய பதிவர்களில் நெடுங்காலமாக எழுதுபவர் என்ற முறையில் உங்களை மட்டும் தான் மதித்து பின்னூட்டம் போடுகிறேன், மற்றவர்களுக்கு பின்னூட்டம் இட எனக்கும் விருப்பம் இல்லை.
இதுக்கும் மேல் வேண்டுமென்றால் பின்னர் பின்னூட்டம் போடுகிறேன்.
மர்மயோகி said…..
//இதற்கொரு முற்றுப் புள்ளி வேண்டும் என யாருமே எண்ணாமல் இருப்பதற்கும், ஏன் திரைத்துறையிலேயே இயங்கக் கூடிய இஸ்லாமியர்களும், மதப்பாரபட்சமற்றவர்களும் ஏன் முயல்வதே இல்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.//
இஸ்லாமியர்களை கேவலமாக சித்தரிக்கும் இந்த நாய்களுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் நாம் ஏன் விளம்பரம் தரவேண்டும்? அந்த பொறம்போக்குகள் எதை வேண்டுமானாலும் படமாக எடுத்து தொலையட்டும்..அவர்களின் விபச்சாரப்படங்களுக்கு எந்த முஸ்லிம் பெயரையும் வைக்கவேண்டாம்... சாராயக்கடையில் நாம் ஏன் ஊறுகாயாக இருக்கவேண்டும்... சாக்கடையில் நாம் ஏன் புழுவாக இருக்கவேண்டும்..சிநிமாக்கூத்தாடிகளை புறக்கணித்தாலே போதும்..
@ கோவிக்கண்ணன் //இஸ்லாமியர்கள் திரைப்படம் பார்க்கத் தடை என்னும் பொழுது அதில் காட்டப்படும் கேரக்டர் கழுதையாக இருந்தால் என்ன குதிரையாக இருந்தால் என்ன ?//
கழுதையை வைத்து எடுதுக்கொள்ளுங்ககள் ஏன் எங்களை தீவிரவாதியாக சித்தரிக்கிறீர்கள்..? on இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல
Feroz said...
சலாம் அன்பின் சுபி,
//இஸ்லாமியர்கள் திரைப்படம் பார்க்கத் தடை என்னும் பொழுது அதில் காட்டப்படும் கேரக்டர் கழுதையாக இருந்தால் என்ன குதிரையாக இருந்தால் என்ன ? // நம்ம கோவி பதிவுகளும் பின்னூட்டங்களும் படிப்பவர்கள் சிரிப்பார்கள். எங்கள் ஊரில் அருமையான் சொல்லாடல் உண்டு. ஒருவன் யார் என்பதை அவன் பேச்சு காட்டி விடுகிறது. கோவி மிகச்சரியாக பொருந்தும் வாசகம். மனதின் வக்கிரத்தின் வெளிப்பாடான வார்த்தை தான் இந்த கழுதை மற்றும் குதிரை. என்னை கலுதையாகவும் குதிரையாகவும் காட்ட இவன் யார் மிஸ்டர் கோவி. சினிமா என்ற இந்த கேடு கெட்ட விபச்சார கூடம் போது வெளியில் கட்டமைத்து இருக்கும் முஸ்லிம்களை பற்றி கட்டமைக்க விரும்பும் கட்டமைக்கும் செய்தி என்ன? கமல் என்ற அயோக்கியன் கொடுத்த உன்னை போல் ஒருவனை செருப்பை மலத்தால் அடித்தது போல் என்னை போல் ஒருவனா நீ என்று சகோதரர் ஞானி குமுதத்தில் கிழித்து எறிந்து இருந்தாரே. மேலும் சகோ சுகுணா திவாகரின் இரண்டு சினிமா பற்றிய பதிவுகள்
http://suguna2896.blogspot.com/2009/09/blog-post_22.html
http://suguna2896.blogspot.com/2008/11/blog-post_15.html
@கோவி கண்ணன்!
//சுவனப்பிரியனை சு.பிரியன் என்று விழித்தால் உங்களுக்கு வலிக்கலாம், அதே போன்ற வலிகள் பிறருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து இது போன்ற தரமற்ற பின்னூட்டங்களை மட்டுறுத்தவும். விருப்பமில்லை என்றால் உங்கள் பதிவுக்கு என்னுடைய கருத்து தேவையற்றது என்று வெளிப்படையாகக் கூறவும், இல்லாத பட்சத்தில் அந்த பின்னூட்டத்தையும் தாங்களே போட்டதாகக் கூட நான் கருதக் கூடும்.//
அந்த பின்னூட்டத்தை திருத்தி வெளியிட்டுள்ளேன்.
///அந்த பின்னூட்டத்தை திருத்தி வெளியிட்டுள்ளேன்.///-----மிக நல்ல முன்னுதாரணம்..!
ஆனால்... இவை ஏன்... முஸ்லிம்களிடம் இருந்து மட்டுமே எதிர்பார்க்கபப்டுகின்றன..???
///அதே போன்ற வலிகள் பிறருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து இது போன்ற தரமற்ற பின்னூட்டங்களை மட்டுறுத்தவும்.///----இதே போன்ற வலிகள் முஸ்லிம்களுக்கும் இருக்காதா..? என்றைக்காவது நீங்கள் அவரை இப்படி கேட்டதுண்டா..? கேட்டால் அவர் மட்டுருத்துவாரா..? இதை அவர்களும் கடைப்பிடிப்பார்களா..?
மனிதாபிமானமே இன்றி அவ்வளவு தரக்குறைவாக ஒட்டுமொத்த சமூகத்தையே திட்டினார்கள்... மனிதாபிமானியில்..! அப்போது எங்கே போனார்கள் சட்டம் பேசுவோர்..? இருந்தும் சகோ.ஆஷிக் திட்டியவர்களை சென்னை சென்று கட்டிப்பிடித்து மனிதாபிமானத்துடன் அளாவிலாவினார்..! இதைக்கூட பாராட்ட மனதில்லாமல் எள்ளி நகையாடி, 'தான் அப்படி செய்ய மாட்டேன்' என்று நேற்று பதிவிட்டவர்தானே இவர்..?
ம்ம்ம்..... இம்மையில் செருப்பாகவே இருப்போம்..! இன்ஷாஅல்லாஹ்... மறுமையில் மகுடம் மட்டுமே காண்போம்..!
நியாயமாகப் படைத்திருக்கிறீரகள் உங்களுக்கு நன்றி பகர்கிறேன் வள்ளுவனின் சொல்லுக்கொப்ப “இனிய உளவாக் இன்னாதகூறல் கனியிருப்ப காய்கவர்ந்தற்று” எவ்வளவு பெரியவெண் திரையானாலும் அத்திரையில் ஒரு கரும்புள்ளியைக் கண்டால் அதை யாரும் துடைக்க முனைவதில்லை அதை ஊதிப் பெரிதாக்குவார்கள் அப்புள்ளியைத்தவிர அவ்வளவு விசாலமாக வெண்மையும் உண்மையும் நிறைந்திருக்கும் அதையாரும் கண்டுகொள்வதில்லை, உங்களைப்போல் ஆழ்ந்து சிந்திப்பவர்களைத் தவிர, துடைக்கும் கரங்களும்,தட்டிக் கொடுக்கும் கரங்களும் இருக்குமிடத்தில் தடுக்கிவிட்டு வேடிக்கை பார்க்கின்றனர் மனிதனின் மனதில் மன் தம் வாழவேண்டும் என்றாலே புனிதம் மலரும், பணமென்ற கணிதத்தைமட்டும் சம்பாதிக்க குணமென்ற நியாயத்தை புதைக்கக்கூடாது, சினிமா உலகின் வைற்றில் கோலாறு அதற்கு இனிமா கொடுத்து அந்தக்கசடுகளையும்,அசடுகளயும் அகற்றவேண்டும் என்ற்றலே நியாயம் ஆரோக்கியமடையும், பொக்கிஷமென்றபெயரில் இலைமறைவில் இதயங்களை கோரைப்படுத்துவதும், காதலும் காமமும் வன்முறையும் சித்தைக்கப்பட்டே பெரும்பாலும் திரைப்படங்கள் படைக்கப்படுகின்றன ஏன் வேறு சமூக, விஞ்ஞான நலவளம்தரும் சமூகமேம்பாட்டு உயர்வுதரும் கதைகளே இல்லையா?பாருக்குள்ளே நல்லநாடு நம்பாரதநாடு என்று சொல்லிக்கொண்டு வைக்கோல்போருக்குள் புகுந்துகொண்டு உடலெல்லாம் ஒவ்வாமை(படை,சொரிச்சல்)என்கிறோம் இது நம் அறியாமைதானே சிந்தித்துப் பாருங்கள் படைப்பாளர்களே அமுதம் ஆறாக ஓடும்பொழுது ஏன் அமிலத்தில் வாய்கொப்பளிக்கிறீர்கள் மாற்றான் வேற்றான் என்ற கருத்திலிருந்து மாறி, உற்றான் உறவினனென்று தயவு கூர்ந்து மாற்றி யோசியுங்கள்.
நன்றி
அன்புடன் ஷேக் அப்துல் காதிர்.
வருண்!இம்புட்டு நாளா ஊர் சுத்திகிட்டிருந்தும் நம்மளை யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்களேன்னு நினைச்சேன்.இலவசமாக நீங்க எனக்கு விளம்பரம் தந்தா வேணாமுன்னா சொல்ல முடியும்:)
பதிவின் அடிப்படையிலேயே நான் கருத்துக்களை பகிர்கிறேன்.கலைஞர் கருணாநிதியை பற்றி விமர்சனம் செய்யும் போது நான் ஜெயலலிதாவுக்கு செக்ரட்டரி.இப்ப இங்கே விமர்சனம் செஞ்சா நான் இந்துத்வாவாதியா? நல்லாயிருக்குதே உங்க லாஜிக்?
ஒரு பொது தளத்தில் உபயோகிக்க வேண்டிய சொற்பிரயோகங்கள் என்ன என்ற அடிப்படை கூட தெரியாமல் பேசுறீங்களேன்னு கண்டனம் தெரிவித்தால் நான் வவ்வாலுக்கு வக்கீல்.உங்களை மாதிரி வில்லங்க பதிவுகள் போடாமல் பல செய்திகள் பகிர்வதோடு வவ்வாலின் பின்னூட்டங்களும் களை கட்டவே செய்கின்றன.எனவே வவ்வாலுக்கு வக்கீலாக இருப்பதில் எனக்கு பெருமைதான்.
நீங்க டீ ஆத்தும் போது வந்து வெச்சிக்கிறேன் மிச்ச கச்சேரியை:)
//இருந்தும் சகோ.ஆஷிக் திட்டியவர்களை சென்னை சென்று கட்டிப்பிடித்து மனிதாபிமானத்துடன் அளாவிலாவினார்..! //
யாரோ யாரைக் கட்டிப்பிடித்தால் எனக்கு என்ன ? நான் என் சூழலைச் சொன்னேன். என் பழைய பதிவில் ஏற்கனவே எழுதியதைத் தான் சொன்னேன்.
http://govikannan.blogspot.sg/2010/10/blog-post_4566.html
//கோவி.கண்ணன் said...
//நம்ம காவி கண்ணுவின் பதிவுகளும் //
சுவனப்பிரியனை சு.பிரியன் என்று விழித்தால் உங்களுக்கு வலிக்கலாம், அதே போன்ற வலிகள் பிறருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து இது போன்ற தரமற்ற பின்னூட்டங்களை மட்டுறுத்தவும்.
இல்லாத பட்சத்தில் அந்த பின்னூட்டத்தையும் தாங்களே போட்டதாகக் கூட நான் கருதக் கூடும். //
========================
//சுவனப் பிரியன் said...
@கோவி கண்ணன்!
//சுவனப்பிரியனை சு.பிரியன் என்று விழித்தால் உங்களுக்கு வலிக்கலாம், அதே போன்ற வலிகள் பிறருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து இது போன்ற தரமற்ற பின்னூட்டங்களை மட்டுறுத்தவும். விருப்பமில்லை என்றால் உங்கள் பதிவுக்கு என்னுடைய கருத்து தேவையற்றது என்று வெளிப்படையாகக் கூறவும், இல்லாத பட்சத்தில் அந்த பின்னூட்டத்தையும் தாங்களே போட்டதாகக் கூட நான் கருதக் கூடும்.//
அந்த பின்னூட்டத்தை திருத்தி வெளியிட்டுள்ளேன். //
=========================
//முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...
///அந்த பின்னூட்டத்தை திருத்தி வெளியிட்டுள்ளேன்.///
-----மிக நல்ல முன்னுதாரணம்..!
ஆனால்... இவை ஏன்... முஸ்லிம்களிடம் இருந்து மட்டுமே எதிர்பார்க்கபப்டுகின்றன..???
///அதே போன்ற வலிகள் பிறருக்கும் இருக்கும் என்பதை உணர்ந்து இது போன்ற தரமற்ற பின்னூட்டங்களை மட்டுறுத்தவும்.///
----இதே போன்ற வலிகள் முஸ்லிம்களுக்கும் இருக்காதா..?
என்றைக்காவது நீங்கள் அவரை இப்படி கேட்டதுண்டா..?
கேட்டால் அவர் மட்டுருத்துவாரா..?
இதை அவர்களும் கடைப்பிடிப்பார்களா..? //
====================
திருவாளர் சுவனப்பிரியன் அவர்களே,
" இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல் "
என்னும் திருக்குறளுக்கொப்ப பயத்தால் அல்லாமல் பண்புடன் செயல்பட்டுவிட்டீர்கள்.
இதைப்போல் பிறருக்கும் வலிக்கும் என்றுணர்ந்து
சுவனப்பிரியனின் முன்னுதாரணத்தை பின்பற்றக்கூடிய
"பண்பான யோக்கியதாம்சம்"
இனிமேலாவது பிரதிபலிக்கும் என்று சுவனப்பிரியனிடமிருந்து பெற்ற இடத்திலிருந்து எதிர்பார்க்கலாமா?
.
//அந்த பின்னூட்டத்தை திருத்தி வெளியிட்டுள்ளேன்.//
ஏன் திருத்தம் செய்தீர்கள்? ஆஷிக்கை அவ்வளவு மோசமாக பேசிய பொது என்ன ஆதரவு குடுத்தார் இந்த கோவி கண்ணன். (காவி கண்ணு என்று சொல்லி இருப்பேன் அவருக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதனாலும் நீங்கள் பின்னூட்டத்தை வெளியிடாமல் இருப்பீர்கள் என்பதனாலும் அப்படி சொல்ல வில்லை.
ஆஷிக்கும் அது போன்ற ஆட்களிடம் போய் கட்டி அணைத்து பேசியதெல்லாம் தவறு. பேச வில்லை என்றால் போகிறார்கள். யாருக்கும் நஷ்டம் இல்லை.
k.rahman said...
//அந்த பின்னூட்டத்தை திருத்தி வெளியிட்டுள்ளேன்.//
ஏன் திருத்தம் செய்தீர்கள்? ஆஷிக்கை அவ்வளவு மோசமாக பேசிய பொது என்ன ஆதரவு குடுத்தார் இந்த கோவி கண்ணன். (காவி கண்ணு என்று சொல்லி இருப்பேன் அவருக்கும் மற்றவர்களுக்கும் வித்தியாசம் வேண்டும் என்பதனாலும் நீங்கள் பின்னூட்டத்தை வெளியிடாமல் இருப்பீர்கள் என்பதனாலும் அப்படி சொல்ல வில்லை.
ஆஷிக்கும் அது போன்ற ஆட்களிடம் போய் கட்டி அணைத்து பேசியதெல்லாம் தவறு. பேச வில்லை என்றால் போகிறார்கள். யாருக்கும் நஷ்டம் இல்லை. //
MY DEAR K. RAHMAN
முகமது நபிகள் பெருமானார் நாள்தோறும் நடைப் பயிற்சிக்காகவும் - குளிப்பதற்காகவும் - சில தெருக்களைக் கடந்து செல்வது வழக்கம்.
அப்படிச் செல்லும்போதெல்லாம், அவர் புகழ் கண்டு பொறாமையால் மனம் புழுங்கியிருந்த ஒரு மங்கை - மாடியிலிருந்தவாறு குப்பைக் கூடையை அவர் தலையில் கொட்டுவது வழக்கம்.
அப்படி கொட்டப்பட்ட குப்பையைத் தட்டிவிட்டு, அவர் உடலைக் கழுவிக் கொள்வார்.
அந்தப் பெண்மணி இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர் என்பதாலும் - நபிகள் நாயகத்தின் மீது அளவற்ற வெறுப்பு கொண்டவர் என்பதாலும் - அந்தக் குப்பை கொட்டும் திருவிழா தினந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஒரு நாள் அந்தத் தெருவில் அந்த வீட்டுக்கு அருகிலே நடந்துபோன போது நபிகள் நாயகம் எதிர்பார்த்தவாறு, அவர் தலையில் குப்பை கொட்டப்படவில்லை.
ஆச்சரியத்தில் மூழ்கிய நபிகள் பெருமானார் அடுத்த வீட்டுக்காரர்களிடம், அந்த அம்மையாருக்கு என்ன நேர்ந்தது - ஏன் குப்பை கொட்டவில்லை - என்று வினவினாராம்.
அந்தப் பெண்மணிக்கு உடல்நலம் இல்லை - என்ற செய்தி கேள்விப்பட்டதும் முகமது நபி பெருமானார் விரைந்து அந்த வீட்டின் மாடிக்குச் சென்று அந்தப் பெண்மணியிடம் உடல்நலம் விசாரித்தாராம். அவர் விரைவில் உடல்நலம் பெறவும் உதவினாராம்.
நாள்தோறும் நபிகளை வெறுத்து குப்பைக் கொட்டிக் கொண்டிருந்த அந்தப் பெண்மணியின் மனம் திருந்தியதாம்.
இஸ்லாத்தின் பெருந்தன்மையை - அதைக் கடைப்பிடிக்கும் முகமது நபிகள் நாயகத்தை வியந்து போற்றிய அந்தப் பெண்மணி தன் செயலுக்கு வருந்தி, தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார் என்று ஒரு சம்பவம் உண்டு.
நாம் நம்முடைய இஸ்லாமியர்களின் நல்லிணக்க பண்பை கடைபிடித்தோம்.
கடைபிடித்து வருவோம்.
பலனை எதிர்பாராது நல்லதை செய்வோம்.
.
Kavya says:
August 29, 2012 at 8:25 am
தங்கமணி,
வரலாறே உங்களுக்குத் தெரியவில்லை. அல்லது தெரியாத மாதிரி நடிக்கிறீர்கள்.
வரலாற்றில் மன்னராட்சிதான் இருந்தது. உலகமெங்கும். நவீன காலத்தில்தான் மக்களாட்சி வந்தது.
மன்னராட்சியின் போது ஒவ்வொரு மன்னனும் பேரரசனாகத்தான் விரும்பினான். ஒருநாட்டைப் பொருது அம்மன்னனையும் அந்நாட்டு மக்களைச்சிறைப்படுத்தி, அவர்கள் பெண்களை வன்புணர்வது நம் மன்னர்களின் வாடிக்கை.
பல்லவனுக்கும் சாளுக்கியனுக்கும் பழிக்குப்பழி போர்களை நாம் படிக்கின்றோம். காஞ்சி தீக்கிரையாகியது; மக்கள் கூட்டம் கூட்டமாகக் கொல்லப்பட்டார்கள்; பெண்களை மட்டும் விடுவார்களா?
பழிக்குப்பழியாக, பல்லவன் வாதாபியைத் தீக்கிரையாக்கித் தரைமட்டமாக்கினான். மக்களை நாசப்படுத்தி எத்தனைப் பெண்களை அவன் வீரர்கள் வன்புணர்ந்தார்களோ நமக்குத் தெரியாது. வன்புணரவில்லையென்று டுபாக்கூர் வேலையை நாம் செய்ய முடியாது.
இவை உதாரணங்கள். நம் பல்லவனை மாமல்லன் எனப்புகழ்ந்து காஞ்சித்தலைவன் என்று சினிமா எடுத்து மகிழ்கிறோம். நம் வரலாறு அவனைப்பெரிய தமிழ்நாட்டின் மானத்தைக்காத்தவன் என்றுதான் புகழ்கிறது. அதே வண்ணம், சாளுக்கிய புலிகேசியை மராட்டியர்கள் புகழத்தான் செய்வார்கள். எங்கே உண்மை ஓடியது? விருப்பு வெறுப்பின்றி நோக்குவோருக்குத்தான் தெரியும்: மன்னர்கள் என்பவர்கள் கொடியவர்கள் என்று.
அப்படியிருக்கும்போது கஜினியும் கோரியும் மஹாத்மாக்களாகவா இருப்பார்கள்? அவர்களும் மன்னர்கள் செய்வதைத்தான் செய்வார்கள். இல்லையா?
ஆக, எல்லாரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். இசுலாமியர் கோரியையும் கஜனியையும் புகழ்ந்து மற்ற இந்து மன்னர்களை இகழ்ந்தால் மட்டுமே தவறு. நீங்கள் செலக்டிவாக கஜனியையும் கோரியையும் எடுப்பீர்கள் இல்லையா? அதே போல அவர்களும் செய்கிறார்கள்.
உண்மைகள்,
கருத்துக்கு நன்றி.
Rajanatarajan,
'vaagai sooda vaa' was quite a good movie. you can try watching 'naan e' also. some have made fun of their attempt on science fiction. but still its worth watching. நடுநிலையாக எழுதும் ஒரு சில பதிவர்களில் நீங்களும் ஒருவர். கொஞ்ச நாட்களாக புது பதிவுகளே காணோம்!!
///இஸ்லாமியர்களை கேவலமாக சித்தரிக்கும் இந்த நாய்களுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் நாம் ஏன் விளம்பரம் தரவேண்டும்? அந்த பொறம்போக்குகள் எதை வேண்டுமானாலும் படமாக எடுத்து தொலையட்டும்..அவர்களின் விபச்சாரப்படங்களுக்கு எந்த முஸ்லிம் பெயரையும் வைக்கவேண்டாம்... சாராயக்கடையில் நாம் ஏன் ஊறுகாயாக இருக்கவேண்டும்... சாக்கடையில் நாம் ஏன் புழுவாக இருக்கவேண்டும்..சிநிமாக்கூத்தாடிகளை புறக்கணித்தாலே போதும்.. ///சகோதரர் சுவனப்பிரியன்
இதைத்தான் நான் ஏலவே தங்களின் வேறு பதிவுகளில் சொன்னேன்.
எதிர்ப்புக்கு மட்டுமல்ல ஆதரவாகக்கூட, இந்த கூத்தாடிகளைப்பற்றி எழுத வேண்டாம்.
முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு புறக்கணித்தாலே போதும், இந்தக் கேடு கேட்ட கூத்தாடிகளின் வருமானத்தை குறைத்து விடலாம்.
***ராஜ நடராஜன் said...
வருண்!இம்புட்டு நாளா ஊர் சுத்திகிட்டிருந்தும் நம்மளை யாரும் கண்டுக்க மாட்டேங்குறாங்களேன்னு நினைச்சேன்.இலவசமாக நீங்க எனக்கு விளம்பரம் தந்தா வேணாமுன்னா சொல்ல முடியும்:)***
என்ன சொல்ல வர்ரீங்கனு தெரியலை. நீங்க எதையாவது நெனச்சுக்கிட்டு புஸ்வானம், வேதவாக்குனு வார்த்தைகள் போட்டு பேசினால் பெரிய ஆளா நீங்க?? நீங்களா நெனச்சுக்கிட்டே திரியவேண்டியதுதான்.
**பதிவின் அடிப்படையிலேயே நான் கருத்துக்களை பகிர்கிறேன்.**
சரி பார்க்கலாம்..
***ராஜ நடராஜன் said...
அருள்!உங்க பின்னூட்டம் உங்க தல ராமதாஸ்க்கு சினிமாவுக்கு எதிராக கூட்டம் சேர்க்க இஸ்லாமிய சகோக்களையும் இழுக்கிற மாதிரி தெரியுதே:)***
அருள் உங்க கருத்து எதிரா ஒரு பின்னூட்டம் போட்டா, அதுக்கு பா ம க சாயம் பூசுறது ஏன்? இதென்ன வேலை???
இது மாதிரி பின்னூட்டம் இடுவது பதிவு அடிப்படையில் தானா?
இல்லை பதிவை விட்டுப்புட்டு உங்க கருத்துக்கு எதிரா பின்னூட்டம் இடுபவர்களை தாக்கி நீங்க காட்டும் மேதாவித்தனமா??
பா ம க பத்தி எவன் பேசினான் இங்கே? என்னத்தக்கு ராமதாஸை இழுத்து வருகிறீர்?
உங்க பின்னூட்டம் ஏன் தூக்ககப்பட்டது? நீர் பதிவு அடிப்படையில் எல்லாம் இப்போ பேசுறதில்லை! யாரையாவது அவங்க பின்புலம் தெரிந்து தனிநபர் தாக்குதல் செய்றது. உங்க பின்னூட்டமெல்லாம் வர வர இது மாதிரி ஒரே உளறலாத்தான் இருக்கு .
@ சகோ.மர்மயோகி said…..
/////////இஸ்லாமியர்களை கேவலமாக சித்தரிக்கும் இந்த நாய்களுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் நாம் ஏன் விளம்பரம் தரவேண்டும்? அந்த பொறம்போக்குகள் எதை வேண்டுமானாலும் படமாக எடுத்து தொலையட்டும்..அவர்களின் விபச்சாரப்படங்களுக்கு எந்த முஸ்லிம் பெயரையும் வைக்கவேண்டாம்... சாராயக்கடையில் நாம் ஏன் ஊறுகாயாக இருக்கவேண்டும்... சாக்கடையில் நாம் ஏன் புழுவாக இருக்கவேண்டும்..சிநிமாக்கூத்தாடிகளை புறக்கணித்தாலே போதும்../////////
-----இப்படி சொல்லிவிட்டு......
அடுத்து...
//////கழுதையை வைத்து எடுதுக்கொள்ளுங்ககள் ஏன் எங்களை தீவிரவாதியாக சித்தரிக்கிறீர்கள்..? /////
-----இப்படியும் சொல்வது முரண்பாடு..!
எனது கருத்து யாதெனில்...
இன்று பல ஆபாச அநியாய அக்கிரம அவதூறு தீமைகளையும் உள்ளடக்கி இருக்கும் இதே இணையத்தில்தானே நாம் தீமிகளை தடுத்து நன்மைகளையும் தொடர்ந்து ஏவிக்கொண்டு இருக்கிறோம்..?
சாக்கடையை எதற்கு நன்னீர் ஓடையாக மாற்றக்கூடாது..? அதற்காக எதற்கு போராடக்கூடாது..? அல்லது நாமே எதற்கு முயற்சிக்கக்கூடாது..? ஓடை எனில்... அதில் மீனாக இருப்பதில் ஒன்றும் தவறில்லையே..? (நன்னீர் ஓடைக்கு ஓர் உதாரணமாக உமர் முக்தார் ஐ மேலே சொல்லி இருக்கிறேன்)
விபச்சாரப்படங்களுக்கு எந்த முஸ்லிம் பெயரையும் வைக்க வேண்டாம் எனபது சரிதான்..! ஆனால்... நல்ல படிப்பினை ஊட்டும் சிறந்த வரலாற்று படங்கள், நன்மையை ஏவி தீமையை தடுக்கும் சமூக நலனுக்கான படங்கள் என்று எடுக்கலாமே..! அதில், ஹீரோவுக்கு முஸ்லிம் பெயரை வைப்பதில் தவறில்லையே...!
சாராயக்கடையில் ஊருகாயாக இருக்க வேண்டாம் என்பதை நானும் ஏற்கிறேன். ஆனால்... சாராயக்கடையை மூடிவிட்டு அங்கெ... திறக்கப்படும் புஹாரி ஹோட்டலில் பிரியாணியாக இருப்பதில் தவறில்லை எனபதே எனது வாதம்..!
@ சகோ. Yusuf Ismath said...
////எதிர்ப்புக்கு மட்டுமல்ல ஆதரவாகக்கூட, இந்த கூத்தாடிகளைப்பற்றி எழுத வேண்டாம்.
முஸ்லிம்கள் ஒன்றுதிரண்டு புறக்கணித்தாலே போதும், இந்தக் கேடு கேட்ட கூத்தாடிகளின் வருமானத்தை குறைத்து விடலாம்.////
--------நாம் மட்டுமே அவர்களுக்கு வருமானம் என்றால் நீங்கள் சொல்வது சரி சகோ.யூசுப்.
பெரும்பான்மை மக்கள் சினிமா மோகம் கொண்டவர்கள். அதை உடைக்க நாம் பாடுபட வேண்டும். அவர்களையும் கெட்ட சினிமாவை வெறுப்போராக மாற்ற முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற பெறத்தான், தீயதை புறக்கணிப்போர் பெரும்பான்மை ஆக ஆக த்தான், நீங்கள் சொன்னது நடக்கும் சகோ.இஸ்மத்.
////எதிர்ப்புக்கு மட்டுமல்ல ஆதரவாகக்கூட, இந்த கூத்தாடிகளைப்பற்றி எழுத வேண்டாம்.////----ஆதரவுக்கு மட்டுமல்ல எதிர்ப்பாக்கூட, இந்த கூத்தாடிகளைப்பற்றி எழுத வேண்டாம். என்று சொல்ல வந்து இருப்பீர்கள்..! :-))) சரிதானே..? சரியான கருத்து சகோ.யூசுப்.
தடுத்து மூட்டை கட்டிவிடலாம் என நன்றாக தெரிந்தால் மட்டுமே... ரிலீசுக்கு முன்னாடி தீமையான சினிமாவை தடுக்க முயற்சிக்க வேண்டும். ஒருவேளை முயற்சி பலன் அளிக்கவில்லை என்றால்... இதுவே அந்த சினிமாவுக்கு மிகப்பெரிய விளம்பரம் என்றாகிவிடும்.
சினிமாவை பொருத்தமட்டில் ரிலீசுக்கு முன்போ அல்லது ரிலீசான சமயமோ அது பற்றி கருத்து விவாதம் எதிர்மறை விமர்சனம் எதுவாக இருந்தாலும் அது விளம்பரம்தான்..! வருமானம்தான்..! வெற்றிதான்..! எனவே, அதற்கு தோல்வியை உண்டாக்க நினைப்பவர்கள் அந்த நேரத்தில் அதை கண்டுகொள்ளவே கூடாது. அது ஓடி முடிந்து அடங்கியவுடன் அதில் சொல்லப்பட்ட தீமைகளை மக்களுக்கு எடுத்து சொல்லி இனி இதுபோல வரக்கூடாது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்..! அதனால்தான்... சகோ.சுவனப்பிரியன், முன்னர் ஒரு ரிலீஸ் ஆகாத படம் பற்றி எதிர்கருத்து பதிவு போட்டது நன் இந்த பக்கமே வரவில்லை. இன்னும் அது தவறு என்றுகூட சொல்லவில்லை. அதைவிட முக்கியம் 'அது எந்த பதிவு' என்று கூட இங்கே சொல்லமாட்டேன்..! மூச்..! விளம்பரம்..!
@ சகோ.வருண்...
////அருள் உங்க கருத்து எதிரா ஒரு பின்னூட்டம் போட்டா, அதுக்கு பா ம க சாயம் பூசுறது ஏன்? இதென்ன வேலை??? என்னத்தக்கு பா ம க ...பத்தி ராமதாஸை .....இழுத்து வருகிறீர்?////
---அருமை..! நானே அடுத்து கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன். நன்றி சகோ.வருண்.
இப்படித்தான்.... சில பேர், பதிவில் சொல்லப்படும் கருத்துக்கு மத/சாதி/கட்சி சாயம் அடிப்பதற்கே பெயிண்டு டப்பாவும் பிரஷ்ஷுமா பதிவு பதிவா அலைகிறார்கள்...! கருத்தை விமர்சிப்பது இல்லை. கருத்து சொல்பவரின் பின்னணியை விமர்சிக்கிறார்கள். இது கருத்தை எப்படி மறுக்கும் என்றுதான் எனக்கு புரியவில்லை..!
Brother Muhammad Ashiq,
///-நாம் மட்டுமே அவர்களுக்கு வருமானம் என்றால் நீங்கள் சொல்வது சரி சகோ.யூசுப்.///
கணிசமான வருமானம் நமது சமூகத்தாலும் அந்தக் கூத்தாடிகளுக்குக் கிடைக்கிறது. நாம் ஒன்று திரண்டு புறக்கணிக்கும்போது, பிற சமூக சகோதரர்களும் அந்த முன்மாதிரியைப் பின்பற்றுவார்கள்.
இலங்கையில் இந்தியப் படங்களை '80 களில் தடை செய்தார்கள். அதன் தாக்கம் ஓரளவு தெரிந்தது.
இலங்கைத் தமிழ் பயங்கரவாதிகள்கூட, அவர்களுக்கு ஆதரவற்ற கூத்தாடிகளின் படங்களை தடை செய்தார்கள். அதிலும், அந்தக் கூத்தாடிகளுக்கு ஒரு தாக்கம் தெரிந்தது.
சிங்களத் தீவிரவாதிகள், இந்தியத் திரைப்படங்களை தடை செய்ததோடு, இந்தியப் பொருள்களையே தடை செய்தார்கள். பாதிக்கப்பட்டவர்கள் கையைப் பிசையத்தான் முடிந்தது.
சில கூத்தாடிகளின் படங்களை கனடாவிலோ, ஐரோப்பாவிலோ திரையிடப்படுவதற்கு இலங்கைத் தமிழர்கள் தடை செய்யும்போது, அந்தக் கூத்தாடிகளின் மறைமுகமான கெஞ்சுதலும் வெளிப்பட்டது. எதிலும் கையைக் கடிக்கும்போது, கூத்தாடிகள் கெஞ்சும் நிலைப்பாட்டிற்கு வருவார்கள்.
இலங்கைத் தமிழர்களின் தடைக்கே, இப்படியென்றால், உலகம் பூராவும் உள்ள முஸ்லிம்கள் ஒன்று திரண்டால், அந்தக் கூத்தாடிகள் முஸ்லிம்களைப்பற்றி கேவலமாக சினிமாக்களில் சித்தரிக்க பின்வாங்குவர்.
மேற்குலகும் இஸ்லாத்திற்கு எதிராக எத்தனையோ திரைப்படங்களையும் Documentary films களையும் எடுத்து, தோல்வி கண்டதுதான் மிச்சம். முஸ்லிம் அல்லாத மக்கள்கூட, அவைகளை ஏற்றுக் கொள்வதாக இல்லை. இப்போது, இஸ்லாத்திற்கெதிரான சினிமாக்களும் தேய்ந்து கொண்டு செல்கிறது.
தீயவைகளை விட்டு திட்டு, நன்மையின் பக்கம் விரையும்போது, இறையுதவியும் நம்மை அறியாமல் கிடைக்கிறது.
//கழுதையை வைத்து எடுதுக்கொள்ளுங்ககள் ஏன் எங்களை தீவிரவாதியாக சித்தரிக்கிறீர்கள்..? on இஸ்லாமியர்கள் தொட்டுக்கொள்ள ஊறுகாய் அல்ல //
இது போன்ற கேள்விகல் பல தரப்பில் பலவிதங்களில் கேட்கப்படுகிறது, முதலில் கேள்விக்கான சூழல், உதாரணத்திற்கு நீங்க நாலு பேர் வஹாபிகள் எழுதுவதை வைத்து இஸ்லாம் என்றால் வஹாபியிசம் என்கிற புரிந்துணர்வுகள் வலிந்து திணிக்கப்படுகிறது, நாங்களும் இஸ்லாமியர்கள் தான் எனவே வஹாபிகளை விமர்சனம் செய்யும் பொழுது ஒட்டுமொத்தமாக இஸ்லாமியர்கள் என்று குறிப்பிடாதீர்கள் என்று அப்துல்லா போன்றவர்கள் வருத்தப்படுவதுண்டு, அதற்கெல்லாம் நீங்கள் நாலு பேர் அலட்டிக் கொள்வது போல் தெரியவில்லை. இஸ்லாம் என்றால் வஹாபியிசம் என்றும் அதற்கு முன்னுதாரணம் சவுதி மட்டுமே என்கிற கருத்து திணிப்பு மு.மாலிக் போன்றவர்களுக்கு ஏற்பு கிடையாது. ஆனால் உங்கள் பதிவுகளை மட்டுமே படித்துவருபவர்களுக்கு இஸ்லாம் என்றால் வஹாபியிசம் தாண்டி எதுவுமே இல்லை என்கிற புரிந்துணர்வு வருமா வராதா ? திரைப்படங்களும் இது போன்ற காட்சியாக்கங்களைப் பார்த்து தான் காட்சிப்படுத்தப்படுகிறது என்றே நினைக்கிறேன். சினிமாவில் கடத்தல்காரனை வில்லனாகக் காட்ட அவர்களுக்கு தாவூத் இப்ராஹிம் மற்றும் பர்மாபஜார் நடப்புகள் ரோல் மாடலாகவும், வெயிட்டான பாத்திரமாகவும் இண்டர்நேசனல் லெவலில் காட்ட வாய்ப்பிருக்கும் பொழுது வேறு எதை வைத்து அவர்கள் படம் எடுக்க முடியும் ?
தமிழ் திரையுலகம் பெருவாரியாக இந்துக்களிடம் இருக்கிறது என்றாலும் இந்தித் திரைப்படங்களை முக்கால் வாசி ஆக்கிரமித்திருப்பவர்கள் முஸ்லிம்கள் தான், அவர்கள் ஏன் இஸ்லாமியர்களை உயர்வாக காட்டும் படி எடுப்பதில்லை ? முன்பெல்லாம் ஓட்டல் நடனக்காரிகளாக கிறித்துவ பெயர் உள்ள பாத்திரங்களைப் படைப்பார்கள், தற்பொழுது அவ்வாறு செய்வதில்லை.
//எனக்கொரு சந்தேகம். மூன்றாம் பாலினத்தவராக மாறக் கூடியவர்களை சவுதியில் சிகிச்சை மூலம் நிறுத்தி அவர்களை முழு ஆணாகவோ அல்லது முழு பெண்ணாகவோ மாற்றி விடுகிறார்களாமே! இதை ஏன் நம் நாட்டு மூன்றாம் பாலினத்தவர் முயற்சி செய்வதில்லை. இதனால் அவர்களுக்கு சமூக அங்கீகாரம் தடையின்றி கிடைக்குமல்லவா?
எனது வீட்டுக்கு நேர் எதிர் வீட்டில் வசித்து வந்த ஃபாரூக் என்ற நபர் இது போல் பாதிக்கப்பட்டு மும்பை சென்று விட்டார். பிறகு 20 வருடம் கழித்து எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு எங்கள் ஊருக்கு வந்து இரண்டு மாதத்தில் இறந்தும் விட்டார். ஏன் இவர்கள் மருத்துவ சிகிச்சை செய்து கொள்வதில்லை. இது எனது சந்தேகமே...//
உங்களுக்கு ஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை என்றால் எய்ட்ஸ் பரவல் நினைவுக்கு வந்து சென்ற பதிவில் பின்னூட்டம் இட்ட சகோதரி ஆயிஷாவிடம் நீங்க ஏன் ஆப்ரேசன் செய்து கொண்டு முழுப் பெண்ணாக ஆகிவிடக் கூடாது சவுதியில் அப்படித்தானே நடக்கிறது என்று அட்வைஸ் மழை பொழிந்ததுடன், கூடவே மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று எய்ட்ஸ் தொற்றிக் கொண்டு பரப்புகிறார்கள் என்றெல்லாம் விளம்பினீர்கள், அவர் வருத்தப்படுவார் என்று கொஞ்சமேனும் சிந்தித்தீர்களா ? உங்கள் பொதுப் புத்தியில் இவர்களைப் போன்றவர்கள் எய்ட்ஸ் பரப்புவர்கள் மட்டுமே என்று பதியும் பொழுது, இஸ்லாம் பற்றி முழுமையாகத் தெரியாதவர்கள், தீவிரவாதிகளையும் கடத்தல்காரர்களையும் மட்டுமே பார்த்துவந்தவர்கள் அது போன்ற பாத்திரங்களைத்தான் படைப்பார்கள்.
பொது புத்திகள் மாறவேண்டும், நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய பொது புத்திகள் போல் அவர்களும் மாற்றிக் கொள்ள நிறைய இருக்கிறது, கட்டுமானம் வேறும் ஏற்கனவே இருப்பதை காட்சிப்படுத்துவது வேறு. இங்கு என்னதான் பெரும்பான்மை சிறுபான்மைப் பற்றிப் பேசினாலும் ஒரு இஸ்லாமிய சமூத்தைச் சார்ந்தவர் கவர்னராகவோ, துணை கவர்னராகவோ வர வாய்ப்புள்ளது, இதெல்லாம் இந்துக்கள், கிறித்துவர்கள் மகிழ்ச்சியுடன் தான் பாகிஸ்தானின் வசிக்கிறார்கள் என்று விளம்பும் உங்களால் ஒரு இந்துவோ, கிறிஸ்துவனோ பாகிஸ்தானில் அரசியல் ரீதியான உயர்பதிவிக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று அறுதியிட்டு எழுதிவிட முடியுமா ?
//ஆனால் உங்கள் பதிவுகளை மட்டுமே படித்துவருபவர்களுக்கு இஸ்லாம் என்றால் வஹாபியிசம் தாண்டி எதுவுமே இல்லை என்கிற புரிந்துணர்வு வருமா வராதா ?//
இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆன். இது அல்லாது வேறு பாதை இஸ்லாத்தில் கிடையாது. எனவே உண்மை முஸ்லிம் குர்ஆன் படியே வாழ வேண்டும். இறைவனிடம் மாத்திரமே தனது பிரார்த்தனையை வைக்க வேண்டும். தர்ஹாக்களில் வைப்பது இணை வைப்பாகும். இதனால் வருமான பாதிப்பு உள்ளானவர்கள் ஆட்சேபிப்பது இயற்கையே!
//உங்களுக்கு ஓரின சேர்க்கையாளர் மற்றும் திருநங்கை என்றால் எய்ட்ஸ் பரவல் நினைவுக்கு வந்து சென்ற பதிவில் பின்னூட்டம் இட்ட சகோதரி ஆயிஷாவிடம் நீங்க ஏன் ஆப்ரேசன் செய்து கொண்டு முழுப் பெண்ணாக ஆகிவிடக் கூடாது சவுதியில் அப்படித்தானே நடக்கிறது என்று அட்வைஸ் மழை பொழிந்ததுடன், கூடவே மும்பை உள்ளிட்ட நகரங்களுக்குச் சென்று எய்ட்ஸ் தொற்றிக் கொண்டு பரப்புகிறார்கள் என்றெல்லாம் விளம்பினீர்கள், அவர் வருத்தப்படுவார் என்று கொஞ்சமேனும் சிந்தித்தீர்களா ?//
இதில் அவர் வருத்தப்பட்டதாக எங்கும் சொன்னாரா? அதன் பிறகுகூட பின்னூட்டம் அளித்திருந்தாரே! இது போன்ற குறையுள்ளவர்களுக்கு சவுதியில் சிகிச்சை அளித்து முழு ஆணாகவோ அல்லது முழு பெண்ணாகவோ மாற்றுகின்றனர். இந்த சிகிச்சையை எடுத்துக் கொண்டால் அனைவருக்கும் நன்மைதானே. இவர்களைப் பெற்றவர்கள் மனம் குளிர்வார்கள் அல்லவா? சமூகத்தில் சம அந்தஸ்தும் கிடைக்குமே!
//சினிமாவில் கடத்தல்காரனை வில்லனாகக் காட்ட அவர்களுக்கு தாவூத் இப்ராஹிம் மற்றும் பர்மாபஜார் நடப்புகள் ரோல் மாடலாகவும், வெயிட்டான பாத்திரமாகவும் இண்டர்நேசனல் லெவலில் காட்ட வாய்ப்பிருக்கும் பொழுது வேறு எதை வைத்து அவர்கள் படம் எடுக்க முடியும் ?//
ஒரு சில முஸ்லிம்கள் ஹவாலா தொழில் செய்து வருவதை நானும் மறுக்கவில்லை. இதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பிரசாரமும் செய்து வருகிறோம். ஆனால் தொடர்ந்து சில டைரக்டர்கள், ஹீரோக்கள் தங்கள் படத்தின் வசூலுக்காக வலிந்து காட்சிகளை அமைப்பதைத்தான் எதிர்க்கிறோம்.
Mr Kovi Kannan,
///சினிமாவில் கடத்தல்காரனை வில்லனாகக் காட்ட அவர்களுக்கு தாவூத் இப்ராஹிம் மற்றும் பர்மாபஜார் நடப்புகள் ரோல் மாடலாகவும், வெயிட்டான பாத்திரமாகவும் இண்டர்நேசனல் லெவலில் காட்ட வாய்ப்பிருக்கும் பொழுது வேறு எதை வைத்து அவர்கள் படம் எடுக்க முடியும் ?///
தாவூத் இப்ராஹீம் மட்டுமா உங்களுக்கு ரோல் மொடல்களாக வெயிட்டான பாத்திரமாக இன்டர்நேஷனல் லெவலுக்கு காட்ட முடிகிறது?
ஏன் மோடியையே வில்லனாக காட்டி படம் எடுக்கலாமே? முதலில் படம் எடுக்க விட்டால்தானே?
கம்பி எண்ண வேண்டிய கிரிமினல் எல்லாம் அரசியல்வாதியாக பரிணமிக்கிறார்கள், அரசின் ஆசியுடன்!
நல்ல வேளை மோடி முஸ்லிமாக இல்லை. இருந்தால் தொலைத்து விடுவார்கள்.
இந்திய அமைதிப்படை என்று சொல்லிக்கொள்ளும் இந்திய இராணுவம், இலங்கையில் நடத்திய அப்பாவித் தமிழர்களின் கொலை, கற்பழிப்புகளைப்பற்றியும் சினிமா எடுக்கலாமே?
அமைதிப்படையின் கேணல்கள் என்று சொல்லக்கூடிய சில புல்லுருவிகள் தற்பொழுது, பொழுது போவதிற்கு இராணுவ அலசல் ஆய்வுக் கட்டுரைகளை ஆங்காங்கே வரைந்து கொண்டிருக்கின்றனர், செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தமாக
சமீபத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய போடோ பயங்கரவாதிகளைப் பற்றியும் சினிமா எடுக்கலாமே?
முஸ்லிம்களுக்கு எதிராக யார் இயங்கினாலும், அவர்களைப் பற்றி சினிமா என்ன, பேசவும் முடியாது.
லண்டன் சேனல் 4 வில் (என்று நினைக்கிறேன்), காஷ்மீரில் இந்திய இராணுவத்தால் அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற காடைத்தனங்கள், கற்பழிப்புகள், அட்டூழியங்களை விவரணச் சித்திரமாகக் காட்டியதற்கே, இந்திய அரசு வெகுண்டெழுந்து, சேனல் 4 நிறுவனத்தை அணுகி இருக்கின்றனர்.
பணம் பரிமாறப்பட்டால் இனியென்ன, காஷ்மீரைப்பற்றி எதிர்காலத்தில் எந்த செய்தியும் வெளிவராது.
இலங்கைத் தமிழர்களுக்கு நடந்த அட்டூழியங்களை நாம் பேச முடியாது. ஏனெனில், அதே கொடுமைகளைத்தான், தினமும் நாம் காஷ்மீரில் செய்துகொண்டிருக்கிறோம் என்று சிதம்பரம் திருவாய் மலர்ந்தது தெரியுந்தானே!
முஸ்லிம் தனிநபர் செய்யும் பயங்கரவாதங்கள் சினிமாவில் உலா வரும் அதேவேளை, அரச பயங்கரவாதங்களும் முஸ்லிமல்லாத தனிநபர், குழுக்கள் செய்யும் பயங்கரவாதங்கள் சினிமாவுக்கு தகுதியற்றதாக மூடி மறைக்கப்படுகின்றன.
இவர்கள் அனைவரும் இந்துக்கள். இப்படிப்பட்ட கிரிமினல்களை வைத்து, வில்லனாக சித்தரித்து ஏன் சினிமா தயாரிக்கக் கூடாது? முஸ்லிம் கிரிமினல்கள்தான் தோதுவாக இருக்கின்றனரா? இந்துக்கள் கிரிமினல்களாக, பயங்கரவாதிகளாக சித்தரிக்கக் கூடாதா?
கிரிமினல்கள் யாராக இருந்தாலும், இன, மத பேதமின்றி தண்டனை வழங்குவதோடு நிறுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, அவர்களின் பெயர், ஊர், மதம் என்று இழுத்து சினிமா தயாரிப்பது மிகவும் கேவலமான அவமதிக்கும் செயல்.
இதற்கு அரச ஆசியும் இருக்கிறது என்பதுதான், வேடிக்கை.
விஜய் ஒரு படத்தில் முஸ்லிம் கதாநாயகனாக நடித்தார். கதாநாயகி இந்துப்பெண்.காதல் வரும்.படம் பேரு சந்திரலேகா. திட்டமிட்டு இதை மறைக்கிறார்கள்...(!) படம் திரைக்கதை சரியில்லாமல் இல்லே அப்போ விஜய் சரியில்லாமல் ஓடலை...
இதெல்லாம் இந்துக்கள், கிறித்துவர்கள் மகிழ்ச்சியுடன் தான் பாகிஸ்தானின் வசிக்கிறார்கள் என்று விளம்பும் உங்களால் ஒரு இந்துவோ, கிறிஸ்துவனோ பாகிஸ்தானில் அரசியல் ரீதியான உயர்பதிவிக்கு வர வாய்ப்பிருக்கிறது என்று அறுதியிட்டு எழுதிவிட முடியுமா ?////// அதுதான் முஸ்லிம் நாடுன்னு பேச்சை முடிச்சிக்கிட்டோம்ல.மத்த மதத்துக்காரங்க பேசவே கூடாது. மதச்சார்பற்ற நாடான இந்தியாவை பத்தி மட்டுமே பேசுவோம்...ஓக்கே...ஓக்கே...முஸ்லிம்களை புரியாத புள்ளையா இருக்கீங்க
Post a Comment